விண்ணில் பறந்த முதல் பெண்மணி – வாலண்டினா தெரஷ்கோவா! – 1 (Post No.13,309)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.309

Date uploaded in London – 6 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

29-5-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

விண்ணில் பறந்த முதல் பெண்மணி – வாலண்டினா தெரஷ்கோவா! – 1

ச .நாகராஜன்

ஒரு பெண்ணினால் எதையும் சாதிக்க முடியும்; அதிலும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த சாதாரண பெண்மணி முன்னேறி உயர்ந்து விண்ணில் பறக்க முடியும் என்பதை நிரூபித்தவர் வாலண்டினா தெரஷ்கோவா என்ற ரஷ்ய பெண்மணி!

உலகப் பெண்களின் ஆதர்ச நாயகியாக கொண்டாடப்படும் இவருக்கு இப்போது வயது 87. இன்னும் அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டு வாழும் இவரது வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கை!

பிறப்பும் இளமையும்

ரஷியாவின் பிரசித்தி பெற்ற வோல்கா நதிக்கரையில் அமைந்துள்ள போல்ஷோவ் மஸ்லென்னிகோவோ என்ற கிராமத்தில் 6-3-1937 அன்று எளிய உழைக்கும் வர்க்க குடும்பத்தில பிறந்தார் வாலண்டினா தெரஷ்கோவா.

அவரது தந்தை விளாடிமிர் தெரஷ்கோவ் ஒரு விவசாயி. டிராக்டர் டிரைவராக பணி புரிந்தார். வாலண்டினாவிற்கு இரண்டு வயதாக இருக்கும் போதே அவர்      ஃபின்னிஷ் விண்டர் போரில் சோவியத் படையின் சார்பாகப் போரிட்டு இறந்தார். தாயார் சின்னக் குழந்தையை தூக்கிக் கொண்டு யரோஸ்லவ் என்ற ஊருக்கு இடம் பெயர்ந்து ஒரு பஞ்சாலையில் வேலை பார்க்க ஆரம்பித்தார்.

எட்டு வயதில் பள்ளியில் சேர்ந்த வாலண்டினா 16 வயதில் படிப்பை முடித்தார். முதலில் ஒரு டயர் தொழிற்சாலையிலும் பின்னர் பஞ்சாலை ஒன்றிலும் வேலை பார்க்க ஆரம்பித்தார். தபால் மூலம் அவரது படிப்பு தொடர்ந்தது.

ஸ்கை டைவிங்

இயல்பாகவே அவருக்கு ஸ்கை- டைவிங்கில் ஆர்வம் ஏற்பட்டது. 22-ம் வயதில் 21-5-̀1959-ல் தனது முதல் பயிற்சியாக வானத்திலிருந்து குதித்தார். பாராசூட்டிலிருந்து குதிப்பது அவருக்கு எளிதில் கை வந்த கலையாக ஆனது.

அத்தோடு கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு உறுப்பினராகவும் அவர் 1962-ல் சேர்ந்தார்.

விண்வெளியில் பறந்த யூரி ககாரின்

1961-ல் யூரி ககாரின் விண்வெளியில் பறந்து உலகையே பரபரப்புக்குள்ளாக்கினார்.

இந்தப் பரபரப்பை மேலும் அதிகமாக்க ரஷியா விரும்பியது. ஒரு பெண்மணியை விண்வெளியில் பறக்க வைத்தால் என்ன என்ற யோசனை ரஷிய உயர்மட்ட அதிகாரிகளிடம் தோன்றவே அதை நிறைவேற்ற தகுந்த ஒரு பெண்மணியை அவர்கள் தேடலாயினர்.

பெண்மணிக்கு வாய்ப்பு

80000 பெண்மணிகள் விண்ணில் பறக்க விரும்பி விண்ணப்பம் செய்தனர். 30 வயதிற்குள்ளாக இருக்க வேண்டும், 70 கிலோ எடைக்குள்ளாக இருக்க வேண்டும், உயரம் 170 செண்டிமீட்டரைத் தாண்டக் கூடாது, விண்ணில் பறக்கும் திறன் இருக்க வேண்டும் – ஆகிய இவை அடிப்படைத் தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டன.

ஏராளமான கடுமையான பயிற்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட 58 பேருக்குத் தரப்பட்டது. அதில் 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் ஐவர் இறுதிச் சுற்றுக்குத் தயாராயினர்.

வாலண்டினா 126 முறை பாராசூட்டிலிருந்து குதித்து நல்ல திறமையைப் பெற்றிருந்ததால் அவர் இந்த ஐவரில் ஒருவராக இருந்தார். சோவியல் விமானப்படையில் சேர்க்கப்பட்டு பயிற்சியும் அவருக்குத் தரப்பட்டது.

எப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டார்

இவருடன் போட்டியிட்ட ஐவரில் சோலோவ்யெவா என்பவர் 700 முறை பாராசூட்டிலிருந்து குதித்திருக்கிறார். பாராசூட் ஜம்பிங்கில் மாஸ்டர் என்ற பெயர் எடுத்திருக்கிறார். ஆனால் இவரையும் மீறி வாலண்டினா எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்?

அவரது குடும்பப் பின்னணி அவருக்கு உதவி செய்தது. சாதாரண உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பெண்மணியாக அவர் இருந்ததால் ரஷிய அதிபரான குருஷேவ் அவரைத் தேர்ந்தெடுத்தார். மக்களின் பெண்மணியாக அவர் திகழ்வார் என்று அவர் நம்பினார். ஆகவே அவரே விண்வெளிப் பெண்மணியாக அறிவிக்கப்பட்டார்.

அத்துடன் மட்டுமின்றி மற்ற பெண்மணிகள் விண்ணிலிருந்து வந்த பின்னர் அவர்கள் விண்வெளித் துறையில் மட்டுமே ஈடுபடுத்த வல்லவராக இருப்பார்கள். ஆனால் வாலண்டினாவோ நல்ல மன உறுதி வாய்ந்தவர், ஒவ்வொருவரிடமும் பழகும் போதும் மிக நல்ல பெயரை எடுக்கிறார்,  நாட்டின் பெருமையை உயர்த்த வல்ல  பேச்சுத் திறனுடன் சமுதாயத்தில் நன்கு பழகக் கூடியவர். ஆகவே சமூகத்தில் சிறப்புடன் பணியாற்ற முடியும். இப்படிப்பட்ட காரணங்களை அவரது கமாண்டர் நிகோலய் கமானின் தனது குறிப்பேட்டில் பதிவு செய்தார். ஆகவே இவையும் அவருக்குச் சாதகமாக அமைந்தது.

விண்வெளியில் பறந்த முதல் பெண்மணி

1963-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ம் நாள் வோஸ்டாக் 6 என்ற விண்கலத்தில் விண்ணில் பறந்தார் வாலண்டினா. 48 முறை அவர் பூமியைச் சுற்றினார். மூன்று நாட்கள் அவர் விண்வெளியில் இருந்தார். விண்வெளியில் தனியாகப் பறந்த பெண்மணி என்ற பெயரையும் பெருமையையும் அவர் பெற்றார். 26-ம் வயதிலேயே விண்வெளி வீராங்கனை ஆனதால் விண்ணில் பறந்ததிலேயே இளமையானவர் என்ற பெயரும் அவருக்குக் கிடைத்தது.

அவருக்குப் பின்னால் 19 வருடங்கள் கழிந்த பின்னரே, 1982-ல் தான் ஸ்வெட்லான ஸவிட்ஸ்கயா என்ற ரஷிய பெண்மணி அடுத்ததாக விண்ணில் பறந்தார்.

பல அபாயங்கள்

விண்ணில் இருந்த போது அவர் நெடுநேரம் மௌனமாகவே இருந்தார். நிர்ணயிக்கப்பட்டிருந்த அனைத்து சோதனைகளையும் அவரால் முடிக்க முடியவில்லை. களைப்பினால் ஒரு சமயம் அவர் விண்கலத்தில் தூங்கி விட்டார். பூமியிலிருந்து வரும் தகவல்களுக்குச் சில சமயம் அவர் பதில் சொல்லவே இல்லை. ஒரு வழியாக அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பினர்.

ஆனால் ஏராளமான அபாயங்களுக்கு ஈடு கொடுத்து அவர் விண்ணிலிருந்து மீண்டார்.

சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் தான், ஒரு பேட்டியில் நடந்தது என்ன என்பதை அவர் குறிப்பிட்டார்.

வோஸ்டாக் – 6 என்ற அவரது விண்கலம் தவறான கோ- ஆர்டினேட்டுகளை கணினியில் கொண்டிருந்தது. அதைக் கண்டுபிடித்து, சரி செய்து பூமியில் இறங்கும் தருணம் வந்த போது விண்கலம் நேர் எதிர் திசையில் செல்ல ஆரம்பித்தது. இதைப் பார்த்து திடுக்கிட்ட வாலண்டினா உடனடியாக கணினி இயக்கத்தை நிறுத்தி விட்டு நேரடியாக தானாகவே விண்கல இயக்கத்தை சரியான ஓடு பாதையில் ஓடும்படி சரி செய்தார்.

பூமிக்கு வந்து இறங்கியதும் அவருக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளிலிருந்து சிறிது விலகினார். அவரது மீட்புக் குழு அவரிடம் வந்து சேரும் முன்னர், விண்ணில் சோதனைக்காக எடுத்துச் சென்றிருந்த உருளைக்கிழங்கினால் ஆன பசைபோன்ற உணவின் ஒரு பகுதியை அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு விநியோகித்து ஆனந்தித்தார்.

இதைக் கேள்விப்பட்ட உயர் அதிகாரியான கோரொலெவ், “ஐயோ! போதும், போதும் இன்னொரு பெண்மணியை எனது ஆயுள் காலத்தில் விண்வெளிக்கு அனுப்பமாட்டேன்” என்று ஜோக் அடித்தார்.

*****

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—41(Post No.13,308)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,308

Date uploaded in London – 5 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதோ தொடர்ச்சி………

xxxxx

மி

505. மிளகு வைத்தியம்

மிளகை சூரணித்து அப்போது கறந்த பசும்பாலில் போட்டு அருந்தி வந்தால் குளிர் சுரம்- பாண்டு- கபம்- கிராணி -குன்மம்- வாய்வு- மூலம் – பித்தம்- இருமல்- பிரமேகம் இவை தீரும் .

xxxxx

அஸ்தி சூட்டுக்கு

மின்னைக் கீரையை மிளகு தூளிட்டு கிரமப்படி குழம்பு செய்து சாப்பிட்டு வந்தால் அஸ்தி சூடு- வேட்டை- இதுகள் சாந்தியாகும் – கண் குளிர்ச்சியுண்டாம் .

xxxxx

குளிர் சுரத்திற்கு

மிளகை கஷாயம் வைத்து எட்டுக்குக்கொரு பா கமாய் இறக்கி வடிகட்டிக்கொடுத்து சக்திக்கிசைந்தபடி லங்கணம் போட சாந்தியாகும் .

xxxxx

இருமல் சாந்தி

மிளகரணையை  சூரணித்து இந்த சூரணத்திற்கு அரை பாகம் (திப்பிலி- கடுக்காய் தோல் – சுக்கு) இம்மூன்றும் சேர்த்து இடித்த சூரணம் கூட்டிக் கலந்து திருகடிப்பிரமாணம் சாப்பிட்டு வர இருமல்- ஈளை – கபம்- பித்தம் சாந்தியாகும் .

xxxxx

மு

ரத்த கிராணிக்கு

முள்ளிலவம் பிசினியை தயிரில் அரைத்து மூன்று நாள் காலையில்  கொட்டடைப்பாக்களவு கொடுத்து வரத் தீரும் .

xxxxx

நீர்ச்சுருக்குக்கு

முள்ளங்கிக் கிழங்கை இடித்து சாறு பிழிந்து வெள்ளைச் சக்கரை கலந்து சாப்பிடத்  தீரும். மூன்று வேளை சாப்பிடவும் .

xxxxx

அரையாப்புக்கட்டி கரைய

முருங்கை வேர்ப்பட்டையும் புழுங்கலரிசியும் உப்பும் சமன்  கூட்டி அரைத்து கட்டி மேல் வைத்துக்கட்ட கரையும் ; மூன்று நாள் கட்டவும்.

xxxxx

காது செவுட்டுக்கு

முருங்கைவேரும்  கொன்னை வேரும் சமன் கொண்டுஇடித்து  சாறு பிழிந்து காதில் ஒரு துளி விடவும். இப்படி மூன்று நாள் விடத் தீரும்.

xxxxx

தாது புஷ்டிக்கு

முருங்கை வித்தைப் பாலில்   போட்டுக் காய்ச் சியுண்டுவந்தால் இந்திரியம் கட்டுப்படும். தாது புஷ்டியுண்டாம் .

xxxxx

ஸ்தனமில்லாதவர்க்கு

முத்தெருக்கன் செவி மூலத்தைப் பாலில் அரைத்துக் கலக்கியுண்டு வந்தால் சிறிதாயுள்ள ஸ்தனங்கள் பெருத்து விம்மும் .கரப்பான் புருவு பிளவை தீரும் .

xxxxx

உமிழ்நீர் சுரப்புக்கு

முசுமுசுக்கையைக் கஷாயம் வைத்து நாலுக்கொன்றாய் இறக்கி குடி நீராகக்கொடுத்து வந்தால் பித்தவுபரி உமிழ்நீர் சுரப்பு இவை தீரும்.

xxxxx

மூ

அரையாப்புக்கு

மூக்குரட்டை  வேரை அரைத்து புன்னைக்காயளவு எடுத்து காலாழாக்கு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும். மீன் கருவாடு புளி புகை லாகிரி ஆகாது .இப்படி மூன்று நாள் கொள்ளத் தீரும்.

xxxxx

இரத்த பித்தத்திற்கு

மூங்கில் வித்தைப் பாலில் கொள்ள இரத்த பித்தம் கண்ணோய் இவைகள் தீரும் .

xxxxx

எட்டு வகைக் குன்மம் நரை திரை மாற

மூக்கரணைச் சாரணை வேரை ஆவின் பாலில் அரைத்துக் கலந்துண்டு வந்தால் ஒரு மண்டலத்தில் நரை திரை மாறும் . உடல் இருகும் . பகலில் நட்சத்திரம் தெரியும் .எட்டு வகைக் குன்மம் சாந்தியாகும் .

xxxxx

to be continued………………………………

tags- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள், Part 41

London Swaminathan’s Article Index for May 2024 (Post 13,307)

London Swaminathan with his brother Prof. Suryanarayanan in front of  Buckingham Palace in London, May 2024

London Swaminathan’s Article Index for May 2024 (Post 13,307)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,307

Date uploaded in London – 5 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Index No.138

More Secrets from Vishnu Sahasranama! – Part 1 (Post.13,196) 1-5-2024

To

More Secrets from Vishnu Sahasranama! – Part 17 20/5

(seventeen parts; then continued in June)

xxxx

75 Beautiful Quotations from Vishnu Sahasranama Commentary- Part 1 (Post No.13,262) 21/5

To

75 Beautiful Quotations from Vishnu Sahasranama Commentary- Part 10/ 30/5

(ten parts;finito)

xxxx

London Swaminathan’s Article Index for April 2024 (Post No.13,212) 6/5

xxxx

PURI JAGANNATH TEMPLE MYSTERY -MODI RAISES THE ISSUE AGAIN 24/5 from newspapers

xxxx

June 2024 Calendar- More Shirdi Sai Baba Golden Sayings (Post No.13,287) 30/5

Welcome to London : Try lifting 13 Kilo Gold Bar in London Museum (Post No.13,292) 31/5

xxxx

London Swaminathan with world famous detective Sherlock Holms in Baker Street in London, May 2024

Tamil Articles

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 6 (Post No.13,195)6/5

to

பாம்புக் கடியைத் தீர்க்க உதவும் 200  மூலிகை மருந்துகள் – Part 12/last part

(seven parts)

xxxx

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 28 (Post No.13,198) 2/5

To

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 40- (31/5)

xxxx

அதிசய தாவரங்கள்: திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்—1 (Post.13,201) 3/5

To

திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரைகள்—18- (29/5)

xxxx

பூரி ஜெகநாதர் கோவில் ரத்ன கருவூல சாவி எங்கே? 24/5 News Paper cutting.

—subham—

Tags- London Swaminathan’s ,Article Index for May 2024 , Index 138

S.Nagarajan Article Index: MAY  2024 (Post No.13,306)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.306

Date uploaded in London – 5 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

SNR Article Index: MAY  2024

MAY  2024

1-5-2024 13194  ஏசு கிறிஸ்து இந்தியாவில்! – 3                                  2-5-2024 13197 அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பத்திரமாய் பாதுகாக்க நன்னெறி நடைமுறைகளுடன் கூடிய வணிக நிறுவனம் தந்தவர்! – 1 (24-4-2024  மாலைமலர் கட்டுரை)                        3-5-2024 13200  அர்தேஷிர் கோத்ரெஜ் – அனைத்தையும் பத்திரமாய் பாதுகாக்க நன்னெறி நடைமுறைகளுடன் கூடிய வணிக நிறுவனம் தந்தவர்! – 1 (24-4-2024  மாலைமலர் கட்டுரை)                        4-5-2024 13203 SNR Article Index: APRIL  2024.                                                                            5-5-2024 13207 சிவபிரானின் ஊர்வஸ்திரம்வாகனம் அடங்கிய ஒரு. பாட்டு!                                                                                                                                                     6-5-2024 13210 திரு கணேஷ் ராஜா அவர்களின் THE JAMBU ISLAND புத்தக அறிமுகம்                                                                7-5-2014 13213 பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு – உத்வேகம் ஊட்டும் கண்டுபிடிப்பாளர்! – 1 (1-5-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை)                                                                 8-5-2014 13217  ‘பேடண்ட் கிங்’ யோஷிரோ நகாமட்சு – உத்வேகம் ஊட்டும் கண்டுபிடிப்பாளர்! – 2     (1-5-2024 மாலைமலர் இதழில் வெளியான கட்டுரை)                                                                                                                                       9-5-2024 13221 கிருஷ்ணருக்குப் பிடித்த கிருஷ்ண பஞ்சமியும் அக்ஷய த்ரிதியையும்!                                                                                                                                      10-5-2024  13225ஆசார்ய சுஸ்ருதரின் அபூர்வமான 122 சஸ்த்ர சிகிச்சை கருவிகள்! ஹெல்த்கேர் மே மாத கட்டுரை)                             11-5-2024 13229 பார்க்க வேண்டிய ஒரு ஹிந்தி திரைப்படம்   ஆர்டிகிள் 370!                                                                                                                      12-5-2024 13233  கால் பந்து மன்னன் பீலே! -1 (8-5-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.).                                                                          13-5-2024 13236 கால் பந்து மன்னன் பீலே! –2  (8-5-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.).                                                                                   14-5-2024 13240

ராமாயணத்தில் சாபங்கள் (1) – ராமாயணம் எழுந்த கதை!                                                                                                                                                                 15-5-2024 13242 ராமாயணத்தில் சாபங்கள் (2)                                                                 16-5-2024 13245 ராமாயணத்தில் சாபங்கள் (3,4,5)                                                        17-5-2024 13248 ராமாயணத்தில் சாபங்கள் (6                                                                 18-5-2024 13251 விடாது போராடி பல்லாயிரம் உயிர்களைக் காத்த பெண்மணி ராக்கேல் கார்ஸன்! – 1 மாலைமலர் 15-5-2024 இதழ் கட்டுரை   19-5-2024 13254 விடாது போராடி பல்லாயிரம் உயிர்களைக் காத்த பெண்மணி ராக்கேல் கார்ஸன்! – 1 மாலைமலர் 15-5-2024 இதழ் கட்டுரை 20-5-2024 13257 ஒரு அதிசய பிரதம மந்திரிஒரு அதிசய முதல் மந்திரி! 21-5-2024 13260 ராமாயணத்தில் சாபங்கள் (7,8) – சுபாஹு பெற்ற சாபமும், குசகன்யா- வாயு சாபமும்                                                                                    22-5-2024 13263 ராமாயணத்தில் சாபங்கள் (9,10) – உமா தேவியின் சரித்திரம்                                                                                                                                           23-5-2024 13266 ராமாயணத்தில் சாபங்கள் (11) – கங்காவதரணமும்சாப    நிவர்த்தியும்!                                                          24-5-2024 13269 அயோத்தியில் ராமருக்கு சூர்யாபிஷேகம்பக்தர்கள் ஆனந்தம்!                                                                                                                                                  25-5-2024 13272 மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர் (Brenda Milner) – 1 (22-5-24 மாலைமலர் கட்டுரை)                      26-5-2024 13275 மூளை நினைவாற்றல் திறனை முழுதுமாக  ஆராய்ந்த ப்ரெண்டா மில்னெர் (Brenda Milner) – 2 (22-5-24 மாலைமலர் கட்டுரை)                      27-5-2024 13278 ராமாயணத்தில் சாபங்கள் (12) – கௌதமர் இந்திரனுக்கு தந்த சாபம்!                                                                                                                                       28-5-2024 13280 ராமாயணத்தில் சாபங்கள் (13) – கௌதமர் அகல்யைக்கு தந்த சாபம்!                                                                                                                              29-5-2024 13283  ராமாயணத்தில் சாபங்கள் (14) –  வசிஷ்ட புத்திரர்கள் திரிசங்குவிற்குத் தந்த சாபம்!                                                                                                 30-5-2024 13286 ராமாயணத்தில் சாபங்கள் (15) – வசிஷ்ட புத்திரர்களுக்கு விஸ்வாமித்திரர் தந்த சாபம்!                                                                                           31-5-2024 13290 ராமாயணத்தில் சாபங்கள் (16) – விஸ்வாமித்திரரின் சாபத்திற்கு பயந்த ரிஷிகள்!

–subham—

Welcome to London -Tower Bridge will Open for You!(Post No.13,305)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,305

Date uploaded in London – 4 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Picture of Tower of London

(Welcome to London : Try lifting 13 Kilo Gold Bar in London Museum (Post No.13,292) was posted here on 31 May 2024)

There was a surprise waiting for us in London on 15th May 2024. The Tower Bridge opened for us during our cruise on Thames. Having lived in London for over 37 years, I don’t go round the city very often; only when relatives or friends visit London, I take them to all spots of scenic beauty . when I took my brother and his wife to the Tower Bridge, I told them the bridge would open when ships come on Thames like our Pamban Bridge in Tamil Nadu. They showed great interest and asked the Bridge authorities what time that would open on that day. They told them that it would open after 5.30 pm on that day. We didn’t wait and came back home.  Next day we took the Thames River ride. It is a must for every tourist.

If you take the boat up to Greenwich (Pronunciation- greenich- W is silent. If you say greenWhich, they will know that you are a stranger. When I lived in Madurai 37 years ago, during weekend I and Mr Ganesan, now Governor of Nagaland state in India , took a town bus/city bus to go to a place very near for RSS work,I asked the bus conductor for two tickets to Airaavatha Nallur. When I said Airaavathanalloor, many people stared at me. Then Ganeshji told me you have to say Ailaanoor like local villagers. When I went to Trichy for an RSS camp at Tiruppaithurai, I saw the board in the bus with that name. I asked the bus conductor whether the bus goes there just to double check. The bus conductor told me to get down from the bus. Then came the second bus with the name Tirupparaiithurai. I boarded the bus and asked the same question. Bus conductor shouted at me saying  ‘Get Down Get Down’. I was surprised. Then a Trichyman, local guy, who watched this drama, called me and said “I understand you are a visitor from another town and here you have to say TiruPPLAAthurai”. And then the third bus came I asked for a ticket t to TiruPPLAAthurai and he said “come on, board the bus quickly”. So it is important to say the word with local pronunciation. Or show it in writing.

xxxx

While we were on the boat, there was a running commentary in English explaining the importance of famous buildings or land marks on both sides of the Thames. Suddenly he announced over microphone, “Guys! you are all lucky today, the bridge is opening for a ship”. Actually a boat with tall mast was coming. All in the boat took their cameras, videos, mobile phones etc and clicking and clicking for ten minutes .

A few years ago ,when I went there just to see the bridge opening, I waited for hours to see it. The height of the road bridge is NOT fit for big and tall ships. So they have to open the bridge. It consists of two parts. All the buses and vehicles will be stopped when both parts are lifted.

The Tower Bridge is an engineering marvel. Tower Hill is the nearest underground station. After getting down there, you have to cross the road and walk along the London Tower Fort where our Kohinoor Diamond and other Royal Jewellery are on show. If you buy the ticket and enter the Tower you can see where the crows are carefully kept with a special care taker. The British believe if the crows fly away the Royalty will face big dangers. And the guide inside the Tower will tell you a lot of stories about the execution of famous queens and traitors on the rampart . Henry VIII sent many of his queens to be executed there. On those days the whole of London came thereto watch the Death Sentence of the queens. They did not show any sympathy but enjoyed with joyful shouts.

After passing the Tower,  you go along the river banks and climb the Tower Bridge. Half way through you can see the division or parting where the Bridge is divided into two. There is a ticket office where you get tickets to see the Story of Tower Bridge and its wonderful engineering work.

Everything is FREE unless you wanted to see Tower and Royal Jewellery, unless you want to see the engineering work. Sometimes there may be a long Queue in front of the Safe Room where the Royal Crown on display.

xxxx

Tickets for Boat Trip

You must pay for the boat trip. There are many types of tickets. I bought £12 ticket to go half way and come back to Westminster. Some people bought tickets up to Greenwich. If You want to come back, you will have to pay more. But many people go to Greenwich observatory where zero-degree longitude is marked; the earth is divided into two with those imaginary lines. You may now about GMT.

The tickets can be bought in many piers. But the big pier is very near Big Ben Clock or Westminster Underground. To go up to Greenwich it would take 45 minutes or one hour.

What is Tower Bridge?

An iconic London landmark and one of Britain’s best loved historic sites, Tower Bridge is open to the public 363 days a year. Within the Bridge’s iconic structure and magnificent Victorian Engine rooms, the Tower Bridge Exhibition is the best way of exploring the most famous bridge in the world! (To see the exhibition you have to buy tickets; but walking on the bridge is FREE. You can see boats ad ferries on both sides of the River Thames.

The modern concrete and steel structure we know today was opened to traffic in 1973. Tower Bridge was built in 1894.

Tower Bridge is a Grade I listed combined bascule, suspension, and, until 1960, cantilever bridge in London, built between 1886 and 1894, designed by Horace Jones and engineered by John Wolfe Barry with the help of Henry Marc Brune

London Bridge and Tower Bridge look very different, yet both are famous bridges in their own right, and both are must-see attractions in the city. Both bridges are free to walk across, and they’re both in great locations surrounded by other amazing attractions.

You can walk across the bridge for free or for a slight fee you can walk up inside the bridge, take in the breathtaking skyline and walk across the glass bottom walkway.

(The Pamban Bridge in India, also called as Cantilever Scherzer Rolling Lift Bridge; was named after the German engineer Scherzer, who built the Pamban viaduct; has a road bridge that was constructed parallel to the original rail bridge back in 1988 which connects National Highway 49 with the island of Rameshwaram.)

–subham—

Tower Bridge, Thames Cruise, Greenwich, Tower, Royal Jewellery , Crows, Execution of Queens, Pamban Bridge

வியப்பூட்டும் தவளைச் சிகிச்சை: மன நோய்க்கு மருந்து! (Post No.13,304)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,304

Date uploaded in London – 4 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

லண்டனிலிருந்து வெளியாகும் மெட்ரோ Metro பத்திரிகையில் நேற்று (3-6-2024) ஒரு வியப்பான செய்தி வெளியாகியுள்ளது. தவளை , தேரை எல்லாம் ஒரே வகைப் பிராணிகள். ஒரு வாரத்திற்கு முன்னர் முனிசாமி முதலியார் 1899-ம் ஆண்டில் வெளியிட்ட மூலிகை மர்ம நூலில் வந்த தவளைச்  சிகிச்சை பற்றி வெளியிட்டேன். அதில் பச்சைத் தவளை மாமிசம் சாப்பிட்டு பாம்பு விஷத்தைக் குணப்படுத்துவது, அஸ்தி சுரத்தைத் தீர்ப்பது, உயிருள்ள தவளையைக் கட்டிவைத்து பிளவைக் கட்டிகளை குணப்படுத்துவது முதலிய செய்திகளை வெளியிட்டேன். இப்பொழுது அமெரிக்க பாலைவனத்துத்  தேரை (Toad) யைப் பிடித்து அதன் விஷம் மூலம் மன நோயைத் தீர்க்கலாம் என்ற செய்தி  வெளியாகியிருக்கிறது.

அமெரிக்கா- மெக்சிகோ எல்லைப்பகுதியில் உள்ள பாலை வனத்துக்குப் பெயர் சொனோரன் பாலை வனம் Sonoran Desert (California,USA and  Mexico). அங்கு வசிக்கும்  ஒரு தேரையின் தோல் விஷத்தைச் சுரக்கிறது. அதை நாக்கினால் நக்கினால் போதை ஏற்படும். அப்போது மாயாஜால உலகிற்குள் போவது போல இன்ப உணர்ச்சி ஏற்படும். ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தச் செய்தி அமெரிக்க பத்திரிகைகளில் முக்கிய இடத்தைப் பிடித்தது. அந்தத் தேரை வசிக்கும் பகுதிகளில் யாரும் தவளையை நக்காதீர்கள் அது விஷம் என்று பெரிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டது. ஆயினும் ஆயிரக்கணக்கானோர்  ஏராளமான பணம் கொடுத்து போதை இன்பம் அனுபவிக்கச் சென்றனர்.

இப்பொழுது வெளியாகும் செய்திகள் இது போதை இன்பத்தைத் தரும் கெடுதியான பொருள் என்றாலும் இதன் மூலம் மன நோய்களைத் தீர்க்க முடியும் என்று கூறுகிறது

லண்டனில் ஆராய்ச்சி

லண்டனில் புகழ்பெற்ற கல்லூரி  இம்பீரியல் காலேஜ் Imperial College

ஆகும். அங்கு மருத்துவப் படிப்புடன் மருத்துவ ஆராய்ச்சிக் கூடமும் இருக்கிறது. அதில்  ஒருவருக்கு இந்த விஷத் தேரையின் விஷத்தை ஏற்றி மூளையில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்று கண்டறிந்துள்ளனர். இந்தத் தேரையின் தோலில் சுரக்கும் பொருளை5-MeO- DMT என்பார்கள். பெக்லி சைடெக் Beckley Psytech  என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம் இந்தப் பொருளை செயற்கையாகத் தயாரித்து BPL-003 என்று பெயரிட்டுள்ளனர்

இந்த ஆராய்ச்சி பற்றி அறிவித்தவுடன் 20 தொண்டர்கள் Volunteers

முன் வந்தனர். அதில் முதல் ஆளுக்கு மருந்து ஏற்றப்பட்டது அப்போது மூளையை ஸ்கேன் Scan கருவியில் கண்டு என்னே மின்சார அதிர்வுகள் ஏற்படுகிறது என்பதை வெளியிட்டுள்ளனர் . இதை மன நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கலாமா என்பதே ஆராய்ச்சியின் நோக்கம். 20 தொண்டர்களுக்கும் ஏற்றப்பட்டு முடிவுகள் 2026ம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இம்பீரியல் கல்லூரியில் மாயத்தோற்ற மருந்துகளை Psychedelic

ஆராயும் பிரிவு இருக்கிறது அதன்தலைவர் டாக்டர் கிறிஸ்டோபர் திம்மர்மான் Dr . Christopher Timmermaan பேசுகையில் 20 மருத்துவ தொண்டர்களுக்கும் உண்மையான விஷத்தையும் பொய்/ போலி  மருந்தையும் (Placebo) ஒருமாத இடைவெளியில் கொடுத்து ஆராய்வோம் என்றார். (ஆராய்ச்சிக்கு வரும் தொண்டர்களுக்கு எது உண்மை , எது போலி மருந்து (Placebo ) என்று சொல்ல மாட்டார்கள். அது டாக்டர்களுக்கு மட்டுமே தெரியும்.  இந்த அராய்ச்சியில் மாயத் தோற்ற மருந்துகளால் மூளையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து அதன் மூலம் மன நலத்தை உண்டாக்கலாமா என்று ஆராய்வார்கள்

வட அமெரிக்காவில் வசிக்கும் இந்த சோனோரன் பாலைவனத் Sonoran Desert (California, USA and  Mexico) தேரைகள் ஏழு அங்குலம் /18 செ .மீ வரை வளரக்கூடியவை.மதுபானத்துக்கு அடிமையானவர்கள், மனத் தொய்வுக்கு (Alcohol addiction ,Depression ) ஆளானவர்கள் ஆகியோருக்கு இத்தகைய சைக்கிடெலிக் மருந்துகளைக் கொடுத்தும் ஆராய்ந்து வருகிறார்கள். மாயத்தோற்றம் உண்டாக்கும் மருந்து வகைகளை Psychedelic சைக்கிடெலிக் என்பார்கள்.

xxxx

Toad Ceremony in America

தவளையை நக்கினால் இளவரசன் தோன்றுவான்

நம் நாட்டில் பஞ்ச தந்திரக் கதைகள், கதா சரித் சாகரக் கதைகள் இருப்பது போல மேலை  நாட்டில்  ஜெர்மானிய கிரிம் பிரதர்ஸ் Grimm Brothers எழுதிய கதைகள் உண்டு. அதில் ஒரு கதை The Frog Prince தவளை இளவரசன் என்பதாகும். ஒரு இளவரசியின் தங்கப் பந்து  குளத்தில் விழுந்துவிடுகிறது. ஒரு தவளை நான் அதை எடுத்துத் தருவேன் ஆனால் நீ எனக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்று. நிபந்தனை விதிக்கிறது; பந்தையும் எடுத்துக் கொடுக்கிறது . ஆனால் இளவரசி முத்தம் கொடுக்க மறுக்கிறாள். தவளை,  நாட்டின் மன்னரிடம் முறையிட்டவுடன் முத்தம் கொடு என்று கட்டளை இடுகிறார். அவள் அப்படிச் செய்தவுடன் அந்தத் தவளை உன்னுடன் படுக்க ஆசை என்று சொல்கிறது. இளவரசி கோபத்தில் அதை சுவற்றின் மீது வீசி எறிகிறாள் ; உடனே அது இளவரசனாக மாறிவிடுகிறது .

இதை, ஜெர்மானியர்கள் மஹாபாரத தவளைக் கதையிலிருந்து திருடியுள்ளனர் மஹாபாரதத்தில் ஆயு என்ற தவளை அரசன், சுசோபனா என்ற ராணியின் கதை வருகிறது.

விஷத் தேரையின் தோலை நக்கி மாயாஜால உலக இன்பம் அனுபவிக்கும் அமெரிக்க முகாம்களில் இந்தக் கதையும் பெரிதாக அடிபடுகிறது. தேரையை நக்குங்கள் – இளவரசன் ஆகுங்கள் என்று.

இந்த முகாமில் பங்குகொண்டு மாயத் தோற்ற/ தற்காலிக இன்பம் அனுபவிக்க 250 டாலர் முதல் 8000 டாலர் வரை வசூலிக்கப்படுகிறது.

 –சுபம்—

வியப்பூட்டும், தவளைச் சிகிச்சை, மன நோய்க்கு மருந்து, தேரை , தோல்  விஷம் , மாயாஜால , போதை , Frog Prince

Latest Tamil Book by London Swaminathan மேலும் :அறுபது தலைப்புகளில் 600 கேள்வி-பதில்கள் !!

 

WRITTEN BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – 4 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

முன்னுரை

தமிழ், இந்து மதம் பற்றிய 60 தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் என்ற தலைப்பில் 600 கேள்விகளும் அதற்கான பதில்களும் முதல் பகுதியாக வெளியானது. அந்த நூலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் மேலும் 60 தலைப்புகளில் பத்து,  பத்து கேள்விகள் வீதம் சுமார் 600 கேள்வி- பதில்கள் உருவாயின. ‘சுமார்’ என்று சொன்னதற்கு காரணம் என்னவென்றால் சில தலைப்புகளை பத்து கேள்விக்குள் அடக்க முடியவில்லை. ஆகையால் ‘போனஸ்’ கேள்விகளையும் சேர்த்தேன். மேலும் சில தலைப்புகளை 3, 4 பகுதிகளாக வெளியிட்டபோது பத்துக்குப் பதிலாக 40 கேள்விகள் கூட ஒரே  தலைப்பில் வந்துவிட்டன.

இந்த நூல் பள்ளி, கல்லூரி மாணவர்களின் QUIZ -க்விஸ் போட்டிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். சில கேள்விகளுக்கு ஒரு வரி பதில் இல்லாமல் பத்தி ,பத்தியாக மேல் விவரமும் இருக்கிறது . ஒரு எடுத்துக் காட்டு மட்டும் தருகிறேன் . சந்தனத்தை முழங்கைகளால் அரைத்த நாயனார்  யார்? என்றால் ஒரே வரியில் மூர்த்தி நாயனார் என்று சொல்லிவிடலாம். அடுத்த கேள்வியாக அவர் ஏன் அப்படிச் செய்தார்? என்று கேட்கும்போது மூர்த்தி நாயனாரின் கதை முழுவதையும் சுருக்கமாகச் சொல்லவேண்டி நேர்ந்தது. ஆகவே இதை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை எவரும் படித்து அறிவைப் பெருக்கிக்கொள்ள முடியும்.

இரண்டாவது பகுதி என்பதால்,  மேலும் அறுபது  தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் ! என்று நூலுக்குப் பெயர் சூட்டியுள்ளேன் . பொருளடக்கத்தைப் பார்த்தாலே நூலின் வீச்சு எத்தகையது என்பது விளங்கி விடும். காடு , மலை பறவை, விலங்கு , சாமி, பூதம் , அரக்கர், தேவர், தமிழ், சம்ஸ்க்ருத இலக்கியம் என்று பல தலைப்புகளை அலசும் கேள்விகள் உள்ளன.

ஒரு பென்சிலை வைத்துக்கொண்டு எத்தனை கேள்விகளுக்கு நீங்கள் சரியான பதில்களைச் சொல்லமுடிந்தது என்று ‘மார்க்’ போட்டுக்கொண்டால் உங்கள் அறிவை நீங்களே சோதித்த பலனும் கிட்டும். படியுங்கள் ; பலனடையுங்கள் !

இளைஞர்களுக்கு இதுபோன்ற நூல்களை அறிமுகப்படுத்தி  நம்முடைய கலாசாரத்தையும் சமயத்தையும் இலக்கியத்தையும் வளருங்கள் !

அன்புடன்

லண்டன் சுவாமிநாதன்

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

பொருளடக்கம்

1..QUIZ தேன் பத்து QUIZ

2.QUIZ மாதப் பத்து QUIZ

3.QUIZ கன்பூசியஸ் பத்து QUIZ

4.QUIZ தமிழ் இலக்கண பத்து QUIZ

5.QUIZ செய்நன்றி பத்து QUIZ

6.QUIZ வில்லி பாரதம் பத்து QUIZ

7.QUIZ சங்கீத முத்திரை பத்து QUIZ

8.QUIZ பகவத் கீதை பத்து (Part 2) QUIZ

9.QUIZ ராமேஸ்வரம் பத்து QUIZ

10. QUIZ சங்கீதத்தில் ஊர்கள் பத்து QUIZ

11. QUIZ ரிஷிகேஷ் பத்து QUIZ

12. QUIZ திரு ஓணம் பத்து QUIZ

13. Quiz பாரதி பத்து Quiz

14. Quiz பெயர் மாறிய நாடுகள் பத்து quiz

15. Quiz நட்சத்திரப் பத்து quiz

16. QUIZ  வெந்நீர் ஊற்றுகள் பத்து QUIZ

17. QUIZ பிரம்மா பத்து QUIZ 

18. QUIZ நவராத்திரி பத்து QUIZ

19. QUIZ சரஸ்வதி பத்து QUIZ

20. QUIZ  தீபாவளி பத்து  QUIZ

21. QUIZ அதிசய முதலைப் பத்து QUIZ  

22.QUIZ எவரெஸ்ட் பத்து QUIZ

23.QUIZ இமயமலை பத்து QUIZ

24. QUIZ கார்த்திகை பத்து QUIZ

25.QUIZ விந்திய மலை பத்து QUIZ

26. QUIZ காஷ்மீர் பத்து QUIZ

27. QUIZ புத்தர் பத்து QUIZ

28. QUIZ மஹாவீரர் பத்து QUIZ

29. QUIZ குரு நானக் பத்து QUIZ

30. QUIZ  விநாயகர் பத்து QUIZ

31.QUIZ யானைப் பத்து QUIZ

32. QUIZ  முருகன், கந்தன் QUIZ

33. QUIZ அயோத்தி ராமர் கோவில் பத்து QUIZ

34. QUIZ  சிவலிங்கம் பத்து QUIZ

35. QUIZ மதுரா பத்து QUIZ

36. QUIZ வாரணாசி / காசி பத்து காசி QUIZ

37. QUIZ ஹரித்வார் பத்து QUIZ 

38.QUIZ உஜ்ஜைனி பத்து QUIZ

39. QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 1 (Post No.12,940) 21/1

40. QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 2

41. QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 3

42. QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 4

43. QUIZ  புரி பத்து QUIZ

44. QUIZ துவாரகா பத்து QUIZ

45. QUIZ  யமுனோத்ரி, கங்கோத்ரி பத்து QUIZ

46. QUIZ பத்ரிநாத் பத்து QUIZ

47. QUIZ வைஷ்ணவ தேவி கோவில் பத்து QUIZ 

48. QUIZ பஞ்சப் பிரயாகை பத்து QUIZ

49. QUIZ  பஞ்ச கேதார் பத்து QUIZ

50.QUIZ அதிசய காமாக்யா கோவில் பத்து QUIZ

51.QUIZ சிம்லா பத்து QUIZ

52. QUIZ ஜெய்ப்பூர் பத்து QUIZ                                               

53.QUIZ  மயில் பத்து QUIZ

54. QUIZ குயில் பத்து QUIZ

55.QUIZ கிளி பத்து QUIZ               

56.QUIZ அன்னம் பத்து QUIZ

57.QUIZ கருடன் பத்து QUIZ

58.QUIZ ஆந்தை பத்து QUIZ

59. QUIZ பல்லி பத்து QUIZ

60. QUIZ நாமக்கல் பத்து QUIZ

***************************

அட்டைப் படத்தில் பிரம்மா , ஸ்கந்தாஸ்ரமம் , சென்னை

ABOUT THE BOOK AND THE AUTHOR

Title-  மேலும் அறுபது  தலைப்புகளில் 600 கேள்வி–பதில்கள் !!

Author – London Swaminathan (Santanam Swaminathan)

Language- Tamil

Published  – April  2024

Subject – General Knowledge (Tamil Quiz)

xxx

AUTHOR’S PROFILE

Santanam swaminathan (London swaminathan)

Educational Qualifications: B.Sc, M A (History), MA (Lit)

Higher Diploma in French and Sanskrit

DOB  6-11-1948

Work Experience- Now retired.

Worked for Dinamani, Madurai as Senior Sub Editor until 1986,

BBC Tamil Producer in London 1987-1991,

Manager of Tamil Malayalee Health Project and London Tamil Sangam,

Tamil Tutor at SOAS, University of London 1993 to 2014.

Living with his wife and two sons in London from 1987.

xxx

Blog Details

tamilandvedas.com

swamiindology.blogspot.com

xxx

Contact Details

swami_48@yahoo.com

swaminathan.santanam@gmail.com

Mobile Number in London

07951 370 697

Published Works

Over 8000 articles in English and Tamil and 117 Tamil and English Books

Visited 15 Countries

India, Sri Lanka, Britain, USA, Australia, Spain, Portugal, Austria, Sweden, France, Switzerland, Hong Kong, Singapore, Italy and Greece

*****

tags-மேலும் அறுபது தலைப்புகளில், 600 கேள்வி–பதில்கள் !!

ராமாயணத்தில் சாபங்கள் (20) கைகேயியைப் பார்த்த தசரதன் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது! (Post13,303)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.303

Date uploaded in London – 4 JUNE 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (20)

ராமாயணத்தில் சாபங்கள் (20) கைகேயியைப் பார்த்த தசரதன் சாபத்திற்கு நிகர் வார்த்தைகளைக் கூறியது!

ச.நாகராஜன்

அயோத்யா காண்டத்தில் உள்ள 5 சாபங்களில் இரண்டாவதாக வரும் சாபம் பற்றி இனி பார்க்கலாம்.

அயோத்யா காண்டத்தில் 42-வது ஸர்க்கமாக அமைவது ‘தசரதவிலாபம்’

சோகத்தின் உக்கிரம் தாக்க, படுத்துக் கொண்டிருந்த படுக்கையை விட்டு தசரதர் எழுந்திருக்கவே இல்லை.

மன வேதனை அதிகரிக்க சோர்வடைந்தவராய் அவர் பூமியில் விழுந்து விட்டார்.

அப்போது கோசலை அவரது வலது பக்கத்தில் வந்து நிற்க கைகேயி இடது பக்கத்தில் வந்து நின்றாள்.

கைகேயியைப் பார்த்த தசரதர் பின்வருமாறு உரைக்கலானார்:

கைகேயி ,மா மமாங்கானி ஸ்ப்ராக்ஷீஸ்த்வம் துஷ்டசாரிணீ |

ந ஹி த்வாம் த்ருஷ்டமிச்சாமி ந பார்யா ந ச பாந்தவி ||

கைகேயி – கைகேயி

துஷ்டசாரிணீ – பாபத்திற்குத் துணிந்து விட்டவளே

த்வம் – நீ

பாந்தவி – இதத்தைச் செய்கின்றவளாய்

ந – இல்லை

ஹி – என்கின்றபடியால்

பார்யா – என் மனைவியாக

ந – இருக்க வேண்டாம்

மம – எனது

அங்கானி – அங்கங்களை

மா ஸ்ப்ராக்ஷீ – நீ இனி தொடாதே

த்வாம் – உன்னை

த்ருஷ்டம் ச – கண்ணெடுத்துப் பார்க்கவும்

இச்சாமி ந – விரும்பவில்லை

யே ச த்வாமனுஜீவந்தி நாஹம் தேஷாம் ந தே மம |

கேவலார்தபராம் ஹி த்வாம் த்யக்ததர்மாம் த்யஜாம்யஹம் ||

த்வாம் ச – உன்னையும்

யே – எவர்கள்

அனுஜீவந்தி – பொறாமை இன்றிப் பார்க்கிறார்களோ

தேஷாம் – அவர்களுக்கு

அஹம் – நான்

ந – வேண்டாம்

தே – அவர்கள்

மம – எனக்கு

ந – வேண்டாம்

கேவலார்தபராம் – அற்பமாகிய பொருள் ஒன்றையே சர்வமுமாய்க் கொண்டு விட்டவளாய்

த்யக்த தர்மாம் – தர்மத்தை முற்றிலும் துறந்து விட்டொழித்தவளாய்

ஹி – இருப்பதால்

த்வாம் – உன்னை

அஹம் – நான்

த்யஜாமி – விவாஹ பந்தன நிவிர்த்தி செய்து விலக்கி இது முதல் வைத்திருக்கிறேன்.

அக்ருஹாம் யச்ச தே பாணிமக்னே பர்யாயம் ச யத் |

அனுஜானாமி தத்ஸர்வமஸ்மின்லோகே பரத்ர ச ||

அஸ்மின் – இந்த

லோகே – உலகிலும்

பரத்ர ச – மறு பிறப்பிலும் (அல்லது இதர லோகத்திலும்)

தே – உனது

பாணி – கையை

அக்ருஹாம் – பற்றியதாகியது

யத் ச – எதுவோ

அக்னி – அக்னியை

பர்யாயம் – வலம் வந்து விவாஹம் செய்து கொண்டது

யச் ச – எதுவோ

தத்ஸர்வம் – அந்த சம்பந்தத்தால் உண்டான எல்லாவற்றையும்

அனுஜானாமி – நான் துறந்து விடுகிறேன்.

பரதஸ்சேத்ப்ரதீத: ஸ்யாத்ராஜ்யம் ப்ராப்யேதமவ்யயம் |

யன்மே ச த்தாத்ப்ரீதீத்யர்தம் மாம் மா ததத்தமாகமத் ||

ப்ரதீத: – பெரியோர்களிடத்தில் அசைக்க முடியா பக்தியை உடைய

பரத: – பரதன்

இதம் – இந்த

ராஜ்யம் – ராஜ்யத்தை

அவ்யயம் – அழிவில்லாத பலனை அளிக்க வல்லதாய்

ப்ராப்த – ஏற்றுக் கொண்டு

ச்யாத் சேத் – விடுகின்றான் என்ற பக்ஷத்தில்

ச: – அவன்

மே – எனது

ப்ரீத்யர்தம் – ஹிதத்தின் காரணமாய்

யத் தத்தாத் – எந்த சரம கைங்கரியத்தைச் செய்கின்றானோ

தத் தத்தம் – அந்தை கைங்கரியம்

மாம் – என்னை

மா ஆகமத் – சேராது ஒழியக் கடவது

அயோத்யா காண்டம் 42-ம் ஸர்க்கம், ஸ்லோகங்கள் 6,7,8)

இவ்வாறு தசரதர் மொழிந்தார்.

இங்கு தசரதர் கைகேயியைப் பார்த்துக் கூறியவற்றில் சாபம் இடுகிறேன் என்ற வார்த்தை வரவில்லை. என்றாலும் கூட அவர் மனம் வருந்திக் கூறியதைப் பின்னால் சாபம் என்று ஶ்ரீ ராமர் கூறுவதை யுத்த காண்டத்தில் பார்க்க முடிகிறது.

மஹாதேவரின் ஆக்ஞையால் ஸ்வர்க்கத்தில் இருந்த ராஜா தசரதர் விமானத்தில் வந்து ராமரையும் லக்ஷ்மணரையும்  பார்த்து அவர்களைத் தன் மடியில் அமர வைத்துக் கொள்வதை யுத்த காண்டம் 119-ம் ஸர்க்கத்தில் பார்க்கிறோம்.

ராமரை நோக்கி, “நீண்ட ஆயுளுடன் தம்பிமார்களுடன் கூட அரசாள்வாயாக” என்று கூறி ஆசீர்வதிக்கிறார் தசரதர்

அப்போது ராமர் கூறுவது இது :

குரு ப்ரஸாதம் தர்மக்ஞ கைகேய்யா பரதஸ்ய ச |

சபுத்ராம் த்வாம் த்யஜாமீதி யத்யுக்த்வா கைகேயீ த்வயா ||

தர்மக்ஞ – தர்மத்தின் வழியை உணர்ந்தவரே

ச புத்ராம் – ‘புத்திரனுள்ள

த்வாம் – உன்னை

த்யஜாமி – தள்ளி வைக்கின்றேன்’

இதி – என்று

த்வயா – தேவரீரால்

கைகேயீ – கைகேயி தேவியார்

உக்தா – சபிக்கப்பட்டாளோ

யத் – அக்காரணத்தால்

கைகேய்யா: -கைகேயி தேவியிடமும்

பரதஸ்ய ச – பரதனிடமும்

ப்ரஸாதம் –  மனச்சாந்தியை

குரு – கொண்டருள்வீராக

ச சாப: கைகேயீம் கோர: சபுத்ராம் ந ஸ்ப்ருஷேத்ப்ரபோ |

ப்ரபோ -பிரபுவே

ச: – அந்த

கோர: – பயங்கரமான

சாப: – சாபமானது

சபுத்ராம் – புத்திரனுள்ள

கைகேயீம் – கைகேயீயை

ஸ்ப்ருஷேத் ச – பற்ற வேண்டாம்

யுத்த காண்டம், ஸர்க்கம் 122,, ஸ்லோகங்கள் 25, 26

தசரதரை நோக்கி ராமர் இவ்வாறு அந்த சாபம் அவர்களைப் பற்ற வேண்டாம் என்று கூறுகிறார். அவர் தசரதரின் கூற்றை சாபம் என்று இங்கு கூறுகிறார்.

ஆகவே தசரதர் கூறியதை சாபம் என்றே எடுத்துக் கொள்ளலாம்.

உடனே தசரதர், “ததா இதி” அப்படியே ஆகட்டும் என்று தனது முந்தைய கூற்றை விலக்கிக் கொள்கிறார். சாபம் விலகி விடுகிறது!

***

More (Manu Mystery) Secrets from Vishnu Sahasranama -Part 20 (Last Part) -Post No.13,302

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,302

Date uploaded in London – 3 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Manu is god and god is Manu! Strange indeed. Vishnu Sahasrama (VS) calls God as Manu!

Manu Smriti is criticised by Anti Hindu gangs, because of forty objectionable Anti- Shudra slokas/couplets out of  2685 slokas.  But we know they are interpolated couplets in the big book. My research shows it’s date is closer to Vedic period. It talks about running Sarasvati River . Foreign scholars also date it around 1250 BCE. Wikipedia says

 Philologists Jones and Karl Wilhelm Friedrich Schlegel, in the 18th century, dated Manusmriti to around 1250 BCE and 1000 BCE respectively,

If one reads the entire book one would find out amazing things ( I have read it and written 60 articles in Tamil and English). He was one of the greatest thinkers of Vedic Age. Manu smriti is the oldest law book in the world; older than Hammurabi’s law.

The name Manu itself is a mystery. Hindus attribute each Manvantara  an incredible huge number of years. ( I wrote about it ten years ago in this blog)

Manava is the surname for all those born in the clan of Manu;following names are found in the Rig Veda:

Saaryaata Maanava RV 10-92

Cakshu Maanava 9-52, 9-106-4

Naabaanedishta Maanava- 10-59, 10-61-62

Manu AApasa – 9-5, 9-106-7

Manu Vaivasvata – 8-5, 8-27-31

Manu Samvrana 9-49, 9-101-10

Manyu Tapasa – 10-67, 10-83,84

Manyu Vaisstha 9-29, 9-97-10

Maanya Maitravaruna – 8-67

14 Manus!

Hindus believe that the seventh Manu is ruling the universe now.That is why Hindus who do religious ceremonies, say In Vaivaswata manvantare–  (at the time of Vaivaswata Manu) — in the Sankalpa.

So far the periods of six Manus

Swayambhuva

Svarocisha

Uttama

Tamasa

Raivata

Chaksusha

are over according to the Puranas!

Now we are in the period of Seventh Manu Vaivasvatha.

With this in the background, we have to look at the Manus in the VS.

xxxx

Swayambhuh- Word No. 37 in the VS

Aadi Shankara says,

One who exists by Himself, uncaused by another. Says Manu 1-7 Sa eva swayamudbabhau- He manifested Himself. He is so called because He existed before everything  and over everything. He is the supreme.

योऽसावतीन्द्रियग्राह्यः सूक्ष्मोऽव्यक्तः सनातनः ।
सर्वभूतमयोऽचिन्त्यः स एव स्वयमुद्बभौ ॥ ७ ॥

yo’sāvatīndriyagrāhyaḥ sūkṣmo’vyaktaḥ sanātanaḥ |
sarvabhūtamayo’cintyaḥ sa eva svayamudbabhau || 7 ||

He,—who is apprehended beyond the senses, who is subtle, unmanifest and eternal, absorbed in all created things and inconceivable,—appeared by himself. (7)

xxxx

Manuh — Word No. 51 in the VS

He who thinks. The Brhadaaranyaka Upanishad 3-7-23 says,

Naanyo’tosti mantaa- There in no thinker other than He. Or He is called Manu, because He manifests in the form of Mantra and of Manu (Patriarch).

xxxx

Aadi Shankara quotes in two more places.

Bhuur- buvah- svastaruh- Word No. 967 in the VS

The three Vyaahrutis- Bhuuh- bhuvah- svah- are said to be the essence of the Veda.

Manu says,

Agnau prastaa’hutih samyag aadityam upatisthate

Aadityaad jaayate vrstir vrster annam tatah prajaah

Meaning

The oblations put in the fire reach the sun. from the sun comes the rain; from rain food grows. From food beings are born . or Bhuuh, Bhuvah,Svah stand for the three worlds  and constitute the tree of Samsaara. It is the Lord who has manifested as that tree.

xxxx

Naaraayanah – Word No. 245 in the VS

He is called Naaraayana also because He is the residence (ayana) of all beingsat the time of dissolution.

Says Manu 1-10

आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः ।
ता यदस्यायनं पूर्वं तेन नारायणः स्मृतः ॥ १० ॥

āpo nārā iti proktā āpo vai narasūnavaḥ |
tā yadasyāyanaṃ pūrvaṃ tena nārāyaṇaḥ smṛtaḥ
 || 1-10 ||

Water is called ‘nara,’—water being the offspring of nara; since water was the first thing created by (or, the original residence of) that being, he is, on that account, described as ‘nārāyaṇa.’—(1-10) Manu Smrti.

—subham—

Tags- Manu, in Vishnu Sahasranama, Swayambhu

எப்போது டாக்டரிடம் போகவேண்டும்? (Post No.13,301)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,301

Date uploaded in London – 3 JUNE 2024                                   

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஒருவர் ஆரோக்கியமாக இருக்கிறாரா அல்லது உடல் நலம் குன்றியிருக்கிறாரா  என்பதை எப்படி அறிவது? இதை நாமே அறிந்துகொள்ள  நமது உடல் சில அடையாளங்களை, அறிகுறிகளைக் காட்டுகிறது. அதைப் புரிந்துகொண்டு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் .

உடலை  ஒரு நோய் தாக்கும் வரை பலருக்கும் மருத்துவ விஷயங்களில் ஆர்வம் இருப்பதில்லை. நோய் என்று டாக்டர் அறிவித்துவிட்டாலோ உலகிலுள்ள அத்தனை மருத்துவக் கட்டுரைகளையும் புஸ்தகங்களையும் ஊன்றிப் படிப்பது வழக்கமாகிவிடுகிறது . எந்த மூலிகை என்ன பலன் தரும் என்று ஆராயத் துவங்கி விடுவார்கள். அவ்வாறு  கடைசி நேரம் வரை காத்திராமல், எப்போது டாக்டரிடம் போக வேண்டும் என்பதை முதலில் அறிவோம் .

உடலின் எடை  

ஒருவரின் எடை திடீரென்று கூடினாலோ குறைந்தாலோ நல்லதல்ல. திடீரென்று காரணமில்லாமல் குறைந்தால் பெரிய நோயின் அறிகுறி ஆகும்; உடனே டாக்டரை கலந்தாலோசிப்பது அவசியம். நாமாக உடற்பயிற்சி செய்து குறைந்தால் கவலைப்படத் தேவை இல்லை. அதே போல காரணமில்லாமல் உடல் எடை கூடினால் உணவு பற்றி நமக்கு ஆலோசனை கூறும் (Dietician ) டயடீசியனை பார்க்க வேண்டும் . அவர் முதலில் நீங்கள் காலை முதல் இரவு  வரை என்னென்ன  சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டு எழுதிக்கொண்டு, என்ன மாறுதல் செய்யவேண்டும் என்று கூறுவார்.

வாய் ஆரோக்கியம்

ஒருவருக்கு வாயில் புண் வந்தாலோ (Ulcer)

வாய் வெந்து போனது போல இருந்தாலோ அது நல்ல அறிகுறி அல்ல. ஏதோ ஓரிரு நாள் இப்படி இருந்தால் டாக்டரிடம் ஓடிவிடாதீர்கள். அடிக்கடி இப்படி வந்தாலோ, தொடர்ந்து இந்த நிலை இருந்தாலோ மருத்துவரிடம் செல்ல வேண்டும். ஈறுகளிலிருந்து (Gums ) ரத்தம் கசிந்தாலோ கடுமையான பல்வலி இருந்தாலோ,  

பல் கூசுவது நீடித்தாலோ நல்ல அறிகுறி அல்ல.

கண் சொல்லும் செய்திகள்

காதல் பார்வை, வெறுப்புப் பார்வை, கோபப் பார்வை என்பதையெல்லாம் பரத நாட்டியத்தில் காட்டுவார்கள் ; அது எல்லாம் நடிப்பு.. உண்மையான ஆரோக்கியத்தையும் , ஆரோக்கியம் இல்லாத நிலையையும் கூட கண்கள் காட்டிவிடும்  கண் சிவத்தல், கண் அரித்தல் இவைகள் நீடித்தால் கண்களைக் கசக்காமல் டாக்டரிடம் செல்லுங்கள் ; அதே போல கண்ணின் சாதாரண வெள்ளை நிறம் மஞ்சளாக  மாறினாலும் காமாலையாக இருக்கலாம்.

கால், கணுக்கால்  வீக்கம்

வயதானவர்களுக்கு காலின் நிலை மாறிக்கொண்டே வரும். சிலருக்கு காலிலும் கணுக்காலிலும் வீக்கம் ஏற்படலாம். இன்னும் சிலருக்கு காலில் அடிபட்டதே தெரியாமல் இருக்கலாம்; அதாவது இரத்தம் கசியும் காயம் ஏற்பட்டும் கூட, வலி அல்லது உணர்ச்சியே இல்லாமல் இருக்கலாம். உடனே டாக்டரிடம் சென்றால் அவர் தக்க ஆலோசனை சொல்லுவார் . உங்களைக் கண்களை மூடும்படி சொல்லிவிட்டு ஒரு குச்சியை ஓவ்வொரு இடமாகத் தொட்டு, உங்களுக்கு உணர்ச்சி தெரிந்தால் ஆமாம் என்று சொல்லுங்கள் என்பார். இதன் மூலம் அவர் உங்கள் காலின் ஆரோக்கியத்தை அறிவார்.

எதையும் தாங்கும் இருதயம்

உங்களுக்கு சம வயது உள்ளவர்களுடன் நீங்கள் நடந்து போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுவோம்; அப்போது உங்களுக்கு மூச்சு விடுவது கஷ்டமாக இருந்தாலோ, மேல் மூச்சு, கீழ்மூச்சு வாங்கினாலோ இருதயம் பலவீனம் அடைந்து விட்டது என்ற அறிகுறியைத் தெரிவிக்கிறது. அதே போல பஸ்  அல்லது ரயிலைப் பிடிக்க அவசரமாக ஓடும்போது இருதயத்தில் / மார்பில் வலி ஏற்பட்டாலும் ரத்தத்தில் ‘கொலஸ்ட்ரால்’ (Cholesterol )

என்னும் கொழுப்புச் சத்து கூடிவிட்டதா என்று மருத்துவரிடம் கேட்பது  நல்லது

தோலின் நிறம்

வழக்கமான நிறம் இல்லாமல் தோலின் நிறம் மஞ்சளாக மாறினால் மருத்துவரைக் கலந்து ஆலோசியுங்கள் .

மல ஜல மாற்றம்

தினமும் காலைக் கடன் செய்து முடிப்பது ஆரயோக்கியமான வாழ்வினைக் காட்டும். மலச்சிக்கல் (Constipation) இருந்தாலோ ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நேரத்தில் காலைக் கடன்களைச்  செய்வது வழக்கமாவிவிட்டாலோ,  வயிற்றின் நலம், ஜீரண சக்தி சரியில்லை என்று பொருள். வயிற்று எரிச்சல், பொருமல், வாயு வெளியேற்றம் போனறவை தொடர்ம்ந்து இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள். ஒரு கல்யாணச் சாப்பாடு, விருந்துச் சாப்பாட்டுக்குப் பின்னர் வரும் தொல்லை எல்லாம் ஒரு வேளை பட்டினி கிடந்தாலே தீர்ந்துவிடும் அப்படி இல்லாமல் தொடர்ந்து பிரச்சனை இருந்தால் அது நோயின் அறிகுறி . மலத்தில் ரத்தக் கறை , அல்லது கருப்பான மலம், வெளுப்பான மலம் இவை இருந்தாலும் நோயின் அறிகுறிகள்தான். (கர்ப்பிணிப் பெண்களுக்குக்  கொடுக்கப்படும் அயன்/ இரும்புச் சத்து மாத்திரைகளால் நிறம் மாறும்; மலச்சிக்கல்  வரும்.)  அதைக் கண்டு அஞ்ச வேண்டாம்

சிறுநீர் போகும்போது எரிச்சல் இல்லாமல் வெளுப்பு நிறமாக இருந்தால் ஆரோக்கியம் என்று பொருள்; மஞ்சள் நிறம் நல்லதல்ல. ஆனால் எரிச்சலோ வலியோ, ரத்தக் கறையோ (Blood Stain) தென்பட்டால் மருத்துவரிடம் செல்லுங்கள்.

இருமலும் தடுமனும்

மழைக் காலம் வந்தாலோ , வீட்டில் ஒருவருக்கு ஜலதோஷம் இருமல் வந்தாலோ மற்றவர்களுக்கும் பரவுவது இயற்கையே. குளிர் வீசும் மேலை நாடுகளில், மூடப்பட்ட, காற்றோட்டமில்லாத வீடுகளில் வசிப்பவர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது . மேலை நாடுகளில் ஒரு குழந்தைக்கோ சிறுவனுக்கோ இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே பெற்றோர்களை அழைத்து பையனையோ பெண்ணையோ வீட்டுக்கு கூட்டிப்போய்விடுங்கள் என்று சொல்லிவிடுவார்கள் ; நாலைந்து நாட்களில் இருமல் குறையாமல், அதிகரித்துக்கொண்டே வந்தால் டாக்டரை அணுக வேண்டும் சிலவகை இருமல் ஒரு மாதம் கூட நீடிக்கிறது. ஆனால் அதிகரித்தால் காச நோய் எனப்படும் டி.பி.யா  (TB/Tuberculosis)

என்று பரிசோதனை செய்துகொள்ளுவது நல்லது ..

அதிகரித்துக்கொண்டே வரும் இருமல், மாலைநேரத்தில் காய்ச்சல், இரவு  நேரத்தில் வியர்த்தல் ஆகிய மூன்றும் இருந்தால் காச நோயா (க்ஷய ரோகம் அல்லது டி .பி.) என்று  சோதித்துக்கொள்ளுங்கள்.

மன நலம்

ஒருவர் தினமும் ஆறு 6 மணி முதல் ஒன்பது மணி நேரம் வரை உறங்க வேண்டும். அப்படி உறங்க முடியாமல் படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டு யோஜனை செய்து கொண்டிருப்பது நல்லதல்ல. எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருப்பது, கவலைப்படுவது, வழக்கமாக செய்து வந்த வேலைகளில் நாட்டம் இல்லாமல் இருப்பது, மற்றவர்கள் பேசும்போது அவர்கள் தனைப் பற் றித்தான் ‘கிசுகிசு’ பேசுகிறார்கள் என்று சந்தேகப்படுவது, எதற்காக நாம் வாழ வேண்டும் என்று நினைப்பது ஆகியவை மன நோயின் அறிகுறிகள்; சில துக்க நிகழ்வுகளால் அல்லது தோல்விகளால், பொருள் இழப்புக்களால்  இவை யாருக்கும் வாழ்க்கையில் ஓரிரு முறை வரத்தான் செய்யும். இப்படிப்பட்ட நிலை வாரக் கணக்கில்மாதக் கணக்கில் நீடித்தால் மருத்துவர்கள் உங்களுக்கு தக்க ஆலோசனை வழங்குவார்.

ஜனன உறுப்புகள் (Genital Organs)

சிறுநீர் , மலம் ஆகியன கழிக்கும் உறுப்புகளில் கடுமையான புண்கள் இருந்தால் வெட்கப்படாமல் டாக்டரைக்  கலந்தாலோசியுங்கள் . பாலியல் நோய் (STD, VD)  என்று டாக்டர்கள் சொன்னாலும் கவலைப்படத் தேவையில்லை ; எல்லாவற்றையும் குணப்படுத்த மருந்துகள் இருக்கின்றன செக்ஸ் விஷயங்ககளில் ஈடுபடும்போது வலி ஏற்பட்டாலும் கலந்துபேசுவது நல்லது .

பெண்களுக்கு எச்சரிக்கை

பெண்கள் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது தாய்ப்பால் கொடுக்கும் உறுப்புகளில் ஏற்ப்படும் மாற்றம் ஆகும். குளிக்கும் போது அந்த உறுப்புகளை அமுக்கி ஏதேனும் (உள்ளுக்குள்)கட்டி இருந்து அது சில வாரங்ககளுக்கு நீடித்தால் மருத்துவர்களிடம் வெட்கப்படாமல் சொல்ல வேண்டும்.

இந்த உறுப்புகளில் வரும் கட்டி, சாதாரணமாக வரும் கட்டியாகவோ புற்றுநோய் (Breast Cancer) கட்டியாகவோ இருக்கலாம். டாக்டரும் கூட சாம்பிள் எடுத்து பரிசோதனக்கு அனுப்பி முடிவு வந்த வுடன்தான் அது புற்றுநோயா என்று சொல்ல முடியும்; ஆரம்ப காலத்திலேயே  கண்டறிந்தால் உயிருக்கு ஆபத்து இல்லை.

இதே போல மாதவிலக்கில் வரும் மாற்றங்களையும் டாக்டரிடம் சொல்ல வேண்டும் ; 28 நாட்களுக்கு ஒருமுறை வரவேண்டியது முன் பின் தள்ளிப்போகலாம். அதே போல மாதவிலக்கு நீடிப்பது எட்டு நாள் வரை கூட இருக்கலாம் . அடிக்கடி மாறிக்கொண்டே வந்தால் மட்டும் டாக்டர்களிடம் சொல்லுங்கள்

ஆரோக்கிய வாழ்வு என்பது பெரும்பாலும் நம் கைகளில்தான் இருக்கிறது. டாக்டர்களிடம் வெட்கப்படாமல் சரியான தகவல்களைக் கொடுக்க வேண்டும்.

– சுபம்-Tags- நோய் அறிகுறிகள், டாக்டரிடம், ஆலோசனை, உடல் உறுப்புகள்