சூரிய தேவன் சிலை
Post No. 14,265
Date uploaded in Sydney, Australia – 3 March 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கொலம்பியா எங்கே உள்ளது ?
தென் அமெரிக்க கண்டத்தின் உச்சியில் கொலம்பியா என்னும் நாடு இருக்கிறது .
இங்கு என்ன அதிசயங்கள் உள்ளன ?
வைரத்துக்கு அடுத்தபடியான மதிப்புடைய மரகதக் கற்கள் அதிகமாகக் கிடைக்கும் நாடு கொலம்பியா.
உலகிலேயே மிகப்பெரிய கழுகுகள் வசிக்கும் நாடு கொலம்பியா .
தீ வளையம் RING OF FIRE என்னும் மிகப்பெரிய பரப்புக்குட்பட்ட இந்த நாட்டில் எரிமலைகளும் நில நடுக்கமும் அதிகம் உண்டு
புதிய அதிசயம் என்ன ?
வரலாற்றில் புதிர் விடுவிக்கப்படாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இந்தியாவில் சிந்து சமவெளி- சரஸ்வதி நதி தீர எழுத்துக்களை இதுவரை எவராலும் படிக்கமுடியவில்லை இதே போல கொலம்பியா நாட்டின் கல்லறைகளில் காணப்படும் நூற்றுக் கணக்கான சிலைகளை ஏன் உருவாக்கினார்கள்? யார் உருவாக்கினார்கள்? என்று தெரியவில்லை.
இவர்கள் சூரிய வழிபாட்டுக்காரர்கள்; பெரிய, சூரிய தேவன் சிலை புன்சிரிப்புடன் காட்சி தருகிறது
புதிர்போடும் சிலைகள் பற்றி நேஷனல் ஜியாக்ரபிக் மேகசின் படங்களை வெளியிட்டுள்ளது .
இவற்றின் காலம் என்ன?
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இவைகளைச் செதுக்கியிருப்பார்கள் என்று தொல்பொருட் துறை அறிஞர்கள் சொல்கிறார்கள்; சிலைகளுடன் இருந்த மண் மற்றும் தாவர பிராணி வகைகளையும் எலும்புகளையும் ஆராய்ந்ததில் இது தெரிய வந்தது. . எலும்புக்கு கூடுகள் மண்ணோடு மண்ணாகிவிட்டன.
உலகிலேயே நீண்ட மலையான ஆண்டீஸ் மலை இந்த நாட்டின் வழியாகச் செல்கிறது; அந்த மலையில் செயின்ட் அகஸ்தின் என்ற இடத்தில் 600 சிலைகள் கண்டு பிடிக்கப்பட்டன. தென் அமெரிக்கா மத்திய அமெரிக்கா முழுதுமுள்ள செல்வத்தை 500ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பெயின் நாட்டு காலனி ஆதிக்கக் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர். அவர்கள் வந்தபோதே இந்தக் கல்லறை கள் கேட்பாரற்றுக் கிடந்தன.
சிலைகள் உடைய கல்லறைகளில் செல்வம் எதுவும் இல்லை. ஆகையால் இவர்கள் செல்வந்தர்களின் கல்லறை அல்ல ; அதீத சக்தி படைத்த சூப்பர் மனிதர்களின் கல்லறைகளாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.
ஏழு அடி உயரமுள்ள ஒரு வீரனின் சிலை இந்த இடத்தைக் காவல் காத்து நிற்கிறது; எரிமலைப் பாறைகளால் சிலைகள் உருவாக்கப்பட்டதால் கனமான பொருளைக் கொண்டு ஓங்கி அடித்தால் சிலைகள் உடைந்து விடும் இப்போது பருவ மழை வெய்யில் முதலியவற்றிலிருந்து சிலைகளைக் காக்க கூடாரங்கள் போட்டுள்ளனர்.
தென் அமெரிக்காவில் உலோகக் கருவிகள் கண்டு பிடிக்கும் முன்னர் இவர் சிலைகளை வடித்தது எப்படி என்பதும் வரலாற்று ஆசிரியர்களுக்குப் புதிராகவே உளது.
இன்கா, மாயா, ஒல்மெக், அஸ்டெக் போன்ற பல நாகரீகங்களைக் கண்ட தென் அமெரிக்காவில் இவர்கள் யார்? என்ன இனம் ?என்பது இதுவரை புதிராகவே நீடிக்கிறது.
—SUBHAM—
Tags– கொலம்பியா , அதிசய சிலைகள்