பால் சாப்பிடுவது நல்லதா ? கெட்டதா ? -1 (Post No. 13,337)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,337

Date uploaded in London – 14 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நம் எல்லோருக்கும் தெரியும் பாலில் எல்லாவித சத்துக்களும் இருப்பதால் குழந்தைகள் முதல் வயோதிகர்கள் வரை பால் சாப்பிடுகிறார்கள் ; இது என்ன அசட்டுப்பிசட்டான கேள்வி ? பால் சாப்பிடுவது நல்லது என்றல்லவா கட்டுரைத் தலைப்பு இருக்கவேண்டும் என்று உடனே ஒரு சிலர் போர்க்கொடி தூக்கி விடுவார்கள் என்று எனக்குத் தெரியும். அது இந்தியாவில்தான். மேலை நாடுகளில் இல்லை. ஒரு வேளை கட்டுரையைப் படித்து முடித்தவுடன் நீங்களே பால் சாப்பிடுவதை நிறுத்தினாலும் ஆச்  சரியப்படமாட்டேன் . ஒரு வேளை ரத்தக் கண்ணீர் சிந்துவீர்கள்!

மேலை நாடுகளில் பசு மாடுகளை எப்படி வளர்க்கிறார்கள் ?

கொடுமையிலும் கொடுமை !

கன்று பிறந்தால்தான் மாடு பால் சுரக்கும் . இதற்காக முதல் கன்று போட்ட மூன்றாம் மாதத்தில் அதை செயற்கை முறையில் மீண்டும் மீண்டும் கருத்தரிக்க வைக்கிறார்கள்.

கன்று போட்டவுடன் அந்தக் கன்றினை எடுத்துக்கொண்டு போய்விடுகிறார்கள்.

அது ஆண் கன்றாக இருந்தால் மாட்டு மாமிசத்துக்கு BEEF வளர்த்து பலி இடுகிறார்கள். பெண் கன்றாக இருந்தால் அதை வளர்த்து (தாயைப் பார்க்காமலேயே) மீண்டும் மீண்டும் கர்ப்பமாக்கி வதைக்கிறார்கள் .

பண்ணையின் கொள்ளளவுக்கு மேல் கன்றுகள் இருந்தால் கூசாமல் சுட்டுக் கொல் கிறார்கள்.

பசுக்களை வெளியே மேய விடாமல் கூண்டுக்குள் அடைக்கிறார்கள் .

ஒவ்வொரு நாளும் மிஷின் மூலம் ஓட்ட ஓட்ட பால் கறக் கிறார்கள் ; அப்படி கறக்கும் போது பசுவின் முடி, நிணம் எல்லாம் வந்து விடும்.  

ஆண்  கன்றாக இருந்தால் அதை கொழுக்க வைக்க கண்ட கண்ட உணவுகளைக் கொடுத்து மேயவிட்டு, கொன்று மாட்டு மாமிசமமாக விற்கிறார்கள்.

தாய்ப்பசு பால் கறக்காது போனால் கொன்று குவித்து குப்பைத் தொட்டியில் எறிகிறார்கள்  பால் கற்கும் எந்திரம் ஒரு வட்டச் சக்கரம் போல இருக்கும். ஒவ்வொன்றாக பால் கறக்கும் இடத்திற்கு வந்தவுடன் பாலைக்  கறக்கும். இதுதான் அவர்களின் சிறை வாழ்வு . இவ்வளவையும் நமது சகோதரிக்கோ அம்மாவுக்கோ வருவதாக நினைத்துப் பாருங்கள் ரத்தக் கண்ணீர் சிந்துவீர்கள். இது தொடர்பான படங்களைப் பார்த்தால் பால் சாப்பிடுவதையே நிறுத்திவிடுவீர்கள். மாட்டைக் கொன்று தின்னும் மனிதமிருகங்களுக்கு மனிதாபிமானம் இருக்குமா ?

xxxxx

மஹாத்மா காந்தி பசும்பால் சாப்பிடுவதை ஏன் நிறுத்தினார் ?

பசும் பாலில் இருக்கும் ப்ரோட்டீன் Proteinசத்து அசைவ சத்து என்பது அவரது நம்பிக்கை. மேலும் கன்றுக்குப் பால் கொடுக்காமல் பசுவை வாட்டுவது பாவம் என்று கருதினார்.

இன்று மேலை நாட்டில் நடக்கும் கொடுமைகள் காந்திஜிக்குத் தெரிந்திருந்தால் அவர் உடனே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்திருப்பார்.

இந்தியாவில் பால் பண்ணைகளில் மாடுகள் நடத்தப்படும் முறை குறித்து காந்திஜி தனது கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்ததை அவரது சுயசரிதையில் காண முடிகிறது . குழந்தைகளாக இருக்கும்போது சாப்பிட்ட தாயப் பாலே போதும் என்பது அவரது நம்பிக்கை.  இனி பசும் பால் சாப்பிடுவதில்லை என்று 1912ம் ஆண்டில் தென் ஆப்ரிக்காவிலுள்ள டால்ஸ்டாய் Tolstoy farm பண்ணையில் அவரும் நண்பர் ஹெர்மன் கல்லென்பாக்கும் Hermann Kallenbach உறுதிமொழி எடுத்தனர்

பிற்காலத்தில் காந்திஜி கடும் நோய்வாய்ப்பட்டார் . அப்போது டாக்டர்கள் அவரை மாமிச சத்து அல்லது முட்டை அல்லது பசும்பால் சாப்பிடச் சொன்னார்கள்; காந்திஜி மறுத்துவிட்டார். அவரது மனைவி சொன்ன படி ஆட்டுப் பால் சாப்பிட்டார். அதிலும் அவருக்கு மன வருத்தமே ஏற்பட்டது.

xxxx

லாக்டோஸ் ரெசிஸ்டன்ஸ் Lactose Intolerance or Resistance என்றால் என்ன ? வேகன் VEGAN என்றால் என்ன?

லாக்டொஸ் என்பது பாலில் உள்ள சர்க்கரைச் சத்து ஆகும். சிலருக்கு இது எளிதில் ஜீரணம் ஆகாது அப்படிவரும் அஜீரணக் கோளாறுகள் அவர்களை வயிற்றில் பொருமலையும் வாயுவையும், வயிற்றுப்  போக்கையும், எளிதில்   உணவு செ மிக்காமையும் உண்டாக்கும். இது வியாதி அல்ல; ஆனால் தாங்க முடியாத அசெளகாரியத்தைத் தரும். ஏனிந்த லாக்டோஸ் ஒவ்வாமை ஏற்படுகிறது?  சிலருக்கு அந்த வகை மரபணு (ஜீன்) LCT gene  பிறக்கையிலேயே இருக்கிறது மற்றும் சிலர் நோய்வாய்ப்பட்ட காலத்தில் குடல் பாதிக்கப்பட்டாலும் திடீரென்று லாக்டோஸ் ஒவ்வாமை வந்துவிடும். இதனால் அவர்கள் பால் மட்டுமின்றி தயிர், மோர், சீஸ் , வெண்ணெய் என்ற பால் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் DAIRY PRODUCTS தவிர்க்கிறார்கள் இவர்களை  வேகன் என்று அழைக்கிறார்கள்

வேகன் என்ற கொள்கை பரவவே பலரும் மேலை நாடுகளில் ஓட்ஸ் மில்க்/பால் , வாதாம்பருப்பு பால் , சோயா மில்க் , கோட் மில்க் (Oats, Almond, Soya Milk, Goat’s Milk)  என்ற வகை பால் பொருட்களை பயன்படுத்தத் துவங்கி விட்டனர். இதன் விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் லாக்டோஸ் ஒவ்வாமை பிரச்சனை வராது .

வேகன் என்பதும் வெஜிட்டேரியன் என்பதும் வேறு. இந்துக்கள் வேகன் இல்லை. இந்து மதத்தில் வேகன் பற்றிய குறிப்புகளும் இல்லை . பாலும் தெளி தேனும் கடவுளுக்கு தினமும் படைக்கப்படுகின்றன. விருந்தாளிகளுக்கு புது மண தம்பதிகளுக்கும் மது பர்க்க என்னும் பாலும் தெளி தேனும் அளிக்கப்படுகிறது . இது பெரும் மரியாதை ஆகும்

பாலாபிஷேகம் தேனாபிஷேகம் இல்லாத கோவில்கள் இல்லை.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச்

சங்கத் தமிழ் மூன்றுந்தா -ஒளவையார்

XXXXX

இந்துக்கள் எப்படி பசுமாடுகளை நடத்தினார்கள் ? மது பர்க்க என்றால் என்ன? எனக்கு ஏற்பட்ட கசப்பான வேகன் அனுபவங்கள் ; எனக்கு என் பேரக் குழந்தைகள் செய்யும் உதவி ஆகியவற்றை கட்டுரையின் இரண்டாம் பகுதியில் தருகிறேன்.

என்னுடைய 3 (வேகன் VEGAN) கசப்பான அனுபவங்கள்

பேரக் குழந்தையின் உதவி; மதுபர்க்கம் என்றால் என்ன?

இவைகளை ஆராய்வோம்

TO BE CONTINUED………………………………………

Tags- பால், கொடுமைகள், கறக்கும் மிஷின், சிறை வாழ்வு, பசுக்கள் பலி , லாக்டோஸ் , காந்தி, ஆட்டுப்பால், ஓட்ஸ் மில்க், சோயா மில்க் , 

ராமாயணத்தில் சாபங்கள் (25) ரிஷிகள் ராக்ஷஸர்களுக்கு சாபம் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம்! (Post.13336)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.336

Date uploaded in London – 14 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (25)

ராமாயணத்தில் சாபங்கள் (25) ரிஷிகள் ராக்ஷஸர்களுக்கு சாபம் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம்!

ச.நாகராஜன்

அயோத்யா காண்டத்தை அடுத்து வரும் ஆரண்ய காண்டத்தில் 6 சாபங்களை நாம் காண்கிறோம்.

ஆரண்ய காண்டத்தில் நாம் 10-ம் ஸர்க்கத்தில் ரிஷிகள் ஏன் ராக்ஷஸர்களுக்கு தாமே சாபம் கொடுத்து அவர்களை அழிப்பதில்லை என்பதற்கான காரணத்தை ரிஷிகள் கூறுவதைப் பார்க்கிறோம்.

ஆரண்ய காண்டத்தில் 10வது ஸர்க்கமாக அமைவது ‘ஆயுதம் தரிப்பதன் அவசியத்தை ஶ்ரீ ராமர் சொல்வது’’.

ஶ்ரீ ராமரை தரிசித்த ஏராளமான தபஸ்விகளும் முனிவர்களும் வந்து, தாங்கள் ராக்ஷஸர்களால் கொடுமைப் படுத்தப்படுவதாகவும் தவத்தைச் சரியாகப் புரியமுடியவில்லை என்றும் முறையிட்டனர்.

சீதை ஶ்ரீ ராமரிடம் ஆயுதத்தைத் தரிக்க வேண்டாம், தண்டகாரண்யம் செல்ல வேண்டாம் என்று தன் அபிப்ராயத்தைக் கூற ஶ்ரீ ராமர் ஒரு க்ஷத்திரியனின் தர்மம் மற்றவர்களைக் காப்பதே என்பதை எடுத்துக் கூறுகிறார்.

“சீதே! கடுமையான விரதம் பூண்ட அந்த முனிவர்கள் கஷ்டமடைந்து ரக்ஷகனைத் தேடி என்னையே தண்டகாரண்யத்தில் சரணமடைந்தார்கள்” என்று கூறிய ராமர் அவர்களைக் காக்க தான் வாக்களித்து விட்டதாகவும் கூறுகிறார்.

ரிஷிகள் ராமரிடம் கூறிய வார்த்தைகளை இங்கு பார்ப்போம்:

காமம் தப:ப்ரபாவேன சக்தா ஹந்தும் நிஷாசரான் |

சிரார்ஜித் து நேச்சாமஸ்தப:கண்டயிதும் வயம் ||

தப: ப்ரபாவேன – தவ மஹிமையால்

நிஷாசரான் – அரக்கர்களை

ஹந்தும் – நாசம் செய்ய

சக்தா: – வல்லவர்களாக

காமம் – இருக்கின்றோம்

து – என்றாலும்

வயம் – நாங்கள்

சிரார்ஜிதம் – வெகுநாள் சிரமப்பட்டு சம்பாதித்த

தப: – தவத்தை

கண்டயிதும் – குலைக்க

இச்சாம: ந – துணிவுறாதிருக்கிறோம்

பஹுவிக்னம் தபோ நித்யம் துச்சரம் சைவ ராகவ |

தேன சாபம் ந முஞ்சாமோ பக்ஷ்யமாணாஸ்ச ராக்ஷசை: |\

ராகவ – ஓ! ஶ்ரீ ராம

தப: ச – தவம் என்பதே

நித்யம் – எக்காலமும்

பஹுவிக்னம் – அநேக இடையூறுகளைக் கொண்டதாகும்.

துச்சரம் ஏவ – முடிக்க முடியாததுமாகும்

தேன – அந்தக் காரணத்தால்

ராக்ஷசை: – ராக்ஷஸர்களால்

பக்ஷ்யமாணா: ச – தீங்குறுத்தப்படுபவர்களாக இருந்தும் கூட

சாபம் – சாபத்தை

முஞ்சாம: ச – இடாதிருக்கிறோம்

ஆரண்ய காண்டம், 10-ம் ஸர்க்கம் ஸ்லோகங்கள் 14 & 15,

இங்கு முனிவர்கள் ஏன் சாபம் இடுவதில்லை என்பதற்கான காரணத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.

ரிஷிகள் தவசக்தி உடையவர்கள் என்றாலும் சாபம் கொடுப்பதால் அந்த சக்தி வீணாகப் போகும் என்பதோடு கூட ஒரு தவத்தை முடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று என்பதையும் அறிய முடிகிறது.

சாபம் பற்றிய இதிஹாஸ புராணங்களில் நமக்கு ஏற்படும் ஒரு முக்கியமான சந்தேகத்திற்கு விளக்கமாக இந்த இடம் அமைகிறது.

**

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-5 (Post13,334)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.334

Date uploaded in London – 13 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

Aadi Sankara’s Vishnu Sahasranaama (VS) commentary continued

ஊர்ஜித சாசனஹ – நாம எண் 910

சுருதி -ஸ்ம்ருதி வடிவானவர்

உறுதியான கட்டளைகளைப் பிறப்பிப்பவர்.

ச்ருதி -ஸ்ம்ருதீ  மமை வாஜ்ஞே  யஸ்தே உல்லங்க்ய வர்த்ததே

ஆஜ்ஞா சேதீ மம த்வேஷீ ந மத்பக்தோ ந வைஷ்ணவஹ

பொருள்

சுருதியும் (வேதம்) ஸ்ம்ருதியும் (இந்துக்களின் சட்ட புஸ்தகம் ) என்னுடைய கட்டளைகள்.அவைகளை மீறுவோர் என் கட்டளைகளை மீறியவர்கள் ஆவர்.என் புகழுக்கு இழுக்கு கற்பித்தவர் ஆவர்.அவர்கள் என் பக்தர்களும் அல்லர்; வைஷ்ணவர்களும் அல்லர்.

XXXX

புண்ய-ச்ரவண கீர்த்தனஹ – நாம எண் 922

தம்மைப் பற்றிக் கேட்பவர்க்கும் கீர்த்தனம் செய்பவர்க்கும் புண்ணியத்தைக் கூட்டிவைப்பவர்.

விஷ்ணு ஸஹஸ்ரநாம (வி.ச.) பலச்ருதியில் வரும் ஸ்லோகம் இதை உறுதி செய்கிறது

ய இதம் ச்ருணுயான் நித்யம் யச்சாபி பரிகீர்த்தயேத்

நாஸு பம் ப்ராப்னுயாத்  கிஞ்சித் ஸோ அ முத்ரேஹ  ச மானவஹ

பொருள்

இதை தினமும் கேட்பவனும் கீர்த்தனம் செய்பவனும்

இம்மையிலும் மறுமையிலும் யாதொரு கெடுதலையும் அடைய மாட்டான்

XXXX

ப்ரமாணம் — நாம எண் 959

தானே ஒளிர்வதான ஞான வடிவினர்

வேதங்களின் ரஹஸ்ய அர்த்தங்களை  ஐயந்திரிபின்றி அறிவிப்பவர்

தைத்ரீய உபநிஷத் 1-2-1 சொல்கிறது :

ஞான ஸ்வரூபம்  அத்யந்த நிர்மலம் பரமார்த்ததஹ

தம் ஏவார்த்த  ஸ்வரூபேண ப்ராந்தி  தர்சனதஹ ஸ்திதம்

பொருள்

எது ஒன்று பரிபூரண தூய்மை உடையதோ ஞான ஸ்வரூபமாக உளதோ உன்னத நிலையில் உள்ளதோ மாயை என்னும் திரை வழியே பார்க்கையில் உலகத்திலுள்ள ஒரு பொருள் போல தோற்றமளிக்கிறது.

xxxx

ப்ராண ஜீவனஹ – நாம எண் 962

பிராணிகளை ஜீவிக்கச் செய்பவர் .

கடோபநிஷத் 4-5 சொல்வதாவது

ந ப்ராணேன நாபானேன மர்த்யோ ஜீவதி கஸ்சன

இதரேண  து ஜீவந்தி யஸ்மின் நேதா வுபாஸ்ரிதெள

பொருள்

எவரும் பிராணன் , அபானன்  போன்றவற்றால் வாழ்வதில்லை.அவர்களுக்கு எல்லாம் சக்தியூட்டும் ஒன்றால்தான் வாழ்கிறோம்.

xxxx

ஏகாத்மா — நாம்  எண் -965

ஒன்றேயாகிய ஆத்ம  அல்லது எங்கும் வியாபித்திருப்பவர்..

தைத்ரீய உபநிஷத் 1-1 சொல்லுவதாவது :

ஆத்மா வா இதம் ஏக ஏவாக்ர  ஆஸீத்

ஆரம்பத்தில்  ஆத்மா மட்டுமே இருந்தது

ஸ்ம்ருதி சொல்கிறது:

யச்சாப்னோதி யத் ஆததே விஷயான்  த

யத் சஸ்ய சந்ததோ பாவஸ்  தஸ்மாத் ஆத்மே தி கீயதே

பொருள்

எல்லோரிடத்திலும் இருப்பதே ஆத்மா. எல்லோரையும் உயிர்வாழ வைக்கிறது . அது எப்போதும் மாறுபடாமலிருக்கிறது . எல்லோரையும் அனுபவத்தில் உணர வைக்கிறது.

xxxx

பூர் -புவஹ -ஸ்வஸ்தரஹ — நாம எண் 967-

பூலோகம், புவர் லோகம், ஸு வர் லோகம் என்ற மூன்று உலகத்தையும் வியாபிக்கும் ஸம்ஸார விருக்ஷ வடிவினர்.  அல்லது பூஹு , புவஹ,ஸு வஹ என்ற வியாஹ் ருதி மந்திரங்களால்  உலகை வழிநடத்துபவர் .

மனு சொல்கிறார் :

அக்னவ் ப்ரஸ்தா ஹதிஹி சம்யக் ஆதித்யம் உபதிஷ்டதே

ஆதித்யாத் ஜாயதே வ்ருஷ்டிர் வ்ருஷ்டேர்  அன்னம் ததா ப்ரஜாஹா

பொருள்

அக்கினியில் போடப்படும் ஆஹுதி / பொருட்கள் சூரியனை அடைகின்றன . சூரியன் மூலமாக மழை உண்டாகின்றது மழையிலிருந்து உணவு கிடைக்கிறது. உணவு மூலமாக மனிதர்கள் வாழ்கிறார்கள்.

अग्नौ प्रास्ताऽहुतिः सम्यगादित्यमुपतिष्ठते ।
आदित्याज् जायते वृष्तिर्वृष्टेरन्नं ततः प्रजाः ॥3- ७६ ॥

agnau prāstā’hutiḥ samyagādityamupatiṣṭhate |
ādityāj jāyate vṛṣtirvṛṣṭerannaṃ tataḥ prajāḥ || 3-76 || MANU

An oblation duly thrown into the fire reaches the sun; from the sun proceeds rain from, rain food, and from food, the creatures.—(3-76) MANU SMRITI

இதை பகவத் கீதையிலும் காணலாம்

अन्नाद्भवन्ति भूतानि पर्जन्यादन्नसम्भव: |
यज्ञाद्भवति पर्जन्यो यज्ञ: कर्मसमुद्भव: || 14||

annād bhavanti bhūtāni parjanyād anna-sambhavaḥ
yajñād bhavati parjanyo yajñaḥ karma-samudbhavaḥ

அன்னாத்3ப4வந்தி1 பூ4தா1 னி ப1ர்ஜன்யாத3ன்னஸம்ப4வ: |

யஞ்ஞாத்3ப4வதி1 ப1ர்ஜன்யோ யஞ்ஞ: க1ர்மஸமுத்3ப4வ: || 3- 14 ||

அன்னாத்—–உணவிலிருந்து; பவந்தி–—பிழைக்கின்றன; பூதானி—–உயிரினங்கள்; பர்ஜன்யாத்–—மழையிலிருந்து; அன்ன—–உணவு தானியங்களின்; ஸம்பவஹ—–உற்பத்தி; யஞ்ஞாத்—–யாகம் செய்வதிலிருந்து; பவதி—–சாத்தியமாகிறது; பர்ஜன்யஹ—–மழை; யஞ்ஞஹ—-தியாகம் செய்தல்; கர்ம-—-வகுக்கப்பட்ட கடமைகள்; சமுத்பவஹ—-பிறந்தது

BG 3.14: அனைத்து உயிரினங்களும் உணவின் மூலம் வாழ்கின்றன, மழையால் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. தியாகம் செய்வதால் மழை பெய்யும், விதிக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவது தியாகம் ஆகிறது.

XXXX

யக்ஞாங்கஹ – நாம் எண் 974

யாகங்களைத் தன் உறுப்புகளாகக் கொண்ட யக்ஞ வராஹ வடிவினர்.

வே தங்களைப் பாதங்களாகவும் யூபங்களைப் பற்களாகவும் அக்கினியை நாக்காகவும் பிரம்மத்தை தலையாகவும் தர்மங்களைக் கேசமாகவும், சோமரசத்தை இரத்தமாகவும் உடையவர் . இது ஹரிவம்ச நூலில் 7 ஸ்லோகங்களில் விரிவாக உள்ளது 3-34- 34 -41

என் கருத்து

சோமா ரசத்தைப் பற்றித் தப்பும் தவறுமாக வியாக்கியானம் செய்த மாக்ஸ் முல்லர் கும்பலுக்கு மரண அடி கொடுக்கும் விஷயம் இது . சோமரசத்தை கடவுளின் ரத்தமாக வருணிக்கிறது  ஹரிவம்சம்.

வெள்ளைக்காரர் கூற்றுப்படி இது போதைப் பொருள். உலகில் எந் மதமாவது கடவுளின் ரத்தத்தை கஞ்சாஅபினிவிஸ்கிபிராந்தி என்று வருணிக்குமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். உண்மையில் சோம ரசம் என்பது அற்புதமான உயிர் காக்கும் உற்சாக சக்தியூட்டும் ஒரு டானிக். துரதிருஷ்டவசமாக அந்த தாவரம் அழிந்துவிட்டது. வெள்ளைக்காரர் சொல்லும் இரண்டு தாவரங்களாக இது இருந்திருந்தால் அவைகளை வளர்த்து கோகோ கோலா போல விற்றிருப்பார்கள் வெள்ளைக்காரர்கள்.

கிரிஃபித் என்பவர் தனது ரிக்வேத மொழிபெயர்ப்பின் ஆங்கில மொழிபெயப்பில் முதல் பக்கத்திலேயே தாவரங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு இந்து மதத்தை  அபினி- கஞ்சா ஆட்கள் என்று தாக்குகிறார்.

XXXX

தேவகீ  -நந்தனஹ – நாம எண் 989

தேவகியின் மகனாக கிருஷ்ண  அவதாரம் எடுத்தவர். மஹாபாரதம்- அனுசாசன பர்வம் – 158-31 சொல்வதாவது:

ஜ்யோதீம்ஷி சுக்ராணி ச யானி லோகே த்ரயா லோகோ  லோகபாலாஸ்  த்ரயீ ச

த்ரயோ க்ன யஸ்   சாஹூ தயஸ் ச பஞ்ச ஸர்வே தேவா தேவகீ பு த்ர ஏவ

வானத்தில் ஒளிவீசும் கிரகங்களும் நட்சத்திரங்களும் மூன்று உலகங்களும், அங்குள்ள தேவர்களும் மூன்று வேதங்களும் மூன்று யாகத் தீக்களும் ஐந்து ஆஹுதிக்களும் தேவர்களும் அவதாரமாக உதித்தே கிருஷ்ண பரமாத்மா.

இங்கே புத்திரப் பேற்றை அளிக்கும் ஒரு மந்திரமும் கூறப்பட்டுள்ளது :

தேவகீ நந்தனஹ ஸ்ரேஷ்டேதி  சக்திஹி

 தேவகீ ஸுத கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே

தேஹி மே தனயம் க்ருஷ்ண த்வாமஹம் சரணம் கதஹ

XXXX

பாபநாசனஹ —  நாம எண் —992

பாவங்களை அகற்றுபவர் — விருத்த சாதாபா ஸ்லோகம் சொல்கிறது:

பக்ஷோ பவாஸத்  யத் பாபம் புருஷஸ்ய ப்ரணஸ்யதி

ப்ராணாயாம சதேன இவ தத் பாபம் நஸ்யதே ந்ருநாம்

ப்ராணாயாம சஹஸ்ரேன யத் பாபம் நஸ்யதே ந்ருநாம்

க்ஷண மாத்ரேன தத் பாபம் ஹரேர்  த்யானாத் ப்ரணஸ்யதி

பொருள்

ஒரு மனிதன் செய்த பாவங்களை ஒரு வார உண்ணாவிரதமிருந்து அழிக்கலாம் அதை நூறு தடவை ப்ராணாயாமம் செ.ய்தும் அகற்றலாம்  . ஆயிரம் ப்ராணாயாமம் செ.ய்து அகற்றக்கூடிய பாவங்களை ஒரு க்ஷண நேரம் ஹரி தியானத்தின் மூலம்நீக்கலாம் .

(ஒப்பிடுக – ஆண்டாள் இயற்றிய திருப்பாவை : வாயினாற் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்).

–subham—

Tags- விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள்ரகசியங்கள்மேற்கோள்கள்-5

One more Hindu discovery confirmed by Scientists! Elephants have names!! (Post No.13,335)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,335

Date uploaded in London – 13 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

From latest science magazines,

“Elephants seem to use personalized calls to address members of their group, providing a rare example of naming in animals other than humans.

“There’s a lot more sophistication in animal lives than we are typically aware,” says Michael Pardo, a behavioural ecologist at Cornell University in Ithaca, New York. “Elephants’ communication may be even more complex than we previously realized.”

Other than humans, few animals give each other names. Bottlenose dolphins (Tursiops truncatus) and orange-fronted parakeets (Eupsittula canicularis) are known to identify each other by mimicking the signature calls of those they are addressin”g.

What Hindus said 5000 years ago is confirmed by today’s scientists .

Hindus said that animals too dream in hundreds of Sanskrit and Tamil poems 2000 years ago. Now only dream researchers confirm it. Neither Freud nor Jung knew it.

Hindus say moon helps plants to grow. Scientists do not know until this day. Probably they will confirm it soon. If Hindus move in rocket speed, western scientists move in snail speed.

All that we said in Navagraha Hymn is yet to be confirmed by them. They are very, very slow. We said about Big Crunch and Big Bang. The western scientists are yet to confirm Big Crunch.

We said Time is cyclical and till this day western scientists think Time is linear. They will realise their blunder soon.

We showed Einstein is wrong. We showed that speed of light can be beaten from Mahabharata stories, Bhagavata stories and Tamil Sambandar and Sundarar stories. Scientists still believe that speed of light cannot be beaten. Ony in science fiction stories they talk like Hindus . They are terribly slow in physics and cosmology.

Elephants have Personal Names!

When you call your son or daughter or a friend you call them by their personal names. The latest research shows that elephants have personal names which is already in Hindu epics 5000 years old at least.

Hindus named all the famous Indian elephants and horses. Even Alexander named his horse as Bucephalus. Sangam age Tamils named their horses Kari (kaari), Ori etc.

Asvattama (asvataamaa) , the most famous elephant, changed the course of the Mahabharata war 5200 years ago.

Pandava chief Yudhisthira was the embodiment of truth, justice, compassion and righteousness. On the fifteenth day of the battle Drona, the commander of the Kaurava army, heard that his son Asvattama was killed. Dejected and disappointed Drona dropped his bow and arrow and as planned by Krishna, Pandava army commander Dhrishtadhyumna killed him . But  Asvattama that was killed was not his son. It was the name of an elephant. Krishna asked someone to kill it and asked Yudhisthira to announce it loudly, but the last few words in low tone. Only the last few words had the message it was elephant named Asvattama. Because Kaurava army lost its Chief commander Drona, father of Asvattama, the Kauravas lost the war.

This episode shows that Hindus named their pet animals 5200 years ago . Mahabharata war is dated around 3200 BCE. This is not the only animal name. Hindus named Ashta Dik Gajangal (8 elephants in 8  directions) with eight special names.

Indra’s elephant was Airavata,

elephant that was killed by Krishna was Kuvalayapeetam,

elephant that was tackled by Buddha was Nalagiri, and

Lord Skanda’s elephant was named Pinimukha etc.

Words for elephant in other languages came from the Sanskrit word Ibha= Ebur (Latin), Ephos (Greek), Ebu (Ehyptian), Elephant (English).

In the Panchatantra stories we have names for all animals. And we reported that they spoke to one another. So, Hindus knew they have names and they addressed each one with that personal name. Now scientists report it as if they discovered something new!

In the most famous Gajendra Moksha story, we know that elephant named Gajendra called Vishnu to save it from the crocodile.

Most of us name our pet dogs and cats and they respond immediately when we call them with that name.

Here is the latest news from magazines:

Elephants call out to each other using individual names that they invent for their fellow pachyderms, according to a new study.

While dolphins and parrots have been observed addressing each other by mimicking the sound of others from their species, elephants are the first non-human animals known to use names that do not involve imitation, the researchers suggested.

For the new study published on Monday, a team of international researchers used an artificial intelligence algorithm to analyse the calls of two wild herds of African savanna elephants in Kenya.

The research “not only shows that elephants use specific vocalisations for each individual, but that they recognise and react to a call addressed to them while ignoring those addressed to others”, the lead study author, Michael Pardo, said.

“This indicates that elephants can determine whether a call was intended for them just by hearing the call, even when out of its original context,” the behavioural ecologist at Colorado State University said in a statement.

The researchers sifted through elephant “rumbles” recorded at Kenya’s Samburu national reserve and Amboseli national park between 1986 and 2022.

Using a machine-learning algorithm, they identified 469 distinct calls, which included 101 elephants issuing a call and 117 receiving one.

Elephants make a wide range of sounds, from loud trumpeting to rumbles so low they cannot be heard by the human ear.

Names were not always used in the elephant calls. But when names were called out, it was often over a long distance, and when adults were addressing young elephants.

Adults were also more likely to use names than calves, suggesting it could take years to learn this particular talent.

The most common call was “a harmonically rich, low-frequency sound”, according to the study in the journal Nature Ecology & Evolution.

When the researchers played a recording to an elephant of their friend or family member calling out their name, the animal responded positively and “energetically”, the researchers said.

But the same elephant was far less enthusiastic when played the names of others.

Unlike those mischievous parrots and dolphins, the elephants did not merely imitate the call of the intended recipient.

This suggests that elephants and humans are the only two animals known to invent “arbitrary” names for each other, rather than merely copying the sound of the recipient.

“The evidence provided here that elephants use non-imitative sounds to label others indicates they have the ability for abstract thought,” the senior study author George Wittemyer said.

The researchers called for more research into the evolutionary origin of this talent for name-calling, given that the ancestors of elephants diverged from primates and cetaceans about 90m years ago.

Despite our differences, humans and elephants share many similarities such as “extended family units with rich social lives, underpinned by highly developed brains”, the CEO of Save the Elephants, Frank Pope, said.

“That elephants use names for one another is likely only the start of the revelations to come.”

—subham—

Elephants , personal names, they talk, Gajendra, Airavata, Nalagiri, Kuvalayapeedam, Asvattama.

கடல் தீ பற்றி திருமூலர் தரும் அதிசய செய்திகள் ! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 22 (Post No.13,334)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,334

Date uploaded in London – 13 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கடலில் தோன்றும் மர்மத் தீயை வடமுகாக்கனி, வடவா, படபா என்று வடமொழி நூல்களும் மடங்கல், ஊழித் தீ என்று சங்கத் தமிழ் நூல்களும் கூறுகின்றன.

சித்தர் பாடலாகும் இது பற்றிப் பேசுகின்றன.

கடலில் ஒளிந்திருந்த கனல் எழுந்து வந்தாற் போல்

உடலில் ஒளிந்த சிவம் ஒளி செய்வது எக்காலம்?—பத்திரகிரியார் பாடல்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காளிதாசரும் சிவனின் கோபம் கடலில் எழுந்த தீயைப் போ இருந்தததாக சாகுந்தல் நாடகத்தில் சொல்கிறார்

“Siva’s fiery wrath must still burn in you

Like Fire smouldering deep in the ocean’s depths

Were it not so, how can you burn lovers like me,

When mere ashes is all that is left of you?” –Sakuntala of Kalidasa III-3

லண்டனில் இருந்து வெளியாகும் மெட்ரோ பத்திரிக்கையில் (செப்.18, 2012) ஒரு அதிசயப் படம் வெளியாகி இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் அலீஸ் ஸ்பிரிங்ஸ் என்னும் இடத்தில் ஒரு சூறாவளி தீயைக் கக்கிக்கொண்டு சீறிபாய்ந்து வந்ததை ஒருவர் படம் எடுத்திருக்கிறார். நீர்க்கம்பம் ஏற்படுவதைப் பலர் கடலில் பார்த்திருக்கின்றனர். ஆனால் தீக் கம்பம் ஏற்படுவது இயற்கையில் அபூர்வமாகத்தான் நிகழும். சாதாரணமாக இரண்டே நிமிடம் நீடிக்கும் இந்த இயற்கை அற்புதம் ஆஸ்திரேலியாவில் 40 நிமிடங்களுக்கு நீடித்தது.

1923ஆம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட கிரேட் காண்டோ பூகம்பத்தின் போது இப்படிப்பட்ட தீக்கம்பம் தோன்றி 15 நிமிடங்களுக்குள் 38,000 பேரைக் கொன்றது. இயற்கையின் சீற்றத்தைத் தடுக்க எவரால் முடியும்?

1977ஆம் ஆண்டில் ஆந்திரத்தில் ஏற்பட்ட புயலில் பல்லாயிரக் கணக்கான மக்கள் இறந்தனர். சுனாமி போல ராட்சத அலைகள் புகுந்ததில் ஆந்திரக் கடலோரமாக இருந்த பல கிராமங்கள் சுவடே இல்லாமல் அழிந்தன. அப்போது கடலில் பெரும் தீயைக் கண்ட மக்கள் அதை விவரித்தபோது விஞ்ஞானிகளும் வானிலை நிபுணர்களும் இது சாத்தியமில்லை என்று கூறினர். 

கடலில் தோன்றிய மர்மத் தீ என்ன?

 ஆந்திராவில் புயல் தாக்கியபோது தரை மீது உருண்டுவந்த அலைகளின் மேல் தோன்றிய தீயைப் போல, வேறு நாடுகளிலும் தெரிந்தது உண்டு என தெரியவருகிறது.

கடல் தீ என்பது மின்சாரத்தால் உண்டாகும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கலாம். ‘அட்லாண்டிக் கடல் புயல்கள்’—என்ற ஆங்கில நூலில், கோர்டண்டன் மற்றும் பானர் மில்லர் எழுதிய நூலில், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு விளக்கம் உள்ளது.

பெருங்காற்றால் உந்தப்பட்டுப் பேரலைகள் கடற்கரையைத் தாக்கும்போது அலைகளின் மேல் பரப்பில் லட்சக் கணக்கான மின்மினிப் பூச்சிகள் போன்ற நீல நிறப் பொறிகள் தென்படும் என்றும் 1935ல் அமெரிக்காவில் ப்ளொரிடா மநிலத்தில் கீவெஸ்ட் கடலோரத்தைப் புயல் தாக்கியபோது மிகப் பரவலாக கடல் தீ காணப்பட்டது என்றும் அவர்கள் எழுதியுள்ளனர்.

இதோ அபிதான சிந்தாமணி தரும் விளக்கம்

1.வடவை என்பது கடலின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் ஊழித் தீ. பகன் என்பவன் தான் செய்த தவ அக்கினியை, பிதுர்கள் (இறந்தவர்கள்)  கட்டளைப்படி கடலில் விட, அது பெட்டைக் குதிரை உருக்கொண்டு தங்கியது.

2.சூரிய மண்டலத்தை தேவர் சாணை பிடிக்கையில் தெறித்த தீப் பொறிகளை விச்வகர்மன் சேர்த்துக் கடல் நீரை அடக்க கடலில் விட்டனன் என்பது விரத சூடாமணி தரும் தகவல்.

பதிற்றுப்பத்து விளக்க உரையில் கிடைக்கும் தகவல் இதோ:

“ கடலில் ஊற்று முதலியவற்றால் மிகுகின்ற நீர் கரை கடந்து உலகை அழிக்காதபடி, அதனை உறிந்து வற்றச் செய்வதொரு தீ பெண் குதிரையின் தலை வடிவில் கடலின் கண் உள்ளதென்று கூறுவர். படபாமுகாக்னி என்பது பெண் குதிரைத் தலை வடிவமாக உள்ள தீ என்று பொருள்படும் வட சொல்லாகும். அத் தீ உலகையே அழிக்கும் ஆற்றல் உள்ளதாகையால் அதனை ‘மடங்கல்’ எனக் குறிப்பிடுவர்.”

பல வடஇந்தியர்கள் பெயருக்குப் பின்னால் ‘படபாக்னி’ என்பதை ஜாதிப் பெயர் போல வைத்திருப்பதும் குறிப்பிடத்த்க்கது.

இதை ஏன் “குதிரை முகம்” கொண்ட தீ என்று வருணிக்கின்றனர் என்பது புரியவில்லை. வான நூல் நிபுணர்கள் அறிந்தது ஒரே குதிரை முகம் கொண்ட ‘நெபுலா’ தான்

ஊழித் தீ என்பது வடக்கில் இருக்கும் என்றும், கடலுக்கு அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் என்றும் யுக முடிவில் அது வெளியே வந்து எல்லாவற்றையும் அழித்துவிடும் என்றும் வடமொழி தமிழ் மொழி இலக்கியங்கள் கூறும்.

கபிலர், அரிசில் கிழார் போன்ற புலவர்கள் பதிற்றுப் பத்து என்னும் சங்க நூலில் சேர மன்னர்களின் சீற்றம் ஊழித் தீ போன்றது என்றும் சுவடே இல்லாமல் எதிரியை நிர்மூலமாக்கிவிடும் என்றும் பாடுகின்றனர். இது காளிதாசன் சாகுந்தலம், ரகுவம்சம் ஆகிய நூல்களில் கூறிய கருத்து. இதன் மூலம், கபிலருக்கு முன் வாழ்ந்தவன் காளிதாசன் என்று ஏற்கனவே ஆங்கிலக் கட்டுரையில் எழுதி இருக்கிறேன்.

வடவைத் தீ என்பது நார்வே, ஸ்வீடன், பின்லாந்து ஆகிய வட துருவப் பகுதியில் தோன்றும் ஆரோரா போரியாலிஸ் (Auroora Borealis) என்ற ஒளியோ என்று பலர் கருதினர். பூமியின் காந்த மண்டலம் காரணமாக வட துருவத்தை ஒட்டியுள்ள நாடுகளில் இரவு நேரத்தில் வானத்தில் வண்ண மிகு ஒளிகள் இந்திர ஜால வித்தைகள் காட்டும். சில நாட்களில் பிரிட்டனின் வட பகுதியான ஸ்காட்லாண்டிலும் கூட இதைக் காணலாம். ஆனால் இது வடவைத் தீ அல்ல.

ஹவாய் போன்ற தீவுகளிலும் பின்லாந்து போன்ற நாடுகளிலும் கடலில் இருந்து எரிமலைத் தீக்குழம்பு (lava from sub marine volcanoes) வந்த வண்ணம் இருக்கும். இது கோடிக் கணக்காண ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெறுகிறது. அங்கே கடலில் எப்போதும் தீக் குழம்பைப் பார்க்கலாம்.

இதோ திருமூலர் சொல்லும் அதிசய செய்திகள் !

கடல் தீ

வல்லவன் வன்னிககு இறையிடை வாரணம்
நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனை
இல்லென வேண்டா இறையவர் தம்முதல்
அல்லும் பகலும் அருளுகின் றானே. 23

23: Infinite Grace

The Mighty Lord, the God of Fire, set amidst the seas,

Whom the comprehending souls never deny;

He, the Lord of the Heavenly Beings all,

Who , day and night, pours forth His Divine Grace.

   xxxxx

அங்கிமி காமைவைத் தானுடல் வைத்தான்எங்குமி காமைவைத் தான்உலகு ஏழையும்தங்குமி காமைவைத் தான் தமிழ்ச் சாத்திரம்பொங்கிமி காமைவைத் தான்பொருள் தானுமே. 1587: Splendour Of Tamil Agamas
In Himself He contained the glowing Fire,
In Himself the Seven Worlds, and yet all space not filling
He contained too the Tamil Sastra, in lone splendour set,
Pregnant of import, deep yet recondite.

அங்கி மிகாமை வைத்தான் உடல்; வைத்தான்            

எங்கும் மிகாமை வைத்தான் உலகு ஏழையும்;

தங்கி மிகாமை வைத்தான் தமிழ்ச்சாத்திரம்

பொங்கி மிகாமை வைத்தான் பொருள்தானுமே.- திருமந்திரம்

     உடலை அளித்த சிவபெருமான் அந்த உடலில் அக்கினியை மிகாமல் இருக்கும்படி வைத்துள்ளான். பூவுலகம் முதலியவற்றையும் அழியாத வண்ணம் தீயை வைத்தான். குழப்பம் இல்லாமல் இருக்கத் தமிழ் ஆகமமான திருமந்திரத்தை வைத்தான். அனைத்துப் பொருள்களும் இதனுள் அடங்கும்படி வைத்துள்ளான்.

     விளக்கம் : அங்கி – தீ. உடலில் அங்கி குடரைச் சீர் செய்யும் சாடராக்கினி. உலகத்தில் வைக்கப்பட்ட தீயானது கடலைப் பெருகி எழாதபடி செய்யும் வடவாமுகாக்கினி. உலகம் – உயிர் ஆகியவை வாழும்படி செய்வது.

   xxxxx

365. சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்திஅமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரேதிகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசைமிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே365: To Quell Rising Tides Lord Placed Primal FireThe Lord, He creates allHimself the Being Uncreated–Who is there in the world belowThat thinking thus holds Him to heart?When the oceans ebbed and roaredHe placed the Primal Fire to quell the tides;How compassionate He was!

சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி

அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே

திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை

மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே.  4

சிவபெருமான் ஒளிப் பிழம்பாய்த் தோன்றிப் பிரம விட்டுணுக்களது மயக்கத்தை நீக்கித் தெளிவித்தபின், யாவரும் திகைக்கும்படி எழுந்த பிரளய வெள்ளம் குறையச் செய்து, பின்பு கடல் ஒலிக்கின்ற ஓசை மிக, அதனைக் கேட்டு அக்கடல் அடங்கி என்றும் அளவுட்பட்டு நிற்குமாறு அதன் நடுவில் வடவைத் தீயை வைத்தான்.

இவ்வாறு ஒன்றோடு ஒன்று ஒத்தும், ஒவ்வாதும் நிற்கும் ஆற்றல்களை கூட்டி உலகம் நெறிப்பட்டு நடக்குமாறு ஆக்கிக் காத்து நடத்த வல்லவனும், அவ்வாறு தன்னை ஆக்குவார் ஒருவர் இன்றித் தானே என்றும் நிற்பவனும் ஆகிய பெருமானை அறிந்து உளத்துள் துதித்தவர் உளரோ! இல்லை.

 —subham—-

Tags-  கடல் தீ,  திருமூலர் திருமந்திரம், வடவாக்கினி, , குதிரை முகம்,

அதிசய செய்திகள், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 22

ராமாயணத்தில் சாபங்கள் (24) குபேரனிடம் விராதன் பெற்ற சாபம்! (Post.13,333)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.333

Date uploaded in London – 13 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (24)

ராமாயணத்தில் சாபங்கள் (24) குபேரனிடம் விராதன் பெற்ற சாபம்! 

ச.நாகராஜன் 

அயோத்யா காண்டத்தை அடுத்து வரும் ஆரண்ய காண்டத்தில் 6 சாபங்களை நாம் காண்கிறோம்.

ஆரண்ய காண்டத்தில் 4-வது ஸர்க்கமாக அமைவது ‘விராதனின் மோக்ஷம்’.

ராமர், லக்ஷ்மணர், சீதை ஆகியோர் தண்டகாரண்யத்தில் நுழைகின்றனர்.

அங்கே வந்த சதஹ்ரதை என்பவளின் புத்திரனான விராதன் என்னும் ராக்ஷஸன் சீதையை தூக்கிச் செல்ல முயலவே அவனை கடுமையாக எதிர்த்துப் போரிடுகிறர்கள் ராமரும் லக்ஷ்மணரும்.

ராமர் அவனது வலது கரத்தை வெட்ட லக்ஷ்மணர் அவனது இடது கரத்தை வெட்டினார். அவன் கீழே விழுந்தான். அவனை நையப்புடைத்து பூமியில் பிசைந்தார்கள். ஆனால் அவன் ஜீவனை விடவில்லை. இவனைப் பள்ளம் தோண்டிப் புதைத்து விடுவோம் என்று ஶ்ரீ ராமர் கூறுகிறார். உடனே விராதன் ஶ்ரீ ராமரைப் பார்த்து பின்வரும் சொற்களை வணக்கமாய்த் தெரிவிக்கிறான்:

ஹதோஸ்மி புருஷவ்யாக்ர சக்ருதுல்ய பலேன வை |

மயா து பூர்வம் த்வம் மோஹான்ன ஞாத: புருஷர்ஷப: ||

புருஷவ்யாக்ர – புருஷோத்தம

சக்ருதுல்ய பலேன – இந்திரனுக்குச் சமமான பலமுடைய தேவரீரால்

அஸ்மி – நான்

ஹத: – வீழ்த்தப்பட்டேன்

மயா து – என்னால் தான்

பூர்வம் – முதலில்

மோஹாத் – அஞ்ஞானத்தால்

த்வம் – தேவரீர்

புருஷர்ஷப: – புருஷோத்தமர் என

ஞாத: ந – அறியப்படவில்லை

கௌஸல்யாசுப்ரஜா ராம தாத த்வம் விதிதோ மயா |

வைதேஹீ ச மஹாபாகா: லக்ஷ்மணஸ்ச மஹாபல ||

தாத – லோகபிதாவான

ராம – ஶ்ரீ ராம!

மயா – அடியேனால்

த்வம் – தேவரீர்

கௌஸல்யா சுப்ரஜா – கோசலா தேவியாரின் திருக்குமாரரான

விதித: – அறியப்பட்டீர்

மஹாபாகா – மஹாபாக்யவதியான

வைதேஹீ – வைதேஹியானவன்

ச – அங்ஙனமே அறியப்பட்டார்

மஹாபல: – மஹாபலசாலியான

லக்ஷ்மண: ச – லக்ஷ்மணரும் அப்படியே அறியப்பட்டார்

அபி சாபாதஹம் கோராம் ப்ரவிஷ்டோ ராக்ஷஸீம் தனும் |

தும்புருர்நாம கந்தர்வஸ்சப்தோ வைஸ்ரவணேன ச |\

தும்புரு நாம – தும்புரு என்ற பெயருடைய

கந்தர்வ: – கந்தர்வனான

அஹம் – நான்

வைஸ்வணேன – குபேரனால்

சப்த: ஹ – சபிக்கப்பட்டேன்

சாபாத் அபி – சாபத்தாலேயே

கோராம் – பயங்கரமான

ராக்ஷஸீம் – ராக்ஷஸ

தனும் – உடலை

ப்ரவிஷ்ட – பெற்றேன்

ப்ரஸாதமானஸ்ச மயா சோப்ரவீன்மாம் மயாயஷா: |

யதா தாசரதி ராமஸ்த்வாம் வதின்யதி சம்யுகே ||

ததா ப்ரக்ருதிமாபன்னோ பவான் ஸ்வர்க கமிஷ்யதி ||

மயா – என்னால்

ப்ரஸாதமான: – மன்னிக்குமாறு வேண்டப்பட்ட

மஹாயஷா: – பெரும் புகழ் பெற்ற

ச: – அவர்

மாம் – என்னைப் பார்த்து

அப்ரவீத் – பின்வருமாறு அருளிச் செய்தார்

யதா – எப்போது

தாசரதி – தசரதரின் திருக்குமாரரான

ராம: – ஶ்ரீ ராமர்

சம்யுகே – போரில்

த்வாம் – உன்னை

வதிஷ்யதி – கொல்வாரோ

ததா – அப்பொது

பவான் – நீ

ப்ரக்ருதி – பிறவி உருவத்தை

ஆபன்ன: – அடைந்தவனாய்

ஸ்வர்க ச – ஸ்வர்க்கத்தையும்

கமிஷ்யதி – அடைவாய்

இதி வைஸ்ரவணோ ராஜா ரம்பாசக்தம் புராநக |

அனுபஸ்தீயமானோ மாம் சங்க்ருத்தோ வ்யாஜஹார ஹ ||

அனக – புண்யாத்மாவே

புரா – முன்பு

வைஸ்ரவண: – குபேர

ராஜா – மன்னர்

அனுபஸ்தீயமான: – காலத்தில் சென்று சேவிக்கப்படாதவராய்

ரம்பாசக்தம் – ரம்பையினிடத்தில் மோஹித்துக் கிடந்தவராய்

மாம் – என் மீது

சங்க்ருத: – மிகச் சினம் கொண்டவராய்

இதி – மேற்கண்டவாறு

வ்யாஜஹார ஹ – சபித்தார்.

ஆரண்ய காண்டம், 4-ம் ஸர்க்கம், 12 முதல் 16-ம் ஸ்லோகம் முடிய

 இவ்வாறு தான் பெற்ற சாபத்தை விவரித்த விராதன், “இன்று தேவரீரது அனுக்ரஹத்தால் நான் கொடிய சாபத்திலிருந்து விடுபட்டவனாய் எனது லோகத்திற்குச் செல்லப் போகிறேன்” என்று கூறி விட்டு சரபங்க ரிஷியைக் காணச் செல்லுமாறு வழியைக் காட்டிவிட்டு உயிரைத் துறக்கிறான்.

ஆரண்ய காண்டத்தில் நாம் காணும் முதல் சாபம் இது!

***

Tamil Veda Tirukkural in Vishnu Sahasranama- 7 (Last Part)- Post No.13,332

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,332

Date uploaded in London – 12 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

There are lot of things to write about Tamil Veda Tirukkural(TK) and Vishnu Sahasranama (VS) from linguistic and grammatical angle. But I will deal with them later.

Now let us look at two avatars of Vishnu mentioned both in TK and VS. Valluvar mentioned many Hindu gods like Lakshmi, Indra, Shiva, Yama, Brahma and Avatars like Vamana/Trivikrama and Krishna in the Tamil Veda Tirukkura. Because of these references ancient poets praised it as Veda in Tamil.

xxxx

Pushkaraakshah – Word Number 556 in the VS

Aravindaaksha  347 – Kural 1103

VS mentioned Vishnu and Krishna as one with Lotus Eyes. This is applicable to Rama as well. Rama is praised as Raajeeva Nayana/lotus eyed in Sanskrit Kritis/ compositions. Krishna and Vishnu are praised as Lotus eyed in VS and common Bhajans.

For word No. 556 Pushkaraakshah, Adi Shankara (aadi Sankara) says,

One who shines as the light of consciousness when meditated upon in the lotus of the heart. Or One who has eyes resembling the lotus ( pushkara, kamala aravinda etc).

For word No. 347 Aravindaakshah , Adi Shankara (aadi Sankara) says,

One whose eyes resemble the lotus.

Tiruvalluvar in Tirukkural 1103 says

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு.- 1103

“Is the world of the lotus eyed  God Himself any sweeter than the tender arms,

Of the loving maiden in delightful embrace?”


Couplet Explanation:

Can the lotus-eyed Vishnu’s heaven be indeed as sweet to those who delight to sleep in the delicate arms of their beloved ?.

Most famous Tirukkural commentator Parimel azakar and others agree that it is Vishnu referred to in Kural 1103.

xxxx

Tri padaaya – 534; also Vamana 152

Vishnu’s Vamana(short man) Avatar is praised as Tri Vikrama (long man with three steps) in all hymns from the Rig Veda to simple slokas and songs like Andal’s Tiruppavai.

In the VS word No. Tri padaaya – 534 and Vamana 152 refers to it.

Tripadaaya – 534

One having three strides. The Sruti says ,

Triini pada vicakrame-

Other comments include Pranava with three letters, Varaha Avatar with three horns etc

Vamana 152

One who in the form of Vamana (vaamana)- dwarf- went begging to King Bali.

Or One who has to be devoutly worshipped .

Katha Upanishad says,

Madhye vaamanam aasinam visve devaahaa  upaasare—the Visve devas devoutly worship Vaamana  who is established in the middle.

All Hindus know that Vishnu came as a dwarf and begged for three feet long land and when King Bali said YES, Vamana, the dwarf became gigantic. His three steps engulfed the earth/universe.

***

Valluvar mentioned it with the words “Adi Alanthaan” in Kural 610

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு.—610

“A prince, who gives no room to sloth, will gain the whole universe

Which was measured in three steps by the Lord Trivikraman”- Kural 610

Or

The king whose life from sluggishness is rid,
Shall rule o’er all by foot of mighty God bestrid.

Couplet Explanation:

The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.

xxxx

Aksharaya – 481

Adi Shankara  says,

The changeless one. The Bhagavad Gita 15-16 also confirms it.

My Comments

Wisdom Library says,

Akṣara (अक्षरrefers to “imperishable”, according to the Śivapurāṇa 2.3.8.

Akṣara (अक्षरrefers to the “(sweet) tones (made by the instrument players)”, according to the Śivapurāṇa 2.3.46

Akṣara  (मकारrefers to the “(letters of the) alphabet”, according to the Śivapurāṇa 2.5.2

Akṣara (अक्षरor Akṣarakrīḍā refers to the “playing of akṣara” (a kind of dice-game) and represents one of the “sixty four kinds of Art”, according to the Kāmasūtra of Vātsyāyaṇa.

Akṣara (अक्षरrefers to the “imperishable” which is associated with Pūrṇagiri, one of the sacred seats (pīṭha), according to the Manthānabhairavatantra, a vast sprawling work that belongs to a corpus of Tantric texts

Imperishable, indestructible, undecaying, epithet of the Supreme as well as the Individual soul; यमक्षरं क्षेत्रविदो विदुस्तमात्मानमात्मन्यवलोकयन्तम् (yamakṣaraṃ kṣetravido vidustamātmānamātmanyavalokayantam) Kumārasambhava 3.5; द्वाविमौ पुरुषौ लोके क्षरश्चाक्षर एव   क्षरः सर्वाणि भूतानि कूटस्थोऽक्षर उच्यते (dvāvimau puruṣau loke kṣaraścākṣara eva ca | kṣaraḥ sarvāṇi bhūtāni kūṭastho’kṣara ucyate) Bhagavadgītā (Bombay) 15.16. यस्मात्क्षरमतीतोऽहमक्षरादपि चोत्तमः  अतोऽस्मि लोके वेदे  प्रथितः पुरुषोत्तमः (yasmātkṣaramatīto’hamakṣarādapi cottamaḥ | ato’smi loke vede ca prathitaḥ puruṣottamaḥ) Bhagavadgītā (Bombay) 15.18; the unconcerned (Spirit); अक्षरं ब्रह्म परमभ् (akṣaraṃ brahma paramabh) Bhagavadgītā (Bombay) 8.3.

There are 33 definitions according to Wisdomlib.com

I take it as an alphabet. That shows that Hindus considered writing with letters make a thing imperishable. So Hindus wrote everything with Aksharam/letters but unfortunately, they wrote on barks of the trees and palm leaves where as Egyptians and Sumerians wrote on rocks and clay tablets. Because of the favourable climate they are all preserved. Later Hindus also inscribed King’s orders on stones. Now we have over one lakh inscriptions.

But where is the connection between TK and VS?

Hindus not only knew about the imperishable writing but also they know that “A” is the first letter used in all languages all over the world and so they named letter also with A= ‘A’kshara

And also said “A is the first letter in all the languages and God is the first one”.

Note the significance of A in the word “A”-ksharam and in Bhagavad Gita and Tirukkural (TK).

“A” as its first of letters, every speech maintains;
The “Primal Deity” is first through all the world’s domains

or


“As the letter A is the first of all letters, so the eternal God is first in the world”.

கர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.- Kural 1

This is already in Bhagavad Gita

अक्षराणामकारोऽस्मि द्वन्द्वसामासिकस्य  |
अहमेवाक्षयकालो धाताहं विश्वतोमुख|| 33||

akṣharāṇām a-kāro ’smi dvandvaḥ sāmāsikasya cha
aham evākṣhayaḥ kālo dhātāhaṁ viśhvato-mukhaḥ

BG 10.33: I am the beginning “A” amongst all letters; I am the dual word in grammatical compounds. I am the endless Time, and amongst creators I am Brahma.

****

Jesus copied it like Valluvar

Since Jesus Christ lived in the Himalayas studying Hindu scriptures until the age of 33, he also said I am the Alpha

The phrase “I am the Alpha and the Omega” (Koiné Greek: ἐγώ εἰμί τὸ Ἄλφα καὶ τὸ Ὦ), is an appellation of Jesus and of the Father in the Book of Revelation (verses 1:8, 21:6, and 22:13)

My research

If you turn to dictionaries you will see more words under A than any other letter. If you turn to Sanskrit and Tamil poems you see a pattern. More poems begin  with A than other letters

Rig veda also begins with A

Agni meele purohitam…………………………………..

So I establish a connection between A-ksharam and A letter in the alphabet

–subham—

Tags- Letter A, Aksharam, Tirukkural, Sahasranama, lotus eye, Vishnu, Vamana, Tri Vikrama, Three feet

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—43  (Post No.13,331) Last Part

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,331

Date uploaded in London – 12 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Last Part

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

முடிவுரை

நான் ஏன் இதை வெளியிட்டேன் ?

ஏற்கனவே லண்டனில் லாட்டரி துறை பணத்தை நிதியுதவியாகப் பெற்று , பிரிட்டிஷ் லைப்ரரியில் உள்ள பத்து பழைய நூல்களை காப்பி எடுத்து தமிழ் மரபு அறக்க்கட்டளை வெப்சைட்டில் ஏற்றிவிட்டோம் ; எல்லோருக்கும் அது இலவசம். எல்லோரும் எப்போதும் அந்தப் பத்து நூல்களையும்  இலவசமாகப் படிக்கலாம்.. அதில் ஒன்றுதான் இந்த  மூலிகை மர்மம் எனும் நூல்.

ஆயினும் நான் இதை வெளியிட்ட காரணங்கள் :

1.பலரும் சம்ஸ்ருதக் கலப்பில்லாமல் பேசவும் எழுதவும் ஆசைப் படுகின்றனர் ; அது இயலாது . இந்த நூலைப் படித்தால் பல மூலிகையின் பெயர்கள், செயல் முறைகள் ஆகியன சம்ஸ்க்ருதத்தில் உள்ளன. பெரும்பாலான  தமிழ் மருத்துவ நூல்கள் இதைப்போல ஸம்ஸ்க்ருத்ச் சொற்களையே பயிலுகின்றன.

2.அப்படியே ஸம்ஸ்க்ருதத்தை ஒழித்துக்கட்டி விட்டாலும் இந்த வகைத் தமிழ் நூல்களின் அர்த்தம் புரியாமல்  மொழிபெயர்க்க ஆட்களை நியமிக்க வேண்டிவரும்.

3. மூலிகையை அகர வரிசையில் கொடுத்திருப்பது ஒரு மூலிகையின் பலனை உடனே அறிய உதவும். இது மூலிகை அகராதி போல உதவிக்கு வருகிறது. பல மூலிகைகளின், வியாதிகளின் பெயர்களை அறிய முடிகிறது.

4.பழங்காலத்தில் நாட்டு வைத்தியர்கள் பேசிய பரிபாஷை இந்த நூலில் அப்படியே உள்ளது. ஆகையால் மொழி வளர்ச்சி பற்றி ஆராய்வோருக்குப் பயனுல்லா நூல்.

5. இதிலுள்ள பல விஷயங்கள் தற்கால செயல் முறைக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்.ஆனால் விஷக்கடி மருத்துவம், ‘செக்ஸ்’ சம்பந்தமான மூலிகை ‘வயாக்ரா’ குளிகைகள் , காய கற்ப மூலிகைகளை சோதித்து பார்த்து உண்மையென்று கண்டால் குறைந்த செலவில் நிறைய பலன் கிடைக்கும். மேல் நாட்டு மருந்துகளில் காசு செலவழிக்கவே வேண்டாம்; வீட்டுக் கொல்லைப்  புறங்களிலேயே  முக்கிய மூலிகைகள் கிடைத்து விடும். காயகற்பம் உண்மையாயென்றால் 100 ஆண்டுக்கு காலம் நோய் இல்லாமல் வாழலாம்.

xxxx

வி

532.காச சுவாசத்திற்கு

விளா  மரத்து வேரின் பட்டையை   அரைத்துக்  கலக்கி உண்டுவந்தால் காச சுவாசம், அரோசகம், தாக்கம் பித்தம் இவை  தீரும் .

xxx

வெ

வெள்ளைப் புண்ணுக்கு

வெள்ளைக் குங்கிலியத்தைப் பொடித்து  வஸ்திரகாயம் செய்து திருகடி அளவு பாலில் கலந்து உண்டுவந்தால் வெள்ளை , புண் , பிரமேகம் , வெட்டை இவை  தீரும் .

xxxx

உதர நோய் மூலத்திற்கு

வெள்ளைப் பூண்டை பாலில் வேகித்து வெந்த பிறகு அந்தப் பூண்டைத் தின்று  பாலக் குடிக்கவும்.  வாய்வு உத்தர ரோகம் மூல ரோகம் நெஞ்சடைப்பு இவைகள்  தீரும்.

xxx

நீரடைப்புக்கு

வெள்ளரி  வித்தை பாலில் அரைத்தாவது வஸ்திரகாயம் செய்து கலந்தாவது உண்டுவந்தால்  நீரடைப்பு, கல்லடைப்பு , சதையடைப்பு  நீர்த்தாரை எரிவு  இவை நிவர்த்தியாகும் 

xxx

கரப்பான் வண்டு கடிக்கு

வெட்பாலையை பாலில் பிரயோகித்து கலக்கி உண்டுவந்தால், கரப்பான் வண்டுகடி  முதலிய வியாதிகள் நிவர்த்தியாகும்  .

xxxx

ஆறுபுள்ளி வண்டு கடிக்கு

வெள்ளெருக்கு மூலத்தைப் பாலில் அரைத்துக்  கலக்கி உண்டுவந்தால் சில்லறை விடம், பிரமேகம், கிரந்தி , வண்டு கடி, செய்யான் கடி , ஆறுபுள்ளி வண்டு கடி  மரவட்டைக்  கடி நிவர்த்தியாகும்  .

xxxx

உஷ்ண மேகத்திற்கு

வெள்ளருகு சமூலத்தை பாலிலாவது தயிரிலாவது அரைத்துக்  கலக்கி உண்டுவந்தால் சொறி சிரங்கு கிரந்தி வெட்டை பிரமேகம் உஷ்ணமேகம் வெள்ளை நிவர்த்தியாகும் 

xxxx

நீர்க்கட்டை உடைக்க

வெள்ளை சார்வேளை இலையின் சாறு 9 விராகன் எடை பசும்பால்  12 — விராகன் எடை இவ்விரண்டும் கலந்து குடிக்க  நீர்க்கட்டை உடனே உடைக்கும்.

XXXX

வெண்குட்ட சாந்தி

வெள்ளைப் பூண்டு நவாச்சாரம் இரண்டும் சரியிடை கொண்டு அரைத்து வெண்குட்டத்தின் மேல்  தடவி வந்தால்  வெண்மை மாறும்.

XXXX

தாது புஷ்டிக்கு

வெங்காய விரை கால் பலம் எடுத்து கோழிமுட்டையின் வெண்கருவில் கலக்கிக் குடித்துவர வீரியம் அதிகரிக்கும் . மேற்படி விரையை தேனில் கலந்து குடித்தாலும் தாது புஷ்டியுண்டாம்

XXXX

தாது புஷ்டிக்கு

வெள்ளை வெங்காயத்தை அரிந்து நெய்யில் வறுத்து சாப்பிடவும். . இப்படி ஒரு வேளைக்கு ஒரு வெங்காயமாக இரு வேளையும் 20 நாள்  சாப்பிடவும்

XXXX

543.புண்ணுக்கு  கட்டு

வெள்ளாட்டுப் புழுக்கையை சிறு பிள்ளைகள் மூத்திரம் விட்ட ரைத்து   ஆறாத புண்களின் மேல் வைத்துக் கட்ட ஆறிப் போகும்.

XXXX

வே

குத்திருமல் ஈளைக்கு

வேங்கை மூலத்தைப் பாலில் அரைத்துக்  கலக்கி உண்டுவந்தால் குத்திருமல் ஈளை, உள மாந்தை புண் சீழ் வடிதல் மலக்கட்டு நீங்கும்.

xxxx

பல் வகை கிரந்திக்கு

வேலிப்பருத்தி  சமூலத்தைப் பாலில் அரைத்துக்  கலக்கி உண்டுவந்தால்  பல்வகை கிரந்தி – மருந்தீடு-   கைகால் பிடிப்பு – வாய்வு தீரும்.

xxxx

தீச்சுட்ட புண்ணுக்கு

வேப்பங் கொழுந்தை சிதைத்து ஆமணக்கு இலையில் பொதிந்து உமி காந்தலில் பொதிந்தது வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண் மேல் வைத்துக்கட்ட ஆறிவிடும்.

xxxx

547.கிருமிகள் விழ

வேப்பீர்க்கு பத்து விராகனிடை  கடுக்காய்த் தோல் 4 விராகனிடைபிரண்டைச் சாற்றில் மை  போல அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்துக் கொடுக்க கிருமிகள் வந்து விடும்.

xxxx

மூலிகை மர்மம்

பிரிட்டிஷ் லைப்ரரி சீல் 18 மே 1900

முற்றிற்று

இதில் விட்டவை   முதலிய மற்றவைகளை இரண்டாம் பாகத்தில் காட்டப்படும் .

–சுபம்—

TAGS–மூலிகை மர்மம், முற்றும் , முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 43 

ராமாயணத்தில் சாபங்கள் (23) பரதன் கைகேயியை நிந்தித்தது (Post No.13,330)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.330

Date uploaded in London – 12 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 ராமாயணத்தில் சாபங்கள் (23)

ராமாயணத்தில் சாபங்கள் (23) பரதன் கைகேயியை நிந்தித்தது!

ச.நாகராஜன் 

அயோத்யா காண்டத்தில் 74-வது ஸர்க்கமாக அமைவது ‘கைகேயி நிந்தை’.

இந்த ஸர்க்கத்தில் பரதன் தன் தாயான கைகேயியை நிந்திக்கிறான்.

மகத்தான பாப காரியத்தைச் செய்து விட்டாயே என்று கடிந்து கொள்கிறான்.

ப்ரூணஹத்யாமஸி ப்ராப்தா குலஸ்யாஸ்ய விநாஷநாத் |

கைகேயி நரகம் கச்ச மா ச பர்து: சலோகதாம்!!

கைகேயி – கைகேயி

அஸ்ய குலஸ்ய – இந்த குலத்திற்கு

விநாஷநாத் – கேடு விளைவித்தால்

ப்ரூணஹத்யாம் – கர்ப்பச் சிதைவு பாவத்தை

ப்ராப்தா அஸி – (நீ) அடைந்தவளாகின்றனை

நரகம் கச்ச – நரகத்தை அடை

பர்து: – கணவருடன்

சலோகதாம் – இருத்தலை

மா ச – அடைய மாட்டாய்

–    அயோத்யா காண்டம் 74-ம் ஸர்க்கம் 4-ம் ஸ்லோகம்

“கொடியவளே உன்னால் மன்னர் தசரதன் இறந்து விட்டார். தர்மவானான ராமர் காட்டுக்குச் சென்று விட்டார். நீ ராஜ்யத்தை விட்டு ஓடி விடு” என்று கூறிய பரதன் காமதேனுவின் கதையையும் கைகேயிக்கு உரைக்கிறான்.

காமதேனு தனது இரு காளைக் கன்றுகளை பூமியில் பாரம் சுமப்பவையாகக் கண்டு வருந்தியது. களைப்படைந்த அந்த காளைகளைக் கண்டு கண்ணீர் சொரிந்தது. அந்த வாசனையுடைய கண்ணீர்த் துளிகள் கீழே சென்று கொண்டிருந்த தேவேந்திரன் உச்சியில் விழுந்தன. இந்திரன் உடனே காமதேனுவிடம் அது வருந்துவதற்கான காரணத்தைக் கேட்க காமதேனு தன் இரு குழந்தைகளைப் பற்றி வருந்துவதாகக் கூறியது. இதைக் கண்ட இந்திரன் புத்திரனைக் காட்டிலும் மேலானது ஒன்று இல்லை என்று தனக்குள்ளேயே நினைத்துக் கொண்டான்.

காமதேனுவின் கதையைக் கூறிய பரதன் உடனே கீழ்க்கண்ட வார்த்தைகளைக் கூறுகிறான்:

அப்போது அருகே உள்ள கோசலையைச் சுட்டிக் காட்டிச் சொல்வது இது:-

ஏகபுத்ரா ச சாத்வீ ச விவத்ஸேயம் த்வயா க்ருதா |

தஸ்மாத் த்வம் சததம் துக்கே ப்ரேத்ய சேஹ ச லப்யஸே ||

–    அயோத்யா காண்டம் 74-ம் ஸர்க்கம் 29-ம் ஸ்லோகம்

ஏகபுத்ரா  ச – ஒரே புதலைவனைப் பெற்றவளும்

சாத்வீ ச – புண்ணியச் செயல் உடையவளுமான

இயம் த்வயா – இவள் (கோசலை தேவியாகிய இவள்) உன்னால்

விவத்ஸா – புத்திரனைப் பிரிந்தவளாய்

க்ருதா – செய்யப்பட்டாள்

தஸ்மாத் – அந்தக் காரணத்தினால்

த்வே இஹ ச – நீ இங்கும்

ப்ரேத்ய ச – இறந்தும்

சததம் துக்கம் – சதா துக்கத்தை

லப்யஸே – அனுபவிக்கப் போகிறாய்.

இவ்வாறு பரதன் கூறுகின்ற வார்த்தைகளில் சாபம் தருகின்ற பாங்கு இல்லை. என்றாலும் சாபத்தைப் போன்ற வார்த்தைகளே வந்துள்ளதைக் காணலாம். பரதனுக்குச் சாபம் கொடுக்கும் சக்தி உண்டா என்பதும் எப்படி வந்தது என்பதும் இங்கு தரப்படவில்லை.

அயோத்யா காண்டத்தில் உள்ள ஐந்து சாபங்களில் இது ஐந்தாவது சாபமாக அமைகிறது.

இத்துடன் அயோத்யா காண்டத்தில் உள்ள சாபங்களின் விவரம் முடிகிறது.

**

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்- 4 (Post.13,329)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,329

Date uploaded in London – 11 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆதி சங்கரர் அவருடைய விஷ்ணு சஹஸ்ரநாம (வி.ச.)பாஷ்யத்தில் மேலும் பல அற்புத மேற்கோள்களை அளிக்கிறார்.

குந்த – வி.ச. நாமம் 809

குந்த மலர் / மல்லிகைப்பூப்  போல மென்மையான அங்கங்களை உடையவர். அல்லது தூய்மையில் பளிங்கு போல சுத்தமானவர்.அல்லது ‘கு’ என்னும் பூமியை காஸ்யப ரிஷிக்கு அளித்தவர் .

ஹரிவம்சம் (மகாபாரதத்தின் பிற்சேர்க்கை) சொல்கிறது

சர்வ பாப விசுத்யர்த்தம் வாஜி-மேதேன சேஸ்தவான்

தஸ்மின் யக்ஞே மஹா  தானே தக்ஷிணாம் ப்ருகு நந்தனஹ

மாரீசாய ததெளபிரிதஹ கஸ்யபாய வசுந்தராம்

பொருள்

    பிருகுவின் மகனாகிய பரசுராமன் பாவங்களிலிருந்து விடுபடுவதற்காக அஸ்வமேத யாகம் செய்தார் அந்த யக்ஞத்தில் பெரிய பரிசுகள் தரப்பட்டன. மரிசியின் புதல்வனான காஸ்யபருக்கு பரசுராமர் தான் வென்ற பூமி (நாடுகள்) அனைத்தையும் தானமாக அளித்தார்.

XXXX

ஸப்த ஜிஹ்வா – நாம எண் 827

இறைவன் அக்கினி ரூபத்தில் தோன்றியபோது அவருடைய சுவாலையில் ஏழு நாக்குகள் /  பிழம்புகள் இருந்தன.

முண்டகோபநிஷத் 1-2-4 சொல்கிறது,

காலீ கராலீ ச மனோஜவா ச ஸு லோ ஹிதாயா ச தூம்ரவர்ணா

ஸ்புலிங்கிநீ  விஸ்வருசீ  ச தேவி லோலாயமானா இதி ஸப்த ஜிஹ்வா.

பொருள்

தீக்கு ஏழு நாக்குகள்; அவை- காலீ , கராலீ, மனோஜவா ,  சுலோஹிதா,  ஸு தூம்ரவர்ணா , ஸ்புலிங்கினீ, விஸ்வருசீ ஆகியவை .

XXXX

கதிதஹ – நாம எண் 848

பரம்பொருள் என்று மறைகளால் போற்றப்பட்டவர் நம்முடைய சமய நூல் சொல்வதாவது ,

வேதே ராமாயணே புண்யே  பாரதே பரதர் ஷப

ஆதெள மத்யே ததாசந்தே விஷ்ணுஹூ  ஸர்வத்ர கீயதே

பொருள்

வேதம், ராமாயணம்,மஹாபாரதம் முதலியவற்றின் துவக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் அவ்வாறே புராணங்களிலும் விஷ்ணுவே போற்றப்படுகிறார்.

பாகவதம் சொல்கிறது

வாஸூ தேவ பராவேதா வாஸூ தேவ பரா மகாஹா 

வாஸூ தேவ பராயோகா வாஸூ தேவ பராக்ரியாஹா

வாஸூ தேவ பரம் ஞானம் வாஸூ தேவ பரம் தபஹ

வாஸூ தேவ பரோ தர்மஹ  வாஸூ தேவ பரா கதிஹி

பாகவதம் 1-2-28/29

கடோபநிஷத் 3-11சொல்வதாவது

புருஷான்ன பரம் கிஞ்சித் ஸா காஷ்டா ஸா

XXXX

ப்ரியார்ஹ — நாம எண் 872

பிரியமான வஸ்துக்களை அர்ப்பணம் செய்தற்குரியவர்.

ஸ்ம்ருதி சொல்கிறது,

யத்யதிஷ்டதமாம் லோகே யச்சாஸ்ய தயிதம் க்ருஹே

தத்தத் குணவதே தேயம் ததோ வாக்ஷய -மிச்சதா

பொருள்

வாழ்க்கையில் எது முக்கியனானதென்று ஒருவர் கருதுகிறாரோ, வீட்டில் எது பிரியமானது என்று கருதுகிறாரோ, அதைப்பாதுக்காகவும் வளர்க்கவும் அதை பாத்திரம் அறிந்து தானம் செய்யவேண்டும்.

.பகவத் கீதையில் 7-17 பகவான் சொல்கிறார்-  நான் ஞானிகளுக்குப் பிரியமானவன் ;ஞானியம் எனக்குப் பிரியமானவன்.

தமிழிலும் ஒரு பழமொழி உண்டு :

தனக்கு மிஞ்சியதே தான தர்மம் .

தனக்கு பயன்படுத்தியது போக  மிஞ்சி இருப்பதை தானம் செய்ய வேண்டும் என்று பலரும் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். உண்மையில் இதன் பொருள் தன் சக்திக்கும் அதிகமாகக் கொடுப்பதே தானதர்மம் ஆகும். ஒரு கோடீஸ்வரன் ஒரு பிச்சைக்காரனுக்கு 100 ரூபாய் கொடுத்தால் அது பெரிய தருமம் இல்லை. சில கோடீஸ்வரர்கள் தனக்கு வருவதை எல்லாம் ஏழைகளுக்கு ஒதுக்குவது அவரது சக்திக்கு   மிஞ்சியது ஆகும் .

இதை நிரூபிக்க இந்துக்களின் இன்னுமொரு வழக்கத்தைக் குறிப்பிடலாம். காசிக்குப் போய் கங்கையில் குளித்தால் மிகவும் பிரியமான ஒரு உணவுப்பொருளைக் கைவிட வேண்டும் என்பது இந்துக்களின் சம்பிரதாயம். ஏற்கனவே பிடிக்காத காய், பழத்தை விடுவது தியாகம் இல்லை ; தனக்கு மிகவும் பிரியமானதை விடவேண்டும் இதுதான் தனக்கும் மிஞ்சியது தானதர்மம் என்பதை நன்றாக விளக்கும்.

XXXX

ஸ்வஸ்தி தக்ஷிணா — நாம எண் 905

விரைவாக மங்களம் தருபவர் .

பிரம்மாண்ட புராணம் 83-17 சொல்கிறது,

ஸ்ம்ருதே ஸகல கல்யாண பாஜனம் யத்ர ஜாயதே

புருஷஸ் தம் அஜம் நித்யம் வ்ரஜாமி சரணம் ஹரிம்

பொருள்

நான் பிறப்பற்ற, என்றுமுள்ள ஹரியைச் சரண் அடைகிறேன் .யார் ஒருவரை நினைத்த மாத்திரத்தில் எல்லா

மங்களங்களையும் தருகிறாரரோ அப்படிப்பட்ட ஹரியைச் சரண் அடைகிறேன்.

இன்னுமொரு சுபாஷிதமும் உளது .

ஸ்மாரணாத் ஏவ க்ருஷ்ணஸ்ய பாப சங்காத பஞ்சரம்

சததா பேதம் ஆயாதி கிரிர் வஜ்ர அதோ யதா

பொருள்

வஜ்ராயுதத்தினால் தாக்கப்பட்ட மலை பிளந்தது போல கிருஷ்ணரை நினைத்த மாத்திரத்தில் குவித்து வைக்கப்பட்ட பாவங்கள் அனைத்தும் பொடிப்பொடியாகின்றன.

xxxxx

சக்ரி – நாம எண் 908

மனஸ் தத்துவமாகியசுதர்சனம் என்னும் சக்கரத்தைத் தரிப்பவர்.

ஸமஸ்த லோக ரக்ஷ்ஆர்த்தம்  மனஸ் தத்வாத்தமகம்

சுதர்சனாக்யம் சக்ரம் தத்த இதை சக்ரீ 

சக்ர ஸ்வரூபம் அத்யந்தம் ஜவேனாந்தரிதா நிலம் நயந்த

சக்ர ஸ்வரூபம் ச ஹத்தே விஷ்ணுஹு கரஸ்திதம்

பொருள்

மஹா விஷ்ணுவானவர் மனது என்னும் சக்கரத்தைக் கையில் வைத்திருக்கிறார். அது காற்றினும் கடுக்கிச் செல்ல வல்லது .

தொடரும் …………………….

Tags- தானம், தனக்கு மிஞ்சி, விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள்ரகசியங்கள்மேற்கோள்கள்– 4