பகவத் கீதையிலிருந்து உத்வேகம் பெற்ற வள்ளுவர்!பிறவிப் பெருங்கடல்/சம்சார சாகரம்!! (Post.15,259)


Written by London Swaminathan

Post No. 15,259

Date uploaded in London –  10 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சம்சார சாகரம்/ பிறவிப் பெருங்கடல்  என்று ஏன் பெயர்வந்தது ?

SAMSAARA

சம்சார சாகரம் என்ற சொற்களை முதலில் பயன்படுத்தியவர் கிருஷ்ண பரமாத்மா. பகவத் கீதையில் 12-7 அவர் இதை 5000  ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். பின்னர் காளிதாசன் ரகு வம்ச 12-60 காவியத்தில் 2000  ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னார். அதற்குப்பின்னர் வள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் பிறவிப் பெருங்கடல் என்று அதைத் தமிழாக்கி நமக்குச் சொன்னார் வள்ளுவர் பகவத் கீதையை மனப்பாடம் செய்து அப்படியே சொன்னதை பல குறள்களில் காண்கிறோம் தானம் தவம் என்று வார்த்தைகளை வரிசை பிசகாமல் கீதையிலிருந்து நமக்குத் தருகிறார் வள்ளுவர் .

குடும்ப வாழ்வினை சம்சார சாகரம்- பிறவிப் பெருங்கடல் என்று இந்துக்கள் ஏன் சொன்னார்கள்?

1. இகலோக வாழ்வும் எப்போதும் அலை வீசும் இடம்- அதாவது துன்பமும் இன்பமும் மாறி மாறி வரும்

2. கடல் போலவே குடும்ப வாழ்வு – ஆழம் தெரியாதது ; கங்கு கரை காண முடியாதது .

3. கடல் போல பயங்கர சுறாமீன்கள் நிறைந்தது

4.எளிதில் கடக்க முடியாதது; ஞானப்படகு (பகவத் கீதை 4-36) வேண்டும் அல்லது நீந்தத் தெரிய வேண்டும்;  இது குறுகிய கடல் பகுதியில் மட்டுமே சாத்தியம்!

5. ஐந்தாவது, அலை ஓய்ந்து எப்படி சமுத்திர ஸ்நானம் செய்ய முடியாதோ அதுபோலத்தான் குடும்ப வாழ்வும்! அதை உணர்ந்து பக்தி மார்க்கத்தில்- நாம சங்கீர்த்தனத்தில்- ஈடுபட வேண்டும். அது கடல் போல இரைச்சலாகத்தான் இருக்கும் ; பரவாயில்லை

6. கடைசியாக கடலின் அழகினை அதற்கு வெளியே இருந்து ரசிப்பது போல ரசிக்கவும் செய்யலாம்; எப்போது?

சம்சாரக் கடலிலிருந்து வெளியே வந்தபோது!

7. விவேக சூடாமணியில், கடலினை ஆனந்த சாகரத்துக்கும் , கருணைக் கடலுக்கும் ஆதி சங்கரர் ஒப்பிடுகிறார் சந்நியாசியின் ஆசைகளாலாகிய நதிகள், கடலிலே ஐக்கியமாகிவிடும் கடலில் லிழுந்த ஆலங்கட்டி மழைபோல அது தனது தனித்தன்மையை இழந்து விடும் என்கிறார்

****

சம்சாரம் என்றால் என்ன ?

Sanskrit dictionary

[«previous (S) next»] — Samsara in Sanskrit glossary

Saṃsāra (संसार).—

1) Course, passage. வழி, பாதை

2) The course or circuit of worldly life, secular life, mundane existence, the world; 

உலக வாழ்வு न स तत् पदमाप्नोति संसारं चाधिगन्छति (na sa tat padamāpnoti saṃsāraṃ cādhiganchati) Kath. 3.7; असासः संसारः (asāsaḥ saṃsāraḥ) Uttararāmacarita 1; Mālatīmādhava (Bombay) 5.3; संसारधन्वभुवि किं सारमामृशसि शंसाधुना शुभमते (saṃsāradhanvabhuvi kiṃ sāramāmṛśasi śaṃsādhunā śubhamate) Aśvad.22; or परिवर्तिनि संसारे मृतः को वा न जायते (parivartini saṃsāre mṛtaḥ ko vā na jāyate) Pañcatantra (Bombay) 1.27.

3) Transmigration, metempsychosis, succession of births. பிறப்பும் இறப்பும் மாறி மாறி வருதல் 

4) Worldly illusion. நிச்சயமற்ற வாழ்வு

Samsarasagara in Hinduism symbolizes the endless cycle of birth and rebirth within the illusionary realm, portrayed as an expansive sea, representing the ongoing journey of the soul through various existences.

***

பகவத் கீதை என்ன சொல்கிறது?

तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात् ।

भवामि नचिरात्पार्थ मय्यावेशितचेतसाम् ॥ १२-७॥

teṣāmahaṃ samuddhartā mṛtyusaṃsārasāgarāt

bhavāmi nacirātpārtha mayyāveśitacetasām 12-7

என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரண சம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன். பகவத் கீதை 12-7

***

ரகுவம்ச காவியத்தில், காளிதாசன் என்ன சொல்கிறான் ?

ப்ரவ்ர்த்தா உபலப்தாயாம் தஸ்யாஹா சம்பாதி தர்சநாத்

மாருதி: சாகரம் தீர்ண: சம்சாரமிவ நிர்மம:

சம்பாதியைக் கண்டவுடன், சீதாதேவி பற்றிய செய்தியைக் கேட்டவுடன் அநுமன் , உலகப் பற்றில்லாத ஒருவன் சம்சாரக்  கடலினை எவ்வாறு தாண்டுவானோ அப்படித் தாண்டினான்

प्रवृत्तावुपलब्धायाम् तस्याः संपातिदर्शनात्।

मारुतिः सागरम् तीर्णः संसारमिव निर्ममः॥ १२-६०

pravṛttāvupalabdhāyām tasyāḥ saṁpātidarśanāt|

mārutiḥ sāgaram tīrṇaḥ saṁsāramiva nirmamaḥ || 12-60

On meeting sampAti, the elder brother of slain jaTAyu, Hanuma gained the news of Seetha’s whereabouts, whereby he crossed the ocean, just as one having no attachment for worldly objects crosses the ocean of this worldly existence. [12-60]

****

வள்ளுவர் செப்புவது என்ன?

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார் -குறள் 10

இறைவனுடைய திருவடிகளை  நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

***

அருணகிரிநாதர் உரைப்பது என்ன?

திருத்தணிகை திருப்புகழ்

நிலையாத சமுத்திர மான சமுசார துறைக்கணின் மூழ்கி

     நிசமான தெனப்பல பேசி …… யதனூடே

நெடுநாளு முழைப்புள தாகி பெரியோர்க ளிடைக்கர வாகி

     நினைவால்நி னடித்தொழில் பேணி …… துதியாமல்

தலையான வுடற்பிணி யூறி பவநோயி னலைப்பல வேகி

     சலமான பயித்திய மாகி …… தடுமாறித்

தவியாமல் பிறப்பையு நாடி யதுவேரை யறுத்துனை யோதி

     தலைமீதில் பிழைத்திட வேநி …… னருள்தாராய்

கலியாண சுபுத்திர னாக குறமாது தனக்குவி நோத

     கவினாரு புயத்திலு லாவி …… விளையாடிக்

களிகூரு முனைத்துணை தேடு மடியேனை சுகப்பட வேவை

     கடனாகு மிதுக்கன மாகு …… முருகோனே

பலகாலு முனைத்தொழு வோர்கள் மறவாமல் திருப்புகழ் கூறி

     படிமீது துதித்துடன் வாழ …… அருள்வேளே

பதியான திருத்தணி மேவு சிவலோக மெனப்பரி வேறு

     பவரோக வயித்திய நாத …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

நிலையாத சமுத்திரமான … அகலம், ஆழம் இவ்வளவு என்று

காணமுடியாத பெரும் சமுத்திரம் போன்ற

சமுசார துறைக்கணின் மூழ்கி … சம்சாரம் ஆகிய நீர்த்துறையிலே

மூழ்கி,

நிசமானதெனப் பல பேசி … மெய் போன்ற பல பொய்களைப் பேசி,

அதனூடே நெடுநாளும் உழைப்புளதாகி … அந்த சம்சாரக்

கடலிலே, நீண்ட காலமாக உழைப்புள்ளவன் ஆகி,

பெரியோர்களிடைக் கரவாகி … பெரியோர்களின் கூட்டத்தில்

சேராமல் ஒளிந்து மறைந்து ஒதுங்கி,

நினைவால்நி னடித்தொழில் பேணி துதியாமல் … நல்ல

நினைவோடு நின்னடிக்கான தொண்டுகளை விரும்பிப் போற்றாமல்,

தலையான வுடற்பிணி யூறி … உடலில் முதன்மையான நோய்கள்

வந்து தாக்கவும்,

பவநோயின் அலைப்பல வேகி … இந்த சம்சார சாகரத்தில் பிறவி

நோய் என்னும் பல அலைகள் வீசவும்,

சலமான பயித்திய மாகி தடுமாறித் தவியாமல் … கோபம்

கொண்ட பைத்தியக்காரனாக மாறி, யான் தடுமாறித் தவிக்காமல்,

பிறப்பையு நாடி யதுவேரை யறுத்து … பிறவியின் மூல காரணத்தை

ஆராய்ந்து, அதன் ஆணிவேராகிய ஆசையை அறுத்து,

உனையோதி தலைமீதில் பிழைத்திடவே … உன் புகழ் ஓதி

இவ்வுலகில் உய்யுமாறு

நினருள்தாராய் … உன் திருவருள் புரிந்து ஆட்கொள்வாயாக.

கலியாண சுபுத்திரனாக … மேன்மை தங்கிய கல்யாண

மாப்பிள்ளையாகவே

குறமாது தனக்கு விநோத … குறக் குல வள்ளி தேவியிடத்தில்

என்றும் விளங்கி உல்லாசமாக,

கவினாரு புயத்தில் உலாவி விளையாடி … அழகு நிறைந்த

அவளது திருப் புயத்தில் தழுவி உலாவி லீலைகள் புரிந்து

களிகூரும் உனைத்துணை தேடும் அடியேனை … மகிழும்

உன்னை உற்றதுணையெனத் தேடுகின்ற என்னை

சுகப்பட வேவை கடனாகும் … இன்பம் அடையும்படியாகவே

வைத்தருள்க. இது உனக்குக் கடமையாகும்.

இதுக்கன மாகு முருகோனே … அவ்வாறு என்னை அருளினால்

அது உனக்குப் பெருமையும் ஆகும், முருகனே.

பலகாலும் உனைத்தொழுவோர்கள் மறவாமல் திருப்புகழ்

கூறி … பன்முறையும் உன்னை வணங்குபவர்கள், மறக்காமல் உன்

திருப்புகழைப் பாடி

படிமீது துதித்து உடன் வாழ அருள்வேளே … இவ்வுலகிலே

உன்னைத் துதிசெய்து உன்னுடனேயே எப்போதும் இருந்து

வாழும்படியாக அருளும் செவ்வேளே,

சிவலோக மெனப்பரி வேறு … இதுவே பூலோகத்தில் உள்ள

சிவலோகம் என்ற அன்பை உண்டாக்கத்தக்க

பதியான திருத்தணி மேவு … திருத்தலமாகிய

திருத்தணிகையில் வாழ்கின்ற,

பவரோக வயித்திய நாத பெருமாளே. … பிறவிப் பெரு

நோயைத் தீர்க்கவல்ல, வைத்தியநாதப் பெருமாளே.

*****

அப்பர் அருளிய தேவாரம்

பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானைப்

பிரிவிலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை

மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகித்
தீரா நோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்

திரிபுரங்கள் தீ எழத் திண் சிலை கைக் கொண்ட
பேரானை புள்ளிருக்கு வேளூரானைப்

போற்றாதே ஆற்றநாள் போக்கினேனே(6-548)

புள்ளிருக்கு வேளூர் = வைத்தீஸ்வரன்கோயில் 

***

ரகுநாயகா நீ பாத – தியாகராஜர் கிருதி

பல்லவி

ரகு நாயக நீ பாத யுக

ராஜீவமுல நே விட ஜால ஸ்ரீ (ரகு)

அனுபல்லவி

அக ஜாலமுல பார-தோலி

நன்னாதரிம்ப நீவே கதி காத ஸ்ரீ (ரகு)

சரணம்

பவ ஸாகரமு தாட லேக நே

பலு காஸி-படி நீ மருகு ஜேரிதினி

அவனிஜாதிபாஸ்ரித ரக்ஷக

ஆனந்த-கர ஸ்ரீ த்யாகராஜ நுத (ரகு)

raghu nāyaka, nī pāda yuga

rājīvamula nē viḍa-jāla śrī

O best among Raghus! Your pair of

lotus-feet, I cannot let go of.

Anupallavi

agha jālamula pāra tōli nannu

ādarimpa nīvē gati kādā śrī

To drive afar my accumulated sins

And care for me, aren’t you the only refuge?

Charanam

bhavasāgaramu dāṭalēkanē

palu gāsibaḍi nī marugu jēriti

avanijādhipa, śritarakṣaka,

ānandakara, śrī tyāgarājanuta

Unable to cross the worldly ocean,

After much pain, your shelter did I reach,

Husband of Earth’s daughter, Protector of those approaching you!

Maker of joy, Praised by Tyagaraja!

–subham—-

Tags– பகவத் கீதை,  வள்ளுவர் பிறவிப் பெருங்கடல், சம்சார சாகரம்,  ஏன் பெயர் வந்தது ? தியாகராஜர், அருணகிரிநாதர்

அமரர் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி! (Post No.15,258)

Santanam  Srinivasan doing Ganapati Homa 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,258

Date uploaded in London –   10 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

10-12-2025 அஞ்சலி

அமரர் திரு சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி!

ச. நாகராஜன்

திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் 29-3-1944 அன்று பிறந்தார்.

10-12-2023 அன்று மறைந்தார்.

அவரது நினைவு நாளையொட்டி அவரைப் பற்றி இங்கு நினைவுகூரலாம்.

எளிமைஇனிமைஆன்மீக சேவை

திரு சீனிவாசன் அவர்களுடன் பழகியோர் ஆயிரக்கணக்கில் உள்ளனர். அவர்கள் அனைவரும் கூறுவது அவரது எளிமை, இனிமை, ஆன்மீக சேவை என்பதைத் தான்.

படாடோபமான, ஆடம்பரமான வாழ்க்கையை விரும்பாமல் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர்.

விளம்பரத்தை விரும்பாவதர்.

அவரைச் சந்தித்த நூற்றுக்கணக்கானோரும் ஒருவர் இன்னொருவரிடம் கூறிய வாய்மொழி வார்த்தையாலேயே அவர் பால் ஈர்க்கப்பட்டனர்.

டெக்ஸ்டைல் பொறியாளராக மதுரை கோட்ஸில் பல வருட காலம் பணி புரிந்து ஓய்வு பெற்றவர் அவர்.

அதே சமயம் தினமும் கணபதி ஹோமத்தை காலையில் செய்து குருநாதர் ஆய்க்குடி ஸ்வாமிஜி கிருஷ்ணா அவர்களின் அருளையும், மஹாகணபதி அருளையும் பரிபூரணமாகப் பெற்றவர் அவர்.

இந்த தெய்வீக ஆற்றலால் ஒருவரைப் பார்த்தவுடனேயே அவரைப் பற்றிய அனைத்தும் அவருக்குத் தெரிந்தது; வருங்காலமும் புரிந்தது.

ஆகவே தினமும் மதுரையிலும் சரி, பின்னால் அவர் சென்னையி குடியேறி வாழ்ந்தபோதும் சரி பலரும் அவர் வீட்டில் கூட்டமாகக் கூடி தங்கள் பிரச்சினைகளைக் கூறி தீர்வைக் கண்டு மகிழ்ந்தனர்.

வருவோருக்கு அவரது இல்லத்தினரின் உபசரிப்பும் காப்பியும் கிடைக்குமே தவிர அவர்களிடம் ஒரு பைசா கூட அவர் வாங்கியதில்லை.

ஆகவே இன்னும் அதிகமதிகக் கூட்டம் கூடலாயிற்று.

பன்முகப் பரிமாணம் கொண்ட அவர் திரு என்.சி. ஶ்ரீதரனுடன் இணைந்து பல்லாண்டு காலம் பல்வேறு நிறுவனங்கள், கல்லூரிகள், தனியார் சங்கங்கள் ஆகியவற்றிற்கு அழைப்பின் பேரில் சென்று உணர்வூக்கம் என்னும் மோடிவேஷன் உரைகளை ஆற்றினார்.

இதில் பயிற்சி பெற்றோரின் எண்ணிக்கை சுலபமாக ஒரு லட்சத்தைத் தாண்டும் எனலாம்.

ஜோதிடம், வாஸ்து ஆகிய துறைகளில் நிபுணர் என்பதால் அவரைத் தங்கள் இல்லங்களுக்கு அழைத்துச் செல்ல வருவோர் ஏராளம்.

அரசியல்வாதிகள், தலைவர்கள், திரைபப்ட நடிகர்கள், நடிகையர், கலைஞர்கள், பல்துறை நிபுணர்கள், சாமானியர்கள் உள்ளிட்ட அனைவரும் அவரை நாடிப் பயன் பெற்றனர்.

துபாய், லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் அவரைப் பார்க்க ஏராளமானோர் குழுமியது குறிப்பிடத் தகுந்தது.

அவரது ஹாஸ்ய உணர்ச்சி அனைவரும் போற்றும் ஒன்று.

ஜோக் அடிப்பதில் வல்லவர். தினமும் சுமார் ஐம்பது ஆண்டுகளில் அவர் சேகரித்த ஜோக் புத்தகங்கள் மற்றும் பத்திரிகைகளிலிருந்து எடுத்த கட்டிங்ஸ் பல பீரோக்களில் அடுக்கி வைக்கப்பட்டன. இதை கட்டிங் அண்ட் ஒட்டிங் (CUTTING AND PASTING) என்று கேலியாகச் சொல்வது வழக்கம்.

லண்டனிலிருந்து ஒளிபரப்பாகும் ஞானமயம் நிகழ்ச்சியில் பல முறை அவர் பங்கேற்றுள்ளார். அவரது புத்தகங்கள் http://www.Pustaka.co.in பதிப்பகம் மூலம் பிரசுரமாகியுள்ளன.

 Srinivasan with his wife Rajalakshmi with Daffodils.

அனைவரது நட்சத்திரங்களையும் கேட்டு அவர்கள் நலனுக்காக விநாயக சதுர்த்தி அன்று அவர் பெரும் கணபதி ஹோமம் செய்வது வழக்கம்.

அவரைப் பற்றி நிறையக் கூறிக் கொண்டே போகலாம்.

இன்று அவரது நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்கி அஞ்சலி செய்வோமாக!

**

SIXTEEN CARTOONS FROM DECCAN CHRONICLE NEWSPAPER UP TO 9-12-2025

Sixteen Beautiful and meaningful  cartoons fro DECCAN CHRONICLE up to 9-12-2025.

subham–

tags- Cartoons, Deccan Chronicle, 9-12-2025

திருப்புகழில் மெட்றாஸ்காரன் வசவு- கஸ்மாலம் (Post No.15,257)

Written by London Swaminathan

Post No. 15,257

Date uploaded in London –  9 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கஸ்மாலம்- பகவத் கீதையில் அர்ஜுனனைத் திட்டும்போது, கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பயன்படுத்திய சொல்; சென்னை ஆட்டோக்காரர்களின் வாயில் சர்வ சாதாரணமாகப் புழங்கும் ஸம்ஸ்கிருதச் சொல்; பொருள் :கஸ்மலம் = அழுக்கான, தூய்மையற்ற,பலவீனமான

Date: 29 December 2018: Post No. 5852

****

ஏழு ஆண்டுகளுக்கு முன்னர் கஸ்மாலம் வசவு பற்றி எழுதினேன் ; நேற்றிரவு அருணகிரிநாதரின் திருப்  புகழைப் படித்த பொழுது அவர்தான் சென்னைக்காரர்களுக்கு இந்த வசை மொழியைச் சொல்லிக் கொடுத்தாரோ என்று எண்ணத் தோன்றுகிறது .

கண்ண பரமாத்மா 5000  ஆண்டுகளுக்கு முன்னர் இதை ஸம்ஸ்க்ருதத்தில்தான் சொன்னார். மதராஸ்/ சென்னை காய்கறி வியாபாரிகள்,  ஆட்டோ, டாக்சி டிரைவர்கள் , பிச்சைக்காரர்கள் வாயில் புழங்க யாரோ ஒருவர் தமிழில் சொல்லியிருக்க வேண்டும் இதோ அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலில் வரும் சொற்கள்:

தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம்

கனவாலங் கூர்விழி மாதர்கள்

     மனசாலஞ் சால்பழி காரிகள்

          கனபோகம் போருக மாமிணை …… முலைமீதே

கசிவாருங் கீறுகி ளாலுறு

     வசைகாணுங் காளிம வீணிகள்

          களிகூரும் பேயமு தூணிடு …… கசுமாலர்

மனவேலங் கீலக லாவிகள்

     மயமாயங் கீதவி நோதிகள்

          மருளாருங் காதலர் மேல்விழு …… மகளீர்வில்

மதிமாடம் வானிகழ் வார்மிசை

     மகிழ்கூரும் பாழ்மன மாமுன

          மலர்பேணுந் தாளுன வேயரு …… ளருளாயோ

தனதானந் தானன தானன

     எனவேதங் கூறுசொல் மீறளி

          ததைசேர்தண் பூமண மாலிகை …… யணிமார்பா

தகரேறங் காரச மேவிய

     குகவீரம் பாகும ராமிகு

          தகைசாலன் பாரடி யார்மகிழ் …… பெருவாழ்வே

தினமாமன் பாபுன மேவிய

     தனிமானின் தோளுட னாடிய

          தினைமாவின் பாவுயர் தேவர்கள் …… தலைவாமா

திகழ்வேடங் காளியொ டாடிய

     ஜெகதீசங் கேசந டேசுரர்

          திருவாலங் காடினில் வீறிய …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள் …

பெருத்த, கொடிய விஷம் மிக்குள்ள கண்களை உடைய விலைமாதர்கள்,

மனத்தில் வஞ்சனையுடன் பசப்பி நடிப்பு வண்ணம் மிகுந்த பழிகாரிகள்.

கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே கசிவு

ஆரும் கீறுகி(ள்)ளால் உறு வசை காணும் காளிம வீணிகள் …

மிகுந்த போக சுகத்தைத் தரக் கூடியதும், தாமரை மொட்டுக்கு

ஒப்பதானதுமான மார்பின் மீதே அன்பு மிகுதிக்கு அடையாளமாக

கீறல்களாலும் கிள்ளுதலின் குறிகளாலும் பழிப்புக்கு இடம் தரும்

களிம்பைத் தடவும் வீணிகள்.

களி கூறும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் மனம் ஏல் அம்

கீல(க) கலாவிகள் மயமாயம் கீத விநோதிகள் … ஆவேசத்தைத்

தருகின்ற, தீய வெறித் தன்மையைக் கொடுக்கும் மாமிச உணவைத்

தருகின்றஅசுத்தர்கள். மனத்தில் பொருந்திய சூழ்ச்சி நிறைந்த அழகிய

தந்திரவாதிகள், மாயம் நிறைந்த இசையில் இன்பம் கொள்பவர்கள்.

மருள் ஆரும் காதலர் மேல் விழு(ம்) மகளீர் வில் மதி மாடம்

வான் நிகழ்வார் மிசை மகிழ் கூரும் பாழ் மனமாம் … காம

மயக்கம் நிறைந்த காதல் செய்பவர்கள். தம் மீது மோகம் கொண்டு

வந்தவர்கள் மேலே விழுகின்ற பொது மகளிர். ஒளி பொருந்திய மேல்

மாடம் உள்ள (உப்பரிகை உள்ள) வீடுகளில் நிலவையும் வானத்தையும்

அளாவி விளங்க இருப்பவர்கள் மீது மகிழ்ச்சி நிரம்பக் கொள்ளும்

பாழான மனம் இது.

உன மலர் பேணும் தாள் உ(ன்)னவே அருள் அருளாயோ …

உன்னுடைய தாமரை மலரை ஒத்த திருவடியை தியானிக்கவே உனது திருவருளைப் பாலிக்க மாட்டாயோ?

தனதானந் தானன தானன என வேதம் கூறு சொல் மீறு

அளி ததை சேர் தண் பூ மண மாலிகை அணி மார்பா …

தனதானந் தானன தானன என்று வேதம் ஓதுவோரது

சொல்லொலியினும் மிகுந்ததான ஒலியுடன் வண்டுகள் நிறைந்து

சேர்ந்துள்ள குளிர்ந்த பூக்களாலான நறு மணம் கொண்ட மாலைகளை அணிந்த மார்பனே,

தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா

மிகு தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெரு வாழ்வே …

நொறுங்குதலும் அழிவும் அப்போது நிறையச் செய்த ஆட்டின் மேல்

வாகனமாக ஏறி அமர்ந்த குக வீரனே, தேவி பார்வதியின் குமாரனே,

மிக்க மேம்பாடு நிறைந்த அடியார்கள் மகிழ்கின்ற பெரும் செல்வமே,

தினம் ஆம் அன்பா(ய்) புன(ம்) மேவிய தனி மானின் தோள்

உடன் ஆடிய தினை மா இன்பா உயர் தேவர்கள் தலை

வாமா … தினந்தோறும் உன் மீது கொண்ட அன்புடன் தினைப்

புனத்தில் இருந்த ஒப்பற்ற மான் போன்ற (வள்ளியின்) தோளுடன்

விளையாடியவனே, தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தேவர்களின் தலைவனான அழகனே,

திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்க(மே)ச

நடேசுரர் திருவாலங்காடினில் வீறிய பெருமாளே. … திகழ்கின்ற

வேடத்துடன் காளியுடன் நடனம் ஆடின உலகத்துக்கு ஈசனும் சங்க

மேசனும் ஆகிய நடேசப் பெருமானுடைய தலமாகிய திருவாலங்காட்டில்* விளங்கி நிற்கும் பெருமாளே.

****

* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர்

தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று – ரத்னசபை.

***

ஒரிஜினல் கஸ்மலம்

श्रीभगवानुवाच |

कुतस्त्वा कश्मलमिदं विषमे समुपस्थितम् |

अनार्यजुष्टमस्वर्ग्यमकीर्तिकरमर्जुन || 2||

ஸ்ரீ பகவான் உவாச

குதஸ்த்வா கச்மலமிதம் விஷமே சமுபஸ்த்திதம்

அனார்யஜுஷ்ட  மஸ்வர்க்ய மகீர்த்திகா மர்ஜுன 2-2

கச்மலம் = மனத்தில் கலக்கம் ; மனக் களங்கம்

śhrī bhagavān uvācha

kutastvā kaśhmalamidaṁ viṣhame samupasthitam

anārya-juṣhṭamaswargyam akīrti-karam arjuna

 பகவத் கீதை 2.2 — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்: எனதருமை அர்ஜுனனே, உன்னிடம் இதுபோன்ற களங்கங்கள் எங்கிருந்து வந்தன? வாழ்வின் மதிப்பை அறிந்த மனிதனுக்கு இவை தகுதியற்றவை. இவை மேலுலகங்களுக்குக் கொண்டு செல்வதில்லை, அவமானத்தை கொடுக்கின்றன.

–subham—

Tags- கச்மலம், பகவத் கீதை, 2.2, திருப்புகழில், மெட்றாஸ்காரன், வசவு, கஸ்மாலம்

Ancient Tamil Encyclopaedia -Part 40; One Thousand Interesting Facts -Part 40 (Post.15,256)

Written by London Swaminathan

Post No. 15,256

Date uploaded in London –  9 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

part 40

item 246

Akanānūru verse 26 by Pāndiyan Kānapēreyil Thantha Ukkira Peruvazhuthi  is the king who compiled Aka naanuuru . That means he was one of the last kings of Sangam Age. He has a Sanskrit name UGRA which is found in Tiru Vilaiyaadal Puranam as well. He is a contemporary of Rajasuyam Yaga performer ; also contemporary of Avvaiyar who was also present in the Rajasuyam Yaga. This king’s name helps us to calculate the periods of other kings.

247

Verse 26 has the usual stuff of Tamil men visiting prostitutes and the wives getting angry and then reaching a compromise through their children.

Pandyan king used one notable simile in the poem:

I softened like fine soil

which had been rained on heavily and ploughed

many times.

***

248

Akanānūru verse 27 by  Mathurai Kanakkāyanār compares the pearls from Korkai with the teeth of a heroine/ woman in the poem. Whenever Pandyas are or their country are mentioned, poets always add pearls from the Pandya country. And there is some colour contrast in the poem too. Woman’s lips are coral red, teeth are like shining white pearls, her eyes with kohl have black lining, the elephants of Pandya king have white tusk and her eyes are like blue lily flowers.

…. your smile with bright teeth

in your coral-coloured mouth,

resembling pearls from the wide

shores of Korkai town that is

protected well by brave battling

Pandiyans who got white-tusked

elephants from the northern

Vēnkadam Hills.

How will they let him go?  Your

kohl-lined eyes, that have ruined

the beauty of blue waterlily flowers

வெண்கோட்டு யானை – elephant with white tusks, அறத்தின் காக்கும் கொற்கை – Korkai city that they protect with justice, அம் பெருந்துறை முத்தின் அன்ன – like the pearls from its wide shores teeth ,இலங்கும் எயிறு கெழு துவர் வாய் – red mouth with bright teeth, coral-like red mouth with bright teeth, the beauty of (eyes) blue waterlily flowers

***

249

Akanānūru verse 28 composed by Pandiyan king Arivudainampi shows that Pandya kings were also good poets. Among the kings mentioned in the Sangam age , Pandya kings composed more poems than Chera and Choza kings. One must remember Pandyas were the kings who patronised the Tamil language in Madurai Academy. More poets have Madurai as prefix than any other town.

***

250

Akanānūru 29 composed by Vellādiyanār has two notable similes

Eyes like cut tiny mango
eyes that bring happiness when seen,
……….beautiful like the two pieces of a
……….fragrant tiny mango cut with a knife,

***

251

Elephant- Mirage- Boat on ground without water

……..where an elephant
that became thin, not knowing where to
find water to drink, runs to a mirage only
to find no water and lies down with sorrow,
looking like a boat on land without water

……………….

***

252

Akanānūru 30 by Mudangik  Kidantha Neduncheralāthan has some interesting lines that are appreciated by Tamil scholars

Will your pride be ruined if you come to the
fragrant seashore grove where punnai tree
buds look like unwashed pearls and ask us
about our beauty and then leave?

பெருமை என்பது கெடுமோ, ஒரு நாள்

மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்

தண் நறுங்கானல் வந்து, நும்

வண்ணம் எவனோ என்றனிர் செலினே?

***

253

Mystery about name! முடங்கிக் கிடந்த 

Neduncheralāthan is one of the most famous Chera kings. We don’t know why he was given an epithet Mudangi Kidantha! It is a strange epithet. In other places he was praised as one who had conquered lands up to Himalaya.

The meaning of Mudangi Kidantha முடங்கிக் கிடந்த  is “lie with knees drawn up and arms close to the body”. Did he compose this at the ripe old age? Or was he afflicted with rheumatism? No one has explained it properly as far as I know. Maybe it is a different Neduncheralathan.

To be continued………………………………..

Tags- Ancient Tamil Encyclopaedia ,Part 40, One Thousand Interesting Facts, item 253, Neduncheralathan, Pearl, Korkai, Ugra, Sanskrit word

அஷ்டமா சித்திகள்!  பிரெஞ்சுக்காரர் கண்ட அற்புதம்! (Post.15,255)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,255

Date uploaded in London –   9 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

3-10-25 கல்கிஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை! 

சித்தர்களின் அஷ்டமா சித்திகள்! நிஜமாகவே சாத்தியமாபிரெஞ்சுக்காரர் நேரில் கண்ட அற்புதம்! 

ச. நாகராஜன் 

ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் மஹரிஷி மகேஷ் யோகியின் ஆழ்நிலை தியானம் உலகெங்கும் ஒரு பெரிய பேசு பொருளானது.

அவரது தியான முறை மூலம் தரையிலிருந்து எழும்பி மேலே சென்றதாகப் பலரும் கூறினர். ஆனால் இதற்கான வலுவான ஆதாரங்கள் தாம் இல்லை.

 ஆனால் பாரத தேசத்தின் சித்தர்களுக்கோ இது ஒரு எளிய கை வந்த கலையாகும்.

இதை நேரில் பார்த்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், பேச்சாளரும், பாரிஸ்டரும் நீதிபதியுமான லூயிஸ் ஜாகொல்லியட் (LOUIS JACOLLIOT) என்பவர் அந்தச் சம்பவத்தைத் தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

சாரொல்லஸ் என்ற பிரான்ஸ் நாட்டு நகரில் 1837ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதியன்று ஜாகொல்லியட் பிறந்தார். பிரெஞ்சு காலனிகளில் மாஜிஸ்ட்ரேட்டாகப் பணியாற்றினார்.

வேதம்,உபநிடதம் ஆகிய எல்லாவற்றையும் படித்த அவருக்கு யோகா மீதும் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. சம்ஸ்கிருதத்தைப் படிக்க ஆரம்பித்தார். இந்தியாவின் மீது பெரும் மதிப்பைக் கொண்ட அவருக்கு

இந்தியா வர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 1865 முதல் 1869 முடிய அவர் இந்தியாவில் இருந்தார்.

 1866ம் ஆண்டு இந்தியாவில் அவருக்கு ஒரு நூதன அனுபவம் ஏற்பட்டது.

 கோவிந்தசாமி என்ற ஒரு சித்தரை அவர் சந்தித்தார். இருவரும் யோகா சம்பந்தமாக பேசுவது வழக்கமானது.

ஒரு நாள் கோவிந்தசாமி ஜாகொல்லியட் உட்கார்ந்திருந்த வாரந்தாவிற்கு வந்தார். அப்போது வாயில் கதவுக்கு அருகே வந்து நின்றார் அவர்.

கைகளை மடித்து வைத்துக் கொண்ட அவர் ஒரு நிமிடம் யோசித்தார். பின்னர் மெதுவாக அவர் மேலே எழும்பினார். ஒரு அடி தூரம் அவர் மேலே எழும்பியதை ஜாகொல்லியட்டால் சரியாக அளக்க முடிந்தது.

கோவிந்தசாமிக்குப் பின்னால் பட்டு ரிப்பன்கள் சிவப்பு, தங்க நிறம்,  வெள்ளை நிறத்துடன் தொங்கிக் கொண்டிருந்தன.  அவர் ரிப்பன்களில் ஆறாவது ரிப்பன் அளவு உயர்ந்தார். ஆகவே சரியாக ஒரு அடி என்பதை ஜாகொல்லியட்டால் நிர்ணயிக்க முடிந்தது.

 கோவிந்தசாமி மேலே எழும்ப ஆரம்பித்தவுடன் சரியாக தனது கடிகாரத்தில் மணியைப் பார்த்தார் ஜாகொல்லியட். அந்தரத்தில் பத்து நிமிடம் நின்று கொண்டிருந்தார் கோவிந்தசாமி.  ஐந்து நிமிடங்கள் அவர் அசைவற்று சிலை போல இருந்தார்.

பிறகு கீழே மெதுவாக இறங்கினார் அவர்.

 இதை அகல்ட் ஸயின்ஸ் இன் இந்தியா (OCCULT SCINCE IN INDIA) என்ற தனது நூலில் எழுதியுள்ளார் ஜாகொல்லியட். இவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. உலகில் ஏராளமானோர் விரும்பிப் படிக்கும் நூல்களாக விற்பனையில் சக்கை போடு போட்டன.

 ரஷியாவில் இவரது நூல்கள் பிரபலமாயின. இவரது நூல்கள் 18 தொகுதிகளாக ரஷியாவில் 1910ம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டன. ஆனால் கம்யூனிஸ அரசு ரஷியாவில் அமைந்ததிலிருந்து இவை தடை செய்யப்பட்டன. 1928 முதல் 1989 முடிய இவரது நூல்கள் அங்கு கிடைக்கவில்லை.

சம்ஸ்கிருத ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்ட ஜாகொல்லியட் கிருஷ்ணாவுக்கும் ஏசுவுக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதை எடுத்துக் காட்டினார்.

‘கிறிஸ்ணா’ என்பது கிறிஸ்து என்பதாக மாறியது. ‘கிறிஸ்னா’ என்பது கிருஷ்ணர் என்ற வார்த்தையை ஒட்டிப் பிறந்த சொல் தான் என்றார் இவர். பைபிளுக்கும் இந்திய புராண இதிஹாஸங்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை இவர் விவரித்தார்.

 மனு ஸ்மிருதியை இவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இவரது குறிப்பிடத்தகுந்த நூல்களில் முக்கியமான ஒன்று திருக்குறள். பல முக்கியமான குறள்களை இவர் மொழிபெயத்து வெளியிட்டார்.

 1890ம் ஆண்டு அக்டோபர் 30ம் நாளன்று அவர் பிரான்ஸில் உள்ள செயின்ட் திபால்ட் – டெஸ்- விக்னஸ் என்ற இடத்தில் மறைந்தார்.

 இந்திய யோகிகளைப் பற்றி அதிகார பூர்வமாக ஆவணப்படுத்திய மேலை நாட்டோரில் குறிப்பிடத் தகுந்தவர் ஜாகொல்லியட்!

**

Hindu God of Environment

How Himachal’s deities have quietly monitored forests for generations

Once every three years, villagers escort the deity across forests, grazing lands and farms, retracing the boundaries of their natural resources.

Rachna Verma | Shimla | December 8, 2025 1:35 pm STATESMAN NEWSPAPER

Every few years, deep in the mountains of Himachal Pradesh, the forests receive a visitor – not a forest officer, not a government team, but a deity carried on the shoulders of the people. Nearly 100 kilometres from Shimla, in a village named Bhog in the tehsil Theog, hundreds of villagers gathered as ‘Dodru Devta’, affectionately known as ‘Dev Nanu’, begin a month-long journey.

This sacred procession is far more than a religious ritual; it is an ancient ‘Environmental Audit’ in which damaged trees, polluted waterbodies or neglected cattle are noticed not through human inspection, but a divine power. For generations, this system has quietly upheld ecological discipline long before modern conservation laws took form.

Once every three years, villagers escort the deity across forests, grazing lands and farms, retracing the boundaries of their natural resources. According to tradition, the palanquin moves smoothly only when the environment is healthy. If a tree has been cut without permission, a stream polluted or a pasture overused, the palanquin halts. This pause indicates a violation of the deity’s nature rules. The violators responsible for the damage receive a symbolic punishment—‘dand’—reinforcing the belief and rules that the maintenance of the landscape is a shared duty.

Sangam Age Tamils called the spirits as ANANGU

These practices may seem unusual and unbelievable to many who might witness from outside, but for the Himachal culture and people, this tradition is an unwritten code deeply embedded in the state.  Across Himachal Pradesh, ‘devtas’ are regarded not only as spiritual guides but as custodians of land, water and forests. (TAMIL- ANANGU)  For generations, communities have followed these environmental norms set by their deities. These may include simple rules like offering the first harvest to birds, protecting water sources, protecting forests and not abandoning livestock. These customs evolved long before environmental laws and remain firmly upheld today.

Eighty-six-year-old Jamana Devi, one of Bhog’s oldest residents, has witnessed this tradition for more than eight decades. For her, the belief system is not just a festival but a lifeline. “Through these visits, the ‘Devta’ reminds us that he is always with us,” she said.

She recalled one of the earliest rules the ‘Devta’ set to protect the village’s drinking water. At a time when water was scarce and people often stepped into the community wearing slippers, the ‘Devta’ issued a strict command that no one would be allowed near the well with slippers, and the prasad would be prepared only with water drawn from that well. Gradually, the condition of the well improved, reinforcing the message of collective responsibility.

Jamana Devi also remembered how, in her childhood, any family or village dispute—no matter how small or serious—was taken to the ‘Devta’ for resolution.

As the procession begins, each household must send at least one member for the month-long yatra. Participation is non-negotiable. Throughout the journey, villagers arrange food and shelter for the ‘kardars’ and everyone accompanying the ‘Devta’. Neglecting these responsibilities, they believe, could anger the deity.

‘Dodru Devta’ is placed only on land considered sacred, marked by an old tree dedicated to him. Each village hosts the deity for a night, during which the ‘gur’, or medium, shares warnings and guidance. Villagers listen intently, trusting the deity to protect them from illness, calamities and misfortune—and to safeguard their forests. Even today, no one cuts a tree for house construction without seeking the permission of ‘Devta’.

Digvijay Singh Thakur, the ‘Adhisthak’ (who ensures rules are followed) of ‘Dodru Devta’, explained that the deity is viewed as the protector of natural resources. “The fields, forests and water sources flourish because of his blessings,” he said. The Devta travels with ‘gana’ (followers) named ‘Tunda’ and ‘Rakashan’, the latter believed to ward off evil forces.

village well

Historian Dr Surat Thakur noted that this practice extends across Himachal Pradesh. “From sacred lakes in Mandi to forest groves in Kullu and serpent shrines in Sirmaur, ‘Devta’ culture has created community-led conservation systems that have survived for centuries,” he said. At a time when the Himalayas face growing threats from construction, tourism and climate change, these traditions show how faith can sustain ecological balance.

In 2013, the World Wide Fund for Nature (WWF) and the G.B. Pant Institute of Himalayan Environment and Development, Almora, studied the role of religion in preserving local ecology and culture. Their documentation recorded 514 sacred groves. These groves—commonly known as Devata Vans—are protected spaces where no activity is permitted without the deity’s consent. These untouched forest patches hold old-growth trees and rare species, safeguarded for generations through faith rather than formal enforcement.

Speaking to The Statesman, Principal Chief Conservator of Forests Sanjay Sood said, “If it were possible, I would declare all forests as ‘Dev Vans’. People are remarkably sincere about this tradition, and we have never received complaints of illegal activity from these areas.”

He added that the traditional folklore surrounding ‘devis’ and ‘devtas’ has naturally woven ecological conservation into daily community life. During customary eco-visits, the deities are believed to inspect their territories, while villagers perform simple but meaningful rituals to honour water bodies, trees and forested land.

In these villages, the guardians of nature are not distant officials or modern policies, but the very gods who walk the land with their people. Through faith, reverence, fear and tradition, communities continue to protect forests in ways that modern conservation efforts often struggle to achieve.

(This article is an outcome of the Stories of Hope Media Fellowship by IUCN India under the Himalaya for the Future initiative.)

—subham—

Tags- Himachal, Dodru Devta, Forest God, Environment Protection

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-24; இந்துமத கலைச்சொல் அகராதி-24 (Post .15,254)

Written by London Swaminathan

Post No. 15,254

Date uploaded in London –  8 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

DA words

டமருகம்

சிவன் கையில் உள்ள உடுக்கை ; இந்த உடுக்கை ஒளியிலிருந்து சம்ஸ்க்ருத தமிழ் ஒலிகள் பிறந்ததாகக் கூறுவார்கள்.

DAMARUKA

Kettle Drum of Lord Siva  ; it is believed that Mahesvara Sutras came from the sound of Siva; they are the basic letters of Sanskrit language.

***

தனு

தானவர்கள் தாய் ; தானவர்களும் தைத்யர்களும் அசுரர்கள்

DANU

Mother of Danavas (demons)

***

தசக்ரீவன்

பத்து தலை ராவணனின் பெயர் ; க்ரீவ என்றால் கழுத்து .

DAS/A GREEVA

Ten Necked (Ten headed); Ravana of Lanka.

***

சுவாமி  தயானந்த  சரஸ்வதி  (1824–1883),

குஜராத்தில் பிறந்தார் ; பெயர் மூல சங்கரர் ; துறவறத்தை ஏற்று இந்து சமாஜத்தைத்ச் சீர்திருத்துவதற்காக ஆர்ய சமாஜத்தைத் துவங்கினார் ; வேதங்களே அடிப்படையானவை; ஆகையால் உருவ வழிபாடு தேவையில்லை என்றார் ; ஜாதி முறையை எதிர்த்தார்; சடங்குகள், யாத்திரை போன்றவை தேவை இல்லை என்றார் நாட்டின் விடுதலைக்கும் குரல் கொடுத்தார் இவரது போதனைகள் சத்யார்த்தப் பிரகாசம் என்ற நூலில் உள்ளன .

Swami Dayanand Saraswati (1824–1883)

Founder of Arya Samaj (aarya samaajam). Born as Mula Sankara in Gujarat, he mastered Vedas and became an ascetic. He is one of the reformers of the Hindu society. His teachings are Belief in One Formless God (Ishwar),Vedas are the eternal, infallible source of knowledge, denounced the caste system based on birth, untouchability, and social discrimination. He condemned meaningless rituals, animal sacrifices and pilgrimages. Dayananda’s views were published in his famous work, Satyarth Prakash (The True Exposition). He was a patriot and inspired leaders like Lala Rajpat Rai.

***

DE words

தேவரிஷி

தேவலோகத்தில் வாழும் ரிஷிகள் ; நாரதர் அவர்களில் ஒருவர். பூலோகத்தில் முழு அளவுக்கு ஞானம் பெற்ற ரிஷி முனிவர்கள் இந்த நிலைக்கு உயர்த்தப்படுகிறரர்கள்

DEVA,DEVARISHI

Seers living in the Devaloka, that is the celestial region. Those seers who attained perfection are elevated to Deva loka. Narada is one of the Deva Rishis.

***

தேவகி

கிருஷ்ண பரமாத்மாவின் தாயார்; வசுதேவரின் மனைவி; கம்சனின் உறவினர்; இவளுக்குப் பிறக்கும் குழந்தை கம்சனைக் கொல்வான் என்ற ஆரூடம் இருந்ததால் கம்சன் , அவனுக்குப் பிறந்த குழந்தைகளையெல்லாம் கொன்றான். அவளை சிறையில் அடைத்தான். கிருஷ்ணர் பிறந்தபோது பல அற்புதங்கள் நடந்தன. அவரை வாசுதேவன் பாதுகாப்பாக யசோதாவிடம் ஒப்படைத்தான் ; கிருஷ்ணனைக் கொல்ல பல அசுரர்களைக் கம்சன் ஏவினான்;  அவை வெற்றிபெறவில்லை

Devaki

Lord Krishna’s mother.

Daughter of Devaka and wife of Vasudeva . she gave birth to Krishna inside a prison . Kamsa, cousin of Devaki put her in jail because there was a prediction that her child would take away his life. But when Krishna was born he was taken to another place of safety to escape from the enraged Kamsa. All the attempts of Kamsa to kill Krishna failed and at the end Krishna himself killed Kamsa.

***

தேவவிரத

பீஷ்மரின் பெயர் (காண்க- பீஷ்மர்)

Devavrata

Another name of Bhisma.

***

தேவயானி

மகாபாரதம், ஆதி பருவத்திலும் மத்ஸ்ய புராணத்திலும் உள்ள ஒரு காதல் கதை. அசுரர்களின் குருவாகிய சுக்கிராச்சாரியார் அமிர்தசஞ்சீவனி என்ற உயிர் காக்கும் வித்தையைத் தெரிந்து வைத்திருந்தார். அதன் மூலம் இறந்தவர்களை மீண்டும் உயிர் பெறச்செய்ய முடியும். தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதிக்கு இந்த வித்தை தெரியவில்லை. இதனால் தேவர்கள் ,பிரகஸ்பதியின் மகனான கச்சன் என்பவனை சுக்கிராச்சாரியரிடம் சீடனாகச் சேரும்படி அனுப்பினார்கள். கச்சன், சுக்கிராச்சாரியாரிடம் சென்றான். சுக்கிராச்சாரியருடைய மக்கள் தேவயானி  கச்சன் மீது காதல் கொண்டாள். அவன் தங்கள் எதிரியான பிரகஸ்பதியின் மகன் என அறிந்து கொண்ட அசுரர்கள்  கச்சனைக் கொன்று அவனது உடலை புலிகளுக்கு உணவாகக் கொடுத்து விட்டார்கள்.  கச்சன் வராததைக் கண்ட தேவயானி தந்தை சுக்கிராச்சாரியரிடம் சென்று முறையிட்டாள்.  சுக்கிராச்சாரியார் தனது மந்திர சக்தியினால் கச்சனை உயிர் பெறச் செய்தார். மீண்டும் ஒரு முறை , அசுரர்கள் அவனைக் கொன்று, அவன் உடலை எரித்து அந்த சாம்பலை ஒரு பானத்தில் கரைத்து சுக்கிராச்சாரியர் அருந்தக் கொடுத்தார்கள். . தேவயானி மீண்டும் தந்தையிடம் முறையிட்டாள். தன் சக்தியினால் கச்சன் தன் வயிற்றில் இருப்பதை சுக்கிராச்சாரியர் அறிந்து கொண்டார். சுக்கிராச்சாரியார் யோசித்தார். அவர் தனது வயிற்றுக்குள் இருக்கும் கச்சனுக்கு அமிர்தசஞ்சீவனி மந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தார். பின்னர் அந்த மந்திர சக்தியினால் அவனை உயிர் பெறச் செய்தார். கச்சன் அவரது உடலைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தான்.  கச்சன் அமிர்தசஞ்சீவனி மந்திரத்தைச் சொல்லி அவரை மீண்டும் உயிர் பெறச் செய்தான். தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தேவயானி அவனிடம் கேட்டாள். அதற்கு அவன் “நீ என் குருவின் மகள்.  மேலும் நான் உன் தந்தை வயிற்றிலிருந்து வந்தேன். ஆகவே நீ எனக்கு சகோதரி போன்றவள். எனவே திருமணம் செய்ய முடியாது” என்று சொன்னான்.  நீ கற்றுக்கொண்ட வித்தை உனக்குச் சமயத்தில் மறந்து போகும்” எனச் சாபமிட்டாள். கச்சன் அவளிடம் “நீ தேவையில்லாமல் சாபம் போட்டுவிட்டாய். உன்னை ஒரு பிராமணனும் திருமணம் செய்ய மாட்டான். நீ நினைத்த எதுவும் வாழ்வில் நடக்காது” எனப் பதில் சாபம் போட்டான். இதற்கிடையில் தேவயானியை அரசனின் மகள் ஷர்மிஷ்டா , ஒரு வாக்குவாதம் முற்றவே, கிணற்றில் தள்ளிவிட்டாள் . அவ்வழியாக வந்த மன்னன் யயாதி அவளைக் கரம் பிடித்து வெளியே எடுத்தான். இதனால் அவனையே திருமணம் செய்துகொண்டாள்.

Devayani

Daughter of the brahmin priest Sukra. He was the teacher of Asuras/demons. He was the Guru of Danavas at the court of Vrishaparva. She fell in love with her father’s pupil Kacha. It was because of her that Sukracharya was obliged to teach him, Sanjivani Mantra through which the dead could be restored to life once again. Asuras, knowing that Kacha was Deva Guru Brihaspati’s son killed him twice, but he was restored to life by Sukracharya. One time he had to come out of Guru Sukracharya’s stomach with the help of Mrta Sanjivani mantra. When Devayani told him that she wanted to marry him, he refused saying that he was like a sister for him.  Both parted but cursing each other. Meanwhile, Devayani had a quarrel with Sharmishta, king’s daughter. As a result, she was pushed into a well by Sharmistha. Yayati, King of another country, passed by the well and rescued her; later she became a legal wife of Yayati

***

தீபாராதனை

இறைவனுக்குத் தீபத்தைக் காட்டும் சடங்கு. பூஜைகளின் முடிவிலும்,யாக யக்ஞங்களின்  முடிவிலும் கடவுளுக்கு நெய் தீபத்தைக் கட்டி உபசரிக்கும் சடங்கு இது; முன்னர் சூடத்தைக் காட்டி வந்தனர். தற்போது நெய் தீபம் மட்டுமே காட்டப்படுகிறது. தமிழ்  நாட்டுக் கோவில்களில் காலையிலும் மாலையிலும் இது மிக விரிவாக நடைபெறுகிறது. பலவகையான தீபங்களைக்  காட்டுவார்கள்; அவை பல வித வடிவங்களில் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள திரிகளுடன் ஒளிரும். முடிவில் அந்த தீபாராதனைத் தட்டினை பக்தர்களுக்குக் காட்டி பிரசாதமும் வழங்குவர். அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இது நடைபெறும்.

DEEPA/ARADHANA

At the end of Pujas, Yaga, Yajnas,  Arti with a lamp is shown to God. This is called Deepaaraadhanaa. Deepa is lamp. In the olden days camphor was used, nowadays only Ghee Lamp is shown in temples. In South Indian temples it is an elaborate ceremony in the morning and in the evening with bells ringing loudly. The temples have different types of lamps. They are not only differently shaped but also have more wicks. At the end it is shown to assembled devotees and Prasad is distributed.

***

DH words

தர்ம சாஸ்திரங்கள்

இந்து மத சட்ட புஸ்தகங்கள் ; எவைகளைச் செய்யலாம் எப்படிச் செய்யலாம் என்ற விதிகளைக் கூறும் நூல்கள்; இவை காலத்துக்கு காலம் மாறும்; தேசத்துக்குத் தேசம் மாறும்; ஆகையால் பல ரிஷிகள் இவைகளை வெவ்வேறு கால கட்டங்களில் எழுதினார்கள் .ஸ்ம்ருதி என்று சம்ஸ்க்ருதத்தில் பெயர்; அதாவது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை மனு, யாக்ஞவல்க்யர் உள்பட சுமார் இருபது ரிஷிகள் இவைகளை எழுதியுள்ளனர். ஆசார விதிகள், சட்டங்கள்; பிராயச்சித்தம் முதலியவற்றை விளக்குகின்றன

Dharma Sastra (saastra)

Hindu Law Books; also known as Smritis. Laws change according to time and place of living. So Hindus have over twenty popular Smritis; most popular is Manu Smriti; all kings declare that they rule according to Manu’s rule. These books say the Dos and Don’t’s for Hindus; They guide Hindus regarding performing rituals. Famous Law books- Manu Smriti; Yajnavalkya Smriti.

Generally they have three parts: 1.Achara (aachaara)-Rules of conduct and practice; 2.Vyavahaara- Judicature; 3.Praayachitta- Penance, atonement (exit strategy)

–subham—

Tags- Devayani, Dharma Sastras, Deva Rishi, தேவகி , கச்ச தேவயானி கதை

GNANAMAYAM 7 December 2025 BROADCAST PROGRAMME

TRR

News

GNANAMAYAM 7 December 2025 BROADCAST PROGRAMME

Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .

London Time 12 PM GMT

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time.

****

Prayer – Mrs Vimala Suryanarayanan, Chennai

***

NEWS BULLETIN

VAISHNAVI ANAND and LATHA YOGESH from London present World Hindu News in Tamil

****

Alayam Arivom presented by Brahannayaki Sathyanarayanan from Bangalore

Topic- Keelvalur Temple

****

SPECIAL EVENT-

Talk on Periyapuranam

Appar and Pillaiyar/Sambandar in Periyapuranam

By

Sri T R RAMESH,

President of Temple Worshippers Association

(Son of ‘ Sekkizar Adippodi’  Dr T N Ramachandran )

 ******

ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சி நிரல் ஞாயிற்றுக்கிழமை 7th December 2025

நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .

***

இறைவணக்கம் —  Mrs Vimala Suryanarayanan, Chennai

***

உலக இந்துமத செய்தி மடல்-

லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும்  லதா யோகேஷும் வழங்கும் செய்தி செய்தி மடல்.

***

ஆலயம் அறிவோம் — சொற்பொழிவு—

பிரஹந்நாயகி சத்தியநாராயணன்- பெங்களுர்

தலைப்பு –கீவளூர் ஆலயம்

****

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி:

பெரிய புராணத் சொற்பொழிவுத் தொடர்:

பேசுனர் – திரு T R  ரமேஷ் அவர்கள்,

(சேக்கிழார் அடிப் பொடி டாக்டர் T N  ராமச்சந்திரன் அவர்களின் புதல்வர்)

ஆலயம் செல்லுவோர் சங்கத் தலைவர்

தலைப்பு- பெரியபுராணத்தில் அப்பரும் பிள்ளையாரும் (சம்பந்தர்)

—subham—

Tags-Gnanamayam Broadcast, 7-12- 2025, programme,

ஞானமயம் வழங்கும் (7-12-2025) உலக இந்து செய்திமடல் (Post No.15,253)

Written by London Swaminathan

Post No. 15,253

Date uploaded in London –  8 December 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்துவைஷ்ணவி ஆனந்த்தும்  லதா  யோகேஷும்  வாசித்து வழங்கும் செய்தி மடல்.

அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 7- ம் தேதி , 2025-ம் ஆண்டு.

***

முதலில் தேசீயச்  செய்திகள்

அதிபர் புடினுக்கு பகவத் கீதையின் ரஷ்ய பதிப்பை பரிசளித்த மோடி

இந்தியா வந்துள்ள அதிபர் புடினுக்கு, பகவத் கீதையில் ரஷ்ய பதிப்பை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இருநாள் அரசுமுறை பயணமாக டில்லி வந்தடைந்தார். பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புடினுக்கு ஏ.ஆர்.ரகுமானின் இசையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில், ரஷ்ய அதிபர் புடினை, பிரதமர் மோடி நேரில் சென்று ஆரத்தழுவி வரவேற்று, தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

அங்கு பிரதமர் மோடி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் புடின் பங்கேற்றார். பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புடினுக்கு பகவத் கீதையில் ரஷ்ய பதிப்பை பரிசாக வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, பிரதமர் மோடி கூறியிருப்பதாவது: ரஷ்ய மொழியில் கீதையின் பிரதியை அதிபர் புடினுக்கு வழங்கினேன். கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கின்றன. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

***

காசி தமிழ் சங்கமம் நான்காவது ஆண்டு விழா துவக்கம்:

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் நான்காவது பதிப்பு டிசம்பர் 2 ஆம் தேதி துவங்கியது.. மத்திய கல்வி அமைச்சகம் டிசம்பர் 2 ஆம் தேதி  முதல் டிசம்பர் 15 ஆம் தேதி  வரை இதை நடத்துகிறது. இதன் கருப்பொருளாக ‘ தமிழ் கற்கலாம்’ என அறிவிக்கப்பட்டு உள்ளது.

துவக்க விழாவில்  மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், எல்.முருகன் தமிழக கவர்னர் ரவி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகமும் சென்னை ஐ.ஐ.டியும் இணைந்து நடத்தும் இவ்விழாவில் முதல் கட்டமாகத் தமிழ்நாட்டில் இருந்து 7 குழுக்கள் காசிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டமாகத் தமிழ்நாட்டில் டிசம்பர் 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதிவரை நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் வாரணாசியில் இருந்து 300 மாணவர்கள் தமிழகத்திற்கு வந்து தமிழ் மொழியை  கற்க உள்ளனர்.

***

வேத உலகில் சாதனை படைத்த இளைஞர்:

வேதமூர்த்தி தேவவ்ரத மகேஷ் ரேகே 19 வயது இளைஞர், காசியில் சுக்ல யஜுர் வேதத்தை தண்டக்ரம முறையில் பாராயணம் செய்து சாதனை புரிந்துள்ளார். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரைப் பாராட்டி விருதுகள் வழங்கினார் ;பிரதமர் மோடியும் தனது நிகழ்ச்சி ஒன்றில் அவரைப்   பாராட்டினார்  .

தண்டக்ரம முறை பாராயணம் என்பது கடினமான முறை.

தண்டக்ரம பாராயணத்தில் 25 லட்சத்திற்கும் அதிகமான ஸ்லோகங்களைத் நினைவில் கொண்டு பிழையின்றி தொடர்ந்து 50 நாள்களுக்கு மேல் முழுவதையும் சொல்லி முடித்துள்ளார்.

இது மாபெரும் சாதனையென்று வேதமறிந்த அறிஞர்கள் கூறியுள்ளனர். தெய்வீக திறமை, உண்மையான தபஸ், மற்றும் நமது குரு பரம்பரையின் காலத்தால் அழியாத வலிமைக்கு இது ஒரு சான்று. என்று அவர்கள் பாராட்டினர்.

***

Hindu Front Leader

Ram in Goa

19 year old Vedic Scholar

கோவிலில் தங்கப் பல்லியை திருட முயற்சிஐகோர்ட்டில் வழக்கு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், பழமையான தங்கப்பல்லி சிற்பத்தின் தங்கக் கவசத்தை திருட நடந்த முயற்சி தொடர்பாக, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிய மனுவுக்கு காவல் துறை பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. கோவில் கருவறைக்கு பின்புறம் பிரகாரத்தின் உத்தரத்தில், தங்கப்பல்லி, தங்கச்சந்திரன், தங்கச்சூரியன், வெள்ளிப்பல்லி ஆகிய சிற்பங்கள் உள்ளன.

கோவிலில் பல நுாற்றாண்டுகளாக உள்ள இந்த சிற்பங்களின் தங்கம் மற்றும் வெள்ளி கவசங்கள், சிலைகளை கோவில் அர்ச்சகர்களுடன் சேர்ந்து அறநிலையத்துறை அதிகாரிகள் திருட முயற்சித்துள்ளனர். ஏற்கனவே உள்ள சிலைகளை அகற்றிவிட்டு, அதே போன்ற சிலைகளை வைக்கவும் முயன்றுள்ளனர்.

Golden Lizard in Kanchii Temple Stolen

எவ்வித அனுமதியும் பெறாமல், இதுபோல சிலைகளை மாற்றுவது ஆகம விதிகளுக்கு முரணானது. பழங்கால பொருட்களை, உரிய அனுமதியின்றி அகற்ற அறநிலையத்துறை சட்டம் தடை விதிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக் ஆஜராகி, “மனுதாரரின் புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட்டது.

‘ ‘விசாரணையில், சிலை திருட்டு ஏதும் நடக்கவில்லை என தெரியவந்தது. அதையடுத்து, புகார் முடித்து வைக்கப்பட்டது. அதுகுறித்து மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,” என்றார்.

அதற்கு மனுதாரர் தரப்பில், ‘முழு விசாரணை நடத்தாமல் புகாரை முடித்து வைத்ததற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளேன்.

அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு மாறாக, சிலைகளை மாற்றி உள்ளனர்’ என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

****

திருக்கார்த்திகை தீபத் திருவிழா  

டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி புதன்கிழமை  திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடந்தது திருவண்ணாமலையில்  கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது . தீபத்திற்கான 300 கிலோ எடை கொண்ட கொப்பரை மற்றும் 1500 மீட்டர் திரி,4500  கிலோ நெய் ஆகியவையும் மலை மீது முதல் நாளன்றே  கொண்டு செல்லப்பட்டது.

.அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை மகாதீபம் ஏற்றும் உரிமை பருவத ராஜகுலத்தினருக்கு மட்டுமே உண்டு. இவர்கள் பரம்பரை பரம்பரையாக தலைமுறை தலைமுறையாக இந்த புனிதமான பணியை செய்து வருகின்றனர். பர்வத ராஜகுலத்தினர் பார்வதி தேவி அவதரித்த மரபில் வந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொள்பவர்கள்.  ஆகையால், இவர்கள் மீனவர்கள் என்றும் செம்படவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

****

தீபம் ஏற்றாமல் நீதிமன்ற அவமதிப்பு; டிசம்பர்.9 ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்ற உத்தரவை அவமதித்த வழக்கை, டிச.,9க்கு ஒத்தி வைத்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், கார்த்திகை தீபம் ஏற்றவில்லை. நீதிமன்றம் உத்தரவிட்டும், அமல்படுத்தாமல் தி.மு.க., அரசு பிடிவாதம் காட்டியது. இதனால் ஹிந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம ரவிக்குமார் மதுரை கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணை இன்று (டிச.,05) காலை 10.45 மணிக்கு மீண்டும் ஐகோர்ட் மதுரைக்கிளையில் நீதிபதி சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுவாமி நாதன் வழக்கு விசாரணையை டிசம்பர் 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

***

தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்: ஹிந்து முன்னணி அறிவிப்பு

தி.மு.க., அரசின் இரட்டை வேடத்தை கண்டித்து, தமிழகம் முழுதும் இன்று போராட்டம் நடத்த உள்ளதாக, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விஷயத்தில், மேல்முறையீடு என்ற பெயரில் இந்த அரசு இரட்டை வேடம் போடுகிறது.

தி.மு.க., ஆட்சியில், 158 கோவில்களை இடித்துள்ளதாக தகவல் வந்துள்ளது; 200 கோவிலுக்கு மேல் வரும் என்று நினைக்கிறோம். ஹிந்துக்கள் மீது, இந்த அரசுக்கு என்ன கோபம் என்று தெரியவில்லை. சிறுபான்மையினர் ஓட்டுக்காக இந்த அரசு இப்படி செயல்படுகிறது.

மதசார்பற்ற அரசு என்று கூறுபவர்கள், தீபம் ஏற்ற அனுமதி அளித்திருக்க வேண்டும். இவ்விஷயத்தை எல்லாம் கண்டித்து, தமிழகம் முழுதும் போராட்டம் நடத்த உள்ளோம் என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கூறினார்.

*****

 சபரிமலை சன்னிதானத்தில் போட்டோ எடுக்க  தடை

சபரிமலையில் போட்டோ எடுக்கவும், அய்யப்பன் சிலைகளை கொண்டு செல்லவும்  தேவசம் போர்டு தடை விதித்துள்ளது.கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் பூஜாரிகளுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

சபரிமலை சன்னிதான திருமுற்றத்தில், பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களில் போட்டோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

***

இருமுடியை சோதனையிடாமல்விமானத்தில் எடுத்து செல்லலாம்

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு நாடு முழுவதிலும் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி செல்கின்றனர்.

வழக்கமான சோதனை எதுவும் இல்லாமல் விமானத்துக்குள் எடுத்து செல்ல இருமுடிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை விமான துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் ஜன. 20-ம் தேதி வரை அமலில் இருக்கும்.

****

பாகிஸ்தானில் 37 ஹிந்து கோவில்கள்குருத்வாராக்கள் மட்டுமே செயல்படுகின்றன: அதிர்ச்சி தரும் செய்தி

பாகிஸ்தானில் மொத்தமுள்ள 1817 ஹிந்து கோயில்கள் மற்றும் சீக்கிய வழிபாட்டு தலங்களில் 37 மட்டுமே செயல்பட்டு வருகிறது என அந்நாட்டு பார்லிமென்ட் குழு முன்பு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்த குழு தலைவர் டானேஷ்குமார் கூறியதாவது: சிறுபான்மையினர் பாதுகாப்புக்கு அரசியலமைப்பு அளித்த வாக்குறுதியை பார்லிமென்ட் குழுவானது நிறைவேற்ற வேண்டும். எனக்கூறினார்.

ரமேஷ்குமார் வன்க்வானி என்ற எம்பி கூறியதாவது: சொத்து மீட்பு குழுவானது, தனது கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் குருத்வாராக்களை கவனிப்பதை கைவிட்டுவிட்டது. இந்த குழுவின் தலைமைப்பதவியை முஸ்லிம் அல்லாத நபரிடம் வழங்க வேண்டும். அப்போது தான் புறக்கணிக்கப்பட்ட மத சொத்துகளை மறுசீரமைத்து முறையாக பராமரிக்க முடியும். என்றார்.

கேசோ மால் கேல் தாஸ் என்ற எம்பி கூறுகையில், நாடு பிரிவினைக்கு பிறகு பெரும்பாலான கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் கைவிடப்பட்டன. உள்ளூரில் வசித்த ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துவிட்டனர் என்றார்.

***

சென்ற வாரச் செய்திகள்

சென்ற ஞாயிற்றுக்கிழமை நமது ஒலிபரப்பு நடக்காததால் அந்த வாரத்தில் நடந்த மூன்று முக்கிய விழாக்களை சுருக்கமாகக் காண்போம்

பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அன்று ராமர் கோவிலின் உச்சியில் தர்ம கொடியை ஏற்றி வைத்தார்

22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்ட இந்த காவி நிறக் கொடி, பாராசூட் தர துணியால் ஆனது. இது ஒரு தடிமனான நைலான் கயிற்றைக் கொண்டு கோவிலின் உச்சியில் ஏற்றப்பட்டுள்ளது. இது 161 அடி உயர கோபுரத்தின் உச்சியில் பொருத்தப்பட்டுள்ளது. கொடியில் சூரியன் சின்னம் உள்ளது. இது ராமர் பகவானின் சூர்ய வம்சத்தைக் குறிக்கிறது. மேலும், ஓம் மற்றும் கோவிதாரா மரத்தின் சின்னங்களும் உள்ளன. கோவிதாரா மரம், ராம் ராஜ்யத்தின் மாநில மரமாக விவரிக்கப்படுகிறது.

****

குருக்ஷேத்ரத்தில் சங்கு சின்னம் திறப்பு


பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு சிறப்பான சங்கை வைத்திருந்தனர். அதற்குத் தனியான பெயரும் உண்டு. அதே போல கிருஷ்ண பரமாத்மாவும் கையில் சங்கு வைத்திருப்பார் ; கிருஷ்ணனின் சங்கின் பெயர் ‘பாஞ்சஜன்யம்’

முகலாய மன்னா் ஒளரங்கசீப் உத்தரவுப்படி சிரச்சேதம் செய்யப்பட்ட ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ் பகதூரின் 350-ஆம் ஆண்டு உயிா்த் தியாக நினைவு தினத்தையொட்டி, ஹரியாணாவின் குருக்ஷேத்ரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பங்கேற்றாா்.

அப்போது மஹாபாரத வளாகத்தில் கிருஷ்ணனின் பாஞ்சஜன்ய சங்குச் சின்னதத்தைத் திறந்து வைத்தார் அதன் எடை சுமார் 5  டன். அது ஐந்து மீட்டர் உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது;

மஹாபாரத காட்சிகளைச் சித்தரிக்கும் புதிய வளாகம் குருக்ஷேத்ரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 

***

77அடி வெண்கல ராமர் சிலை திறப்பு  

கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில், 77 அடி உயர வெண்கல ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே உயரமான இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

மேலும் மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க் கார்டனையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். விழாவை முன்னிட்டு பத்ரிநாத்திலிருந்து கோவா வரை ஒரு பிரமாண்டமான ஸ்ரீ ராம யாத்திரை நடைபெற்றது. விழாவில் சுமார் 1 லட்சம் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

***

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் லதா  யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.

அடுத்த ஒளிபரப்பு  டிசம்பர் 14 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை லண்டன் நேரம் பகல் 12 மணிக்கும், இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும் .

வணக்கம்.

—SUBHAM—-

Tags- Gnanamayam, Broadcast, News, 7 12  2025, Vaishnavi