உலகிலேயே அதிசயமான மதம் இந்துமதம்; செலவில்லாமல், எளிதில் பரமபதம்- வைகுண்டம்- கைலாசம் அடைய வழிகளை சொல்லித் தருகிறது.
அருகம் புல் , எருக்கம் பூ, வில்வ இலை , துளசி இலை அல்லது ஏதாவது பூ அல்லது தண்ணீர் இவைகளை கடவுளுக்கு அளித்தால் போதும். பெரிய புண்ணியம் கிடைக்கும்.
பிராமணர்கள் தினமும் மூன்று வேளை வெறும் தண்ணீரைத்தான் இறைவனுக்குக் கொடுக்கிறார்கள். அதுவும் விலை கொடுத்து வாங்கும் பாட்டில் தண்ணீரை அல்ல; எந்த நதி அல்லது குளம் அல்லது கிணற்றடியில் இருக்கிறார்களோ அதையே எடுத்து அப்படியே கொடுப்பதால் செலவே இல்லை.
பகவத் கீதையில் உள்ள இந்த விஷயத்தை சங்க கால பார்ப்பனப் புலவன் கபிலன் அப்படியே புறநானூற்றில் சொன்னான்
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.-– திருமந்திரம்
இறைவனுக்கு எளிமையாகப் பச்சிலை சூட்டி வணங்கினாலே போதும். பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். நாம் உண்ணும்போது உண்கிற உணவில் ஒரு கைப்பிடி எடுத்து பசித்தோருக்குக் கொடுத்தாலும் போதும். இவை அனைத்தையும் விட, யாருக்கும் இன்னுரை சொன்னாலே கூட போதும் என்கிறார் தமிழ்ச் சான்றோரான திருமூலர். எளிமையும் சிரத்தையும் தான் நமது ஹிந்து வாழ்வியல் அறத்தின் அடிப்படைகள்.
xxxx
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன்; பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்!
நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்
நேர்உறக் கண்டுளந் துடித்தேன்;
ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்
சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்!-திருவருட்பா
xxxx
பஞ்சமஹா யக்ஞம்
இந்துக்கள் தினமும் செய்யும் பஞ்ச மஹா யக்ஞத்தில் – ஐவேள்வியில் —
1.பிரம்ம யக்ஞம்/வேதம் ஓதுதல்,
2.தேவ யக்ஞம்/தெய்வங்களுக்குப் பூஜை செய்தல்,
3.மனுஷ யக்ஞம்/ விருந்தினருக்கு சோறிடுதல்,
4.பூத யக்ஞம்/பிராணிகளுக்கு உணவு படைத்தல்,
5.பித்ரு யக்ஞம்/நீத்தாருக்கு நீர்க்கடன் செலுத்தல் என்பன அடக்கம்.
எல்லா இந்துக்களும் பஞ்ச மஹா யக்ஞம் என்னும் ஐந்து வேள்விகளைச் செய்யவேண்டும்.பிராமணர்கள் வேதம் ஓதும் இடத்தில் மற்றவர்கள் தேவாரம், திவ்வியப் பிரபந்தம், திருவாசகம், திருக்குறளை ஓதலாம். வேள்வி என்பது யாகத்தீயில் அவிஸை (நெய்யுடன் கலந்த சோறு) போடுவது மட்டுமல்ல. மனதளவில் பல வேள்விகளைச் செய்யலாம்.
வள்ளுவரும் சொல்லி இருக்கிறார்:—
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை (43)
பொருள்: இறந்து போய் தென் திசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை.
மனு ஸ்மிருதியில் 3-70 –ல் மனு சொன்னதை வள்ளுவரும் சொல்லி இருக்கிறார். ஆகவே இமயம் முதல் குமரி வரை ஒரே கொள்கை இருந்திருக்கிறது. விருந்தாளிகளுக்குச் சாப்பாடு போட்டவுடன் தான் வீட்டிலுள்ளோர் சாப்பிட வேண்டும்.
XXXX
மனு ஸ்ம்ருதி என்ன சொல்கிறது ?
வீட்டில் ஐந்து கொலைக்களங்கள் -மனு ஸ்ம்ருதி
पञ्च सूना गृहस्थस्य चुल्ली पेषण्युपस्करः ।
कण्डनी चौदकुम्भश्च बध्यते यास्तु वाहयन् ॥ 3-६८ ॥
பஞ்ச ஸூனா க்ருஹஸ்தஸ்ய சுல்லீ பேஷன் யுபஸ் கரஹ
கண்டனீ செளத கும்பஸ்ச பத்யதே யாஸ்து வாஹயன் 3-68
இல்லறத்தானுக்கு ஐந்து கொலைக்களங்கள் உள்ளன ; அவையாவன- அடுப்பு, மாவரைக்கும் அம்மி , ஆட்டுரல் உரல் /உலக்கை , அருவா மனை/கத்தி போன்றவை 3-68 மனு
நீங்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உங்களுக்கு உதவ இரண்டு டாக்டர்கள் நிரந்தரமாக உங்கள் கூடவே இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இல்லை?
பிரிட்டனின் ஆன்மீகத் தாத்தா என்று புகழப்படும் ஜார்ஜ் ட்ரெவெல்யன் 1913-ம் ஆண்டு இந்த இரண்டு டாக்டர்களைப் பற்றி இப்படி அறிமுகம் செய்து வைத்தார்:-
“என்னிடம் இரண்டு டாக்டர்கள் இருக்கின்றனர்; என் இடது கால்; என் வலது கால்!”
உடல் ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிப்பதோடு அனைத்து நோய்களையும் தீர்க்கவல்ல நடைப்பயிற்சியை, இந்த இடது கால் மற்றும் வலது கால் டாக்டர்கள் தான் செய்ய முடியும். ஆகவே நீங்கள் உங்கள் இரு டாக்டர்களை தினமும் இயக்க வேண்டும்; மீதியை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்!
தினமும் நடப்பது என்பது ஆயுளைக் கூட்டி, உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கும் ஓர் அற்புதப் பயிற்சி!
‘ஆர்ச்சிவ்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின்’ நடத்திய ஒரு ஆய்வில், உடற்பயிற்சியும் இதய ஆரோக்கியமும் நேரடி சம்பந்தமும் உடையவை என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பதானது, உங்கள் ஆயுலை 1.3 வருடங்களைக் கூட்டுவதோடு, 1.1 வருடங்கள் இதயநோய் இல்லாமல் ஆக்குகிறது.
வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல அமெரிக்கப் பத்திரிகை தனது தலையங்கத்தில் நடைப்பயிற்சியைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து, தினமும் முப்பது நிமிடங்கள் நடந்தால் 1.3 ஆரோக்கிய வருடங்களைப் பெறலாம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது! அதிக ஆற்றலைத் தருவதோடு, ஆழ்ந்த உறக்கத்தையும் நடைப்பயிற்சி உறுதிப்படுத்துகிறது.
தினமும் நடைப்பயிற்சி செய்யும் மாணவன் நன்கு படிப்பதோடு, படித்ததை உடனுக்குடன் நினைவுக்குக் கொண்டு வரும் ஆற்றலையும் பெறுகிறான். எங்கும் வாகனம்; எப்போதும் வாகனம் என்ற இந்த வேகயுகத்தில் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் சென்று அலுவலகம் மற்றும் இதர இடங்களில் அமர்ந்து பணி செய்வோர் தங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் மதிய உணவு இடைவேளையில் ஒரு அரை. மணி நேரம் நிச்சயம் நடக்க வேண்டும்.
வாகனங்களைச் சற்று அதிக தூரத்தில் நிறுத்திவிட்டு, பணியிடங்களுக்கு நடக்கும் வாய்ப்பை இவர்கள் அதிகப்படுத்திக் கொள்ளலாம். லிப்டை உபயோகிக்காமல் படிகளில் ஏறவும், இறங்கவும் செய்யலாம். மாடியில் பணிபுரிவோர் அதே பகுதியில் உள்ள டாய்லெட்டை உபயோகிக்காமல், அடுத்த தளத்தில் உள்ள டாய்லெட்டை உபயோகிக்கும் விதமாகச் சற்று தூரம் நடந்து மாடிப்படிகளில் ஏறலாம், இறங்கலாம்.
இப்படி நடப்பதை சிறு சிறு வழிகள் மூலம் சிரத்தையுடன் மேற்கொண்டால், உடல் எடை அல்லது பருமன் அதிகமாவது தடுக்கப்பட்டு, சரியான எடையுடன் கூடிய அழகிய மேனியை உருவாக்கிக் கொள்ளலாம். அழகிய மேனி உடையவர்கள் அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டு என்றும் இளமையோடு இருக்கலாம். நடப்பதால் உடல் இளைக்கும்; அதிக சுறுசுறுப்படையும்.
அழகிப்போட்டியைச் சற்று நினைத்துக் கொள்ளுங்கள். அதில் வென்றவர்களைச் சற்று கவனியுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த
நடிகர் அல்லது நடிகை உங்களை ஏன் கவர்கிறார் என்பதைச் சற்று சிந்தியுங்கள். அவர்கள் முகமும் அங்க லாவண்யங்களும் ஒருபுறம் இருக்க, அவர்கள் நடக்கும் நடை அழகே, அவர்களது பொலிவை எடுப்பாக எடுத்துக் காட்டுவதை நிச்சயமாக நீங்கள் உணர முடியும்.
அவர்களிடம் உள்ள இரண்டு டாக்டர்களையும் அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தி, ஆடிப்பாடி இடைவிடாது நடைபயின்று உடலை ‘சிக்’கென்று பாதுகாப்பதால், அவர்கள் கவர்ச்சி உடையவர்களாக உங்கள் முன் தோன்றுகிறார்கள்!
தினமும் விடாமல் அரை மணி நேரம் நடப்பதால் கவர்ச்சி, அழகு, ஆரோக்கியம், நீடித்த ஆயுள் நிச்சயம். ஆகவே, உங்களுடன கூடவே இருக்கும் இரண்டு டாக்டர்களை சற்று போற்றி மதியுங்கள்; அதன் மூலம் வலிமை வாய்ந்த உடலுடன் சமுதாயத்தில் மதிப்புடன் வாழுங்கள்!
**
சினேகிதி மாத இதழில் 2007, ஜனவரி மாதம் வெளியான கட்டுரை.
Tirumuar is one of the traditional eighteen Siddhas. He came to Tamil Nadu from the Himalaya region. When he saw the dead body of a cowherd named Mulan (muulan) and the grieving cows around him, he used his magical power and entered the body of the cowherd. The cows were happy now. He sat in meditation and composed 3000 poems and it is known as Tirumanthiram. Saivites who follow the Agamas, never recognised the Siddhas, who were iconoclasts. But Tirumathiram was given a place in the Saivite literature that is made up of 12 sections. And Tirumanthiram forms the Tenth Section.
Periya puranam gives the stories of 63 Saivite saints called Nayanmars (naayanmaars) including the story of Tirumular (muular).
Here are some pictures which illustrate his teachings or his similes:
Charity is Within Reach of All Easy to all to offer in worship a green leaf to the Lord, Easy to all to give a mouthful to the cow, Easy to all to give a handful, sitting down to eat, Easy to all, good, kind words on others to bestow.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.
– திருமந்திரம்
xxxx
Share Your Food With Others
Give freely to all; discriminate not o’er much; See food served to others ere sitting down to eat; Heap not perishing gold, eat not in greedy haste; The crow calls its brood to share its food, howe’er sweet
ஆர்க்கும் இடுமின் அவாவர் என்னன்மின்
பார்த்திருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை உடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே. 1
From Tiru Valluvar to Bharati, all poets insisted that we should share our food. They said that there should not be any starving person on earth. Bhagavad Gita said that one who eats alone is a sinner. Hospitality, that is entertaining the guests, is one of the essential virtues recommended in Hinduism. Valluvar cursed the Creator God Brahma for creating beggars in the world. Greatest of the modern Tamil poets Bharati also said that we will destroy the earth even if there is one beggar on earth. All these came from Panchabhuta Yajna found in Hindu Law Books called Smriti.
For the householder there are five slaughter-houses: the hearth, the grinding-stone, household implements, mortar and pestle and water-jar;—by using which he becomes stricken.—(68)
For the purpose of expiating all these in their course, the five great sacrifices have been ordained by the great sages, for householders (to be performed) daily.—(69)
Teaching is the ‘offering to Brahma;’ the Tarpaṇa is the ‘offering to Pitṛs;’ the Homa is ‘offering to Gods;’ the Bali is ‘offering to elementals;’ and the honouring of Guests is ‘offering to men.’—(70)
Tamil poets always quote the crows to show that no one eats alone.
–Subham—
Tags: Tirumular, Tirumanthiram. Panchamaha Yajnas, Hospitality, Manu Smriti, food for all,Bharati, Valluvar, Learn Tirumanthiram through Pictures- 1
காந்திஜி ஒரு ஹனுமான்: ரமணர்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 8
அநுமன் பற்றி முதலில் ஒரு சுவையான விஷயத்தைக் காண்போம்.காந்திஜியை அனுமானுக்கு உவமித்து ரமணர் சொன்னதை காலஞ்சென்ற பேராசிரியர் கே. சுவாமிநாதன் எழுதுகிறார்
Bhagavan often equated Gandhi with Hanuman, the humble and heroic servant of Sri Rama. He once said: We say that Hanuman is chiranjivi (immortal). It does not mean that a certain monkey goes on living forever and ever. It only means that there will always be on earth someone who serves Rama as your Gandhi does now.
பகவான் ரமணர் அடிக்கடி காந்தியையும் அனுமனையும் ஒப்பிட்டுப் பேசுவார். பணிவும் வீரமும் உடையவன் அனுமன். அனுமான் ஒரு சிரஞ்சீவி — என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்— என்று நாம் சொல்கிறோம் இதன் பொருள் என்ன தெரியுமா? ஏதோ ஒரு குரங்கு எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்று நினைத்துவிடக்கூடாது. இப்போது நாம் காணும் உங்கள் காந்திஜியைப் போல யாரோ ஒருவர் இந்த பூமியில் ராமபிரானுக்கு சேவை செய்து கொண்டிருப்பார் .
xxxx
எனது கருத்து
அஸ்வத்தாமா பலீர் வியாஸோ ஹனுமான் ச விபீஷணஹ
க்ருப பரசுராமஸ் ச சப்த்தை தே சிரஞ்ஜீவினஹ
“Aswathama Balir Vyaso Hanumanash cha Vibhishana Krupacharya cha Parashuramam Saptatah Chirjeevanam”
Which means that Aswathama, King Mahabali, Veda Vyasa, Hanuman , Vibhishana , Krupacharya and Lord Parashuram are death-defying or imperishable personalities.
நல்ல விளக்கம் ! இந்துக்கள் 7 புராண புருஷர்கள் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தினமும் காலையில் ஸ்லோகம் சொல்லுவார்கள்
18. ஈராயிரம் யோசனைக்கு அப்பால் இருந்த சூரியனைத் தங்கள் இனிய பழம் என்று கருதி அதை விழுங்கச் சென்றுவிட்டீர்கள்
19.ராமச்சந்திர பிரபுவின் கணையாழியை — மோதிரத்தை — உங்கள் வாயில் வைத்துக்கொண்டு சமுத்திரத்தை எளிதில் கடந்தத்தில் வியப்பதற்கு ஒன்றுமே இல்லை.
20. உலகத்தில் எவ்வளவு கடினமான காரியங்கள் இருந்தாலும், தங்கள் அருளினால் அவை எளிதாகவே நடந்துவிடுகின்றன.
21. நீங்கள் ராமபிரானின் வாயிற்காப்பாளர்; ராமனுடைய அருளை பெறுவதற்கு முதலில் உங்கள் அருளைப் பெறவேண்டும்
22.தங்களுடைய பாத கமலங்களை யார் வந்து அடைந்தாலும் அவர்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது தாங்கள் எங்களைப் பாதுகாக்கும்போது நாங்கள் எதைக் கண்டு பயப்படவேண்டும்?
xxxx
இதில் துளசிதாஸர் நமக்கு இரண்டு முக்கிய செய்திகளை அளிக்கிறார்; இதை படிப்பதால் என்ன பலன் கிடைக்கும் என்பதைச் சொல்கிறார். 1.அனுமனை நினைத்தால் எல்லா காரியமும் வெற்றி அடையும். 2.அனுமனை வேண்டு வோருக்கு எப்போதும் ஆனந்தம்; துன்பமே இல்லை.
இன்பமே எந்நாளும் துன்பமில்லை — என்ற அப்பர் சுவாமிகளின் தேவார வரிகளை நினைவுபடுத்தும் வரிகள்; அப்பர் சிவனைப் பற்றி இதைச் சொன்னார்; அனுமனும் சிவனின் வடிவம் என்பதை சென்ற இரண்டு கட்டுரைகளில் கண்டோம்.
xxxx
அனுமனும் சூரியனும் ; விஞ்ஞான விளக்கம்
அனுமன் சிறுவயதில் சூரியனை பழம் என்று கருதி விழுங்கப்போனதாகவும் அப்போது இந்திரன் வஜ்ராயுதத்தால் அனுமனைத் தாக்கியதாகவும் , தாடை உடைந்ததால் அவனை ஹனுமான் என்று அழைத்ததாகவும் ஒரு கதை உள்ளது. உண்மையில் இதை விளக்கமாகச் சொல்லும் கதைகளில் ஒரு சூரிய கிரகணத்தின்போது விலங்குகள் எப்படி நடந்து கொள்ளுமோ அந்த வருணனை அப்படியே உள்ளது ஆக அனுமன் காலத்தில் நடந்த சூரிய கிரகணத்தையே இப்படி வருணித்துள்ளனர்; அப்போது நடந்த விபத்தில் அவர்க்குத் தாடையில் சேதம் ஏற்பட்டதே சரியான விளக்கம். ரிக் வேதத்திலும் முழு சூரிய கிரகணத்தை ஒரு அற்புதம் போல வருணித்துள்ளனர். மகாபாரதத்திலும் கிருஷ்ணன் , தனது சு தர்ஸன சக்கரத்தால் சூரியனை மறைத்ததாகச் சொல்வதும் முழு சூரிய கிரகணம் ஆகும்.
அனுமனுக்கு அப்போது எல்லா தெய்வங்களும் வரம் கொடுத்தன
பிரம்மா கொடுத்த வரம் – பிரம்மா வாழும் காலம் வரை நீ வாழ்வாயாகுக.
மஹாவிஷ்ணு – இறைவனின் தொண்டனாக நீ நீடூழி வாழ்க.
இந்திரன் — உன்னை எந்தவித ஆயுதமும் தாக்காது.
அக்கினி — தீயினால் உனக்குத் தீங்கு நேராது.
காலன்/யமன் – உனக்கு மரணம் என்பதே இல்லை;
ஸர்வ தெய்வங்களும் – பலத்திலும் வேகத்திலும் உனக்கு ஈடு இணை எவருக்கும் வராது.
அனுமன் பற்றி இந்தோனேஷிய ராமாயணம் வேறு கதை சொல்லும். சூரியனை விழுங்கச் சென்ற அனுமனை சூரியன் எரித்துச் சாம்பலாக்கியவுடன் அது கடலில் விழுந்ததாம்; அஞ்சனையின் வேண்டுகோளின்படி பின்னர் அவர் உயிர்ப்பிக்கப்பட்டாராம் ; இராமாயண, மஹாபாரதக் கதைகளை நாடகமாகவும், தோல்கூத்து காட்சிகளாகவும் நடிக்கும் தென் கிழக்கு ஆசிய நாட்டு மக்கள், கதையில் திகிலூட்ட இப்படிப் பல புதுமைகளை செய்துள்ளனர் ; இந்தோ னேஷியா ராமாயணத்தின் பெயர் சேரி ராமாயணம் ; சேரி= ஸ்ரீ
அனுமனும் பலமும்
அனுமனின் பெயர் சொன்னாலே பலம் வரும்; இதனால் மகாராஷ்டிரத்தில் குஸ்தி பயிலும் பள்ளிக்கூடங்களில் அனுமன் பெயரில் பஜ்ரங் தளம் என்ற அ மைப்புகள் தோன்றின. அவை முஸ்லீம் படையெடுப்பு, மற்றும் சுதந்திர போராட்ட காலங்களில் இந்துக்களுக்குப் புத்துணர்ச்சியை ஊட்டின. அனுமனுக்கு பஜ்ரங் பலி என்றும் பெயர்.
xxxx
கணையாழி தரிசனம்
கணையாழியை அனுமன் வாயில் கவ்விக்கொண்டு சென்று சீதைக்கு கொடுத்ததை துளசிதாசர் பாடுகிறார். ராமாயணத்தில் இது ஒரு முக்கிய கட்டம்.
தேடிய பொருள்கள் கிடைத்து விடும்; நாடிய பொருள்களை அடைந்துவிடலாம் என்ற உப சகுனம் தெரிவிக்கும் படலம் இது. தென்னிந்தியாவில் அந்த தினம் இதைச் சொல்லும் உபன்யாசகருக்கு மோதிரத்தையும் பரிசாக அளிப்பது சம்பிரதாயம்
சீதைக்கு ராமன் கொடுத்து அனுப்பிய மோதிரத்தை அனுமன் கொடுப்பதை கம்பன் சுந்தர காண்டம் உருக்கா ட்டு படலத்தில் வர்ணிக்கிறான் ;அதைப் படித்தால் கணையாழியின் பெருமை புரியும். இது போல மோதிர உத்தியை, பிற்காலத்தில்காளிதாசன் போன்றோர் நாடகத்தில் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
xxxx
இராமபிரானது திரு ஆழியைப் பெற்ற சீதையின் மகிழ்ச்சி
கம்பராமாயணக் காட்சிகள்:
‘”மீட்டும் உரை வேண்டுவன இல்லை” என, மெய்ப் பேர் தீட்டியது; தீட்ட அரிய செய்கையது; செவ்வே, நீட்டு இது” என, நேர்ந்தனன்’ எனா, நெடிய கையால், காட்டினன் ஓர் ஆழி; அது வாள் நுதலி கண்டாள். 63 ‘
இன்னும் நான் என்ன சொல்வது,
இராமன் நாமம் தீட்டியது, யாராலும்
மீண்டும் செய்ய முடியாத அரியவேலைப்பாடு
நிறைந்தது, உங்களிடம் தரச்சொல்லி,
இராமன் என்னிடம் தந்தது‘
என்று சொன்னான்,
தன் நீண்ட கையால் அந்த மோதிரத்தைக்
காண்பித்தான்,
சீதை தன் கூரிய கண்களைத் திறந்து
அதைக் கண்டாள்.
xxxx
‘பாழிய பணைத் தோள் வீர !
துணை இலேன் பரிவு தீர்த்த
வாழிய வள்ளலே ! யான் மறு
இலா மனத்தேன் என்னின்,
ஊழி ஓர் பகலாய் ஓதும்
யாண்டு எலாம், உலகம் ஏழும்
ஏழும் வீவுற்றஞான்றும்,
இன்று என இருத்தி’ என்றாள்.
‘பருத்த மூங்கில் போன்ற தோள்களையுடைய
வீரனே!
துணையின்றித் தவித்த என் துயர் தீர்த்த
கொடையாளனே, நீ வாழ்க !
நான் களங்கமற்ற மனதுடையவள் என்பது
உண்மையெனின்,
ஒரு யுகத்தை ஒரு பகல் என்று கருதும்
பதினான்கு உலகங்களும் அழியும்
பிரளய காலத்திலும்
இன்று போல் நீ என்றும் இருப்பாயாக‘
என்று ஆசி வழங்கினாள்.
xxxx
இழந்த மணி புற்று அரவு எதிர்ந்தது எனல் ஆனாள்; பழந் தனம் இழந்தன படைத்தவரை ஒத்தாள்; குழந்தையை உயிர்த்த மலடிக்கு உவமை கொண்டாள்; உழந்து விழி பெற்றது ஓர் உயிர்ப் பொறையும் ஒத்தாள். 65
அம்மைக்கு மோதிரம் கிடைத்தது, பாம்பு, தவறவிட்ட மணியைப் பெற்றது போலவும், வறுமையாளன் இழந்த செல்வத்தை மீளப் பெற்றதைப் போலவும், மலடி குழந்தையைப் பெற்றது போலவும், குருடன் விழி பெற்றது போலவும் இருந்தது. பிராட்டியைப் பாம்பு என்று கூறலாமா ? அமுதமான அம்மை தீயர் செய்கையால் நஞ்சு ஆனாள். நஞ்சுதான் அரக்கர் குடிக்கு என்று நங்கையை அவன் தம்பியே சொன்னான் என்று பெரிய திருமொழி பேசும் (பெரிய 10-2-4) வால்மீகம், சீதை மகா சர்ப்பம் போன்றவள். அவள் கவலை கொண்டு முகத்தை வைத்திருக்கும் ஐந்து விரல்களே அதன் ஐந்து தலைகள் என்று பேசும். (கம்ப. 7351) கவிச் சக்கரவர்த்தி, ‘திட்டியின் விடமன கற்பின் செல்வி‘ என்று கும்பகர்ணன் வாயிலாகப் பேசுவான். இங்கு மணியிழந்த நாகம் மீண்டும் மணிபெறும் தன்மைக்கே ஒப்பீடு என்பதை அறிந்தால் சீதை நாகமா என்ற வினாவுக்கே இடம் இல்லை என்பதையும் அறிக.
வாங்கினள் –எடுத்துக்கொண்டாள் (அதை); முலைக் குவையில் வைத்தனள் –தனங்களின் மேலே வைத்துக் கொண்டாள்; சிரத்தால் தாங்கினள் –தலையிலே வைத்துக் கொண்டாள்; மலர்க்கண் மிசை ஒற்றினள் –மலர் போன்ற கண்களில் ஒற்றிக் கொண்டாள்; தடந்தோள் வீ்ங்கினள் –பெரியதோள் பூரித்தாள்; மெலிந்தனள் –இளைத்தாள்; குளிர்ந்தனள் –குளிர்ச்சியடைந்தாள்; வெதுப்போடு ஏங்கினள் – வெப்பத்துடன் ஏக்கமுற்றாள்; உயிர்த்தனள் –பெரு மூச்சு விட்டாள்; இது (பிராட்டியடைந்த) இந்த மெய்ப்பாட்டை; இன்னது எனல் ஆமோ –இன்ன மெய்ப்பாடு என்று கூற முடியுமா.
மோக்கும்; முலை வைத்து உற முயங்கும்; ஒளிர் நல் நீர் நீக்கி, நிறை கண் இணை ததும்ப, நெடு நீளம் நோக்கும்; நுவலக் கருதும், ஒன்றும் நுவல்கில்லாள்; மேக்கு நிமிர் விம்மலள்; விழுங்கலுறுகின்றாள். 67
ஒளிர் நல்நீர் – ஒளிர்கின்ற ஆனந்தக் கண்ணீர்; நிறை கண் இணை ததும்ப- அழகு நிறைந்த இரண்டு கண்களில் ததும்ப; நீக்கி – அதைத்
துடைத்துக்கொண்டு; நெடு நீளம் நோக்கும் – நீ்ண்ட பறவைக் கூட்டைப்
பார்ப்பாள்;நுவலக் கருதும் – (பறவைக் கூட்டால் வந்த நினைவை)
கூறநினைப்பாள்;ஒன்றும் நுவல்கில்லாள் – ஒன்றும் கூற முடியாமல்; மேக்கு
– மிகுதியாக; நிமிர் விம்மிலள் – கிளர்ச்சி பெற்ற அழுகை உடையவளாய்;
விழுங்கல்உறுகின்றாள் – அதை அடக்க முயல்கின்றாள். xxxxx
நீண்ட விழி நேரிழைதன் மின்னின் நிறம் எல்லாம் பூண்டது, ஒளிர் பொன் அனைய பொம்மல் நிறம்; மெய்யே! ஆண்தகைதன் மோதிரம் அடுத்த பொருள் எல்லாம் தீண்டு அளவில், வேதிகை செய் தெய்வ மணிகொல்லோ? 68
நீண்ட கண்களையும் அழகிய ஆபரணங்களையும் உடைய பிராட்டியின் மின்னல் போலப் பசலை படர்ந்த மேனி, முற்றும் விளங்குகின்ற பொன்னை ஒத்த பொலிவுடைய நிறத்தைப் பெற்றது. இந்த மாற்றம் உண்மையே! ஆதலால் ஆடவருள் தலைசிறந்த இராமபிரானின் மோதிரமானது தன்னைச்சார்ந்த எல்லாப் பொருள்களையும் தொட்ட மாத்திரத்தில் பொன்னாக மாற்றுகின்ற தெய்வத்தன்மை பெற்ற ரசக் குளிகையோ? xxxx இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் அருந்தும் அமுது ஆகியது; அறத்தவரை அண்மும் விருந்தும் எனல் ஆகியது; வீயும் உயிர் மீளும் மருந்தும் எனல் ஆகியது; வாழி மணி ஆழி! 69
பசித்தவர்க்கு அமுதமாகவும், அறவோர்க்கு நல்விருந் தாகவும், இறந்த உயிரை மீட்கும் மருந்தாகவும் இம் மணி யாழி உள்ளதே! இது வாழ்க! ‘இருந்து பசியால் இடர் உழந்தவர்கள் எய்தும் அருந்தும் அமுதாகியது; அறத்த ரை அண்மும் விருந்தெனல் ஆகியது; வீயும் உயிர் மீளும் மருந்தும் எனலாகியது; வாழி மணி ஆழி’ (69),
இந்தப் பாடல்கள் கணையாழியின் முக்கியத்துவத்தை நமக்கு நன்கு உணர்த்தும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
14-8-24 மாலைமலர்இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
ஜோதிட மேதை டாக்டர் பி.வி.ராமன் – 2
ச. நாகராஜன்
சீன ஆக்கிரமிப்பு, இந்தியா- பாகிஸ்தான் போர்
இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கும்: போர் உருவாகும் என 1962-ல் அவர் முன்னதாகவே உரைத்தது அப்படியே மெய்யானது.
அதே போல இந்திய- பாகிஸ்தான் போர் பற்றி 1965-லும் 1973-லும் அவர் எழுதியது அப்படியே பலித்தது. பங்களா தேஷ் விடுதலை, அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனின் வீழ்ச்சி, சுகர்ணோவின் வீழ்ச்சி, அயூப்கானின் ராணுவ ஆட்சி, கென்னடி சுடப்பட்டது, மார்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட ஏராளமான விவரங்களைத் துல்லியமாகக் கணித்து அவர் முன்னதாகவே எழுதியதும் உரைத்ததும் உலக மக்களை வியக்க வைத்தது.
அரபு – இஸ்ரேல் போர்
1973 ஜனவரி மாதம் அராபிய – இஸ்ரேல் வரப்போவதை அவர் எழுதி விட்டார். அதாவது பத்து மாதங்களுக்கு முன்பே கூறி விட்டார்.
ஜோதிடருக்கான தகுதிகள்
ஒரு நல்ல ஜோதிடருக்கான தகுதிகளை நமது அறநூல்கள் விவரிக்கின்றன.
இந்தக் கலை அகன்றது; ஆழமானது; நுட்பமானது. ஆகவே இதை தகுந்த வல்லுநர் ஒருவரிடமிருந்து முறையாகக் கற்க வேண்டும்.
அத்துடன் உள்ளுணர்வு இருப்பவர்களே இதைத் திறம்பட கற்று பலன்களைச் சொல்ல முடியும்.
மனிதர்களின் பலஹீனங்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆபத்து வருவதாக பயமுறுத்தி பரிகாரம் செய்கிறேன் என்று பணம் பறிப்பவர்களால் ஜோதிடம் ஒரு இழிநிலையை அடைந்தது.
இப்படி ஒரு இழிநிலை இருந்த காலத்தில் தோன்றி அதை புகழோங்கச் செய்தவர் வராஹமிஹிரர்.
அதே போலவே தாழ்ந்து கிடந்த ஜோதிடக் கலையை உயர ஏற்றியதால் பி.வி.ராமனுக்கு நவீன வராஹமிஹிரர் என்ற பொருளில் அபிநவ வராஹமிஹிரர் என்ற கௌரவப் பட்டப் பெயர் அளிக்கப்பட்டது.
இது தவிர ஏராளமான விருதுகள் அவரை வந்தடைந்தன. 1947-ல் பிதகோரியன் பல்கலைக்கழகம் அவருக்கு பிஹெச்.டி அளித்து அவருக்கு டாக்டர் பட்டம் அளித்தது. 1947-ல் ராயல் அஸ்ட்ரானமிகல் சொஸைடியில் அவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976-ல் ஜூன் மாதம் குமாவோன் பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது.
ஐ,நா.வில் உரை
ஜோதிட மேதையின் புகழ் பெருகப் பெருக அவருக்கு உலக நாடுகள் பலவற்றிலுமிருந்து அழைப்புகள் வர ஆரம்பித்தன. இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் ஜோதிட மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக அவர் பங்கேற்றார். நியூயார்க்கில் நடந்த பன்னாட்டு ஜோதிட மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, ஹாலந்து கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு சங்கங்களும் பல்கலைக் கழகங்களும் அவரை உரையாற்ற அழைத்தன. ஜோதிஷ ரத்னா, ஜோதிஷ பானு, ஜோதிஷ விஞ்ஞான மார்த்தாண்ட போன்ற பல பட்டங்கள் அவருக்கு அளிக்கப்பட்டன.
1970-ம் ஆண்டு நியூயார்க்கில் ஐக்கியநாடுகள் சபையில் நவீன யுகத்தில் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் ஜோதிடம் பற்றி அவர் ஆற்றிய உரை பன்னாட்டுத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றது. ஜோதிடமும் ஒரு அறிவியல் துறையே என்ற அவரது ஆணித்தரமான சொற்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோரை அவர் பால் ஈர்த்தது.
ஆடோ பயாகிராபி ஆஃப் எ வேதிக் அஸ்ட்ராலஜர்
ஜோதிட இலக்கியத்திற்கு ஒரு புது மெருகு ஊட்டினார் பி.வி.ராமன். ஆங்கிலத்தில் எழுதி, பேசினால் மட்டுமே உலக அரங்கில் வேத ஜோதிடத்திற்கு ஒரு தனி இடத்தைப் பெற முடியும் என்று கணித்த அவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமையைப் பெற்றார். அவரது ஆங்கில உரைகள் அனைவரையும் கவர்ந்தன.
ஏராளமான புத்தகங்களை அவர் ஆங்கிலத்தில் எழுதினார். அவை கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல்லாயிரம் பிரதிகள் விற்பனை ஆயின.
அவரது பத்தொன்பது புத்தகங்களில் அவரது சுயசரிதையான ஆடோ பயாகிராபி ஆஃப் எ வேதிக் அஸ்ட்ராலஜர் புகழ் பெற்ற ஒன்றாகும். வடமொழியில் இருந்த பல ஜோதிட நூல்களை அவர் ஆங்கிலத்தில் அழகுறத் தரவே ஜோதிட ஆர்வலர்கள் உற்சாகத்துடன் அவற்றை வரவேற்றனர்.
குடும்பம்
மிக இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது.
ஆறு மகன்களும் இரு மகள்களும் கொண்ட பெரிய குடும்பத்தைத் திறம்பட இவரது மனைவி ராஜேஸ்வரி ராமன் நிர்வகித்ததோடு தானே யோகா பள்ளி ஒன்றையும் நிறுவி யோகா பயிற்சியையும் அளித்து வந்தார்.
ராமன் கடுமையான உழைப்பாளி. காலை முதல் நள்ளிரவு வரை தினமும் சுமார் 18 மணி நேரம் அவரது பணி தொடர்ந்தது.
கர்நாடக இசை மற்றும் நடனத்தில் அவர் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். யோகாவும் டென்னிஸும் அவர் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டிருக்க உதவின.
மறைவு
பிறருக்குப் பலன்களைத் துல்லியமாக உரைத்த ஜோதிட மேதை தன் இறுதி பற்றியும் சரியாகக் கூறி விட்டார். 1998-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பத்திலேயே தனக்கு இறுதி நெருங்கி விட்டதை அவர் அறிவித்தார். அது போலவே முதல் நாள் ஏற்பட்ட மாரடைப்பால் மறுநாள் 1998, டிசம்பர் மாதம் 20-ம் நாள் அவர் மறைந்தார்.
ஜோதிடம் உண்மையா, பொய்யா?
நவீன யுகத்தில் பெரிதும் கேட்கப்படும் ஒரு கேள்வி ஜோதிடம் உண்மையா? பொய்யா என்ற கேள்வி.
இதற்கு உலகமே போற்றும் ஜோதிட மேதையின் பதில் இது தான்:-
ஹிந்துக்களின் வானவியல் மற்றும் ஜோதிடக் கலை அற்புதமானது. உதாரணத்திற்கு கிரகணத்தைச் சொல்லலாம். எவ்வளவு துல்லியமாக அது கணிக்கப்பட்டு வந்தது!
போலி ஜோதிடர்களாலும், கத்துக்குட்டிகளாலும், பிதற்றல் பேர்வழிகளாலும் அது தன் மஹிமையை இழந்து கூலிக்கு மாரடிக்கும் இழிநிலையை அடைந்து விட்டது.
பலன்களைத் துல்லியமாகக் கூறும் ஹிந்துக்களின் ஜோதிடம் மிக பிரமாதமானது. துல்லியமான சரியான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது அது என்பதை அதன் எதிரிகளும் கூட உணர்ந்து அது அறிவியல் பூர்வமானது என்பதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.
நவீன வராஹமிஹிரர்
ஜோதிடத்தை அறிவியல் ரீதியானது என்பதை சுட்டிக்காட்டி அதை அறிவியல் அங்கீகாரம் பெற வைத்த மாமேதை டாக்டர் பி.வி.ராமன் அவர்களை நவீன வராஹமிஹிரர் என்று கூறுவது பொருத்தம் தானே!
Manikkavasagar was one of the Four ancient Saivite saints; all of them lived at least 1000 years ago. But my research shows that he lived just before Mahendra Pallavan (600 CE) time. Appar and Sambandhar were contemporaries of the great Pallava Eemperor. Manikkavasagar never mentioned Siva Linga or Lord Ganesh or the three great Saivite saints. Probably he was the first one to mention Panchakshara Mantra Om Nama Sivaya. Moreover, he used different genres available in Tamil literature; above all Appar mentioned the miracle of Horse changing to Fox episode from Manikavasagar’s life.
Here are some references to the Himalayas from his Tiruvaasagam:
Kailash is mentioned in at least seven places
1.கயிலாயம்—பாடல் 144 நீத்தல் விண்ணப்பம்
2.கயிலைப் பரம்பரனே –பாடல் 138 நீத்தல் விண்ணப்பம் (6-136, 6-159 in G U Pope_
3.கயிலை புகுநெறி — அருட்பத்து பாடல் 465
xxxxxx
4.மானக் கயிலை மலையாய் போற்றி 4-167
This is the interesting reference. A lot of Tamils repeat the previous two lines in religious gatherings and mislead the public.
தென்னாட்டுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
Siva Lord of the southern country- praise
King of our country folk – praise
The next line is மானக் கயிலை மலையாய் போற்றி 4-167 meaning Lord of glorious Kailash – praise
Many half-baked scholars in Tamil Nadu thought and taught others that Siva belongs to Tamil Nadu; but Manikavasagar is very clear and says He is the Lord of all countries and the Lord of the Himalayan Kailash. There is another point. From Sangam Tamil book Pura Nanuru to Tamil poet Bharati, we see the one Nation concept from the Himalayas to Kanyakumari, exploding the myth of British uniting India. Of course, they laid roads and railway lines to pump out all Indian treasures to England. Recent books estimate that they pumped out billions of pounds worth from India.
xxxx
5.கயிலை மாமலை ஏவிய கடலே – செந்திலாப்பத்து பாடல் 405; ( 23-40 in G U Pope)
Whose waters rest on Kalash’s lofty hill
My comments
Though Manikavasagar refers to the Sea of Mercy, there is a geological fact as well; Millions of years ago, Himalayas were under the sea according to geologists.
xxxx
6.ஒலிதரு கைலை உயர்கிழவோனே 2-146
High lord of Kailai that resounds with rapturous song
xxxx
Himalaya is mentioned in at lease two places
Himalaya 2-140
Himavaan – 9-50
எழில்பெறும் இமயத்தியல்புடை அம்பொற் 2-140
The golden beauty like Himalaya wears
xxxx
என்னுடையார் அமுதெங்களப்பன்
எம்பெருமான் இமவான் மகட்குத் 9-50
My rare ambrosia ; our sire; our lord of might
To the daughter of Himavat
xxxx
அப்பர் தேவாரம் 600 CE
Appar on Himalaya
கயிலாய மலை உள்ளார்; காரோணத்தார்; கந்த மாதனத்து உளார்; காளத்தி(ய்)யார்;
மயிலாடு துறை உளார்; மாகாளத்தார்; வக்கரையார்; சக்கரம் மாற்கு ஈந்தார்; வாய்ந்த
அயில்வாய சூலமும், காபால(ம்)மும், அமரும் திருக்கரத்தார்; ஆன் ஏறு ஏறி,
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே.
He is of mount kaliash , kaaronam, kandamathanam
Kalthi, Mayiladuthurai, Maakaalam
And Vakkarai ; He gifted the disc to Vishnu
……….
Bharati Poems
Glorifying the Holy Himalayas continued in Tamil up to period of the great poet Subrahmanya Bharati. He was the only one poet in Tamil who dealt with Hinduism, Patriotism (Nationalism), Women’s Liberation and Tamil Language. If we take any other poet before Bharati, she or he will be lacking in one or two aspects. Bharati’s songs are used in Tamil Films and Music concerts until this day and so they reached even illiterates. He praised the Himalayas in the following songs :
பாரதி பாடல்களில் இமயம்
5. பாரத தேசம்
We will saunter over the silvery Himalayas
And sail our ships all over the western sea
W will make temples of our schools everywhere
And stroke our shoulders proclaiming Our Bharat
ராகம் – புன்னாகவராளி
பல்லவி
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் – மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.
சரணங்கள்
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
XXXX
6. எங்கள் நாடு
ராகம் – பூபாளம்
Himachal is our mountain
The world hath not its fellow;
Ganga is our fountain
Pellucid, sweet and mellow
Our Upanishads are twelve
Unknown to any other clime
deep into our minds they delve
And soar aloft sublime
Praise we Bharat , golden fair
Our own dear land beyond compare.
மன்னும் இமயமலை யெங்கள் மலையே
மாநில மீதிது போற்பிறி திலையே!
இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே
இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?
பன்னரும் உபநிடநூ லெங்கள் நூலே
பார் மிசை யேதொரு நூல்இது போலே?
பொன்னொளிர் பாரதநா டெங்கள் நாடே
போற்றுவம் இஃதை எமக்கில்லை ஈடே.
XXX
Bharat is the deity of the whole world
You are her children; forsake not this thought
On the north, sky piercing Himalaya
And on other sides the great seas protect her
Ganga Sindhu Yamuna of pure billows
Spas, waters, rare gardens sweet fertile fields
பாரத நாடு பார்க்கெலாம் திலகம்;
நீரதன் புதல்வர், இந் நினைவகற் றாதீர்!
வானக முட்டும் இமயமால் வரையும்
ஏனைய திசைகளில் இருந்திரைக் கடலும்
காத்திடு நாடு! கங்கையும் சிந்துவும்
தூத்திரை யமுனையும் சுனைகளும் புனல்களும்
இன்னரும் பொழில்களும் இணையிலா வளங்களும்
உன்னத மலைகளும் ஒளிர்தரு நாடு!
பைந்நிறப் பழனம் பசியிலா தளிக்க
மைந்நிற முகில்கள் வழங்கும் பொன்னாடு!
XXXX
13. பாரத தேவியின் திருத் தசாங்கம்
நாமம் (காம்போதி)
Parrot of honied words
Devi to me is bliss
Pray declare unto me
Her great golden country
Let that be known to you
As the Arya country
From sky capped Himalayas
To Kanyakumari
பச்சை மணிக்கிளியே! பாவியெனக் கேயோகப்
பிச்சை யருளியதாய் பேருரையாய்! – இச்சகத்தில்
பூரணமா ஞானப் புகழ்விளக்கை நாட்டுவித்த
பாரதமா தேவியெனப் பாடு.
நாடு (வசந்தா)
தேனார் மொழிக்கிள்ளாய் தேவியெனக் கானந்த
மானாள் பொன் னாட்டை அறிவிப்பாய்! – வானாடு
பேரிமய வெற்புமுதல் பெண்குமரி ஈறாகும்
ஆரியநா டென்றே அறி.
XXX
This is only a comparison to czar of Russia
Czar was mighty like Himalaya, but ha fallen now.
இமயமலை வீ ழ்ந்ததுபோல் வீழ்ந்துவிட்டான்
ஜாரரசன் இவனைச் சூழ்ந்து
சமயமுள படிக்கெல்லாம் பொய்கூறி
அறங்கொன்று சதிகள் செய்த
சுமடர் சடசடவென்று சரிந்திட்டார்,
புயற்காற்றுங் குறை தன்னில்
திமுதிமென மரம்விழுந்து காடெல்லாம்
விறகான செய்தி போலே!
— subham—
Tags – Bharati poems, Appar Tevaram, Manikka vasagar, Tiruvasagam , last part, Himalayas, From Rig Veda, Tamil Poet Bharati, Part 5,
அனுமனுக்கு வீணை வாசிக்கத் தெரியும் கும்பகோணத்தில் அற்புத சிற்பம்!
அனுமனை வீணையுடன் காட்டும் சிற்பம் ஒன்று கும்பகோணம் ராமசாமி கோவிலில் இருக்கிறது ; ராம நாமம் இசைக்கும் அனுமன் அதை ராகத்துடன் பாடி இருப்பதில் வியப்பில்லை. சிலர் நாரதருக்கும் அனுமனுக்கும் இசை பற்றி விவாதம் நடந்ததாகவும் அப்போது அனுமன் வீணை வாசித்தவுடன் பாறையே உருகிப்போயிற்று என்றும் சொல்கிறார்கள் இந்தக் கதை பிற்காலத்தில் சம்ஸ்க்ருதத்தில் எழுதப்பட்ட 27 சர்க்கங்களைக் கொண்ட அத்புத ராமாயணத்தில் அனுமன்- நாரதன் பேரில் உள்ளது .
உண்மையில் அது அகத்தியருக்கும் ராவணனுக்கும் நடந்த வீணைப்போட்டி ; 700 ஆண்டுகளுக்கு முன்னர் உச்சிமேற் புலவர் கொள் , மதுரை நகர பாரத்வாஜ கோத்ர பார்ப்பான் நச்சினார்க்கினியர் எழுதியது .
இராவணன் அகத்தியர் வீணைப்போட்டி : ராவணன் – பாண்டியர் சமாதான உடன்படிக்கை என்ற எனது 2014-ம் ஆண்டுக்க கட்டுரையில் இதே பிளாக்கில் உள்ளது.
இந்த சிற்பம் பற்றி வெளியான ஆங்கிலக் கட்டுரையில் அனுமனுக்கு இசையில் உள்ள புலமையை தியாகராஜரும் அவருக்கு முன்னர் புரந்தரதாசரும் பாடியிருப்பதை விளக்கியுள்ளார் கட்டுரை ஆசிரியர்; . தமிழில் முதல் முதலில் வீணை பற்றிய செய்தி சிலப்பதிகாரத்தில் நாரதர் வீணை என்ற வரிகளில் வருகிறது ; கும்ப கோணம் கோவில் சிற்பமும் சுமார் 500 ஆண்டு வரலாறு உடையதுதான் ! ஆக இது மேலும் ஆ ராய ப்படவேண்டிய விஷயம் .
xxxxx
அனுமன், சிவ பெருமானே ! மேலும் சில சான்றுகள் !
அனுமன் சிவனின் அவதாரம் என்று துளசிதாசர், அருணகிரிநாதர், ஏக நாதர் ஆகிய மூவரும் பாடியதை முன்னரே கண்டோம். அவர்கள் மட்டுமின்றி தியாக ராஜரும், ஆவார்களும் பாடியது டாக்டர் G.T . கோபால கிருஷ்ண நாயுடு எழுதிய நூலில் உள்ளது.
எந்த ரானி எந்த போனி எந்த கிருதியில் தியாகராஜர் சிவனே அனுமன் என்கிறார்.
ப. எந்த ரானி தன(கெ)ந்த போனி நீ
செந்த விடு3வ ஜால ஸ்ரீ ராம
அ. அந்த(கா)ரி நீ செந்த ஜேரி
ஹனுமந்துடை3 கொலுவ லேதா3 (எ)
ச1. ஸே1ஷுடு3 ஸி1வுனிகி பூ4ஷுடு3 லக்ஷ்மண
வேஷியை கொலுவ லேதா3 (எ)
ச2. ஸி1ஷ்டுடு3 மௌனி வரிஷ்டு2டு3 கொ3ப்ப
வஸிஷ்டு2டு3 ஹிதுடு3கா3 லேதா3 (எ)
ச3. நர வர நீகை ஸுர க3ணமுலு
வானருலை கொலுவக3 லேதா3 (எ)
ச4. ஆக3(மோ)க்தமகு3 நீ கு3ணமுலு ஸ்ரீ
த்யாக3ராஜு பாட3க3 லேதா3 (எ)
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
நமன் பகைவன் உனதண்மையடைந்து
அனுமனாகிச் சேவிக்கவில்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
1. சேடன், சிவனுக்கு அணிகலன், இலக்குவனின்
வேடமணிந்து சேவிக்கவில்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
2. அறிஞன், முனிவர்களில் சிறந்தோன், உயர்
வசிட்டன் நல்லதுரைப்போனாக இல்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
3. மனிதரில் உத்தமனே! உனக்காக வானோர்கள்
வானரராகிச் சேவிக்கவில்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!
4. ஆகமங்களுரைக்கும் உனது குணங்களை
தியாகராசன் பாடவில்லையா?
என்ன வரினும் தனக்கென்ன போயினும்
உனதண்மை விட இயலேன், இராமா!— தியாகராஜர்
Xxxxx
நிற்க . அனுமனை சாலீஸாவிலிருந்து மேலும் சில ஸ்லோகங்களைக் காண்போம்.
ஶ்ரீ குரு சரண ஸரோஜ ரஜ னிஜமன முகுர ஸுதாரி |
வரணௌ ரகுவர விமலயஶ ஜோ தாயக பலசாரி ||
புத்திஹீன தனுஜானிகை ஸுமிரௌ பவன குமார |
பல புத்தி வித்யா தேஹு மோஹி ஹரஹு கலேஶ விகார் ||
சௌபாஈ
ஜய ஹனுமான ஜ்ஞான குண ஸாகர |
ஜய கபீஶ திஹு லோக உஜாகர ||
ராமதூத அதுலித பலதாமா |
அம்ஜனி புத்ர பவனஸுத னாமா || 1
மஹாவீர விக்ரம பஜரங்கீ |
குமதி னிவார ஸுமதி கே ஸங்கீ ||
கஞ்சன வரண விராஜ ஸுவேஶா ।
கானந குண்ட³ல குஞ்சித கேஶா ॥ 4 ॥
ஹாத²வஜ்ர ஔ த்⁴வஜா விராஜை ।
கான்தே² மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை ॥ 5॥
ஶங்கர ஸுவன கேஸரீ நன்த³ன ।
தேஜ ப்ரதாப மஹாஜக³ வன்த³ன ॥ 6 ॥
வித்³யாவான கு³ணீ அதி சாதுர ।
ராம காஜ கரிவே கோ ஆதுர ॥ 7 ॥
ப்ரபு⁴ சரித்ர ஸுனிவே கோ ரஸியா ।
ராமலக²ன ஸீதா மன ப³ஸியா ॥ 8॥
ஸூக்ஷ்ம ரூபத⁴ரி ஸியஹி தி³கா²வா ।
விகட ரூபத⁴ரி லங்க ஜலாவா ॥ 9 ॥
பீ⁴ம ரூபத⁴ரி அஸுர ஸம்ஹாரே ।
ராமசன்த்³ர கே காஜ ஸம்வாரே ॥ 1௦ ॥
லாய ஸஞ்ஜீவன லக²ன ஜியாயே ।
ஶ்ரீ ரகு⁴வீர ஹரஷி உரலாயே ॥ 11 ॥
Xxxxx
12 முதல் 17 வரையுள்ள ஸ்லோகங்களைக் காண்போம்
ரகு⁴பதி கீன்ஹீ ப³ஹுத ப³டா³யீ (ஈ) ।
தும மம ப்ரிய ப⁴ரத ஸம பா⁴யீ ॥ 12 ॥
ஸஹஸ்ர வத³ன தும்ஹரோ யஶகா³வை ।
அஸ கஹி ஶ்ரீபதி கண்ட² லகா³வை ॥ 13 ॥
ஸனகாதி³க ப்³ரஹ்மாதி³ முனீஶா ।
நாரத³ ஶாரத³ ஸஹித அஹீஶா ॥ 14 ॥
யம குபே³ர தி³க³பால ஜஹாம் தே ।
கவி கோவித³ கஹி ஸகே கஹாம் தே ॥ 15 ॥
தும உபகார ஸுக்³ரீவஹி கீன்ஹா ।
ராம மிலாய ராஜபத³ தீ³ன்ஹா ॥ 16 ॥
தும்ஹரோ மன்த்ர விபீ⁴ஷண மானா ।
லங்கேஶ்வர ப⁴யே ஸப³ ஜக³ ஜானா ॥ 17 ॥
இந்த வரிகளில் அனுமானைப் புகழும் துளசிதாசர், அவன் சுக்ரீனுவனுக்கு அரசாட்சியை வாங்கித் தந்ததாகவும் அதை சுக்ரீவன் ஏற்றதையும் புகழ்கிறார். உலகிலேயே முதல் எக்ஸைல் கவர்ன்மென்ட் அமைந்தது இந்தியாவில்தான் . பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்திய மண்ணில் இருந்தவாறே விபீஷணனுக்குப் பட்டம் சூட்டப்பட்டது. ராமாயணத்தில் காணும் பல புதுமைகளில் இதுவும் ஒன்று .
அதற்கு முன்னதாக, அனுமனை துளசிதாசர் பரதனுடன் ஒப்பிடுவதாகும் ; கம்ப ராமாயணத்தில் குகன் வாயின் வழியாகவும் பரதன் புகழப்படுகிறான் ; ஆயிரம் ராமர்களும் பரதனுக்கு ஈடாக மாட்டான் என்கிறான் கம்பன். அதை நினைவு கூறும் வகையில் இந்த பரதன் வரிகள் உ ள்ளன. துளசிதாசரையும் அதையே சொல்கிறார். ஏனெனில் ஆதிசேடனுக்கு ஆயிரம் தலைகள் . ஆதி சேடன் உன் புகழ் பாடுகிறான் என்றால் 1000 தலைகள் / 1000 பேர் உன் புகழ்பாடு கின்றனர் என்று பொருள்.
சனகர் தலைமையிலுள்ள நால் வரும், எண்திசைக் காவலரும் உண்னைப் புகழ்கின்ற்னர் என்கிறார்.
xxxxxx
பொருள்
ராமன் உன்னை பெரிதும் புகழ்ந்து பரதனைப் போல நீ உடனுறை என்றார்!
(12) ஆயிரம் நாவுடை ஆதி சேஷனுன் பெருமையைப் புகழ்வதாய் உன்னைக் கட்டிஅணைத்து சொன்னார்!
குறள் 503-க்கு உரை எழுதியவர்கள் வழ வழா கொழ கொழா என்று உரை எழுதி இருக்கிறார்கள்.. முதலில் குறளைப் படியுங்கள். பின்னர் உரையைப் படியுங்கள். உங்கள் மனதில் தோன்றுவதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் நான் தரும் விளக்கத்தைப் படியுங்கள்.
அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் – கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும், தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது – நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது. (வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், ‘தெரியுங்கால்’ என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)
இது பற்றிய ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பார்த்துவிட்டு கட்டுரை எழுதுகிறேன்.
இது பற்றி யாராவது ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருந்தால் எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.
நன்றி.
xxxxxx
ஹெல்த்கேர் ராஜா
19 Jul 2024, 07:51
to me
பெரியோர்கள் பிழையே செய்யமாட்டார்கள் .
நீங்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தேடிப்பார்த்தாலும் தவறுகளைக் காண்பது அரிது.
இது தான் சரியான உரை என்று நம்புகிறேன் அய்யா.மிக்க நன்றி
xxxxx
ஆதி சங்கரர் எழுதிய விவேக சூடாமணியையும், ராம கிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மஞ்சரியையும் படித்த பின்னர் பெரியோர்களிடமும் குறை உண்டு என்ற கருத்துக்கு நான் வந்துவிட்டேன். ஆனால் அதை என்னைப் போன்ற சிறியவர்கள் சுட்டிக்காட்டக் கூடாது. அறிவிலும் ஒழுக்கத்திலும் உச்சாணிக் கொம்பிலுள்ள சந்யாசிகள் , சாணக்கியன் போன்ற அறிவாளிகள் சொல்லலாம்
இதோ பெரியோர் வாக்கு; இதோ 4 சம்பவங்கள்
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள் பக்கம் 59:-
1.காலஞ் சென்ற கேசவ சந்திர சேனர் ஒரு நாள் தட்சிணேஸ்வரத்திலுள்ள ஆலயத்துக்கு வந்து ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் சொன்னார், ” சுவாமி! பண்டிதர்கள் சாஸ்திரங்கள் பலவற்றைப் படித்தபோதும் உண்மையான ஆத்ம தத்துவத்தைப் பற்றி ஏன் ஒன்றுமே தெரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் ? என்று கேட்டார்.
அதற்கு பரமஹம்சர் “பருந்தும் கழுகும் ஆகாயத்தில் வெகு உயரத்தில் பறக்கிறதே நீர் பார்க்கிறீர் .ஆயினும் அ வைகள் எந்தக் குழியில் அழுகிய பிணங்கள் கிடக்கின்றன என்று கண்களை கீழ்நோக்கிய வண்ணமே வைத்திருக்கின்றன.அது போல பண்டிதர்கள் என்பவர்கள் சாஸ்திரங்களைக் கற்ரகற்றவர்களாக இருப்பினும் காமினி -காஞ்சனம் (பெண் -பொன் ) போன்ற உலகப் பற்றுகளால் பந்தப்பட்ட மனம் உடையவர்களாக ஆகிறார்கள். ஆகையால் அவர்கள் மெய்ஞானத்தைப் பெறுவதில்லை.” என்று பதில் சொன்னார்.
xxxx
அனுமனுக்கும் அஹம்காரம் இருந்தது !
2.உருவமுள்ளவாயினும் உருவம் இல்லாதவனாயும் ஈசுவரன் ஹநுமானுக்குத் தரிசனம் தந்தருளினான் .என்றாலும் ஹனுமான் தான் ஈசுவரதாசன் என்ற அஹங்காரத்தைக் கொண்டவனாகவே இருந்தான் .நாரதர், ஜனகர், ஸநந்தனர் , ஸனத்குமாரர் ஆகியவர்களுடைய விஷயமும் இப்படித்தான். அவர்கள் பிரம்ம ஞானத்தை அடைந்தவர்கள் என்றாலும் , அவர்கள் ஆற்றோட்டத்தின் சப்தத்தைப்போல் ஈசுவரனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு சென்றனர். இதனால் அவர்களிடத்தும் சிறிது அஹங்காரம் இருந்தது !
XXXX
சங்கரரும் சண்டாளனும் , பக்கம் 440
3. ஒரு பறையன், மாடு அடிக்கும் இடத்திலிருந்து வருகையில் , தன கழுத்தில் வைத்திருந்த காவடியின் இரு பக்கத்திலும் கூடைகளைத் தொங்கவிட்டு அதில் மாமிசத்தை வைத்திருந்தான்.அப்போது சங்கரர், ஆற்றில் ஸ்னானம் செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். தற்செயலாய், அவன் தவறி, மஹான் மீது பட்டுவிட்டான் .
அடே , சண்டாளா ! நீ என் மீது பட்டுவிட்டாயே ! என்றார் . அதற்கு அவன் சொன்னான்,
சுவாமி! நீங்கள் என் மீது படவுமில்லை. நானும் உங்கள் மீது படவுமில்லை.தங்களுடைய ஆத்மாவானது சரீரமா? புத்தியா? மனமா? இவைகளில் எது? தாங்கள் யார் ? எனக்குச் சொல்லுங்கள் . இந்த உலகமானது ஸத்வ , ரஜஸ், தமோ முக் குணங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. அவை ஒன்றோடும் ஆத்மா சம்பந்தப்பட்டிருப்பதில்லை என்று தங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்றான். சங்கரர் வாய் பேசாது நின்று விழிக்கலானார்.
XXXX
4.ஜனகரும் சந்யாசினியும் , பக்கம் 338
ஒரு சமயம், சந்யாசினி ஒருத்தி மாமன்னன் ஜனகருடைய அரசவைக்கு வந்தாள் ; அவளுடைய முகத்தைக் கண்ணெடுத்துப் பார்க்காமலேயே , ஜனகர் அவளை வணங்கினார். இதைக் கண்டு சந்யாசினி,
ஓய், ஜனகரே ! என்ன ஆச்சர்யம் ! இன்னுமா நீர் பெண்களைக் கண்டு அஞ்சுகிறீர் ? என்றாள் .
பூரண ஞானம் அடைந்தவன் குழந்தையின் சுபாவத்தைப் பெறுகிறான். அவனுக்கு ஆண் , பெண் என்ற வித்தியாசம் தோன்றுவதில்லை ஆயினும் உலக நடைக்காக ஜனகர் அவ்வாறு செய்தார் .
இவை ஆன்மீக உதாரணங்கள்; ஆனால் தமிழ் வேதம் தந்த வள்ளுவனோ அரசியல் பகுதியில் 503 ஆவது குறளை வைத்தான் ; இருந்தபோதிலும் பெரியோர் எல்லாம் பெரியாரும் அல்லர்; சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர் என்ற தமிழ் முதுமொழியையும் நினைவு கூறுவோம்.
xxx
Shuddhananda Bharati
Though deep scholars of stainless sense Rare is freedom from ignorance.
Or
G U Pope
Though deeply learned, unflecked by fault, ’tis rare to see,
When closely scanned, a man from all unwisdom free.—503
Or
Even among deep scholars of spotless hearts, it is difficult to find one perfectly free from ignorance.
Or
Even among men of rare learning and virtue, on close scrutiny,
Some patches of ignorance could be spotted.
Great statesman says,
Even those who have successfully acquired rare learning and are known to be free from defects , may betray some incompetence under close examination.
Rajaji
Dr S M Diaz, I G of Police, says
Even Homer nods sometimes is a well known statement. Another statement attributed to Aristotle is There is a foolish corner in the brain of a sage.
ஆக ஆங்கிலத்தில் கருத்து சொன்ன அத்தனை பேரும் , பெரியோர்களிடத்தும் குறைகள் உண்டு என்று சொல்கிறார்கள். நமது நாட்டில் புத்தர், ஆதிசங்கரர் மீது கூட சுவாமி விவேகானந்தர் குறை சொன்னார். (Please read Swami Vivekananda’s Talks); புத்தருடைய விசால மனது ஆதி சங்கரருக்கு இல்லை என்றார் ; புத்தர் ஸம்ஸ்க்ருதத்தைப் புறக்கணித்ததால் அந்த மதம் நலிவடைந்தது என்றார் சுவாமி விவேகானந்தர்.
பெண்களை கன்னிமார்களாகச் சேர்க்கவே மாட்டேன் என்று அடம்பிடித்த புத்தரை, பிரதம சீடன் ஆனந்தன் கெஞ்சிக் கதறி பெண்களையும் புத்த மதத்தில் சேர்க்க வைத்தான். புத்தரே வருத்தப்பட்டு என் மதம் 500 ஆண்டுகளுக்கு மேல் இராது என்றார் ; அதுவும் உண்மையானது; தோன்றிய நாட்டில் புத்த மதம் அழிந்துவிட்டது (Please read Dr Radhakrishnan’s beautiful Introduction to Dhammapada) ; காந்திஜி படம் எல்லா ஆபீஸ்களிலும் அலங்ககரிப்பது போல எல்லா இடங்களிலும் புத்தர் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்.; ஒவ்வொரு நிமிடத்திலும் கோடிக்கணக்கான விலங்குகளைக் கொன்று மக்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் . அவை எல்லாம் புத்தரைப் பார்த்து சிரி, சிரி — என்று சிரித்துக்கொண்டு இருக்கின்றன (வள்ளுவனுக்கும் இதே கதிதான்)
xxxxx
आरूढशक्तेरहमो विनाशः कर्तुन्न शक्य सहसापि पण्डितैः । ये निर्विकल्पाख्यसमाधिनिश्चलाः तानन्तरानन्तभवा हि वासनाः ॥ ३४२ ॥
ārūḍhaśakterahamo vināśaḥ kartunna śakya sahasāpi paṇḍitaiḥ | ye nirvikalpākhyasamādhiniścalāḥ tānantarānantabhavā hi vāsanāḥ || 342 ||
342. Even wise men cannot suddenly destroy egoism after it has once become strong, barring those who are perfectly calm through the Nirvikalpa Samadhi. Desires are verily the effect of innumerable births.
விவேக சூடாமணி 342 ஆவது ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் சொல்கிறார்:
அறிவாளிகளும் கூட திடீரென்று அஹம்காரத்தை எளிதில் அகற்ற முடியாது. பல பிறப்புகளில் வந்தது ஆசை; நிர்விகல்ப சமாதி எய்தியவர்கள் மட்டுமே இதற்கு விதி விலக்கு (நிர்விகல்ப சமாதி என்பது, உயர்ந்த வகை சமாதி; இது வேறுபாடுகள் அனைத்தையும் கடந்த நிலை)
யான் எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்- குறள் 346
English Couplet 346:
Who kills conceit that utters ‘I’ and ‘mine’, Shall enter realms above the powers divine.
XXXX
கி.வா. ஜ . திருக்குறள் பதிப்பு காட்டும் ஒப்புமை
கம்ப ராமாயணம் வாலி வதைப் படலம்
3978. ‘வில் தாங்கு வெற்பு அன்ன
விலங்கு எழில் தோள! ”மெய்யம்மை
உற்றார் சிலர்; அல்லவரே
பலர்” என்பது உண்மை.
பெற்றாருழைப் பெற்ற பயன்
பெறும் பெற்றி அல்லால்,
அற்றார் நவை என்றலுக்கு
ஆகுநர், ஆர்கொல்?’ என்றான்.
வில் தாங்கு வெற்பு அன்ன- வில்லை ஏந்திய மலையை ஒத்து;
விலங்கு எழில்தோள -விளங்குகின்ற ஆழகமைந்த தோள்களை
உடைய இலக்குவனே! மெய்ம்மை உற்றார் சிலர் -(இவ்வுலகில்) தவறாத
நல்லொழுப்பம் பொருந்தியவர் ஒரு சிலரே ஆவர்;அல்லவரே பலர் -அந்
நல்லொழுக்கம் கடைப் பிடிக்காதவரே பலர்;என்பது உண்மை –
என்பதுதான் உண்மையாகும். பெற்றார் உழை -நம்மை நண்பராகப்
பெற்றவரிடத்தில்;பெற்ற பயன் -பெறுதற்கேற்ற அளவில் காணப்படும் நல்ல
பலனை;பெறும் பெற்றி அல்லால் -பெற்றுக் கொள்ளும் தன்மையல்லாமல்;
நவை அற்றார் என்றலுக்கு -குற்றமற்றவர் என்று சொல்வதற்கு;ஆகுநர்