திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் – Part 11(Post.15,396)

Written by London Swaminathan

Post No. 15,396

Date uploaded in Sydney, Australia –  5 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

கோபிகள்- கிருஷ்ணன் ; அருணகிரி நாதரும் சங்கப்புலவரும்

2000  ஆண்டுகளுக்கு முன்னரே கண்ணன் கதைகள் அனைத்தும்  தமிழ் நாட்டில் மிகவும் பிரசித்தம்!

கஞ்சன் விடும் சகடாசுரன் பட வென்று குருந்தினில் ஏறி

மங்கையர் கண்கள் சிவந்திடவே கலந்த அரு முறையாலே

கண்டு மகிழ்ந்து அழகாய் இருந்து இசை கொண்டு … கம்சன்

ஏவிய சகடாசுரன் மாளும்படி அவனை வென்று, குருந்த மரத்தில் ஏறி கோபிகள் கண்கள் சிவக்க அவர்களுடன் ஊடாடி அரிய வகைகளாலே (அவர்களைப்) பார்த்தும் மகிழ்ந்தும் அழகாய் உடன்இருந்தும் இசை பாடி,

விளங்கிய நாளில் அன்பொடு கண் குளிரும் திருமால்

மகிழ்ந்து அருள் மருகோனே … (கண்ணனாக) விளங்கிய

நாட்களில் அன்புடன் கண் குளிர்ந்த திருமால் மகிழ்ந்தருளும்

மருகனே,– பழனி திருப்புகழ்

***

இதோ சங்கப் புலவர் பாடல்

அகநானுற்றில் தொழுனை நதி

அகநானூறு (59) பாடலில் யமுனை நதியைத் தொழுனை நதி  என்று காண்கிறோம் ; பிற்கால நூல்களும் அவ்வாறே குறிப்பிடுகின்றன. கங்கை நதியைக் குறிப்பிடும் சங்க நூல்கள் கங்கை என்றே பாடுகின்றன. யமுனை மட்டும் தொழுனை ஆனது எப்படி என்பது முதல் மர்மம்; முதல் புதிர்.

கண்ணனிடம் கோபியர் பெண்கள் எங்களது ஆடைகளைக் கொடுத்து விடப்பா ! என்று கெஞ்சிக்கூத்தாடி தொழுததால் இப்படிப் பெயர் வைத்திருக்கலாம் அல்லது கண்ணனைத் தொழுத,  பிருந்தாவனம் அமைந்த இடம் என்பதால் இப்படிப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். தமிழில் பழமையான நூலான தொல்காப்பியத்திலேயே எல்லா இந்துக் கடவுளரையும் காண்கிறோம் .புறநானூற்றில் நக்கீரரே எல்லோருடைய வாகனங்கள் கொடிகளையும் குறிப்பிட்டுப் பாடுகிறார். ஆக இந்து மதம் கொடிகட்டிப் பறந்ததும்— இந்து மதம் மட்டுமே பின்பற்றப்பட்டதும் —சங்க இலக்கியத்தில் உறுதியாகிறது.

அகநானூறு பாடல் 59.  பாடியவர் – மதுரை மருதனிளநாகனார்

தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப்

பெருந்தகை இழந்த கண்ணினை, பெரிதும்

ருந்தினை, வாழியர் நீயே! வடாஅது

வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை

அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர்

மரம் செல மிதித்த மாஅல் போலப்

புன் தலை மடப் பிடி உணீஇயர் அம் குழை

நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள்

படி ஞிமிறு கடியும் களிறே, தோழி!

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து

அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை

……….

குளிர்ந்த குளத்தில் நிறைந்த வண்டுகள் மொய்க்கும் இரட்டை மலர்கள் போன்ற பெரிய அழகினை இழந்த கண்களை யுடையவளாய்ப் பெரிதும் வருந்துகின்றாய் வாழ்வாயாக நீயே; வடக்குத் திசையில் உள்ள வளமிக்க நீருள்ள யமுனை ஆற்றின் நீண்ட மணலையுடைய அகன்ற துறையில் ஆயர் பெண்கள் குளிர்ந்த தழைகளை உடுத்திக்கொள்ள மரம் வளையும்பட மிதித்துத் தந்த கண்ணன் போல புல்லிய தலையையுடைய இளைய பெண்யானை உண்பதற்காக, அழகிய குழைகளை

உயர்ந்து நிற்கும் யா மரத்தினை வளைத்துத் தந்து, (தன்) நனைந்த கன்னத்தில் படியும் வண்டுகளை ஓட்டும் ஆண்யானை – தோழி சூரபதுமனை அவன் சுற்றத்தோடு தொலைத்த ஒளிவிடும் இலையுள்ள நீண்ட வேலின் சினம் மிகு முருகனது குளிர்ந்த திருப்பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்தன மரங்கள் மிக்க உயர்ந்த மலையில் உள்ள……………………………

****

திருப்புகழில் ரசவாத வித்தை : இரும்பைத் தங்கம் ஆக்கலாம்

வரதா … வேண்டுபவருக்கு வேண்டும் வரங்களை அளிப்பவனும்,

மணிநீயென … கேட்பவருக்கு கேட்டதைக் கொடுக்கும் சிந்தாமணியும் நீதான் என்று

ஓரில் … ஆராய்ந்து பார்த்தால்

வருகா தெது … கைகூடாதது எது உண்டு?

எதுதான் அதில் வாரா(து) … எந்தக் காரியம்தான் அவ்வாறு

துதித்தால் நிறைவேறாது?

இரதாதிகளால் … பாதரசம் போன்றவைகளை வைத்துச் செய்யும்

ரசவாத வித்தை மூலம்

நவலோகம் இடவே கரியாம் … ஒன்பது லோகங்களை* இட்ட

கூட்டுறவால் இறுதியில் கரியாகும்.

இதில் ஏது … இதனால் வேறு பயன் ஏது?

சரதா … சத்திய சொரூபனே,

மறையோது அயன்மாலும் … வேதம் ஓதும் பிரமனும் திருமாலும்

சகலாகமநூல் அறியாத … எல்லா வேத ஆகம நூல்களும் அறியாத

பரதே வதையாள் தருசேயே … பரதேவதையாகிய பார்வதி தந்தருளிய குழந்தாய்,

பழனா புரிவாழ் பெருமாளே. … பழனிப்பதியில் வாழ்கின்ற

பெருமாளே.

***

பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தகரம்,

துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது. பாதரசம் என்னும் மூலகத்தைப் பயன்படுத்திஉலோகங்களை மாற்றும் மர்மத்தை  இந்துக்கள் அறிந்து இருந்தனர்  ஒரு உலோகத்தினை இன்னும் ஒரு உலோகமாக மாற்றலாம்  என்பது யோகிகள் கண்ட உண்மை. பலரும் இதைப்  பாடியுள்ளனர்.

***

தாயுமானவர் பாடல்

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாங்

      கரடிவெம் புலிவாயையுங்

   கட்டலாம் ஒருசிங்கம் முதுகின்மேற் கொள்ளலாங்

      கட்செவி எடுத்தாட்டலாம்

வெந்தழலின் இரதம்வைத் தைந்துலோ கத்தையும்

வேதித்து விற்றுண்ணலாம்

   வேறொருவர் காணாமல் உலகத் துலாவலாம்

      விண்ணவரை ஏவல்கொளலாஞ்

சந்ததமும் இளமையோ டிருக்கலாம் மற்றொரு

      சரீரத்தி னும்புகுதலாஞ்

   சலமேல் நடக்கலாங் கனல்மே லிருக்கலாந்

      தன்னிகரில் சித்திபெறலாம்

சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற

திறமரிது சத்தாகிஎன்

   சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே

      தேசோ மயானந்தமே.

யோகிகள் செய்த அத்தனை அற்புதங்களையும் பட்டியலியிட்ட தாயுமானவர், உலோகங்களை ரசாயன முறையில் விலை உயர்ந்த உலோகங்களாக மாற்றி அவைகளை விற்று வாழ்க்கை நடத்த முடியும்; ஆனால் மனதை அடக்கி இறைவனை மட்டுமே நாடுவதுதான் கடினமானது என்கிறார்.

***

மாதங்கி யார் ?

பனக மணி மா மதங்கி குமரி வெகு நீலி சண்டி … பாம்பை

ஆபரணமாகப் பூண்ட சிறந்த மாதங்கியும்*, இளமையானவளும்,

மிகுந்த நீல நிறத்தவளும், வேகமுடைய துர்க்கையும்,

பரம கலியாணி தந்த பெருவாழ்வே … நித்திய மங்களமுடையவளும் ஆன உமாதேவி பெற்றருளிய பெருஞ் செல்வமே,

பகை அசுரர் மாள வென்று அமரர் சிறை மீள வென்று …

பகைத்த அசுரர்கள் மாயுமாறு வெற்றி பெற்று, தேவர்கள் சிறையினின்று மீளுமாறு அருள் புரிந்து,

பழநிமலை மீதில் நின்ற பெருமாளே. … பழநிமலை மீது

நின்றருளிய பெருமாளே.

* மதங்க முநிவரது பெருந் தவத்தை மெச்சி அம்பிகை அவரது மகளாகப் பிறந்து ‘மாதங்கி’ எனப் பெயர் பெற்றாள்.

பரம கல்யாணி அம்பாள் யார் ?

அருள்மிகு பரம கல்யாணி அம்பாள் நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு அருகில் உள்ள சிவசைலம் சிவசைலநாதர் திருக்கோவிலின் இறைவியார் ஆவார். கடனையாற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலில், பரம கல்யாணி அம்பாள் அன்னை பார்வதியின் அம்சமாக வழிபடப்படுகிறார். சிவசைலநாத சுவாமிக்கும் பரம கல்யாணி அம்பாளுக்கும் நடைபெறும் திருக்கல்யாணம் மிகவும் சிறப்பானது.

கோவில் பெயர்: சிவசைல நாதர் திருக்கோவில் (சிவசயிலம்).

இறைவி: அருள்மிகு ஶ்ரீ பரம கல்யாணி அம்பாள்.

இறைவர்: சிவசைலநாத சுவாமி.

சிறப்பு: தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற தாமிரபரணி ஆற்றங்கரை கோவில்.

பரம கல்யாணி அம்மன் என்ற பெயர், சிவசைலத்தில் சிவசைலநாதரின் துணையாக வீற்றிருக்கும், மிகவும் போற்றப்படும் அம்மனைக் குறிக்கிறது.

***

காசியை விடப் புகழ் மிக்கது பழனி

மதுர இன் சொலி மாது உமை நாரணி கவுரி அம்பிகை

யாமளை பார்வதி மவுன சுந்தரி காரணி யோகினி

சிறுவோனே … இனிமை வாய்ந்த சொல்லை உடைய உமாதேவி,

நாராயணி, கெளரி, அம்பிகை, சியாமள நிறத்தினள், பார்வதி,

மோன நிலையில் உள்ள அழகி, ஜகத்காரணி, யோகினி

ஆகிய பல நாமஙளைக் கொண்ட தேவியின் சிறுவனே,

பதம் இசைந்து எழு லோகமுமே வலம் நொடியில்

வந்திடு மா மயில் மீது ஒரு பவனி வந்த க்ருபாகர

சேவக விறல் வீரா … ஏற்ற சமயத்தில் ஏழு உலகங்களையும்

ஒரு நொடிப்பொழுதில் வலம் வந்த சிறந்த மயிலின் மேல்

ஒப்பற்ற திருவுலா வந்த கிருபாகரனே, வலிமையாளனே,

வெற்றி வீரனே,

பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு

அருள் … சூரியனின் ஒளி கோடிக்கணக்கானதாம் என்னும்

பிரகாசமான திருவுருவத்தைக் கொண்டு அருள்பவனே,

காசியின் மீறிய பழனி அம் கிரி மீதினில் மேவிய

பெருமாளே. … (வாரணாசி என்னும்) காசித் தலத்திலும் சிறந்த

பழனி என்னும் அழகிய மலைமீது வீற்றிருக்கும் பெருமாளே.

சூரியன் என்பது நடுத்தர நட்சத்திரங்களில் ஒன்று . அதை விடப் பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்த திருவாதிரை போன்ற நட்சத்திரங்களும் உண்டு என்பதை இந்துக்கள் அறிவார்கள்;  பகவத் கீதையில் விஸ்வ ருப தரிசனத்தை திவி சூர்ய சஹஸ்ரஸ்ய என்று சஞ்சயன் வருணித்தான். 

விநாயகர் பற்றிய துதியில் 

வக்ரதுண்ட மஹாகாய

சூர்யகோடி சமப்ரப

நிர்விக்னம் குருமேதேவ

சர்வ கார்யஷு சர்வதா

கோடி சூர்யன் ஒளிக்குச் சமமானவன் என்று வருகிறது .

वक्रतुण्ड महाकाय सूर्यकोटि समप्रभ ।

निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा ॥

vakratuṇḍa mahākāya sūryakoṭi samaprabha

nirvighnaṃ kuru me deva sarvakāryeṣu sarvadā

 அருணகிரிநாதரும் இதைப்படியுள்ளார்

பருதியின் ப்ரபை கோடியதாம் எனும் வடிவு கொண்டு

அருள்……………………

To be continued…………………………

Tags- தொழுனை நதி , அகநானூறு- 59 பாடல், சூர்ய கோடி , ரசவாதம், தாயுமானவர், அருணகிரிநாதர், அரிய செய்திகள் – Part 11, கோபிகள்- கிருஷ்ணன்

Purananuru Wonders 8- Ancient Tamil Encyclopaedia Part 48 (Post No.15,395)

Written by London Swaminathan

Post No. 15,395

Date uploaded in Sydney, Australia –  5 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Ancient Tamil Encyclopaedia -Part 48; One Thousand Interesting Facts -Part 48

Item 326

Purananuru verse 18

We see here some good advice to the kings of ancient Tamil Nadu. Tamil kings wasted most of their time in waging wars against their own community. Tamils are longest war mongering tribes in the world. For over 1500 years they killed their own brothers. Till Sundara pandya invited foreign invading Muslims they fought among themselves and killed each other. Sangam literature is full of Chera kiiling Pandya and Pandya killing Chozas and Choza killing Chera etc.

***

Item 327

Build Dams

So the advice by the poet Kudapulaviyanār to Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan is please build dams to save the people. Then he explains why saving water is necessary . There comes the famous line

To bodies that cannot survive without water, those who give food give them life

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே,

Which is repeated in Manimekalai, a Tamil epic.

****

328

Sanskrit words used by the poet

Koti= Ten Millions

Ayul= Ayus; English word Age is derived from Sanskrit word Ayus (Y=G/J)

இசை= Yasas

Loka= உலகம்

ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய  5

பெருமைத்து ஆக நின் ஆயுள்தானே,
***

329

Decimal system is the greatest discovery of the Hindus; it is found in countless number of places in the Rig Veda, the oldest book. Poet also used 1, 10, …… 10000000 (Koti)

May you live for Ten million years, the
last number starting with one and ten!

***

330

Hindu Thoughts

Benefits in the next world

If you desire wealth in the next world

When a king dies in war he goes directly to heaven according to Pura Nanuru and Bhagavad Gita. Benefits in the other world (Marumai in Tamil) has been dealt with all the Tamil poets

செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,

***

331


Echo of Bhagavad Gita

In Bhagavad Gita Krishna explained the importance of food and rain. Tamil poet echoed it in these lines but the word Yaga (fire sacrifice is not included)

To bodies that cannot survive without water, those who give food
give them life.  Food is foremost to this body built of food.
Food comes from water mingled with the earth. Those who unite
the earth and water, create the means for bodies to live in this
world.  Barren fields which are sown, which look to the skies for
water, are of no use to an able king, even if they are huge.

(Translation is by Vaidehi Herbert; USA.thanks)

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே,
உண்டி முதற்றே உணவின் பிண்டம்,  20
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே,

Bhagavad Gita 3.14-16:

Verse 14 (The Cycle): All living beings are sustained by food grains, which are produced from rains. Rains are produced by the performance of prescribed yajña (sacrifices).

Verse 15 (Origin of Duty): The prescribed duties (karma) originate from the Vedas, which directly manifest from the Supreme Personality of Godhead. Therefore, the all-pervading Transcendence is eternally situated in acts of sacrifice.

Verse 16 (The Consequence): Anyone who does not follow this established cycle of sacrifice lives in vain, living only for sensory satisfaction and leading a life full of sin..

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव: |

यज्ञाद्भवति पर्जन्यो यज्ञ: कर्मसमुद्भव: || BG 3-14||

அன்னாத் பவந்தி பூதானி பர்ஜன்யாத் அன்ன-ஸம்பவ:

யக்ஞாத் பவதி பர்ஜன்யோ யக்ஞ: கர்ம-ஸமுத்பவ  BG (3-14)

annād bhavanti bhūtāni parjanyād anna-sambhavaḥ

yajñād bhavati parjanyo yajñaḥ karma-samudbhavaḥ

Bhagavad Gita  3-14: annāt—from food; bhavanti—subsist; bhūtāni—living beings; parjanyāt—from rains; anna—of food grains; sambhavaḥ—production; yajñāt—from the performance of sacrifice; bhavati—becomes possible; parjanyaḥ—rain; yajñaḥ—performance of sacrifice; karma—prescribed duties; samudbhavaḥ—born of

***

332

London Swaminathan in Pacific Ocean, Australia

Science behind Three Waters= Ocean

One of the great Tamil Discoveries is the description of ocean as THREE WATERS. Scholars have given different interpretations. South India is surrounded by three seas and that is why the ocean is called Three Waters (Munneer in Tamil). Another interpretation is ocean is the collection of rainwater, river water and spring water.

My interpretation is this spring water is the Sub Maine springs of hot water. Because spring water on lands does not come to ocean directly; that joins in the rivers and reach seas. So when Tamils said spring water (UUTRU NEER in Tamil) , it is hot wate vents under the seas is my view. But most famous Madurai Brahmin commentator Nachchinarkiniyar (of Bharadwaja Gotra)  gave a beautiful interpretation 700 years before all other commentators. He said the ocean has three tasks. It creates, protects, and destroys.; a beautiful description based on science. All of us know that life evolved first in the water in the sea; then water in the sea became rain and protected living beings on land. The same water destroyed millions of living beings by Tsunamis. Hindus believe the earth or the world will come to an end by fire and water at the end of Four Yugas.

முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன் ஞாலம்

****

புறநானூறு 18, பாடியவர்:  குடபுலவியனார், பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற டுஞ்செழியன்


முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன் ஞாலம்
தாளின் தந்து தம் புகழ் நிறீஇ,
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்!
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய  5
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே,
நீர்த் தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக் கதூஉம் இன வாளை,
நுண் ஆரல், பரு வரால்,
குரூஉக் கெடிற்ற குண்டு அகழி,  10
வான் உட்கும் வடி நீண் மதில்,
மல்லல் மூதூர் வய வேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்,
ஞாலங்காவலர் தோள் வலி முருக்கி
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த  15
நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்றதன்
தகுதி கேள், இனி மிகுதியாள!
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே,
உண்டி முதற்றே உணவின் பிண்டம்,
  20
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே,

வித்தி வான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்பிற்று ஆயினும் நண்ணி ஆளும்  25
இறைவன் தாட்கு உதவாதே, அதனால்
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன் நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே.  30

***

Item 333

Purananuru verse 19

In this poem the poet used many similes

King who beat seven leaders is compared to Yama, God of Death

Chera, Choza kings and five chieftains (Velirs) fought with Pandya Neduncheziyan in Talai Alankaanam . Pandya defeated all the seven leaders.

Another comparison is confused sparrows.

In another simile the Pandya king is compared to a hunter who catches even a tiger by his clever device.

Like flocks of confused birds that fly away and rest on
mountains, shot arrows have lodged on elephants

dropped on the ground by warriors, appearing like plows.

, that is like a trap that a hunter sets to catch a large tiger?

***

Item 333 Tamil atrocities

Puranānūru 19, Poet Kudapulaviyanār sang to Pandiyan Thalaiyālankānathu Cheruvendra Nedunchezhiyan,

Tamils fought with their own brothers and killed each other. Here the poet sings about the crying mothers who lost their husbands and sons in the same battle. A very sad scene indeed.

Women from ancient clans shed tears, on seeing their victorious
warrior sons with parched heads lie in the field with their fathers.
Kootruvan (Yama in Sanskrit), embarrassed, pities the seven enemies you ruined.

334

Strange Linguistics

போன்ம் – போலும் என்பது இடை உகரம் கெட்டு லகரம் னகரமாய்த் திரிந்து நின்றது), விரும்பி முயங்கினேன்

Two dotted consonants rarely occur together in Tamil. Here we see N M together. L becomes N!
***

புறநானூறு 19, பாடியவர்: குடபுலவியனார்பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கைத்,
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து,
மன் உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும்,
நின்னொடு தூக்கிய வென்வேல் செழிய!
இரும்புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய 5
பெருங்கல் அடாரும் போன்ம்’ என விரும்பி
முயங்கினேன் அல்லனோ யானே, மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல,
அம்பு சென்று இறுத்த அறும் புண் யானைத்
தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து, 10
நாஞ்சில் ஒப்ப, நில மிசைப் புரள,
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோர் எம் புன்தலைப் புதல்வர்,
இன்ன விறலும் உள கொல் நமக்கு என
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணிக்  15
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல் வலம் கடந்தோய், நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?

To be continued…………

Tags- Purananuru Wonders 8- Ancient Tamil Encyclopaedia Part 48, One Thousand Interesting Facts -Part 48, Strange Linguistics

எல்லாவற்றிற்கும் காரணம் தங்கம் தான்! (Post No.15,394)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,394

Date uploaded in London – 4 February 2026 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

எல்லாவற்றிற்கும் காரணம் தங்கம் தான்! 

ச. நாகராஜன் 

அருமையான கருத்துக்களை விளக்கும் சில சுபாஷிதங்கள் இதோ:

தங்கமே எல்லாவற்றிற்கும் காரணம்!

யஸ்யாஸ்தி வித்தம் ச நர: குலீன: ச பண்டித: ச ஸ்ருத்தவான் குணக்ஞ: |

ஸ ஏவ வக்தா ஸ ச தர்ஷனீய: சர்வே குணா: காஞ்சனமாஸ்ரயந்தி ||

எவனிடம் செல்வம் இருக்கிறதோ,

எவன் ஒருவன் நல்ல குலத்தில் பிறந்திருக்கிறானோ,

எவன் ஒருவன் நன்கு கல்வி கற்றிருக்கிறானோ,

எவன் ஒருவன் அறிவார்ந்த பண்டிதனாக இருக்கிறானோ,

எவன் ஒருவன் குணங்களை அறிந்து கொள்கிறானோ,

எவன் ஒருவன் நன்கு மதிப்பீடு செய்ய வல்லவனாக இருக்கிறானோ,

எவன் ஒருவன் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறானோ,

இந்த அனைத்து விஷயங்களுமே தங்கத்தைப் பொறுத்துத் தான்

இருக்கிறது.

(அதாவது அவனிடம் செல்வம் இருந்தால் மக்கள் அவனை எல்லா விதத்திலும் உயர்த்தி விடுவர் என்பது பொருள்.)

சொந்த கர்மத்தின் விளைவே சுகமும் துக்கமும்!

 சுகஸ்ய துக்கஸ்ய ந கோபி தாதா பரோ ததாதீதி குபுத்திரேஷா |

அஹம் கரோமீதி வ்ருதாபிமான: ஸ்வகராசூத்ரக்ரதிதோ ஹி லோக: ||

கருட புராணத்தில் வரும் ஸ்லோகம் இது.

எவனுமே சுகத்தையோ அல்லது துக்கத்தையோ கொடுக்கக்கூடியவர் அல்ல; யாரோ ஒருவர் அவற்றைக் கொடுக்கிறார் என்று நினைப்பது தவறான புரிதலாகும். “நான் செய்கிறேன்” என்பது அகங்காரத்தினால் சொல்லும் அர்த்தமற்ற ஒன்றாகும். ஏனெனில் அனைவருமே அவரவர்களின்  சொந்தச் செயல்களினால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

கவிஞனே முதல் சிருஷ்டிகர்த்தா!

 நாமரூபாத்மகம் விஸ்வம் யதிதம் த்ருஷ்யதே த்விதா |

தத்ராஸ்த்யஸ்ய கவிர்வேதா த்வீதியஸ்ய சதுர்முக: ||

 இந்த பூமியில் நாமமும் ரூபமும் இரண்டாக இருப்பதாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றில் முதலாவதைப் படைப்பதில் கவிஞன் திகழ்கிறான். அடுத்தது நான்முகனால் (பிரம்மா) படைக்கப்படுகிறது.

கவிஞனின் புகழ் பாடும் ஸ்லோகம் இது!

செயலில் செய்து காட்டு! 

மனஸா சிந்திதம் கார்ய வாசா நைவ ப்ரகாஷயேத் |

மந்த்ரக்ஷணகூடாத்மா கார்யஸித்திம் ப்ரகாஷயேத் ||

மனதில் சிந்திக்கப்படும் ஒன்றை வார்த்தைகளால் வெளிப்படுத்தக் கூடாது. மந்திரங்களை ரகசியமாக மனதில் இருத்தும் ஒருவன் சாதனைகளால் அடையும் போது அதை வெளிப்படுத்துவான். 

மூர்க்கனின் அடையாளங்கள் மூன்று விதம்! 

முகம் பத்மதலாகாரம் வாணீ சந்தனஷீலதா |

ஹ்ருதயம் கர்தரீதுல்யம் த்ரி விதம் தூர்த்த லக்ஷணம் ||

முகமோ தாமரை இதழ்கள் போல இருக்கும்; பேச்சோ சந்தனம் தரும் குளிர்ச்சியைத் தரும்; இதயமோ கத்தரிக்கோல் போல இருக்கும். ஆக ஒரு மூர்க்கனின் குணாதிசய அடையாளங்கள் இப்படி மூன்று விதமாக இருக்கும்.

**

 திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்- Part 10 (Post.15,393)

Written by London Swaminathan

Post No. 15,393

Date uploaded in Sydney, Australia –  4 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

சுந்தர மூர்த்தி நாயனார் நெல் மலை பெற்ற அற்புதம்

கற்ற தமிழ்ப் புலவனுக்குமே மகிழ்வுற்று ஒரு பொற் கொடி

களிக்கவே பொரு கற்பனை நெல் பல அளித்த காரணன்

அருள்பாலா … நன்கு கற்ற தமிழ்ப் புலவனாகிய சுந்தரர் மீது

மகிழ்ச்சி பூண்டு ஒரு பொன் கொடி போன்ற அவர் மனைவி

(பரவையார்) களிப்புற, தாம் இட்ட கட்டளைப்படி வந்து குவிந்த

நெல் மலையை* அளித்த மூலப் பொருளான சிவ பெருமான்

அருளிய குழந்தையே, அந்த நெல்லை அவர் விரும்பிய வாறு சிவா பூத கணங்கள் அவர் விரும்பிய இடத்துக்கு கொண்டு சேர்த்தது.

***

ஞானப்பால் அருந்திய இருவர்

நுகர்வித்தகமாகும் என்று … இந்த ஞானப்பாலை அருந்து, இதுதான்

பேறறிவு தரும் என்று

உமை மொழியிற் பொழி பாலை யுண்டிடு … உமாதேவி சொல்லி

அருளி சுரந்து ஈந்த ஞானப் பாலினை அருந்திய

நுவல்மெய்ப்புள பாலன் … வேதங்களெல்லாம் போற்றுகின்ற

புகழையுடைய திருக்குமாரன்*

என்றிடும் இளையோனே … இவன்தான் என ஏத்தும் இளைய

குமாரனே,

உமாதேவியின் ஞானப்பாலாகிய சிவஞானத் திரு அமுதை

உண்டதால் முருகனை ஞான பண்டிதன் என்பர்.; முருகனே திரு ஞான சம்பந்தராக அவதரித்ததாக அருணகிரிநாதர் பல பாடல்களில் பாடுவதால் ஞானப்பால் அருந்திய சம்பந்தரைக் குறிப்பிடுவதாகக் கருதலாம்.

***

சிவகாமி மகன்

மங்கை மோகசிங்கார ரகு ராமரிட தங்கை … மங்கை,

வசீகரமும் அழகும் கொண்ட ரகுராமனின் (திருமாலின்) தங்கை,

சூலியங் காளியெமை யீணபுகழ் மங்களாயி …

சூலமேந்தியவள், அழகிய காளி, யாம் அனைவரையும் ஈன்ற

புகழ் நிறைந்த மங்களகரமான தாய்,

ந் தானசிவ காமியுமை யருள்பாலா … சந்தான விருட்சம்

போல் வேண்டிய வரங்களைத் தரும் சிவகாமி, அந்த உமாதேவி

அருளிய பாலனே,

****

கடல் குடித்த அகத்திய முனிவர்

புடவிக்கு அணி துகில் என வளர் … பூமிக்கு உடுக்கப்படும்

ஆடை எனப் பரந்துள்ள

அந்தக் கடல் எட்டையும் அற குடி முநி … அந்த எட்டுத்

திக்குகளிலும் உள்ள கடல்களை ஒட்டக் குடித்த அகத்திய முனிவர்,

***

செம் தமிழில் உனையே வணங்கு குரு நாதர் தென்றல்

வரை முநி நாதர் அன்று கும்பிட நல் அருளே பொழிந்த …

செந்தமிழில் (பாடல்கள் பாடி) உன்னையே வணங்கும் குரு நாதராகிய,

பொதிய மலை முனிவர் அகத்தியர் அன்று கும்பிட, நல்ல அருளை நிரம்பப் பொழிந்த,

தென் பழநி மலை மேல் உகந்த பெருமாளே. … அழகிய பழனி

மலையின் மேல் விரும்பி வீற்றிருக்கின்ற பெருமாளே.

***

மருத மரங்களின் கதை

பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற

பரம பத நண்பர் அன்பின் மருகோனே … அன்புடன் மகிழ்ந்து

வணங்கும் மருத மரங்களின் இடையே தவழ்ந்து நின்றவரும்*, பரம

பதத்தில் இருக்கும் நண்பருமான திருமாலின் அன்பு மிகுந்த மருகனே,

பதுமம் மிசை வண்டு அலம்பு சுனை பல விளங்கும் துங்க

பழநி மலை வந்து அமர்ந்த பெருமாளே. … தாமரையின் மீது

வண்டுகள் ஒலிக்கின்ற பல சுனைகள் விளங்குகின்ற பரிசுத்தமான பழனி மலையில் வந்து வீற்றிருக்கும் பெருமாளே.

குபேரன் புத்திரர்களான நளகூபரன், மணிக்ரீவன் என்ற இருவரும் மது அருந்தி, ஜலக்ரீடை செய்து, நாரதர் முன் மரம் போல் நிற்க, அவர் நீங்கள் மரமாகவே நிற்பீர் என்று சபித்தார். ஆகவே இருவரும் மருத மரங்கள் ஆயினர். யசோதையால் உரலில் கட்டப்பட்ட கண்ணன் அவ்வுரலை இழுத்துக் கொண்டு தவழ்ந்து மரங்களுக்கு இடையே செல்ல, மரங்கள் முறிந்து விழுந்து, சாபம் நீங்கினர்.

***

மனக் கவலை ஒழிய வேண்டும்

மனக்கவலை யேது மின்றி … மனத்தில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல்,

உனக்கடிமை யேபு ரிந்து … உனக்குத் தொண்டு செய்யும் பணியையே பூண்டு,

வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே … வகையாக அமைந்துள்ள மநு நீதி நூல் முறைகளிலிருந்து தவறாமல்,

வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கி …

நல்ல முறையில் மன விருப்பங்கள் எண்ணிய விதத்திலேயே அமைந்து,

மயக்கமற வேதமுங்கொள் பொருள்நாடி … சந்தேகம்

அற்றுப்போகும்படி வேதத்தின் மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து,

வினைக்குரிய பாதகங்கள் துகைத்(து) … வினையைக் கொடுக்கும் பாவச்செயல்களை அறவே அகற்றி,

உவகை யால் நினைந்து … ஆனந்தத்துடன் உன்னைத் தியானித்து,

மிகுத்தபொருள் ஆகமங்கள் முறையாலே … மேலான பொருளைக் கொண்ட ஆகமங்களில் விதிக்கப்பட்ட முறையின்படி,

வெகுட்சிதனையே துரந்து … கோபம் என்பதையே முற்றிலும் விலக்கி, களிப்பினுடனே நடந்து … மகிழ்ச்சியுடன் கடமைகளைச் செய்து நடந்து,

மிகுக்கும் உனையே வணங்க … யாவர்க்கும் மேம்பட்டு விளங்கும் உன்னையே வணங்குதற்கு  வரவேணும் … (வேண்டிய அருளைத் தர) நீ வரவேண்டும்.

***

உமாதேவி புகழ்

செக முழுது ஒக்கப் பயந்த சங்கரி அடியவர் சித்தத்து

உறைந்த சம்ப்ரம சிவன் ஒரு பக்கத்து உறைந்த மங்கை

சு மங்கை … உலகம் முழுதும் பெற்ற சங்கரி, அடியார்களுடைய

உள்ளத்தில் உறைகின்ற சிறப்பு வாய்ந்த சிவபெருமானுடைய

ஒரு பாகத்தில் உறைகின்ற மங்கை, நல்ல மங்கை,

நீடு திகழ்வன பச்சைப் பசங்கி அம்பண(ம்) கரதலி கச்சு

உற்று இலங்கு கொங்கையள் திரு அருள் நல் பொன்

பரந்திடும் பரை அண்டம் மீதே பகல் இரவு அற்றிட்டு

உயர்ந்த அம்பிகை … பெரிதும் விளங்கும் பச்சைப் பசேல் என்ற

நிறம் உடையவள், யாழ் ஏந்திய கரத்தினள், கச்சு அணிந்த

மார்பகங்களை உடையவள், திருவருள் என்னும் நல்ல செல்வத்தைப்

பரப்பி உலகைப் பாலிக்கும் பராசக்தி, அண்டங்களுக்கு அப்பால்

பகலும் இரவும் அற்றுப் போன உயர்ந்த இடத்தில் உள்ள அம்பிகை,

திரி புரை முற்றிட்டு இரண்டொடு ஒன்று அ(ல்)லர்

பரிவுற ஒக்கச் செய்யும் பரம்ப்ரமி அன்பு கூரும் பதிவ்ரதை

மிக்கச் சிரம் தெரிந்து அருள் பகிரதி வெற்பில் பிறந்த

பெண் தரு … திரிபுரங்களை அழித்தவள், மும்மூர்த்திகளுக்கும்

உயர்ந்தவளாய் மூவரும் அல்லரான சிவபெருமான் அன்பு

கொள்ளுபடி தவம் செய்த பர தேவதை, அன்பு மிக்க பதிவிரதை,

சிறந்த (சிவபெருமானுடைய) தலையில் விளக்கமுற்று அருளும்

கங்கா நதி உற்பத்தியாகும் (இமய) மலையில் உதித்த

பெண்ணாகிய பார்வதி தந்து அருளி குழந்தையே,

பழநியில் வெற்பில் திகழ்ந்து நின்று அருள் தம்பிரானே. …

பழனி மலை மீது விளங்கி நின்றருளும் தனிப் பெருந் தலைவனே.

இப்பாடலில் உமா தேவியின் புகழ் கூறப்பட்டுள்ளது. மும்மூர்த்திகளுக்கும்; மேலானவள் என்பது குறிக்கத் தக்கது. மும்மூர்த்திகள் = பிரமன், திருமால், ருத்திரன். சிவபெருமான் இவர்களுக்கு அப்பாற்பட்டு பார்வதியின் பதியாகத் திகழ்கிறார்.

***

யோக சாஸ்திர விளக்கம்

மூலம் கிளர் ஓர் உருவாய் நடு … மூலாதாரத்தினின்றும் மேற்பட்டு எழுகின்ற ஓர் உருவமாகஉடலின் நடுவில்

நாலு அங்குலம் மேல் நடு வேர் இடை மூள் பிங்கலை … நான்கு

அங்குல அளவின் மேல், சுழுமுனை, இடை கலை, தோன்றும் பிங்கலை* என்னும்

நாடி ஒடு ஆடிய முதல் வேர்கள் மூணும் … நாடிகளுடன் கலந்து,

முதல் வேர்களாகிய இந்த மூன்று நாடிகளும்

பிரகாசம் அதாய் ஒரு சூலம் பெற ஓடிய வாயுவை … (ஒவ்வொரு

நாடியின் புறமும்) பிரகாசமான ஒளியைப் பரப்பி, ஒப்பற்ற சூலாயுதம் போல ஓடுகின்ற பிராண வாயுவை

மூலம் திகழ் தூண் வழியே அளவிட ஓடி … முதுகுத் தண்டிலுள்ள

சுழு முனை வழியில் கணக்காக ஓடச்செய்து, (பின்னர் அது)

பாலம் கிளர் ஆறு சிகாரம் ஒடு ஆரும் … (நெருப்பாறுமயிர்ப்பாலம்

என்னும்) நெற்றியில் விளங்கும் ஆறாவது ஆதாரமாகிய ஆக்ஞை

நிலையில்** (சிவனைக் குறிக்கும்) சிகார அக்ஷரத்தோடு பொருந்தி நிற்கும்.

சுடர் ஆடு பராபர பாதம் பெற ஞான சதாசிவம் அதின்

மேவி … நிறைந்து (எல்லா நிலைகளிலும்) ஒளி வீசுகின்ற பரம் பொருளின் திருவடிகளைப் பெறுதற்கு ஞானமயமான சதாசிவ நிலையை அடைந்து,

பாடும் தொனி நாதமும் நூபுரம் ஆடும் கழல் ஓசையிலே …

(அவ்விடத்தில் கேட்கப்படும்) பாடல் ஒலியின் நாதத்திலும் சிலம்புகளின் கழல் ஒலியிலும்

பரிவாகும்படியே அடியனையும் அருள்வாயே … அன்பு

பொருந்தும்படியாக அடியேனுக்கு அருள் புரிவாயாக.

இங்கு சிவயோக முறைகள் விளக்கப்பட்டுள்ளன. அதன் சுருக்கம் வருமாறு:

நாம் உள்ளுக்கு இழுக்கும் காற்றுக்குப் ‘பூரகம்’ என்றும், வெளிவிடும் காற்றுக்கு

‘ரேசகம்’ என்றும் பெயர். உள்ளே நிறுத்திவைக்கப்படும் காற்றுக்கு ‘கும்பகம்’ என்று

பெயர். உட் கொள்ளும் பிராணவாயு உடலில் குறிப்பிட்ட ‘ஆதாரங்கள்’ (நிலைகள்,

சக்கரங்கள்) மூலமாகப் படிப்படியாகப் பரவி, மேல் நோக்கிச் சென்று, தலையில் ‘பிரம

கபால’த்தில் உள்ள ‘ஸஹஸ்ராரம்’ (பிந்து சக்கரம்) என்ற சக்கரத்துக்குச் செல்லும்.

இந்த ஐக்கியம் ஏற்படும்போது, அமுத சக்தி பிறந்து, ஆறு ஆதாரங்களுக்கும்

ஊட்டப்பட்டு, மீண்டும் அதே வழியில் ‘மூலாதார’த்தை வந்து அடையும். இந்த

ஆதாரங்களை ஒழுங்கு படுத்தும் வகையில் மூன்று ‘மண்டல’ங்களும் (அக்கினி,

ஆதித்த, சந்திர மண்டலங்கள்), பத்து ‘நாடி’களும் (இடைகலை, பிங்கலை,சுழுமுனை முதலியன) உள்ளன.

‘இடைகலை’ பத்து நாடிகளுள் ஒன்று. இடது நாசியால் விடும் சுவாசம்.

‘பிங்கலை’ பத்து நாடிகளுள் ஒன்று. வலது நாசி வழியால் விடும் சுவாசம். ‘சுழு முனை’ இடைகலைக்கும் பிங்கலைக்கும் இடையில் உள்ளது.

‘சுழு முனை’ ஆதாரம் ஆறிலும் ஊடுருவி நிற்பது. ‘இடைகலை’யும், ‘பிங்கலை’யும்ஒன்றுக்கொன்று பின்னி நிற்பன.

சுவாச நடப்பை ‘ப்ராணாயாமம்’ என்ற யோக வன்மையால் கட்டுப்படுத்தினால் மன அமைதி ஏற்படும்.

** ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆதாரம்மூலாதாரம்சுவாதிஷ்டானம்மணிபூரகம்அநாகதம்,

விசுத்திஆக்ஞா,  பிந்து சக்கரம்துவாதசாந்தம்,ஸஹஸ்ராரம்,

பிரமரந்திரம்)

***

இக பர செளபாக்கியம் அருள்வாயே

வசனமிக ஏற்றி … உருவேற ஏற மிகவும் ஜபம்செய்து

மறவாதே … (அந்த ஜபத்தால்) உன்னை மறவாமல் இருந்து,

மனது துயர் ஆற்றில் … என் மனம் துயரம் தரும் வழிகளில்

உழலாதே … அலைந்து திரியாதிருக்கவும்

இசைபயில் … மீண்டும் மீண்டும் சொல்லிப் பயில்கின்ற

ஷடாட்சரம் அதாலே … ஆறெழுத்து மந்திரம் (சரவணபவ)

தரும் பயனாலே

இகபரசெள பாக்யம் … இம்மைக்கும் மறுமைக்கும் நல்வாழ்வை

அருள்வாயே … அருள் புரிவாயாகTo be continued………………………..

tags-  திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள்- Part 10 , மருத மரங்களின் கதை, யோக சாஸ்திரம் 

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-31; இந்துமத கலைச்சொல் அகராதி-31 (Post.15,391)

Written by London Swaminathan

Post No. 15,391

Date uploaded in Sydney, Australia –  4 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆங்கில எழுத்து ஜி- யில் துவங்கும் சொற்கள் தொடர்ச்சி

Words beginning with the English letter ‘G’ continued……………

காந்தாரி

திருதராஷ்டிரனின் மனைவி ; இப்போது  ஆப்கானிஸ்தானத்தில் காண்டஹார் என்னும் நகரம் உள்ளது. இது காந்தாரம் என்பதன் திரிபு. அந்தப் பகுதியிலிருந்து வந்த இளவரசி என்பதால் அவள் காந்தாரி என்று அழைக்கப்பட்டாள்; துரியோதனன் முதலிய நூற்றுவரின் தாயார். தனது கணவர் பார்வையற்றவர் என்பதால் தானும் தனது கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு வாழ்நாள் முழுதும் தியாகம் செய்த பெண்மணி ; ஆனால் பொறாமையின் சின்னமாக விளங்கிய தன் மகனைக் கண்டித்துத் திருத்தாத பழிக்கு ஆளானாள்; மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வெற்றி பெற்ற பின்னரும் ராஜ மாதா என்று போற்றப்பட்டாள். இறுதியில் திருதராஷ்டிரனும் காந்தாரியும் குந்தியும் கானகத்துக்குச் சென்று வானப்பிரஸ்த வாழ்வு வாழ்ந்தனர். ஒரு நாள் காட்டுத் தீ பரவியபோது அதில் கருகி மாண்டார்கள். 

Gandhari

She is from the area of Kandahar of Afghanistan and so she is called Gandhari. Wife of Dhritarashtran, King of Hastinapuram. Because her husband was blind, Gandhari also blindfolded herself, and sacrificed her entire life. But the jealousy of her sons Duryodhanan and 99 others were the root of the conflict and she did not correct their bad qualities and failed in her motherly duty. At the end of the Mahabharata war, during the rule of Yuthisthira, she was given the Raj Matha (Queen Mother) status. After a long time, herself, Dhritarashtra and Kunti went to forest to spend their life. During a forest fire all of them perished in the wildfire.

****

கிர்னார்

குஜராத்திலுள்ள மலைப் பாறைப் பகுதிகள். இந்திய வரலாற்றின் முக்கியமான கல்வெட்டுகள் இந்தப் பாறைகளின் மீது வெவ்வேறு இடங்களில் செதுக்கப்பட்டுள்ளன. அசோகர் காலம் முதல் சுமார் 700 ஆண்டுக் கல்வெட்டுகள் உள்ள இடம். ஹிந்துமத, சமண மத ஆலயங்கள் உள்ளதால் புனிதத் தலமும் ஆகும்.

The Girnar inscriptions in Junagadh, Gujarat, are a collection of ancient edicts carved on a large boulder, most notably featuring the 14 Edicts of Emperor Ashoka (circa 250 BC) in Brahmi script. These Prakrit inscriptions promote morality, peace, and tolerance, alongside later Sanskrit inscriptions from Rudradaman I (150 AD) and Skandagupta (457 AD) regarding the Sudarshan Lake. A significant pilgrimage site for Jains and Hindus, including the 22nd Tirthankara Neminath temple and Dattatreya temple.

 ****

கோவர்த்தன கிரி

கிருஷ்ணன் தூக்கிப்பிடித்த மலை. இந்திரனுக்கு படைப்பதற்காக எடுத்துச் சென்ற உணவினை கிருஷ்ணன் சொற்படி மாடு மேய்க்கும் இடையர்கள் அனைவரும் சாப்பிட்டார்கள். இதனால் கோபம்  அடைந்த இந்திரன் ஏழு நாட்களுக்கு கல் மழை பொழிந்தான்; இடையர்களைக் காப்பாற்றுவதற்காக கிருஷ்ணன் மலையையே தூக்கிப்பிடித்து குடையாக ஆக்கி அவர்களைக் காப்பாற்றினான்.  கிருஷ்ணனுக்கு கிரிதாரி – மலையைத் தாங்கியவன்– என்ற பெயரும் உண்டு. 

Govardhana Giri (or Govardhan Hill) is a sacred 8 km sandstone hill in Mathura, Uttar Pradesh, revered in Hinduism as a natural form of Lord Krishna. Krishna is called Giridhari. According to legend, child Krishna lifted this hill on his finger for seven days to protect the villagers of Braj from torrential rains caused by Indra’s wrath.

***

குகன்

முருகனின் ஒரு பெயர்; மனிதர்களின் இதயத்தில் ஒளிந்து கொண்டிருப்பவன் .

ராமாயணத்தில் வரும் குகன் , வேடர் குலத் தலைவன் ;  கங்கை  நதியைக் கடப்பதற்கு ராம,லெட்சுமணர்களுக்கு உதவியவன்; நால் வராகப் பிறந்த ராம பிரான் குகனுடன் ஐவரானோம் என்று சொல்லி ஜாதி குல இன வேற்றுமையை உடைத்தெறிந்த உலகத்தின் முதல் மனிதன் ஆனான்.

Guha

Guhan means “one who dwells in a cave” or “cave dweller”. It is one of the names of Lord Murugan (also known as Kartikeya or Guha), the Hindu god of war and victory.

Guha is a significant character in the Hindu epic Ramayana, primarily known as the King of Śṛṅgiverapura and a devoted friend and ally to Rama. He plays a crucial role during the beginning of Rama’s 14-year exile.

Guha is described as a dear friend of Rama, described by Valmiki as “atma samas saka,” meaning an equal friend, highlighting a bond that transcended social status.

***

குரு

மாதா பிதா குரு தெய்வம் என்பது இந்துக்களின் பொன்மொழி.

இந்து மதத்தில் ஆசிரியர்கள் குரு என்று அழைக்கப்படுவார்கள் ஆன்மீகத்தில் ஒரு பக்தரை வழி நடத்திச் செல்பவருக்கு குரு என்று பெயர்; இதன் பொருள் கனம் ஆனவர் . எடையில் அல்ல; அறிவில்!

நவக்கிரககங்களில் வியாழன் , பிருஹஸ்பதி என்று சொல்லப்படும் ஜூபிட்டர் JUPITER கிரகத்துக்கும் இதே பெயர்;  இந்துக்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிக வானியல் அறிவு இருந்ததால் சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய கிரகத்துக்கு இந்தப்  பெயரைச் சூட்டினார்கள்.

விஞ்ஞானிகள் அண்மைக்காலத்தில் கண்டுபிடித்த கவாங் கல் விசையையும் SLING SHOT EFFECT  இந்துக்கள் அறிந்து இருந்தனர் குரு எப்படி பக்தரை உயரத்தில் தனது சக்தியால் ஏற்றிவைக்கிறாரோ அதே போல வியாழன் கிரகமும் எரிபொருள் இல்லாமலேயே ஒரு விண்கலத்தை தனது விசையால் மேலே போகச் செய்யும் ஸ்லிங் ஷாட் எபெக்ட் SLING SHOT EFFECT  உடையது.

***

குருகுல வாசம்

வேத காலம் முதல் தற்காலம் வரை வேத பாட சாலைகளில் பின்பற்றப்படும் கல்வி முறை ; மாணவர்கள் ஐந்து வயது முதல் குருவின் வீட்டில் அல்லது ஆஸ்ரமத்தில் குறைந்தது 12 ஆண்டுகள் தங்கி அவரது காலடியில் அமர்ந்து கல்வி அல்லது பிற வித்தைகளைப் பயிலும் ஏற்பாட்டிற்கு குரு குல வாசம் என்று பெயர்; இதன் பொருள் குரு குலத்தில் வசிப்பவர்கள். அப்படி வசிக்கும் காலத்தில் உயர்ந்தோர் வீட்டில் பிச்சை எடுத்து வந்து அந்த உணவினை குருவுடன் பாகிர்ந்து கொள்வதும் உண்டு

***

குரு தட்சிணை

ஒரு குருவிடம் படித்து முடிந்து பட்டம்/ தகுதி பெற்றவுடன் அவருக்கு தனது சக்திக்கேற்ப மாணவர்கள் வழங்கும் தொகை அல்லது பொருள் அல்லது சேவையை குரு தட்சிணை என்று சொல்வார்கள்; குரு கேட்டதைக் கொடுப்பது அல்லது அவர் இட்ட கட்டளையைப் பின்பற்றுவது பற்றி நிறைய கதைகள் உள்ளன (காண்க- ஏகலவ்யன் கதை )

Guru means Teacher, but given the status equal to god. Guru is Brahma, Vishnu and Siva all rolled into one. Guru is Gu and Ru; Gu is darkness and Ru is remover. Guru means heavy. Hindus named the largest planet Jupiter, Guru. Only now the scientists are using the gravitational power of the Jupiter (Guru), known as sling shot effect to boost the rockets or satellites. But Guru means one who boosts you into orbit of spiritual world with his power. So we have rightly named Jupiter as Guru.

From Sanskrit Dictionary:

1) Heavy, weighty (opp. laghu); (fig. also); तेन धूर्जगतो गुर्वी सचिवेषु निचिक्षिपे (tena dhūrjagato gurvī saciveṣu nicikṣipe) R.1.34;3.35; 12.12; विमुच्य वासांसि गुरूणि साम्प्रतम् (vimucya vāsāṃsi gurūṇi sāmpratam) Ṛtusaṃhāra 1.7.

2) Great, large, long, extended.2) Any venerable or respectable person, an elderly personage or relative, the elders (pl.) शुश्रूषस्व गुरून् (śuśrūṣasva gurūn) Ś.4.18; Bhagavadgītā (Bombay) 2.5; Bv.2.7,18,19,49; आज्ञा गुरूणां ह्यविचारणीया (ājñā gurūṇāṃ hyavicāraṇīyā) R. 14.46.

3) A spiritual teacher, preceptor; गुरुशिष्यौ (guruśiṣyau).

Gurukula

A gurukula (or gurukul) is a traditional Indian residential schooling system where students (śiṣyas) live with their teacher (guru), often in the same household, to receive education in academic subjects, ethics, and life skills.

Guru Dakshina

Guru Dakshina is an ancient Indian tradition representing the repayment, gratitude, and respect a student offers to their teacher (guru) upon completing their education. It is considered a sacred offering, not merely a fee. It can be given in cash or kind. Guru can also ask to finish some tasks.

***

குரு கிரந்த சாஹிப்

சீக்கியர்களின் புனித நூல் ; ஆதிக் கிரந்தம் என்றும் சொல்வர் ; இதில் சீக்கிய குருமார்களின் பாடல்களும் பிற சாது சன்யாசிகளின் பாடல்களும் இருக்கின்றன ‘ஓம்’காரத்தையும் இது போற்றுகிறது ; இந்த நூலினையே சீக்கியர்கள் அமிர்தசரஸ் பொற்கோவிலில் வைத்து வழிபடுகிறார்கள்.

The Guru Granth Sahib is the holy religious scripture of Sikhism, regarded by Sikhs as the final, sovereign and eternal Guru following the lineage of the ten human gurus of the religion. It is called The Adi

The text consists of 1,430 pages and 5,894 shabads (line compositions), which are poetically rendered and set to a rhythmic ancient north Indian classical form of music. It is worshipped as Guru in the Golden Temple in Amritsar.

The Guru Granth Sahib was composed predominantly by six Sikh gurus. It also contains the traditions and teachings of fourteen Hindu Bhakti movement sants (saints), such as Ramananda, Kabir and Namdev among others, and one Muslim Sufi saint: Sheikh Farid.

கடோத்கசன்

பானைத் தலை போன்ற உருவம் உடைய இராக்கதர் குல வீரன்; மஹாபாரத பீமனுக்கும், இடும்பி என்ற ராக்ஷஸிக்கும் பிறந்தவன் . மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் தரப்பில் நின்று போரிட்டு உயிரிழந்தான் .

Ghatotkacha is a character in the ancient Indian epic Mahabharata. He was called Ghatotkacha, becaause his head was shaped like a ghatam, or a pot. He is the son of the Pandava Bhima and the rakshasi Hidimbi.

He was an important fighter from the Pandava side in the Kurukshetra War and caused a great deal of destruction to the Kaurava army. Ghatotkacha killed many demons and courted a hero’s death in the great war.

****

கெளதமர் 

ஒரு ரிஷியின் பெயர்; புத்தருக்கும் இதே பெயர்

இந்து மதத்தில் உள்ள ஆறு தரிசனங்களில் — தத்துவங்களில் — நியாய சாஸ்திரத்தை உருவாக்கியவர்; இவர் பெயரில் நியாய சாஸ்திர நூல்கள் உள்ளன .

Gautama, also known as Akshapada or Gotama, is the ancient Indian sage and author of the Nyaya Sutras, founding the Nyaya school of philosophy around 600–500 BCE to 2nd century CE. His work established the foundational framework for Indian logic, epistemology, and methodology, focusing on valid knowledge and structured debate.

***

குரு பூர்ணிமா

ஆண்டு தோறும் வரும் பெளர்ணமி தினங்களில் மிகவும் முக்கியமானது; பெரும்பாலும் ஜூலை மாதத்தில் வரும்; வியாச பெளர்ணமி என்றும் பெயர். அன்றைய தினம் குருவுக்கு மிக முக்கிய பூஜைகளைச் செய்வார்கள். ஆர் எஸ் எஸ் இயக்கத்தில் முக்கிய பண்டிகை. அன்று பகவத் த்வஜம் என்னும் காவிக்கொடியைக் குருவாகப் பாவித்து காணிக்கை செலுத்துவார்கள். இந்துக்கள் அனைவரும் வேத வியாசரை குருவாக ஏற்பதால் வியாசரையும் அன்று பூஜிப்பார்கள் . பொதுவாக சாதுர்மாஸ்ய விரதம் என்னும் நான்கு மாத விரதத்தை சந்யாசிகள் துவங்கும் நாள்.

Guru Purnima गुरुपूर्णिमा is a religious festival dedicated to offering respect to spiritual and academic gurus. It is celebrated as a festival in India. RSS celebrates it as one of the main festivals on which day, the members offer their contribution.  It is observed on the full moon day (Purnima) in the month of Ashadha (June–July) according to the Hindu calendar. It is also known as Vyasa Purnima, because it marks the birthday of Veda Vyasa, the author of the Mahabharata and compiler of the Vedas. The Chaturmasya Vrata begins on this day.

–Subham—

Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-31, இந்து மத கலைச்சொல் அகராதி-31, காந்தாரி, குரு, தட்சிணை, Guru Purnima, Girnar, Giridhari

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்- ஓர் ஆய்வு (Post No.15,392)

 

WRITTEN BY R. SESHADRINATHAN

Post No. 15,392

Date uploaded in Sydney, Australia –  4 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்.ஓர் ஆய்வு 

(ஆர்சேஷாத்ரிநாதன்) 


என்னுரை 

நம்மில் பெரும்பாலோர் வால்மீகி இராமாயணம், கம்ப இராமாயணம் படித்து இருப்போம். ஆனால் துளசி தாசரின் இராமாயணமாகிய இராம சரித மானஸ் படித்து இருக்கும் வாய்ப்புகள் குறைவு.  வட இந்தியாவில் மக்களிடையே பிரபலமானது இந்த ராம சரித மானஸ். அவதி மொழியில் எழதப்பட்டது. இதை மிக மிகப் புனித நூலாகக் கருதுகின்றனர். காசி, சோமநாத் ஆலயங்களுக்குச் சென்றவர்கள் அங்கு நிறைய பேர் ஆலயத்தினுள் இராம  சரித மானஸ் படித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். 

வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகியோர் எழுதிய இராமாயணத்தில் பால, அயோத்தியா, ஆரண்ய காண்டங்கலைத் தொகுத்து முகநூலில் வெளியிட்டு விட்டேன். வால்மீகியின் கிஷ்கிந்தாகண்டத்தைத் தொகுத்து வெளியிட்டுக் கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டத்தை தொகுத்து விட்டேன்.  நான் முன்பு சொன்னது போல்  இது ஒரு மொழிபெயர்ப்பு அல்ல. கதையுடன் இணைந்த ஆய்வு.  இதில் வால்மீகி, இராமாயணம், ஆத்யாத்ம இராமாயணம்,  நலுங்கு மெட்டு இராமாயணம் முதலிய இராமாயணங்களையும் ஒப்பிட்டுத் தொகுத்துள்ளேன். 

இந்த ஆய்வில் எனக்கு மிக உறுதுணையாக இருந்த நூல்கள்

 1.      திரு அஞ்சனி நந்த சரண் எழுதி கீதா பிரஸ் வெளியிட்ட மானச பியுஷ்

2.       திரு அஜய் குமார் சவ்சாரியாவின் ராமசரித மானஸ்

இவர்களுக்கும் புத்தகத்தை வெளியிட்ட நிறுவனங்களுக்கும் மனமார்ர்ந்த நன்றி.

**

துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு  – 2

முன்னுரை

முதலில் இராம லக்ஷ்மணர்களையும், பிறகு இராம நாமத்தையும்,  அதன் பிறகு சிவ பெருமான் உறையும் புண்ய க்ஷேத்ரமான காசியையும், கடைசியாக சிவ பெருமானையும் துதித்து.  துளசிதாசர் கிஷ்கிந்தாக் காண்டக் கதையைத்  துவக்குகிறார்.

மறை பொருளான பரம் பொருள் மனிதக் குழந்தையாகத் தோன்றியதையும், அந்த நடமாடும் தெய்வத்தைத் தாய் தந்தையரும், சுற்றத்தாரும், நண்பர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், புண்ணியாத்மாக்களும், பாவம் செய்தவர்களும், வாழ்த்தி, வணங்கி வழிபட்ட கதையைப் பால காண்டத்தில் கூறினார் துளசிதாசர்

அயோத்தியா காண்டத்தில் பரமனினும் உயர்ந்த பக்த சிரோமணி ஆகிய பரதன் கதையும், பக்தியின் பெருமையும் சொல்லப்பட்டது..

ஆரண்ய காண்டத்தில் யோகிகள், ஞானிகள், சித்தர்கள், மாரீச்சன், கழுகரசன், நாரதர், சபரி ஆகிய எல்லோரின் பக்தியின் பெருமையை உணர்ந்து, பரமனிடம் பக்தி தானம் கேட்டதையும் பரமன் உள்ளம் உவந்து அவர்களுக்கு பக்தி செய்யும் பெரு மனம் அளித்து  அருள் பாலித்த வரலாற்றைக் கூறினார். அதுபோல மாயா சீதையை இராவணன் கவர்ந்து சென்ற வரலாற்றையும்(ராம சரித மானசில்) கூறினார். இப்போது கிஷ்கிந்தா காண்டத்திலும் பக்தியின் பெருமையே பேசப்படுகிறது.

கிஷ்கிந்தாக் காண்டச் சுருக்கம்

நாரத முனிவர் சென்ற பிறகு, இராமன் ஒரு மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். தனது பயணத்தைத் தொடங்குவதற்கு முன் பம்பா ஏரியின் கரையில். உள்ள ரிஷ்யமுக மலையை வந்தடைந்தார். இந்த மலையில் சுக்ரீவன் தனது தோழர்களுடன் வசித்து வந்தான். சுக்ரீவன் கிஷ்கிந்தா (குரங்குகளின்) இராச்சியத்தின் இளவரசன். இரண்டு சகோதரர்களுக்கிடையே ஏற்பட்ட தவறான புரிதலால், சில காரணங்களால் அவரது மூத்த சகோதரர் வாலியால் ராஜ்யத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது , அவர் ரிஷ்யமூக மலையின் உச்சியில் வசிக்க வந்தார்.

அந்த மலை  அவருக்குப் பாதுகாப்பாக இருந்தது, ஏனென்றால் அவருடைய சகோதரர் முந்தைய சாபத்தினால் இந்த இடத்திற்கு வர இயலாதபடி ஒரு தடை இருந்தது. தொலைவிலிருந்து இராம இலக்ஷ்மணர்களை  நோக்கிய சுக்ரீவன், அவர்கள் வாலியால் தன்னை அழிப்பதற்காக அனுப்பப்பட்டப் படை வீரர்கள் என நினைத்தான். அவர்களைப் பற்றிய விவரங்களை அறிந்து வருமாறு தனது நம்பகமான அமைச்சனான ஹனுமனை அனுப்பினான்.

ஹனுமான் அந்தணச் சிறுவன் வேடம் அணிந்து அவர்களை அணுகி விவரங்கள் கேட்டறிந்தான். தான் போற்றும் இராமனே இப்படி வீரனாக வந்துள்ளான் என்று, தனது அன்பான இறைவனை அடையாளம் கண்டுகொண்டு, ஹனுமன் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான். இராமன்,  தான் வனத்தின் அந்த பகுதிக்கு வந்த காரணத்தை ஹனுமனுக்கு விளக்க, ஹனுமன் சுக்ரீவனைப் பற்றிச் சொல்லி அவரைச் சந்திக்கும்படியும் சீதையைத் தேட சுக்ரீவன் உதவி புரிவான் என்றும் கூறினான்.

இராமரன் சுக்ரீவனைச் சந்தித்தான், இருவரையும் அறிமுகப்படுத்திய ஹனுமனின் ஆலோசனையின் பேரில், அவர்கள் நண்பர்களானார்கள். உரையாடலின் போது, சுக்ரீவன் தெரிந்து கொள்ள விரும்பியபோது எந்த மனிதனும் இதற்கு முன்பு வரத் துணியாத வனாந்தரத்தில் இராமனும் இலட்சுமணனும் ஏன் அலைந்து திரிந்தார்கள்? மற்றும் சீதை கடத்தப்பட்டது பற்றியும், இரண்டு சகோதரர்களும் அவளை எப்படித் தேடுகிறார்கள் என்பது பற்றியும் இராமன் அவருக்குச் சொன்னான். இதைக் கேட்ட சுக்ரீவன் இராமனுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தான், மேலும் சீதை இராவணனால் கடத்திச்  செல்லப்படுவதைக் கண்டதாகக் கூறினான். அப்போது சீதை கீழே போட்ட நகைகளை தான் சேமித்து வைத்திருப்பதாகச் சொல்லி அவைகளை   இராமனுக்குக் காண்பித்தான். இராமனும் அவை சீதையின் நகைகள் என்பதை உறுதி செய்தான்.

இராமன், சுக்ரீவனிடம் அந்த வனத்தில் தனியாக வாழ்வது பற்றி கேட்டபோது சுக்ரீவன், தனது சகோதரன் வாலி தன்னைத் தாக்கி, தனது மனைவியை அபகரித்துக் கொண்ட விவரத்தையும் சொல்லி வாலிக்குப் பயந்து அந்த மலையில் வாழும் விவரத்தைத் தெரிவித்தான். இராமன் அவனிடம் வாலியைக் கொன்று கிஷ்கிந்தையில் கௌரவமான முறையில் வாழ வைப்பதாக உறுதி அளித்தான். வாலியை யுத்தத்திற்கு வருமாறு அழைக்கச் சொல்லி எல்லோரும் கிஷ்கிந்தைக்குச் சென்றனர்.  .வாலிக்கும் சுக்ரீவனுக்கும் நடந்த யுத்தத்தில் இராமன் ஒரே பாணத்தால் வாலியைக் கொன்று சுக்ரீவனை கிஷ்கிந்தையின் மன்னனாக்கி வாலியின் மகனான அங்கதனை இளவரசனாக்கினான்.

சுக்ரீவன் தனது படை வீரர்களை எல்லாம் வரவழைத்து சீதையைத் தேடும் முயற்சியில் நான்கு திசைகளுக்கும் அனுப்பினான். அங்கதன் தலைமையில் ஹனுமன் உட்பட பலர்  தென்திசை சென்றபோது இராமன் தனது கணையாழியை சீதையிடம் கொடுக்கும்படி ஹனுமன் கையில் கொடுத்தான். ஜடாயுவின் சகோதரன் சம்பாதி மூலம் சீதை இலங்கை அசோக வனத்தில் இருப்பதாக அவர்கள் தெரிந்து கொண்டனர். இலங்கையை அடைய பெருங் கடலைக் கடக்க வேண்டும். பல வீரர்களாலும் இயலாத நிலையில் ஜாம்பவான் ஹனுமன் ஒருவனால் தான் இதைச் செய்ய முடியும் என்று நினைத்து ஹனுமனை ஊக்கப்படுத்தி இலங்கைக்குச் செல்லச் சொல்கிறான்.

ஹனுமனும் அவ்வாறே சீதையைக் காண மகேந்திர மலையின் உச்சியிலிருந்து புறப்படுகிறான்.

ஹனுமான் முதன்முதலில் ஸ்ரீஇராமனை தரிசித்த கதையுடன் கிஷ்கிந்தாக் காண்டத்தை ஆரம்பிக்கிறார் துளசிதாசர்.

** தொடரும்

மறையப் போகும் தேசங்களும் நகரங்களும்! (Post.15,390)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,390

Date uploaded in London – 3 February 2026 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

24-11-25 கல்கிஆன்லைனில் பிரசுரமான கட்டுரை! 

மறையப் போகும் தேசங்களும் நகரங்களும்! 

ச. நாகராஜன் 

இன்றைய உலக வரைபடத்தில் மிளிர்ந்து கொண்டிருக்கும் பல தேசங்களும், நகரங்களும் வரைபடத்திலிருந்து மறையப் போகின்றன என்பது சோகமான ஒரு செய்தி தான்! 

போரினாலோ அல்லது உள்நாட்டுச் சண்டைகளினாலோ இவை அழியப் போவதில்லை.

கடல் மட்டம் நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகின்றது அல்லவா? அதனால் கடல் ஓரத்தில் இருக்கும் நகரங்களும் கடல் நடுவே இருக்கும் பல தீவுகளும் இருப்பது இனி சந்தேகம் தான்! 

சென்ற நூற்றாண்டில் 1.4 மிலிமீட்டர் அளவு உயர்ந்து கொண்டிருந்த கடல் நீர் மட்டம் 2006 முதல் 2015 வரை 3.6 மிலிமீட்டர் அளவு உயர்ந்திருப்பதாக நேஷனல் ஓசியானிக் அண்ட் அட்மாஸ்பரிக் அட்மினிஸ்ட்ரேஷன் (NOAA) தெரிவிக்கிறது. 

2100ம் ஆண்டு வாக்கில் இந்த கடல் மட்டம் உயர்வதால் 25 கோடி மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள். 

எடுத்துக்காட்டாகச் சொல்வதென்றால் 45 செண்டிமீட்டர் அளவில் கடல்மட்டம் உயர்ந்தால் மாலத்தீவுகள் 77 சதவிகிதம் 2100ம் ஆண்டு வாக்கில் அழிந்து விடும். இங்கு 1200 சின்ன பவழப்பாறை தீவுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 5,40,000! 

பசிபிக் கடலின் நடுவில் உள்ள கிரிபடி என்னும் தீவும் ஆறு அடி நீர்மட்டம் உயர்வதால் மூன்றில் இரண்டு பங்கு அழிந்து விடும். இங்குள்ள ஜனத்தொகை1,20,000! 

சீனாவை எடுத்துக் கொண்டால் 430 லட்சம் பேர்கள் கடலோரத்தில் வசிக்கிறார்கள்.

பங்களாதேஷில் 320 லட்சம் மக்கள் கடல் பகுதியில் வசிக்கிறார்கள். இந்தியாவிலோ 270 லட்சம் பேர்கள் கடலோரப் பகுதிகளில் வசிக்கிறார்கள்.

 மிக வேகமாக அழிந்து வரும் நகரம் ஜாகார்தா என்கிறது பிபிசி.

 உலக பொருளாதார ஃபோரம் பங்களாதேஷ், லாகோஸ், நைஜீரியா,பாங்காக் ஆகியவை நீருக்கடியில் மூழ்கி விடும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்கிறது.

அமெரிக்காவை எடுத்துக் கொண்டால் எப்போதும் சூரிய வெளிச்சத்தில் மின்னுவதால் சன் ஷைன் சிடி என்ற செல்லப் பெயரை எடுத்திருக்கும் ப்ளோரிடாவுக்கும் இதே அபாயம் உண்டு.

க்ளைமேட் சென்ட்ரல் ரிஸர்ச்-இன் ஆய்வின் படி அமெரிக்காவில் 36 முதல் 50 நகரங்கள் கடல் மட்டம் உயர்வால் பாதிக்கப்படும்.

 ஆக என்ன தான் செய்வது? இந்தக் கேள்விக்குப் பதிலை ஓரளவு நெதர்லாந்தும் அமெரிக்காவும் தருகின்றன.

 பாதுகாப்பு நடவடிக்கைகளை இப்போதிலிருந்தே எடுக்க வேண்டும் என்பது தான் அந்த பதில்.

,மிகமிக உயரமான மட்டத்தில் வீடுகளை அமைப்பது ஒரு வழி. சாலைகளையும் அதே உயரத்தில் அமைக்க வேண்டும். ஏராளமான அளவு பவழப்பாறைகளை வளர்க்க வேண்டும். அலையாத்திக் காடுகளை (MANGROVES) கடல் ஓரத்தில் மிக அதிகமாக வளர்க்க வேண்டும்.

ஆனால் இதற்கு பெரும் செலவைச் செய்ய வேண்டி வரும்.

நெதர்லாந்தும், அமெரிக்காவும் செலவழிப்பதைப் போல, இதை எல்லா நாடுகளாலும் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி தான்!

 இப்போதிலிருந்தே படிப்படியாக மக்களை இடம் பெயரச் செய்வது மக்களை அழியாமல் பாதுகாக்க எடுக்க வேண்டிய ஒரு நடவடிக்கையாக அமையும்.

 சரி, 2100;ல் உலகம் எப்படி இருக்கும்? இதை யாராலும் சொல்ல முடியாது என்கிறார்கள் நிபுணர்கள்.

 பசுமை வாயுக்கள் எனப்படும் க்ரீன் ஹவுஸ் கேஸ்களை நம்மால் தடுக்க முடியுமா? முடியும் என்றால் அழிவிலிருந்து தப்பிக்கலாம்!

 இதற்கு ஒவ்வொரு மனிதனும் பாடுபட வேண்டுமே! பாடுபட்டால் அழிவிலிருந்து ஒருவேளை இந்தக் கடலோரப் பகுதிகள் தப்பிக்க வாய்ப்பு உண்டு! 

**

London Swaminathan’s Article Index for January 2026; Index No.158 (Post No.15,389)

London swaminathan in Bangkok, Thailand, January 2026

Written by London Swaminathan

Post No. 15,389

Date uploaded in Sydney, Australia –  3 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

London swaminathan in Mysore Palace, India, January 2026

London Swaminathan’s Article Index for January 2026; Index No.158

Interesting Titbits from Tamil Vaishnavite Alvar Poems (Post No.15,331) 1-1-2026

London Swaminathan’s Article Index for December 2025 Index No.157 (Post No.15,330) 1-1-2026

My visit to Grand Palace in Bangkok, Thailand (Post No.15,346) 19/1

Three Beautiful Temples that I Visited in Bangkok, Thailand! (Post No.15,349)2/1

My Visit to Sydney Shakti Temple and Lisgar Gardens (Post No.15,356)24/1

My Visit to Sydney Sri Karphaga Vinayakar Temple (Post.15,372) 29/1

Nuclear Science in Arunagirinathar’s Tiruppugaz (Post.15,376) 30/1

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-29; இந்துமத கலைச்சொல் அகராதி-29  (Post No.13,353) 23/1/26

HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL-30; இந்துமத கலைச்சொல் அகராதி-30  (Post No.13,369) 28/1

Hinduism through 500 Pictures in Tamil and English-38; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-38 (Post.15,363) 26/1

Purananuru Wonders 6- Ancient Tamil Encyclopaedia Part 46 (Post No.15,360) 25/1

Purananuru Wonders 7- Ancient Tamil Encyclopaedia Part 47 (Post No.15,366) 27/1

February 2026 Calendar with Yaksha Prasna Q & A (Post No.15,380) 31/1

GNANAMAYAM 4th January 2026 BROADCAST PROGRAMME

Hinduism in Thailand (Post.15,354) 23/1

***

Tamil Articles by London Swaminathan

London swaminathan in Sydney Durga Temple, Australia , January 2026

தலையைச் சிரைக்கும் தண்டனைகள்: ஆழ்வார் தரும் சுவையான செய்தி (Post.15,328)1/1

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் 4-1-2026 (Post.15,333) 5/1

கர்நாடக பயணத்தில் கண்ட விநோதங்கள் (Post No.15,335) 14/1

நான் கண்ட மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் (Post No.15,337) 15/1

ஆதிரங்கம்- ஸ்ரீரங்கபட்டணம் தலத்தில் பெருமாள் தரிசனம் ! (Post.15,339)16/1

சோமநாத்பூரில் நான்  கண்ட அற்புத சிற்பற்பங்கள் (Post No.15,341) 17/1

தாய்லாந்து மன்னர் அரண்மனை பற்றிய சுவையான தகவல்கள் (Post No.15,345) 19/1

தாய்லாந்து நாட்டுக் கோவில்களில் நான் கண்ட அதிசயக் காட்சிகள் (Post No.15,348)20/1

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும் பொருள் வளமும்- Part 1 (Post.15,362)  26/1

தாய்லாந்தில் நான் கண்ட அதிசய பூமாதேவி வழிபாடு! அதர்வண வேத எதிரொலி! (Post No.15,351)22/1

ஆஸ்திரேலியாவில் பார்க்க வேண்டிய இடங்கள்: சிட்னி நகர சக்தி கோவில்; லிஸ்கார் கார்ட்னஸ் (Post.13,357) 24/1

அனுமன் பற்றி அருணகிரிநாதர் கூறும் அரிய தகவல் (Post No.15,359) 25 /1

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 2 (27/1)

திருமாலுக்கு சிவன் கொடுத்த சக்ராயுதம்! அருணகிரி சொல்லும் அதிசயச் செய்திகள்! 28/1

நக்கீரர் கதை: அருணகிரிநாதர் சொல்லும் அரிய தகவல்கள் (Post.15,371) 29/1

அருணகிரிநாதர் கண்டுபிடித்த அணு விஞ்ஞானம் ! (Post No.15,375)30/1

பிப்ரவரி 2026 காலண்டர்- அருணகிரிநாதர் வேண்டுதல்கள்! (Post No.15,379) 31/1

ராவணன் ஒரு முட்டாள்! திருப்புகழில் அரிய செய்திகள்- Part 6 (31-1-26)

–subham—

Tags London Swaminathan, Article Index , January 2026, Index No.158

நோய்கள், காசு பறிக்கும்  டாக்டர்கள் பற்றி அருணகிரிநாதர்!-9 (Post.15,388)


Written by London Swaminathan

Post No. 15,388

Date uploaded in Sydney, Australia –  3 February 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அரிய செய்திகள்- 9

அருணகிரி நாதர் சொல் அழகும்பொருள் வளமும்- Part 9

அறமும் நிறமும் அயிலும் மயிலும் … தர்மமும், செந்நிறமும்,

வேலும், மயிலும்,

அழகும் உடைய பெருமாளே. … அழகும் உடைய பெருமாளே.

***

நோய்கள், டாக்டர்கள் பற்றி

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்

     விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு

          சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி …… யணுகாதே

தலமிசை யதற்கான பேரோடு கூறியிது

     பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்

          சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் …… விதியாதே

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்

     வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண

          முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க …… ளிருபாதம்

உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்

     வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ

          உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை …… வரவேணும்

அலைகட லடைத்தேம காகோர ராவணனை

     மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை

          அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு …… மருகோனே

அறுகினை முடித்தோனை யாதார மானவனை

     மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்

          அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் …… வருவோனே

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை

     யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்

          பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு …… மணவாளா

பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்

     வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்

          பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் …… பெருமாளே.

……… சொல் விளக்கம் ………

டயாபடீஸ் நோய் வரக்கூடாது

தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம் … தலைவலிவசிய

மருந்தால் வரும் நோய், மஞ்சட்காமாலை, ரத்தசோகை, ஜுரம்,

விழிவலி வறட்சூலை காயாசு வாசம் … கண்வலிவறள் என்ற

வயிற்றுவலி, காசநோய், மூச்சுப்பிடிப்பு,

வெகுசலமிகு விஷப்பாக மாயாவி காரபிணியணுகாதே …

நீரிழிவு, கொடிய விஷ நோய்கள், உலகமாயையால் வரும்

விகாரமான பிணிகள் முதலியவை என்னை அணுகாதவண்ணம்,

காசு பறிக்கும் டாக்டர்கள்

தலமிசை யதற்கான பேரோடு கூறி … பூமியில் அந்த நோய்கள்

நீங்குவதற்காக சில வைத்தியர்களிடம் சொல்லி,

யிது பரிகரி யெனக்காது கேளாது போலுமவர் … இது

நீங்குவதற்குப் பரிகாரம் யாதெனக் கேட்டால், காது கேளாததுபோலச் செல்பவர் சிலர்,

சரியும் வயதுக்கேது தாரீர்சொலீரெனவும் விதியாதே …

சாகப்போகும் வயதாகிவிட்டதே உமக்கு, எவ்வளவு பணம் தருவீரெனக் கேட்பவர் சிலர் என்று பிறர் கூறும்படியான விதியை என் தலையில் எழுதாமல்,

****

உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர் … ஊக்கக்குறைவு

இன்றி, விருப்பமுடன் பெரிய பூந்தோட்டத்தில் பூத்த மணமுள்ள

மலர்களை,

வகைவகை யெடுத்தே தொடா மாலிகாபரணம் … விதவிதமாகப்

பறித்துத் தொடுத்து மாலை வகைகளில் ஆபரணங்கள் போல் அமைத்து

உனதடியி னிற்சூடவேநாடு மாதவர்கள் இருபாதம் …

உன்னடியில் சூட்டுதற்கு விரும்பும் சிறந்த தவசிரேஷ்டர்களின் இரு

பாதங்களையும்

உளமது தரித்தே வினாவோடு பாடியருள் … மனத்தினில்

தரித்தே, ஆய்ந்த அறிவுடன் பாடி, உன்னருளால்

வழிபட எனக்கே தயாவோடு தாளுதவ … உன்னை

வழிபடுவதற்கு, என்மீது அன்பு கூர்ந்து, உன் திருவடிகளைத் தந்துதவ

உரகமது எடுத்தாடு மேகார மீதின்மிசை வரவேணும் …

பாம்பைத் தூக்கி எறிந்து ஆடும் மயிலின் மீது வந்தருள வேண்டும்.

*****

மஹா கோர ராவணன்

அலைகடல் அடைத்தே மகாகோர ராவணனை … அலைகடலை

அணையிட்டு அடைத்து, மகா கோரமான ராவவணனுடைய

மணிமுடி துணித்து ஆவியேயான ஜானகியை … மணிமுடிகளை

அறுத்துத்தள்ளி, உயிருக்கு ஒப்பான சீதாதேவியை

அடலுடன் அழைத்தேகொள் மாயோனை மாமனெனு

மருகோனே … தன் தோள்வலியால் அழைத்துக்கொண்ட மாயவனான திருமாலை மாமன் என்று அழைக்கும் மருகனே,

****

அறுகினை முடித்தோனை யாதார மானவனை … அறுகம்புல்லை

சடையில் முடித்தவனும், உயிர்கட்கெல்லாம் ஆதாரமானவனும்,

மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம் … மழு, மான்

இவைகளை ஏந்தியவனும், மகா காளி வெட்கும்படியாக முன்னர்

அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும்

வருவோனே … சபைதனிலே நடனம் ஆடியவனான சிவபிரானை,

சிறந்த தந்தையே என்றழைக்கவும் வந்தவனே,

****

பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை … பல கலைகளைப்

படித்து ஓதும் கவிஞர்களின் நாவிலே வாசம் செய்கின்ற

இருசரண வித்தார வேலாயுதா … இரு திருவடிகளை உடைய

வித்தகனே, வேலாயுதனே,

உயர்செய் பரண்மிசை குறப்பாவை … உயரத்தில் கட்டப்பட்ட

பரணின் மீது இருந்த குறப்பெண் வள்ளியின்

தோள்மேவ மோகமுறு மணவாளா … தோள்களைத் தழுவ மிக்க

ஆசை கொண்ட மணவாளனே,

பதுமவயலிற் பூகமீதே வரால்கள் துயில் வருபுனல்

பெருக்காறு … தாமரை மலர்கின்ற வயலிலும், பாக்கு மரங்களின் மீதும், வரால் மீன்கள் உறங்கும்படி வரும் நீர்ப்பெருக்கை உடைய ஆறாகிய

திருப்புகழில் பூகோள பாடம்

காவேரி சூழவளர் பழநிவரு … காவேரி சூழ விளங்கும் பழநியில் எழுந்தருளிய,

****

பழனி மலையைச் சுற்றி ஓடும் நதி

பழனி மலையைச் சுற்றி ஓடும் முக்கிய நதி சண்முக நதி ஆகும். இது அமராவதி ஆற்றின் துணையாறாகும், மேலும் இந்த நதி பழனி மலைச் சரிவுகளில் உற்பத்தியாகி, பழனி நகரத்திற்கு அருகில் உள்ள சக்தி கிரி மற்றும் சிவகிரி மலைகளுக்கு அருகில் பாய்கிறது.

நதியின் பெயர்: சண்முக நதி (Shanmuganathi).

உற்பத்தி: பழனி மலைச் சரிவுகள் (Palani Hills).

இது அமராவதி ஆற்றின் ஒரு துணையாறு அது  இறுதியில் காவிரியில் கலக்கிறது.

பாயும் இடம்: பழனி முருகர் கோயில் அமைந்துள்ள அடிவாரத்தில் இந்த நதி பாய்கிறது.

மேலும், பழனி மலைப்பகுதிகள் Vaigai மற்றும் Amaravathi ஆறுகளின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் விளங்குகிறது

****

கற்பூர கோலாகலா அமரர் பெருமாளே. … பச்சைக் கற்பூர மணம்

கமழும் அலங்கார ஆடம்பரனே, தேவர்களின் பெருமாளே.

***

பெரிய புராணக் கதை , சோழநாட்டின் பெருமை

நாத விந்து கலாதீ நமோநம … லிங்கம், பீடம் (சிவ சக்தி) ஆகிய

தத்துவங்களுக்கு மூலப்பொருளே, போற்றி, போற்றி,

வேத மந்த்ர சொரூபா நமோநம … வேதங்கள், மந்திரங்கள்,

இவற்றின் உருவமாக விளங்குபவனே, போற்றி, போற்றி,

ஞான பண்டித ஸாமீ நமோநம … பேரறிவுக்குத் தலைவனான

தெய்வமே, போற்றி, போற்றி,வெகு கோடி நாம சம்பு குமாரா நமோநம … பல கோடிக்கணக்கான திருப்பெயர்களைக் கொண்ட சிவனின் புதல்வனே, போற்றி, போற்றி

போக அந்தரி பாலா நமோநம … (அனைத்து உயிர்களுக்கெல்லாம்)

இன்பங்களை அளிக்கும் பார்வதியின் குமாரனே, போற்றி, போற்றி

நாக பந்த மயூரா நமோநம … தன் காலினால் பாம்பை அடக்கிக்

கட்டியுள்ள மயிலை வாகனமாகக் கொண்டவனே, போற்றி, போற்றி,

பரசூரர் சேத தண்ட விநோதா நமோநம … எதிரிகளான

சூரர்களை தண்டித்து அழிக்கும் திருவிளையாடல் புரிந்தவனே, போற்றி, போற்றி,

கீத கிண்கிணி பாதா நமோநம … இசை ஒலி எழுப்பும்

சதங்கைகளை உடைய திருப்பாதங்களைக் கொண்டவனே, போற்றி,

போற்றி

தீர சம்ப்ரம வீரா நமோநம … மிகவும் பராக்ரமசாலியான

போர்வீரனே, போற்றி, போற்றி,

கிரிராஜ … மலைகளுக்கெல்லாம் அரசனே,

தீப மங்கள ஜோதீ நமோநம … திருவிளக்குகளின் மங்களகரமான

ஒளியேபோற்றிபோற்றி,

தூய அம்பல லீலா நமோநம … பரிசுத்தமான பரவெளியில் லீலைகள்புரிபவனே, போற்றி, போற்றி,

தேவ குஞ்சரி பாகா நமோநம … தேவயானையை மணாட்டியாகப்

பக்கத்தில் கொண்டவனே, போற்றி, போற்றி,

அருள்தாராய் … உனது திருவருளைக் கொடுத்து அருள்வாயாக.

சோழநாட்டின் பெருமை

ஈதலும் பல கோலால பூஜையும் ஓதலும் குண ஆசார

நீதியும் … தானம், பல சிறப்பான பூஜைகள் செய்தல், நல்ல நூல்களைப் படித்தல், சற்குணம், ஒழுக்கம், நியாயம்,

ஈரமும் குரு சீர்பாத சேவையும் மறவாத … கருணை, குருவின்

திருப்பாதங்களைச் சேவித்தல் ஆகியவற்றை மறவாமல் கடைப்பிடிக்கும் (சோழமண்டலத்தில்),

ஏழ் தலம் புகழ் காவேரியால் விளை … ஏழு உலகங்களில்

உள்ளோரும் மெச்சுகின்ற காவேரி நதியால் செழித்து வளமுறும்

சோழ மண்டல மீதே மநோகர ராஜ கெம்பிர நாடாளும்

நாயக … சோழ மண்டலத்தில், மனதுக்கு மகிழ்ச்சி கொடுக்கும்

ராஜகெம்பீரம் என்னும் நாட்டை* ஆளுகின்ற அரசனே,

வயலூரா … வயலூருக்குத் தலைவா,

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை … தன்மீது அன்புவைத்த

திருவாரூராரின் (சுந்தரமூர்த்திப் பெருமானது) நட்பை

சேர்தல் கொண்டவரோடே முனாளினில் … நாடியவராய்,

அவருடன் முன்பொருநாள்,

ஆடல் வெம்பரி மீதேறி மா கயிலையிலேகி … ஆடலில் சிறந்த,

விரும்பத்தக்க குதிரை மீது ஏறி கயிலை மாமலைக்குப் போய் (அங்கே)

ஆதி அந்தவுலாவாசு பாடிய … ஆதி உலா எனப்படும் அழகிய

(கயிலாய ஞானக்) கலிவெண்பாவை பாடலாகப் பாடிய

சேரர் கொங்குவை காவூர் நனாடதில் … சேரர் பெருமானாம்

சேரமான் பெருமான்** நாயனாருக்கு உரித்தான கொங்கு மண்டலத்து

வைகாவூர் என்னும் சிறந்த நாட்டுப் பகுதியில் இருக்கும்

ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் பெருமாளே. … திரு

ஆவினன்குடி (பழநிமலையின் அடிவாரம்) என்னும் தலத்தில் வாழ்வு

கொண்டிருக்கும், தேவர்களின் பெருமாளே.

இது திருக்கற்குடி‘ அல்லது உய்யக்கொண்டான்‘ என்று வழங்கப்படும். திருச்சிக்கு அருகில் வயலூருக்குப் போகும் வழியில் உள்ளது.

** கொங்கு நாட்டின் மன்னனாக 1,150 ஆண்டுகளுக்கு முன்பு சேரமான் பெருமான் ஆண்டார். அவர் சைவக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரரின் நண்பர். சிவபிரான் சுந்தரரை கயிலைக்கு அழைத்தபோதுசுந்தரர் தமது நண்பரும் உடன்வர வேண்டுமென விரும்பினார். சேரமான் குதிரையில் ஏறி கயிலைக்கு விரைந்து சென்றார். சுந்தரர் இன்னும் வராததால் கயிலையின் கதவு அடைக்கப்பட்டிருந்தது. அப்போது சேரமான் ஆதி உலா‘ என்ற பாடலைப் பாடகயிலையின் கதவுகள் திறந்தன. சுந்தரருடன் சேரமான் கயிலைப் பதம் சேர்ந்தார். – பெரிய புராணம்.

***

பல்லக்கில் பவனி வரும் போலிப் புலவர்களின் தோற்றம் !

நிகமம் எனில் ஒன்றும் அற்று நாள்தொறு(ம்) நெருடு கவி

கொண்டு வித்தை பேசிய … வேதப் பொருள் என்றால் ஒரு சிறிதும்

தெரியாமல், தினமும் (அங்குமிங்கும் கற்ற) மொழிகளைத் திரித்து இயற்றிய

நிழலர் சிறு புன் சொல் கற்று வீறு உள பெயர் கூறா … போலிக்

கவிகள் சில அற்பச் சொற்களைக் கற்று, ஆடம்பரமான பட்டப் பெயர்களை வைத்துக்கொண்டு,

நெளிய முது தண்டு சத்ர(ம்) சாமர(ம்) நிபிடம் இட வந்து …

(தூக்குவோர்களுடைய முதுகு) நெளியத் தக்கக் கனத்த பல்லக்கு, குடை, சாமரம் (இவைகள் பரிசாகப் பெற்று) நெருங்கும்படியாக (உலவிக் கொண்டு) வந்து,

கைக்கு மோதிர நெடுகி அதி குண்டல ப்ரதாபமும்

உடையோராய் … கையில் மோதிரமும், (காதில்) நீண்டு தொங்கும் ஒளி மிக்க குண்டலங்களைத் தாங்கிய சிறப்பும் உடையவர்களாய்,

முகம் ஒரு சம்பு மிக்க நூல்களும் முது மொழியும் வந்து

இருக்குமோ எனில் … அவர்களது முகமானதுஒரு செய்யுளும்

வசனமும் கலந்த நூல்களும், திருக்குறள் போன்ற பழைய நூல்களும் விளக்கக் கூடுமோ என்று கேட்டால்,

முடிவில் அவை ஒன்றும் அற்று வேறொரு நிறமாகி முறியும்

அவர் தங்கள் வித்தை தான் இது … அவை ஒன்றும் தெரியாததால்

வெட்கத்தால் (முகம்) வெளுத்து, இறுதியில் மனம் குலைந்து

போனவர்களுடைய வித்தைதான் இக்கல்வி எல்லாம்.

முடியவு(ம்) உனை நின்று பத்தியால் மிக மொழியும் வளர்

செம் சொல் வர்க்கமே வர அருள்வாயே … (இத்தகைய கல்வி

போதும்,) இது முடிவதாக (இனியேனும்) உன்னை மனம் ஒரு வழியில்நின்ற பக்தியுடன் நிரம்பத் துதிப்பதற்கு, மேலும் மேலும் எழுகின்ற செவ்விய சொற்களின் பெருக்கே எனக்கு வரும்படி அருள்வாயாக.

To be continued……………………………

Tags- திருப்புகழில் ,அருணகிரி நாதர், சொல் அழகும்பொருள் வளமும்- Part 9, அரிய செய்திகள்-டாக்டர்கள்நோய்கள்காவேரிசோழநாடுபோலிப்  புலவர்கள்

எந்தச் செயலையும் யோசித்துச் செய்! (Post No.15,387)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,387

Date uploaded in London – 2 February 2026 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

சுபாஷிதச் செல்வம்!

எந்தச் செயலையும் யோசித்துச் செய்! 

ச. நாகராஜன் 

க்ருதஸ்ய கரணம் நாஸ்தி ப்ராகேவாத: பரீக்ஷியதாம் |
அவிசிந்த்ய க்ருதம் சர்வம் பச்சாத்தாபாய கல்பதே || 

செய்த ஒரு செயலை எப்போதுமே திரும்பப் பெற முடியாது. ஆகவே ஒரு செயலை முன்னதாகவே யோசித்துச் செய்ய வேண்டும். சரியான ஆலோசனை இன்றி செய்யப்படும் அனைத்துச் செயல்களுமே பின்னால் மன வருத்தத்திற்கு இட்டுச் செல்லும். 

க்ருதஸ்ய கரணம் நாஸ்தி ம்ருத்ஸ்ய மரணம் ததா |
கதஸ்ய ஷோஸனா நாஸ்தி  ஹ்ரேதத் வேதவிதாம் மதம் || 

செய்த ஒரு செயலை எப்போதுமே திரும்பப் பெற முடியாது. இறந்தது மீண்டும் உயிர் பிழைத்து மரணத்தை அடைய முடியாது. எது இழக்கப்பட்டதோ அதை நினைத்து வருத்தப்பட முடியாது. இதுவே வேதத்தைக் கற்றறிந்தோரின் பார்வையாகும்.

கும்பம் நிர்மாதி சக்ரேண கும்பகாரோ ம்ருதா முவி |

ததைவ கர்மசூத்ரேண பலம் தாதா ததாதி ச ||

பூமியிலிருந்த களிமண்ணை எடுத்து தனது சக்கரத்தில் ஒரு குயவன் பானையைச் செய்கிறான். அதுபோலவே படைப்பானது (அதாவது விதியானது) கர்ம விதியின் படி  கர்ம பலனைத் தருகிறது.

கும்ப: பரிமிதம்ப: பிபத்யசௌ கும்பசம்பவோப்மோதிம் |

அதிரிச்யதே  சுஜன்மா கஸ்சித் ஜனகம் நிஜேன சரிதேன ||

ஒரு பானையானது குறிப்பிட்ட அளவே தண்ணீரை எடுத்துக் கொள்கிறது. ஆனால் கும்பத்திலிருந்து பிறந்த கும்பமுனியானவர் (அதாவது அகத்தியர்) முழுக் கடலையுமே குடித்து விட்டார். ஒரு நல்ல மகனானவன் தனது செயல்களால் தந்தையையே மிஞ்சுகிறான்.

கும்பா: பயோநிதிபயோஹரணப்ரவூத்தா

  நித்யம் வஹந்தி கில யே விபலதமத்வம் |

சித்ரம் க்ஷணாதிஹ ததேகசமுத்பவேண

   சந்தர்ஷிதா நிகில வாரிதிபானலீலா ||

கடலிலிருந்து நீரை எடுக்கப் பயன்படுத்தப்படும் பானையானது பயனற்ற விஷயங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், என்ன ஆச்சரியம், அதிலிருந்து பிறந்த ஒருவர் விளையாட்டு லீலையாக கடலையே குடித்து விட்டார்!

அகத்திய முனியைப் புகழ்ந்து பாடப்பட்ட சுபாஷிதம் இது!

குமுதேஷ்வதிகம் பாந்தி பதிதாஷ்சந்த்ரமய: |

அதிப்ரக்ருஷ்ட சீலேஷு குலேஷ்விவ சம்ருத்தய: ||

வெள்ளை நிற குமுத மலர்களின் மீது படும் சந்திர கிரணங்கள் அதன் பிரகாசத்தைக் கூட்டுகின்றன. அது போலவே மிக மிக ஒழுக்கமான குடும்பத்தில் பிறந்தவர்களின் நடத்தை மிக அதிகமாகப் பாராட்டப்படுகிறது.

**