ஒரு லட்சம் பெண்களை எரித்துக் கொன்ற மஹா பாவிகள்! (Post No.13,851)

Burning women with many black cats

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,851

Date uploaded in London – 4 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx   

Hanging women in hundreds

பெண்களை எரித்துக் கொன்ற மஹா பாவிகள் ; மூடி மறைக்கும் வெள்ளைக்காரர்கள் 

ஹிந்து மஹா சமுத்திரத்திலுள்ள அத்தனை சகதியையும் அள்ளி வீசி எறிந்தாலும் கூட அவர்கள் செய்த அட்டூழியங்களுக்கு அது போதாது என்று சுவாமி விவேகானந்தர் சொன்னது எவ்வளவு உண்மை என்பது கிறிஸ்தவ மத வெறியர்கள் செய்த படுகொலைகளைப் படித்தால் புரியும்; ரத்தம் கொதிக்கும்! 

JOAN OF ARC (1412-1431)

உலகப் புகழ்பெற்ற கிறிஸ்தவ புனிதப் பெண்மணி ஜோன் ஆப் ஆர்க் SAINT JOAN OF ARC  (1412-1431)  பற்றி மட்டும் எல்லோருக்கும் தெரியும் . அவளை 19 வயதில் பிரெஞ்சு பாதிரிமார்கள் மூலம்  பிரிட்டிஷ் வெள்ளைக்காரர்கள். உயிருடன் தீயில் எரித்துக் கொன்றார்கள்; நடந்தது பிரான்சில்..

உண்மையில் இது ஒரு அரசியல் படுகொலை ; பிரான்சும் .இங்கிலாந்தும் பூனையும் எலியும் போல, பாம்பும் கீரியும் போல சண்டையிட்ட நாடுகள்

1431-ல் எரித்துக் கொன்றுவிட்டு ஐநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் அவளுக்குப் புனிதர் செயின்ட் SAINT பட்டம் கொடுத்தது பிரான்ஸ். ஆனால் அவளை மட்டும் எரித்தும் தூக்கில் தொங்கவிட்டும் கொல்லவில்லை. ஒரு லட்சம் பெண்களை ஜோதிடம் சொன்னதற்காகவும். கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றாதற்காகவும், சூன்யக்காரிகள் WITCHES என்று முத்திரை குத்தி எரித்தனர். இந்த அட்டூழியங்களை வெள்ளைக்காரர்கள் குழந்தைகளுக்குச் சொல்லாமல் மூடி  மறைக்கின்றனர். இதை நாள்தோறும் சொல்லி  வெள்ளைக்காரர்கள் இராட்சதர் என்பதை நாம் நமது பிள்ளைகளுக்குச் சொல்லித்தரவேண்டும். அந்த அப்பாவிப் பெண்களின் ஆவிகள் அவர்களை அழித்து நாசமாக்கும் என்பது மட்டும் உண்மை.

நம்ம ஊர் கழிசடைக் கும்பல்கள், இந்து மத வழக்கங்களைக் குறைகூறும் போது அவைகளுக்கும் அதுகளுக்கும் இது பற்றி விக்கிபீடியா பிரிட்டானியா என்சைக்ளோபீடியாக்களில்  உள்ள செய்திகளைக் காட்ட வேண்டும்

****

விக்கிபீடியா, பிரிட்டானியா என்சைக்ளோபீடியாக்களில் அறுபதாயிரம் பேரை மட்டும் எரித்துக் கொன்றதாக இருக்கிறது; ஆனால் பிரான்சில் கிராமம்தோறும் பெண்களை எரித்தும் தூக்கில் தொங்கவிட்டும் நடந்த அட்டூழியங்களை யாரும் எழுதவில்லை. பாரீஸ் போன்ற நகரங்களில் நடந்த சில நூறு பெண்களின் படுகொலைகள் மட்டுமே ரிக்கார்டில் உள்ளன.

இந்தப் படுகொலைகளுக்குப் பெயர் சூன்யக்காரிகள் வேட்டை WITCH HUNTING விட்ச் ஹன்டிங்!

இப்போதைய ஆராய்ச்சியாளர்கள் இது சூன்யக்காரி வேட்டை அல்ல, கிறிஸ்தவ மதத்தை எதிர்த்தவர்கள் அல்லது பின்பற்றாமல் அந்த நாட்டின் ஒரிஜினல் (PAGAN) நம்பிக்கையைப் பின்பற்றியோரைப் படுகொலை செய்த செயல் என்று எழுதியுள்ளனர்.

இதில் ரத்தம் கொதிக்கச் செய்யும் விஷயம் என்ன வென்றால் மூன்று சித்திரைவதை புஸ்தகங்கள் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் விற்கப்பட்டன. அதில் சூன்யக்காரிகளை அடையாளம் காண்பது எப்படி, அவர்களை நான் சூன்யக்காரிதான் என்று ஒப்புக்கொள்ளச் செய்ய என்ன வகையில் சித்திரவதை செய்யவேண்டும் என்று கிறிஸ்தவப் பாதிரிகள் . எழுதியுள்ளனர் ஐரோப்பாவில் மறுமலர்ச்சி RENAISSANCE   ஏற்பட்டது பற்றி எல்லாம் நம் எல்லோருக்கும் பாடப் புஸ்தகங்களில் எழுதிய மஹா பாவிகள் அதே காலத்தில் நடந்த இந்தப் பெண்கள் படுகொலைகள் பற்றி ஒன்றுமே எழுதவில்லை.

beating women; flogging women 

அதே போல ஸ்பெயின், போர்ச்சுகல் நாட்டு கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள், தென் அமெரிக்காவிலுள்ள மாயன், அஸ்டெக் இன்கா நாகரீகங்களை அழித்தது பற்றியும் நமக்குக் கற்பிக்கவில்லை. அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் உள்ள பழங்குடி மக்களை கொக்கு, குருவி சுடுவது போல  சுட்டுக்கொன்று அவர்கள் எண்ணிக்கையை சில ஆயிரமாகக் குறை த்தது பற்றியும் சொல்லவில்லை!

ஆனால் விட்ச் ஹண்டிங் பற்றிய புஸ்தகங்களில் இவர்கள் செய்த அட்டூழியங்களை ஆராய்ச்சியாளர்கள் அட்டவணைப் படுத்தியுள்ளனர்; குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட பல பெண்கள் தைரியமாக எதை ஒப்புக்கொள்ளச் சொல்கிறீர்கள்?  நான் நம்புவது இதுதான் என்று துணிச்சலுடன் பேசியதையும் ரிக்கார்ட் செய்து, நாங்கள் அவளை எரித்துக்கொன்றது சரியே என்றும் எழுதியுள்ளனர்.

பெண்களைக் கூண்டில் ஏற்றிவைத்து அத்துடன் கருப்பு நிறப் பூனைகளையும் தொங்கவிட்டு பொது மைதானங்களில் எரித்தனர். அவள் துடிதுடித்துச் சாவதைப் பார்க்க பிராம்மாண்டமான வெறிபிடித்த கும்பல் கூடியது. பூனை, ஆந்தை, நரி, ஓநாய் வடிவில் சூன்யக்காரிகள் வருவார்கள் என்று அந்தக் காலத்தில் மூட நம்பிக்கைகளைக் கிறிஸ்தவ பாதிரியார்கள் பரப்பினார்கள்

இப்படி எரித்த ஒரு லட்சம் பேர்களில் ஆண்கள் தொகை மிகவும்  குறைவு; அப்பாவிப் பெண்களின் எண்ணிக்கை 60,000 க்கு மேல்!

பெண்களை சித்திரவதை செய்து நான் சூன்யக்காரியே என்று ஒப்புக்களைச் செய்யவைக்கும் கிறிஸ்தவப் பாதிரிகளின் மூன்று புஸ்தகங்கள் :–

Turn to a witch-hunting manual such as the Malleus Maleficarum! This famous book, known as “The Hammer of Witches” in English, was written in the 15th century by a pair of inquisitors for the Catholic Church

A Pleasant Treatise of Witches

“The manner of the Witches

பிரான்சில் ஜான் ஜோ ஆப் ஆர்க் போல கொல்லப்பட்ட பிரபல பெண்களின் பெயர்கள்

Famous “Witches” or “possessed women” of France

  • Joan of Arc
  • Marie des Vallées, Saint of Coutances
  • Margot de La Barre
  • Marion la Droiturière
  • Jehenne de Brigue
  • Macette de Ruilly
  • Catherine David
  • Martiale Espaze
  • Madeleine de Demandolx de la Palud (Louis Gaufridi)
  • Élizabeth of Ranfain
  • Jeanne des Anges (Urbain Grandier)
  • Madeleine Bavent
  • Leonora Galigaï

****

அமெரிக்காவுக்குப் பரவிய வியாதி!

இந்தப்  பெண்களைப் படுகொலை செய்யும் வியாதி அமெரிக்காவுக்கும் பரவியது. மக்களை அச்சுறுத்தி கிறிஸ்தவ மதத்தை ஒப்புக்கொள்ளச் செய்ய இது பேருதவியாக இருந்தது அமெரிக்காவில் சேலம் விசாரணை INQUISITION (படுகொலைகள்) என்ற பெயரில் எழுதி  வைக்கப்பட்டுள்ளன. உயிருடன் பெண்கள் எரிக்கப்படுவதைக் கண்டு பொதுமக்கள் ஆனந்தக் கூத்தாடினர்.

Bernad Shaw book St Joan

19 வயது ஜோன் மீது அவர்கள் சாட்டிய குற்றச்சாட்டுகள் :

நீ ஆண்கள் உடைகளை அணிகிறாய்;

நீ ஒரு சூன்யக்காரி;

நீ கிறிஸ்தமதத்துக்கு அபசாரம் செய்கிறாய்.

ஜோன் ஒரு அபூர்வ சக்தி வாய்ந்த ஏழைக் குடியானவப் பெண்;  பிரிட்டிஷ் வெள்ளைகளுக்கு எதிரான யுத்தத்தில் பிரான்சுக்கு வெற்றி தேடித் தந்தாள் இதனால் பிரிட்டிஷ்க்காரர்களுக்கு ஆத்திரம் அப்போது பிரான்சில் மத்திய அரசு கிடையாது; பர்கண்டியன் எனும் சிறு கும்பல் ஜோனைப் பிடித்து வெள்ளைகார்களுக்கு விலைக்கு விற்றது; உடனே பாதிரிகள் விசாரணை நடத்தி அவளை உயிருடன் எரித்தனர்; விந்தை என்ன வென்றால் அவள் ஜீசஸ் ஜீசஸ் என்று ஏசு கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிக்கொண்டு இறந்தாள்!

பிரிட்டிஸ்காரர்கள் செய்த கொடுமை பிரெஞ்சு மக்களின் ரத்தத்தைக் கொதிக்கச் செய்தது; 500 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்த ரத்தக் கொதிப்பை அகற்ற பிரான்ஸ் அவளுக்குப் புனிதர் SAINT பட்டம் கொடுத்தது.

பெண்களை விலைக்கு விற்கும் மனப்பான்மை, அதை விலைக்கு வாங்கும் மனப்பான்மை, பெண்களை மைதானத்தில் சிதை மூட்டி உயிருடன் எரிக்கும் போக்கு, அதைக் கண்டு மக்கள் ஆரவாரம் செய்யும் மனப்போக்கு, அதாவது மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்ட போக்கு எல்லாம் வெள்ளைகாரர்களின் உளப்பாங்கினைத் தோலுரித்துக் காட்டுகிறது இது கடைசி வரை மாறவில்லை ஏனெனில் சொசைட்டி ஆப் ஜீசஸில் (S J) சேர்வதற்கு ஒருவரை மதம் மாற்றுவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் சென்ற உறுதிமொழி எடுக்கவேண்டும். இதில் படுகொலையும் அடக்கம்.

இதே போல யூதர்களை மதம் மாற்றியோ அல்லது கழுத்தைப் பிடித்து தள்ளியோ வெளியே தள்ள வேண்டும் என்ற ஆணையை ஸ்பெயின் வெளியிட்ட ஆண்டுதான் கொலம்பஸ் என்னும் கொலைகாரன் இந்தியாவைக் கண்டுபிடிக்கிறேன் என்று புறப்பட்டான். இவையெல்லாம் கிறிஸ்தவர்- முஸ்லீம்- யூத மதச் சண்டைக்கு இன்றுவரை காரணமாக அமைந்துள்ளன. 55,000 முஸ்லீம்களை இஸ்ரேல் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளும் யூதர்களைக் கொண்டு படுகொலை செய்யும் செய்திகள் வந்த வண்ணம் உள்ள நேரத்தில் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

*****

From Wikipedia

In the early modern period, from about 1400 to 1775, about 100,000 people were prosecuted for witchcraft in Europe and British America.[1] Between 40,000 and 60,000[2][3] were executed, almost all in Europe. The witch-hunts were particularly severe in parts of the Holy Roman Empire. Prosecutions for witchcraft reached a high point from 1560 to 1630,[4][5] during the Counter-Reformation and the European wars of religion.

****

The Old Testament‘s book of Exodus (22:18) states, “Thou shalt not permit a sorceress to live”.

Most historians agree that the majority of those persecuted in these witch trials were innocent of any involvement in Devil worship.

****

At least 500 “witches” are thought to have been executed in England between 1542 and 1735, when witchcraft was a capital offense, according to government figures, although historians think the real number could be double. Scotland killed around 2500 “witches”; across Europe it is believed that up to 60,000 were executed. The trials swept to North America as well – where, most famously, 19 were executed in Salem, Massachusetts, with more dying under torture and investigation.

****

burning women in hundreds 

 According to Kors & Peters, modern scholars place the number of executions for witchcraft at no greater than 50,000.[37] According to Merriman, some estimates are higher.[38] Levack multiplied the number of known European witch trials by the average rate of conviction and execution, to arrive at a figure of around 60,000 deaths.[39] Barstow adjusted Levack’s estimate to account for lost records, estimating 100,000 deaths. Many were burned by the stake, decapitated, and tortured in various ways.[40] Hutton argues that Levack’s estimate had already been adjusted for these, and revises the figure to approximately 40,00

women are left to die.

 —SUBHAM—

TAGS- வெள்ளைக்காரர்கள், சூன்யக்காரிகள் , சித்திரவதை , பாதிரிகள் , சித்திரவதை புஸ்தகம், 60000, படுகொலைகள்,  ஜோன் ஆப் ஆர்க் ,, SAINT JOAN

நீ வருவாய் என நான் இருந்தேன்: பாடலில் ஒரு உண்மையான சோக சம்பவம்! (Post No.13,850)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.850

Date uploaded in London – –4 November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

நீ வருவாய் என நான் இருந்தேன்: பாடலில் ஒரு உண்மையான சோக சம்பவம்!

ச. நாகராஜன் 

26-9-1980 அன்று வெளியான தமிழ் திரைப்படம் சுஜாதாஇதை இயக்கியவர் மோகன். விஜயன்சரிதா உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

இதில் வரும் ஒரு பாடல் இது:

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

பெண் : கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை…
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை…
அமைதி இழந்த மனம் எதையும் நினக்கவில்லை…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

BGM

பெண் : அடி தேவி உந்தன் தோழி…
ஒரு தூதானாள் இன்று…
அடி தேவி உந்தன் தோழி…
ஒரு தூதானாள் இன்று…

பெண் : இரவெங்கே உறவெங்கே…
உனை காண்பேனோ என்றும்…
இரவெங்கே உறவெங்கே…
உனை காண்பேனோ என்றும்…

பெண் : அமுத நதியில் என்னை தினமும் நனைய விட்டு…
இதழில் மறைத்து கொண்ட இளமை அழகு சிட்டு…
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

BGM

பெண் : ஒரு மேடை ஒரு தோகை…
அது ஆடாதோ கண்ணே…
ஒரு மேடை ஒரு தோகை…
அது ஆடாதோ கண்ணே…

பெண் : குழல் மேகம் தரும் ராகம்…
அது நாடாதோ என்னை…
குழல் மேகம் தரும் ராகம்…
அது நாடாதோ என்னை…

பெண் : சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு…
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு…
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல…
வாராயோ…

பெண் : நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…

BGM

இந்தப் பாடலைப் பாடியவர் : திருமதி கல்யாணி மேனன்,

பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்

இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்

இந்தப் பாடலை ஒட்டி உண்மையான ஒரு சோக சம்பவம் உண்டு.

கல்யாணி மேனன் (பிறப்பு : 23-6-1941 மறைவு 2-8-2021) சிறந்த மேடைப் பாடகி. திரைப்பட வாய்ப்புக்காக பல முறை அவர் முயன்றார். ஒன்றிரண்டு பலித்தது.

அவரது கணவர் திரு கே.கே மேனன்  இந்திய கடற்படையில் ஒரு அதிகாரி. அவர் டெல்லி சென்றிருந்த சமயம் சுஜாதா படத்தில் பாடுவதற்கு வருமாறு கல்யாணி கூறப்படவே, அவர் மனம் மிக மகிழ்ந்தார்.

அவர் தன் கணவருக்கு இதைத் தெரிவித்தார். மிக்க மகிழ்ச்சி கொண்ட கணவர் டில்லியிலிருந்து விமானத்தில் கிளம்பி வருவதாகவும் ரிகார்டிங் போது கண்டிப்பாகத் தான் அங்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

காலையில் ரிகார்டிங் ஆரம்ப வேலைகள் நடந்தன. மணி இரண்டு ஆயிற்று. மேனன் வரவில்லை. இனியும் காத்திருக்க வேண்டாம் என்று பாடலைப் பதிவு செய்தார் இசை அமைப்பாளர்.

கணவர் ஏன் சொன்னபடி வரவில்லை என்று குழம்பி இருந்த கல்யாணி மேனனுக்கு வந்தது தலை மேல் இடி விழுந்தது போல ஒரு செய்தி.

அவசரம் அவசரமாக டில்லி விமான நிலையத்திற்கு விரைந்த மேனன் வண்டியின் வேகத்தால் அது விபத்திற்குள்ளாக அவர் மரணமடைந்தார்.

செய்தி கிடைத்தபோது அனைவரும் துக்கமடைந்தனர்.

நீ வருவாய் நான் இருந்தேன்

ஏன் மறந்தாய் என நான் அறியேன்

என்ற கண்ணதாசனின் வரிகள் வேறு விதமான அர்த்தத்தை நிஜ வாழ்க்கையில் கல்யாணி மேனனுக்குத் தந்து விட்டது.

இவரது மகன் தான் ராஜீவ் மேனன்.

ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்து இவர் இசை அமைப்பில் பிரபலமானார்.

2000-ம் ஆண்டில் ராஜீவ் மேனனின் ‘கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன்’ படம் வெளியிடப்பட்டபோது அதன் முதல் பாடல் கேஸட்டை கமல்ஹாஸனிடமிருந்து கல்யாணி மேனன் பெற்றார். 

ஐஸ்வர்யா ராயின் இசை ஆசிரியையாக இவர் ஒரு படத்திலும் தோன்றியிருக்கிறார். 

தனது 80-ம் வயதில் இவர் மரணமடைந்தார். 

ஒரு பாடலுக்குள் இவ்வளவு சோகமா?

நினைத்தாலே நெஞ்சம் கனக்கிறது!

***

Warnings from Hindu Nostradamus -2 (Post.13,849)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,849

Date uploaded in London – 3 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

An Andhra saint known as Hindu Nostradamus lived about 500 years ago. His name is Pothuluri Veerabrahmendra Swamy. His predictions are written on the walls of Brhamgiri Mutt in Telugu language. Facebook  enthusiasts have translated his Telugu predictions and prophesies into English. His predictions , mostly about Tamil Nadu and Andhra are in a book called Kaala Gnaanam in Telugu language. కాలజ్ఞానం கால ஞானம்.

This is second part of my article.

After reading some of the predictions , I felt that  America or China would bomb Indian cities in the third WW with British participation. These are three dangerous enemies of India. Already America, Britain and Canada are threatening Prime minister Narendra Modi through Khalistanis. All anti Indian gangs have got full support of western governments. So ,they may drop atom bombs on Indian cities.

One must remember, America dropped atom bombs only on Buddhists /Shintoists in Japan. They never dropped nuclear bombs on the armies of Hitler or Europeans because they are Christians.

Following is some of his predictions:

Women will become more powerful and will start to dominate in all spheres of society.

5) There will be two beautiful devata pakshulu or in English two birds of gods will roam the four corners of the earth. These two birds will shine like gold and will be very very beautiful and he says “papatmulaina manushulu…. means sinful men will say we will trap these birds and capture them and they will try to hunt them down and all these men who go after these birds will be destroyed.

(My Comments: We should not take it literally. Saints use symbolic language; so, the birds mentioned may be drones or more modern attack vehicles. Tamil saint Tirumular and Vedic seers spoke in secret  symbolic language.)

In one particular year , 21 big Indian cities will be destroyed on one day.

T he idols of Tiruvallur veera raghava swamy , of Kanchi kamakshi ,venkateswara swamy idol in tirupati will behave strangely

 The river Krishna will touch the nose ring of Kanaka Durga idol in Vijayawada at the end of kali Yuga.

28) Two golden bulls will be recovered and in Nellore a cock will talk like a human being and that will bring untold calamities to that city. a three year kid will foretell future events.

(Once again don’t take it literally. Even in Western countries  we see news items of animals predicting election results)

30) A date palm tree (eeetha chettu) will fall and raise by itself in a piece of land in Andhra and this will happen for six years. This tree will lower itself and stand erect all by itself for six years and at the end of six years it will completely die off. After it dies there will be a big famine in the land for six years hence.

Interpreting the Time and Date Difficult.

In Kalagnanam, many of the incidents were mentioned by Sri Pothuluri Veera Brahmendra Swami with specific Telugu year names. As the years are not numeric and repeat after every 60 years, it is practically not possible to pin point the specific incident to a particular year. Although astronomical signs are mentioned for some incidents, they too are repetitive. Another problem is to match the numeric years of Kali Yuga with those of Christian calendar. The exact year on which the present Kali Yuga is not recorded, but some interpretations mention it to be 3102 BC.

Some examples

28. In the year named ‘Dhata’ (2056-57 or +60 0r +60 or +60 years ), there would be heavy sorrow spread everywhere. Due to troubles from various other countries and due to various calamities, people would die. On ‘Marga Suddha Budhavaram’ (Means Wednesday of February month in the fortnight between newmoon day to fullmoon day), eighteen cities would get demolished in the day time itself.

29. In the year named ‘Bahudhanya’ (2058-59 or +60 0r +60 or +60 years), twenty five cities would get wiped out in bloodshed.

12. In the year named Krodhi (2024-25 or +60 0r +60 or +60 years), in the month of ‘Margasira masam’ (December) on the ‘Suddha Panchami Somavaram’ (fifth day after new moon day which falls on Monday) in the ‘Karkataka Lagna’ during Punarvasu ‘Nakshatra’ (rising sign cancer and star Punarvasu) when I would walk as ‘Sri Veerabhoga Vasantaraya’, some calamities would rise in south. This would be indicated by a new star in the sky.

13. In the sky a star would be seen as huge as a mountain. That is the star of ‘Yuga Parivartana’ (Change of Yuga). Many people would sight that star since its birth and would die. During such a time in order to protect the good people and to punish the evil people, I would come as Veera Bhoga Vasantaraya. But before that, all things would happen very fast at lightning speed within a minute.

14. When Surya (Sun) enters ‘Meena Raasi’ (moon sign – Pisces), I would come to Sri Sailam as Veerabhoga Vasantaraya holding a blazing sword of four feet in length. There I would distribute wealth to people of virtuous deeds.

15. In the year named ‘Parabhava’ (2026-27 or +60 0r +60 or +60 years ), I would gain some boons from Lord Mallikarjuna and would go to Vindhya Mountains to visit some ‘Rishis’ (saints). After accumulating the required boons and blessings, then finally I would be called as ‘Kalki’.

16. In the year named ‘Plavanga’ (2027-28) or +60 0r +60 or +60 years, Sun will appear as a ring.

17. Saturn will enter Gemini in the year Pramadicha (2033-34 or +60 0r +60 or +60 years), during this year many sinners would be killed. Before the year Ananda (2034-35) comes, due to many strange diseases, calamities, volcanic eruptions, floods, fire rains, thunderbolts, poisonous gas leakages, landslides, mountain blasts, toxic fevers sinners would get erased out in multitude.

Sixty year cycle and corresponding years is as follows

The sixty (TELUGU) Ugadi year names are given for handy ref & are as follows:
1. (1867,1927,1987, 2047) +60 Prabhava ప్రభవ
2. (1868,1928,1988, 2048) +60 Vibhava విభవ
3. (1869,1929,1989, 2049) Sukla శుక్ల or Bharguni nama samvatsara, another name
4. (1870,1930,1990, 2050) *60 Pramodyuta ప్రమోద్యూత
5. (1871,1931,1991, 2051) Prajothpatti ప్రజోత్పత్తి
6. (1872,1932,1992, 2052) Aangeerasa ఆంగీరస
7. (1873,1933,1993, 2053) Sreemukha శ్రీముఖ
8. (1874,1934,1994, 2054) Bhāva భావ
9. (1875,1935,1995, 2055) Yuva యువ
10. (1876,1936,1996, 2056) Dhāta ధాత
11. (1877,1937,1997, 2057) Īswara ఈశ్వర
12. (1878,1938,1998, 2058) Bahudhānya బహుధాన్య
13. (1879,1939,1999, 2059) Pramādhi ప్రమాధి
14. (1880,1940,2000, 2060) Vikrama విక్రమ
15. (1881,1941,2001, 2061) Vrisha వృష
16. (1882,1942,2002, 2062) Chitrabhānu చిత్రభాను
17. (1883,1943,2003, 2063) Svabhānu స్వభాను
18. (1884,1944,2004, 2064) Tārana తారణ (vaikan)
19. (1885,1945,2005, 2065) Pārthiva పార్థివ
20. (1886,1946,2006, 2066) Vyaya వ్యయ
21. (1887,1947,2007, 2067) Sarvajita సర్వజిత
22. (1888,1948,2008, 2068) Sarvadhāri సర్వధారి
23. (1889,1949,2009, 2069) Virodhi విరోధి
24. (1890,1950,2010, 2070) Vikruti వికృతి
25. (1891,1951,2011, 2071) Khara ఖర
26. (1892,1952,2012, 2072) Nandana నందన
27. (1893,1953,2013, 2073) Vijaya విజయ
28. (1894,1954,2014, 2074) Jaya జయ
29. (1895,1955,2015, 2075) Manmadha మన్మధ
30. (1896,1956,2016, 2076) Durmukhi దుర్ముఖి
31. (1897,1957,2017, 2077) Hevalambi హేవళంబి
32. (1898,1958,2018, 2078) Vilambi విళంబి
33. (1899,1959,2019, 2079) Vikāri వికారి
34. (1900,1960,2020, 2080) Sārvari శార్వరి
35. (1901,1961,2021, 2081) Plava ప్లవ
36. (1902,1962,2022, 2082) Subhakrita శుభకృత
37. (1903,1963,2023, 2083) Sobhakrita శోభకృత
38. (1904,1964,2024, 2084) Krodhi క్రోధి
39. (1905,1965,2025, 2085) Viswāvasu విశ్వావసు
40. (1906,1966,2026, 2086) Parābhava పరాభవ (vu)
41. (1907,1967,2027, 2087) Plavanga ప్లవంగ
42. (1908,1968,2028, 2088) Kīlaka కీలక
43. (1909,1969,2029, 2089) Soumya సౌమ్య
44. (1910,1970,2030, 2090) Sādhārana సాధారణ
45. (1911,1971,2031, 2091) Virodhikrita విరోధికృత
46. (1912,1972,2032, 2092) Paridhāvi పరిధావి
47. (1913,1973,2033, 2093) Pramādeecha ప్రమాదీచ
48. (1914,1974,2034, 2094) Ānanda ఆనంద
49. (1915,1975,2035, 2095) Rākshasa రాక్షస
50. (1916,1976,2036, 2096) Nala నల
51. (1917,1977,2037, 2097) Pingala పింగళ
52. (1918,1978,2038, 2098) Kālayukti కాళయుక్తి (vamshidhar)
53. (1919,1979,2039, 2099) Siddhārtha సిద్ధార్థ
54. (1920,1980,2040, 2100) Roudri రౌద్రి (Kalyani)
55. (1921,1981,2041, 2101) Durmathi దుర్మతి
56. (1922,1982,2042, 2102) Dundubhi దుందుభి
57. (1923,1983,2043, 2103) Rudhirodgāri రుధిరోద్గారి
58. (1924,1984,2044, 2104) Raktākshi రక్తాక్షి
59. (1925,1985,2045, 2105)+60 Krodhana క్రోధన
60. (1926,1986,2046, 2106) Akshyaya అక్షయ

More predictions  are available in Facebook and websites. Above matter is taken from those sources.

–subham—

Tags- Veera Brahmendra Swami, Future predictions, Kaala Gnaanam, Brahmagiri Mutt, Kadapa, Andhra saint, Nuclear attack, on Indian cities, sixty year cycle, Hindu Nostradamus, part two

இந்திய நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசித் தாக்குமா ? (Post No.13,848)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,848

Date uploaded in London – 3 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

ஹிந்து நோத்ர்டாமஸ் எச்சரிக்கை!- Part 2

நேற்று முதல் பகுதி வெளியானது

இந்திய நகரங்களை அமெரிக்கா அணுகுண்டு வீசித் தாக்குமா ?

ஆந்திரத்தில் கடப்பா ஜில்லாவில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அவதரித்த ஸ்ரீ வீர பிரம்மேந்திர சுவாமிகள் எழுதிய கால ஞானம் என்னும் நூலில் எழுதிய ஆயிரக்கணக்கான, எதிர்காலம் பற்றிய அறிவிப்புகளை மேலும் காண்போம் .

அவரது ஆரூடங்களைப் படிக்கும் போது இந்தியா மீது சீனாவோ பிரிட்டனோ அமெரிக்காவோ அணுகுண்டுத் தாக்குதல்களை நடத்தும் என்று எண்ணத் தோன்றுகிறது. ஏற்கனவே ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் இரண்டாவது தலைவர் குருஜி ஸ்ரீ  மாதவ சதாசிவ கோல்வல்கர்,  மூன்றாவது உலகயுத்தம் இந்தியாவில் நடக்கும் என்று சொல்லியிருப்பதால் பிரம்மகிரி மடத்தின் வீர பிரம்மேந்திர சுவாமிகள் சொன்னதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது .

அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகள் இந்தியாவின் எதிரிகள் ; அமெரிக்கா ஹிட்லரையும் , கிறிஸ்தவர்களையும், வெள்ளைக்காரர்களையும்  தாக்காமல் மில்லியன் கணக்கில் ஜப்பானிய புத்தமதத்தினரை அணுக்குண்டு வீசி அழித்ததை நாம் அறிவோம். ஆகையால் எந்த ஒரு யுத்தத்திலும் இந்துக்களுக்குத்தான் ஆபத்து அதிகம்.

కాలజ్ఞానం கால ஞானம்

ஒரு குறிப்பிட்ட நாளில் இருபத்தோரு  இந்திய நகரங்கள் அழியும்

***

திருப்பதி காஞ்சி திருவள்ளூர் போன்ற கோவில்களில் விக்ரகங்களில் மாறுதல்கள் ஏற்படும் .

***

கலியுக முடிவில் கிருஷ்ணா நதி நீர்மட்டம்  உயர்ந்து குன்றின் மீதுள்ள கனக துர்கா கோவிலைத் தொடும் .

****

ஒரு மூன்று வயதுக்கு குழந்தையும், ஒரு சேவல் கோழியும் வருங்காலத்தை உரைக்கும் .

****

(அவர் கூறிய அதிசய பறவைகள், அதிசய காளைகள் பற்றிய விஷயங்களை நான் எழுதவில்லை; காரணம்  என்னவெனில் இவையெல்லாம் மறைபொருளில் சொன்ன விஷயங்களாக இருக்கலாம். அவைகளை நாம் அப்படியே மொழி பெயர்க்கக் கூடாது; எடுத்துக் காட்டாக இரண்டு பொன்னிறப் பறவைகள் வானில் பறந்து பாவாத்மாக்களை அழிக்கும் என்பதை நாம் இப்போது ட்ரோன் DRONE என்று மொழிபெயர்க்கலாம். இன்னும் கொஞ்சம் காலத்துக்குப் பின்னர் ட்ரோன் DRONE போல புதிய  அதி நவீன தாக்குதல் கருவிகள் வரக்கூடும் ).

எடுத்துக்காட்டாக, திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் மறைபொருள் கூற்று என்று நிறைய  பாடல்களை எழுதியுள்ளார். பாகற்காய் விதை போட்டேன் ;கத்தரிக்காய் முளைத்தது என்பார்; உடனே அதை அப்படியே எடுத்துக்கொள்ளாமல் உரைகாரர்கள் ஆன்மீக விஷயங்களை விளங்கியுள்ளனர்.

மேலும் சில ஆரூடங்கள்

கர்நாடகத்திலுள்ள ஹம்பியில் உள்ள அனுமான் சிலை பாவாத்மாக்கள் அதிகரித்ததால் உரத்த குரலில் கர்ஜிப்பார் ; அதைக் கேட்போர் காய்ந்த இலைகளை போல கீழே விழுந்து இறப்பார்கள்( என் கருத்து- இது ஒரு பூகம்பக் குறிப்பாக இருக்கலாம்)

பல குருமார்கள் தங்களைக் கலியுக கல்கி அவதாரம் என்று சொல்லிக்கொண்டு திரிவார்கள் .

பல மடங்களில் உயர் ஜாதியினருக்குப் பதிலாக பிற ஜாதி மக்கள் தலைமை ஏற்பார்கள்.

சுவாமிகளின் ஆரூடங்களை வியாக்கியானம் செய்வோர் ஒரிஜினல் நோத்ர்தாமல் விஷயத்தில் குழம்பியது போல தவிக்க வேண்டியிருக்கிறது ஏனெனில் அவர் பஞ்சாங்கத்திலுள்ள அறுபது வருட சுழற்சிக் காலண்டரில் உள்ள ஆண்டுகளைக் கூறி, இது நடக்கும், அது நடக்கும் என்கிறார். பிரபவ என்ற ஆண்டை எடுத்துக் கொண்டால் அது ஒவ்வொரு அறுபது ஆண்டுக்கும் ஒரு முறை வரும். இதே போல கலியுகத்தை எடுத்துக்கொண்டால் அவர் சொல்லாவிடினும் ஏனைய வட்டாரங்களிலிருந்து அது  கிமு. 3102 ல் துவங்கியதாக அறிந்து நாம் எழுதுகிறோம். வான சாத்திரக் குறிப்புகளும் மீண்டும் மீண்டும் நிகழக்கூடியவை; ஆதலால் குறிப்பாக இந்த ஆண்டு என்று சொல்ல முடியாமல் யூகிக்க வேண்டி இருக்கிறது 

ஒரிஜினல் நோத்ர்தாமல்  விஷயத்தில் எல்லோரும் பொய் சொல்லுவது போல இவர் விஷயத்த்திலும் புஸ்தகங்கள் வந்துள்ளன; அதாவது நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஒரு செய்யுளை எடுத்துக்கொண்டு, பாருங்கள் சுனாமி வருவதை அவர் அன்றே சொன்னார்; பாருங்கள் கோவிட்/ சீன வைரஸ் நோய் பற்றி அவர் அன்றே சொன்னார் என்று புஸ்தகம் எழுதி காசு சம்பாதிக்கும் கும்பல்களும் உண்டு .

இதே போல முஸ்லீம் சூபி மதப் பிரிவு சந்நியாசி நைமதுல்லாவும் , ஒரிஸ்ஸாவில் ஜெகன்நாத் சாட்டர்ஜீயும் ஆரூடங்களை கூறி யுள்ளனர்.

–subham—

Tags- ஹிந்து நோத்ர்டாமஸ் எச்சரிக்கை!- Part 2 , இந்திய நகரங்கள், அமெரிக்கா, அணுகுண்டு , தாக்குதல்

வாழ்வை வளமாக்க பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்! – 2(Post No.13,847)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.847

Date uploaded in London – –3 November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

1-11-24 அன்று நடைபெற்ற ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச. நாகராஜன் ஆற்றிய உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

வாழ்வை வளமாக்க பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்! – 2

சுவாமிகள் அருளிய மயூர பந்தம்

சுவாமிகள் அருளிய மயூர பந்தப் பாடல் இது:

வரதந திபநக ரகமுக வொருகுக
வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ
வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி
விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழு
முனிவருதி 

 இது சகலவிதமான பிரச்சினைகளையும் தீர்க்க வல்ல மந்திரப் பாடலாகும்.

சுவாமிகள் இயற்றிய சதுரங்க பந்தம்

சுவாமிகள் அருளிய அற்புதமான மந்திரப் பாடல் ஒன்று சதுரங்க பந்தப் பாடலாக மலர்ந்துள்ளது.

வாளா ரநாதி மயிலேறுஞ் சுந்தர மேயமகா
வேளா மயிலோய் விமலர்கண் வந்த சமாதியர்கோ
வாளா யெனுநாவுள் ளார்நா ரருந் தெங்க ளாரியற்கே
யாளாகி வாழ்வது மாணப் பெரிதெனு மாகமமே

இந்தப் பாடலில் முதல் அடியில் 18 எழுத்துக்களும் இரண்டாம் அடியில் 21 எழுத்துக்களும் மூன்றாம் அடியில் 21 எழுத்துக்களும் நான்காம் அடியில் 18 எழுத்துக்களும் ஆக மொத்தம் 78 எழுத்துக்களைக் கொண்டிருக்கிறது இந்தப் பாடல்

சதுரங்க பந்தத்தின் இலக்கணம் தவறாமல் பாம்பன் சுவாமிகள் அருளிய பாடலும் இருப்பதைக் காணலாம்.

·         பாடலில் ஒன்றாம் எழுத்தும் 64ஆம் எழுத்தும் வா
இரண்டாம் எழுத்தும் 62ஆம் எழுத்தும் ளா
மூன்றாம் எழுத்தும் 50ஆம் எழுத்தும் ர
நான்காம் எழுத்தும் 44ஆம் எழுத்தும் நா
ஐந்தாம் எழுத்தும் 36ஆம் எழுத்தும் தி
ஆறாம் எழுத்தும் 26ஆம் எழுத்தும் ம
ஏழாம் எழுத்தும் 22ஆம் எழுத்தும் யி
பதினைந்தாம் எழுத்தும் 78ஆம் எழுத்தும் மே
பதினேழாம் எழுத்தும் 77ஆம் எழுத்தும் ம
இருபத்திஒன்பதாம் எழுத்தும் 76ஆம் எழுத்தும் க
முப்பத்தி ஐந்தாம் எழுத்தும் 75ஆம் எழுத்தும் மா
நாற்பத்தி மூன்றாம் எழுத்தும் 74ஆம் எழுத்தும் னு
ஐம்பத்தி மூன்றாம் எழுத்தும் 73ஆம் எழுத்தும் தெ
ஐம்பத்தி ஏழாம் எழுத்தும் 72ஆம் எழுத்தும் ரி

·         துருவக் குறிப்பின் அடிப்படையில் மேலே கண்டபடி சதுரங்க பந்த பாடலைப் பார்த்தால் மிகச் சரியாக அமைகிறது. அமைப்பு முறையைக் கண்டு வியக்கிறோம்.

·         இந்தப் பாடல் ஒரு மந்திரப் பாடலாக இருப்பதை பக்தர்கள் அனைவரும் அனுபவத்தால் உணர்கின்றனர். பல வித அற்புத பலன்களை இது அருளுகிறது.

குமாரஸ்தவம்

1918-ம் ஆண்டு சுவாமிகளுக்கு வெப்பு நோய் பாதித்தது. உடனே மந்திர நூலான குமார ஸ்தவம் என்ற நூலை இயற்றினார். நோய் உடனே நீங்கியது. இதை ஓதுவோருக்கு நோய்கள் தீரும், முருகன் தன் இரு தேவியருடனும் காட்சி தருவார் என்று இவர் கூறி அருளியுள்ளார். சக்தி வாய்ந்த இதை ஓதி பக்தர்கள் இன்றும் நல்ல பயனை அடைவது கண்கூடு.

ஷண்முக கவசம்

தனது தந்தையார் இறந்த சமயத்தில் அவர் உயிர் மற்றும் மெய் எழுத்துக்களைக் கொண்டு 30 பாடல்கள் கொண்ட ‘சண்முக கவசம்’  என்னும் நூலை இயற்றினார்

6 மண்டலங்களில் 6666 பாடல்கள்

சுவாமிகள் இயற்றிய ஒவ்வொரு பாடலும் தனித்தன்மைகொண்டது.

சுவாமிகள் தன் வாழ்நாளில் 6666 அரும் தமிழ் பாடல்களை இயற்றி அருளியுள்ளார்.

சுவாமிகள் இயற்றிய 6666 பாடல்களும் 6 மண்டலங்களாக வகுக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டாம் மண்டலம் (திருவலங்கற்றிரட்டு) பல்வேறு சித்திரக் கவிகளைக் கொண்டு விளங்குகிறது. இதே போல நான்காம் மண்டலத்தில் உள்ள பத்து பிரபந்தங்கள் அனைத்துமே சித்திரக்கவிகளாக உள்ளன. சித்திரக் கவிகளுக்குள்ளே பல சித்திரக் கவிகளை அமைத்தும் இவர் பாடியிருப்பது தமிழ் என்னும் விந்தையைப் பற்றி ஆராய விரும்புவோருக்கு ஒரு அரும் பொக்கிஷமாகும்.

சஸ்த்ர பந்தம், சதுரங்க பந்தம் மயூர பந்தம், கமல பந்தம் என பல்வேறு வகை சித்திரக் கவிகளை சுவாமிகள் அருளியுள்ளார்.

சண்முக கவசம். பஞ்சாமிருத வண்ணம், குமரகுருதாச சுவாமிகள் பாடல் (1266), ஸ்ரீமத் குமார சுவாமியம்  (1192).திருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) – 1135, திருப்பா (திட்ப உரை) – 1101, காசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம் – 608,

சிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) – 258 ஜீவயாதனா வியாசம் (ஜீவகாருண்யம் – புலால் மறுப்பு) – 235, பரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) – 230, செக்கர் வேள் செம்மாப்பு – 198, செக்கர் வேள் இறுமாப்பு – 64, தகராலய ரகசியம் – 117,, குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி – 100, சேந்தன் செந்தமிழ் – 50, குமாரஸ்தவம் 44, தென்னாட்டுத் திருத்தலதரிசனம் 35

பத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) 30, ஆனந்தக்களிப்பு 30, சமாதான சங்கீதம் 1, சண்முக ஸஹஸ்ர நாமார்ச்சனை 2

ஆகியவை சுவாமிகள் இயற்றிய 6666 பாடல்களைக் கொண்டுள்ளது.

சமாதி

1926-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி உயில் ஒன்றை எழுதி தேஜோ மண்டலசபை அமைப்பை உருவாக்கி செயல்முறை ஒன்றை சுவாமிகள் உருவாக்கினார்.

சுவாமிகள் 1929-ம் ஆண்டு மே மாதம் 30-ம் தேதியன்று காலை 7.15 மணிக்கு ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் சமாதி அடைந்தார்.

சுவாமிகளின் சமாதி சென்னை திருவான்மியூரில் கலாக்ஷேத்ரா அருகில் திருமடவளாகத்துள் அமைந்துள்ளது.

தமிழின் தெய்வத் தன்மையை உணரவும் முருகனின் அருளைப் பெற்று வளமான வாழ்க்கை பெறவும் பக்தர்கள் துதிக்க அருட்பாடல்களைத் தந்த ஒரு பெரும் மகான் பாம்பன் சுவாமிகள் என்றால் அது மிகையாகாது!

**

LONDON HOSPITAL DIWALI YEAR 2024 (Post No.13,846)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,846

Date uploaded in London – 2 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

LONDON HOSPITAL DIWALI; 

EVERY YEAR WE CELEBRATE DIWALI, JANMASHTAMI, PONGAL ETC IN THE NORTHWICK PARK HOSPITAL IN LONDON. THIS YEAR WE CELEBRATED DEEPAAVALI ON TUESDAY 29 OCTOBER 2024; AS USUAL HARE KRISHNA TEMPLE TEAM FROM WATFORD DID THE BHAJAN AND HELPED 100s OF DEVOTEES TO DO THE PUJA TO LORD VISHNU/KRISHNA/RAMA.

THE SPEAICLITY OF THE EVENT IS STAFF FROM ALL RACES AND CULTURES PARTICIPATE IN IT WITH FULL INTEREST. PRASAD WAS DISTRIBUTED AT THE END. I TOOK OVER 50 PICTURES. SOME IMPORTANT PICTURES ARE GIVEN BELOW:

–Subham—

Tags- N W P Hospital, Diwali 2024, pictures

Warnings from Hindu Nostradamus -1 (Post No.13,845)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,845

Date uploaded in London – 2 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Warnings from Hindu Nostradamus -1 (Post No.13,845)

Who is Hindu Nostradamus ?

An Andhra saint who lived about 500 years ago. His name is Pothuluri Veerabrahmendra Swamy. His predictions and prophesies are in a book called Kaala Gnaanam in Telugu language. కాలజ్ఞానం கால ஞானம்

Pothuluri Veerabrahmendra Swamy or Brahmamgaru was a prominent sage from the 16th century and was considered to be a future predictor (Kaala Gnaani) . He is the author of Kaala gnaanam which contains many predictions of the future which have either been proved to be true or still happening.

His residence called Brahmamgari Matham (Mutt) was built in Kandimallayapalli after his death.

Where is Brahmam Gari Jeeva Samadhi?

Brahmamgari Matham is located in Kandimallai Village of Rajampet Revenue Division in Kadapa District. This Matham is 30 km away from Mydukur, 41 Km away from Badvel and 70 km away from Kadapa District.

The Kalagnanam has many authors, who prophesied the future of their times

A brief part of Kalagnanam written by Sri Veera Brahmendra Swamy, which was kept in his native place has been published in Telugu language as a book in 1970 for the first time, along with some other prophet’s work. The remaining 3parts of Kalajnyaanam,

A large volume of the predictions made by Veera Brahmendra Swamy are said to be kept under the tamarind tree in Achamaamba temple or Achamaamba home in Banaganapalle village of Kurnool district of Andhra Pradesh. Out of the brief context of Kalagnanam said by Veera Brahmendra Swamy, 320 verses or poems are very popular with name “Govinda Vakyas”.

‘Sri Pothuluru Veerabrahmendra Swami’ the Hindu Nostradamus Saint (Telugu: పోతులూరి వీరబ్రహ్మేంద్రస్వామి) a Hindu mystic, Kadapa district of Andhra Pradesh state in India.

He said he will come again to this earth as ‘Veera Bhoga Vasantharayalu’ and that would mean the end of life on earth. He prophesized that before his arrival the world would be in a very chaotic condition. Swami left his body with his self imposed ‘Jeeva Samadhi’. He went into Samādhi when he was still alive and asked to close the stone above.

****

Some of the predictions appeared on face book around 2007. Here are some predictions taken from Facebook and Websites:

29. In the year named ‘Bahudhanya’ (2058-59), twenty five cities would get wiped out in bloodshed.

30. In the year named ‘Bahudhanya’ (2058-59), Kanaka Durga kind of ferocious Shaktis would start destruction of the evil ones. Goddess Kali would go to Karnataka. Goddess Durga would be sent to all Muslim countries. Bharata would be sent to ‘Mahanandi’. Lord Nagendra would step on ‘Kandanooru’ place. Chakri would be sent to ‘Morasa’ state. Lord ‘Arkhasoma’ would be sent to northern countries. Goddess Kamakshi would be sent to western countries. These Gods and Goddesses would annihilate sinners on an astronomical range in their respective areas wherever they go.

61. On 26/08/2054, i.e. Sravana Bahula Ashtami of the year Bhava (2054-55), many rivers will be with flash floods and many cities will be submerged.

62. Lakhs of people will be drowned and washed away by flash floods at the time of a festival on a Sunday(Jul/Aug-2055) at Tirunelveli, Tamil Nadu.

64. On 3rd February, 2058 (Magha Sudhdha Dasami of the year Eswara) all the countries surrender their Sovereignity to Lord Veera Bhoga Vasantha Raaya, who will later rule the entire world for 108 years and his descendants about 1000 years.

65. In the year Bahudhanya (2058-59) bloodbath in 25 cities, and calamities are indicated.

67. Incestual relationship will develop between men and women.

68. A cow gives birth to a man at Govindapuram, near Golconda, Hyderabad,India.

(This incident starts the count down to final nuclear explosion/attack on Hyderabad).

69. The Brahmins will sink to a low estate and serve other castes.

71. Wild animals’ roaming in villages and towns is indicated.

76. Learning will be traded as a commodity in shops.

77. All the seas will be polluted and oceanic species become extinct.

78. The iron pillar in Ahobilam (holy place in Andhra Pradesh) sprouts sannajaji (jasminum articulatum) flowers.

79. A direct Disciple of Lord Parasurama and Acharya Nagarjuna, Sri Sanaari Visweswara and other Sidhdha Purushas (probably Aghori sect), with his Alchemy will clear the debts of the Country and save from financial difficulties, and later link all the rivers and save from severe drought.

80. Only 1/7th of the World population will survive by the end of Third World War.

To be continued……………………..

Tags- Hindu Nostradamus, Pothuluri Veerabrahmendra Swamy, Brahmagiri Mutt (matham), Kala Gnanam, Predictions, Prophesies, కాలజ్ఞానం கால ஞானம்

ஹிந்து நோத்ர்டாமஸ் எச்சரிக்கை! பல நகரங்களில் குண்டு வெடிக்குமாம்!! (Post.13,844)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,844

Date uploaded in London – 2 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முதலில் ஒரிஜினல் நோத்ர்டாமஸ்  பற்றி தெரியாதவர்களுக்கு ஒரு சில வார்த்தைகள் :

நோத்ர்டாமஸ் என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். மைக்கேல் டி நோத்ர்டாமஸ் (Michel de Nostredame), (1503 — 1566)

என்பவர் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் புரியாத — இரு பொருள்படும் — செய்யுள் வடிவில், இனி உலகத்தில் என்ன நடக்கப்போகிறது என்று எழுதி புஸ்தகமாக வெளியிட்டார் ; கிறிஸ்தவ மத தலைமையகம் அவரை எச்ச ரித்தவுடன் உயிருக்குப் பயந்து நோத்ர்டாமஸ் தலைமறைவானார். ஏனெனில் அக்காலத்தில் கிறிஸ்தவ வெறியர்கள் அறுபதாயிரம்  பேரை தூக்கில் தொங்கவிட்டும் GALILEO கலீலியோ போன்றோரின் கண்களைக் குருடாக்கியும் JOAN OF ARC ஜோன்  ஆப் ஆர்க் போன்ற யுவதியை உயிருடன் தீயில் எரித்தும் கொன்று குவித்த காலம்

அவர் பல பொருள்படும் வகையில்/ பாணியில் செய்யுட்களை எழுதியதால் எல்லோரும் நினைத்த படி புஸ்தகம் எழுதி காசு சம்பாதிக்கின்றனர். அதாவது மோசடி செய்து வருகிறார்கள். இனி அணுகுண்டு விழும், உலகம் அழியும் என்று அவர் சொன்னதாக எழுதியதை எல்லாம் நீங்கள் கூகுள் செய்தால் நல்ல நகைச்சுவை வெடிகள் கிடைக்கும் சிரித்து மகிழுங்கள்!

நடந்து முடிந்த விஷயங்களுக்கு அவர் பெயரைச் சொல்லி வியாக்கியானம் செய்த புஸ்தகங்கள், அதி பயங்கர தமாஷ்; சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால்  மக்களை ஏமாற்றி காசு சம்பாதித்தார்கள்; இனி நடக்கப்போவதை ஒருவர் சொல்லி அது நடந்தும் விட்டால் ஒருவரை நம்பலாம். அதுவும் பல விஷயங்களை அவர் சொல்லி அது உண்மையானல்தான் நம்பவேண்டும்; நிற்க

ஹிந்து நோத்ர்டாமஸ் யார்?

ஹிந்து நோத்ர்டாமஸ் வீர பிரம்மேந்திர சுவாமிகள் ஆந்திரத்தில் புகழ்பெற்றவர் .  ஆந்திரத்தில் யாகந்தியில் உள்ள குகையில்  சில காலம் தங்கியிருந்து కాలజ్ఞానం கால ஞானம் என்னும் நூலை இயற்றினார்.

அவருடைய కాలజ్ఞానం கால ஞானம் என்னும் தெலுங்கு மொழி நூலில் இனி எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்ச்சிகளை எழுதியுள்ளார்.

அவரது பிரம்மகிரி மடத்தின் சுவர்களில் அவைகளை பொறித்தும் உள்ளனர்.  அந்த மடம் கடப்பாவிலிலிருந்து எழுபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

ஸ்ரீ போத்தலூரி வீர பிரம்மேந்திர சுவாமிகள் பக்கதர்களுக்கு முன்னால் உயிருடன் சமாதியில் புகுந்தார். அவர் பதினாறாம் நூற்றாண்டில் அதாவது சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார் 

அவர் தெலுங்கு மொழியில் எழுதியதை சிலர் ஆங்கிலத்தில் கொடுத்துள்ளனர். அவற்றின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்

அவர் சொன்ன விஷயங்கள் :

2007– ஆம் ஆண்டில் பேஸ்புக்கிலும் வெப்சைட்டிலும் கண்ட விஷயங்களைத் தருகிறேன்

பெண்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் ஆவார்கள்; எல்லாத்துறைகளிலும் ஆதிக்கம் செலுத்துவார்கள்.

****

வீரபோக வசந்த ராயலு என்ற பெயரில் மீண்டும் பிறப்பேன்; எப்போது பெண்கள் கையில் முழு ஆதிக்கமும் போகிறதோ அப்போது நான் பிறப்பேன்.

நாட்டில் பல இடங்களில் வெடி குண்டுகள் வெடிக்கும்

பஹுதான்ய (2055) வருடத்தில் 25 நகரங்களில் ரத்தக் களறி ஏற்படும்; பெரும் நாசங்கள் ஏற்படும்

காஷ்மீரிலும் 

 காசியிலும் போர் நிலை ஏற்படும்

கங்கை நதி திசை  மாறி  காசியில் புகும்.

மெக்கா மசூதியில் புனிதம் கெடும் நிகழச்சிகள் நடந்து பெரும் போர் வெடிக்கும்.

வன விலங்குகள் நகரங்களில் திரியும்

நெல்லையில் பெரிய வெள்ள விபத்து நேரிட்டு ஆயிரக்கணக்கானோர் இறப்பர்.

To be continued…….

–subham—

Tags-வீர பிரம்மேந்திர சுவாமி, కాలజ్ఞానం, கால ஞானம், பிரம்மகிரி மடம் 

ஆலயம் அறிவோம்  : பட்டீச்சுரம்! (Post No.13,843)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan 

Post No. 13.843

Date uploaded in London – –2 November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஆலயம் அறிவோம் 

பட்டீச்சுரம்! 

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்

    உலகு பேணல் உறுவார்

துறவி எனும் உள்ளம் உடையார்கள்

    கொடி வீதி அழகாய தொகுசீர்

இறைவன் உறை பட்டிசரம் ஏத்தி எழுவார்கள்

     வினை ஏதும் இலவாய்

நறவ விரையாலும் மொழியாலும்

     வழிபாடு மறவாத அவரே

திருஞான சம்பந்தர் திருவடி போற்றி! 

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தேவாரத் திருத்தலங்களில் தென்கரைத் தலங்களில் 23வது தலமாக அமையும் பட்டீசுரர் ஆலயமாகும்.

தமிழ்நாட்டில் கும்பகோணம் ரயில் நிலையத்திற்குத் தென்மேற்கில் 6 கிலோ மீட்டர் தொலைவில் இந்தத் திருத்தலம் உள்ளது.

இறைவர் பட்டீஸ்வர நாதர்

இறைவி : பல்வளைநாயகி, ஞானாம்பிகை

தலவிருட்சம் வன்னி மரம்

தீர்த்தம் : ஞானதீர்த்தம்

இந்தத் திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு,

இந்தத் தலமானது சக்தி வனத்தில் உள்ளதென்று பட்டீச்சுர மாகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. இது பராசக்தியினால் ஏற்படுத்தப்பட்ட வனமாகும். அம்பிகை இங்கு தவம் செய்ததால் இது சக்தி வனம் என்ற பெயரைப் பெற்றது.

அம்பிகை முன் சிவபிரான் ஜடாமகுடதாரியாக பிரசன்னம் ஆனமையால் அவருக்கு கபர்த்தீஸ்வரர் என்ற பெயரும் உண்டு.

அம்பிகைக்குப் பணிவிடை செய்ய காமதேனு தனது மூத்த பெண்ணாகிய பட்டியை அனுப்பினார். பட்டி அம்பிகைக்குப் பணிவிடை செய்து வரும் காலத்தில் சக்தி வனத்தில் தானும் சிவலிங்க பிரதிஷ்டை செய்து பூஜிக்க விரும்பி, அம்பிகை உயரமான பீடத்தில் மணலால் லிங்கத்தை ஸ்தாபித்து, சுப்ரமண்யர் உள்ளிட்ட பரிவார தேவதைகளையும் ஆவாஹனம் செய்து, பூஜித்தாள்.

சிவபெருமான் எதிரே ஒரு தீர்த்தத்தை உண்டாக்கி அதில் கங்கை முதலிய அறுபத்தாறு கோடி தீர்த்தங்களையும் ஆவாஹனம் செய்து ஞான தீர்த்தம் என்று பெயர் வைத்து மணல் ரூபமாக இருந்த சிவபிரானுக்கு பூஜை செய்து வந்தாள்.

பட்டியின் பக்தியினால் உண்டான லிங்கத்திற்குப் பட்டி லிங்கம் என்ற பெயரும் இந்தத் தலத்திற்கு பட்டீச்சுரம் என்ற பெயரும் ஏற்பட்டன.

இங்கு தர்மலிங்கம் என்னும் ஒரு லிங்கம் ஒன்றும் உண்டு.

ஒரே காலத்தில் சக்திவனத்தையும். பட்டிலிங்கத்தையும், கபர்த்தீஸ்வரரையும் தரும லிங்கத்தையும் தரிசிப்பவர்கள் முக்தி அடைவர் என்பதில் ஐயமில்லை.

ஞானதீர்த்தத்தால் அபிஷேகம் செய்தவன் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவான்.

இத்தலம் விராடபுருஷனுக்குச் சுழிமுனைத்தலம் என்று இந்தத் தலத்தின் மான்மியம் கூறுகிறது.

சக்திமுற்றத்திற்கு தெற்கே உள்ள இந்தத் தலத்தில் சிதம்பரம் இரேவண சித்தர் என்பவர்  நெடுங்காலம் வசித்து வந்தார்.

இத்தலத்தில் சித்திரசேன மஹாராஜா வன்னி மரத்தின் அடியில் புத்ர காமேஷ்டி யாகம் செய்து நான்கு பிள்ளைகளைப் பெற்றார்.

விஸ்வாமித்திரர் பிரம்மரிஷியாவதற்கு இங்கு யாகம் செய்தார். அவர் உண்டாக்கிய தீர்த்தத்தின் பெயர் காயத்ரீ தீர்த்தம்.

ஶ்ரீ ராமருக்கு பிரம்ம ஹத்தி தோஷம் ராமேஸ்வரத்திலும் வீர ஹத்தி தோஷம் வேதாரணியத்திலும் சாயா ஹத்தி தோஷம் இங்கும் போயின.

இங்குள்ள வாணியன் கரம்பை அக்ரஹாரம் என்ற வீதியில் 20 வீட்டிற்கு 20 வேலியைக் கோவிந்த தீக்ஷிதர் தானம் செய்தார்.

பெரும் மகானான கோவிந்த தீக்ஷிதரின் சிலையும் அவரது மனைவியின் சிலையும்  இங்குள்ள கோவிலில் அம்மன் சந்நிதியில் உள்ளன.. இவரது சரித்திரம் அனைவரையும் வியக்க வைக்கும் ஒன்றாகும். இவர் இங்கு ஏராளமான திருப்பணிகளைச் செய்திருக்கிறார்.

மேதாதிதி என்ற மஹரிஷியின் சொற்படி பசுவைக் காத்திடாமல் இருந்த ஒரு மாணாக்கர் நாயாக ஆகுமாறு சபிக்கப்பட்டார். ஞான தீர்த்தத்தில் ஒரு தாசி ஸ்நானம் செய்து கூந்தலை உதற, அதிலிருந்து தெறித்த ஒரு துளி தீர்த்தம் நாய் மேல் பட்டு அந்த நாய் அந்தண ஜென்மத்தை அடைந்தது.

பட்டிச்சுரத்திற்கு மேற்கே மணல் மேடு ஒன்று உள்ளது. இதற்கு நந்தன் மேடு என்று பெயர்.

நந்தன் என்னும் அரசன் இழையாயிரம் பொன் பெற்ற பட்டொன்று கொணர்ந்த செட்டியாரிடமிருந்து அதை வாங்கித் தன் மனைவிக்குக் கொடுத்தான். அதற்கான பணத்தைப் பின்னர் தருவதாகக் கூறினான்.

அவன் திரும்பி வரும் போது தோலால் செய்த காசை அடித்து வழங்கி அவனிடம் தரவே அந்த வணிகர் நந்தனைச் சபிக்க மண்மாரி பெய்து மணல் மேடு ஆயிற்று. இந்த மணல் மேடை இப்போதும் காணலாம்.

இன்னொரு அதிசயமான நம்ப முடியாத ஆனால் உண்மையான ஒரு விஷயம் உள்ளது.

பிரமிக்க வைக்கும் இந்த அதிசயச் செய்தி என்ன தெரியுமா?

“எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையே ஏழரை லட்சம் பொன் இருந்ததாக” ஒரு கல்வெட்டில் இருக்கிறது.

இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட தஞ்சையை ஆண்ட சரபோஜி மஹாராஜா  சோழன் மாளிகையில் அந்த இடத்தை வெட்ட முயற்சி செய்கையில் கதண்டுகள் வெளிப்படவே பயந்த அந்த மன்னன் தன் முயற்சியைக் கைவிட்டான்.

கதண்டு என்றால் கருவண்டு என்று பொருள்.

எழுவான் என்பது சப்த கன்னிகைகள் இருக்குமிடம்

தொழுவான் என்பது மேற்கே முகமதியர் தொழும் இடமாகும்.

பக்தர்களும் ஆசாரியர்களும் அரசின் உதவியுடன் தீர ஆலோசித்துத் திட்டமிட்டு இந்த இடத்தைப் பாதுகாக்க வேண்டும்.

இப்படிப்பட்ட அரிய செய்திகளை மகாமகோபாத்யாய ஶ்ரீ உ.வே.சாமிநாதையர் ஆராய்ந்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தலத்தில் ஆச்சரியங்களுக்கு எல்லையே இல்லை. திருஞான சம்பந்தர் இங்கு ஒரு தேவாரப் பதிகத்தை அருளியுள்ளார்.  அவருக்கு வெயில் படாமல் வெப்பத்தைத் தணிக்கும் பொருட்டு சிவபிரான் ஒரு பூதத்தைக் கொண்டு முத்துப்பந்தல் நிறுவச்செய்தார்.

இங்குள்ள கோயிலில் நந்திகள் சற்று விலகி இருக்கின்றன.  திருஞானசம்பந்தர் வெளியிலிருந்து நன்கு தரிசனம் செய்தவதன் பொருட்டு இந்த நந்திகள் விலகி இருக்கின்றன.

முதலில் இருக்கும் நந்தி மிகப் பெரியது. நல்ல வேலைப்பாடுள்ளது.

  இங்குள்ள துர்க்கையம்மன் சந்நிதி மிகுந்த சக்தி வாய்ந்தது, பிரபலமானது.

 காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து பிறவிப் பிணியை நீக்கி இளமையோடு ஆரோக்கியத்துடன் வாழவைத்து முக்தி அருளும் பட்டீஸ்வரரும் பல்வளை நாயகியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

–subham—

 tags-ஆலயம் அறிவோம் ,பட்டீச்சுரம்! 

e mail comment received

Ayathuray Rajathilagam4 Nov 2024, 21:44 (8 hours ago)
to me

கனம் சுவாமிநாதன் அவர்கட்கு அனேக வணக்கம்,

ஐயா, உங்கள் பதிவுகளை விரும்பிப் படிப்பவன் நான். கடைசியில் நீங்கள் எழுதிய கட்டுரை ஒன்றில் – WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 13.843
Date uploaded in London – –2 November  2024 .            
Contact – swami_48@yahoo.com

இன்னொரு அதிசயமான நம்ப முடியாத ஆனால் உண்மையான ஒரு விஷயம் உள்ளது. பிரமிக்க வைக்கும் இந்த அதிசயச் செய்தி என்ன தெரியுமா?

எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையே ஏழரை லட்சம் பொன் இருந்ததாக ஒரு கல்வெட்டில் இருக்கிறது.

இதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட தஞ்சையை ஆண்ட சரபோஜி மஹாராஜா சோழன் மாளிகையில் அந்த இடத்தை வெட்ட முயற்சி செய்கையில் கதண்டுகள் வெளிப்படவே பயந்த அந்த மன்னன் தன் முயற்சியைக் கைவிட்டான்.

கதண்டு என்றால் கருவண்டு என்று பொருள்.

எழுவான் என்பது சப்த கன்னிகைகள் இருக்குமிடம்.

தொழுவான் என்பது மேற்கே முகமதியர் தொழும் இடமாகும்.
பக்தர்களும் ஆசாரியர்களும் அரசின் உதவியுடன் தீர ஆலோசித்துத் திட்டமிட்டு இந்த இடத்தைப் பாதுகாக்க வேண்டும்.

என்று பதிவு இட்டு இருக்கிறீர்கள். நானும் அதை ஏற்றுக் கொள்கிறேன்.

அதே நேரத்தில் அதை நான் இன்னொரு பதிவில் படித்து இருக்கிறேன் – அதில்

எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையிலே
காக்கை மூக்கின் நிழலிலே
கள்வர் போகும் வழியிலே
கண்டாலும் கம்மாளன் கண்ணிலே
எழுபது கோடி பசும்பொன்.

அதில் எழுவான் என்றால் சூரியன் என்றும தொழுவான் என்றால் வணங்குபவன் என்றும், காக்கை மூக்கு என்றால் மலை உச்சியின் நிழலாகவும், கம்மாளன் என்றால் பொற் கொல்லன் என்றும், எழுதி உள்ளனர். இது தவறா சரியா என்பது எனக்குத் தெரியாது. இதை உங்கள் வலைத் தளத்தில் பதி விடும் படி தாழ்மையுடன் மற்ற அன்பர்களின் அறிவுக்கும் ஏற்ப தந்து உதவுங்கள.

அடுத்து இரண்டாவதாக, காலஞானம் பற்றி எழுதி இருக்கிறீர்கள். அதை விரிவு படுத்தி தமிழில் எழுதினால் பலரும் பயன் பெறுவார்கள் என நினைக்கிறேன். அல்லது அமன் தமிழ் பிரதி கிடைக்கும் இடத்தை வாசகர்களுக்கு அறியக் கொடுங்கள்.

வணக்கம்.

அன்புடன்,

ராஜதிலகம்
05- 11 -2024

வாழ்வை வளமாக்க பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்! – 1(Post.13,842)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.842

Date uploaded in London – –2 November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

1-11-24 அன்று நடைபெற்ற ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச. நாகராஜன் ஆற்றிய உரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

 வாழ்வை வளமாக்க பாம்பன் சுவாமிகள் அருளிய சஸ்திர பந்தம்! – 1 (Post13,842)

ச .நாகராஜன்

அஞ்சும் முகம் தோன்றின்ஆறுமுகம் தோன்றும்;
வெஞ் சமரில்,’அஞ்சல்‘ என வேல் தோன்றும்; – நெஞ்சில்
ஒரு கால் நினைக்கின்இரு காலும் தோன்றும்
முருகா!‘ என்று ஓதுவார் முன்.
6

தெய்வ மொழியான தமிழின் மூலமாக இறைவனைத் துதிக்கத் தமிழில் துதிப் பாடல்களை அருளிச் செய்ய அவ்வப்பொழுது மகான்கள் தெய்வ பூமியான தமிழகத்தில் தோன்றுவது தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும்.

இந்த வகையில் சமீப காலத்தில் தோன்றி முருகனின் அருளை அனைவரும் பெற தெய்வீகப் பாடல்களை அருளிச் செய்த பெரும் மகான் பாம்பன் சுவாமிகள் ஆவார்.

தோற்றம்

பழந்தமிழ்க் குடியான அகமுடையார் குலத்தில் சாத்தப்ப பிள்ளை என்பாருக்கும் செங்கமல அம்மையாருக்கும் மகனாக பாம்பன் குமரகுரு சுவாமிகள் என்று பின்னால் அறியப்படும் அப்பாவு 1853-ம் ஆண்டு வாக்கில் இராமேஸ்வரத்தில் பாம்பனில் பிறந்தார்.

இளமையில் இவர் உள்ளூர்ப் பள்ளியில் பயின்றார். சேது மாதவ ஐயர் என்பவரிடம் வடமொழியையும் முனியாண்டிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் மொழியையும் நன்கு கற்றுத் தேர்ந்தார்.

இயல்பாகவே இவர் தமிழில் கவி பாடும் திறமையைப் பெற்றிருந்தார்.

முருகன் மீது பக்தி கொண்ட இவர் அருணகிரிநாதரைத் தனது ஞான குருவாகப் பெற்றார். ஆகவே உபய அருணகிரிநாதர் என்ற சிறப்புப் பெயரையும் பெற்றார்.

குடும்பம்

 1878-ம் ஆண்டு வைகாசி மாதம் இராமநாதபுரத்தில் கண்ணுப் பிள்ளை மகளாகிய காளிமுத்தம்மாளை இவர் மணம் புரிந்தார். மூன்று குழந்தைகள் பிறந்தன.

முருகப் பெருமானை நேரில் தரிசனம் பெற விழைந்த இவர் பாம்பனுக்கு அருகில் உள்ள பிரப்பன்வலசை என்ற ஊரில் மயானபூமி அருகில் ஒரு குழியை வெட்டச் சொல்லி அதைச் சுற்றி முள் வேலி ஒன்றையும் அமைத்து தவம் புரியலானார். ஏழாம் நாளில் முருக தரிசனம் சித்தியானது. பிறகு தொடர்ந்து தவத்தை ஆற்ற, 35-ம் நாள் ‘எழுக’ என்ற கட்டளை எழ இவர் தவக்குழியிலிருந்து எழுந்து முருகனுக்கு பூஜை செய்யத் தொடங்கினார். அன்று சித்திரை மாதம் பௌர்ணமி நாளாக அமைந்தது.

பயணங்கள்

1895-ம் ஆண்டு சந்யாசம் பெற்ற இவர் சென்னைக்கு வந்தார்.

சுவாமிகள் தமிழ் நாட்டில் உள்ள பல திருத்தலங்களுக்கு விஜயம் செய்தார். பின்னர் பெஜவாடா, , விசாகப்பட்டினம், ஜகந்நாத், கொல்கத்தா, கயா என்று நெடும் பயணங்களையும் மேற்கொண்டார். காசி தல யாத்திரையையும் முடித்தார். ஏராளமான சீடர்கள் இவரை நாடினர்.

விபத்தும் அதிலிருந்து மீண்டதும்

1923-ம் ஆண்டு (வயது 70) டிசம்பர் மாதம் 27ம் தேதி சுவாமிகள் சென்னை, தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த போது, குதிரை வண்டிச் சக்கரம் அவரது இடது கணைக்கால் மீது ஏறியது. இதில், அவரின் இடது கால் எலும்பில் ஒரு முறிவு ஏற்பட்டது. உடனே அவர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிபுணர்கள் அவரது இடது காலைத் துண்டிக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினர். முருகனைப் பிரார்த்தித்த இவருக்கு மருத்துவ மனையில் 13 நாட்கள் இருக்குமாறு அசரீரி வாக்கு ஒன்று தோன்றியது. இவரது அருகிலிருந்த சீடர் ஒருவர்,  வேல் ஒன்று அவரது காலில் ஊடுருவதை மானசீகமாகக் கண்டார். மருத்துவர்களே வியக்கும் வண்ணம் எலும்பு முறிவு குணமாகி இருந்தது. முருகனின் திருவிளையாடல் இது என்று சீடர்கள் கூறி மகிழ்ந்தனர். இதை நினைவு கூரும் வண்ணமாக மயூர வாகன சேவை என்ற நிகழ்ச்சி இன்றளவும் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஆலயத்தில் மார்கழி மாதம் வளர்பிறை பிரதமை நாளில் நடைபெற்று வருகிறது. இவர் இருந்த மருத்துவ மனையில் மன்ரோ வார்டில் இவரது திருவுருவப் படம் மாட்டப்பட்டுள்ளது.

தமிழில் கவிதை மழை!

தமிழ் இறைவனின் மொழி. செம்மொழி. மந்திர மொழி.அருள்

மொழி. நுணுக்கமான மொழி. இயற்கையின் அடிப்படையிலும்,

மனித உடல்கூறின் அடிப்படையிலும் பேசுவதற்கு எழுந்த மொழி.

பல ரகசிய கலைகளை சொற்களிலும் அதன் ஒலிகளிலும்

அடக்கிய மொழி. அதைப் பேசுபவர்களுக்கு இனிமையை அருளும்

மொழி. பேசும் போது உபயோகிக்கும் சொற்களால் பல் வேறு

நலங்களைத் தரும் மொழி. இறை அருளாளர்கள் அற்புதமான

சொற்சேர்க்கைகளால் பாக்களை அருளி அனைவரையும்

உத்வேகமூட்டி எழ வைக்கும் மொழி. அறம். பொருள், இன்பம், வீடு என்ற நான்கு பேறுகளையும் சுலபமாக அருளும் மொழி!

இலக்கணக் கட்டமைப்பு வாய்ந்த பழம் பெரும் மொழி என்பதால்

இதில் கவிதை எழுதுவது என்பது சுலபமல்ல. பல்வேறு

கலைகளையும் இயற்கை ரகசியங்களையும் கற்றுத் தேர்ந்து

மொழிப் புலமை பெற்று இறைவனின் அருளைப் பெற்றவரே

நின்று நிலைக்கும் கவிதைகளை அருள முடியும்.

தமிழில் பந்தங்கள் அமைப்பது ஒரு சிலராலேயே முடியும்.

செந்தமிழ்ச் செய்யுட் டிறந்தெரிந்து செந்தமிழ்க் கண்

வந்த வடமொழியு மாற்றாதே – சந்தம்

வழுவாமறி கொண்டியற்று மாண்பினார்க் குண்டே

தழுவாமை நிற்குந் தமிழ்

என்ற பழம்பெரும் பாடலுக்கேற்ப தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிப் புலமை பெற்ற பாம்பன் சுவாமிகளுக்குத் தமிழில் தெய்வீகத் துதிகள் இயற்றும் ஆற்றலும் முருகப் பெருமான் அருளும் ஒருங்கே சேர்ந்து உண்டாக அருட்கவிகளை மழையெனப் பொழிய ஆரம்பித்தார்.

சிக்கலான பந்தங்கள் பலவற்றை  அதை ஓதுவோர் அனைவரும் தெய்வீக அருளைப் பெறும் வண்ணம்  இவர் பாடியருளியுள்ளார்.

இவற்றுள் சில முக்கிய பந்தங்களை இங்கு காணலாம்.

சஸ்திர பந்தம்
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேல வா.

இந்தப் பாடலின் பொருள்: –

`தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே, பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன் எனத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே,  என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க, திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க’ என்பதாகும்.

இந்தப் பாடலை வேல் வடிவில் வரைந்து அதைத் தொழுதல் சாலச் சிறந்தது. முருகனுக்கு உகந்த நாட்களான செவ்வாய்க் கிழமை, சஷ்டி தினங்கள் மற்றும் விசாகம், கார்த்திகை நட்சத்திர நாட்கள் ஆகிய தினங்களில் முருகன் சந்நிதி முன் இதைத் தொடங்குவது மரபு.

இப்படித் தொழும் பக்தர்களுக்குத் தீமைகள் அகலும். செல்வம் சேரும். நோய்கள் தீரும். நன்மை பெருகும். ஆன்மீக ஞானம் உண்டாகும்.to be continued…………………………………