Hindu Crossword812025 (Post No.14,067)

Written by London Swaminathan

Post No. 14,067

Date uploaded in Sydney, Australia – 8 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Hindu Crossword812025

1  2   3   
          4
5     6    
     7     
8  9  10    
           
11          
           
12      13   

Across

1.Vamana took this form.

5.Mother of Gods in the Vedas

6.class, division, same group, similar type

8.Gautama’s wife molested by Indra

10.Scriptures dealing with temple worship in South India

11.Star of Shiva; also festival of Shiva

12.Name of Ganesh and Jain Tirtankara

Down

1.Shiva with three eyes

2.God of Pandharpur

3.Stage in Sanskrit

4.Goddess of Kanchipuram in Tamil Nadu

7.Garland in Indian languages

9. A sweetmeat-ball. It is made of coarsely ground gram or other pulse, or of corn-flour, mixed up with sugar and spices, and fried in ghee or oil. It is distinguished into several varieties.

13.English word Snake is derived from this Sanskrit

word (go upward)

Hindu Crossword812025

T 1RIV2IKRA3MA 
R  I   R  K4
A5DITI V6ARGA
Y  A M7 N  M
A8HAL9YAA10GAMA
B  A L A  K
A11RUDRA G  S
K  U   A  H
A12RISHTAN13EMI

–subham—

Tags- Hindu Crossword812025

தமிழ் தெரியுமா812025 ? – (Post No.14,066)

Written by London Swaminathan

Post No. 14,066

Date uploaded in Sydney, Australia – 8 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழ் தெரியுமா812025

 1  2 3 
       
   4 5  
6      
 7 8  9  

ACROSS குறுக்கே இடம் வலமாக செல்க

1. எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் நிலக்கடலை +வெல்லம் இனிப்பு

5. கல்யாண விருந்தில் சாப்பிட்டு முடித்தவுடன் வாயில் போட்டுக்கொள்வது பச்சை நிறம்

6. இறைச்சி மிளகு சாப்பாட்டுடன் உண்ணும் காய் உணவு 

9. இதைக் கண்டால் படையும் நடுங்கும் என்பது தமிழ்ப்பழமொழி

****

குறுக்கே வலம் இடமாக செல்க

4. கரன்சி நோட்டை மாற்றினால் கிடைக்கும் (RIGHT TO LEFT)  

8. கமலம்பங்கஜம்ஜலஜா (RIGHT TO LEFT)

DOWN

1. மணல் நிரம்பிய இடம் அலை வீசும் இடம்

2.காரம் மிகுந்த காய்

3. பகட்டு · ஆடம்பரம்.

7. ஆடு/NOUN ; தடு/VERB  கீழிருந்து மேலே செல்க

தமிழ் தெரியுமா812025

க 1லைமி2ட்டா3ய்
   ம் 
ற் சுகா4 பீ5டா 
க6றி ய்  
ரைம7தா 8 பா 9ம்பு

–SUBHAM—

 tags–தமிழ் தெரியுமா812025

வள்ளலார் பாடலில் கந்த புராணக் கதைகள் -5 (Post No.14,065)

Written by London Swaminathan

Post No. 14,065

Date uploaded in Sydney, Australia – 8 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 5

வள்ளலார் பாடலில் கந்த புராணக் கதைகள்

****

தெய்வமணிமாலை பாடல் 27

27. பிரமன்இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ

பெய்சிறையில் இன்னும்ஒருகால்

பின்பட்டு நிற்குமோ முன்பட்ட சூட்டில்

பெறுந்துயர் மறந்துவிடுமோ

இரவுநிறம் உடைஅயமன் இனிஎனைக் கனவினும்

இறப்பிக்க எண்ணம்உறுமோ

எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்

இருந்தவடு எண்ணுறானோ

கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு

காசுக்கும் மதியேன்எலாம்

கற்றவர்கள் பற்றும்நின் திருஅருளை யானும்

கலந்திடப் பெற்றுநின்றேன்

தரமருவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.

இந்தப்பாடலில் மூன்று புராணக்கதைகளை அருட் பிரகாச வள்ளலார் எடுத்துரைக்கிறார்

1 .முருகப்பெருமானை சிறுவன் என்று மதியாது சென்ற பிரம்மாவை அவர் சிறையில் அடைத்தார்

2. .ஓம் என்னும் பிரணவ மந்திரத்துக்கு பொருள் கூற முடியாததால் முருகப்பெருமான் அவர் தலையில் குட்டு வைத்தார்.

அப்படிப்பட்ட பிரம்மா இனிமேல் தன்னைப் பிறப்பிக்க வல்லவர் இல்லை; ஏனெனில் நான், முருக பக்தன் என்கிறார் வள்ளலார். பழைய கதைகளை மறந்து பிரம்மா தன்னைப் பிறப்பிக்க முயன்றால் மீண்டும் சிறைப்படுவான் என்பது வள்ளலார் வாதம் .

3.மூன்றாவது கதை மார்க்கண்டேயன் கதை ; பதினாறு வயதானபோது மார்க்கண்டேயரின் உயிரைக் கவர வந்த யமனை சிவபெருமான் காலால் எட்டி உதைத்து கருமை நிற எமன் மீது தழும்பினை உண்டாக்கினார்; மார்க்கனேடேயனுக்கு வயது என்றும் பதினாறு என்று இயம்பினார் சிவன். அப்படி அடிபட்ட இயமன் தன்  உயிரைக் கவர வல்லவன் அன்று என்பது வள்ளலார் வாதம் .

இந்தப் பாடலில் இனிமேல் தனக்கு ஜனன மரண சுழல் இல்லை ; ஏனெனில் முருக பக்தன் என்கிறார் .

முதல் இரண்டு கதைகள் கந்த புராணத்தில்  உள.

****

கந்த புராணத்தில் பிரம்மா  கதை

பிரம்மன் குட்டுப்பட்ட கதை

கைலாயத்தில் சிவபெருமானைக் காணச் சென்ற பிரம்மதேவன் அங்கிருந்த முருகப்பெருமானை  சிறுவன் என்று எண்ணி கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்தார். முருகன் அவரை நிறுத்தி நீவீர் யார்? என்று வினவ , பிரம்மா  தனது பெருமைகளைச்  சொன்னார். ஓம் என்னும் பிரணவ மந்திரத்திலிருந்து  படைப்பு  துவங்கியதால் , முருன் பிரணவத்தின் பொருளைக் கேட்டார் ; பிரமனுக்கு சரியாகப் பதில் சொல்லத்  தெரியவில்லை; உடனே மாணவர் தரையில் வாத்தியார் குட்டுவது போல பிரம்மன் தரையில் குட்டு வைத்து சிறையில் அடைத்தார் . பின்னர் பிரம்மன்,  சிவ பெருமானை வேண்டி விடுதலை பெற்றார்.

****

கந்த புராணத்தில் பிரமன்

அயன்= பிரமன்= பிரம்மா

16. அயனைச் சிறைபுரி படலம் (1205 – 1223)

1205 மேடமூர்தி யாகவுய்த்து விண்ணுமண்ணும் முருகவேள்
ஆடல்செய் துலாவிவௌ¢ளி யசலமீதில் அமர்தரும்
நீடுநாளில் ஒருபகற்கண் நெறிகொள்வேதன் முதலினோர்
நாடியீசன் அடிவணங்க அவ்வரைக்கண் நண்ணினார். 1

(ஒரு நாள் சிவ பெருமானைத் தரிசிக்க பிரம்மா வந்தார்)


1206 நவையில்சீர் முனிவர் தேவர் நயப்பநா ரதனென் றுள்ளோன்
எனாதியா னெனுஞ்செருக் கிகந்துதன் னுணர்ந்துளார்
மனாதிகொண்ட செய்கை தாங்கி மரபின்முத்தி வழிதரும்
அனாதியீசன் அடிவணங்கி அருளடைந்து மற்றவன்
தனாதுமன்றம் நீங்கிவாயில் சாருகின்ற வேலையில். 2


1207 ஒன்பதோடி லக்கமான அனிகவீரர் உள்மகிழ்ந்
தன்பினோடு சூழ்ந்துபோற்ற அமலன் அம்பொ னாலய
முன்புநீடு கோபுரத்துள் முழுமணித் தலத்தின்மேல்
இன்பொடாடி வைகினான் இராறுதோள் படைத்துளான். 3


1208 அங்கண்வைகும் முருகன்நம்பன் அடிவணங்கி வந்திடும்
புங்கவர்க்குள் ஆதியாய போதினானை நோக்குறா
இங்குநம்முன் வருதியா லெனாவிளிப்ப ஏகியே
பங்கயாச னத்தினோன் பணின்திடாது தொழுதலும். 4

(முருகப்பெருமானைக் கவனியாது அலட்சியம் செய்தான்)


1209 ஆதிதேவன் அருளுமைந்தன் அவனுளத்தை நோக்கியே
போதனே இருக்கெனாப் புகன்றிருத்தி வைகலும்
ஏதுநீ புரிந்திடும் இயற்கையென்ன நான்முகன்
நாதனாணை யால்அனைத்தும் நான்படைப்பன் என்றனன். 5


1210 வேறு
முருக வேளது கேட்டலும் முறுவல்செய் தருளித்
தரணி வானுயிர் முழுவதுந் தருதியே என்னில்
சுருதி யாவையும் போகுமோ மொழிகெனத் தொல்சீர்ப்
பிரமன் என்பவன் இத்திறம் பேசுதல் உற்றான். 6

(நீர் யார் உமது பணி என்ன?  என்று வினவினான் முருகன்)

1211 ஐய கேள்எனை யாதிகா லந்தனில் அளித்த
மையு லாவரு களத்தினன் அளப்பிலா மறைகள்
செய்ய ஆகமம் பற்பல புரிந்ததிற் சிலயான்
உய்யு மாறருள் செய்தனன் அவையுணர்ந் துடையேன். 7


1212 என்று நான்முகன் இசைத்தலும் அவற்றினுள் இருக்காம்
ஒன்று நீவிளம் புதியென முருகவேள் உரைப்ப
நன்றெ னாமறை எவற்றிற்கும் ஆதியின் நவில்வான்
நின்ற தோர்தனி மொழியைமுன் ஓதினன் நெறியால். 8

(ஒம் என்ற எழுத்தால் படைப்புத் தொழிலைச் செய்பவன் நான் என்றான் அயன்= பிரமன்)


1213 தாம ரைத்தலை யிருந்தவன் குடிலைமுன் சாற்றி
மாம றைத்தலை யெடுத்தனன் பகர்தலும் வரம்பில்
காமர் பெற்றுடைக் குமரவேள் நிற்றிமுன் கழறும்
ஓமெ னப்படும் மொழிப்பொருள் இயம்புகென் றுரைத்தான். 9

(அப்படியாஓம் என்ற எழுத்தின் பொருள் என்னஇயம்புக என்றான் முருகன்)


1214 முகத்தி லொன்றதா அவ்வெழுத் துடையதோர் முருகன்
நகைத்து முன்னெழுத் தினுக்குரை பொருளென நவில
மிகைத்த கண்களை விழித்தனன் வௌ¢கினன் விக்கித்
திகைத்தி ருந்தனன் கண்டிலன் அப்பொருட் டிறனே. 10


1215 ஈசன் மேவரும் பீடமாய் ஏனையோர் தோற்றும்
வாச மாய்எலா வெழுத்திற்கும் மறைகட்கும் முதலாய்க்
காசி தன்னிடை முடிபவர்க் கெம்பிரான் கழறும்
மாசில் தாரகப் பிரமமாம் அதன்பயன் ஆய்ந்தான். 11


1216 தெருள தாகிய குடிலையைச் செப்புதல் அன்றிப்
பொருள றிந்திலன் என்செய்வான் கண்ணுதற் புனிதன்
அருளி னாலது முன்னரே பெற்றிலன் அதனால்
மருளு கின்றனன் யாரதன் பொருளினை வகுப்பார். 12

(பொருள் தெரியாமல் விழித்தனன் பிரம்மா)


1217 தூம றைக்கெலாம் ஆதியு மந்தமுஞ் சொல்லும்
ஓமெ னப்படும் ஓரெழுத் துண்மையை யுணரான்
மாம லர்ப்பெருங் கடவுளும் மயங்கினான் என்றால்
நாமி னிச்சில அறிந்தனம் என்பது நகையே. 13

(சொல்வது மட்டுமே தெரியும்பொருள் தெரியாதென்றனன்)


1218 எட்டொ ணாதவக் குடிலையிற் பயன்இனைத் தென்றே
கட்டு ரைத்திலன் மயங்கலும் இதன்பொருள் கருதாய்
சிட்டி செய்வதித் தன்மைய தோவெனாச் செவ்வேள்
குட்டி னான் அயன் நான்குமா முடிகளுங் குலுங்க. 14

(அயன் தலை குலுங்குமாறு ஓங்கிக் குட்டினான் முருகன்).


1219 மறைபு ரிந்திடுஞ் சிவனருண் மதலைமா மலர்மேல்
உறைபு ரிந்தவன் வீழ்தரப் பதத்தினா லுதைத்து
நிறைபு ரிந்திடு பரிசன ரைக்கொடே நிகளச்
சிறைபு ரிந்திடு வித்தனன் கந்தமாஞ் சிலம்பில். 15


1220 அல்லி மாமலர்ப பண்ணவன் றனையருஞ் சிறையில்
வல்லி பூட்டுவித் தியவையும் புரிதர வல்லோன்
எல்லை தீர்தரு கந்தமால் வரைதனில் ஏகிப்
பல்லு யிர்த்தொகை படைப்பது நினைந்தனன் பரிவால். 16

……………………

(அயனை / பிரமனை சிறையில் அடைத்தான்.)


1223 தண்ணென் அம்புயத் தவிசினோன் சிறைபுகத் தானே
எண்ணி லாவுயிர்த் தொகையளித் தறுமுகன் இருந்தான்
அண்ண லந்திசை முகனொடு வந்துசூழ் அமரர்
உண்ண டுங்கியே தொழுதுதம் பதங்களி லுற்றார். 19

*****

கச்சியப்ப சிவாச்சாரியார் பின்னர் சிறை நீக்கு படலத்தில் அயனை சிவபெருமான் விடுதலை செய்ததைப்   பாடுகிறார்

ஆகத் திருவிருத்தம் – 1223
17. அயனைச் சிறை நீக்கு படலம் (1224 – 1265)……………..

கந்த புராணத்தை நன்றாகப் பயின்ற வள்ளலார் இந்தக் கதையை ஓரிரு வரிகளில் வடித்தது அவரது சொல்லாற்றலைக் காட்டுகிறது.

அடுத்த கட்டுரையில் வள்ளலார் பாடலில் பகவத்கீதையின் தாக்கத்தைக் காண்போம்

—SUBHAM—

TAGS- வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 5, வள்ளலார் பாடல், கந்த புராணக் கதை, பிரமன் , குட்டுப்பட்டது , சிறை புகுதல்

புத்திகூர்மை அதிகரிக்க சில புதிர்கள்! (Post No.14,064)

 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,064

Date uploaded in Sydney, Australia – –8 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

29-12-24 KALKIONLINE-ல் வெளியாகியுள்ள கட்டுரை

மூளைக்கு வேலை

புத்திகூர்மை அதிகரிக்க சில புதிர்கள்!

ச.நாகராஜன்

புத்திகூர்மையை அதிகரிக்கச் செய்யவும் நிறுவனங்களில் நேரடி பேட்டியில் கேட்கப்படும் புதிர் கேள்விகளுக்கு பதில் சொல்லவும் ஏராளமான புதிர்கள் உள்ளன.

இவற்றை புதிருக்கான புத்தகங்களிலும் படிக்கலாம்; இணைய தளத்திலும் பார்க்கலாம்.

மாதிரிக்காக மூன்று புதிர்கள் இதோ!

1

கேள்வி:

உங்களிடம் 3 லிட்டர் மற்றும் 5 லிட்டர் கேன்கள் உள்ளன. நீரைப் பிடிக்க பக்கத்தில் ஒரு குழாயும் உள்ளது. 4 லிட்டர் தண்ணீர் வேண்டும். இந்த இரண்டு கேன்களையும் மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். வேண்டுமானால் கேன்களில் உள்ள நீரை கீழேயும் கொட்டிக் கொள்ளலாம். எப்படி 4 லிட்டர் நீரை நீங்கள் தருவீர்கள்?

விடை:

சற்று யோசித்தால் நமக்கு நல்ல வழி புலப்படும்.

முதல் வழி இதோ:

முதலில் 5 லிட்டர் கேனை குழாயிலிருந்து கொட்டும் நீரால் நிரப்புங்கள்

3 லிட்டர் கேனில் இந்த 5 லிட்டர் கேன் நீரைக் கொட்டுங்கள். இப்போது 5 லிட்டர் கேனில் இரண்டு லிட்டர் நீர் மட்டுமே இருக்கும்.

அடுத்து 3 லிட்டர் கேனில் உள்ள நீரைக் கீழே கொட்டுங்கள்.

5 லிட்டர் கேனில் உள்ள 2 லிட்டர் நீரை 3 லிட்டர் கேனில் கொட்டுங்கள்.

அடுத்து 5 லிட்டர் கேனில் நீரை நிரப்புங்கள்

3 லிட்டர் கேனில் மீதி இருக்கும் 1 லிட்டர் அளவுக்கு நீரை நிரப்புங்கள்/

இப்போது 5 லிட்டர் கேனில் இருப்பது நான்கு லிட்டர் நீர் தான்!

நீங்கள் கேட்ட 4 லிட்டர் நீர் இதோ என்று சொல்லலாம்.

இன்னொரு வழியும் இருக்கிறது.

குழாயிலிருந்து வரும் நீரால் 3 லிட்டர் கேனை நிரப்புங்கள்.

இந்த நீரை 5 லிட்டர் கேனில் கொட்டுங்கள்.

மீண்டும் 3 லிட்டர் கேனை நிரப்புங்கள்

5 லிட்டர் கேனில் இந்த நீரைக் கொட்டுங்கள். இப்போது ஒரு லிட்டர் நீரே 3 லிட்டர் கேனில் இருக்கும்.

5 லிட்டர் கேனில் உள்ள நீரைக் கொட்டி விடுங்கள்.

3 லிட்டர் கேனில் உள்ள ஒரு லிட்டர் நீரை 5 லிட்டர் கேனில் கொட்டுங்கள்.

இப்போது 3 லிட்டர் கேனில் நீரை நிரப்புங்கள்.

இதை 5 லிட்டர் கேனில் கொட்டுங்கள்.

இப்போது 5 லிட்டர் கேனில் இருப்பது 4 லிட்டர் நீர் தான்!

நீங்கள் கேட்ட 4 லிட்டர் நீர் இதோ என்று சொல்லலாம்.

2

ஒரு ஜப்பானிய கப்பல் பசிபிக் கடலில் சென்று கொண்டிருக்கிறது. காப்டன் குளிப்பதற்குச் செல்ல நினைத்து தனது வைர செயினையும் தங்க கடிகாரத்தையும் மேஜையின் மீது வைத்து விட்டு குளியலறைக்குச் செல்கிறார். பத்து நிமிடங்கள் குளியலை முடித்து விட்டு மீண்டும் வந்து மேஜையைப் பார்க்கும் போது செயினையும் கடிகாரத்தையும் காணோம்.

அதை யார் திருடி இருப்பார்கள்?

தனது கப்பலில் உள்ள குழுவினரை அழைத்த அவர் கடந்த 10 நிமிடங்களில் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர் என்று கேட்கிறார்.

குழுவில் இருந்த நான்கு பேரும் பதிலைச் சொல்கிறார்கள் இப்படி.

முதலில் சமையல்காரர்: “நான்  குளிர் பதன அறைக்குச் சென்று சமைப்பதற்காக எந்த இறைச்சியை எடுக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.

இரண்டாவதாக ஒரு வேலையாள் : நான் கப்பலின் மேல் தளம் சென்று தலைகீழாக இருந்த கொடியைச் சரி செய்து கொண்டிருந்தேன்.

மூன்றாவதாக எஞ்ஜினியர் : நான் ஜெனரேட்டர் ரூமில் ஜெனரேட்டரை சரி பார்த்துக் கொண்டிருந்தேன்.

நான்காவதாக சுத்தம் செய்யும் வேலையாள் : இரவு ஷிப்டை முடித்து விட்டு நான் தூங்கிக் கொண்டிருந்தேன்.

காப்டன் நன்கு யோசித்தார். வேலையாள் தான் பொய் சொல்கிறான், அவன் தான் செயினையும் கடிகாரத்தையும் எடுத்தான் என்பதை அவர் கண்டு பிடித்தார். எப்படி?

ஒரு வட்டத்தை மட்டுமே கொண்டிருக்கும் ஜப்பானிய கொடியில் மேல், கீழ் என்பது கிடையாது. எந்தப் பக்கம் பார்த்தாலும் வட்டம் ஒன்று தான். ஆகவே கொடி தலைகிழாக இருக்கிறது என்று அவன் சொல்வது நிச்சயம் பொய் தான்!\\

அவனை அதட்டி விசாரிக்க அவன் தான் எடுத்ததை ஒப்புக் கொண்டு செயினையும் கடிகாரத்தையும் திருப்பித் தந்தான்.

ஜப்பானிய கொடியின் படம் இதோ:

3

கேள்வி:

தவறாக லேபிள்கள் ஒட்டப்பட்ட 3 ஜாடிகள் உள்ளன. ஜாடிகள், உள்ளே இருப்பதைப் பார்க்கக் கூடியபடி உள்ள அமைப்பைக் கொண்டவை அல்ல. ஒன்றில் ஆப்பிளும் இன்னொன்றில் ஆரஞ்சும் மூன்றாவதில் இரண்டும் கலந்தும் உள்ளன. சரியாக லேபிள்களை நீங்கள் தான் ஒட்ட வேண்டும். எத்தனை பழங்களை வேண்டுமானாலும் எந்த ஜாடியிலிருந்து வேண்டுமானாலும் நீங்கள் எடுக்கலாம். நீங்கள் எத்தனை பழத்தை எடுத்து ஜாடிகளை  முறைப்படுத்தி லேபிளை ஒட்டுவீர்கள்? சொல்லுங்கள் பார்ப்போம்!

விடை

ஒரே ஒரு பழத்தை எடுத்தால் போதும்.

எப்படி?

ஜாடிகளின் லேபிள்கள் தவறாக ஒட்டப்பட்டுள்ளன என்பது உங்களுக்கு நன்கு தெரியும். ஆகவே முதலில் இரண்டு பழங்களும் கலந்தவை என்று லேபிள் ஒட்டப்பட்ட ஜாடியிலிருந்து ஒரு பழத்தை எடுங்கள். அது ஆப்பிள். ஆக அது ஆப்பிள் ஜாடியாகத் தான் இருக்க வேண்டும்.

அடுத்து மீதி உள்ள இரண்டு ஜாடிகளில் ஆரஞ்சு என்று தவறாக ஒட்டப்பட்ட ஜாடி நிச்சயமாக ஆரஞ்சுப் பழங்கள் உள்ள ஜாடி இல்லை என்பது தெரிகிறது. அதுவே அது நிச்சயமாக இரு பழங்களும் கலந்த ஜாடி. மீதி இருப்பது ஆரஞ்சுப் பழ ஜாடி.

அவ்வளவு தான் சார்!

தேவை புத்திகூர்மை தான்!

***

தமிழ் தெரியுமா712025 ? – (Post No.14,063)

Written by London Swaminathan

Post No. 14,063

Date uploaded in Sydney, Australia – 7 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்

7-1-2025

1 2 3 
    4 
5    6
      
    7 

ACROSS

1.நாதமுனிகளின் சீடரான மணக்கால் நம்பிகளால் யமுனைத்துறைவன் என இவருக்கு பெயர் சூட்டப்பட்டது. மணக்கால் நம்பிக்குப் பிறகு ஆசாரிய பட்டம் பெற்றவர் .இராமானுசரின் முதன்மை குரு இவர். 

4.யானைக்கு இது பிடித்தால் — யானை என்போம். 

5.கோவா, டையூ, …………. மூன்றும் போர்ச்சுகீசியர் ஆண்ட இடம். 

6.ஆற்றின் ஓரம்; கடலின் ஓரம்.  (Right to left) குறுக்கே வலம் இடமாக செல்க

7.மனத்தினால் கோவில் கட்டிய நாயன்மார்  (Right to left) குறுக்கே வலம் இடமாக செல்க. 

DOWN

1.திருவாடிப் பூரத்தில் ஜகத்துதித்தாள் இவள்.

2.பெண்ணுக்கு —– தேடி அலைந்தார் தந்தை.

3.இந்தியாவின் தேசீய மலர் ;

6.சுதந்திரப்போராட்டத்தில் தியாகிகள் அணிந்தது ;go up கீழிருந்து மேலே செல்க

7-1-2025

ஆ1வ2ந்தா3ர்
ண்  ம4
டா5ன் ரைக6
ள்   ப் 
 ர்லாபூ7 

—subham—-

Tags-தமிழ் தெரியுமா712025

வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை-4;  மேலும்  பல உவமைகள் (Post No.14,062)

Written by London Swaminathan

Post No. 14,062

Date uploaded in Sydney, Australia – 7 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தெய்வமணி மாலையில் உவமை நயம் தொடர்ச்சி

தெய்வமணி மாலை பாடல் எண் 3

துடிஎன்னும் இடைஅனம் பிடிஎன்னும் நடைமுகில்

துணைஎனும் பிணையல்அளகம்

சூதென்னும் முலைசெழுந் தாதென்னும் அலைபுனல்

சுழிஎன்ன மொழிசெய்உந்தி

வடிஎன்னும் விழிநிறையும் மதிஎன்னும் வதனம்என

மங்கையர்தம் அங்கம்உற்றே…………

இந்தப் பாடலில் பெண்கள் வருணனை நாடு முழுதும் காணப்படும் வருணனையைப் போல உள்ளது

பெண்களின் இடுப்பு = துடி= உடுக்கை;

நடை= அன்னம், பெண் யானையின் நடை;

முகில், அளகம் = மேகம் போல கருத்த கூந்தல்;

சூது முலை/ நகில் = சூதாடு கருவி, தாமரை மொட்டு

சுழி உந்தி= நீர்ச்சுழல் போன்ற கொப்பூழ் ;

வடி விழி = வேல் விழியாள்;

மதிவதனம் = சந்திர வதனா/முகம்  

****

ஏழு பகைவர்கள்

காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும்

கனலோப முழுமூடனும்

கடுமோக வீணனும் கொடுமதம் எனுந்துட்ட

கண்கெட்ட ஆங்காரியும்

ஏமம்அறு மாச்சரிய விழலனும் கொலைஎன்

றியம்புபா தகனுமாம்இவ்

வெழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும்

காமம், க்ரோதம், லோபம், மோகம், மதம், மார்ச்சர்யம் இவை ஆறும் உட்பகைவர்கள்; இத்துடன் கொலை சேர்ந்து ஏழு பகைவர்கள் ; மற்றும் அவைகளுடன் தொடரும் பொய் போன்ற பிற குணங்கள் .

ஆறு உட்பகையாகிய தீய குணங்களைப் பகைவன், கொடியன் மூடன், வீணன், அகங்காரி /ஆங்காரி, விழலன் என்று உருவகித்துக் கூறுகிறார் வள்ளலார் .

****

எனக்கு வேண்டுபவை

7.நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு

நிகழ்சாந்த மாம்புதல்வனும்

நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்

நீக்கும்அறி வாம்துணைவனும்

மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு

மனம்என்னும் நல்ஏவலும்

வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று

வாழ்கின்ற வாழ்வருளுவாய்

முந்தைய பாடலில் ஏழு பகைவர்களை வேண்டாம் என்றார்; இனி வரும் பாடல்களில் என்ன வேண்டும் என்று ராமலிங்கர் பட்டியலிடுகிறார். இந்தப் பாடலில் அவைகளை உருவகப் படுத்துகிறார்.

உயர்குலப்பெண் மனைவி= நிராசை; ஆசையே இல்லாத நிலை ;

மைந்தன் = சாந்தம்; அமைதி ;

உதார குணம் = நற்பொருள்; செல்வம்;

மருள் நீக்கும் அறிவு = துணைவன் ;

பகைமையைப்போக்கும் நிரங்காரம்= நண்பன் ;

மாசற்ற மனம் = வேலைக்காரன்;

சகலாவத்தை, கேவலாவத்தை இல்லாத வசிப்பிடம்= வீடு;

இவைகளை அருள்வாயாக. 

****

கிழட்டுக் காகம்

கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்

கதறுவார் கள்ளுண்டதீக்

கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு

கடும்பொய்இரு காதம்நாற

வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ

மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு

மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு

வழக்குநல் வழக்கெனினும்நான்

உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ

ரோடுறவு பெறஅருளுவாய்

சாகின்ற கிழட்டுக் காகம் கத்துதல் – வீண் கதை பேசுதல்;

குடிகாரன் உளறல், வாய் நாற்றம் = பொய்கள், குதர்க்கவாதம்;

மணங் கமழ்  பொன்வாய் உரை = சிவனடியார் பேச்சு.

****

13. வன்பெரு நெருப்பினைப் புன்புழுப் பற்றுமோ

வானைஒரு மான்தாவுமோ

வலியுள்ள புலியைஓர் எலிசீறு மோபெரிய

மலையைஓர் ஈச்சிறகினால்

துன்புற அசைக்குமோ வச்சிரத் து‘ண்ஒரு

துரும்பினால் துண்டமாமோ

சூரியனை இருள்வந்து சூழுமோ காற்றில்மழை

தோயுமோ இல்லைஅதுபோல்…………………………..

நெருப்பிடத்தில் புழு அணுகாது;

நீண்ட இடைவெளியை மான் கூடத்  தாண்ட முடியாது ;

புலியை எலி வெல்ல முடியாது ;

ஈயின் சிறகடித்து மலையை அசைக்க முடியாது ;

வஜ்ஜிரம் போன்ற தூணைத் துரும்பு ஒன்றும் செய்ய இயலாது;

கதிரவனைக் காரிருள் மங்க செய்யாது;

காற்றினை மழைத்துளிகள் நனைக்க முடியாது

அதேபோல அடியார்களுக்குத் துன்பங்கள் வர இயலாது ; தீய குணங்களும் அவர்களை அணுகமுடியாது .

****

14. காணலிடை நீரும்ஒரு கட்டையில் கள்வனும்

காண்உறு கயிற்றில் அரவும்

கடிதரு கிளிஞ்சிலிடை வெள்ளியும் பொன்னைக்

கதித்தபித் தளையின்இடையும்

மானலில் கண்டுள மயங்கல்போல் ………

கானல் நீர் = நீரல்ல;

இருட்டில் தெரியும் கட்டை= திருடன் அல்ல ;

இருட்டில் தெரியும் கயிறு =  பாம்பு அல்ல;

சிப்பியின் பளபளப்பு = வெள்ளி அல்ல;

பளபளப்பு உள்ள பித்தளை= தங்கம் அல்ல;

இந்த உவமைகளில் சில பதினோராம் பாடலிலும் வந்துள்ளன.

****

15. கற்றொளிகொள் உணர்வினோர் வேண்டாத இப்பெருங்

கன்மவுட லில்பருவம்நேர்

கண்டழியும் இளமைதான் பகல்வேட மோபுரைக்

கடல்நீர்கொ லோகபடமோ

உற்றொளியின் வெயில்இட்ட மஞ்சளோ வான்இட்ட

ஒருவிலோ நீர்க்குமிழியோ

உரைஅனல் பெறக்காற்றுள் ஊதும் துருத்தியோ……..

மாறும் பருவ காலம் = இளமைப் பருவம் ;

இளமைப்பருவம் நீடிக்காது ; அது = கலையும்  வேடம்; கடல் அலை; வெளிப்படும் வஞ்சனை; மாலை நேர மஞ்சள் வெய்யில்;  வானவில் ; நீர்க்குமிழி; காற்று ஊதும் துருத்தி .

மேக்கூறிய அனைத்தும் நிலைக்காமல் மாறிக்கொண்டே இருக்கும் என்று வள்ளலார் சொல்கிறார்

இங்கே நீதிநெறி விளக்கப்   பாடலையும் ஒப்பிட்டு ரசிக்கலாம்

1. கடவுள் வாழ்த்து

நீரில் குமிழி இளமை நிறை செல்வம்

நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் – நீரில்

எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே

வழுத்தாதது எம்பிரான் மன்று

(பொருள்.) இளமை  நீரில் குமிழி – இளமைப்பருவம் நீரிலுண்டாகும்குமிழியாகும்.  நிறை செல்வம்  நீரில் சுருட்டும் நெடுதிரைகள் – நிறைந்த செல்வம்நீரிலே காற்றினாற் சுருட்டப்படும் உயர்ந்த அலைகளாகும், யாக்கை  நீரில் எழுத்துஆகும் – உடம்பு நீரிலெழுதிய எழுத்தாகும்; (இங்ஙனமிருக்க), நமரங்காள் – நம்மவர்களே!’எம்பிரான் மன்று  வழுத்தாதது என்னே – நம்கடவுளுடைய மன்றினை (அம்பலத்தை) வாழ்த்தி வணங்காதது ஏனோ?

(கருத்து.) இளமையும் செல்வமும், யாக்கையும் நிலையாமையால், அவை உள்ள பொழுதே இறைவனை வழிபட்டுக் கொள்கவென்பது.  

அடுத்த கட்டுரையில் வள்ளலாரின் வாய்மொழி வழியாகக் கந்தபுராணக் கதைகளைக் காண்போம்

–SUBHAM—

TAGS -வள்ளலார் ஆராய்ச்சிக் கட்டுரை 4; மேலும்

 உவமைகள் ,தெய்வமணி மாலை, உவமை நயம்,  தொடர்ச்சி

Hindu Crossword712025 (Post No.14,061)

Written by London Swaminathan

Post No. 14,061

Date uploaded in Sydney, Australia – 7 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Hindu Crossword712025

1  2  3
       
 4     
5      
       
6     7
       
8   9  

ACROSS

1.- girl’s name; saluting; worshipping in Sanskrit and Indian languages

5. The world, the habitation of mortals. 2. Mundane existence. 3. A succession of births or existences. 4. Transmigration, metempsychosis. 5. Wordly illusion. 6. Secular life. 7. Course, passage..

6.Saints of Shirdi and Puttaparthi are known this name

7.Dawn in Rig Veda; Girl’s name;

8.Twilight; Brahmin’s thrice a day ritual has this word; they do it in dawn, noon, sunset

****

DOWN 

2.Father of sati/Parvati who insulted Shiva and got destroyed

3.snake demon killed by Krishna

4.Indian bird named after its cry

8.auspicious, benevolent

9. is the name of one of the four gandharva sons of Sage Kashyapa and his wife Pradha in Hindu mythology; also laughing sound

Hindu Crossword712025

V1AND2ANA3
   A  G
 K4 K  A
S5AMSARA
UK HA S
B6ABAHSU7
A   A R
S8ANDH9YA

—subham—

Tags-  Hindu Crossword712025

London Swaminathan’s Articles in December 2024 (Post.14,060)


Written by London Swaminathan

Post No. 14,060

Date uploaded in Sydney, Australia – 7 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

London Swaminathan’s Articles in December 2024

Index No145

Sri Ramakrishna on Adi Sankara; Interesting Anecdotes (Post No.13,966)3/1

Interesting Narada, Suka Anecdotes told by Sri Ramakrishna – 2 (Post no 13,974)5/12

Interesting Naradar, Sukar Anecdotes told by Sri Ramakrishna – 1 (Post No.13,970)4/12

London Swaminathan’s November 2024 Articles Index (Post No.13,977)6/12

Beat the Dog Again and Again (to Conquer Lust)! (Post13,390)9/12

Debate on Bharatiyar Books in Madras Assembly (Post No.13,998)11/12

DECEMBER HOLIDAYS ZINDABAD !C U ALL SOON !!11/12

Sri Venkateswara Temple at Helensburgh, Australia (Post No.14,014)24/12

My Visit to Wollongong Botanic Garden, Australia (Post No.14,023)27/12

My Visit to Bobbin Head Near Sydney (Post No.14,029)29/12

My Visit to Kiama Blowhole and Beaches in Shell Harbour, Australia (Post No.14,017)25/12

My Visit to Minnamurra Rain Forest in Australia (Post No.14,020)26/12

Hindu Crossword 18-12-24 (Post No.14,002)18/12

Hindu Crossword311224 (Post No.14,037)31/12

Hindu Crossword 28/12

Hindu Crossword 301224 (Post No.14,034)30/12

GNANAMAYAM SUNDAY BROADCAST 1-12-2024

Grand Thiruppugaz Festival via You Tube & Facebook by    Gnanamayam

****

தமிழ்க் கட்டுரைகள் டிசம்பர் 2024

QUIZ வேமனா பத்து QUIZ (Post No.13,957)1/12/2024

QUIZ நாம தேவர் QUIZ (Post No.13,962)2/12

குடிடி பாபா கதை தெரியுமா ? “ ந ஹம்ந தும்தர்பார் கம் ?” (Post No.13,964) 3/12

செங்கோட்டை ஆவடையக்காள் செய்த அற்புதங்கள் (Post No.13,968)4/12

மலையாள அகராதி தயாரித்த ஹெர்மன் குண்டர்ட் (Post No.13,973)5/12

தெலுங்கு மொழிக் கவிஞர் போதனாவைத் தெரியுமா ? (Post No.13,976) 6/12

வேதம் சொன்ன எருமை மாட்டுக்கு சமாதி ! (Post No.13,980)7/12

மகாராஷ்டிரத்தில் பக்தி மணம் பரப்பிய ஞானேஸ்வர் செய்த அற்புதங்கள் (Post.13,984) 8/12

சாமவேதம் பஞ்ச தந்திரக் கதைகளை ஆராய்ந்த ஜெர்மானிய அறிஞர் தியோடர் பென்பே (Post.13,989)9/12

சம்ஸ்க்ருத அகராதி தயாரித்த ஆட்டோ வான் போத்லிங்க் (Post No.13,994) 10/12

காக்கைச் சிறகினிலே நந்தலாலா! பாரதியும் பரமஹம்சரும்!! (Post No.13,997)11/12

சிங்கப்பூர்  மாரியம்மன் கோவில் – கார்த்திகைத் திருவிழா  (Post.14,000)18/12

தொல்காப்பியத்தில் முக்கோல் அந்தணர் (Post.14,004)19/12

திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்! ஆண்டாளும் நகைகளும் -1 (Post No.14,007) 20/12

ஆண்டாளும் மொழியியலும்; திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் -3 (24/12)

ஆண்டாள் போடும் மார்கழி மாதப் புதிர்! திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்-5 (Post.14,019) 26/12

பாவை என்பது என்ன?  திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்-6 (Post.14,022) 27/12

ஆண்டாள் காலம் பற்றிக் குழப்பம்! திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 4 (29/12)

ஆண்டாள் பாடல்களில் இயற்கைக் காட்சிகள்!  திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 7 (14,025) 28/12

ஆண்டாள் பாடலில் உபநிஷத்தும் சன்யாசிகளும்! திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள் -8 (Post.14,028)29/12

திருப்பாவையின் அமைப்பு; திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்- 9 (Post No.14,031) 30/12

திருவெம்பாவை- திருப்பாவை ஒப்பீடு! திருப்பாவை ஆராய்ச்சிக் கட்டுரைகள்-10 (Post No.14,036)31/12

22-12-2024 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு

29-12-2024 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி

22-12-2024 ஞானமயம் ஒளி / ஒலி பரப்பு நிகழ்ச்சி நிரல்

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 1-12-2024 (1/12.2024)

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 8-12-2024 (Post.13,986)8/12

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 15-12-2024 (Post.14,001)18/12

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 29-12-2024 30/12

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 22-12-2024 (Post.14,010)23/12

ஞான தீபம் ஏற்றுவோம் திசையெங்கும் திருப்புகழ் பரப்புவோம்.

–subham—

Tags- London Swaminathan, Articles,December 2024, Index No145

S Nagarajan Article Index December 2024

  S Nagarajan Article Index December 2024 (Post No.14,059)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 14,059

Date uploaded in Sydney, Australia – –7 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

S Nagarajan Article Index December 2024

1-12-24 13956 மேலாண்மை நிர்வாகத்தில் முன்னேறுவது எப்படி? (21-11-24 Kalkionline குழும பத்திரிகையில் வெளியான கட்டுரை)

2-12-2413960 சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி -1  (1-12-2024 ஞானமயம் நிகழ்ச்சி உரை)

2-12-24 13961 ஶ்ரீ வைகுண்டம் (ஆலயம் அறிவோம் ஞானமயம் 1-12-24 உரை)

3-12-24 13964 சந்தானம் சீனிவாசன் அவர்களுக்கு அஞ்சலி – 2 (1-12-2024 ஞானமயம் நிகழ்ச்சி உரை)

4-12-24 13967 S Nagarajan Article Index November 2024

5-12-24 13972 பயிற்சி செய் அல்லது செத்து மடி : ப்ரூஸ் லீயின் அறிவுரை! (27-11- 24 கல்கி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை).

6-12-24 13975 அதீத உளவியல் விஞ்ஞானிகள் அதிசயித்த பாபா! (kalkionline தீபம் இதழில் 23-11-2024 அன்று வெளியான கட்டுரை!).           7-12-24 13979 அரவிந்தரின் நகைச்சுவை – மஹரிஷி அரவிந்தரிடமிருந்து

             4000 கடிதங்களைப் பெற்றவர்!

8-12-24 13983 இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை – விக்ரம் சாராபாய்! – 1 (4-12-2024 மாலைமலர் கட்டுரை)

9-12-24 13987 இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை – விக்ரம் சாராபாய்! – 2 (4-12-2024 மாலைமலர் கட்டுரை)

9-12-24 13988 ஆலயம் அறிவோம்! – வைத்யநாத் தாம்! (8-12-24

            ஞானமயம் உரை)

10-12-24 13993 ராமாயணத்தில் வரங்கள் (22) சரபங்க மஹரிஷியும் ஶ்ரீ

            ராமரும் பரஸ்பரம் பேசியது!

11-12-24 13996 தெய்வீக அருள் பெற்ற மகாகவி!

11-12-24 to 17-12-24 VACATION

18-12-24 13999 மஹாபாரத மர்மம் – பிரமிக்க வைக்கும் பலன்களைத்

             தரும் மஹாபாரத ஸ்துதிகள்!

19-12-24 14003 யோகி வேமனா  8-12-2024 ஞானமயம் நிகழ்ச்சி உரை. 

20-12-24 14005 நம்மாழ்வார் – 1 (ஞானமயம் 15-12-24 உரை)

20-12-24 14006  ஶ்ரீ வில்லிப்புத்தூர் (ஆலயம் அறிவோம் 15-12-24 உரை)

23-12-24 14008 நம்மாழ்வார் – 2 (ஞானமயம் 15-12-24 உரை)

24-12-24 14011 வியக்க வைக்கும் 90 வயது நடிகை ஷர்லி        மக்லீன்!!  (kalkionlineல் 9-12-24 அன்று பிரசுரிக்கப்பட்ட கட்டுரை) 

24-12-24 14012 ஆலயம் அறிவோம் திருவலஞ்சுழி

25-12-24 14015 மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா – கதாம்ருதம்

                               அளித்த மகான்! – 1 (22-12-2024 ஞானமயம் நிகழ்ச்சி உரை)

26-12-24 14018 மாஸ்டர் மஹாஷய்- மஹேந்திரநாத் குப்தா – கதாம்ருதம்

                              அளித்த மகான்! – 2 (22-12-2024 ஞானமயம் நிகழ்ச்சி உரை)

27-12-24 14021 ராமாயணத்தில் வரங்கள் (23) மாரீசன் பிரம்மாவிடம் வரம்

                              பெற்றது!

28-12-24 14024 ராமாயணத்தில் வரங்கள் (24) இந்திரன் சீதைக்கு

                              ஹவிஷ்யான்னம் கொடுத்தது!

29-12-24 14027 மங்கையரே, உங்கள் அழகுக்கு மெருகூட்டிக்

                               கொள்ளுங்கள் (kalkionline-ல் 23-12-24 அன்று பிரசுரமாகியுள்ள

                               கட்டுரை)

30-12-24 14030 ராமாயணத்தில் வரங்கள் (27) சூர்ய பகவான் மேரு

                              மலைக்குத் தந்த வரம்!

31-12-24 14033 ஆலயம் அறிவோம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி

                             கோவில்

31-12-24 14035 ராமாயணத்தில் வரங்கள் (26) துந்துபி என்ற அசுரன் பெற்ற  

             வரம்!

***

தமிழ் தெரியுமா612025 ? – (Post.14,058)

Written by London Swaminathan

Post No. 14,055

Date uploaded in Sydney, Australia – 6 January 2025

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

எங்கே கட்டத்தை நிரப்பிப் பாருங்கள்


1 2 3 4
     5 
6     
      
     7 

ACROSS

குறுக்கே இடம் வலமாக செல்க

1.மருத்துவத்தின் தந்தை

2.முனிவர்

3.ஜாவா என்பதன் தமிழ்ப்பெயர்

7.கிருஷ்ண கர்ணாம்ருதம் எழுதியவர் (குறுக்கே வலம் இடமாக செல்க)

****

DOWN

1.சரஸ்வதி மஹால் உள்ள ஊர்

2.நேதாஜி, விவேகானந்தர் ஆகியோரின் மாநிலம்

3.விளக்கில் இது இருந்தால்தான் எரியும்

4.சுவாமி சிவானந்தர் ஆஸ்ரமம் உள்ள இமயமலை அடிவார தலம்

 ************

—-subham—-

  tags—தமிழ் தெரியுமா612025 .