தமிழ்  சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்:  பொறாமை-2 (Post No.13,648)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,648

Date uploaded in London – 9 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

இந்தியாவின் இரு பெரும் இதிஹாசங்கள் பொறாமையால் உருவானவை ஆகும்.

திருதராஷ்டிரன் -துரியோதனன் பொறாமையால் உருவானது மஹாபாரதம்;

கைகேயியின் பொறாமையால் உருவானது ராமாயணம்

பொறாமை அல்லது அழுக்காறு அல்லது மாத்சர்யம் அல்லது தொல்காப்பியர் பாஷையில் நிம்பிரி பற்றி ஷேக்ஸ்பியர் மற்றும் தமிழ் சம்ஸ்க்ருதப் புலவர்கள் உரைப்பதை ஒப்பிட்டுப் பார்ப்போம் .

பொறாமை பற்றி ஒரு அதிசய விஷயம் தொல்காப்பியர் ‘நிம்பிரி’ என்னும் சொல்லை பயன்படுத்துகிறார். இது ஸம்ஸ்க்ருதத்திலும் இல்லை; தமிழிலும் வேறு எங்கும் இல்லை!

வள்ளுவன் ஒருவன்தான் பொறாமை பற்றி பத்துக் குறள்கள் பாடி முதலிடம் பிடித்தான் என்று நினைத்தேன். ஆனால் அவனுக்கும் முன்னதாக, அதர்வண வேதப் புலவன் பாடிவிட்டான்.

அதர்வண வேதம்; காண்டம் 6; துதி 18; சூக்தம் 191

தலைப்பு – பொறாமை ; ஈர்ஷ்யா விநாசனம்

1.பொறாமை எண்ணம் முதலில் வந்தவுடனே, அதற்கான மூலத்தை, பொறாமையினால் ஏற்படும் வயிற்று  எரிச்சலை — இருதயக் கனலை – அணைக்கிறோம்

2.பொறாமை மனம் படைத்தவனின் மனது மென்மையாகட்டும் ; பூமிக்கு உணர்ச்சி இல்லை; செத்துப்போனவனை விட உணர்ச்சியற்றது பூமி. அது போல பொறாமை மனது மிருது ஆகட்டும் .

3.உனது பொறாமை என்னும் சூடான காற்று /எரிச்சல், தோல் பையிலிருந்து வெளியேறும் காற்றுப்போல வெளியே செல்லட்டும்- அதர்வண வேதம்

XXXX

அழுக்காறாமை என்னும் அதிகாரத்தில் மேலும் இரண்டு சுவையான விஷயங்களைச் சொன்ன பிறகு அதர்வண  வேதத்துக்குள் நுழைவோம்.

வள்ளுவன் அதி மேதாவி; சம்ஸ்க்ருத மொழியைக் கரைத்துக்குடித்தவன். அதி தீவிர ஹிந்து. ஆகையால் இங்கே ‘பாவி’ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் (செய்யவள்/லக்ஷ்மி அக்காள்) மூதேவியையும் குறிப்பிடுகிறான்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும் – குறள் 168

பொறாமை என்னும் கொடிய பாவி செல்வத்தை அழிக்கும்; தீய வழியில் செலுத்தும்.

****

இன்னும் கொஞ்சம் அழகாகச் சொல்கிறான்:

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்

பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல் (170)

பொறாமை உடையோர் உயர்ந்ததும் இல்லை;பொறமை இல்லாதோர் சிறுமை அடைந்ததும் இல்லை.

 பத்து குறட்பாக்களில் அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறான்.

‘’அவ்வியம் பேசேல்’’ என்று அவ்வையாரும் இயம்புவார்.

****

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும் – குறள் எண் 167

பொறாமை கொண்ட ஒருவனைத் திருமகளுக்குப் பிடிக்காது. அவள் தனது அக்கா மூதேவியைக் (தவ்வையை) காட்டிவிட்டு விலகி விடுவாள்.

****

ஷேக்ஸ்பியர் ஒதெல்லோ நாடகத்தில் இது பற்றி விரிவாகக் கதைக்கிறார்.

ஆங்கிலத்தில் பொறாமைக்கு ஒரு கலரும் ஒதுக்கியுள்ளார்கள். பச்சை என்பது அழுக்காறு envious or jealous என்பதைக் குறிக்கும்.

Green eyed jealousy

Merchant of Venice 3-2-110

****

O, beware, my lord, of jealousy; It is the green-ey’d monster, which doth mock The meat it feeds on.

William Shakespeare

‘Othello’ act 3, sc. 3, l. 165

****

I am a true laborer: I earn that I eat, get that I wear, owe no man hate, envy no man’s happiness, glad of other men’s good, content with my harm.

William Shakespeare

‘As You Like It’ (1599) act 3, sc. 2, l. [78]

நான் ஒரு உண் மை உழைப்பாளி; நான் சம்பாதிப்பதை வைத்து உண்ணுகிறேன் ; உடுக்கிறேன் யாரையும் கண்டு பொறாமைப்படுவதில்லை மற்றவர்கள் நன்றாக இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுகிறேன் ; பரம திருப்தி — ஆஸ் யூ லைக் இட் நாடகம்

****

The venom clamours of a jealous woman poison more deadly than a mad dog’s tooth.

வெறிபிடித்த நாயின் விஷப் பல்லை விட பொறாமை பிடித்த பெண்ணின் விஷமானது ஆளைக் கொன்றுவிடும் – ஷேக்ஸ்பியர் கவிதை

William Shakespeare (1833). “The plays and poems of William Shakespeare”, p.294

****

How many fond fools serve mad jealousy?
The Comedy of Errors (2.1)

பொறாமை பைத்தியத்துக்கு எத்தனை முட்டாக்கள் சேவகம் செய்கிறார்கள்?

****

When envy breeds unkind division

There comes the ruin, thee begins confusion

Henry VI 4-1-193

கருணையற்ற பிளவுகளை பொறாமை  உண்டாக்குகையில்

அங்கே படு நாசமும் வரும்; குழப்பமும் கூத்தாடும் –

ஹென்றி Vi நாடகம்

****

Jealous souls will not be answered so:

They are not ever Jealous for the cause

But Jealous for they are Jealous. It is a monster

Begot upon itself, born on itself

‘Othello’  act 3, sc. 4, l59


பொறாமைப் பேர்வழிகளுக்கு விளக்கமே இல்லை;

அதற்கு காரணம் என்பதே தேவை இல்லை;

பொறாமை என்பது தானாகவே உதிக்கிறது;

பசப்புக்கு காரணம் கற்பிப்பர்; அந்த பூதம்

தாமாகவே தோன்றி தாமாகவே வளர்கிறது

அதாவது ஒதெல்லோவின் பொறாமைக்கு அதுவே தீனி போடும்.

(துரியோதணனை ஒப்பிட்டுப் பார்க்கலாம் )

இதே போல வால்மீகி ராமாயணத்தில் உள்ள பொறாமை பற்றி ரைட் ஹானரபிள் சீனிவாச சாஸ்திரி நீண்ட உரை ஆற்றி இருக்கிறார் .

****

Lust or desire for sensual pleasure – काम – Kama காமம்

Anger – क्रोध – Krodha கோபம்

Greed – लोभ – Lobha பேராசை

Attachment – मोह – Moha அதிகப்பற்று

Ego – मद – Mada அஹங்காரம்

Envy or Jealousy – मत्सर्य – Matsarya பொறாமை

இந்து மதத்தில் ஆறு தீய குணங்களின் பட்டியலில் பொறாமையும் ஒன்று ; இது மனிதனை மிருகம் ஆக்குவதோடு இறைவனை நாடாமல் தடுத்துவிடும்.

–subham—

My old article with two stories on Envy

எனக்கு ஒரு கண் போனாலும் போகட்டும்

Tamil and Vedas

https://tamilandvedas.com › என…

·Translate this page

5 Sept 2015 — பொருள்:பொறாமை உடையார்க்கு அழிவினைத் தருவதற்கு வேறு எதிரியே தேவை இல்லை. அவன் கொண்டுள்ள பொறாமையே அந்த ஆளை அழித்துவிடும். தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘எனக்கு ஒரு கண் போனாலும் சரி, எதிரிக்கு இரண்டு கண்களும் போகட்டும்‘ என்று.

–subham—

Tags- தமிழ்  சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள் , பொறாமை- 2, அவ்வியம், அழுக்காறு, ராமாயணம், மகா பாரதம், ‘எனக்கு ஒரு கண் போனாலும் , அதர்வண வேதம்

Mind and Moon; Shakespeare and Hindu Scriptures (Post No.13,647)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,647

Date uploaded in London – 9 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Not many people know the Vedic Moon Goddesses Sinivali, Kuhu and Anumathi. People know only Chandra, the moon, in Hindu astrology. Not much research has been done about the Vedic Moon Goddesses.

But moon’s connection to mind is confirmed by Hindu scriptures and Shakespeare.

Hindu scriptures say four important things about moon. Science has confirmed a few Hindu predictions.

1.Hindus said Moon came from Ocean when it was churned by the Devas and Asuras. Science agreed with Hindus. There are a few theories about the origin of moon such as Sister Theory, Daughter Theory and Lover theory. Daughter theory agrees with Hindu literature. We said that moon came from earth, i.e from the ocean on earth. The diameter of Pacific Ocean and moon are almost same; So, it looks like a big chunk was thrown out of earth billions of years ago due to big collision of heavenly bodies.

Abja is one of the 20 Sanskrit words for moon in the Amarakosa, oldest thesaurus in the world.

Abja: =One who came out of water
One of the 14 objects or people that came out of the ocean when Demons and Devas churned the ocean is Moon. One scientific explanation is that moon went out of the earth during a big collision on earth. The scientists proposed this theory because the diameter of moon and Pacific Ocean are approximately same. So we can fit moon into the earth jigsaw puzzle.

****

2.Second point made by the Hindus about the mind and the moon. Purushasuktam verse in the Rig Veda, the oldest book in the world, linked Moon with Mind and Sun with Eyes. There is a belief all over the world that moon causes madness in people’s mind. English word Lunatic came from Lunar/Moon.

Chnadrama manaso jatah chaksor Suryo ajayata

चन्द्रमा मनसो जाताश्चक्षो सूर्यो अजायत।– Rig Veda

Shakespeare also says it in

Emilia

But now, my lord.109

Othello

It is the very error of the moon,110

She comes more nearer earth than she was wont,111

And makes men mad.112

Emilia

Cassio, my lord, hath kill’d a young Venetian113

Call’d Roderigo.

Othello V -ii-110/2

Hindu astrology says moon is in charge of Mind.

Words such as Month/Maatha in Sanskrit/Mind are cognate words. Tamils also use the Sanskrit words Maatha, Manathu etc.

****

Hindus made two more predictions. Western astronomers may confirm it soon:

3.Mercury is the son of Moon: It is in Navagraha Stotra; a hymn on Nine heavenly bodies

4.Moon helps plants to grow.

It is in all Tamil and Sanskrit poems. Westerners think sun only helps the plants to make food and grow.

Hindus are superior to western astronomers, because Tamil and Sanskrit poets described the billions of galaxies and Black hole before the scientists knew about it.

So Hindu predictions will be confirmed by westerners soon

****

BBC Article –The mood-altering power of the Moon

The idea that the lunar cycle can influence people’s behaviour dates back thousands of years, but has been largely dismissed by modern medicine. But new research suggests there may be some truth to these ancient theories.

Here are a few points highlighted in the BBC article:

One recent study suggested that outdoor criminal activity may be higher when there is more moonlight

In theory, the light of a full Moon might disrupt people’s sleep, which could influence their mood

When people were exposed to magnetic field changes – equivalent to those we experience as we move around our local environment – they experienced decreases in brain alpha wave activity

Another possibility is that patients are responding to the Moon’s gravitational pull in the same way the oceans do: through tidal forces  —By Linda Geddes31st July 2019 

***** 

Following is from my old article on Moon

1.It has influence over the growth of plants. Science has yet to approve it.

2.Moon has influence over human mind. Purusha Sukta of the Tenth Mandala of the Rig Veda links sun to eyes and moon to mind. Science has accepted it fifty- fifty. The word ‘lunatic’ for mad behaviour came from Lunar for moon. Some statistics prove strange behaviour among mentally sick patients.

3.Hindu hymns say that the Mercury (Budha) is the son of Moon (Soma). It is again a cosmological event. That is Mercury was formed because of Moon or from the Moon. Mercury is one of the smallest planets.

4.Hindus have used the word SOMA for a mysterious, rejuvenating, unknown plant and the Moon. The word confused everyone in the Vedas. It is still a mystery where they used it for moon and for the plant. Soma plant purifies a person’s mind where as narcotic drugs and alcoholic drinks spoil a person’s mind. Since Westerners have been using only the spoiling, bad drinks and drugs they couldn’t see anything good in the Soma plant. I have already explained about the Tamil Inscription’s description of a Brahmin as Mano Suddha Somayajee (More information is in my earlier post). Probably this is the reason Hindus linked moon with plant’s growth.

5. Rig Veda clearly said moon’s light is borrowed from the sun. So they knew it was the reflection of sun light like a mirror.

6.Hindus believe that moon came of milky ocean when it was churned by the Devas (angels) and the Asuras (demons). I have already explained the link between the Pacific Ocean and the Moon.

7. Vedic Hindu Schools don’t hold Vedic classes on New Moon, Full moon and Ashtami (eighth day from full or new moon) days. So do the Buddhists. Moon’s effect on sea on those days is well known. Since our body has 70% water they believed that the moon has same effect on human body.

—Subham—

Tags – Moon, Mind, Shakespeare, Hindus, Rig Veda, Lunatic, BBC Article

நாஸ்தீகர்களுக்கு பயங்கர எச்சரிக்கை:  திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை நிறைவு- Part 50 (Post No.13,646)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,646

Date uploaded in London – 9 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

GOD IS  NOW  HERE>

நாஸ்தீகர்களுக்கு திருமூலர் பயங்கர எச்சரிக்கை திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை நிறைவு- Part 50

நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறியவர்கள் பூனையின் கையில் அகப்பட்ட கிளி போல கிழித்தெறி யப்படுவர்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த சண்டையில் அசுரர்கள் அழிந்தார்கள். அது போல, கடவுளை சிறிதளவு எள்ளி  நகையாடினாலும் அழிவு நிச்சயம் .

கோவிலை அழித்தாலோ , பூஜைகளை நிறுத்தினாலோ நாட்டுக்கும் தலைவனுக்கும் அழிவுதான் மிஞ்சும்

தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே

அளிவுறு வார்அம ராபதி நாடி

எளியனென்று ஈசனை நீசர் இகழில்

கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே.- திருமந்திரம்

Those who have Jnana attained,
Rid of all doubts in their thoughts
Seek Him in love intense
Shall reach the World of Celestials;
If the low-born think any the less of Him,
Dismal indeed is their fate–
Unto the parrot in cat’s claw.

*****

அப்பகை யாலே அசுரரும் தேவரும்

நற்பகை செய்து நடுவே முடிந்தனர்

எப்பகை யாகிலும் எய்தார் இறைவனைப்

பொய்ப்பகை செய்யினும் ஒன்றுபத் தாமே. -திருமந்திரம்

They defied the Lord,
Devas and Asuras,
And they defied themselves one another
And destruction met;
However little, defy not Lord,
Not even for fun,
They snow-ball, one into ten.

*****

Dangers of Destruction to Temple

கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்

வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை

முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்

வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே. -திருமந்திரம்


As they move away,
A single stone from temple wall
That shall spell the Crowned King’s ruin;
Be he a sage, be he one learned in Vedas,
Sure the crisis; certain the ruin;
–So Ordained Lord.

******

Dangers of Skipping Performance of Puja

ஆற்றரு நோய்மிக்கு அவனி மழையின்றிப்

போற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்

கூற்றுதைத் தான்திருக் கோயில்கள் எல்லாம்

சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே.– திருமந்திரம்


Rains fail; epidemics spread;
The mighty king his prowess loses;
All this sure happens,
If worship in Lord’s temples falters,

–The Lord who spurned the very God of Death.

*****

 முன்னவ னார்கோயில் பூசைகள் முட்டிடின்

மன்னர்க்குத் தீங்குள வளம்குன்றும்

கன்னம் களவு மிகுத்திடும் காசினி

என்னரு நந்தி எடுத்துரைத் தானே.- திருமந்திரம்

 Dangers of Puja Ceasing
When in Siva’s temple worship ceases,
Harm befalls the ruler;
Scanty the rains;
Theft and robbery abound in land,
Thus did my Holy Nandi declare

****

நாத்திகம்சொல் கின்றவர்தம் நாக்குமுடை நாக்கு

நாக்குருசி கொள்ளுவதும் நாறியபிண் ணாக்கு

சீர்த்திபெறும் அம்பலவர் சீர்புகன்ற வாக்கு

செல்வாக்கு நல்வாக்கு தேவர்திரு வாக்கு”.– வள்ளலார் பாடல்

வள்ளுவனும் நாத்திகனை பேய்ப்பயல் என்று திட்டுகிறான்: 

உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து

அலகையா வைக்கப்படும் (குறள் 850)

உலக மக்கள் அனைவரும் உண்டு என்று சொல்லுவதை, ஒருவன் இல்லை என்று சொன்னால் அவனை மனித வடிவில் வந்த பேய் என்று கருதவேண்டும்.

மனுவும் தான் எழுதிய சட்ட நூலில் நாத்திகத்தை தாக்குகிறார்.

லோப: ஸ்வப்னோ த்ருதி: க்ரௌர்யம் நாஸ்திக்யம் பின்னவ்ருத்திதா

யாசிஷ்ணுதா ப்ரமாதஸ்ச தாமசம் குண லக்ஷணம்

மனு 12-33

பேராசை, தூக்கம், புலனின்ப கட்டுப்பாடில்லாமை, கொடுமை செய்தல், நாத்திகம், தொழில் செய்யாமை, பிச்சை எடுத்தல், சோம்பேறித்தனம் ஆகியன தாமச குண லட்சணம்.

*****

HE WHO KNOWS NOT

He who knows not and knows not he knows not, he is a fool—shun him;
He who knows not and knows he knows not, he is simple—teach him;
He who knows and knows not he knows, he is asleep—wake him;
He who knows and knows he knows, he is wise—follow him!

(An ancient saying from the Middle East)

அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும்

அறிவிக்க வேண்டாம் அறிவிற் செறிவோர்க்கும்

அறிவுற்று அறியாமை எய்திநிற் போர்க்கே

அறிவிக்கத் தம்அறி வார்அறி வோரே. — திருமந்திரம்

இது அராபிய பழமொழியுடன் ஒப்பிடக்கூடிய நல்ல பாடல் . மேலும், பஞ்ச தந்திரக் கதைகளில் குரங்கிற்கு உபதேசம் செய்த குருவிக்கு என்ன நேர்ந்தது என்ற கதையையும் நினைவுபடுத்துகிறது.

அறியாமையில் உழல்பவர்களுக்கு அறிவுரை பகராதே; தூங்குகின்றவர்களை தட்டி எழுப்பு. உத்திஷ்டத ஜாக்ரத பிராப்யவரான் நிபோதத எழுமின் விழிமின் குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின்  என்ற  கடோபநிஷத் வாக்கியத்தையும் நினைவுபடுத்தும். ஆண்டாளும் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! என்று அல்லவா சொல்லி தட்டி எழுப்பினாள்!

Tell Them, Who Know and Yet Know Not

No use telling

Those who are in ignorance steeped;

No use telling

Those who are in Jnana filled;

Tell only them

Who know and yet know not;

Then will they know

And Self-realize.

****

வினைச் சொற்களை திருமூலர் பயன்படுத்தும் முறை நமக்கு ஆழ்வார் பாடல்களை நினைவுபடுத்தும்

நிற்றல் இருத்தல் கிடத்தல் நடைஓடல்
பெற்றுஅக் காலும் திருவருள் பேராமல்
சற்றியல் ஞானம்தந்து ஆனந்தம் தங்கவே
உற்ற பிறப்பற்று ஒளிர்ஞான நிட்டையே.

^^^^

ENGLISH VOWELS A E I O U

ஆனந்தம் ஆனந்தம் ஒன்றென்று அறைந்திட
ஆனந்தம் ஆனந்தம் ஆ ஈ ஊ ஏ ஓ ம் என்று அறைந்திடும்
ஆனந்தம் ஆனந்தம் அஞ்சுமது ஆயிடும்
ஆனந்தம் ஆனந்தம் அம்ஹ்ரீம்அம் க்ஷம் ஆம்ஆகுமே. 27

 Sivaya Nama are of the Life-Vowels Five and Seminal Sounds Five

One the Supreme Bliss,

One the Supreme Bliss,

Thus chant the mantra

You shall have Bliss,

Bliss has its source in Letters Five;

A-I-U-E and Aum the life vowels they are;

They become the Five Letter mantra

And joy that is within joy;

Bliss lies in the seed-letters Five;

Hum-Hrim-Ham-Ksam-Am, are they.

*****

கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்

கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்

வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்

கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே. 4

*****

 ஒருவனு மேஉல கேழும் படைத்தான்

ஒருவனு மேஉல கேழும் அளித்தான்

ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்

ஒருவனு மேஉல கோடுயிர் தானே.

The One alone created the worlds seven;

The One alone spanned the worlds seven;

The One alone survived the worlds seven;

The One alone pervaded body and life.

xxxxx

மேலும் விளக்க வேண்டிய, ஆராய்ச்சிக்குரிய திருமந்திரப் புதிர்கள்

பேராயிரம்- 1784

ஏழு கோடி மந்திரம் – 2193

மேல்கீழ் தாமரை – 2179

மந்திர தந்திர உபதேச ஞான 2335

மஹா வாக்கியம் 2287

பஞ்ச லோகம் நவமணி – 1880, 2975, 1880,1690

அஷ்டமாசித்திகள் 598, 620/69, 982, 2514,

2100, 2183– அடடா அண்ணாமலை

கடல் வாணிபம் 2874, 2882, 2888, 89,95, 2984

(கடல் வாழ்வு – 2984 (Marine Trade)

கடல் வாணிபம்- 2874, 2882, 2888, 89, 95 (Marine Trade))

கூத்தி வளர்த்த கோழிப்புள் 2833,

108 சமயம் – 2707 ஆதிசங்கரர் எதிரொலி

மேரு வலம் வரும் தேவர்- 1938

காலத்தை வெல்லும் கருத்து – 564

உரை செய்யா மந்திரம்- 2390

ஊசித்துளை இன்பம்- 805, 2424

அண்டம் பிண்டம் 133, 2761,

இருளற்ற சிந்தை – 2553

நாழிகையால் எமனை அளப்பர் – 854

இராப்பகல் இல்லா இடம் – 318, 558,

வேதப் பகல் ஒளி – 804

தினமலர் – 1807, 1110

திருமந்திரம் – 2676

சக்தி,– நியூட்டனின் விதிகள்  2318

அஷ்டமாசித்திகள், கடல் வாணிபம் பற்றி  பற்றி தனியாக எழுதுகிறேன். சில தலைப்புகளை ஆங்கிலத்தல் திருமூலர் பாடல்களுடன் சேர்த்து எழுதுகிறேன். Finito.

–சுபம்—

Tags- நாஸ்தீகர்களுக்கு, திருமூலர், எச்சரிக்கை, திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை ,நிறைவு, Part 50 நாத்திகம் பூனை, கிளி ,

உங்கள் குழந்தைகளை சாதனையாளர் ஆக்குவது எப்படி?(Post.13,645)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.645

Date uploaded in London – 9 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

உங்கள் குழந்தைகளை சாதனையாளர் ஆக்குவது எப்படி? 

ச. நாகராஜன் 

இளம் தாய்மார்களும் நடுத்தர வயது பெண்மணிகளும் தங்கள் குழந்தைகளையும் கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியரையும்,, ‘படம் வரையாதே, கதை கேட்காதே! டி.வி. பார்க்காதே, படி, படித்து முன்னேறு’ என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருப்பதால் குழந்தைகளை எரிச்சலடையச் செய்வதுடன் அவர்களே தங்கள் குழந்தைகளின் வளமான எதிர்காலத்தைத் தடுப்பதை அறியாமல் இருக்கிறார்கள்!

கற்பனை என்பது அற்புதமான ஒன்று! இளம் வயதிலேயே அவர்கள் போக்கில் மனச் சித்திரங்களை உருவாக்க விட்டுவிட்டால் அவர்கள் சிறந்த சாதனையாளர்களாக பிற்காலத்தில் உருவாவதோடு வகுப்பில் முதன்மை பெற்றவராகவும் வருவார்கள் என்பது கிரியேடிவிடி பற்றிய அறிவியல் ஆய்வுகளின் முடிவு!

பேப்பரையும், வண்ணத்தூரிகையையும், வண்ணங்களையும் தந்து குழந்தைகளை அவர்களின் படைப்புலகில் விட்டுவிட்டு அகன்று விட வேண்டும். நிஜத்தில் நாம் பார்க்கும் உருவங்களையும், விலங்குகளையும் போடுமாறு அவர்களை வற்புறுத்தக் கூடாது. தங்கள் கற்பனைக்கேற்ப உருவங்களையும், இயற்கைக் காட்சிகளையும் வரையும் அவர்கள் பிற்காலத்தில் பல்வேறு நிஜங்களைப் பார்க்கும் போது தங்கள் அனுபவத்தில் மெருகேற்றிக் கொள்வார்கள்.

‘கதை சொல்வது’ என்பது படைப்பாற்றலை மேம்படுத்தும் ஒரு அற்புத உத்தி! பல்வேறு நாடுகளுக்குச் சென்ற வீரர்களைப் பற்றிய வரலாறுகள்

எல்லா நாகரிகங்களிலும் உண்டு. அர்ஜுனனின் யாத்திரை, கலிவரின் யாத்திரை என கற்பனையைத் தூண்டிவிடும் வரலாறுகள் நூற்றுக் கணக்கில் இருக்கின்றன. மகாபாரதமும் ராமாயணமும் சுட்டிக் காட்டாத கற்பனையே இருக்க முடியாது!

அதேபோல ‘தொல்லைக்காட்சி’ என்று செல்லமாகத் திட்டப்படும் தொலைக்காட்சியில் விலங்குகள் பற்றியும், பல்வேறு நாகரிகங்கள், கண்டுபிடிப்புகள் பற்றியும் காண்பிக்கப்படும் டிஸ்கவரி சானல் நிகழ்ச்சிகளை, சீரியலை ஒதுக்கிவிட்டு குழந்தைகளுக்குப் போட்டுக் காண்பிக்க வேண்டும். திரைப்படங்களிலும் சாகஸம், துணிச்சலைக் காட்டும் அற்புதப் படங்கள் ஏராளம் உள்ளன. அவற்றைப் பார்க்க குழந்தைகளைத் தூண்ட வேண்டும்.

எந்த ஒரு தீமையிலும் ஒரு நன்மை இருக்கும். அதைக் கண்டு அதில் குழந்தைகளை ஈடுபடுத்தி விடலாம். தாழ்வு மனப்பான்மையை அகற்றி சாதனையாளர்களாகத் தங்கள் குழந்தைகளை உருவாக்குவது இளம் தாய்மார்களின் கையிலேயே உள்ளது.

கிரியேடிவிடி எனப்படும் படைப்பாற்றலையும், கல்வியையும் பற்றி ஆய்வு செய்துள்ள ஆய்வாளர்கள் சாண்ட்ரா டபிள்யூ ரஸ் மற்றும் ஜனஸ் சால்க் ஆகியோர் “குழந்தைகளின் கற்பனையும், அவர்களின் மனச் சித்திரங்களுமே அவர்களின் வருங்காலத்தை நிர்ணயிக்கின்றன” என்கிறார்கள்.

சினேகிதி மாத இதழில் 2005, ஜூன் மாதம் வெளியான கட்டுரை.

****

Shakespeare and the Upanishads: Swami Ranganathananda (Post No.13,644)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,644

Date uploaded in London – 8 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

Swami Ranganathananda (15 December 1908 – 25 April 2005) was a speaker, writer and author of many famous books; he was the president of Sri Ramakrishna Mission. He travelled around the world giving lectures on philosophy.

In his talk on Kena Upanishad he said,

Man in spite of his obvious limitations, thinks too much of the strength and glory, but all this ends in death. If only he knew the One, the source of all strength, glory and excellence in man and nature, how blessed his life would be, and how fearless of death he would become! Life is trivial if it doesn’t overcome death in the knowledge of the deathless Self, the one Self in all.

This echoed in Shakespeare in his Measure for Measure (II.ii.119-24)

 But man, proud man,
 Dressed in a little brief authority,
 Most ignorant of what he’s most assured,
 His glassy essence, like an angry ape
150 Plays such fantastic tricks before high heaven
 As makes the angels weep, 

In moments of deep thoughtfulness, man feels within himself the presence of a power greater than his given self. He then learns to feel humility and to experience an elevation of spirit in that humility.

****

In his talk on Isa Upanishad he said,

Here is another beautiful epithet of the Atman (aatman): Kavih, the poet, the seer. He is the great poet, and the world is his poem, coming out in rhymes and verses. The word Kavih, poet, means not only one who composes verses, but one who is far seeing-kraanta darsi- as Sankaracharya puts it, one who has insight and can see and grasp the inner significance of things. The great poets of the world share this virtue with the Atman. Poetry brings a message from the heart of nature. What to the prosaic and humdrum mind may seem ordinary and insignificant, to the poet will be charged with meaning and significance. This thought has been neatly expressed in an English verse depicting the poetic vision of Shakespeare:

The poem hangs on the berry bush

When comes the poet’s eye;

The street begins to masquerade

When Shakespeare passes by.

Every act, every experience, every situation is full of poetic suggestion to a poet; his sensitive mind sees meaning and significance in them. There is no event or thing in nature which does not ensoul the Soul of the universe; the poet catches the divine pulsations of nature by momentary elevations to kinship with the divine Poet. The ordinary individual, on the contrary, sees only prosaic, discrete facts and events.

****

Fear of death, fear of life, and fear of being reborn, must give way to an all-round fearlessness. Weakness and cowardice are worse deaths than physical deaths. In the words of Shakespeare (Julius Caesar, II. ii. 32-33)

Cowards die many times before their deaths;

The valiant never taste of death but once.

Is there a philosophy which can generate and sustain such a spirit of valour, of heroism, capable of releasing vast stores of human energy? Yes, say the Upanishads; yes says the Gita and yes says Swami Vivekananda. It is the knowledge of the truth of the Atman, the immortal Self of man.

****

In his talk on Katha Upanishad he said,

The mood oof questioning comes to all people at some time or other in their lives. But the mood doesn’t stay; the pressures of external life drive it away and man continues his humdrum existence shut from the knowledge of the mystery which alone readers life meaningful and worthwhile. But if the mood stays, man becomes philosophical; he achieves spiritual depth. If it is not properly handled, however, the mood will make man pessimistic and apathetic and rob him of all zest in life. He will become in the words of Shakespeare ‘sicklied over with the pale cast of thought; from the thoughtless and shallow of optimism of worldliness, he will swing to the opposite extreme of the sickly pessimism of otherworldliness.

–subham—

 Tags- Shakespeare ,the Upanishads, Swami Ranganathananda, talks, Kena, Katha, Isa, Julius Caesar, , Measure for Measure

விசித்திர கோவில்! ஒரு புறம் பெருமாள் !மறுபுறம் மோகினி! –Part 30 (Post.13,643)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,643

Date uploaded in London – 8 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

ஜகன்மோகினி  கேசவர் கோவில்:  ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்—Part 30

விசித்திர கோவில்! ஒரு புறம் பெருமாள்! மறுபுறம் மோகினி! ஜகன்மோகினி  கேசவர் கோவில்:  ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்-30

ஆந்திரப் பிரதேசத்தில் ராஜ மஹேந்திரபுரம் /ராஜமுந்திரி அருகிலுள்ள ரயலி மஹாவிஷ்ணு-ஜகன்மோகினி கோவில் ஒரு விசித்திரமான– வேறு எங்கும் இல்லாத புதுமையான— கருங்கல் சிற்பம் உடைய கோவில் ஆகும் .

எங்கே உள்ளது?

ரயலி மஹாவிஷ்ணு-ஜகன்மோகினி கோவில்

ராஜமஹேந்திரபுரத்திலிருந்து 40 கி.மீ.

காகிநாடாவிலிருந்து 74 கி.மீ.

அமலாபுரத்திலிருந்து 34 கி.மீ.

கிழக்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள இந்த ஸ்தலம் கோதாவரி நதியின் உபநதிகளான வசிஷ்ட ஆற்றுக்குக்கும் ,கெளதமி ஆற்றுக்கும் இடையே இருக்கிறது.

என்ன அதிசயம் ?

கருங்கல்லிலான சிலையில் ஒரு புறம் மஹாவிஷ்ணுவும்/கேசவ சுவாமி,  மறுபுறம் ஜகன்மோகினியும் இருப்பது ஒரு அற்புதம் ஆகும். அதில் சிற்பியின் மகத்தான கைவண்ணத்தைக் காணலாம். சிலை மிகவும் பெரியது  சுமார் இரண்டு மீட்டர் உயரம் ! ஐந்து அடி உயரம் , மூன்று அடி அகலம்!

ஆணும் பெண்ணும் ஒரே கல்லில் எதிர் எதிர் புறம் இருக்கின்றன.

சங்கரநாராயணர், அர்த்த நாரீ ஸ்வரர் போன்ற சிலைகளில் ஒரே புறத்தில் ஆண் பெண் உருவங்கள் இருக்கும். இது அப்படியல்ல.

ஏன் இந்த வடிவம்?

தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்த கதை தெரியாத இந்து இல்லை.அப்போது அசுரர்களை ஏமாற்ற மஹாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். அவர் எடுத்த ஒரே பெண் வடிவ அவதாரம் மோகினி. அசுரர்கள் காம வயப்பட்டு அமிர்தத்தை இழந்தனர். சிவனை ஏமாற்றிய பஸ்மாசுரனை , மோகினி தனது தந்திரத்தால் அழித்தாள் ; சிவனுக்கு மோகினி மேல் காதல் ஏற்படவே ஐயப்பன் /சாஸ்தா பிறந்தார் . அந்த மோகினி இங்கே ஒரே கல்லிலான தத்ரூப சிற்ப  வடிவத்தில் உள்ளார்.

விக்ரமதேவன் என்ற மன்னர் கனவில் , விஷ்ணு வேண்டிக்கொண்டதன் பேரில் இங்கே கோவில் கட்டப்பட்டது . சிலையும், கனவில் கண்டபடி பூமிக்கு அடியிலிருந்து கிடைத்ததாக தல வரலாறு மொழிகிறது.

சிலையின் அழகு

கேசவ சுவாமி என்னும் மஹா விஷ்ணு நான்கு கைகளுடன் காட்சி தருகிறார். சங்கு சக்கரம் இரண்டு கைகளில்; மந்தர மலையும் கதையும் மேலும் இரண்டு கைகளில். .

சிலையின் மறுபுறத்தில் மோகினியின் உருவம் பெண்களுக்கே உரித்தான முடி அழகுடன் உள்ளார்

கேசவரைச் சுற்றி நாரதர், தும்புரு, கின்னர தேவர்கள், ஆதி சேஷன் ஸ்ரீதேவி பூதேவி உருவங்களையும் காணலாம்.

மேலும் ஒரு சிறப்பு

பெருமாளின் பாதங்களிலிருந்து எப்போதும் தீர்த்தம் வருகிறது. இதை கங்கை ஜலம் போல் புனிதமாகக் கருதி பகதர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

கோவிலுக்குப் பழமையான வரலாறு இல்லை; சிலநூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழும்பிய கோவில் இது. 11ஆம் நூற்றா ண்டுக்குக் பின்னர் எழுந்த கோவில்; பழைய கோவில் இருந்த இடத்தில் புதிய கோவில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது.

திருவிழாக்கள்

மார்ச்/ஏப்ரல் மாதத்தில் கல்யாண உற்சவம், இதே போல வெவ்வேறு மாதங்களில் மேலும் இரண்டு கல்யாண உற்சவம்; கிருஷ்ணன் பிறப்பு, பீஷ்ம ஏகாதசி, கார்த்திகை மாத க்ஷீராப்தி த்வாதசி , நவராத்ரி

SRI JAGANMOHINI KESAVA & GOPALA SWAMY TEMPLE, RYALI

Executive Officer,

Sri Jaganmohini Kesava & Gopala Swamy Temple,

Samalkota

East Godavari District, AP

***

எதிரே சிவன் கோவில்

உமா கமண்டலேஸ்வர  கோவில்

ஜகன் மோகினி  கோவிலுக்கு எதிரே சிவலிங்கம் காட்சி தரும் உமா கமண்டலேஸ்வர கோவில் இருக்கிறது.

கமண்டலத்துடன் சிவலிங்கத்தை பிரம்மா பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம். இங்கும் சிவலிங்கம் மீது தண்ணீர் அபிஷேகம் செய்தவாறு இருக்கிறது. ஒரு காலத்தில் காடுகளாக இருந்த இடத்தில் இந்தக் கோவில்கள் தோன்றியுள்ளன. அதில் கடவுள் மீதோ அல்லது பாதங்களிலிருந்தோ தீர்த்தம் வரும்படி செய்தது சிற்பிகளின் சிறப்பு, அவ்வாறு வரும் தண்ணீர் தேஙகாது மறைவதும் குறிப்பிடத்தக்கது.

–subham—

Tags- ரயலி , உமா கமண்டலேஸ்வர கோவில், விசித்திர கோவில், ஒரு புறம் பெருமாள் மறுபுறம் மோகினி, ஜகன்மோகினி கேசவர் கோவில், ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள்–30 ,

மௌனம் தரும் உடல் ஆரோக்கியமும், உள்ள ஆரோக்கியமும்! (Post.13,642)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.642

Date uploaded in London – 8 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

ஆகஸ்ட் 2024 ஹெல்த்கேர் மாத இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

திருநெல்வேலியிருந்து மாதந்தோறும் வெளியாகும் இந்த பத்திரிகையில் ஆரோக்கியம் சம்பந்தமான நல்ல கட்டுரைகள் இடம் பெறுகின்றன. ஆசிரியர் திரு ஆர்.சி.ராஜா. தொடர்புக்கான தொலைபேசி எண் 98431 57363. வருட சந்தா ரூ 180/

மௌனம் தரும் உடல் ஆரோக்கியமும்உள்ள ஆரோக்கியமும்!

ச.நாகராஜன்

மௌனத்தினால் ஏற்படும் நன்மைகள்

மௌனமாக இருப்பதன் மூலம் பல நன்மைகளை நாம் பெற முடிகிறது. அவையாவன:

1)      தெளிந்த மனநிலையை எப்போதும் தருகிறது

2)      தன்னை உணர வழி காட்டுகிறது

3)      மூளையை ஊக்குவித்துச் செயலாற்ற உதவுகிறது. மூளையில் நல்ல செல்களை வளர்ச்சி அடையச் செய்வதோடு நினைவாற்றலைக் கூட்டுகிறது.

4)      மனஇறுக்கத்தைப் போக்குகிறது.

5)      முன்னேறவும், வாழ்க்கையில் வெற்றி பெறவும் நம்பிக்கையுடன் செயலாற்றச் செய்கிறது

6)      படைப்பாற்றலை ஊக்குவிக்கிறது

7)      சிந்தனை ஆற்றலை மேம்படுத்தி ஒருமுனைப்புடன் எதையும் கவனிக்குமாறு செய்கிறது.

ஆய்வுகள் தரும் முடிவுகள்

அறிவியல் தரும் ஆய்வு முடிவுகள் சில இதோ:

உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது

ரத்த அழுத்தம் சீராகிறது

இரண்டு நிமிட ஆழ்ந்த மௌனத்திற்குப் பிறகு நல்ல இசையைக் கேட்டவுடன் ஒருவரின் இதயத்துடிப்பும் ரத்த அழுத்தமும் சீராகிறது.

வேகமாகப் பறக்கும் எண்ணங்களை நிறுத்தி ஆக்கபூர்வமாக சிந்தனை செய்ய வழி வகுக்கிறது.

Stress Harmone -ஆன கார்டிஸாலைக் குறைக்கிறது.

தூக்கமின்மை என்ற வியாதியை வராமல் தடுத்து அமைதியாக உறங்க வழி வகுக்கிறது.

மௌனத்தை ஊக்குவிக்க வழிகள்

எப்போதும் அமைதியான இடத்தைத் தேர்ந்தெடுத்து செயல்படுதல்.

வீட்டில் டி.வி., ரேடியோ ஆகியவற்றை மிதமான ஒலியில் கேட்டல். தேவை என்றால் மட்டுமே கேட்டல்.

அனைவரும் எழுந்திருக்கும் முன்னர் சற்று முன்னதாக வீட்டில் எழுந்திருத்தல்.

காதில் இயர் போனை மாட்டிக் கொண்டே இருப்பதைத் தவிர்த்தல்.

கொஞ்சம் கொஞ்சமாக மௌனமாக இருக்கும் நேரத்தைக் கூட்டுதல்’

மௌன விரதம்

மௌனமாக இருப்பதை எல்லா மதங்களும் ஊக்குவிக்கின்றன. இந்து மதத்தில் மௌன விரதம் ஒரு ஆன்மீக நெறியாகவே சொல்லப்படுகிறது.

தக்ஷிணாமூர்த்தி மௌனத்தினாலேயே அனைத்தையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோருக்கு விரித்து விளக்கினார் என்பதை அறிகிறோம். (குரோஸ்து மௌனம் வியாக்யானம்)

மௌனம் சக்தி வாய்ந்த விளக்கமாகும்.

கீதையில் மௌனம் வலியுறுத்தப்படுகிறது (அத் 17 ஸ்லோகம் 16)

மந: ப்ரஸாதஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்ரஹ: பாவஸம்ஸு²த்திரித்யேதத்தபோ மாநஸமுச்யதே ||

மன மகிழ்ச்சிஅமைதி,மௌனம்,தன்னைக் கட்டுதல்எண்ணத் தூய்மை ஆகிய இவை மனத் தவமெனப்படும்

சாணக்கியர்  தனது சாணக்ய நீதியில் எந்த ஒரு மனிதன் ஒவ்வொரு நாளும் மௌனத்தை அனுஷ்டிக்கிறானோ எவன் ஒருவன் இப்படி ஒரு வருடம் தொடர்ந்து செய்கிறானோ அவன் ஆயிரம் வருட காலம் சொர்க்கத்தில் போற்றப்படுவான் என்கிறார்.

மௌனத்தை விட அதிகப் பயன் தருமானால் மட்டுமே நீ பேசலாம் என்பது அருமையான ஒரு பழமொழி.

ஜைனம் போற்றும் மௌனம்

ஜைன மதத்தில் பெரியோர்கள் ஐந்து மஹாவிரதங்களையும் சாமான்யர்கள் ஐந்து அணுவிரதங்களையும் அனுஷ்டிக்கின்றனர். இதில்  உபவாசமும் மௌனவிரதமும் வலியுறுத்தப்படுகிறது. மார்கழி மாதம் மௌன ஏகாதசி என்ற நாளில் முழு நாளையும் மௌன விரத நாளாக அனைத்து ஜைனர்களும் அனுஷ்டிக்கின்றனர்.

மௌனத்தினால் வார்த்தைகள் அளந்து பேசப்படும் பழக்கம் ஏற்படுகிறது. ஆகவே நாளடைவில் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் ஒருவருக்கும் தீங்கு ஏற்படாதபடி நலனுக்காகவே வெளிப்படுவதாக ஆகிறது.

ஜென் குட்டிக் கதை

ஒரு ஜென் குட்டிக்கதை உண்டு.

ஜப்பானில் கியோஷி என்ற ஒரு சீடர் மலை ஒன்றின் உச்சியில் வசித்து வந்த ஹோஷின் என்ற ஒரு ஜென் மாஸ்டரை அணுகினார். தனக்கு உபதேசம் செய்யுமாறு அவர் மாஸ்டரைக் கேட்க மாஸ்டர் அவர் கண்களையே உற்று நோக்கினார். பின்னர்  தரையில் இருந்த ஒரு கல்லை ஒரு தட்டு தட்டினார். இது எழுப்பும் ஒலியைக் கேட்டாயா? என்றார் அவர். ஆம் கேட்டேன் என்றார் கியோஷி.

இப்போது மௌனத்தின் மொழியைக் கேள் என்றார் அவர். நாட்கள் ஓடின. மாதங்கள் ஆயின. மௌனம் எழுப்பும் ஒலி பற்றி அவர் சிந்தித்தார்.  நாளடைவில் நுட்பமான மாறுதல்கள் அவர் உடலிலும் உள்ளத்திலும் ஏற்பட ஆரம்பித்தது.  ஒருநாள் அருகிலிருந்த ஆறு ஒன்றில் ஓடும் நீரின் சலசலவென்ற ஓசையை அவர் கேட்டார்.

இயற்கையின் அந்த ஒலியில் அவர் மௌனத்த்தின் மொழியை உணர்ந்தார். அவர் உள்ளத்தில் ஏற்பட்ட அந்த மாறுதல் அவருக்கு ஒரு தெளிவைத் தரவே அனைவரும் அவரை நாடலாயினர்.

ஒரு நாள் கெஞ்சி என்ற ஒரு செல்வந்தர் அவரிடம் வந்து தன் இரு மகன்களும் போடும் சண்டைக்கு ஒரு தீர்வு தருமாறு கேட்டுக் கொண்டார்.

இருவரையும் தன்னிடம் வருமாறு அழைத்த கியோஷி ஒரு ஆற்றங்கரையில் இருவரையும் அமர்த்தினார்.  அங்கு மௌனமாக அமருமாறு அவர் சொல்ல முதலில் தயங்கிய இருவரும் பிறகு அப்படியே அமர்ந்தனர். தெள்ளிய ஆற்று நீர் ஓடிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழிந்தது.

\

பின்னர் இருவரையும் ஒருவரோடு ஒருவர் பேசுமாறு கியோஷி பணித்தார். இப்போது அவர்கள் இருவரும் மற்றவர் கூற்றில் உள்ள உண்மையைத் தெளிவாகக் கண்டனர். உணர்ச்சிகள் தந்த கோபம் போய் உண்மையை அவர்கள் தெளிவாகக் கண்டவுடன் இருவரும் சமாதானமாகப் பேசி சண்டையை முடித்தனர். இந்த அதிசயமான மாறுதலைக் கண்ட செல்வந்தர் கெஞ்சி, தான் என்ன கைம்மாறை  மாஸ்டருக்குச் செய்ய வேண்டுமென்று கேட்டார்.

கியோஷியோ இந்த மௌனத்தின் மஹிமையை உலகெங்கும் பரப்புவதே அவர்கள் தனக்குச் செய்யும் கைம்மாறு என்றார்.

அவர்களும் அப்படியே செய்ய ஆரம்பித்தனர். கியோஷியின் இறுதி நாளில் அவர் மரணப் படுக்கையில் இருந்த போது அவரது இறுதி உபதேசத்தை அருளுமாறு அனைவரும் கேட்க அவர், “மௌனம் தரும் ஒலியைக் கேளுங்கள்; பிரபஞ்சத்தின் அறிவை அறிவீர்கள்” என்றார்.

புத்தரின் அருளுரை

புத்தர் ஒரு பௌர்ணமி அன்று பூரண ஞானம் பெற்ற நிலையில் அவர் மௌன நிலையை அடைந்தார்.  அனைத்து தேவதைகளும் அவரை அணுகி அருளுரை தருமாறு வேண்டின.

“அறிந்தவர்கள் ஏற்கனவே அறிந்து விட்டார்கள். அறியாதவர்கள் என் வார்த்தையினால் பயனடைய மாட்டார்கள். எங்கு சொற்கள் முடிகின்றனவோ அங்கு ஞானம் பிறக்கிறது” என்றார் அவர்.

உடனே தேவதைகள், “அது சரிதான். ஆனால் அறிந்தும் அறியாமலும் இடைப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு நீங்கள் உபதேச உரைகளை அருளுங்கள். அதுவே மௌனத்தின் பெருமையை அவர்களை உணரவைக்கும்“ என்றன. உடனே புத்தர் பேச ஆரம்பித்தார். அவர் பேசிய சொற்கள் மௌன நிலையை அடைவதற்கான உரைகளாக அமைந்தன.

அருளாளர்கள் போற்றும் மொழி

ஸ்வாமி விவேகானந்தர், மஹரிஷி அரவிந்தர் ஆகியோர் நீண்ட மௌன விரதத்தை அனுஷ்டித்து பெரும் ஆற்றலைப் பெற்று உலகத்திற்கு நல்கினர்.

ரமணரின் ஆற்றல்

மௌனத்தின் எல்லையற்ற ஆற்றலை உணர்த்தியவர் பகவான் ரமண மஹரிஷி. மௌனத்திற்குள் பிரபஞ்சமே அடங்கி இருக்கிறது என்றார் அவர். இதை அவர் நிரூபித்தும் வந்தார். அவரிடம் சந்தேக விளக்கம் பெற விரும்பி வருவோர் அவர் முன் அமர்ந்து தான் கேட்க விரும்பிய கேள்விகளை நினைத்தவுடனேயே, அதற்கான சரியான பதில்களை அவர்கள் உள்ளத்தில் உடனடியாகப் பெறுவது வழக்கம். இந்த அனுபவத்தைப் பலரும் குறிப்பிட்டிருக்கின்றனர்.

காந்திஜியின் மௌன விரதம்

மகாத்மா காந்திஜியும் கூட  மௌன விரதத்தை அடிக்கடி மேற்கொண்டார்.

தனக்கு ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வுகள் மௌன விரதத்தினாலேயே தனக்குக் கிடைக்கின்றன என்றார் அவர். தனது சுயசரிதத்தில் அவர் மௌனம் பற்றி நிறையவே எழுதி இருக்கிறார்.

மௌனம் என்பது வாழ்க்கை முறை

மௌனம் சர்வார்த்த சாதகம் (மௌனம் அனைத்தையும் சாதகமாக்க வல்லது) என்று பஞ்சதந்திரம் கூறுவது சத்தியமான மொழியாகும்.

வெறும் சொல்லடுக்குகளுக்கும் ஓசைக்கும் அப்பாற்பட்டது மௌனம். அது ஒரு வாழ்க்கை முறை. அதை நடைமுறைப்படுத்தும் போது நாம் அடையும் பேறை சொல்லாலும் ஓசையாலும் விளக்க முடியாது!

***

தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்-குடிபோதை – 1 (Post.13,641)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,641

Date uploaded in London – 7 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

சான்றோர்கள், ஆன்றோர்கள் ஒரே மாதிரி சிந்திப்போப்பார்கள் என்பது முது மொழி; அது மட்டுமல்ல உண்மைக் கவிஞர்களுக்கு – உள்ளத்தில் ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளிஉண்டாகும் என்பது பாரதியார் கண்ட உண்மை ;இதை அவரது பாடல்களிலும் வள்ளுவன் குறளிலும் , கம்பன் கவிதையிலும்; ரிக் வேத முனிவர்கள் வாக்கினிலும் காண்கிறோம். ஷேக்ஸ்பியர் நமக்கு 500 ஆண்டுகளுக்கு முன்னர் வளைந்த கவிஞர்; நடக்க ஆசிரியர்; 37 நாடகங்களையும் நூற்றுக்கு மேலாண் அங்ககீழாக் கவிகளையும் இயற்றி இங்கிலாந்தில் இருந்து கொண்டு ஆங்கில மொழியின் புகழைப் பரப்பினார்; நம் நாட்டுக்கு கவிஞர்களையோ ஆளோ அவரை விட பல் நூற்று அல்லது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள். ஆனால் நாம் தமிழ் மொழியையு சம்ஸ்க்ருத மொழியையும் உலகம் முழுதும் பரப்பவில்லை; அதனால் நாம் புகழ் திக்கெட்டும் பரவவில்லை.நிற்க.

 இப்போதாவது அவர் 500 ஆண்டுக்கு முன் செப்பியதை நான் அதற்கு முன்னரே செப்பிவிட்டோம் ன்பதைப் பகர்வோம்; எல்லோருடனும் அதைப் பகிர்வோம் .

 குடி குடியைக் கெடுக்கும் என்பதை எல்லோரும் அறிவர் ; குடி குட்டி இரண்டும் வேண்டாம் என்று வள்ளுவன் சொல்லுவான்; மது, மாது ஆகிய இரண்டும் திருவை நீக்கும்

 இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்

திருநீக்கப் பட்டார் தொடர்பு.–குறள் 920

இருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும்.

For those forsaken, misfortune’s device

Is double faced women, drink and dice-  Kural 920

Or

Prostitutes ,liquor and gambling  are the friends of those who have been forsaken by the Goddess of Wealth (Lakshmi)-920

or

Women of double minds, strong drink, and dice; to these giv’n o’er,

Are those on whom the light of Fortune shines no more.920

****

ஷேக்ஸ்பியர் நாடகங்கள்

And Shakespeare says

“Olivia:   What’s a drunken man like, fool?

Clown:   Like a drowned man, a fool and a mad man: one draught above heat makes him a fool; the second mads him; and a third drowns him.”

– Twelfth Night, or What You Will (1.5.120-124)

“Olivia:   What’s a drunken man like, fool?

Clown:   Like a drowned man, a fool and a mad man: one draught above heat makes him a fool; the second mads him; and a third drowns him.”

– Twelfth Night, or What You Will (1.5.120-124)

ஒலிவியா – முட்டாள் ! குடிகாரன் எப்படிடா இருப்பான் ?

கோமாளி பதில்- மூழ்கிப்போனவன் போல கதைப்பான்; முட்டாள் ; பைத்தியக்கார பயல். ஒரு மொந்தை கூடினால் முட்டாள் ஆகிவிடுவான் ; இன்னும் ஒரு மடக்கு, பைத்தியம் ஆகி விடுவான் மூன்றாவது டோஸ் ; ஆள் முழுகிப்போவான்.

****

கம்ப ராமாயணத்தில் குடித்துக் கெட்டுப்போன சுக்ரீவனும் இதை யே சொல்லி அழுகிறான்

கம்பன் அதை சுக்ரீவன் வாயிலாக கிட்கிந்தாக் காண்டத்தில் வழங்கும் பாங்கு படித்துச் சுவைக்க வேண்டியது.

வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில் கொட்பும்

தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்

கஞ்ச மெல்லணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை

நஞ்சமும் கொல்வதல்லால் நரகினை நல்காதன்றே 

பொருள்:-

குடித்தால் வஞ்சனை,  திருடுதல்,  பொய் கூறல், அறியாமை, மாறான கொள்கை, அடைக்கலம் அடைந்தோரை கைவிடுதல், செருக்கு,  ஆகியன வருத்தும். அதே நேரத்தில் தாமரை மகளும் (லெட்சுமி) நீங்கிவிடுவாள் நஞ்சைச் சாப்பிட்டால் உடல் மட்டும் அழியும். இதுவோ உடலையும் அழித்து ஆளை நரகத்திலும் தள்ளும்.

****

டெம்ப்ஸ்ட் TEMPEST நாடகத்தில் ஏரியல் குடிகார காட்சியை பிரஸ்ஸ்பெரோவிடம் வருணிக்கிறது; குடிகாரர்கள் கைகளால் காற்றினை அடித்து மூச்சு விட்டனர் என்கிறார் ஷேக்ஸ் பி யர்.

 PROSPERO

170   Say again, where didst thou leave these varlets?170. varlets: ruffians, rascals.

      ARIEL

171   I told you, sir, they were red-hot with drinking;

172   So full of valor that they smote the air

173   For breathing in their faces; beat the ground

174   For kissing of their feet; yet always bending

****

ஒதெல்லோ நாடகத்திலும் ஷேக்ஸ்பியர் குடிக்கும் காட்சிகளை வருணிக்கிறார் .

காசியோ சொல்கிறான் நன் குடிகாரன் என்று நினைத்து விடாதீர்கள் ; இதோ பாருங்கள் இது என் வலது கை ;இது என் இட து கை; நன்றாக நிற்கிறேன்; நன றாகப் பேசுகிறேன் ( குடித்தால் இதைச் செய்ய முடியாது என்பது பொருள்)

 காசியோ  Ay, but, by your leave, not before me. The

Lieutenant is to be saved before the Ancient. Let’s

have no more of this. Let’s to our affairs. God

forgive us our sins! Gentlemen, let’s look to our

business. Do not think, gentlemen, I am drunk. This

is my ancient, this is my right hand, and this is my

left. I am not drunk now. I can stand well enough,

and I speak well enough. OTHELLO act II

*****

ஒரு குடிகாரன் எப்படி நடப்பான் என்பதை மீண்டும் வருணிக்கிறார்; உளறுவான்; கிளி போல சொன்னதையே திரும்பிச் சொல்லுவான்; பெரிய பிரசங்கி போல நடிப்பான் ; தன்னுடைய நிழலுடன் (எதிரி என்று நினைத்து)  சண்டை போடுவான் ; ஒதெல்லோ நாடகத்தில் இது போல குடி பற்றி நிறைய வசனங்கள் உள்ளன

 CASIO  I will rather sue to be despised than to deceive

so good a commander with so slight, so drunken,

and so indiscreet an officer. Drunk? And speak

parrot? And squabble? Swagger? Swear? And discourse

fustian with one’s own shadow? O thou

invisible spirit of wine, if thou hast no name to be

known by, let us call thee devil! –OTHELLO ACT II, SCENE III

****

FROM TIRUKKURAL

School girl crying over her drunken dad.

வள்ளுவனோ இதற்காக பத்து குறள்களை ஒதுக்கி எல்லோரையும் எச்சரிக்கிறான்

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி.-923

Even the mother’s face feel painful at the sight of the drunkard’s joy.  How then would the wise look at him ?- 923

Or

The drunkard’s joy is sorrow to his mother’s eyes;

What must it be in presence of the truly wise?.923

XXXX

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.–குறள் 926

The sleeping and the dead  are in no way different; those that drink are always like them that eat poison -926

Or

English Couplet 926:

Sleepers are as the dead, no otherwise they seem;

Who drink intoxicating draughts, they poison quaff, we deem.

XXXX

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்

எண்ணப் படவேண்டா தார்.-922

English Couplet 922:

Drink not inebriating draught. Let him count well the cost.

Who drinks, by drinking, all good men’s esteem is lost.-922

Or

Let none take to the drinking habit, except those who do not value,

Their reputation , and esteem among the righteous – 922

XXXX

ராமநாடக கீர்த்தனையில் அருணாசலக் கவிராயர் இதை அழகாக நாட்டுப்புற மெட்டில் தருகிறார்.

ராம நாடக கீர்த்தனைகள் – அருணாசல கவிராயர்

சுக்கிரீவன் மதுபானத்தை நிந்தித்தல்

கொச்சகம்-1

சாமி இந்தப் படியுரைக்கத் தம்பியும் கிஷ்கிந்தையிற் போய்

ஆமனுமான் தாரையைக் கண்டது சொன்னான் அவராலே

கோமகன் சுக்ரீவன் இளங்குமரன் வரவறிந்து கெட்டேன்

மாமதுஉண் டென்றுரைவான் சொல்லிக் கரைவானே

புன்னாகவராளிராகம்       ;                 அடதாளசாப்பு

பல்லவி

         மதுவே-உன்னாற்கெட்ட திதுவே

அநுபல்லவி

     புதுமை நான்பாவ சுக்கிரீவன் எய்த

     பூமிதந்தானுக்குச் சாமிதுரோகம் செய்த                 (மது)

சரணங்கள்

1. சாமிஎன்றங்கதன் கூவிஎனைத்              தட்ட

     தொட்டதும் விட்டதும் நானறியேன்       முட்ட

  பாமரனாய் உன்னைக் குடித்தேனே          பொட்ட

     பஞ்சமா பாதகன் ஆனேன்கடை          கெட்ட      (மது)

2. பித்தாம் உடம்புக்கு மத்தும்                புறப்படும்

     பெண்என்றும் தாயென்றும் தெரியாம      லேவிடும்

  குத்திரம் ஆம் நரகத்தினி                  லேயிடும்

     குடித்தவன் அடுத்தவன் எடுத்தவனும்      கெடும்      (மது)

3. குன்றாத வாலியை வென்று                பிறந்தேனே

     கோதண்ட தீக்ஷாகுருவாற்              சிறந்தேனே

  ஒன்றா அவன்செய்த நன்றி                துறந்தேனே

     உன்னைக் குடித்தேனே என்னை         மறந்தேனே   (மது)

4. வையகம்தந்து மதிதந்                    தெனையாள

     வைத்தானை எண்ணாமல் வைத்தாய் பழிமூள

  ஐயையோ நான்சொன் காலஞ்சற்      றேநீள

     ஆகாமற் போனேனே ஓகோ சண்டாள               (மது)

ஒருவன் குடித்துவிட்டால் எதிரே உள்ள பெண்கள் எல்லாம் அனுபவிக்க வேண்டிய பொருள் என்று நினைத்து விடுகிறான்.

–subham—

TAGS–தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில், ஷேக்ஸ்பியர், பொன்மொழிகள்- 1, குடி , மது, கள் , கம்பன், சுக்ரீவன், அருணாசல கவிராயர், கம்பன் ஒதெல்லோ, டெம்பஸ்ட் , டவெல்ப்த்  நைட் , நாடகம்

திருமந்திரத்தில் குறளும் கீதையும்;  ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 49 (Post No.13,640)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,640

Date uploaded in London – 7 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

திருமந்திரத்தில் குறளும் கீதையும்

திரு மந்திரத்தில் ஏராளமான பாடல்களில் தமிழ் வேதமான  திருக்குறள் மற்றும்  பகவத் கீதை  கருத்துக்களை திருமூலர் புதைத்து வைத்துள்ளார்; இந்த மூன்று நூல்களையும் கற்றவர்களுக்கு,  உடனே அவைகளை ஒப்பிட்டு மகிழத்  தோன்றும் . ஞேயம் , ஞாதுரு போன்ற சொற்களை நம்ம்மில் பலரும் கேட்டிருக்கமாட்டோம். பகவத் கீதை பயின்றோருக்கு உடனே இவை நினைவுக்கு வரும். திருமூலர் அவைகளை எடுத்தாள்கிறார்.

திருவள்ளுவர் முதல் அருட்பிரகாச வள்ளலார் வரை தங்கள் பாடல்களில் ஸம்ஸ்க்ருத்ச் சொற்களை அள்ளித் தூவி இருக்கின்றனர். ஆகையால் எவரேனும் சம்ஸ்க்ருதம் வேண்டாம் என்று கிளம்பினால் அவர்கள் தெய்வத் தமிழை அழிக்கப் புறப்பட்ட ராட்சதர்கள் , அரக்கர்கள் என்பதை அறிய வேண்டும். இந்த எல்லா நூல்களும் வேதங்களைப் புகழ்ந்து பேசுகின்றன  இந்து மதத்தைக் காப்பாற்ற 3000 திருமந்திரப் பாடல்கள் கூட வேண்டாம். திருக்குறளின் அறத்துப் பாலும் பொருட்பாலும் மட்டுமே போதும் அல்லது பாரதியார் பாடல்கள்  மட்டுமே போதும்.

திருமந்திரத்தில் குறளும் கீதையும் என்ற தலைப்பில் புஸ்தகம் எழுதும் அளவுக்கு விஷயங்கள் இருப்பதால் பாடல் எண்களை மட்டும் கொடுக்கிறேன். ஆன்மீக அன்பர்களும் ஆராய்ச்சியாளர்களும் துருவி ஆராயலாம் .:-

திருக்குறள் ஒப்பீடு : 390, 429, 536, 484, 514, 568, 177, 983, 2046, 2264, 2119, 2265, 2409, 2219, 2996, 2397, 2409, 2400, 2279, 2071, 1985, 1996, 1839, 1754, 1437, 1103,

பகவத் கீதை ஒப்பீடு :528, 688, 876, 1439, 1449, 1611, 1603, 1629, 2927, 2167, 2292/93, 2299, 2277, 2285, , 2536, 2598, 177, 2264, 2119,2265, 2188, 2953, 2821, 2409,

ஆதி சங்கரர் பாடல்கள் ஒப்பீடு :422, 425, 433, 428, 2274, 527, 547, 2472, 2052, 2156, 2203, 2209, 2998, 2454, 2270, 2250/51, 1965, 970, 1503,

பாரதியார் பாடல் ஒப்பீடு: 2152

மாணிக்கவாசகர் தாக்கம்- 2762, 2715, 2697, 2531, 241, 2103, 2025/26, 1812, 1882, 181, 1747/56, 1665, 1580, 1310, 1055, 893,

மாணிக்கவாசகரின் காலம், திருமூலருக்கு முற்பட்டது. பிள்ளையார், சிவலிங்கம் போன்ற குறிப்புகள் திருமந்திரத்தில் அதிகம்; திருவாசகத்தில் அவை இல்லை. மாணிக்க என்ற சொல்லை  பல இடங்களில் திருமூலர் பயன்படுத்துவதும் ஆராய்ச்சிக்குரியது

திருப்பாவை தாக்கங்கள் –594, 806, 2316, 2893

இன்னும் நிறைய உள ; இவை மாதிரிக்கு மட்டுமே.

பயன்படுத்திய நூல் -தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்ட திருமந்திரம் .

*****

ஒரு சில எடுத்துக்காட்டுகள்

ஆறாம் தந்திரம் திருமந்திரம்

3. ஞாதுரு ஞான ஞேயம்

ஞேயம் ஞாத்ரு

ஞாதுரு = காண்பவன் => ஆன்மா / சீவன்

ஞானம் = பெறும் அறிவு => சிவ ஞானம்

ஞேயம் = காணப்படும் பொருள் => சிவம்.

ஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்

ஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்

ஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்

ஆயத்தின் நின்ற அறிவறி வாறே.

(ப. இ.) திருவருள் துணையால் ஞேயமாகிய திருவடிப்பேற்றில் உறைந்து நின்றோர்க்கு, முற்றுணர்வாகிய சிவஞான முதலியன நிலை பெறும்.. ஆண்டவனை அடையும் நன்னெறியினைப்பற்றி வாழும் அறிவினை நல்கும் வாயிலினைப் பயப்பதாகும் அவ் வறிவுடையவரே சிறந்த நிறைந்த அறிவராவர்.

(அ. சி.) ஞேயத்தே நின்றோர்க்கு – மெய்ப்பொருளை ஆராய்வோர்க்கு. ஞேயத்தின்….வீடாகும் – மெய்ப்பொருளை அறிந்த ஆன்மாவின் அறிவே முத்தியைப் பயக்க உதவியாகும்.

ஞேயம் ஞாதுரு

1587. மேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி

பாலித்த முத்திரை பற்றும் பரஞானி

ஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற

மூலச் சொரூபன் மொழிஞா துருவனே.

(ப. இ.) முன் ஓதிய காண்பன், காட்சி, காட்சிப்பொருள் என்னும் மூன்றும் திருவருட் பொறிச்சிறப்பால் உள்ளங்கொள்கின்ற சிறந்த மெய்யுணர்வுடையோன் சிவபெருமான் புரிந்தருளும் திருக்கூத்தினைத் திருவருட்கண்ணாற் கண்டு அம் மெய்ப்பொருளின் திருவடியிற் புகுவன்,

2340, 2341 பாடல்களையும் காண்க

*****

பகவத் கீதையில் இவை முதலில் வந்தன:

अर्जुन उवाच
प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रज्ञमेव च |
एतद्वेदितुमिच्छामि ज्ञानं ज्ञेयं च केशव || 13-1

அர்ஜுந உவாச
ப்ரக்ருதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச |
ஏதத்³வேதி³துமிச்சா²மி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஸ²வ ||

அர்ஜுந உவாச கேஸ²வ = அர்ஜுனன் சொல்லுகின்றான், கேசவா
ப்ரக்ருதிம் புருஷம் க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞ ச = பிரகிருதி, புருஷன், க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன்
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஏவ ச = ஞானம், ஞேயம் என்னும்
ஏதத் வேதி³தும் = இவற்றை அறிய
இச்சா²மி = விரும்புகிறேன்

अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम् ।
भूतभर्तृ च तज्ज्ञेयं ग्रसिष्णु प्रभविष्णु च ॥१३- १६॥

அவிப⁴க்தம் ச பூ⁴தேஷு விப⁴க்தமிவ ச ஸ்தி²தம் |
பூ⁴தப⁴ர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்³ரஸிஷ்ணு ப்ரப⁴விஷ்ணு ச || 13- 16||

ஜ்ஞேயம் தத் = அறியத் தக்க அது (பிரம்மம்)
பூ⁴தேஷு அவிப⁴க்தம் ச = உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல்
விப⁴க்தம் இவ ச ஸ்தி²தம் = பிரிவுபட்டதுபோல் நிற்பது.
பூ⁴தப⁴ர்த்ரு = பூதங்களைத் தாங்குவது
ச க்³ரஸிஷ்ணு = அவற்றை உண்பது
ச ப்ரப⁴விஷ்ணு = பிறப்பிப்பது

உயிர்களில் பிரிவுபட்டு நில்லாமல் பிரிவுபட்டதுபோல் நிற்பது. அதுவே பூதங்களைத் தாங்குவது என்றறி; அவற்றை உண்பது, பிறப்பிப்பது.

****

நான் 1994-ம் ஆண்டில் படித்தபோது எடுத்து எழுதிய குறிப்புகளே இதுவரை எழுத உதவின. ஆராய்ச்சிக்கு எல்லையே இல்லை; எவ்வளவோ மந்திர,,தந்திர, எந்திரங்களை திருமூலர் குறிப்பிடுகிறார். அவைகளை உண்மையில் செய்வோர் இன்றும் இருப்பார்கள்; அவர்கள் அவைகளை விளக்குவதே முறை. எடுத்துக்காட்டாக அஷ்டமாசித்திகள், குண்டலினி சக்தி பற்றி எவர் வேண்டுமானாலும் எழுதலாம். அவைகளைச்  செய்யும் சக்தி படைத்தவர்கள் இருந்தால்தான் நாம் அதுபற்றிப் பேசலாம். அதுவரை அவைகள் பற்றிப் பெருமையாகப் பேசுவதில் பொருளே இல்லை.

அடுத்த கட்டுரையில் நிறைவு செய்வோம்!

–subham—

tags- ஞாதுரு, ஞானம், ஞேயம் திருமந்திரத்தில், குறளும் கீதையும் , திருக்குறள் ,பகவத் கீதை, திருமூலர், ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 49

குழந்தைகளும் ‘பெரிய யோசனை’  சொல்வார்கள்! (Post No.13,639)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.639

Date uploaded in London – 7 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

குழந்தைகளும் பெரிய யோசனை’ சொல்வார்கள்! 

ச. நாகராஜன் 

‘ஜர்னல் ஆஃப் கிரியேடிவ் பிஹேவியர்’ என்ற பத்திரிகை படைப்பாற்றலை, பயிற்சியினால் மேம்படுத்த முடியும் என்று தெரிவிக்கிறது. அறிவியல் பூர்வமாக 170 உத்திகள் படைப்பாற்றலை மேம்படுத்த உள்ளன என்கிறது அது!

இந்த உத்தியில் ஒன்று ‘ஐடியா ஜெனரேஷன் டெக்னிக்’ எனப்படும் புதிய யோசனையை உருவாக்குவது! இதை உங்கள் வீட்டுக் குழந்தைகள் செய்ய முடியும் என்று சொன்னால் ஏளனப் புன்னகை பலருக்குத் தோன்றினாலும் தோன்றக் கூடும்! ஆனால் ஸ்வீடன் நாட்டுக் குழந்தைகள் வாங்கிய மழைக்காடுகள் பற்றிய உண்மைச் சம்பவத்தைக் கேட்டால் ‘அட, அப்படியா’ என்று ஆச்சரியப்படுவீர்கள்.

ஸ்வீடன் கிராமப்புறப் பள்ளி ஒன்றில் ஒரு ஆசிரியை! அவர் பெயர் ஈனா கெர்ன்.  ஒரு நாள் பாடம் நடத்துகையில் தென் துருவப் பகுதியில் ரெய்ன் ஃபாரஸ்ட் எனப்படும் மழைக்காடுகள் அழிந்து வருகின்றன என்று கூறிய கெர்ன் அதனால் சின்னச் சின்ன மிருகங்கள் முற்றிலுமாக அழிந்து வருகின்றன என்றார். வகுப்பறையில் இருந்த அனேகம் குழந்தைகள் நாய், பூனை போன்ற வளர்ப்பு மிருகங்களை வளர்த்து வந்ததால் பெரிதும் கவலையுற்றனர். ‘மழைக்காடுகள் என்றால் என்ன? அதை நாங்கள் பார்க்க வேண்டும்’ என்று குழந்தைகள் அடம் பிடித்தனர்!

‘பெரியவர்களானவுடன் நீங்களே அதைப் பார்க்கலாம்” என்று கெர்ன் கூறிய போது, “அதற்குள் மிருகங்கள் இறந்து விடும் என்கிறீர்களே” என்றனர் குழந்தைகள்.

இந்த நிலையில் தான் ஒரு குழந்தை எழுந்து, “அந்தக் காடுகளை நாமே வாங்கி விட்டால் என்ன? அப்போது அதை யாராலும் அழிக்க விடாமல் செய்யலாமே” என்று கூறியது.

இன்னொரு ஆசிரியையாக இருந்தால் இந்த யோசனையைக் கேட்டு சிரித்து இருப்பார். கெர்ன் அப்படி இல்லை! அவர்களை ஊக்கப்படுத்தினார்.

குழந்தைகள், மழைக்காடுகள் வாங்க எவ்வளவு பணம் வேண்டும், ஒரு இடத்தை வாங்குவது என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்றெல்லாம் கேள்விகள் கேட்கத் தொடங்கினர்! எல்லாவற்றையும் விளக்கினார் கெர்ன்.

எல்லாக் குழந்தைகளும் உற்சாகமாகப் பணியைத் தொடங்கினர். சின்னச் சின்ன எக்ஸிபிஷன்கள், குதிரை ஓட்டம், நாய் ஓட்டப் பந்தயம், முயல்கள் கலந்து கொண்டு தாண்டி ஓடும் ரேஸ் என்று பல சிறுசிறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்து பணம் சேர்க்க ஆரம்பித்தனர். இந்தச் செய்தி மெதுவாக நாடெங்கும் பரவியது. ஸ்வீடனின் அனைத்துப் பள்ளிகளும் இதில் ஈடுபட்டன. ஒரு புதுப்பாடல் உருவாக்கப்பட்டது.

“ஆஹா, அற்புதமான

மழைக்காடுகளே!

நீங்கள் ஏன் அழிய

வேண்டும்?

எல்லா உயிரினங்களுக்கும்

நீங்கள் தேவை

நாங்கள் அழிவைத்

தடுப்போம்!

நீங்கள் துண்டிக்கப்படக்

கூடாது!

எங்களுக்கு நீங்கள் தேவை!

முதலில் ஒரு சிறு பகுதியை மட்டும் வாங்குவதாக இருந்த குழந்தைகள் பல நாடுகளிலிருந்து ஆதரவு குவியவே மழைக்காடுகளையே வாங்குமளவு பணத்தைச் சேர்த்தனர்!

ஸ்வீடன் தேசத்து அரசர் அந்தப் பள்ளிக்கு நேரடியாக வந்து குழந்தைகளைப் பாராட்டினார்!

உங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதைத் தீர்க்க குழந்தைகளிடம் வழி கேளுங்கள் என்கிறார் கெர்ன்!

நாளைக்கு உங்கள் குழந்தை ஒரு யோசனை சொல்லும்போது ஸ்வீடன் தேசத்துச் சம்பவத்தை நினைவில் கொண்டு அதற்குரிய மதிப்பைக் கொடுத்து அதை அமுல்படுத்த முடியுமா என்று பாருங்கள்.

சிறுபிள்ளைத்தனமான யோசனை என்று சொல்வது தான் சிறுபிள்ளைத்தனமானது. 170 படைப்பாற்றல் உத்திகளில் மேம்பட்ட உத்திகளுள் ஒன்று குழந்தைகளின் யோசனை!

**

சினேகிதி மாத இதழில் 2005, ஜூலை மாதம் வெளியான கட்டுரை.