ஹிந்தி மொழியின் கிளை மொழியான அவதி மொழியில் எழுதினார்
துளசிதாஸ் யார் ?
காசி நகரில் வாழ்ந்து உலகப்புகழ்பெற்ற ராம சரித மானச என்ற ஹிந்தி ராமாயண நூலை இயற்றிய பிராமணர் .
அவர் எப்போது எழுதினார் ?
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார்.
ஹனுமான் சாலீஸா என்றால் என்ன?
ஹனுமான் என்றால் அனுமன், ஆஞ்சனேயன் , மாருதி, வாயு குமாரன், அஞ்சனை மைந்தன் என்பது எல்லோருக்கும் தெரியும்
சாலீஸா என்றால் தமிழிழ் நாற்பது; தமிழிலும் நாம் கார் நாற்பது, களவழி நாற்பது என்று நூல்களுக்குப் பெயரிட்டது போல அவர்களும் இப்படிப் பெயர் சூட்டினார்கள். இது துளசி ராமாயணத்தில் இல்லை; தனியான துதி வழக்கம்போல பல ஸ்ருதி முதலியவை சேர்ந்து நாற்பதுக்கும் மேலாக ஸ்லோகங்கள் இருக்கின்றன.
xxxx
எனக்குத் தெரிந்த ஹனுமான் சாலீஸா
எனக்கு 65 வயது ஆன வரை ஹனுமான் சாலீஸா பற்றி எதுவுமே தெரியாது.. லண்டனிலுள்ள சிந்தி மந்திரில் நான் அடிக்கடி கூட்டங்களை ஏற்பாடு செய்வேன்; பெரிய ஹால்; பெரிய கிச்சன்/சமையலறை ; அவர்கள் நடத்தும் கூட்டத்துக்கும் அழைப்பிதழ் வரும்; ஒரு முறை ராம் பாபாவின் 108 முறை ஹனுமான் சாலீஸா சொல்லும் நிகழ்சசியை ஏற்பாடு செய்திருந்தார்கள் . நானும் சென்றிருந்தேன்; ராம் பாபா செல்லுமிடமெல்லாம் இது நடக்கும். பின்னர் என் வீட்டிற்கு அருகிலுள்ள NORTHWICK PARK HOSPITAL நார்த்விக் பார்க் ஹாஸ்ப்பிட்டலில் புதன் கிழமை தோறும் ஹிந்து பிரார்த்தனை நடத்த அனுமதி கிடைத்தது. கடந்த சுமார் 7 ஆண்டுகளாக கிறிஸ்தவ சாப்பலில்CHAPEL பிரம்மாண்ட சிலுவைச் சினத்தின் கீழ் இந்துக் கடவுளர் படங்களை வைத்து பிரார்த்தனை செய்வோம். 11 முறை காயத்ரீ, 11 முறை திரயம்பக மந்திரம் (ம்ருத்யுஞ் ஜய மந்திரம்) ஹனுமான் சாலீஸா , ஒன்றிரண்டு நாமாவளிகள், பகவத் கீதை சொல்லி முடிப்போம். விழா நாட்களில் பிராத்தனையை 2 மணி நேரம் நீடிப்போம்.
அப்போது வாரம்தோறும் ஹனுமான் சாலீஸாவை புஸ்தகம் வைத்துக்கொண்டு படித்த ஒரே ஆள் நான்தான். ஏனைய வடக்கத்தி ஆட்களுக்கு அது அத்துபடி . பின்னர் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை எல்லாம் கண்டேன். சின்மயா மிஷனின் தலைவர் சுவாமி தேஜோ மயானந்தாலண்ட னுக்கு வந்தபொழுது ஹனுமான் சாலீஸா பற்றி பல நாட்களுக்குச் சொற்பொழிவு ஆற்றினார்; அது புஸ்தகமாகவும் வந்துவிட்டது. ஆனால் தமிழில் மொழிபெயர்பைத் தவிர விளக்கவுரை, வியாக்கியானம் எதுவும் என் கண்ணில் தென்படவில்லை. ஆகையால் நான் அனுபவித்த ஹனுமான் சாலீஸா வை மற்றவர்களும் அனுபவிக்கட்டுமே என்ற முயற்சியில் இறங்குகிறேன் . சொல்லின் செல்வன் அனுமன் துணை புரிவானாகுக.
சிறு வயதில் கற்ற சில துதிகள்
லண்டனுக்கு 1987ஆம் ஆண்டு குடியேறியதற்கு முன்னால் மதுரையில் சுமார் 35 ஆண்டுகள் வசித்தேன் ; அங்கு இரண்டு குடும்பங்கள் மார்கழி மதம் தோறும் எல்லோருக்கும் திருப்பாவை , திருவெம்பாவைப் பாடல்களை மாணவிகளுக்குக் கற்பித்து வந்தன ; அவர்களில் திருமதி ராஜம்மாள் சுந்தர்ராஜன் என்பவர் சுமார் 1000 பள்ளி, கல்லூரி மாணவிகளை திருப்பாவையில் ஈடுபடுத்தினார். நல்ல நடிப்புத் திறனும் குரல் வளமும் கண்ட மாணவிகளை வைத்து ஆழ்வார், கிருஷ்ணன் நாடகங்களை ஊர் தோறும் சென்று நடத்தினார் . தற்காலத்தில் நடக்கும் தமிழ்ப் பத்திரிகைகளில் தெய் வீகச் செய்திகளை வெளியிடும் வழக்கத்தை என் தந்தையான மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெ . சந்தானம்தான் துவக்கிவைத்தார் . அந்த வகையில் எந்த கடவுள் நடவடிக்கை நடந்தாலும் அது மதுரை தினமணியில் மட்டுமே வெளிவரும்.
இதனால் அவர் செல்லும் விசேஷ பஸ்களில் ஈங்கள் குடும்பத்திற்கு சிறப்பிடம் உண்டு. அந்த பஸ்களில் நானும் பழனி, தாராபுரம், உடுமலைப்பேட்டை வரை சென்றது இன்றும் நினைவில் நிற்கிறது ; இவ்வளவு கதை எதற்கு என்று கேட்கிறீர்களா ? பஸ் புறப்படும்போது எல்லோரும் கோஷ்டியாகப் பாடுவது ஆஞ்சாசனேயர் துதிதான் . அதுவும் சிறு வயதிலேயே மனப்பாடம் ஆகிவிட்டது
இதற்குப்பின்னர், ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா சொல்லிக்கொடுத்த ஸ்லோகம் :
மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்|
வாதாத் மஜம் வானரயூதோ முக்யம்
ஶ்ரீராமதூதம் சிரஸா நமாமி||
(பாடல்களின் பொருளை பின்னால் தருகிறேன்)
xxxx
அதே போல ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் பட்டி மன்றங்களை நட்த்தி பட்டி தொட்டி தோறும் பட்டை மன்றங்களையும் பரப்பினார். என் தந்தையான மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெ . சந்தானம். எல்லாம் பாரதி அல்லது கம்பனை ஒட்டிய தெய்வீக தலைப்புகளே . மதுரை தினமணி, கொள்ளிடம் கரை வரையும், கோவை நீலகிரி வரையும், தெற்கே குமரி வரையிலும் சென்றதால் தினமணி ‘வேன்’ VANகளில் ஒட்டப்பட்ட பிரம்மாண்டமான போஸ்டர்கள் அனைவர் கவனத்தையும் ஈர்த்தன. மேலும் பட்டி மன்ற செய்திகளும் முழு அளவில் வெளியாகின; இதன் மூலம் கம்பன் பெருமையும் பாரதி பெருமையும் தமிழ் நாடெங்கிலும் பரவின
xxxx
கம்பராமாயணத்தில் அனுமன்
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் வரங்கள் – 1
ச. நாகராஜன்
வால்மீகி ராமாயணத்தில் கதை ஓட்டத்தில் ஏராளமான வரங்களைப் பற்றிய விவரங்களைக் காண்கிறோம்.
வரங்களைப் பற்றி சுமார் 81 விவரங்கள் தரப்படுகின்றன.
அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கும் தொடர் இது.
பால காண்டத்தின் இரண்டாவது ஸர்க்கமாக அமைவது ‘பிரம்மதேவரின் வரவு’ என்ற ஸர்க்கம்.
வேடன் ஒருவன் கிரௌஞ்ச மிதுனத்தில் காமத்தால் மயங்கி இருந்த ஒன்றை கொன்று விட்டான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த வால்மீகி முனிவார்
“மா நிஷாத ப்ரதிஷ்டாம் த்வமகம: சாஸ்வதீ: சமா |
யத் க்ரௌஞ்சமிதுனாதேக,அவதீ: காம மோஹிதம் ||
என்று கூறுகிறார்.
மாநிஷாத – ஶ்ரீநிவாஸ!
க்ரௌஞ்ச மிதுனாம் – ராக்ஷஸ மிதுனத்தில்
காம மோஹிதம் – காமத்தால் புத்திகெட்ட
ஏகம் – ஒருவனை
அவதீ: – கொன்றீர்
யத் – அதனால்
த்வம் – நீர்
சாஸ்வதீ – நீடித்த
சமா: – ஆண்டுகளில்
ப்ரதிஷ்டாம் – கீர்த்தியை
அகம: – அடைந்தீராக
– பால காண்டம் இரண்டாம் ஸர்க்கம் ஸ்லோக எண் 4
இது என்ன, என் வாயில் சாபம் போல இது வந்துள்ளதே என்று சிந்திக்கிறார் அவர். ஆனால் அதே சமயம் பாதங்களோடமைந்த எழுத்து ஒத்த ஸ்லோகமாக அமைந்துள்ளதே என்றும் அவர் நினைக்கிறார்.
பிரம்மா அவரை நேரில் பார்த்து, “ நீர் செய்தது ‘ஸ்லோகமே. ஶ்ரீ ராமரது சரித்திரத்தை முழுதுமாக செய்யும்” என்று கூறி அருள்கிறார்.
அத்தோடு மேலும் கூறுகிறார்:
குரு ராமகதாம் புண்யாம் ஸ்லோகேஷு மனோரமாம் |
புண்யாம் – புண்ணியமான
ராமகதாம் – ஶ்ரீ ராம கதையை
மனோரமாம் – மனதிற்கு இனிமையான
ஸ்லோகபத்தாம் – ஸ்லோகங்களால் அமைந்ததாக
குரு – செய்வீர்
யாவத் ஸ்வாஸ்யந்தி கிரய: சரிதஸ்ச மஹீதலே |
தாவத்ராமாயணகதா லோகேஷு ப்ரசரிஷ்யதி |\
மஹீதலே – உலகத்தில்
கிரய: – மலைகளும்
சரிதஸ்ச – நதிகளும்
யாவத் – எதுவரை
ஸ்தாஸ்யந்தி – இருக்குமோ
தாவத்- அது வரை
ராமாயண கதா – ராமாயண கதை
லோகேஷு – உலகத்தில்
ப்ரசரிஷ்யதி – விளங்கப் போகிறது
யாவத்ராமஸ்ய ச கதா த்வத்க்ருதா ப்ரசரிஷ்யதி |
தாவத்தூதர்வமதஸ்ச த்வம் மல்லோகேஷு நிவத்ஸ்யஸி ||
ச – மேலும்
த்வத்க்ருதா – உம்மால் சொல்லப்பட்ட
ராமஸ்ய – ஶ்ரீ ராமருடைய
கதா – கதை
யாவத் – எதுவரையில்
ப்ரசரிஷ்யதி – விளங்குகிறஹோ
தாவத் – அதுவரையிலும்
மல்லாகேஷு – என்னுடைய உலகங்களில்
அத: ஊதர்வ: – கீழே மேலே
ச – எங்கும்
த்வம் நிவத்ஸ்யஸி – நீர் ஸ்திரமாக இருக்கப் போகிறீர்
பாலகாண்டம் இரண்டாம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 36,37,38
இவ்வாறு பிரம்மா வால்மீகி முனிவரைப் பார்த்துக் கூறுகிறார்.
இந்தக் கூற்று வரமாக அளிக்கப்படவில்லை என்றாலும் கூட ஆசீர்வாதமாக அளிக்கப்படும் ஒரு வரமாகக் கருதலாம்.
பிரம்மாவின் இந்த வசனத்தைக் கேட்டு ராமாயணத்தை வால்மீகி இயற்றினார்.
Lot of things are written and spoken about the caste differences in India; And Brahmins are blamed by politicians to get the votes of Non-Brahmins, because they are in majority. Newspapers give big publicity to Dalits (Harijans) when they are attacked or molested as if their body parts are different from the rest of the world! Again, this is to increase their sales. During the Struggle for Independence, those who were in the movement never considered the caste factor as a barrier. They had a common and bigger aim to achieve. These things hid a great fact that caste was not an issue even in ancient Tamil Nadu. If all the castes had the three basic needs of Food, Clothes and Shelter/House, they were all happy. Because after reading the Sangam Tamil literature and Devotional literature, I Did not find anything that affected the three basic needs of the people.
There are some amazing anecdotes which show the so-called higher caste Brahmins fell at the feet of Non Brahmins.
1.Kapilar was a Brahmin poet who lived 2000 years ago. He was a good friend of a local chieftain and philanthropist known as Pari (paari). Pari donated all his wealth to the deserving people. When the three great Tamil kings demanded that he should give his daughters in marriage to them and pay tribute, he refused. He was killed and his two daughters Sangavai and Angavai became orphans. The Brahmin poet who wrote highest number of poems in Sangam period took Pari’s daughters to various chieftains (to get them married) and introduced himself as their father. The relationship between Kshatria Pari and Brahmin Kapilan shattered all caste barriers. Pari was famous because he gave his Golden Chariot to support a jasmine climber. When he saw the plant struggling in wind without any supporting pole or a tree nearby, he became emotional and did this. He was one of the Seven Great Philanthropists of Last Tamil Sangam Period.
2. Thiru Gnana Sambandhar, the boy wonder of Tamil world, who composed poems from the age of three, fell at the feet of Appar alias Thiru Navukkarasar and called him Appar/Father. The wonder is that Appar belonged to the caste of Agriculturists (Vaisyas) and Sambandhar belonged to Brahmin caste. When the boy fell at his feet 80 year old Appar fell at his feet. In front of God, in the word of Bhakti (devotion), there is no caste.
3. The third incident is the most amazing one. There lived a pure Brahmin in a village in Tamil Nadu. His name was Apputi (Apputhi) Adigal He named all his sons, all the objects in the house, even the weights and measures, all his charitable works after Saint Thiru Navukkarasar, a man of Vaisya caste.
Thank God, we know the date of this anecdote- 600 CE, the period of the greatest Pallava Emperor Mahendra Pallavan.
Here is how Saint Sekkizaar describes it in his Periya Puraanam written 1000 years ago. The book gives the stories of 63 Saivite Saints including Apputi Adigal..
xxxxx
One day after worshipping Lord Siva at Tiruppalanam, Appar went to nearby Thingaloor. By the side of the busy road, he came to a cool and shady thatched shed where water was distributed to all thirsty people.
(Giving water or butter milk to thirsty people during summer is a charitable work. We find it even in the oldest epic in the world Mahabharata. They erect special sheds and place pots of water and volunteers distribute water to the needy.)
Appar saw a curious thing in the charitable water sheds. He saw his name everywhere in bold letters.
Appar- Who built this and inscribed this name on it?
Bystanders –He is a Brahmin and a native of this town. He has just now gone to his house, which is close by.
At once, Appar went to Apputi’s house and stood by his gate.
When Apputi heard that a Siva devotee was waiting at the gate, he rushed there and fell at his feet. You are grace itself in human form! For you to come to my house, what endless penances must I have performed? (Apputi said this without knowing the identity of the person).
Appar- I was on my way from worshipping the Lord at Tirupplalanam and I saw the water shed built by you ; but tell me why have you inscribed on this shed SOMEONE ELSE’S name rather than your own?
At this the Brahmin (Apputi) burst into rage
What a thing to say? The one whose name is inscribed there is the noble servant of Lord (Siva). He overcame the wiles of the king and his confederates, the shameless Jains. Whose name could be more fitting than that of Thiru Naavukkarasar (Appar)? What you said was truly scandalous. When the rock was cast into the sea, it came floating to the shore with Appar seated upon it. Who is in the whole world who does not know what a great man he is? To all appearances you look respectable enough and yet you say such things. Tell me, who are you, where do you come from?
(Mahendra Pallava, who was a Jain , gave lot of troubles to Appar and he survived all those by the grace of Lord Siva. That is what Apputi referred to. Later the king apologised to Appar and reconverted himself to Hindu faith)
When Appar heard these words, he said,
I am a mean fellow who knows nothing. I am the one who the Lord in his grace rescued from the religion of the Jains and made his own, by means of the stomach pain.
(The background story is, Appar also became a Jain and his sister Tilakavathy prayed to Lord Siva for his return. Siva gave Appar stomach pain that was not curable with Jain medicines; then he came to his sister who cured it with Siva’s holy ash Vibhuti; From that day, he burst in to singing the glory of Lord Siva and visited hundreds of Siva shrines all over Tamil Nadu)
At once, Apputi recognised him, and put his hands together above his . tears down his face, his speech became incoherent, and his hairs stood on end. He fell to the ground and placed his head at the feet of Appar. He returned his greeting and raised Apputi to his feet. Like a beggar who has found a buried treasure, Apputi stood before him speechless with joy, then danced around him singing in jubilation.
Apputi was overwhelmed by this unexpected happening. There was big celebration in the house and the neighbourhood. Big feast was arranged.
திருமூலர் காட்டும் அதிசய ஐயனார் கோவில்! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 46
முதலில் சுவையான அதிசய விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன் :
இந்துக்கள், 5000 ஆண்டுகளாக வணங்கும் சாஸ்தா , ஹரிஹர புத்ரன், ஆரியன், ஐயப்பன் , தர்ம சாஸ்தா எல்லாம் ஒரே கடவுளைக் குறிக்கும்.
முதல் முதல் குறிப்பு மஹாபாரதத்தில் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் 206-ஆவது நாமமாக வருகிறது.
சிஸ்டம் SYSTEM என்ற ஆங்கிலச் சொல் ‘சாஸ்தா’-விலிருந்து வந்தது.
ஆரிய என்பது பிராக்ருதத்தில் (சம்ஸ்க்ருதத்தின் பேச்சு வடிவம் ) அஜ்ஜ ஆகி, தமிழில் ஐயர் என்று மாறியது; இது மொழி இயலாளர் (LINGUISTS) கண்ட உண்மை. ஜ என்ற எழுத்து உலகில் சம்ஸ்க்ருத மொழியைத் தவிர வேறு எந்த ஆதிகால மொழியிலும் கிடையாது. அதை பிற மொழியாளர்கள் ய என்றே உச்சரித்தனர். இதனால் ஜ -வும் ய- வும் இடம் மாறின அதனால்தான் யாழ்ப்பாணம், ஜாப்னா ஆகும் . ஜாவா, யவத் வீபம் ஆகிறது. யஹோவா , ஜெஹோவா ஆகிறது.
கேரளத்தில் 4 புகழ்பெற்ற அய்யப்பன் கோவில்கள் உண்டு – குளத்துப்புழை , ஆரியங்காவு , அச்சன்கோவில், சபரிமலை. இதில் ‘ஆரியன்’ காவு என்பது ‘ஐய’ப்பன் கோவில் உள்ள இடம் ; ஆரியன்= அய்யப்பன்
சிலர் இதை திராவிட தெய்வம் என்று உளறிக்கொட்டி இருக்கின்றனர்; வேலிக்கு ஓணான் சாட்சி என்ற பழமொழிக்கிணங்க வெளிநாட்டிலிருந்து மதத்ததை பரப்ப வந்தவர்கள் பெயர்களை வேறு ஆதாரமாகக் காட்டுகின்றனர் . அவர்களுக்கு விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் ஆதி சங்கரர் கொடுத்த வியாக்கியானமும் தெரியாது, இந்தப் பெயர் முதல் முதலில் மிகப்பழைய சஹஸ்ரநாமத்தில் வருவதும் தெரியாது .
சாஸ்தா, சங்க இலக்கியச் சாத்தன் எல்லாம் பிராமண குடும்பங்களின் குல தெய்வம் என்பதும் பலருக்கும் தெரியாது.
சிலப்பதிகாரத்தில் கனாத் திறம் உரைத்த காதையில் அற்புதங்கள் செய்த சாத்தன், சாதவாகனன் கோவில் பற்றி வருகிறது .
பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் ‘’திரு நகரம் கண்ட படலத்தில்’ மதுரை நகரை நிர்மாணித்த பாண்டிய மன்னன் கீழ்த் திசையில் ஐயனாரையும் தென் திசையில் சப்த மாதரையும் மேற்றிசையில் விஷ்ணுவையும் வடதிசையில் துர்க்கையையும் காவலாக நிறுத்தி நடுவில் சிவன் கோவிலை எழுப்பி, காசியிலிருந்து ஆதி சைவர்களை பூஜைக்கு அழைத்துவந்தான் என்று எழுதி இருக்கிறார். இதை இன்றும் மதுரையில் காணலாம்.
xxxx
திடீரென்று ஐயனார் கோவிலை மட்டும் திருமூலர் குறிப்பிட்டது நம்மைத் திகைக்க வைக்கிறது . ஆனால் அப்படிக் கோவில் இருந்ததற்கான சான்று சிலப்பதிகாரம் முதலே நமக்குத் தமிழில் கிடைக்கிறது.
xxxx
இதோ திருமூலர் கூற்று!
975. ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்
பாங்கு படவே பலாசப் பலகையிற்
காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்டு
ஓங்காரம் வைத்திடும் உச்சா டனத்துக்கே.
(ப. இ.) வடமேற்குப் புலமாகிய வாயு மூலையில் அரி அரர் மகனாகிய ஐயனார் கோவிலில் அழகுறப் புரசுப் பலகையில் வெப்பமுள்ள கரிய தகட்டில் நஞ்சு பூசி விந்துவாகிய வட்டம் அமைத்து அதன்மேல் ஓங்காரம் அமைத்துப் பூசித்தலை உச்சாடனம் ஆகிய ஏவுதல் என்ப.
பெரிய புராணம், தேவாரம் முதலியவற்றில் கிபி.-600 முதல் அய்யனார் பற்றிய குறிப்புகள் கிடைத்தாலும் காலத்தினால் முந்திய சங்கரர் என்ன சொல்கிறார் என்பது முக்கியமாகிறது. அபி நவ சங்கரர் என்பவர் கி.பி 732-ல் வாழ்ந்ததாகவும் ஆதிசங்கரர் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகவும் ஒரு கருத்து உண்டு. ஆதி சங்கரரின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.
விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் எல்லா இந்துக்கடவுளரின் பெயர்களும் வருகின்றன. அவற்றை விஷ்ணுவின் பெயர்களாக மஹாபாரத பீஷ்மர் நமக்கு அளிக்கிறார்.
அதில், ஆதி சங்கரர் சாஸ்தா என்ற சொல்லுக்கு தரும் விளக்கம்:
கட்டளையிட்டு நடத்துகிறவர் SYSTEMATIC ;
ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிபிஹி சர்வேஷா மனுஷிஷ்டிம் கரோதீதி சாஸ்தா– என்கிறார்.
xxxx
சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதரும் கிராமங்களுக்கு வெளியே அமைக்கப்பட்ட சாஸ்தா, சாத்தன் எல்லாம் ஓன்றே என்று குறிப்பிடுகிறார். 1930-ம் ஆண்டில் வெளியிட்ட அசோகனின் மதங்கள் என்ற கட்டுரையையும் குறிப்பிடுகிறார். அதில் என்ன உள்ளது என்பதையும் காண வேண்டும் .
xxxx
ஐயனார் யார் ?
அரிகர புத்திரன் ,சாத்தன், ஆரியன், அறத்தைக் காப்போன், கருங்கடல் வண்ணன், கோழிக் கொடியோன் , சாத வாகனன், செண்டாயுதன், புட்கலை மணாளன் பூரணை கேள்வன், யோகி, வெள்ளையானை ஊர்தி , வாகனம் – காரிக் குதிரை என்று 1935ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி கூறுகிறது
ஐயன் பாழி – சாஸ்தா கோவில்
xxxx
சாத்தன் யார் ?
அருகன், ஐயன் , தண்டிப்பான், புத்தன், வயிரவன், சாஸ்தா, சீத்தலைச் சாத்தன், வணிகக் கூட்டத் தலைவன், ஐயனார், அரிகர புத்திரன் என்று 1935ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி கூறுகிறது
xxxx
பழைய தமிழ்க் கலைக் களஞ்சியமான ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணியிலும் ஏறத்தாழ தமிழ் அகராதியில் காணும் விஷயங்களே உள.
xxx
ஐயப்பன் மனைவிமார் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதையும் கவனிக்கவும். மேலும் குதிரை என்பது சங்க இலக்கியத்தில் இருந்தாலும் அவை வடக்கிலிருந்தும் கப்பல் மூலம் வெளிநாட்டிலிருந்தும் வந்ததையும் கருத்திற் கொள்ள வேண்டும் ; ஐயனார் சிலை இருக்கும் இடமெல்லாம் பெரிய குதிரைகள் நிற்கும்.
இலங்கையிலும் அவரைக் காவல் தெய்வமாக வயற்புறத்தில் வைத்திருக்கிறார்கள் .
இந்து மதத்தைப் பின்பற்றாத வெளிநாட்டினர், இந்து மதத்தைக் குறைகூறியும் , கிறிஸ்தவ மதத்தை உயர்த்தியும் எழுதிய எல்லா புஸ்தகங்களிலும் இரண்டு முருகன்கள் , இரண்டு சிவன்கள் , இரண்டு சாஸ்தாக்களை உண்டாக்கி இந்து மதத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். வட நாட்டு கந்தன், கார்த்திகேயன் தமிழ் முருகன் அல்ல; சிவபெருமானும் ரிக்வேத ருத்ரனும் வேறு வேறு ; சாஸ் தாவும் ஐயனாரும் வேறு வேறு என்று கதை கட்டினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் அந்த வாதங்களைத் தவிடு பொடியாக்கினார்கள் .
ஐயனார் வேறு–சாஸ்தா வேறு என்ற பொய்மை வாதத்தையும் நான் மேற்கூறிய காரணங்கள் தவிடு பொடியாக்கும் . பெரும்பாலான எழுத்தர்களுக்கு சம்ஸ்க்ருத அறிவும், மொழியியல் அறிவும் இல்லாததை நாம் எல்லோரும் அறிவோம்.
ஐயனார் பற்றி சங்க இலாக்கியத்திலோ திருக்குறளிலோ தொல்காப்பியத்திலோ குறிப்புகள் இல்லை என்பதால் இவர் தமிழ்த் தெய்வம் இல்லை என்பது தெளிவாகிறது ; அதே பழைய நூல்களில் வேத கால தெய்வங்களைப் பற்றிய குறிப்புகளையும் இதிஹாச புராண புருஷர்களின் குறிப்புகளையும் மட்டுமே காண முடிகிறது.
சிவபெருமானுக்கும் மோகினி (பெண்) வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர் ஐயப்பன் என்று பிற்காலக்கதைகள் சொல்கின்றன ; ஆகையால் இதை வடட்டாரக் கதை என்றே சொல்ல முடியும் ; இது போல மஹாராஷ்ட்ராவிலும் கண்டோபா முதலிய வட்டார தெய்வங்கள் உண்டு. சொல்லப்போனால் ஒவ்வொரு மாநிலத்திலும் உண்டு .
ஆகையால் இவரை திராவிட தெய்வம் என்று அக்மார்க் முத்திரை குத்தியவர்களுக்கு இலக்கியச் சான்றுகளே இல்லை. சங்க இலக்கிய புலவர்களில், சாத்தன் பெயர்கொண்ட புலவர்கள் மட்டுமே உண்டு ; அந்தச் சொல்லை தெய்வங்களுடன் தொடர்பு படுத்தும் எந்தக் கதையும் இல்லை; அப்படிச் சம்பந்தப்படுத்த விரும்பினால் மஹாபாரத/ விஷ்ணு ஸஹஸ்ரநாம சாஸ்தாவுடன்தான் தொடர்பு ப டுத்தலாம் . அதில் எல்லா இந்துக்கடவுளரின் பெயர்களும் விஷ்ணு ரூபமாகக் காட்டப்படுகிறது .
திராவிட தெய்வம் என்று வாதிப்போர் ஆயிரக்கணக்கான கிராமங்களில் உள்ள கதைகளை– வாய்மொழிக் கதைகளை — ஓட்டுப்போட்டு புஸ்தககங்கள் எழுதியுள்ளனர்; அதில் ஒரு ஊர்க்கத்தை இன்னொரு கதையுடன் பொருந்தா . அதாவது அவியல்.
அப்படியானால் உண்மை என்ன?
இந்துக்கள் நான்கு திசைகளில் நான்கு காவல் தெய்வங்களை நிறுவினார்கள்; அவர்களில் ஒன்று அய்யனார் என்று திருவிளையாடல் புராணம் கூறும்; 2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்த்திரப் பொருளாதார புஸ்தகத்திலும் இப்படி தெய்வங்களை நிறுவும் வழக்கத்தைக் காணலாம். அதில் சாஸ்தா /அய்யனார் பெயர் இல்லை ; ஆனால் அவர் எழுதியது பொருளாதார புஸ்தகம் ; புராணம் அல்ல.
மிகப்பெரிய மொழியியல் வல்லுனரும் , சமயப் பெரியாருமான காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் . கிராமங்களில் வணங்கப்படும் எல்லா பெண்தெய்வங்களும் ஸம்ஸ்க்ருத்ப் பெயர்களில் உள்ள வேத கால தெய்வங்கள் என்பதையும் அவர் காட்டியுள்ளார்.
xxx
காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) சொற்பொழிவு
“ஈசுவரனின் அழகு மனத்தை அடங்கச் செய்கிற சாந்த ஸ்வபாவம் வாய்ந்தது. ஸ்ரீ மந் நாராயணனின் சௌந்தரியமோ மனத்தை மோகிக்கச் செய்து ஆனந்தக் கூத்தாடச் செய்வது. விஷ்ணுவின் திவ்விய ரூபத்திலிருந்து வைத்த கண்ணை வாங்க முடியாமல் எவரும் சொக்கிக் கிடக்க வேண்டியதாகிறது. ஸ்ரீ ராமனாகவும், கிருஷ்ண பரமாத்மாவாகவும் அவதரித்த போதும், இந்த ஜகன்மோகன சௌந்தரியம் அவரைவிட்டு நீங்காமலே இருந்திருக்கிறது. இப்படிப்பட்டவர் மோஹினி என்றே ஓர் உருவம் கொள்ளும்போது எத்தனை அழகாக இருந்து, எல்லோர் உள்ளங்களையும் மோஹிக்க வைத்துக் கொள்ளை கொண்டிருப்பார்? பரம ஞானியாக, தபோமயமாக ஜ்வலித்துக் கொண்டிருந்த பரமேசுவரனின் மனத்தைக்கூட மகாவிஷ்ணுவின் மோகினி ரூபம் மயக்கிவிட்டது என்று புராணங்கள் சொல்கின்றன. மோகினியாக வந்த நாராயணனின் காருண்ய லாவண்யமும் பரமேசுவரனின் சாந்த ஞானமும் ஒன்று சேர்ந்தவுடன் ஒரு மகா தேஜஸ் – ஒரு பெரும் ஜோதி – பிறந்தது. இந்தத் தேஜஸே ஐயப்பனாக உருக் கொண்டது.
ஹரிஹர புத்திரன் என்றும், சாஸ்தா என்றும், ஐயனார் என்றும் சொல்வது இந்த ஐயப்பனைத்தான்.
ஐயன் என்பது ‘ஆர்ய’ என்பதின் திரிபு. ‘ஆர்ய’ என்றால் ‘மதிப்புக்குரிய’ என்று பொருள். சாக்ஷாத் பரமேசுவரனுக்கும் நாராயணமூர்த்திக்கும் ஜனித்த குழந்தையைவிட மதிப்புக்குகந்தவர் எவருண்டு? ஞானமும் தபசும் கலந்த சிவனின் பிரம்ம அம்சம், கிருபையும் சௌந்தர்யமும் சக்தியும் கலந்த விஷ்ணுவின் க்ஷத்ர அம்சம் இரண்டுமே நாம் உய்வு பெற அத்தியாவசியமாகும். ஹரிஹர புத்ரனாகிய ஐயப்பனிடம் இவையெல்லாமே ஒன்று சேர்ந்திருப்பதாகக் கொள்ளலாம். இதனால்தான் போலிக்கிறது, சிவபெருமானின் மற்ற இருபாலர்களைப் பிள்ளையார் என்றும் குமரன் என்றும் குழந்தைகளைக் குறிக்கிற சொல்லால் குறிப்பிட்டாலும், அவரது மூன்றாவது புத்திரான சாஸ்தாவை மட்டும் மதிப்புக்குரியவராக – ஆர்யராக – ஐயனாராகக் குறிப்பிடுகிறோம். ‘ஆர்ய’ என்பதுதான் ‘அய்யர்’ என்றாயிற்று. முதலி – முதலியார், செட்டி – செட்டியார் மாதிரி அய்யனுக்கு மரியாதைப் பதம் அய்யனார். இதிலே ஒரு வேடிக்கை. பொதுவாகத் தமிழ் நாட்டில் அய்யர் (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோயில்களில் உள்ள ஸ்வாமிதான் அய்யராக – அய்யனாராக இருக்கிறார்! கொஞ்சம்கூட இப்போது பேசப்படுகிற இன வித்யாசங்கள் முன்னே இல்லை என்பதற்கு இதுவே ஓர் அடையாளம்.
சபரிமலையில் ஓரிடத்தை ‘ஆரியங்காவு’ என்று ஆரியனுடைய காடாகவே சொல்கிறார்கள். தேசத்தில் எத்தனையோ ஸ்வாமிகளுக்குக் கோயில் இருந்தாலும் சாஸ்தாவைத் தவிர எவருக்குமே அய்யர், ஆரியன் என்ற பெயர்கள் இல்லை.
சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன். தமிழ் நாட்டில் இருக்கப்பட்ட அநேக சாத்தனூர்களில் முக்கியமான தெய்வம் ஐயப்பன்தான்.
தமிழ் நாட்டில் கிராமத்துக்குக் கிராமம் ஐயனார் கோயில் உண்டு. கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்பன் வழிபாடு வெகுவாகப் பரவி வளர்ந்திருக்கிறது.
அவர் நம்மைக் காவல் புரிகிற தெய்வம். காற்று கருப்பு முதலான பலவித தீயசக்திகளிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறவர். இதெல்லாவற்றுக்கும் மேலாக நாராயணனிடமிருந்து நம் வாழ்க்கையையே பரிபாலிக்கும் சக்தியைப் பெற்றிருக்கிறார். ஈசுவரனிடமிருந்து நமக்கு விமோசனம் தருகிற ஞானத்தை அளிக்கும் சக்தியும் பெற்றிருக்கிறார்.
சுதந்திர இந்தியாவில் ஐயப்பன் ரொம்ப ரொம்பக் கியாதி பெற்று வருகிறார். சுதந்திர சாஸனம் (Constitution) அளித்திருக்கிற பேச்சுத் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பக்கத்தில் நாஸ்திகப் பிரசாரம் தடபுடலாக நடக்கிறபோதே, மறுபக்கத்தில் அது எடுபடாத அளவுக்கு ஐயப்ப பக்தி நாளுக்கு நாள் அமோகமாக விருத்தியாக்கிக் கொண்டிருக்கிறது.
கேரளத்தில் எட்டாக் கையில் சபரிமலையில் இருக்கிற ஐயப்பன் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் நாடு, மற்ற ராஜ்யங்கள் மீதெல்லாம் கூடத் தம் ராஜதானியை விஸ்தரித்துக்கொண்டே வருகிறார்!
இது மிகவும் உற்சாகமளிக்கிற விஷயம். நாஸ்திகப் பிரச்சார விஷயத்தைத் தடுக்கிற அருமருந்தாக வந்திருக்கிறது ஐயப்ப பக்தி.
அவரது கிருபையை நாடி, அதற்குப் பாத்திரர்களாக வாழ்ந்தோமானால் நாமும், நாடும், உலகமும் சிறப்புற்று விளங்குவது நிச்சயம்.”
xxxx
என்னுடைய பழைய கட்டுரைகள்
ஐயனார் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No. 8373)
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 8373
Date uploaded in London – 20 July 2020
xxxx
ஐயனார் கோவில்கள் -இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 45
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 12,662
Date uploaded in London – – – 1 November , 2023
xxxx
–subham—
திருமூலர், அதிசய ,ஐயனார் கோவில், திருமந்திர, ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 46, சாஸ்தா, ஆரியன், அஜ்ஜ, ஐயர் , ஆரியங்காவு ,சாத்தன், திருவிளையாடல் புராணம், காஞ்சி சுவாமிகள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கவலையூட்டும் செய்தியா? ‘ஜோக்’ படியுங்கள்!
ச. நாகராஜன்
மனிதனுக்கு சிரிப்பு ரொம்ப முக்கியம். மனிதனால் மட்டுமே சிரிக்க முடியும், சிரித்து மகிழ்ந்தால் சிறப்புடன் நோயின்றி வாழ முடியும் என்பதை அறிவியலும் ஆதாரபூர்வமாகக் கூறுகிறது.
அமெரிக்காவை கடுமையான உள்நாட்டுப் போர்க்காலத்தில் வழி நடத்திச் சென்ற ஆபிரஹாம் லிங்கன் எப்போதும் ஒரு ஜோக் புத்தகத்தை வைத்திருப்பாராம்.
கடுமையான கவலையூட்டும் செய்தி வந்தாலோ, யாராவது அவரைக் கோபமுறச் செய்தாலோ உடனடியாக அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் படித்து மனம் விட்டுச் சிரிப்பாராம்.
“நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையென்றால் நான் இறந்திருப்பேன்” என்றார் அவர்.
இதே வாசகத்தை மகாத்மா காந்தியும் கூறினார்: “நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்” என்றார் அவர்.
செலவில்லாமல் மனிதன் மகிழ்ச்சி பெற சிறந்த எளிய, வழி சிரிப்பது தான்! உலகில் உள்ள உயிரினங்களில் மனித இனம் மட்டுமே சிரிப்பினால் அலுப்பையும், கவலையையும் போக்கிக் கொண்டு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் உடனடியாகப் பெற முடியும். நோயைப் போக்கி ஆரோக்கியத்தை அடைய முடியும். தொற்று வியாதியை விட வேகமாக, மிகச் சுலபமாக மகிழ்ச்சி என்னும் அரிய நிவாரணத்தை கவலையுற்றோருக்குப் பரப்ப முடியும்!
சிரிப்பு, வலியைக் குறைப்பதோடு டென்ஷனை நீக்கி நோயை விரட்டும் என்று மருத்துவர்கள் உறுதி கூறுகின்றனர்.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் தி நேஷனல் கான்ஸர் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை புதிய உண்மையைத் தெரிவிக்கிறது.
பத்து ஆரோக்கியமான மனிதர்களிடம் ஒரு மணி நேரம் சிரிப்பு வீடியோ காஸட் போட்டுக் காண்பிக்கப்பட்டபோது அவர்கள் சிரித்துச் சிரித்து மகிழ்ந்தனர். அப்போது அவர்கள் உடலில் நோயைத் தீர்க்கும் ஒரு முக்கியமான இரசாயனப் பொருளான இன்டர்ஃபெரான் காமா அதிக அளவில் சுரந்ததாம். சுவாச சம்பந்தமான நோய்கள் மற்றும் இதர தொத்து நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் கெமிக்கல்களும் அதிகமானதாம். அவர்கள் சிரிக்கச் சிரிக்க, மூளை இயற்கையான வலிக்கொல்லிகளை வெளியிட்டதாம். டென்ஷனை உருவாக்கும் ஹார்மோன்கள் அவர்கள் உடலில் மிகவும் குறைந்து கொண்டே போனதாம்!
இதய நோய் நிபுணர்களால் பால்டிமோரில் உள்ள மேரிலாண்ட் மெடிக்கல் சென்டரில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு நகைச்சுவை உணர்வுடன் சிரித்து மகிழ்வோருக்கு ஹார்ட் அட்டாக் வராமல் அந்தச் சிரிப்பே அவர்களைப் பாதுகாக்கிறது என்று தெரிவிக்கிறது.
இந்த மையத்தின் டைரக்டரான மைக்கேல் மில்லர், “உங்கள் இதயத்தைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரையில் பழையகாலம் தொட்டு வழங்கி வரும் பொன்மொழியான நகைச்சுவையே சிறந்த மருந்து என்பது உண்மையாகி விட்டது” என்கிறார்.
நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் மூளை மனநலம் நோய்த் தடுப்பியலில் பேராசிரியராக இருக்கும் ஆர்தர் ஸ்டோன் சிரிப்பைப் பற்றி விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டவர். நோயை உருவாக்கும் பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் எதிர்த்து நோயைத் தடுக்கும் இம்யூனோ க்ளோபுலின் ஏ என்ற ஆன்டிபாடிக்கும், சிரிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அவர் கண்டுபிடித்துள்ளார். ஹாப்பி ஹார்மோன் என்று செல்லமாக வழங்கப்படும் சிடோகின்ஸ் என்ற ஹார்மோனும் சிரிப்பினால் உருவாக்கப்படுகிறது.
உடல் மீது படையெடுக்கும் நோய்களைத் தரும் பாக்டீரியாக்களையும் ,வைரஸ்களையும் விசேஷமாக எதிர்த்துத் தடுக்கும் இரத்தத்தில் உள்ள வெள்ளை செல்களின் எண்ணிக்கை சிடோகின் அளவு உடலில் கூடும்போது கூடுவதை கலிஃபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியரான லீ பெர்க் கண்டுபிடித்து உறுதிப்படுத்துகிறார். இவை ட்யூமர் செல்களைக் கூட அழித்து விடும் ஆற்றல் உடையதாம்!
அன்னி ஜாஷ்வே என்ற பிரபல நகைச்சுவையாளர் தனது ‘டோண்ட் கெட் மேட், கெட் ஃபன்னி’ என்ற புத்தகத்தில் சிரிப்பால் உளவியல் மற்றும் உடலியலில் ஏற்படும் நற்பலன்களைப் பெரிய பட்டியலாகவே தருகிறார்.
லெபாக்ஷி கோவில்களும் ஓவியங்களும்; ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 25
லெபாக்ஷி எங்கே இருக்கிறது?
லெபாக்ஷி என்னும் கிராமம் ஆந்திர பிரதேசத்தின் சத்ய சாய் மாவட்டத்தில் இருக்கிறது கதிரியிலிருந்து 82 கி.மீ; பெங்களூரிலிருந்து 120 கிமீ. புட்டபர்த்தியிலிருந்து 64 கி.மீ ; பெனுகொண்டாவிலிருந்து 50 கிமீ.
என்ன சிறப்புகள்?
சிறிதும் பெரிதுமாக மொத்தம்110 கோவில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை – சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் வீரபத்ரருக்கும் தனித்தனியான கோவில்கள் உள்ளன. விஜயநகர கட்டிடக்கலையின் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன கூர்மசைலம் என்று அழைக்கப்படும் சிறிய குன்றுமீது [ஆமை மலை] பாபனதீஸ்வர, ரகுநாதர், ஸ்ரீராமர்,வீரபத்ரர் ஆலயங்கள் உள்ளன. இங்குள்ள வீரபத்ரர் ஆலயம்தான் கலைமுக்கியத்துவம் கொண்டது.மற்றவை சிறிய சன்னிதிகள்
என்ன அதிசயங்கள் ?
இங்குள்ள மாபெரும் நந்தி ஒரு பெரிய அதிசயம் கோவிலுக்கு வெளியே சாலையோரமாக நம்மை இது வரவேற்கிறது.
ஒற்றைக் கல் நந்தியின் உயரம் 20 அடி; நீளம் 30 அடிகள்!
ஜடாயுவுக்கு மோட்சம் கொடுத்த இடம் என்பதால் ராமாயணத் தொடர்புடையது; ஜடாயு சிலையும் ஒரு அதிசயப் படைப்பு.
சித்தன்னவாசல், அஜந்தா குகை ஓவியங்களைப் போல இங்குள்ள ஓவியங்களும் அற்புதப் படைப்புகள்.
கோவில்களும் ஓவியங்களும் சுமார் 500 ஆண்டுகள் வரலாறு உடையவைதான்.
இங்குள்ள தரையைத் தொடாத தொங்கும் தூண் பொறியியற் கலையின் அற்புதப் படைப்பு எனலாம் .கோவிலில் உள்ள 70 தூண்களில் ஒன்று தரையைத் தொடவில்லை; அதற்கு அடியில் துணி அல்லது காகிதத்தை விட்டு வெளியே இழுக்கலாம்.
வெளியே இயற்கையான பாறை ஒன்றை செதுக்கி உருவாக்கப்பட்டுள்ள மாபெரும் நாகர் சிலை சிவலிங்கத்துடன் காட்சி தருகிறது; லெபாக்ஷியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சிலை இதுதான். அந்தப்பாறையின் பக்கவாட்டில் உள்ள பெரிய புடைப்புப் பிள்ளையார் சிலை மிகவும் அழகானது.
ஓவியங்கள் இயற்கை வண்ணக் கலவையைக் கொண்டு தீட்டப்பட்டுள்ளன ; அவைகள் சிவன் , விஷ்ணு, பார்வதி தொடர்பான புராணக் காட்சிகளை சித்தரிக்கின்றன
xxxx
அனுமனின்மிகப்பிரிய காலடி
அனுமனின் காலடி என்று பக்தர்கள் நம்பும் மிகப்பெரிய கால் சுவடு வீரபத்ர சுவாமி கோவில் வளாகத்துக்குள் இருக்கிறது சுமார் மூன்று அடிகள் நீளமுள்ள கால் தடம் எப்போதும் ஈரப்பசையுடன் இருக்கும். இதற்குக் காரணம் பாறையின் அடியிலுள்ள நீரூற்று ஆகும். இதுவும் நிறைய பக்தர்களையும் சுற்றுலாப்பயணிகளையும் ஈர்க்கின்றன.
கோவிலில் உள்ள வீரபத்ர சுவாமிக்கும், சிவலிங்கத்துக்கும் தினமும் அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறுகின்றன.
xxxx
சுவையான கதை
இந்தக் கோவில்கள் பெனுகொண்டாவின் ஆளுநர்களாக் இருந்த வீரண்ணா விரூபண்ணா சகோதரர்களால் உருவாக்கப்பட்டவை ; விருபண்ணா இங்கே குகைக்குள் இருந்த வீரபத்ரர் சிலையைக் கண்டவுடன் அதை அங்கே பிரதிஷ்டைசெய்து பெரும் ஆலயம் கட்டினார் . நம்முடைய தமிழ்நாட்டின் மாணிக்க வாசகரைப் போல, ஆந்திர மாநிலத்தின் பத்ராசல ராமதாசரைப் போல இவரும் கோவிலைக் கட்டுவதற்கு அரசாங்க பணத்தைப் பயன்படுத்தினார் ; புகார்கள் பறந்தன விஜயநகர மன்னன் ஓடோடி வந்தான்; உண்மை என்று அறிந்தான்; உமக்கு நீரே தண்டனை கொடுத்துக் கொள்ளவும்; உ ம் கண்களை நீரே குத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டான் விரூபண்ணாவும் அப்படியே செய்தார். லெபாக்ஷி என்ற பெயர் இதனால்தான் வந்ததாம் லோப + அக்ஷி என்றால் குருட்டு விழி என்று பொருள். லே +பட்சி என்றும் பொருள் சொல்லுவார்கள்; சீதையை இராவணன் கடத்தியதை ஜடாயு என்ற பறவை தடுத்தது; ராவணன் அதன் சிறகினை வெட்டினான் அது கீழே விழுந்தது; எழுந்திரு பறவையே என்று ராமன் சொன்னதால் லே +பக்ஷி (பறவை) என்ற பெயர் ஏற்பட்டது
கோவில் வேலை முழுமை அடையாமலேயே நின்றுவிட்டது.
இது நூற்றெட்டு சைவத் தலங்களுள் ஒன்று என்று ஸ்கந்த புராணத்தில் குறிப்பு இருக்கிறது . இதை அகத்தியர் நிறுவியதாக ஐதீகம் உள்ளது.
xxxx
வீரபத்ரசாமி கோவில்
வீரபத்ரசாமி கோவில் மூன்று பகுதிகளாக உள்ளது. முக்த மண்டபம் அல்லது ரங்க மகால் ,பின்னர் அர்த்தமண்டபம். அதற்கு அப்பால் கருவறையும் அதன்முன் கல்யாணமண்டபமும். இருக்கின்றன கல்யாண மண்டபத்தில் சிற்பப் பணிமுடிவடையாத முப்பத்தெட்டு ஒற்றைக் கல்தூண்கள் கூரையைத் தாங்கி நிற்கின்றன.
இந்த தலத்தில்தான் சிவபார்வதி திருமணம் நிகழ்ந்தது என்பது ஸ்தலபுராணம். அதற்கேற்ப எங்கும் அழகு ததும்பி நிற்கும் தூண்கள். நாட்டிய மண்டபத்தில் இசைக்கலைஞர்களும் நடனமாதர்களும் பிரமித்து நிற்கின்றார்கள். கல்யாணமண்டபம் பணிமுடிவடையாத நிலையில் உள்ளது. தும்புரு- நாரத நடனம், அனந்த சயனம், தத்தாத்ரேயர் ,நான்முகன், ரம்பா போன்ற சிலைகள் மனதைக் கவர்கின்றன.
நாட்டிய மண்டபத்தையும் கல்யாண மண்டபத்தையும் பார்த்து முடிக்கவே முடியாது. மிக அற்புதமான சிலைகள் வரிசையாக இருக்கின்றன. குறிப்பாக ஒரே தூணில் உள்ள யட்சனும் புஷ்ப யட்சியும் ஆண்மைக்கும் பெண்மைக்கும் மிகச்சிறந்த உதாரணங்கள்.
நாட்டியமண்டபத்திலும் கல்யாணமண்டபத்திலும் மேலே கூரையில் உள்ள சுவரோவியங்களும் புகழ்பெற்றவை. மகாபாரத ராமாயண காட்சிகளுடன் வீரண்ணா, விரூபண்ணா ஆகியோர் தங்கள் பக்கவாட்டில் கட்டிமுடிக்கப்படாத ஒரு மண்டபம் சிற்பங்கள் மண்டிய தூண்களாக மட்டும் நின்று கொண்டிருக்கிறது. முகப்பில் அகத்தியர் முதலிய ரிஷிகளின் அற்புதமான சிலைகள் வரிசையாக நிற்கின்றன. உள்ளே, நின்ற திருக்கோலத்தில் விஷ்ணுவின் சிலை உள்ளது.
—Subham–
Tags- சிவன் கோவில், லெபாக்ஷி , ஓவியங்கள் , பெரிய நந்தி , ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 25, வீரபத்ர சுவாமி, நாகத்தின் கீழ் சிவலிங்கம், தொங்கும் தூண், அனுமன் காலடி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆனந்தம் ஆரம்பமாக வழிகள்!
ச. நாகராஜன்
பதினைந்து வருட வாழ்வு!
மனிதராய்ப் பிறந்தோரின் சராசரி ஆயுள் எண்பது வருடங்கள் என்று இந்த அறிவியல் யுகம் நிர்னயித்து விட்டது. இதில் முதல் பத்து வருடங்கள் பால பருவத்திலும், கடைசி பத்து வருடங்கள் உடல் தளர்ந்த முதுமைப் பருவத்திலும் கழிந்து விட,, மீதி இருப்பது அறுபது வருடங்கள்.
இதில் மூன்றில் ஒரு பகுதி தூக்கத்திலும், இன்னொரு மூன்றில் ஒரு பகுதி வேலை மற்றும் படிப்பிலும் போய் விட, மீதி இருப்பது இருபது வருடங்கள். இதில் உணவு உண்ணுதல், மற்றும் உணவு தயாரித்தல், பயணம், டிரைவிங் என்று ஒரு ஐந்து வருடங்கள் கழிந்தது போக மீதி இருப்பது பதினைந்து வருடங்கள் தாம்.
வாழ்வதற்காக உள்ள வருடங்கள் பதினைந்து வருடங்களே! இதில் ஆனந்தமாக வாழ்கிறோமா என்பது தான் கேள்வி.
மன்னர் ஷவன் ஷி கேட்கும் கேள்வி
க்விங் என்ற சீன வம்ச அரசரான ஷவன் ஷி சக்ரவர்த்தி (கி.பி. 1638- 1697) ஒரு பாடலை எழுதியுள்ளார்:-
“எதற்காக என்று தெரியாமல் பூமிக்கு மனிதர்கள் வருகிறார்கள்! எங்கு போகப் போகிறோம் என்று தெரியாமல் மனிதர்கள் பூமியை விட்டுப் போகிறார்கள்! இங்கு வருவதற்கு முன்னர் நான் யார்? இங்கிருந்து போன பின் நான் யார்?”
இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரியாததால் சக்ரவர்த்தி ஷவன் ஷி அரசைத் துறந்து விட்டு சந்நியாசி ஆனார்.
உண்மை ஆனந்தத்தைத் தேடி ஆன்ம மார்க்கத்தில் ஈடுபடுவது ஒருபுறம் இருக்க, உண்மையில் வாழ்கின்ற பதினைந்து வருடங்களில் ‘மனித ஆனந்தத்துடனாவது’ வாழ்கிறோமா? ஆனந்தமாக வாழ வழிகள் உண்டா? உண்டு! அவற்றில் சில வழிகளைப் பார்க்கலாம்:
உள்ளங்கைகளைத் தேய்த்தல்
உடனடி ஆனந்தத்தை வரவழைக்கை ஒரு சுலபமான வழி, உள்ளங்கைகளை ஒன்றுடன் ஒன்று ஏழு முறைகள் வேகமாகத் தேய்ப்பது தான்! வேகமாகத் தேய்த்து அதில் வரும் ஆனந்தம் உடலெங்கும் பரவுவதை உணரலாம். இப்படி ஏழு முறை தேய்ப்பதை ஏழு முறை செய்தால் உற்சாகமான ஆனந்தம் ஆரம்பமாகும். ‘டல்லாக’ உணரும் தருணங்களிலும் உள்ளங்கைகளைத் தேய்த்து ஆனந்தம் ஆரம்பமாக வைத்து நம் நேரத்தை மகிழ்ச்சி நேரமாக மாற்றிக் கொள்ளலாம்!
கிடைமட்ட எட்டு எண்ணை மனதில் இருத்தல்
அடுத்து எல்லையற்ற தன்மையைக் குறிக்கும் அடையாளமான கிடைமட்டமாக உள்ள எட்டு எண்ணை ((8 ஐ கிடைமட்டமாக்கினால் வருவது ∞ ) கண்களை மூடி மனதில் இருத்துங்கள். இதில் உள்ள இரண்டு பூஜ்யங்கள் இடது பக்க மூளையையும், வலது பக்க மூளையையும் இணைக்கும் பாலமாக அமையும். இரண்டு பூஜ்யங்களும் இணையும் இடமானது கார்பஸ் கலோஸம் என்ற மூளையின் பகுதியைக் குறிக்கும். அந்த இணையும் புள்ளியே ஆனந்த சக்தி ஆரம்பமாகும் இடம். அதையே ஆனந்தத்தின் ஊற்றாக எண்ணுங்கள். இந்த இரண்டு பூஜ்யங்களின் வழியே ஆனந்த சக்தியை ஓட்டமாக ஓட வைத்து அதை மனதில் அனுபவியுங்கள். எவ்வளவு நேரம் ஆனந்த சக்தியை ஓட்ட விரும்புகிறீர்களோ, அவ்வளவு நேரம் ஓட விடுங்கள். அபரிமிதமான ஆனந்தப் புத்துணர்ச்சி உடலெங்கும் அலை பாயும்.
மினி மெடிடேஷன்
கண்களை மூடி ஒரு மினி மெடிடேஷன் செய்வது அடுத்த டெக்னிக்!
கண்களை மூடி முகத்தை நிமிர்த்தி வையுங்கள். கண்களைக் கீழே தாழ விடுங்கள். பத்து வினாடிகள் கழித்து கண்களை மேலே பார்க்கச் செய்யுங்கள். பத்து வினாடிகள் புருவ மத்தியைப் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி உணர்வை உணருங்கள். உடல் முழுவதும் மின்காந்த அலைகள் பாயும்.
தீப தியானம்
ஶ்ரீ சத்ய சாயிபாபா கூறியுள்ள தீப தியான முறையும் சிறப்பான ஒன்று.
ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அதன் மூலம் உங்களிடமிருந்து ஆரம்பித்து உங்கள் உறவினர், நண்பர்கள், சமுதாய மக்கள் என்று அனைவரையும் ஒவ்வொருவராக நினைத்து, அவர்கள் கையில் உள்ள தீபத்தை உங்கள் தீபத்தால் ஒளி ஏற்ற வைப்பதாக நினைத்து, அவர்கள் கையில் உள்ள தீபத்தை உங்கள் தீபத்தால் ஒளி ஏற்ற வைப்பதாகக் கண்களை மூடி மனதில் தியானிப்பது தீப தியான முறை. உங்களிடமிருந்து ஆரம்பமாகும் ஆனந்தம் வெள்ளமாகப் பெருகி உலகெங்கும் பரவும்.
ஆக இப்படி எளிய இனிய வழிகள் இருக்கும்போது ஆனந்தத்திற்கு ஏது குறை? குறை ஒன்றும் இல்லை சீர் கோவிந்தா!!
மஞ்சுளா ரமேஷ் ஆசிரியராகக் கொண்ட சினேகிதி மாத இதழில் 2006, ஜூலை மாதம் வெளியான கட்டுரை
Sixty years ago, I used to attend Sunday Bhajans conducted by Swami Sivananda’s DLS (Divine Life Society) inside the world famous Madurai Meenakshi Temple in Madurai. We used to finish the Bhajan (group singing prayer) with
Sankaraya Sankaraya Sankaraya Mangalam
Sankari manoharaya saswataya Mangalam
(more lines are there)
Today I wanted to repeat it when I finish my Research Notes on VC .
580 slokas in VC (Viveka Chudamani) are a vast resource of Advaita (monism) Vedanta.
It has lot of repetitions which Sankara himself admits.
In Bhagawad Gita , Lord Krishna took the role of a FRIEND and in VC, Sankara took the role of a FATHER.
VC 575. I have today repeatedly revealed to thee, as to one’s own son, this excellent and profound secret, which is the inmost purport of all Vedanta, the crest of the Vedas – considering thee an aspirant after Liberation, purged of the taints of this Dark (Kali) Age, and of a mind free from desires.
xxx
We know that teachers and parents repeat messages so that the listener would never forget them.
Sankara took his Snake/Rope, Pot/sky similes till the end. They are his favourite imageries.
Snake- rope gave us the picture of Maayaa (illusion)
Pot broken- sky merged with sky- meant man’s soul merges with Brahman, the God.
Towards the end he repeated umpteen times his messages: ‘Ekam EvA dviteeyam’ (There is one without two (brahman)
and
‘Brahma satyam, jagat mithya’ “Brahman is the real reality, the world is deceptive”.
513. I am verily that Brahman, the One without a second, which is the support of all, which illumines all things, which has infinite forms, is omnipresent, devoid of multiplicity, eternal, pure, unmoved and absolute.
The reason I wrote this series is , I have made marginal remarks from Tamil poems and Sri Ramakrishna Stories when I first read it in 1994. Normally they are not available in many English commentaries by great scholars.
I missed some more similes, analogies, metaphors such as building castle in air, soldiers, mirage, shade, corpses, cockroach, eclipse, thief, sandal etc in the VC. Hope you read VC in full and enjoy them.
I made more comparisons with Tamil Veda Tirukkural and Bharati Poems which will suit Tamil audience. So I avoided them as well.
Somewhere I read that Sri Ramana Maharishi has chosen ten important slokas/ couplets from the VC. Those who want the gist may read it.
If one reads this or the simplified version –his Bhaja Govindam, that will provide immense knowledge of Vedanta (end of Veda; the conclusion of Vedas).
Please go to wisdomlib.com for anything in Sanskrit and go to Project Madurai websites for any poem in Tamil. They are free and No Cookies.
–subham—
Tags- VC 43, Sankaraya Mangalam, last part, Father, Sankara.