ராமன் ஒரு யமன்: புரந்தரதாசர் புகழ்மாலை! (Post.14,249)

Written by London Swaminathan

Post No. 14,249

Date uploaded in Sydney, Australia – 27 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எல்லோருக்கும் முன்னுதாரணமான மனிதன் என்றும் கடவுள் என்றும் பல புலவர்கள் ராமனை வருணித்தனர் . கம்பன் சொன்னதை நாம் எல்லோரும் அறிவோம் .

ராமபிரான் பற்றி கம்பன் 

மும்மைசால் உலகுக்கெல்லாம்

மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும்

தனிப் பெரும் பதத்தை, தானே

இம்மையே, எழுமை நோய்க்கும்

மருந்தினை இராமன் என்னும்

செம்மைசேர் நாமம் தன்னை

கண்களில் தெரியக் கண்டான்–

வாலிவதைப் படலம், கம்ப ராமாயணம்

****

இராம நாமம் நமக்கு என்ன என்ன தரும்?

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராம என்ற இரண்டெழுத்தினால்.

****

நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீ டியல் வழியதாக்கும் வேரியம் கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறு பட்டழிய வாகை

சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவார்க்கே.

இராமனுடைய இரண்டெழுத்தைச் சொன்னால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். செல்வம், ஞானம் (நல் அறிவு), புகழ், லெட்சுமி கடாட்சம் எல்லாம் கிடைப்பதோடு பாவங்கள் அழிந்து இந்த ஜன்மத்திலேயே ஜன—மரணச் சுழலில் இருந்து விடுதலையும் கிட்டும்.

****

பிராமணர்கள் செய்யும் தர்ப்பண மந்திரத்தில் ராமன் என்ற நாமத்தைச் சொன்னால் எல்லா பபாவங்களும் அகன்றுவிடும் ; சந்தேகமே இல்லை என்று சொல்லி ஸங்கல்பம் செய்கின்றனர்

தர்ப்பண மந்திரம்

தர்ப்பணத்தில் க்ஷத்ரிய அரசனான ராமனின் பெயரை,  பிராமணர்கள் சொல்லுகிறார்கள்:

ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யாப்யந்தர: சுசி:

மானஸம் வாசிகம் பாபம் ஸகுபார்ஜிதம்

ஸ்ரீ ராம ஸ்மரணேனைவ வ்யபோஹதி ந ஸம்சய:

ஸ்ரீ ராம ராம ராம

பொருள்:— அசுத்தமாகவாயினும், சுத்தமாகவாயினும் எந்த நிலையில் இருந்தாலும் எவன் ஒருவன் தாமரைக் கண்ணனை நினைக்கின்றானோ அவன் உள்ளும் புறமும் சுத்தமானவனே.

மனதாலோ, வாக்காலோ, செயலாலோ வந்தடைந்த பாவம் ஸ்ரீ ராமனை நினைத்த மாத்திரத்திலேயே கழிந்து போகும். இதில் சந்தேகம் இல்லை. ஸ்ரீ ராம ராம ராம.

****

தியாகராஜர், பத்ராசலம் ராமதாசர் ஆகியோர்  ராம நாமத்தை உயிர் மூச்சாகக் கொண்டனர் .

மஹாத்மா காந்தி தனக்கு கஷ்டம் நேரிட்டபோதெல்லாம் ராம நாமமே தன்னைக் காப்பாற்றியது என்று சொன்னார் .

ராம நாமம் பற்றி  மஹாத்மா காந்தி பொன்மொழிகள்

இறைவனை அறிய பிரம்மச்சர்யம்

மின்சாரம் சக்தி வாய்ந்தது ; எல்லோரும் அதனால் பயனடைய முடியாது. சில விதிகளைப் பின்பற்றினால்தான் அதை உற்பத்தி செய்ய முடியும் . அதற்கு உயிர் கிடையாது; மனிதன் கஷ்டப்பட்டுதான் அதைப்பற்றிய முழு அறிவையும் அடைகிறான் ; அதே போலவே  நாம் கடவுள் என்று அழைக்கும் சக்தியும் , அவன் பற்றிய விதிகளை அறிந்தால் நம்முள் இருப்பதை அறியலாம்.கடவுளின் விதிகளை அறிவது மெத்த கடினம் என்பதை நாம் அறிவோம், கடவுளை அடைய, ஒரு விதி பிரம்மச்சர்யம் ஆகும். இதை நான் அனுபவத்தில் கண்டேன். துளசிதாஸ் போன்ற பத்தர்கள் இந்த செம்மையான வழியைக் காட்டுகின்றனர். எனக்கு ராம நாமத்தின் சக்தி நான் உருளி காஞ்சன் கிராமத்தில் இருந்தபோது தெரிந்தது.

என்னுடைய சொந்த அனுபவத்துக்கு முக்கியம் தரவேண்டாம்.எனக்கு அந்த கிராமத்த்தில் தான் ராமநாமத்தின் சக்தி தெரிந்தது எல்லா பிரச்சனைகளுக்கும் ராமா நாமம்  தீர்வு தரும்;  யார் ஒருவன் இந்த நாமத்தைப் பயன்படுத்துகிறானோ அவன் சிறிது முயற்சி செய்தாலும் பெரும்பலனை அடைகிறான்.

இதே பாதையில் செல்லும் நான் ஒன்று சொல்லுவேன்; பிரம்மசர்யத்துக்குத் தேவையான மற்ற கட்டுப்பாடுகள் இந்த ராம நாமத்தின் முன்னர்  கொசுறு போன்றதே.. இந்த ஈடு இணையற்ற கருவியை அறியும் முயற்சியில் நாடும் வழிமுறை யாது, நாடித் தேடும் பொருள் யாது என்பதுகூட மறைந்து போகிறது .ராம  நாமத்தை இருதயத்தில் நிறுத்தினால் அதன் அபூர்வ சக்தியை அறியலாம்  இவ்வழியில் இறைவனை அடைய 11 விதிகள் இருப்பதைக் கண்டோம். சத்தியம் என்னும் வழியாக ராமன் என்னும் பொருளைத் தேடினோம்.ராம நாமமும் சத்தியமும்  ஒன்றே அல்லவா ?

 மீண்டும் பழைய விஷயத்துக்கு வருகிறேன் ;பிரம்மச்சர்யம் என்பதன் சரியான பொருள் ஜனன உறுப்பின் மீது முழுக்கட்டுப்பாடு பெறுவதாகும். அதற்கான தங்கச் சாவி ராமநாமம் ஆகும்.

–ஹரிஜன் இதழ் 22-6-1947

****

ராம நாமத்தை முஸ்லீம்கள் எதிர்க்கக்கூடாது!

என்னுடைய பிரார்த்தனைக் கூட்டங்களில் நான் சொல்லும் ராமநாம ராமன் வரலாற்று புருஷனல்ல.அயோத்தி மன்னன் தசரதனின் மகனும் அல்ல. அவன் சனாதன புருஷன். அவனுக்கு சமமான இரண்டாமவன் எவனுமிலன் அத்தகைய ராமனையே நான் வணங்குகிறேன் ; அவன் உதவியையே நாடுகிறேன்; எல்லோருக்கும் உரியவன். முஸ்லீம்கள் அல்லது வேறு எவரும் அவன் பெயரை ஏற்க மறுக்கக் கூடாது. கடவுளை ராமநாமம் என்று கடவுளையே கட்டுப்படுத்த தேவை இல்லை அவர்கள் வேண்டுமானால் தனக்குள்ளே அல்லா என்று சொல்லிக்கொள்ளலாம் .

****

ராமனும் யமனும்!

யார் யாருக்கு ராம பிரான் எதிரி/ யமன் ஆனார் என்று  புரந்தரதாசர் ஒரு பட்டியலே தருகிறார்! இதோ அவரது கீர்த்தனை:

யமனெல்லி காணேனெந்து ஹேள பேடா

யமனே ஸ்ரீராமனெந்து சந்தேஹ பேடா (யமனெந்து)

யமன் எங்கே, காணவில்லையே என்று கேட்க வேண்டாம்

ஸ்ரீராமன்தான் எமன் என்ற சந்தேகம் வேண்டாம்

நம்பித விபீஷணகே ராமனாதா

நம்பதித்த ராவணகே யமனாதா (யமனெந்து)

நம்பித அர்ஜுனகே மித்ரனாதா

நம்பதித்த துர்யோதனகே சத்ருவாதா (யமனெந்து)

(ராமனை) நம்பிய விபீஷணனுக்கு ராமன் ஆனார்

நம்பாத ராவணனுக்கு யமன் ஆனார் (யமனெந்து)

நம்பிய அர்ஜுனனுக்கு நண்பன் ஆனார்

நம்பாத துரியோதனனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)

நம்பித ப்ரஹ்லாதனிகே ஹரியாதா

நம்பதித்த ஹிரண்யக்கே குறியாதா (யமனெந்து)

நம்பித உக்ரசேனகே ப்ருத்யனாதா

நம்பதித்த கம்சக்கே சத்ருவாதா (யமனெந்து)

நம்பிய பிரகலாதனுக்கு ஹரி ஆனார்

நம்பாத ஹிரண்யகசிபுவிற்கு குறி (இலக்கு) ஆனார் (யமனெந்து)

நம்பிய உக்ரசேனனுக்கு உறவினர் ஆனார்

நம்பாத கம்சனுக்கு எதிரி ஆனார் (யமனெந்து)

நம்பிக்கொள்ளி பேக ஸ்ரீ கிருஷ்ண தேவனா

கம்பு சக்ரதாரி ஸ்ரீ புரந்தர விட்டலன (யமனெந்து)

ஸ்ரீ கிருஷ்ணனை இப்போதே நம்பிடுங்கள்

சங்கு சக்கரங்களை உடைய ஸ்ரீ புரந்தரவிட்டலனை நம்பிடுங்கள் (யமனெந்து)

–subham—

Tags– ராமன் , யாமன்,  ராம நாமம் , காந்திஜி, கம்பர், புரந்தரதாசர் 

விதியின் வலிமை! (Post No.12,248)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,248

Date uploaded in Sydney, Australia – –27 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

சுபாஷித செல்வம் 

விதியின் வலிமை! 

ச. நாகராஜன் 

சுபாஷித ஸ்லோகங்கள் வாழ்க்கைக்கு உதவும் பலவித விஷயங்களை சுவாரசியமாகத் தருபவை.

சிலவற்றை இங்குக் காண்போம். 

விதியும் முயற்சியும்

க்ருத: புருஷகார: சன் சோபி தைவேன சித்யதி |
ததாஸ்ய கர்மண: கர்துர: அபிநிர்வர்ததே பலம் ||

மனிதனின் இடைவிடா முயற்சி விதியினால் வெற்றி அடைகிறது.

விதியினாலேயே ஒருவன் ஒருவன் இடைவிடாமல் உழைத்து வெற்றியை அடைகிறான்.

விதி தனித்து பலன் தராது!

க்ருத: புருஷகாரஸ் து தைவ மேவானுவர்ததே |

ந தைவமக்ருதே கிஞ்சித் கஸ்யவித் தாதுமர்ஹதி ||

மனிதனின் சக்தியானது இடைவிடா முயற்சியினால்  விதியையே பின்பற்றுகிறது; ஆனால்  முயற்சி வேண்டி இருக்கும் போது விதி தனித்து எந்த வித பலனையும் தராது.

கர்மங்களின் விளைவுகளை எப்போது அனுபவிக்கவேண்டி வரும்?

க்ருதகர்மக்ஷயோ நாஸ்தி கல்பகோடி ஷதைரபி |

அவஸ்யமேவ போக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் ||

ஒரு மனிதன் செய்த கர்மங்களின் விளைவுகள் கோடி கல்பங்கள் சென்றாலும் அழியாது. ஒருவனது கர்மங்களின் விளைவுகளை அவை நல்லவையோ கெட்டவையோ அவன் அனுபவித்தே ஆக வேண்டும்.

கடமையைச் செய்த வேலைக்காரனுக்கு என்ன செய்ய வேண்டும்?

க்ருதக்ருத்யஸ்ய ப்ருத்யஸ்ய க்ருதம் நைவ ப்ரணாஷயேத் |

பலேன மனஸா வாசா த்ருஷ்ட்யா சைனம் ப்ரஹர்ஷயேத் ||

தனது கடமையைச் செய்த ஒரு வேலைக்காரனின் உழைப்பை நிச்சயமாகத் துன்பப்படும்படி விடக்கூடாது அவனது பணியை இதயபூர்வமாகவும் சொல்லினாலும் பார்வையினாலும் பாராட்டி அவனை மகிழ வைக்கவேண்டும்.

நூறு வருஷம் வாழ்வதை ஒரு நாள் எதைச் செய்வது மேலானது?

க்ருதகங்கோதகஸ்நானம் ச் ருதபாரதசத்கதம் |

அசிந்தாச்யுதபாதாப்ஜம்  தினம் கல்பசதாத்  வரம் ||

ஒரு நாள்

கங்கையில் ஸ்நானம் செய்வது,

மஹாபாரதக் கதையைக் கேட்பது

விஷ்ணுவின் பாதங்களை நமஸ்கரிப்பது ஆகியவை நூறு நூறு வருஷங்கள் வாழ்வதை விட மேலானது.

யாரை நண்பனாகக் கொள்ள வேண்டும்?

க்ருதக்ஞம் தார்மிகம் சத்யம் அக்ஷுத்ரன் த்ருடபக்திகம் |

ஜிதேந்த்ரியம் ஸ்திதம் ஸ்தித்யாம் மித்ரமத்யாகி சேஷ்யதே ||

எவன் ஒருவன் நன்றி உள்ளவனாக இருக்கிறானோ, தார்மிகமாக இருக்கிறானோ, சத்யவாதியாக இருக்கிறானோ, பெரிய மனதுடன் இருக்கிறானோ, பக்தியுள்ளவனாக இருக்கிறானோ, தன் புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறானோ, தனது மரியாதை,மதிப்பைக் காத்து வைத்திருக்கிறானோ, ஒருபொழுதும் நண்பனைக் கைவிடாமல் இருக்கிறானோ அவனையே நண்பனாகக் கொள்ள வேண்டும்.

எப்போது ஒருவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது?

க்ருதஞஸ்வாமிஸம்சர்கம் உத்தமஸ்த்ரீ பரிக்ரஹம் |

குர்தன் மித்ரலோபம் ச நரோ நைவாதசோந்ததி ||

ஒரு பெரும் மகானின் தொடர்பு, ஒரு கற்புள்ள மனைவியைத் திருமணம் செய்து கொள்வது, பேராசை இல்லாத ஒருவனை நண்பனாகக் கொள்வது ஆகிய இவற்றை எவன் ஒருவன் கொண்டிருக்கிறானோ அவனுக்கு ஒருபோதும் துன்பம் வராது!

***

ஆதிவாசி மொழி சொற்கள் -சிட்னி மியூசியத்துக்கு விஜயம்-29 (Post.14,247)

Written by London Swaminathan

Post No. 14,247

Date uploaded in Sydney, Australia – 26 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 29

சிட்னியில் இலவசமாகப் பார்க்கக்கூடிய கடைசி மியூசியத்தையும் பார்த்துவிட இன்று பிப்ரவரி 26-ஆம் தேதி (2025) சென்றேன் ஆனால் ஓவியங்கள் படங்கள் இல்லை. ஆதிவாசிகள் மற்றும் ஆஸ்திரேலிய வரலாற்றைக் கூறும் டாக்குமெண்டரி படங்கள் மட்டும் மூன்று அறைகளில் ஓடிக்கொண்டிருந்தன. யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து பார்க்கலாம். அவைகளில்  ஆதிவாசிகளின் வாழ்க்கை பற்றிய பாறை வரைபடங்கள், கிறுக்கல்கள் மூலம் விளக்கினார்கள் ; ஆஸ்திரேலியக் குடியேற்றத்தின்போது வெள்ளைக்காரர்கள் கண்டுபிடித்த தாவரங்களை படங்களுடன் விளக்கும் டாக்குமெண்டரி படமுமிருந்தது.

அந்தக்கால கப்பல்களின் மாடல் வடிவங்களும் காட்சியில் இருந்தன.

நான் கண்ட சுவையான விஷயம் ஆதிவாசிகளின் மொழி பற்றி அவர்கள் கொடுத்த அட்டைப்படம் ஆகும். மியூசியம் இடம்பெற்ற இடத்தில் வாழ்ந்த பழங்குடி இன. மக்கள் பேசிய சொற்கள் அந்த அட்டையில் உள. அவைகளைக் கீழே கொடுக்கிறேன். மொழியியல் அறிவு படைத்தோர் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் அந்த சொற்களுடன் எந்த தொடர்புமில்லை என்பதை அறிவார்கள்

The Eora are an Aboriginal Australian people who were the original inhabitants of the Sydney region. The term “Eora” is an Aboriginal word that means “the people” or “from this place”

ஆஸ்திரேலியாவில் 250 ஆதிவாசி இனங்கள் இருப்பதை நாம் அறிவோம்; சிட்னி நகர் இப்போதுள்ள இடத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வசித்த இனம் இயோரா எனப்படும். இயோரா என்றால் மக்கள் அல்லது இந்த இடத்திலிருந்து என்று பொருள்.

இதோ அந்த இனத்தினர் பேசிய சொற்களின் பட்டியல் :

பமல்- பூமி, களிமண், நிலம்

நாங்கமாய்- கனவு

வருவி- பெண்

பங்களா – கூடை

குவிங்- சூரியன்

டையினுராகங் – கிழவி

முருங்கல்- இடி முழக்கம்

கானிங்- குகை

இங்கரமாங்- ஒருவகை நடனம்

கயநாயங்-கிழவன்

புருவா -மேகம்

நுவி- படகு

உங்கர்ரா – பையன்

பரா- மீன்பிடி தூண்டில்

குணங்- ஈட்டி

அரிக்கராங்- கடல்

வர்ராவல்- பால்வெளி மண்டலம்

முங்கி – மின்னல்

துருகா – விண்கல், எரி நடச்சத்திரம்

டிஜனாபா- சிரிப்பு

கரட்டியகாந்- டாக்டர், புத்திசாலி

புருவங்- தீவு

****

எனது கருத்து

பெரும்பாலான சொற்கள் இங் ஒலியில்  முடிவத்தைக் கவனிக்கவும் மேலும் பல சொற்கள்  முடிகின்றன.

எடுத்துக்காட்டு– பார்ரமேட்டா , வருங்கா வைத்தாரா

இன்னும் ஒரு குறிப்பு – ர்ரா ஒலி

மொத்தத்தில் பழ ங்குடி மக்களின் சொற்கள் ங்ர்ரா,  ஒலியில் முடிகின்றன .

இந்தியாவில் வடகிழக்கு மாநில மொழிகள் இங் சப்தத்தில் முடிவதை ஒப்பிடலாம்

ஷில்லாங், கடுங், டனானங் etc

இது சீனா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் வரை பரவியுள்ளன

எடுத்துக்காட்டு- பீகிங் , டா நாங்

–subham—

Tags- ஆதிவாசி, மொழி சொற்கள்,  சிட்னி மியூசிய,  விஜயம் , ஆஸ்திரேலியாவுக்கு வாருங்கள்! அதிசயம் அனைத்தையும் பாருங்கள்!- Part 29

Hindu Crossword26225 (Post No.14,246)

Written by London Swaminathan

Post No. 14,246

Date uploaded in Sydney, Australia – 26 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

26225

1 2  3  4 
          
          
5      6 7
          
8         
          

Across

1.name for all the ten incarnations of Lord Vishnu

5.Mewar king who foght against Akbar.

8.  Story or speech sweet as nectar.

Down

1.Krishna’s city in Gujarat under the sea.

2.One of the Jyotirlinga shrines in Gujarat

3. xxxxx refers to “(1) Stage of life, either student (brahmacārī), householder (gṛhastha), retired (vānaprastha) or renounced (sannyāsa)[; also hermitage

4. A goddess to whom one may offer an oblation when desiring a son; even Tamil villagers have this Goddess name.

6.To break, to tear in Sanskrit

7.love, affection in Hindi and many North Indian languages.

26225

D 1AS2AVA3TAR4A
W O  S  A 
A M  H  K 
R5ANAPRAT6AP7
A A  A R Y
K8ATHAMRUTA
A H  A T R

–Subham—

மூளையின் முன்மடல் (FRONTAL LOBE) மூளையின் உள்ளே ஒரு குட்டி மூளை! (Post.14,245)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,245

Date uploaded in Sydney, Australia – –26 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

20-2-25 அன்று கல்கி ஆன் லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!

மூளை ஆராய்ச்சி

மூளையின் முன்மடல் (FRONTAL LOBE) மூளையின் உள்ளே ஒரு குட்டி மூளை!

ச. நாகராஜன்

மனித மூளை பற்றிய ஆராய்ச்சியில் அவ்வப்பொழுது நமக்குக் கிடைக்கும் தகவல்கள் நம்மை மலைக்க வைக்கின்றன.

ஒரு தகவலை அடுத்து வரும் இன்னொரு தகவல் முந்தைய தகவலைப் புறம் தள்ளி இன்னும் அதிகமாக பிரமிக்க வைக்கிறது.

எடுத்துக்காட்டாக மூளையில் எத்தனை செல்கள் உள்ளன என்பதைக் கணக்கிட்ட விஞ்ஞானிகள் 14 கோடி என்று எண்ணிக்கையைத் “துல்லியமாகக்” கூறினர்.

அடேயப்பா என்று பிரமித்தோம்.

அடுத்து இப்போது 86 பில்லியன் அதாவது 8600 கோடி நியூரான்கள் மூளையில் உள்ளன என்ற தகவல் வந்தது. பூமியில் உள்ள மனிதர்களை விட பல மடங்கு அதிகம் இது என்று கணக்கிட்டு அடேயப்பா என்று இன்னும் பிரமித்தோம்.

இப்போதோ கோடானு கோடி நியூரான்கள் உள்ளன. ஒவ்வொன்றும் செயல்பாடுடையது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனை எதனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்று திகைக்கிறோம்!

புதிதாகப் பிறந்த குழந்தைக்கே 100 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்) நியூரான்கள் இருக்கிறதென்றும் ஒரு நிமிடத்திற்கு இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் நரம்பு செல்கள் என்ற விகிதத்தில் அது சாதாரணமாக வளர்ச்சி அடையும் என்றும் தெரியவருகிறது.

இதைப் பற்றிய விஞ்ஞானக் கட்டுரைகள் மூளை மாடலை வைத்து விளக்குகின்றன!

மூளையின் பகுதிகள் ஒவ்வொன்றும் ஒரு அதிசயமே. இடது பக்க மூளை வலது பக்க மூளை என்று பலகாலமாக சொல்லப்பட்டு வந்த அதிசயங்கள் ஒரு பக்கம்! ஃப்ரண்டல் லோப்  மற்றும் கார்டெக்ஸ் எனப்படும் புறணி உள்ளிட்ட மூளை அதிசயங்கள் இன்னொரு பக்கம்.

FRONTAL LOBE (ஃப்ரண்டல் லோப்)  எனப்படும் மூளையின் முன் மடலைப் பற்றிய ஆராய்ச்சியை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த உடலியல் வல்லுநரான டெல்காடோ(Physiologist DELGADO) என்பவர் அவரது நோயாளியிடம் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று தன்னருகில் இருந்த ஒரு பட்டனை அமுக்கினார்.

எதிரில் இருந்தவரிடம் அவ்வளவாக வீரியம் இல்லாத ஒரு மின்சக்தி, அவரது மூளை முன்மடலில் பாய்ந்தது.

பேசிக்கொண்டே இருந்தவர் திடிரென்று ஒரு வார்த்தை சொல்லும்போதே பாதியில் பேச்சை நிறுத்தினார். அப்படியே செயலற்று இருந்தார்.

டெல்காடோ மின்சக்தியை நிறுத்தினார்.

அவரை நோக்கி, “எப்படி உணர்கிறீர்கள்?” என்றார்.

“எனது மூளை செயலற்று நின்றுவிட்டதைப் போல உணர்ந்தேன். மதுவைக் குடித்தால் போதைமயக்கம் வருமே அதுபோலத்தான் இருந்தது” என்றார்.

 ஃப்ரண்டல் லோப்! –  மூளையின் உள்ளே உள்ள குட்டி மூளை செய்யும் அற்புதம் இது.

 மிருகங்களில் பலவற்றிற்கு இந்த உறுப்பே கிடையாது.

 இதற்கும், கார்டெக்ஸ் எனப்படும் புறணிக்கும் (மூளையின் மேல் உறைக்கும்- CORTEX) நிறையத்தொடர்புகள் உண்டு.

 இதை ஆராய அனோகின் (Anokhin) என்ற மூளையியல் பேராசிரியரும் அவருக்கு உதவி செய்த பெண்மணியான டாக்டர் நினா ஷுமிலினா(Dr. Nina Shumilina) என்பவரும் பல ஆராய்ச்சிகளை நாய்கள் மீது செய்தனர்.

 முதல் மாடியிலிருந்து ஜன்னல் வழியே ஒரு பிஸ்கட்டைத் தூக்கி எறிந்த போது அதைப் பார்த்த நாய் அறையின் கதவு இருக்கும் வழியாக வெளியே வந்து படிகள் வழியே இறங்கித் தோட்டத்திற்குச் சென்று சரியாக அந்த பிஸ்கட்டைக் கண்டுபிடித்து வாயில் கவ்விக் கொண்டு சந்தோஷமாக வந்தது.

 இது நாயின் மூளைச் செயல்பாட்டைக் காண்பிக்கும் ஒரு நிகழ்ச்சி.

 ஆனால் நினா தான் வளர்த்த ஏழு நாய்களின் மூளை மடல்களையும் அறுவை சிகிச்சை செய்து அகற்றினார். Frontal Lokbectomy எனப்படும் இந்த ஆபரேஷனுக்குப் பின்னர் நடந்தது என்ன?

 நாய்களின் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டபோது ஓடி வரும் அவைகள், இப்போது சோம்பேறித்தனமாக தலையை உயர்த்தின.

உணவுத் துண்டுகளைத் தூக்கி எறிந்த போது ஒன்று விடாது பொறுக்கித் தின்னும் அந்த நாய்கள் எதிரில் அதன் பார்வையில் இருந்த ஒரு துணுக்கை மட்டுமே எடுத்துக் கொண்டன.

இப்படி ஒவ்வொரு செயல்பாட்டிலும் மாறுதலைக் கண்டார் நினா.

மூளையின் முன்மடல் எவ்வளவு முக்கியம் என்பதை அவரது ஆராய்ச்சிகள் உறுதிப் படுத்தின.

இந்த ஆய்வுகள் மேம்படுத்தப்பட்டு இப்போது மனித மூளையின் முன்மடலை ஆக்கபூர்வமாக இயங்க வைக்க வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவற்றைச் செய்வது சுலபம் தான்!

விஞ்ஞானிகள் பரிந்துரைக்கும் வழிகள்:-

1)   வார்த்தை விளையாட்டுகளை விளையாடுங்கள். வார்த்தை புதிர் போன்றவை – எதானாலும் சரிதான்!

2)   மூளைக்கான குறுக்கெழுத்துப் போட்டி, மற்றும் ப்ரெய்ன் கேம்ஸ் -மூளை விளையாட்டுகளை -விளையாடுங்கள்.

3)   ஒரு புதிய சமையல் ரெசிபியை செய்து பாருங்கள்.

4)    உடற்பயிற்சியை மறக்காமல் தினம் தோறும் செய்யுங்கள். நடைப்பயிற்சி சாலச் சிறந்தது.

5)   தியானம் அவசியம்.

6)   சரியான தூக்கம் அன்றாடம் தேவை.

7)   உணவில் பீட்ரூட் சேர்க்க வேண்டும். அதில் நைட்ரேட் உள்ளது. அது இரத்த நாளங்களை விரிவாக்க உதவும்.

 இவற்றோடு சமூக சேவை செய்வது மூளையை ஊக்குவிக்கிறது என்பதை சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 மூளையின் முன்மடல் நன்கு இயங்கினால் நமக்கு வெற்றி தான்!

**

March 2025 Calendar with Mirabai Quotes(Post No.14,244)

Written by London Swaminathan

Post No. 14,244

Date uploaded in Sydney, Australia – 25 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Festivals –Ramkrishna Jayanti-1;  World Women’s Day-8; Masi Magam-12; Holika dahan -13; Holi- 14 and Karadaiyan Nonbu;  Chhatrapati Shivaji Maharaj Jayanti-17; Parsi New Year-20; Ugadi or Gudi Padwa or Telugu New Year- 30, Muslim Festival Ramzan- 31.

Full moon/ Purnima 13; New moon/Amavas 29;

Ekadashi – Hindu Fasting Days -09/10, 25/26;

AUSPICIOUS DAYS

IN SOUTH INDIA –MARCH  2 , 3 திங்கள், 9 , 10 ,, 12 புதன், 16 , 17 .

*****

auspicious/ Shubh Muhurats according to North Indian Customs:

1st March 2025 (Saturday), 2nd March 2025 (Sunday),

6th March 2025 (Thursday), 7th March 2025 (Friday),

12th March 2025 (Wednesday).

****

MIRABAI QUOTES ARE TAKEN FROM DIFFERENT WEBSITES, THANKS.

 March 1 Saturday

“Don’t forget love;

it will bring all the madness you need

to unfurl yourself across

the universe.”

****

March 2 Sunday

“I want you to have this,

all the beauty in my eyes, and the grace of my mouth,

all the splendor of my strength,

****

March 3 Monday

“My Love, He is here inside. He does not leave.

He does not need to arrive.”

****

March 4 Tuesday,

“I am not of this body, not of this world; I am of Krishna, and Krishna is of me.”

****

March 5 Wednesday

“His music fills the air, and my soul dances to His divine melody.”

****

March 6 Thursday

“Even the gods envy those who are touched by the Lord’s love.”

****

March 7 Friday

“The path to Krishna is paved with faith, surrender, and undying love.”

****

March 8 Saturday

“In His eyes, I see the universe; in His embrace, I find my eternal home.”

****

March 9 Sunday

“I came for the sake of love-devotion; seeing the world, I wept.”

*****

March 10 Monday

I have no fear, no worries; I am completely surrendered to the will of my Beloved.

****

March 11 Tuesday

“My heart is like a flower, blooming in the garden of love; Krishna is the gardener who tends to it with care.”

****

March 12 Wednesday

“I have found true happiness in the company of my Beloved; nothing else matters to me.”

****

March 13 Thursday

“I am like a bee, intoxicated by the nectar of Krishna’s love; I cannot bear to be separated from Him.”

****

March 14 Friday

“Krishna is my refuge, my shelter, my everything. In His arms, I find peace and contentment.”

****

March 15 Saturday

“I have given my heart to my beloved, Krishna. What need have I for this world?”

****

March 16 Sunday

“My Lord, my heart burns with longing for you, like a lotus yearning for the sun.”

****

March 17 Monday    

“I have found my soul’s eternal companion in Krishna; none can separate us.”

I went to the root of things, and found nothing but Him alone.

****

March 18 Tuesday 

“When I sing, I sing only of Krishna; when I dance, I dance only for Him.

“My love for Krishna is unending; it is a flame that burns forever.”

****

March 19 Wednesday

“The world cannot chain me; my heart belongs to the one who holds the flute.”

****

March 20 Thursday

“Renounce your pride and worldly ties; only then can you truly love Krishna.”

****

March 21 Friday

“I have left my family, my palace, and my wealth; my soul belongs only to the Lord.”

****

March 22 Saturday

“Gold and silver hold no value for me; my only treasure is the name of Krishna.”

****

March 23 Sunday    

“I am drunk on the nectar of Krishna’s name; no worldly intoxication can compare.”

****

March 24 Monday     

“Krishna’s name is the boat that carries me across the ocean of life.”

****

March 25 Tuesday   

“The heat of midnight tears will bring you to God.”

****

March 26 Wednesday

“My friend, I went to the market and bought the Dark One.

You claim by night, I claim by day.

Actually I was beating a drum all the time I was buying him.

You say I gave too much; I say too little.

****

March 27 Thursday

Actually, I put him on a scale before I bought him.

What I paid was my social body, my town body, my family body, and all my inherited jewels.

****

March 28 Friday

The Dark One is my husband now.

Be with me when I lie down; you promised me this in an earlier life.”

****

March 29 Saturday

“Take no pride in the body,

It will soon be mingling with the dust.

This life is like the sporting of sparrows,

It will end with the onset of the night.”

****

March 30 Sunday

“Awake to the Name

To be born in a human body is rare,

Don’t throw away the reward of your past good

Deeds.

****

March 31 Monday

Life passes in an instant – the leaf doesn’t go back to

the branch.

The ocean of rebirth sweeps up all beings hard,

Pulls them into its cold-running, fierce, implacable

currents.

Giridhara, your name is the raft, the one safe-passage

over. Take me quickly.

All the awake ones travel with Mira, singing the

name.

She says with them: Get up, stop sleeping – the days

of a life are short.

—–SUBHAM—–

Tags- March 2025 Calendar, Mirabai Quotes

Hindu Crossword25225 (Post No.14,243)

Written by London Swaminathan

Post No. 14,243

Date uploaded in Sydney, Australia – 25 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Across

1.Holiest Hindu book from Kurukshetra

5. In Sanskrit, “it means “water pot,” “bowl,” or a small pond, essentially referring to a vessel used to hold water; it can also signify “jasmine flower” depending on context. 

6. 1) Burning, combustion; ओषमित् पृथिवीमहम् (oṣamit pṛthivīmaham) Ṛgveda 1.119.1.

2) Cooking, baking.

8. 1) A wave, billow; पयो वेत्रवत्याश्चलोर्मि (payo vetravatyāścalormi) Meghadūta 24; R.5.61,12.85.

2) Current, flow.; girls’ name

9. proficient, adept, expert; also boys’ name

11. a kind of pulse; black gram, Dolichos pilosus..main ingredient of Idli, Dosa and Vada

12. One of the Three Powers; other two being Gnan and Kriya Shakti

Down

1…… sage was one of the seven great sages, the SaptaRishis. He is a ManasaPutra (wish-born-son) of Lord Brahma. His father is Brahma, who simply wished him into existence, to assist in the process of creation. He is married to Khyati, the daughter of Daksha. He has two sons by her, named Dhata and Vidhata.

2.  is a multifaceted goddess in various traditions, primarily revered in Hinduism as another name for Parvati, the divine consort of Lord Shiva. Also A young girl eight years old

3. A tapasvinī famed in Ṛgveda. She was the grand-daughter of Dṛgata maharṣi and daughter of sage Kakṣīvān. As she contracted leprosy in her very childhood nobody came forward to marry her. Ultimately she composed a mantra in praise of Aśvinīdevas. They cured xxxxxxx of leprosy and she got married. (Ṛgveda, Maṇḍala 1, Anuvāka 7, Sūkta 117).

4. this Kashmiri  town name was mentioned in the Nilamata Purana and other texts. According to the Gazetteer of Kashmir and Ladak, it is named after xxxxx the great serpent of Vishnu and the emblem of eternity.  Later it was distorted to endless spring during Muslim rule.

7.fried spicy doughnut of Tamils ↑

10.Sanskrit meaning- sound, shrieking;howling, roaring; Hindi meaning Semolina with which Dosa and Kesari made.

13.Goddess; English word SIR and Tamil word THIRU derived from it according to Linguists↑

25225

1  2    3  4
            
  5     6   
      7 ↑     
8           
      910    
11           
            
 12     13      

25225

B1HAG2AVADG3ITA4
R  A  D H  N
I K5UNDA O6SHA
G  R  V7 ↑ S  N
U8RMIR   H  T
M     P9R10AVIN
U11RAD I A   A
N    R V   G
I 12CCHAS 13HAKTI 

–subham—

Tags– Hindu Crossword25225

தமிழ் தெரியுமா25225 ? – (Post No.14,242)

Written by London Swaminathan

Post No. 14,242

Date uploaded in Sydney, Australia – 25 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்; சொற்களைக் கண்டுபிடிக்க அம்புக்குறிகளையும் பின்பற்றுக.

25225

1  2 3   
         
    4←    
       5↑←6
  7  8   
  ↑ 9 ←   10 

குறுக்கே

1.தமிழ் இசை பாடியவர்; நடிகர்; அண்ணாமலை பல்கலைக்கழக இசைத் துறை அறிஞர்;

4. போகரின் சீடர்; பழனியில் சமாதி அடைந்த சித்தர் ←

4.அழுகிய பழங்களில் நெளியும்;

6.நளவெண்பா பாடிய புலவர்,

7.பவளம்←

9. பத்து தலை அரக்கன்  ←

10.கிளி பச்சை வண்ணம் மாங்காய் மூக்குப் அறவை;      வது மணமகள் ↑, ராகி

கீழே

1. பூமியைத் தாங்கிய திருமால்; 

2.இப்போதைய பெயர் பாட்னா; தாவரத்துக்கும் பெயர்  

3. கம்பர் பிறந்த ஊர்; ஆமருவியப்பன் கோவில்; 

5. பொன்னியின் செல்வன் ஆசிரியர்;

6.நீரின் பெயர் உடைய ஊர்; கல்லடா நதியின் குறுக்கே கட்டப் பட்டுள்ள மிகப்பெரிய தொங்கு பாலம் உள்ள இடம் ↑  

8. இதை வாறினால் குளங்கள் ஏரிகள் கிணறுகள் ஆழமாக இருக்கும்;

 9.கேழ்வரகின் பெயர் ↑   

*************

விடைகள்

த1ண்பா2ணிதே3சிர்
     லூ
ணிபாப்லிபு 4←ழு  
   திந்ழேக5பு↑←6
 து7கிர்தூ8 ல் 
ன்வ↑↑ 9 ரா← ர் கி10ளி

—subham—-

 Tags-தமிழ் தெரியுமா25225

அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் அற்புத நூல் (Post No.14,241)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,241

Date uploaded in Sydney, Australia – –25 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

19-2-25 அன்று கல்கிஆன் லைன் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை

MOTIVATION

அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கரின் அற்புத நூல்: Be Useful: Seven Tools  for Life 

ச. நாகராஜன்

 முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு முக்கிய நூல் ‘பீ யூஸ்ஃபுல்: செவன் டூல்ஸ் ஃபார் லைஃப்’ (Be Useful: Seven Tools for Life.)

இதை எழுதியவர் உலகின் ஆகப்பெரும் பாடிபில்டரான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்.

1947ம் ஆண்டு ஆஸ்திரியாவில் பிறந்த  ஸ்வார்ஸ்னேக்கர் மிகுந்த ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். வீட்டில் கழிப்பறை கூடக் கிடையாது.

ஆனால் படிப்படியாக உயர்ந்து ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் ஆனார். பின்னால் கலிபோர்னியா மாநிலத்தில் கவர்னராகப் பொறுப்பேற்றார்.

கின்னஸ் ரிகார்டில் உடலை நன்கு பேணும் பாடிபில்டர் என்ற புகழைப் பெற்றார்.

சிறு வயதில் ரெக் பார்க் என்ற பிரிட்டிஷ் பாடிபில்டர் பற்றி அவர் படித்தார். அவரால்  வாழ்க்கையில் ஒரு தெளிவான பார்வையைப் பெற்று, விடாமுயற்சியால் பெரிய பாடிபில்டர் ஆனார். ஒரு நாளைக்கு ஐந்து மணி நேரம் வெய்ட் லிப்டிங் பயிற்சியை விடாது செய்வார்.

தனது சொந்த அனுபவத்தினால் வாழ்க்கையில் உயர ஏழு கருவிகளை (விதிகளை) இவர் தருகிறார்.

ஏழு கருவிகள் எவை தெரியுமா?

  1. Have a clear vision.
  2. Never think small.
  3. Work your ass off.
  4. Sell, sell, sell.
  5. Shift gears.
  6. Shut your mouth, open your mind.
  7. Break your mirrors.

1.      தெளிவான பார்வை தேவை!

குறிப்பிட்ட குறிக்கோளைத் தெளிவாகக் கொள்ள வேண்டும். மனச்சித்திரத்தில் அதைக் கொண்டு அதனால் எப்போதும் உத்வேகம் பெற வேண்டும். அடிக்கடி அதை மதிப்பீடு செய்து வர வேண்டும். ஒரு போர்டில் குறிப்பிட்ட குறிக்கோளை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

2.      பெரிதாக நினைசிறிதாக நினைக்காதே!

சந்தேகப்பேர்வழிகளையும் ஊக்கத்தைக் கெடுப்பவர்களையும் உங்கள் அருகில் அண்ட விடாதீர்கள். நெகடிவ் பர்ஸனாலிடி எனப்படும் எதிர்மறையாகப் பேசுவோர் ஆபத்தானவர்கள். ஆகவே நம்மைச் சுற்றி எப்போதும் ஆக்கபூர்வமாகப் பேசி ஊக்கமளிப்பவர்களை மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும். சிறிய வெற்றி பெற்றால் கூட அதைக் கொண்டாட வேண்டும்.

3.        உழைத்து முன்னேறு!

உழைப்பு, உழைப்பு. கடும் உழைப்பு தேவை.

பாடிபில்டர்; மிக அதிக சம்பளத்தைப் பெற்ற முன்னணி ஹாலிவுட் நடிகர்; கலிபோர்னியா கவர்னர் – இதெல்லாம் எப்படி சாத்தியம். ஒரே வார்த்தை – உழைப்பினால் தான்!

4.        விளம்பரமும் தேவை தான்!

தன்னைத் தானே சமுதாயத்தில் உயர்த்திக் கொள்ள போட்டிகளில் வென்றால் மட்டும் போதாது. 19 வயதில் மிஸ்டர் யுனிவர்ஸ் போட்டியில் இரண்டாவதாக வந்த அர்னால்ட்,, மீடியாவைத் தன் பக்கம் இழுக்க நீச்சல்உடை அணிந்து போஸ் கொடுத்தார்.

அவ்வளவு தான் அன்றிலிருந்து மீடியா அவர் பக்கம். இந்த ஸ்டண்டும் தேவை தான். தன்னைத் தானே பல்வேறு விதங்களில் முன்னிலைப் படுத்திக் கொள்வது இன்றியமையாதது.

30 நாட்களில் 30 நகருக்குப் பயணம் செய்தார் அவர்! எதற்காக? அவரது ‘அர்னால்ட் – தி எஜுகேஷன் ஆஃப் எ பாடிபில்டர்’ என்ற தனது புத்தகத்தை விளம்பரப்படுத்த! விளைவு? அவரது புத்தகம் 2,50,000 காப்பிகள் விற்று புத்தகப் பதிப்பாளரையே அதிர வைத்தது!

சமூக ஊடகங்களை ஒரு போதும் விடாதே; விளம்பரம் செய்து கொண்டே இரு; வாய்ப்புகளைக் கவனி- பயன்படுத்து! இது தான் அவர் வழி!

5.        ஷிப்ட் கியர்ஸ்!

தோல்வியைக் கண்டு பயப்படாதே. தோல்விக்கான காரணங்களைப் பற்றிப் புகார் செய்வதை விட்டுவிட்டு அவற்றை எப்படி மீறி முன்னேறுவது என்பதை யோசி! தோல்வியில் நிறையக் கற்றுக் கொள் – திருப்பி எழுவேன் என்று உறுதி செய்து கொள்!

6.வாயை மூடுமனதைத் திற!

ஒரு கடல்பஞ்சு போல இரு. அதிகமதிகம் அறிவைப் பெறு. பேசுவதை விட கேட்பதை அதிகமாக்கு!

7.        கண்ணாடியை உடை!

அர்னால்டின் மாமனார் அவருக்குக் கூறிய புத்திமதி இது : உனது கண்ணாடியை உடை!

அதாவது இந்த சமூகத்தில் அனைவரும் தன்னைப் பற்றியே சிந்திக்கிறார்கள். அதை விட்டு விட்டு நீ வாழும் சமூகத்திற்குச் சேவை செய்; கண்ணாடிக் கூண்டை உடைத்து வெளியே வா, என்பது அவர் கொள்கை!

சுற்றுப்புறச் சூழலில் அதிக அக்கறை கொண்டு அதற்காக வெகுவாகப் பாடுபட்டு வருகிறார் அர்னால்ட்.

சுருக்கமாகச் சொல்லப் போனால்…..

நான்கே வார்த்தைகளில் அர்னால்ட் தனது மந்திரக் கொள்கையை வலியுறுத்தி விடுகிறார் : STAY BUSY; BE USEFUL – சுறுசுறுப்பாய் இருபயனுள்ளவனாக இரு!

போகிற போக்கில் சொல்லப்பட்டவை அல்ல இவை!

சொந்த அனுபவத்தில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் கூறும் அனுபவ வார்த்தைகள்!

அருமையான நூல்! படிப்பதற்கு மட்டும் அல்ல; பயன்படுத்தவும் தான்!

புத்தக விலை அமெரிக்க டாலர்கள் $ 18-17

(Second hand book) பயன்படுத்தப்பட்ட புத்தகம் அமெரிக்க டாலர்கள் $2-88

பக்கங்கள் 288

***

மார்ச் 2025 காலண்டர்; புரந்தரதாசர் பொன்மொழிகள் (Post No.14,240)

Written by London Swaminathan

Post No. 14,240

Date uploaded in Sydney, Australia – 24 February 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

2025 மார்ச் மாத பண்டிகைகள் மற்றும் விரதங்கள்

08 –      உலக மகளிர் தினம்12 –மாசி மகம்; 14-காரடையான் நோன்பு ஹோலி30யுகாதி31 – ரம்ஜான் ,

9/10 , 25/26    ஏகாதசி விரதம்; 14-பௌர்ணமி ; 29-அமாவாசை.

2025 மார்ச் மாத முகூர்த்த தினங்கள்

மார்ச் 2 ஞாயிறு, 3 திங்கள், 9 ஞாயிறு, 10 திங்கள், 12 புதன், 16 ஞாயிறு, 17 திங்கள்.

வட இந்திய சம்பிரதாயப்படி- 12,6,712

Here are auspicious/ Shubh Muhurats according to North Indian Customs:

1st March 2025 (Saturday), 2nd March 2025 (Sunday),

6th March 2025 (Thursday), 7th March 2025 (Friday),

12th March 2025 (Wednesday).

****

Thanks to dasar-songs.blogspot.com for rendering great songs of Purandara dasa in Tamil. இவை அனைத்தும் வேறு ஒரு வெப்சைட்டில் கண்ட மொழிபெயர்ப்பு; யார் மொழி பெயர்த்தார்கள் என்ற பெயர் இல்லை; அவர்களுக்கு நன்றி உரித்தாகுக

****

மார்ச் 1 சனிக்கிழமை,  

ஈ பரிய சொபகாவ தேவரலி நா காணே

கோபி ஜனப்ரிய கோபாலகல்லதே (ஈ பரிய)

இந்த (கீழ்க்கண்ட) சிறப்புகளை வேறு எந்த தேவரிடத்திலும் நான் கண்டதில்லை;கோபியர்களின் மனங்களைக் கவர்ந்த கோபாலனைத் தவிர (ஈ பரிய)

****

மார்ச் 2 ஞாயிற்றுக்கிழமை

தொரெயதனதலி நோடே தரணிதேவிகே ரமணா

சிரியதனதலி நோடே ஸ்ரீகாந்தனு

ஹிரியதனதலி நோடே சரசிஜோத்பவனய்யா

குருவுதனதலி நோடே ஜகதாதி குருவு (ஈ பரிய)

முதலாளிகளில் யார் பெரிய முதலாளி என்று பார்த்தால் இவர் உலகத்திற்கே முதலாளி

செல்வந்தர்களில் யார் பெரிய செல்வந்தர் என்று பார்த்தால் இவர் இலக்குமிக்கே கணவன்

மூத்தவர்களில் யார் மூத்தவர் என்று பார்த்தால் இவர் பிரம்மாவிற்கே தந்தை

ஆசான்களில் யார் பெரிய ஆசான் என்று பார்த்தால் இவர் உலகத்திற்கே ஆசான் (ஈ பரிய)

****

மார்ச் 3 திங்கட்கிழமை

பாவனத்வதி நோடே அமர கங்கா ஜனக

தேவத்வததி நோடே திவிஜரொடெயா

லாவண்யதலி நோடே லோகமோஹகனய்யா

ஆவ தைர்யதி நோடே அசுராந்தகா (ஈ பரிய)

புனிதர்களில் யார் மிகப் புனிதர் என்று பார்த்தால் இவர் புனிதமான கங்கையின் தந்தை

தேவர்களில் யார் பெரியவர் என்று பார்த்தால் இவர் தேவாதி தேவர்

அழகானவர்களில் யார் சிறந்தவர் என்று பார்த்தால், இவர் உலகத்தையே மயக்குபவர்

தைரியமானவர்களில் யார் மேலானவர் என்று பார்த்தால், இவர் பல அசுரர்களையே வென்றவர்

****

மார்ச் 4 செவ்வாய்க்கிழமை  

ககனதலி சஞ்சரிப கருட தேவனே துரக

ஜகதீதரசேஷ பரியங்க சயன

நிகம கோசர புரந்தர விட்டலகல்லதே

மிகிலாத தைவகளிகே ஈ பாக்யவுண்டே (ஈ பரிய)

வானத்திலேயே பறக்கும் கருட தேவனே இவனது வாகனம்

சேஷமே இவனது வாகனம்

வேதங்களில் பாடப்பட்டிருக்கும் இந்த புரந்தரவிட்டலனைத் தவிர

(மேலே சொன்ன) இந்த தகுதிகள் வேறு யாருக்கு உண்டு? யாருக்கும் இல்லை (ஈ பரிய)

**********

மார்ச் 5 புதன்கிழமை

தாள பேகு பக்க மேள பேகு

சாந்த வேளே பேகு கானவ கேளபேகு எம்புவரிகே (தாள)

தாளம் இருக்க வேண்டும்; பக்க வாத்தியங்களும் இருக்க வேண்டும்

அமைதியான நேரம்/காலம் இருக்க வேண்டும்; பாடலை கேட்க விரும்புபவர்களுக்கு (தாளம்)

****

மார்ச் 6 வியாழக்கிழமை

கள சுத்த இரபேகு திளிது பேளலு பேகு

களவள பிடபேகு களெமுக இரபேகு (தாள)

(பாடுபவர்) குரல் சுத்தமாக இருக்க வேண்டும்;

(பாடும் வரிகளை) தெரிந்து புரிந்து உச்சரிக்க வேண்டும்

(பாடுபவர், அவரது) மனதில் குழப்பங்களை விடவேண்டும்

(பாடுபவர் முகம்) நல்ல களையுடன் இருக்க வேண்டும் (தாள)

****

மார்ச் 7 வெள்ளிக்கிழமை

ஜதிப்ராச இரபேகு கதிகே நில்லச பேகு

ரதிபதிபிதனோளு அதி ப்ரேம இரபேகு (தாள)

எதுகை/மோனை இருக்க வேண்டும்;

(தக்க இடத்தில்) நிறுத்திப் பாட வேண்டும்;

ரதியின் கணவனான மன்மதனின் தந்தையான ஸ்ரீமன் நாராயணனிடத்தே பக்தி இருக்க வேண்டும் (தாள)

****

மார்ச் 8 சனிக்கிழமை,  

அரிதவரு இரபேகு ஹருஷ ஹெச்சலி பேகு

புரந்தரவிட்டலனல்லி த்ருட சித்த இரபேகு (தாள)

(என்ன பாடுகிறோம் என்று) தெரிந்தவராக இருக்க வேண்டும்;

(பாடலை) கேட்பவர்கள் ஆனந்தம் அடைய வேண்டும்

புரந்தரவிட்டலனிடம் திடமான பக்தி இருக்க வேண்டும் (தாள)

***

மார்ச் 9 ஞாயிற்றுக்கிழமை

யாரே ரங்கன யாரே கிருஷ்ணன

யாரே ரங்கன கரெய பந்தவனு (யாரே)

ரங்கனை, கிருஷ்ணனை யார் அழைத்தார்கள்?

(அழைத்தால் உடனே வந்துவிடுவானே என்று பொருள்)

****

மார்ச் 10 திங்கட்கிழமை

கோபால கிருஷ்னன பாப விநாசன

ஈபரி இந்தலி கரெய பந்தவனு (யாரே)

கோபால கிருஷ்னனை பாவங்களை போக்குபவனை

இந்த கணத்தில் அழைத்த மாத்திரத்தில் வருபவன் யார்? (யாரே)

****

மார்ச் 11 செவ்வாய்க்கிழமை  

வேணு விநோதன ப்ராண ப்ரியன

ஜானெயரரசன கரெய பந்தவனு (யாரே)

புல்லாங்குழல் ஊதுபவனை என் உயிரிலும் மேலானவனை

நல்லனவற்றை ஏற்றுக்கொள்பனை யார் அழைத்தது? (யாரே)

****

மார்ச் 12 புதன்கிழமை

கரிராஜ வரதன பரம புருஷன

புரந்தர விட்டலன கரெய பந்தவனு (யாரே)

கஜேந்திரனை (யானை) காப்பாற்றியவன் அனைவரிலும் சிறந்தவனை

புரந்தர விட்டலனை கூப்பிட்டால் உடனே வருவானே (யாரே)

*****

 மார்ச் 13 வியாழக்கிழமை

ஹெட்ட தாயி தந்தெகள சித்தவ நோயிசி

நித்ய தானவ மாடி பலவேனு

சத்ய சதாசார இல்லதவனு ஜப

ஹத்து சாவிர மாடி பலவேனு (ஹெட்ட)

பெற்ற தாய் தந்தையின் மனதை நோகவிட்டு

தினமும் தானங்கள் செய்து என்ன பலன்?

உண்மை பேசாமலும், நல்ல பழக்கங்களும் இல்லாதவன்

பத்தாயிரம் ஜபங்கள் செய்து என்ன பலன்?

****

மார்ச் 14 வெள்ளிக்கிழமை

தன்ன சதிசுதரு பந்துகள நோயிசி

சின்ன தானவ மாடி பலவேனு

பின்னானந்ததலி தேசதேசவ திருகி

அன்ன தானவ மாடி பலவேனு (ஹெட்ட)

தன் மனைவி மக்கள் உறவினர்களை நோகவிட்டு

செல்வத்தை தானம் செய்வதில் என்ன பலன்?

பகட்டுக்காக ஊர் ஊராகப் போய்

அன்னதானங்கள் செய்வதில் என்ன பலன்? (ஹெட்ட)

****

மார்ச் 15 சனிக்கிழமை,  

ஸ்னானக்கே பானக்கே ஆகுவ திளி நீரு

கானனதொளகித்து பலவேனு

ஆனந்த மூர்த்தி புரந்தர விட்டலன

நெயெனாத தனுவித்து பலவேனு (ஹெட்ட)

குளிக்கவும் குடிக்கவும் முடியாத சுத்தமான நீரானது

(யாரும் புகமுடியாத) காட்டுக்குள் இருந்து என்ன பலன்?

நமக்கு எப்போதும் ஆனந்தத்தைத் தரும் புரந்தரவிட்டலனை

நினைக்காத இந்த உடம்பு இருந்து என்ன பலன்? (ஹெட்ட)

***

மார்ச் 16 ஞாயிற்றுக்கிழமை

அஞ்சிகென்யாதகய்யா சஜ்ஜனரிகே

பயவு இன்யாதகய்யா

சஞ்சீவி ராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

அச்சம் எதுக்கய்யா நல்லவர்களுக்கு

பயமும் எதுக்கய்யா

ஹனுமனை நினைப்பவர்களுக்கு அதற்குப்பின் (அஞ்சிகெ)

****

மார்ச் 17 திங்கட்கிழமை

கனசல்லி மனசல்லி களவளவாதரெ

ஹனுமன நெனெதெரே ஹாரிஹோகுதே பீதி (அஞ்சிகெ)

கனவிலும் நினைவிலும் இறுக்கம் (இருந்தால்)

ஹனுமனை நினைத்தால் ஓடிப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

****

மார்ச் 18 செவ்வாய்க்கிழமை  

ரோம ரோமக்கே கோடி லிங்கவுதுரிசித

பீமன நெனெதெரே பிட்டுஹோகுதே பீதி (அஞ்சிகெ)

(தன் உடம்பில் உள்ள) ஒவ்வொரு முடிக்கும் கோடி சிவலிங்கங்களை நிர்மாணித்த

பீமனை நினைத்தால் விட்டுப்போகுமே அந்தப் பயம் (அஞ்சிகெ)

****

மார்ச் 19 புதன்கிழமை

புரந்தர விட்டலன பூஜெய மாடுவ

குரு மத்வராயர ஸ்மரணெ மாடித மேலே (அஞ்சிகெ)

புரந்தர விட்டலனை புஜை செய்யும்

குரு மத்வாச்சாரியரை நினைத்த பிறகு (அஞ்சிகெ)

****

மார்ச் 20 வியாழக்கிழமை

ஹரி கொட்ட காலக்கே உணலில்லா, உணலில்லா

ஹரி கொடத காலக்கே பாயி பிடுவேயெல்லோ ப்ராணி (ஹரி)

ஹரி (உனக்கு) அதிகமாக கொடுத்தபோது (அதை) பயன்படுத்தவில்லை

ஹரி கொடுக்காத சமயங்களில் (இன்னும் அதிகம் வேண்டுமென்று) கேட்க மறக்கவில்லையே மனிதனே (ஹரி)

****

மார்ச் 21 வெள்ளிக்கிழமை

ஹத்து சாவிர ஹொன்னு திப்பேலி ஹோளிட்டு

மத்தே உப்பில்லதே உண்டேயல்லோ ப்ராணி

ஹத்து சாவிர ஹொன்னு திப்பேலி போபாகா

ம்ருத்திகே பாயல்லி பித்தல்லோ ப்ராணி (ஹரி)

பத்தாயிரம் தங்கக் காசுகளை உள்ளே பத்திரமாக இட்டுவிட்டு

(கருமியாக) உப்பில்லாமல் உண்டாயே மனிதனே

(அந்த) பத்தாயிரம் தங்கக் காசுகள் காணாமல் போய்விட்டால்

உயிரையே விட்டுவிடுகிறாயே மனிதனே (ஹரி)

****

மார்ச் 22 சனிக்கிழமை,  

ஹுக்கியு துப்பவு மனெயொளகிரலிக்கே

குக்குரி அன்னவ திந்தெயல்லோ ப்ராணி

ஹெக்களத பாக்ய களிகெயலி போபாக

புக்கெய ஹொய்கொண்டு ஹோதேயல்லோ ப்ராணி (ஹரி)

நெய்யும், அரிசியும் வீட்டில் நிறைய இருந்தாலும்

(கருமியாக) கடலை கலந்த அன்னத்தை தின்கிறாயே மனிதனே

நிறைந்த செல்வம் ஒரு நாழிகையில் போய்க்கொண்டிருக்கும்போது

நீ காணாமல் போன ஒரு காசை தேடிப் போகிறாயே மனிதனே (ஹரி)

****

மார்ச் 23 ஞாயிற்றுக்கிழமை

நெண்டரிஷ்டரு பந்து மனெ முந்தே குளிதிதரு

குண்ட சுத்தி நீனாடித்யல்லோ ப்ராணி

கண்டக யமனவரு குண்டிசுத எளெவாக

நெண்ட ஸ்ரீ புரந்தரவிட்டலனு ப்ராணி

உறவினர்கள் உன் வீட்டுமுன் (உதவிகள் வேண்டி) காத்திருந்தபோது

சாக்குகள் சொல்லி அவர்களை தவிர்த்தாயே மனிதனே

யமதூதர்கள் உன்னை கயிற்றில் கட்டி இழுக்கும்போது

உன் உறவினர் (ஒரே ஒருவன்தான், அவனே) ஸ்ரீ புரந்தரவிட்டலன் (ஹரி)

****

மார்ச் 24 திங்கட்கிழமை

ஆச்சாரவில்லத நாலிகே

நின்ன நீச புத்திய பிடு நாலிகே

விசாரவில்லதே பரர தூஷிசுவுதக்கே

சாசிகொந்திருவந்தா நாலிகே (ஆச்சார)

நல்ல பழக்கங்கள் இல்லாத நாக்கே

உன் கெட்ட புத்தியை விட்டுவிடு நாக்கே

(எந்தக்) காரணமுமே இல்லாமல் அடுத்தவரை திட்டுவதற்காக

வெளியில் வருகிறாயே நாக்கே

***

மார்ச் 25 செவ்வாய்க்கிழமை

ப்ராத: காலதொள் எத்து நாலிகே

ஸ்ரீ பதி எனபாரதே நாலிகே

பதித பாவனா நம்ம ரதிபதி ஜனகன

சததவு நுடி கண்ட்யா நாலிகே (ஆச்சார)

காலையில் எழுந்து, நாக்கே

ஸ்ரீபதி என்று சொல்லக்கூடாதா, நாக்கே

அனைத்து பாவங்களையும் போக்குபவனான நம் மன்மதனின் தந்தை (ஸ்ரீமன் நாராயணன் பெயரை)

எப்பொழுதும் சொல்ல வேண்டும் கேட்டாயோ, நாக்கே (ஆச்சார)

****

மார்ச் 26 புதன்கிழமை

சாடி ஹேளலு பேடா நாலிகே

நின்ன பேடிகொம்பேனு நாலிகே

ரூடிகொடெயா ஸ்ரீரமணன நாமவ

பாடுதலிரு கண்ட்யா நாலிகே (ஆச்சார)

கோள் மூட்டாமல் இரு நாக்கே

உன்னை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் நாக்கே

இந்த உலகத்தின் நாயகன் ஸ்ரீரமணனின் நாமத்தை

பாடிக்கொண்டேயிரு நாக்கே (ஆச்சார)

****

மார்ச் 27 வியாழக்கிழமை

ஹரிய ஸ்மரணே மாடு நாலிகே

நர ஹரிய பஜிசு கண்ட்யா நாலிகே

வரத புரந்தர விட்டலராயன

சரண கமலவ நெனெ நாலிகே (ஆச்சார)

அந்த ஹரியின் நினைவாகவே இரு நாக்கே

நாராயணனை எப்பொழுதும் பஜித்துக் கொண்டேயிரு நாக்கே

வரங்களை அருளும் புரந்தர விட்டலனின்

பாதகமலங்களை எப்பொழுதும் நினைத்துக் கொண்டேயிரு நாக்கே (ஆச்சார)

****

மார்ச் 28 வெள்ளிக்கிழமை

கோவிந்தா நின்ன நாமவே சந்தா

கோவிந்தா நின்ன நாமவே சந்தா (கோவிந்தா)

கோவிந்தா, உன் பெயரே மிகவும் அழகு

கோவிந்தா, உன் பெயரே மிகவும் அழகு (கோவிந்தா)

****

மார்ச் 29 சனிக்கிழமை,  

அனுரெணு த்ருண கஷ்ட பரிபூர்ண கோவிந்தா

நிர்மலாத் மனாகி இருவதே ஆனந்தா (கோவிந்தா)

அணுவைப் போல சின்னஞ்சிறிய கஷ்டங்களை போக்குபவனே கோவிந்தா ;மனது சுத்தமாக இருப்பதே ஆனந்தம் (கோவிந்தா)

****

மார்ச் 30 ஞாயிற்றுக்கிழமை

ஸ்ரிஷ்டி ஸ்திதி லய காரண கோவிந்தா

பரி மஹிமெய திளியுவுதே ஆனந்தா

பரம புருஷ ஸ்ரீ புரந்தர விட்டலன

ஹிங்கதே தாசர சலஹுவுதே ஆனந்தா (கோவிந்தா)

ஆக்குதல் காத்தல் அழித்தல் ஆகிய அனைத்திற்கும் காரணமானவனே கோவிந்தா

(உன்) அளவில்லாத மகிமையை தெரிந்து கொள்வதே ஆனந்தம்

பரமபுருஷன் ஆன ஸ்ரீ புரந்தரவிட்டலனை

(எப்பொழுதும் பாடித் திரியும்) தாசர்களுடன் பேசிப் பழகுவதே ஆனந்தம் (கோவிந்தா)

****

மார்ச் 31 திங்கட்கிழமை

கல்லு சக்கரே கொள்ளீரோ நீவெல்லரு

கல்லு சக்கரே கொள்ளீரோ

கல்லு சக்கரே சவி பல்லவரே பல்லரு

புல்ல லோசன ஸ்ரீ கிருஷ்ண நாமவெம்ப (கல்லு)

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு – நீங்க எல்லோரும்

கற்கண்டு சாப்பிடுங்கள் கற்கண்டு

கற்கண்டை சாப்பிட்டவருக்கே தெரியும் (அது எவ்வளவு இனிமையென்று)

மலர்க் கண்களை உடைய ஸ்ரீ கிருஷ்ணனின் பெயர் என்னும் (கற்கண்டு)

—Subham—

Tags- 2025 மார்ச் மாத காலண்டர், புரந்தரதாசர் ,கீர்த்தனைகள் ,பொன்மொழிகள்