ரோமாபுரிக்கு அரி, கரி, புலி, கிளி ஏற்றுமதி (Post No.13,904)

Written by London Swaminathan

Post No. 13,904

Date uploaded in London – 19 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

முத்துக்களையும் மிளகையும் தமிழர்கள் ஏற்றுமதி செய்து இதாலியிலிருந்து தங்கக் கட்டிகளைக் கொண்டு வந்தனர் . இதனால் ரோமாபுரியின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டதாக அந்தக் கால இத்தாலிய அரசியல்வாதிகள் புலம்பித் தள்ளினர்.

முத்து, மிளகு ஏற்றுமதி

ஷேக்ஸ்பியர் நாடகங்களிலும் முத்துக்கள் குறித்தும் இந்தியர்கள் குறித்தும் நிறைய செய்திகள் உள்ளன. அனால் ஷேக்ஸ்பியர் இந்தியர்களின் எதிரி. இது தெரிந்தால் இந்தியாவில் முன்னூறு ஆண்டு ஆங்கில  ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்று கருதி அவர் இந்தியர் என்று சொன்னது மேற்கிந்தியத்தீவுகளின் கருப்பர்கள் என்று பொய்யுரை பரப்பினர்.

முத்துக்கள் தூத்துக்குடி அருகிலுள்ள மன்னர் வளைகுடாவிலிருந்து எடுப்பபட்டு உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யப்பட்டன. பாரசீக வளைகுடாவில் முத்துக்கள் கிடைத்தாலும் அதை  எடுத்ததாக வரலாற்றுச் செய்திகள் கிடையாது.

உலகப் பேரழகி கிளியோபாட்றா மதுபானத்தில் முத்துக்களைக் கரைத்துக் குடித்தது உலகறிந்த செய்தி.

அகஸ்டஸ் சீசர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தை வென்றார். அங்கு டாலமி வம்ச அரசர்கள் சேகரித்த அத்தனை பொக்கிஷங்களையும் ரோமாபுரிக்கு கொண்டு சென்றார். பாம்பி என்ற மன்னனும் ரோமாபுரிக்கு நிறைய செல்வத்தைக் கொணர்ந்தான் ; இதனால் முத்துக்களின் மோகம் அதிகரித்தது.

ஸ்டராபோ என்ற கிரேக்க எழுத்தர் எழுதிய குறிப்பில் 120 கப்பல்கள் ஒரே நாளில் இந்தியாவை நோக்கிச் சென்றதை தான் கண்டதாக எழுதிவைத்துள்                                                  ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக மிளகு ஏற்றுமதி, முது ஏற்றுமதி பற்றி சங்க இலக்கியத்திலும் சம்ஸ்க்ருத இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன .

சங்க இலக்கியத்தில் யவனர்கள் பற்றிய குறிப்புகள் குறைந்தது ஆறு இடங்களில் வருகிறது ;அலெக்ஸ்சாண்டர் படையெடுத்தபோது  இந்தச் சொல்லை கிரேக்கர்களுக்குப் பயன்படுத்தினர். தமிழ் இலக்கியத்தைப் பொருத்தவரையில்  இது ரோமானியர்களையே குறித்தது . கடந்த  400 ஆண்டுகளாக இது அராபிய வியாபாரிகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது அப் போது யவனர் என்பதை யோனர் என்று சொன்னார்கள்.

இத்தாலியில் ஒரு அரசியல்வாதியின் மகன் ஒரு விலையுயர்ந்த முத்தினை விழுங்கிய செய்தியும்  உள்ளது.

ரோமானிய பிரபுக்களின் பெண்கள் முத்து மாலைகளுக்குச் செலவிடும் பணத்தால் ரோமானிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது அவர்கள் தங்கக் கட்டிகளை தமிழ் நாட்டுக்கு அனுப்பி முத்துக்களையும் மிளகினையும் ஏற்றிச் சென்றனர். இதனை சங்கத் தமிழ்ப்   புலவர்களும் பாடியுள்ளனர்.

எகிப்தில் பெர்னிக்கே என்ற இடத்தில் ஜாடிகளில் மிளகு கண்டுபிடிக்கப்பட்டது எகிப்திலுள்ள இந்தத் துறைமுகத்தில் பத்து கிலோ மிளகு ஜாடிகள் கண்டு பிடிக்கப்பட்டன.

ஆங்கிலத்தில் மிளகினை பெப்பர் PEPPER , BLACK PEPPER என்பார்கள்; இது பிப்பலி என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து பிறந்தது ; தமிழ் தெரியாத ஒருவர் இதைத் தமிழ்ச் சொல் என்று தவறாக எழுதினார். பிப்பலி என்பது தமிழ்ச் சொல் என்று அவர் கருதினார் ; சங்க இலக்கியத்திலோ தற்காலத்திலோ இப்படி ஒரு தமிழ்ச் சொல் கிடையாது .சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஆனந்த விகடன் அகராதியிலும் கூட பிப்பலி என்பது திப்பிலி என்ற மருந்துச் சரக்கு என்றே கூறுகிறது அதுவும் சங்க இலக்கியத்தில் இல்லாத சொல்லே.

முத்து என்பதை பேர்ல் PEARL என்று ஆங்கிலத்தில் விளம்புவர் ;அது பரல் என்ற தமிழ்ச் சொல்லின் மருவு. அதையும் ஆங்கிலயர்கள் ஒப்புக்கொள்ளுவதில்லை அது ஏதோ ஒரு லத்தீன் மொழிச் சொல்லிலிருந்து பிறந்ததாகக் கதை அளபார்கள். காரணம் என்னவெனில் அவர்களுக்குக் கிடைக்கும் ஆதாரங்கள் எல்லாம் சுமார் 600 ஆண்டுகளுக்கு முந்தையதே. அதற்கு முன்னால் அவர்களால் பார்க்க முடியாது  

இப்போது மிளகு கிடைப்பது போல முதல் நூற்றாண்டிலேயே ரோமாபுரியில் மிளகு கிடைத்தது  அபிஷியஸ் என்பவர் ஒருவர் Eighty percent of the 478 recipes  included in the Roman cook book of Apicius அந்தக் காலத்தில் சமையல் புஸ்தகம் எழுதினார் அதிலுள்ள 478 சமையல் குறிப்புகளில் எண்பது சதவிகித உணவுப் பண்டங்களில் மிளகினை சேர்த்து இருக்கிறார்கள்  அதே காலத்தில் ஸ்பெயின் நாட்டில் மார்டியல் Spanish poet Martial  என்ற புலவர் இருந்தார். அவர் பாடிய பாடலில் “அடக் கடவுளே எனது சமையல்காரன் எனக்குத் தயாரிக்கும் உணவில் சேர்க்கும் மிளகின் அளவினைப் பார்த்தால் அதை விலைக்கு வாங்குவதிலேயே என்னை போண்டி ஆக்கி விடுவான்- திவால் ஆக்கி விடுவான் — போல இருக்கிறதே என்றும் புலம்பியுள்ளார்.

****

Baveru Jataka Story

அரி/சிங்கம், கரி/யானை, புலி, கிளி, மயில்

தமிழர்கள் இஞ்சி GINGER IVORY ROMAN KARUR BR DR R NAGASWAMY தந்தம் ஆகியவற்றையும் தேக்கு மரத்தையும் ஏற்றுமதி செய்தார்கள் ; பாபிலோனில் ஊர் Ur என்னும் மிகப் புராதன நகரில் தேக்கு மரத்தைப் பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்தன.

ஜிஞ்சர் என்ற ஆங்கிலச் சொல் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டதாகவும் அது தமிழ் அல்லது ஸ்ருங்கிவேர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லிலிருந்து கிரேக்க மொழியில் நுழைந்திருக்கலாம் என்றும் எழுதினர். ஆனால் தமிழ் நாட்டில் இஞ்சி விளைவதால் அதைத் தமிழ்ச் சொல் என்றே கருதவேண்டும் இதற்கு எடுத்துக்காட்டாக மிளகுத் தண்ணீர் என்ற தமிழ்ச் சொல் ஆங்கில அகராதிகளில் நுழைந்ததைக் குறிப்பிடலாம்.

தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் நூற்றுக்ககணக்கான இடங்களில் ஆயிரக்கணக்கான ரோமானிய தங்கக் காசுகளும் தாமிரக் காசுகளும் கிடைத்ததை உலகப் புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் டாக்டர் இரா நாகசாமி ரோமன் கரூர் என்ற ஆங்கிலப் புஸ்தகத்தில் பட்டியல் போட்டுக் காட்டியுள்ளார் இதனால் சங்க கால பர ணர் போன்றோரின் காலமும் உறுதி செய்யப்பட்டதை அவர் விளக்கியுள்ளார். தமிழ்நாட்டிலுள்ள கரூரின் ரோமானியத் தொடர்புகளையும் டாக்டர் இரா. நாகசாமி விளக்கியுள்ளார்

ரோமாபுரி சாம்ராஜ்யத்தில் பிரபுக்கள், உயர்மட்ட தலைவர்கள் இளம் சிவப்பு நிற ஆடைகளை அணிவார்கள்; அவர்களுக்கு தமிழ் நாட்டில் கிடைக்கும் தாவர பிராணிகளிலிருந்து எடுக்கப்பட்ட சாயத்தை ஏற்றி அனுப்பியதையும் வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர்

பருத்தித் துணிகளும் பட்டுத் துணிகளும் எகிப்து, பாரசீகம் ரோமானிய சாம்ராஜ்யம் ஆகியவற்றுக்கு அனுப்பியதற்கான சான்றுகளும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கிடைக்கின்றன. இந்துக்களுக்குப் பருவக்காற்று ரகசியம் தெரிந்து இருந்ததால் குறிப்பிட்ட நாளில்  பாயமரத்தை விரித்தால் காலணாக் காசு செலவில்லாமல் உலகம் முழுதும் சுற்றி வந்தனர். இந்த விவரம் மகாவம்ச நூலிலும் உளது.

ஹெரோடோடஸ், அரிஸ்டாடில் ஆகியோர் எழுதியவற்றிலிருந்து மூவாயிரம் ஆண்டுத் தகவல் கிடைக்கிறது.

பாம்பும் மயிலும்

இந்தியாவிலிருந்து பாம்பு, மயில், கிளி, புலி, சிங்கம், யானை ஆகியன கப்பலில் சென்றன; இந்தியாவிலிருந்து வந்த ஒன்பது அடி நீள பாம்பினை எகிப்தில் கண்டதாக ஸ்டராபோ எழுதியிருக்கிறார்

வார்மிங்க்டன், மக்  கிரிண்டில் ஆகியோர் எழுதிய நூல்க ளில் வேட்டை நாய் , குரங்கு, யானை ஏற்றுமதி பற்றியும் உளது; ஜாதக கதைகளிலே– அதாவது 2300 ஆண்டுகளுக்கு முன்னரே—- மயில், கிளி ஏற்றுமதி பற்றிய குறிப்பு உளது. மயிலைக் கொண்டு சென்று பாபிலோனிய அரண்மனையில் நிறுத்தி உறுமி மேளம் வாசித்தபோது மயில்கள் மேக கர்ஜனை என்று கருதி ஆடின. அதைக் கண்டு அசந்தே போயினர் பாபிலோனிய மன்னர்களும் பொது மக்களும்.

சிந்து சமவெளி எழுத்துக்களுடன் ஒரு மொழிபெயர்ப்பாளர் மத்தியக் கிழக்கில் இருக்கும் கல்வெட்டும் கிடைத்துள்ளது

ஆப்பிரிக்காவில் யானைகள் இருந்தபோதும் எகிப்திலோ வேறு எங்குமோ யானைகள் பற்றிய குறிப்புகளே இல்லை. ஆனால் இந்திய மாவுத்தர்கள் யானை மொழியை உண்டாக்கி கஜ சாஸ்திரம் என்று புஸ்தகமே எழுதிவிட்டனர். அலெக்ஸ்சாண்டர் படை எடுப்பின்போதுதான் அவர்கள் பட்டிக்காட்டான் யானையைப் பார்த்து வியந்தது போலப் பார்த்து பிரமித்து நின்றனர். ஹனிபால் காலத்திலிருந்து யானைகள் ஐரோப்பாவில் காணப்படுகின்றன.

ரோமாபுரியில் மிகப்பெரிய கொடுமை நடந்தது; அதற்கு இந்தியாவிலிருந்து வந்த சிங்கங்களையும் புலியையும் பயன்படுத்தினர்; எதிரிகளை கைதிகளாகப் பிடித்து அடிமைகளாக வைத்திருந்தனர்; அவர்களையும் மிருகங்களையும் கூண்டுக்குள் வைத்து பிரம்மாண்டமான திடலில் மோத விடுவார்கள் .உயரமான இடத்திலிருந்து பாதுகாப்புடன் அதைக் கண்டு ஆனந்திப்பார்கள்; புலியும் சிங்கமும் மனிதனைக் குதறுவதைக் கண்டு கூச்சலிட்டு மகிழ்ந்தார்கள் இதற்கு இந்திய மிருகங்களைப் பயன்படுத்தினர் அந்த மனித மிருகங்கள்!!!

அகஸ்டஸ் போன்றார் புலி சிங்கத்தைக் கண்டு வியந்த செய்திகளையும் எழுதி வைத்திருக்கிறார்கள்

அரியும் கரியும் புலியும் கிளியும் இந்தியாவின் புகழை மத்திய கிழக்கிலும் ஐரோப்பாவிலும் பரப்பிய விஷயங்களை ஒரு புஸ்தகம் முழுதும் எழுதலாம் .

****

Augustus (born September 23, 63 BCE—died August 19, 14 CE Nola, near Naples [Italy]) was the first Roman emperor.

அகஸ்டஸ் ரோமானிய சாம்ராஜ்யத்தின் முதல் சக்ரவர்த்தி. ஜுவலியஸ் சீசரைப் படு கொலை செய்தவர்களைப் பழிவாங்கினார். அவரது சபைக்கு சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தூதர்களை அனுப்பியதாக வரலாற்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

****

Strabo (born c. 64 BCE Amaseia, Pontus—died after 21 CE

ஸ்டராபோ என்பவர் கிரேக்க நாட்டு வரலாற்று புவியியல் அறிஞர்

***

Herodotus (born 484 BCE? Greek author of the first great narrative history produced in the ancient world,

ஹெரோடோட்டஸ் — கிரேக்க வரலாற்று ஆசிரியர் ; நமது புராணத்தில் சொன்ன வரலாற்றை நமபாத அரை வேக்காடுகள் இவரை வரலாற்றின் தந்தை என்று அழைக்கும்!!!

****.

Hannibal 247 BCE – between 183 and 181 BCE) கார்தேஜ் படைத்த தளபதியான ஹனிபால் யானைகளுடன் ஆல்ப்ஸ் மலையைக் கடந்து சென்று ரோமுடன் சண்டை போட்டார்

—SUBHAM —

TAGS- முத்து, மிளகு, ஏற்றுமதி அரி ,சிங்கம் ,கரி ,யானை, அரி – சிங்கம் ,கரி, யானை ,புலி கிளி மயில்

அன்னை முதற்றே உலகு- 2 (Post No.13,903)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.903

Date uploaded in London – –19 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச.நாகராஜன் ஆற்றிய உரை. இங்கு 2 பகுதிகளாகத் தரப்படுகிறது. 

அன்னை முதற்றே உலகு- 2 

  ஸ்ரீஅன்னையின் பிரார்த்தனையும் தியானமும்                        

 —————————————————————————– 

இராதையின் பிரார்த்தனை

     முதலில் கண்டவுடனே எனது பிரபுவும், எனது இறைவனும் நீரே என்று அறியாயும்படியாயுள்ள ஒருவரே, இதோ எனது சமர்ப்பணத்தை,  ஏற்றருளும்.

     எனது எண்ணங்களெல்லாம், எனது மெய்ப்பாடுகளெல்லாம், எனது இதயத்தின் ஆசாபாசங்களெல்லாம், எனது உணர்வெல்லாம், என் வாழ்வின் இயக்கங்கள் அனைத்தும், என்னுடலில் ஒவ்வொரு அணுவும், என் உதிரத்தில் ஒவ்வொரு துளியும் நின்னதே. பரிபூரணமாகவும் எவ்வித மறைப்புமின்றி உமக்கே நான் உரிமையானேன். நீர் எதை விரும்புவீரோ, அவ்வாறே நானாவேன். வாழ்வாயினும், சாவாயினும், இன்பமாயினும், துன்பமாயினும், சந்தோஷமாயினும்,கஷ்டமாயினும், எனக்காக நீர் எதைத் தேர்ந்தெடுப்பீரோ, அவையெல்லாம் ஏற்றுக்கொள்ளுதற்கு இனியனவே. நினது ஒவ்வொரு பரிசும் எனக்கு மிக மேலாம் வளங்கொணரும் தெய்வீகப் பரிசாகும்.

திரு-அருள் அளிக்கும் பிரஸாதம்

     எந்த அரசாலும் கையாளப்படமுடியாத ஒரு சக்தி இருக்கிறது, இப்புவியின் எந்த வெற்றியாலும் அளிக்கமுடியா ஒரு உலகம் இருக்கிறது, இங்குள்ள எந்த அறிவாலும் எட்டமுடியா ஒரு மெய்ஞான ஒளி இருக்கிறது, எந்த தத்துவ சாஸ்திரமும் கண்டிராத ஒரு வித்தை இருக்கிறது, எந்த ஆசையின் திருப்திகரத்தாலும் உண்டாகாத ஓர் பரமானந்தம் இருக்கிறது, எந்த மானுட உறவாலும் தணிக்கமுடியா ஓர் பிரேமை இருக்கிறது, வேறெங்குமில்லாத, மரணத்திலும் கூட கிட்டாத ஓர் சாந்தி இருக்கிறது.

     தவம், சுகம், மெய்ஞ்ஞான ஒளி, வித்யை, பேரின்பக்களி, பிரேமை, சாந்தி இவையே திரு-அருள் அளிக்கும் பிரஸாதம்.

நின் மலரடிக்கு வணக்கம்

    பிரபோ, நினை வேண்டி, நினை நாடுகிறேன். நின் அனந்த பிரேமைக்கு என் இதயம் ஏற்ற பாத்திரம் ஆகும் பொருட்டே விசாலமாய் திறப்பட்டு அது நின் மலரடி வணங்குகிறது.

பயம் கூடவே கூடாது

பயம் கூடவே கூடாது. அச்சமற்றவனுக்கே வெற்றி; எப்போதும் நான் உனக்கு உறுதுணையாயிருந்து ரக்ஷ¢க்கிறேன்.ஒரு போதும் பயப்படக் கூடாது. நீ தூங்கும்போது கூட என்னை ஸ்மரிக்கும் சக்தி உனக்கு இருக்க வேண்டும்.ஆபத்து ஏதாவது ஏற்படின் என்னை உதவிக்குக் கூப்பிடும் சக்தி உனக்கு வேண்டும்.அதனால் பயங்கரக் கனவுகள் மாயமாய் மறையும்.

எது தேவையோ அதை அருள்வாயாக!

நாம் வற்புறுத்திப் பிடிவாதம் செய்வோமாயின் நம் அறிவில் தெளிவை உண்டாக்கவும், நம் தவறை நாம் உணரவும், மெய்ப்பொருள் தர்மத்தை ஒவ்வ நாம் ஆசை வைத்ததில் எல்லாம் தேவையைக் காண்பதரிது என்பதை நாம் தெளியுமாறு நாம் விரும்புவதை பரமன் நமக்கு அருளவும் கூடும். பொதுவாக பரமன் நம் பொருட்டு கருணை கூர்ந்ததன் விளைவாய் நமக்கு நன்மை பயப்பதற்கு மாறாய் கேடே விளைகிறது. அது சமயம் பரமன் எதற்காக தீமை பயக்கும் வரத்தை அருளினான் என்று அவனை எதிர்த்துக் கேட்கிறோம். நாம் ஆசைப்பட்டதையே அநுக்கிரகம் செய்தான் என்பதை அடியோடு மறந்து விடுகிறோம். இதற்கு மாறாக நாம் ஆசைப்பட்ட பொருளை பரமன் அருளாவிட்டாலோ, ஏன் நான் கேட்டது அது தானே? அது எனக்கு அவசியமாயிற்றே! அது எனக்குக் கிடைக்கவில்லையே! என்றெல்லாம் சொல்லி, பரமனை எதிர்த்து விரோதித்துக் கொள்கிறோம். பரமன் எதைச் செய்த போதிலும்  அவனை எப்போதும் நாம் எதிர்க்கிறோம். இவற்றிற்கெல்லாம் மாறாக, நம்முள் மெய் -வேட்கை இயல்பாக உண்டாயின், அதுவே ஒரு தீவிர தேவை ஆய்விடின், நாம் எதை நம் இருக்கையின் உண்மையெனக் கருதுகிறோமோ அதை காண நம்முள் ஓர் கனியும் ஆர்வம் இருப்பின், அது தான் அனைத்திற்கும் மூலம், பரம சுகம். நாம் தேடி அலைவதற்கெல்லாம் முடிவு, பிரச்சினைகளுக்கெல்லாம் உத்தரம்.

நாம் இப்போது பரமனிடம் என்ன கோருவோம் தெரியுமா? என் இருக்கையின் மெய்ப்பொருள் புறம் என்னை நடத்திச் செல். நின் மெய்ஞானக் கண்ணால் எனக்கு எது தேவையென்று காண்கிறாயோ அதை எனக்கு அருள்வாய் என்றே நாம் ஒவ்வொருவரும் பரமனிடம் வேண்டுவோம்.

***

Tamil Pepper and Tamil Pearls ruled the Roman World (Post No.13,902)

Written by London Swaminathan

Post No. 13,902

Date uploaded in London – 18 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Tamil Pepper and Tamil Pearls ruled the Roman World (Post No.13,902)

Black Pepper corns and pearls from Tamil Nadu ruled the Roman world 2000 years ago according to Greek and Roman historians. Sangam Tamil poets also describe the enormous gold we have received from the Yavanas. The word Yavana stood for Greeks during Alexander’s invasion. In Tamil context, it stood for the Romans of Italy. From 16th century it stood for Arabs. But Sangam Tamil literature has at least six references to Yavanas, all pointing to Italian trade.

Ancient Tamil Nadu (modern Kerala was part of ancient Tamil Nadu; Chera became Kera(la)) exported pepper and pearls to the West. Shakespeare plays have lot of references to Indians and Pearls. The commentators hid the fact that it is India that is Bharat. Because Shakespeare was against Indians and made insulting remarks in Othello and other plays.  Even Bible has reference to pearls. Though pearls are available in Persian Gulf also,  all the pearls of ancient world came from India only according to historians.

Here are some interesting facts about Pearls:

Augustus conquered Egypt in 30 BCE and he tried to develop direct sea trade between India and the Roman Empire Strabo says that he saw that  120 ships sailing from Hormus to India in 25 BCE. Augustus himself says that Indian Embassies came frequently (Ref. McCrindle) to see him. Warmington thinks that Chera, Choza and Pandya sent separate embassies . This lead to the volume of India’s trade with Rome in the time of Augustus expanding to huge proportions. About this trade Warmington remarks, “when we examine the trade between India and Rome even in the beginning, it was like the trade between India and England.

We have enough proof for this in present Tamil Nadu and Kerala where thousands of Roman  gold and copper coins were discovered.

One of the important items exported from India is ivory. The Greeks used it in their statues.

Pearls were first introduced into Rome during the Jugurthine war and made popular by the large quantities brought back to Italy by Pompey; they became common , when Augustus brought back the treasures of the Ptolemies.

(Gnaeus Pompeius Magnus (Latin: [ˈŋnae̯ʊs pɔmˈpɛjjʊs ˈmaŋnʊs]; 29 September 106 BC – 28 September 48 BC), known in English as Pompey (/ˈpɒmpi/ POM-pee) or Pompey the Great, was a general and statesman of the Roman Republic. He played a significant role in the transformation of Rome from republic to empire).

Metalla was a Roman mining center located in the Iglesiente region of Sardinia entrusted to a procurator metallorum where were destined Christians and slaves condemned to forced labor. Mentioned in ancient sources, it hosted a thermal building with mosaic floors and a public clock.

In the time of Cicero, when pearls were scarce, one valued at 8000 pounds in modern money was taken from the ear of Metella and deliberately swallowed by the son of Aesopus that he might have the satisfaction of swallowing a huge sum of money at a draught (Warmington book).

It is a well-known fact Cleopatra dissolved pearls in her wine before drinking it.

Tamil word PARAL became PEARL in English (If you go to etymology of pearl, they give absurd explanation and more over their etymology goes back only up to 14th century)

Pepper Export

Indians brought large quantities of spices and incense to Rome. Black pepper was found all over Berennike , ancient sea port of Egypt, in large jars weighing more than ten kilos. A fortune made from the pepper trade may be behind a beautiful fourth century mosaic  filling the apse of luxuriously appointed Roman Villa in Piazza Armenia in Sicily. Here an Indian looking goddess is depicted, apparently copied from an Indian original, flanked by an elephant and tiger. She holds a cornucopia like elephant tusk and is surrounded by black pepper vines and a tree that probably represents aromatic agarwood.

In the Italian mainland another relic, a grave stone carved with an image of camel carrying amphorae of wine is found.

In Northumberland in England ,a  Roman soldier named Gambax has ordered pepper worth of two Denari according to a written tablet. 

By the end of the first century CE,  Indian pepper became almost as readily available as it is today.  Eighty percent of the 478 recipes  included in the Roman cook book of Apicius  included pepper and it regularly appears  even in the pudding section. The first century Spanish poet Martial  grumbles that the amount of  pepper  his cook included  in his recipe for wild boar was  likely to  bankrupt him .

Origin of the word Pepper

The word pepper comes from the Sanskrit word pippali, which means “long pepper”. From there, it evolved into the Greek word πέπερι and the Latin word piper. The Latin word was then borrowed into other languages, including Germanic languages, Old French, Old Occitan, Catalan, Spanish, and Italian. 

The term pepper was first used in the 14th century to describe the fruit of the Piper nigrum plant, also known as black pepper.

Some people wrongly said that it is a Tamil word. But it is not found in Sangam literature or in 1935 Ananda Vikatan Tamil Dictionary. There it meant another medicinal plant (Thippili).

—–subham—

Tags- Trade with Rome, Indian Exports, Pepper, Pearls, Cleopatra, Augustus

What is my opinion about using Horoscopes in finalising Marriages? Q and A (Post No.13,901)

Written by London Swaminathan

Post No. 13,901

Date uploaded in London – 18 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

What is my opinion about using Horoscopes in finalising Marriages? Q and A (Post No.13,901)

I received this email today 18-11-2024

Namaskaram

I have been asked by a very close relative on the significance of “jyothida sastra” on Vivaha Porutham especially in this “Kaliyuga”.

In my humble opinion and based in listening to upanyasam by renowned Vedic scholar “Mahomadhpaya Dr K V Seshadrinatha Sastrigal, based on TV Series on Sankara TV titled “Dharma Sastram” (episode 27 or 28), my understanding is that there are 4 essential qualities that are important as per Dharma Sastram and they are:

  • Bandhu (lineage or family history)
  • Seela (character)
  • Lakshana (appearance etc)
  • Arogaha (free from illness or decrease)

Dr K V Sheshadrinatha Sastrigal (widely known as KVS Mama) says that Astrology or Vivaha Porutham based on it must be by an erudite or a Vedic scholar who has in depth understanding of both Veda and Sastra and someone who meticulously follows and adheres to “anushtana” or does this diligently and daily has the qualities required to opine the astronomical or astrological value in “Vivaha Porutham”. Dr KVS mama says that there is no one or very few in this Kali Yuga therefore the 4 qualities described above I.e. bsndhu, Seela, lakshana, arogaha is adequate for Vivaha Porutham. He adds to ensure that the “Gothram” is different of the couple in this. 

KVS Mama to me is right as his guidance is in conjunction with Dharma Sastram book that I sent link to few days ago. On that book there is a section for Vivaham on page 32 is on that section, nowhere it says to use horoscope. 

I further would say nowhere in Gita or in Ramayana there is reference to use of horoscope in the divine wedding of Sita/Rama wedding of Krishna wedding or in Parameswaran, Parvati wedding.

I want to ask your opinion and suggestions on this as well as guide me with link to your research articles on your blog please?

Looking forward to your response 

Regards 

S…………

*****

 QUICK REPLY FROM A LAYMAN (London swaminathan)

 IN THE MODERN TIMES,  I USED TO JOKE WITH MY FRIENDS  IN LONDON WHEN THEY SAY “A IS MARRYING B”..

 THEN I ASK ARE YOU SAYING A BOY IS MARRYING A GIRL? IF THEY YES, THEN I SAY “GOOD.”.

 THEN I ASK , A HINDU IS MARRYING A HINDU?

IF THEY SAY YES, I SAY “VERY GOOD.”

 THEN I ASK THE THIRD Q.

A BRAHMIN IS A MARRYNG A BRAHMIN?

IF THEY SAY YES, I SAY “EXCELLENT” AND I  ADD “CONGATS”.

**** 

NOW THE SITUATION IS VERY BAD BOTH IN INDIA AND ABROAD.

IN LONDON I KNOW FOUR BOYS AND FOUR GIRLS ARE LOOKING FOR MATCHES. THEY ARE ABOVE 35. I PRAY FOR THEM EVERY DAY.

IN AMERICA ALSO, IT IS THE SAME SITUATION.

**** 

TO CUT IT SHORT,

EVEN NON -BRAHMINS SEE ONLY RAJJU PORUTHTHAM AND AYUL PORUTHTHAM. I AGREE WITH THAT. (if they believe in horoscopes)

THERE ARE OVER 8000 DIVORCE CASES IN EACH BIG CITY IN INDIA.

IN TAMIL NADU, MOST OF THE DIVORCE CASES ARE FROM BRAHMIN COMMUNITY.

SO IT IS BETTER TO ASK THE BOY AND GIRL TO MEET FOR SIX MONTHS AND SAY YES OR NO FOR MARRIAGE.

YOUR CHILDREN AND MY CHILDREN R LUCKY TO GET MARRIED AT THE RIGHT AGE WITH THE RIGHT PERSON.

SO HORSCOPES SHOLUD BE RELEGATED TO SECOND POSITION.

MATCHING MINDS IS MORE IMPORTANT.

**** 

U R RIGHT IN SAYING THERE IS NO HOROSCOPE MATCHING REFERENCES IN ANCIENT TAMIL OR SANSKRIT SCRIPTURES. ONLY ANCIENT BOOKS ON ASTROLOGY  REFER TO IT.

 VARAHAMIHIRA’S BRHAT JATAKA IS OVER 1500 YRS OLD. IT MAY HAVE SUCH REFERENCES.

xxx

AS FOR ME I SUPPORT ANY HINDU MARRYING ANOTHER HINDU .

RATIO OF GIRLS PER 1000 IS STILL LOW.

IN CHINA , KOREA AND RUSSIA BIRTH RATE IS VERY LOW. 

PUTIN HAS CREATED A SEX MINISTRY TO INCREASE RUSSIAN POPULATION

xxxx.

 LAST BUT NOT THE LEAST, MODERN HINDU GIRLS HAVE BECOME TERRIBLY ARROGANT. OR TERRIBLEST ARROGANT IF THERE IS A WORD IN DICTIONARY.

HOROSCOPES ARE BECOIMNG IRRELEVANT. 

REGARDS.

SWAMINATHAN, 18-11-2024

****

(after sending this reply to my friend in London, I remembered one anecdote. Trichy Sri Kalyanasundaram, who is well versed in astrology, is giving religious talks. He used to donate his money for poor brahmin marriages. He said that last time three people did not come to me as promised because their daughters have already ran away with some boys; this is the situation in Tamil Nadu)

(When the girls earn more than the boys, their heads become swollen. They become conceited, arrogant and EGOTISTIC; that is why ancient Hindus chose girls younger than, much younger than, boys; if they are of equal age more conflicts occur.)

–subham—

Tags- Matching, marriage, boy and girl, horoscope, arrogant,  ancient weddings, MY OPINION

தமிழில் இலக்கிய நோபல் பரிசு யாருக்கு? (Post No.13,900)

Written by London Swaminathan

Post No. 13,900

Date uploaded in London – 18 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

தமிழில் இலக்கிய நோபல் பரிசு யாருக்கு?

PROJECT MADURAI, DR K KALYANASUNDARAM ,LAUSANNE, SWITZERLAND

நீண்ட காலமாக  மனதில் இருந்த ஒரு கருத்தினைச் சொல்வதற்கு 17-11-2024 நாளன்று ஒளிபரப்பான ஞானமயம் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. மதுரை திட்டம் (PROJECT MADURAI) ப்ராஜெக்ட் மதுரை என்ற வெப்சைட்டினை அறியாத தமிழர் இருக்க முடியாது ; அதை நிறுவி இன்றுவரை அதில் நீடித்துப் பணியாற்றும், சுவிட்சர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாகப் பணியாற்றும், டாக்டர் கே கல்யாண சுந்தரத்தை பேட்டி கொடுக்க அழைத்திருந்தோம். அப்போது தமிழ் இலக்கிய நோபல் பரிசு பெறுவதற்கு உள்ள ஒரே அமைப்பு ப்ராஜெட் மதுரை என்ற ஞானமயம் குழுவினரின் ஏகோபித்த முடிவினையும் தெரிவித்தோம். இந்தக் குழுவில் 130- க்கும் மேலான தமிழ் நூல்களை எழுதிய பெங்களூரு நாகராஜன்,  135- க்கும் மேலான தமிழ், ஆங்கில நூல்களை எழுதிய லண்டன் ச சுவாமி நாதன் போன்றோர் அடக்கம்.

ஒருவரையோ ஒரு அமைப்பினையோ இந்திரனே சந்திரனே என்று புகழ்ந்தால் அதற்கு மறுக்க முடியாத காரணங்களையும் முன்வைக்க வேண்டும்.

டாகடர் கு. கல்யாண சுந்தரத்தைப் பேட்டி கண்ட போது லண்டன் சுவாமிநாதன் சொன்ன விஷயங்களின் சுருக்கத்தை மட்டும் தருகிறேன். முழு ஒளிபரப்பையும் பேஸ்புக்,  யு டியூபில் காணலாம்.

“உங்களை பேட்டி கொடுக்க அழைத்ததற்காக நான் இதைச் சொல்லவில்லை; உங்கள் தலைமையின் கீழ் இயங்கும் ப்ராஜெக்ட் மதுரை குழுவுக்குத்தான் இலக்கிய நோபல் பரிசு கிடைக்கவேண்டும் என்பதற்கு நாங்கள் சொல்லும் முக்கியக் காரணங்கள்:

1.முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றுகிறீர்கள்.

2).1500 நூல்களுக்கு மேல் இலவசமாக அளிக்கிறீர்கள்.

3.நூற்றுக்கணக்கனா தமிழ் ஆர்வலர்களை, தொண்டர்களை உருவாக்கி அவர்களின் படைப்புகளை உங்கள் தளத்தில் வெளியிட்டு வருகிறீகள்.

4.பணமோ புகழோ விரும்பவில்லை; பணத்தை உண்டாக்க இந்த தளத்தில் விளம்பரங்களையும் போடுவதில்லை.

5.எல்லாவற்றுக்கும் மேலாக காப்பி எடுக்க அனுமதிக்கிறீர்கள்.

6. குக்கிக்களை ஒப்புக்கொள் என்று கட்டாயப்படுத்தவில்லை.

****

இப்போது ஏனைய தளங்களுக்கும் உங்களுக்கும் உள்ள வித்தியாசங்களையும் சொல்லி விடுகிறோம் ; நேற்று வந்த யுனிவர்சிட்டி போல இல்லாமல் அவர்களுக்கு எல்லாம் முன்னதாக தமிழ் ஆர்வத்தில் இதைச் செய்யத் துணிந்தீர்கள்; ஏனைய தளங்கள் எல்லாம் — மன்னிக்கவும் ஒரு கொச்சையான சொற்றோடரைப் பயன் படுத்தப்போகிறேன்– அதாவது அவர்களில் பெரும்பாலோர் கூலிக்கு மாரடிக்கும் தொழிலாளிகளால்  செய்யப்படுகிறது; சிலப்பதிகாரத்தை டைப் செய்யும் போது மாத சம்பளம் கிடைக்கவில்லை என்றால் சிலப்பதிகாரம் முழுமை பெறாது!!

மேலும் பல இடங்களில் குக்கிக்களை ஒப்புக்கொள் என்று நம்மைக் கட்டாயப்படுத்துகிறார்கள்; இது நமது PRIVACY, பிரைவசி-யில் தலையிடும் விஷயம். ப்ராஜெக்ட் மதுரை அதைச் செய்யவில்லை.

மேலும் பலர் விளம்பரங்களை போட்டு காசு சம்பாதிக்கிறார்கள் அதை ப்ராஜெக்ட் மதுரை செய்யவில்லை.

பலர் தங்கள் பணிகளை காப்பி செய்ய அனுமதிப்பதில்லை இத் தனைக்கும் தமிழ் இலக்கியம் எல்லோருக்கும் பொதுவானது. அதைத் தங்கள் சொந்த சொத்துக்களாக நினைக்கிறார்கள்.

உங்களைப்போல இவ்வளவு நூல்களை யாரும் கொடுக்காவில்லை; முன்னர் சொன்னது போல கூலிக்கு மாரடிக்கும்அதாவது சம்பளம் வாங்கிக்கொண்டு செயல்படும் நிறுவனங்கள் வேண்டுமானால் அப்படி அளிக்க முடியும்.

மேலும் பல வெப்சைட்டுகள் பாதியில் ERROR / பிழை என்று துண்டிக்கப்படுகிறது; அதையும் உங்கள் தளத்தில் காணவில்லை.

பலரும் சென்ற இடமெல்லாம் தங்கள் அமைப்பின் பெயரைச் சொல்லி தமிழுக்குச் சேவை செய்வதாக தம்பட்டம் அடித்து வருகிறார்கள் ; தமிழை விட்டு விட்டு அவர்களுடைய படங்களை போட்டு வருகிறர்கள் ;உங்கள் அமைப்போ தொண்டர்களோ அப்படிச் செய்யவில்லை .

உங்களுக்கு இணையாக ஒருவரை மட்டுமே என்னால் ஒப்பிட முடியும் பட்டத்துக்கோ, பணத்துக்கோ, புகழுக்கோ ஆசைப்படாமல் ஊர் ஊறாகச் சென்று தமிழ் வளர்த்த உவே சாமிநாத அய்யர் போல உங்கள் குழு வேலை செய்கிறது; இன்னபிற காரணங்களால் உங்களுக்கே ,உங்கள் அமைப்புக்கே இலக்கிய நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று எங்கள் குழு விரும்புகிறது.

****

பேட்டியின் போது  டாக்டர் கல்யாண சுந்தரம் அளித்த பதிலின் (முழு விவரங்களையும் பேஸ்புக், யூ ட்யூப்-பில் காண்க)

சுருக்கம் பின்வருமாறு:

36 ஆண்டுகளாக இந்தப்பணி நடக்கிறது நூற்றுக்கணக்கான தமிழ் ஆர்வலர்கள் இந்தப் பணியைச் செய்கின்றனர் , மாதத்துக்கு  முப்பதாயிரம் பேருக்கு மேல் பயன்படுத்துகிறார்கள் புகழையோ, அங்கீகாரத்தையோ விரும்பி நடக்கும் பணி அல்ல இது. பலரைச் சந்திக்கும்போது அவர்களே பாராட்டுகிறார்கள் அமெரிக்காவிலுல்ள டாக்டர் ஹார்ட்டின் மனைவி திருமதி கெளசல்யா ஹார்ட் போன்றோர் பாராட்டினர்.

எதிர்காலத்தில் சிற்றிலக்கியங்களான  பிரபந்தங்கள், கலம்பகங்கள் ஆகியவற்றையும் தளத்தில் ஏற்ற ஆசை. இந்தப் பணியில் ஈடுபட எல்லோரையும் வரவேற்கிறேன். 

****

லண்டன் சுவாமிநாதன் கேட்ட கேள்விகள்:–

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஞான மயம் ஒளிபரப்பில் பேசினீர்கள்; இப்போது ப்ராஜெக்ட் மதுரை பற்றிய புதிய செய்திகள் என்ன ?

நீங்கள் படித்ததோ  ரசாயன இயல்; டாக்டர் பட்டம் வாங்கியதும் அதில் தான்; விஞ்ஞானியான உங்களுக்குத் தமிழில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

யார் யாரையோ அழைத்து உலகத் தமிழ் மகாநாடு நடத்தி மேடையில் ஏற்றி பொன்னாடை போர்த்துகிறார்களே; அப்படி உங்களுக்குத் பாராட்டுக்கள் ,அங்கீகாரம் கிடைத்ததா ?

இப்படிப்பட்ட பணியில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் யார்

உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்ன ?

****

டாக்டர் கல்யாண சுந்தரம் மிகவும் பணிவுடன் பதில் கொடுக்கையில் துவக்க காலத்தில் உதவியோரின் பெயர்களைச் சொல்லி நன்றியுடன் நினைவு கூர்ந்தார்; எதிர்காலக் கனவுகளையும் முன்வைத்தார் .

குக்கி COOKKIES இல்லாமல், விளம்பரம் இல்லாமல், இடையில் ERROR கிராஷ் ஆகாமல், காப்பி எடுக்க அனுமதிக்கும் ப்ராஜெக்ட் மதுரை நூல்களை அனைவரும் பயன்  படுத்திப் பயன்  பெறவேண்டும் என்று ஞானமயம் குழு அன்புடன் வேண்டுகிறது.

–subham—

PROJECT MADURAI, DR K KALYANASUNDARAM LAUSANNE, SWITZERLAND, தமிழில், இலக்கிய நோபல் பரிசு, யாருக்கு? , ஞானமயம், தமிழ் ,டாக்டர் கல்யாணசுந்தரம், ப்ராஜெக்ட் மதுரை

ஆலயம் அறிவோம்! திருக்கழுக்குன்றம் (Post No.13,899)

WRITTEN BY Brhannayaki Sathyanarayanan

Post No. 13.899

Date uploaded in London – –18  November  2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திருமதி பிரஹன்நாயகி சத்யநாராயணன் ஆற்றிய உரை. 

ஆலயம் அறிவோம்!

வழங்குவது பிரஹன்நாயகி சத்யநாராயணன்.

நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால்

ஆளும் நம் வினைகள் அல்கி அழிந்திடச்

தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்

காளகண்டன் உறையும் தண் கழுக்குன்றமே

சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடி போற்றி!

ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்

பெறுவது தேவாரத் திருத்தலங்களில் தொண்டைநாட்டுத் திருத்தலங்களில் ஒன்றாக அமையும் திருக்கழுக்குன்றத் திருத்தலமாகும்.

சென்னை விழுப்புரம் இரயில் பாதையில் 56 கிலோமீட்டர் தொலைவில் செங்கற்பட்டு நிலையம் உள்ளது.  நிலையத்திற்குத் தென்கிழக்கில் மகாபலிபுரம் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பேருந்து வசதிகளும் உண்டு.

இறைவர் வேதகிரீஸ்வரர்  மலைமேல் இருப்பவர்)

பக்தவத்ஸலர்  (கீழ்க்கோயிலில் இருப்பவர்)

இறைவி :சொக்கநாயகி (மலைமேல் இருப்பவர்:

திரிபுர சுந்தரி (கீழ்க்கோயிலில் இருப்பவர்)

அம்பாளுக்கு மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது.

தீர்த்தம் : சங்க தீர்த்தம் (சங்கு பிறந்த குளம்),  பட்சி தீர்த்தம். 

இன்னும் இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், உருத்திர தீர்த்தம்,, வசிஷ்ட தீர்த்தம், மெய்ஞானம், அகத்தியம், மார்க்கண்டம், கோசிகம், அகலிகை, நந்தி, வருணம், சம்பாதி தீர்த்தம் என 12 தீர்த்தங்கள் உண்டு.

சந்நிதிக்கு எதிரில் உள்ள ‘சங்கு தீர்த்த’த்தில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘சங்கு’ பிறக்கின்றது. இதில் கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தத் திருத்தலத்தைப் பற்றி ஏராளமான புராண வரலாறுகள் உண்டு, அதிசயச் செய்திகளும் உண்டு.

வேதமே மலையாய் இருத்தலின் வேதகிரி என்ற பெயரை இது பெற்றது. 500 அடி உயரம் உள்ளது இந்த மலை.

தினந்தோறும் காலையில் இங்கு எழுந்தருளும் கழுகுகள் பக்தர்களைத் திரளாகக் கூட வைக்கின்றன.

கலியுகத்தில் பூடா,  விருந்தா ஆகிய இருமுனிவர்கள் சிவபிரானை நோக்கி நெடுங்காலம் தவம் புரிந்தனர். மனம் மகிழ்ந்த சிவபிரான் அவர்களிடம் ஒரு கற்ப காலம் தன் மேனியருளில் இருந்து பின்னர் முக்தி அடையலாம் என்று கூறி அருளினார். ஆனால் முனிவர்களோ தங்களுக்கு உடனே முக்தி வேண்டும் என்று முறையிட்டனர்.

இதனால் சிவபிரான், நம் திருவருளை மறுத்த நீங்கள் கழுகுகளாக மாறுங்கள் என சாபமிட்டார். வருந்திய முனிவர்கள் சாப விமோசனம் கேட்க,, “நீங்கள் காசியப முனிவரிடத்தில் கழுகுகளாகப் பிறந்து உங்களுடைய மூக்குகளால் இந்த மலையினைக் கீறினால் இங்கு ஆகாய கங்கை அலை வீச உண்டாகும். அந்த தீர்த்தத்தில் மூழ்கி எம்மை பூஜை செய்யுங்கள். கலியுக முடிவில் முக்தி அடையுங்கள்” என்று கூறி அருளினார்.

அதே போல கழுகுகளாகப் பிறந்த அவர்கள் இந்த மூக்கினால் மலையைக் கீற, ஒரு தடாகம் உண்டாகியது.

அன்றிலிருந்து அவர்கள் இந்த மலையை வலம் வந்து கொண்டிருக்கின்றனர். ஆகவே தான் இந்தத் திருப்பதிக்குத் திருக்கழுக்குன்றம் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்தக் கழுகுகள் ஆதி நாள் தொட்டு இன்றும் இங்கு வந்து அனைத்து பக்தர்களுக்கும் அருள் பாலிப்பதை ஆச்சரியத்துடன் பார்க்கலாம். இந்தக் கழுகுகளின் பார்வையில் பட்டவர்கள் செய்த அனைத்துப் பாவங்களும் நசியும் என்பது ஐதீகம்.

இதற்கென உள்ள தனிப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் கூடி, காத்திருந்து கழுகளை தரிசனம் செய்கின்றனர்.

இங்கு திலோத்தமை, மாயீகன், சுரகுரு மன்னன்,கங்கபதி ஆகியோர் தங்கள் சாபம் நீங்கப் பெற்றது பற்றிப் பெரும் வரலாறுகள் உண்டு.

மலையின் கண் எழுந்தருளியிருக்கும் இந்தத் தலத்தின் மூர்த்தியாகிய மலை மருந்தைப் பற்றி ஒரு பதிகமே எழுந்துள்ளது.

கள்ளம் வல்லார் என்பது இந்த மூர்த்தியின் திருநாமங்களுள் ஒன்று. அதாவது திருட்டில் வல்லவர் என்று பொருள். இதே அர்த்தத்தைத் தரும் தஸ்கரபதயே நம: என்ற  நாமம் 25 திருநாம அர்ச்சனையில் ஒன்றாக அமைகிறது. 

“கள்ளம் வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே’ என்பது திருஞான சம்பந்தரின் தேவாரம்.

வடமொழியில் கூறப்படும் கலியுக பதயே என்பதை கலியுகத்து மெய்யன் என்றும் மாசிலாமணி என்னும் திருநாமத்தைத் தமிழில் பொய்யாத மெய்யன் என்றும் கழுகாசல சதகம் என்ற நூல் கூறுகிறது.

அகளங்கமண்யே என்ற திருநாமத்திற்குப் பொருள் இறைவனுடைய மேனி வெண்மை நிறமானது என்பதாகும்.

இத்தலத்தில் இறைவன் ஒரு காலத்தில் பக்தர்களுக்கு மிகுதியாக பொன் கட்டிகளை அள்ளிக் கொடுத்ததாகவும் அதற்கு அறிகுறியாக சோமாஸ்கந்த மூர்த்தியின் இடது கரத்தில் பொன் கட்டி ஒன்று இப்போதும் உள்ளது என்றும் பெரியோர் கூறுகின்றனர்.

இங்கு திருஞானசம்பந்தர் ஒரு பதிகம், அப்பர் ஒரு பதிகம் சுந்தரர் ஒரு பதிகம் என ஆளுக்கு ஒரு பதிகம் தந்து அருளியுள்ளனர். மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், பட்டினத்தார், வள்ளலார், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உள்ளிட்ட அருளாளர்கள் இந்தத் தலத்தைச் சிறப்பித்து பாடல்களை அருளியுள்ளனர்.

பௌர்ணமியன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பாகக் கருதப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கன்னி ராசியில் குரு பிரவேசிக்கும் காலத்தில் லட்சதீபம் ஏற்றப்படும். இத்திருவிழாவிற்குப் புஷ்கரமேளா என்று பெயர். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு திரளுகின்றனர்.

காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து பிறவிப் பிணியை நீக்கி ஆரோக்கியத்துடன் வாழவைத்து முக்தி அருளும் பக்தவத்ஸலரும் திரிபுரசுந்தரியும் அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம். 

தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

ஸ்ரீ  அன்னை (Post No.13,898)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.898

Date uploaded in London – –18 November 2024 .            

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-11-2024 அன்று நடந்த ஞானமயம் நிகழ்ச்சியில் திரு ச.நாகராஜன் ஆற்றிய உரை. இங்கு 2 பகுதிகளாகத் தரப்படுகிறது. 

அன்னை முதற்றே உலகு   -1

ஸ்ரீஅன்னையின் வாழ்க்கையில் நூற்றுக்கணக்கான அபூர்வமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அவரே கூறிய சம்பவங்கள் பல. அவற்றில் இரண்டு சம்பவங்களைக் கீழே காணலாம். இவை இளம் வயதிலேயே அவர் அபூர்வ சித்திகளைக் கொண்டிருந்தவர் என்பதற்குச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன!

ஸ்ரீஅன்னையும் விஷப்பாம்பும்

————————————-

      இந்த நூற்றாண்டின் துவக்கத்தில் (1901 முதல் 2000 முடிய உள்ள நூற்றாண்டு) நான் வட ஆப்பிரிக்காவில் அல்ஜீரியா பிரதேசத்திலுள்ள  ‘க்ளெம்ஸெல்’ என்ற பட்டணத்திற்குச் சென்றிருந்தேன். இந்த பட்டணத்திற்கு வடக்கே அல்ஜீரியாவும் தெற்கே சஹாரா பாலைவனமும் உள்ளன. மேற்கில் மொரோகோவும், கிழக்கில் டியூனிஸியாவும் அமைந்துள்ளன. கோடைக்காலத்தில் நீங்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அங்கே வெப்பம் இருக்கும்.

     குப்த (Occult) முறை இரகசியங்களை கற்றறியும் பொருட்டு நான் அங்கே வசித்து வந்த சித்தர் ஒருவரிடம் சென்றிருந்தேன்.அம்மகானின் பெயர் ஸ்ரீமான் தேயோன். அவர் போலந்து நாட்டு யூதராக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.  

     தினந்தோறும் வெப்பம் மிகுந்த நடுப்பகலில் நான் ஓர் ஆலிவ் மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்வதை வழக்கமாகக் கொண்டேன்.அந்த அதிவெப்பத்தின் கொடுமையையும் என்னால் சகிக்க முடிந்தது.ஒரு நாள் நான் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும்போது திடீரென அமைதி நீங்கி சஞ்சலமடையவே, கண்களைத் திறந்தேன். என் எதிரில் 3 அல்லது 4 முழ தூரத்தில், ஓர் பெரிய விஷப் பாம்பு நிமிர்ந்து நின்று சீறி, படமெடுத்து ஆடிக் கொண்டிருந்தது. இத்தகைய ஸர்ப்பத்திற்கு அப்பிராந்தியத்தில் நாகம் என்றே பெயர்; அதன் விஷம் மனிதனை உடனே மாய்க்கும் தன்மையது.

     அது ஏன் அவ்வாறு என் மேல் சினமுண்டு இருந்தது என்பது எனக்கு முதலில் விளங்கவில்லை; நான் அதன் வீடாகிய பொந்தை மறைத்து உட்கார்ந்திருக்கக் கூடும் என்பது பிறகே எனக்குப் புலனாயிற்று. எனக்கு பின்னால் ஒரு பொந்து இருந்தது உண்மை தான்.இப்பொழுது நான் என்ன செய்வது?

      சிறிது நகர்ந்தாலும் அது என்னைத் தீண்டி விடுமே; நான் சிறிதும் நகரவில்லை. அஞ்சவுமில்லை. நான் அதன் கண்களை உற்று நோக்கி என்னுடைய இச்சாசக்தியை முழுமையாக உபயோகித்தேன். சிறிது நேரத்திற்குப் பிறகு அது சீறுவதை நிறுத்தி சிறிது சாந்தமடைந்தது.இப்பொழுது நான் உற்று நோக்குவதையும் இச்சா சக்தியை உபயோகிப்பதையும் சிறிதும் குறைக்காமலேயே மெதுவாக எனது கால்களை ஒன்றன் பின் ஒன்றாக இழுத்துக் கொண்டேன்; இறுதியாக அந்த விஷப்பாம்பு தன் தலையைத் தாழ்த்தி வேகமாகத் திரும்பி அருகே இருந்த குளத்தில் குதித்து மூழ்கியது.

     பிற்பாடு நான் தேயோன் அவர்களிடம் இந்தச் சம்பவத்தைக் கூறிய போது  அவர் பின்வருமாறு விளக்கினார்: “அந்த அரவம் அந்தப் பொந்தில் வசித்து வந்தது எல்லோரும் அறிந்ததே.நீராடின பிறகு தன்னுடைய வீட்டிற்குப் போக விரும்பியது. ஆனால் நீ அதன் வழியை மறித்து உட்கார்ந்திருந்தாய் அதனாலேயே அது மிக சினமுற்றது. நீ அதற்கு பால் அளிப்பாயாகில் அது உனக்கு சிநேகிதமாகி விடும்.”

      அன்று தொட்டு எனக்கு பாம்புகளிடமிருந்த அச்சம் அறவே நீங்கிற்று. முன்பெல்லாம் பாம்பைக் கண்டால் அச்சம் கொண்டு பின்னடைவேன்; அடக்கமுடியாத அளவு அதனிடம் ஒரு வெறுப்பு உணர்ச்சி தோன்றும். இச்சம்பவத்திற்குப் பிறகு அவை என்னை விட்டு அடியோடு நீங்கின.

ஸ்ரீஅன்னை நிறுத்திய புயல்

————————————-

         க்ளெம்ஸலிலிருந்து நான் இரண்டாவது முறையாக திரும்பி வரும் போது, தேயோன் அவர்களும் ஐரோப்பாவில் சுற்றுப் பிரயாணம் செய்யும் பொருட்டு என்னுடன் வந்தார். நடுக்கடலில் ஒரு புயல்காற்று எங்களைத் தாக்கிற்று. கடல் கொந்தளித்து மலை போன்ற அலைகள் எங்கள் கப்பலை மேலும்  கீழுமாகத் தூக்கியடித்தன. விபரீதமான விபத்து ஒன்று நெருங்கி விட்டது என்றெண்ணி கப்பலிலுள்ள பலரும் பயந்து விட்டனர்.சிலர் அழவும் ஆரம்பித்து விட்டனர். கப்பல் தலைவனான மீகாமன் (Captain) கூட கவலை கொண்டு பிரயாணிகளுக்கு ஆபத்து உண்டு என்று கூறிவிட்டார்.

        தேயோன் அவர்கள் என்னை நோக்கி, “நீ போய் அதை நிறுத்தி விட்டு வா”  என்றார். கேப்டன் அதை செவியுற்று மிக ஆச்சர்யமடைந்தார். அவருக்கு தேயோன் கூறியதின் பொருள் விளங்கவேயில்லை; ஆனால் எனக்குப் புரிந்து விட்டது. 

        நான் என்னுடைய அறைக்குச் சென்று படுக்கையில் படுத்தேன். பிறகு என்னுடைய உடலை விட்டு வெளி வந்து பரந்த சமுத்திர வெளியில் தடையேதுமின்றி செல்லலானேன். அங்கே நான் கண்டது என்ன? உருவற்ற பல ஜீவராசிகள் உன்மத்தம் கொண்டு குதித்து கொம்மாளமடித்துக் கடலைக் கலக்கி வந்ததைக் கண்ணுற்றேன். நான் அவைகளையணுகி மிக அடக்கத்துடனும், இனிமையுடனும், இந்த குறும்பு விளையாட்டைக் கைவிடுமாறு வேண்டினேன்.

      “அந்த அப்பாவி மனிதர்களை துன்புறுத்துவதால் உங்களுக்கு என்ன லாபம்? தயவுசெய்து அமைதியடைந்து அந்த மனிதர்களின் உயிரை காப்பாற்றுங்கள்” என்று கேட்டுக் கொண்டேன். அவ்வாறு நான் அவர்களை வேண்டுவதும், அவர்கள் செய்வதை ஆ§க்ஷபிப்பதுமாக அரை மணி காலம் கடந்தது. அதன் பிறகே அவை தங்கள் குறும்புச் சேஷ்டைகளைக் கைவிட்டன. கொந்தளித்த கடல் அமைதி அடைந்தது.

        பிறகு நான் என் உடலுக்குத் திரும்பிப் போய் என்னுடைய அறையை விட்டு வெளி வந்தேன். நான் கப்பலின் மேல் தளத்திற்குச் சென்ற போது, அங்கே அனைவரும் சந்தோஷமாக சம்பாஷணையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டேன்.

***

GNANAMAYAM BROADCAST LINKS FOR 17-11-2024

FOR 17-11-2024 BROADCAST

ENJOY ELECTION CARTOONS 17112024


FOLLOWING ARE THE CARTOONS UNTIL 17-11-2024 FROM THE  DECCAN CHRONICLE NEWSPAPER.

POSTED BY LONDON SWAMINATHAN ON 17-11-2024

–SUBHAM–

TAGS- ELECTION CARTOONS 17112024

ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்தி மடல் 17-11-2024 (Post No.13,897)

Written by London Swaminathan

Post No. 13,897

Date uploaded in London – 17 November 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

COLLECTED FROM TAMIL AND ENGLISH NEWSPAPERS AND EDITED BY LONDON SWAMINATHAN

செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளைத்  வாசித்து வழங்குபவர் வைஷ்ணவி ஆனந்த்

அனைவருக்கும் வணக்கம்

இன்று ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 17- ஆம் தேதி 2024-ம் ஆண்டு

********

முதல் செய்தி

தீபாவளி கொண்டாட்டத்தில் அசைவம்மது : பிரிட்டிஷ்  பிரதமர் அலுவலகம் மன்னிப்பு கோரியது

பிரிட்டிஷ் பிரதமர் அலுவலகத்தில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஹிந்துக்களுக்கு அசைவ உணவுப் பண்டங்களுடன் பீர், ஒயின் போன்ற மதுபானம் வழங்கியதற்காக மன்னிப்பு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் லண்டனில் நெ.10 டவுனிங் தெருவில் உள்ளது. இங்கு கடந்த அக். 29-ம் தேதியன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் அலுவலக ஊழியர்கள் மற்றும் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்ற விருந்து நடைபெற்றது.

விருந்தில் அசைவ பண்டங்களுடன் பீர், ஒயின் போன்ற மதுபானங்களும் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்து 2 வாரங்களுக்கு பின்னரே தெரியவந்தது.

இது தொடர்பாக ஹிந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து அதிருப்தி தெரிவித்தார்கள்., ‘மது, மாமிசத்தால் பிரதமர் அலுவலக புனிதம் பாதித்து விட்டது. மிகுந்த வருத்தமளிக்கிறது. வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்டிருந்தால், அது இன்னும் அதிகப்படியான சோகத்தை ஏற்படுத்தும் என்றார்கள்.

நவம்பர் 15 ஆம் தேதி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தீபாவளி பண்டிகை விருந்தில் ஹிந்துக்களுக்கு மது, அசைவம் வழங்கியமைக்காக மன்னிப்பு கோரியது. இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என பிரதமர் அலுவலம் உறுதியளித்துள்ளது.

லெஸ்டர் எம் பி ஷிவானி ராஜா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் கண்டனம் தெரிவித்து இருந்தார்; செய்தியை அறிந்த எல்லா இந்து அமைப்புகளும் லேபர் அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை வன்மையாக கண்டித்தன.

ஞான மயம் அமைப்புக்கு இந்தச் செய்தி பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் கொடுத்தது

இது போலவே சில ஆண்டுகளுக்கு முன்னர் லண்டன்  டிரபால்கர் சதுக்கத்தில் நடத்தப்பட்ட பொது மக்களுக்கான தீபாவளி    நிகழ்ச்சியில், சீக்கியர்கள் பாலிவுட் ஆபாச நடனங்களையும் அசைவ பிரியாணியையும் அளித்ததை நேரில் பார்த்த நமது லண்டன் நிருபர் நினைவு கூறுகிறார்;  இந்த ஆண்டு இந்து அமைப்புகள் திறம்பட நடத்தின என்பதையும் குறிப்பிட வேண்டும்

*****

அடுத்ததாக

அமெரிக்க தேசிய உளவுத்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள துளசி கப்பார்டுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்தார்.

முன்னாள் ஜனநாயகக் கட்சி பார்லிமென்ட் உறுப்பினராக இருந்தவர் துளசி கப்பார்ட். இவருக்கு வயது 43. 2022ம் ஆண்டில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகினார். 2024ம் ஆண்டில் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார். பைடன் அரசுக்கு எதிராக தொடர்ந்து கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வந்தார். 21 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு துறையில் பணியாற்றியுள்ளார். டிரம்ப் தேர்தல் பிரசாரத்திற்கும் உதவியாக இருந்தார்.

இவரை, அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக நியமனம் செய்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். துளசி கப்பார்டுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அமெரிக்க உளவுத்துறை இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ள துளசி கப்பார்டுக்கு வாழ்த்துகள்.

21 வருடங்களாக நீங்கள் ஒரு சிப்பாயாக அமெரிக்காவிற்கு சேவை செய்தீர்கள். உங்களுடனான எனது சில உரையாடல்களில், உங்கள் தொலைநோக்கு பார்வை மற்றும் அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்டேன். நல் வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க பார்லிக்கு தேர்வான முதல் ஹிந்து பெண் என்ற பெருமை கொண்டவர் துளசி கப்பார்டு; இவர் கடந்த முறை அமெரிக்க பார்லியில் எம்.பி.,யாக பதவியேற்றபோது பகவத் கீதை மீது உறுதி மொழி கூறி பதவியேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

*****

1,400 பழங்கால கலைப்பொருட்கள்: இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது.

84 கோடி ரூபாய் மதிப்புடைய கொள்ளையடிக்கப்பட்ட 1,400க்கும் மேற்பட்ட பழங்கால கலைப்பொருட்களை, இந்தியாவிடம் அமெரிக்கா ஒப்படைத்தது. நியூயார்க்கில் உள்ள இந்திய துணை துாதரகத்தில் முறைப்படி இவை திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

இது குறித்து, அமெரிக்க வெளியுறவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து திருடப்பட்ட கலைப் பொருட்களை திருப்பி அனுப்புவதற்கான தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்துள்ளோம் என்றது.

மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நான்சி வீனர் மற்றும் சுபாஷ் கபூர் ஆகியோரால் நடத்தப்பட்ட கொள்ளைகள் மீதான தொடர்ந்து நடந்த பல விசாரணைகளின் விளைவாக, இந்த கலைப்பொருட்கள் கண்டிபிடிக்கப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஜூலை மாதம், அமெரிக்காவும், இந்தியாவும் சட்டவிரோத வர்த்தகங்களைத் தடுப்பதன் மூலம் கலாசார சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

****

மூன்றாம் உலகப்போருக்கான அச்சுறுத்தல் உருவாகி வருகிறது – ஆர் எஸ் எஸ் தலைவர் எச்சரிக்கை

ரஷ்யா – உக்ரைன் மற்றும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக, 3-ம் உலகப்போர்  அச்சுறுத்தல் உருவாகி வருவதாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் மஹாகோஷல் பகுதியின் சங்கப் பெண் தலைவி டாக்டர் ஊர்மிளாவின் நினைவாக ஜபல்பூரில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்று உரையாற்றினார்.   அப்போது மூன்றாம் உலகப் போரின் அச்சுறுத்தல் உருவாகி வருவதை நாம் அனைவரும் உணர்வதாக தெரிவித்தார்.

அறிவியல் முன்னேறியுள்ளது, ஆனால் அதன் பலன்கள்  ஏழைகளை சென்றடையவில்லை. ஆனால் உலகை அழிக்கும் ஆயுதங்கள் எல்லா இடங்களிலும் வந்து விட்டதாக கூறினார்.

சில நோய்களுக்கான மருந்துகள் கிராமப்புறங்களில் கிடைக்காமல் போகலாம், ஆனால் நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் (தேஷி கட்டா) கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

மனித குலத்திற்கு சேவை செய்வதே சனாதன தர்மம் என்று தெரிவித்த அவர்,  உலகிற்கு வழி காட்டும் ஆற்றல் இந்துத்துவாவுக்கு உள்ளதாகவும் கூறினார். 

இந்து என்ற வார்த்தை இந்திய வேதங்களில் காணப்படுவதற்கு முன்பே நீண்ட காலமாக இருந்ததாகக் கூறிய ஆர்எஸ்எஸ் தலைவர், குருநானக் தேவ் அவர்களால் பொதுச் சொற்பொழிவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.

இன்னும் ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில் இருபதே ஆண்டுகளில் இந்தியா உலகின் முதல்  இடத்தை அடைய முடியும் என்றும் கூறினார்

அரியானா மாநிலம் குருகிராமில் “விஷன் ஃபார் விக்சித் பாரத்-விவிபா 2024” மாநாடு  நடைபெறுகிறது. பாரதிய சிக்ஷன் மண்டல் முப்பெரும் விழாவில் கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உரையாற்றினார்.

அப்போது, 16 ஆம் நூற்றாண்டு வரை பல துறைகளில் பல முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்தோம், ஆனால் அதன் பிறகு நிறுத்தி விட்டதாக கூறினார்.

உலக அளவில் இந்தியாவை நம்பர் 1 ஆக்க வேண்டும் என்றும், மற்றவர்களை நகலெடுப்பதை விட நமக்கான தரத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.  உண்மையான வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியுடன் மட்டுப்படுத்தப்படாமல் மனம் மற்றும் அறிவு ஆகிய இரண்டின் வளர்ச்சியையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்..

ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் இடையிலான உறவைப் பற்றி  குறிப்பிட்ட அவர், “இரண்டும் மனிதகுலத்தின் நலனையே நோக்கமாகக் கொண்டவை” என்றும் சொன்னார்

கல்வியை வணிகமயமாக்கக் கூடாது என்றும், இந்தியா தன்னிறைவு பெற்றதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் மாறும்போது உண்மையான முன்னேற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

நாம் சரியான பாதையில் சென்றால், அடுத்த 20 ஆண்டுகளில், உலகின் முதல் இடத்தைப் பிடிக்க முடியும், என்று அவர் கூறினார், இந்தியா உலகின் நம்பர் 1 ஆக இருப்பதைக் காண நேரத்தையும் ஆரோக்கியத்தையும் கடவுள்  தர வேண்டும் என்று தான் பிரார்த்திப்பதாக மோகன் பகவத் தெரிவித்தார்.

****

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெற உள்ளது. இதற்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஐயப்பன் சந்நிதியில் விளக்கேற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.. சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று   முதல் பக்தர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 80 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

****

மயிலாடுதுறையில் கடைமுக தீர்த்தவாரி

மயிலாடுதுறையில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கடைமுக தீர்த்தவாரி நவம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடந்தது. காவிரியின் இரண்டு பக்க கரைகளில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி நடந்த தீர்த்தவாரி உற்சவத்தில் திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் இந்த ஆண்டு சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை. யமுனை, சரஸ்வதி, கோதாவரி, உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவசுமைகளை போக்கி கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது.

அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் சிவாலயங்களில் இருந்து சுவாமிகள் புறப்பாடு செய்யப்பட்டு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நவம்பர் 15-ஆம் தேதி வெள்ளிக் கிழமை நடைபெற்றது.

இதனிடையே ,

தெலுங்கு பஞ்சாங்கத்தின் படி ஆந்திர மக்கள் இதே நாளன்று கார்த்திகை தீபம் ஏற்றி கார்த்திகையையும் கொண்டாடினர் ஆந்திரம் முழுது முள்ள பல கோவில்களில் சுவாமி தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றனர்

தமிழ் பஞ்சாங்கத்தின்படி டிசம்பரில் வரும் பெளர்ணமி அன்றே தமிழ் நாட்டில்  கார்த்திகை கொண்டாடப்படுகிறது.

****

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கருட வாகன புறப்பாடு

திருப்பதி மலையில் பௌர்ணமி தினத்தையொட்டி ஏழுமலையானின் கருட வாகன புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது.

ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் திருப்பதி மலையில் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், பௌர்ணமி தினத்தையொட்டி கோயில் மாட வீதிகளில் நடைபெற்ற ஏழுமலையானின் கருட வாகன புறப்பாட்டை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு வழிபட்டனர்.

இதனிடையே திருமலை திருப்பதி தேவஸ்தான பிராண தான அறக்கட்டளைக்கு பெங்களூரை சேர்ந்த பக்தர் ஒருவர் 50 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

பெங்களூரை சேர்ந்த நாகேஷ் என்ற பக்தர் 50 லட்ச ரூபாயை நன்கொடையாக வழங்கினார். அதேபோல் ஹைதராபாத்தை சேர்ந்த வெங்கட நாகராஜா என்பவர் 22 லட்ச ரூபாய் மதிப்புள்ள 15 மின்சார இருசக்கர வாகனங்களை நன்கொடையாக கோயில் நிர்வாகத்திடம் வழங்கினார்.

****

திருப்பதியில் சிருங்கேரி சுவாமிகளுக்கு பெரும் வரவேற்பு

தமிழ் நாட்டில் இரண்டு வார விஜய யாத்திரையை முடித்துவிட்டு சிருங்கேரி சங்கராசார்யார் ஸ்ரீ விதுசேகர பாரதி அவர்கள் ஆந்திரப்பிரதேச விஜய யாத்திரையை மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் அவர் திருப்பதிக்குச் சென்றார். அங்கு பக்தர்கள் அவருக்கு பெரிய வரவேற்பு அளித்தனர் .

நவம்பர் 16 ஆம் தேதி காளஹஸ்தி 17ஆம் தேதி நெல்லூர் 18 ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி  வரை விஜயவாடா ஆகிய நகரங்களுக்குச் செல்லவிருப்பதாக மடத்து வட்டாரங்கள் தெரிவித்தன.  22 ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு குண்டூரில் பக்கதர்களுக்கு ஆசி வழங்கி விட்டு 27 ஆம் தேதி ராஜ மஹேந்திரவரம் செல்வதாகவும் விஜய யாத்திரை திட்ட அறிவிப்பு கூறுகிறது.

*****

லண்டனில் முக்கிய நிகழ்ச்சி

கடைசியாக, லண்டன் மக்களுக்கு ஒருநல்ல செய்தி!

சம்பிரதாய பஜனை உலகத்தில்  கொடி

கட்டிப் பறக்கும் டாக்டர் உடையாளூர் கல்யாணராமன் அவர்களின் குழுவினர் இந்த ஆண்டும் லண்டனுக்கு வருகை தருகிறார்கள். நவம்பர் 22 வெள்ளிக்கிழமை முதல் 24 ஞாயிற்றுக்கிழமை வரை வெம்பிளி பார்க் ஸ்டேஷனுக்கு மிகவும் அருகிலுள்ள சத்தாவீஸ்

பதித்தார் ஹாலில் காலை முதல் மாலை வரை பக்தி இசை விருந்து அளிக்க இருக்கிறார்கள்.

அனுமதி இலவசம். ஆயினும் நன் கொடைகளை வரவேற்கிறார்கள் .முன்கூட்டி ரெஜிஸ்டர் செய்வது நல்லது இருக்கை வசதிகளை அளிக்கவும் , பிரசாதம் வழங்கவும் இது உதவும்.

இதில் ஆர்வம் உடையோர் ராதா மாதவ் மஹோத்சவ் யு கே  என்ற வெப்சைட்டில் மேல் விவரங்களை அறியலாம்.

ஆண்டுதோறும் லண்டன் மட்டுமின்றி பிரிட்டனில் உள்ள எல்லா நகரங்களிலிருந்தும் சுமார் ஆயிரம்பேர் கலந்துகொள்ளுவதால், கடந்த சில ஆண்டுகளாக இது பெரும் பக்தி விருந்தாக அமைகிறது.

*************

இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.

உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;

லண்டன் மாநகரிலிருந்து செய்திகளை வாசித்து வழங்கியவர் வைஷ்ணவி ஆனந்த் .

அடுத்த ஒளிபரப்பு நவம்பர் 24-ம்  தேதி லண்டன் நேரம் ஒருமணிக்கும் இந்திய நேரம் மாலை ஆறரை மணிக்கும்  நடைபெறும். வணக்கம்

—-subham—-

TAGS- ஞானமயம் ,உலக இந்து செய்தி மடல்17 11 2024