தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- தேச பக்தி—3 (Post.11,657)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,657

Date uploaded in London – 12 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்- தேச பக்தி- ஷேக்ஸ்பியரும் பாரதியும்!

அதர்வண  வேதத்தில்  பூமி சூக்தத்தில் உலகிலேயே பழமையான தேச பக்தி பாடல் இருப்பதை பூமி சூக்தக் கட்டுரைகளில் கண்டோம் .தற்கால தமிழ் உலகில் தன்னிகரில்லாத கவிஞனா க விளங்கும் சுப்பிரமணிய பாரதியார் பாடிய நூற்றுக்கணக்கான தேச பக் திப் பாடல் களுக்கு அறிமுகம் தேவை இல்லை.

ஷேக்ஸ்பியரும் கூட பாரதியாரைப் போல தேச பக்தியைக் கொண்டாடுகிறார் .

*****

Shakespeare ஷேக்ஸ்பியர் சொல்கிறார்

Dear earth, I do salute thee with my hand.

Richard II 3-2-6

அன்புள்ள பூமியே , நான் என் கைகளால் உன்னை வணங்குகிறேன்

இரண்டாம் ரிச்சர்ட் நாடகம் .

****

Not that I loved Caesar less, but I loved Rome more.

Julius Caesar 3-2-21

சீசரை நான் குறைவாக நேசித்தேன் என்று எண்ணிவிடாதீர்கள் ; ஆனால் எனது

ரோமானிய  சாம்ராஜ்யத்தை  அவரை விட  அதிகமாக நேசிக்கிறேன்

ஜூலியஸ் சீசர்  நாடகம்

****

Bleed, bleed, poor country

Macbeth 4-3-31

பரிதாபத்துக்குரிய (என்னருமை ) நாடே!  ரத்தம் சிந்து! ரத்தம் சிந்து!

மாக்பெத் நாடகம்

*****

பாரதியார் பாடல்களை ஒப்பிடுவோம்

 பாரதியாரின் தேசிய கீதங்கள்

32. சத்ரபதி சிவாஜி

(தன் சைனியத்திற்குக் கூறியது)

ஜயஜய பவானி! ஜயஜய பாரதம்!

ஜயஜய மாதா! ஜயஜய துர்க்கா!

வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

………

வேதநூல் பழிக்கும் வெளித்திசை மிலேச்சர்

பாதமும் பொறுப்பளோ பாரத தேவி?

வீரரும் அவரிசை விரித்திடு புலவரும்

பாரெலாம் பெரும்புகழ் பரப்பிய நாடு!

தர்மமே உருவமாத் தழைத்தபே ரரசரும்

நிர்மல முனிவரும் நிறந்த நன் னாடு!

வீரரைப் பெறாத மேன்மைநீர் மங்கையை

ஊரவர் மலடியென் றுரைத்திடு நாடு!

பாரதப் பூமி பழம்பெரும் பூமி;

நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;

நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!

*******

பாரதியாரின் தேசிய கீதங்கள்

1. வந்தே மாதரம்

ராகம் – நாதநாமக்கிரியை தாளம் – ஆதி

பல்லவி

வந்தே மாதரம் என்போம் – எங்கள்

மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)

சரணங்கள்

ஜாதி மதங்களைப் பாரோம் – உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே – அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)

******

வந்தே மாதரம், வந்தே மாதரம், வந்தே மாதரம்

சுஜலாம் சுபலாம் மலயஜஸீதலாம்

சஸ்யஷ்யாமலாம் மாதரம் வந்தே மாதரம்

கோடி கோடி கண்ட கலகல நினாத கராலே

கோடி கோடி புஜைர் த்ருத கர கரவாலே

அபலா கெனோ மா நமாமி தாரிணீம்

பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்

ரிபுதல வாரிணீம் மாதரம் வந்தே மாதரம்

துமி வித்யா திமி தர்ம

துமி ருதி துமி மர்ம த்வம் ஹி ப்ராணா சரீரே

பாஹுதே துமி மா சக்தி

ருதயே துமி மா பக்தி

தோமாரயி ப்ரதிமா கடி மந்திரே மாதரம் வந்தே மாதரம்

த்வம் ஹி துர்கா தசப்ரஹண தாரிணீம்

கமலாம் கமலதல விஹாரிணீம்

வாணீ வித்யா தாயினீம்

நமாமி த்வாம் நமாமி கமலாம் அமலாம் அதுலாம்

சுஜலாம் சுபலாம் மாதரம் வந்தே மாதரம்

ச்யாமளாம் சரளாம்

ஸுஸ்மிதாம் புஷிதாம்

தரணீம் பரணீம் மாதரம் வந்தே மாதரம்

பாரத மாதா கீ ஜெய்

*****

வந்தே மாதரம் வந்தே மாதரம் -பாரதியார் பாடல் (தமிழில் பொருள்_

தாயே வணங்குகிறோம், தாயே வணங்குகிறோம், தாயே வணங்குகிறோம்

இனிய நீர், இன்சுவைக்கனிகள்,

தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை

மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை

எங்கள் தாய், தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்

இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்

எழில்மிகு புன்னகை

இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்

எங்கள் தாய், சுகமளிப்பவளே, வரமருள்பவளே,

தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள், உன் திருப்பெயர் முழங்கவும்

கோடிக் கோடிக் கரங்கள், உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்

அம்மா ! ‘அபலா ‘#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?

பேராற்றல் பெற்றவள், பேறு தருபவள்

பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள், எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

அறிவு நீ, அறம் நீ, இதயம் நீ, உணர்வும் நீ,

எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ

எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ

எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்

தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ

தாயே வணங்குகிறோம்.

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்

அன்னை துர்க்கை நீயே

செங்கமல மலர் இதழ்களில் உறையும்

செல்வத் திருமகள் நீயே

கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே

தாயே வணங்குகிறோம்

திருமகளே, மாசற்ற பண்புகளின் மனையகமே

ஒப்புயர்வற்ற எம் தாயகமே

இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே

கருமை அழகியே, எளிமை இலங்கும் ஏந்திழையே

புன்முறுவல் பூத்தவளே, பொன் அணிகள் பூண்டவளே

பெற்று வளர்த்தவளே, பெருமைகள் அனைத்தும் அளித்தவளே

தாயே வணங்குகிறோம்

B C CHATTERJEE WROTE  VANDE MATARAM SONG.

இது போல ஏராளமான பாடல்களில் பாரதத்தாயை  வணங்கி தேசபக்தியை பாரதியார் பரப்பினார்

—SUBHAM—

TAGS- தேச பக்தி,ஷேக்ஸ்பியர், பாரதியார்,பாரத நாடு ,பார்க்கெலாம் திலகம், வந்தே மாதரம்,  தேசிய கீதங்கள், தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் 3

ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வாழ்வது எப்படி?! (Post No.13,656)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.656

Date uploaded in London – 12 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வாழ்வது எப்படி?! 

ச. நாகராஜன்

1907-ம் ஆண்டு எழுதப்பட்ட புத்தகம் How to live 24 Hours a Day!

எழுதி நூறாண்டுகள் ஆன பின்னரும் பயன் தரக் கூடிய விதத்திலே அமைந்திருக்கும் இந்தப் புத்தகத்தை ஆங்கிலம் அறிந்தோர் நிச்சயம் படிக்காமல் இருக்கக் கூடாது.

இதை எழுதியவர் ஆர்னால்ட் பென்னட்.

80 புத்தகங்களுக்கு மேல் எழுதியவர் பென்னட். அவரது ‘The Old Wive’s Tale ‘ என்ற நாவல் மிகவும் பிரசித்தமானது.

மிக்க நட்புடன் நம்முடன் உரையாட ஆரம்பிப்பது போல ஆரம்பித்து வாழ்வாங்கு வாழ வழி காண்பிக்கிறார் பென்னட்.

அவர் இதோ உங்களுடன் உரையாட விழைகிறார்:-

காலை எழுந்தவுடன் உங்கள் பர்ஸில் 24 மணி நேரங்கள் போடப்படுகிறது. கூடவும் இருக்காது; குறையவும் குறையாது! அதை உங்களிடமிருந்து யாரும் பறிக்கவும் முடியாது. உங்களுக்கே சொந்தமானது! உலகில் உள்ள மற்ற யாருக்கும் கூட இதை விட அதிகமாகவோ அல்லது குறைத்தோ இது தரப்படுவது இல்லை!!

இதை வீணாக ஆக்கி விட்டால் உங்களுக்குத் தண்டனையும் இல்லை; வீணாக்கினாலும் கூட மறு நாள் அதே அளவு தரப்படுகிறது.

இந்த 24 ,மணி நேரத்தால் அழிவற்ற உங்கள் ஆத்மாவை பரிணமிக்க வைக்கவும், ஆரோக்கியத்தை மேம்பட்ட நிலையில் அடையவும், இன்பம் துய்க்கவும், பணம் பெறவும், திருப்தி அடையவும் செய்ய முடியும்!

ஒரு நாளைக்கு உள்ள 24 மணி நேரத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற கடினமான காரியத்தில் உள்ள சிரமங்களை முதலில் நீங்கள் உணர வேண்டும். இதில் நீங்கள் செய்ய வேண்டிய தியாகங்களையும், முடிவற்ற முயற்சியையும் முதலில் அறிய வேண்டும்.

விஷயத்திற்கு வருவோம். 24  மணி நேரத்தின் செலவுத் திட்டம் என்ன?

எட்டு மணி நேரத் தூக்கம்! எட்டு மணி நேர வேலை! ஓய்வு பெற்று புத்துணர்ச்சி பெற தூக்கம்! வயிற்றுப்பாடுக்கு வேலை!!

மீதி இருக்கும் மூன்றில் ஒரு பங்கான எட்டு மணி நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதில் ஒரு வெறி உங்களுக்கு இல்லை என்றால் உங்களால் எப்படி முன்னேற முடியும்?

சைனா பெட்டிகளில் ஒரு பெட்டிக்குள் இன்னொரு பெட்டியைப் போடுவது போல ஒரு நாளைக்குள் இன்னொரு நாளை அடைக்க உங்களுக்குத் தெரிய வேண்டும்!

போகட்டும். காலையில் எழுந்து அலுவலகம் செல்ல புகைவண்டியில் அமர்ந்து நீங்கள் செய்தித்தாளை ஒரு நாளைக்கு 124 மணி நேரம் இருக்கும் இன்னொரு கிரகவாசி போல மிக மெதுவாக ஓய்வாகப் படிக்க முனைகிறீர்கள். இந்தக் காலை நேரத்தில் இவ்வளவு நேரம் செலவிட என்னால் முடியாது! ஒரு அரை மணி நேரத்தை இதில் ஒதுக்கி விடுங்கள். அப்படி என்றால் எப்போது பேப்பர் படிப்பது என்று அங்கலாய்க்க வேண்டாம். மதியம் உணவு இடைவேளையின் போது அதை வைத்துக் கொள்ளலாமே!

சரி, மாலை வீடு திரும்பியவுடன் களைத்துப் போய் நீங்கள் வீடு திரும்பும் போது உங்கள் மனைவி, ‘என்ன வெளுத்துப் போய் வந்திருக்கிறீர்கள்’ என்று சொல்லி உங்களுக்குக் கொறிக்க ஏதேனும் தருவதை வாங்கிச் சாப்பிடுகிறீர்கள்.

நீங்கள் நிஜமாகவே வெளுத்துப் போய் வரவில்லையென்றாலும் அவள் அப்படிச் சொல்வது இதமாகத் தான் இருக்கும்!

அப்புறம் கொஞ்ச நேரம் ஓய்வான அரட்டை, நண்பர்களுடன் பேச்சு!

அட, கனவு போல நேரம் கரைந்து விட்டதே! இதில் என்ன தப்பு என்கிறீர்களா? தப்பே இல்லை.

ஆனால் இந்த மாலை நேரத்தில் இப்படிப்பட்ட மணிகளில் ஒரு வாரத்திற்கு மூன்று நாட்களில் ஒன்றரை மணி நேரம் உங்களால் ஒதுக்க முடியாதா என்ன?

வாரத்தில் உள்ள ஏழு நாட்களில் ஏழாம் நாள் முற்றிலும் உங்கள் கேளிக்கைக்காக ஒதுக்கி விடுவோம்.

ஆக, காலை வேளைகளில் ஆறு நாட்களில் ஒரு அரை மணி நேரம் வீதம் மூன்று மணி நேரமும் மாலை நேரங்களில் மூன்று நாட்களில் ஒன்றரை மணி நேரம் வீதம் நான்கரை மணி நேரமும் கொஞ்சம் ஒதுக்கி விடுங்களேன்!

இந்த 450 நிமிடங்கள் தான் உங்களின் வாராந்திரக் கோட்டாவாகத் தரப்படும் 10080 நிமிடங்களில் முக்கியமானவை!

உங்கள் நேரக் காட்டிலிருந்து இதைப் பிரித்தெடுக்க முனைவதே ஒரு பெரிய விஷயம் தான்!

இதை வைத்து என்ன செய்வது என்கிறீர்களா? சொல்கிறேன், பொறுங்கள்.

காலை அரை மணி நேரம் இருக்கிறதே, அதை  முதலில் பார்ப்போம். வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் போது எதையேனும் பற்றி ஒருமுகப்பட்ட மனதுடன் நினையுங்கள். பத்தடி தூரம் நடக்கும் முன்னரே உங்கள் மனம் இன்னொரு பொருளுக்குத் தாவி விடும். கவலை வேண்டாம். அதை மீட்டுக் கொண்டு வந்து முதலில் நினைத்த பொருளுக்குத் திருப்புங்கள். எதாக வேண்டுமானாலும் இருக்கட்டும், தீர்மானித்ததைப் பற்றி ஒருமுகப்பட்டு சிந்தியுங்கள். இந்த மனப்பழக்கம் எங்கே நீங்கள் இருந்தாலும் சரி, மனதின் மீது உங்கள் ஆதிக்கத்தை நாள் முழுவதும் செய்ய வைத்து விடும். மனம் தளரவே தளர வேண்டாம்!

மனதை ஒருமுகப்படுத்துவது என்ற இந்த வித்தை பியானோவின் கீ போர்ட் மீது கை வைப்பது போலத் தான். நாள் செல்லச் செல்ல அதன் விஸ்தீர்ணம் எங்கெங்கோ நீங்கள் சஞ்சாரம் செய்யும் போது தான் புரியும்!

இனி மாலை நேரத்திற்கு வருவோம். இருக்கும் நான்கரை மணி நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டியது ஏராளம் உள்ளது.

இலக்கியம் பிடிக்கவில்லை என்பதனால் அதனுடைய சிறந்த மாற்று, சோம்பேறித்தனமாக சும்மா இருப்பது தான் என்று நினைத்து விடாதீர்கள்!

கலைகளில் எவ்வளவோ இருக்கின்றன. உதாரணமாக நீங்கள் கச்சேரிப் பிரியர் என்று வைத்துக் கொள்வோம். கச்சேரியில் பீத்தோவனின் சிம்பனியை ஒருவர் இசைப்பதை நீங்கள் பெரிதும் விரும்புகிறீர்கள்! ஒருவேளை ‘நன்கு கச்சேரியை ரசிப்பது எப்படி’ என்ற நூலை மட்டும் நீங்கள் படித்துக் கற்றுக் கொண்டால் சங்கித ஞானத்தை மேம்படுத்திக் கொண்டால் – உங்களின் அடுத்த கசேரி விஜயம் எவ்வளவு ஆர்வத்தைத் தூண்டுவதாக அமையும் என்பதை அனுபவித்துப் பாருங்கள்! உங்கள் ரசனையே மாறி விடும். இதே போலத் தான் நீங்கள் ஓவியப் பிரியர் என்றால் நல்ல ஓவியத்தைப் பார்ப்பது எப்படி என்பதையும் அல்லது நீங்கள் கட்டிடப் பிரியர் என்றால் கட்டிடக் கலை நுட்பங்களை எப்படிப் பார்ப்பது என்பதையும் கற்கலாமே!

கலை பெரிது தான்; ஆனால் அத்தோடு காரண- காரிய விளைவு அதை விடப் பெரியது! அதை நீங்கள் சற்று ஆழ்ந்து படிக்க முயல வேண்டும்.

நீங்கள் வங்கியில் ஒரு க்ளார்க் தான்! அதனால் இலக்கியமோ அல்லது இசையோ பிடிக்காமல் இருக்கலாம்! ஆனால் முழு வாழ்க்கை என்னும் நிலைக்களம் தனது ஏராளமான சீன்களில் ஆர்வத்தை உள்ளடக்கி உள்ளது. அதை உற்றுப் பார்த்து அனுபவிக்கலாமே!

நீங்கள் இலக்கியப்பிரியரா? நல்ல கவிதையை அனுபவிக்கலாமே!

கவிதை வேண்டாம் என்றால் சரித்திரமும் தத்துவமும் இருக்கவே இருக்கின்றன!

ஆனால் எவ்வளவோ பேர் எத்தனையோ மணி நேரங்களில் எவ்வளவோ பக்கங்களைப் படித்துக் குவிக்கின்றனர். நீங்கள் செய்ய வேண்டுவது படித்ததைப் பற்றி ஒரு 45 நிமிடங்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்! படிப்பது மெதுவாக ஆகி விடுமே என்று பயப்படாதீர்கள்!

இலட்சியத்தை விட்டு என்னவோ செய்கிறோமே என்று நீங்கள் எண்ணும் போதே திடீரென்று ஒரு நாள் அழகிய மலை உச்சி நகரத்தில் இருப்பதைக் காண்பீர்கள்!

இப்படி அற்புதமான நேரங்களிலே அதில் கவனம் கொள்ள வேண்டிய இன்னும் சில இருக்கின்றன!

சற்று நகைச்சுவை உணர்வு, சேணை பூட்டிய குதிரை போல ஒரே பக்கமே பார்க்காமல் பரந்து விரிந்த பார்வை, அதிக வேகமாக போகாமல் இருப்பது இவற்றையும் நீங்கள் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.

கடைசியாக ஒன்றே ஒன்று! எல்லாம் சரி என்று ஆரம்ப சூரத்தனமாக இவற்றை வெறியோடு ஆரம்பித்து அப்புறம் பாதியில் விடாதீர்கள்! மெதுவாக ஆரம்பித்தாலும் தளர் நடை பயின்றேனும் லட்சியத்தை நோக்கி முன்னேறுங்கள்.

உங்கள் லட்சியம் ஒரு நாளைக்கு 24 மணி நேரமும் வாழ வேண்டும் என்பது தானே!

**

நிலாச்சாரல்’ இணைய தள இதழில் வெளியான கட்டுரை.

Tamil Poet Bharati and Shakespeare on Patriotism (Post No.13,655)

Picture of Shakespeare 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,655

Date uploaded in London – 11 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

 Tamil Poet Bharati and Shakespeare on Patriotism (Post No.13,655)

It is true Great Men think alike! Here are some comparative poems on Patriotism.

Shakespeare

Dear earth, I do salute thee with my hand .

Richard II 3-2-6

****

Not that I loved Caesar less, but I loved Rome more.

Julius Caesar 3-2-21

****

Bleed, bleed, poor country

Macbeth 4-3-31

****

Bharati on Patriotism

Let us compare it with the great poet Bharati

Vande Mataram we will sing!

These words throughout our land shall ring!

Vande Mataram we will say! Motherland ,hail!  To you we pray!

****

This is the nation  whence wafted  to the  world

The fame of heroes through minstrels matchless!

This is the nation where flourished mighty kings

And saints blemishless, dharma incarnate!

this nation dubbed the ignoble women

who bore not heroes, as nullipara! Ancient is Bharat

and you her children

Forget not Bharat is the tilak of earth

You her children ; forsake this thought .

****

Vande Mataram, Vande Mataram

Vande Mataram Vande Mataram Vande Mataram!

In Arya land men and women

Invoke this brave mantra ! Amen

Mother Bharat Mayou Flourish

You are our refuge and our life

Jaya Jaya Bharat! Jaya Jaya Bharat!

Jaya Jaya Bharat! Jaya Jaya ! Jaya Jaya !

xxx

There are scores of patriotic poems in Bharati Songs Book

Vande Mataram! =  Worship Our Motherland.

(Muslims refused to sing these lines giving a severe blow to Mahatma Gandhi)

****

Oldest Patriotic Song in the Vedas

One would be wonderstruck to read the world’s oldest and longest patriotic song in the Atharva Veda. Atharva Veda’s date is only conjectural and it was compiled earlier than 1000 BC. It is amazing to find a very long patriotic song in praise of motherland (earth) in the Veda. Greeks have not even started writing their first book then. Tamil’s oldest book came 1000 years after Atharva Veda. Moses started issuing Ten Commandments around that date. In such a remote period Hindu thinking has reached its pinnacle!

“ Sacred is the earth (motherland). It not only nurtures that which is past and all the objects of the present, it bears the seed of the future as well. Such is our great motherland.

“ Our earth (motherland) is populated with learned men. It is populated by those who are inferior, those who are average and those who are superior. But all such people forget their differences and live together in unity and friendship. This is the land where we will perform deeds and attain fame. This is the land where our intelligence prospers.

“ In our motherland can be found enterprising and hard working farmers and artisans. In every direction that one glances, one finds fields of rice, wheat and other grains. Our motherland nourishes different forms of life. It provides us with cows, food grains and other forms of sustenance.

“The famous warriors of yore performed valorous deeds here. In this land the learned and the brave ones conquered the violent demons.

 “Our earth/motherland is the nurturer. In it can be found gold, silver, diamonds, emeralds and other gems. Nuggets of gold and all sorts of objects, all forms of vegetation, and all forms of living beings can be found in our motherland. Our motherland is the best country of all.

“ In the beginning, this land was immersed in the water of the ocean. Vast is the expanse of this land. Its heights reach up to heaven.

“ In this land to be found learned mendicants who roam in every direction.  Just as the water attains same level everywhere, these hermits look upon all with equal favour.

“ The Ashvinis look after this land of ours. Brave warriors have measured the length and breadth of our motherland

“O my earth/ Motheland! May the mountains and the snow clad peaks that can be found here NOT bring you unhappiness.

“You are my mother. I am the son of the earth.  The water which rains down and nourishes is my father. My I be preserved.

“ In this land the Vedas are revered in every direction. The righteous ones are worshiped here and the land is uplifted through the performances of sacrifices. Wonderful are the words of wisdom that have been uttered in this land.

“ O my Motherland! All of us are your subjects. May all of us be gifted with sweet speech. May we live together in harmony. May trees and plants grow on you in abundance.

 “This land is the mother of all trees, shrubs, plants and creepers. It is here that truth, learning, bravery and righteousness flourish. This land will bring us welfare and happiness. May we always serve our motherland.

“O, Motherland! This is the place where we all live in harmony. May you be great and firm. May brave warriors protest you with their valour and intelligence from enemies. May we be enriched. May we prosper.


May we not cause unhappiness to others when we are travelling on this land.

This is the land where the search for the god is made. This is the land that the god has blessed.

May my motherland grant us the riches that we desire. The inhabitants of this land sing and dance. The cities in my motherland have been built by the gods.

“ O  earth (my Motherland)! Grant us wisdom so that we can ensure our welfare. May we be learned all the time. May we prosper in your midst.

 ****

Atharva Veda Kanda 7 also got a hymn on the motherland.

“Heaven is in the motherland. The motherland is our mother. it is our father and son”.

(I have given only half of the verses. It goes on and on about the glory of our holy land. It is full of positive thoughts. It praises nature at length. We must replace our National Anthem “Jana Gana Mana” with the abridged version of this Vedic hymn!!)

****

Swami Vivekananda on Patriotism

·         I believe in patriotism, and I also have my own ideal of patriotism. Three things are necessary for great achievements. First, feel from the heart. What is in the intellect or reason? It goes a few steps and there it stops. But through the heart comes inspiration. Love opens the most impossible gates; love is the gate to all the secrets of the universe. Feel, therefore, my would-be reformers, my would-be patriots! Do you feel? Do you feel that millions and millions of the descendants of gods and of sages have become next-door neighbours to brutes? Do you feel that millions are starving today, and millions have been starving for ages? Do you feel that ignorance has come over the land as a dark cloud? Does it make you restless? Does it make you sleepless? Has it gone into your blood, coursing through your veins, becoming consonant with your heartbeats? Has it made you almost mad? Are you seized with that one idea of the misery of ruin, and have you forgotten all about your name, your fame, your wives, your children, your property, even your own bodies? Have you done that? That is the first step to become a patriot, the very first step. I did not go to America, as most of you know, for the Parliament of Religions, but this demon of a feeling was in me and within my soul. I travelled twelve years all over India, finding no way to work for my countrymen, and that is why I went to America. Most of you know that, who knew me then. Who cared about this Parliament of Religions? Here was my own flesh and blood sinking every day, and who cared for them? This was my first step.

·         Our sacred motherland is a land of religion and philosophy — the birthplace of spiritual giants — the land of renunciation, where and where alone, from the most ancient to the most modern times, there has been the highest ideal of life open to man.

·         The only religion that is fashionable is patriotism.

·         The present enthusiasm is only a little patriotism, it means nothing. If it is true and genuine, you will find in a short time hundreds of heroes coming forward and carrying on the work. Therefore, know that you have really done all, and go on.

·         Whether you believe in spirituality or not, for the sake of the national life, you have to get a hold on spirituality and keep to it. Then stretch the other hand out and gain all you can from other races, but everything must be subordinated to that one ideal of life; and out of that a wonderful, glorious, future India will come — I am sure it is coming — a greater India than ever was. Sages will spring up greater than all the ancient sages; and your ancestors will not only be satisfied, but I am sure, they will be proud from their positions in other worlds to look down upon their descendants, so glorious, and so great.

·         You must not depend on any foreign help. Nations, like individuals, must help themselves. This is real patriotism. If a nation cannot do that, its time has not yet come. It must wait.

–Subham—

Tags:- Bharati, Tamil Poet, Patriotism, Shakespeare, Swami Vivekananda, Oldest Patriotic song, Atharva Veda, Bhumi Suktam, Vande Mataram

London Swaminathan Article Index for August 2024 (Post No.13,654)

London Swaminathan in India; April 2024 at Thiruvananthapuram Temple , Kerala.

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,654

Date uploaded in London – 11 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Index No.141

Mirror in Viveka Chudamani Tirumular, R K Paramahamsa, Tolkappiar; Research Notes -28 (Post.13,499) 1/8/2024

Mysterious Light from Body: Sankara, Ramakrishna, Tirumular Confirm; My Research Notes on VC -37 (Post No.13,532)10/8

Ocean of Nectar; Sea of Bliss; Sankara ,Manikkavasagar , Tirumular ; Notes on VC – Part 40 (Post.13,541)13/8

Adi Sankara on Sea Mystery ; My Research Notes on VC 30 (Post.13,507)3/8

True Devotees act like Mad Men, Children, Beggars -says Sankara; My Research Notes on VC – Part 32 (Post.13,514) 5/8

Shakespeare, Ramakrishna and Sankara on Actors; My Research Notes on VC- Part 33 (Post.13,517) 6/8

Tamil Saint Tirumular is not a Siddha! He salutes Adi Sankara!! (Post No.13,521) VC-34 /8/8

Three Robbers and Three Gunas Story; My Research Notes on VC -36 (Post No.13,529) 9/8

Tiger Story in Ramakrishna, Tamil Veda Tirukkural and Tirumular; My Research Notes on VC- 38 (Post.13,535)11/8

Three Brahmins who shattered Caste Barriers (Post No.13,556) 18/8

Ball Game in Sankara’s Viveka Chudamani – Research Article on VC-42- Post.13548- 15/8

Desire is like Fire- My Research Notes on V C 29 (13,502) 2/8

Don’t talk Sankara’s Advice; My Research Notes on VC-39 (Post No.13,538)12/8

Sankara and the Most Famous Sangam Tamil Poet ; Research Notes on- VC 35 (Post No.13,525)8/8

Sankara, Valluvar, Tirumular on Fate;  My Research Notes on VC -41 (Post No.13,545) 14/8

Sankara, Tirumular and Ramakrishna on a Knotty Problem; Research Notes on VC-31 (Post. 13,511)4/8

Sankaraya Sankaraya Sankaraya Mangalam; My Research Notes on VC-43 (last part) Post.1355116/8

September 2024 Good Thoughts Calendar; Quotations on Mind (Post No.13,603) 29/8

Hanuman Worship in Assyria (Post No.13,610)30/8

Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- 1 (Post No.13,563) 20/8

Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- 2 (Post No.13,567) 21/8

Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- 3 (Post No.13,571) 23/8

Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- Part- 4 (Post No.13,579)24/8

Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- Part 5 (Last Part)-Post 13,585 25/8

Janmashtami Celebrations in London Hospital (Post No.13,594)27/8

    Learn Tirumanthiram through Pictures- 1 (Post No.13,588) 26/8

   Learn Tirumanthiram through Pictures- 2 (Post No.13,600)28/8

Learn Tirumanthiram through Pictures – 3 (Post No.13,606)29/8

Learn Tiru manthiram through Pictures – Part 4 (Post No.13,614) 31/8

List of Indologists (German) 1 to 6 PDF- 23/8

London Swaminathan’s July 2024 Articles Index (Post  No.13,553)17/8

xxxxxx

Cartoons are Mirrors of Current Affairs 22 August 2024

CARTOONS ARE RECORDS OF CURRENT AFFAIRS 1182024 (11/8)

CARTOONS KEEP YOU UPTO DATE ON CURRENT AFFAIRS2882024

Cartoons Record Historical Events 1782024

CARTOONS REFLECT CURRENT AFFAIRS 582024

xxxx

President to open Hindu Conference in Guyana 2/8

Re-naming Harappan Civilization “Sindhu-Sarasvati” in NCERT textbooks is based on established scholarship: NCERT panel head Michel Danino 22/8

xxxx

Ramayana Sculptures from Indonesia- Batch 1 (Post No.13,375)

Ramayana Sculptures from Indonesia- Batch 2 (Post No.13,580) 24/8

to

Ramayana Sculptures from Indonesia- Batch 7 (last) Post No.13,604 29/8

******

TAMIL ARTICLES

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 1 (Post No.13,558) 18/8

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 2 (Post No.13,562) 20/8

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 3 (Post No.13,566) 21/8ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 6 (Post No.13,578) 24/8

அனுமார் மூலம்  எனக்குக் கிடைத்த நண்பர்; ஹனுமான் சாலீஸா

விளக்கக் கதைகள் – Part 11 29/8

அனுமனுக்கு வீணை வாசிக்கத் தெரியும்! கும்பகோணத்தில் அற்புத சிற்பம்! (Post No.13,583)25/8

அனுமன் சிவனின் அவதாரம்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 5 (Post.13,573)23/8

அனுமன் செய்த அற்புதம்- எட்டு நட்சத்திர தொகுதிகளைக் கடந்து பறந்தார் -10 (Post No.13,598)28/8

அனுமன் பறந்த வேகம்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 9 (Post No.13,593)2/8

காந்திஜி ஒரு ஹனுமான்:ரமணர்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 8 (Post.13,587)26/8

திருமந்திரத்தில் ஓம்- ஆராய்ச்சிக் கட்டுரை எண்-42 (Post.13,503)2/8

திருமூலர் சித்தர் இல்லை; ஆதி சங்கரரரின் சீடர்; ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 44(Post No.13,537)12/8

திருமந்திரத்தில் காயத்ரீ மந்திரமும் ஓம்காரமும்  ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 43 (Post No.13,519)/8

திருமூலர் காட்டும் அதிசய ஐயனார் கோவில்! ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 46 (Post No.13,555) 18/8

பன்றியாய் பிறப்பாயாகுக; திருமூலர் சாபம்! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 45 (Post.13,547)15/8

பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்; விஞ்ஞானிகள் அறியாத மனம் -1 (Post.13,592)27/8

to

பாபா செய்த அற்புதங்களுக்கு விவேகானந்தர் விளக்கம்;PART-3 (LAST PART)- Post No.13,602

பாலம்பேட் சிவன் கோவில்- Part 22 (Post No.13,528)9/8

சங்கமேஸ்வரர் கோவில் (தெலுங்கானா) – Part 24 (Post.13,543) 14/8

சர்ச்சைக்குரிய திருக்குறள் 503- வள்ளுவன் சொல்லுவது என்ன ?

இதோ 4 கதைகள் (Post No.13,582) 25/8

ஸ்ரீகாகுளம் ஆந்திர விஷ்ணு செய்த அற்புதம்; ஆந்திர மாநில கோவில்கள் -PART 16 (Post.13,498)1/8

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் நிறைவு -12 (last part) Post No.13,608 30/8

முகலிங்கம் கோவில் – Part 19 (Post No.13,509) 4/8

யதாத்ரி நரசிம்மர் கோவில் – Part 21 (Post No.13,516) 6/8

முஸ்லீகள் அழித்த, அதிசய ஆலம்பூர் நவபிரம்மா (9) கோவில்கள்– Part 23 (Post.13,540)13/8

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் -1 (Post 13,520) /8

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 3 (Post No.13,527)9/8

மூன்று விபசாரிகளுடன் புத்தர், ஏசு, ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் – Part 3 (Post No.13,527)

யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை (Post No.13,591)27/8

சிம்மாசலம் வராக லட்சுமி  நரசிம்மர் கோவில்-26 (Post No.13,569)22/8

மனம் பற்றிய 31 பொன்மொழிகள்;செப்டம்பர் 2024 நற்சிந்தனை காலண்டர் (Post.13,612)31/8

திராக்ஷாராம சிவன் கோவில்- Part 18 (Post.13,505)3/8

அமராவதி சிவன் கோவில்- Part 17 (Post No.13,501)2/8

ஆந்திர பூமியில் புகழ்பெற்ற 5 நரசிம்மர் கோவில்கள் – Part 20 (Post No.13,513)5/8

லெபாக்ஷி கோவில்களும் ஓவியங்களும் –Part 25 (Post No13,552) 17/8

வாரங்கல் ஆயிரம் தூண் கோவில்;ஆந்திர கோவில்கள் – Part 27 (Post No.13,609)30/8

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 4 (Post No.13,570)

அவ்வையாரின் ஆத்திச்சூடியில்  அருமையான மருத்துவ அறிவுரைகள்-1 (Post No.13,613)31/8

—subham—

Tags- London Swaminathan, Article Index, August 2024 , Index No.141

CARTOONS UPTO 1192024

CARTOONS FROM DECCAN CHRONICLE UP TO 11-9-2024.

THEY ECHO CURRENT AFFAIRS.

THEY RECORD HISTORY

ONE PICTURE GIVES YOU 1000 WORDS.

U WILL REMEMBER THEM BETTER THAN WORDS.

THEY MAKE YOU LAUGH.

THEY R MILD AD POLISHED ATTACKS.

THEY VOICE PEOPLE’S OPINION.

EVEN OPPOSITION ENJOYS IT, BECAUSE IT IS FUNNY.

SUPPORT ALL CARTOONISTS.

DON’T IMPOSE CENSORSHIP ON CARTOONS.

— LONDON SWAMINATHAN

தீபாவளி, மனித மிருகங்கள்,  தமிழபிமானி பற்றி சுப்பிரமணிய பாரதி (Post No.13,653)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,653

Date uploaded in London – 11 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

பாரதியின் கருத்தில் மனித மிருகங்கள்

ஒரு புதிய உண்மை வெளிவரும்போது அதை ஆசையோடு ஏற்காமல் வெறுப்படைகிறவன் (வெளிச்சத்தைக்க கண்டும் அஞ்சும்) ஆந்தை

 தன்  காரியத்தில் விருப்பம் இல்லாமல் பிறருக்குப் பிரியமாக நடந்துகொண்டு , அவர்கள் கொடுத்ததை வாங்கி  வயிறு வளர்ப்பவன் நாய்

கண்ட விஷயங்களுக்கெல்லாம் திடீர் திடீரென்று கோபம் அடைகிறவன் வேட்டை நாய் .

பிறன் தன்னை எவ்வளவு அவமதிப்பாக நடத்தியபோதிலும்  அக்கிரமத்தை ஹாரி முடியாமல் மந்தமாகப் பொறுத்திருப்பவன் கழுதை

வஞ்சனையாலும் , தந்திரத்தாலும்  சமயத்துக்கேற்பப் பலவித  கபடங்கள் செய்து வாழ்பவன் நரி .

ஆர்வம் இல்லாமல் எதையாவது நினைத்து  ஏங்கிக் கொண்டு , மனஞ்சோர்ந்து , தலை கவிழ்ந்து உட்கார்ந்திருப்பவன் தேவாங்கு. —பாரதி

தொகுத்தவர் மரியா ஜான்

நன்றி – மஞ்சரி , நவம்பர் 1968

xxxx

தமிழபிமானி யார் ?

தமிழிலிருந்து பூமண்டலத்திலுள்ள பாஷைகளெல்லாம் பிறந்து நிற்பதாகக் கூவின மாத்திரத்திலேஒருவன் தமிழபிமானியாக மாட்டான்.

பள்ளிக்கூடத்து சாஸ்திரங்களெல்லாம் தமிழ்ப் பாஷையில் கற்றுக் கொடுக்கும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி. தமிழராகப் பிறந்தோர் கூடியிருக்கும் சபைகளிலேயும் , தமிழராகப் பிறந்தோர் ஒருவருக்கொருவர் பேசும்போதும் , இதர பாஷைகள் பேசாமல் தமிழே பேசும்படி முயற்சி செய்கிறவன் தமிழபிமானி.

தமிழில் புதிய கலைகள், புதிய காவியங்கள், புதிய உயிர், தோன்றும்படி செய்வோன் தமிழபிமானி தமிழபிமானி ஹிந்து தர்மத்தைக்  கைக்கொண்டு நிற்பவன். தேவாரத்திலும், திருவாய் மொழியிலும்,  அன்பு கொள்ளாதவனுக்குத் தமிழபிமானம் உண்மையிலே பிறக்க நியாயமில்லை.– பாரதி

நன்றி- மஞ்சரி டிசம்பர் 1968

xxxxxx

தீபாவளி

“நம் நேயர்களுக்கெல்லாம் கங்கா ஸ்நான பலன் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி அறிவிக்கின்றோம்.

சரீர சுத்தியுடன் மனோசுத்தியும் ஆத்மசுத்தியும் அவர்களுக்குப் பிராப்தியாக வேண்டுமென்று விரும்புகிறோம்.

 “தற்காலத்திலே ஹிந்து ஜனங்களின் ஆத்மாவைப் பற்றியிருக்கும் அழுக்குகளாகிய பயம், அதைரியம் முதலியவையெல்லாம் அகன்று போய், அவர்கள் ஒளி மிகுந்த உள்ளத்தவர்களாகி விளங்க வேண்டுமென்பதே நமது கோரிக்கை.”

“நமது நாட்டைப் பற்றிய நரகாசுரன் இறந்து போய்விட்டான்.

பகவானுடைய சக்தியும் எல்லா ஐசுவரியங்களுக்கும் ஆதாரமும் ஆகிய லட்சுமிதேவி நம்மீது கருணை கொண்டவளாகி நரகாசுரனை வதைத்துவிட்டாள்.

நாம் எ ல்லோரும் அது பற்றிச் சந்தோஷமடைந்து மங்கள ஸ்நானம் செய்து,  நல்லாடைகள் புனைந்து ஆனந்தவசமாகி இருக்கின்றோம்.”

ஆனால் “சிறுகுழந்தைகளைப் போல் விளையாட்டுக்கு ஸ்நானம் செய்தும், தீபங்கள் கொளுத்தியும் சும்மா இருந்துவிடாமல் நாம் செய்யும் செய்கையானது பொருளை நன்றாக அறிந்து காரியங்கள் செய்வதாக  வேண்டும்.”

 “எத்தனை தரம் கொன்றபோதிலும் மறுபடியும் மறுபடியும் உயிர் தளிர்ப்பது ராக்ஷஸர்களுடைய சுபாவம். அவர்களுடைய மர்ம ஸ்தலத்தை அழித்த பிறகுதான் மடிவார்கள்.

அதுபோலவே லட்சுமிதேவி நரகாசுரனை வதைத்தவுடனேயே நாம் அவனுடைய மர்ம ஸ்தானத்தை ஐந்து

 அதைத் தாக்காமல் இருப்போமானால் யாதொரு பிரயோஜனமும் கிடையாது.  “தீபாவளி தினத்திலேகூட அந்நிய தேசத் துணிகள் வாங்கும் துரோகிகள் நமது நாட்டிலே இருப்பார்களானால் நரகாசுரன் ப்படி அ ழிவான்? லட்சுமிதேவி எப்படி ஜயமடைவாள்?”

மகாவீரத்தன்மை பெற்று  அஷ்டலக்ஷ்மிகளுக்கும் இருப்பிடமாக விளங்குவதற்குரிய  வழிகளைத் தேடுங்கள் உங்களுக்கெல்லாம் சர்வாபீஷ்டமும் சித்தியடைவதாக.— பாரதி

வந்தே மாதரம் (இந்தியா )

நன்றி மஞ்சரி, 1968T

—subham—

AGS- தீபாவளி,  மனித மிருகங்கள், தமிழபிமானி, சுப்பிரமணிய பாரதி

மஹாகவி பாரதியாரின் நவதந்திரக் கதைகள்! (Post No.13,652)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.652

Date uploaded in London – 11 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

மஹாகவி பாரதியாரின் நவதந்திரக் கதைகள்! 

ச.நாகராஜன்

 மஹாகவி பாரதியாரின் கவிதா இலக்கியம் உலகில் பரவி பாராட்டப்படும் அளவில் அதிகமாகப் பேசப்படாதவை அவரது அற்புதமான கதைகள்!

இவற்றில் ஒன்று நவதந்திரக் கதைகள்.

கதைக்குள் கதை சொல்லும் பாணி தொன்று தொட்டு பாரத நாட்டில் இருந்து வரும் ஒரு பாணி. பஞ்ச தந்திரக் கதைகள்,விக்கிரமாதித்தன் கதைகள் போல மஹாகவி அமைத்திருக்கும் ஒரு தொடர் கதை நவதந்திரக் கதைகள்.

சுதேசமித்திரன் இதழில் 10-8-1916 முதல் தொடராக இது வந்தது. சில சமயம் கதைத் தொடர் பிரசுரமாகவில்லை.

மிக நீண்ட தொடராக அமைய வேண்டிய இது முற்றுப் பெறவும் இல்லை. 26-2-1918 இதழுடன் இது நின்று விட்டது.

இந்தக் கதைகள் பாரதி பிரசுராலயத்தாரால் 1928-ம் வருடம் நூலாக வெளியிடப்பட்டது.

இதற்கு தினமணியில் க.நா.சு. அவர்கள் ஒரு விமரிசனத்தையும் எழுதி இருந்தார்.

வேதாரண்யத்தில் விவேக சாஸ்திரி என்ற பிராமணருக்கு மூன்று குமாரர்கள். அவர்களுக்கு  உலகியல் ஞானம் இல்லை என்று குறைப்பட்ட சாஸ்திரி தனது ஆயுள் முடிய இன்னும் ஒரு வருடமே இருப்பதால் கவலை மிகக் கொண்டார்.

தன் குமாரர்களை லௌகீக ஞானம் பெறும் பொருட்டு சில கதைகளைக் கூறலானார்.

அதுவே நவதந்திரக் கதைகள்.

இந்தக் கதைகளில் நுட்பமான செய்திகள் மஹாகவியால் ஆங்காங்கே தரப்பட்டுள்ளன.

கதைகளில் மனிதர்களோடு பறவைகளும், விலங்குகளும் கதாபாத்திரங்களாக வருகின்றன.

எளிய நடை, ஆங்காங்கே தனக்கே உரித்தான நகைச்சுவை, படிக்கத் தூண்டும் கதை அமைப்பு ஆகியவற்றால் இது சிறந்து விளங்குகிறது.

தெய்வ பக்தி எதையும் சாதிக்கும். விவேகம் வெற்றி தரும். துரோகம் செய்வது பாவம். தன் தவறை உணர்ந்தவனை மன்னிக்கலாம். நேர்மை, அன்பு, விவேகம், இறை பக்தி இவை அனைத்தும் நல்லனவற்றை நல்கும் என்பன போன்ற நீதிகளை இந்தக் கதைகளை ஊன்றிப் படித்து அறியலாம்.

விவேக சாஸ்திரி தனது பிள்ளைகளுக்குக் கூறுவது போல மஹாகவி அனைத்து மக்களுக்கும் நீதிகளைச் சொல்கிறார்.

ஆனால் மிக பிரம்மாண்டமாக அமைய வேண்டிய இந்தத் தொடர் டக்கென்று முடிந்தது தமிழ் மக்களின் துரதிர்ஷ்டமே!

கதையின் சில பகுதிகளை இங்கு பார்க்கலாம். இவை முழுக் கதையையும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும்.

இந்தக் கதைகளை இணைய தளத்தில் இப்போது படிக்கலாம்; தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.

1

ஆராய்ந்து காரியத்தில் இறங்கு!

கேளீர், மக்களே! ஒரு காரியம் தொடங்கும்போது அதன் பயன் இன்னதென்று நிச்சயமாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தப் பயன் நமக்கு வேண்டியதுதானா என்பதையும் ஆராய்ந்து செய்யவேண்டும். பயன்படாத காரியத்திலே உழைப்பவன் சங்கீதம் படிக்க போன கழுதை போலே தொல்லைப்படுவான்?

2

மானி அய்யன் மாணிக்கஞ் செட்டியிடம் கூறுவது:

மானி அய்யன் : “கதையில்லை, செட்டியாரே, காரியம்.

இனி மூன்றாவது விஷயம் யாதெனில் இந்த வியாபாரிகளுக்குக் குமாஸ்தாக்களிடம் சரியாக வேலை வாங்கத் தெரியவில்லை. ஏனென்றால், முதற் காரணம், சம்பளம் நேரே கொடுக்க மனம் வருவதில்லை. ஒரு மனிதனால் நாம் லாபமடைய விரும்பினால் அவனுக்கு வயிறு நிறையச் சோறு போட வேண்டும். வெளியிலிருந்து வரும் புத்திசாலியைக் காட்டிலும் குடும்பத்தைச் சேர்ந்த மூடனே விசேஷமென்று நினைக்கக்கூடாது. மூடனிடம் உன்னுடைய காரியத்தை ஒப்புவித்தால் அவன் அதைக் குட்டிச்சுவராக்கிப் போடுவான். தவிரவும், முகஸ்துதி செய்பவனையும், பொய் நடிப்புக் காட்டுவோனையும், தலையிலே வைத்து, சாமர்த்தியமுள்ளவனையும், யோக்கியனையும் கீழே போடக் கூடாது. ஒரு நாளில் இத்தனை நாழிகைதான் வேலையுண்டு என்ற கட்டுப்பாடிருக்கவேண்டும். அதிக நேரம் வேலை வாங்குவதும், நினைத்த பொழுதெல்லாம் ஆள்விட்டு அழைப்பதும் குற்றம். இன்னும் சொல்லவா?”

3

ஏமாற்றுபவன் ஏமாற்றப்படுவான்!

சாமி : இப்போது ஒரு ஸூத்ரம் மாதிரியாகச் சொல்லி விட்டுப் போகிறேன். திருவாரூருக்குப் போய் திரும்பி வந்தவுடனே அதை விளக்கிச் சொல்லுகிறேன். அதற்கு முந்தி உமக்கே பொருள் விளங்கினாலும் விளங்கிப் போகும் அந்த ஸூத்ரம் எப்படி என்றால்:- “ம யே ம ஏ” . இவ்வளவுதான். இது கிரந்தம். எழுதி வைத்துக்கொள்ளும்.”

நான் தங்களிடம் சொல்லிய ஸூத்திரத்துக்குத் தாத்பர்யம் என்னவென்றால்,
“மற்றவனை யேமாற்றியவனை
மற்றவன் ஏமாற்றுவான்” 

4

பக்தியுடன் விவேகம் சேர்ந்தால் வெற்றி! 

விவேக சாஸ்திரி சொல்லுகிறார்: “தெய்வபக்திக்கு நல்ல பயனுண்டு. ஆனால் அதனுடன் விவேகம் சேர்ந்திருக்க வேண்டும். விவேகமில்லாதவனுடைய தெய்வபக்திக்கு உறுதி கிடையாது. தெய்வத்தினிடம் ஒருவன் வரங்கேட்கப் போகையிலே முதலாவது விவேகம் கேட்கவேண்டும். விவேகமே இந்த உலகத்தில் எல்லாவிதமான செல்வங்களுக்கும் ஆரம்பம். விவேகமில்லாதவன் குருடன். விவேகத்துடன் சேர்ந்த தெய்வபக்தியே உண்மையானது. அவ்விதமான தெய்வ பக்தியினால் ஒருவன் எடுத்த காரியத்தில் ஜயமடையலாம். இதைக் குறித்து ஒரு கதை சொல்லுகிறேன்” என்றார்.

 5

தெய்வ பக்தி மேன்மையான பலன்களைத் தரும்!

இதுவரை சொன்ன பகுதி ‘பயனறிதல்’ எனப்படும். இனிமேலே சொல்லப் போகிற பகுதிக்கு ‘நம்பிக்கை’ என்று பெயர். உங்களுடைய வினாவிற்கு விடை கதை மூலமாகச் சொல்லாமல் நேரே சொல்லி விடுகிறேன். மூடனுக்குச் சங்கடமுண்டாக்கி வேடிக்கை பார்ப்பவன் பாவி. அவனுக்கு இந்த ஜன்மத்தில் பலவிதமான தீங்குகள் விளையும். விவேகமில்லாதவன் கூட தெய்வபக்தி செய்வதனால் அவனுக்கு நன்மை ஏற்படாமல் போய்விடாது. ஆரம்பத்திலே பலவித இடையூறுகளுண்டாய், அவற்றிலிருந்து கடைசியாக விவேகம் உண்டாகும், பிறகு தெய்வபக்தி மேன்மையான பயன்களைத் தரும்” என்றார். 

6

பக்தியும் கர்மமும்

“பக்திமான் பிழைகளும் செய்வானோ?”

விவேக சாஸ்திரி: “மனதறிந்து செய்யமாட்டான். கர்ம வசத்தால் பிழைகள் ஏற்படலாம்.”

ஆஞ்சநேயன்: “கர்மம் பக்தியை மீறிச் செல்லுமோ?”

“விவேக: “பக்தி பரிபூரணமான பக்குவம் பெறும் வரையில், கர்மத் தொடர் மனிதனை விடாது. பழஞ்செய்கை பயன் விளைவிப்பதை அழிக்க வேண்டுமானால், பக்தியாகிய கனல் அறிவாகிய வேதிகையிலே புகையில்லாதபடி எரிய வேண்டும். 

இது போன்ற ஏராளமான அருமையான அறநெறி உபதேசப் பகுதிகளை இந்த நவதந்திரக் கதைகளிலிருந்து நாம் பெறுகிறோம். 

பாரதியார் இலக்கியத்தை மூன்று வகையாக அணுகலாம்.

கவிதை

கட்டுரை

கதைகள்.

இதில் கவிதை பற்றி ஏராளமான நூல்கள் வெளி வந்து விட்டன.

கட்டுரை மற்றும் கதைகள் பற்றி அவ்வளவாக நூல்கள் வெளியாகவில்லை.

இனி வரும் காலத்தில் இவை குறித்தும் அதிக நூல்கள் வெளிவரும் என்று நம்புவோம்!

***

Shakespeare’s Othello and Valmiki Ramayana: Rt Honourable Srinivasa Sastri’s Talk (Post No.13,651)

Desdemona was killed by Othello

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,651

Date uploaded in London – 10 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

Hindus got two great epics Ramayana and Mahabharata because of jealously of two characters; both Duryodhana and Kaikeyi were embodiments of envy. They caused two wars which led to the destruction of Ravana gang and Kaurava gang.

****

Right Honourable Srinivasa Sastri delivered 30 discourses on Valmiki Ramayana at Sanskrit Academy in 1944. Here is what he says about jealousy and Othello comparing characters in Ramayana.

“ It is extraordinary how great poets have treated the subject of  jealousy nearly the same way as they analyse the progress of  this feeling and study it, as it advances from step to step corrupting  the soul and making it capable of black thoughts, black plots and black deeds. The progress of this jealousy in the human heart is the same, and great poets not only have shown  the same sentiments but they have sometimes used the same language. I just want you to see how another Dhiratidhira character in tragedy feels. What if he comes from the West and from English literature? All first-class literature is human literature and belongs to the whole of mankind.  In this great play of Othello where Shakespeare depicts the passion of jealousy in its worst form, how it degrades the great character Othello, for he was a big fellow, brave on the field of battle, unsuspicious generally speaking. This is from the soliloquy of Iago.

Iago has played on the heart of Othello, has put suspicion, confirmed it by various tricks, fanned the flame until it burns violently and threatens to consume everybody. Then speaking of jealousy, he says himself,

Kaikeyi with Dasaratha 

Trifles light as air

Are to the jealous  confirmations strong

As proofs of holy writ.

Othello III.iii.322-4

 When we deal with this great passion of jealousy as worked out by Valmiki in his great epic, it would be useful, it would be helpful, in fact, it would facilitate  a better understanding of our nature if we see how in another great man’s character similar things happened  then he goes on to say what is true of Rama himself. Othello at least had something, a handkerchief; he had heard something, seen something. Rama had nothing at all. Alltat he could say is ,

You are an angel and Ravana is a wicked person. When you were in his control, how is it possible for things to have been right? that was all he could say, a kind of negative attitude. In the case of Othello ,

326   Dangerous conceits are, in their natures, poisons.


327   Which at the first are scarce found to distaste,
328   But with a little act upon the blood


329   Burn like the mines of sulphur.

—Othello III iii. 326-9

Then Lodovico asks Othello at the last moment , when everything is over and Desdemona has been choked and all is found out and the trugh has come out.

What shall be said to thee? And listen to the answer. How true, how natural, how exactly a parallel to what Sri Rama says,

Othello :-

Why , and thing:

An honourable murderer, if you will?

For nought I did in haste, but all in honour

Othello V ii 293-5

Then at the end, at the very end Othello says taking leave as it were not only of Lodovico but of the others also, of the world, instructing the world as it were, as to the havoc wrought by jealousy

342   Speak of me as I am; nothing extenuate, 

343   Nor set down aught in malice: then must you speak
344   Of one that loved not wisely but too well;
345   Of one not easily jealous, but being wrought

346   Perplex’d in the extreme; of one whose hand,

347   Like the base Indian, threw a pearl away

348   Richer than all his tribe; of one whose subdu’d eyes,

349   Albeit unused to the melting mood,
350   Drop tears as fast as the Arabian trees
351   Their medicinable gum

—Othello V ii. 342-351

Othello, the great warrior, a stern man, who has seen men falling round him and yet not moved an inch, that man says,

“I have never cried in my life. I do not know what tears are”.

“of one whose subdued eyes

Albeit unused to the melting mood,

Drop tears as fast as Arabian trees

Their medicinal gum”

Now I must take your leave- I hope it is not too late – to show you the reverse side of the human character. We have jus now seen, ladies and gentlemen, how jealousy corrupts our nature, makes us see things that are not there, shuts our eyes to clear evidence, makes beast of us – yes, that is what it does.

Then Sastri compared Lord Tennyson’s King Arthur of the Round Table………………………

****

My comments

Before the quoted paragraphs given above,  Sastri said Rama also , under the influence of jealousy, abandoned Sita. Not many people would agree with Mr Sastri I don’t Think Valmiki ever said Rama sent Sita to the forest because of jealousy. He heard what the dhobiwala et al thought about Sita’s stay in Asokavana. He wanted to prove to the world that she was pure  and acted as a king. Even in Tamil Puranas we see Manu Neethi Choza crushing his own sun under the chariot, because a cow complained that king’s son crushed her calf by rash driving. The moral behind the story is a king should apply the laws of the land to all equally. Even Rama’s killing of Vali from behind a tree is justified Vali himself. If Valmiki wanted to hide it, he could have easily cut that part. So, my point is, in Valmiki’s Ramayana, Rama never acted under jealousy towards Sita. But Kaikeyi did something out of envy.

xxxxxx

Queen Kaikeyi’s mind was poisoned by her wicked hunchbacked maid, Manthara;  a seed of suspicion planted in the queen’s mind led to Ram’s exile from Ayodhya and wreaked havoc in the royal family. In Othello, Iago acted like Manthara.

The manipulation game in Othello, one of William Shakespeare’s four great tragedies, is like that in Kaikeyi’s story from the Ramayana. The contexts are very different, though. In the play, Iago plants a seed of suspicion in Othello’s mind about the fidelity of his wife, Desdemona. So masterful is Iago’s psychological manipulation and his exploitation of sexual jealousy that Othello is driven to strangling his wife.

–subham—

Tags – Jealousy, Envy, Othello, Shakespeare, Valmiki Ramayana, Rt Honourable Srinivasa Sastri, Talk, Iago, Wicked Manthara, Kaikeyi, Desdemona

கார்ல் கிரவுல்- தமிழனுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார்! (Post No.13,650)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,650

Date uploaded in London – 10 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

கார்ல் கிரவுல்- தமிழனுக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தார்! (Post No.13,650)

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் கார்ல் கிரவுல் 1814-1864. ஐம்பது ஆண்டுகளே வாழ்ந்த இந்த ஜெர்மானியர் தமிழுக்கு பெரிய சேவை செய்தார். இந்து மத நூல்களை ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்தார். எல்லாவற்றுக்கும் மேலாக தொல்காப்பியரும் நன்னூல் பவணந்தி முனிவரும் சொல்லாத இலக்கணத்தை நமக்கு சொல்லிக்கொடுத்தார்  திருக்குறளை ஜெர்மானிய மொழியில் ஆக்கினார்.

தமிழனுக்கு தமிழ் தெரியாது !

கல் – கற்றான் ; வில்- விற்றான் ; சொல் …………….. சொற்றான் ?????? தப்பு தப்பு !

தா – தந்தான் , வா- வந்தான் ; போ …………………… போந்தான் ???????????? தப்பு தப்பு !

சா — சாத்தான் ………………………..???????????? தப்பு தப்பு !

ஆடு- ஆடினான் ; பாடு -பாடினான் ; கொடு — கொடினான் ???????????? தப்பு தப்பு !

*****

அப்பா , ஏம்பா இப்படிச் சொல்றோம் ? என்று பையன் அப்பாவிடம் கேட்டால் ,

போடா நாயே ! வீட்டுப்பாடத்தை எழுதினாயா ? வாத்தியார் சொல்லும்போது நல்லா கவனி என்று விரட்டி விடுவார் .

தமிழ் வாத்தியாரிடம் போய்க்கேட்டால் அவருக்கும் தெரியாது  கல்தோன்றி , மண் தோன்றாக் காலத்தே வாளுடன் முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி ; நாம்தான் உலகம் முழுதும் இருந்தோம் ; உனக்கு போகப் போக தமிழ் புரியும் ; போ –என்று சொல்லி தமிழ் வாந்தி எடுப்பார் ; உண்மையில் அவருக்கும் பதில் தெரியாது! பாவம் அவர் படித்த தொல்காப்பியத்திலோ நன்னூலிலோ இது இல்லை ;

அங்குதான் வருகிறார் உதவிக்கு — நமது கதா நாயகர் — லுத்தரன்  பிரிவு கிறிஸ்தவ பிரசாரகர் கார்ல் கிரவுல் .

தமிழ் வினைச் சொற்களை (VERBS) ஆராய்ந்து வகைப் படுத்தினார் ; குறிப்பாக கடந்த காலத்தைச் (PAST TENSE) சொல்லும்போது வினைச் சொற்கள் ஏழு விதமாக நடந்து கொள்கின்றன; அந்த ஏழு வகைகளிலும் அடங்காத– அடங்காபிடாரிகள்– உண்டு; அந்த முறை தவறிய வினைச் சொற்களை ஒழுங்கற்ற — அதாவது விதிகளைப் பின்பற்றாத – IRREGULAR VERBS இர்ரெகுலர் வெர்ப்ஸ் — என்போம்.

நிகழ்கால PRESENT TENSE தமிழ் வினைச் சொற்கள் மிக எளிது ; வரு:+ கிறான் அல்லது கின்றான்

இரண்டே வகைகள் !

எதிர்கால  அல்லது வருங்கால FUTURE TENSE வினைச் சொற்கள் மிக எளியவை :

இரண்டே வகைகள் ! அவன் வருவான் ; அவன் பார்ப்பான் .

வ் + ஆன் அல்லது ப் +ஆன்

ஆனால் கடந்த காலம் PAST TENSE பற்றிச் சொல்வதானால் பல வகை (CLASSIFICATION OF TAMIL VERBS)

(எனது யூ ட்யூப் தமிழ் பாடங்களிலும் , இதே பிளாக்கில் வெளியான தமிழ் பாடங்களிலும் முழு விளக்கங்கள் உள ; அது மட்டுமல்ல 20 ஆண்டுகளுக்கு வினைச் சொற்களை பட்டியலிட்டு சார்ட்/ அட்டவணை போட்டு மாணவர்களுக்கு விநியோகித்தேன் ; 750 தமிழ் வினைச் சொற்களை ஆராய்ந்து மூன்றாவது வகை THIRD CLASS TAMIL VERBS  வினைச் சொற்கள்தான் தமிழில் அதிகம் என்றும் கண்டுபிடித்தேன் ( இந்த வகையில் ஆடு, பாடு , தேடு, விளையாடு ஆகியன வரும். இதையெல்லாம் வேறு எங்கும் யாரும் அப்போது—1992 களில்— செய்யவில்லை.

கிரவுல் செய்த பணிகள்

வெளிநாடுகளில் நான்கு ஆண்டுகள் சுற்றிய பின்னர் எகிப்து பாலஸ்தீனம் வழியாக கிழக்கிந்தியா தேச பயணம் என்று ஐந்து தொகுதி புஸ்தகத்தை ஜெர்மன் மொழியில் எழுதினார். 1854-1856ல் வெளியான இந்த 5 தொகுதிகளில் நிறைய பூகோள, மானுடவியல், சமூகவியல், வரலாற்று, கிறிஸ்தவ மதச் செய்திகள் உள்ளன.

முதல் வால்யம் – பாலஸ்தீனம், இரண்டாவது- எகிப்து, சினாய், மூன்றாவது இந்தியாவின் மேற்குப்பகுதி, நாலாவது-தென் கிழக்கு இந்தியா, ஐந்தாவது- இலங்கை பற்றியவை

இதே காலத்தில் பிப்லோதீகா டமுலிகா /தமிழிகா / என்ற நான்கு தொகுதி புஸ்தகத்தையும் எழுதி முடித்தார்.

முதல் தொகுதியில் கைவல்ய நவநீதம், பஞ்சதஸ ப்ரகரணம் , ஆத்ம போத பிரகாசிகா ஆகிய மூன்று நூல்களை  ஜெர்மானிய மொழியில் மொழிபெயர்த்து, இந்து சமய வேதாந்தத்தை விளக்கினார்.

இடண்டாவது தொகுதியில் கைவல்ய நவநீதத்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் தந்தார். அத்தோடு இணைப்பில் வேதாந்த சொற்களுக்கு விளக்கம் தந்தார். 100 சம்ஸ்க்ருத வேதாந்த சொற்களுக்கு பொருள் கொடுத்தார்.

மூன்றாவது, நான்காவது வால்யம்களில் திருக்குறளை மொழிபெயர்த்து வழங்கினார். திருக்குறளை தமிழ் மொழியின் ரத்தினம் என்று புகழ்மாலை சூட்டினார். அகப்பொருள் விளக்கம் மற்றும் அருள் நந்தி (அருணந்தி)  சிவாசுசார்யாரின் சிவஞான சித்தியார் நூலின் பகுதிகளும் இவரது மொழிபெயர்ப்பில் அடக்கம்.

*****

லைப்சிக் நகரில் தமிழ் நூலகம்

ஜெர்மனியில் லைப்சிக் நகரில் தமிழ் நூலகம் ஒன்றை அமைத்ததும் இவரது பாராட்டத்தக்க செயல் ஆகும். இரண்டு எழுத்தர்களை வேலைக்கு அமர்த்தி எல்லாவற்றையும் நகல் எடுத்து எழுத வைத்தார்.150 நூல்களை எடுத்து கேட்டலாக் தயாரித்தார். அந்த நகரில் இதற்காக ஒரு தமிழ் அச்சகத்தை நிறுவினார்.. பிரபல பத்திரிகைகளில் இந்து மத கடவுளர், ஜாதிகள், இந்தியப் பழமொழிகள், கிழக்கிந்தியாவில் உள்ள (THUGS) கொள்ளைக்காரர்கள் ஆகியன பற்றி கட்டுரைகள் எழுதினார்.

1855ஆம் ஆண்டில் தமிழ் இலக்கணம் என்ற நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார் இதில் மொழியின் நுணுக்கங்கள், வினைச் சொற்களின் வேறுபாடுகளை விளக்கினார். அவைகளை அட்டவணை போட்டுக்காட்டினார். இந்தியாவுக்கு கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப வருவோருக்கு லைப்சிக் நகரில் தமிழ் மொழியைக் கற்பித்தார்.

அவர் செய்த பணிகளுக்காக எர்லங்கன் பல்கலைக்கழகம்  1854ம் ஆண்டில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்தது.. அதே ஊருக்கு குடியேறி சொற்பொழிவுகள் ஆற்றினார். பாடத்திட்டத்தை வகுத்துக் கொடுத்து அதில் சமயத்துடன் பிற மத ஒப்பீடு, மொழியியல் ஆகியவற்றையும் சொல்லிக்கொடுக்க வைத்தார். அவர் சொன்னபடி துறை ஒன்று பல்கலைக்கழகத்தில் உருவானது. 10-11-1864 ம் ஆண்டில் இறக்கும் வரை அவர் சமயப் பணியையும் கல்விப் பணியையும் செய்துவந்தார்

தமிழ் மொழியின் மீது அவருக்கு இருந்த அளப்பற்ற பற்று வியப்புக்குரியது

(கால்டு வெல் , மாக்ஸ்முல்லர் போன்றோர்  இரண்டு மொழிகளையும் கற்காமல் ஒரே மொழி மட்டும் கற்றதால் , அவர்களது படைப்புகளில் நிறைய உளறல்களளைக் காணமுடிகிறது.)

கிரவுல் ஸம்ஸ்க்ருதத்தையும் தமிழையும் கற்றார். சமயம் தொடர்பான கல்வியைக் கற்று இத்தாலியில் தனிப்பட்ட முறையில்  பாடம் சொல்லிக்கொடுத்தார். அவர் பிறந்ததோ ஜெர்மனியில் .  பின்னர்  ஜெர்மனியில் டெஸ்சாவ் என்னுமிடத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். பிறந்தது வொர்லிட்ஸ் 6-2-1814.

அவர் லைப்சிக் மிஷன் சொசைட்டியின் டைரக்டராகவும் இருந்தார். சர்ச்சுகள் சுய ஆதிக்கம் பெற்ற, சுதேசி அமைப்புகளாக இருக்கவேண்டும் என்பது அவரது குறிக்கோள்; ரோமன் கத்தோலிக்கர் போல ஒரே போப்பாண்டவர் ஆதிக்கத்தில் லுத்தரன் சர்ச்சுகள் இருக்கக்கூடாது என்பது அவரது அவா.

*****

பழைய கதை!

எனக்கு தமிழ் தெரியாது என்பது 1992–ம் ஆண்டில்தான் தெரிந்தது. அப்போது பிபிசி தமிழோசையில் ஆறு ஆண்டுக்கால  ஒலிபரப்புப் பணியை முடித்து உட்கார்ந்திருந்தேன். லண்டன் பல்கலைக்கழக த்தில் தமிழ் ஆசியராக இருந்த Dr STUART BLACKBURN டாக்டர் ஸ்டூவர்ட் பிளாக்பர்னைப் போய்ப்பாருங்கள் ; செந்தமிழ் பேசும் ஒரு தமிழர் வேண்டும் என்றார் ; உங்கள் பெயரைச் சொல்லியிருக்கிறோம் என்று பிபிசியிலுருந்து போன் வந்தது . டாக்டர் பிளாக்பர்ன் நாட்டுப்புறவியலில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற அமெரிக்கர். பாஸ்டன் நகரைச் சேர்த்தவர். நன்றாகத் தமிழ் பேசுபவர் மதுரைக்கு அருகிலிலுள்ள மேலூர் முதலிய இடங்களில் தங்கி கோடாங்கி அடிப்பது, கேரளத்தில் நடக்கும் தோல் பாவைக்கூத்து ராமாயணம் முதலியவற்றை ஆராய்ந்து நூல்கள் இயற்றியவர். நாட்டுப்புறக் கதைகளை மொழிபெயர்க்கையில் சில புரியாத இடங்கள் வந்தால் என்னைக் கேட்பார். நான் எனது விளக்கத்தைத் தருவேன் . கமலாம்பாள் சத்திர நாவலை அவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கையில் சந்தேகம் வரும் இடங்களை அவர் என்னிடம் கேட்பார்; அதில் உதவி செய்ததை புஸ்தக முன்னுரையில் என் பெயரை எழுதி நன்றி தெரிவித்தது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக நானும் அவரும் சேர்ந்து லண்டனில் SOAS பல்கலைக்கழக வளாகத்தில் (MAY 13, 1996) திருவள்ளுவர் சிலையை நிறுவும் பணியைச் செய்தோம். அந்த போட்டோ SOAS பல்கலைக்கழக மாதப் பத்திரிக்கையில் வெளியானது . சுவாமிநாதன், இதோ உன் போட்டோ என்று அந்தப் பத்திரிகையை 1996-ம் ஆண்டில் கொடுத்தார். அந்த சிலையின் 25-ஆவது ஆண்டுவிழாவைக் கொண்டாடுகையில் யாரிடமும் சிலைத்திறப்பு பற்றி ஒரு தகவலும் இல்லை. என்னிடம் இருந் புகைப்படத்தை வெளியிட்டு தகவல் தந்தேன். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச் சொன்ன இந்திய ஹை கமிஷன் , லண்டன் பல்கலைக்கழகம், ஜெயலலிதா அரசு ஆகியவற்றிடமும் தேடிப்பார்த்தோம் கிடைக்கவில்லை!

அவர் வாரத்தில் 2 அல்லது 3 நாட்களுக்கு மாணவர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க என்னையும் அழைத்தார். அந்தப் பகுதி நேர வேலை சிறிது சிறிதாக பெரிதாகி மாலைக் கல்லூரியிலும் தமிழ் சொல்லிக்கொடுத்தேன். 20 ஆண்டுக் காலத்துக்குப் பின்னர் 2014-ல் ஓய்வு எடுத்தேன். நாங்கள் பயன்படுத்திய தமிழ் பாடப் புஸ்தகம் அமெரிக்காவில் ஆறு பல்கலைக்கழகங்களில் பயன்படுத்திய TAMIL FOR BEGINNERS BY KAUSALYA HART கெளசல்யா ஹார்ட்டின் தமிழ் பார் பிகின்னர்ஸ் புஸ்தகம் ஆகும். வெளிநாட்டுக்காரர்களுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்க, தொல்காப்பியமும் நன்னூலும் உதவாது; கிரவுல் கண்டுபிடித்த வினைச்சொல் வகைகள் தேவை என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது ! தமிழன், தமிழ்க் குழந் தைகளுக்கு தமிழ் கற்பிப்பது எளிது; தமிழ் தெரியாத வெளிநாட்டுக்காரர்களுக்கு சொல்லிக்கொடுக்க கிரவுல் கண்டு பிடித்த பிரிவுகளை அறிய வேண்டும் ; அவருக்கு முன்னதாக சில  மிஷனரிகள் — கிறிஸ்தவ பிரசாரகர்கள் — முயன்ற போதும் கிரவுல் தான் வெற்றி பெற்றார்.

EXAMPLES

CLASS ONE VERBS

1 A SEY- SEYTHEN செய்- செய்தேன்

1 B KOL – KONDEN கொள் – கொண்டேன்

1C VEL – VENDREN வெல் – வென்றேன்

CLASS TWO

UTKAR – UTKARNTHEN

உட்கார் – உட்கார்ந்தேன்

CLASS THREE

VANGU – VANGINEN

VANGU – VANGINEN

வாங்கு- வாங்கினேன் தமிழிலுள்ள ஏழுவகை வினைச் சொற்களில் மூன்றாவது வகை வினைச் சொற்கள்தான் அதிகம் 

ஆடு, பாடு, விளையாடு போல பல சொற்கள் இதில் அடக்கம்.

AND IN THE NEUTER GENDER  WE HAVE THREE FORMS

VANGIYATHU, VANGITRU, VANGINA

அஃறிணையில்  வாங்கியது, வாங்கிற்று , வாங்கின என்றெல்லாம் வரும்

CLASS FOUR

SAAPPIDU – SAPPITTEN

சாப்பிடு – சாப்பிட்டேன்

PERU – PETREN

பெறு – பெற்றேன்

CLASS FIVE

5 A. UN – UNDEN உண் – உண்டேன்

5 B.THIN – THINDREN தின் – தின்றேன்

5 C.KEL – KETTEN கேள் – கேட்டேன்

5.D. VIL- VITREN வில் – விற்றேன்

CLASS 6

PAR- PARTHTHEN

பார்- பார்த்தேன்

CLASS 7

NADA – NADANTHEN

நடந்தேன்

APART FROM THESE SEVEN CLASSES RARE VERBS LIKE

SAA – SETHTHEN  ARE ALSO THERE IN

IF YOU CONJUGATE

SAA – SARTHTHEN

SAA – SAATHTHEN

SAA- SAANTHEN FOLLOWING ONE OF THE SEVEN CLASSES IT WOULD BE WRONG.

‘சா’ என்னும் வினைச் சொல்லை, இறந்த காலத்தில்  ‘செத்தேன்’ என்போம்.

முன்னர் சொன்ன எவ்வகையிலும் இது அடங்காது .

‘கா’ என்றால் காத்தேன் என்று சொல்லி விடலாம்

சா- சாதேன் ,சார்த்தேன், சாத்தேன் , சாந்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாது.

ஆக, மொத்தத்தில் எல்லா வினைச் சொற்களையும் பட்டியலிட்டால் இப்படி ஏழு முறையில் இறந்தகாலச் சொற்கள் வரும். தமிழைத் தாய் மொழியாகக்கொண்டோர் இயல்பாகவே பேசிப் பழகி விடுவதால் இப்படி பலவகைகளில் நாம் இறந்த காலச் சொல்லை உருவாக்குகிறோம் என்று அறியாமலேயே இயல்பாகப் பேசிவிடுகிறோம். வெளிநாட்டினர் தவறில்லாமல் பேச வேண்டுமானால் நாம் அவர்களுக்கு இதைக் கற்பித்தே ஆக வேண்டும்.

வாழ்க தமிழ்!  வளர்க தமிழ்!!

–சுபம்—

TAGS- கார்ல் கிரவுல், தமிழ் வினைச் சொற்கள், ஜெர்மானியர், தமிழ் இலக்கணம், லண்டன் பல்கலைக்கழகம், திருக்குறள் , ஜெர்மன்  மொழிபெயர்ப்பு, திருவள்ளுவர் சிலை, கைவல்ய நவநீதம், பஞ்சதஸ ப்ரகரணம் , ஆத்ம போத பிரகாசிகா

S Nagarajan Article Index for August 2024 (Post No.13,649)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.649

Date uploaded in London – 10 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

S Nagarajan Article Index August 2024

1-8-24 13497 ராமாயணத்தில் சாபங்கள் (59) சுக்ராசாரியர் தண்ட ராஜனைச் சபித்தது!                                                                                                                                      2-8-24 13500 ராமாயணத்தில் சாபங்கள் (60) சுக்ராசாரியர் தண்டக வனம் அழியுமாறு சபித்தது!                                                                                                              3-8-24 13504 ராமாயணத்தில் சாபங்கள் (61) துர்வாஸ முனிவர் சாபம் கொடுப்பதாக லக்ஷ்மணரிடம் கூறுவது!                                                               4-8-24 13508 இதயக் கோளாறுகளையும் கான்ஸர் அபாயத்தையும் தடுப்பது சைவ உணவே! – ஹெல்த்கேர் ஜூலை 2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                                                                                                      5-8-24 13512 S Nagarajan Article Index July 2024.                                                                     6-8-24 13515 உலகை ஒளிமயமாக ஒளிர வைத்த நிகோலா

டெஸ்லா! – 1 (மாலைமலர் 3-7-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)                                   7-8-24 13518  உலகை ஒளிமயமாக ஒளிர வைத்த நிகோலா

டெஸ்லா! – 2 (மாலைமலர் 3-7-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)                                    8-8-24 13522 உடல் குறைகளைக் கடந்து வெற்றி பெற்ற ஹெலன் கெல்லர்! – 1 ஜூலை 10, 2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                                                                                                                                           9-8-24 13526 உடல் குறைகளைக் கடந்து வெற்றி பெற்ற ஹெலன் கெல்லர்! – 2  ஜூலை10, 2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                                                              10-8-24 13530   அதிரடி மன்னன் ஜாக்கிசான்! – 1 17-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.                                 11-8-24 13533   அதிரடி மன்னன் ஜாக்கிசான்! – 2  17-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                                12-8-24 13536 இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். – 1  24-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.                                   13-8-24 13539 இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். – 2  24-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.                                                                                            14-8-24 13542 பலகோடி பேரின் பசியைப் போக்கிய விஞ்ஞானி நார்மன் போர்லாக்! – 1.  (31-7-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை)                                                                                                                              15-8-24 13546 லியோ டால்ஸ்டாய் எழுதிய ‘அன்னா கரீனா’ வெ.சந்தானம் மொழிபெயர்ப்பு                                      16-8-24 13549  பலகோடி பேரின் பசியைப் போக்கிய விஞ்ஞானி நார்மன் போர்லாக்! – 2 (31-7-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை) 17-8-24 13551 ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்!                                   18-8-24 13554 கவலையூட்டும் செய்தியா? ‘ஜோக்’ படியுங்கள்!                                       19-8-24 13557 ராமாயணத்தில் வரங்கள் – 1.                                                                   20-8-24 13560 நீங்களும் நினைவாற்றல் ‘புலி’ ஆகலாம்!                                    21-8-24 13564 வளமான வாழ்க்கைக்கு நிர்வாக இயல் கதைகள் இரண்டு! 22-8-24 13568  வியக்கவைக்கும் விஞ்ஞானி நடிகை ஹெடி லமார்! –1      

                             (7-8-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.)

23-8-24 13572 வியக்கவைக்கும் விஞ்ஞானி நடிகை ஹெடி லமார்! –2     

                             (7-8-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.)

24-8-24 13576 ஆறு நூறு கோடியில் ஒருத்தியம்மா நீ!                                       25-8-24 13581 ஜோதிட மேதை டாக்டர் பி.வி.ராமன் – 1   (14-8-24 மாலைமலர்இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.).                                                   26-8-24 13586 ஜோதிட மேதை டாக்டர் பி.வி.ராமன் – 2   (14-8-24 மாலைமலர்இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.)                                                           27-8-24 13590   உங்கள் கூடவே நிரந்தரமாக இருக்கும் இரண்டு டாக்டர்கள்!                                                                                                                         28-8-24 13596 நீங்கள் முன்னேற ஏ.கே. 47 மிரட்டல் தான் வேண்டுமா?                                                                                                                                              29-8-24 13601  உங்கள் வீட்டு ஐன்ஸ்டீன்கள்!                                                          30-8-24 13607 உணர்வு’பூர்வமாக வாழுங்களேன்!                                           31-8-24 13611 இட்லி சாப்பிடுவது’ போல விழுங்குங்கள்! 

**