காந்திஜி சாப்பிட்டதை நாமும் சாப்பிடலாமே ! (Post No.13,868)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,868

Date uploaded in London – 9 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

மஹாத்மா காந்தி  உணவு விஷயத்தில் பல வினோத, மாறுபட்ட திட்டங்களை செயல்படுத்தினார். தனக்கு இந்துமத நூல்கள் சொல்வது போல நீண்ட ஆண்டுகள் வாழ ஆசை என்றும் கருத்து தெரிவித்திருந்தார். அவர் ஏகாதசி உண்ணாவிரதமும் அவ்வப்போது மெளன  விரதமும் கடைப்பிடித்தார். திருமணம் செய்துகொண்டு குழந்தைகளைப் பெற்றபோதும் பிற்காலத்தில் பிரம்மச்சர்யத்தைக் கடைப்பிடித்ததால் அதற்கு ஏற்ப சில மாறுதல்களையும் செய்ததாக அறிவித்தார். பசும்பாலை விட்டு ஆட்டுப் பாலை அருந்தினார். நிறைய பழங்களையும் நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளையும் உணவில் சேர்த்தார் இது பற்றிய விளக்கங்களை YOUNG INDIA யங் இந்தியா பத்திரிகையில் அவ்வப்போது எழுதியும் வந்தார். சில முக்கியக் குறிப்புகளை மட்டும் இங்கே காண்போம்.

ஜன்மாஷ்டமி போன்ற இந்துமத பண்டிகை நாட்களிலும் அவர் சாப்பிடாமல் உபவாசம் இருந்தார்; பொதுவாக அவர் ஒரு உண்ணாவிரதப் பிரியர். தனது வாழ்நாளில் சில அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தி 18 முறைகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவரது நீண்ட விரதம் 21 நாட்கள் நீடித்தது; .இதன் மூலம் அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்றுவதோடு உடலினைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும் என்றும் எண்ணினார்.

பசும் பால் பற்றி அவரது பொன்மொழி

குழந்தையாக இருக்கும்போது தாய்ப்பாலை அருந்திய, பின்னர் மனிதர்கள் பால் சாப்பிடத்  தேவையே இல்லை என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்

“It is my firm conviction that man need take no milk at all, beyond the mother’s milk that he takes as a baby.”

பால் சாப்பிட வேண்டாம் என்று முடிவு செய்தபோது அதை நியாயப்படுத்தக்கூடிய செய்திகளையும் உதாரணமாகக் காட்டினார். பசு மாடுகளையும் எருமை மாடுகளையும்,  அவைகளை வளர்ப்பவர்கள் எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறார்கள் என்ற செய்திகள் அப்போது கல்கத்தாவிலிருந்து வந்தன

காந்திஜியுடன் ஹெர்மன் காலன்பாக் என்ற யூத மத கட்டிடக் கலைஞர் ஓருருவரும் தங்கி இருந்தார் தென் ஆப்பிரிக்காவில் காந்திஜி வழக்கறிஞராகப் பணியாற்றியபோது அவருடன் நட்பு ஏற்பட்டது. அவர் சொன்னார்: “நாம் எப்போதுபார்த்தாலும் பசும்பால் அவசியமில்லை என்று விவாதித்து வருகிறோம்; அதை விட்டுவிடலாமே” . உடனே காந்திஜி அதை ஏற்றார்

[Herman Kallenbach (March 1, 1871 – March 25, 1945) was a Lithuanian-born, Jewish South African architect whom Gandhiji met when he was working in South Africa and they became very close friends.]

அவர் நீண்ட காலம் பால் சாப்பிடாமல் இருந்தபோது உடல் மிகவும் பலவீனம் அடைந்தது. டாக்டர்கள் எச்சரித்த பின்னர் பசும் பாலுக்குப் பதிலாக ஆட்டின் பாலினை அருந்தி வந்தார்.

****

காந்திஜியின் உணவுக் கொள்கைகள் அவர் ஒரு யோகி போல வாழ ஆசைப்படத்தைக் காட்டுகின்றன; உணவினைக் குறைத்தால்தான் ஆன்மீக வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதும் அவரது நம்பிக்கை.

யங்  இந்தியா பத்திரிகையில் உணவு விஷயங்கள் பற்றி எழுதியபோது பித்துப்பிடித்தவிசித்திர எண்ணம் கொண்ட பைத்தியக்காரன் என்று தன்னைத்தானே விமர்சித்துக் கொண்டார்

“I have been known as a crank, faddist, madman,” wrote Mahatma Gandhi in his weekly journal, Young India, in 1929.

மரக்கறி உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும்;

உப்பினைக் குறைக்க வேண்டும்;

சூரிய அஸ்தமனத்துக்குப் பின்னர் சாப்பிட்டக்கூடாது ;

பசும் பால் மனிதர்களுக்குத் தேவை இல்லை.

****

மாமிசம் சாப்பிடாத ஒரு குஜராத்தி குடும்பத்தில் காந்திஜி பிறந்தார். ஆயினும் மாணவனாக இருந்த போது ரகசியமாக மாமிச உணவினை ருசித்தார்; வெள்ளைக்காரர்கள் மாமிசம் சாப்பிட்டதால்தான் இந்த நாட்டினை ஆள முடிந்தது என்று அவரது நண்பர்கள் கூறியதை நம்பிக்கொண்டு இதைச் செய்ததாக அவரே தனது சுய சரிதையில் சொல்லியுள்ளார். இங்கிலாந்துக்கு கல்வி கற்கச் சென்ற போது மதுவையும் மாமிசத்தையும் தொட மாட்டேன் என்று அம்மாவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தார்.

****

காந்திஜிக்குத் தடை போட்ட குடும்பம் !

லண்டனில் அவர் வெஜிட்டேரியன் சொசைட்டியில் சேர்ந்தார் ; இதன் மூலம் அவருக்கு நிறைய ஆங்கில நண்பர்கள் கிடைத்தனர் . தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றபோதும் அவர் மாமிசத்தைத் தவிர்த்தார். இவருடன் நண்பனாக இருந்த ஒருவர் மாமிசத்தை வெறுத்தார்; அவரது வீட்டுக்கு காந்திஜி சென்றபோது நீ இனிமேல் இந்த வீட்டுக்குள் வரக்கூடாது; என் மகனை நீ கெடுத்துவிட்டாய்; உன்னால் என் மகன் மாமிசத்தைச் சாப்பிட மறுக்கிறான் என்று கண்டித்தனர்

காந்திஜி மாமிசத்தை வெறுத்ததற்கு இரண்டு காரணங்கள் :_

1.மிருகங்களின் மாமிசம் அந்த மிருக குணத்தையும் கொண்டு வரும்.

2.மிருகங்களை வதைப்பது பாவம்; அதாவது அஹிம்சைக் கொள்கை.

****

மனைவி விட்ட சவால்

காந்திஜி தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில் மனைவி கஸ்தூரி பாய் உடல் நலம் குன்றினார்; நீ உப்பினையும் பருப்பு , பயறு வகைகளையும் விட்டுவிட்டால் உன் நோய் நீங்கும் என்றார். உடனே மனைவி கஸ்தூரி பாய் , காந்திஜிக்குச் சவால் விட்டார்; ஊருக்குத்தான் உபதேசம்; உங்களால் இப்படி உப்பில்லாமல் பருப்பில்லாமல் இருக்க முடியுமா? என்று சவால் விட்டார் அப்போதே அவர் பருப்பு, பயறு வகைகளையும் துறக்க முடிவு செய்தார்.

கல்கத்தாவில் ஒரு வீட்டில் விருந்தாளியாகத் தங்கி இருந்தார்; அந்த வீட்டுப் பெண்கள் காந்திஜிக்காக பல பருப்பு வகைகளை வரவழைத்து இரவு முழுதும் அவற்றின் தோலியை உரித்து தயார் செய்தனர்; இந்தச் செய்தியும் காந்திஜியின் காதுகளை எட்டின. அதற்குப் பின்னர் கும்ப மேளாவுக்காக ஹரித்துவார் சென்ற பொழுது ஒரு பிரதிக்கினை செய்தார் இனிமேல் நான் ஒவ்வொரு நாளும் ஐந்து பண்டங்களை மட்டுமே சாப்பிடுவேன்; அதுவும் சூரிய அஸ்தமனத்துக்கு முன்னரே சாப்பிடுவேன்.

வாழ்நாள் முழுதும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்தார்

****

சமண மத செல்வாக்கு

காந்திஜிக்கு ராய்சந் என்ற சமண சமய நண்பர் ஒருவர் இருந்தார். பாலும் பிரம்மசர்யத்துக்கு  எதிரி; ஏனெனில் அது பாலுணர்வினைத் தூண்டும் என்று சொல்லிவிட்டார். மேலும் சமணர்கள் சூரியன் மறைந்த பின்னர் சாப்பிட மாட்டார்கள்; அதில் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் விழுந்துவிடக்கூடும் என்று சமணர்கள் கருதினர். இந்த இரண்டு விஷயங்களும் காந்திஜியின் மனதில் வேரூன்றின.

மேலும் மிருகத்திலிருந்து வரும் எந்தப்பொருளும் மிருக குணத்தைக் கொடுக்கும் என்றும் நம்பினார்

*****

மேலும் ஒரு புதிய சோதனை ; சமைக்காதே

உணவுப் பொருட்களை எதற்காக சமைக்க வேண்டும்? அப்படியே சமைக்காமல் சாப்பிடலாமே என்பதும் காந்திஜியின் கொள்கை. 1929 மே  மாதம் இந்த சோதனையைத் துவங்கினார்  பின்னர் யங்  இந்தியா பத்திரிகையில் எழுதினார்; நான் பல ஆண்டுகளாக பழங்கள் பருப்பு வகைகளை சாப்பிட்டுவருகிறேன்; அவைகளை சமைக்கத்  தேவையே இல்லை; பயறுவகைகளையும் இப்படிச் சமைக்காமல் சாப்பிடலாமே.; அவைகளை தண்ணீரில் ஊறவைத்தால் முளைவிட்டு மென்மையாகி விடும்.

 (இப்போதும் லண்டனிலுள்ள குஜராத்தி கடைகளில் முளைவிட்ட பயறுவகைகளை உணவுப் பக்கத்தில் வைத்து விற்கிறார்கள்)

இதனால் பெண்களுக்கும் சமையல் அறைத் தொல்லைகள் இராதே என்றார்.

காந்திஜி தினமும் சாப்பிட்டது

முளைவிட்ட கோதுமை

தூளாக்கப்பட்ட வாதாம் பருப்பு 

முழு வாதாம் பருப்பு

வெள்ளரிக்காய், சுரைக்காய்

கிஸ்மிஸ்

எலுமிச்சம் பழம்

தேன்

இவை அனைத்தையும் அவர் தினமும் பயன்படுத்தவில்லை; சிற்சில வகைகளை மட்டும் எடுத்துக்கொண்டார் .

ஆயினும் நான்கே மாதங்களில் அவர் வயிற்றுப்போக்கினால் உடல்  வலு இழந்து எடை குறைந்தவுடன் இந்த சமைக்காத உணவு திட்டத்தினைக் கைவிட்டார் .

குழந்தைகளை மேலும் பெற்றுக்கொண்டால் அது பொது வாழ்வுப் பணிகளை , சேவைகளைப் பாதிக்கும் என்று சொல்லி பிரம்மசர்யத்தைக் கடைப்பிடிக்க மனைவி அனுமதியுடன் முடிவு செய்தார்.

கடைசிவரை பழங்களும் பருப்பு வகைகளுமே பிரம்மசர்யத்துக்கு உகந்தவை என்று எழுதிவந்தார்

–subham—

Tags– மஹாத்மா காந்தி, உணவு, பிரம்மசர்யம், ஏகாதசி, உண்ணாவிரதம், சமண மத,  செல்வாக்கு , பசும் பால், மது, மாமிசம், வேண்டாம்

 பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! — 2 (Post.13,867)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.867

Date uploaded in London – –9 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-11-24 மாலைமலர் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது

 பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 2 (Post.13,867)

ச. நாகராஜன்

பிரார்த்தனை பற்றிய காரெலின் கட்டுரை!

காரெலின் கட்டுரையின் முக்கியப் பகுதி இது தான்:- 

“பிரார்த்தனை என்பது வெறும் வழிபாடு மட்டுமில்லை. மனிதனின் வழிபடும் சக்தியின் கண்ணுக்குத் தெரியாத வெளிப்பாடு அது. மனிதன் உருவாக்கக் கூடிய வலிமை வாய்ந்த சக்தி அது. மனித உடலில் உள்ள சுரப்பிகளைப் போலவே பிரார்த்தனையின் சக்தியும் சுலபமாக நிரூபிக்கக் கூடியது தான். அதனுடைய நல்விளைவுகளை உடலில் ஏற்படும் அதிகமான நிதானம் மற்றும் அதிக மேதைத்தனத்துடன் பிரகாசிக்கும் புத்தி, ஆன்மீக பலம், மனித உறவில் அடிப்படையாக அமைந்துள்ள உண்மைகளைப் பற்றி ஆழமாகப் புரிந்து கொள்ளுதல் இவற்றால் அளந்து விட முடியும். 

“நீங்கள் உண்மையான பிரார்த்தனை செய்வதை வழக்கமாகக் கொண்டு விட்டீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை தீர்க்கமாகவும் வெளிப்படையாகத் தெரியும் அளவிலும் மாறிவிடும். பிரார்த்தனை

 நமது செயல்பாடுகளில் தனது அழுத்தமான முத்திரையைப் பதிக்கிறது. ஒளிமயமாகப் பிரகாசிக்கும் இவர்களின் முகத்திலும், உடலிலும் ஒரு சாந்தி தவழ்வதைப் பார்க்க முடியும்.

“புவிஈர்ப்பு விசை போல பிரார்த்தனையும் ஒரு வலிமை வாய்ந்த சக்தி. மருத்துவன் என்ற முறையில் மற்ற எல்லா வழிகளும் தோல்வியால் அடைபட்டு மூடிக்கிடக்கும் போது, உண்மையான பிரார்த்தனை

 மூலம் தங்கள் நோய் நீங்கி நலம் பெற்றோரை நான் பார்த்திருக்கிறேன். ‘இயற்கையின் நியதிகள்’ என்று சொல்லப்படுபவற்றை உலகில் மீறக் கூடிய ஒரே சக்தி பிரார்த்தனை தான்! பிரார்த்தனை அதிசயிக்கத்தக்க முறையில் செயல்பட்டு நல்லவை நடக்கும்போது அவற்றை “அற்புதங்கள்” என்கிறோம். ஆனால் பிரார்த்தனை மூலம் தினசரி வாழ்விற்கு வற்றிடாத ஜீவசக்தி கிடைக்கிறது. இதை உணர்ந்த ஆண்களும், பெண்களும் நிலையான அமைதியான அற்புதத்தை ஒவ்வொரு மணி நேரமும் அனுபவிக்கிறார்கள்.

“பிரார்த்தனையை எப்படி விளக்குவது? கடவுளை அடைய மனிதனின் முயற்சி அது. கண்ணுக்குப் புலனாகாத, அனைத்தையும் படைத்த, உயரிய அறிவு, உண்மை, அழகு வலிமையாய் இருப்பதோடு தந்தையாகவும், நம்மை மீட்பவராகவும் இருப்பவரை அடையும் முயற்சி அது. பிரார்த்தனையின் லட்சியம் அறிவுக்குப் புலப்படாமல் மறைந்தே இருக்கும். ஏனெனில் மொழியும், சிந்தனையும் கடவுளைப் பற்றி விவரிக்க முற்படும்போது தோல்வியை அடைகிறது.” 

போர்வீரர்களுக்கு சிகிச்சை

1914ல் முதல் உலகப் போர் ஆரம்பிக்கவே பிரான்ஸில் காயம் பட்ட போர்வீரர்களுக்கான சிகிச்சையில் காரெலின் மருத்துவ உத்திகள் கை கொடுத்தன. போர் முடிந்தவுடன் அவர் மீண்டும் நியூயார்க் திரும்பினார்.

ஒரு கோழியின் இதயத்தை விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட கரைசல் ஒன்றில் அவர் வைத்திருக்க, அது முப்பது வருட காலம் துடித்து இயங்கிக் கொண்டிருந்தது!

 1935-ம் ஆண்டு பிரபல விமான பைலட்டான சார்லஸ் லிண்ட்பெர்க் தனது உறவுப் பெண்மெணி இதய நோயால் பாதிக்கப்பட்டதைக் கண்டு வருந்தி காரெலைத் தொடர்பு கொண்டார்.  இதயத்தைத் துடிக்க வைக்க ஒரு பம்ப்- ஐ காரெல் உருவாக்கினார். இதன் மூலம் இதய நோய்க்கான சிகிச்சையில் ஒரு புது சிகிச்சை முறை உருவானது. 

மேன் தி அன்க்னோன் (MAN THE UNKNOWN) 

1935-ம் ஆண்டு காரெல் எழுதி வெளியிட்ட மேன் – தி அன்க்னோன் என்ற புத்தகம் உலகளாவிய விதத்தில் பிரபலமானது. மனித வாழ்க்கையில் மனித உடல் பற்றிய தனது எண்ணங்களை உடலியல், இயற்பியல் மற்றும் மருத்துவ இயல் ஆகியவற்றில் உள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இதில் அவர் விவரித்துள்ளார்.

தரமில்லாத மனிதர்கள் வாழும் உலகை விட தரமான மனிதர்கள் வாழும் புதிய இனத்தை உருவாக்க வேண்டும் என்பது அவரது எண்ணம், இந்த புதிய அறிவு சார்ந்த நல்லியல் மனிதர்கள் நிறைந்த ஒரு இயலுக்கு  ‘யூஜெனிக்ஸ்’ என்று பெயர். ஆனால் இது கடுமையான விவாதத்திற்கு உட்பட்ட கொள்கையாக ஆனது

 ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லரின் கனவும் கூட இதே போல, தன் வழியிலான ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பது தான். சார்லஸ் லிண்ட்பெர்க் ஹிட்லர் உருவாக்கிய கமிட்டியில் உறுப்பினராக இருந்தார்.  அவரது நெருங்கிய நண்பராக இருந்த காரெலுக்கு நல்லியல் மனிதரை உருவாக்கும் கொள்கை பிடித்திருந்தது.

இரண்டாம் உலகப் போர் துவங்கவே 1939-ல் காரல் பிரான்ஸுக்குத் திரும்பினார்.

தன்னால் ஒரு நல்லியல் மனித உலகை உருவாக்க வழிவகைகளைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பிய காரெல் அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் போர் முடிவுக்கு வந்த பின்னர் இவர் மீது நாஜி ஆதரவாளர் என்ற குற்றம் சாட்டப்பட்டு வழக்கு போடப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணைக்கு வரும் முன்னரேயே இவர் மரணமடைந்தார்.

 ஏராளமான விருதுகளைத் தன் வாழ்நாளில் காரெல் பெற்றார்.

 மறைவு

காரெல் தனது 71-ம் வயதில் 1944-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதியன்று பாரிஸில் மரணமடைந்தார்.

காரெலின் பொன்மொழிகள்

காரெலின் பொன்மொழிகளில் சில:

உளமார்ந்த பிரார்த்தனையைச் செய்யும் வழக்கத்தை நீங்கள் மேற்கொண்டால் உங்களது வாழ்க்கை வியக்கத்தக்க வகையில் பிரமாதமான மாறுதலைப் பெறும்.

பிராத்தனையே ஒருவர் உருவாக்கக் கூடிய அதிக சக்தி வாய்ந்த ஆற்றலாகும். அது நமது அன்றாட வாழ்வில் நீடித்து இருக்கும் ஒரு ஆற்றலைத் தருகிறது.

 வாழ்க்கையை நல்லவிதமாக திறம்பட வாழ்வதற்கான வழி, ஒவ்வொரு நாள் காலையிலும் அன்று செய்ய வேண்டியவை பற்றிய திட்டத்தை தீட்டி நாளின் முடிவில் இரவில் என்ன விளைவுகளைப் பெற்றிருக்கிறோம் என்பதை அலசிப் பார்ப்பது தான்.

 கவலைகளை நீக்கப் போரிடத் தெரியாதவர்கள் இளமையிலேயே இறக்கிறார்கள்.

 அற்புத மனிதர்

உடல் ஆரோக்கியம் மேம்பட புதிய சிகிச்சை முறைகளைத் தந்ததோடு, உள்ளம் மேம்பட பிரார்த்தனையின் மகிமையையும் உலகிற்கு விளக்கிய அலெக்ஸிஸ் காரெல் ஒரு அற்புதமான மனிதர் என்பதில் ஐயமில்லை.

  ***

Ramayana Dates from Valmiki Ramayana (Post No.13,866)

Rama going  to forest; people are crying.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,866

Date uploaded in London – 8 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 An article by Saurabh Kwatra was published in the Times of India in 2001. I give below the dates in the article.

The present analysis is a modest attempt to use astronomy, astrology and the science of together in elevating the status of Ramayana from an epic to chronological reality.

(then the author explains the birth charts etc from the facts given by Valmiki)

The author arrived at the following dates for the important events in Ramayana:

Birthday of Rama- December , 7323 BCE Ram Navami day 9300 years ago)

Marriage with Sita-  April 7, 7307 BCE

Rama’s Exile- November 29, 7306 BCE

Hanuman’s entry into Lanka-  September 1, 7292 BCE

Hanuman’s meeting with Sita- September 2, 7292 BCE

Construction of the bridge /Setu- October 26-30, 7292 BCE

Beginning of great war- November 3, 7292 BCE

Kumbakarna’s death – November 7, 7292 BCE

Ravana was killed by Rama – November 15, 7292 BCE

Rama’s return to Ayodhya- December 6, 7292 BCE

(author explained astronomical positios of stars and planets to justify his conclusion)

****

Another article shows one has to dig at least 60 meters to get the archaeological evidence for Ramayana which is not possible in North India’s Gangetic plains.

Rig Veda  10,000 Years old (8000 BCE)

In the 1990s, Nevoli  Cori in Turkey was excavated. They have found the sculpture of a bald man, that fits the description of a Vedic priest. It is dated 8000 BCE.

Linguistic studies conducted by R D Gray and Q D Atkinson of the University of Aucland, New Zealand say the oldest Indo European language , which is over 10,000 years old, bears close affinity to Rig Vedic Sanskrit.

These findings confirm the theory proposed by B G Siddharth, Director General of B M Birla Science Centre , that the Rig Vedic civilization could be dated as far back as 10,000 years.

(I am throwing away the paper cuttings which are 20 years old; the above matter is just the bullet points from those cuttings)

–subham—

Tags –Ramayana dates, birthday of Rama, wedding date of Sita

வறுத்த பருப்பை விடாதே , சுட்ட எண்ணெயைத் தொடாதே (Post.13,865)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,865

Date uploaded in London – 8 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 வறுத்த பருப்பை விடாதே சுட்ட எண்ணெயைத் தொடாதே (Post.13,865)

நெய்யை உருக்கி, தயிரைப் பெருக்கி சாப்பிட வேண்டும்– என்ற மருத்துவப் பழமொழியின் பொருளை முந்தைய கட்டுரையில் கண்டோம் இதோ அடுத்த பழமொழி – வறுத்த பருப்பை விடாதேசுட்ட எண்ணெயைத் தொடாதே!

சுட்ட எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஆயினும் நம்மவர்கள் அந்தக் காலத்தில் சுட்ட எண்ணெயைத் தொடாதே என்று சொன்னார்கள் ; காரணம் என்னவெனில் அதைப் பாதுகாத்து வைக்காமல் அதே சட்டியில் வைத்து மீண்டும்மீண்டும் பயன்படுத்துகையில் அதில் அதிகம் அசுத்தங்கள் பூச்சி பொட்டுக்கள் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் இருந்தன.

தற்கால ஆராய்ச்சிகளும் பல நிபந்தனைகளுடன்தான் சுட்ட எண்ணெயைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. முதலில் அதில் என்ன பண்டத்தைப் பொறி த்தீர்கள், அதை இதற்கு முன் எத்தனை முறை பயன்படுத்தினீர்கள் என்பதைப் பொறுத்தே அதை  நல்லதா கெட்டதா என்று சொல்ல முடியும்;. பலரும் அந்த எண்ணெயை ஆறவைத்து பாட்டிலில் விட்டு, குளிர்பதனப் பெட்டி என்னும் பிரிட்ஜில் வைத்து விடுகிறார்கள் இப்படிச் செய்தால் அதை மீண்டும் பயன்படுத்தலாம்.

மேலும் எந்தப் பண்டத்தை முதலில் பொறித்தீர்களாளோ அதே பண்டத்துக்கு மேலும் பயன்படுத்தலாம். அல்லது முந்திய பண்டத்தின் மணம் இதிலும் ஏறும். எடுத்துக்காட்டாக வெங்கா யத்தைப்  பொறித்துவிட்டு அடுத்த படியாக நீங்கள் எந்தப் பண்டத்தைப் பொறித்தாலும் அதில் வெங்காய மணம் ஏறக்கூடும்.

குறிப்பாக விருந்தாளிகள் வருகையில் அல்லது இறைவனுக்குப் படைக்கையில் எல்லாவற்றுக்கும் புதிய எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும் என்று தாய்மார்களுக்குச் சொல்லாமலே விளங்கும்

இதற்கான அறிவியல் விளக்கம் என்ன என்பதையும் காண்போம்.

Repeatedly heated cooking oils (RCO) can generate varieties of compounds, including polycyclic aromatic hydrocarbons (PAH), some of which have been reported as carcinogenic. Taking into account exploratory study, the present review aims to provide the consumption of RCO and its fumes cause the high incidence of genotoxic, mutagenic, tumorigenic and various cancers.

மீண்டும் மீண்டும் அதாவது பலமுறை எண்ணெயைச் சுடவைக்கும்போது அதில் பாலிசைக்ளிக் அரோமேட்டிக் காம்பவுண்ட்ஸ்  என்னும் ரசாயனப் பொருட்கள் உண்டாகின்றன. அவை புற்றுநோயை உண்டாகும் ரசாயனப் பொருட்களில் ஒன்றாகும்

மேலும் நமது சகோதரிகள் சமையல் அறையில் அந்தப் புகையையும் சுவாசிக்கின்றனர். அதுவும் புற்றுநோய்க்கான காரணிகளாக அமைகிறது

நோயாளிகளையோ நோயற்றவர்களையோ  இதற்காக நிறுத்தி ஆராய்ந்து இந்த முடிவினை  விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கவில்லை. ஏற்கனவே டாக்டர்கள் கம்ப்யூட்டரில் சேகரித்து வைத்த தகவலின் அடிப்படியில் அறிவியல் சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

நாம் மருத்துவரிடம் சென்றால், குறிப்பாக மேலை நாடுகளில், அவர்கள் நமது வாழ்க்கை முறை, அன்றாட நடவடிக்கைகள் பற்றி பல கேள்விகளையும் கேட்பார்கள்; நமக்கு கோபமும் ஆத்திரமும் கூட் வரக்கூடும். இது என்னடா, நான் முதுகு வலி என்று போனால் அவர் சமையல் அறையில் நீங்கள் எத்தனை மணி நேரம் இருக்கிறீர்கள், வெப்பம் எப்படி, புகைபோக்கி உண்டா என்றெல்லாம் கேட்கிறார்களே என்று நமக்கு எண்ணத் தோன்றும் ஆயினும் நாம் சொல்லும் எல்லா பதில்களையும் அவர்கள் அப்படியே கம்பியூட்டரில் பதிவு செய்கிறார்கள். பிற்காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் புகை போக்கி என்று ஆய்வு பட்டனைத் தட்டினாலும் கம்ப்யுயூட்டர் அத்தனை புகைபோக்கி விஷயங்களையும் கொட்டிவிடும். அப்படி செய்யப்பட ஆராய்ச்சியில் சுட்ட எண்ணெய் பற்றி கிடைத்த முடிவுதான் மேற்சொன்ன புற்று நோய் விஷயம் .

****

( புற்று நோய் என்பது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். கொத்தனாரைக் கூப்பிவிட்டு செங்கற்களைத் வைத்து கட்டிடம் கட்டச்  சொன்னோம். அவர் சரியாக அளவு பாக்காலமல் செங்கற்களைத் தாறுமாறாக வைத்துக் கட்டினால் அடுத்த மழையில் கட்டிடமோ சுவரோ சரிந்துவிடும். இதே போல நமது உடலில் செல் என்னும் செங்கற்ககளை  புதுப்பிக்கும் வேலை ஒவ்வொரு நிமிடமும் நடக்கிறது. அவை  நம் உடல் உறுப்புளைக் கட்டி வருகிறது; யாரோ ஒன்றோ அல்லது ஏதோ ஒன்றோ தவறான தகவலைக் கொடுத்தவுடன் அந்த செல்கள் தாறு மாறாக வளரத் தொடங்குகின்றன. அதை நாம் கட்டி என்போம் அந்தக் (Tumour) கட்டிகள் மற்ற ரத்தக் குழாய்களையோ நரம்புகளையோ அழுத்தினால் பிரச்சினை பெரிதாகி மரணம் சம்பவிக்கிறது 

ஏன் செல்கள் தவறான தகவலை அனுப்புகின்றன என்பதற்கு சில காரணங்கள் மட்டுமே இதுவரை தெரிய வந்துள்ளன. புகை பிடித்தல், தடை செய்யப்பட ஒருட்களை சாப்பிடுதல் அணுசக்தி கதிரியக்கத்தில் நிற்றல் முதலியன சில. அடுப்பறையில் புகையைச் சுவாசித்தல், கடுமையான வெப்பத்துக்கு அருகில் நிற்றல் முதலியவற்றையும்  ஆராய்ந்ததில் மேற்கண்ட சுட்ட எண்ணெய் தகவல் கிடைத்தது. இது செல்களில் உள்ள    க்ரோமோசோம்களைப் பாதிக்கிறது).

****

இப்பொழுது வறுத்த பருப்புக்கு வருவோம். நிலக்கடலை அல்லது கொண்டைக் கடலையை வறுத்துச் சாப்பிடும் பழக்கம் உலகெங்கிலும் உளது. அத்தோடு  மக்காச் சோள விதைகளையும் வறுத்து விற்கிறார்கள்.

வறுத்த பருப்பு உடலுக்கு நல்லது; அவைகளில் தேவையான உலோகச் சத்துக்களும் வைட்டமின் சத்துக்களும் இருக்கின்றன. அவைகளைச் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரைச் சத்து ஏறுவது இல்லை அல்லது குறைவு. இதை glycaemic index கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் எவ்வளவு ,பழுத்த வாழைப்பழம் சாப்பிட்டால் எவ்வளவு க்ளைசெமிக் இண்டெக்ஸ் (ரத்தத்தில் சர்க்கரை ஏறுதல் ) என்றெல்லாம் தற்காலத்தில் கண்டு பிடித்து இருக்கிறார்கள் .

Roasted chickpeas are also rich in essential vitamins and minerals, such as iron, magnesium, and folate, which support overall health. Additionally, they have a low glycaemic index, making them a good snack for maintaining stable blood sugar levels.

ஆயினும் முக்கியமான  மெத்தியோனைன் என்ற அமினோ அமிலத்தை அது அழித்துவிடுகிறது( Heat treatment causes loss of methionine). வறுத்த பருப்பிலுள்ள புரதச் சத்து உடலில் எளிதில் சேரும்; ஆனால் கொதிக்க வைத்த பருப்பிலுள்ள புரத்தச் சத்து உடலில் மெதுவாகக்   கலக்கிறது வறுத்தால் மணமும் சுவையும் கூடுகிறது அதை வறுக்க ஆலிவ் எண்ணெய் முதலியவற்றைப் பயன்படுத்தினால் அதன் நற்பயன்களும் சேரும்.

வறுத்த நிலக்கடலையைச் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

1.இருதயத்துக்கு வலுவூட்டும் கொழுப்புச் சத்து இருக்கிறது; கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்

2.ரத்தக் குழாய்களின் பலவீனத்தைத் தடுக்கும் பொருளும் உள்ளது

3.ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தும் மக்னீசியமும் இருக்கிறது

4.புரதச் சத்தும் கொழுப்புச் சத்தும் சரிவிகிதத்தில் உள்ளன

5.உடல் உற்பத்தி செய்யாத நல்ல அமினோ அமிலங்களை வறுத்த கடலை நமக்கு கொடுக்கிறது

6. உடல் தசைகள் வளர உதவுகின்றன. குறிப்பாக பசித்த நேரத்தில் முழு சாப்பாடு கிடைக்காதபோது இது பசியையும் தணித்து உடலுழைப்புக்குத் தேவையான சக்தியையும் தரும்.

கெடுதிகள் என்ன ?

மேலை நாட்டில் நிறைய பேருக்கு அலர்ஜி/ ஒவ்வாமை உண்டு.

ஆகையால் எல்லா பாக்கெட் மேலும் பொட்டலம் மேலும் அலர்ஜி எச்சரிக்கை இருக்கும். அவர்கள் இதைத் தவிர்ப்பது நல்லது

இந்தப் பருப்பை வறுக்கும் போது அதில் உப்பினைச் சேர்க்கிறார்கள் சுவை கூடினாலும் அதிலுள்ள சோடியம் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்

கடைசியாக கெட்டுப்போன பூஞ்சைக்காளான் பிடித்த பருப்புகளைக் சாப்பிடாமல் இருக்க வேண்டும் ஏனெனில் அவை புற்றுநோயை உண்டாக்கும்

****

மஹாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தது நிலக்கடலை. லண்டனில் எல்லா குஜராத்தி கோவில்களிலும் பிரசாதத்தில் நிலக்கடலையும் சேர்க்கிறார்கள்.  கடலை மிட்டாய் பிடிக்காத தமிழர்கள் உண்டா ? கடலை மிட்டாய் வாழ்க. அளவோடு  சாப்பிடுங்கள்.

****

ஆங்கிலக் குறிப்புகளை கீழே இணைத்துள்ளேன் ; தேவையானோர் அவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்

Heat treatment causes loss of methionine

Roasted Peanut Benefit in Heart Health

  • Healthy Fats: Roasted peanuts contain monounsaturated and polyunsaturated fats, which are beneficial for heart health, helping to lower bad cholesterol levels and reduce the risk of heart disease.
  • Antioxidant Properties: They are also a good source of antioxidants, such as resveratrol, which can improve heart health by protecting against arterial damage.
  • Blood Pressure Regulation: Magnesium found in roasted peanuts contributes to blood pressure regulation, further supporting cardiovascular health.
  •  

Roasted Peanut Benefit in Blood Sugar Control

  • Low Glycemic Index: Roasted peanuts have a low glycemic index, meaning they do not cause large spikes in blood sugar levels, making them a safe snack for individuals managing diabetes.
  • Rich in Magnesium: Magnesium has been linked to a lower risk of type 2 diabetes through its role in glucose metabolism, and roasted peanuts are a good source of this essential mineral.
  • Protein and Fat Balance: The balance of protein and healthy fats in roasted peanuts helps in slow digestion and steady energy release, aiding in blood sugar control.
  •  

Roasted Peanut Benefit in Muscle Building

  • High-Quality Protein: Roasted peanuts are a great source of high-quality protein, essential for muscle growth and repair. This makes them an excellent snack for athletes or anyone looking to increase muscle mass.
  • Amino Acids: They provide essential amino acids that the body cannot produce on its own, which are crucial for muscle development and repair.
  • Energy for Workout: The healthy fats in roasted peanuts offer sustained energy, making them a beneficial pre-workout snack to fuel physical activities and muscle building.
  •  

Side-Effects of Eating Roasted Peanuts

While roasted peanuts offer numerous health benefits, there are potential side-effects worth noting:

  • Allergic Reactions: Peanuts are a common allergen, and consuming them can trigger severe allergic reactions in some individuals, including anaphylaxis.
  • High Calorie Count: Due to their high fat content, roasted peanuts are calorie-dense, which could contribute to weight gain if consumed in excessive amounts.
  • Increased Sodium Intake: Some roasted peanuts come with added salt, which can lead to increased sodium intake, potentially raising blood pressure.
  • Risk of Contaminants: Peanuts can be susceptible to aflatoxins, a type of mould that can be carcinogenic. Proper storage and choosing high-quality products can minimize this risk.
  •  

Eating roasted peanuts in moderation is key to avoiding these potential side effects, ensuring you can enjoy their benefits without adverse effects.

–subham—

 tags- வறுத்த பருப்பை விடாதே ,,சுட்ட எண்ணெயை, தொடாதே ,நிலக்கடலை, வறுத்த பருப்பு, சுட்ட, எண்ணெய்

பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 1 (Post No.13,864)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.864

Date uploaded in London – –8 November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

6-11-24 மாலைமலர் பிரசுரமாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது

 பிரார்த்தனையே வலிமை என்ற நோபல் விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரெல்! 1

ச. நாகராஜன் 

பிரார்த்தனை மகிமை வாய்ந்தது என்று உலகில் உள்ள பெரியோர்கள் எல்லாம் கூறியதை நாம் நன்கு அறிவோம். அனைத்து மதங்களும் வற்புறுத்தும் ஒரு வாழ்வியல் முறை பிரார்த்தனை.

அறிவியல் உலகில் இதை வலியுறுத்திச் சொன்னவர் பிரான்ஸை சேர்ந்த சர்ஜனும், பிரபல உயிரியல்  நிபுணருமான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அலெக்ஸிஸ் காரல்!

பிரார்த்தனையின் மகிமை

வேண்டிடில் மேல் உலகும் எளிதாயிடும்

–    திருமங்கை ஆழ்வார்– நெடுமாலவன் எனத் தொடங்கும் பாடல்

அறியாமையிலிருந்து அறிவுக்கு இட்டுச் செல்க!

இருளிலிருந்து ஒளிக்கு இட்டுச் செல்க!

இறப்பிலிருந்து சாகா அம்ருதத்தன்மைக்கு அழைத்துச் செல்க

–    உபநிடதம்

பிரார்த்தனையின் போது எதை வேண்டுகிறீர்களோ அதைப் பெறுவீர்கள்; வேண்டியது கிடைத்துவிட்டதாகவே நம்புங்கள். அதைப் பெறுவீர்கள்.

–    இயேசுபிரான்

சொர்க்கத்திற்கு திறவுகோல் பிரார்த்தனை. ஆண்டவனிடம் அவனுடைய அருளன்பைக் கேளுங்கள். அவனிடம் கேட்கப்படவேண்டுமென்று அவன் பிரியப்படுகிறான். கேட்டவை கிடைக்கும் வரை பொறுமையுடன் முயற்சித்தலே மேலான பிரார்த்தனை!

–    நபிகள் நாயகம்

இந்த உலகில் கற்பனைக் கனவுகளில் பெறுவதை விட அதிகமானவற்றை பிரார்த்தனை மூலம் பெறலாம்.

–    கவிஞர் டென்னிஸன்

பிறப்பும் இளமையும்

அலெக்ஸிஸ் காரெல் 1873-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி பிரான்ஸில் லியான் என்னும் நகரில் பிறந்தார். இறை வழிபாட்டில் ஈடுபட்ட குடும்பம் அவருடையது. அவர் லியான் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பிரிவில் சேர்ந்து படிக்கலானார்.

பிரான்ஸ் ஜனாதிபதியின் கொலை

1894-ம் ஆண்டு பிரான்ஸின் ஜனாதிபதியான ஃப்ராங்கோயில் கார்னாட் என்பவர் லியானில் ஒரு அரசியல் மேடையில் பேசும்போது கொல்லப்பட்டார். அவரை அடிவயிற்றில் கத்தியால் குத்தி விட்டான் ஒருவன். இரத்த வெள்ளம் பெருகி ஓட அதைக் கட்டுப்படுத்த மருத்துவர்களால் முடியவில்லை. இரு நாட்கள் கழித்து அவர் ஆபரேஷன் டேபிளில் மரணமடைந்தார். ஜனாதிபதியின் பேச்சைக் கேட்டவர்களுள் ஒருவராக இருந்தார் மருத்துவ மாணவரான காரெல். இந்தச் சம்பவத்தால் திடுக்கிட்ட காரெல் இதற்கு ஒரு மருத்துவத் தீர்வைக் கண்டுபிடிக்க உறுதி பூண்டார். புரட்சிகரமான ஒரு அறுவைச் சிகிச்சை முறையை அவர் ஏற்படுத்தினார்.

காரெலின் தாயார் லேஸ் தொழிலில் பக்குவமானவர். சிறு சிறு ஊசிகளைக் கையாண்டு அருமையான பட்டு வேலைகளை அவர் செய்வார். காரெலும் இந்த உத்தியைத் தாயரிடமிருந்து கற்று அதில் நிபுணரானார்.

ஆக, இந்த உத்தியை அறுவை சிகிச்சையில் கையாளலாமே என்று அவர் நினைத்தார்; அதற்கென ஒரு உத்தியைக் கண்டு பிடித்தார். ரத்த நாளங்களைப் பற்றி நன்கு ஆராய்ந்த அவர் 1900-ம் ஆண்டிம் லியானில் உடல் கூறியல் பிரிவில் சேர்ந்து மிருகங்கள் மீதான சோதனைகளை மேற்கொண்டார். அங்கு தனது உத்தியைக் கையாண்டு ரத்த நாளங்களை ‘ரிப்பேர்’ செய்யும் முறையை உருவாக்கினார். ஒரு ஆய்வுப் பேப்பரையும் எழுதினார்.

இது மருத்துவ உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 1904-ம் ஆண்டு சிகாகோ பல்கலைக் கழகத்தில் வேலையில் சேர்ந்தார் அவர்.

டாக்டர் சார்லஸ் குத்ரி என்பவருடன் இணைந்து அவர் வேலை பார்த்தார். டாக்டர் சார்லஸ், காரெலின் திறமையைக் கண்டு வியந்தார். சிறுநீரகத்தைப் பதியம் செய்யும் உத்தி இதனாலேயே பின்னால் விளைந்தது. 1906-ல் காரல் நியூயார்க்கில் உள்ள ராக்பெல்லர் நிறுவனத்திற்கு மாறினார். அவரது பதியங்களும் அறுவை சிகிச்சை முறைகளும் அனைவரையும் பிரமிக்க வைத்தன.

1912-ல் அவருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

லூர்துஸ் பயணம்

1902-ம் ஆண்டு அலெக்ஸிஸ் காரெலின் ஒரு நண்பர் அவரை லியானிலிருந்து லூர்தூஸுக்கு ரயிலில் கொண்டு செல்லப்படும் நோயாளிகளைக் கவனித்துக் கொள்ள வருமாறு வேண்டுகோள் விடுத்தார். காரெல் ஒரு பகுத்தறிவுவாதி. லூர்துஸில் நடக்கும் அற்புதங்களை அவர் நம்பவில்லை. என்றாலும் கூட நண்பருக்காக ரயிலில் வர ஒப்புக் கொண்டார். மே மாதம் 28-ம் தேதி அன்று அவர் நோயாளிகளுடன் பயணப்பட்டார்.

ரயிலில் மேரி பெய்லி என்ற ஒரு பெண்மணி மரணத்தின் விளிம்பில் இருந்தாள். அவளுக்கு இருந்த நோய் ட்யூபர்குலாஸ் பெரிடோனிஸ் என்னும் வியாதி. அவளைச் சோதித்த காரெல் அவள் இறந்து விட்டாள் என்றே முடிவு கட்டினார். லூர்துஸிற்குக் கொண்டு செல்லப்பட்ட அவள் கோமா நிலையில் அங்குள்ள மருத்துவமனையை அடைந்தாள். அவள் வயிற்றின் மீது லூர்துஸின் புனித தீர்த்தம் மூன்று முறை தெளிக்கப்பட்டது. என்ன ஆச்சரியம், அவள் நாடித்துடிப்பு சீராக ஆரம்பித்தது. அவள் வயிறில் இருந்த வீக்கம் வற்ற ஆரம்பித்தது. இன்னொரு முறை தீர்த்தம் தெளிக்கப்பட்டவுடன் அவள் முற்றிலும் குணமாகி விட்டாள். தனது படுக்கையிலிருந்து எழுந்த அவள் மறுநாள் தனியாக ரயிலில் ஏறி லியான் திரும்பினாள்.

இதைப் பார்த்த காரெலுக்கு தன்னையே நம்ப முடியவில்லை. 1937-ம் ஆண்டு அவளது 58-ம் வயதில் இறக்கும் வரை ஆரோக்கியத்துடன் அவள் இருந்தாள்.

எந்த வித மருந்தும் இல்லாமல் ஒரு தீர்த்தம் தெளிக்கப்பட்டவுடன் இறக்கும் நிலையில் இருந்த ஒரு பெண் எப்படி சாதாரண நிலைக்குத் திரும்ப முடியும்? அந்த அற்புத சம்பவம் அவரை முற்றிலுமாக மாற்றியது.

இதற்குப் பின்னர் லூர்துஸிற்கு இன்னொரு முறை வந்த போது 18 மாத கண்பார்வையற்ற ஒரு குழந்தை கண்பார்வை பெற்ற சம்பவத்தையும் அவர் நேரில் கண்டார்.

 பெரும் ஆத்திகராக மாறிய அவர் பிரார்த்தனையின் பலனைப் பற்றி அற்புதமாக ஒரு பெரிய கட்டுரையையே எழுதியுள்ளார். உலகின் தலை சிறந்த கட்டுரைகளில் ஒன்றாக இன்று வரை அது போற்றப்படுகிறது!

to be continued……………………….

American Election Cartoons 7112024



Following cartoons are from Deccan Chronicle newspaper featuring American Elections and Indian politicians.

–subham—

Tags – American Election Cartoons

London Swaminathan’s October 2024 Articles Index (Post No.13,863)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,863

Date uploaded in London – 7 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Index No.143

Let us salute the Departed Souls on Mahalaya Amavasya Day (Post No.13,732) 1/10/2024

London Swaminathan’s 125th Book is for Sale! (Post No.13,733)1/10

London Swaminathan Article Index for September 2024 (Post No.13,773)1/10

London Events from my Mobile Phone -Swami Swaroopananda Talks (Post No.13,734)1/10

Sanskrit Tamil Proverbs around the World!-2 (Post No.13,37) 2/10

Ass and Donkey in Shakespeare, Tamil and Sanskrit Literature (Post No.13,741)-3/10

Ass and Donkey in Shakespeare, Tamil and Sanskrit Literature -2 (Post No.13,746) 4/10

More Proverbs; More Interesting Stories! Arjuna Story! (Post No,13,750)5/10

Shakespeare’s belief in Astrology -1 (Post No.13,753) 6/10

Shakespeare’s belief in Astrology 2 (7/10)

Chinese stories and Tamil Proverbs (Post No.13,760)8/10

Japanese Proverbs and Chinese Stories (Post No.13,764)9/10

More Stars in Shakespeare and Hindu Literature (Post.13,767)10/10

Tamil Assassinations and Proverbs (Post 13,775)13/10

Screeching Owls in Shakespeare, Tamil and Sanskrit Scriptures (Post No.13,779)14/10

Tamil and Pancha Tantra Proverbs around the World (Post No.13,782)15/10

Eclipse ,Ghosts and Omens from Shakespeare, Tamil and Sanskrit Books (Post.13,785)16/10

Except Manu, Whole World treated Women with Contempt! – Part 1 (Post No.13.789)

2 Except Manu, Whole World treated Women with Contempt! – Part 2 (Post No.13,792)18/10

London Swaminathan Article Index for September 2024 (Post No.13,773)12/10

Tamils attack Women from Sangam Age! Part 3 (Post.13,795)19/10

Sanskrit Poets and Tamil Poets attack Women 4 (last part) Post No.13,798)20/10

At the front door a tiger was checked, at the back door a wolf entered ! (Post No.13,812)24/10

Ghosts in Shakespeare‘s Plays (Post No.13,816)25/10

Gudimallam Siva Temple – Bundle of Contradictions and Web of Lies! (Post No.13,822)27/10

Raven Bird in Shakespeare and Hindu Scriptures- Inauspicious (Post No.13,805)22/10

Sugarcane — Learn Tirumanthiram through Pictures- 9 (Post No.13,770)11/10

‘To wait for another hare at the same stump’ story (Post No.13,801)21/10

Learn Tirumanthiram through Pictures- 10 (23/10)

Big Deepavali Event in London Year 2024-Part 1(28/10)

Rather be a broken Jewel than an intact Tile (Post No.13,830)29/10

Columbus TV Programme shocks the Jews! (Post No.13,834)30/10

London Diwali Event 2024 Pictures Part Three (Post No.13,833)30/10

Three Things drive a Man out of his House (Post No.13,837)31/10

****

Following are lifted Items from Newspapers

AMERICAN DEVIL EXPOSED, DECCAN CHRONICLE CARTOON 2/10

ANCIENT INDIA AND THE ROMAN EMPIRE       22/10

Cartoons for you from Deccan Chronicle 5102024

Cartoons up to 27 10 2024

DECCAN CHRONICLE CARTOONS 12102024

DIWALI  CARTOONS  31102024

TWENTY FIVE ANCIENT UNIVERSITIES OF INDIA 7/10

Goa Mystery-Body of St. Francis or a Buddhist monk?7/10

****

TAMIL ARTICLES – OCTOBER 2024

நலுங்குப் பாட்டு (Post No.13,730) 1/10

உலகம் முழுதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள் -1 (Post No.13,731) 1/10

தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும்-9 (Post No.13,738) 2/10

முன்னோர்கள் பூமிக்கு இறங்கி வந்த இரண்டு அதிசய சம்பவங்கள் (Post.13,736) 2/10

தமிழ், ஸம்ஸ்க்ருதக் கழுதைகளும் ஷேக்ஸ்பியர் கழுதைகளும்-10 (Post.13,740) 3/10

2. உலகம் முழுதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள்; பீமன் பற்றிய பழமொழி! (Post 13,742)3/10

ஆசிரியரை நிந்தித்தால் நீ கழுதையாகப் பிறப்பாய் –மனு  (Post No.13,747)4/10

ஜோதிடம்:  தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-12 (Post No.13,749) 5/10

உலகம் முழுவதும் ஒலிக்கும் தமிழ்ப் பழமொழிகள்; அர்ஜுனன் கதை-3 (6/10)

கோழி அடிக்க குறுந்தடி வேண்டுமா?  உலகம் முழுவதும் தமிழ்ப் பழமொழிகள்- 4(Post.13,755) 7/10

ஜோதிடம்: தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-13 (Post No.13,762) 9/10

மேலும் சுவையான ஜோதிடச் செய்திகள்; ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-14 (Post.13,769) 11/10

தமிழ்ப் படுகொலைகளும் உலகப் பழமொழிகளும் (Post.13,776) 14/10

****

Temples

ஆக்கிரமிக்கப்பட்ட ராமர் கோவில்: ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற கோவில்கள் –36 (Post.13,744) 4/10

காக்கிநாடா கோவில்கள்- PART 37 (Post  No.13,759)8/10

38.நெல்லூர்: ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் (Post No.13,784) 16/10

39.அந்தர்வேதி, அரசவல்லி, முரமல்ல கோவில்கள்- 39 (Post.13,788)17/10

உண்டவல்லி குகைக் கோவில்கள்- 40 (Post.13,794)19/10

குடிமல்லம் சிவன் கோவிலில் அதிசய உருவம் ! – Part 41 (Post No.13,819) 26/10

ஹேமாவதியில் 4 நுளம்ப வம்ச கோவில்கள் –Part 42 (Post No.13,836) 31/10

****

சகுனங்கள்: ஷேக்ஸ்பியர்  தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் -15 (Post13,776)13/10

ஜப்பானிய பழமொழிகளும் தமிழ்ப் பழமொழிகளும்- 5 (Post.13,766) 10/10

கிரகணங்கள், சகுனங்கள் –ஷேக்ஸ்பியர், தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில்- 16 (Post No.13,797)20/10

ஷேக்ஸ்பியர் சொல்லும் அண்டங்காக்கை, காகம் ஜோதிடம் – Part 1 (Post No.13,807) 23/10

அண்டங்காக்கை ஜோதிடம்-2 (Post No.13,811) 24 /10

அடச் சீ, கழுதை! கழுதை பற்றி எட்டு ஸம்ஸ்க்ருத கவிதைகள்!!( Post No.13,810) 24/10

1.பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post.13,818)27/10

2.பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post No.13,821)27/10

3.பெண்கள் மீது ஷேக்ஸ்பியர் தாக்குதல் (Post No.13,824)28/10

கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்? உலகெங்கிலும் தமிழ்ப் பழமொழிகள் (Post.13,787)17/10

சம்ஸ்க்ருதத்தில் மருத்துவப் பொன்மொழிகள், பழமொழிகள் (Post.13,800) 21/10

சீனப் பழமொழிக்கு தமிழில் நான்கு கதைகள்! (Post No.13,804) 22/10

****

German Scholars

நள தமயந்தி, கீத கோவிந்தம் மொழிபெயர்த்த ஜெர்மன் கவிஞர் ரூக்கர்ட் (Post No.13,745) 4/10

சம்ஸ்க்ருத ராமாயணத்தை அகராதி துணையின்றி படித்த ஜெர்மானியர் (Post.13,756) 7/10

‘எகிப்திய நாகரீகம் இந்திய நாகரீகமே’ என்று சொன்ன ஜெர்மானியர்! ( Post .13,763)9/10

பிராக்கிருத மொழி இலக்கணம் எழுதிய கிறிஸ்டியன் லாசன் (Post No.13,772) 12/10

ஜிப்ஸி மொழியை ஆராய்ந்த அகஸ்ட் பாட்(Post No.13,781) 15/10

உபநிஷதத்தின் பெருமையை உலகிற்கு முரசு கொட்டியவர் ஷோபனேர்! (Post No.13,815)25/10

உபநிஷத்துக்களை அச்சிட்ட எட்வர்ட் ரோயர் (Post No.13,803)22/10

ரிக்வேதத்தை ஆராய்ந்த பிரெடெரிக் ரோசன் (Post No.13,791) 18/10

வேதகாலத்தை வான சாஸ்திரம் மூலம் கண்டுபிடித்த ஹெர்மன் ஜாகோபி (Post.13,828) 29/10

****

ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது: இரண்டு கதைகள் (Post No.13,814) 25/10

ஷேக்ஸ்பியர் நாடகங்களில் பேய்கள் (Post No.13,825) 28/10

கொலம்பஸ் பற்றி திடுக்கிடும் தகவல் — உலகம் முழுதும் அதிர்ச்சி அலைகள் (Post.13,832) 30-10

—subham—

 tags- London Swaminathan’s, October 2024, Articles Index,  Index 143

Hinduism in Japan; Names of Hindu Deities (Post 13,862)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,862

Date uploaded in London – 7 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

(I give below the important points, from the old paper cuttings I have collected)

Hindu Gods in Japan

Sea God- Varuna- Suiten

King of Gods- Indra- Taishakuten

God of Success- Ganesh- Shoten

God of Wealth- Kubera- Bishamon

Goddess of Learning- Sarswati-  Benten

Goddess of Fortune- Lakshmi- Kichijoten

Mahesh- Shiva- Daikoku

Divine architect- Visvakarman- Bishukatsuma

In the annals of Todaji Temple , it has been stated that the worship of Sarsvati and Lakshmi was first introduced in 722 CE and continued down the centuries.

Lakshmi in Japan

In Bessom Zakki (Desription of Gods) written in the 12th century, written in Siddham script,  a corrupt Sanskrit mantra reads as follows,

Sarasvatai svaha, namo Sarasvatyai mahadevyai svaha, namo bhagavata mahadevyai sarsvati sidhyatu mantrapadami svaha.

A description of Sarasvati occurs in the voluminous text Ashabasho by Shocho 1205-82 and the rituals connected with her worship have been recorded by Ryoson 1279 CE to 1349 CE in chapter CXLIX of his Byaku Hokku Sho (The White Jewel of Indian Tradition).

***

Buddhism in Japan : dates

Buddhism was officially introduced into Japan from Korea in 552 CE.

Buddhist scriptures were brought to the Japanese court by a representative of the Korean King Paikje.

Ancient Sanskrit manuscripts in old Brahmi script are preserved in Horyuji, the most ancient monastery in in Japan.

The patronage of Empress Suiko 592-628 CE to Buddhism , spread the study of Sanskrit Buddhist scriptures .

Dosho 700 CE went to China to study Buddhist scriptures.

Scriptures of Nagarjuna and Aryadeva were known to Japanese.

Panchatantra and Jataka fables were narrated with Japanese names. Classical literature of Japan shows both Hindu and Buddhist influence. First phase of Classical literature was 784 to 1100 CE and the last phase was 1241 to 1500 CE.

( the matter in Brahmi script must be researched)

— subham—

Tags – Hindu deities, Japanese names, Buddhism , Hinduism, in Japan

நெய்யை உருக்கி, தயிரைப் பெருக்கி சாப்பிட வேண்டும் (Post No.13,861)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,861

Date uploaded in London – 7 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நெய்யை உருக்கி, தயிரைப் பெருக்கி சாப்பிட வேண்டும்

Use ghee after melting, and curds diluted

இரண்டு மருத்துவ, ஆரோக்கிய பழமொழிகளை ஆராய்வோம்.

மோர்  பற்றி முன்னரே நிறைய எழுதிவிட்டேன் (கடைசியில் பழைய குறிப்புகளைக் கொடுத்துள்ளேன்)

சாப்பாட்டின் முடிவில் மோர் குடிக்க வேண்டும் ; தயிராகச் சாப்பிட்டால் ஜீரணம் ஆவது கடினம். அதை நீர்விட்டு மோர் ஆக்கி சாப்பிடுவது நலம்.

நெய்யை ஏன் உருக்க வேண்டும்? அப்போதுதான் நறுமணம் வெளிப்பட்டு; சாப்பாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் எதையும் சூடாகப் பரிமாறினால் கூடுதலாக சாப்பிடுவார்கள்; ஆறிப்போனால் அதற்கு மகிமை குறைவு. ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்று அலட்சியப்படுத்தும் பழமொழியே நமக்கு உருக்கிய, சூடான நெய்யின் பெருமையை உணர்த்தும்.

***

நெய்யில் கொழுப்புச் சத்து இருப்பது உண்மைதான்; ஆனால் அந்த கொழுப்புச் சத்து அதிகம் தீங்கிழைக்காத மானோசாச்சுரேட்டட் எண்ணெயும் ஒமேகா-3யும் நிறைந்த நல்ல சத்து ஆகும் 

மானோசாச்சுரேட்டட் எண்ணெய் என்பது தீமை செய்யாத கொழுப்புச் சத்து; ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பதை நினைவிற்கொண்டு சாப்பிட வேண்டும்

மேலும் உருக்கிய நெய்யிலுள்ள ஒமேகா-3 என்பது உடலிலுள்ள முக்கிய உறுப்புகள் திறமையுடன் செயல்படத் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு நமது இருதயம் ஒரு லட்சம் முறை ரத்தத்ததை உடலுக்குள் பம்ப் செய்கிறது அதாவது பலூனில் தண்ணீர் நிரப்பி அதை அழுத்தினால் எப்படி தண்ணீர் வேகமாக வெளியே செல்லுமோ அது போல பீய்ச்சி அடிக்கிறது. மூளையோ மணிக்கு  260 மைல் வேகத்தில் செய்தியை அனுப்புகிறது. கண்களோ பத்து கோடி செல்களைக் கொண்டு ஒளியை ஊட்டி நமக்கு பார்வையை அளிக்கிறது இதற்கான ஒமேகா-3 வெளியிலிருந்தே கிடைக்கிறது ; அதாவது நாம் சாப்பிடும் உணவிலிருந்து கிடைக்கிறது

Omega-3 supports major organs in the body, helping them to function normally, such as the heart, brain and eyes. When these organs work optimally, the heart pumps over 100,000 times a day, the brain passes information around at over 260 mph and over 100 million cells in the eye work to convert light into signals which enable you to see. Omega-3 is ESSENTIAL because the body cannot produce it from scratch and can only get it through outside sources such as diet and supplements.

***

வயிற்றில் புண் அல்லது குடல் /இரைப்பை அழற்சி  நோய் உண்டானால் ஆயுர்வேத சிகிச்சைப்படி நெய்யினைத் தருகிறார்கள் அது ஜீரணத்துக்கான சுரப்பிகளை ஊக்குவித்து தேவையான என்சைம்களை சுரக்கவைக்கும்புண்களை ஆற்றும்

According to Ayurveda, when an individual is suffering from chronic ulcer or gastritis, ghee is used to promote healing within the intestinal tract. It lubricates the connective tissues and stimulates the digestive enzymes

***

நெய்யிலுள்ள மேலும்  ஒரு நல்ல பொருள்  ப்யூட்டிரிக் அமிலம் ஆகும். ஜீரண சக்தி இல்லாதவர்களுக்கு இந்த அமிலம் இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளனர். இது நெய்யில் இருப்பதால் ஜீரண சக்தி- செமிக்கும் சக்தி—அதிகரிக்கும்.

It is often observed that people suffering from digestive problems do not produce butyric acid. They also show low levels of fatty acid and other related oils. Since ghee is rich in butyric acid and other vitamins and oils, it proves to be an amazing product to heal the gut.

****

நெய்யில் பல வகைகள்  உண்டு  பசுக்கள் ஏ 1,  ஏ 2   என்ற இரண்டு வகை புரத்தச் சத்துக்களுடன் நமக்கு வெண்ணை, நெய்யினை அளிக்கின்றன.  சில உயர்ந்த ஜாதி பசுக்களின் நெய்யில் ஏ- 2 உள்ளது . புல்லை மட்டும் மேயும் பசுக்களின் நெய்யினை மட்டுமே உபயோகிக்க வேண்டும்  இது குடலுக்கும் வயிற்றுக்கும் வலிமை ஊட்டும்; மேலே குறிப்பிட்ட நல்ல சத்துக்கள் அனைத்தும் இந்த ஏ- 2 நெய்யில் இருக்கிறது

A1 ghee is derived from cows that produce both A1 and A2 protein. A2 ghee on the other hand is derived from cow breeds like Gir, Badri, and Sahiwal. While any ghee of high quality is beneficial for your gut health, it is advisable to select grass-fed A2 ghee. This particular product is power-packed with essential nutrients to improve your digestive well-being.

****

மோரின் மகிமை

1.லலித அந்தானி கீதானி ப்ரஸூத அந்தம் யெளவனம்

விசாகாந்தா மேக மாலா தக்ரந்தம் கலு போஜனம் 

பாடலின் முடிவு ராகத்தால் சிறக்கும்; பிள்ளை பெறுவதால் இளமை சிறக்கும்;

மேகங்கள் சூழ்வதால் வைகாசி மதம் சிறப்படையும் ;  விருந்தின் முடிவில் மோர் குடிப்பதால் சாப்பாடு சிறக்கும்.

****

ஒரு கவி மோரின் பெருமையைப்  புகழ்கையில் , அது இந்திரனுக்கும் கூட கிடைக்காது என்கிறார் .

2.அம்ருதம் துர்லபம் ந்ருணாம் தேவானாம் உதகம் ததா

பித்ரூணாம் துர்லபஹ புத்ரஹ தக்ரம் சக்ரஸ்ய துர்லபம்

பொருள்:-

மனிதர்களுக்கு அமிர்தம் கிடைப்பது  அரிது.

தேவர்களுக்கு தண்ணீர் கிடைப்பது  அரிது.

தந்தையருக்கு நல்ல மகன்கள் கிடைப்பது  அரிது.

இந்திரனுக்கு மோர் கிடைப்பது  அரிது.

உணவில் மோர் சேர்ப்பதன் அவசியத்தை கவிஞர் இப்படி வலியுறுத்துகிறார் போலும்.

****

3.போஜனாந்தே பிபேத் தக்ரம் வாசராந்தரே பிபேத் பய:

நிசாந்தே ச பிபேத் வாரி த்ரிபி: ரோகோ ந ஜாயதே

சாப்பிட்ட பின்னர் மோர் குடிக்க வேண்டும், இரவில் பால் குடிக்க வேண்டும், காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த மூன்றும் செய்தால் நோயே அணுகாது.

****

அடுத்த பழமொழி

வறுத்த பருப்பை விடாதேசுட்ட எண்ணெயைத் தொடாதே

இதையும் விரிவாக ஆராய்வோம்.

TO BE CONTINUED……………………

—SUBHAM—

TAGS- மோர் நெய் ஒமேகா 3, கொழுப்புச் சத்து , தயிர் 

விஞ்ஞானமா, மெய்ஞானமா,எது சிறந்தது? (Post No.13,860)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.860

Date uploaded in London – –7 November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

kalkionlie இதழில் 2024 செப்டம்பர் 29-ம் தேதி இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

விஞ்ஞானமாமெய்ஞானமாஎது சிறந்தது?

ச. நாகராஜன் 

காலிங் பெல் அடித்தது. அதைக் கேட்ட வீட்டுக்காரர் வந்து கதவைத் திறக்கிறார்.

வாசலில் விஞ்ஞானி தலைமையிலான ஒரு தகர்க்கும் படை வந்து நின்று கொண்டிருக்கிறது.

அயர்ந்து போன வீட்டுக்காரர், “என்ன விஷயம்?” என்று கேட்கிறார்.

படை: நாங்கள் உங்கள் வீட்டை இடிக்கப் போகிறோம். ஏதோ தப்பாய் இருக்கிறது

.

வீட்டுக்காரர்: “இந்த வீட்டில் நான் பல வருடங்களாக வசித்து வருகிறேன். இது எனது சொந்த வீடு! இதில் எந்த விதத் தவறும் இல்லை. என்ன தப்பைக் கண்டீர்கள்?”

படை: எங்களுக்குச் சரியாகத் தெரியாது. ஆனால் வேலையை முடித்து விட்டால் என்ன என்று தெரிந்து விடும்.”

வீட்டுக்காரர்: வீட்டை இடித்த பிறகு ஒரு தவறும் இல்லை என்று கண்டுபிடித்து விட்டால் அதை மீண்டும் கட்டித் தருவீர்களா?”

படை: உண்மையாகச் சொல்லப் போனால் முடியாது. (ஒரு விஞ்ஞானி எப்போதுமே எளிமையாக, நேர்மையாகத் தான் பதில் சொல்வார்.) மீண்டும் எப்படிக் கட்டுவது என்பது எங்களுக்குத் தெரியாது.

வீட்டுக்காரர்: தப்பான ஒரு காரணத்திற்காக இப்படி இடித்து விட்டு, இடித்தது தப்பு என்று உணர்ந்து விட்டீர்கள் என்றால் என்ன செய்வீர்கள்?

படை: எங்களது கண்டுபிடிப்பு தற்காலிகமான ஒன்று தான். அது மாறக்கூடியது! என்றாலும் கூட எங்களது அருமையான இடித்தல் வழியைப் பாருங்கள். அனுபவியுங்கள். ஒவ்வொரு செங்கல்லாக இதை இடிப்பதைப் பாருங்கள். எங்களது இடித்தல் உத்தியில் மட்டுமே கவனம் செலுத்துங்கள். முடிவில் அல்ல.”

இது தான் விஞ்ஞான ஆய்வுகளின் தன்மை. ஆய்வுகளில் அன்றன்று தோன்றிய அல்லது கிடைத்த முடிவுகளை அறிவித்து விட வேண்டியது.

500 பேரிடம் கேள்வி கேட்டு அதற்குக் கிடைத்த பதிலை வைத்து, “மனித குலம் முழுவதற்குமான உண்மைகளை” பெரிதாகத் தம்பட்டம் அடித்துச் சொல்லி விட வேண்டியது.

இன்னொரு ஆய்வில் 1000 பேரிடம் அதே கேள்வியைக் கேட்டு இதற்கு நேர் எதிர்மாறான முடிவு கிடைத்தால், அதை இன்னும் பெரிதாகத் தம்பட்டம் போட்டுப் பெருமையாகக் கூற வேண்டியது.

எத்தனை ஆய்வுகள்! எத்தனை முடிவுகள்! தலை கிறுகிறுக்கிறது!!

நியூட்டன் புவி ஈர்ப்பு விசை பற்றி, “ஆப்பிளிலிருந்து கிரகங்கள் நட்சத்திரங்கள் வரை அனைத்துப் பொருள்களும் ஒன்றை ஒன்று ஈர்க்கிறது” என்று சொன்னார். ஆஹா! நியூட்டன் புவி ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்துச் சொல்லி விட்டார் என்று புகழ்ந்து தள்ளினார்கள்.

ஆனால் புத கிரகம் பற்றிய விஷயத்தில் அவர் கூறியது தவறாக இருந்தது.

அதில் தவறைக் கண்ட ஐன்ஸ்டீன் தனது கொள்கையைச் சொன்ன போது, “ஆஹா! ஐன்ஸ்டீன் சரியாகச் சொல்லி விட்டார்” என்று புகழ்கிறார்கள். ஐன்ஸ்டீன் தத்துவத்தில் உள்ள தவறுகளைக் காண்பவர்கள் ப்ளாக் ஹோல் பற்றி ஆராயத் தொடங்கி இருக்கிறார்கள்.

இது தவிர, எந்த ஒரு நவீன கண்டுபிடிப்பிற்கும் அதன் விளைவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள ஒரு போலீஸ் படை, அல்லது ஒரு தற்காப்புப் படை தேவையாக இருக்கிறது!

உதாரணங்கள்? ஏராளம்!

அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. உலகமே நடுங்குகிறது. அடுத்தது விழுந்தால் என்ன செய்வது. கிறுக்கனான இன்னொரு ஹிட்லரோ அல்லது முஸோலினியோ அதைக் கையில் வைத்து எந்த நாட்டிலாவது போட்டால்…?

மொபைல் போன் வந்தாலும் வந்தது – சைபர் கிரைம் படைகள் ஆங்காங்கே முழு நேர வேலையில் ஈடுபட வேண்டியிருக்கிறது.

இண்டர்நெட் வந்தது – அது தீவிரவாதிகள் விரும்பி ஏற்கும் ரகசிய தகவல் பரிமாற்ற தளமாக உபயோகப்படுகிறது. இதைக் கண்காணிக்க இணையதள துப்பறியும் படை தயாராக இருக்கிறது!

மார்ஃபிங் வந்தது. குடும்பப் பெண்மணிகள் பயப்படுகிறார்கள். எங்கே தங்கள் தலையை நிர்வாண கவர்ச்சிப் பெண்ணின் உடம்பில் ஒட்டி வாழ்க்கையை நாசமாக்கி விடுவார்களோ என்று!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. வந்து விட்டது. 

ஆகப் பெரும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாகிங் சொன்னது போல மனித குல அழிவிற்கே வழி வகுக்கிறோமோ என்ற பயமும் வந்து விட்டது.

செயற்கை நுண்ணறிவில் சிறந்து விளங்கும் ரொபாட்டுகள் தங்களுக்குள் பேசிக் கொண்டு தங்கள் எஜமானர்களான மனிதர்களை ‘ஒரு வழி செய்து விட்டு’ ரோபாட் ராஜ்யத்தை அமைத்து விட்டால்….

இப்படி ஒரு எழுத்தாளர்  அறிவியல் புனைகதை தானே எழுதி இருக்கிறார் என்று சமாதானப்படுத்த வேண்டாம்.

ஏனெனில் அப்படி ஒரு சாம்ராஜ்யத்தை எதிர்க்க மனிதர்கள் யாரும் இருக்கமாட்டோம்!

விஞ்ஞானத்தின் போக்கு இப்படி என்றால் மெய்ஞானத்தை எடுத்துக் கொள்வோம்.

அது கூறும் உண்மைகள் நித்தியமானவை, சத்தியமானவை. அவற்றை மேற்கொள்பவன் யாரையும் நிந்திக்கமாட்டான்; அழிக்க மாட்டான்.

மாறாக அன்பான உலகத்தை என்றும் இருக்கும் படி நிறுவி அன்பே தெய்வம் என்று தெய்வ மயமாக வழி கோலுவான். 

சரியாகத் தான் திருமூலர் சொன்னார்:

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்

அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே!

விஞ்ஞானமா, மெய்ஞானமா, எது சிறந்தது சொல்லுங்கள்!

***