கடவுள் எங்கே இருக்கிறான் ?  அப்பர், திருமுலர், கம்பர் பதில் (Post No.13,620)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,620

Date uploaded in London – 2 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

கடவுள் எங்கே இருக்கிறான்? என்ற கேள்விக்கு மூன்று பெரியார்கள் பதில் சொல்லிவிட்டார்கள் ; மக்கள் கேட்ட கேள்விகள் ?

கடவுள் எங்கே இருக்கிறான்?

மனதுக்குள் இருக்கிறானா ? வெளியே இருக்கிறானா ?

அவனுக்கு உருவம் உண்டா? இல்லையா?

நேரடியாகப் பார்க்கலாமா? அல்லது மறைவாக இருக்கிறானா?

அவன் ஒருவனா ? பல வடிவங்களில் உள்ளானா ?

இந்த எல்லா கேள்விகளுக்கும் அப்பர், திருமுலர் , கம்பர் பதில் சொல்லியிருக்கிறார்கள்

****

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பதில்

அழுக்கடைந்த கண்ணாடியில் சூரிய கிரணம் பிரதிபலிப்பதில்லை .அது போல மாயைக்குட்பட்ட அசுத்த ஆத்மாக்களின் இருதயத்தில் ஈஸ்வர தேஜஸ் தோன்றுவதில்லை.ஆனால் தெளிவான கண்ணாடியில் சூரியன் பிரதிபலிப்பதைப் போல தூயோரின் மனத்தில் பகவான் தோன்றுகிறான் .

****

ஒரு லிட்டர் பாலில் இரண்டு லிட்டர் நீரைக் கலந்துவிட்டால், அதிலுள்ள தண்ணீர் முற்றும் வற்றி , பால் மட்டும் கிடைக்க நீண்ட நேரம் காய்ச்சவேண்டும் சாதாரண இல்லறத்தானுடைய மனம் , தண்ணீர் கலந்த பால் போன்றது. உண்மையான பக்தனுடைய நிலையை அடைய அவனுக்கு நீண்ட காலமும், நெடிய முயற்சியும் தேவை. (இதற்குப் பின்னர்தான் கடவுள் தரிசனம் )

****

கம்பர் பதில்

ஒன்றே என்னின் ஒன்றேயாம், பல என்று உரைக்கின் பலவேயாம்

அன்றே என்னின் அன்றேயாம், ஆமே என்னின் ஆமேயாம்

இன்றே என்னின் இன்றேயாம், உளது என்று உரைக்கின் உளதேயாம்

நன்றே நம்பி குடி வாழ்க்கை நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா!

இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்; பல என்றால் பலவேதான்; அப்படி அல்ல என்றாலும் அல்லதான்; அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்; இல்லை என்றாலும் இல்லைதான்; உண்டு என்றாலும் உண்டுதான்; எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று!

****

அப்பர் பதில்

விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே

– திருநாவுக்கரசர்/அப்பர்

விறகில் தீ இருப்பது போலவும், பாலில் நெய் இருப்பது போலவும், மணியில் ஒளி இருப்பது போலவும் இறைவன் மறைந்திருக்கிறான். ஆனால் சோதி வடிவாய் இருக்கிறான். அதிலும் மணிச்சோதியாய் மாமணிச்சோதியாய் உள்ளான்.

                  அப்படியிருந்தும் நம்கண்ணுக்குத் தெரியவில்லையே என்பார் சிலர். குருட்டுக் கண்ணுக்கு உலகியல் பொருள் தெரியாது அதுபோல அறியாமை நிரம்பிய நம்மனோருக்கு அச்சோதி புலப்படாது. நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவாகிய கோலை நட்டு, உணர்வாகிய கயிற்றினால் முறுக வாங்கிக் கடைய முன்னின்றருளுவான் என்கிறார். அப்பர். முறுகக் கடைய விறகில் தீ தோன்றும். வாங்கிக் கடைய பாலில் நெய் தோன்றும் கடைய மணியில் ஒளி தோன்றும். எனவே பக்தியுடன் உறவுடன் முறுக வாங்கிக் கடைந்து இறைவனைக்கண்டு இன்புறுவோமாக.

****

திருமுலர் பதில்

உள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் என்பவர்க்

குள்ளத்தும் உள்ளன் புறத்துள்ளன் எம்மிறை

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்

குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

பொருள்

பக்தியுடன் வழிபடுவோர், எங்கும் நிறைந்த இறைவனை , உள்ளத்திலும் காணலாம்; வெளியிலும் காணலாம். உள்ளத்தும் இல்லை; புறத்தும் இல்லை என்று கூறும் நாத்தீகர்களுக்கு  உள்ளத்தும் புறத்தும் வெளிப்படாது மறைந்து நிற்பான். 

Existence of God is an Act of Faith

Say, Lord is within you and without you

Then sure my Lord is within you and without you;

To them they say,

He is neither within you or without you

Sure is He nowhere for them.

 –subham—

Tags- கடவுள் எங்கே இருக்கிறான் ? அப்பர், திருமுலர், கம்பர் பதில் , ராமகிருஷ்ண பரமஹம்ஸர் பதில்

குத்தல் மொழி’ எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்? (Post No.13,619)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.619

Date uploaded in London – 2 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

குத்தல் மொழி’ எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்?

ச. நாகராஜன்

சீரியல் பார்க்கும் நம் தமிழ் மகளிர் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தியை அமெரிக்க ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது.

கீழே உள்ள பத்து கேள்விகளுக்கு தமிழ் இல்லங்களில் உள்ள தலைவனும், தலைவியும் பதிலளித்தால் தங்கள் தலைவிதியுடன் தங்கள் குழந்தைகளின் தலைவிதியையும் சேர்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

கேள்வி 1 : – 25  வயது  முதல் 34 வயது முடிய உள்ள தந்தைமார்கள் வாரத்திற்கு எத்தனை மணி நேரம் டி.வி, பார்க்கிறார்கள்?

அ) 10 மணி ஆ) 15 மணி இ) 20 மணி ஈ) 26 மணி

கேள்வி 2:- வேலைக்குப் போகாமல் இருக்கும் இல்லத்தலைவி வாரத்திற்கு எத்தனை மணி நேரம் டி.வி. பார்க்கிறார்?

அ) 20 மணி ஆ) 25 மணி இ) 30 மணி ஈ) 48 மணி

கேள்வி 3:- 18 வயது முடிந்த நிலையில் சராசரியாக நம் குழந்தைகள் எத்தனை வன்முறைக் காட்சிகளை டி.வி,யில் பார்த்திருக்கிறார்கள்?

அ) 25000 ஆ) 50000 இ) 75000  ஈ) 180000

கேள்வி 4 :-  தன் குழந்தைகளுடன் அர்த்தமுள்ள விஷயங்களை ஆக்கபூர்வமாகப் பேசுவதில் ஒரு தந்தை எவ்வளவு நேரம் செலவிடுகிறார்?

அ) ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் ஆ) வாரத்திற்கு 10 நிமிடங்கள் இ) வாரத்திற்கு 20 நிமிடங்கள் ஈ) வாரத்திற்கு 30 நிமிடங்கள்

கேள்வி 5 :-  மணமான தம்பதியினர் ஒவ்வொரு நாளும் தங்களுக்குள் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள விஷயங்களை எவ்வளவு நேரம் பரிமாறிக் கொள்கிறார்கள்?

அ) நான்கு நிமிடங்களுக்கும் கீழாக ஆ) 15 நிமிடங்கள் இ) சுமார் 20 நிமிடங்கள் ஈ) 30 நிமிடங்கள்

கேள்வி 6 :-  ஒரு மனிதனை வாழ்வில் உயர வைப்பது உளவியல் ரீதியாக அவருக்கு நாம் தரும் ஆக்கபூர்வமான ஊக்கம். இதை VALIDATION என்பர். இதற்கு எதிர்மறையாக அவனை நசுக்கும் விமரிசனங்கள், கேலி, நையாண்டி மொழிகள் அவனது ஊக்கத்தை இழக்கச் செய்து அவனைச் சீரழிக்கும். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு இளம் வயது டீன் – ஏஜர் தன் பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களிடமிருந்து இப்படிப்பட்ட எத்தனை “குத்தல்” மொழிகளைப் பெறுகிறான்?

அ) 11 ஆ) 21 இ) 57 ஈ) 113

கேள்வி 7  :-  ஊக்கத்தை இழக்கச் செய்யும் குத்தல், கேலி மொழிகளை ஒரு டீன் – ஏஜர் தன் டீன் – ஏஜ் வயதிற்குள் (13 முதல் 19 வயது) எத்தனை பெறுகிறார்?

கேள்வி 8 :- உங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் பெறும் குத்தல் மொழிகளுக்கு ஈடு கொடுக்கும் விதமாக எத்தனை ஊக்க மொழிகளை நீங்கள் தருகிறீர்கள்?

கேள்வி 9:- சில உளவியல் நிபுணர்கள் ஒரு ஊக்க மொழி பத்து குத்தல் மொழிகளின் புண்களை ஆற்றிவிடும் என்று நம்புகின்றனர். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமும், ஊழியர்களிடமும் எத்தனை குத்தல் மொழிகளை நீங்கள் தருகிறீர்கள்? அத்துடன் உங்கள்  முன்பாக மற்றவர்களைத் தர அனுமதிக்கிறீர்களா?

கேள்வி 10:- உங்கள் கீழ் பணி புரியும் ஊழியர்களுக்கு ஆக்க பூர்வமாக அல்லது அவர்களைச் சரி செய்யும் விதமாக நீங்கள் அவர்களுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?

அ) ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் ஆ) வாரத்திற்கு 10 நிமிடங்கள் இ) வாரத்திற்கு 20 நிமிடங்கள் ஈ) வாரத்திற்கு 30 நிமிடங்கள்

கேள்விகளுக்கு விடைகளை எழுதியவர்கள் இங்குள்ள விடைகளைப் பார்த்து ஒப்பீடு செய்து கொள்ளலாம்

========================================================================

விடைகள்

1) ஈ) 26 மணி நேரம் (அடேயப்பா)

2) ஈ) 48 மணி நேரம் (அடேங்கப்பா)

3) ஈ) 200000 – இளம் வயதினருக்கான அமெரிக்க அகாடமி தரும் புள்ளிவிவரம் இது.

4) அ) ஒரு நாளைக்கு ஒரு நிமிடம்

5) அ) நான்கு நிமிடங்களுக்கும் கீழாக (-டைவர்ஸ் ஏன் அதிகமாகாது?)

6) ஈ) 113 (அடேயப்பா, இத்தனை முறையா குத்தல் மொழிகளைப் பெறுவது?)

7) 288715 (நம்பமுடியவில்லையா?)

8) ஒரு நல்ல மானேஜர் அல்லது குடும்பத் தலைவர் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஊக்கமொழிகளைத் தந்து கொண்டே இருப்பார். இவர் தான் காட்ஃபாதர்!

9) ஒரு நல்ல மானேஜர் அல்லது குடும்பத் தலைவர் தன் வாழ்க்கை அகராதியிலிருந்து நச்சு மொழிகளை எடுத்து எறிபவராகவே இருப்பார்.

அதுமட்டுமின்றி தான் இருக்கும் பகுதிக்குள் இப்படிப்பட்ட குத்தல் பேச்சுக்கே இடம் இல்லாமல் செய்து விடுவார்.

10) உங்கள் கீழ் பணிபுரியும் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட குணாதிச்யம் உடையவர். ஆகவே நிலைமைக்கும், ஆளுக்கும் ஏற்றபடி ஊக்க மொழிகளை உகந்த முறையில் தர வேண்டியிருக்கும்! இதே போலத்தான் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்குத் தக்கபடி ஊக்க மொழிகளைத் தர வேண்டியிருக்கும். இதில் நேரப் பிரச்சினை இல்லாது தேவையான நேரத்தை ஒதுக்க வேண்டும்.

=======================================================================

ஒரு இல்லத்தலைவி வாரத்தில் 48 மணி நேரம் டி.வி. பார்ப்பதோடு, தன் குழந்தைகளையும் அவர்கள் “ஆளாவதற்குள்” இரண்டு லட்சம் வன்முறைக் காட்சிகளைப் பார்க்க அனுமதித்து, அவர்களுடன் ஒரு நாளைக்கு ஒரு நிமிட நேரம் மட்டுமே அர்த்தமுள்ள மொழிகளைப் பேசினால் அந்தக் குடும்பம் என்ன ஆகும்?

ஸ்டூவர்ட் சேஸ் என்ற பிரபல பொருளாதார நிபுணர் தனது நாட்களை எப்படிச் செலவழிக்கிறோம் என்று பார்க்க எண்ணி ஆராய ஆரம்பித்தார். இதற்காக மனித மதிப்புகளை (அன்பு, கருணை, தர்மம், சாந்தி, அஹிம்சை போன்றவை) எழுதி வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் “வாழ்ந்த காலத்தை”க் கணக்கிட்டார்.

ஒரு வாரத்திற்கான 168 மணி நேரத்தில் “உயிருடன் இருந்து வாழ்ந்தது” எத்தனை நேரம், “இருந்தும் இறந்தது” எத்தனை நேரம் என்று அவர் கணக்கிட்டதில் அவர் கண்டுபிடித்தது என்ன தெரியுமா? சுமார் நாற்பது மணி நேரம் மட்டுமே தான்  வாழ்ந்ததாக அவர் கண்டு பிடித்தார். அதாவது சுமார் 25 சதவிகிதம் மாட்டுமே தான் வாழ்ந்ததைக் கண்ட அவர் தன்னை மாற்றிக் கொண்டார்.

நாமும் கூட வாரத்தில் 168 மணி நேரத்தில் “இருந்து வாழ்ந்தது” எத்தனை மணி நேரம் என்று கணக்கிடலாம்.

வாரம் முழுவது “வாழ” முயற்சி எடுக்கும் தம்பதியினரின் குடும்பம் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் லட்சியக் குடும்பமாக ஆகிவிடும்.

இது இன்றைய அறிவியல் ஆய்வு மூலம் நாம் பெறும் அற்புத உண்மை!

**

சினேகிதி மாத இதழில் 2006, ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரை.

Magic of Thailand Fair in London -1 (Post No.13,618)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,618

Date uploaded in London – 1 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

I went to Magic of Thailand Fair yesterday 31st August 2024 and spent there for three hours. Becauseit was forenoon people were trickling in. I watched two people performing on the stage. Male and female singers sang Thai language songs. Later a woman played on Thai musical instrument. It looked like Thai Dripex Kalimba instrument.

The huge ground at Ealing common had over 200 shops, about 100 selling Thai food and another selling Thail clothes and artifacts.

The musical instrument evoked sweet sounds. Earlier I saw four Buddhist monks walking in the ground. A girl was ringing a bell to announce their arrival. They stopped at a few shops and got some food items. The shop owners saluted them and gave something with great reverence.

Among the artifacts, I saw Ganesh, Hindu Yogi and Buddha dolls and Thai dancers. In the food section, they arranged the food items with decorations.

I took some pictures. please see the attachments.

To be continued………………………….

–subham–

Magic of Thailand-1, , London, Pictures, 31-8-2024

ராமாயண சிற்பங்கள் உள்ள பச்சல சோமேஸ்வரர் கோவில்-28 (Post No.13,617)

Chaya Someswar Temple.

Pachala Someswar Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,617

Date uploaded in London – 1 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 28

சாயா சோமேஸ்வரர் கோவிலில் நிழல் அதிசயம்

Pachala Temple Pictures

Mohini distributing Amrita 

Jatayu

பனகால் என்றும் பச்சல என்றும் அழைக்கப்படும் சிற்றூர் தெலுங்கானா மாநிலத்தில் நலகொண்டா நகருக்கு வெகு அருகில் இருக்கிறது. ஹைதராபாத்திலிருந்து சுமார் 110 கி.மீ..

இங்குள்ளது சிவன் கோவில்; ஆனால் அற்புதமான ராமாயண ,சிற்பங்கள் நிறைந்த கோவில். சுமார் 900 ஆண்டுகள் பழமையானது.

முதலில் கொஞ்சம் சொல் ஆராய்ச்சியில் இறங்குவோம். பச்சல என்று ஏன் பெயர் வந்தது என்றால் அங்குள்ள சிவன் பச்சை நிறக் கல்லால் ஆனது; ஆனிக்ஸ் Green Onyx எனப்படும் இரத்தின வகைகைக் கல் ; மரகதத்தை வீட மதிப்பு குறைந்தது . நல கொண்டா என்றால் நீலகிரி– நீல மலை ; உண்மைதான் ! ஹைதராபாத்திலிருந்து காரில் சென்றால் ஒரு புறம் நீல மலையைப் பார்த்து ரசித்த வண்ணம் செல்லலாம்.

சிறப்புகள் என்ன?

கோவிலில் சிவன் பிரம்மா, விஷ்ணு மூவரும் இருந்தாலும் சிவன்தான் கர்ப்பக்கிரகத்தில் உள்ளார்; பூஜை புனஸ்காரங்கள் உண்டு . ஆயினும் ராமாயண சிற்பங்கள்தான் அதிகம் ; அவை தவிர சிவ லீலைகளும் , மகாபாரதக் காட்சிகளும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன ; சுமார் 70 தூண்களை அழகாகச் செதுக்கியுள்ளனர். கோவிலுக்குப் பின்புறத்தில் மியூசியம் உள்ளது. பெரிய ஏக்கர் கணக்கில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள இடமே மியூசியம் ; வரலாற்று ஆய்வாளர்களுக்கு சொர்க்க பூமி.

கோதண்ட ராமன் வில்லை வளைக்கும் காட்சி, சூர்ப்பனகையின் மூக்கை அறுக்கும் காட்சி, ஜடாயுவின் உயிர்த்தியாகம் முதலிய காட்சிகள் உள ; இவைதவிர மணிகள் கட்டிய அலங்கார நந்தி, நடனமாடும் நங்கைகள், மிருதங்க வாத்யம் முழங்கும் காட்சிகள் , ஆகியனவும் புகைப்படம் எடுப்போருக்கு நல்ல விருந்து சமைக்கும் .

வரலாறு

வெளியிலிருந்து பார்த்தால் பாழடைந்த கோவிலாகவே தென்படும்; உண்மையில் பூர்த்தியாகாத கோவில்தான். மூன்று சந்நிதிகளை இணைத்து பிற்காலத்தில் சுவர்களை எழுப்பியுள்ளனர்; உள்ளே அழகிய சிற்பங்கள் உள்ளன ; வெளிப்புறச் சுவர்களிலும் இதிஹாச, புராண சிற்பங்களை அமைத்துள்ளனனர். விஷ்ணுவின் தசாவதாரங்களையும் சிற்பத்தில் காணலாம்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அருகிலேயே , சுமார் 2 கி.மீ. தொலைவில் அதிசயங்கள் நிறைந்த சாயா சோமேஸ்வரர் கோவில் உளது ; அதன் விவரங்ககளை தனியே காண்போம்.

ஊரில் வெங்கடேசர் கோவிலும் இருக்கிறது.

காகதீய மன்னர்கள் சிவ பக்தர்கள்; அவர்கள் கட்டிய கோவில்தான் இது.

1982- ம் ஆண்டில் கோவிலுக்குப் பின்புறம் மியூஸியத்தை அமைத்தனர். சுமார் மூன்று  ஏக்கர் பரப்பில் 640 பொருட்களைக் காணலாம். அவை அந்தப் பகுதியின் 2000 ஆண்டு வரலாற்றை  நம் கண் முன்னே கொண்டுவரும்.

xxxx

சாயா சோமேஸ்வரர் கோவிலில் நிழல் அதிசயம்

சாயா என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு நிழல் என்று பொருள்; அங்கே விஞ்ஞானிகளுக்கும் விளங்காத அளவுக்கு நிழல் விழுகிறது; இதுவும் ஒரு சிவன் கோவில்தான்.

நல்கொண்டாவிலிருந்து 4 கி.மீ தூரத்திலும், ஐதராபாத்திலிருந்து 107 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.  உதயசமுத்திரம் ஏரிக்கு அருகில் அமைந்துள்ளது. கோவிலில் உள்ள லிங்கம் பொதுவாக முழங்கால் அளவு ஆழமான நீரில் உள்ளது.

சாயா சோமேஸ்வரர் கோவிலில் சிவன், விஷ்ணு, சூரிய பகவான் ஆகிய மூவருக்கும் சந்நிதிகள் இருக்கின்றன  அவைகளை மண்டபத்தால் இணைத்திருப்பதால் இதை திரிகூட வகை கோவில் என்பார்கள் ; கோபுரம் பிரமிடு போல காட்சி தரும்; அதுவும் ஒரு புதுமைதான்  மூன்று பிரமிடு வடிவ கோபுரங்களைக் காணலாம்.

கோவிலின் தூண்களில் ராமாயண மற்றும் மகாபாரத காட்சிகளை காணலாம் குண்டூர் தெலுங்குச் சோழர்களின் கைவண்ணம் இது.

இந்தக் கோவிலுக்கான சாசனங்கள் தெலுங்கு மன்னர் பரம்பரையைச் சார்ந்த காகதியர்கள் கி.பி. 1290ல் ஆட்சிக்கு வந்த காலத்தில் எழுதப்பட்டன. அப்போது கோவில் திருப்பணிகளும் நடைபெற்றது. குண்டூர் சோழர்கள் மற்றும் காகதியர்கள் கால கலைகள் ஆலயத்தில் இடம் பெற்றுள்ளன. டெல்லி சுல்தானின் காலத்தில் முஸ்லீம் படைகள் கோவிலை இடித்து நாசம் செய்தன.

நிழல் அதிசயம் என்றால் என்ன ?


Churning the Milky Ocean in Pachala Temple

ஒரு பொருளுக்கு முன்னால் இருந்து சூரிய வெளிச்சம் வந்தால் பின்புறத்தில் நிழல் விழும்; இது இயற்கை நியதி. சூரியன் மேலே போகப்போக நிழலும் மாறிக்கொண்டே வரும்; ஆனால் இந்தக் கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் பின்னால் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதோடு மட்டும் அல்லாமல், சூரியன் மலவாயில் விழுந்த பின்னரும் நிழல் நீடிக்கிறது. இதனால்தான் சாயா / நிழல் என்ற அடை மொழி.

பகல் நேரம் முழுதும் சிவலிங்கத்தின் மீது ஒரு தூணின் நிழல் விழுகின்றது. இந்த தூணின் நிழல் ஒரே இடத்திலேயே இருக்கிறது .  கருவறைக்கு முன்பாக மொத்தம் நான்கு பட்டை வடிவ தூண்கள் உள்ளன கருவறைக்குள் விழும் நிழல் எந்த தூணுக்கானது என்பதை கண்டறிய முடியவில்லை..

தூண்களில்  ராமாயணம், மகாபாரத  நிகழ்சசிகளை சிற்பங்களாக சித்தரித்துள்ளனர் ;மானாக உருவம் எடுத்த மாரீசனை ராமன் கொல்லும் காட்சி, மானின் தலை விழுந்ததும், மாரீசன் வெளிப்படுதல் போன்ற காட்சி அருமையாக வடிக்கப்பட்டுள்ளன.

தலை வெட்டப்பட்ட நிலையில்,  பல நந்திகள் கம்பீரமான தோற்றத்துடன் ஆலய வளாகத்தில்  காட்சி அளிக்கின்றன.  இது முஸ்லீம் படைகளின் அழிவு வேலை என்பதை சொல்லத்  தேவை இல்லை. காலத்தால் மன்னிக்கமுடியாத ஈனச் செயல்கள் அவை .

–subham—

ஆந்திரத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் Part 28, ராமாயண சிற்பங்கள், ,பச்சல சோமேஸ்வரர் கோவில், சாயா சோமேஸ்வரர் கோவில், நிழல் அதிசயம்

அவ்வையாரின் ஆத்திச்சூடியில்   அருமையான மருத்துவ அறிவுரைகள்-2 (Post No.13,616)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,616

Date uploaded in London – 1 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

Part 2

33.காப்பது விரதம்

33.FASTING MUST BE OBSERVED

உண்ணாவிரதம் இருப்பதால் வயிற்றுக்கும் குடலுக்கும் கொஞ்சம் ஓய்வு கிடைக்கிறது. இதனால் உடலும் மனமும் சுத்தமாகிறது. இந்துக்கள் மாதத்துக்கு இரண்டு  முறை வரும் ஏகாதஸி நாட்களை பட்டினி விரதத்துக்கு ஒதுக்கியுள்ளனர். . அந்த நாட்களில் இறைவனையும் நினைக்க வேண்டும்; நாம் உணவில்லாமல் இருக்கும்போதுதான், ,உணவே கிடைக்காமல் கஷ்டப்படுவோரின் நிலையும் நமக்கு விளங்குகிறது.

உடனே வள்ளுவரின் குறள் நினைவுக்கு வருகிறது :

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.–குறள் 322

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.

xxx

54.சோம்பித் திரியேல்

54.DO NOT WANDER ABOUT IN IDLENESS

சோம்பேறியாக வாழ்க்கை நடத்தி, உறவினர்கள் சேர்த்துவைத்த சொத்து சுகங்களை அனுபவித்தால் , பிற்காலத்தில் உடம்பு வேலை செய்ய வணங்காது . மேலும் மன நிலையும் பாதிக்கப்பட்டு சூதாட்ட, சீட்டாட்டங்களில் ஈடுபடும்.. இழப்புகள் வருகையில் மன நிலை  பாதிக்கப்பட்டு மன நோயாளி ஆகிவிட வாய்ப்பு உண்டு.

xxxx

59. துன்பத்திற்கு இடம் கொடேல்.

59.DO NOT GIVE WAY TO TROUBLE

இடுக்கண் வருங்கால் நகுக அதனை

அடுத்தூர்வது அஃதொப்ப தில்.–குறள் 621

–என்ற வள்ளுவன் குறளை நினைவிற் கொள்ள வேண்டும். துன்பம் வரும்போது (அதற்காக கலங்காமல்) நகுதல் வேண்டும், அத் துன்பத்தை எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை. மன நிலை பாதிக்காதபடி இருக்க கவலைப் படுவதை நிறுத்த வேண்டும்.

xxxx

நீர் விளையாடேல்.

69.DO NOT PLAY IN WATER

கடல், ஆறு, குளம்,ஏரி , கிணற்றில் தவறி விழுந்து இறப்போரின் செய்திகள் வாரம் தோறும்  பத்திரிக்கைகளில் வருகின்றன. குறிப்பாக இளைஞர்களும் சிறுவர்களும்தான் இப்படி இறக்கிறார்கள் நீச்சல் தெரிந்தபோதும் அதிக உற்சாகத்தில் எல்லை மீறி நடந்து கொள்கிறர்கள்  ஆகையால் இந்த எச்சரிக்கையை சிறுவர்களிடம் பரப்பவேண்டும்.

xxxx

நுண்மை நுகரேல்.

70.DO NOT EAT DAINTIES/ OR NOT NICE IN FOOD

இதை நொறுக்குத் தீனி கூடாது என்று பொருள் கொள்ளலாம்..

உடலுக்கு அவசியம் இல்லாத, ருசிக்காக தின்னும் உணவுகள் இவை.

குறிப்பாக நொறுக்குத் தீனிகள் எண்ணெய்ப் பண்டங்களாகவோ அல்லது இனிப்புப் பண்டங்களாகவோதான் இருக்கும்; அவை இரண்டும் சர்க்கரை வியாதி, கொழுப்புச் சத்து தொடர்பான இருதய நோய்களை உண்டாக்கும். ஒருவேளை சத்தான உணவானாலும் கூட , முதலில் சாப்பிட்டது செரிமானம் ஆன பின்னரே அடுத்த உணவினை எடுக்க வேண்டும் . இதை வள்ளுவன் அழகாகச் சொல்லுவான்  :

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

அற்றது போற்றி உணின்–குறள் 942

முன் உண்ட உணவு செரித்த தன்மையை  அறிந்து தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை. என்பது இதன் பொருள்.

xxxx

நைவினை நணுகேல்.

74.DO NOT GO NEAR WHAT IS DANGEROUS/ DO NOT FOLLOW WHAT IS DESTRUCTIVE.

அபாயகரமானது எது , கெட்டது எது என்பதை புஸ்தகங்கள் சொல்லுவதை விட பெரியோர்கள் சொல்லுவதை விட, ஒருவரின் மனச்சாட்சியே சொல்லிவிடும் ; 12 வயத்துக்குக் குறைவான சிறுவர், சிறுமியருக்கு வேண்டுமானால் நாம் சொல்லித் தெரியும். ஏனையோருக்கு சொல்லாமலேயே தெரியும்.

சட்டத்தின் பிடியில் சிக்குவோர் எல்லாம் இப்படி ஆபத்தான அறநெறிக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு அகப்படுவதை , பிடிபடுவதை நாம் அன்றாடம் பத்திரிகைகளில் படிக்கிறோம். அப்படியும் இது நூற்றாண்டுக் கணக்கில் நடைபெறுவதால் அவ்வை நம்மை எச்சரிக்கிறார் ; இது ஒருவரின் மன நிலையை மிகவும் பாதிப்பதோடு அந்தக் குடும்பம், அவரது நெருங்கிய நண்பர்கள் மன நிலையையும் பாதிக்கும் என்பதில் ஐயமில்லை

xxx

நோய்க்கு இடம் கொடேல்.

76.DO NOT GIVE OCCASION TO DISEASE

வள்ளலார் ஒருமையுடன் நினது …….என்ற பாடலில் நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் என்று முருகனை வேண்டுகிறார் . அபிராமி பதிகம் பாடிய அபிராமி பட்டர் கலையாத கல்வியும் …….. என்ற பதிகத்தில் கழுபிணி இலாத உடல் வேண்டும் என்கிறார் . திருப்புகழில் அருணகிரிநாதரோ ஏராளமான பாடல்களில் நோய்களின் பட்டியலைக் கொடுத்து , அவைகள் எல்லாம் வேண்டாம் என்கிறார். திருமூலரும் உடலே கோவில் என்று சொல்லி அதைப் பாதுகாக்க அறிவுறுத்துகிறார். ஏன் ?

நாம் உணவு விஷயத்திலும் ஒழுக்கம் விஷயத்திலும் கவனம் செலுத்தாவிடில் நோய்க்கு இன்விடேஷன் அனுப்பி என் வீட்டுக்கு/ உடலுக்கு வந்து தங்கி விட்டுப்போ என்று சொல்வதற்குச் சமம் ஆகும் .

அந்தக் காலத்தில் என் மேல் படாதே என்னைத் தொடாதே என்று சொன்னதை எல்லாம் கிண்டல் செய்தவர்கள் கோவிட் என்னும் சீன வைரஸ் பரவிய காலத்தில் படவும் இல்லை; தொடவும் இல்லை; அது மட்டுமல்ல; மூன்றடி விலகி நின்றனர் ; வாயை மூடி கவசம் போட்டனர் ; வெளிநாட்டுத் தலைவர்களும் கைகூப்பி நமஸ்தே சொன்னார்கள் ; நோய்க்கு இடங்கொடேல் என்பதை விளக்க இவை போதும் !

அவ்வையார் போன்றோர் இதே ஆத்திச் சூடியில் உணவு பற்றிதான் நம்மை மீண்டும் மீண்டும் எச்சரிக்கிறார்கள்.

இதை மேலும் காணப் போகிறோம்.

தொடரும் …………………………

Tags- அவ்வையார், ஆத்திச்சூடி,  அருமையான மருத்துவ அறிவுரைகள்  பகுதி -2, நோய், உணவு, நீர் விளையாட்டு

வம்புச் சண்டைக்கு வருவோரை சமாளிக்க முடியுமா? (Post No.13,615)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.615

Date uploaded in London – 1 September 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

வம்புச் சண்டைக்கு வருவோரை சமாளிக்க முடியுமா? 

ச. நாகராஜன் 

“நான் பாட்டுக்கு ‘தேமேன்னு’ (தெய்வமே என்று) இருக்கேன்: என்னை வம்புச் சண்டைக்கு இழுக்கறா! இதைப் போக்க எந்தக் கட்டுரையாளராவது வழி சொல்ல முடியுமா என்ன?” என்று அங்கலாய்க்க வேண்டாம்.

சண்டையை நாமாகத் தொடங்காமல் இருக்கலாம்; ஆனால் ‘த்வஜம் கட்டிக் கொண்டு’ தொட்டதற்கெல்லாம் சண்டைக்கு வரும்  மாமியார்களையும், மருமகள்களையும், அண்டை வீட்டுக்காரர்கள் பலரையும் யாரால் சமாளிக்க முடியும் என்று கலங்கவும் வேண்டாம்.

வலிய வம்புச்சண்டைக்கு வருவோரின் எண்ணம் ‘பெருவெடிப்பு’  (BIG BANG ) ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்!

இதை டி-ப்யூஸ் (De – Fuse) செய்ய வழிகள் உண்டு; முயன்று பாருங்கள்.

பிரபல அமெரிக்க உளவியலாளர் ராண்டால் ஹாரிசன், “35 சதவிகித தகவல் தொடர்பை மட்டுமே மனித வார்த்தைகள் மூலம் சொல்கிறோம். மீதி 65 சதவிகித தகவல் தொடர்பை வார்த்தைகள் அல்லாத உடல் பாவங்கள் மூலமும், குரல் தொனியின் மூலமும் செய்கிறோம்” என்கிறார். சூடாக இருவருக்கு இடையே நடக்கும் முக்கியமான சண்டை ஒன்றை எடுத்துக் கொள்வோம். இரண்டு பேருமே தங்களை அறியாமலேயே தற்காப்பு நிலையை மேற்கொள்வதோடு, அடுத்தவரைத் தாக்கும் நிலைக்கும் தள்ளப்படுவர். இவர்கள் வார்த்தைகள் மூலம் பேசுவதுடன் அல்லாமல் இதர வழிகளிலும் தங்கள் சண்டை நிலையைக் காண்பிப்பர்.

1.   கை விரலை நீட்டிக் காட்டுதல் (நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்)

2.   உற்றுப் பார்த்தல்

3.   அந்தரங்க பிரத்யேக இடமான நான்கு அங்குலத்தையும் மீறி உடலுக்கு மிக நெருக்கமாக வந்து அச்சுறுத்தல் 

4.   கால்களை அகற்றி தங்கள் நிலைமையை அகலப்படுத்தல் 

5.   கை முஷ்டிகளை ஓங்குதல்

 6.   குரலை உச்ச ஸ்தாயிக்குக் கொண்டு செல்லல்

 வார்த்தைகள் மூலம் இல்லாமல் தங்கள் கோபத்தை இதர வழிகளிலும் காண்பிக்கும் வலுச்சண்டைக்காரரை டி-ப்யூஸ் பண்ண முடியுமா?  முடியும்! அவர்கள் வழியிலேயே சென்று வார்த்தைகள் இல்லாத நிலைகளை மேற்கொண்டு சமாதானக் கொடியை ஏற்ற முடியும்! வழிகளைப் பார்ப்போம்! 

கைகளைத் திறந்து வைத்தல் : வார்த்தைகள் அல்லாத சமாதான சமிக்ஞைகளில் தலையாயதும் மிக முக்கியமானதுமாக இருக்கும் ஒன்று உண்டென்றால் அதுதான் உள்ளங்கைகளை மேல் நோக்கித் திறந்து காட்டி வைத்திருத்தல். நாய்களைப் பாருங்கள்; அது சமாதானத்திற்காக தொண்டை குரல்வளையைக் காண்பிக்கும். அதற்கு ஈடாக மனித குலத்திற்கு சமாதான சமிக்ஞை, உங்கள் உள்ளங்கைகளை மேலே நோக்கிக் காட்டுவது தான்!

இது உடனடியாக சண்டையின் போது நம்மால் செய்ய இயலாது. ஏனெனில் நினைவுக்கு வராது. ஆகவே பயிற்சி மூலம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும். செய்து பார்த்தால் பலன் தெரியும்! சாதாரணமாகவே இப்படி வைத்துக் கொள்வது உங்கள் நேர்மை, நாணயத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டு, மதித்து பாராட்ட உதவும்.

முக்கோண நிலையில் உடல் நிலை: வலியச் சண்டை போடுவோர் நேருக்கு நேர் நம் முன்னே நிற்பர். இது அவர்கள் தங்கள் ஆக்ரோஷத்தைக் காட்ட மேற்கொள்ளும் நிலை. அச்சுறுத்தும் அளவில் நம் நெஞ்சுக்கு அருகில் வந்து விடுவர். நாமும் ஆக்ரோஷமாக அவர்களை நெருங்கினால் மோதல் முற்றிவிடும். இதைப் போக்க உங்களை எதிர்ப்பவரின் உடலுக்கு 90 டிகிரி இருப்பது போல உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் சண்டைக்காரரின் பார்வையையும், உங்கள் பார்வையையும் ஒரு கற்பனைப் புள்ளியுடன் இணைத்தால் ஒரு  முக்க்கோணம் ஏற்படும் வகையில் நீங்கள் நிற்க வேண்டும். இது தான் முக்கோண நிலை. நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உல்லாசமாகப் பேசும் போது நாம் மேற்கொள்ளும் நிலை இது தான். இந்த நிலையை எடுத்து மூன்றாவதான முக்கோணப் புள்ளி வழியே சண்டை இல்லாமல் நீங்கள் தப்பி விடலாம்.

 கீழே பார்த்தல்: நேருக்கு நேர் உற்றுப் பார்க்கும் போது நீங்கள் உங்கள் பார்வையைக் கீழே தாழ விடுங்கள். “உன் கூட சண்டை போட நான் தயாரில்லை” என்பதைச் சொல்லும் நிலை இது.

 குரலைத் தணித்தல்: எதிரில் இருப்பவர் உரக்கப் பேசப் பேச உங்கள் குரலைத் தாழ்த்திக் கொண்டே வாருங்கள். மெதுவாக, அளவெடுத்தது போல ஆறுதல் அளிக்கும் குரலைப் பயிற்சி மூலம் பெற்றுப் பயன்படுத்துங்கள். ஒன்றுமே காதில் விழவில்லை என்ற நிலைக்குச் சற்று மேலாக, கேட்கும் அளவில் குரல் இருந்தால் போதும்.

 தலையைத் திருப்புதல்: மிருகங்கள் மற்றும் மனிதர்களுக்கு கழுத்து மிக முக்கியமான அங்கமாகும். ஆண்டவன் படைப்பில் ஆபத்து நேரும் போது மிருகங்களும், மனிதர்களும் கழுத்தைத் தான் பாதுகாப்பர். நாய்கள் சண்டை போடும் போது பார்த்தால் அது ஒன்று மற்றொன்றின் குரல்வளையையே குறி பார்ப்பதைக் காணலாம். தலையைத் திருப்புவது சமாதானத்திற்கான அறிகுறி. தலையைத் திருப்புவதன் மூலம் உங்கள் கழுத்தை உங்கள் எதிரில் இருப்பவருக்குக் காண்பிக்கிறீர்கள். நீங்கள் அச்சுறுத்தி சண்டைக்கு வருபவர் இல்லை என்பதை உங்கள் கழுத்தைக் காண்பிப்பதன் மூலம் சொல்வதோடு நீங்கள் நிராயுதபாணி என்பதை நிரூபிக்கவும் இது உதவும்.

 இந்த அனைத்தையும் சேர்த்துச் செய்தால் வலியச் சண்டை போடுபவர் கூட நொந்து போய் சண்டை போட முடியாமல் திரும்பிச் சென்று விடுவார்கள். இது அறிவியல் நமக்குக் கற்றுக் கொடுக்கும் லேட்டஸ்ட் டிப்ஸ்!**

சினேகிதி மாத இதழில் 2006, மே மாதம் வெளியான கட்டுரை.

Learn Tiru manthiram through Pictures – Part 4 (Post No.13,614)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,614

Date uploaded in London – 31 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

One of the longest living animals on earth is Tortoise; records show that it can live up to 300 years, thrice the life span of human beings. Hindus discovered the secret before the biologists. Lord Krishna and Manu of Rig Vedic age used it in their books. Tamils copied it from them. Tirumular gives more details in his Tiru manthiram, book of 3000 Tamil verses. Tirumular, from Kashmir, Himalayas migrated to Tamil Nadu just 1200 years ago.

Here are some stanzas from Tiru manthiram of Tiru mular

பெருமை சிறுமை அறிந்தெம் பிரான்போல்

அருமை எளிமை அறிந்தறி வாரார்

ஒருமையுள் ஆமைபோல் உள்ளைந் தடக்கி

இருமையுங் கெட்டிருந் தார்புரை அற்றே.

Senses Controlled, They Saw This World and Next

Who there be who, like our Lord, distinct know

The great and the small, the difficult and the facile?

They, unto tortoise, drawing in senses five under the shell,

They heard and saw This and Next, all impurities dispelled.

xxxx

ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்
ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள
வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்
ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே

(திருமந்திரம் 2264, 2304)

Merge in Silentness, Senses Withdrawn

Deep in the Well of Silentness (Mauna)

Is a turtle–Jiva–(with Malas Five withdrawn)

If from Truth you deviate not,

And in (It) merge entire,

You shall indeed live

A thousand years beyond the turtle.

Xxx

ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில்

ஆமை அகத்தினில் அஞ்சம் அடங்கிடும்

ஓமயம் உற்றுஅது உள்ளொளி பெற்றது

நாமயம் அற்றது நாம்அறி யோமே. 17

 Turiyatita Experience

When with silent letter “M”

The articulate letters “A” and “U” conjoins,

The Five Senses are withdrawn,

As limbs within the tortoise;

Then Jiva is by “Aum” pervaded;

The light Divine beams from within;

The Self its sentience loses;

–This we know not.

xxxx

Breath Control Explained

திருமூலர் தனது பாடலில்:-

விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்
தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்
வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து
விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே

Breath Control For Ridding Malas

If ten times three hundred and thirty

The breath twelve finger-length

As Prana ascends upward,

The Malas Five subdued are;

So do the Tattvas, according.

Normally a man breaths 26,000 times a day. God has sent us with a specific number of breaths. When you exhaust them, you are no more. Tortoises and turtles use very less number of breaths compared to humans. Tiru mular says, do Yoga and control your breath , you can live longer. Brahmins are taught the breath control called Praanaayaama from the age of 5; Kshatrias from thee age of seven and Vaisyas from the age of 9 says our law books called Smritis. If you use less breaths every day, you get more time to live.

xxxx

Tortoise in Bhagavad Gita

. Bhagavad Gita: Chapter 2, Verse 58

यदा संहरते चायं कूर्मोऽङ्गानीव सर्वश: |
इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता || 58||

yadā sanharate chāya kūrmo gānīva sarvaśha
indriy
āīndriyārthebhyas tasya prajñā pratihhitā

yadā—when; sanharate—withdraw; cha—and; ayam—this; kūrma—tortoise; agāni—limbs; iva—as; sarvaśha—fully; indriyāi—senses; indriya-arthebhya—from the sense objects; tasya—his; prajñā—divine wisdom; pratihhitā—fixed in

yada sanharate chayam kurmo ’nganiva sarvashah
indriyanindriyarthebhyas tasya prajna pratishthita

Translation

BG 2.58: One who is able to withdraw the senses from their objects, just as a tortoise withdraws its limbs into its shell, is established in divine wisdom.

xxx

Tortoise in Manu Smriti

Manu took it from Mahabharata. We find 200 Manu Smriti slokas in Mahabharata.

नास्य छिद्रं परो विद्याद् विद्यात्छिद्रं परस्य च ।
गूहेत् कूर्म इवाङ्गानि रक्षेद् विवरमात्मनः ॥ Manu 7-१०५ ॥

nāsya chidraṃ paro vidyād vidyātchidraṃ parasya ca |
gūhet kūrma ivāṅgāni rakṣed vivaramātmanaḥ || Manu 7-105 ||

His enemy should hot know his weak points, but he must know the weak points of the enemy; he should hide the departments (of government) as the tortoise does its limbs; and he should guard his own weak points.—(7-105 Manu Smriti)

Xxx

It is Tamil Divya Prabandham of Alvars too (2360)

xxx

Tortoise in Tamil Veda Tirukkural of Tamil Saint Tiru Valluvar

தமிழர்கள் கண்டுபிடித்த ஆமை அதிசயம்!

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்புடைத்து (குறள் 126)

Like a tortoise, if one is able to restrain the five senses

It will give lasting strength through all his seven births- 126

Or

English Couplet 126:

Like tortoise, who the five restrains
In one, through seven world bliss obtains

Or

If a man learns to control his five senses in one birth as the tortoise, that power will stand by him in his seven future births.

Or


Couplet Explanation:

Should one throughout a single birth, like a tortoise keep in his five senses, the fruit of it will prove a safe-guard to him throughout the seven-fold births.

—-subham—-

Tags- Tortoise, Breath control, Bhagavad Gita, Manu Smriti, Tirukkural, Tirumular, Learn Tiru manthiram through Pictures – Part 4

அவ்வையாரின் ஆத்திச்சூடியில்   அருமையான மருத்துவ அறிவுரைகள்-1 (Post No.13,613)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,613

Date uploaded in London – 31 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

அவ்வையார் யார் ?

சங்க காலம் முதல் நமது காலம் வரை ஆறு அவ்வையார்கள்  இருந்தார்கள்; இன்னும் சிலர் மூன்று அவ்வையார்கள்தான் இருந்தனர் என்று வாதிடுவர்; ஆத்திச்குடி எழுதிய அவ்வையார் சங்க கால அவ்வையார் இல்லை என்பது மொழி நடையைப் பார்த்தால் உள்ளங்கை நெல்லிக்கனி என விளங்கும். அவர் யாராக இருந்தாலும் அவர் சொல்லும் அறிவுரைகள் ஆயிரம் பொன் பெறும் ; அவரைப் பின்பற்றி நமது காலத்தில் வாழ்ந்த மாபெரும் கவிஞர் தேசிய கவி சுப்பிரமணிய பாரதியும் புதிய ஆத்திச்சூடி எழுதினார் ; அதிலும் நல்ல மருத்துவ, உடல் நலம் பேணும் செய்திகள் உள .

முதலில் அவ்வையாரின் ஆத்திச்சூடியை எடுத்துக் கொள்வோம் ஆத்தி சூடிய சிவனை வணங்கி அகர வரிசைப்படி பாடியுள்ளார்.

13.அஃகம் சுருக்கேல்

13.DO NOT RAISE THE PRICE OF GRAIN/ DO NOT ALLOW YOUR KNOWLEDGE TO DIMINISH/ DO NOT ALLOW YOUR RELATIVES TO DIMINISH

இதற்கு அறிஞர்கள் இரண்டு மூன்று விளக்கங்களைத் தருகிறார்கள்

1.தானியங்களின் விலையை உயர்த்தாதீர்கள்

2.அறிவு பெறுவதைச் சுருக்காதீர்கள்

3.உங்கள் உறவினர்களை வாடும்படி விட்டுவிடாதீர்கள்

வாதப்பிரதிவாதங்களை விட்டுவிட்டு, முதல் அர்த்தத்தை நாம் எடுத்துக்கொள்ளுவோம். நமது உணவில் பலவகை தானியங்கள் இருக்கவேண்டும். அரிசியும், கோதுமையும் இந்தியர்களின் அடிப்படை உணவு; அவை தவிர புரத்தைச் சத்து மிக்க பயறு வகை தானியங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அதனால் தான் அவ் வையும்  விலைவாசி பற்றி விளம்பினார் போலும்!

xxxx

16.சனி நீராடு

16.BATHE ON SATURDAY (WITH OIL)’ ; BATHE THE BODY IN SPRING WATER,  BATHING THE DEFILED MIND IN TRUTH.

இதற்கும் மூன்று விளக்கங்கள் உண்டு

1.சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள்.

2.ஊற்று நீ ரில் குளியுங்கள் .

3. உண்மை எனும் நீரில் அழுக்கு மனத்தை அலசுங்கள்

இதில் முதல் பொருளே சரி; தமிழர்கள் ஆண்களுக்கு புதன், சனிக்கிழமைகளை ஆண்களுக்கும், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளை பெண்களுக்கும் எண்ணெய்க் குளியலுக்கு ஒதுக்கினார்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கிராம, நகர மக்கள் அனைவரும் இதைச் செய்தனர் ; காலப்போக்கில் சுருங்கி விட்டது; அதன் விளைவு தலை முடி விரைவில் நரைக்கிறது ; வேர்வைத் துவாரங்களில் உள்ள அழுக்கு வெளியேறாமல் தோல் நோய்கள் வருகின்றன

xxxx

இரண்டு சுவையான விஷயங்கள் நினைவுக்கு வருகின்றன .

மதுரை அ வைத்தியநாதய்யர் மிகவும் புகப்பெற்ற மனிதர்; சுதந்திரப்போராட்ட தியாகி; தாழ்ததப்பட்ட ஜாதி மக்களையும் மதுரை மீனாட்சி கோவிலுக்குள் அழைத்துச் சென்று புரட்சி செய்தார் . அவர் வாரம்  தோறும் சேரிகளுக்குச் சென்று ஹரிஜன சிறுவர்களை எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவாராம் .

இன்னும் ஒரு  செய்தி ; நான் லண்டனில் பி.பி.சி.யில் வேலை பார்த்த காலத்தில் ஒரு நாள் எனக்கும் தமிழ் ஓசை ஒலி பரப்புத் தலைவர் சங்கர் அண்ணாவுக்கும் இடையே எண்ணெய்க்  குளியல்  பற்றி பேச்சு வந்தது. நன் சொன்னேன்: லண்டனுக்கு வந்த பின்னர் எண்ணெய் முழுக்கை விட்டுவிட்டேன்; இந்தக் குளிர்தேசத்தில் எவன் எண்ணெய் தேய்த்துக் குளிப்பான்? என்று ஏக வசனத்தில் பேசிக்கொண்டே போனேன் ; இல்லை, தம்பி , நான் வாரம் தோறும் ஆலிவ் ஆயில் தேய்த்துக் குளிக்கிறேன் என்றார் . எனக்கு ஒரே வியப்பு ! லண்டனிலும் எண்ணெய்க்  குளியல்!

xxxx

26.இலவம் பஞ்சில் துயில்

26.SLEEP ON A MATTRESS OF SILK COTTON

துயில் = உறங்கு, தூங்கு= SLEEP

நல்ல அறிவுரை! தலையணைகளை பலவகையாகத் தயாரிக்கிறார்கள் ; பிளாஸ்டிக், ரப்பர் தலகாணிகளும் வந்துவிட்டன ; உள்ளுக்குள் பஞ்சுக்குப் பதிலாக தேங்காய் நார் , வெட்டிவேர், ரப்பர், போம் , பல வகை நார்கள் ஆகியன கொண்டும் தயாரிக்கிறார்கள் ; ஆனால் இந்தியா போன்ற , நெற்றி வேர்வை நிலத்தில் சிந்தும் வெப்ப நாடுகளுக்கு இலவம் பஞ்சு தலையணைதான் சிறந்தது. சங்க காலத்தில் அன்னத்தின் இறகுகளைக் கொண்டு பஞ்சு மெத்தை கள் , தலையணைகள் செய்ததாகப் பாடல்கள் உள்ளன! அதற்கு மிகவும் பொருட் செலவு ஆகும் ; பறவைகளைக் கொல்லும் பாவமும் வரலாம் ! ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை இலவம் பஞ்சு தான் .

XXXX

31.அனந்தல் ஆடேல்

31.DO NOT SLEEP TOO LONG; DONT BE LAZY

இரண்டு பொருள்களை ஆன்றோர் பகர்வர்.

நீண்ட நேரம் தூங்காதே அல்லது  சோம்பேறி போலத் தூங்காதே

ஒரு ஆரோக்கியமான மனிதனுக்கு ஆறு மணி நேரம் தூக்கம் போதும்; நோயாளிகளுக்கு எட்டு மணி நேரம் தூக்கம் போதும். பளிச் சிறுவர்களுக்கு பத்து மணி நேரம் தூக்கம் தேவை.

அனந்தல் என்பது இந்த வரையறைக்கு அப்பாற்பட்ட தூக்கம்.

திருப்பாவை பாடிய ஆண்டாள் ஒரு டீன் ஏஜ் கேர்ள் ; பருவக் குமரி .

அவள் என்ன சொல்கிறாள் ?

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,

தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்

மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!

மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?

மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று

நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!

********

Mansion studded with pure precious stones

Wicks of light all around gleaming

Asleep a couch perfume afloat;

Thou, uncle’s daughter , unlock the door bedecked

Auntie, would you arouse her ?

Is your daughter dumb, deaf, lazy and dreaming ?

Accurs’d to a grand sleep with a sentry ?

Extol Him as Madhava,

Great hypnotist Mukuntha

And so forth chant the Vaigunta;

Listen and consider our damsel

(Translation by Dr Chenni Padmanabhan)

குறட்டை விட்டுத் தூங்குவோரின் ஆயுள் குறையும் என்று மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் செப்புகின்றன. எது எப்படியாகிலும், எட்டு மணி நேரத்துக்கு மேல் தூங்குவது தேவை இல்லை..

ஏனெனில் அவ்வையார்  இத்தோடு  நிறுத்தவில்லை; வைகறையில் துயில் எழு என்கிறார் ; அதையும் ஆராய்ச்சிக் கண்களோடு நோக்குவோம்.

To be continued………………………..

Tags- துயில் , அனந்தல் , அவ்வையார்,  ஆத்திச்சூடி,   மருத்துவ அறிவுரைகள், பகுதி -1 , சனி நீராடு , எண்ணெய்க் குளியல் , எ.வைத்தியநாதய்யர், ஆண்டாள், திருப்பாவை, அஃகம் ,இலவம் பஞ்சு

மனம் பற்றிய  31 பொன் மொழிகள்; செப்டம்பர் 2024 நற்சிந்தனை காலண்டர் (Post.13,612)

 WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,612

Date uploaded in London – 31 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

பத்து ஆண்டுகளுக்கு முன் மனம் பற்றிய 31 பொன்மொழிகளை இங்கு வெளியிட்டேன்; இதோ மேலும் 30 பழமொழிகள்

பண்டிகை/ விடுமுறை நாட்கள் –  செப்டம்பர் 5- ஆசிரியர் தினம்; 7- விநாயக சதுர்த்தி; 11- பாரதியார் நினைவு நாள்; 15- ஓணம் ; 16-மிலாடி நபி; 18- மாளயபட்சம் ஆரம்பம் .

அமாவாசை -2; பெளர்ணமி -17

ஏகாதஸி உண்ணாவிரத நாட்கள் – 14, 28.

சுப முகூர்த்த தினங்கள் – 5,6, 8, 15, 16

xxxx

செப்டம்பர் 1 ஞாயிற்றுக் கிழமை

நம் மனம் யாரிடம் வசப்படுகிறதோ அவரே சரியான குரு.– ரமணர்

xxxx

செப்டம்பர் 2 திங்கட் கிழமை

நினைமின் மனனே! நினைமின் மனனே!

சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை

நினைமின் மனனே! நினைமின் மனனே! —பட்டினத்தார்

xxxx

செப்டம்பர் 3 செவ்வாய்க் கிழமை

Mind is a Monkey

மறுகிச் சுழலும்  மனக் குரங்கு -காட்டும் கரையும் மனக் குரங்கு–தாயுமானவர்

xxxx

செப்டம்பர் 4 புதன் கிழமை 

நம்மால் எதிலும் தனித்து செயல்பட முடியவில்லை என்றால் அதற்குக் காரணம் நமது வலிமை அற்ற மனம் தான். .– ரமணர்

xxxx

செப்டம்பர் 5 வியாழக் கிழமை 

வறுமைப் பாழ்பிணி ஆற்றப்ப டாதுளம்

     உருகிப் போனது தேற்றப்ப டாதினி

          மகிமைக் கேடுகள் பார்க்கப்ப டாதென .அழையாயோ —திருப்புகழ்

xxx

செப்டம்பர் 6 வெள்ளிக் கிழமை

மனம் என்பதோ ஆத்ம சொரூபத்திலுள்ள ஓர் அதிசய சக்தி அது சகல நினைவுகளையும் தோற்றுவிக்கிறது. நினைவுகளையெல்லாம் நீக்கிப் பார்க்கின்றபோது தனியாய் மனம் என்று ஒரு பொருள் இல்லை. ஆகையினா நினைவே மனிதன் சொரூபம். நினைவுகளைத் தவிர்த்து ஜகம் என்பது அன்னியமாயில்லை. .– ரமணர்

xxxx

செப்டம்பர் 7 சனிக் கிழமை

Do a trick so that I concentrate (on You)

பாழான என் மனம் குவிய ஒரு தந்திரம் பண்ணு – —தாயுமானவர்

xxxx

செப்டம்பர் 8 ஞாயிற்றுக் கிழமை

தரையாங் குடிலைமுதல் தட்டிருவ வெந்ததடி !

இரையு மனத்திடும்பை யெல்லா மறுத்தாண்டி. -பட்டினத்தார்     

xxx

செப்டம்பர் 9 திங்கட் கிழமை

Let my Mind Spinning Top stop.

ஆடாமல் ஓய்ந்திட்ட பம்பரம் போல்விசை

        அடங்கி மனம்வீழநேரே

அறியாமை யாகின்ற இருளகல இருளளியும்

        அல்லா திருந்தவெளிபோல் –தாயுமானவர்

xxxx

செப்டம்பர் 10 செவ்வாய்க் கிழமை

Please help me to jump on the boat from the Sea of Worries

கவலைச் சாகர நீச்சுக்கு ளேஉயிர்

     தவறிப் போம்என ஓட்டத்தில் ஓடியே

          கருணைத் தோணியில் ஏற்றிக்கொள் வாயினி …… அலையாதே —திருப்புகழ்

xxx

செப்டம்பர் 11 புதன் கிழமை

 மனம் அளவிறந்த நினைவுகளால் விரிகின்றபடியால் ஒவ்வொரு நினைவும் அதிபலவீனமாகப் போகின்றது. நினைவுகள் அடங்க, ஏகாக்கிரகத் தன்மையடைந்து அதனால் பலத்தை அடைந்த மனத்திற்கு ஆத்ம விசாரம் சுலபமாய் சித்திக்கும். .– ரமணர்

xxxx

செப்டம்பர் 12 வியாழக் கிழமை 

விடப்படுமோ இப்பிரபஞ்ச வாழ்க்கையை? விட்டுமனம்

திடப்படுமோ? நின்னருளின்றியே தினமே அலையக்

கடப்படுமோ? அற்பர்வாயிலிற் சென்று கண்ணீர்ததும்பிப்

படப்படுமோ? சொக்க நாதா, சவுந்தர பாண்டியனே.--பட்டினத்தார்

xxxx

செப்டம்பர் 13 வெள்ளிக் கிழமை

நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டுவிதம், மனம் சுபவாசனை வயத்தாய் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வயத்தாய் நிற்கும்போது கெட்ட மனமென்னும் சொல்லப்படும். .– ரமணர்

xxxx

செப்டம்பர் 14 சனிக் கிழமை

My mind is like the cotton blown away by the wind of desires.

ஆசையெனும் பெருங்காற்றூ டிலவம்பஞ்சென மனம்

அலையும் காலம் — தாயுமானவர்

xxxx

செப்டம்பர் 15 ஞாயிற்றுக் கிழமை

Oh Mind Come Near

மனமே உனக்கு உறுதி புகல்வேன்

எனக்கு அருகில் வருவாய் உரைத்தமொழி தவறாதே- திருப்புகழ்

xxxxx

செப்டம்பர் 16 திங்கட் கிழமை

 மனவழி விலைத்திடுங் கனவெனும் வாழ்க்கையும்;

விழுப்பொரு ளறியா வழுக்குறு மனனும்– பட்டினத்தார்

xxxx

செப்டம்பர் 17 செவ்வாய்க் கிழமை

மனம் வெளிவரும்போது துக்கத்தை அனுபவிக்கிறது. உண்மையில் நமது எண்ணங்கள் பூர்த்தியாகும் போதெல்லாம் அது தன்னுடைய யாதஸதனத்திற்குத் திரும்பி ஆத்ம சுகத்தையே அனுபவிக்கிறது. .– ரமணர்

xxx

செப்டம்பர் 18 புதன் கிழமை 

My false mind is jumping like a monkey stung by a scorpion; save me

கொள்ளித் தேள் கொட்டிக் குதிக்கின்ற பேய்க்குரங்காய்

கள்ள மனம் துள்ளுவதென் கண்டோ பராபரமே– தாயுமானவர்

xxxx

செப்டம்பர் 19 வியாழக் கிழமை 

You saved me when I was struggling with dirty mind

மல ரூபம் வர வர மனம் திகைத்த பாவியை வழி அடிமை

கொண்டு மிக்க மாதவர் வளர் பழநி வந்த கொற்ற வேலவ பெருமாளே. —திருப்புகழ்

xxxx

செப்டம்பர் 20 வெள்ளிக் கிழமை

மூச்சு என்பது குதிரையைப் போன்றது. மனம் என்பது அதன் மீது சவாரி செய்து குதிரையைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சவாரி செய்பவனும் கட்டுப்படுகிறான். இதுவே பிராணயாம்ம். மூச்சின் இலக்கத்தைக் கவனித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் மனத்தில் ஓடும் நினைவுகளும் கட்டுபடுகின்றன. .– ரமணர்

xxxx

செப்டம்பர் 21 சனிக் கிழமை

My mind is like a kite that is torn and swept; save me

வால் அற்ற பட்டமென மாயா மனப் படலம்

கால் அற்று விழவும் முக்கண் ண்ணுடையாய்  காண்பேனோ — –தாயுமானவர்

xxxx

செப்டம்பர் 22 ஞாயிற்றுக் கிழமை

My mind is like a pin wheel, save me

ஆடுங்கறங்காகி அலமத் துழன்று மனம்

வாடுமெனை ஐயா நீ  வா எனவும் காண்பேனே — தாயுமானவர்

Xxxx

செப்டம்பர் 23 திங்கட் கிழமை

மனக்கவலை யேது மின்றி உனக்கடிமை யேபு ரிந்து

வகைக்கு மநு நூல் விதங்கள் தவறாதே

வகைப்படி மனோரதங்கள் தொகைப்படியினால் இலங்கி

மயக்கமற வேதமுங்கொள் பொருள்நாடிவினைக்குரிய பாதகங்கள் துகைத்(து) உவகை யால் நினைந்துமிகுத்தபொருள் ஆகமங்கள் முறையாலே வெகுட்சிதனையே துரந்துகளிப்பினுடனே நடந்து

மிகுக்கும் உனையே வணங்க வரவேணும்—திருப்புகழ்

xxxx

செப்டம்பர் 24 செவ்வாய்க் கிழமை

மனம் போல மாங்கல்யம் —  பழமொழி

கள்ள மனம் துள்ளும்.=தமிழ்ப் பழமொழி

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு. –தமிழ்ப் பழமொழி

மனம் இருந்தால் மார்க்கமும் உண்டு–. தமிழ்ப் பழமொழி

xxxx

செப்டம்பர் 25 புதன் கிழமை 

எண்ணுவ துயர்வு- பாரதி ஆத்திச் சூடி

 நினைப்பது முடியும்- பாரதி ஆத்திச் சூடி

xxxx

செப்டம்பர் 26 வியாழக் கிழமை

My mind is changing constantly;  save me

ஒன்றைநினைந் தொன்றைமறந் தோடுமனம் எல்லாம்நீ

என்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே. –தாயுமானவர் .

xxxx

செப்டம்பர் 27 வெள்ளிக் கிழமை

இறப்பும் பிறப்பும் பொருந்த – எனக்

கெவ்வணம் வந்ததென் றெண்ணியான் பார்க்கில்

மறப்பும் நினைப்புமாய் நின்ற – வஞ்ச

மாயா மனத்தால் வளர்ந்தது தோழி – சங்கர  –தாயுமானவர்

xxxxx

செப்டம்பர் 28 சனிக் கிழமை

நகர்ந்து செல்லும்ம வண்டியில், உறங்கிக் கொண்டு பயணம் செய்யும் பிரயாணிக்கு சலனமோ, அசைவுகளோ எதுவும் தெரியாது. ஏனெனில் அவனது மனம் அறியாமை இருளில் ஒடுங்கிக் கிடக்கிறது.– ரமணர்

xxxx

செப்டம்பர் 29 ஞாயிற்றுக் கிழமை

மனவேலங் கீலக லாவிகள்

     மயமாயங் கீதவி நோதிகள்

          மருளாருங் காதலர் மேல்விழு …… மகளீர்வில்

மதிமாடம் வானிகழ் வார்மிசை

     மகிழ்கூரும் பாழ்மன மாமுன

          மலர்பேணுந் தாளுன வேயரு …… ளருளாயோ–திருப்புகழ்

xxxx

செப்டம்பர் 30 திங்கட் கிழமை

மனத்தில்வருவோனெ என்(று)

உன் அடைக்கலம் அதாக வந்து

மலர்ப்பதமதே பணிந்த முநிவோர்கள்

வரர்க்கும் இமையோர்க ளென்பர் தமக்கும்

மனமேயிரங்கி மருட்டிவரு சூரை வென்ற முனைவேலா–திருப்புகழ்

xxxx

Bonus Quotations

கொந்தார் மைக்குழ லிந்தார் சர்க்கரை

     யென்றே செப்பிய …… மொழிமாதர்

கொங்கார் முத்துவ டந்தா னிட்டத

     னந்தா னித்தரை …… மலைபோலே

வந்தே சுற்றிவ ளைந்தா லற்பம

     னந்தா னிப்படி …… யுழலாமல்

மங்கா நற்பொரு ளிந்தா அற்புதம்

     என்றே யிப்படி …… அருள்வாயே —-திருப்புகழ்

xxxx

இளக மனம் அழலின் மெழுகாய் –தாயுமானவர்

xxxx

மின்னல்பெற வேசொல்ல அச்சொல்கேட் டடிமைமனம்

        விகசிப்ப தெந்தநாளோ

வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற

        வித்தகச் சித்தர்கணமே. –தாயுமானவர்

xxxx

my mind is in a wrestling contest

வாதுக்கு வந்தெதிர்த்த மல்லரைப்போல் பாழ்த்தமனம்

ஏதுக்குக் கூத்தாடு தெந்தாய் பராபரமே. –தாயுமானவர்

xxxx

my mind is like a gambler’s mind; save me

சூதாடு வார்போல் துவண்டு துவண்டுமனம்

வாதாடின் என்னபலன் வாய்க்கும் பராபரமே. –தாயுமானவர்

xxx

when I realized the Truth false thoughts ran away

உள்ளபடி யாதுமென உற்றுணர்ந்தேன் அக்கணமே

கள்ளமனம் போனவழி காணேன் பராபரமே. –தாயுமானவர்

xxx

let my mind ripe like a fruit.

பாக்கியங்க ளெல்லாம் பழுத்து மனம்பழுத்தோர்

நோக்குந் திருக்கூத்தை நோக்குநாள் எந்நாளோ –தாயுமானவர்.

xxxx

mind is a snake;  save me

வாதனையோ டாடும் மனப்பாம்பு மாயஒரு

போதனைதந் தையா புலப்படுத்த வேண்டாவோ –தாயுமானவர்

xxxx

My old post

மனம் பற்றிய 31 நல்ல மேற்கோள்கள்

Tamil and Vedas

https://tamilandvedas.com › மன…

29 Dec 2014 — “மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்! ஒன்றையே பற்றி ஊசல் ஆடுவாய். அடுத்ததை நோக்கி அடுதடுத்து உலாவுவாய் .நன்றையே கொள்

–subham—

Tags- செப்டம்பர் 2024, நற்சிந்தனை, காலண்டர், மனம் பற்றிய பொன்மொழிகள்

‘இட்லி சாப்பிடுவது’ போல விழுங்குங்கள்! (Post No.13,611) 

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.611

Date uploaded in London – 31 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

இட்லி சாப்பிடுவது’ போல விழுங்குங்கள்! 

ச. நாகராஜன் 

வானத்திலிருந்து நூறு அடி ஆழம் கீழாகப் பரவி ஏழு நகரங்களை மூடி, அனைத்து இயக்கத்தையும் நிறுத்தும் மூடு பனியைத் திரட்டி எடுத்தால் அதை ஒரு பாட்டிலுக்குள் அடைத்து விடலாம்! இது அறிவியல் விளக்கும் ஒரு வியப்பூட்டும் உண்மை!

 விமானம் ஓடுதளத்தில் இறங்கவோ, ஏறவோ முடியாது; வாகனங்கள் தடைபட்டு மெல்ல மெல்ல செல்லும்; ஒரு அடி தூரத்தில் இருப்பதைக் கூடக் காண முடியாமல் யார் மீது மோதப் போகிறோமோ என்று பயந்து மெல்ல  மெல்லச் செல்ல வேண்டியிருக்கும். இது மூடு பனியின் விந்தை ஜாலம்! என்றாலும் அதைத் திரட்டினால் ஒரு சிறிய பாட்டில் கூட நிறையாது.

 இந்த மூடுபனியைப் போலத்தான் நன் வாழ்க்கையில் சந்தோஷத்தை மறைத்து ‘ஏழு நகரம்’ அளவு பரவி நம்மைத் துன்பப்படுத்தும் டென்ஷனும் கூட!

 பிரிட்டனில் 55 லட்சம் பேர் அலுவலக டென்ஷனால் அல்லது ஸ்ட்ரெஸ்ஸால் பாதிக்கப்பட்டதைக் கண்ட ‘மைண்ட்’ என்ற மன நல மேம்பாட்டு அமைப்பு ஐந்து கோடி  மனித நாட்கள் இதனால் இழக்கப்படுவதாகக் கணக்கிட்டுச் சொல்லியுள்ளது.

 ஜனத்தொகை குறைந்த, சுற்றுப்புறச் சூழ்நிலை அவ்வளவாக மாசுபடாத, பிரிட்டனிலேயே இப்படி நிலை என்றால் நூறு கோடி ஜனத்தொகை உள்ள அதிக ‘மாசுள்ள சுற்றுப்புறச் சூழ்நிலை’ உள்ள நமது நாட்டின் நிலை என்னவாக இருக்கும்? கற்பனைக்கும் அப்பாற்பட்ட கொடுமையாக இருக்கும்!

 ஆணும் பெண்ணும் அலுவலகத்திற்குக் காலை எட்டு மணிக்குக் கிளம்பி இரவு எட்டு மணிக்கு புறாக் கூட்டில் அடைய வருவது போல வீடு வரும் போது இடைப்பட்ட நேரத்தில் துணைக்கு நம்முடன் வரும் ஒரே துணை டென்ஷன் தான்! எவ்வளவு அவஸ்தைகள்; எவ்வளவு டென்ஷன்! இதைப் போக்கும் வழிகளைக் கூறுவதாக ஏதேனும் புத்தகம் வந்தால் அதை நம்ப வேண்டாம். ஏனெனில் பாஸிடிவ் டென்ஷன் வாழ்க்கை முன்னேற்றத்திற்குத் தேவை; நெகடிவ் டென்ஷனை அழிக்கவோ, நீக்கவோ போக்கவோ முடியாது. ஆகவே அதை ‘சமாளிக்க’ என்ன செய்வது என்று கற்றுக் கொண்டாலே ஈடு கொடுத்து வாழ்க்கையில் முன்னேறி விடலாம்.

 அற்புதமான வைரம் சாதாரண நிலக்கரியாக இருந்து அழுத்தப்பட்டதால்தானே உன்னத நிலையை அடைகிறது.

 உங்கள் ‘ஸ்ட்ரெஸ்ஸை’ நீங்கள் சமாளித்து வைரம் ஆகி ஜொலிக்கலாம். சரி, சமாளிக்க வழிகள் உண்டா, என்ன? உண்டு!

 1.        உடலும் மனமும் களைத்த நிலையில் தூக்கத்தைத் தள்ளிப் போடாதீர்கள். அயர்ந்த நித்திரை நல்ல புத்துணர்ச்சியையும் புதிய ஆற்றலையும் அதிக சிந்தனைத் திறனையும் அள்ளி வழங்கும். இரவில் நெடு நேரம் கண் விழிப்பவர்களாக இருந்தால் உடனே பழக்கத்தை மாற்றுங்கள். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரத் தூக்கம் இன்றியமையாதது.

 2.        தேவையர்ற அனைத்தையும் அலவலகத்திலும் சரி, வீட்டிலும் சரி, உதறி எறியுங்கள். நிறைய நேரம் கிடைக்கும். மனதில் நிம்மதியும் கூடும்! வீண் அரட்டை, இடைவிடாத டி.வி, சீரியல், டெலிபோனில் நீண்ட பேச்சு, நிறைய பேருடன் பேச்சு.. இப்படித் தேவையற்ற விஷயங்களின் பட்டியலைப் போட்டால் நீங்களே வியப்படையும் அளவு பட்டியல் நீளும். அதைக் குறைக்கும் போது டென்ஷனும் குறையும்!

 3.        இட்லி சாப்பிடுவதை நினைத்துப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள். இட்லிக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றும். இட்லியை யாரும் ஒரேயடியாக வாயில் வைத்துத் திணித்து விழுங்குவதில்லையே! விள்ளல் விள்ளலாக எடுத்துச் சுவைத்து அனுபவித்துச் சாப்பிடுகிறோம் இல்லையா? வாழ்க்கையையும் ஒரே நாளில் அனுபவித்து விடத் துடிக்காதீர்கள். ஒவ்வொன்றாக – ஒவ்வொன்றாக செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.

 4.        முக்கியத்துவத்திற்கு முதலிடம் (FIRAT THINGS FIRST) என்ற அடிப்படையில் உங்கள் மீது விழும் பளுக்களை ஒவ்வொன்றாக உதறி முன்னேறப் பழகுங்கள்.

 சின்னக் கழுதைக் கதையைக் கேட்டிருக்கிறோமே, நினைவிருக்கிறதா?

 கழுதை ஒன்று இருளான, அவ்வளவாக ஆழம் இல்லாத பாழும் கிணற்றில் விழுந்து விட்டது. அது எவ்வளவு ஆழத்தில் இருக்கிறது என்பதை அறியாத அதன் சொந்தக்காரன் அதைத் தூக்கி விடவும் முடியாமல் அதை அப்படியே விடவும் முடியாமல், அதை அப்படியே விட மனமில்லாமல் அது இறந்து விட்டதாக் நினைத்துக் கொண்டு அதை அங்கேயே புதைக்க விரும்பினான். ஒவ்வொரு கூடையாக மணலை அள்ளிக் கிணற்றில் போட்டான். தன் முதுகின் மீது ஒவ்வொரு முறையும் வந்து விழுந்த மணலை உதறி அதைக் கீழே தள்ளியது அந்தக் கழுதை. இப்படியே கிணற்றில் போட்ட மணலைக் கீழே உதறி உதறி அது மேலே வந்து விட்டது!

 உங்கள் முதுகின் மீது போடப்படும் பளுக்களையும் உதறி உதறிக் கீழே தள்ளுங்கள், அதன் மீது ஏறி நின்று மேலே முன்னேறுங்கள்.

 சினேகிதி மாத இதழில் 2006, மார்ச் மாதம் வெளியான கட்டுரை.

xxxx