Date uploaded in Sydney, Australia – 12 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
1
2
3
4
5
6
7
8
9
ACROSS
1.In Sanskrit, “xxxxxx means “world,” “realm,” “plane of existence,” or “abode,” essentially referring to a place or dimension within the universe, often used in Hindu, Buddhist, and Jain contexts.
4. In Sanskrit, “XXXXX Mantra” translates to “the liberating mantra” or “the mantra that helps one cross over,” where “XXXXX means “to cross over” or “liberator,” referring to its ability to guide the soul beyond the cycle of birth and death in Hindu belief.
5.The Sanskrit word XXXXX means “immortal,” “everlasting,” or “long life”. It is a gender-neutral name that is often associated with positive qualities such as strength, courage, and wisdom. Boys’ name.
6.Hand; used in Indian languages.
7. “essence,” “taste,” “flavor,” or “juice in Indian languages
DOWN
1.It means creeper; popular name for girls .
2. The Sanskrit word xxxxx has multiple meanings, including “hailstones”, “participant in an action”, and “semantic relation between a verb and a noun”
3. xxxxx is a Sanskrit word that means “sea monster” or “crocodile”. It has multiple meanings, including a water monster in Hindu mythology, a zodiac sign, and a yoga pose.
8.Third Veda dealing with music
9. Another name of Manmatha; God of Love; also death, Killing, slaughter, slaying;
5. காய் என்பதை அடுத்து வரும்; மாமிசத்துக்கும் பெயர்;
7. ராமகிருஷ்ண பரமஹம்சரின் இயற்பெயர் ← ;
10. கோட்டான், ஆந்தை, கெளசிகம் , உலூகம் 11. வேசி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கான இன்னுமொரு ஸம்ஸ்க்ருதச் சொல் ←,
1. அத்வைத தத்துவத்தைப் பரப்பியவர் ;(மேலிருந்து கீழே செல்க) 1.லிங்கத்தின் கீழ்ப் பகுதியைச் சுற்றியுள்ள மேடை போன்ற அமைப்பு, 6. சங்கீதம், நடனம், நடிப்பு ஆகியவற்றில் புகழ்பெற்றோரைப் பின்பற்றும் பெண் 8. பூட்டு, தாழ்ப்பாள், சங்கிலி இவை மாட்டவுதவும் கதவுநிலையுறுப்பு. ↑ 8. கணவனை மனைவி அழைக்கும் ஸம்ஸ்க்ருதச் சொல் 8 மூக்கு என்பதன் ஸம்ஸ்க்ருதச் சொல் 9. திருவரங்கத்தில் பள்ளிகொண்ட பெருமாள் ↑,4.a. அடையாளம்
மக்கள் குறைதீர்க்கும் சமுதாயத் தொண்டினை தமது எழுத்துகள் மூலமாகவும், செயல் மூலமாகவும் நன்கு செய்து வருபவர் புதுக்கோட்டை திரு. எஸ்.பி. பாலு அவர்கள்.
அச்சுக்கலை வித்தகர் புதுக்கோட்டை கண்ணபிரான் எஸ். பரசுராம் அவர்களின் புதல்வர். சிறுவர் இலக்கியச் செல்வர் திரு. பி. வெங்கட்ராமன் அவர்களின் இளைய சகோதரர்.
புகழ்பெற்ற மாபெரும் டி.வி.எஸ். நிறுவனத்தில் பல்லாண்டு பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
மக்கள் பிரச்னைகளைப் பற்றி பத்திரிகைகளில் சின்னஞ்சிறு கட்டுரைகள், துணுக்குகள், வாசகர் கடிதங்கள் மூலமாகவும், வானொலி ‘நகர்வலம்’ பகுதி மூலமாகவும் எழுதுவது இவர் வழக்கம்.
பொதுமக்களின் குறைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் இவரது துணிச்சலான எழுத்துகள் மூலம் எத்தனையோ பிரச்னைகள் தீர்க்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் விஜயகாந்த் பற்றிய புதிய புத்தகம்
கேப்டன் என்று மக்களால் அழைக்கப்படும் மறைந்த நடிகர் விஜயகாந்த்
(பிறப்பு: 25-8-1953 மறைவு: 28-12-2023) அவர்களின் வாழ்க்கைச் சித்திரத்தை முழுமையாக இந்த நூலில் அவரது அபிமான ரசிகரான இவர் இப்போது எழுதி வெளியிட்டுள்ளார்.
அவர் சென்னைக்கு வந்தது முதல், பல முயற்சிகளுக்குப் பிறகு திரைப்படத்துறையில் வெற்றி கண்டது வரையில் உள்ள அனைத்துத் தகவல்களும் அருமையாகத் தொகுத்துத் தரப்பட்டுள்ளது இந்தப் புத்தகத்தில்.
நடிகர் சங்கத் தலைவராக இருந்து தென்னிநிதிய நடிகர் சங்கத்தில் நிலுவையில் இருந்த கடனை அவரே அடைத்தார்.
அரசியலில் ஈடுபாடு கொண்டு அவர் தனிக்கட்சி ஒன்றைத் தொடங்கினார். மக்களிடம் அது பெருத்த வரவேற்பைப் பெற்றது. அவரே எதிர்க்கட்சித் தலைவர் ஆகும் வரையில் அது பெரிதாக வளர்ந்தது.
மனித நேயத்துடன் பிறர் அறியாதபடி அவர் செய்த தர்ம காரியங்கள் ஏராளம்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக உடல்நலம் குன்றி அவர் நோயுடன் போராட வேண்டி வந்தது.
ஐந்து ஆண்டு காலம் இப்படி நோயுடன் போராடிய அவர் மரணத்தைச் சந்திக்க நேர்ந்தது
இந்நூல் விஜயகாந்த் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் நிறைய புள்ளி விவரங்களைத் தந்து அடிப்படையான செய்திகளைத் தருகிறது.
புத்தகம் கிடைக்கும் இடம் : புஸ்தகா டிஜிடல் மீடியா, பெங்களூர். விலை ரூ 130 தகவல்களுக்கு நாட வேண்டிய தொலைபேசி எண் 74185 55884
பேப்பர் பேக் புத்தகத்திற்கு 15% தள்ளுபடி உண்டு -விலை ரூ110.50
Date uploaded in Sydney, Australia – 11 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆஸ்திரேலியாவில் தமிழர்கள்
24ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 24
ஆஸ்திரேலியாவில் தமிழ் எம் பி
ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சத்துக்கும் மேலான தமிழர்கள் வசிக்கிறார்கள். எல்லா முக்கிய நகரங்களிலும் தமிழர்கள் கோவில்களையும் கட்டி வழிபடுகிறார்கள். இவர்களில் இலங்கைத் தமிழர்கள் அதிகம். அங்கு நடந்த இனக் கலவரம் காரணமாகப் பலர் அகதிகளாகக் குடியேறினார்கள்; இவர்களைத் தவிர இந்தியா, தென் ஆஃப்ரிக்கா, சிங்கப்பூர், மலேசியா முதலிய நாடுகளிலிருந்து படிப்பதற்காகவும், கம்பியூட்டர் மற்றும் மருத்துவத் துறையில் பணியாற்றுவதற்காகவும் வந்த இந்தியத் வம்சாவளித் தமிழர்களையும் காணலாம். ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள் குறைவு.
சிட்னி நகரம்,மெல்போர்ன் நகரம், மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரம் ஆகியவற்றில் அதிகத் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
முக்கிய நகரங்களில் இலங்கைத் தமிழர்கள் பத்திரிகைகளையும் வானொலி ஒலிபரப்புகளையும் நடத்துகிறார்கள்; ஆண்டுதோறும் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் இந்தியாவிலிருந்து வரும் பிரபல சங்கீத வித்வான்களின் இன்னிசை இடம்பெறுகிறது. பல இசைப் பள்ளிகளையும், நடனப் பள்ளிகளையும் வாராந்திர தமிழ் வகுப்புகளையும் தமிழர்கள் நடத்துகிறார்கள்.
தமிழர்கள் வாழும் இடங்களில் நூல்நிலையங்களில் தமிழ் புஸ்தகங்களையும் காணலாம்.
2022- ஆம் ஆண்டு முதல் தமிழ் எம் பி ஒருவரும் பார்லிமெண்டில் இடம்பெற்றுள்ளார் அவருடைய பெயர் டாக்டர் மிஷல் ஆனந்தராஜா. இங்கிலாந்தில் லண்டனில் பிறந்து இங்கு குடியேறியவர். விக் டோரியா மாநிலத்தில் ஹிக்கின்ஸ் தொகுதியில் லேபர் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்றார்.
Member for Higgins
Born in the UK, Michelle migrated to Australia from Zambia with her family at age 11. Michelle understands the powerful role that education, hard work and a welcoming society can play in changing lives.
As an infectious diseases and general medicine specialist doctor of 26 years experience, Michelle achieved her medical degree from the University of Sydney in 1996 and her PhD from the University of Melbourne in 2016.
ஆப்பிரிக்காவிலுள்ள ஜாம்பியா நாட்டிலிருந்து குடியேறி ஆஸ்திரேலியாவில் கல்விகற்றவர் மருத்துவ ஆராய்ச்சியாளரும் ஆவார்.
Research Article Written by london swaminathan; Date: 7 February 2016
சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய நிலப்பரப்பிலிருந்து தமிழர்கள், இந்தோநேஷியா வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் குடியேறினர். அப்போதெல்லாம் கடலுக்கும் நிலத்துக்கும் இடையிலுள்ள தூரம் குறைவு. ஒரு தீவிலிருந்து எளிதாகப் படகில், கட்டுமரத்தில் தாவித் தாவிச் சென்று விடலாம். அதற்கும் லடசக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் எல்லா கண்டங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டேயிருந்தன.
1932 ஆம் ஆண்டில் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் சென்னை மைலாப்பூரில் நிகழ்த்திய சமயச் சொற்பொழிவுகளில் உலகமெங்கும் ஒரே மதம் – சநாதன தர்மம் – நிலவிய காலம் பற்றிப் பேசியிருக்கிறார். அதன் மிச்ச சொச்சங்களையே இன்று உலகம் முழுதும் காணமுடிகிறது. உலகில் ஒரு ஆளின் பெயரால் அல்லது இனத்தின் பெயரால் இல்லாத மதம் இந்து மதம் ஒன்றே! பாரசீகர்களும் கிரேக்கர்களும் ‘ச’ என்பதைச் சொல்ல முடியது. ஆகையால் ‘சி’ந்து நதிக்கரையின் அப்பால் இருப்பவர்கள் ‘ஹி’ந்துக்கள் என்று சொன்னார்கள். அந்தப் பெயரே இன்று சநாதன தர்மத்துக்கு நிலைத்துவிட்டது. சநாதன தர்மம் என்றால் ‘ஆதியந்தமற்ற அற வழி’ என்று பொருள். இதே போல ஒரு இனத்தின் பெயரால் இல்லாத மொழி சம்ஸ்கிருதம் ஒன்றே. இதுவும் ஆதியந்தமற்ற மொழியின் பிற்கால (செம்மைப்படுத்தப்பட்ட) வடிவம்!
என்ன சொன்னார் காஞ்சி பரமாசார்ய சுவாமிகள்?
ஆஸ்திரேலியப் பழங்குடி மக்கள் விபூதி போலப் பூசிக் கொண்டு நடனம் ஆடுகிறார்கள். அதற்கு சிவா டான்ஸ்/ நடனம் என்று பெயர் என்று தான் படித்த புத்தகத்தின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவர் சொன்ன இந்த விசயம் என் மனதில் பதிந்தவுடன் என்றாவது நேரில்சென்று ஆராய வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அருமையான வாய்ப்பு கிடைத்தது.
HINDU FLAG OF AUSTRALIAN ABORIGINES; THIS TYPE OF DOUBLE CONE FALG IS USED BY HINDU ORGANISATION RSS, HINDU COUNTRY NEPAL AND HINDU TEMPLES.
எனது சம்பந்தி, நாங்கள் அனைவரும் குடும்ப சகிதம் சிட்னி நகருக்கு வருவதை அறிந்து பெருந்தொகை செலவிட்டு இந்திய- ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் வாங்கியிருந்தார். எனக்கும் கிரிக்கெட்டிற்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. கவாஸ்கர் எத்தனை ‘கோல்’ போட்டார்? என்று கேட்பவன் நான். ஆகையால் அவரிடம், மரியாதையுடன் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்குக் கொடுக்கும்படி பணிவுடன் வேண்டிக்கொண்டுவிட்டு நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்கு விரைந்தேன். எனது மனைவியும் மக்களும் மட்டும் கிரிக்கெட் பார்க்கச் சென்றனர். நான் ஆஸ்திரேலிய மியூசியத்துக்குப் போய் என் வயது 68 என்று சொன்னவுடன் எனக்கு முதியோருக்கான தள்ளுபடி விலை டிக்கெட் கொடுத்தனர். மியூசியம் மேப்/வரைபடத்டை வாங்கிக்கொண்டு பழங்குடி மக்கள் பிரிவு எது என்று நோட்டமிட்டேன். அதுதான் முதல் பிரிவு! ஏக சந்தோஷம்!
ஐ போன், ஐ பேட், இரண்டு காமிராக்கள் சகிதம் உள்ளே பிரவேசித்தேன். பேரானந்தம்?
ஒவ்வொரு எழுத்தாகப் படிதத்தில் சட்டென மனதில் பதிந்தவிஷயம்!
அவர்கள் நிலம், நீர் தீ, காற்று, மலை, கடல், மனித இனம், மரணம் ஆகியன பற்றிக் கொண்டுள்ள விஷயங்களைப் படிக்கையில் வேத உபநிஷத மந்திரங்களைப் படிப்பதுபோல ஒரு எண்ணம் மனதில் தோன்றியது. இன்று ஒரு சில விஷயங்களை மட்டும் காண்போம்.
ஆஸ்திரேலியாவின் நட்ட நடுவில், அதி பயங்கர பாலைவனப் பொட்டல் காட்டில் ஒரு பெரிய மலை நிற்கிறது. இதற்கு அய்யர் மலை என்று பெயர். சர் ஹென்றி அய்யர் என்ற ஆஸ்திரேலிய அதிகாரியின் பெயரைச் சூட்டி இருக்கின்றனர். அவருக்கு அய்யர் என்ற பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பதை வேறு ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையில் எழுதுகிறேன்.
அய்யர் ராக்ஸ்= கைலாஷ் மலை
அய்யர் ராக்ஸ் என்பதன் உண்மைப் பெயர் உள்ளூரு. இதைப் புனித மலையாக வணங்குகின்றனர் அங்கே வாழும் பழங்குடி மக்கள். அதிபயங்கர பொட்டல் காட்டில் தன்னந்தனி ராஜாவாக விளங்கும் இந்த மலையைப் பார்த்தவுடன் நமக்கு நினைவுக்கு வருவது இமய மலையில் தன்னந்தனியனாக நீட்டிக் கொண்டிருக்கும் கைலாஷ் மலைதான். உலகில் பூஜியாமா (ஜப்பான்) எரிமலையாகட்டும், மவுண்ட் மேரு (கென்யா) ஆகட்டும். எது, எது சிவலிங்கம் போல தனியாக நிற்கிறதோ அவை எல்லாம் புனிதப் பொருட்களாகக் கருதப்படுகின்றன. ஆகவே ஆஸ்திரேலியாவில் தன்னதனியாக நிற்கும் இந்த உள்ளுரு என்பதை அவர்கள் வழிபடுவது பொருத்தமே. இதையும் காஞ்சி சுவாமிகள் சொன்ன விபூதி பெயிண்ட், சிவா டான்ஸ் என்பதையும் பொருத்திப் பார்க்கையில் மேலும் நெருக்கம் புலப்பட்டது.
நான் தினசரி சந்தியா வந்தனம் செய்யும் பிராமணன் ஆனதால், “உத்தமே சிகரே தேவி” என்ற காயத்ரீ தேவி வணக்கமும் மனதில் பளிச்சிட்டது. பிராமணர்கள் தினமும் மூன்று முறை காயத்ரீ தேவியை மலை உச்சியிலிருந்து அழைத்து, இதயத்தில் நிறுத்தி (ஆவாஹனம் செய்து) வழிபாடு செய்துவிட்டு “தாயே எனது வழிபாடு இப்போதைக்கு முடிந்துவிட்டது. போய் வருவாயாக” என்பர். ஆக, “ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கும்” காயத்ரீ (சூரிய தேவன்/தேவி) மலை உச்சியில் வைக்கப் படுவதால் மலை வழிபாடு வேதத்தில் உள்ள வழிபாடாகும்.
இது எல்லாம் ஒரு புறமிருக்க அந்தப் பழங்குடி மக்களின் பெயரைப் படித்த போது உடலில் மின்னலை பாய்ந்தது. செந்தமிழ் சொல்லைக் கேட்டவுடன் ‘இன்பத் தேன் வந்து பாய்ந்தது” அந்தப் பழங்குடி மக்களின் பெயர் ‘அணங்கு’ என்பதாகும். இந்த தூய தமிழ் சொல், சங்கத் தமிழ் இலக்கியத்தில் நூற்றுக் கணக்கான இடங்களில் விதந்து ஓதப்படுகிறது. காடு, மலை, ஆறு கடல், மரம் கொடி, புனித இடங்கள், தோப்பு, துறவு ஆகிய இடங்களில் வாழும் புனித தேவதையை தமிழர்கள் அணங்கு என்பர். அதே பெயரை தங்களுக்கு வைத்துக் கொண்டு புனித உள்ளுரு மலையை அவர்கள் வழிபடுவது சாலப்பொருத்தமே. மேலும் ‘உள்ளூர்’ என்பதில்கூட தமிழ் வாசனை அடிக்கிறது!
நான் தினமணி பத்திரிக்கையில் சீனியர் சப் எடிட்டராக இருந்த போது பிரபல நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆஸ்திரேலியா சென்று வந்தது பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் அவர் தனக்காக ஆஸ்திரேலிய கலைத்துறை ஏற்பாடு செய்த பழங்குடி மக்களின் நடனத்தைப் பார்த்தபோது குறைந்தது 25 தமிழ்ச் சொற்களையாவது எண்ண முடிந்தது என்று சொன்னதும் நினைவுக்கு வந்தது. என்ன பொருத்தம்! இந்தப் பொருத்தம்!
மூத்தோர் சொல் அமிர்தம்
பழங்குடி மக்களின் நம்பிக்ககள் பற்றி ஒரு போர்டு எழுதி வைத்திருந்தனர். அதைப் படித்துத் திகைத்து நின்றேன். அவர்கள் மிகவும் மதிப்பது மூத்தோர்கள் என்றும் அவர்களுடைய ஞானமும், அறிவும் பெரிதும் மதிக்கப்படும் என்றும் அவர்களுக்கு பழங்குடி இனங்களிடையே தனி மதிப்பும் மரியாதையும் உள்ளது என்றும் எழுதி இருந்தனர். இது இந்துக்களின் நம்பிக்கை. உலகில் வேறு எந்த மத நூலிலும் இல்லாத விஷயம் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்பதாகும் அது மட்டு மல்ல தினமும் இந்துக்கள் செய்யும் பஞ்ச யக்ஞத்தில் ஒன்று “தென்புலத்தார்” கடன். இதைத் திருவள்ளுவரும் பல குறள்களில் பாடியிருக்கிறார். முன்னோர்களுக்குக் கடன் செலுத்துவதை, இந்துக்கள் போல வேறு எவரும் செய்வதில்லை.
ரிக் வேதம் என்பது உலகின் மிகப் பழைய நூல். அதற்கு அருகில் கூட வேறு எந்த மத நூலும் வர முடியாது. அவ்வளவு பழமையான நூல். அதில் ஆடிப் பாடி, ஆனந்தக்கூத்தாடும் ரிஷி முனிவர்கள் அவர்களுடைய முந்தையோர் பற்றிப் பாடுகின்றனர். “பூர்வேப்யோ ரிஷி:” என்று மந்திரம் ஓதுகின்றனர். அவ்வளவு பழமையானது சநாதன மதம். ஆக முந்தையோரைப் போற்றிப் புகழ்வது வேத வழக்கு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதைவிட அருமையான விஷயம் அந்த மியூசியம் போர்டில் இருக்கிறது . ஆஸ்திரேலியப் பழங்குடிகள் எல்லா முதிய ஆண்களையும் மாமா (அங்கிள்) என்றும், முதிய பெண்களை மாமி (ஆண்ட்டி) என்றும் மரியாதையுடன் அழைப்பர் என்று எழுதப்பட்டது. இன்று வரை இந்துக் குடும்பங்களில், குறிப்பாகத் தமிழ்க் குடும்பங்களில் இது பின்பற்றப்படுகிறது.
பழங்குடி மக்கள், அவரவர்கள் இனத்தை (கோத்திரம்) மதித்தனர். ஒருவருக்குப் புனிதமான விலங்கை மற்றவர் வேட்டையாட மாட்டார்கள். நம்முடைய கோத்திரப் பெயர்களும் இனப் பெயர்களும் பிராணிகளின் அடிப்படையில் எழுந்தவையே. உலகிலேயே முதல் முதல் கொடிகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இனம் இந்து இனம் என்பதை கொடிகள், சின்னங்கள் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையில் ஏற்கனவே எழுதிவிட்டேன். காஸ்யப (ஆமை), கௌசிக (ஆந்தை), ஜாம்பவான் (கரடி அடையாளம் உடைய இனம்), ஜடாயு, சம்பாதி (கழுகு அடையாளம் பொறித்த இனம்) அனுமான் (குரங்கு முத்திரை பொறித்த இனம்) என்பதையெல்லாம் காணுகையில் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் தங்களை ஏன் பிராணிகளின் பெயரில் அழைத்துக் கொண்டனர் என்பம்து வெள்ளிடை மலையென விளங்கியது.
—SUBHAM—
TAGS- ஆஸ்திரேலியாவில் தமிழர்கள் , அதிசயம் ,- Part 24, தமிழ் எம். பி., பழங்குடிகள் தமிழர்களா?
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
9-2-2025 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
ஶ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் – 2
1916ம் ஆண்டு முதல் 1929ம் ஆண்டு வரை வள்ளிமலை ஸ்வாமிகள் இந்த இடத்திலும் சென்னையிலுமாக மாறி மாறி வசிக்கலானார்; திருப்புகழைப் பரப்பும் தொண்டை மேற்கொண்டார்.
ஸ்வாமிகளுக்கு பொங்கி அம்மனின் தரிசனமும் அருளும் இந்தக் காலத்தில் கிடைத்தது.
சென்னையில் ஒரு சிறுமி ஸ்வாமிகளின் வெற்றிலைப் பெட்டியைக் கேட்க அவர் அதைத் தந்தார். ஆனால் அதைத் திருப்பி வாங்க மறந்து விட்டார். பின்னர் வள்ளிமலைக்கு அவர் வந்த போது ஒரு பாறையின் மேல் அவரது வெற்றிலைப் பெட்டி இருந்தது. அதிசயித்த அவர், யார் இப்படிச் செய்தது என்று நினைத்தார். “நான் தான் பொங்கி அம்மன்” என்று அசரீரியாக பதில் கிடைத்தது.
வள்ளிமலையில் ஒரு சிறுமி ஆடிப்பாடி இருப்பதைக் கண்ட வள்ளிமலை ஸ்வாமிகள் அந்த சிறுமியிடம்,, “நீ யார்?” என்று கேட்க, “நான் யார் என்பது ஒரு புறம் இருக்கட்டும், எனது பாட்டால் உனது உள்ளம் ஆனந்தத்தால் நிரம்பி வழிந்தது இல்லையா?” என்று அவள் கேட்டாள். அன்று முதல் ராக தாளத்துடன் திருப்புகழைப் பாட ஆரம்பித்தார் ஸ்வாமிகள்.
தனக்கு சிறுமி வடிவில் தரிசனம் தந்த பொங்கி அம்மனுக்கு அவர் வள்ளி என்ற பெயரைத் தந்தார். அங்குள்ள பாறையில் பொங்கியைப் பிரதிஷ்டை செய்தார். அது பொங்கிப் பாறை என்ற பெயருடன் இன்றும் விளங்குகிறது.
அந்தக் காலத்தில் ஆங்கில முறைப்படி புத்தாண்டு தொடங்கும் தினமான ஜனவரி முதல் தேதியன்று அதிகாரிகளை சந்திப்பது அவர்களின் கீழ் வேலை பார்ப்பவர்களின் வழக்கமாக இருந்தது.
இதைக் கண்ணுற்ற ஸ்வாமிகள் முருகனை அல்லவா தரிசிக்க வேண்டும் என்று எண்ணினார்.
1917 டிசம்பர் 31ம் தேதியன்று திருத்தணி படிகளில் ஆறு பேருடன் முருகனின் புகழ் பாடியவாறே ஏறலானார். 1918 ஜனவரி முதல் தேதியன்று இப்படிப் படித் திருப்புகழ் என்னும் ஒரு புதிய வழக்கத்தை ஸ்வாமிகள் தொடங்கி வைத்தார்.
இன்று அது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் படியேறி முருகனைத் துதிக்கும் வழக்கமாக, பெரிய திருவிழாவாகவே ஆகி விட்டது.
வள்ளிமலை ஸ்வாமிகள் திருப்புகழைப் பரப்ப பல நூல்களைத் தொகுத்து அருளினார்.
இரண்டாம் உலக மஹா யுத்தத்தின் போது ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் பல நாடுகளின் மீது குண்டுகளை வீசின. அப்போது இந்தியாவிலும் மக்கள் யுத்த பீதியால் பயந்தனர். அதைப் போக்க திருப்புகழ்ப் பாராயண குண்டு என்று ஒரு நூலைத் தொகுத்து 1942 ஜனவரியில் வெளியிட்டார்.
‘இத் திருப்புகழ்ப் பாராயணக் குண்டு ஜெர்மனி, ஜப்பான் குண்டுகளை அடக்க வல்ல பேராற்றல் வாய்ந்த எதிர்குண்டு.
சூர சம்ஹார காலத்தும் திருப்புகழ் வெற்றியே போர்க்களத்தில் முழங்கிற்று என்பது பூத வேதாள வகுப்பால் ஏற்படுவதால் போர்க்களத்திலும் மற்றும் எவ்விடத்தும் இறைவன் திருப்புகழை ஓதி எளிதில் சுகம் பெறலாம்” என்றார் அவர்.
அடுத்து 1944, ஜனவரியில் அநுஷ்டானத் திருப்புகழ் என்னும் ஒரு நூலைத் தொகுத்து அவர் வெளியிட்டார். காலையில் படுக்கையை விட்டு எழும் போது சொல்ல வேண்டியது, நீராடல், திருநீறிடல், உணவுண்ணல், வழிநடை,செல்லல், தனிவழி நடத்தல், தும்மல், நோய் நீக்கம் வேண்டல், இஷ்ட காரிய சித்தி வேண்டல், படுக்கைக்குச் செல்லல் முதலிய காலங்களில் ஓத வேண்டிய திருப்புகழ் பாடல்களைப் பட்டியலிட்டு அநுஷ்டானத் திருப்புகழாக அதை அளித்தார்.
அடுத்து மெய்க்காவல் எனப்படும் வேல்மாறல் என்ற தொகுப்பை அவர் அருளினார். இதில் அருணகிரிநாதர் பாடிய வேல் வகுப்பின் 16 அடிகளை முன்னும் பின்னுமாகவும் மேலும் கீழுமாகவும் மாற்றி அமைத்து 64 அடிகளாக ஆக்கி அதற்கு வேல் மாறல் என்ற பெயரைத் தந்தருளினார்.
ஸ்வாமிகள் பசுக்களை பூஜிப்பதில் மிகவும் விருப்பம் உள்ளவர். தினமும் காலை, மாலை வேளைகளில் பசுக்களைப் பூஜிப்பதற்காக உள்ள பாடல்களைத் தொகுத்து ‘திருப்புகழ்க் கோ பூஜை என்று அதற்குப் பெயரிட்டு ஒரு நூலை 1946 ஜனவரியில் அவர் வெளியிட்டார்.
வள்ளியை ஜீவாத்மாவாகவும் முருகனை பரமாத்மாவாகவும் வள்ளியானவள் முருகனை திருமணம் செய்தலையே ஜீவ- பிரம்ம ஐக்கியமாகவும் வைத்து ‘திருப்புகழ் ஞான ஸச்சிதானந்த வல்லி சரிதம்’ என்ற ஒரு நாடக வடிவிலான நூலை 1935க்கு முன்னமேயே ஸ்வாமிகள் எழுதினார்.
இந்த வள்ளி திருமண கதாகாலக்ஷேபத்தை 10 நாட்கள் மற்றும் 16 நாட்கள் என்ற அளவில் விரித்து அனைவரும் ரசிக்கும் படி அவர் உரையாற்றியுள்ளார்.
ஸ்வாமிகளின் இடைவிடாத முயற்சியால் ஆங்காங்கே திருப்புகழ் குழுக்கள் அமைக்கப்பட்டன.
4-1-1929 அன்று ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் சமாதி அடைந்தார். அப்போது வள்ளிமலை ஸ்வாமிகள் அங்கு சென்று சமாதி காரியங்களில் கலந்து கொண்டார்.
அடுத்து 14-4-1950ல் பகவான் ரமண மஹரிஷி சமாதி அடைந்தார். தன் இரு குருமார்களான சேஷாத்ரி ஸ்வாமிகள் மற்றும் ரமணர் சமாதி அடைந்த பின்னர் ஸ்வாமிகளும் தனது தேகத்தை விடுக்க எண்ணினார்.
வள்ளிமலையிலிருந்து கீழிறங்கி வந்த அன்பரிடம் கார்த்திகை – கார்த்திகை என்று ஸ்வாமிகள் கூறினார். அதன்படியே கார்த்திகை மாதம் கார்த்திகை தினத்தன்று அவர் சமாதி அடைந்தார்.
22-11-1950ல் அவர் இறைவனுடன் கலந்தார்.
வள்ளிமலையில் எந்த குகையில் அதிக காலம் தங்கி தவம் புரிந்து திருப்புகழ் பாடல்களைப் பாடி வந்தாரோ அதே குகையில் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டது.
அவரது சமாதி தினம் குருபூஜை நாளாக அன்பர்கள் அனைவராலும் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
9-2-2025 ஞானமயம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
ஶ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் – 1
அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, திரு கல்யாண்ஜி அவர்களே, திரு லண்டன் சுவாமிநாதன் அவர்களே வணக்கம். நமஸ்காரம்.
அருணகிரிநாதர் அருளியுள்ள திருப்புகழ் பாடல்களை உலகெங்கும் பரப்பிய வள்ளிமலை ஸ்வாமிகளைப் பற்றி இன்று சற்று சிந்திப்போம்.
வள்ளிமலை ஸ்வாமிகள் 1870ம் ஆண்டு கோவை மாவட்டம் பூனாச்சி புதூரில் பிறந்தார். குழந்தைக்கு அர்த்தநாரி என்று பெற்றோர் பெயரிட்டனர்.
இளமையிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது. குழந்தைகளும் பிறந்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மனைவியும் குழந்தைகளும் இறந்தனர். இன்னொரு திருமணமும் நடைபெற்றது. ஆனால் அந்த மனைவியும் அவர் பெற்றெடுத்த குழந்தைகளும் கூட இறந்தன.
இதனால் மனம் நொந்தார் அர்த்தநாரி.
மைசூர் அரண்மனையில் அவர் வேலை பார்க்க ஆரம்பித்தார். அப்போது தீராத வயிற்றுவலி அவரைப் பீடித்து ஆட்டியது. இதனால் பல வைத்தியங்களை அவர் மேற்கொண்டார். ஆனால் பலன் ஒன்றும் இல்லை.
ஒரு நாள், கூட இருந்த அரண்மனைப் பணியாள் ஒருவன், அவரிடம், “நீங்கள் ஏன் பழநி சென்று முருகப் பெருமானைத் தரிசிக்கக் கூடாது? அவர் அனைத்து நோயையும் தீர்ப்பவர் ஆயிற்றே! ” என்று கூறினான்.
உடனே அர்த்தநாரி பழநி சென்று அங்கேயே இருந்து அபிஷேகத்திற்குத் தீர்த்தம் கொண்டுவருவது உள்ளிட்ட சேவைப் பணிகளைச் செய்ய ஆரம்பித்தார். விரதம் மேற்கொண்டார். அதன் பலனாக அவரது தீராத நோய் தீர்ந்தது.
அங்குள்ள உற்சவ காலத்தில் ஒருநாள் தேவதாசி ஒருத்தி திருப்புகழ் பாடல் ஒன்றைப் பாடினாள்.
வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
கொந்தார மாலை குழலாரமொடு தோள் புரள
வண்காதிலோலை கதிர் போலவொளி வீச இதழ் மலர்போல\
என்று தொடங்கும் அந்தப் பாடலைக் கேட்ட அர்த்தநாரி மனம் உருகினார்.
சிங்கார ரூப மயில் வாகந!\ நமோ நமென
சுந்தா குமார சிவ தேசிக! நமோ நமென
ஸிந்தூர பார்வதி ஸுதாகர நமோநமென விருதோதை
சிந்தான சோதிகதிர் வேலவ நமோநமென
கங்காள வேணிகுருவானவ நமோநமென
திண்சூரராழி மலை தூள்படவை வேலை விடு முருகோனே
(திருப்புகழ் பாடல் 823)
இந்தப் பாடலைக் கேட்ட அர்த்தநாரி திருப்புகழின் பால் பெரிதும் ஈடுபட்டார்.
அப்போது அவருக்கு அங்கிருந்த சிறுவன் ஒருவன் தமிழைக் கற்றுக் கொடுக்க முன் வந்தான். அவன் மூலம் தமிழை நன்கு கற்ற அவர் திருப்புகழ் பாடல்கள் அனைத்தையும் ஓதலானார்.
இனிமையான குரலில் அழகான ராகங்களுடன் அவர் திருப்புகழ் பாடல்களைப் பாட, அதை கேட்க மக்கள் பெரும் திரளாகக் கூடலாயினர். திருப்புகழைக் கேட்டு இன்புற்றனர்.
அப்போது அவருக்கு வயது 42.
தெய்வ பக்தியில் ஊறித் திளைத்த அர்த்தநாரி தலம் தலமாகச் சென்று இறைவனை வழிபடலானார்.
24-12-1912 அன்று அவர் திருவண்ணாமலையை வந்தடைந்தார்.
அங்கு பகவான் ரமண மஹரிஷியை தர்சனம் செய்தார்.
மஹரிஷி அவரை ஒரு கணம் பார்த்தார். அவ்வளவு தான், அர்த்தநாரி மெய்மறந்தார்.
அங்கேயே ரமணருக்குப் பணிவிடைகளைச் செய்யலானார் அவர்.
திருப்புகழ் பாடல்களை அவர் முன் பாடியவாறு இருந்தார்.
ஒருநாள் ரமணமஹரிஷி , “மலையை விட்டு இறங்கிக் கீழே போ” என்றார்.
‘ஒரு தவறும் செய்யவில்லையே,ஏன் மஹரிஷி நம்மை மலையை விட்டுக் கீழே இறங்கச் சொல்கிறார்’ என்று எண்ணிய அவர் மஹரிஷியின் கட்டளையின் படி கீழே இறங்கலானார்.
அங்கே வழியில் பெரும் அருளாளரான சேஷாத்ரி ஸ்வாமிகள் எதிரில் வந்து அவரை ஆட்கொண்டார்.
ஆதி சங்கரரின் சிவமாநஸ பூஜா ஸ்தோத்ரத்தில் நான்காவது ஸ்லோகத்தைக் கூறிய ஸ்வாமிகள் அதனுடைய அர்த்தத்தை விளக்கினார். பின்னர் இதே போல அர்த்தம் தரும் திருப்புகழ் பாடல் உள்ளதா என்று கேட்டார்.
உடனே அர்த்தநாரி, “எனதியானும் வேறாகி எவரும் யாதும் யானாகும் இதய பாவநாதீத மருள்வாயே (அமல வாயு எனத் தொடங்கும் பாடல் எண் 1283) என்ற திருப்புகழ் பாடலை எடுத்துக் கூறினார்.
இதனால் மகிழ்ந்த சேஷாத்ரி ஸ்வாமிகள், “திருப்புகழே மகாமந்திரம். அதுவே உனக்குப் போதுமானது. வள்ளிமலை சென்று அங்கு தவத்தைச் செய்” என்று கூறி அருளினார்.
அப்போது தான் அர்த்தநாரிக்கு ரமண மஹரிஷி தன்னை ஏன் கீழே போகச் சொன்னார் என்பது புரிந்தது.
இரு பெரும் மகான்களின் ஆசியைப் பெற்ற அவர் நேராக வள்ளிமலைக்குச் சென்றார். அங்கு பர்வதராஜன் குன்று என்ற இடத்தைத் தனது தவத்திற்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தார்.
அன்று முதல் அவர் பெயர் வள்ளிமலை ஸ்வாமிகள் என்று ஆயிற்று.
வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் வள்ளிமலை என்று அழைக்கப்படும் இந்த அழகிய குன்று வட ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள இடமாகும்.
பல சித்தர்கள் வாழ்ந்த சித்தர் மலையான வள்ளிமலையில் நிறைய சுனைகளும் குகைகளும் உண்டு. இங்குள்ள கோவிலில் முருகன் வள்ளி தெய்வயானையுடன் காட்சி அளிக்கிறார். கோவிலுக்குப் பின்புறம் சரவணப் பொய்கை என்ற குளம் உள்ளது.
இங்கு வள்ளி மஞ்சள் அரைத்த பாறையும் முருகன் மரமாய்த் தோன்றிய இடமும் உள்ளன.
இங்கு சூரியன் காணாச் சுனை என்று ஒரு சுனை உள்ளது. இதில் சூரியனின் கிரணங்களே படாது என்பது ஒரு அதிசயம். இந்த இடத்தில் தான் வள்ளியிடம் முருகன் தேனும் தினைமாவும் கேட்டுப் பெற்றாராம். அவருக்கு விக்கல் ஏற்பட, சூரிய ஒளி படாத நீர் வேண்டும் என்று கேட்க இந்த சுனை நீர் தான் தரப்பட்டதாம். அவர் விக்கலும் நின்றாதாம். இந்த தீர்த்தம் புனிதமானது என்பதால் அனைவரும் இந்த தீர்த்தத்தை எடுத்துத் தலையில் தெளித்துக் கொள்கின்றனர். கன்னிப் பெண்கள் நல்ல கணவனை தந்து அருளுமாறு முருகனை இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.
இந்தத் திருத்தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு.
மார்க்கண்டேய மஹரிஷியின் உபதேசப்படி வால்மீகி முனிவர் இங்கு ஈசனை வழங்கி வழிபட்டு முக்தி பெற்ற தலம் இது.
வால்மீகி முனிவர் இங்கு ஈசனை வழிபட்டதால் இந்தத் தலத்தின் ஈசர் வான்மீகநாதர் என்று அறியப்படுகிறார். அத்துடன் வன்னி மரத்தைச் சுற்றி இருந்த பரந்த இடமும் திருவான்மியூர் என்ற பெயரைப் பெற்றது.
தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த போது அவர்கள் வாசுகிப் பாம்பை கயிறாகவும் மேரு மலையை மத்தாகவும் பயன்படுத்தினர். அப்போது ஆலகால விஷம் வெளி வந்தது. அந்த விஷத்தை கழுத்தில் இருத்தி, ஈசன் உலகத்தைக் காத்தார்.
இதைத் தொடர்ந்து தன்வந்திரி அமிர்த கலசத்துடன் வெளிப்பட்டார். அந்த அமுதத்தைக் கொண்டே தேவர்கள் சிவபிரானுக்கு அபிஷேகம் செய்தனர். ஆகவே ஈசனது பெயர் அமுதீசர் என்று ஆனது. அமுதமான மருந்தாலேயே அமைந்ததால் மருந்தீசர் என்ற பெயர் ஏற்பட்டது.
இன்னொரு வரலாறும் உண்டு. ஒரு சமயம் இந்திரன் காமதேனுவை வசிஷ்டரிடம் ஒப்படைக்க, பூஜையின் போது காமதேனு பால் சுரக்கவில்லை. இதனால் வெகுண்ட வசிஷ்டர் காமதேனுவை காட்டுப் பசுவாகப் போகுமாறு சாபம் கொடுத்தார். சாபவிமோசனம் வேண்டிய காமதேனுவிற்கு வசிஷ்டர் மனம் இரங்கி, திருவான்மியூரில் வன்னி மரத்தடியில் ஸ்வயம்புவாய்த் தோன்றிய ஈசனை வழிபட்டு சாபவிமோசனம் பெறுமாறு கூறினார்.
அப்படியே காமதேனு தினமும் இங்கு பால் சுரந்து ஈசனை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றது.
அதனால் ஈசனுக்கு ‘பால்வண்ண நாதர்’ என்ற திருப்பெயரும் ஏற்பட்டது.
சதயபுரியை ஆண்டு வந்த மன்னன் சதாயு ஒருநாள் வேட்டையாடும் போது சிங்கம் ஒன்றின் மீது அம்பை விட அது வெகுவேகமாக ஓட அதைக் கண்ட காமதேனு பயந்து ஓடியது. அப்போது, அதன் குளம்பு ஈசனின் தலையிலும் மார்பிலும் பட்டது. அந்தக் காலடித் தடங்களை இன்றும் காணலாம்.
அகத்திய முனிவர் இங்கு வந்து 108 சிவலிங்கங்களை ஸ்தாபித்தார். அவை பிரதான மண்டபத்தில் உள்ளன.
பிரதான ஈஸ்வரரான மருந்தீஸ்வரர் ஸ்வயம்பு லிங்கமாய் சுமார் ஒன்றரை அடி உயரத்துடன் அழகிய காட்சியை அருள்கிறார்.
இங்குள்ள அம்பிகை நான்கு கரங்களுடன் சுவாமிக்குப் பின்புறமாக தெற்கு நோக்கி இருந்து காட்சி தருகிறாள். விநாயகரும், முருகனும் கிழக்கு நோக்கி உள்ளனர். இங்குள்ள கோஷ்டத்தில் உள்ள கடவுளரின் வரிசையும் மாறி உள்ளது. இங்கு காவலுக்கு திண்டி-முண்டி ஆகியோர் உள்ளனர்.
சிவபிரானின் தலையிலிருந்து தெறித்த ஐந்து நீர்த் துளிகள் ஜன்ம நாசினி, காம நாசினி, பாப நாசினி, ஞான தாயினி, மோக்ஷ தாயினி ஆகிய ஐந்து தீர்த்தங்களாயின. கிழக்கு வாயிலில் உள்ள ஜன்மநாசினி இந்திரனின் பாவத்தைப் போக்கியது. இது சித்திரைக் குளம் என்ற பெயருடன் இன்று விளங்குகிறது.மடப்பள்ளியில் உள்ள கிணறாக உள்ள காமநாசினி சந்திரன் தன் ஒளியைத் திரும்பிப் பெறச் செய்த தீர்த்தமாகும்.
மடப்பள்ளி கிணறு மோக்ஷதாயினி என்றும் அறியப்படுகிறது. பாபநாசினி என்பது கோவிலின் கிழக்கு கோபுரத்தின் அருகே உள்ள குளமாகும். ஞானதாயினி தீர்த்தம் இப்போது இல்லை.
ஒரு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் இரண்டு ஐந்து நிலை கோபுரங்களைக் கொண்டுள்ளது.
இந்தக் கோவிலின் பிரதான மண்டபம் 51 தூண்களுடன் அமைந்துள்ளது. தியாகராஜ மண்டபம் மூன்று வரிசையில் பத்துத் தூண்களுடனும் இன்னொரு நான்கு தூண்கள் கடைசியிலும் அமைந்திருக்க 34 தூண்களுடன் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்கு ஸோமாஸ்கந்தர் சிலை உள்ளது. சுப்ரமண்யர், விநாயகர்,கஜலக்ஷ்மி, தன்வந்திரி, சரபேஸ்வரர், நரசிம்மர், உள்ளிட்ட பல தெய்வங்களின் சிலைகள் இங்கு உள்ளன.
அம்மன் சந்நிதியில் உள்ள பிரதான மண்டபத்தின் மேற்கூரையில் பல்வேறு அழகிய சித்திர வேலைப்பாடுகள் உள்ளன.
இங்கு மருந்தீஸ்வரர் கோவிலுக்கு எதிர்புறம் மிக அருகில் வால்மீகி முனிவருக்கான ஒரு சிறு கோவில் அமைந்துள்ளது. 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது இந்தக் கோவில்.
இத்தலத்தில் திருஞானசம்பந்தர் இரு பதிகங்களையும் திருநாவுக்கரசர் ஒரு பதிகத்தையும் அருளியுள்ளனர். சேக்கிழார், அருணகிரிநாதர், வண்ணசரபம் தண்டபாணி ஸ்வாமிகள், பாம்பன் குமரகுருதாச ஸ்வாமிகள் உள்ளிட்ட பல தெய்வீக மகான்கள் இத்தலத்தைப் பற்றிப் பாடல்கள் புனைந்துள்ளனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மருந்தீஸ்வரரும் அன்னை திரிபுரசுந்தரியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.
Date uploaded in Sydney, Australia – 10 February 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்துமத செய்தி மடல் 9-2-2025 (Post.14,189)
collected from popular dailies and edited for broadcast.
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைவாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்
அனைவருக்கும் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை ; பிப்ரவரி 9- ஆம் தேதி தேதி ; 2025-ம் ஆண்டு
முதலில் மஹா கும்பமேளா செய்திகள்
கும்பமேளாவில் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி
மகாகும்பமேளா விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அத்துடன் நதியில் நின்றவாறு ருத்ராட்ச மாலையை கையில் வைத்தபடி மந்திரங்கள் சொல்லியும் அவர் வழிபட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம்,மகாகும்ப நகரில் நடைபெற்று வரும் உலகளவில் புகழ்பெற்ற மகாகும்பமேளா விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் படகில் புறப்பட்டார்.
அங்கு கங்கா,யமுனை மற்றும் சரஸ்வதி என மூன்று நதிகளும் சந்திக்கும் திரிவேணி சங்கத்தில் புனித நீராடினார். அதனைத் தொடர்ந்து நதியில் நின்றவாறு கையில் ருத்ராட்ச மாலையை ஏந்தியபடி, கண்களை மூடி மந்திரங்கள் ஜெபித்தப்படி சில நிமிடங்கள் அவர் வழிபட்டார். மாசி மாதத்தில் வரும் அஷ்டமி திதி தினத்தில் கங்கையில் நீராடுவது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்
முன்னதாக, கங்கையில் புனித நீராட வந்த பிரதமர் மோடியை, அரளி கரைப் பகுதியில் கண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாகமாக கூக்குரலிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
பீகார் கவர்னர் ஆரிப் முகமது கான் கும்பமேளாவுக்கு வந்து சித்தானந்த் சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றார்.
பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாகும்பமேளா இந்த ஆண்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி (ஜன.13) தொடங்கி பிப்ரவரி 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
*****
மகா கும்பமேளாவில் இதுவரை 42 கோடி பக்தர்கள் நீராடல்!
இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 42 கோடி பக்தர்கள் இதுவரை மகாகும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடியுள்ளதாக, உத்தரப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது
வசந்த பஞ்சமி நாளில் 5 கோடி பேர் புனித நீராடல்
வசந்த பஞ்சமி தினத்தில் மட்டும், ஐந்து கோடி பேர் புனித நீராடியதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
அனைத்து நாட்களிலும், கங்கை, யமுனை மற்றும் புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மக்கள் புனித நீராடி வருகின்றனர். அதே நேரத்தில், சில முக்கிய நாட்களில், அகாராக்கள் எனப்படும் பல மடங்களைச் சேர்ந்தவர்கள், ‘அமிர்த ஸ்னான்’ எனப்படும் புண்ணிய நீராடுவர்.
இந்த நாட்களில், மடாதிபதிகள், சன்னியாசிகள், துறவிகள் உள்ளிட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவர். முன்னதாக, நாகா சாதுக்கள் புடைசூழ இவர்கள் பேரணியாக, திரிவேணி சங்கமத்துக்கு வருவர்.அதிகாலை 4:00 மணிக்கு புண்ணிய நீராடல் துவங்கியது. ஒவ்வொரு அகாராவுக்கும் தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் பேரணியாக வந்து, அந்தந்த அகாராவைச் சேர்ந்தவர்கள் புண்ணிய நீராடினர்.
இதற்கடுத்து, பிப்ரவரி 12ம் தேதி பவுர்ணமி, 26ம் தேதி மஹா சிவராத்திரி ஆகிய நாட்களில், அமிர்த ஸ்னான் நிகழ்ச்சிகள் நடக்கும்.
.பூடான் மன்னர்
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். புனித நீராடுவதற்கு முன்பு சூரியனுக்கு ‘அர்க்யம் ‘ கொடுத்தார் .
திரிவேணி சங்கமத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பிப்.10ம் தேதி புனித நீராட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
*****
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: கும்பாபிஷேக விழாவில் மோடி உரை
புதுடில்லி: இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் ஸ்ரீ சனாதன தர்ம கோவில் கும்பாபிஷேகம் இன்று நடந்தது.
இதில் வீடியோ கான்பரன்சிங் முறையில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ என்று கூறி தன் உரையை தொடங்கினார்.
இந்த விழாவில், இந்தோனேசியா அதிபர் பிரபோ சுபியன்டோ, முருகன் கோவில் கமிட்டி தலைவர் ஹாசிம், நிர்வாக கமிட்டி தலைவர் டாக்டர் கோபாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மோடி பேசுகையில், ”வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா. இந்தியாவுக்கும், இந்தோனேசியாவுக்கும் இடையிலான உறவு, வெறும் புவி அரசியல் தொடர்பானது மட்டும் அல்ல. பல்லாயிரம் ஆண்டு காலமாக நீடிக்கும் கலாசாரத்தின் அடிப்படையிலானது. அதன் தொடர்ச்சியாகவே இந்த விழா நடக்கிறது.இந்த தொடர்பானது, முருகக்கடவுள், பகவான் ராமர், பகவான் புத்தரை உள்ளடக்கியது. இந்தியாவில் இருந்து யார் இந்தோனேசியா பிரம்பனம் கோவில் வந்தாலும், அவர்கள் காசி, கேதார்நாத் வந்ததை போலவே ஆன்மிக உணர்வு பெறுவர்,” என்றார்.
******
ஹிந்து அல்லாத 18 ஊழியர்கள் மீது திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை
திருப்பதி: ஹிந்து அல்லாத மத நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக, 18 ஊழியர்கள் மீது திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது
திருப்பதி தேவஸ்தான வாரியம், ஹிந்து ஊழியர்கள் மட்டுமே இங்க பணியாற்ற முடியும் என்று முன்பு கூறியிருந்தது. இவ்வாறு இருந்த போதிலும், இந்த 18 ஊழியர்கள் ஹிந்து அல்லாத மரபுகளைப் பின்பற்றுவது கண்டறியப்பட்டது. இதனடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளதாவது:
எங்கள் வாரியத்தின் தீர்மானத்தின்படி, கோவில்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் உள்ள இந்த 18 பேர், தற்போதைய பணிகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.ஊழியர்களுக்கு இரண்டு விருப்பங்கள் வழங்கப்படுகின்றன. அரசுத் துறைகளுக்கு மாற்றுதல் அல்லது தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் ஆகிய வாய்ப்புகள் வழங்கப்படும்.
1989ம் ஆண்டு அறக்கட்டளைச் சட்டத்தின்படி, திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் ஹிந்து பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.பாஜக தலைவரும் தேவஸ்தான வாரிய உறுப்பினருமான பானு பிரகாஷ் ரெட்டி இந்த நடவடிக்கையை ஆதரித்தார்.
*****
காசியில் அன்னப்பூர்ணேஸ்வரி கும்பாபிஷேகம்
ஸ்ரீ சாரதா பீடாதீஸ்வர சிருங்கேரி ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சன்னிதானம் நல்லாசியுடன் ஸ்ரீ விதுசேகர பாரதி சுவாமிகள் வாரணாசியில் சங்கர மடத்தில் உள்ள பகவதி ஸ்ரீ அன்னபூர்ணேஸ்வரி கும்பாபிஷேகத்தை பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்தி வைத்தார். முன்னதாக உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில், சிருங்கேரி சங்கராச்சாரியார் ஜனவரி 24 முதல் 31 வரை கும்பமேளாவில் பங்கேற்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சங்கர மடத்தில், ஆயுத மோதக கணபதி ஹோமம், சஹஸ்ரசண்டி மஹா யஜ்ஞம், கோடி குங்கும அர்ச்சனை, மஹாருத்ர மஹாயஜ்ஞம், சதுர்வேத பாராயணம், மற்றும் லோக கல்யாண பாராயணம் உட்பட பல பூஜைகளும் நடந்தன. நாடு முழுவதிலும் இருந்து, 485 வேத பண்டிதர்கள் பங்கேற்றனர்.
****
ஆதியோகி ரத யாத்திரை
கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கைலாய பக்தி பேரவை சார்பில் ஆதியோகி ரத யாத்திரை தொடங்கியுள்ளது. கோவையில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 50 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா பிப்ரவரி 26-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதில் பங்கேற்க பொது மக்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாகவும், கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாதவர்கள் அவர்களுடைய ஊர்களிலேயே தரிசனம் செய்வதற்காகவும் இந்த ரத யாத்திரை ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
இந்த ரத யாத்திரைக்காக 6 அடி உயர ஆதியோகி திருவுருவ சிலையுடன் கூடிய 4 வாகனங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.ஆதியோகி ரதம் பிப்.3-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை வேலூரின் பல்வேறு பகுதிகளுக்கு சென்றது.
தமிழகத்தில் நேரலை செய்யப்பட உள்ள 50 இடங்களில் பக்தர்களுக்கு இலவச ருத்ராட்சம், சத்குருவின் ஆனந்த அலை புத்தகம் மற்றும் மஹா அன்னதானம் வழங்கப்பட உள்ளது.”
*****
இந்து முன்னணி தலைவர் கைது
திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் தடையை மீறி நுழைய முயன்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் எச்.ராஜா, மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் மற்றும் இந்து முன்னணி தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் போராட்டம் நடத்தப்படும் என இந்து அமைப்பினர் அறிவித்திருந்தனர். இதன் காரணமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுற்றி நேற்று முதலே மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு போடப்பட்டு அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட் வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது அலுவலகத்தில் இருந்து தொண்டர்களுடன் புறப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது இந்து முன்னணி தொண்டர் ஒருவர் திடீரென பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மதுரை: பிப். திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள காசிவிஸ்வநாதர் கோயில் மற்றும் தர்காவில் வழிபட தடையில்லை. அதேசமயம் தர்காவில் ஆடு, கோழி உயிர்பலி கொடுக்க சிலர் முயன்று வருகின்றனர். இதற்கு ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
******
முருகன் தலங்களில் தைப்பூச விழா
இந்த ஆண்டில், தைப்பூசம் பிப்ரவரி 11, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறுகிறது.
இந்த நாளில் முருக பக்தர்கள் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபடுகிறார்கள் .
ஆறுபடைவீடுகளில் ஒன்றான பழனிமலை கோவிலில். இந்த திருவிழாவுக்கு இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அதனை சுற்றியுள்ள செட்டிநாட்டு நகரத்தார்கள், 425 வது ஆண்டாக 329 காவடிகள் சுமந்து பாதயாத்திரையாக குன்றக்குடி வந்தடைந்தனர்.
அங்கிருந்து கண்டவராயன்பட்டி, சோழம்பட்டி, மருதிபட்டி, சிங்கம்புணரி வழியாக சுமார் 180 கிலோ மீட்டர் கடந்து வரும் 10ஆம் தேதி பழனி சென்றடைவர். வரும் 13ஆம் தேதி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். அதன் பின் அனைத்து நகரத்தார்களும் பழனியிலிருந்து பாதையாத்திரையாகவே சொந்த ஊர் திரும்புகின்றனர்.
இதே போல மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தை சோ்ந்த பக்தர்கள் 43வது ஆண்டாக பழனிக்கு பாதயாத்திரையாக சென்றனர்.
மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகே உள்ள பத்து கேவ்ஸ் ,சிங்கப்பூரில் ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில்,
இலங்கையிலுள்ள முருகன் கோவில்கள்
,தென்னாப்ரிக்கா, மொரீஷியஸ் , செஷெல்ஸ், பிஜி நாடுகளில் உள்ள கோவில்களில் தைப்பூசம் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.
****
பிப்ரவரி 10 பள்ளி, கல்லூரிகள் விடுமுறை… நாகை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் நாகை நீலாயதாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
அதேசமயம் 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான அரசு செய்முறை தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் பிப்ரவரி 15ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும். இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.
நாகை நீலாயதாட்சி அம்மன் கோவிலின் மூலவர் காயாரோகணேசுவரர். இதில் சிவன் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கம் சுயம்பு மூர்த்தியாக காட்சி அளிக்கிறார். .
*****
நிம்மதி கிடைத்தது; ஆன்மிக அனுபவத்தை மனம் உருகி பகிர்ந்தார் ரஜினி!
தியானம் செய்வதன் மூலம் கிடைத்த மன அமைதி, நிம்மதி குறித்து நடிகர் ரஜினி காந்த் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில் ரஜினி கூறியிருப்பதாவது: எல்லோருக்கும் வணக்கம். நான் இப்போது ராஞ்சியில் உள்ள பரமஹம்ச யோகானந்தா (Y.s.s) ஆசிரமத்தில் இருக்கிறேன். இந்த ஆசிரமத்திற்கு மூன்றாவது முறையாக வந்துள்ளேன். முதலாவதாக 2002ம் ஆண்டு வந்தேன். இரண்டாவது முறையாக வந்த போது கூட இவ்வளவு அமைதியை நான் பார்க்கவில்லை.
தற்போது, இரண்டு நாட்கள் தங்கி இருந்து, நிறைய நேரம் ஆசிரமத்தை முழுவதுமாக பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதில் ரொம்ப சிறப்பு குருவின் அறையில் உட்கார்ந்து தியானம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. நேற்று காலை தியானம் செய்து கொண்டிருக்கும் போது ஒரு அனுபவம் கிடைத்தது. அந்த அனுபவத்தை வர்ணிக்கவே முடியாது. தியானம் செய்த ஒரு மணி நேரம் எப்படி போனது என்றே தெரியவில்லை. அந்த அதிர்வு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
இப்பொழுது என்னை பார்க்கிறவர்கள் எல்லாம் உங்களைப் பார்த்தாலே ‘பாசிடிவ் வைப்’ வருகிறது என்று சொல்கிறார்கள்.
இதன் சீக்ரெட் வந்து, நான் தியானம் செய்து கொண்டு இருப்பது தான். நான் தியானம் செய்ய ஆரம்பித்ததில் இருந்து எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதனை எவ்வாறு சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. அது ஒரு விதமான அமைதி. 2002ம் ஆண்டு தியானம் செய்ய ஆரம்பித்தேன். இப்பொழுது 21 வருடங்கள் கழிந்து விட்டன. தினமும் செய்து கொண்டே இருந்தேன். முதலில் எனக்கு எந்த மாற்றமும் தெரியவில்லை. ஆனால் ஒழுக்கமாக தினமும் தியானம் செய்து கொண்டே இருந்தேன். சில நேரங்களில் எனக்கு டவுட் வரும்.
என்னடா இவ்வளவு தியானம் செய்கிறோம் ஒரு மாற்றமும் நிகழவில்லையே என்று சந்தேகம் வந்தது. சரி இருந்தாலும் ஓகே என்று தியானம் செய்து கொண்டே இருந்தேன். இதன் பிறகு 10 முதல் 12 வருடங்களுக்குப் பிறகு எனக்கு மாற்றங்கள் தெரிந்தது. இதனுடைய தாக்கம் தெரியவந்தது. அது எனக்குள்ளே ஒரு மாதிரியான நிம்மதி, எப்போதுமே அமைதி ( peace). இதனால் கஷ்டப்படாமலே பல மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த குருக்கள் ஒருமுறை நமது கையைப் பிடித்து விட்டால், நாம் தாமாக விட்டு விட்டால் கூட அவர்கள் விடமாட்டார்கள். இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
******
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .