அவ்வையை எதிர்த்துப் பேசும் பாரதி! புதிய ஆத்திச்சூடியில் மருத்துவச் செய்திகள்-1(Post.13,628)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,628

Date uploaded in London – 4 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

பாரதியார்  எழுதிய  புதிய ஆத்திச் சூடியில் மருத்துவச் செய்திகள் 

ஔவையார் எழுதிய ஆத்திச் சூடியில் உள்ள மருத்துவச் செய்திகளைக் கண்டோம். அவருக்குப் பல நூற்றாடுகளுக்குப் பின்னர் வந்த பாரதி என்ன சொல்கிறார் என்றும் காண்போம். ஆனால் பாரதியார் இறந்தே நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவ்வை சொன்ன சனி நீராடு என்பதெல்லாம் இப்போது பின்பற்றப் படுவதில்லை. பாரதியாரை எவ்வளவு தூரம் பின்பற்ற முடியும் என்பதை அலசி ஆராய்வோம்

உணவு உண்ணும் விஷயத்தில் பாரதியும் அவ்வையும் எதிரும் புதிருமாக நிற்கிறார்கள்; இதை பட்டிமன்றத்தில் விவாதிக்கலாம்!

91.மீதூண் விரும்பேல் என்று அவ்வாயார் நமக்கு அறிவுரை மொழிந்தார். அதாவது சாப்பாட்டு ராமனாக இராதே என்பது அறிவுரை.

பாரதியார் சொல்கிறார் :

ஊண்மிக விரும்பு.-

Relish food

or 

Love your Food

இதை இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம்

1.சாப்பாட்டை வெறுக்காதே; தவிர்க்காதே

அல்லது

2.சாப்பாட்டை ரசித்து, ருசித்து சாப்பிடுக

இரண்டாவது பொருளே சரி என்று சொல்லலாம். ஏனெனில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் மந்திரம் சொல்லி, கடவுளை போற்றி விட்டு சாப்பிடுவார்கள். அவர்களுக்கு முன்னதாகவே இந்துக்களும் இலையைச் சுற்றி மந்திரம் சொல்லி தண்ணீர் விட்டுவிட்டு சாப்பிடுவார்கள். அந்த அன்னத்தை அமிர்தம் என்று அந்த மந்திரம் சொல்கிறது ; நாக்கில் மட்டும் ருசி இல்லை; மனதிலும் ருசி இருக்கிறது என்பதை காம வயப்பட்டவர்களும் , பக்தி வயப்பட்டவர்களும் அறிவர்; கள்ளக்காதலி போட்ட எதுவும் தேனாக இனிக்கும்; அந்த ஆளுக்கே சொந்த மனைவி போட்ட நல்ல உணவும் கசக்கும். இதே போலத்தான் கடவுள் பிரசாதம் என்றவுடன் அதற்கு தனி மதிப்பு . சர்க்கரை வியாதி உள்ளவர்களும் திருப்பதி லட்டுப் பிரசாதத்தை வேண்டாம் என்று இயம்பார். அதை அமிர்தம் என்று புகழ்வர் ஆக, கிடைக்கும் உணவை வணங்கி, ருசித்து போற்றி உண்க என்கிறார் பாரதி .

பால் மக்கென்னா Paul McKenna டெலிவிஷன் காட்சிகளைப் பார்க்காத பிரிட்டிஷ் குடி மகன் இல்லை ; புகழ் பெற்ற மனோவசிய ஹிப்னாடிஸ அறிஞர்; மேடைக்கு வந்த அனைவரையும் ஒரு சொடுக்கு மந்திரம் போட்டு மைக்கேல் ஜாக்சன், மடோன்னா போல பாட வைப்பார் ; அவர் சொல்கிறார் :

உங்களுக்கு எடை குறைய வேண்டுமா?

டெலிவிஷனை பார்த்துக்கொண்டு கண்டபடி, அளவில்லாமல் தின்னாதீர்கள். ஒரு உருளைக் கிழங்கு வறுவல் பாக்கெட்டைப் பிரியுங்கள் ; அதில் ஒவ்வொன்றாக எடுத்து கால் பகுதியைக் கடித்து அதன் ருசியை மனதார வாழ்த்துங்கள் ; மீண்டும் கால் பகுதி வறுவலைக் கடித்து அதை ரசியுங்கள். இவ்வாறு ஒரு சின்ன வறுவல் பொட்டலத்தை அரை அல்லது ஒரு மணி சாப்பிடுங்கள் .

சுருங்கச் சொன்னால் , கிடைப்பதை இறைவன் கொடுத்த அமிர்தமாகக் கருதி உண்ணுங்க்கள்.

ஆனால் இதைச் சொன்ன பாரதியார் புதிய ஆத்திச் சூடியில் மூன்றாவது அறிவுரையை புகல்வது என்ன தெரியுமா?

*****

3.இளைத்தல் இகழ்ச்சி.

Frailty is unworthy

Or

Weakness is Despicable

இதன் பொருள் என்ன ?

ருசித்து, ரசித்து அளவோடு உண்ணுவதெல்லாம் சரிதான் அதற்காக எலும்பும் தோலுமாக , கொத்தவரங்காய் போல உடம்பை ஆக்கிக்கொள்ளாதே .

பாரதியார் சுதந்திரப் போராட்ட வீரர்;  அதில் மிதவாதக் கட்சிக்காரர் அல்ல; புரட்சிக்கனலை மூட்டி எழுப்பிய வீரர் ; குரு கோவிந்தர், வீர சிவாஜி பாடல்களில் எல்லாம் வீர கர்ஜனை செய்கிறார் . வில்லினை எடு வீரா என்று எழுதுகிறார் .

பலவீனனால் ஆத்மாவை அடைய முடியாது – என்ற சுவாமி விவேகாநந்தரின் உபநிஷத் வாக்கியத்தை நினைவிற்கொண்டுதான் இப்படி எழுதி இருப்பார் நாயமாத்மா பலஹீனேன லப்யோ – முண்டகோபநிஷத் (3-2-4) नायमात्मा बलहीनेन लभ्यः

“Naayam atmaa balahinena labhyo” – Mundaka Upanishad (3.2.4) என்பதை சுவாமி விவேகானந்தர் அடிக்கடி சொல்லுவார்.இரும்பு போன்ற சதையும் எலும்பும் உடைய இளைஞர்கள் எனக்குத் தேவை என்பார்..

******

12.ஔடதங் குறை.-

Cut down medicine

Or

Use Medicines Sparingly

மருந்துகளைக் குறையுங்கள் என்பது நல்ல அறிவுரை; வலுவான கட்டிடத்தில் அதிகம் பழுதுகள் ஏற்படாது ; ஆகையால் செப்பனிடும் வேலைகள் இராது; அது போல ஆரோக்கியமான உடலுக்கு மருந்து சாப்பிடும் வாய்ப்பே கிட்டாது; அப்படியே சாப்பிட வேண்டுமானாலும் அதிகம் சாப்பிடாதே;

பாரதியாரே நோய்வாய்ப்பட்ட காலத்தில், இறப்பதற்கு முன்னர் ஒரு மாதத்துக்கு, மருந்து சாப்பிட மறுத்துவிட்டார். இதை அவரது கடைசி காலத்தில்  உடனிருந்த குடும்பத்தினர் எழுதிய கட்டுரைகளில் காணலாம். அவர் ஏன் அப்படிச் செய்தார் ?

என் கருத்து

ஆதி சங்கரர்,  சம்பந்தர், சுவாமி விவேகானந்தர் , பாரதி போன்றோர் எல்லாம் மிக  சின்ன அல்லது மத்திய வயது காலத்தில் இறப்பதைக் காண்கிறோம்; அவர்கள் வந்த பணி முடிந்துவிட்டது என்று மனதில் தோன்றினால் அழுக்குச் சட்டையை (உடலை) அவிழ்த்துப் போட்டு விட்டு மேலுலகம் சென்று விடுவார்கள் . பாரதி 1921-ல் இறந்தாலும் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே என்று தீர்க்கதரிசனம் மூலம் சுதந்திரத்தை கண்டுவிட்டே  இறந்தார் ;இன்று ஒரு கவிஞர் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் பாரதி அளவுக்கு எழுத முடியாது .

 மேலை நாட்டினர் இந்தியர்களைவிட அதிக ஆயுட்காலம் வாழ்வது உண்மைதான்; ஆனால் அவர்கள் சாப்பிடும்  மருந்தின் அளவைக் கண்டால் ஆச்சர்யப்படுவீர்கள் ; தூங்குவதற்கு மருந்து; மன நோய்க்கு மருந்து ; மலஜலம் கழிக்க மருந்து; இப்படிப் பலவகை!. நாம்  தலைவலிக்கு மட்டும் சாப்பிடுகிறோம்; வயதானால் சக்கரை வியாதிக்கு மருந்து. இதையெல்லாம் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்கவே பாரதி இப்படிப் பகர்ந்தார்.

ஏனெனில் ஐந்தாவது அறிவுரையில்

 உடலினை உறுதிசெய்.-

Fortify physique or

Strengthen the Body

என்று சொல்கிறார்; இன்று ஜிம் போன்றவற்றுக்குப் போவது மேலை நாடுகளில் ஒரு பித்து அல்லது பேஷன் ஆகிவிட்டது; பெண்களோ பாதி உடையுடன் காலையிலும் மாலையிலும் ஜாக்கிங் போவதும் அன்றாடக் காட்சிகள் ஆகிவிட்டன.

திருமூலர் சொன்ன விஷயங்களையும் மனதிற்கொள்ள வேண்டும்

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

*****

“உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்

உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்

உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று

உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே”

******

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்

வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்

தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்

கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே’

திருமூலர்-

–subham–

பாரதியார் , புதிய ஆத்திச் சூடி, மருத்துவச் செய்திகள்-1, திருமூலர், விவேகானந்தர், ஆத்மா, பலவீனன், உள்ளம் பெருங்கோயில், உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.

ராமாயணத்தில் வரங்கள் (2) முனிவர்கள் குச, லவர்களுக்கு வரங்களை அளித்தது! (Post.13,627)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.627

Date uploaded in London – 4 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் வரங்கள் (2) 

ராமாயணத்தில் வரங்கள் (2) முனிவர்கள் குசலவர்களுக்கு வரங்களை அளித்தது! 

ச. நாகராஜன் 

பாலகாண்டத்தின் நான்காவது ஸர்க்கமாக அமைவது ‘ஶ்ரீ ராமஸதஸ்ஸில் குச லவர்களுடைய வரவு’ என்ற ஸர்க்கம்.

அற்புதமான ராம காவியத்தை வால்மீகி முனிவர் இயற்றி விட்டார்.

இதை நல்ல விதமாக யார் பிரசங்கிக்கப் போகிறார்களோ என்ற கவலை அவருக்கு வந்தது.

ஒரு நாள் எல்லா முனிவர்களும் அவரது ஆசிரமத்தில் கூடினர்.

அப்போது வால்மீகி குச, லவர்களை அழைத்து ராமாயணத்தை கானம் செய்யச் சொன்னார்.

அவர்களும் அதை இசைக்க ஆரம்பித்தனர்.

கூடியிருந்த முனிவர்கள் அனைவரது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணிர் பொழிந்தது.

உற்சாகம் மேலிட ஒவ்வொருவரும் அவர்களைப் புகழ்ந்ததோடு ஆளுக்கு ஒரு பொருளை குச லவர்களுக்குத் தர ஆரம்பித்தனர்.

ஒருவர் கவசத்தைத் தந்தார். இன்னொரு முனிவர் மரவுரிகள் இரண்டைத் தந்தார். இன்னொருவர் கிருஷ்ணானஜினத்தைத் தந்தார்.

இப்படியாக மௌஞ்ஜி, ஆஸன பீடம், கோடாரி, சாய வஸ்திரம் என இப்படி பல பொருள்களை அவர்கள் அனைவரும் வழங்கினர்.

கையில் தர ஒன்றுமில்லாதவர்கள் நல்லாசிகளை நல்கினர்.

தீர்க்காயுளாய் இரு என்ற ஆசீர்வாதத்தை அனைவரும் நல்கினார்கள்.

ஸாமம் சொல்லும் முனிவர்கள் அனைவரும் வரங்களை அளித்தார்கள்.

அதை பின்வரும் ஸ்லோகம் கூறுகிறது”

ஆயுஷ்யமபரே ப்ராஹுர்முதா தத்ர மஹர்ஷய: |

ததுஸ்சைவ வரான் ஸர்வே ,முனய: ஸாமவாதின: ||

–    பால காண்டம் நான்காம் ஸர்க்கம், ஸ்லோக எண் 24

தத்ர – அங்கு

அபரே – வெறு சில

மஹர்ஷய: – மஹரிஷிகள்

முதா – சந்தோஷத்தினால்

ஆயுஷ்யம் – “தீர்க்காயுசாய் இரு” என்னும் ஆசீர்வாதத்தை

ப்ராஹு: – உச்சரித்தார்கள்

ஸாமவாதின: – ஸாமம் சொல்லுபவர்களான

முனய: – முனிவர்கள்

ஸர்வே ச ஏவ – எல்லோருமே

வரான் – வரங்களை

தது: – அளித்தார்கள்

இப்படியாக சந்தோஷமடைந்த ஏராளமான முனிவர்களிடமிருந்து அநேக வரங்களை குச லவர்கள் பெற்றனர்.

**

CARTOONS R POLISHED, MILD COMMENTS ON CURRENT AFFAIRS

ENJOY CARTOONS FROM DECCAN CHRONICLE UPTO 392024

POSTED BY LONDON SWAMINATHAN ON 3-9-2024

–Subham—

Tags- Cartoons392024

Learn Tiru manthiram through Pictures – Part 5 ( Post No.13,626)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,626

Date uploaded in London – 3 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

Tirumular, author of Tirumanthiram, supports non-killing like Tiru Valluvar, author of Tamil Veda Tirukkural. Even if one asks another person to kill animals for meat, the person will be born as a Pig, he warns.

Those who ask others to kill animals (for meat)

Those who force others to eat meat

Will be born as pigs and suffer in seven types of hell

This is the order by Lord Siva! True indeed!- Tirumanthiram

கொன்றிலாரை கொலச் சொல்லிகூறினார்

தின்றிலாரை தினச் சொலி தெண்டித்தார்

பன்றியாய் படியில்பிறந்து ஏழ் நரகு 

ஒன்றுவார் அரன் ஆணை! இது உண்மையே!

Tiru Valluvar also assures a definite seat in hell for people who eat meat

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு.–255

If flesh you eat not, life’s abodes unharmed remain;

Who eats, hell swallows him, and renders not again.-255

xxxx

Tiruvalluvar also hits at Buddhists who pretend to be vegetarians; they eat meat , if it is killed by others. If there is no one to buy, who will kill animals, he asks. Sri Lankan Buddhists wait by the side of the forest roads just to get killed animals like deer

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

‘We eat the slain,’ you say, by us no living creatures die;

Who’d kill and sell, I pray, if none came there the flesh to buy?- Kural

xxxx

Manu Smriti also supports Non- Killing.  One  would get the merits of performing 100 Aswamedha Yagas

वर्षे वर्षेऽश्वमेधेन यो यजेत शतं समाः ।
मांसानि च न खादेद् यस्तयोः पुण्यफलं समम् ॥ Manu 5-५३ ॥

varṣe varṣe’śvamedhena yo yajeta śataṃ samāḥ |
māṃsāni ca na khāded yastayoḥ puṇyaphalaṃ samam ||5- 53 Manu ||

If a man performs the Aśvamedha Sacrifice every year, for a hundred tears,—and another does not eat meat,—the merit and reward of both these are the same.—(53.) 

xxxx

The diseases are caused by killing animals, says Tiruvalluvar

உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்

செல்லாத்தீ வாழ்க்கை யவர்-330

Who lead a loathed life in bodies sorely pained,

Are men, the wise declare, by guilt of slaughter stained.—330

If you kill animals in this birth, you will be born a sick person in your next birth.

xxxxx

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்

புன்மை தெரிவா ரகத்து.குறள் 329:

Whose trade is ‘killing’, always vile they show,

To minds of them who what is vileness know.- Kural 329

****

Manu’s list of Animal Births

Manu Smriti gives a long list animal birth.  It includes lizard, pig, donkey etc. Most of the Saivite saints say they were born as worms, birds, animals before taking this human birth

 Here is the list:

54. Those who committed mortal sins (mahapataka), having passed during large numbers of years through dreadful hells, obtain, after the expiration of (that term of punishment), the following births.

55. The slayer of a Brahmana enters the womb of a dog, a pig, an ass, a camel, a cow, a goat, a sheep, a deer, a bird, a Kandala, and a Pukkasa.

56. A Brahmana who drinks (the spirituous liquor called) Sura shall enter (the bodies) of small and large insects, of moths, of birds, feeding on ordure, and of destructive beasts.

57. A Brahmana who steals (the gold of a Brahmana shall pass) a thousand times (through the bodies) of spiders, snakes and lizards, of aquatic animals and of destructive Pisakas.

58. The violator of a Guru’s bed (enters) a hundred times (the forms) of grasses, shrubs, and creepers, likewise of carnivorous (animals) and of (beasts) with fangs and of those doing cruel deeds.

59. Men who delight in doing hurt (become) carnivorous (animals); those who eat forbidden food, worms; thieves, creatures consuming their own kind; those who have intercourse with women of the lowest castes, Pretas.

60. He who has associated with outcasts, he who has approached the wives of other men, and he who has stolen the property of a Brahmana become Brahmarakshasas.

61. A man who out of greed has stolen gems, pearls or coral, or any of the many other kinds of precious things, is born among the goldsmiths.

62. For stealing grain (a man) becomes a rat, for stealing yellow metal a Hamsa, for stealing water a Plava, for stealing honey a stinging insect, for stealing milk a crow, for stealing condiments a dog, for stealing clarified butter an ichneumon;

63. For stealing meat a vulture, for stealing fat a cormorant, for stealing oil a winged animal (of the kind called) Tailapaka, for stealing salt a cricket, for stealing sour milk a bird (of the kind called) Balaka.

64. For stealing silk a partridge, for stealing linen a frog, for stealing cotton-cloth a crane, for stealing a cow an iguana, for stealing molasses a flying-fox;

65. For stealing fine perfumes a musk-rat, for stealing vegetables consisting of leaves a peacock, for stealing cooked food of various kinds a porcupine, for stealing uncooked food a hedgehog.

66. For stealing fire he becomes a heron, for stealing household-utensils a mason-wasp, for stealing dyed clothes a francolin-partridge;

67. For stealing a deer or an elephant a wolf, for stealing a horse a tiger, for stealing fruit and roots a monkey, for stealing a woman a bear, for stealing water a black-white cuckoo, for stealing vehicles a camel, for stealing cattle a he-goat.

68. That man who has forcibly taken away any kind of property belonging to another, or who has eaten sacrificial food (of) which (no portion) had been offered, inevitably becomes an animal.

69. Women, also, who in like manner have committed a theft, shall incur guilt; they will become the females of those same creatures (which have been enumerated above).

–subham–

TAGS- Pig, animals, rebirth, Tirumular curse, Meat eaters, get disease, Manu Smriti, Tiru manthiram.

திருமந்திரத்தில் முருகன்; ஆராய்ச்சிக் கட்டுரை எண் -47 (Post No13,625)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,625

Date uploaded in London – 3 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

ஆராய்ச்சிக் கட்டுரை எண்-47 ; திருமந்திரத்தில் முருகன்

சிவபெருமான்  ஒருவனையே தெய்வமாகப் போற்ற வேண்டும் என்று திருமந்திரம் சொல்வதை நாம் அறிவோம்;அதில்  முருகப்பெருமான் பற்றி திருமூலர்  கூறுவதைப் பலரும் அறியார்.

சிவனொடுக்கும் தெய்வம் தேடினும் இல்லை– என்பது அவர்தம் வாக்கு; முருகனைப்பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

 எம்பெரு மான்இறை வாமுறை யோஎன்று

வம்பவிழ் வானோர் அசுரன் வலிசொல்ல

அம்பவள மேனி அறுமுகன் போயவர்

தம்பகை கொல்லென்ற தற்பரன் தானே.

பொருள் :

அசுரர்கள் செய்யும் கொடுமைகளைத் தாங்க முடியவில்லை என்று தேவர்கள் முறையிட்டனர்; உடனே சூர பத்மனை அழித்துவிட்டு வா என்று சிவபெருமான் முருகனை அனுப்பினார்.

Manifestation of Downward-looking Face
“Hail our Lord! Our God!
Deathly is might of Sura Padma asura
Save us, help, oh!”
Thus did Celestials to Primal Lord pray!
And the Primal Lord to the Six-faced God
Of coral hue beckoned;
And said, “Proceed and smite the enemy.”

****

எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான்
மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே. 12

 God Kanda Arose Out of Lord’s Fire

Out of my Father arose six orbs of Fire

The six Faces before Him appeared;

The God Kanda in Him is intermingled;

And so is He His Son;

Thus do you in understanding connect.

கந்தனின் தோற்றம்

முருகப்பெருமான் தோற்றம் பற்றிய கதைகளில் சிவபெருமானிடம் தோன்றிய ஆறு தீப்பொறிகளிலிருந்து கந்தன் அவதரித்தான் என்று அறிகிறோம். கந்த புராணமும் இதை உறுதி செய்கிறது.

கந்த புராணத்தில் சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறு சுடர்களாக முருகன்,  தோன்றுகிறான்.  ‘பெம்மான் முருகன் பிறவான் இறவான்’ என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க தாய் வயிற்றில் தங்கிப் பிறவாமல் சுடராய்த் தோன்றினான் . அவனை கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்க்கின்றனர் . அவனுடைய நிறம் செம்பவளம் போல சிவந்த நிறம்.இதனால்தான் தொல்காப்பியமும் முருகனை சேயோன் என்று வருணிக்கிறது

கந்த புராணப். பாடல் :

அருவமும் உருவும் ஆகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்

பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி ஆகிக்

கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும் கொண்டே

ஒருதிரு முருகன்வந் தாங்கு உதித்தனன் உலகம் உய்ய.

சேய் என்றால் மகன்  என்ற பொருளும் உண்டு. .ஆகையால் சிவனின் மகன் என்றும் பொருள் சொல்லலாம். சிவ பெருமானின்  நிறமும் செந்தீ வண்ணம் என்று வேதமும் , திருவாசகமும் பாடுகின்றன

‘மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்’- தொல்காப்பியம்

என்று நிலங்களின் தெய்வங்களாக  வருணன், இந்திரன் திருமால், முருகன் என்று  தொல்காப்பியர் பகர்ந்தார்.

****

அருணகிரி நாதர் பயின்ற திருமந்திரம் 

திருப்புகழ் பாடல்களில்  திருமந்திரத்தின் தாக்கத்தைக் காண முடிகிறது. அருணகிரிநாதர் திருமந்திரத்தையும் படித்ததை இதன் வாயிலாக அறியலாம். இதோ சில பாடல்கள் :

வேதங்கள் ஆட மிகுஆ கமம் ஆடக்

கீதங்கள் ஆடக் கிளர்அண்டம் ஏழாடப்

பூதங்கள் ஆடப் புவனம் முழுதாட

நாதம்கொண் டாடினான் ஞானாந்தக் கூத்தே–. திருமந்திரம் 

****

அதல சேட னாராட அகில மேரு மீதாட

     அபின காளி தானாட …… அவளோடன்

றதிர வீசி வாதாடும் விடையி லேறு வாராட

     அருகு பூத வேதாள …… மவையாட

மதுர வாணி தானாட மலரில் வேத னாராட

     மருவு வானு ளோராட …… மதியாட

வனச மாமி யாராட நெடிய மாம னாராட   

 மயிலு மாடி நீயாடி …… வரவேணும்

கதைவி டாத தோள்வீம னெதிர்கொள் வாளி யால்நீடு

     கருத லார்கள் மாசேனை …… பொடியாகக்

கதறு காலி போய்மீள விஜய னேறு தேர்மீது

     கனக வேத கோடூதி …… அலைமோதும்

உததி மீதி லேசாயு முலக மூடு சீர்பாத

     உவண மூர்தி மாமாயன் …… மருகோனே

உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராஜ

     னுளமு மாட வாழ்தேவர் …… பெருமாளே.- திருப்புகழ்

Jnana-Ananda Dance

The Vedas danced, the Agamas danced;

The melodies danced, the seven universes danced;

The elements danced, and the worlds entire danced;

With Nada Sakti the Lord danced,

The Dance of Divine Knowledge-Bliss (Jnana-Ananda).

xxxxx

மேலும் ஒரு திருப்புகழைக் காண்போம்

தெளியும் இவையன்றித் தேர்ஐங் கலைவேறு

ஒளியுள் அமைந்துள்ளது ஓரவல் லார்கட்கு

அளியவ னாகிய மந்திரம் தந்திரம்

தெளிஉப தேசஞா னத்தொடுஐந் தாமே. — திருமந்திரம் 

அபகார நிந்தைபட் …… டுழலாதே

     அறியாத வஞ்சரைக் …… குறியாதே

உபதேச மந்திரப் …… பொருளாலே

     உனைநானி னைந்தருட் …… பெறுவேனோ

இபமாமு கன்தனக் …… கிளையோனே

     இமவான்ம டந்தையுத் …… தமிபாலா

ஜெபமாலை தந்தசற் …… குருநாதா

     திருவாவி னன்குடிப் …… பெருமாளே— திருப்புகழ்

.*******

பெறுபகி ரண்டம் பேதித்த அண்டம்

எறிகடல் ஏழின் மணல்அள வாகப்

பொறியொளி பொன்னணி யென்ன விளங்கிச்

செறியும் அண் டாசனத் தேவர் பிரானே– திருமந்திரம் 

எழுகடல் மணலை அளவிடி னதிக

     மெனதிடர் பிறவி …… அவதாரம்

இனியுன தபய மெனதுயி ருடலு

     மினியுடல் விடுக …… முடியாது

கழுகொடு நரியு மெரிபுவி மறலி

     கமலனு மிகவு …… மயர்வானார்

கடனுன தபய மடிமையு னடிமை

     கடுகியு னடிகள் …… தருவாயே

விழுதிக ழழகி மரகத வடிவி

     விமலிமு னருளு …… முருகோனே

விரிதல மெரிய குலகிரி நெரிய

     விசைபெறு மயிலில் …… வருவோனே

எழுகடல் குமுற அவுணர்க ளுயிரை

     யிரைகொளும் அயிலை …… யுடையோனே

இமையவர் முநிவர் பரவிய புலியு

     ரினில்நட மருவு …… பெருமாளே.—திருப்புகழ்

******

 மந்திர தந்திர மாயோக ஞானமும்

பந்தமும் வீடும் தரிசித்துப் பார்ப்பவர்

சிந்தனை செய்யாத் தெளிவியாது ஊண்பொருட்டு

அந்தகர் ஆவோர் அசற்குரு வாமே. 

******

. சிவமா கிய அருள் நின்றுஅறிந்து ஓரார்

அவமாம் மலம்ஐந்தும் ஆவது அறியார்

தவமான செய்து தலைப்பறி கின்றார்

நவமான தத்துவம் நாடாகி லாரே. — திருமந்திரம் 

 சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு

     செவிமீதி லும்பகர்செய் …… குருநாதா

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின

     செயலேவி ரும்பியுளம் …… நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு

     மடியேனை அஞ்சலென …… வரவேணும்

அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய

     அருள்ஞான இன்பமது …… புரிவாயே

நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி

     ரகுராமர் சிந்தைமகிழ் …… மருகோனே

நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத

     நலமான விஞ்சைகரு …… விளைகோவே

தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு

     திறல்வீர மிஞ்சுகதிர் …… வடிவேலா

திருவாவி னன்குடியில் வருவேள்ச வுந்தரிக

     செகமேல்மெய் கண்டவிறல் …… பெருமாளே. —திருப்புகழ்

இவ்வாறு மேலும் பல பாடல்களை ஒப்பிடலாம். திருப்புகழையும்  திருமந்திரத்தையும் பல முறை படித்த அன்பர்களுக்கு தேஜா வூ Deja vu உணர்ச்சி வந்து கொண்டே இருக்கும்.

DÉJÀ VU. [noncount] 1. : the feeling that you have already experienced something that is actually happening for the first time.

—subham—

Tags–—திருப்புகழ், திருமந்திரம், அருணகிரி நாதர், முருகன், ஆராய்ச்சிக் கட்டுரை எண் -47

அவ்வையாரின் ஆத்திச்சூடியில் மருத்துவ அறிவுரைகள்- 4 (Post No.13,624)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,624

Date uploaded in London – 3 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

வைகறைத் துயில் எழு.

107.RISE FROM SLLEP AT DAY BREAK

சூரிய உதயத்திற்கு முன்னருள்ள சுமார் இரண்டு மணி நேரம் பிரம்ம முஹூர்த்தம் என்னும் காலமாகும். ஆன்றோர்களும், சான்றோர்களும், சாதுக்களும், மஹான்களும், சந்யாசிகளும் சங்கராச்சார்யார்களும் எழுந்து இறைவனை வழிபடும் புனித நேரம் இது. விஞ்ஞானத்தாலும் போற்றப்படும் காலம் இது. தமிழ், ஸம்ஸ்க்ருத இலக்கியங்களில் இது வெகுவாகப் போற்றப்படுகிறது.

மஹா ப்ரெடெரிக் மன்னர், அக்பர் போன்றோர் பின்பற்றிய நெறிமுறை இது. “வைகறைத் துயில் எழு”– அவ்வையார் நமக்கு ஆத்திச்சூடி மூலம் கொடுத்த கட்டளை இது.

புத்தியதற்குப் பொருந்து தெளிவாக்கும்;

சுத்தநரம்பினாற் தூய்மையுறும்- பித்தொழியும்

தாலவழி வாத பித்தம் தத்தநிலை மன்னும்; அதி

காலைவிழிப்பின் குணத்தைக் காண்–

என்று ஒரு புலவர் பாடிச் சிறப்பித்த காலம் இது.

ஆசாரக் கோவை என்னும் நூலும் இதைப் போற்றும்:-

வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்

நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்

தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே

முந்தையார் கண்ட முறை– (ஆசாரக்கோவை– 41)

புலவர்கள் கூறும் கருத்து யாது?

புத்தி, சிந்தனை தெளிவாக இருக்கும்

நமது உடல் தூய்மையாக இருக்கும்

வாத பித்த, கபம் ஆகிய மூன்றும் சம நிலையில் இருக்கும்

இவை அதிகாலையில் விழித்தெழுவதன் பயன்களாம்.

ஆசாரக் கோவை சொல்கிறது:

அதிகாலைப் பொழுதில் எழுந்து பெற்றோர்களை வணங்கி அன்றைய தினம் செய்யவேண்டிய செயல்களைப் பட்டியலிட்டு, அதற்கான வழிமுறைகளை தயாரிப்பது முன்னோர்கள் பினபற்றிய முறை.

ஒருவன் உறங்கி எழுந்தவுடன் இருக்கும் புத்துணர்ச்சி இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் இராது; கொட்டாவிகளும், நாள் முழுதும் நடந்த கெட்ட விஷயங்களின் சிந்தனையுமே அதிகரிக்கும்.

பறவைகளின் இனிய சங்கீதமும் குளிர்ந்த காற்றும் நம்மை நற் சிந்தனையில் ஆழ்த்தும் நேரம் பிரம்ம முகூர்த்தம் ஆகும்.

‘ஐயினி அக்பரி’ எழுதிய அபுல் பாசல், மாமன்னர் அக்பர் அதிகாலையில் துயில் எழுவதைக் குறிப்பிட்டுள்ளார். பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலை நாலு மணிக்கு எழுந்து சிரசாஸனம் செய்து வந்ததால் இறுதிவரை இளமைப் பொழிவுடன் வாழ்ந்தார். தற்போதைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் அதிகாலை எழுந்து பணிகளைக் கவனிப்பதை அனைவரும் அறிவர்.

விஞ்ஞான விளக்கம்- பிரம்ம முகூர்த்தம்-

பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்

புன்மை இருட்கணம் போயின யாவும்

எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி

எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி

—பாரதியாரின் திருப்பள்ளி எழுச்சி

அமிர்த வேளை எனப்படும் நேரத்தில் மனதும் தூய்மையாக இருக்கிறது. வெளியிலுள்ள புறச்சூழலும் தூய்மையாக இருக்கிறது; இதனால் புத்துணர்வு பிறக்கிறது. எதையும் எளிதாகச் செய்ய முடிகிறது என்கிறார்.

இதை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது..

மனிதர்கள் நல்ல ஆரோக்கியமாக வாழ உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் சில வகை ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இதில் ஒன்று பிளாஸ்மா கார்டிசால் (PLASMA CORTISOL). இது மன உளைச்சல், மன வடு ஆகியவற்றிலிருந்து விடுபட உதவி செய்கிறது ஏ.ஸி.டி.எச். (ACTH) என்பதன் செல்வாக்கில் ADRENAL அட்ரினல் கார்டெக்ஸிலிருந்து இது சுரக்கும். இந்த ஏ.ஸி.டி.எச். காலையில் அதிகமும் மாலையில் குறைவாகவும் சுரப்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் காலையில் படிக்கக்கூடிய விஷயங்களை அதிகம் நினைவு வைத்துக் கொள்ள முடியும்.

ஆயுர்வேத கணக்குப்படி காலை நேரம் வாத கட்டுப்பாட்டிலுள்ள நேரம் (வாதம், பித்தம், கபம் என்பன மூன்று வகை தோஷங்கள் அல்லது குணங்கள்)

பிரஹ்ம முஹுர்த்தே உத்திஷ்டதேத் ஸ்வஸ்தே ரக்ஷார்த்தம் ஆயுஷே

தத்ர ஸர்வதா சாந்த்யர்த்தம் ஸ்மரேச்ச மதுசூதனம்

அஷ்டாங்க ஹ்ருதயம்

பொருள்; ஒவ்வொருவரும் பிரஹ்ம  முஹூர்த்தத்தில் எழுந்திருப்பதானால் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான வாழ்வையும் அமைதியையும் பெறலாம். மது சூதனனையும் சிந்திப்பாயாக

சீக்கியர்கள் ஒரு நாளை எட்டு, ‘மூன்று மணிக்கூறு’களாக (8×3 = 24) பிரித்து அதி காலை மூன்று மணி நேரமே சிறந்தது என்பர்.

பௌத்தர்கள், இந்து தர்மம் சொன்ன யோகத்தையே பின்பற்றுவதால் அதிகாலையில் எழுந்தே பயிற்சி செய்வர்.

இஸ்லாமும் முதல் பிரார்த்தனை அறைகூவலை சூர்யோதயத்துக்கு முன்பாகவே செய்கிறது.

இவ்வாறு பல பலன்களைத் தரும் பிரஹ்ம முஹூர்த்ததில் படிப்பது மாணவர்களுக்கு நன்மை பயக்கும். இதற்கு முதல் படியாக இரவு ஒன்பது மணிக்குத் தூங்கச் செல்ல வேண்டும். அதற்கு முதல் படியாக டெலிவிஷன், மொபைல் போனை அணைத்துவிட்டு புஸ்தகம் வாசிக்கத் துவங்க வேண்டும். நித்திரை தேவி நம்மை ஆட்கொள்வது நிச்சயம். காலை 4 மணிக்கு படுக்கையிலிருந்து துள்ளி எழலாம்!

ब्राह्मे मुहूर्ते बुध्येत धर्मार्थौ चानुचिन्तयेत् ।

कायक्लेशांश्च तन्मूलान् वेदतत्त्वार्थमेव च ॥ 4-९२ ॥

பிரஹ்மே முஹுர்த்தே புத்யேத தர்மார்த்தெள ச அனுசிந்தயேத்

காயக் லேஸாம்ஸ்சதன் மூலான் வேத தத்துவார்த்தமேவ ச — மனு 4-92

மனு ஸ்ம்ருதியும் மாணவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து செய்த, செய்ய வேண்டிய கடமைகளை சிந்திக்க வேண்டும் என்று அறிவுரை பகர்கிறது . பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, தர்மத்தையும் உடலுக்கு ஏற்படும் கஷ்டங்களையும்  எண்ணிவிட்டு, வேதத்தின் உண்மைப் பொருளை அறிய அதிகாலை நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதே அறிவுரை.

அடுத்ததாக பாரதியாரின் புதிய ஆத்திச் சூடியில் உள்ள மருத்துவச் செய்திகளைக் காண்போம்.

—subham—-

Tags- வைகறையில் துயில் எழு, பிரம்ம முகூர்த்தம், மனு ஸ்ம்ருதி,

ஒரு நாளைக்கு 26 மணி நேரம் ஆக்குவது எப்படி? (Post No.13,623)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.623

Date uploaded in London – 3 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஒரு நாளைக்கு 26 மணி நேரம் ஆக்குவது எப்படி? 

ச. நாகராஜன் 

ஏழை, பணக்காரன், ஆண், பெண், குழந்தை, முதியவர் ஆகிய பேதமின்றி எல்லா மனிதருக்கும் ஒரு நாளைக்கு இருபத்திநான்கு மணி நேரமே கிடைக்கிறது. இதை இன்னும் இரண்டு மணி நேரம் கூட்ட முடியுமா என்ற கேள்வியே விசித்திரமானது தான்!

 என்றாலும் கூட வின்ஸ்பனெல்லா என்ற நேரக்கட்டுப்பாட்டு நிபுணர் ‘ ‘தி 26 ஹவர் எ டே’ என்ற தனது புத்தகத்தில் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் அதிகமாகப் பெறுவது சாத்தியமே என்கிறார்!

 ஒரு நாளில் எட்டு மணி நேரம் தூக்கத்தில் கழிகிறது. இப்படி எட்டு மணி நேரம் தூங்கியும் பகல் நேரத்தில் சக்தி இன்றி, செய்ய வேண்டிய வேலைகளைத் திறமையின்றி செயலாற்றி, தோல்வி அடைவோரைப் பார்க்கிறோம்.

 ஆனால் தூக்கத்தைத் திறம்படச் சக்தி உள்ளதாக ஆக்கி அதன் மூலம் அதை நாளைக்கு இரண்டு மணி நேரம் அதிகம் பெறும் அற்புதமாக்கலாம் என காஸ்பர் பொடாவ்ஸ்கி என்ற தூக்க இயல் நிபுணர் கூறுகிறார். தூக்கம் பற்றிய உலகின் பிரபல ஆராய்ச்சியாளரான இவர், ‘பவர் ஃபுல் ஸ்லீப்’ என்ற அரிய நூலை எழுதியுள்ளார்.

 ஒரேயடியாக எட்டு மணி நேரத் தூக்கத்திற்குப் பதிலாக பவர் நேப் (POWER NAP) எனப்படும் குட்டித் தூக்கம் அதிக சக்தியைத் தரும் என்பது விஞ்ஞானி பொடாவ்ஸ்கி கூறும் உண்மை!

 “இந்தத் தூக்கத்தில் சில ரகசியங்கள் உள்ளன. அதை அறிந்து கொள்ள வேண்டும்” என்கிறார் அவர்!

 தூக்கம் என்பது பல நிலைகளைக் கொண்டது. முதல் நிலையும், இரண்டாம் நிலையும் லேசான தூக்கத்தைத் தருவதாகும். இந்த நிலைகளில் இருப்பவரைச் சுலபமாக எழுப்பி விடலாம். இந்த இரண்டு நிலைகளும் தரும் சக்தி அற்புதமானது.

 “இரண்டாம் நிலையோடு நிற்கும் தூக்கம்” பத்து நிமிடத்தில் கிடைத்து விடும்! இது எட்டு மணி நேரம் ஒருவர் தூங்கினால் எந்த புத்துணர்ச்சியைப் பெறுவாரோ அதைத் தந்து விடும். இந்தச் ‘சக்தித் தூக்கம்’ என்பது 45 நிமிடங்களோடு முடிந்து விடுகிறது.

 மூன்றாம் நிலை, நான்காம் நிலை, ஐந்தாம் நிலை தூக்கம் ஆகியவை ஆழ்ந்த உறக்கம் எனப்படுகிறது.

 45 நிமிடம் முதல் 90 நிமிடம் வரை தூங்கும் போது இந்த ஆழ்ந்த உறக்க நிலை ஆரம்பிக்கிறது; அடையப்படுகிறது.

 இந்தத் தூக்கத்தின்போது உடல்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. இந்த நிலையில் உடல் உஷ்ணம், இதயத் துடிப்பு, சுவாச எண்ணிக்கை வெகுவாகக் குறைகிறது.

 ஆகவே தான் குட்டித் தூக்கம் போட்டால் வழக்கமான தூக்க நேரம் குறைவதோடு அதிக சக்தியை அபரிமிதமாகப் பெறலாம். இதைப் ‘பூனைத் தூக்கம்’ என்பார்கள். 45 நிமிட நேரம் அதிகம் என்பதால் அதிக பட்சமாக 15 முதல் 20 நிமிடக் குட்டித் தூக்கமே போதுமானது.

 அவரவர் உடல் நிலைக்குத் தக்கபடி பகலில் எந்த நேரத்தில் ‘பவர் நேப்’ செய்யலாம் என்பதை அவரவரே கண்டுபிடிக்கலாம்; நிர்ணயிக்கலாம்!

 ஆலைகளிலும், தொழிற்சாலைகளிலும், அலுவலகங்களிலும் உணவு இடைவேளையில் ஒரு பத்து நிமிடம் பூனைத் தூக்கம் போடுபவர்கள் புத்துணர்ச்சி பெறும் ரகசியத்தை அறிந்தவர்கள்!

 இந்தக் குட்டித் தூக்கத்திற்குப் பின்னர் எந்த வேலை செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமானது. இதுவே உடல் உஷ்ண நிலையை சீக்கிரம் உயர்த்த வழி வகுக்கிறது. ஆக, பகலில் எந்த நேரத்தில் பத்து நிமிடம் தூங்க வேண்டும்,  எழுந்தவுடன் என்ன வேலை செய்ய வேண்டும் என்ற இரண்டு ரகசியங்களை உணர்ந்தவர்கள் ஒரு நாளைக்கு நிச்சயம் இரண்டு மணி நேரம் அதிகம் பெறலாம்! ஏனெனில் எட்டு மணி நேரத் தூக்கத்தை வெகுவாகக் குறைத்து எட்டு மணி நேரத் தூக்கத்தில் பெறக் கூடிய ஆற்றலை விட மிக அதிக ஆற்றலை பவர் நேப் மூலம் பெறலாம் என்பதே நிதர்சனமான உண்மை!.

சினேகிதி மாத இதழில் 2005, ஆகஸ்ட் மாதம் வெளியான கட்டுரை.

xxxxx

VESSEL WITH YAJNA KUNDA DISCOVERED IN SCOTLAND

A crown is coming out of Yaga Fire 

Posted by tamilandvedas.com on 2nd September 2024

The urn was discovered ten years ago, but only now it was opened, and the details are revealed. It is from Persia (now Iran) where Vedic rites were practised. The religion started by Zoroaster around Sixth Century BCE agree with some aspects of the Vedic religion. Till this day, they wear sacred thread like Brahmins and till this day they do fire worship like Brahmins. Vedic Gods like Agni and Varuna are worshipped, but they don’t worship Indra. They mentioned 16 places as their original home and one of them was Sapta Sindhu (seven rivers of Indus Valley). 1000 years ago, they were driven out of Iran by Muslim invaders and the Parsees returned to Gujarat.

Here is the news published by newspapers yesterday and today. Newspapers gave more importance to Viking Robbers, because they did not know much about Zoroastrianism (Religion of Parsees/Persians/ancient Iran)

 Vikings

  1. any of the Scandinavian seafaring pirates and traders who raided and settled in many parts of north-western Europe in the 8th–11th centuries.

*****

The urn shows a Crown emerging from Yaga/Yajna fire

 yajñakuṇḍa (यज्ञकुंड).—n (S) A pit for sacrifice.

*****

Viking-age urn in Galloway Hoard originated in Iran, researchers discover

The vessel was found as part of the hoard uncovered in Kirkcudbrightshire a decade ago. 

Research has revealed the origins of a “remarkable” lidded urn that is more than 1,000 years old.

The Galloway Hoard is a collection of ancient treasures which was discovered 10 years ago.

The lidded vessel, which contained a number of items, has been found to be of west Asian origin.

The urn was found in 2014 wrapped in textiles, which themselves were considered an extremely rare survival.

The hoard is estimated to have been created around 900AD, and was discovered by excavators near Balmaghie in the historical county of Kirkcudbrightshire.

The textiles were studied and retained for further analysis, and laser cleaning has helped reveal further details of the vessel including crowns, fire altars, leopards and tigers.

The imagery is considered unusual in western Europe, with researchers stating it is associated with Zoroastrianism, the state religion of the Sasnian Empire in Iran, before Islam became the more widely practised faith during the 7th and 8th centuries.

New scientific analysis has confirmed the materials used to make the vessel originated in what is now central Iran.

Dr Martin Goldberg, from National Museums Scotland, said: “We had suspected from X-ray scanning the vessel that it may have originated somewhere in central or western Asia, but it’s only now that we’ve carefully conserved and analysed it that we can say this is definitively the case.

“It’s further evidence of the cosmopolitan make-up of the Galloway Hoard. We now know that the Viking-age silver that makes up most of the hoard was melted down from coins and metalwork from early medieval England.

“Some objects, like the lidded vessel, stood out from the rest and the scientific analysis now confirms this.

“It is incredible to imagine how the vessel made its journey halfway round the known world, from Iran to this distant corner of south-west Scotland.”

Dr Jane Kershaw, an expert on Viking-age silver from the University of Oxford, added: “Taking tiny samples from both the vessel body and the niello – the black silver-sulphide inlays that outline the decoration – we assessed the provenance of the silver.

“It was immediately clear that the vessel was unlike any other silver contained in the hoard: instead, the results point to origins in the Sasanian Empire, what is today Iran.

“Elemental analysis using portable X-ray fluorescence revealed that the vessel is an alloy of silver and relatively pure copper, which is typical of Sasanian silver, but not contemporary European silver.

“In addition, the isotopes of the lead contained within the silver metal and niello match ore from Iran. We can even go so far as to say that the niello derives from the famous mine of Nakhlak in central Iran.

“It’s fantastic to have scientific confirmation for the distant origins of this remarkable object.”

Vikings were pirates and robbers; Like British, Spanish and Portugese they plunderd the treasures from different countries.

The vessel will go on display for the first time later this month as part of the British Museum’s forthcoming exhibition, Silk Roads, in London.

Other objects from the Galloway Hoard will go on long-term display at the National Museum of Scotland, in Edinburgh, while a portion will go on show at Kirkcudbright Galleries.

Dr Sue Brunning, from the British Museum, said: “We’re delighted that visitors to Silk Roads will be the first in the world to see this key object from the Galloway Hoard.

“Among its remarkable contents were Scotland’s earliest recorded silk, and so it is a highly appropriate inclusion in the exhibition.

“For the first time it will be displayed alongside a similar vessel found in northern Britain and also used as a Viking-age treasure container, but the Galloway vessel is the only one confirmed as originating beyond Europe, in lands far to the east.

“It was, itself, a long-distance traveller on the Silk Roads’ sprawling networks.”

— subham—

Tags- Persian Urn, Scotland, Fire altar, Zoroaster, Yajna fire, Crown

Magic of Thailand Fair in London -2 (Post.13,622)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,622

Date uploaded in London – 2 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

I went to Magic of Thailand Fair yesterday 31st August 2024 and spent there for three hours. Becauseit was forenoon people were trickling in. I watched two people performing on the stage. Male and female singers sang Thai language songs. Later a woman played on Thai musical instrument. It looked like Thai Dripex Kalimba instrument.

The huge ground at Ealing common had over 200 shops, about 100 selling Thai food and another selling Thail clothes and artifacts.

The musical instrument evoked sweet sounds. Earlier I saw four Buddhist monks walking in the ground. A girl was ringing a bell to announce their arrival. They stopped at a few shops and got some food items. The shop owners saluted them and gave something with great reverence.

Among the artifacts, I saw Ganesh, Hindu Yogi and Buddha dolls and Thai dancers. In the food section, they arranged the food items with decorations.

I took some pictures. please see the attachments.

–subham–

Magic of Thailand-2, , London, Pictures, 31-8-2024, Part 2

அவ்வையாரின் ஆத்திச்சூடியில் மருத்துவ அறிவுரைகள்- 3 (Post No.13,621)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,621

Date uploaded in London – 2 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

88. மனம் தடுமாறேல்.

88.DO NOT BE TROUBLED IN MIND

தற்காலத்தில் அதிகமான பேரைப் பாதிப்பது மன நோய்; தேர்வு முடிவுகள் வந்தவுடன் மன வலிமை இல்லாதோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்; இதே போல வறுமை , வர்த்தகத்தில் தோல்வி, தேர்தலில் தங்கள் தலைவர் தோல்வி, காதலில் தோல்வி என்ற விஷயங்களும் மனிதர்களுக்கு மோசமான முடிவைக் கொடுக்கின்றன குறுக்கு வழியில், உடனே வெற்றி கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் இதற்கு காரணம். பாரதியாரின் பாசிட்டிவ் எண்ணம் உள்ள பாடல்களை மாணவ மாணவியருக்கு பாடமாக வைக்க வேண்டும். தெய்வத்தின் மீது நம் பிக்கையைப்  பரப்ப வேண்டும்.

14. அன்னையை வேண்டுதல்

எண்ணிய முடிதல் வேண்டும்,

நல்லவே எண்ணல் வேண்டும்;

திண்ணிய நெஞ்சம் வேண்டும்,

தெறிந்தநல் லறிவு வேண்டும்;

பண்ணிய பாவ மெல்லாம்

பரிதி முன் பனியே போல,

நண்ணிய நின்முன் இங்கு

நசித்திடல் வேண்டும் அன்னாய்!- பாரதியார்

****

மனதில்  உறுதி வேண்டும்

      வாக்கினிலே இனிமை வேண்டும்;

நினைவு நல்லது வேண்டும்,

      நெருங்கின பொருள் கைப்படவேண்டும்;

கனவு மெய்ப்படவேண்டும்,

     கைவசமாவது விரைவில் வேண்டும்;

தனமும் இன்பமும் வேண்டும்,

     தரணியிலே பெருமை வேண்டும்;

கண் திறந்திட வேண்டும்,

     காரியத்தில் உறுதி வேண்டும்;

பெண் விடுதலை வேண்டும்,

    பெரிய கடவுள் காக்க வேண்டும்;

மண் பயனுற வேண்டும்.

    வானமிங்கு தென்பட வேண்டும்;

உண்மை நின்றிட வேண்டும்!

ஓம்,ஓம், ஓம்– பாரதியார்

****

91.மீதூண் விரும்பேல்.

91.BE NOT GLUTTONOUS

Do not eat excessive food

You are what you eat ! என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்

இதன் பொருள் : நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதுதான் நீங்கள்! அதாவது உங்கள் மன நிலையும் உடல் நிலையும்  நீங்கள் சாப்பிடுவதைப் பொறுத்தே அமையும்

அம்மா கையால் , அன்புமிக்க உறவினர் கையால் சாப்பிட்டால் நல்ல குணங்கள் பெருகும்; ஹோட்ட்டலில் சாப்பிட்டால் அங்கு சமைப்போர் , பரிமாறுவோரின் எண்ணங்கள் நம்மைப் பாதிக்கும். ராம கிருஷ்ண உபதேச மஞ்சரியில் அவர் ஒரு கதை சொல்கிறார்.

ஒரு சாது சந்நியாசிக்கு கொலைகார எண்ணங்கள் வரவே அவர் என்ன செய்தாலும் அது அகலவில்லை. பின்னர் குருவிடம் சென்று முறையிட்டவுடன், நீ என்ன சாப்பிட்டாய் , எங்கெங்கு  சாப்பிட்டாய்? என்று வினவுகிறார்; அவர் சாப்பிட்ட இடங்களில் ஒன்று வன் முறையில் இறங்குவோர் இடம் ; இனிமேல் அங்கு சாப்பிடாதே என்று அறிவுரை தந்தார் .காம, க்ரோத , லோப எண்ணங்களைத் தவிர்க்க , நல்லோர் கையால் சாப்பிட வேண்டும் ; அப்படிக் கெட்டவர் கையால் சாப்பிட நேர்ந்தால் மனத்தளவில் இறைவனுக்குப் படைத்துவிட்டு சாப்பிட வேண்டும் .

உடல் ரீதியான விளைவுகளை விளக்கவே தேவை இல்லை; சர்க்கரைச் சத்து, கொழுப்புச் சத்து உணவுகளைத் தவிர்த்தால் போதும்; அதாவது அளவுக்கு மீறக் கூடாது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்ற பழமொழியை நாம் நினைவிற்கொள்ள வேண்டும் .

நேரம் இருந்தால் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சத்வ , ராஜஸ, தாமஸ உணவுகள் எவை என்று கொடுத்த பட்டியலையும் படியுங்கள் (இதே பிளாக்கில் கட்டுரைகள் உள )

****

நீதி வெண்பாவில் வரும் தமிழ் பாட்டு ஒன்று கூறுகிறது:

“ ஒருபோது யோகியே ஒண்டளிர்க்கை மாதே!

இருபோது போகியே யென்ப—திரிபோது

ரோகியே நான்குபோ துண்பா னுடல் விட்டுப்

போகியே யென்று புகல் உண்பான் ”

(ஒருவேளை உண்பான் யோகி, இருவேளை உண்பான் போகி

மூவேளை உண்பான் ரோகி  நான்கு வேளை உண்பான் போகியே போகி (ஆள் அவுட்!) என்பது இதன் பொருள்)..

யோகி போல உண்ணாவிட்டாலும் ரோகி அளவு உண்ணாதீர்கள் !

****

உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கு அழகு – என்று கொன்றை வேந்தன் கூறுகிறது,

காரணம்? — பெண்கள் சமையல் அறையில் அதிகம் புழங்குவதால் ‘’ருசி பார்க்கும்’’ சாக்கில் அல்லது குழந்தைகளுக்கு ஊட்டும் சாக்கில் அதிகம் சாப்பீட்டுவிட்டு எப்போதும் ‘’கர்ப்பிணி போல’’ காட்சி அளித்தால் நன்றாக இராது.

****

திருமூலரும் திருமந்திரத்தில் நமக்கு உணவு பற்றி நல்ல அறிவுரைகளை வழங்குகிறார் :

அண்டஞ் சுருங்கில் அதற்கோ ரழிவில்லை

பிண்டஞ் சுருங்கிற் பிராணன் நிலைபெறும்

உண்டி சுருங்கில் உபாயம் பலவுள

கண்டங் கறுத்த கபாலியு மாமே.– திருமந்திரம்

பொருள்

உடலுறவு (புணர்ச்சி) SEX குறைந்தால் , நமக்கு இறைவன் அளித்த மூச்சு எண்ணிக்கை மிகும். அதனால் உடம்புக்கு அழிவில்லை.

உணவு அளவிற் சிறிது குறைத்து உண்டால்,  மூச்சு மிகுதியாகத் தங்கும். அதனால் இன்பம் மிகும்

பொதுவாக மக்கட்கு உள்ளே போகும் மூச்சு பத்து விரல்; வெளியே போகும் மூச்சு  பன்னிரண்டு விரல்;. இம் முறை, முறையே நடக்கும்போது இருபத்துநான்கு விரல், ஓடும் போது நாற்பத்திரண்டு விரல், உண்ணும்போது பதினெட்டு விரல், உறங்கும்போது ஐம்பது விரல், உடலு றவின்போது அறுபது விரல், மூச்சு வெளிச்செல்லும். விரல் – அங்குலம்.;

செக்ஸ், கோபம்,முதலியன நமது உடல் வங்கியிலுள்ள மூச்சு என்னும் பணத்தை வேகமாகச் செலவிடும் ; இறைவன் நம்மை பூமிக்கு அனுப்பியபோது உனக்கு இத்தனை மூச்சுகள் என்று கணக்குப்போட்டு அனுப்பி இருப்பதாக திருமூலர் வேறு ஒரு பாடலில் கூறுகிறார் அதை விரைவாகச் செலவிட்டு எல்லோருக்கும் குட் பை சொல்லிவிட்டுப் போவதும், குறைவாகச் செலவிட்டு கொள்ளுப்பேரனையும் ஆசீர்வத்திது விட்டுப்போவதும் நம் கையில்தான் உள்ளது.

Continence Leads to God-hood

If the seminal seed thickens by sexual abstention

It shall never be destroyed;

If the body is lightened by austere discipline

Long shall the life be;

If food is eaten sparingly

Many the good that flow;

You may verily become

The Lord of Dark-Hued throat.—Tiru manthiram

To be continued……………………………………..

Tags- அவ்வையாரின் ஆத்திச்சூடி, மருத்துவ அறிவுரைகள், part 3, திருமூலர் , பாரதி, உண்டி சுருக்குதல், ஒருவேளை உண்பான், மனதில் உறுதி, ஒருபோது யோகியே