London Swaminathan’s February 2025 Articles Index;Index No. 147 (Post No.14,273)

Written by London Swaminathan

Post No. 14,273

Date uploaded in Sydney, Australia –  5 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

First place for London ;Tenth place for Sydney -1 (Post No.14,166)2/2/25

March 2025 Calendar with Mirabai Quotes 14244, 25/2/25

My Trip to Blue Mountains in Australia (Post No.14,185)8/2

My Trip to Nelson Bay to Watch Dolphins (Post.14,163)1/2

My Visit to Art Gallery in Sydney (Post No.14,236)23/2

My Visit to Minto Shiva Temple in Australia (Post No.14,211)16/2

My Visit to Royal Botanic Garden in Sydney (Post No.14,253)28/2

My Visit to the State Library in Sydney (Post No.14,222)19/2

No Tamil, No Sanskrit in Australian Aborigine Languages! (Post No.14,250)27/2

GNANAMAYAM 2-2-2025 BROADCAST PROGRAMME, 2, 9, 16, 23 February 2025

GNANAMAYAM 2-2-2025 BROADCAST AUMMARY 3,10, 17, 24 Feb.2025

Hindu Crossword 4, 7, 20, 21, 10,12, 13, 14, 15, 23, 26,9 Feb.2025

London Swaminathan’s January 2025 Articles Index; Index No. 146 (Post No.14,176)

FIND GOLD FROM THIS CROSSWORD (Post No.14,179)6/2

****

Tamil Articles

ராமன் ஒரு யமன்: புரந்தரதாசர் புகழ்மாலை! (Post.14,249)27/2

மார்ச் 2025 காலண்டர்; புரந்தரதாசர் பொன்மொழிகள் (Post No.14,240) 24/2

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-1 ; சீதக் களபச் செந்தாமரைப்பூம் (Post No.14,200) 13/2

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-2 ; மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (Post.14,204)

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-3; மூஷிக வாகனம் ஏன்?(Post No.14,207)

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-4; ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி(Post.14,210)

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-5 ; என்னை யறிவித்து எனக்கருள் செய்து (Post.14,216)

விநாயகர் அகவல் ஆராய்ச்சிக் கட்டுரை-6; வித்தக விநாயக  விரைகழல் சரணே ( Post No.14,218)

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  9-2-2025 (Post.14,189)

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  16-2-2025 (Post.14,214)

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  2-2-2025

ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல்  23-2-2025 (Post N.14,239)

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 18 (Post.14,162) 1-2-2025

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 19 (Post.14,173)

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 20 (Post.14,175)

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 21 (Post.14,178)

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 22 (Post.14,181)

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 23 (Post No.14,184)

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 24 (Post.14,195)

ஆஸ்திரேலியாவில் அழகான சிவன் கோவில் -25 (Post No.14,215)

சிட்னி நூலகத்துக்கு விஜயம் -26 (Post.14,221)

ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் யார் ?– 27 (Post No.14,234)

சிட்னி ஆர்ட் காலரிக்கு விஜயம்- 28 (Post.14,232) 22-2-25

ஆதிவாசி மொழி சொற்கள் -சிட்னி மியூசியத்துக்கு விஜயம்-29 (Post.14,247)26/2

கங்கை நீர் பற்றிய புதிய ஆராய்ச்சியில் வெளியான அதிசயத் தகவல்! (Post.14,235) 23/2

கெடா, கடாரம், கிடாரங்காய் ஊறுகாய்  பெயர் காரணம் (Post No.14,228) 21/2

தமிழ் தெரியுமா  20225 ?  (Post No.14,225) 2,5,8,20,12,16,19,25,28

—subham—

Tags- London Swaminathan’s February 2025 Articles Index,Index No. 147

புரந்தரதாசர் கண்டுபிடிப்பு! ராமர் பாயசம், கிருஷ்ணா சர்க்கரை, புதுவகை கல்கண்டு! (Post.14,272)

Written by London Swaminathan

Post No. 14,272

Date uploaded in Sydney, Australia –  5 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(புரந்தரதாசர் பற்றிய 7–வது கட்டுரை இது)

புரந்தரதாசர் கீர்த்தனைகளில் நல்ல ருசி உண்டு; யாராவது அவரது வீட்டுக்குப் போனால் ராமர் பாயசம் தருவார்; அதில் கிருஷ்ணா சர்க்கரையும் இருக்குமாம்; அத்தோடு வாசலில் உள்ள தாம்ப்பாளத்  தட்டிலிருந்து கற்கண்டும் எடுத்துக்கொள்ளலாமாம் . இதற்காக அவர்  நம்மை வெற்றிலை பாக்கு வைத்து மேள தாளத்துடன் வரவேற்கிறார் . இதோ அவரே சொல்கிறார்

ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே

விட்டல நாம துப்பவ கலசி பாயி சப்பரிசிரோ (ராம)

ராமா என்னும் பாயசத்தை தயாரிக்க, கிருஷ்ணா என்னும் சர்க்கரையை பயன்படுத்தவும்;

விட்டலா என்னும் நெய்யைப் போட்டுக் கலக்கி, சுவைத்துப் பாருங்கள், சப்புக் கொட்டுங்கள் (வாயில் எச்சில் ஊறும்) (ராம)

ஒம்மன கோதிய தந்து வைராக்ய கல்லலி பீசி

சும்மனே சஜ்ஜிய தெகெது சன்ன ஷாவிகே மாடிரோ*** (ராம)

கவனம் (ஒருமுனைப்படுத்தல்) என்னும் கோதுமையைக் கொண்டு வந்து, வைராக்யம் என்னும் கல்லில் போட்டு

அந்த மாவைக் கையில் எடுத்து மெல்லிய இழையாக செய்வீராக (ராம)

ஹ்ருதயவெம்போ மடிகேயல்லி பாவவெம்போ எசரு இட்டு

புத்தியிந்தா பக்வவ மாடி ஹரிவாணலி படிசிகொண்டு

ஆனந்த ஆனந்தவெம்போ டேகு பந்தாக எரடு டேகு பந்தாக

ஆனந்த மூர்த்தி நம்ம புரந்தர விட்டலன நெனெயிரோ (ராம)

இதயம் என்கிற பானையில்; எண்ணம் என்கிற அந்த மாவைப் போட்டு

புத்தியுடன் அதை நன்றாக சமைத்து; ஹரி என்கிற பெரிய தட்டில் போட்டு

(சாப்பிட்டபிறகு) ஆனந்த ஆனந்த என்கிற இரண்டு ஏப்பங்கள் வரும்போது

ஆனந்த மூர்த்தி நம் புரந்தர விட்டலனை நினையுங்கள் (ராம)

***

சஜ்ஜிகே – கோதுமை & சர்க்கரையால் செய்யப்படும் ஒரு இனிப்புப் பண்டம்.

ஷாவிகே – சேமியா போல் மெல்லிய, நீண்டதாக ஆக்கிக் கொள்ளுதல்

****

தமிழில் கிருபானந்தவாரியார் சுவாமிகளின் உபன்யாசத்தைக் கேட்டவர்களுக்கு ஊறுகாய் போடுவது பற்றி அவர் சொன்னது மறக்காது!

புது வகைப்    பழச்சாறு SWEET — வள்ளலார்

வள்ளலார்  பாடலுடன் ஒப்பீடு ; சிவன் நாமம் மூன்று பழச் சாறு

தனித்தனி முக்கனி பிழிந்து, வடித்து, ஒன்றாய்க் கூட்டி

சர்க்கரையும் கற்கண்டின் பொடியும் மிகக் கலந்தே,

தனித்த நறும் தேன் பெய்து, பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்து, ஒரு தீம் பருப்பிடியும் விரவி,

இனித்த நறுநெய் அளைந்தே, இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்த சுவைக் கட்டியினும் இனித்திடும் தெள் அமுதே,

அனித்தம் அறத் திருப்பொதுவில் விளங்கும் நடத்து அரசே,

அடிமலர்க்கு என் சொல் அணியாம் அலங்கல் அணிந்து அருளே!

நூல்: திருவருட்பா; பாடியவர் வள்ளலார்

மா, பலா, வாழை என்ற முக்கனிகளையும் தனித்தனியே சாறு பிழிந்து, வடிகட்டிச் சக்கைகளை நீக்கி, அவற்றை ஒன்றாகக் கலந்து, அந்தக் கலவையில் சர்க்கரையும் கற்கண்டுப் பொடியையும் நிறையச் சேர்த்து, அசுத்தம் இல்லாத நல்ல தேனை அதில் ஊற்றி, பசும்பாலும் தேங்காய்ப் பாலும் சேர்த்து, இடித்த பாசிப்பருப்பைப் போட்டுக் கிளறி, இனிப்பான, நல்ல நெய்யையும் சேர்த்துக் கொதிக்கவைத்து இளம் சூட்டில் இறக்கி ஆறவிட்டுப் பின்னர் அதிலிருந்து ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டால் எப்படி இருக்கும்? அந்தச் சுவைக்கட்டியைவிட அதிகம் இனிப்பான தெள்ளமுது, என் இறைவனாகிய நீ!

நிலையில்லாத பிறவித் துயரம் அறுபடும்விதமாக அம்பலத்தில் ஆடும் நடராஜனே, உன்னுடைய பாத மலர்களை என் சொற்களால் அலங்கரிக்கிறேன், ஏற்றுக்கொண்டு அருள் செய்!

*****

புது வகைக் கற்கண்டு  – புரந்தரதாசர்

கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு

கல்லு சக்கரே கொள்ளீரோ

கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு

புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு – நீங்க எல்லோரும்

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு

கற்கண்டை சாப்பிட்டவருக்கே தெரியும் (அது எவ்வளவு இனிமையென்று)

மலர்க் கண்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர் என்னும் (கற்கண்டு)

எத்து ஹேருகளிந்தா ஹொத்து மாருவதல்லா

ஒத்தொத்தி கோணியளு தும்புவதல்லா

எத்த ஓதரு பாடிகே சுங்க இதக்கில்லா

உத்தம சரக்கிது அதி லாப பருவந்தா… (கல்லு)

எருமைகளால் இதை இழுத்துப் போகமுடியாது

எடுத்துப் போட்டு கோணியில் நிரப்பமுடியாது

எங்கு எடுத்துப் போனாலும் இதற்கு வாடகை, சுங்கம் (வரி) கிடையாது

உத்தமமான சரக்கு (பொருள்) இது, அதிகமான லாபம் தரும் பொருளான (கற்கண்டு)

நஷ்ட பீடுவதல்லா நாத ஹுட்டுவதல்லா

எஷ்டு ஒய்தரு பெலே ரொக்க இதக்கில்லா

கட்டிருவெய திந்து கடிமே ஆகுவதில்லா

பட்டணதொளகே பிரசித்த ஆகிருவந்தா.. (கல்லு)

(இதனால்) நஷ்டமே வராது.. (எவ்வளவு சேர்த்தாலும்) துர்நாற்றம் வராது

(உங்களிடமிருந்து) யாராவ்து எடுத்துப் போனாலும் மதிப்பு குறையாதது

கட்டெறும்பு தின்றாலும் குறையவே குறையாதது

பட்டணத்தில் மிகவும் பிரசித்தமானதாக இருக்கும்… (கற்கண்டு)

சந்தே சந்தேக்கே ஹோகி சிரம படிசுவதல்லா

சந்தே ஒளகேயிட்டு மாருவதல்லா

சந்தத பக்தர நாலகே சவிகொம்ப

காந்த புரந்தர விட்டல நாமவெம்ப.. (கல்லு)

சந்தை சந்தையாக போய் விற்க முடியாதது

சந்தையில் வைத்து வாங்கவும் முடியாதது

எப்போதும் (அவர் பெயர் சொல்லும்) பக்தரின் நாக்கில் இனிமையை தரும்

புரந்தர விட்டலா என்னும் நாமமான … (கற்கண்டு)

***

ராம நாமம் செய்யும் அற்புதம் – – புரந்தரதாசர்

ராம மந்தரவ ஜபிஸோ, ஹே மனுஜா

ராம மந்த்ரவ ஜபிஸோ

ஆ மந்த்ர ஈ மந்த்ர மெச்சி கெடலுபேடா

சோம சேகர தன்ன பாமெகே ஹேளித மந்த்ர (ராம)

ராம நாமத்தை ஜபியுங்கள், ஹே மக்களே

அந்த நாமம், இந்த நாமத்தையெல்லாம் பெரிதென்று சொல்லி கெட்டுப் போக வேண்டாம்

அந்த சிவபெருமான் தன் மனதிற்கு இனியவளிடம் (பார்வதியிடம்) சொன்ன நாமம் இதுவே (ராம)

குலஹீனனாதரு கூகி ஜபிஸுவ மந்த்ர

சல பீதியொளு உச்சரிப மந்த்ர

ஹலவு பாபங்கள ஹதகெடிசுவ மந்த்ர

சுலபதிந்தலி ஸ்வர்க சூரெகொம்புவ மந்த்ர (ராம)

அனைவரும் கூடி சொல்லக்கூடிய மந்திரம்

சாலை/தெருக்களில் போகும்போதும் சொல்லக்கூடிய மந்திரம்

எண்ணிலடங்கா பாவங்களை தொலைத்துக் கட்டும் மந்திரம்

சுலபமாக சொர்க்கத்தை அடைய வைக்கும் மந்திரம் (ராம)

மருதாத்மஜ நித்ய ஸ்மரணெ மாடுவ மந்த்ர

சர்வ ரிஷிகளிலி சேரித மந்த்ர

துரித கானனகிது தாவானல மந்த்ர

பொரெது விபீஷணனிகே பட்ட கட்டித மந்த்ர (ராம)

வாயு மைந்தன் (அனுமன்) தினமும் நினைத்து பூஜிக்கும் மந்திரம்

அனைத்து முனிவர்களும் ஜபிக்கும் மந்திரம்

பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு அளிக்க உதவும் மந்திரம்

உச்சரித்த விபீஷணனுக்கு ஆட்சியைப் பெற உதவிய மந்திரம் (ராம)

ஞானநிதி நம்ம ஆனந்த தீர்த்தரு

சானுராகதி நித்ய சேவிப மந்த்ர

பானுகுலாம்புதி சோம நேனிப மந்த்ர

தீன ரக்‌ஷக புரந்தர விட்டலன மந்த்ர (ராம)

ஞான நிதியாகிய நம்ம ஆனந்த தீர்த்தர் (ஸ்ரீ மத்வாச்சாரியர்)

காலை எழுந்ததிலிருந்து முழு நாளும் (எப்போதும்) வணங்கும் மந்திரம்

சூரிய குலத்தில் உதித்த (ராமச்)சந்திரனை நினைக்க வைக்கும் மந்திரம்

(நமது) கஷ்டத்தில் எப்போதும் உதவும் புரந்தரவிட்டலனின் மந்திரம் (ராம)

****

பாடலும் மொழிபெயர்ப்பும் தாசர் சாங்ஸ் .காம் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி உரித்தாகுக.

—subham—

Tags–  புரந்தரதாசர் கண்டுபிடிப்பு,  ராமர் பாயசம், கிருஷ்ணா சர்க்கரை, புதுவகை கல்கண்டு, வள்ளலார், தனித்தனி முக்கனி,  ராம மந்தரவ ஜபிஸோ, கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு, ராம நாம பாயஸக்கே கிருஷ்ண நாம சக்கரே

உலக மர்மங்களை விளக்கும் ஒரே நூல் எது? (Post No.14,271)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,271

Date uploaded in Sydney, Australia – –5 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 13-2-25 kalkionline இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அற்புதமான ரகசியங்களை விளக்கும் அரிய நூல்!

உலக மர்மங்களை விளக்கும் ஒரே நூல் எது?

ச. நாகராஜன் 

உலக மர்மங்களை விளக்கும் ஒரே நூல் எது?

மிக மிக முக்கியமான இந்தக் கேள்விக்கு விடை : யோக வாசிஷ்டம்!

எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேளுங்கள் – மனிதன் ஏன் பிறக்கிறான், எப்படி வாழ்கிறான், ஏன் இறக்கிறான், மறு பிறப்பு உண்டா,  உருவ வழிபாடு வேண்டுமா, கர்மா என்பது உண்மையா, சொர்க்கம், நரகம் உள்ளதா, நாம் காணும் உலகியல் இன்பங்கள் உண்மையா, பொய்யா – இப்படி எந்தக் கேள்வியை வேண்டுமானாலும் கேளுங்கள்.

சரியான, அருமையான பதில் இந்த நூலில் கிடைக்கும்.

சுவாமி ராமதீர்த்தர் இந்த நூலைப் பற்றிக் கூறுகையில், “சூரியனுக்குக் கீழ் எழுதப்பட்ட நூல்களிலெல்லாம் அற்புதமான நூல் இது; இதைப் படிப்பவர் கடவுள் அநுபூதியை உணராமல் இப்பூவுலகில் இருக்க முடியாது” என்று புகழ்ந்து கூறுகிறார்.

ஶ்ரீ ராமர் கேட்ட கேள்விகளுக்கு வசிஷ்ட மாமுனி கூறும் பதில்கள் இதில் உள்ளன.

இதை இயற்றியவர் வால்மீகி முனிவர்.

ஒரு லட்சம் சுலோகங்கள் ஆதியில் கொண்டிருந்த சம்ஸ்கிருத நூல் இது. இது பின்னர் 27687 முக்கிய ஸ்லோகங்களைக் கொண்டு யோகவாசிஷ்ட சாரமாகத் தொகுக்கப்பட்டது. இதையும் படிக்க முடியாதவர்களுக்காக 2500 ஸ்லோகங்களில் இதன் சுருக்கம் இப்போது கிடைக்கப் பெறுகிறது.

உலக வாழ்க்கை எப்படிப்பட்டது?

பெரிய ஆமை ஒன்று கடற்கரை ஓரம் இருந்த பாறைகள் ஒன்றில் ஒரு துளையில் புகுந்து கொண்டது. அது தன் தலையையும் கால்களையும் வெளியே நீட்டும் போது பெரிய அலைகள் அதன் மீது படும். அப்போது சடக்கென்று அது தன் தலையையும் கால்களையும் உள்ளே இழுத்துக் கொள்கிறது. அந்த அலை கடலுக்குள் உள்வாங்கிய பிறகு மீண்டும் ஆமை தன் தலையை வெளியே காண்பிக்கிறது.

இப்போது இன்னொரு பெரிய அலை! மீண்டும் தலை துளைக்குள்…!

இது தான் மனித வாழ்க்கை!

வாழ்க்கையில் நுழையும் போது பிரபஞ்ச சாகரம் என்னும் அகண்ட சமுத்திரத்திலிருந்து பிறப்பு, இறப்பு என்னும் சுழலில் அவன் சிக்குகிறான்.

ஐம்புலன்களை வைத்துக் கொண்டு அவன் படும் பாடு, சொல்லி முடியாது! ஆமை போல அவன் உலகிலிருந்து வெளியேறும் போது அவனது ஐம்புலன்களும் விடுபடுகிறது. அலைகள் தாம் சந்தோஷம் (அல்லது இன்பம்) மற்றும் துக்கம் (அல்லது துன்பம்).

இன்பம் மறையும் போது துன்பம் தோன்றுகிறது!

இதிலிருந்து விடுபட்டு மெய்யான மெய்யை – உண்மையான உண்மையைக் காண வழி உண்டா?

உண்டு என்கிறது – மர்மங்கள் அனைத்தையும் விளக்கும் யோக வாசிஷ்டம்.

நான்கு வழிகள்!

இந்த உலக இன்ப துன்பங்களைக் கடந்து மெய் ஞானத்தை அடைய நான்கு வழிகள் உண்டு.

சந்தோஷம்சாது சங்கம்விசாரம்சமஸ்தம்அவ்வளவு தான்!

சந்தோஷம்

விஷயங்களில் ஆசையை அகற்றி எப்போதும் சந்தோஷமாக இருக்கும் ஒருவனிடம் மாபெரும் சக்திகள் ஏவலாள்கள் போலக் காத்துக் கிடக்கும்.

சாது சங்கம் (நல்லோர் இணக்கம்)

மனதில் இருக்கும் இருளைப் போற்றி அகண்டாகாரமான ஒளியைக் காண்பிப்பர் நல்லோர். இதற்கு ஈடான எதையும் மதச் சடங்குகளாலும், விரதங்களாலும் கூடப் பெற முடியாது.

விசாரம்

நான் யார்? ஏன் இந்த பிறப்பு என்ற தோஷம் என்னை வந்து சேர்ந்தது? தர்க்கரீதியாக இப்படி விசாரம் செய்வது அடுத்த வழி!

சமஸ்தம்

அனைத்து உயிர்களையும் நேசித்து நட்புடன் இருப்பது ஆத்மாவைச் சுத்தப்படுத்துவதற்கான வழியாகும். இதுவே சமஸ்தம்!

இதைத் தான் வசிஷ்டர் ராமர் மூலமாக உலகிற்குத் தரும் செய்தியாகச் சொல்கிறார்.

இந்த நான்கு வழிகளையும் மேற்கொண்டால் உலக மர்மங்கள் தானே விடுபடும்! உயர் ஜோதியுடன் ஒன்றாகலாம்!

***

ச.நாகராஜன் எழுதி புஸ்தகா வெளியீடாக வந்த புத்தகம்

உலகின் ஒப்பற்ற நூல் யோகவாசிஷ்டம்

Ferns for Breakfast in Sydney (Post No.14,270)

Written by London Swaminathan

Post No. 14,270

Date uploaded in Sydney, Australia –  4 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

I visited Royal Botanic Garden in Sydney, Australia on 28-2-2025. I found very interesting details about Ferns. They showed that ferns can be used as food. But like mushrooms, there are some poisonous ones as well.

What are Ferns?

Ferns are plants that do not have flowers. Ferns generally reproduce by producing spores. Similar to flowering plants, ferns have roots, stems and leaves. However, unlike flowering plants, ferns do not have flowers or seeds; instead, they usually reproduce sexually by tiny spores or sometimes can reproduce vegetatively, as exemplified by the walking fern.

 19 Ferns are named after Pop Star Lady Gaga.

More information is on display boards:

*****

Other Display Boards

–Subham—

Tags- Ferns, Sydney, Botanic Gardens, Breakfast, Fernery

Hindu crossword4325 (Post No.14269)

Written by London Swaminathan

Post No. 14,269

Date uploaded in Sydney, Australia –  4 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1 2  3 4   
         5
6         
          
 7 8   9   
          
    10     
          11
          

Across

1.kedarnath is shiva’s shrine; xxxx is Vishnu’s shrine in the Himalaya.

6.water falls in Tirupati- Tirumalai Hills

7.Hindu’s Mysterious Land of Abundance; Yuthisthira got gold from this place for Rajasuya Yaga.

10.Three fold Knoledge or Three Vedas.Trayi

12. oil extracted from the seeds of the “xxxx  tree, scientifically known as “Balanites aegyptiaca,” which is a plant commonly used in Ayurvedic medicine, often called the “Desert Date” tree; it is traditionally used to treat various ailments like skin conditions, wounds, and digestive issues due to its potential healing properties. Rishis use the oil of this tree.

Down

1.Duryodana’s wife name.

2. this letter or syllable means Kubera

8.Star is derived from this Sanskrit word

3. One of the nine Varshas or divisions of the known world pr Jambudvipa , comprehending the highest and most centrical part of the old continent.

4. the word means Brahma or goat

9.order in Indian languages

5. “zealous, eager, friend”, or “plotter, adherent, assailant, injurer, enemy”. It can also refer to cotton wool, absorbent cotton, or wadding. 

11. refers to the “top” or “peak” of a mountain (giri) according to the second chapter (dharaṇyādi-varga) of the 13th-century Raj Nighantu or Rājanighaṇṭu (an Ayurvedic encyclopedia); also boys’ name. “fire” or “a learned man”

B 1AD2RI 3NA4TH 
H H L J  V5
A6KASAGANGA
N   V    N
U 7TT8ARAK9URU
M A I R  N
A R T10RAYIA
T A A M  S 11
INGUDIA   

—subham—

Tags- Hindu crossword4325

மிஸ் லட்சுமிக்கு ( HEY, MISS LAKSHMI!) புரந்தரதாசர் கேள்வி (Post No.14,268)

Written by London Swaminathan

Post No. 14,268

Date uploaded in Sydney, Australia –  4 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(புரந்தரதாசர் பற்றிய 6–வது கட்டுரை இது)

சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசுவாமி தீக்ஷிதர், சாமா சாஸ்திரிகள் ஆகிய மூவரும் ஆண்டவனைப் பாடிப் பரவிய அழகினை நாம் அறிவோம். புரந்தரதாசர் பிறப்பில் செட்டி; பணத்தில் கெட்டி; பட்டினத்தார் போல திடீர் ஞானோதயம் ஏற்பட்டு பணத்தைத் துறந்து இறைவனை நாடினார் ; பாடினார்.

ராமனை யமன் என்று வருணித்தார்; அவர் யார் யாருக்கு எமன் என்பதையும் விளக்கினார்.அதே போல இன்னும் ஒரு கீர்த்தனையை, செல்வி லெட்சுமியைப் பார்த்து, அழகிய பெண்ணே நீ யாரைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறாய் என்ற தொனியில் கேள்வி கேட்டு ஒரு பட்டியலே தருகிறார் ; கட்டாயம் லெட்சுமி திணறிப் போயிருப்பார்.

பாடலைப் படிக்கும் போதே சுவையாக இருக்கிறது; இதைப் பாடிக்கேட்டால் அமிர்தமாக இனிக்கும்; பக்திப் பரவசத்தோடு பாடினாலோ பெருமாளும் தாயாரும் மகிழ்ந்துபோய் நம்மிடம் வந்துவிடுவார்கள்.

பெருமாளின் பெருமையைச் சொல்வதிலும் எத்தனை வகை,  எத்தனை முறை இருக்கிறது என்பதைப் புரந்தரதாசர் காட்டுகிறார்.

இதோ அவரது கீர்த்தனை :

க்ஷீராப்தி கன்னிகே ஸ்ரீ மஹாலக்ஷ்மி

யாரிகே வதுவாகுவே – நீனு யாரிகே வதுவாகுவே

பாற்கடலில் உதித்த கன்னியே ஸ்ரீ மஹாலக்ஷ்மி

யாரை திருமணம் செய்துகொள்வாய் – நீயே..

சாரதி பந்தன ராமசந்திர மூர்த்திகோ

பரமாத்மா அனந்த பத்மனாபனிகோ

சரசிஜனாப ஸ்ரீ ஜனார்த்தன மூர்த்திகோ

உபய காவேரி ரங்க பட்டணத அரசகோ (யாரிகே)

(இலங்கைக்கு) பாலம் கட்டிய ஸ்ரீ ராமசந்திரனையா

பரமாத்மாவான அனந்த பத்மனாபனையா

நாபிக்கமலத்தில் தாமரை மலருடைய ஜனார்த்தனனையா

காவேரிக்கரையில் இருக்கும் ஸ்ரீரங்கத்தின் அரசனையா (யாரிகே)

செலுவ மூர்த்தி பேலூர சென்னிகராயனிகோ

கெலதி ஹேலு ஸ்ரீ உடுப்பி ஸ்ரீ கிருஷ்ண ராயனிகோ

இளெயளு பாண்டுரங்க விட்டல ராயனிகோ

நலினாக்‌ஷி ஹேளம்மா பதரி நாராயணனிகோ (யாரிகே)

அழகே வடிவான பேலூர் சென்னிகிருஷ்ணனையா

உன் நண்பன் கேட்கிறேன், உடுப்பி கிருஷ்ணனையா

அல்லது பாண்டுரங்க விட்டலனையா

தாமரை போன்ற கண்கள் உடையவளே, பத்ரி நாராயணனைய (யாரிகே)

மலயஜகந்தி பிந்து மாதவ ராயரிகோ

சுலப தேவரு புருஷோத்தமனிகோ

பலதாயக நித்ய மங்கள தாயககோ

செலுவ நாசதே ஹேளு ஸ்ரீ வேங்கடேசனிகோ (யாரிகே)

மலையிலிருந்து வரும் நறுமணத்தை கொண்ட பிந்து மாதவனையா

யாவரும் சுலபமாக தொடர்பு கொள்ளக்கூடிய புருஷோத்தமனையா

வரங்களை அருளும் நித்ய மங்களமானவனையா

வெட்கப்படாமல் சொல், ஸ்ரீ வேங்கடேசனையா (யாரிகே)

வாசவார்சித கஞ்சி வரதராஜனிகோ

ஆ ஸ்ரீமுஷ்ணதல்லி ஆதி வராகனிகோ

சேஷசாயியாத ஸ்ரீமன் நாராயணனிகோ

சாசிர நாமதொடய அழகிரீசகோ (யாரிகே)

இந்திரன் வழிபட்ட காஞ்சி வரதராஜனையா

அந்த ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் ஆதி வராகனையா

நாகத்தின் மேல் படுத்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனையா

ஆயிரம் பெயர்களை உடைய அழகிய மலைகளில் வசிப்பவனையா? (யாரிகே)

சரணாகத ரக்‌ஷக சாரங்கபாணிகோ

வரகள நீடுவ ஸ்ரீநிவாசனிகோ

குரு குலாந்தகனாத ராஜகோபால மூர்த்திகோ

ஸ்திரவாகி புரந்தர விட்டல ராயனிகோ (யாரிகே)

சரணடைந்தவர்களை காப்பாற்றும் சாரங்கபாணியையா

வரங்களைக் கொடுக்கும் ஸ்ரீனிவாசனையா

குரு’ வம்சத்தை அழித்த ராஜகோபாலனையா

நிரந்தரமாக புரந்தர விட்டலனையா (யாரிகே)

பாடலும் மொழிபெயர்ப்பும் தாசர் சாங்ஸ் .காம் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது; நன்றி உரித்தாகுக.

—subham—

Tags– புரந்தரதாசர் , லெட்சுமி, மிஸ், கல்யாணம் ,திருமணம், க்ஷீராப்தி கன்னிகே ஸ்ரீ மஹாலக்ஷ்மி

தமிழ் தெரியுமா4325 ? (Post No. 14,267)

Written by London Swaminathan

Post No. 14,267

Date uploaded in Sydney, Australia –  4 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

1 2  
    ↑3
4    
     
    ↑ ←5
     
6 ↑7  

குறுக்கே

1.உலகிலேயே மிகப்பெரிய பண்டிகை; திரிவேணி சங்கத்தில் நடக்கும்

4.தராசு சின்னம் உடைய ராசி

5.மயிலுக்குப் போர்வை கொடுத்த கடைஎழுவள்ளல் ←

6.பூமிக்குள்ள  இன்னும் ஒரு  பெயர்

கீழே

1.ஹிந்துத் பெண்கள் காலையிலும் மாலையிலும் இதை ஏற்றுவார்கள்

2.கண்னின் அண்ணன்

3.ஒரு காயின் பெயர் ; சாப்பிட ருசியாக இருக்கும் ↑ 

5.ஆண்மையில்லாதவன் ↑  

5.பெண்கள் எந்தப்பொருளையும் — பேசித்தான் வாங்குவார்கள்.

7.ராமனின் மகன்; குசன் என்பவனுடன் பிறந்தவன் ↑

விடைகள்

கு1ம்ப2மேளா
த்  க↑3
து4லாராசி 
வி  டி
 ன்பே↑ ←5
க்  
கு6ல↑7ம்

—subham—-

தமிழ் தெரியுமா4325

காற்றா, மணியா எது அடிக்கிறது? ஜாஜென் தியானம் சொல்வது என்ன? (Post.14,266)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,266

Date uploaded in Sydney, Australia – –4 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 27-2-25 Kalkionline இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

ஜென் பிரிவின் தியானம் ஜாஜென்! 

காற்றா, மணியா எது அடிக்கிறதுஜாஜென் தியானம் சொல்வது என்ன?

 ச. நாகராஜன்

டோஜன் ஜெஞ்சி (Dōgen Zenji) என்பவர் சோடோ வழிமுறை என்ற ஒரு புது வழிமுறையை ஸ்தாபித்த ஜப்பானிய ஜென் மாஸ்டர் ஆவார். (தோற்றம் 26-2-1200 நிர்வாணம் 22-9-1253)

இவரிடம் ஏராளமான சீடர்கள் ஜாஜென் என்னும் தியான முறையைக் கற்க வருவதுண்டு. 

ஒரு சமயம் பதினேழாவது தலைமுறை குரு ஒருவர் தனது சீடன் ஒருவனுடன் நடந்து கொண்டிருந்தார். அருகில் இருந்த ஆலயத்தில் நான்கு மூலைகளிலிருமிருந்து மணிகள் தொங்க விடப்பட்டிருந்தன. அவைகள் ஒலித்துக் கொண்டிருந்தன.

குரு தனது சீடனிடம் கேட்டார்: “ அப்பனே! எது ஒலிக்கிறது? காற்றா மணிகளா?”

சீடன் உடனே பதில் சொன்னான், ”ஐயனே! காற்றும் இல்லை; மணிகளும் இல்லை. மனம் தான் ஒலிக்கிறது!” 

இந்த பதிலால் குரு பெரிதும் சந்தோஷப்பட்டார்.

காற்றா, மணிகளா அல்லது இரண்டுமா?

எதுவுமில்லை. மனம் தான்!

அப்படியானால் மனம் என்றால் என்ன?

இதை குரு கேட்கவே சீடன் உடனே பதில் கூறினார்: “பேரமைதி! சஞ்சலமற்ற நிலை!!”

இதனால் இன்னும் அதிக சந்தோஷப்பட்டார் குரு.

சீடன் மனம் என்றால் என்ன என்பதைச் சரியாக உணர்ந்து கொண்டான். அது அகண்டமானது.

இந்த ஆதிமூலமான ஒரு நிலை தான் பிரிக்கமுடியாத நிலையான ஒன்று.

இந்தச் சம்பவத்தைத் தன் சீடர்களுக்குக் கூறிய டோஜன் ஜெஞ்சி, “காற்று அடிக்கிறது; மணிகள் அடிக்கின்றன. ஒலிப்பது ஒலித்துக் கொண்டிருக்கிறது” என்றார். RINGING RINGING என்று அவர் கூறியதை சீடர்கள் புரிந்து கொண்டார்கள். எந்த வித தடையுமின்றி மணிகள் ஒலிக்கின்றன எல்லையற்ற பேரமைதியில்!

 பேரமைதி என்பது இயக்கம் இல்லாத ஒரு மந்தமான நிலை அல்ல! அது உயிர்த்துடிப்புள்ள அகண்டமான ஒரு பெரும் நிலை!

சமுதாயத்திலிருந்து விலகி நின்று ஒருவன் இந்த பேரமைதியைப் பிடிக்க வேண்டும் என்பதில்லை!

வாழ்க்கையில் உள்ளார்ந்து எப்போதும் ஒருவன் அனுபவிக்க வேண்டிய நிலை இது!

சமுதாயத்திலிருந்து விலகி ஒருவன் தனியாக இருந்து எங்கு சென்றாலும் அது அமைதியைத் தந்து விடாது.

மலையின் உச்சிக்குச் சென்று வசிப்பது பேரமைத்திக்கான ஒரு வழியாகத் தோன்றும்.

அது சூழ்நிலைகளை நம் போக்கில் வரச் செய்வதற்கான ஒரு வழி போலத் தோன்றலாம்.

ஆனால் உண்மை அதுவல்ல.

சமுதாயத்தில் மக்களுடன் இணைந்து வாழ்ந்து பேரமைதியை உணர்ந்தால் அது தான் உண்மையான பேரமைதி.

ஆகவே மக்களுடன் இணைந்து இதைக் கொள்ள உதவுவது தான் ஜாஜென் என்னும் தியானம்!

ஆரவார சூழ்நிலை இருந்தாலும் மனத்தின் உள்ளே பேரமைதி எப்போதும் இருப்பதே அதன் உச்சகட்ட பயனாகும்.

இதைத் தான் டோஜன் ஜெஞ்சி வலியுறுத்தினார்!

**

கொலம்பியா  நாட்டில்  அதிசய  சிலைகள் ! (Post No.14,265)

சூரிய தேவன் சிலை

Written by London Swaminathan

Post No. 14,265

Date uploaded in Sydney, Australia –  3 March 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கொலம்பியா எங்கே உள்ளது ?

தென் அமெரிக்க கண்டத்தின் உச்சியில் கொலம்பியா என்னும் நாடு இருக்கிறது .

இங்கு என்ன அதிசயங்கள் உள்ளன ?

வைரத்துக்கு அடுத்தபடியான மதிப்புடைய மரகதக் கற்கள் அதிகமாகக் கிடைக்கும் நாடு கொலம்பியா.  

உலகிலேயே மிகப்பெரிய கழுகுகள் வசிக்கும் நாடு கொலம்பியா .

தீ வளையம் RING OF FIRE  என்னும் மிகப்பெரிய பரப்புக்குட்பட்ட இந்த நாட்டில் எரிமலைகளும் நில நடுக்கமும் அதிகம் உண்டு

புதிய அதிசயம்  என்ன ?

வரலாற்றில் புதிர் விடுவிக்கப்படாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இந்தியாவில் சிந்து சமவெளி- சரஸ்வதி நதி தீர எழுத்துக்களை இதுவரை எவராலும் படிக்கமுடியவில்லை  இதே போல கொலம்பியா நாட்டின் கல்லறைகளில் காணப்படும் நூற்றுக் கணக்கான சிலைகளை ஏன் உருவாக்கினார்கள்? யார் உருவாக்கினார்கள்? என்று தெரியவில்லை.

இவர்கள் சூரிய வழிபாட்டுக்காரர்கள்; பெரிய, சூரிய தேவன் சிலை புன்சிரிப்புடன் காட்சி தருகிறது

புதிர்போடும் சிலைகள் பற்றி நேஷனல் ஜியாக்ரபிக் மேகசின் படங்களை வெளியிட்டுள்ளது .

இவற்றின் காலம் என்ன?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவைகளைச் செதுக்கியிருப்பார்கள் என்று தொல்பொருட் துறை அறிஞர்கள் சொல்கிறார்கள்; சிலைகளுடன் இருந்த மண் மற்றும்  தாவர பிராணி வகைகளையும் எலும்புகளையும் ஆராய்ந்ததில் இது தெரிய வந்தது. . எலும்புக்கு  கூடுகள் மண்ணோடு மண்ணாகிவிட்டன.

உலகிலேயே நீண்ட  மலையான  ஆண்டீஸ் மலை இந்த நாட்டின் வழியாகச் செல்கிறது; அந்த மலையில் செயின்ட் அகஸ்தின் என்ற இடத்தில் 600 சிலைகள்  கண்டு பிடிக்கப்பட்டன. தென் அமெரிக்கா மத்திய அமெரிக்கா முழுதுமுள்ள செல்வத்தை 500ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பெயின் நாட்டு காலனி ஆதிக்கக் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் வந்தபோதே இந்தக் கல்லறை கள்   கேட்பாரற்றுக் கிடந்தன.

சிலைகள் உடைய கல்லறைகளில் செல்வம் எதுவும் இல்லை. ஆகையால் இவர்கள் செல்வந்தர்களின் கல்லறை அல்ல ; அதீத சக்தி படைத்த சூப்பர் மனிதர்களின் கல்லறைகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.

ஏழு அடி உயரமுள்ள ஒரு வீரனின் சிலை இந்த இடத்தைக் காவல் காத்து நிற்கிறது; எரிமலைப் பாறைகளால் சிலைகள் உருவாக்கப்பட்டதால் கனமான பொருளைக் கொண்டு ஓங்கி அடித்தால் சிலைகள் உடைந்து விடும் இப்போது பருவ மழை  வெய்யில் முதலியவற்றிலிருந்து சிலைகளைக் காக்க கூடாரங்கள் போட்டுள்ளனர்.

தென் அமெரிக்காவில் உலோகக் கருவிகள் கண்டு பிடிக்கும் முன்னர் இவர் சிலைகளை வடித்தது எப்படி என்பதும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் புதிராகவே உளது.

இன்கா, மாயா, ஒல்மெக், அஸ்டெக் போன்ற பல நாகரீகங்களைக் கண்ட தென் அமெரிக்காவில் இவர்கள் யார்? என்ன இனம் ?என்பது இதுவரை புதிராகவே நீடிக்கிறது.

—SUBHAM—

Tags– கொலம்பியா ,  அதிசய  சிலைகள்

GNANAMAYAM 2-3-2025 BROADCAST SUMMARY

GNANAMAYAM BROADCAST FROM THREE CONTINENTS ON SUNDAYS

Gnanamayam Broadcast comes to you via Zoom, Facebook and You Tube at the same time from Asia, Australia and Europe

London Time 12 Noon

Indian Time 5-30 pm (evening)

Sydney, Australia time 11 pm (Night)

*****

2-3-2025 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

ஆசியா, ஆஸ்திரேலியா , ஐரோப்பா ஆகிய 3 கண்டங்களிலிருந்து வரும் ஒளி/ஒலி பரப்பு; நேரில் காணலாம்; கேட்கலாம்

PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES

***

Prayer by Mrs Jayanthi Sundar Team

MRS JAYANTHI SUNDAR, MRS AMBIKA NATARAJAN AND MRS BAMA VENKATESH

World Hindu News in Tamil was presented by Vaishnavi Anand from London


***

Mrs. Brahannayaki Sathyanarayan spoke on  Tiruvarur Temple

***

SPECIAL TALK BY Dr Narayanan Kannan Ph.D. gave a talk on Alvars

Dr N Kannan , author, writer, speaker and founder of Tamil Heritage Foundation

***

If you need Zoom link, please contact us; if you want to talk or interview or sing, please contact us.

It is on Every Sunday for one hour.

****

இறைவணக்கம் –திருமதி ஜெயந்தி சுந்தர் குழுவினர்

MRS JAYANTHI SUNDAR, MRS AMBIKA NATARAJAN AND MRS BAMA VENKATESH

உலக இந்துமத செய்தி மடல்- லண்டனிலிருந்து திருமதி வைஷ்ணவி ஆனந்த்

***

ஆலயம் அறிவோம் வழங்குபவர் திருமதி பிரஹந்நாயகி சத்ய நாராயணன் — -தலைப்பு  திருவாரூர் ஆலயம்

. ***

இன்றைய சிறப்பு நிகழ்ச்சி

சிறப்புச் சொற்பொழிவு

டாக்டர் நாராயணன் கண்ணன் ஆசிரியர்பேச்சாளர்தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் .

தலைப்பு –ஆழ்வார்களின் பெருமை

***

Anchored by London Swaminathan from Sydney and Kalyanji from India.

****

—subham—

Tags- GNANAMAYAM ,2-3-2025, BROADCAST ,SUMMARY