ஜோதிட மேதை டாக்டர் பி.வி.ராமன்– 1 (Post No.13,581)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.581

Date uploaded in London – 25 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xx

14-8-24 மாலைமலர்இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

ஜோதிட மேதை டாக்டர் பி.வி.ராமன் – 1

ச. நாகராஜன்

இன்று உதிக்கின்ற நாள் நல்ல நாளாக நமக்கு அமைய வேண்டும் என்று விரும்பாதோர் இல்லை. அது நல்ல நாள் தானா என்று அறிய விரும்புவோர் பலரும் ஜோதிடத்தை அணுகுவதில் வியப்பே இல்லை.

ஆனால் அதே சமயம் ஜோதிடத்தை நம்பாதே என்று சொல்வோரும் உண்டு.

ஜோதிடத்தை உலக அரங்கில் புகழோங்க வைத்து அதை அறிவியல் ரீதியாக உயரத்தில் ஏற்றி பிரமிக்க வைத்தவர் பங்களூர் வெங்கட ராமன் ஆவார். பி.வி.ராமன் என்ற பெயரை ஜோதிட ஆர்வம் கொண்டோரில் அறியாதார் யாரும் இல்லை.

பிறப்பும் இளமையும்

பி.வி.ராமன் பங்களூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1912-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் நாளன்று பிறந்தார். கிராமத்தில் ஆரம்பக் கல்வியை முடித்தவர் பங்களூரில் பட்டப்படிப்பை முடித்தார். ஆனால் இயல்பான ஆர்வம் இவருக்கு ஜோதிடத்தின் மேலேயே இருந்தது.

இதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தவர் இவரது பாட்டனாரான திரு சூர்யநாராயண ராவ் என்னும் பிரபல ஜோதிடரே.

சூர்யநாராயண ராவ்

1885-ம் ஆண்டு ஒரு நாள் தன் சக குடும்ப உறுப்பினர்களுடன் கர்நாடகத்தில் ஷிமோகாவுக்கு ஒரு கல்யாணத்திற்காகச் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் குப்பி ரயில் நிலையத்தில் இறங்கினார்.

அப்போது தான் ஷிமோகாவுக்கு எஸ்.எம். ரயில்வே, ரயில் பாதையை அமைத்துக் கொண்டிருந்தது. ஆகவே அவர் மாட்டு வண்டியில் தான் ஷிமோகாவுக்குச் செல்ல வேண்டும். 150 மைல் தூரத்தில் உள்ள ஷிமோகாவை அடைய நாள் ஒன்றுக்கு 20 அல்லது 25 மைல் வீதம் சென்றால் ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்.

மாட்டு வண்டியில் ஏறிய இளைஞருக்கு நடந்து வந்து கொண்டிருந்த ஒரு ஏழை வைதிகர் தென்பட்டார். அவரிடம் “நீங்கள் எங்கே போக வேண்டும்” என்று கேட்ட இளைஞருக்கு, “ ஷிமோகாவுக்கு ரெவரண்ட் மிஸ்டர் ராபர்ட்ஸைப் பார்க்கப் போகிறேன். அவரிடம் நான் முன்ஷியாகப் பணி புரிகிறேன். என் பெயர் சுப்பராய சாஸ்திரி” என்ற பதில் வந்தது.

அவரை, ”என்னுடன் வண்டியில் வாருங்கள்” என்று அழைத்தார் அந்த இளைஞர். அடுத்த எட்டு நாட்களில் அவருடனான உரையாடல் அந்த இளைஞரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது.

சகல வித கலைகளையும் நுட்பங்களையும் கூறும் இந்து மத நூல்களை அவர் அப்படியே ஒப்புவித்து அர்த்தமும் சொன்னார். ஹிந்து  மத நூல்கள் அனைத்தும் தற்காலத்திய அறிவியலுக்கு  ஒத்து வராதவை என்ற எண்ணம் திடமாக இருந்த அந்த இளைஞரின் மனம் மாறியது.

அந்த இளைஞர் தான் பி.வி.ராமனின் பாட்டனாரான சூர்ய நாராயண ராவ். (தோற்றம் 12-2-1856 மறைவு 13-3-1937). வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் ஜோதிடக் கலையை நன்கு கற்று பிரபலமான ஜோதிடராக ஆனார். முதல் உலகப் போர் வருவதை முன் கூட்டியே சொன்னவர் அவர். எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.

தன் பேரனான பிவி.ராமனுக்கு ஜோதிடத்தின் நுட்பத்தை விவரித்து அவரைப் பெரும் ஜோதிடராக ஆக்கியவர் இவரே.

அஸ்ட்ராலஜிகல் மாகஸைன்

1895-ல் அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் என்ற பத்திரிகையை ஆரம்பித்து ஜோதிட சம்பந்தமான கட்டுரைகளை வெளியிட்டு உலகின் பார்வையை ஜோதிடத்தின் பக்கம் திருப்பினார் சூர்யநாராயணராவ். பல்வேறு ராஜாக்களும் மந்திரிகளும் வைசிராய்களும், பிரமுகர்களும் அவரிடம் ஜோதிடம் கேட்டு பிரமித்தனர்.  இருபது வருடங்களுக்கும் மேலாக நடந்த பத்திரிகை அவரது உடல்நிலை காரணமாக நிறுத்தப்பட்டது.

மிகுந்த கஷ்டப்பட்டு தன் பாட்டனார் ஆரம்பித்த பத்திரிகையை மீண்டும் 1936-ம் வருடம் ஆரம்பித்த பி.வி.ராமன் 1998 முடிய அதன் ஆசிரியராக தான் மறையும் வரை 62 ஆண்டுகள் இருந்தார். அதில் தான் அவரது கணிப்புகள் இடம் பெற்று வந்தன.

அதில் அவர் குறிப்பிட்ட ஏராளமான கணிப்புகளில் சிலவற்றை மட்டும் இங்கு கீழே பார்க்கலாம்.

பாகிஸ்தான் பிரிவினை

1947-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினை ஏற்படும் என்பதை அவர் முன்னதாகவே உரைத்தார். ஆந்திரபிரதேசம், தெலங்கானா பிரிவினை பற்றியும் அவர் முன்னதாகவே எடுத்துரைத்தார்.

காந்திஜி மறைவு

மகாத்மா காந்திஜியின் மறைவு குறித்து 1947-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே அவர் சூசகமாகக் குறிப்பிட்டு விட்டார். “மாபெரும் இந்தியத் தலைவர் சனி கிரகம் கடகத்தில் நுழையும் போது கொல்லப்படுவார்” என்ற அவரது வரிகள் 1948, ஜனவரி 30-ம் நாள் காந்தியடிகள் சுடப்பட்ட போது மெய்யானது.

ஹிட்லரின் முடிவு

இரண்டாம் உலகப் போரால் நாளுக்கு நாள் உலகை ஹிட்லர் பயமுறுத்தி வந்த நேரம். உலக மக்கள் ஹிட்லருக்கு ஒரு முடிவு வராதா என்று ஏங்கி இருந்த நேரத்தில் 1943-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் எழுதினார் இப்படி: 11-10-1944 முதல் ஒன்பது மாதங்கள் சந்திரனின் தசாபுக்தி காலத்தில் ஹிட்லரின் முடிவு ஏற்படும். ஹிட்லரின் முடிவு கொடூரமாக அமையும்”.

அவர் கூறியபடியே ஹிட்லர் 30-4-1945 அன்று தற்கொலை செய்து கொண்டார்.

ஹிட்லரைப் பற்றி அவர் எழுதிய கணிப்பைக் கூறும் புத்தகங்கள், கட்டுரைகள் ஜெர்மனியில் நாஜிக்களால் எரிக்கப்பட்டன. அவை அங்கு ஹிட்லரால் தடை செய்யப்பட்டன.

**

Ramayana Sculptures from Indonesia- Batch 2 (Post No.13,580)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,580

Date uploaded in London – 24 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

—subham—

TAGS- Ramayana sculptures, German book, batch 2,  Indonesia

Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati- Part- 4 (Post No.13,579)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,579

Date uploaded in London – 24 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Himalayas: From Rig Veda to Tamil Poet Bharati; Part- 4

Silappadikaram is one of the Five Tamil Kavyas and the most popular one. It gives the story of Hero Kovalan and Heroine Kannaki. Kovalan was falsely accused by a goldsmith in the Pandya Country (capital- Madurai city) and was executed immediately without any enquiry; Kannaki with her divine power burnt Madurai city like Hanuman burnt Lanka. Later Pandya king executed 1000 goldsmiths to avenge them. The title is in Tamil and Sanskrit with two words Silambu/Anklet +Adikaaram/Chapter. In short, it means the story of anklet. Pandyan goldsmith said that Kovalan stole the anklet of Pandya queen and arranged his immediate execution. The incident happened around 132 CE, but the Story was written by poet Ilango around fifth century CE, at the same time of Tamil Veda Tirukkural and Tolkaappiyam. The word Adikaaram is found in all the three works.

Coming back to the topic HimalayasIlango described the mountain from the very beginning to the end, at least 18 times.

Here below are the places where we come across the beautiful holy mountain:

சிலப்பதிகாரத்தில்  இமயம்

புகார்க் காண்டம்
1. 
மங்கல வாழ்த்துப் பாடல் Pukar Canto Introduction

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0111_01.html

(சிந்தியல் வெண்பாக்கள்)

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலர்த்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு       5
மேரு வலம்திரி தலான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்.

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்       10

Meru is used by poets in two meanings: North Pole and Himalayas

xxxx

வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கிப் பரந்துஒழுக லான்.

(மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா)

ஆங்கு,
பொதியில் ஆயினும் இமயம் ஆயினும்
பதிஎழு அறியாப் பழங்குடி கெழீஇய       15

Potiyil is the main hill in Pandya country, the residence of great Rishi Agastya. Like the two great mountains Potikai and Himalayas, people of the city Pukar lived there for generations. Stands immutable as the great ones who live there.

xxx


பொதுஅறு சிறப்பின் புகாரே ஆயினும்
நடுக்கின்றி நிலைஇய என்பது அல்லதை
…….

இப்பால் இமயத்து இருத்திய வாள்வேங்கை       65
Himalayas………………………..
உப்பாலைப் பொன்கோட்டு உழையதா எப்பாலும்
செருமிகு சினவேல் செம்பியன்
ஒருதனி ஆழி உருட்டுவோன் எனவே.

xxxxx

6. கடலாடு காதை Sea Bathing Canto

(நிலைமண்டில ஆசிரியப்பா)

வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்

(Silvery Snow clad mountain……………..

Greatest Tamil poet of Modern Age Bhrati, used this term around 1910 in his poem)

This is commented as Mt.Kailash as well.


கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்       5

xxxxx

துவர்இதழ்ச் செவ்வாய்த் துடிஇடை யோயே.
அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச்
சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்

(Geographical references to Himalayas and the Holy Ganga River followed by Ujjain, Vindhyaranya, Venkata/Tirupati Hills)
உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும் தாங்கா விளையுள்       30

காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப்
பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச்
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி

Xxxxx

11. காடுகாண் காதை The Sight of the Forest

ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
20
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு

The whole story of the epic is linked by a Brahmin known as Maatalan. He gave us rare information of a Tsunami which devoured the South Tamil Nadu around Kanyakumari. After the Tsunami and loss of a vast area, Pandya king moved his capital to modern Madurai. The Tsunami attack happened around 2nd century BCE. Brahmin continued to say Glory the Great Pandya who went beyond the northern Ganga and ruled up to the Himalaya! தென்றிசை யாண்ட தென்னவன் வாழி
திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச்
செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம்
பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி
25
xxxxx 
23. கட்டுரை காதை The Explanationசடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக்
குவளை உண்கண் தவளவாள் முகத்தி
கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி
இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி
இடமருங் கிருண்ட நீல மாயினும்5…………………………………..10கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன்
பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன் 
 
Here Pandya king is hailed as the Lord of Potiyil Hills, Korkai, Kumari ports and ruler of Golden Peaked Himalayas.Golden Peak= Kaanchana Srnga in Kalidas works; now corrupted to Kanchanjunga!https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0111_01.html  
  

Xxxxx

காட்சிக் காதை ,சிலப்பதிகாரம் The Decision to March North

நூலறி புலவரை நோக்க ஆங்கவர்
ஒற்கா மரபிற் பொதியி லன்றியும்
விற்றலைக் கொண்ட வியன்பே ரிமயத்துக்
கற்கால் கொள்ளினுங் கடவு ளாகும்
கங்கைப்பேர் யாற்றினும் காவிரிப் புனலினும்
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்தெனப்

Scholars suggested that the Chera king  should go to the Himalaya where his predecessors inscribed the Bow Emblem. (This was happening at the time of Chera King Senguttuvan. His predecessor’s name itself  IMAYAVARAMBAN Neduncheralaathan (one who has the Himalayas as his country’s border).

Xxxx

கால்கோட் காதை  Bringing the Stone from Holy Himalayas

அறைபறை யெழுந்தபின் அரிமா னேந்திய

முறைமுதற் கட்டில் இறைமக னேற

ஆசான் பெருங்கணி அருந்திற லமைச்சர்

தானைத் தலைவர் தம்மொடு குழீஇ

மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி

முன்னிய திசையின் முறைமொழி கேட்ப

வியம்படு தானை விறலோர்க் கெல்லாம்

உயந்த்தோங்கு வெண்குடை உரவோன் கூறும்

இமையத் தாபதர் எமக்கீங் குணர்த்திய

அமையா வாழ்க்கை அரைசர் வாய்மொழி

Here is a reference to Himalayan saints visiting Chera country (present Kerala).

The king makes a declaration before his Himalayan journey : “If the remarks of the kings of the north, who lead insecure lives, communicated to me by saints residing in the Himalayas (Tapasvi is used the word by poet Ilango), when they came here are to be passed over in silence. That will cause humiliation to kings such as ourselves. So , if my unfailing sword does not successfully help me to make northern kings carry on their crowned heads the stone on which the deity’s image is to be carved, and if I fail to strike terror into the hearts of my enemies who are ardently war like and who wear glittering anklets, may I become to wielder of a striking terror in the subjects of my own fertile regions.

நம்பா லொழிகுவ தாயி னாங்க·து

எம்போல் வேந்தர்க் கிகழ்ச்சியுந் தரூஉம்

வடதிசை மருங்கின் மன்னர்தம் முடித்தலைக்

கடவு ளெழுதவோர் கற்கொண் டல்லது

வறிது மீளுமென் வாய்வா ளாகில்

xxxx

வில்லவன் கோதையொடு வென்றுவினை முடித்த
பல்வேற் றானைப் படைபல ஏவிப்
பொற்கோட் டிமயத்துப் பொருவறு பத்தினிக்
கற்கால் கொண்டனன் காவல னாங்கென்.

Villavan Kothai was minister and commander in chief of Chera King. After the task of getting a stone for Goddess Pattini from the Golden Crested Himalaya, started to carve a Goddes of Chastity (Pattini= Kannaki have been made a deity)

Golden Crested= Kaanchana Srngam= Now corrupted to Kanchenjunga

xxxx

நீர்ப்படைக் காதை  Bathing it in the Holy Ganges

வடபே ரிமயத்து வான்றரு சிறப்பிற்

கடவுட் பத்தினிக் கற்கால் கொண்டபின்

சினவேன் முன்பிற் செருவெங் கோலத்துக்

கனக விசயர்தங் கதிர்முடி யேற்றிச்ன

After the stone slab brought from the renowned Himalayas in the north had been carved into the figure of the goddess Pattini, it was placed on the resplendent crowns of Kanaka and Vijaya, the Aryan kings defeated by King Senguutuvan.

xxxx

வாழ்த்துக்காதை  Blessing

உரைப் பாட்டு மடை”

1

குமரியொடு வட இமயத்து

ஒருமொழி வைத்து உலகு ஆண்ட

சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச்

சோழன் மகள் ஈன்ற மைந்தன்,

கொங்கர் செங் களம் வேட்டு,

கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய

செங்குட்டுவன், சினம் செருக்கி

வஞ்சியுள் வந்து இருந்தகாலை;

வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர்

மடவரலை மாலை சூட்டி

உடன் உறைந்த இருக்கை-தன்னில்,

ஒன்று மொழி நகையினராய்,

‘தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர்

செரு வேட்டு, புகன்று எழுந்து,

மின் தவழும் இமய நெற்றியில்

விளங்கு வில்புலிகயல்பொறித்த நாள்,

எம் போலும் முடி மன்னர்

ஈங்கு இல்லை போலும்’ என்ற வார்த்தை,

அங்கு வாழும் மாதவர் வந்து

அறிவுறுத்த இடத்து ஆங்கண்,

உருள்கின்ற மணி வட்டைக்

குணில் கொண்டு துரந்ததுபோல்,

இமய மால் வரைக் கல் கடவுள் ஆம்’

என்ற வார்த்தை இடம் துரப்ப;

ஆரிய நாட்டு அரசு ஓட்டி,

அவர் முடித்தலை அணங்கு ஆகிய

பேர் இமயக் கல் சுமத்தி,

பெயர்ந்து போந்துநயந்த கொள்கையின்,

கங்கைப் பேர் யாற்று இருந்து,

நங்கை-தன்னை நீர்ப்படுத்தி,

அம்மானை

கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண,

வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் யார்அம்மானை?

வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்

குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன்காண், அம்மானை:

கொற்றவன் பூம் புகார் பாடேலோர், அம்மானை.

Here Ilango uses the expression of Kalidasa Devataatmaa Himalaya இமய மால் வரைக் கல் கடவுள் ஆம்’It is in Sangam Tamil Books as well. Himalaya is considered God by the Hindus for many reasons. Goddess Parvati (Daughter of Parvata) is from the Himalayas; moreover the abode of Lord Siva- Kailash- is in the Himalayas. All other points are repeats from the early parts of the epic.

The points made here are:

Cheras ruled from Kanyakumari to Himalayas. Angry Chera king defeated northern chieftains who mocked at the Tamil Kings. Chera king forced them to carry the holy stones on their head and bathed it in the River Ganga.

Tiger emblem of the Chozas was also inscribed on the Himalayas.

The epic gives credit to all the three kings of Tamil Nadu carving their emblems of Chera, Choza, Pandyas (fish emblem) on the Himalayan rocks.

Used books and sources: The Cilappatikaram by Prof. V R Ramachandra Dikshitar, Traslation in English; Project Madurai, TVU

To be continued………………………….

—subham—

Tags – Tamil Epic, Silappadikaram, Cilappatikaram, Anklet, Kannaki, Kovalan, Goldsmith, Himalaya, Burning Madurai, Executing 1000 goldsmiths, River Ganga, Pattini, Goddess of Chastity, Kanaka, Vijaya, carving emblems, Northern mountain, Kanchana srngam, Kanchenjunga, Golden crested, From Rig Veda to Tamil Poet Bharati; Part- 4

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 6 (Post No.13,578)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,578

Date uploaded in London – 24 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 6

முதலில் கம்பன் சொல்லும் சுவையான விஷயத்தைக் காண்போம்

அனுமாருக்கு இரண்டு இறக்கை! கம்பன் புதுத் தகவல்!

குட்டி யானைக்குக் கொம்பு முளைச்சதாம் பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சாமென்று சிறு வயதில் பாடக் கேட்டிருப்போம்.

கம்பன் சொல்கிறான் அனுமனுக்கு இரண்டு இறக்கைகள் என்று; அதை வைத்துதான் அவன் பறந்தானாம்.

அதுவும் அனுமன் வாயிலாகவே அதைச் சொல்லுகிறான். படிக்கச் சுவையாக இருக்கிறது.

இதோ அந்தப் பாடல்

முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர்

உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்த தேனும்

இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு பாலும்

கற்றை வார் சிறைகள் ஆகக் கலுழனின் கடப்பல் காண்டீர்

 பொருள்:-

கடலால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் முழுகச் செய்து அழிக்கும் பொருட்டு கடல் பொங்கி வந்தாலும் (சுனாமி ஏற்பட்டாலும்),  இந்த உலக உருண்டையே உடைந்து போய் உயர்ந்து வானத்தில் சென்றாலும், சற்றும் கலங்காமல் கருடன் (கலுழன்) போல இக்கடலைக் கடந்து செல்வேன். எப்படியெனில் எனக்கு இரண்டு இறக்கைகள் முளைத்துள்ளன. ஒரு இறக்கை நீங்கள் எல்லோரும் என் மீது வைத்துள்ள கருணை; மற்றொரு இறக்கை இராமபிரான் போட்ட கட்டளை! நான் கடலைக் கடப்பதைக் காணத்தான் போகிறீர்கள்!

என்ன அருமையான கற்பனை. கருணை/அன்பு என்ற ஒன்றும் தலைவனின் கட்டளை என்ற ஒன்றும் அனுமனை கடலையே கடக்க வைத்துவிட்டது. இவைதான் இரண்டு இறக்கைகள் (சிறைகள்)..

இந்தப் பாடலில் உள்ள சில விஞ்ஞானச் செய்திகளையும் அலசி ஆராய்வோம். வெள்ளைக்காரன் எழுதிய புத்தகங்களில் எல்லாம் ஏதோ பூமி உருண்டை என்பதை அவந்தான் கண்டு பிடித்தான் என்று எழுதியிருப்பார்கள். ஆனால் நாமோ பூமியைக் குறிப்பிடத் தொடங்கிய நாளிலிருந்தே அண்டம் (முட்டை) என்ற சம்ஸ்கிருதச் சொல்லையே பயன்படுத்துவோம். பூமி முட்டை வடிவமானது என்பதோடு கடலால் சூழப்பட்டது என்பதையும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லுவோம்.

அது மட்டுமல்ல; சுனாமி போன்ற பெரிய தாக்குதலில்– இயற்கைச் சீற்றத்தில் உலகமே முழுகி பெரும் பிரளயம் வரும் என்பதும் நமக்குத் தெரியும்.. அண்ட சராசரங்கள் என்ற சம்ஸ்கிருதச் சொற்றொடர் மூலம், இந்தப் பிரபஞ்சமே வட்டவடிவமனது என்பதையும் நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டோம்.

xxxx

ஹனுமான் சாலீஸாவின் மேலும் நான்கு பாடல்களை எடுத்துக்கொள்வோம்-

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா

ராம லக்ஷமண ஸுதா மன பஸியா

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா

விகட ரூப தரி லங்க ஜராவா

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே

ராமசந்த்ர கே காஜ் ஸவாரே

11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ

 ரகுவீர ஹரஷி உர லாயே

இந்த நான்கு ஸ்லோகங்களின் பொருள்

8.ராம பிரானுடைய கல்யாண குணங்களைக் கேட்டு மகிழ்கின்றீர்கள் ராமர், சீதை, லெட்சுமணன் ஆகியோர் இருதயத்தில்/ உள்ளத்தில் குடிகொண்டுள்ளீர்கள். தாங்களும் அவர்களை உங்கள் உள்ளத்தில் வைத்திருக்கிறீர்கள் .

9.சீதையின் முன்னர் தோன்றியபோது சின்ன வடிவத்துடனும் இலங்கையத் தீக்கிரையாக்கியபோது பெரிய வடிவத்துடனும் தோன்றினீர்கள்.

10.அரக்கர்களை அழித்தபோது கோர உருவம் எடுத்து அவர்களின் கதையை முடித்தீர்கள் இவ்வாறு செய்து ராமனின் அவதார பனி நிறைவேற உதவினீர்கள்.

11.சஞ்சீவி பர்வதத்தைக் கொணர்ந்து, லட்சுமணனை உயிர்ப்பித்தவுடனே ராமர் மகிழ்ந்து போய் , உங்களைக் கட்டிக்கொண்டார் .

இவை நான்கும் ஹனுமானின் வீரப்பிரதாபங்களை நினிய்வு கூறுகின்றன. இவை எல்லாம் அவர் செய்த சூப்பர்மேன் டார்ஜான் வேலைகள் !

xxxxx

ஹனுமான் பற்றி புரந்தரதாசர், தியாகராஜர் , முத்துசாமி தீட்சிதர் போன்றோரும் அருணகிரிநாதரும் கிருதிகளில் குறிப்பிடுகிறார்கள்  சில கிருதிகளை மேற்கோள்களாக எடுத்துக் கொள்வோம்.

திருப்புகழில் ராமாயண சுந்தர காண்டம்

உடுக்கத் துகில்வேணு நீள்பசி

    யவிக்கக் கனபானம் வேணுநல்

     ஒளிக்குப் புனலாடை வேணுமெய்  யுறுநோயை

ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்

    இருக்கச் சிறுநாரி வேணுமொர்

    படுக்கத் தனிவீடு வேணுமிவ்       வகையாவுங்

கிடைத்துக் க்ருஹவாசி யாகிய

   யக்கக் கடலாடி நீடிய

    கிளைக்குப் பரிபால னாயுயி          ரவமேபோம்

க்ருபைச்சித் தமுஞான போதமு

   மழைத்துத் தரவேணு மூழ்பவ

     கிரிக்குட் சுழல்வேனை யாளுவ  தொருநாளே

குடக்குச் சிலதூதர் தேடுக

    வடக்குச் சில தூதர் நாடுக

    குணக்குச் சில தூதர் தேடுக       வெனமேவிக்

குறிப்பிற் குறிகாணு மாருதி

     யினித்தெற் கொருதூது போவது

     குறிப்பிற் குறிபோன போதிலும்    வரலாமோ

அடிக்குத் திரகார ராகிய

     அரக்கர்க் கிளையாத தீரனு

     மலைக்கப் புறமேவி மாதுறு       வனமேசென்

றருட்பொற் றிருவாழி மோதிர

     மளித்துற் றவர்மேல் மனோகர

      மளித்துக் கதிர்காம மேவிய         பெருமாளே — கதிர்காமம் திருப்புகழ்

xxxxx

பொருள்

குடக்கு  சில தூதர் தேடுக

வடக்கு சில தூதர் நாடுக

குணுக்கு சில தூதர் தேடுக என மேவி

குடக்கு = மேற்கே சில தூதர்கள் = சில தூதுவர்கள்

தேடுக = (சென்று) தேடுங்கள் வடக்குச் சில தூதர்கள் = வட திசைப் புறம் சென்று சில தூதர்கள் நாடுக =தேடுங்கள்

குணக்கு = கிழக்கே சில தூதர்கள் தேடுக = தேடுங்கள் என மேவி = என்று கூறி அனுப்பி வைத்து.

குறிப்பில் குறி காணும் மாருதி

இனி தெற்கு ஒரு தூது போவது

குறிப்பில் குறி போன போதிலும் வரலாமோ

குறிப்பில் குறி காணும் = குறிப்பினாலேயே குறித்த பொருளைக். காணவல்ல மாருதி = அனுமன்.

இனி தெற்கு ஒரு தூது போவது = இனி தெற்கே ஒப்பற்ற தூதுவனாகப் போக வேண்டியது குறிப்பில் =

சொல்லியனுப்பிய குறிப்பு விவரத்தின்படி குறி போன

போதிலும்= குறித்த பொருள் கிட்டுதல் தவறிப் போன போதிலும்  வரலாமோ = திரும்பி வீணே வருதல் நல்லதோ (நல்லதல்ல என்று சுக்கிரீவன் சொல்லி அனுப்ப).

அடி குத்திரகாரர் ஆகிய

அரக்கர்க்கு இளையாத தீரனும்

மலைக்கு அப்புறம் மேவி மாது உறு வனமே சென்று

அடி = சுத்த குத்திரர்காரர் ஆகிய =வஞ்சகர்களாகிய

அரக்கர்க்கு இளையாத = அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனும் = தீரனாய் அலைக்கு அப்புறம் மேவி = கடலைத் தாண்டி அப்புறம் (இலங்கைக்குச் சென்று) மாது உறும் வனமே சென்று = மாதாகிய சீதை இருந்த அசோக வனத்தை அடைந்து.

அருள் பொன் திரு ஆழி மோதிரம்

அளித்து உற்றவர் மேல் மனோகரம்

அளித்து கதிர் காமம் மேவிய பெருமாளே.

அருள் = இராமர் தந்தருளிய பொன் = அழகிய

ஆழி மோதிரம் அளித்து = ஆழி மோதிரத்தைக் கொடுத்தவராகிய உற்றவர் மேல் = அனுமனுக்கு

மனோகரம் அளித்து = அன்புடன் அனுக்கிரகம் செய்து கதிர் காமத்தில் மேவிய = கதிர்காமத்தில் வீற்றிருக்கும் பெருமாளே= பெருமாளே.

xxxxx

இலங்கையில் ‘அஞ்சிலே ஒன்றான’ அக்னியைப் பரவச் செய்த அஞ்சனை மைந்தன் ஆற்றலை சந்தம் கொஞ்சச் சாற்றுகிறார் அருணகிரியார்.

இலங்கையில் இலங்கிய இலங்களுள்

இலங்கு அருள் இல் எங்கணும்

இலங்கு என முறை ஓதி இடும் கனல் குரங்கு

xxxx

தியாகராஜர் கிருதி

ப. பாஹி ராம தூ3த ஜக3த்-ப்ராண குமார மாம்

அ. வாஹி(னீ)ஸ1 தரண த3ஸ1 வத3ன ஸூனு தனு ஹரண (பா)

ச1. கோ4(ரா)ஸுர வாரான்(னி)தி4 கும்ப4 தனய க்ரு2த கார்ய

பாரிஜாத தரு நிவாஸ பவன துல்ய வேக3 (பா)

ச2. பாத3 விஜித து3ஷ்ட க்3ரஹ பதித லோக பாவன

வேத3 ஸா1ஸ்த்ர நிபுண வர்ய விமல சித்த ஸததம் மாம் (பா)

ச3. தரு(ணா)ருண வத3(னா)ப்3ஜ தபன கோடி ஸங்காஸ1

கர த்4ரு2த ரகு4வர ஸு-சரண கலி ம(லா)ப்4ர க3ந்த4 வாஹ (பா)

ச4. கருணா ரஸ பரிபூர்ண காஞ்ச(னா)த்3ரி ஸம தே3ஹ

பரம பா4க3வத வரேண்ய வரத3 த்யாக3ராஜ வினுத (பா)

Meaning

என்னைக் காப்பாய், இராம தூதனே! உலக மூச்சுக்காற்றின் மைந்தா!

கடலைத் தாண்டியவனே! பத்துத் தலையன் மைந்தனை வதைத்தவனே!

என்னைக் காப்பாய், இராம தூதனே! உலக மூச்சுக்காற்றின் மைந்தா!

1. கொடிய அரக்கரெனும் கடலினை, கும்ப முனி போன்று, வற்றடித்தவனே!

பாரிசாத மரத்தினடியில் உறைபவனே! வாயு நிகர் வேகத்தோனே!

என்னைக் காப்பாய், இராம தூதனே! உலக மூச்சுக்காற்றின் மைந்தா!

2. கால்களால் தீய கோள்களை வென்றவனே! வீழ்ந்தோரைப் புனிதப்படுத்துவோனே!

மறைகள் மற்றும் சாத்திரங்களில் வல்லோனே! தூய உள்ளத்தோனே! எவ்வமயமும்

என்னைக் காப்பாய், இராம தூதனே! உலக மூச்சுக்காற்றின் மைந்தா!

3. இளஞ்சூரியன் நிகர் கமல வதனத்தோனே! பரிதி கோடி ஒருங்கிணைந்த ஒளியுடையோனே!

இரகுவரனின் புனிதத் திருவடிகளைக் கையிலேந்துவோனே! கலி மலமெனும் கார்முகிலினை விரட்டும் புயலே!

என்னைக் காப்பாய், இராம தூதனே! உலக மூச்சுக்காற்றின் மைந்தா!

4. கருணை உணர்வு நிறைந்தோனே! பொன்மலை நிகருடலோனே!

தலைசிறந்த பாகவதர்களால் வேண்டப்படுவோனே! வரமருள்வோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!

என்னைக் காப்பாய், இராம தூதனே! உலக மூச்சுக்காற்றின் மைந்தா!

Word Meaning

உலக மூச்சுக்காற்று – வாயு

பத்துத் தலையன் மைந்தன் – இராவணின் மைந்தன் – அட்ச குமாரன்

கும்ப முனி – அகத்தியர்

தீய கோள்கள் – செவ்வாய் மற்றும் சனி

கலி மலம் – கலி யுகத்தின் தீயவைகள்

பொன்மலை – மேரு மலை

xxxxx

ராமனின் நாமம் ஒலிக்கும் இடம் எல்லாம் அனுமன் வந்து மறைவாக நின்று கொண்டு ஆனந்தக் கண்ணீர் விடுகிறார் என்று , எல்லோரும் சொல்லும் பிரபல ஸ்லோகமும் சொல்லும்:–

ஆஞ்சநேயமதி பாடலானனம் காஞ்சநாத்ரி கமனீய விக்ரஹம்|

பாரிஜாத தருமூலவாசினம் பாவயாமி பவமான நந்தனம்||

யத்ரயத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம்|

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்,மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்||

இதன் பொருள்

பவன குமாரனுக்கு/ காற்றின் மைந்தனுக்கு நமஸ்காரம்

 அஞ்சனையின் மைந்தனே அரக்கர்களை அழி ப்பவனே

பொன் மலை போல் உருவினன் , அழகிய வடிவுடையான்

பாரிஜாத மரத்துக்கு அடியில் வசிப்பவன்,

எங்கெங்கெல்லாம் ராம பிரானின் நாமம் கேட்கிறதோ

அங்கெங்கெல்லாம் இரு கரம் கூப்பி நின்று

ஆனந்தக் கண்ணீர் விடுகிறாய்

அப்பேற்பட்ட மாரு தியே , அரக்கர்களை அழித்தவனே

உன்னை வணங்குகிறோம்

To be continued……………………………………..

–subham—

Tags- ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 6, பாரிஜாத, ஆஞ்சநேயமதி பாடலானனம், காஞ்சநாத்ரி கமனீய விக்ரஹம்,

விஷ்ணு சஹஸ்ரநாம,  அதிசயங்கள்,  ரகசியங்கள், மேற்கோள்கள் Part–33 (Post No.13,577) Last Part

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,577

Date uploaded in London – 24 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –33

மநு பற்றிய  ரகசியங்கள்

மநு என்பவர் கடவுள் ; இறைவன் என்பவர் மநு; எப்படி?

விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் (வி.ச.) விஷ்ணுவின் பெயர்களில் மநு என்ற நாமமும் வருகிறது!

மநு ஸ்ம்ருதியில் 2685 ஸ்லோகங்கள் உள்ளன ; அவைகளில் சூத்திரர் களுக்கு எதிரான ஸ்லோகங்கள் 40 உள்ளன. அவைகளை வெள்ளைக்காரர்கள் அதில் இடைச் செருகலாக நுழைத்தனர். இந்தியாவைப் பிரித்தாள ,இந்து மதத்தை ஒழித்துக்கட்ட,  இது கடைசி வரை உதவும் என்று அவர்கள் நம்பினார்கள் .

அவர்கள் இதை புதிதாகப் புஸ்தகத்தில் சேர்த்ததற்கு என்ன ஆதாரம்?

இந்தியாவிலுள்ள எல்லா சம்ஸ்க்ருத நூல்களிலும் இடைச் செருகல் இருப்பதாகச்  சொல்லி ஒவ்வொன்றிலும்  ஒரு பிற்சேர்க்கை சேர்த்தவர்கள் மநு ஸ்ம்ருதி மட்டும்  அப்படியே கிடைத்திருப்பதாகச் சொல்லி , வேண்டாத ஸ்லோ கங்களையும் சேர்த்துவெளியிட்டுள்ளனர் ; ரிக் வேதத்தில் கூட கில — பிற்சேர்க்கை– இருப்பதாகக் கூறும் மாக்ஸ்முல்லர் கும்பல்,  மநு ஸ்ம்ருதி மட்டும் கலப்படம் இல்லாத அசல் அக்மார்க் முத்திரை ணெய் என்று அப்படியே கொடுத்துள்ளது; உலகிலேயே வெள்ளைக்காரன்இடைச்  செருகல் இல்லாது கொடுத்த ஒரே நூல் மனு நீதி ; வெள்ளைக்காரன் கொள்ளைக்காரன் என்பதை உலகெங்கிலும் உள்ள மியூசியங்கள் பறை சாற்றுகின்றன ; அவன் கொள்ளைக்காரன் மட்டுமல்ல ; கள்ளன் ! பெரிய கள்ளன் ! இடைச் செருகல்களை நீக்கிவிட்டால் உலகின் முதல் சட்ட புஸ்தகமான மநு ஸ்ம்ருதி புடமிட்ட பொன் போலும் உயரும் (மநு ஸ்ம்ருதி பற்றிய எனது 60 ஆராய்ச்சிக்கட்டுரைகளில் மேல் விவரம் உள்ளது.)சில கொள்கைகள் காலத்துக்கு ஒவ்வாதவையாக இருக்கலாம். தொல்காப்பியர் தமிழ்ப் பெண்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்கிறார்; பிராமணர்கள் வெளிநாட்டுக்குப் போகக்கூடாது என்று மநு சொன்னார் ; கணவன் என்வன் கடவுள் என்று சங்கத் தமிழ் நூல்களும் மனு ஸ்ம்ருதியும் சொல்லின; பெண்கள் அதைப்பார்த்து சிரிக்கிறார்கள்; கணவன், கடவுளுக்கும் மேலானவன்; அவனைக் காலையில் தினமும் கும்பிடு என்று சொன்ன திருவள்ளுவனைப் பார்த்து தமிழ் மாணவிகள் சிரி சிரி – என்று சிரிக்கிறார்கள் ; மாமிசம் சாப்பிடாமல் இருந்தால் உன்னை எல்லா உயிர்களும் கைக்கூப்பித் தொழும் என்றான் வள்ளுவன்; முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்; வள்ளுவன் நேரில் வந்தால் கட்டாயம் கல்லடிசொல்லடி இரண்டும் கிடைக்கும்

xxxx

மநுவின் காலம்

எல்லா நூல்களிலும் ஏன் காலத்துக்கு ஒவ்வாத செய்திகள் உள்ளன? ஏனெனில் அவை மிகவும் பழைய நூல்கள் மேலும்  அவை செயலுக்கு வ    த பகுதிகள் மிகவும் குறுகிய பரப்பு ; மநு கூட விந்திய மலையோடு முடிவடையும் ஆர்யாவர்த்துக்கு (எழுத்தறிவு உடைய பகுதிகள் ஆர்யாவர்த்தம்) மட்டுமே செல்லும் என்றும் சொல்லுகிறார். அவரது காலம்  வேதகாலத்தை ஒ ட்டியது

 Philologists Jones and Karl Wilhelm Friedrich Schlegel, in the 18th century, dated Manu smriti to around 1250 BCE and 1000 BCE respectively, இரண்டு மேல் நாட்டு மொழியியல் அறிஞர்கள் மநுவின் காலம் கிமு.1250, அதாவது இற்றைக்கு 3275 ஆண்டுகளுக்கு முந்தியது என்று சொல்லுகிறார்கள்; மநு கொடுக்கும் ஒரு தண்டனை சரஸ்வதி நதியை எதிர்த்து நடப்பதாகும்; சரஸ்வதி நதியோ மஹாபாரத காலத்திலே வற்றிவிட்டது ; அப்படியானால் அவர் வேத காலத்தை ஒட்டி வாழ்ந்தவர் என்பது தெளிவு.

யாரேனும் ஒருவன் மனு நூலை முழுதும் படித்தால் இது விளங்கும்; ஹமுராபிக்கும் முன்னர்,  முதல் சட்டப்  புஸ்தகத்தை எழுதியவர் அவர் என்பதால் லண்டனிலுள்ள , டயானா கல்யாணம் நடந்த, உலகப் புகழ் பெற்ற செயின்ட் பால் கதீட்ரலில் அந்த நூலின் பெயரை கையில் ஏ ந்திய வில்லியம் ஜோன்ஸ் சிலையை  வைத்துள்ளார்கள் (நான் சர்ச்சின் அனுமதி பெற்று உள்ளே சென்று புகைப்படம் எடுத்து இதே பிளாக்கில் வெளியிட்டுள்ளேன் )

xxxxx

மநு மர்மம் நீடிக்கிறது

ரிக்வேதம், பல  மனுக்களின் பெயர்களை சொல்கிறது ; ஆனால் இந்துக்களோ ஒரு மநுவுக்கும் இன்னொரு மநுவுக்கும் இடையே பிரம்மாண்டமான (மன்வந்தரம்) கால இடைவெளியைச் சொல்கிறது இந்துக்கள் தினசரி பூஜை சங்கல்பத்தில் அதை நம்பி இப்போது வைவஸ் வத மன்வந்தரத்தில் வாழ்வதாகவும் இன்னும் 7 பேர் வரப்போவதாகவும் சொல்கிறார்கள்;ரிக்  வேதப்   புதிரை எவரும் கண்டுகொள்ளவில்லை ; நான் எனது கருத்தினை வெளியிட்டிருந்தேன் ; அந்தக்கால ரிஷிகள் அப்படிப் பெயர் வைத்துக்கொண்டு இருக்கலாம் என்று ; இன்று நான் எனது பேரக்குழந்தைகளுக்கு செங்குட்டுவன், ராஜராஜா ரான் , மஹேந்திர பல்லவன் என்று பெயர் வைக்கலாம் அல்லவா ? அது போல 14 மனுக்களின் பெயர்களில் சிலவற்றை ரிக்வேத ரிஷிகள் வைத்துக்கொண்டனர் போலும்!

மானவ என்பது குடும்பப்பெயர் ; இதோ ரிக்வேதத்தில் உள்ள மனுக்கள்.

இப்போது நாம் ஏழாவது மனுவின் ஆட்சிக்காலத்தில் உள்ளோம் என்று இந்துக்கள் நடத்தும் பூஜா  சங்கல் பத்தில் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் .

முதல் ஆறு பேர் :ஸ்வயம்புவ ,ஸ்வரோசிச, உத்தம, தாமஸ , ரைவத சக்ஷுச ; இப்போது ஏழாவது மனு – வைவஸ்வத

இந்தப் பின்னனியோடு வி.ச.வுக்கு வருவோம்.

xxxx

ஸ்வயம்புவ — நாமத்தின் எண் 37–

ஆதி சங்கரர் சொல்கிறார் ;

தாமாகவே தோன்றியவர் அவரை யாரும் தோற்றுவிக்கவில்லை 

அவர் எல்லாவற்றுக்கும் முன்னர் இருந்தார் -மனு 1-6

योऽसावतीन्द्रियग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः ।

सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुद्बभौ ॥ 1-७ ॥

yo’sāvatīndriyagrāhyaḥ sūkṣmo’vyaktaḥ sanātanaḥ |

sarvabhūtamayo’cintyaḥ sa eva svayamudbabhau ||1- 7 ||

1-6. Then the divine Self-existent (Svayambhu, himself) indiscernible, (but) making (all) this, the great elements and the rest, discernible, appeared with irresistible (creative) power, dispelling the darkness.

1-7. He who can be perceived by the internal organ (alone), who is subtile, indiscernible, and eternal, who contains all created beings and is inconceivable, shone forth of his own (will).

புலன்களால் அறிய முடியாதவன்நுண்ணியன் காலத்தால் அழியாதவன் யாராலும் தோற்றுவிக்கப்படாதவன் –1-7  மனு

xxxx

மநுஹு – நாம எண் 51–

மனத்தினால் எண்ணுபவன் மனு/ மனிதன் – பிருஹத் ஆரண்யக உபநிஷத் 3-7-23

ந அந்யதஹ  அஸ்தி மந்தா – அவரைக்காட்டிலும் வேறாக நினைப்பவர் இல்லை.

மனஸோ மனஹ – கேன உபநிஷத் 1-2

xxxx

பூர் — புவஹ – ஸ்வஸ்தருஹு – நாம எண் 967-

பொருள்

பூ லோகம் புவர்லோகம், ஸுவர் லோகம் என்ற மூன்று உலகத்தையும் வியாபிக்கும் ஸம்ஸார  விருட் வடிவினர். அல்லது

பூஹு , புவஹ , ஸுவஹ   என்ற வ்யாஹ்ருதி  மந்திரங்களால் உலகை வழி நடத்தி வைப்பவர்.

பட்ட பாஸ்கரர் எழுதிய வி.ச.  உரையில் கூறுவதாவது:பூ லோகம் புவர்லோகம், ஸுவர் லோகம் என்ற மூன்று உலகங்களிலும் உள்ள பிராணிகள் பழுத்த மரத்தை அடுத்துள்ள பறவைகள் ஜீவிக்கும்படி இருப்பவர்.

Agnau prastaa’hutih samyag aadityam upatisthate

Aadityaad jaayate vrstir vrster annam tatah prajaah

மனு ஸ்ம்ருதி சொல்வதாவது :

அக்னெள ப்ரஸ்தாஹுதிஹி  சம்யக் ஆதித்யம் உபதிஷ்டதே

ஆதித்யாத் ஜெயதே வ்ருஷ்டிர்   வ்ருஷ்டேர் அன்னம் ததா ப்ரஜாஹா

பூமியில் அக்கினியில் போடும் ஆகுதிகள் (பொருட்கள்) சூரியனை அடைகிறது; அவனது வெப்பத்தால் மழை உண்டாகிறது ; மழை மூலம் உணவுப் பொருட்கள் விளைகின்றன ; அவற்றை உண்டு மக்கள் வாழ்கிறார்கள் .

(இதே போல ஒரு ஸ்லோகம் பகவத் கீதையிலும் வருகிறது; அதாவது யாகத்தினால்தான் மழை உண்டாகி, தானியங்கள் உண்டாகி, மனிதன் உண்டாகிறான் ).

—subham—

Tags- மநு , மழை , ஸ்வயம்பூ , அன்னம், வி.ச., பட்ட பாஸ்கரர், கடைசி பகுதி, Part 33, Last Part , ஆதி சங்கரர், விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –33

ஆறு நூறு கோடியில் ஒருத்தியம்மா நீ! (Post No.13,576)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.576

Date uploaded in London – 24 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

ஆறு நூறு கோடியில் ஒருத்தியம்மா நீ! 

ச. நாகராஜன் 

பிரச்சினைகளே இல்லாதவர்கள் உலகில் உண்டா? சிக்கலான இந்தக் கேள்விக்கு நார்மன் வின்செண்ட் பீல் ஒரு முறை பதில் அளித்தார். “அப்படி பிரச்சினையே இல்லாதவர்கள் ஏராளமானோரை எனக்குத் தெரியும். அவர்கள் இருக்கும் இடம் கல்லறை!” என்றார் அவர்.

உன்னால் சாதிக்க முடியும் என்று நீ நினைத்தாலோ அல்லது சாதிக்க முடியாது என்று நீ நினைத்தாலோ, நீ நினைத்தது தான் சரி” என்றார் மோட்டார் மன்னர் ஹென்றி போர்டு.

“மலைச் சிகரத்தைக் குனியச் சொல்ல முடியாதல்லவா, அதனால் அதன் மீது ஏறித்தான் அதை வெல்ல முடியும்” என்றார் டாட் ஸ்கின்னர்!

கற்பனைக்கும் அப்பாற்பட்ட தடைகளை உடைத்துச் சாதனை படைத்த பெண்மணிகள் ஏராளமானோர் உண்டு. அவர்களைப் பற்றி முழுவதுமாக அறிய முனையும் போது மலைத்துத் திகைத்துப் போவோம்.

உலகின் ஒப்பற்ற ஒரு சிறுமியான பனிரெண்டே வயதான அயி, இந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் முன்றாம் தேதி பூஜ்யர் தலாய்லாமா முன்னர் ஒரு இசையை இசைத்தாள். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்கிறீர்களா?

அயிக்குப் பார்வை இல்லை. அவள் வளர்ச்சி குன்றிய சிறுமி. நான்கு வயது குழந்தைக்கு இருக்கும் பிஞ்சு விரல்களால் அவளால் பியானோவையே அளக்க முடியாத போது கரை காணாத கடலான இசையையே அளந்து விட்டாள்!

தலாய்லாமா புன்சிரிப்புடன் அவளை ஆசீர்வதித்தார்.

ஜேனட் ஆண்டர்ஸன் தான் அயிக்கு சங்கீத குரு. ஜேனட் அமைத்த பாடலை அயி இசைக்க தலாய்லாமா ஆசீர்வதிக்க கூட்டமே உருகிப் போனது! உலகிலேயே ஒரே ஒருவருக்கு இருக்கும் வியாதி அயிக்கு உள்ளது. உலகின் ஆறு நூறு கோடிப் பேரில் அயிக்கு மட்டுமே இந்த “ஒப்பற்ற” வியாதி உள்ளது. இந்த வியாதி என்ன என்று இனம் கண்ட இரண்டே இரண்டு பேர் இதற்கு ‘சால்டினோமைன்ஜர் சிண்ட்ரோம்” என்று நாமகரணம் சூட்டியுள்ளனர். இது ஒரு மூன்றடுக்கு வியாதி.

அயிக்குக் கண் பார்வை தெரியாததோடு முதுகெலும்பு கோணலானது. மூன்று கோணலுடன் முதுகெலும்பு இருப்பதால் அயியின் இயக்கம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவள் வீல் சேரில் அடக்கம். அடுத்து அவளுக்கு சிறுநீரகமும் பழுதடைந்து உள்ளது.

எடின்பரோவில் உள்ள ராயல் ப்ளைண்ட் ஸ்கூலில் விசேஷமான கம்ப்யூட்டரில் அயி பயின்று ஆச்சரியங்களைச் செச்ய்கிறாள் என்றால் அவளது மன உரம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?!

உலகின் பிரபல இசை அமைப்பாளரான பாயிகோ, தானே நேரில் வந்து அயியின் சி.டி. ரிகார்டிங்கை முன்னின்று நடத்தி வைத்தார். இதனால் வரும் நிதி இந்தியக் குழந்தைகளின் நலத்திற்கு வந்து சேரும்!

பெரிய பியானோவில் அயி பீத்தோவனின் இசையை இசைக்க அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பீத்தோவனின் அந்த மாஸ்டர் இசையை அயி கேட்பது அன்று தான் முதல் முறை. கேட்டவுடன் அவள் அதை இசைத்து விட்டாள்! காது கேளாத

இசைமேதை பீத்தோவனுக்குத் தான் கண் தெரியாத அயியின் மேதைத் தன்மை தெரியுமோ என்னவோ!

வீல் சேரில் உலகம் நடத்தும் அயியிடம் எதிர்காலம் பற்றிக் கேட்டால், “இந்தக் கணத்தில் நான் வாழ்கிறேன்” என்கிறாள்.

இந்தக் கணம் …. எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை!

“தி பவர் ஆஃப் நௌ” என்ற புத்தகத்தை எழுதிய பிரபல நூலாசிரியர் எக்கார்ட் டாலி தனது நூலை இப்படி ஆரம்பிக்கிறார்:

“முப்பது வருடங்களாக தெருவோரத்தில் அமர்ந்து அந்த பிச்சைக்காரன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.

வழிப்போக்கன் ஒருவன் அவனது அருகில் செல்லவே, “ஏதேனும் சில்லறை இருக்கிறதா?” என்று பிச்சைக்காரன் கேட்டான்.

“ஒன்றும் இல்லையே” என்று பதிலிறுத்த அந்த அந்நியன், “நீ எதன் மீது உட்கார்ந்திருக்கிறாய்” என்று கேட்டான்.

“பெட்டி. பழைய பெட்டி!. முப்பது வருடமாக இதன் மீது தான் அமர்ந்திருக்கிறேன்” என்றான் பிச்சைக்காரன்.

“உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தாயா?” என்று கேட்டான் அந்நியன்.

“இல்லை, அதில் பார்க்க ஒன்றும் இருக்காது.”

“திறந்து தான் பாரேன்”

பிச்சைக்காரன் பெட்டியைத் திறந்து பார்த்தான். பெட்டி முழுவதும் தங்கம்!

இந்தக் கணத்தில் இருக்கும் தங்கத்தை விட்டுவிடாமல், எந்தவித குறையும் இல்லாமல் உடுக்க உடை, உண்ண உணவு, இருக்க இடம் என்று எல்லாமும் கொண்டுள்ள சினேகிதிகளாலும், சினேகிதர்களாலும், அயியைப் போல சாதனை படைக்க முடியாதா, என்ன?

மலைச் சிகரத்தைக் குனியச் சொல்லாமல் அதன் மீது ஏறி வெல்லத் தயராகலாமல்லவா?

இந்தக் கணம்…. இந்தக் கணமே சத்தியம். அந்த முயற்சியை ஆரம்பிக்க!

**

சினேகிதி மாத இதழில் 2006, டிசம்பர் மாதம் வெளியான கட்டுரை.

Ramayana Sculptures from Indonesia- Batch 1 (Post No.13,375)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,575

Date uploaded in London – 23 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Indonesia is the largest Muslim country in the world. It has 13,000 islands including large islands like Java, Sumatra and Borneo. Borobudur and Prambanan are famous for their Buddhist and Hindu sculpture. Borobudur Buddhist stupa was constructed in Sri Chakra shape. Though it is a Buddhist monument it has a lot of Mahabharata and Ramayana sculptures. I will publish them in batches—about 125 pictures.

The pictures are from 100 year old German book.

Hindus ruled South East Asia for 1500 years until 16th century; but in Indonesia influence of Sanskrit and Hindu epics can be seen even today. They have regular dramas and puppet shows on Hindu stories.

to be continued…………………………………………

—subham—

Tags– Ramayana Sculptures from Indonesia, Batch 1, . Borobudur , Buddhist stupa, Prambanan

List of 130 German Sanskrit Scholars (Post No.13,574)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,574

Date uploaded in London – 23 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

Following is the list of 130 German Sanskrit and Indology scholars including Max Muller . Those who have heard about Max Muller may not know these names. Theodore Goldstucker has done tremendous research on Panini. Many others have done great work in translating the Upanishads.

Here is the list from the book which has got a brief biography on each one of them.

INDEX

—subham—

Tags– List of, 130 German Sanskrit Scholars, Indologists list

அனுமன் சிவனின் அவதாரம்;  ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 5 (Post.13,573)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,573

Date uploaded in London – 23 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

அனுமன் சிவனின் அவதாரம்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 5

முதலில் சுவையான கதைகளைக் கேட்போம்

பணிவுக்கும் துணிவுக்கும் மட்டும் பெயர் எடுத்தவர் ஆஞ்சனேயர் என்று எண்ணிவிடக்கூடாது; கண்மூடித்தனமான பக்திக்கும் அவர் எடுத்துக்காட்டு இதை   தாஸ்ய பக்தி என்பர். ராமதாஸனாக  விளங்கும் அவரை கிஷ்கிந்தா காண்டத்திலும், சுந்தர காண்டத்திலும் , யுத்த காண்டத்திலும் காணலாம்

இதோ ஒரு கதை :

ஜாம்பவான் மூலம் அனுமனின் பக்தியையும் அளவுகடந்த திறமையையும் அறிகிறோம்; பிராம்மாஸ்த்திரத்தின் தாக்குதலால் , போர்க்களத்தில்  லெட்சுமணன் உளப்பட அனைவரும் மூர்ச்சசையாகி இருக்கின்றனர்; ஆனால் விபீஷணன் பாதிக்கப்படவில்லை; அவர் ஒவ்வொருவர் அருகிலும் வந்து உடல்நிலையைச் சோதிக்கிறார். ஜாம்பவான் அருகில் வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி :

ஆஞ்சனேயர் உயிருடன் இருக்கிறாரா ?

விபீஷணனுக்கு ஒரு அதிர்ச்சி. ராமர், லட்சுமணர், சுக்ரீவன், அங்கதன் முதலியோர் பற்றிக் கேட்காமல் ஏன் அனுமன் பற்றி மட்டும் விசாரிக்கிறீர்?

என்று வினவினார் விபீஷணன் ..

ஜாம்பவான் பதில் சொல்கிறார் :

அனுமன் ஒருவன் உயிரோடு இருந்தால் அனைவரும் பிழைத்துவிடுவார்கள் அவன் புத்திமான்; பலவான்; காற்றினும் கடுகிச் செல்பவன் அவன் எல்லோருக்கும் உயிர்ப்பிச்சை அளிக்க  முடியும் . இதை ராமாயணக் கதையிலும் காண்கிறோம்; சஞ்சீவி பர்வதத்தையே பெயர்த்து எடுத்து வந்து — ஆக்சிஜன் சிலிண்டர்  பொருத்தியது போல– அனைவருக்கும் உயிர்மூச்சினை உண்டாக்கினார்

xxxxxx

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் இயற்றிய கிருதிகளில் சுமார் 700, இப்பொழுது கிடைக்கின்றன. அவற்றில் இரண்டு இசை நாடகங்களும் உள்ளன.

அவர் ராமரைப் பற்றிப் பாடும்போது அனுமனையும் குறிப்பிடுகிறார். இது பற்றி ஒரு  கதை சொல்கிறார்கள் 

ஒரு நாள் தியாகராஜரின் பாட்டில் மயங்கிய ராமபிரான் , மாறுவேடத்தில் தியாகராஜர் வீட்டுக்கு வந்தாராம். அவருடன் ஹனுமானும்  சீதாதேவியும் மாறு  வேடத்தில் வந்தனர். அவர்களை நன்றாக அறியாதபோதிலும் விருந்து உண்டபின்னரே விடைபெற வேண்டும் என்று வேண்டினார். எல்லோரும் சாப்பிட அமர்ந்தபோது வழக்கம்போல, அனுமன் அவர்களுக்கு சுவையான உணவுகளைப் பரிமாற ஆயத்தமானார் ; தியாகராஜரோ , விருந்தாளிகளுக்குத் தானே பரிமாற வேண்டும் என்று எண்ணி அநுமானைப் புறக்கணித்தார்  உடனே ராமன் தலையிட்டு அனுமனைத் தடுத்து நிறுத்தி, தியாகராஜரே பரிமாறட்டும் என்றாராம். அப்போது தன்னிடத்தில் தியாகராஜருக்கு எவ்வ்வளவு பக்தி உண்டோ அவ்வளவு பக்தி  அனுமானிடத்திலும் உண்டு என்று இராமபிரான் சொன்னாராம் ; அது உண்மை என்பதை தியாராஜரின் கிருதிகளில் காண்கிறோம்.

xxxx

சிவ பெருமானின் அவதாரம் தான் ஹனுமான் என்பதற்கு குறைந்தது மூன்று இலக்கிய ஆதாரங்கள்  இருக்கின்றன.

அதில் ஒரு ஆதாரம் , முருகன் புகழ் பாடிய திருப்புகழில்  கிடைக்கிறது. இந்த 3 ஆதாரங்களும்   ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையானது ; வால்மீகி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய ராமாயணம்தான் மிகவும் பழமையானது என்றாலும்  பரந்த பாரத பூமியில் செவி வழியாக வந்த எவ்வளவோ செய்திகள் 3000 ராமாயணங்களிலும் ராமன் பற்றிய பாடல்களிலும் கிடைக்கின்றன. இவைகளை எல்லா மொழிகளிலும் இருந்தும் தொகுத்து புஸ்தகமாக வெளியிட்டால் அவை பல தொகுதிகளாக, ஒருவேளை பல நூறு தொதகுதிகளாக வர வேண்டியிருக்கும். கடல் அளவுக்குப் பெருகியது ராமாயணம்; தென்கிழக்கு ஆசியாவுக்குப் பயணம் செய்தால் அங்குள்ள அதிசய வினோத ராமாயணங்களில் நாம் அறியாத புதிய கதைகளைக் கேட்டு ரசிக்கலாம்; அதில் வியப்பில்லை. நம்முடைய சம்ஸ்க்ருத பெயர்கள்,  இந்தியாவுக்கு வெளியே எத்ததனை விதமான ஸ்பெல்லிங்க்குகளில் எழுதப்படுகிறது என்ற விநோதத்தைக் கண்டால் ,  இன்னும் வியப்பாக இருக்கும்; பல நாட்டுத் தமிழ் மாணவர்களின் பரீட்சைத் தாள்களைத் திரு த்தியபோது இந்த விநோதத்தைக் கண்டேன். மாரி முத்து என்பது மர்டர் முத்து ஆகியிருந்தது ; தேவி என்பது தீவை ஆகியிருந்தது; பாவம் அவர்களுக்கு பெயர்களின் பொருளும் தெரியாது . நிற்க

xxx

அனுமனின் தாயின் பெயர் அஞ்சனா (அஞ்சனை ); தந்தையின் பெயர் கேசரி . அஞ்சனா என்ற பெண்மணி , சிவபெருமானை வேண்டி பெற்றபிள்ளை அனுமன் என்று பாவார்த்த  ராமாயணம் கூறுகிறது. இதை எழுதியவர் மராட்டிய பூமியில் அவதரித்த மஹான் ஏக நாதர் .

தசரதன், புத்ர காமேஷ்டி யாகம் செய்த பின்னர் யாக குண்டத்திலிருந்து வந்த பாயசத்தை மூன்று மனைவியருக்கும் பிரித்துத் தந்ததை வால்மீகி நமக்குச் சொன்னார். அதில் கீழே சிந்திய ஒரு பகுதியை கருடன் எடுத்துச் செல்லவே , அது அஞ்சனை தவம் செய்த காட்டில் விழுந்தது; அதை வாயு பகவான் அஞ்சனை இடம் தந்தான். அவளும் சிவனை நினைந்து அதை அருந்தவே கர்ப்பம் அடைந்து வாயுகுமாரனைப்  பெற்றாள் . பிறந்த குழந்தை சிவனுடைய அம்சத்துடன் பிறந்தது .

இன்னுமொரு கதை :

ராமன் என்னும் அவதாரம் ராவணன் என்னும் ராட்சசனை அழிக்க வந்தது ; அப்போது வைகுண்டத்தில் அல்லது சொர்க்கத்தில்  இருந்த ஒவ்வொருவரும் பூமியில் வெவ்வேறு பெயர்களில் தோன்றினார்கள். தேவர்கள் வானரங்களாகவும், சிவ பெருமான் அனு மானாகவும் அவதரித்து ராவண ஸம்ஹரத்தில் உதவினார்.

இதை ஏகநாதர் பாடல்களும் , அருணகிரி நாதரின் திருப்புகழும் , துளசிதாஸரின் ஹனுமான் சாலீசாவும் சொல்கினறன.

xxxx

இதோ அனுமான் சாலீஸா வரிகளும் , திருப்புகழும்:

அனுமன் சிவனின் அவதாரம்

கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று

கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி

கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து

கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை

அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி

அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது

அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ

இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி

இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன்

எரியது என்றும் ருத்ரற் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்

எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ

அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற

அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து

அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே

xxxx

கருவடைந்து … கருவிலே சேர்ந்து

பத்துற்ற திங்கள் வயிறிருந்து … பத்து மாதங்கள் தாயின் வயிற்றில்

இருந்து

முற்றிப்ப யின்று … கரு முற்றிப் பக்குவம் அடைந்து

கடையில்வந்து தித்து … கடைசியில் பூமியில் வந்து பிறந்து

குழந்தை வடிவாகி … குழந்தையின் வடிவத்தில் தோன்றி

கழுவியங்கெ டுத்து … குழந்தையை அங்கு கழுவியெடுத்து

சுரந்த முலையருந்து விக்க … சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க

கிடந்து கதறி … தரையிலே கிடந்தும், அழுதும்,

அங்கை கொட்டித்தவழ்ந்து … உள்ளங்கையைக் கொட்டியும்,

தவழ்ந்தும்,

நடமாடி … நடை பழகியும்,

அரைவடங்கள் கட்டி … அரைநாண் கட்டியும்,

சதங்கை இடுகுதம்பை … காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,

பொற்சுட்டி தண்டை அவையணிந்து … பொன் கொலுசு, தண்டை

அவைகளை அணிந்தும்,

முற்றிக்கி ளர்ந்து வயதேறி … முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,

அரியபெண்கள் … அருமையான பெண்களின்

நட்பைப்பு ணர்ந்து … நட்பைப் பூண்டு,

பிணியுழன்று … நோய்வாய்ப்பட்டு

சுற்றித்தி ரிந்த(து) அமையும் … அலைந்து திரிந்தது போதும்.

(இனிமேல்)

உன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ … உனது அருள்

கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?

இரவிஇந்த்ரன் … சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்)இந்திரன்

(அவன் அம்சமாக வாலி)

வெற்றிக்கு ரங்கினரசரென்றும் … வெற்றி வானர அரசர்களாகவும்,

ஒப்பற்ற உந்தியிறைவன் … ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த

பிரமன்

எண்கி னக்கர்த்த னென்றும் … கர் இனத் தலைவன் (ஜாம்பவான்)

ஆகவும்,

நெடுநீலன் எரியதென்றும் … நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,

ருத்ரற்சி றந்த அநுமனென்றும் … ருத்திர அம்சம் அநுமன் என்றும்,

ஒப்பற்ற அண்டர் எவரும் … ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்

இந்த வர்க்கத்தில் வந்து … இன்னின்ன வகைகளிலே வந்து

புனமேவ … இப் பூமியில் சேர்ந்திட,

அரியதன்ப டைக்கர்த்த ரென்று … (இவர்களே) தன் அரிய

படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,

அசுரர்தங்கி ளைக்கட்டை … அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை

வென்ற அரிமுகுந்தன் … வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்

மெச்சுற்ற பண்பின் மருகோனே … புகழும் குணம் வாய்ந்த

மருமகனே,

அயனையும்பு டைத்துச்சி னந்து … பிரம்மாவையும் தண்டித்து,

கோபித்து,

உலகமும்ப டைத்து … (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும்

படைத்து,

பரிந்து … அன்புடன்

அருள்பரங்கி ரிக்குள் … அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்

சிறந்த பெருமாளே. … வீற்றிருக்கும் பெருமாளே.

xxxxx

ஹனுமான்  சாலீசா

ஶங்கர ஸுவன கேஸரீ நன்த³ன ।
தேஜ ப்ரதாப மஹாஜக³ வன்த³ன ॥ 6 ॥

வித்³யாவான கு³ணீ அதி சாதுர ।
ராம காஜ கரிவே கோ ஆதுர ॥ 7 ॥

பொருள்

7. நீங்கள் சிவபெருமானின் அவதாரம் பரிசுத்தமான, ஏகாந்தமான, அழகான கைலாச பர்வதத்தில் அமர்ந்து ராம நாம ஜபம் செய்கிறீர்கள் ; உங்களுடைய இருதயம் என்னும் காட்டில் ராமன் எபோதும் உலவிக்கொண்டு இருக்கிறார். ராமாவதார நோக்கத்தை நிறைவேற்ற நீங்களே கேசரி மைந்தனாக அவதரித்தீர்கள் புகழ் ஒளியாலும் , வீரத்தாலும் உயர்ந்த உங்களை உலகமே தொழுது நிற்கிறது என்று உரைகாரர்கள்  விளக்கியுள்ளனர்.

8.ஆழம் காண முடியாத அறிவுடையவர் நீங்கள்; நற்குணங்களும் செயலாற்றுவதில் பெரும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் .ராமனுக்குப் பணி செய்வதையே குறிக்கோளாக உடையவர்.

xxxx

ஆக துளசிதாஸர் , ஏகநாதர் , அருணகிரி நாதர் மூவரும் அனுமனை சிவனின் அம்சமாகவே கருதுகின்றனர்.

to be continued……………………………….

—subham–

Tags- அனுமன் சிவனின் அவதாரம், ஹனுமான் சாலீஸா,  விளக்கக் கதைகள் – Part 5

வியக்கவைக்கும் விஞ்ஞானி நடிகை ஹெடி லமார்! – 2 (Post No.13,572)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.572

Date uploaded in London – 23 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

7-8-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

வியக்கவைக்கும் விஞ்ஞானி நடிகை ஹெடி லமார்! – 2

ச. நாகராஜன்

புதிய கண்டுபிடிப்பு

உலகப் போர் மும்முரமான போது தகவல் தொடர்பு மிக முக்கியமான ஒன்றாக ஆனது. ஹிட்லர் எனிக்மா என்கோடிங் மெஷின் என்ற ரகசிய சங்கேதம் அனுப்பும் மெஷினை வைத்தே தனது ரகசிய திட்டங்களையும் ஆணைகளையும் அனுப்பி வந்தான். டைப்ரட்டர் அளவே உள்ள அந்த சிறிய மெஷின் பதினைந்து லட்சம் கோடி சங்கேத முறைகளில் வேறு வேறாகச் செய்திகளை அனுப்பும் திறன் வாய்ந்தது. பிரிட்டிஷ் ராணுவம் இந்த சங்கேதங்களை இடைமறித்துக் கேட்டாலும் அது என்ன என்று அவர்களுக்குப் புரியவில்லை. இதனால் நேச நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தன.

நேசநாட்டு ராணுவத்தினருக்கு ஜெர்மனிக்கு ஈடு கொடுத்து ஆணைகளை விரைவாக அனுப்புவது இன்றியமையாத தேவையாக ஆகி விட்டது முக்கியமாக கடற்படையினருக்கு விரைவாக அனுப்பும் தகவல் தொடர்பு முக்கியமானதாக ஆனது.

ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் லமார் உச்சகட்ட புகழில் இருந்த போது பிரபல இசையமைப்பாளரான ஜார்ஜ்   அன்தெய்லுடன் இணைந்து ஒரு ரகசிய தகவல் தொடர்பு அமைப்பைக் கண்டுபிடிப்பதில்  முனைந்தார். லமார் ஒரு கணித நிபுணி.  அன்தெய்லின் உதவியுடன் பியானோவை இசைக்கும் இசைக் கலைஞர்களுடன் இணைந்து ப்ஃரீக்வென்ஸி ஹாப்பிங் எனப்படும் அலைவெண் தத்தலைக் கண்டுபிடித்து உரிய பேடண்டையும் எடுத்தார். இதன் மூலம் ரேடியோ மூலம் டார்பிடோ குண்டுகளை வழி நடத்தி, ஏவி எதிரிகளை நிலைகுலைய வைக்கலாம் என்ற எண்ணத்துடன் அமெரிக்க கடற்படையை அணுகி தனது கண்டுபிடிப்பைப் பற்றிச் சொன்னார்.

பியானோவை வைத்து அதில் 88 வெள்ளை மற்றும் கறுப்பு கீ- கள் இருப்பதால் அதை வைத்து அலைவெண்களுக்கு இடையே மாற்றுகின்ற ஒரு புதிய உத்தியை அவர் கண்டு பிடித்தார். இதன் மூலம் டார்பிடோ குண்டுகளை வழி நடத்தலாம் என்று அவர் கூறினார்.

 அவரை புகழ்பெற்ற நடிகையாகப் பார்த்து மட்டுமே பழக்கப்பட்டிருந்த கடற்படை அதிகாரிகள் இவராவது டார்பிடோ குண்டுகளை ஏவுவதாவது என்று எண்ணிச் சிரித்தனர். அவரது கண்டுபிடிப்பின் பெருமை பற்றி அறிய அவர்கள் முற்படவில்லை. ஆனால் 1962ஆம் ஆண்டு தான் இதைப் பற்றி கடற்படைநன்கு  அறிந்து அதை அமுல்படுத்தியது. 

என்ன நடந்தது என்பதை அவர் ‘பாம்ப்ஷெல்: தி ஹெடி லமார் ஸ்டோரி’ என்ற ஒரு பதிவில் தானே பேசி இருக்கிறார். 

பெரிதும் நிராசையடைந்த லமார் ஒரு விதமாக அங்கீகாரமும் கிடைக்காமல் போக,  பேடண்ட் உரிமையும் காலாவதி ஆகவே முயற்சியையும் கை விட்டார்; நம்பிக்கையையும் இழந்தார். 

ஆனால் இன்றைய கணினி யுகத்தில் செல்வாக்கு பெற்றுள்ள செல் போன், ப்ளூ-டூத், மற்றும் வை-ஃபி போன்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கு விதை ஊன்றியவரே அவர் தான். அவருக்கு அதற்கான புகழ் கிடைக்கவில்லை.1997இல் தான் அவர் பெருமை உலகிற்கு தெரிய வந்தது.

அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதது மட்டுமல்ல, மிக பிரம்மாண்டமாக வரவேண்டிய கண்டுபிடிப்பு தொகையும் அவருக்குக் கிடைக்கவில்லை. இதற்கான உத்தேச காப்பீட்டுத் தொகை மட்டும் சுமார் 3000 கோடி டாலர் என்று  மதிப்பிடப்படுகிறது.

லமார் பற்றிய படங்களும்புத்தகங்களும் 

லமார் பற்றி ஏராளமான கட்டுரைகளும், புத்தகங்களும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. அவரைப் பற்றிய டாகுமெண்டரி படங்களும்,  கூட வெளி வந்து விட்டன. அவரது சுயசரிதை பற்றி அவர் கூறுகையில், “இது சரியான சுயசரிதை இல்லை. இதை என் சார்பாக எழுதியவர் தனக்குத் தோன்றியதை எழுதி விட்டார். உண்மை சரிதத்தை நானே எழுதுகிறேன்” என்றார். ஆனால் அதை எழுதுவதற்குள் அவரது இறுதி நெருங்கி விட்டது. 

மறைவு

லமார் தனது இறுதி ஆண்டுகளில் யாருடனும் நேரில் பேசவில்லை. யாரானாலும் போனில் மட்டுமே பேசி வந்தார்.

 2000-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19ம் தேதி தனது 85-ம் வயதில் அமெரிக்காவில் ப்ளோரிடாவில் காஸல்பெர்ரி என்னுமிடத்தில் அவர் இதயநோய் காரணமாக இறந்தார். அவரது மகன் அவரது அஸ்தியின் ஒரு பகுதியை அவரது விருப்பப்படி ஆஸ்திரியா கொண்டு சென்று வியன்னா காடுகளில் தூவினார்.

2014-ல் அவரது நினவுச் சின்னம் வியன்னா சென்ட்ரல் கல்லறையில் நிறுவப்பட்டது. மீதமுள்ள அஸ்தியும் அங்கு புதைக்கப்பட்டது. 

அனுபவ மொழிகள்

தனது வாழ்க்கையின் அனுபவ மொழிகளாக அவர் பல பொன்மொழிகளைக் கூறியுள்ளார். அவற்றில் சில:

 எந்தப் பெண்ணுமே கவர்ச்சியானவள் தான். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் முட்டாள் போல நின்று கொண்டே இருக்க வேண்டும். அவ்வளவு தான்! 

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கற்கள். 

உண்மையான நல்ல கண்டுபிடிப்பு சமுதாயத்தின் மீது நலன் தரும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். 

திரைப்படங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டுமே உரித்தானவை. ஆனால் தொழில்நுட்பமோ என்றும் உள்ளது; சிரஞ்சீவியானது.

 எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் எதையும் அறியும் ஆர்வமுமே உத்தரவாதங்களை விட மேலானவை. நம்மால் உணரமுடியாதவையே என்ன ஈர்த்தன. ஈர்க்கின்றன. 

அடுத்த முறை செல்போனை எடுத்து ஹலோ என்று சொல்லும் போது அதற்கு வழிகோலிய லமாரை மனதாரப் பாராட்டலாம், இல்லையா!

***