கனக துர்க்கை அம்மன் கோவில், விஜயவாடா (Post No.13,401)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,401

Date uploaded in London – 2 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆந்திர மாநிலத்தில் உள்ள 108 புகழ்பெற்ற கோவில்கள் – 2

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா  நகரத்தின் காவல் தெய்வம் கனக துர்க்கை ஆவார். ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்களை கவர்ந்திழுக்கும் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். சபரிமலை ஐயப்பன் கோவில் போலவே இங்கும் பக்கதர்கள் தீட்சை மாலை  பெற்று மீண்டும் கோவிலுக்கு வந்து தீட்சை விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள் .

இந்தக் கோவில் கிருஷ்ணா நதியின் கரையில், இந்திர நீலாத்ரி/  கீலாத்ரி குன்றின் மீது அமைந்துள்ளது. கோவிலை அடைய 260 படிகள் ஏறவேண்டும். மூலஸ்தானத்தின் மேல் தங்கக் கூரை போடப்பட்டுள்ளது. 

எல்லா இந்துப் பண்டிகை நாளும் கொண்டாடப்பட்டாலும் நவராத்ரியும், முடிவு தினமான தசராவும் வெகு விமரிசையாக நடைபெறும். தசராவின் போது  துர்கையம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதருவார்.. கூட்டம் அதிகம் வருவதால் தொலைவிலிருந்து பார்க்க வசதியும் செய்து வருகிறார்கள்.

இங்குள்ள சிவலிங்கத்தை அகஸ்திய முனிவர் ஸ்தாபித்ததாக ஐதீகம் இதனால் இந்த இடம் மல்லேஸ்வரம் என்ற  பெயர்பெற்றது.        இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது; ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டையான இடம்

கீலா என்ற அசுரன், அம்மனை வேண்டி தவம் செய்து வரம்பெற்றதால் கீலாத்ரி என்று இந்தக் குன்று பெயர்பெற்றது.

மகிஷன் என்ற அசுரனை வதம் செய்ததால் மகிஷாசுர மர்த்தினி  என்று அழைக்கப்படுகிறாள் அந்தக் கோலத்தில் இங்கு வாசம் செய்கிறாள் கனக துர்கா  தேவியின் எட்டு கைகளில் எட்டு ஆயதங்கள் உள்ளன 4 அடி உயர அம்மன்.

ஒரு காலத்தில் கனக (தங்கம்) மழை பெய்ய வைத்ததால் கனக துர்க்கை என்று பெயர் ஏற்பட்டது.

நவராத்ரி காலத்தில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு  மகாலெட்சுமி, சரஸ்வதி, லலிதா திரிபுர சுந்தரி, மகிஷாசுர மர்த்தனி, துர்கா தேவி, ராஜா ராஜேஸ்வரி அலங்காரங்கள் செய்யப்படும் விஜயதசமி/ தசரா நாளன்று அம்மனை அன்னப்  பறவை  வடிவிலான படகில் வைத்து கிருஷ்ணா நதியில் தெப்போத்சவம் நடத்துகிறார்கள்.

பவானி தீட்சை

சபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டிக்கொண்டு , விரதம் இருந்து , யாத்திரை செய்து, தரிசனம் செய்வது போல ஆந்திர மக்கள் பவானி தீட்ச்சை பெற்று கனக துர்க்கையை தரிசிக்கின்றனர் 21 அல்லது 41 நாட்கள் விரதம் இருந்து சிவப்பு ஆடை அணிந்து யாத்திரை வருகின்றனர்.. கிருஷ்ணா நதியில் குளித்து விட்டு சிவப்பு ஆடை அணிந்து கோவிலுக்குச் சென்று  தீட்சை மாலை  பெறுவார்கள்; விரதம் முடிந்த பின்னர் மீண்டும் கோவிலுக்கு வந்து தீட்சையை முடிக்கிறார்கள். ஐயப்ப பக்தர்கள் போலவே தினமும் குளித்து விரத உணவை மட்டும் உண்டு, பெண்களைத் தொடாமல்  புலனடக்கத்துடன் விரதம் இருப்பது மரபு. பெண்களும் விரதம் இருந்து வருகிறார்கள். பெண்களாக இருந்தால் மாதத் தீட்டு ஏற்படாத 21 நாட்களில் விரதம் இருப்பார்கள். நவம்பர்- டிசம்பர் மாதங்களில் விரதம் எடுக்கிறார்கள்.

கனக துர்க்கை அம்மன் கோவில் விஜயவாடா நகரின் மையத்தில் உள்ளது. பஸ்  நிலையம் அல்லது  ரயில் நிலையத்திலிருந்து நடந்தே செல்லலாம் .இதனருகில் அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில் உள்ளது.

சாகம்பரி உற்சவம்

ஆண்டுதோறும் ஆஷாட மாதத்தில் மூன்று நாள் சாகம்பரி  உற்சவம் நடக்கும் சுக்ல பட்ச திரயோதசி முதல் பெளர்ணமி வரை நடக்கும் அந்த நாட்களில் அம்மன், சாகம்பரி அல்லது வன சங்கரி ரூபத்தை எடுப்பதாக ஐதீகம்; அப்போது நடக்கும் பூஜையால் காய்கறிகள், பயிர்கள் செழித்து வளரும் என்பது நம்பிக்கை; மூன்று நாட்களும் கோவிலை காய்கறிகள் பழங்களால் அலங்கரிப்பர்; தேவியும் பழம், காய்களால் அலங்கரிக்கப்படுவாள் ; இரண்டு லட்சம்பேர் வரை தரிசனத்துக்கு வருகிறார்கள் வறட்சி நீங்கி மழை  பெய்து வளம் பெறுக, மக்கள் சாகம்பரி தேவியை வணங்குகின்றனர்.

சாகம்பரியின் கோவில் ஒன்று உத்தர பிரதேச ஸஹ்ரான்பூரில் இருக்கிறது .

கோவிலில் உள்ள சிவனை பிரம்மா, மல்லிகை மலரால் அர்ச்சனை செய்ததால் அவரை மல்லிகேசா என்று அழைக்கின்றனர். அர்ஜுனனும் இங்கு தவம் செய்ததாக தல புராணம் சொல்லும்.  கோவிலின் நீண்ட வரலாறு மற்றும் பூஜை/ சேவை வசதிகள் எல்லாம் கோவிலின் வெப்சைட்டில் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது Sri Durga Malleswara Swamy Varla Devasthanam, https://kanakadurgamma.org/en-in/about/the-temple-history/the-history

சீனப் பயணி யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பு

1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த சீனப்பயணி யுவான் சுவாங், தனது பயணக் குறிப்புகளில் கனக துர்க்கையம்மன் கோவில் குறித்து எழுதி வைத்துள்ளார். கோவில் அருகே கல்வெட்டுகள் இருந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

–subham–

Tags- ஆந்திர மாநில, புகழ்பெற்ற கோவில்கள்-2, கனக துர்க்கை, அம்மன் கோவில், விஜயவாடா

திருமூலரும் தீர்க்கரேகையும்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை -31 (Post No.13,400)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,400

Date uploaded in London – 2 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Amarnatha Cave in Kashmir; Ice Lingam is appaeraing every year.

LONGITUDE OF FAMOUS SIVA TEMPLES (Nearly on the same line)

75.5041° E AMARNATH அமர்நாத் பனிலிங்கம்

79.6912° E CHIDAMBARAM சிதம்பரம் நடராஜர் கோவில்

79.8394° E PUTTALAM முன்னேஸ்வரம் சிவன் கோவில்

79.0669° E KEDARNATH  கேதார்நாத் சிவன் கோவில்

81.3119° E MOUNT KAILASH கயிலாயம்

XXX

திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 31

இந்தக்கட்டுரை 1990-ம் ஆண்டுகளில் லண்டனிலிருந்து வெளியான மேகம் பத்திரிகையில் என்னால் எழுதப்பட்டது. அந்த மாதப் பத்திரிகையில் எழுதிய 40 கட்டுரைகளை தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள் என்ற தலைப்பில் நாகப்பா பதிப்பகம், சென்னை மூலம்  2009 டிசம்பரில் வெளியிட்டேன். அண்மையில் புஸ்தக .கோ .இன்  மூலம் மீண்டும் வெளியானது. அதில் திருமூலரும் தீர்க்க ரேகையும் என்ற கட்டுரையும் ப்ஞ்சை எரிக்கும் லென்ஸ் பற்றி திருமுலர் என்ற கட்டுரையும் திருமந்திரம் பற்றியது . 1990ம் ஆண்டு கட்டுரை இதோ :

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்

சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ

டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.- 2701

xxx

இடைபிங் கலையிம வானோ டிலங்கை,

நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை

கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்,

படர்வொன்றி யென்றும்  பரமாம்பரமே“- 2708

நாம் வாழும் பூமியை , புவியியல் அறிஞர்கள்,  கற்பனைக் கோடுகளால் பிரிப்பார்கள். பூமியை 360 பாகைகளாகப் பிரிக்கும் நெடுங்கோடுகளை தீர்க்க ரேகை LONGITUDE என்றும் படுக்கைவாட்டில் பிரிக்கும் 180 கோடுகளை அட்ச ரேகை LATITUDE என்றும் பிரிப்பார்கள்.

தீர்க்க ரேகையை 180 கிழக்குக் கோடுகளாகவும் 180 மேற்குக் கோடுகளாகவும் பிரித்து  லண்டன் அருகிலுள்ள கிரீனிச்சில் பூஜ்ய டிகிரியில் துவங்குவதாகச் சொல்லுவார்கள் இதே போல படுக்கைக்கோடுகளை 90 வட கோடுகளாகவும்  ,90 தென்  கோடுகளாகவும்  பிரிக்கிறார்கள். பூமியின் நடுவில் செல்லும் கோட்டை பூமத்திய ரேகை அல்லது நில நடுக்கோடு (Equator) என்று அழைக்கிறோம்.

இவைகளில் அட்ச ரேகைகளை முதல் முதலில் எகிப்திய வான நூல் அறிஞர் டாலமியின் வரைபடத்தில் காண்கிறோம். கி.பி 150-ல் வாழ்ந்தவர் அவர். ஆனால் தீர்க்க ரேகைகளை 18-ஆவது  நூற்றாண்டில்தான்  காண்கிறோம். இதில் வியப்பு என்னவென்றால் இதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருமூலர் இவற்றை அறிந்திருக்கிறார்.

அவர் இரண்டு திருமந்திர பாடல்களில் மேரு, தில்லை (சிதம்பரம்), இலங்கை மூன்றும் ஒரே நேர் கோட்டில்  இருப்பதாகப் பாடுகிறார்.

திருமூலர் 3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று ஒரு ஐதீகம் உண்டு. ஆனால் அவர் எழுதிய திருமந்திர பாடல்களை மொழியியல் ரீதியில் ஆராய்ந்தால் ஏழாவது அல்லது எட்டாவது நூற்றாண்டுCE ) என்றுதான் காலம் கற்பிக்கமுடியும்.. அப்போது இந்தியாவின் வரைபடம் கிடையாது. ஆயினும் மேரு, தில்லை, இலங்கை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை அவர் ஞானக் கண்களால் கண்டிருக்கிறார். ஒருவேளை அந்தக் காலத்தில் ஒலைச் சுவடி அல்லது மரவுரியில் தேசப் படம் இருந்ததோ என்றும் என்ன வேண்டியிருக்கிறது .

திருமந்திரப் பாடல் 2708க்கு சுவாச சாஸ்திர விளக்கமும் உண்டு. அதாவது, மேரு, தில்லை, இலங்கை ஆகிய மூன்றும் மூக்கில் சுவாசம் ஓடும் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகியவற்றைக் குறிக்கும் சொற்கள் என்றும் விளக்குவர் .ஆனால் அவர் இந்தப்பாடலை இரு பொருள் தொனிக்கப்  பாடியிருக்கிறார் என்பது மற்றோர்  திருமந்திரப் பாடலால் தெரிகிறது. அந்தப் பாடலில் இந்த மூன்று சொற்களையும் நிலவியல் ரீதியிலேயே பாடியிருக்கிறார். அடுத்த பாடலில் காவிரி, கன்யாகுமரி, தென் திசை, ஏழு மலைகள் , ஒன்பது தீர்த்தங்கள் பற்றிப்பாடுகிறார்.  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவையும் இலங்கையையும் இணைத்துப் பாடி தமிழர்தம் ஒற்றுமையை உணர்த்திய பெருமையும் திருமூலரையே சாரும்.

Chidambaram= Thillai Temple

இந்திய வரை படத்தை விரித்து வைத்துக் கொண்டு ஒரு நூலையோ குச்சியையோ வைத்து மேரு,சிதம்பரம், இலங்கையை இணைத்தால் அவை, ஏறத்தாழ ஒரே நேர்கோட்டில் இருப்பதைக் காணலாம். இதோ இந்த உண்மையயை  விளக்கும் பாடல்கள்

இடைபிங் கலையிம வானோ டிலங்கை,

நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை

கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்,

படர்வொன்றி யென்றும்  பரமாம்பரமே“

இந்தப் பாட்டில்  இடகலை/ இடது நாசி, பிங்கலை/வலது நாசி என்பன இமயத்திற்கும் இலங்கைக்கும் ஒப்பிடப்படுகின்றன. சுழுமுனை எனப்படும் நாடு நாசி தில்லைக்கு ஒப்பாகும். (நாசி= மூக்கு; இந்த ஸம்ஸ்க்ருத்ச் சொல்லிலிருந்துதான் NOSE நோஸ் என்ற ஆங்கிலச் சொல்பிறந்தது)

2701. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்

சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ

டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.

இடகலை, பிங்கலை,  சுழுமுனை என்ற சுவாசம் பற்றிய சொற்களுக்கு  இமயம், , இலங்கை  சிதம்பரம் என்ற மூன்று இடங்களின் பெயர்களை பயன்பட்டுயத்தியது ஏன்  என்று யோசித்தால் எனது விளக்கம்  நன்றாகப் புரியும்.

மேரு= இமய மலை = புனித மலை

தமிழ் நாட்டில் இந்த தீர்க்கரேகைக் கோடு LONGITUDE தொடும் இடத்தில் மிகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்  கோவில் உள்ளது

இலங்கையில் இந்தக் கோடு தொடும் இடத்தில் மிகப் பழமையான முன்னேஸ்வரம் சிவன் கோவில் உள்ளது

இமயத்தில் இந்தக்கோடு செல்லும் இடங்களில் கயிலாயம், அமர்நாத் பனிலிங்கம் உள்பட பல சிவ ஸ்தலங்கள் இருக்கின்றன.

LONGITUDE OF FAMOUS SIVA TEMPLES

75.5041° E AMARNATH அமர்நாத் பனிலிங்கம்

79.6912° E CHIDAMBARAM சிதம்பரம் நடராஜர் கோவில்

79.8394° E PUTTALAM முன்னேஸ்வரம் சிவன் கோவில்

81.3119° E MOUNT KAILASH கயிலாயம்

(கொழும்பு, நீர்க்கொழும்புக்கு மேல்  புத்தளம் உள்ளதைக் கவனிக்கவும். அதன் அருகில் முன்னேஸ்வரம் சிவன் கோவில் உள்ளது)

XXX

தற்போதைய விளக்கம் 2-7-2024

என்சைக்ளோபீடியா அல்லது பல வெப்சைட்டுகளில் பார்த்தால் டாலமி வரைந்தார், அதற்கு முன் கிரேக்கர்கள் சொன்னார் என்றெல்லாம் படிப்பீர்கள். அவை இன்றைய மேப்/ வரை படம் அல்ல. இந்த இடத்திற்கு அடுத்தார் போல இந்தப் பிரதேசம் அல்லது தேசம் இருக்கும் என்ற குத்து மதிப்பான விவரம்தான். நாம் இன்று பார்க்கும் வரைபடத்தின் மூலம் 1600-ம் ஆண்டு முதல் கிடைக்கிறது ; அதாவது 400 ஆண்டுகளுக்கு முன். திருமூலரோ அதற்கும் முன்னால் வாழ்ந்தார்.

இமயம் எங்கே இருக்கிறது, குமரி எங்கே இருக்கிறது என்பதெல்லாம் 2000 ஆண்டுப் பழமையான சங்க இலக்கியத்திலேயே இருக்கிறது. அதற்கு முந்தைய புராணங்களோ உலகத்தையே ஏழு கண்டங்களாகப் பிரித்திருக்கிறது . அதை இன்றும் பிராமணர்கள் பூஜைக்கு  முந்திய சங்கல்பத்தில் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்ல புராணம் என்பதற்கான பஞ்ச இலக்கணங்களில் ஒன்று வரலாறு இன்னொன்று புவியியல். உலகத்திலேயே இவைகளை சமயப் புத்தகத்தில் சேர்த்தது இந்து மதம் மட்டுமே. உலகில் வேறு எந்த மதப் புஸ்தகத்திலும் வரலாற்றையும் பூகோளத்தையும் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்று சொல்லவில்லை. இந்து மத்தில் எல்லா புராணங்களிலும் இவை இருக்கும்.  அந்தக் காலத்திலேயே  நாம் வரலாறு , புவியியல் அறிவு பற்றி சிந்தித்ததை இது காட்டுகிறது

கங்கை கோதாவரி காவிரி பற்றி ஒரே பாடலில் அப்பர் பாடுகிறார். இடையே உள்ள தூரம் 700 காதம் என்று கல்வெட்டு கணக்கைக் கூட சொல்கிறது !

XXXX

பழைய உரை  (எனது விளக்கத்திலிருந்து மாறுபட்டது)

2701. மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூருமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்

சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ

டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே.

2747: Siva’s Spheres of Dance Within

The central spinal column that is Meru

The Nadis, Ida (Left) and Pingala (Right),

The Jiva’s delta-shaped Muladhara

The Sushumna Cavity that is unto Tillai Forest

Where the cool (southerly) breeze from Mount Malaya wafts

All these alike are Siva’s Spheres of Dance.

(ப. இ.) அண்டத்தின் நடுவாகப் பொன்மலையாகிய மேரு விளங்குகின்றது. இதுபோல் பிண்டமாகிய உடம்பகத்து நடுநாடி விளங்குகின்றது. நடுநாடியினைச் சுழுமுனை என்ப. மேருவினை நிலத்தின் நடுக்கோடு என்ப. நடுக்கோட்டின் வடபாலும் தென்பாலுமுள்ள கோடுகளை வழிக்கோடுகள் என்ப. அதுபோல் உடம்பகத்து இடப்பால் நாடி வலப்பால் நாடி என்பன உள்ளன. இடப்பால் நாடி இடைகலை எனவும் வலப்பால் நாடி பிங்கலை எனவும் கூறப்படும். சொல்லப்படும் இவ் வான வெளியில் நடுக்கோட்டின் நிலையினை இலங்கை எனக் கூறுப. இவ் விலங்கைக் கோட்டுடன் தில்லைத் திருச்சிற்றம்பலக்கோடும் பொருந்தியிருக்கின்றது. தில்லைக்கும் பொதியின் மலைக்கும் ஊடாகச் செல்லும் நாடி நடுநாடியாகும். இவையே தென்னாட்டுச் சிவபூமியாகும். இம் முறை சிறப்பு முறையாகும். பொதுமுறையான் நோக்கும் வழி இலங்கைக்கும் பொன்மலைக்கும் நடுவின்கண் உள்ளது தில்லை. இவ் விரண்டற்கும் இடைப்பட்டது சிவபூமியாகும். திருத்தொண்டர் புராணத்துள் ‘மாதவஞ் செய் தென்றிசையின்’ மாண்புரைக்குங்கால் பெரும்பற்றப் புலியூர், திருஆரூர், திருக்காஞ்சி, திருவையாறு, திருத்தோணிபுரம் முதலிய சிவ வழிபாட்டிடங்கள் பல என அருளியதூஉங் காண்க.

(அ. சி.) மேரு நடுநாடி – அண்டத்துள் நடுரேகையும் (Equator), பிண்டத்துள் சுழுமுனையும். அண்டத்துள் இதன் வட அயன வரை

களும் பிண்டத்துள் இடைகலை பிங்கலை நாடிகளுமாகும். இலங்கைக் குறியுறும் – இலங்கையில் மேருவின் குறியைப் பார்க்கலாம். (இதனால் மேருமலை திருமூலர் காலத்திலேயே அழிவெய்திவிட்டது என்பது போதருகின்றது.) மேரு – சுமேரு – குமேரு – என மூன்றாம். மேரு – பூமத்தியரேகையும் – பூமியின் அச்சரேகையும் கூடும் இடம்; அதுதான் இலங்கை. சுமேரு -வடதுருவம் (N. pole). குமேரு – தென்துருவம் (S. pole). தில்லைவனம் – மலயம் இவை பூமியின் நடுநாடி (Axis) யில் இருக்கின்றன என்பதை இம் மந்திரம் குறிக்கின்றது.

XXXX

“இடைபிங் கலையிம வானோ டிலங்கை, நடுநின்ற மேரு

                                   நடுவாஞ் சுழுனை

கடவுந் திலைவனங் கைகண்ட மூலம், படர்வொன்றி யென்றும்

                                     பரமாம்பரமே

2754: Pervasive Dance in the Mystic Centers

Idakalai,* Pingalai,*

The delta-shaped Muladhara

The Central spinal column Meru,

Where (Kundalini) Sakti is

The Sushumna cavity within

That is unto the Tillai Forest

-In all these the Primal One pervaded,

He that is Paraparam.

அடுத்த பாட்டிலேயே திருமூலர் உண்மையான புவி இயல் பற்றிச் சொல்வதைக் கவனிக்கவும்

ஈறான கன்னி குமரியே காவிரி

வேறாம் நவதீர்த்தம் மிக்குள்ள வெற்புஏழுள்

பேறான வேதா கமமே பிறத்தலான்

மாறாத தென்திசை வையகம் சுத்தமே. 34

                2755: South the Holy Land

At the Land’s End is KanyaKumari;

And then the Kaveri

And other holy waters

The nine “theerthas” comprise;

And the seven sacred hills too;

In that land are born the Veda-Agamas;

Thus blessed,

The South is the Holy Land indeed.

—SUBHAM—

TAGS-திருமூலர், தீர்க்கரேகை, ஒரே கோட்டில் , சிவன் கோவில்கள், மேரு, இலங்கை, சிதம்பரம் , திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 31

மாற்றி யோசிக்க வழியைக் கூறிய எட்வர்ட் டி போனோ! – 2 (Post No.13,399)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.399

Date uploaded in London – 2 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 19-6-24 இதழில் வெளியான கட்டுரை.இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது

மாற்றி யோசிக்க வழியைக் கூறிய எட்வர்ட் டி போனோ! – 2

ச. நாகராஜன்

லேடரல் திங்கிங் (பக்கவாட்டு சிந்தனை)

பக்கவாட்டுச் சிந்தனை எனப்படும் லேடரல் திங்கிங் என்ற புதிய சிந்தனா உத்தியைக் கண்டுபிடித்து அதை உலகமெங்கும் பரப்ப ஆரம்பித்தார் இவர்.

1967-ம் ஆண்டு தனது முதல் நூலான ’தி யூஸ் ஆஃப் லேடரல் திங்கிங்’ என்ற நூலை அவர் வெளியிட்டார். சிறிது காலத்திலேயே பிரபலமான அவரது புதிய சிந்தனா முறையால் சைமன்ஸ், நோகியா. ஷெல் உள்ளிட்ட பன்னாட்டு உலக நிறுவனங்கள் அவரை அழைத்து இதில் பயிற்சியைத் தருமாறு வேண்டின.. 

பிரிட்டானிய ஏர்வேஸ். ஆப்பிள் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களில் உள்ளோருக்கு இதில் பயிற்சியும் தர ஆரம்பித்தார்.

இங்கிலாந்து, ஜப்பான், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளில் இவர் அழைக்கப்பட்டார். 1982-ல் பிபிசியில் ஒளிபரப்பான இவரது நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

எதையும் புதிய கோணத்தில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்தால் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம் என்பது இவரது கொள்கை.

லேடர்ல் திங்கிங் பற்றிய இவரது நூல் பல லட்சம் பிரதிகள் விற்பனை ஆயிற்று. 46க்கும் மேற்பட்ட மொழிகளில் இது மொழி பெயர்க்கப்பட்டது, 85க்கும் மேற்பட்ட இவரது நூல்கள், முன்னேறத் துடிக்கும் அனைவரும் நாடும் நூல்களாக அமைந்தன.

மனித குலத்தின் சிந்தனா போக்கை உருவாக்கிய 250 பேரில் இவரும் ஒருவராகக் கருதப்படுகிறார்.

திட்டத்தின் கருவிகள்

லேடரல் திங்கிங் என்ற புதிய சிந்தனா முறைக்கு சிந்திக்கும் வழிமுறைக்கான கருவிகள் பல உள்ளன. அவற்றைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்:-

உங்களின் எண்ணத்தால்திட்டத்தால்முடிவால் ஏற்படப் போகும் குறுகிய கால நீண்ட கால விளைவுகள் என்ன?

உங்கள் எண்ணத்தின் அல்லது திட்டத்தின் நல்ல விளைவுகள்தீய விளைவுகள் அல்லது சுவையான நிகழ்வுகள் எதாக இருக்கும்?

இந்த திட்டத்தின்  எல்லை எதுஇதை அமுல்படுத்த வசதியாக இருக்கும் சின்ன சின்ன அம்சங்களும் கால அளவும் என்ன?

இந்த திட்டத்தால், செயலால், முடிவால் என்னென்ன நேரலாம்முழுவதும் அலசிப் பாருங்கள்

இந்தத் திட்டத்தின் நோக்கம்குறிக்கோள் என்னஇது ஏன் முக்கியமாக இருக்கிறது?

இதை நிறைவேற்ற மாற்று ஏற்பாடுகள்திட்டங்கள்விருப்பத் தேர்வுகள் உண்டா?

இதைப் பற்றிய மற்றவர்களின் கருத்துபார்வை என்னஇதை எப்படி அவர்கள் ஏற்கக் கூடிய விதத்தில் விளக்க முடியும்?

இதில் உள்ள மிக மிக முக்கியமான மதிப்புள்ள விஷயங்கள் யாவை?

இதை செயலாக்குவதில் முதலில் செய்ய வேண்டியவை, அடுத்து செய்யவேண்டியவை என்ற பட்டியல் ரெடியா?

இந்தத் திட்டத்தின் வடிவமைப்பு, , இதன் விளைவுசெய்யப்படும் முறைசெயல் திட்டம் ஆகியவை தயாராக இருக்கிறதா?

இப்படி முதலில் பக்கவாட்டுச் சிந்தனை கருவிகள் எனப்படும் இந்தக் கேள்விகளுக்கான பதிலை தயார் செய்யுங்கள். பிரச்சினை சுமுகமாக முடியும்!

புதிய குறியீட்டு மொழி உருவாக்கம்

2000-ம் ஆண்டில் இப்போதுள்ள மொழிகள் ஒரு விஷயத்தைச் சரியாகச் சொல்லும் விதத்தில் வார்த்தைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் ஆகவே குறியூட்டு வார்த்தைகள் கொண்ட ஒரு மொழியைத் தான் உருவாக்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘தி எட்வர்ட் டி போனோ கோட் புக்’ என்ற இவரது புதிய புத்தகம் உலகில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அது என்ன குறியீட்டு மொழி?

எடுத்துக்காட்டாக டி போனாவின் 6/2 என்பதைச் சொன்னால் அது, “நீ எனது கருத்தின் பார்வையை எனக்குக் கொடு. நான் உனது கருத்தின் பார்வையை உனக்குக் கொடுக்கிறேன்” என்று பொருளாகும்இப்படி ஒரு புதிய மொழியை அவர் உருவாக்கினார்.

தனது வாழ்நாளில் ‘கவுன்ஸில் ஆஃப் யங் எண்டர்பிரை யூரோப்’ என்ற நிறுவனத்தை நிறுவி பதினைந்து லட்சம் இளைஞர்களுக்கு ஐரோப்பா, இஸ்ரேல், ரஷியா உள்ளிட்ட நாடுகளில் சிறிய தொழிலை ஆரம்பிக்க இவர் ஊக்குவித்தார்.

புதிய சிந்தனா முறையால் உலக நாடுகளுக்கு இடையே நிலவி வரும் சச்சரவுகளைப் போக்கிக் கொள்ளலாம் என்பது இவரது ஆக்கபூர்வமான எண்ணமாக இருந்தது.

புதிய சிந்தனா முறைக்கான உலக மையத்தை (தி வோர்ல்ட் செண்டர் ஃபார் நியூ திங்கிங்) இவர் மால்டாவில் நிறுவினார்.

குடும்பம்

டி போனோ 1971-ல் ஜோஸபைன் ஹால் ஒய்ட் என்பவரை மணந்தார். இரு மகன்கள் பிறந்தனர். பின்னால் தனது மனைவியை விவாகரத்து செய்தார். அவர் மறைந்த பிறகு அவரது உயிலில் இன்னும் ஒரு மகனின் பெயரும் ஒரு மகளின் பெயரும் சொத்துக்கு வாரிசுகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

மறைவு

டி போனோ தனது 88-ம் வயதில் 2021 ஜூன் 9-ம் நாளன்று இயற்கை எய்தினார். மால்டாவில் மெடினா என்ற இடத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

டி போனோவின் அறிவுரைகள்

பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஆக்கபூர்வமான சிந்தனையை வளர்க்கவும் ஏராளமான அறிவுரைகளை டி போனோ வழங்கியுள்ளார்.

அவரது கூற்றுகளில் சில:

படைப்பாற்றல் சிந்தனை என்பது ஒரு திறமை அல்ல, அது வளர்க்கப்படக்கூடிய ஒரு சாமர்த்தியம் தான்!

படைப்பாற்றல் என்பது சம்பிரதாயமான வழிகளை உடைத்து வித்தியாசமான வழியில் ஒரு விஷயத்தைப் பார்ப்பது தான்!

மனம் எதைப் பார்க்கத் தயாராக இருக்கிறதோ அதைத் தான் பார்க்கும்!

நுண்ணறிவு என்பது பிறப்புடன் வருவது. சிந்திப்பது என்பது கற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒரு திறமை!

புதிய சிந்தனா முறையை மேற்கொள்வோமா – டி போனோவுக்கு மானசீகமாக நன்றி தெரிவித்து விட்டு!

***

ஆந்திரத்தில் உள்ள 108 புகழ்பெற்ற கோவில்கள் -1 (Post No.13,398)

ஆந்திரத்தில் உள்ள 108 புகழ்பெற்ற கோவில்கள் -1 (Post No.13,398)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,398

Date uploaded in London – 1 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Tirupati Temple with Modi and Andhra CM Jagan Mohan Reddy

கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம், இலங்கை ஆகிய பகுதிகளில் உள்ள 108 முக்கியக் கோவில்கள் பற்றி நான் எழுதிய நான்கு புஸ்தகங்களுக்கும்  நல்ல வரவேற்பு கிடைத்ததால் ஆந்திரம் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள 108 முக்கிய கோவில்கள் பற்றி எழுதவும் ஆசை பிறந்தது . ஆந்திரம் என்றவுடனே நமக்கு நினைவுக்கு வருவது திருப்பதி பாலாஜி/ வெங்கடாசலபதி கோவிலும் காளஹஸ்திஸ்ரீசைலம் சிவன் கோவில்களும்தான். இவை தமிழ் நாட்டின் எல்லையை ஒட்டியவை. ஆனால் வட கோடி வரை எவ்வளவோ ஸ்தலங்கள் இருக்கின்றன. பெரும்பாலான வற்றைத் தமிழர்கள் அறியார் .

நான் மந்த்ராலயம் வரை சென்று வந்தேன். அதைத் தாண்டி மஹாராஷ்டிரம், பக்கத்து மாநிலமான கர்நாடகக் கோவில்களையும் தரிசித்து வந்தேன். இந்தியாவிலுள்ள இரண்டு லட்சம் கோவில்களையும் தரிசிக்க நூறு முறையாவது பிறக்க வேண்டும். இதுவரை நான், தென் குமரி முதல்  வட இமய ரிஷிகேஷ் -ஹரித்வார் வரை சென்றதே பெரும் பாக்கியம். இது ஒரு புறமிருக்க சென்ற ஆண்டு (2023) இலங்கையிலுள்ள கதிர்காமம், திருகோணமலை முதலிய தலங்களையும் தரிசிக்கும் பெரும்பேறும் பெற்றேன் . யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று சொல்லி ஆந்திர- தெலிங்கனா மாநில பயணத்தைத் தொடர்வோம் .

தெலுங்கானா அல்லது தெலிங்கனா என்பது பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (சங்கராசார்யார் 1894-1994) சொன்ன சுவையான விஷயத்தை முதலில் காண்போம் இதன் உண்மையான பெயர் த்ரி லிங்க தேசம். அது மருவி தெலுங்கானா ஆனது. இந்த தேசத்து பிராமணர்கள் வடக்கில் சென்றவுடன் அவர்கள் தில்லான், தில்லோன் என்று அழைக்கப்பட்டனர். பிரபல அரசியல் வாதிகள்,கிரிக்கெட் வீரர்களின் பெயர்களில் இதைக் காணலாம். த்ரிலிங்க தலங்கள் ஸ்ரீசைலம், காளேஸ்வரம் , திராஷாராமம் ஆகிய சிவன் கோவில்கள் ஆகும்.

Telangana CM Revanth Reddy with wife Geetha (Cong.Party)

ஆந்திரத்தின் புகழோ ரிக் வேத காலத்திலேயே துவங்கிவிட்டது ரிக்வேதத்தின் ஐதரேய பிராமணத்தில் ஆந்திரம் குறிப்பிடப்படுகிறது. தமிழில் மிகப்பழைய நூல்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வேங்கட மலையை தமிழ் நாட்டின் வட எல்லையாக குறிப்பிடுகின்றன. மெளரிய மன்னர்களும் தெற்குப் பகுதியை ஆந்திர என்று சுட்டிக் காட்டுகின்றனர் .

வடவேங்கடம் (TIRUPATI) தென்குமரி

ஆயிடைத்

தமிழ்கூறு நல்லுலகத்து–(தொல்காப்பியம், சிறப்புப்பாயிரம்:

****

நெடியோன் குன்றமும் (TIRUPATI-TIRUMALAI) தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு– –சிலப்பதிகாரம்,வேனிற்காதை:1-2

****

இப்போது ஆந்திர மாநிலத்தை ஆந்திரம்- தெலுங்கானா ( 2014) என்று பிரித்தவுடன் எந்த க்ஷேத்திரம் /தலம் எந்த மாநிலம் என்ற குழப்பமும் ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் பழைய தல யாத்திரை நூல்களில் எல்லா இடங்களும் ஆந்திர மாநிலம் என்றே குறிப்பிடப்படும்.

கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா புண்ய நதிகள் பாயும் புண்ய பிரதேசம் இது. கரை தோறும் புனிதக் கோவில்கள் எழும்பியுள்ளன.

கப்பலோட்டிய சாதவாகன மன்னர்கள் மூலம் தென்கிழக்காசிய நாடுகளில் இந்து சமயம் பரவ வித்திட்ட புண்ய பூமி இது. அவர்கள்  உதவியுடன்தான் தமிழ் மன்னர்கள் இமயத்தில் கொடி நாட்டினர் என்பதை சிலப்பதிகாரம் நமக்குச் சொல்கிறது.

XXXX

Modi Ji in Tirupati Balaji temple

ஆந்திர மாநில ஸ்தலங்கள்

சங்கமேசுவரம், யாகந்தி கோவில், கபில தீர்த்தம், சுருட்டப்பள்ளி பள்ளி கொண்டீசுவரர் கோவில், திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில், ராமகிரி வாலீசுவரர் கோயில்,பீமாவரம் சிவன் கோவில்

புங்கனூர் சிவன் கோயில், சிம்மாச்சலம் திரிபுராந்தகேசுவரர் கோயில், பஞ்சாராம ஸ்தலங்கள், லேபட்சி, வீரபத்திரன் கோவில் ஆகியன ஆந்திர பகுதியில் உள்ள முக்கிய சிவன் கோவில்கள் ஆகும்.

திருப்பதி பாலாஜி/ வெங்கடாசலபதி கோவில்.

திருச்சானூர் பத்மாவதி கோவில் (Padmavathi Temple) அல்லது அலர்மேல் மங்கை கோயில்

பஞ்சாராம ஸ்தலங்கள்–அமராராமம் , குமராராமம், திராஷாராமம், சோமாராமம், ஷிராராமம்

ஆந்திரத்தில் விஜயவாடா அருகில் குன்றிலுள்ள கனக துர்கா கோவில் மிகவும் பிரசித்தமானது

அஹோபிலத்தில் புகழ்பெற்ற நரசிம்ம சுவாமி கோவில் இருக்கிறது இரண்டு மூன்று  நாட்கள் தங்கினால் நவ நரசிம்மர்களையும் ஏழு கோவில்களில் தரிசிக்கலாம்

மந்த்ராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் சமாதி உள்ளது; அருகில் நிறைய கோவில்களும் இருக்கின்றன

ஹைதராபாத்தில் ஸ்ரீ ராமானுஜரின் சமத்துவ சிலை அண்மையில் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டுள்ளது

xxxx

Congress partty CM Revantha Reddy with his wife Geetha in Yadagiri Narasimha Swami Temple

தெலங்கானா மாநில ஸ்தலங்கள்

யதுகிரிக்கோட்டை லெட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் ஆலம்பூர் நவப்பிரம்ம கோவில்கள் அம்மாபள்ளி ராமச்சந்திர சுவாமி கோவில், வார்கல் சரஸ்வதி கோவில், பனகல் சாயா சோமேஸ்வரர் கோவில், ஸ்ரீ லலிதா சோமேஸ்வரர் கோவில், நாகுனுர் கோட்டை-கோவில், ஆகியன தெலுங்கானாவில் முக்கியமானவை.

மேல் விவரம்

பத்ராசலம் பத்ராசலம் ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோவில்,

ஐதராபாத் -செகந்திராபாத்  இரட்டை நகரத்தில் சங்கி கோவில்,

பிர்லா மந்திர் –  வெங்கடேசுவரரின் (திருமால்) பளிங்குக்கல்லாலான திருக்கோயில்.உச்சயினி மகாகாளிகோவில்  முக்கியமானவை

பீச்சுப்பள்ளி – (அனுமார் கொவில்) மெகபூப்நகர் மாவட்டத்தில் கிருட்டிணா நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்மிக்க தொன்மையான அனுமான் ஆலயம்.

ஆலம்பூர் – மெகபூப்நகர் மாவட்டதில் துங்கபத்ரா- கிருட்டிணா நதிகள் இணையுமிடத்தில் தட்சிண காசி என்று கொண்டாடப்படும், பரமேசுவரர் மற்றும் சோகுலாம்பா தெய்வங்கள் கோவில் கொண்ட தலம்.

வாரங்கல் பத்ரகாளி (ரௌதிர தேவி) கோவில் மற்றும் ஆயிரங்கால் மண்டபம்

வாரங்கல்- ராமப்பா கோவில்

பாசரா -கலைமகள் /சரஸ்வதி கோவில்

அனந்தகிரி காடு – அனந்தபத்மநாபர் கோவில்

மேதக்: அழகான தேவாலயம் மற்றும் கோட்டை

பத்ராசலம்: கோதாவரிக்கரையில் அமைந்த புகழ்பெற்ற இராமர் கோவில். பக்த ராமதாசர்  வழிபட்ட கோவில்.

யாதகிரிகுட்டா: திருமகள், நரசிங்கமர் (லட்சுமி நரசிம்மர்) சிறு குன்று. திருப்பதிக்கு ஒப்பான புகழ் மிக்க தெலங்காணா கோயில்.

காளேசுவரம்: ஆந்திர-மராட்டிய மாநிலங்கள் எல்லையில் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் மிக சிறப்புற்ற காளேசுவர முக்தீசுவர சுவாமி எனப்படும் சிவன் கோயில்; இக்கோவிலின் கருவறை மையத்தில் சிவனுக்கு (காளேசுவரர்) ஒரு லிங்கமும், எமனுக்கு (முக்தீசுவரர்) மற்றொரு லிங்கமுமாக இரண்டு லிங்கங்கள் இருக்கின்றன

நாகுனுர் கோட்டை: கரீம் நகர் பட்டணத்திலிருந்து 8 கி.மீ தூரத்திலுள்ள . கோட்டைக்குள் பல பாழடைந்த கோவில்களின் சிதிலங்கள் காணப்படுகின்றன.ஒரு சிவன் கோவிலின் தூண்களும், தாழ்வாரங்களும் மிக மிக கவர்ச்சிகரமாக உள்ளன. உட்புற பகுதிகளில் உள்ள மேல்மாடங்கள் இசைக்கலைஞர்கள் மிருதங்கம் மற்றும் இதர இசைக்கருவிகளில் இசைப்பதுப் போலவும், ஒயிலான நிலைகளில் பெண்கள் நாட்டியமாடுவதுப் போலவும் வடிவமைத்திருக்கும் சிற்பங்கள் கண்ணுக்குப் பெரும் விருந்து

Former Vice President Vankaiah Naidu with his wife at Balaji temple, Tirupati

Map of Telangana

வேமுலவாடா – கரீம் நகர் பட்டணத்திலிருந்து 38 கி.மீ தொலைவிலுள்ள இந்த ஊரில் சாளுக்கிய மன்னர்களால் CE 750–975 ஆண்டுகளுக்கிடையே கட்டப்பட்ட ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரர்  சுவாமி கோவிலுள்ளது. ஆந்திர பிரதேச மாநிலத்தில் அதிக வருவாய் உள்ள கோவில் நகரங்களில் ஒன்று. இந்த கோவிலின் வளாகத்தினுள் இராமன், இலக்குவணன், இலட்சுமி, கணபதி, பத்மனாபர் போன்ற தெய்வங்களுக்கும் கோவில்களுண்டு. மற்றோரு இடமான திரு பீமேசுவரரின் திருக்கோவில் மிகச் சிறப்புற்றது.

உமா மகேசுவரம் – மெகபூப் நகர் மாவட்டத்தில் மிக அடர்ந்த நல்லமலை காடுகளுக்கிடையே ஒரு உயர்ந்த மலைக்குன்றின்மேல் அமைந்துள்ள சிவபெருமானின் தலம். மல்லிகார்சுன சுவாமி (சிவன்) பிரமராம்பா அம்பாளின்  திருக்கோயில் உள்ளது.  கருவறைக்கு அருகில் பாபநாசனம் என்ற இடத்தில் ஊறும் கிணறு இருக்கிறது

ஒவ்வொரு தலத்தையும் விரிவாகக் காண்போம்

TO BE CONTINUED……………………………………….

Tags- தெலுங்கானா ,ஆந்திரம், கோவில்கள் ,திருப்பதி ஸ்ரீசைலம், அஹோபிலம், பத்ராசலம், காளஹஸ்தி, த்ரி லிங்க , கிருஷ்ணா , கோதாவரி, துங்கபத்ரா

Sangamam UK Annual Meeting, 29 June 2024 at Purley (Post No.13,397)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,397

Date uploaded in London – 1 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Sangamam UK third annual meeting was held on 29th June 2204 at Purley in Greater London area. About 25 active workers attended the meeting. Kalyan and Pravin introduced the organisation for new members and explained the recent activities of the organisation. Sri Prakash ji, active RSS karyakartha from Chennai, spoke for an hour on line and answered the questions raised by the UK Members. Those who couldn’t attend from far off places like Liverpool and Birmingham attended the meeting via zoom.

The program started with small refreshment
and Manju from Liverpool delivered the welcome note and program agenda.
Post welcome note, Dakshin Kshetra Sampark Pramukh Shri Prakash Ji, from Chennai, spoke.

Satish and Chelliya introduced the new members and mentioned recent activities conducted by the
organization. Mothi Sayeeram and Subbu explained the organization’s present state and
future roadmap to everyone. Those who couldn’t attend in person from far-off places like
Liverpool and Birmingham joined the meeting online

Last year Tamil Nadu Governor Sri Ravi Ji  addressed the annual gathering in Reading. This year RSS key Karyakartha from Chennai was the main speaker.

Sri Prakashji , an RSS Dakshin Kshetra Sampark Pramukh from Chennai,i, delivered his speech online from Chennai. He quoted elaborately from the works of Sri Ramakrishna Paramahamsa, Swami Vivekananda and folk tales from Ramayana. He explained the five point resolution passed by RSS for celebrating its centenary . RSS was started by Doctor Ji in 1925 with only 17 people. Now it has spread throughout India and he said just in the past week,  a two day training programme was conducted with 600 youths in Tamil Nadu.

Prakshji explained the RSS  Panch Parivartan program for benefits of the society. The program includes five key points for social transformation namely samajik samrasata, kutumb prabodhan, paryavaran, the insistence on ‘Swa’ and the duties of the citizens.

There is a need for comprehensive and immense efforts to sustain the lively and value-based nature of our family system. Through our day to day behaviour and conduct, we should ensure that our family life works for building character, enriching life-values and strengthening mutual relationships. The family life will be joyous and blissful through dining, praying, celebrating festivals and going on pilgrimage together, the use of mother tongue, insistence on Swadeshi and, nourishing and protecting family and social traditions. Family and Society are complementary to each other. To instil the sense of social responsibility, encouraging donations for social, religious and educational cause and readiness to help the needy as per ability should become the nature of our family.”

Saving water, reviving old values, living the life which Ramayana taught us, contacting and connecting families were explained by Prakashji with stories and anecdotes.

If the electrical connection fails in a house the electrician comes , restores the lost contact and then connects the wires. Then only we get back the bright lights. So, start with contact first and then connect the families through activities, Prakashji emphasized.

xxxx

London Swaminathan , who was invited as a guest speaker, spoke for 20 minutes about attracting new members through new activities.

Pravin, Sangamam organiser, UK introduced London Swaminathan as an author of 120 Tamil and English books and former BBC broadcaster, Dinamani Newspaper Senior Sub Editor and University of London (SOAS) Tamil Teacher where he helped his Professor Dr Stuart Blackburn, erecting Tamil Poet Tiru Valluvar statue donated by Government of Tamil Nadu .


Since the list of suggested activities was circulated to the members, London Swaminathan  briefly explained how successfully they conducted new activities in the past 18 years through four organisations. Now that zoom is available for online activities, lot of things can be done online, he reminded. But he warned not to initiate new activities without knowing the implications. Swaminathan insisted that Mental, Physical and Intellectual capacity along with available resources must be taken into account before starting new programmes. He gave an example of his friend who wanted to become a Mittal or an Ambani or an Adani overnight without any infrastructure. So, one must think small and get it done successfully. Then, one can expand it slowly.

Harini, key member of the Sangamam UK and her husbandMr Venkatesh were the hosts for this meeting. They made fantastic arrangements, provided refreshments and finally ended with dinner. As it was announced as a family gathering, many families came with their children.

The meeting concluded with a vote of thanks by Dr. Varadharajan and a group photo to
commemorate the occasion.

–subham—

Tags Sangamam UK, annual meeting, June 2024, Purley, London Swaminathan, Prakashji

மாற்றி யோசிக்க வழியைக் கூறிய எட்வர்ட் டி போனோ! – 1 (Post.13,396)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.396

Date uploaded in London – 1 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 19-6-24 இதழில் வெளியான கட்டுரை.இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது

மாற்றி யோசிக்க வழியைக் கூறிய எட்வர்ட் டி போனோ! – 1

ச. நாகராஜன்

பிரச்சினைகளும் தீர்வுகளும்

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் அன்றாடம் ஏராளமான பிரச்சினைகள் தோன்றுகின்றன. சிந்திக்கிறோம்; சிலவற்றிற்குத் தீர்வு கிடைக்கிறது. சிலவற்றிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறோம்.

மாற்றி யோசியுங்கள் என்று ஒரு புதிய வழியைக் காண்பிக்கிறார் எட்வர்ட் டி போனோ!

மாற்றி யோசிப்பது என்றால், அது என்ன? எப்படி மாற்றி யோசிப்பது?

இதை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட புதிர்களை முதலில் விடுவியுங்கள்.

முடியாவிட்டால் விடைகளும் கொடுக்கப்பட்டிருக்கிறது! அதைப் பார்த்துக் கொள்ளலாம்.

புதிர் 1

ஒரு பெண்மணிக்கு ஒரே நாளில் ஒரே சமயத்தில் இரு குழந்தைகள் பிறக்கிறது. ஆனால் அவர்கள் இரட்டையர் இல்லை. அப்படி என்றால் இதற்கான விளக்கம் என்ன?

புதிர் 2

வேகமாகச் சென்ற ஒரு கார் விபத்துக்குள்ளாகிறது. அதில் பயணித்த தந்தை உடனே இறந்து விடுகிறார். அபாய நிலையில் இருந்த பையனை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கின்றனர். அறுவைசிகிச்சைக்காக உள்ளே வந்த சர்ஜன், “இந்த ஆபரேஷனை என்னால் செய்ய முடியாது. இவன் எனது மகன்” என்கிறார். இதற்கான விளக்கம் என்ன?

புதிர் 3

அழகிய ராஜகுமாரியை ஏழை ஒருவன் காதலித்தான். அவளை மணம் புரிய ஆசைப்பட்டான். ஆனால் இதை அறிந்து கொண்ட அரசன் கோபப்பட்டான். அவனுக்கு இது பிடிக்கவில்லை. ஆனால் அவன் தன் மக்களிடம் தான் நேர்மை தவறாத ஒருவனாக நடந்து கொள்வதாகக் காண்பிக்க ஆசைப்பட்டான். அரசவையைக் கூட்டிய அரசன் தான் இரு துண்டுச் சீட்டுகளை ஒரு பெட்டியில் போடுவதாகவும் ஒன்றில் வேண்டாம் என்று இருக்கும்,இன்னொன்றில் மணம் புரியலாம் என்று இருக்கும் என்றும் எந்த ஒன்றை அந்த ஏழை எடுக்கிறானோ அதன் படியே முடிவு இருக்கும் என்று சொன்னான்.

பெட்டியில் இரு துண்டுச் சீட்டுகளை அவன் மக்களின் முன்னே போட்டான். ஆனால் அந்த இரண்டிலும் வேண்டாம் என்றே எழுதப்பட்டிருந்தது. இது யாருக்கும் தெரியாது.

ஏழையைக் கூப்பிட்டு ஒரு சீட்டை எடு என்றான் அரசன்.

அரசனின் தந்திரத்தை ஏழை புரிந்து கொண்டான். மாற்றி யோசித்தான். செயல்பட்டான்

ராஜகுமாரியை மணந்து கொண்டான். எப்படி?

புதிர் 1

விடை: அந்தப் பெண்மணிக்கு இரண்டுக்கும் மேல் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. அந்தக் குழந்தைகளை இரட்டையர் என்று சொல்ல முடியாதல்லவா?!

புதிர் 2

விடை: ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்த சர்ஜன் பையனுடைய அம்மா!

புதிர் 3

விடை: தனது மாமனராக ஆகப் போகும் அரசனை இழிந்தவனாகக் காட்டக் கூடாது. அதே சமயம் தான் ராஜகுமாரியையும் மணந்து கொள்ள வேண்டும். இரண்டு சீட்டுகளையும் மக்கள்  முன்னால் காண்பியுங்கள் என்றோ அரசன் நியாயமானவன் இல்லை என்றோ சொன்னால் அதன் பின் விளைவுகள் நன்றாக இருக்காது.

ஆகவே அந்த ஏழை யோசித்தான். பெட்டியில் கையை விட்டு ஒரு சீட்டை எடுத்தான். அதைப் படித்தான். அதை உடனே சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டான்.

“அரசரே! நான் எடுத்த சீட்டில் மணம் புரியலாம் என்று எழுதப்பட்டிருந்தது என்றான்.அடுத்த சீட்டை எடுத்துப்பார்த்து இதை உறுதி செய்து கொள்ளுங்கள், மக்களுக்கும் காட்டுங்கள்” என்றான் அவன்.

இப்போது அரசனுக்கு வேறு வழி இல்லை. அடுத்த சீட்டில் வேண்டாம் என்று இருக்கிறது.

ஆகவே அவன் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டதோடு தனது மருமகனாக வருபவன் ஒரு புத்திசாலி, தன் பெயரைக் காப்பாற்றுவான் என்பதையும் புரிந்து கொண்டான்.

திருமணம் நடந்தது!

மாற்றி யோசியுங்கள்! நிலைமையைச் சமாளியுங்கள்!!

மாற்றி யோசித்து எப்படி ஒரு நிலைமையைச் சமாளிப்பது?

இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு அருமையான சம்பவம் உண்டு.

ஒரு கைதி தனது மனைவிக்கு எழுதும் ஒவ்வொரு கடிதமும் அதிகாரிகளால் நன்கு படிக்கப்பட்டு சென்ஸார் ஆன பின்னே அவளிடம் சேர்க்கப்படுகிறது என்பதை நன்கு அறிவான்.

ஒரு நாள் மனைவியிடமிருந்து அவனுக்கு ஒரு கடிதம் வந்தது. மனைவி, தனக்கு தோட்டத்தில் செடிகளை நட ஆசை என்றும் ஆனால் தோட்டத்தில் உள்ள பூமியை உழுது தோண்டும் மெஷினை தனக்கு இயக்கத் தெரியாதென்றும் எழுதி இருந்தாள். என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பதாகவும் அவள் வருத்தப்பட்டிருந்தாள்.

கைதி உடனே பதில் எழுதினான் மனைவிக்கு :”அன்பே! அப்படி எதுவும் செய்து விடாதே! அந்தத் தோட்டத்தில்தான் நான் திருடிய அத்தனை சொத்தையும் புதைத்து வைத்திருக்கிறென்” என்று!

ஒரே வாரத்தில் மனைவிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது.

திடீரென்று அரசு அதிகாரிகள் அங்கு வந்து நிலத்தை நன்கு தோண்டி எதையோ தேடினர் என்றும் ஒன்றும் காணாமல் திரும்பிப் போய் விட்டனர் என்றும் இப்போது செடிகளை தான் விரும்பியபடி நடப் போவதாகவும் எழுதியிருந்தாள்.

கைதிக்கு மகிழ்ச்சி. மாற்றி யோசித்து ஒரு வழியைக் கண்டுபிடித்து விட்டான் அல்லவா! அதனால்!

இதே போல் ஏராளமான சுவையான மாற்றி யோசிக்கும் வழிகளைக் கூறும் புதிர்களும் நிஜ சம்பவங்களும் உண்டு.

இதை உலகத்திற்கு எடுத்துச் சொன்னவர் தான் எட்வர்ட் டி போனோ

பிறப்பும் இளமையும்

எட்வர்ட் சார்லஸ் ஃபிரான்ஸிஸ் பியூப்ளியஸ் டி போனோ தெற்கு ஐரோப்பாவில் உள்ள மால்டா என்ற தீவில் செயிண்ட் ஜூலியன்ஸ் பே என்ற இடத்தில் 1933-ம் ஆண்டு மே மாதம் 19-ம் நாள் அன்று பிறந்தவர்.

தந்தை ஜோஸப் டீ போனோ ஒரு மருத்துவர். தாய் ஜோஸபைன் அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர். வகுப்பில் படிக்கும் போதெல்லாம் இவரே வகுப்பில் மிகவும் குறைந்த வயதுள்ள மாணவனாக இருப்பார். ஒவ்வொரு வகுப்பாகப் போகாமல் இரண்டு முறை மேல் வகுப்புகளுக்கு படிப்பில் சூரனாக இருந்ததால் தாவினார். பின்னர் . மால்டா பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவர் ஆனார். பின்னர் ஆக்ஸ்போர்டுக்குச் சென்றார். அங்கு உளவியலிலும் மனவியலிலும் தேர்ச்சி பெற்றார். தனது பிஹெச்.டி பட்டத்தைப் கேம்பிரிட்ஜில் பெற்றார்.

To be continued………………

tags- எட்வர்ட் டி போனோ

Welcome to London: Don’t miss Covent Garden

 (Post No.13395)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,395

Date uploaded in London – 30 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

I took some pictures of the posters displaayed for sale in the old shop on 17-5-2024

Welcome to London- Part 5

“Set in London’s West End, Covent Garden is a vibrant, must-see destination for anyone who enjoys shopping, theatre, restaurants, bars, history and culture. Things to see in and around Covent Garden include the London Transport Museum, the Royal Opera House, Somerset House and Covent Garden Market”

Where is it?

Covent Garden tube station (Underground ) is in Piccadilly Line.

One can walk from Holborn, Charing Cross, Leicester Square Tube stations within ten minutes.

xxxx

Covent Garden in London is an old style market place where you find gem stones, fashion jewellery, clothes, artifacts, hand made bags, novel electronic clocks, gift items etc. There are restaurants , street food and musicians and jugglers to watch. Nothing is expensive.

It is similar to Moore Market in  Chennai (which was burnt down in a fire accident.)

I cant forget Covent Garden because I acted in Pygmalion of Bernard Shaw with famous Tamil Actress Radhika. We invited her to London on behalf of BBC Tamilosai to act in POOKKAARI (flower vendor, adapted in tamil by Shankar Anna of BBC Tamil Service. He gave me the main role. For the photo shoot of Radio Drama, BBC took us to Covent Garden. It was an unforgettable experience.

xxxxxxxxx

Story of Pygmalion

Pygmalion was a play written by George Bernard Shaw in 1913. It deals with themes of social class, stereotypes, and appearances vs. reality. It tells the story of Eliza Doolittle, a lower-class girl who sells flowers, and an upper class linguist named Henry Higgins.

Shaw took his title from the ancient Greek legend of the famous sculptor named Pygmalion who could find nothing good in women, and, as a result, he resolved to live out his life unmarried. However, he carved a statue out of ivory that was so beautiful and so perfect that he fell in love with his own creation.

The moral of Pygmalion is that life is too realistic to believe in the fabrication of idealism. For instance, Eliza has been transformed into a duchess yet she is aware that she would be no more to Higgins than a pair of slippers.

xxxxxxx

On the days I felt sleepy during summer lunch time, I used to take a bus from Bush House of BBC World Service and go to Covent Garden to watch the jugglers there. That was 30 years ago.

On 17th May, 2024 I took my brother and his wife to the Covent Garden. They visited London for the first time. It was not changed much. It looked almost same, though I visited it after two decades. We watched a street music player. I was interested in a shop where they were selling old pollsters with golden sayings. (Please see the pictures I took)

xxxxxx

Google says

A shopping and entertainment hub in London’s West End, Covent Garden centres on the elegant, car-free Piazza, home to fashion stores, craft stalls at the Apple Market, and the Royal Opera House. Street entertainers perform by 17th-century St. Paul’s Church, and the London Transport Museum houses vintage vehicles. Upscale restaurants serve European cuisines, and nearby theatres draw crowds for plays and musicals. ― Google

Posters shop

Street Musician

–subham—

Tags- Welcome to London 5, Don’t miss Covent Garden, Pygmalion, Pookkaari, BBC Tamil Service, Shankar anna

திருமந்திரத்தில் ஞானானந்தம், ஞான விளக்கொளி, ஞான நெறி, ஞான மார்க்கம், ஞானக் கூத்து (Post.13,394)

திருமந்திரத்தில் ஞானானந்தம், ஞான விளக்கொளி, ஞான நெறி, ஞான மார்க்கம், ஞானக் கூத்து (Post.13,394)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,394

Date uploaded in London – 30 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

திருமந்திரத்தில் அழகிய சொற்கள்

திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை – 30

திருமந்திரத்தில், 1605, 1640, 1814, 1860, 1858, 2000, 2167, 2277, 2285, 2598, 2677, 2695, 2755, , 2782, 2777, 2807, , 2803,

முந்திய கட்டுரையில் ஞானக்கொழுந்து , ஞான வாள் , ஞானப்பொருள், ஞானம் படர்கின்ற கொம்பு,ஞானத் தலைவன் முதலிய சொற்களை திருமூலர் எப்படிக் கையாளுகிறார் என்று கண்டோம் . இதோ  மேலும் சில ஞானச் சொற்கள் :

இன்னும் நிறைய ஞானச் சொற்கள் உள .

ஞான விளக்கொளி,

1442. சாற்றரி தாகிய தத்துவஞ் சித்தித்தால்

ஆற்றரி தாகிய ஐந்தும் அடங்கிடும்

மேற்றிகழ் ஞானம் விளக்கொளி யாய்நிற்கும்

பாற்பர சாயுச்சிய மாகும் பதியே. 

1442: When This Truth Dawns Then is Union in Siva

When this Truth, beyond words, you perceive

The Siva Tattvas five bend below;

The light of Supreme Jnana dawns,

Illumines the Soul’s path

To the Finite goal

Of Sayujya union in Lord.

xxx

ஞானானந்தம்

2825. எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகி

முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே

இப்பாழும் இன்னாவாறு என்பதில்லா இன்பத்துத்

தற்பரஞா னானந்த தானது வாகுமே. 

2825: In the Seventh Void is Siva-Knowledge-Bliss

All voids as void

As all and nothing,

The three Voids below,

And the three Voids above,

Seeking them,

And knowing not what this Void is like,

In that Supreme Bliss

Is the Tat-Para Jnanananda;

Siva-Knowledge-Bliss

In that He and I one become.

XXXX

ஞான நெறி

1814. மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்

ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை

ஓவற வுட்பூ சனை செய்யில் உத்தமஞ்

சேவடி சேரல் செயலறல் தானே.

 மெய்ப்பரனாகிய சிவபெருமானை அடைதற்குரிய  ஞானம் மேற்பட்டவிடத்துச் செய்யும் வழிபாடு ஞான பூசையாகும். அதுவே  அருச்சனையாகும். இவ் வருச்சனையினை ‘ஞான நூல்தனை, ஓதல் ஓதுவித்தல் நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் , ஈனமிலாப் பொருளதனைச் சிந்தித்தல் ஐந்தும் ஞானபூசை’ என்பர்.  நெஞ்சம் பூசையிடமாகவும், கொப்பூழ் ஓம இடமாகவும், புருவநடு செம்பொருள் காணும் நிலைக்களமாகவும் கொண்டு புரிவது உட்பூசையாகிய அகவழிபாடாகும். இவ் வழிபாட்டில் உறைத்து நிற்போர் தலையாயவராவர்.

1849 Path of Jnana is Supreme Archana

When you abor in the Path of Jnana

That leads unto the Para Supreme,

The Path of Jnana is all Archana;

Great indeed is constant worship within;

To reach the Lord’s Feet is to still actions all.

xxxx

ஞான மார்க்கம்

450. சமையம் பலசுத்தித் தன்செயல் அற்றிடும்

அமையும் விசேடமும் அரன்மந் திரசுத்தி

சமைய நிருவாணங் கலாசுத்தி யாகும்

அமைமன்னு ஞான மார்க்கம்அபிடேகமே. 8

1450: Ordination Rites for the Four Paths

Samaya is the ordination rite for self-surrender in Chariya

Visesha, the rite for incantation of Siva Mantra in Kriya

Nirvana helps Kalas purification in Yoga

And Abhisheka for Grace to reach in Jnana.

xxxx

ஞானானு பூதி

1481. தானவ னாகித் தானைந்தா மலஞ்செற்று

மோனம தாம்மொழிப் பான்முத்த ராவது

மீனமில் ஞானானு பூதியில் இன்பமுந்

தாவை னாயுறலானசன் மார்க்கமே. 5

1481: Sanmarga Leads to Supreme Grace-Bliss

When you scorch Impurities five

And listen to the Voice of Silence

You become a pure Mukta;

And I and You in one merge;

And by the unsullied Grace Jnana grants

You shall joy of the Bliss Divine;

Verily, then by Sanmarga Path

You become He indeed

xxx

ஞான புரந்தரன்

யோகியும் ஞானியும் உத்தம சித்தனும்

யோகியும் ஞான புரந்தரன் ஆவோனும்

மோகம் உறினும் முறைஅமிர்து உண்போனும்

ஆகிய விந்து அழியாத அண்ணலே. 14

வேட்கை யுற்றாலும் பயிற்சியால், விந்துவினை வெளிவிடாது உள்ளடக்கி இன்புறும் நன்மையரும் உளர். அவர்கள் வருமாறு: யோகியும், ஞானியும், தலையாய சித்தனும், தலையாய யோகியும், தலையாய ஞானமுதல்வனும் ஆவர். இந்த ஐந்து பேரும்  எப்போதும் விந்துவினை காக்கும் தலைமையராவர்.

1950 Conserve Sex Energy and Become Heroes

The Yogi, the Jnani, and the Siddha high

The Bhoga Yogi who is yet the king of Jnanis,

All these, though troubled by passions

Yet savour the ambrosia within; (in the Yogic way)

Heroes, all, they are indeed,

Who the Bindu had conserved.

xxxx

ஞானத்தோர்   வேடம்

 புன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை
நன்ஞானத்தோர்வேடம் பூணார் அருள்நண்ணித்
துன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்
பின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே. 2

Perfect Jnanis speak not

They of lowly Jnana in vain assume robes;

Filled with Grace, they of true Jnana covet it not;

The bigots of faiths are of evil Jnana;

The perfect of Jnana speak not.

xxxx

ஞானக் கூத்து

2793. சிவமாதி ஐவர்திண் டாட்டமும் தீரத்

தவமார் பசுபாசம் ஆங்கே தனித்துத்

தவமாம் பரன்எங்கும் தானாக ஆடும்

தவமாம் சிவானந்தத் தோர் ஞானக் கூத்தே. 72

2793: Jnana Dance

The perplexities of the Five Gods

Rudra and the rest to end,

The Jiva bonds standing afar,

In prayer to depart

The Holy Para by Himself dances everywhere;

Holy indeed is the Jnana Dance

That Sivananda Bliss fills.

–SUBHAM—

tags-திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 30, ஞானானந்தம் ஞான  விளக்கொளி ஞான நெறி ஞான மார்க்கம் ஞானக் கூத்து

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-13 (Post No13,393)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,393

Date uploaded in London – 30 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

தாவரவியல் அதிசயங்கள்

சுவீடன் நாட்டு தாவரவியல் விஞ்ஞானி கார்ல் லின்னேயஸ் 

 கார்ல் லின்னேயஸ்     Swedish botanist Carl Linnaeus தாவரங்களை குடும்பம் குடும்பமாகப் பிரித்து தாவரவியல் ஆராய்சசிக்கு வழிவகுத்தார். அவர் இப்படி ஒரு புதிய உத்தியை வகுப்பதற்கு முன்னரே இந்துக்கள் ஆயுர்வேதத்  துறையை உருவாக்கி அவர்கள் பாணியில் தாவரங்களை வகைப்படுத்தினார்.அதிசயம் என்னவென்றால் லின்னேயஸ் பிரிவுப்படி ஆல மரம் , அரச மரம், அத்திமரம் ஆகிய மூன்றும் ஒரே குடும்ப மரங்கள்; மேலும் அதற்குக் கீழ்வரும் உட்பிரிவிலும்  ஒன்று சேர்ந்தே வரும். அதை மோரேசி குடும்பம் , பைகஸ் ஜீனஸ்(Moraceae Family, , Ficus Genus என்று பிரித்தார்கள். இந்த மூன்று மரங்களும் ஒரே ஸ்லோகத்தில் கடவுளின் பெயர்களாக வி.ச.வில் வருகின்றன . மேலும் இவை மூன்றும் இன்றுவரை புனிதமாகவே கருதப்படுகின்றன.

வட சாவித்திரி விரதம் மூலம் ஆலமரம் புனிதம் அடைந்தது. தட்சிணாமூர்த்தி நல்லவருக்கு உபதேசம் செய்ததும் குருக்ஷேத்திரத்தில் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதை உபதேசம் செய்ததும் ஆலமரத்தின் கீழேதான் . சங்க இலக்கியத்தில் ராமன்,  பாலம் கட்ட என்ஜினீயர் நீலனுடன் ஆலோசனை நடத்தியதும் ஆலமரத்தின் கீழேதான்.

ரிக் வேதத்தில் மஹா வ்ருக்ஷம் என்றும் கீழ் நோக்கிய மரம் என்றும் அழைக்கப்பட்டது .

xxx

அரச மரத்தின் புகழ் சிந்து சமவெளி நாகரீகம் காலம் முதல் இன்றுவரை நீடிக்கிறது. புத்தர் இந்தமரத்தின் கீழ் தவம் செய்து ஞானம் அடைந்ததால் இலங்கை வரை இதன்  கிளைகள் எடுத்து செல்லப்பட்டன. பிள்ளையார் கோவில்களில் பெரும்பாலானவை அரச மரம் அல்லது ஆல மரத்தின் கீழ் அமைந்தன. இதை புனித மரம் என்று பெயர் சூட்டினார்கள் . உபநிஷதத்தில் பிப்பலாடன் என்று ரிஷியின் பெயர் கிடைக்கிறது ; இது அரச மரத்தின் பெயர் ஆகும்

Nyagrodha – Ficus indica (Banyan Tree) ந்யக்ரோத /ஆல

Udumbarah-Ficus glomerata உடும்பரா /அத்தி

Asvatthah- Ficus religiosa/ அஸ்வத்த / அரச

விஷ்ணு ஸஹஸ்ரநாம 88ஆவது ஸ்லோகம்

ஸூலபகஸ்  ஸூவ்ரதஸ்  ஸித்தஸ்  ஸத்ருஜிச்சத்ருதாபனஹ

ந் யக்ரோதோ தும்பரோஅ ஸ்வத்தஸ்  சாணூராம்த்ர நி ஷூதனஹ

அரச மரக்குச்சிகளை இன்றும் சமித்து என்ற பெயரில் யாக யக்ஞங்களில் பயன்படுத்துகின்றனர்.

அத்தி மரக்குச்சிகளும் யாகத்தில் பயன்படுகின்றன.

ந்யக்ரோத — நாம எண் 822-  என்ற ஆலமரத்துக்கு சங்கரர் வியாக்கியானம் :- கீழேயுள்ள பிரபஞ்சத்துக்கெல்லாம் மேலா யிருப்பவர் அல்லது தனது மாயையினால் எல்லாப் பிராணிகளையும் கீழே வைத்து மறைப்பவர் .

உதும்பரா – நாம எண்  -823-

ஆகாயத்திற்கு மேம்பட்டவர் ; அன்னம் முதலியவறறால் அனைத்துலகையும் போஷிப்பவர்.

அஸ்வத்த- நாம எண் 824 

எல்லா மரங்களுக்குள்  நான் அரச மரமாய் இருக்கிறேன் என்று கிருஷ்ணர் பகவத் கீதையில் 10-26 சொல்கிறார்.

xxx

திருமூலரும் செப்பும் அதிசயம் 

லின்னேயசுக்கு சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த திருமூலரும் இந்த மூன்று மரங்களையும் ஒரே பாட்டில் வைத்துப் பாடுகிறார். இது நாட்டின் கலாசார ஒற்றுமையைக் காட்டுகிறது மூன்று மரங்களும் புனித மரங்கள் என்பதையும் உறுதி செய்கிறது இதோ திருமந்திர பாடல்

அரசுட னாலத்தி யாகும்அக் காரம்

விரவுகனலில் வியனுரு மாறி

நிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்

உருவம் பிரமன் உயர்குலம் ஆமே.

ஆறாம் தந்திரம்/  3 திருநீறு / திருமந்திரம்

இந்த மரத்தின் குச்சிகள் எரிந்து சாம்பலானவுடன் அதை விபூதியாகப் பயன்படுத்திய செய்தியைத் தருகிறார்.

xxxxxx

 tags- விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள் 13 ,தாவரவியல் அதிசயங்கள்

அனாதையாயிருந்து அமெரிக்க கோடீஸ்வரியானவர் ! – 2 (Post No.13,392)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.392

Date uploaded in London – 30 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 12-6-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.

அனாதையாயிருந்து முதல் ஆப்பிரிக்க அமெரிக்க கோடீஸ்வரியானவர் ! – 2

மேடம் சி ஜே வாக்கர் –

ச.நாகராஜன்

மேடம் வாக்கர் கம்பெனி

மேடம் சி.ஜே.வாக்கர் மானுபாக்ஸரிங் கம்பெனி என்ற நிறுவனத்தை 1910-ல் இண்டியானாபோலிஸில் அவர் தொடங்கி ஷாம்பூ உள்ளிட்ட பொருள்களைத் தயாரித்து விற்க ஆரம்பித்தார்.

1911 முதல் 1919 முடிய ஆயிரக் கணக்கில் அவரிடம் விற்பனைப் பிரதிநிதிகளாக ஏராளமானோர் வேலைக்குச் சேர்ந்தனர். 1917-ல் 20000 பேருக்கு நிறுவனம் பயிற்சி தந்து விட்டது. அவர்கள் அனைவரும் தமக்கென ஒரு யூனிபார்ம் உடையை அணிந்து வலம் வந்தனர். தங்களுடன் கொண்டு சென்ற அழகு சாதனைப் பொருள்களை வீடு வீடாக எடுத்துச் சென்று அங்குள்ள பெண்மணிகளுக்கு ஒப்பனை செய்து அவர்கள் அழகை “எடுத்துக் காட்டினர்”. கேட்க வேண்டுமா, ஆதரவு பெருகியது.

கரிபியன் மற்றும் மத்திய அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று தனது தயாரிப்புகளை அவர் அறிமுகப்படுத்தினார்.

தொழில் வளர்ச்சியில் அவரது மகள் லைலா பெரும் பங்கு வகித்தார். கடுமையான போட்டி அழகு சாதனப் பொருள்களின் தயாரிப்பிலும் விற்பனையிலும் நிலவி வந்தது. அதற்கு ஈடு கொடுத்து தொழிலை தாயும் மகளும் வளர்த்தனர்.

ஆங்காங்கே பியூட்டி பார்லர்களையும் சலூன்களையும் நிறுவி தங்கள் தயாரிப்புகளை மக்களிடையே அவர்கள் விளம்பரப்படுத்தினர்.

சுயமுயற்சியால் பெற்ற வெற்றி

அந்தக் காலத்தில் கறுப்பினப் பெண்கள் அடிமையாக விற்கப்பட்டனர். கொடுமையாக நடத்தப்பட்டனர். ஆபிரகாம் லிங்கன் (1809-1865) இதற்கு ஒருவழியாக  முடிவு கட்டினார். மறுமலர்ச்சி காலமும் வர ஆரம்பித்தது!

1912-ல் நேஷனல் நீக்ரோ பிஸினஸ் லீக் வருடாந்திர விழாவில் அவர் பேசினார்.

“நான் தெற்கில் பஞ்சு உற்பத்தியாகும் நிலப்பகுதியிலிருந்து வந்த பெண்மணி. அதிலிருந்து துணி தோய்ப்பதற்கு எனக்கு பிரமோஷன் கிடைத்தது. அதிலிருந்து பின்னர் சமையலறையில் நுழைந்து சமைப்பதற்கு எனக்கு பிரமோஷன் கிடைத்தது. அதிலிருந்து என்னை நானே தலைமுடி வளர்க்க உதவும் பொருள்களைத் தயாரிப்பதற்கு பிரமோஷன் வாங்கிக் கொண்டேன். என்னுடைய கம்பெனியை என் சொந்த முயற்சியினால் நானே உருவாக்கினேன்.”

உலகின் ஆகப் பெரும் கோடீஸ்வரியாக தனது சொந்த முயற்சியால் ஆன முதல் கறுப்பினப் பெண்மணியான இவர் நியூயார்க்கில் இர்விங்கில் ஒரு மாபெரும் மாளிகையைத் தனக்கென கட்டிக் கொண்டார். 20000 சதுர அடி பரப்பில் 2,50,000 டாலர் செலவில் நியூயார்க்கில் அவர் வீடு கட்டப்பட்டது. அவரது அடுத்த வீட்டில் மிகப் பெரும் கோடீஸ்வரரான ஜான் டி.ராக்பெல்லர் வசித்து வந்தார். அவருக்கு நிகராக தன்னை உயர்த்திக் கொண்டார் வாக்கர்.

சமுதாய சேவை

உலகின் மிகப் பெரும் கோடீஸ்வரியாகி விட்ட அவர் தன் கவனத்தை சமுதாயத்தின் மீது கவனம் செலுத்தினார். இண்டியானாபோலிஸில் ஒய்.எம்.சி.ஏ. கறுப்பினத்தவர்களுக்கான சங்கத்திற்கு ஒரு கட்டிடத்தைக் கட்டிக் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து பல்லாயிரம் டாலர்களை அவர் கல்வி மேம்பாட்டிற்காகவும் இதர மேம்பாடுகளுக்காகவும் கொடுக்க ஆரம்பித்தார்.

தாழ்த்தப்பட்டுக் கிடந்த கறுப்பினப் பெண்மணிகளுக்கு அவர் எப்படி பட்ஜெட்டை தயாரித்து தாங்களே சுயதொழிலை மேற்கொண்டு முன்னேறுவது என்பதைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.

அரசியலில் செல்வாக்கு பெற்ற அவருக்கு புக்கர் டி வாஷிங்டன், மேரி மக்லீட் பெதூன் உள்ளிட்ட பல சமுதாயத் தலைவர்கள் சிறந்த நண்பர்களாக ஆயினர்.

முதல் உலகப்போர் முடிவில் அவர் நீக்ரோ போர் நிவாரண வட்டத்திற்கு தலைவராக இருந்து நீக்ரோக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க ஏற்பாடு செய்தார்.

மறைவு

வாக்கருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. 51-ம் வயதில் ஹைபர் டென்ஷனால் பாதிக்கப்பட்டார். 1919, மே மாதம் 25-ம் நாள் தனது 51-ம் வயதில் அவர் மறைந்தார். அவர் நியூயார்க் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

டாகுமெண்டரி

ரெஜினா டெய்லர் என்பவர் வாக்கரைப் பற்றி 2006-ல் ‘தி ட்ரீம்ஸ் ஆஃப் சாரா ப்ரீட்லவ்’ என்ற ஒரு நாடகத்தை எழுதினார். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்ந்து இவரது வரலாற்றை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சீரியலாகக் காட்டின. அவரை கௌரவித்து தபால் தலை வெளியிடப்பட்டது. அவர் பெயரால் பல விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பெண்களுக்கு அன்புரை

உலகில் வாழும் பெண்மணிகளுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்மணிகளுக்கு மேடம் வாக்கரின் அன்புரை இது தான்:

“எனது வாழ்க்கையையும் எனது வாய்ப்பையும் நானே உருவாக்கிக் கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் அதை நான் உருவாக்கிக் கொண்டேன். வெறுமனே உட்கார்ந்து கொண்டு வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்காதீர்கள். எழுந்திருங்கள். அவற்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்”

—- Subham—