உத்தர காண்டத்தில் பதினேழாவது ஸர்க்கமாக அமைவது, “அனரண்யன் சபித்தல்’ என்ற ஸர்க்கம்.
ராவணன் தனது பலத்தில் செருக்கு கொண்டு மருத்தரை அடக்கி விட்டு ஒவ்வொரு நகரமாகச் சுற்றலானான். எல்லா மன்னர்களிடமும் சென்று, “ஒன்று என்னுடன் போர் புரி அல்லது தோற்றதாக ஒப்புக் கொள்” என்றான். அனைவரும் தோற்றதாகவே ஒப்புக் கொண்டனர்.
அயோத்தி நகரை ஆண்டு வந்த அனரண்யன் என்ற அரசர் மட்டும் ராவணனைத் தன்னுடன் போரிட அழைத்தார். உக்கிரமான போர் நடைபெற்றது. ராவணன் அவரது தலையில் அடிக்க அவர் தேரிலிருந்து கீழே விழுந்தார்.
ராவணன் அவரை பரிகசித்தான். அனரண்யன் ராவணனை நோக்கி, “உன்னால் நான் ஜெயிக்கப்படவில்லை. விதி வசத்தால் நான் மரணமடைகிறேன். நீ ஒரு காரண கருவி தான். இக்ஷ்வாகு வம்சத்தை அவமானம் செய்து விட்டாய்” என்று கூறிவிட்டு, ராவணன் மீது சாபத்தை விடுத்தார்.
யதி தத்தம் யதி ஹுதம் யதி மே சுக்ருதம் தப: |
யதி குப்தா: ப்ரஜா: சம்யத் ததா சத்யம் வசோஸ்து மே ||
மே – எனது
ப்ரஜா: – பிரஜைகள்
சம்யக் – தருமத்திற்கு குறைவின்றி
குப்தா: – பரிபாலிக்கப்பட்டார்கள்
யதி -என்னும் பட்சத்தில்
தப: – தவ பாக்கியமும்
சுக்ருதம் – புண்ணியங்களின் பயனும்
யதி – இருக்கும் பட்சத்தில்
துத்தம் – செய்யப்பட்ட தெய்வ சமர்ப்பணங்களின் பயனும்
15. Hence the seeker after the Reality of the Ātman should take to reasoning, after duly approaching the Guru – who should be the best of the knowers of Brahman, and an ocean of mercy.
XXXX
मेधावी पुरुषो विद्वानुहापोहविचक्षणः । अधिकार्यात्मविद्यायामुक्तलक्षणलक्षितः ॥ १६ ॥
16. An intelligent and learned man skilled in arguing in favour of the Scriptures and in refuting counter-arguments against them – one who has got the above characteristics is the fit recipient of the knowledge of the Ātman.
xxxx
Adi Sankara gives simple advice to novices,
Aspiration and qualification, then time and place are necessary for Success.
Tamil poet Tiru Valluvar also insists time and place but in a different context, i.e. a ruler who wants to win over his enemy; but it is a general advice too.
Next, Sankara advises to get a Guru; there also he says about the Guru’s qualification; Guru must be ocean of mercy. Sankara used a beautiful word for guru ‘DAYAA SINDHU’-Ocean of Mercy.
The third thing he insists is knowledge of arguments and counter arguments. This shows the age of Sankara. He lived in a time when arguments were held in big university centres like Varanasi, Pataliputra and Daksha Sila. Sankara won so many scholars and converted them to his side. We know how he won Mandanamishra and his wife Sarasavaani in a debate. When Buddhism and Jainism had the full support of the rulers, Sankara had a difficult time, yet won great scholars in debates. Moreover, if one argues his case again and again, he becomes firm in his belief.
Tamil poet Valluvar also insisted conviction, time and place.
அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.—483
Is there anything impossible if the right means are adopted and the right hour chosen – Kural 483
Can any work be hard in very fact, If men use fitting means in timely act?- Kural 483
We may compare it with Shakespeare and Napoleon
Impossible is a word to be found only in the dictionary of fools–Napoleon Bonaparte
And Shakespeare agrees
There is a tide in the affairs of men
Which, taken at the flood, leads on the fortune.( Macbeth of Shakespeare)
xxxx
Time and Place from Valluvar’s Tiruk Kural
ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின்.– குறள் 484:
The pendant world’s dominion may be won,
In fitting time and place by action done.- Kural 484
Or
A man, aspiring to conquer the whole world too, will succeed
If he chooses the right time and place- 484
We know how Netaji Subash Chandra Bose and Hitler lost. Both invaded at the wrong time. Weather was against them
எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல்.–குறள் 489:
‘Use the right opportunity’– is a very important advice. If we miss the opportunity, we will regret later. Great Gurus were there even in the recent past. But we didn’t realise their greatness at that time. Now we regret that we did not meet them. When we become older and older we regret how we missed the Himalayan shrines. And now we regret how we missed Bharat Ratnam musicians Bhimsen Joshi and M S Subbulakshmi.
xxx
About aspirations and attempts
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.–குறள் 616:
Effort brings fortune’s sure increase, Its absence brings to nothingness.- Kural 616
xxxx
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். –619
Though fate-divine should make your labour vain; Effort its labour’s sure reward will gain-619
Valluvar believed in Newton’s third law of motion
Sir Isaac Newton’s third law of motion states that “every action has an equal and opposite reaction”.
Even if you involve yourself in bad actions, you will have proportional success. It is a natural law. The harder you try, more successful you will be. We see even bad opposition parties win in an election because of hard work. So an aspirant must try hard to go higher and higher.
In Tamil there is a proverb “if you want to climb palmyra tree one can lift you up to his height, then you must try to go up”.
—subham—
Tags- Viveka Chudamani (VC), aspiration, time, place, Guru, ocean of mercy., Newton, Macbeth
ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்; PART- 9
வா்கல் சரஸ்வதி கோவில் (Wargal Saraswati Temple) , அல்லது ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில், தெலுங்கானாவில் உள்ள சித்திப்பேட்டை என்னும் மாவட்டதில் இருக்கிறது . இந்த சரஸ்வதி கோவிலை காஞ்சி சங்கர மடம் பராமாிக்கிறது. யயவரம் சந்திரசேகர சா்மாவின் முயற்சியால் இது கட்டப்பட்டது.. இங்கு சனீஸ்வரன் (சனைச்சரன் = மந்தமாக நகர்பவன் ) கோவிலும் உள்ளது.
கோவிலானது கிராமத்திற்கு அருகில் உள்ள ஒரு மலையில் அமைந்துள்ளது. அதே மலையடிவாரத்தில் வேறு பல தெய்வங்களின் கோவில்களும் உள்ளன:
ஸ்ரீ லட்சுமி கணபதி கோவில்
ஸ்ரீ வித்யா சரஸ்வதி கோவில்
சனீஸ்வரன் (சனைச்சரன் ) கோவில்
சிவன் கோவில்
ஒரு சில வைஷ்ணவ கோவில்கள், இப்போது முற்றிலுமாக சேதமடைந்து, மூலஸ்தானத்தில் விக்ரகங்கள் ” இல்லாமல் காணப்படுகிறது.
வர்கல் சரஸ்வதி கோவிலில் பல வித சேவைகள் உண்டு . இந்துக்களின் கல்வித் தெய்வம் சரஸ்வதி ஆதலால்
பல குடும்பங்கள் தங்களின் குழந்தைகளுக்கு அக்ஷர அப்பியாசம் செய்வதற்குக் குழந்தைகளை அழைத்து வருகின்றனர்..இதற்கு சிறிய கட்டணம் உண்டு. கோவிலில் பக்தா்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. இந்த நித்ய அன்னதானம்த்துக்கு நன்கொடை கொடுக்கலாம் .
ஒவ்வொரு ஆண்டும் கோவிலில் வசந்த பஞ்சமி மற்றும் சரத் கால நவராத்திாி திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. கோவிலின் ஒரு சிறப்பு வேத பாடசாலை ஆகும்.பல மாணவா்கள் வேதங்களைக் கற்பதற்காக இந்தப் பள்ளிக்கூடத்துக்கு (பாடசாலை) வருகின்றனர்.
கோவில் வரலாறு
ஸதாசிவ ஸமாரம்பாம் சங்கராசார்ய மத்யமாம் |
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம் ||
सदाशिव-समारम्भां शङ्कराचार्य-मध्यमाम्।
अस्मदाचार्य-प्रयन्तां वन्दे गुरु परम्पराम् ॥
Beginning from Lord sadaashiva himself, jagadguru shankaraachaarya in the middle, up until my own guru – I prostrate to the entire guru-paramparaa.
சந்திரசேகர சர்மா என்ற அறிஞரின் முயற்சியில் இந்தக் கோவில் உருவானது . கோவிலைக் கட்டுவதற்கான இடத்தைத் தேடியபோது வார்கல் மலையில் முன்னரே மேலும் பல கோவில்களும், ஒரு குகையில் சிவன் கோவிலும் இருந்ததால் அந்தக் குன்றினையே தேர்ந்தெடுத்தனர்.
1989–ம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு, 1992–ம் ஆண்டில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது .புஷ்பகிரி பீடம் ஸ்ரீ வித்யா நரசிம்ம பாரதி சுவாமிகள் முன்னிலையில் இது நடந்தது. கோவிலைத் துவக்கியவரே இதைக் காஞ்சி காமகோடி சங்கராச்சார்யார் மடத்தின் பராமரிப்பில் விடவேண்டும் என்று 1999–ம் ஆண்டில் கேட்டுக் கொண்டதைக் கோவில் நிர்வாகக் கமிட்டியும் ஏற்றது. மடத்தின் வழிகாட்டுதலின் பேரில் பூஜைகள் நடக்கின்றன.
தெலுங்கானாவில் பாசர் என்னுமிடத்தில் உள்ள புகழ்பெற்ற ஞான சரஸ்வதி ஆலயம் பற்றி முன்னரே கட்டுரை வெளியிட்டோம். அதற்கு அடுத்தபடியாகப் புகழ்பெற்று விளங்கும் சரஸ்வதி கோவில் இது.
சரஸ்வதி கோவில், சனீஸ்வரன் கோவில், வர்கல், தெலுங்கானா
ஹைதராபாத்திலிருந்து 100 கிலோமீ ட்டர் , வாரங்கல்லிலிருந்து 92 100 கிலோமீட்டர் தொலைவில் மாவட்டத் தலை நகர் சித்திப்பேட்டை உள்ளது . சித்திப்பேட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் வார்கல் கோவில் இருக்கிறது
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (43)
ராமாயணத்தில் சாபங்கள் (43) வேதவதீ ராவணனுக்குக் கொடுத்த சாபம்!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் பதினேழாவது ஸர்க்கமாக அமைவது, “வேதவதீ சாபம்’ என்ற ஸர்க்கம்.
ஒரு காலத்தில் ராவணன் பூமண்டலத்தில் திரிந்து கொண்டிருந்த சமயம் இமயமலைச் சாரலில் தவம் புரிந்து கொண்டிருந்த ஒரு அழகிய பெண்ணைக் கண்டான்.
“பெண்ணே, நீ யார்? உனது யௌவனத்திற்கு ஒவ்வாத இதை ஏன் அனுஷ்டிக்கிறாய்?” என்று கேட்டான்.
அந்தப் பெண் அதிதி பூஜையை உரிய படி செய்து விட்டு, “எனது தந்தை குசத்வஜர் என்ற பிரம்ம ரிஷி. பிரஹஸ்பதியின் புதல்வர். அவரது பெண்ணான எனது பெயர் வேதவதீ. என்னை தேவர்கள், கந்தர்வர்கள் உள்ளிட்டோர் மணப்பதற்காகப் பெண் கேட்டு வந்தனர். தந்தையார் விஷ்ணுவையே மருமகனாக மனதில் நிர்ணயித்து விட்டார். அந்தச் சமயத்தில் சம்பு என்ற ராக்ஷஸ அரசன் எனது தந்தையார் தூங்கிக் கொண்டிருந்த போது அவரைக் கொன்றான். இதனால் துக்கமடைந்த எனது தாயார் அவரது உடலுடன் அக்கினியில் பிரவேசித்தாள். நான் என் தந்தையாரின் மனோரதத்தை நிறைவேற்றுவதாக சங்கல்பம் கொண்டு நாராயணனையே மனதால் ஸ்திரமாய் வரித்து வருகிறேன்” என்றாள்.
ராவணன், “ நான் தசக்ரீவன். லங்கா அதிபதி. எனது மனைவியாக நீ ஆகி விடு” என்றான்.
‘இப்படி எல்லாம் உளறாதே’ என்று வேதவதீ சொல்லிக் கொண்டிருக்கும் போது அவளது கூந்தலை ராவணன் உள்ளங்கையால் தொட்டான்.
உடனே கோபம் கொண்ட வேதவதீ அந்தக் கூந்தலை அறுத்தாள். அவளது கையே கத்தியாக ஆனது. அக்கினியை வளர்த்து உடலை அதில் அர்ப்பணிக்க தீர்மானித்த அவள் கோபம் கொண்டு ராவணனைப் பார்த்து இப்படி மொழிந்தாள்:
ஹுதம் ததா – செய்யப்பட்ட தெய்வ சமர்ப்பணங்களின் பலனும்
கிஞ்சித் – கொஞ்சமேனும் இருக்கிறதென்றால்
அயோனிஜா – அயோனிஜையாக – (கர்ப்பவழி இல்லாமல் பிறப்பவளாய்)
தர்மிண: – ஒரு தர்மாத்மாவின்
சாத்வி – அருமை
சுதா – பெண்ணாக
பவேயம் – விளங்குவேன்
உத்தரகாண்டம், பதினேழாவது ஸர்க்கம், ஸ்லோகங்கள் 31 முதல் 34 முடிய
இவ்வாறு சொல்லி விட்டு வேதவதீ அக்னியில் குதித்து விட்டாள்.அப்போது ஆகாயத்திலிருந்து புஷ்பமாரி பொழிந்தது.
அகத்திய முனி இப்படிக் கூறிவிட்டு, “தேவரீர் நீரே விஷ்ணு. சீதையே வேதவதீ” என்று உண்மையை ஶ்ரீ ராமருக்குக் கூறுகிறார்.
யுத்தகாண்டத்தில் வேதவதீயின் இந்த சாபத்தையும் ராவணன் நினைவு கூர்கிறான்.
அறுபதாவது ஸர்க்கம், ஸ்லோகம் 10, 11
சபதோஹம் வேதவத்யா ச யதா ஸா தர்ஷிதா புரா |
சேயம் சீதா மஹாபாகா ஜாதா ஜனகநந்தினீ ||
புரா – முன்னால்
யதா – எப்பொழுது
ஸா – அவள்
தர்ஷிதா – தீண்டப்பட்டாளோ அப்போது
வேதவத்யா – வேதவதீ என்ற அவளால்
அஹம் – நாம்
சபத: – சபிக்கப்பட்டேன்
ஜனக நந்தினி – ஜனகரின் மகளாய்
மஹாபாகா – பேரெழில் வாய்ந்தவளாய்
ஜாதா – பிறந்து
சீதா – சீதா என்ற பெயருடன் விளங்கும்
இயம் – இவள்
ஸா ச – அவளே தான்.
இப்படி ராவணன் தனக்கு முன்னால் கொடுக்கப்பட்ட சாபத்தை யுத்த காண்டத்தில் நினைவு கூர்கிறான். இதை அடுத்து நந்தீஸ்வரர், ரம்பை, வருணனின் மகள் கொடுத்த சாபத்தையும் கூறுகிறான்.
ஸ்வஸ்தித , ஸ்வஸ்திக்ருத் ,ஸ்வஸ்தி, ஸ்வஸ்திபுக்,ஸ்வஸ்திதட்சிண – நாம எண்கள் 901,902, 903,904,905
ஸ்வஸ்தி என்றால் மங்களகரமான ; மொத்தத்தில் எல்லோருக்கும் மங்களத்தை அளிப்பவர் விஷ்ணு. உலகம் முழுதும் ஒரு சின்னம் காணப்படுகிறது அதை ஸ்வஸ்திகா சின்னம் என்ற சம்ஸ்க்ருத மொழிச் சொல்லால் மட்டுமே குறிப்பர். இந்துக்களின் கோவிலிலும் , கடைகளின் சுவரிலும், வடக்கத்திய கல்யாணப் பத்திரிக்கைகளிலும் இன்றும் காணப்படும் இந்தச் சின்னம் கிரேக்க நாட்டுப் பானைகளிலும் சிந்து-சரஸ்வதி நதி தீர நாகரீக முத்திரைகளிலும் 3000 ஆண்டுகளாக காணப்படுகிறது இதைப் பொறிப்பதன் காரணம் மங்களத்தை உண்டாக்கும் என்பதே.
ஆனால் இப்போது இந்த சின்னத்தைக் கண்டால் ஐரோப்பாவே நடுங்குகிறது. போலீசார் உங்களைக் கைது செய்துவிடுவார்கள். ஏனேனில் ஹிட்லர் தனது கொடியில் பயன்படுத்திய சின்னம் இது
ஹிட்லர் ஏன் இந்தக் கொடியில் , ராணுவ உடையில் ஸ்வஸ்திகா சின்னம் போட்டார் என்றால் மாக்ஸ்முல்லர் கும்பல் செய்த பிரசாரம். ஹிட்லர் தனது சுய சரிதையில் ஆரியரைப் புகழ்ந்து எழுதியுள்ளார். அதற்கு காரணம் அதே ஜெர்மனியைச் சேர்ந்த மாக்ஸ் முல்லர் நாம் ஜெர்மானியர்கள்; ரிக் வேதத்தை எழுதிய புலவர்களும் ஆரியர்கள் என்று சாகும் வரை மாக்ஸ் முல்லர் பிரசாரம் செய்ததே! . இன்றும் தப்பித் தவறி ஸ்வஸ்திகா சின்னத்துடன் ஐரோப்பாவுக்கு வந்தால் உங்களுக்கு அடி உதை கிடைப்பது நிச்சயம் . இந்த ஜு லை (2024) மாதம் நடந்த பிரெஞ்சுத் தேர்தலில் ஒரு பெண் வேட்பாளர் சுவஸ்திகா சின்ன தொப்பி அணிந்து இருந்தார். உடனே அவரை அந்தக் கட்சியே போட்டியிலிருந்து அகற்றியது. அதுவும் அவர் எப்போதோ தொப்பி அணிந்து போஸ் கொடுத்ததை எதிர்க் கட்சிகள் கண்டு பிடித்து வெளியிடவே அவர் ‘கதை’ முடிந்தது.
லண்டனில் 18 ஆண்டுகளுக்கு நான் நடத்திய நான்கு சங்கங்களில் ஒன்று உலக இந்து மஹா சங்கம். அதன் சார்பில் ஒரு இன்னிசைக் கச்சேரி ஏற்பாடு செய்தேன் . பெரும்பாலான நிகழ்ச்சி அழைப்பிதழ் பத்திரிகைகளை நானே வீட்டில் கம்பியூட்டரில் டிசைன் செய்து எல்லோருக்கும் ஈ மெயில் அல்லது தபாலில் அனுப்பிவிடுவேன். இந்த முறை இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்றோர் இருவர் டாக்டர்கள். அவர்களுக்கும் சில அழைப்பிதழ்களைக் கொடுத்து உங்கள் வெள்ளைக்கார நண்பர்களையும் அழைத்து வாருங்கள் என்றேன். மறுநாள் மிகப்பதட்டத்தோடு எனக்குப் போன் செய்து, சுவாமிநாதன் முதலில் அழைப்பிதழ்களை எரித்து விடுங்கள். நானே புதிதாக வேண்டுமானாலும் உடனே அச்சடித்துத் தருகிறேன் என்றார் ; எனக்கும் அதிர்ச்சி ! என்னை அறியாமலே ஏதேனும் பெரிய பிழை வந்துவிட்டதோ என்று எண்ணி, காரணத்தை வினவினேன். நீங்கள் கொடுத்த பத்ரிக்கையில் பார்ட்ரில் ஸ்வஸ்திகா சின்னத்தைப் போட்டுவிட்டீர்கள். என் நண்பர்களுக்கு பெரும் அதிர்ச்சி. என்னை உங்கள் அமைப்பு ஹிட்லர் ஆதரவாளர்களா, இது அரசியல் கூட்டமா? அல்லது கச்சேரியா ? என்று கேட்டுவிட்டார்கள் என்று மூச்சுவிடாமல் பேசி முடித்தார். எனக்கு ஒரே சிரிப்பு. ஆனாலும் அதை அடக்கிக்கொண்டு தயவு செய்து அவர்களிடம் சொல்லுங்கள்- இது இந்துக்களின் மங்களச் சின்னம் ; இந்தியா முழுதும் இன்றும் இது புனித சின்னமாகக் கருதப்படுகிறது.ஆ னால் பார்ட்டரை மாற்றி பூக்கள் பார்ட்டரைப் போட்டு ஒரு மணி நேரத்தில் உங்களுக்கு அனுப்புகிறேன். ஆனால் சங்க உறுப்பினர் அனைவருக்கும் இதைத்தான் அனுப்புவேன்; கவலைப்படாதீர்கள் என்றேன்.
எங்கள் வீட்டுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் ராம்நாத் கோயங்கா அனுப்பிய விலை மதிப்புமிக்க கல்யாணப் பத்திரிகையில் கூட ஸ்வஸ்திகா சின்னம்தான் இருந்தது; தமிழர்கள் பிள்ளையார் சுழியைப் பயன்படுத்துவது போல வடக்கத்திய இந்துக்கள் ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்துவர்.
ஜெர்மன் படைகள் இரண்டாம் உலக யுத்தத்துக்கு முன்னர் ஆஸ்திரியாவையும் ஆக்கரமித்திருந்தது . இப்போது பத்து ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கட்டிடம் உயரத்திலிருந்து பாரத்தால் ஸ்வஸ்திகா போல வடிவம் தெரிகிறது என்று அழித்து புதிய கட்டிடம் கட்டினார்கள். ஸ்வஸ்திகாவைக் கண்டால் ஹிட்லரையே நேரில் பார்த்தது போல பயப்படுகிறார்கள். தீவிர வலதுசாரிக் கட்சிகள்வேறு பல இடங்களில் இதைப்பொறித்து யூதர்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். இத்தனைக்கும் மூல காரணம் மாக்ஸ்முல்லர், கால்டுவெல் கும்பலின் ஆரிய குடியேற்றப் பிரசாரம் தான்.
இப்போதும் தமிழ் கல்வட்டுப் புஸ்தகங்களைப் படித்தீர்களானால் ஸ்வஸ்தி ஸ்ரீ என்றுதான் கல்வெட்டுக்கள் துவங்கும் ஸ்வஸ்திகா வடிவ கிணற்றையே தமிழ் மன்னர்கள் வெட்டி வைத்திருக்கிறார்கள்.
xxxx
நந்தஹ — நாம எண் 528–
சங்கரர் தரும் பொருள் -வேண்டியவை எல்லாம் நிரம்பியவர்; அல்லது விஷய சுகங்களைக் கடந்தவர். பொதுவான பொருள் –மகிழ்ச்சி, வளர்ச்சி.
என் கருத்து
விஷ்ணு ஸஹஸ்ரநாம சொற்களில் நந்த, குப்த , ஸ்ரீ விஜய ஆகியவற்றை பெரிய வம்சங்கள் எடுத்துக் கொண்டன. நந்த வம்சத்திலிருந்துதான் இந்தியாவின் வரலாறே துவங்குகிறது அதற்கு முந்தைய 1500 வருஷம் வெறும் பூஜ்யம் ; இந்தியாவில் ஒன்றுமே இல்லை என்று வெள்ளை க்காரன் புஸ்தகம் எழுதி வைத்துள்ளான் . கி. மு 1800 வாக்கில் சிந்து -சரஸ்வதி தீர நாகரிகம் அழிந்தபின்னர் 1200 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் நந்த வம்சம் என்பது ஆட்சி செய்தது என்பது அவர்களின் ‘கப்ஸா’. ஆ னால் அந்த நந்த வம்சத்தினர் சூத்திரர்கள். க்ஷத்ரியர்கள் அல்ல. சாசாணக்கியன் என்ற கறுத்த பிராமணனை சாப்பா ட்டுப் பந்தியில் கிண்டல் செய்தபோது அவன் குடுமியை அவிழ்த்துப் போட்டு உன் வம்ஸத்தை வேரறுக்கும் வரை குடுமியைக் கட்டமாட்டேன் என்று சபதம் செய்தான்.இதை திருவள்ளுவரும் பாடி இருக்கிறார். பெரியாரைப் பகைத்தால் பெரிய அரசுகள்இடை மு றிந்து விழும் என்கிறது குறள் .
மயில் வளர்க்கும் ஜாதி (மயூர= மோரிய)இளைஞர்களைக் கூப்பிட்டு அலெக்ஸ்சாண்டரையே நடுங்க வைத்த நந்தர்களை ஒழித்துக்கட்டினார் சாணக்கியர். சாணக்கியர் இந்த வரலாறு பல சம்ஸ்க்ருத நாடகங்களை உருவாக்கியது தமிழிலும் சாணக்கிய சபதம் வந்தது.
xxxx
அசோக – நாம எண் 336-
சங்கரர் தரும் பொருள்- சோகம் அற்றவர் ; பசி , தாகம் , விசனம்/துக்கம், மயக்கம், மூப்பு, மரணம் ஆகிய ஆறு குறைகள் இல்லாதவர் .
வரலாற்றில் புகழ் பெற்ற அசோக மாமன்னரை அறியாதோர் யாருமிலர்; தனது மகன், மகளையே புத்த மதத்திற்குக் கொடுத்து, ஆசியா முழுதும் புத்த மத்ததைப் பரப்பினார் . இந்துக்கள் வெறும் ஓலைகளிலும் துணியிலும் மட்டும் எழுதி வந்ததை மாற்றி முதல் முதலில் பாறைகளில் கல்வெட்டுகளைப் பொறித்தார் ; அதனால் அசைக்க முடியாத வரலாற்றுச் சான்றுகள் நமக்குக் கிடைத்தன
.xxxx
சித்தார்த்தஹ- நாம எண் 252-
வேண்டியவெல்லாம் தமக்குத் தாமே பெற்றிருப்பவர். கீதையிலும் -22ல் இதை கிருஷ்ணன் சொல்கிறார்.செய்யவேண்டிய கருமம் எனக்கு மூவுலகிலும் இல்லை; அடைய வேண்டிய பொருளும் எதுவுமில்லை .
வரலாற்று நோக்கில் பார்த்தால் சித்தார்த்தன் என்பது கெளதம புத்தரின் இயற் பெயர் ஆகும் . அவர் வாழ்ந்த காலம் 600 BCE
xxxx
மஹேந்த்ரஹ- நாம எண் 268-
ஈஸ்வரருக்கும் ஈஸ்வரர் என்பது பொருள் .
வரலாற்று நோக்கில் பார்த்தால் பல்லவர்களின் மிகச் சிறந்த மன்னன் மஹேந்திர பல்லவன் ஆவார். அவர் வாழ்ந்தது 600 CE.. சிற்பக் கலையிலும் எழுத்துத் துறையிலும் வல்லவர். மத்த விலாஸப் ப்ரஹசனம் என்னும் சம்ஸ்க்ருத நகைச்சுவை நாடகத்தை எழுதியவர்; பல குகைக் கோவில்களைக் கட்டியவர். முன்னர் அபராஜித என்ற பல்லவனின் பெயரைக் கண்டோம். நரசிம்ம என்ற சொல்லும் வி..ச.வில் வருகிறது. இந்தத் துதி மூன்று பெரிய பல்லவர்களுக்குப் பெயர்களை அளித்தது குறிப்பிடத் தக்கது
மேற்கூறிய பட்டியல் வரலாற்றில் வி..ச..வின் தாக்கத்தைக் காட்டுகிறது.
தொடர்ந்து மேலும் காண்போம்.
—subham—
TAGS-வரலாற்று ரகசியங்கள் , விஷ்ணு சஹஸ்ரநாமம் (வி.ச.), ஸ்வஸ்திகா, ஹிட்லர்
ஹைதராபாத் கோவில்கள் தொடர்ச்சி ……ஹைதராபாத் நகரம் தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது
ஸ்வயம்பூ சென்னகேசவ சுவாமி கோவில்
Swayambhu Chennakesava Swamy Temple
இது ஒரு சிவன் கோவில் . ஹைதராபாத்திலுள்ள பழைய கோவில்களில் இதுவும் ஒன்று.
வெள்ளை கற்களால் கட்டப்பட்ட இந்த சிவன் கோவில் , சிவ பக்தர்களுக்கு முக்கியமான கோவில் ஆகும்.
விஜயநகர வம்சத்துக்கு பின்னால் எழும்பிய, 600 ஆண்டுகள் பழமையான, கோவில்.சந்திராயானகுட்டாவில் இருக்கும் மலைப்பாறைகளைக் குடைந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவை அழகான சிற்பங்கள் . வரலாற்று நோக்கில் பலரும் அணுகும் கோவில்
XXXX
சூரியன் கோவில்
இது 1959ம் ஆண்டில் கட்டப்பட்டது.. பசுமை மரங்கள் சூழ்ந்த இடத்தில் வண்ணமிகு கோபுரம் கவர்ச்சியுடன் நிற்கிறது
Timings: 6:30 AM-12:30 PM & 5:00 PM-7:30 PM
Location: Aruna Enclave, Trimulgherry, Hyderabad – 500015, Near SP Colony
Sri Surya Devalayam, Trimulgherry is now available on Whatsapp and Telegram.
எட்டு வகையான லெட்சுமி உருவங்களும் தனித்தனி சந்நிதிகளில் இருக்கின்றன . சென்னையில் உள்ள அஷ்ட லெட்சுமி கோவில் போலவே கட்டப்பட்டுள்ளது.1996 முதல் இயங்கிவரும் இக்கோவில் , தில்சுக் கக்கருக்கும், எல்.பி நகருக்கும் இடையே உள்ளது ;பளிங்கனுக்கு கற்கள் போல பளபளக்கும் இக்கோவில் இரவு நேர மின் ஒளியிலும் நிலவு ஒளியிலும் பார்க்கப் பரவசம் ஊட்டும்;
இஸ்கான் என்பது ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் சுருக்கப்பெயர் ; அங்கு ராதா கிருஷ்ணர் மூர்த்திகளைக் காணலாம் . எப்போதும் ஹரேகிருஷ்ணா பக்தர்களின் பஜனை ஒலியைக் கேட்கலாம் . அதிகளாயில் திறக்கும் கோவில் இது.
Timings: 4:30 AM-8:30 PM
Location: Hare Krishna Land, Nampally Station Road, Abids
XXXX
ஸ்ரீ கணேஷ் கோவில், செகந்திராபாத் Sri Ganesh Temple, Secunderabad
ராம்கோடி பகுதியில் உள்ளது. இங்குள்ள சிவ லிங்கமும் ஒப்பற்றது
ஹைதராபாத்தும்,செகந்தராபாத்தும் இரட்டை நகரங்கள். அங்குள்ள பிள்ளையார் கோவில், 200 ஆண்டுப் பழைய கோவில். பிள்ளையார் முக்கிய சந்நிதியில் இருக்கிறார்.; மேலும் ஆறு சந்நிதிகளில் நவக்கிரகங்கள், உமா மகேஸ்வரர், ஆஞ்சனேயர் , முருகன், சிவ பிரான் மூர்த்திகளைத் தரிசனம் செய்யலாம். நகரின் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரே கோவில் அமைந்துள்ளது.
XXXX
ஹரேகிருஷ்ணா பொற்கோவில்
இது மிகவும் புதிய கோவில் 2018ம் ஆண்டில்தான் கட்டப்பட்டது நரசிம்ம சுவாமிக்கு ஒரு சந்நிதியும் , ராதா கிருஷ்ணருக்கு ஒரு சந்நிதியும் தனித்தனியே உள்ளன. பஞ்சரா ஹில்ஸ் சாலை 12ல் கோவில் இருக்கிறது. நரசிம்ம சுவாமிக்கு ஸ்வயம்பு உருவம் என்று சொல்லப்படுகிறது.
xxxx
ஸ்ரீ பாக்யலட்சுமி கோவில்
Shri Bhagya Laxmi Mandir, Charminar
எல்லோரும் நன்கறிந்த சார்மினார் சின்னம் உள்ள பகுதியில் பாக்ய லெட்சுமி கோவில் அமைந்துள்ளது 1960 ஆம் ஆண்டுகளில் உருவான கோவில்;. கோர்ட் வரை சென்ற கோவில்; சதவிரயத்தமாகக் கட்டப்பட்டதாக வழக்கு தொடர்ந்தபோது, இனி விரிவாக்கம் செய்யக்கூடாது என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது.லெட்சுமி தே விக்குரிய வெள்ளிக்கிழமை முதலிய நாட்களில் பகதர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
xxxx
சாய் பாபா கோவில்
Sai Baba Temple Dilsukhnagar
தில்சுக் நகரில் 1990 முதல் பிரபலமாகி வரும் கோவில்.அங்கு காலையிலும் மாலையிலும் ஷீரடி பாபாவுக்கு மராத்தி பாணி பூஜை , ஆரத்தி நடைபெறுகிறது. வியாழக் கிழமைகளில் அதிக கூட்டம் வருகிறது ; கோவில் இருக்குமிடம்- தில்சுக் நகர்.
-இவை தவிர சமண தீர்த்தங்கரை கோவில், புத்தர் கோவில் ஆகியனவும்கட்டப்பட்டுள்ளன.
–SUBHAM—
Tags- சக்தி கணபதி ,அஷ்டலெட்சுமி , புகழ்பெற்ற 108 கோவில்கள், PART- 8, ஆந்திரம், தெலுங்கானா , ஹைதராபாத், செகந்தராபாத்
உத்தர காண்டத்தில் பதினாறாவது ஸர்க்கமாக அமைவது, “ராவணன் என்ற பெயரை பெற்றது’.
ராவணன் தன்னுடைய தமையனான குபேரனது இடத்தை அடைந்து அவனுடன் போரிட்டு அவனை வென்றான். குபேரனது புஷ்பக விமானத்தையும் பறித்துக் கொண்டான்.
அந்த விமானத்தில் ஏறி சுப்ரமண்யக் கடவுள் இருக்கும் சரவணம் என்ற இடத்திற்க்குச் சென்றான். அங்கு விமானம் அசையாமல் நின்று விட்டது.
இதற்குக் காரணம் என்ன என்று அவன் யோசிக்கும் வேளையில் சிவபிரானின் அனுசரராகிய நந்தீஸ்வரர் ராவணனிடம் வந்தார். வானர முகத்துடன் அவர் வந்ததைக் கண்ட ராவணன் பெரிதாக நகைத்தான்.
உடனே நந்தீஸ்வரர் அவனை நோக்கி இப்படி சாபம் ஒன்றைக் கொடுத்தார்:
பரமேஸ்வரன் தன் திருவடிப் பெருவிரலினால் விளையாட்டாக மலையை அழுத்தினார். ராவணன் கைகள் நசுக்குண்டன. அவன் ஓவென அலறினான். அனைவரும் அவனை சிவபிரானைத் துதிக்குமாறு கூற அவன் அவரைப் பல தோத்திரங்களால் துதித்தான்.
சிவன் அவனுக்கு அருளி, சந்திரஹாஸம் என்ற வாளைக் கொடுத்தார். “இப்படி அலறியதால் மூவுலகமும் சப்திக்கப் பெற்றதாய் விளங்கிற்று. ஆகவே நீ ராவணன் என்ற பெயரால் விளங்குவாய்” என்று சிவபிரான் கூறியருளினார்.
இதன் தொடர்பாக சுந்தரகாண்டத்தில் 50வது ஸர்க்கத்தில் வரும் 2 மற்றும் 3வது ஸ்லோகங்களையும் பார்க்கலாம்.
ராவணன் தனக்கு முன்னே வந்து நிற்கும் வானர மூர்த்தியான ஹனுமானைப் பார்த்தவுடன் அவன் முன்பு கைலாயத்தில் நந்தீஸ்வரிடம் வாங்கிய சாபம் நினைவுக்கு வர இப்படிக் கூறுகிறான்:-
12. By adequate reasoning the conviction of the reality about the rope is gained, which puts an end to the great fear and misery caused by the snake worked up in the deluded mind.
Notes:
[Reality of the rope—i. e. that it is a rope and not a snake, for which it was mistaken. ]
*************
अर्थस्य निश्चयो दृष्टो विचारेण हितोक्तितः । न स्नानेन न दानेन प्राणायमशतेन वा ॥ १३ ॥
arthasya niścayo dṛṣṭo vicāreṇa hitoktitaḥ | na snānena na dānena prāṇāyamaśatena vā || 13 ||
13. The conviction of the Truth is seen to proceed from reasoning upon the salutary counsel of the wise, and not by bathing in the sacred waters, nor by gifts, nor by hundreds of Prāṇāyāmas (control of the vital force).
Aaadi Sankara’s favourite simile is Rope and Snake
My opinion is that Bhaja Govindam of Sankara and his disciples is High School Syllabus and Viveka Chudamani is University Syllabus. In the former he gives grand messages in simple language and in the latter he gives spiritual jargon to convey the same. Adi (aadi) Sankara used some cliché to illustrate his points ; rope and snake, pot and empty space are a few.
In the above two verses he made the following points:
Seeing snake in the rope in night is an illusion.
Salutary counsel of the wise helps us.
Neither pilgrimage nor charity nor Yogasanas help anyone to realise the ultimate truth.
A man steps on the rope in the night time and ears that he was bitten by a snake it comes out of ignorance. A wise man will explain to him it is only a rope and there is no need for panicking.
In the next sloka Sankara explained that theertha yaatraa/ pilgrimages, a lot of donations to good causes and daily breathing exercises are not enough to reah the ultimate goal
Let us compare it with what other great men say about it,
living in temples or at the foot of trees, sleeping on the ground, wearing deer’s skin, renouncing all possessions and their enjoyment- to whom will not dispassion bring happiness?
****
arthamanarthaṃ bhāvaya nityaṃ
nāstitataḥ sukhalēśaḥ satyam ।
putrādapi dhanabhājāṃ bhītiḥ
sarvatraiṣā vihitā rītiḥ ॥ 30 ॥
Wealth is no good; thus reflect always; there is not the least happiness therefrom; this is the truth. For the wealthy, there’s even fear from a son. Everywhere this is the mode.
*****
prāṇāyāmaṃ pratyāhāraṃ
nityānitya vivēkavichāram ।
jāpyasamētasamādhividhānaṃ
kurvavadhānaṃ mahadavadhānam ॥ 31
The regulation of the breadth, the withdrawal of the senses, the inquiry consisting in the discrimination between the eternal and the non- eternal , the method of mind control associated with the muttering of mantras – perform these with great care. (This verse is slightly different from what Sankara daid in verse 12
xxxx
Swami Vivekananda says
Rituals are the kindergarten of religion.
He means that one has to leave them aside and go up.
Ramakrishna paramahamsa says
Not all the fish that live in River Ganga attain Moksha .
He is truly a man to whom money is a servant; but on the other hand,those who don’t know how to make a proper use of it, hardy deserve to be called men.
xxx
Appar says
கங்கை யாடிலென் காவிடி யாடிலென்
கொங்கு தண்குமரித்துறை யாடிலென்
ஓங்கு மாகடல் ஓத நீராடிலென்
எங்கும் ஈசனெனா தவர்க்கில்லையே
What great is bathing in ganga?
What great is bathing in kAviri?
What great is bathing in fragrant cool kumari?
What great is bathing in rising waters of the grand ocean?
There is nothing for one who does not think, “God is everywhere”
*****
Pattinathar says
ஆரூரர் இங்கிருக்க
அவ்வூர்த் திருநாளென்
றூர்கள்தோறும்
உழலுவீர்; — நேரே
உளக்குறிப்பை நாடாத
ஊமர்காள்! நீவீர்
விளக்கிருக்கத் தீத்தேடுவீர்
When all Gods are same why are you running from one place to another! Oh Ye dumb! When there is an oil lamp burning in front of you, why do search for fire?
We have got similar verses in many Tamil hymns.
–subham—
Tags- Rope or Snake , illusion, My Research Notes on VC , Part 12, pilgrimage, holy bat
விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலுள்ள வரலாற்று ரகசியங்கள் குறித்து ஆதிசங்கரர் எதுவும் சொல்லவில்லை. ஆயினும் குப்த, ஸ்ரீ விஜய, அசோக , பிரதர்தன போன்ற நாமங்கள் வரலாற்றில் முக்கிய இடம்பெற்றுள்ளதைக் காண்போம்
விக்ரமி – நாம எண் 909-
நடையழகு படைத்தவர் அல்லது மிகுந்த பராக்கிரமம் உடையவர்.
என் கருத்து
இந்தியாவில் விக்ரம அல்லது விக்ரமாதித்யன் என்ற பெயர்கள் சோழ , பாண்டிய, சாளுக்கிய வம்ச அரசர்களிடையே காணப்படுகிறது இதற்கெல்லாம் காரணம் உலகப் புகழ்பெற்ற விக்ரமாதித்தன் ஆகும்.அவன் உஜ்ஜைனி நகரிலிருந்து வெளிநாட்டுப் படையெடுப்புகளைத் தோற்கடித்தான். அவன் பெயரில் கி.மு. 57-லிருந்து புதிய சகாப்தம் துவங்கியது, வேதாளம் கதைகளுக்கு மூல காரணம் அவன்தான் ; காளிதாசன் போன்ற பெரும் புலவர்களை ஆதரித்தவன்.
xxxx
அபராஜிதஹ — நாம எண் 716
வெல்ல முடியாதவர் ; எங்கு கிருஷ்ணன் இருக்கிறானோ அங்கு வெற்றி என்பது மஹாபாரத வாக்கியம்.. அகமும் புறமும் உள்ள எதிரிகளை ஜெயிப்பவன் விக்ரமன்
என் கருத்து
பல்லலவர்களில் ஒரு மன்னன் பெயர் அபராஜித வர்மன் (885-903 CE ).ஆதித்ய சோழனுக்கு அவன் உதவி செய்தபோதும் பின்னர் நடந்த போரில் அவனை ஆதித்ய சோழனே கொன்றுவிட்டான்
XXXXX
தீர்த்தகர — நாம எண் 691-
உலகை உய்விக்கும் வித்தைகளை உண்டாக்கி உபதேசித்தவர்; ஹயக்ரீவ வடிவம் கொண்டு மது கைடபர்களைக் கொன்ற பின்னர் பிரம்மாவுக்கு சிருஷ்டி துவக்கத்தில் எல்லா வித்தைகளையும் உபதேசித்தவர் .
யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம் யோ வை வேதாம்ஸ் ச ப்ரஹிணோதி தஸ்மை
தம் ஹ தேவமாத்மபுத்தி ப்ரகாஸம் முமு க்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே
நினைப்பது நாமத்தை உச்சரிசிப்பது முதலியவை செய்தவுடன் எல்லாப் பாவங்களையும் போக்குவனவாகிய கங்கை, புஷ்கரம் முதலான புண்ணிய தீர்த்தங்களை உண்டுபண்ணியவர். சுருதி ஸ்ம்ருதி முதலிய ஸத் சம்பிரதாயங்களைப் பிரவர்த்திக்கச் செய்தவர். கடல் போல இறங்க முடியாத ஆழமான தம்மிடத்தில் பக்தர்கள் இறங்கும்படி படிகளை உண்டுபண்ணியவர் .
ஆத்ம ப்ரவேஸ சோபானம் க்ருதவா தீர்த்தகர ஸ்ம்ருதஹ – பட்ட பாஸ்கரர் உரை
என் கருத்து
சமண மதத்தின் துறவிகளை தீர்த்தங்கரர் என்பார்கள். 24 தீர்த்தங்கரர்களில் புத்தர் வாழந்த காலத்தில் வாழ்ந்தவர் வர்த்தமான மஹாவீரர். அந்த வர்த்தமான என்ற சொல்லும் வேறு ஓரிடத்தில் விஷ்ணுவின் நாமமாக வருகிறது . பிறப்பு- இறப்பு என்னும் நதியைக்கடந்து செல்ல உதவும் துறை போன்றவர்களை சமணர்கள், தீர்த்தங்கரர் என்று அழைப்பார்கள். அதே பொருள் இங்குள்ள வியாக்கியானத்திலும் தொனிப்பதைக் காணலாம். வர்த்தமான மஹா வீரர் 2600 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்.
xxxx
பஹு சிரஹ — நாம எண் 115-
பல தலைகளையுடைய விராட் புருஷ வடிவினர்
ஸஹஸ்ர சீர்ஷா புருஷஹ- ஆயிரம் தலையுடையவன் என்று ரிக்வேதத்திலுள்ள புருஷசூக்தம் போற்றுகிறது.
என் கருத்து
தமிழில் கொம்பன் என்ற சொல்வழக்கு உள்ளது ; நீ என்ன பெரிய கொம்பனோ என்று சொல்வார்கள் அதன் பொருள் நீ என்ன அவ்வளவு பெரிய தலைவனோ முக்கியமானவனோ என்று பொருள்; இதற்கு காரணம் அந்தக்காலத்தில் தலைவர்கள் தலையில் எருமைக் கொம்பால் ஆன மகுடத்தை வைத்துக்கொள்வார்கள். இதை சிந்து-சரஸ்வதி நாகரிக பசுபதி சின்னத்தில் காணலாம். அந்த பசுபதி சின்னத்திலும் பல தலைகள் இருக்கின்றன ஆயிரம் தலைகளையும் சிலையில்/ உருவத்தில் வடிக்க முடியாதல்லவா ?
இப்போது கிரீடம், மகுடம், டர்பன், பரிவட்டம் ஆகியன அந்த இடத்தைப் பிடித்துவிட்டது.
XXXX
நைக ச்ருங்கஹ — நாம எண் 763-
ஒரே ஒரு கொம்புமட்டும் உடையவர் அல்ல- ந ஏக ச்ருங்க – நாம எண் 763-
முன்னர் சொன்ன சிந்து-சரஸ்வதி நதி தீர பசுபதி முத்திரையை நினைவிற்கொள்க .
அல்லது நான்கு கொம்புகளை உடையவர்- அதாவது நான்கு வேதங்களையோ அல்லது தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்ற நான்கு பண்புகளையோ, குறிக்கோள்களையோ உடையவர். ஏனெனில் ரிக்வேதத்திலும் சத்வாரி ச்ருங்காஹா – நான்கு கொம்புகளை உடையோனே என்ற வரி வருகிறது – தைரிய ஆரண்யகம் 1-10-17; ALSO RV.
சத்வாரி ஸ்ருங்கா த்ரயோஸ்ய பாதா
த்வே சீர்ஷே சப்த ஹஸ்தாஸோஸ்ய
த்ரிதா பத்தோ வ்ருஷபோ ரோரவீதீ
மஹா தேவோ மார்த்யான் ஆவிசேச – RV 4-58-3
எருது/ காளை ரூபத்தில், பெரிய கடவுள் உறைகிறார்
அவருக்கு 4 கொம்புகள், 3 கால்கள், 7 கைகள்,
அவை மூன்று இடங்களில் கட்டப்பட்டவை ;
அவை ஒலியை எழுப்பிக்கொண்டு மனிதர்களுக்குள் புகுந்துவி ட்டது– ரிக் வேதம் 4-58-3
XXXXX
சதுர் மூர்த்திஹி – நாம எண் 765-
ஆதி சங்கரர் சொல்கிறார் : நான்கு வடிவுடையவர்.விராட், ஸூராத்மா , அவ்யாக்ருதம், துரியம் என்பவை நான்கு வடிவங்கள் அல்லது வெண்மை , செம்மை, பசுமை, கருமை என நான்கு நிறமுள்ள மூர்த்திகள். இன்னொரு உரைகாரரான பட்ட பாஸ்கரர் கிருஷ்ணனாகிய விபவா அவதாரத்திலும் அதற்கு காரணமான வ்யுயூஹங்களை நினைவூட்டுவது போல பலபத்ரன், வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன் என்ற நான்கு மூர்த்திகளை உடையவர்.
நான்கு கொம்புகள் உடைய சொல்லுக்கான முந்திய விளக்கங்களையும் காணவும்.
XXXX
ச்ருங்கி- நாம எண் 797-
கொம்புள்ள மீனாக அவதரித்தவர்.
சஹஸ்ரநாமத்தில் இதுவரை கொம்பில்லாத, மற்றும் 4 கொம்புகளையுடைய, ஒரே கொம புள்ள மீனாகக் கடவுள் வருணிக்கப்பட்டுள்ளார். பிரளய கால மச்சாவதாரத்தை நினைவு படுத்தும் கதை இது. எல்லா பண்பாடுகளிலும், ப்ரளய கதை உள்ளது
—subham—-
Tags- வரலாற்று ரகசியங்கள், விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், Part-19
ஹைதராபாத் கோவில்கள் தொடர்ச்சி ……ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – 7
ஹைதராபாத் நகரம் தற்போது தெலுங்கனா மாநிலத்தின் தலை நகரம் ஆகும். அங்குள்ள சில கோவில்களை சென்ற கட்டுரையில் தரிசித்தோம்; 20 கோவில்களில் மேலும் சில முக்கிய கோவில்களை தரிசிப்போம்.
கேசரிகுட்டா கோவில்
இந்த வட்டாரத்திலுள்ள மிகப்பழைய கோவில் இது; ஏனெனில் ஆறாம் நூற்றாண்டு தெலுங்கு கல்வெட்டும் சிற்பங்களும் கிடைத்துள்ளன. இது ஒரு சிவன் கோவிலானாலும் அனுமன் – ராமனுடன் தொடர்புடைய கோவில். அழகான பசுமை மிக்க சூழ்நிலையில் குன்றின்மீ து கட்டப்பட்டுள்ளது.. ராவணன் ஒரு பிராமணன்; அவனைக்கொன்ற பிரம்மஹத்தி (பிராமணப் படுகொலை) பாவம் அகல ராமபிரான் ஒரு கோவிலைக் கட்டினார் . நல்ல சிவலிங்கத்தைக் காசி மாநகரிலிருந்து கொண்டுவருவதற்காக அனுமனை காசிக்கு அனுப்பினார் ராமன்.
அனுமன் வருவதற்குள் முகூர்த்த நேரம் போய்விட்டதே என்று ராமன் கவலைப்பட்ட நேரத்தில் ஸ்வயம்பூ லிங்கம் தோன்றியதாம் ; ஸ்வயம்பூ என்றால் ‘தான்தோன்றி’.
அனுமன் வருவதற்கு தாமதம் ஏன்?
புடவைக் கடைக்குள் நுழைந்த பெண்மணிகள் எந்தப் புடவையை எடுப்பது என்று திக்குமுக்காடி, ஒரு புடவைக்குப் பதில் 3 புடவைகளை எடுத்துவருவது போல, அனுமனும் நல்லதை ‘செலக்ட்’ பண்ண முடியாமல் 100 லிங்கங்களை எடுத்து வந்தாராம் . முன்னரே லிங்கம் உருவானதால் அவற்றை மலைகளில் தூக்கி எறிந்தாராம் ; இப்போதும் அந்த லிங்கங்களையும் காணலாம்; அவைகளுக்கும் பூஜை புனஸ்காரங்கள் உண்டு. மஹாசிவராத்திரி பண்டிகையின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் படை எடுக்கும் கோவில் இது.
கேசரி பெற்றெடுத்த பிள்ளை அனுமன் ; ஆகையால் கோவிலின் பெயர் கேசரி குட்ட கோவில்.
இந்த இடத்திற்கு மேலும் இரண்டு சிறப்புகள் இருக்கின்றன ; தெலுங்கனாவின் மிகப்பழைய , அதாவது 1400 ஆண்டுக்கு முந்தைய தெலுங்குக் கல்வெட்டு இங்குதான் கிடைத்தது . அது ஒரு குடைவரைக் கோவிலுக்குள் கிடைத்தது.
அடுத்த சிறப்பு என்னவென்றால், 2014ம் ஆண்டில் தொல்பொருட்த் துறை நடத்திய அகழ்வாய்வில் நிறைய சமண சமய தீர்த்தங்கரர் சிலைகள் கிடைத்தன.
Opening hours: 6 am to 12:45 pm and 3 pm to 7: 30 pm Location: Medchal-Malkajgiri district, Hyderabad
இதை காஞ்சி காமகோடி பீடம் ஷ்யாம் பாபா மந்திர் என்று அழைக்கிறார்கள்; இது ஒரு கிருஷ்ணன் கோவில்;அங்கு அழகான சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளன; ஜன்மாஷ்டமி விழா/ கிருஷ்ணன் பிறப்பு நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நாள் முழுவதும் பஜனைகள் நடக்கும்.
முழு முகவரி :
Opening hours: 6 am to 12 noon and 4 pm to 8:30 pm
Shri Kanchi Kamakoti Peetham Shri Shyam Baba Mandir
Kachiguda Station Rd, Veeranna Gutta, Barkatpura, Kachiguda, Hyderabad, Telangana 500027
xxx
வெங்கடேஸ்வரா சுவாமி கோவில்- பாஸ்போர்ட்/ விசா பெருமாள் கோவில்
இந்தக் கோவில் ஹைதராபாத் நகரின் மிகப்பழைய கோவில்களில் ஒன்று. ஒரு வாரத்தில் லட்சக் கணக்கான பக்த்ர்களைக் கவர்ந்து இழுக்கிறது. ஏனெனில் இந்தப் பெருமாளை சேவித்தால் பாஸ்போர்ட் அல்லது விசா உடனே வந்துவிடுகிறதாம். இதை சிக்கூர் பாலாஜி கோவில், பாஸ்போர்ட்/ விசா பெருமாள் கோவில் என்று பொது மக்களை அழைக்கிறார்கள் . இதோ முகவரி
Venkateswara Swamy temple
Opening hours: 6 am to 1 pm and 6 pm to 9 pm Location: Venkateswara Swamy Temple Ln, Sai Ratna Arcade, New Santoshnagar, Santosh Nagar, Hyderabad, Telangana 500059
xxxx
கர்மன்காட் ஹனுமார் கோவில்
ஹைதராபாத் நகரம் தோன்றுவதற்கு முன்னரே கட்டப்பட்ட கோவில். 12 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செலுத்திய காகதீய வம்ச மன்னர்கள் இதைக் கட்டினார்கள் ; நகர் முழுதும் சின்ன சின்ன அனுமார் கோவில்களும் உண்டு. அனுமன் இருக்கும் இடத்தில் ராமன் இருப்பான்; ராமன் இருக்கும் இடத்தில் ராம பக்த ஆஞ்சனேயன் இருப்பான்; ஆகையால் இந்தக் கோவில்களில் ஸ்ரீ ராமரையும் தரிசிக்கலாம்.
Karmanghat Hanuman Temple
Opening hours: 6 am to 12 noon and 4 pm to 8 pm. Every Tuesday, the temples remain open from 5:30 am to 1 pm and 4 pm to 9 pm Location: 8-2-61, Padma Nagar Colony, Champapet, Hyderabad, Telangana 500079
xxxx
பெத்தம்மா கோவில்
கிராம மக்களின் முக்கிய தெய்வம் பெத்தம்மா அன்னை ஆவாள் ; பெரிய அம்மன் என்ற பெயருடன் விளங்கும் இந்தக் கோவிலுக்கு பல வண்ண கோபுரம் இருக்கிறது; முக்கியத் திருவிழாக்கள் — போனலு பண்டிகையும் ரத சப்தமி பண்டிகையும் ஆகும் ஜூன்- ஜூலையில் இந்த விழாக்கள் நடக்கும். ஆண்டு முழுதும் பகதர்கள் வரும் ஆலயம் இது .
Opening hours: 6 am to 1 pm and 3 pm to 8 pm Location: Jagadish Nagar, Begumpet, Hyderabad, Telangana 500003
To be continued……………………..
–subham—
Tags–ஹைதராபாத் கோவில்கள், கட்டுரை 7, தொடர்ச்சி, கேசரிகுட்டா