Thiruppugaz Recitation was held today 22 June 2024 at London Sri Murugan Temple in Eastham London. This is the 11th year festival organised by Mrs Jayanthi Sundar’s students. About 100 devotees attended the event.
Thiuppugaz was sung by Sri Arunagirinathar 500 years ago. Mrs Jayanthi Sundar of London selected about 25 songs from 1300 poems of Sri Arunagirinathar. Young children also sang some Tiruppugaz on their own,
Elder students sang along with her in beautiful voice. They follow the style of their Guru Sri Ragavan.
After the recitation for two hours, Mr Sundar did the puja for the Padas (wooden shoes) of three Shankaracharyas of Kanchi Kamakoti peetam.
Paada Puujaa of
Sri Chandra Sekara Indra Sarasvati (1894-1994)
Sri Jayendra Sarasvati (attained Samadhi)
Sri Vijaya Indra Sarasvati (Present Head of Kanchi Mutt).
All the participants joined him in the Puja. Sundar organises regular events for the Kanchi Mutt in London.
Aa the end of the event Maha Prasad was served to all.
Mrs Jayanthi Sundar conducts on line Thiruppugaz classes.
Pictures were taken by London Swaminathan.
–subham—
Tags- THIRUPPUGAZ FESTIVAL, LONDON , 22 JUNE 2024, Paada Pooja
எல்லோருடைய இருதயத்திலும் நான் இருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லா வேதங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.
xxxx
சதுராத்மா – நாம எண் 137
நான்கு மூர்த்திகளை உடையவர் .
சிருஷ்டி -ஸ்திதி- லயம் என்னும் தோற்றம், நிலைத்தல் , அழித்தல் ஆகிய மூன்றிலும் நாலு நாலு அணிகள் உள்ளன .
விஷ்ணு புராணம் 22-31/33 சொல்வதாவது,
ப்ரஹ்மா தக்ஷாதயஹ காலஸ் ததைவாகில ஜந்தவஹ
விபூதயோ ஹரே ரேதா ஜகதஹ ஸ்ருஷ்டி ஹேதவஹ
விஷ்ணுர் மன்வாதயஹ காலஹ ஸர்வ பூதானி ச த்விஜ
ஸ்திதேர் நிமித்த பூதஸ்ய விஷ்ணோ ரேதா விபூதயஹ
ருத்ரோ கால அந்தகாத்யாஸ்ச ஸமஸ்தா ஸ்சைவ ஜந்தவஹ
சதுர்த்தா ப்ரலயாயை தா ஜனார்த்தன விபூதயஹ
பொருள்
பிரம்மா போன்ற ப்ரஜாபதிகளும்,, தக்ஷ, கால, ஜீவர்கள் படைப்புத் தொழிலுக்கான சக்திகள்.
விஷ்ணு, மனு, , கால, உயிரினங்கள் ஆகிய நான்கும் விஷ்ணுவின் நிலைத்தல் சக்திகள் .
ருத்ரன் காலம், மரணம், உயிரினங்கள் ஆகிய நான்கும் மகாவிஷ்ணுவின் அழித்தல் சக்திகள் .
xxxx
உபேந்த்ரஹ- நாம எண் – 151
இத்திரனுக்குத் தம்பியாகியவர்.அல்லது இத்திரனுக்கும் மேலான இத்திரனாகியவர்.
ஹரிவம்சம் 2-19-46 சொல்லுவதாவது,
மமோபரி யதேந்த்ரஸ்த்வம் ஸ்தாபிதோ கோபி-ரீஸ்வரஹ
உபேந்த்ர இதி க்ருஷ்ணத்வாம் காஸ்யந்தி புவி தேவதாஹா
பொருள்
பசுக்கள் உன்னை எனக்கும் மேலான எஜமானனாக நியமித்து விட்டன .
ஓ கிருஷ்ணா ! ஆகையால் உன்னை தேவர்கள் உபேந்த்ரன் என்று போற்றித் துதிப்பார்கள்
xxxx
பிராம்சுஹு – நாம எண் 153
மூவுலகையும் அளந்தபோது உயர்ந்தவர் .
ஹரிவம்சம் 3-71-43/44 சொல்லுவதாவது-
தோயே து பதிதே ஹஸ்தே வாமனோ பூதவாமனஹ
ஸர்வ தேவ மயம் ரூபம் தர்சயாமாஸ வை ப்ரபுஹு
பூ பாதெள த்யவ்ஹு சிரஸ் சாஸ்ய சந்த்ராதித்யத்வ ச சக்ஷுஸி
பொருள்
கேட்ட தானத்தைத் தருவதற்காக மஹாபலி தாரை வார்க்க கைகளில் ஜலத்தினை விட்ட தருணத்தே வாமனன் அதற்கு நேரான பெயருள்ளவனாக மாறினான் அப்போது பெருமாள் தனது சுய ரூப்பத்தைக் காட்டினார் .அந்த உருவத்தில் எல்லா தேவர்களும் இருந்தனர். அவருடைய கால்கள் பூமியாகவும் தலை வானம் ஆகவும் சந்திர சூரியர்கள் கண்களாகவும் பிரகாசித்தன.
(ஓங்கியுலகளந்த உத்தமன்- திருப்பாவை )
-சுபம் –
Tags- விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள், Part 9
திருமந்திரத்தில் திருமூலர் பேசாத பொருளே இல்லை. நீண்ட நாள் வாழும் ரகசியங்களையும் மனிதனை வருத்ததும் நோய்களையும் பட்டியலிடுகிறார் . மாணிக்கவாசகர் திருவாசகத்தில் செப்பியது போல கரு முதல் குழந்தை பிறப்பு வரை பாடுகிறார். ஆண் குழந்தை பெறுவது எப்படி என்று பகர்கிறார் ; மனித மூத்திரத்தைக் குடித்து ஆரோக்கியமாக வாழலாம் என்று புகல்கிறார் . ; உடலியல் கூறுகளை எம் பி பி எஸ் டாக்டர் படிப்புக்கு படிப்போருக்கு எடுத்து இயம்புகிறார். உண்டி சுருக்கு என்று ஆலோசனை வழங்குகிறார் இது நீண்ட ஒரு பட்டியல் . ஒவ்வொன்றாகக் காண்போம்
xxxx
முன்னர் எழுதிய நோய்கள் பற்றிய கட்டுரைகள்
1.நோய்களுக்கு பெரியாழ்வார் கட்டளை! Get Out!! (Post No.3276)
2.டாக்டர் முருகனும் ‘பேஷன்ட்’ அருணகிரிநாதரும்
3.தமிழ் இலக்கியத்தில் டாக்டர்! சம்ஸ்கிருத நூல்களில் டாக்டர்!! (Post No.3540)
XXXX
இதோ திருமந்திர மருத்துவ விஷயங்கள் ; ஓவ்வொரு பாடலையும் தனித் தமிழில் விளக்குவேன்
DISEASES -120,635/6 நோய்கள்
ANATOMY, HEART ATTACK 190, 192 உடற்கூறு, இருதய நோய்
BRAIN, PREGNANCY-207 கருவுறுதல்
BACTERIA – 239 கிருமிகள்
CALORIES- 766 கலோரி
URINE THERAPY- 825 YO 830 சிறு நீர் மருத்துவம்
26,000 BREATHINGS- 2137 சுவாச அதிசயம்
CUT DOWN UR FOOD/ EAT LESS-714, 2318, 583 உண்டி சுருக்கு
LONG LIFE- 463, 702, 2137 நீண்ட நாள் வாழ்வது எப்படி
BODY IS TEMPLE-704/705 உடம்பு ஒரு ஆலயம்
EIGHT SPAN BODY- 2088 எண் சாண் உடம்பு
NINE DOOR BODY – ஒன்பது வாசல் கோட்டை
FOOD 2732 உணவு
EGG FORMING – FROM 436 கரு உருவாகும் விதம்
இவற்றில் ஆண் குழந்தை பெறுவது எப்படி, சிறுநீர் மருத்துவம், ஒன்பது வாசல் கோட்டை முதலியவற்றை அண்மையில் எழுதிவிட்டேன்; ஏனைய விஷயங்களை ஆராய்வோம்.
120. இருமலும் சோகையும் ஈளையும் வெப்புந்
தருமஞ்செய் யாதவர் தம்பால தாகும்
உருமிடி நாக முரோணி கழலை
தருமஞ்செய் வார்பக்கல் தாழகி லாவே.
263: All Ailments Assail, If in Charity You Fail Consumption and anaemia, asthma and colic pain– Such the lot of those who nothing in charity give; Snake and thunder, sore throat and fleshly ills, Approach not them that others’ needs relieve.
நீங்காத் துன்பத்தினைத் தரும் குத்திருமலும், குருதிக் குறைவாம் சோகையும், கோழையும், உடம்பெலாம் கொதிக்கும் உட்சூடும் இவை போன்ற பிறவும் நிலைபெற்ற நல்லறஞ் செய்யார்பால் நிகழ்வன. அச்சத்தைத் தரும் இடியும், கொடுநஞ்சுடைய நாகப்பாம்பும், உரோகிணி முதலிய விண்மீன்களும், பிளவைக் கட்டி முதலிய நோய்களும் நல்லறஞ் செய்வார்பால் வந்து சாரமாட்டா.
ரோகிணி நட்சத்திரம் : இது கண்ணனுடைய நட்சத்திரம். அவரோ 120 ஆண்டுகள் வாழ்ந்தார் சங்கத் தமிழர்களும் வடக்கத்திய இந்துக்களும் இந்த நட்சத்திர தினத்தில் கல்யாணம் செய்ததாக 2000 ஆண்டுக்கு முன் சொல்லியுள்ளனர் . இது நோயை உண்டாக்குமா ?
சில நட்சத்திரங்களில் , சில ராசிகளில் பிறந்தோருக்கு சில வகை நோய்கள் உண்டாகும் என்று ஜோதிட நூல்கள் விளம்புகின்றன. இது பொதுவான ஒரு விதி. எல்லோருக்கும் அப்படி நிகழாது. அந்த ராசிக்காரருக்கு இந்த நட்சத்திரம் அல்லது கிரகம் எந்த அளவுக்கு, எப்போது மட்டும் பாதிப்பைத் தரும் என்பதை கணக்கிட்டு அறிய வேண்டும் ; இப்போதெல்லாம் கம்பியூட்டர் படிப்பு படித்தால் உடனே வெளிநாட்டுக்குப் போய்விடலாம் என்று ஒருவர் சொன்னால் உண்மையா ?பொய்யா ? இரண்டும்தான். ஆனால் அதில் எத்தனை நுணுக்கங்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம். அது போலத்தான் 12 ராசி, 27 நட்சத்திர பலன்களும் !
நல்லோர்க்கு நோய்கள் வராது ; தீயோருக்கு நோய்கள் வரும் என்பது திருமூலர் கூற்று; இன்றைய மருத்துவர்கள் இந்தக்கூற்றை ஏற்க மாட்டார்கள். ஆனால் ஆழமாகப் பார்த்தால் இது விஞ்ஞான பூர்வ விளக்கமே என்பது விளங்கும் .
நல்லோர் யார் ? எப்போதும் நல்ல பாசிட்டிவ் எண்ணங்கள் positive outlook உடையவர்கள். மேலும் குடி ,குட்டி அதாவது மது, மாது வழக்கங்கள் இரா. மேலும் இறை நாட்டமிருப்பின் வெஜிட்டேரியனாகவும் இருப்பார்கள் . மேலும் மறு பிறப்பு, பூர்வ ஜென்ம பாவ புண்ணியங்களில் நம்பிக்கை இருக்கும். அப்படியே மகான்கள் ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமண மகரிஷி , ஆர் எஸ் எஸ் இயக்க தீர்க்கதரிசி குருஜி மாதவ சதாசிவ கோல்வால்கர் போன்றோருக்கு ஏற்பட்ட புற்றுநோய் வந்தாலும் அதை எள்ளி நகையாடும் ஆன்ம பலம் இருக்கும் ; உடல் என்பது ஒரு சட்டை ; என்றோ ஒரு நாள் கழட்டிப்போட வேண்டும் அதில் அழுக்கு இருந்தால் யார் கவலைப்படுவர்? என்று ராம கிருஷ்ண பரமஹம்சர் போல ஆன்ம பலமும் ‘எதையும் தாங்கும் இதயமும்’ இருக்கும் பாரதியார் போல ‘காலா என் காலருகே வாடா’ என்று ஆனந்தக் கூத்தாடுவோம்
xxxx
ஆசிரியர் : மகாகவி பாரதியார்.
ராகம்-சக்கரவாகம்
தாளம்-ஆதி
பல்லவி
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன்
காலருகே வாடா!சற்றே உனை மிதிக்கிறேன்-அட (காலா)
சரணங்கள்
௧)
வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்;என்றன்
வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித்
[துதிக்கிறேன்-ஆதி
மூலா வென்று கதறிய யானையைக் காக்கவே-நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ கெட்ட,
[மூடனே?அட (காலா)
௨)
ஆலாலமுண்டவனடி சரணென்ற மார்க்கண்டன்-தன
தாவி கவரப்போய் நீ பட்ட பாட்டினை
[யறிகுவேன்-இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல்!உனைவிதிக்கிறேன்-ஹரி
நாராயண னாகநின் முன்னே உதிக்கிறேன்-அட
(காலா)
இந்த வித நம்பிக்கை இருந்தால் அனந்த ராம தீட்சிதர், நாராயணீயம் யாத்த மேல் பத்தூர் நாராயண பட்டதிரி போல பாடியே நோய்களை விரட்டி விடலாம்.
நம்பிக்கை மூலம் நோய்களைக் குணப்படுத்தலாம் Faith Cures என்பது பலரும் அனுபவத்தில் கண்ட உண்மை.
xxxx
வீங்குங் கழலை சிரங்கொடு குட்டமும்
வீங்கும் வியாதிகள் சோகை பலவதாய்
வீங்கிய வாதமுங் கூனும் முடமுமாம்
வீங்கும் வியாதிகள் கண்ணில் மருவியே.
655: Diseases Appear When Dhananjaya Does not Function Boils, itches and leprosy Anaemia, and like diseases That swellings show Paralysis, hunchback, arthritis And diseases of eye that bulging show All appear When Dananjaya in disorder functions.
xxxx
கண்ணில் வியாதி உரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில னாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே.
656: Importance of Kurma Vayu for Eye When Dananjaya malfunctions The eye gets diseases like cataract and glaucoma But Kurma is goodly to the eye; If Kurma permeates not the eye, It receives light none.
xxxx
அட்டமா சித்தி என்னும் எட்டு வகை அற்புத சக்திகள் பற்றிய பகுதியில் இந்தப்பாடல்கள் வருகின்றன. உடலில் பத்து வித வாயுக்கள் உண்டு என்றும் அதில் தனஞ்ஜெயன் என்னும் வாயு சரியாகச் செயல்படாதபோது சில நோய்கள் வரும் என்றும் திருமூலர் சொல்கிறார். மேலை நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடிக்காத ஒரு விஷயத்தை இந்துக்கள் சம்ஸ்க்ருதத்தில் தமிழிலும் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர். இதைச் செய்வதற்கு கடுமையான பயிற்சி வேண்டும்; சந்திரனுக்கு மனிதர்கள் போக முடியும் என்று அமெரிக்கா காட்டியது. ஆ னால் 50 ஆண்டில் எத்தனை பேர் போனார்கள்? விரல் விட்டு எண்ணி விடலாம். கடுமையான பயிற்சி, மிகப் பெரிய பொருட் செலவு , அதி வேக சூப்பர் பாஸ்ட் கம்ப் யூட்டர்கள், ஆயிரம் விஞ்ஞானிகளின் ஒத்துழைப்பு இவ்வளவும் தேவை. அது போலத்தான் அஷ்டமா சித்திகளும். நமது காலத்தில் இதைச் செய்து கட்டியவர்கள் எவருமிலர். ஏனெனில் ஆன்மீக முன்னேற்றத்துக்கு இது அவசியமில்லை. பெட்ரோலியத்திலிருந்து பெட்ரோல் எடுக்கும்போது நிறைய உப பொருட்கள் – பயனுள்ள பை ப்ராடக்ட்ஸ் கிடைப்பது போல இவை.
Over 6,000 items are made from petroleum waste by-products, including: fertilizer, flooring (floor covering), perfume, insecticide, petroleum jelly, soap, vitamins and some essential amino acids.
உடலில் பத்து வித வாயுக்கள் ஓடுவதாகவும் அவை ஒவ்வொன்றும் ஒரு பணியைச் செய்வதாகவும் இந்துக்கள்கண்டு பிடித்துள்ளனர் . அதில் தனஞ்ஜெயன் என்னும் வாயு பற்றியது இவை .
இவற்றின் பணிகளை சித்தர்கள் இயற்றிய பாடல்கள் விரிவாக்கக் கூறுகின்றன மேல் நாட்டு மருத்துவப் படிப்பு படிப்போருக்கு இவை பற்றி ஒன்றும் தெரியாது மதுரையிலிருந்து சென்னைக்குப்போக எவ்வளவு வலிகள் உண்டோ அது போல உடல் ஆரோக்கியத்தை அறிய , வளர்க்க மருத்து வத்திலும் பல வழிகள் உண்டு
தொடரும்
–SUBHAM—
TAGS– திருமூலர், திருமந்திரம், நோய்கள் பட்டியல், தச வாயுக்கள், நம்பிக்கை, காலா என் காலருகே வாடா , பாரதியார், புற்று நோய் , மகான்கள், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை 26
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (33)
ராமாயணத்தில் சாபங்கள் (33) புஞ்சிகஸ்தலைக்கு ஒரு முனிவர் சாபம் கொடுத்தது!
ச.நாகராஜன்
கிஷ்கிந்தா காண்டத்தில் அறுபத்தி ஆறாவது ஸர்க்கத்தில் ஹனுமானின் வரலாற்றை ஜாம்பவான் சொல்லக் கேட்கிறோம்.
தனி இடத்தில் வீற்றிருந்த ஹனுமானை நோக்கி ஜாம்பவான் அவரது வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்:
புஞ்சிகஸ்தலை என்பவள் அப்ஸரஸ் பெண்களுள் மேன்மையான பிரசித்தமான பெண்ணாக இருந்தாள். அஞ்சனை என்று இன்னொரு பெயரும் உண்டு. கேஸரி எனற வானரருக்கு அவள் பத்தினி.
விக்யாதா த்ரிஷு லோகேஷு ரூபேணாப்ரதிமா புவி |
அபிஷாபாத்பூத்தாத் வானரீ காமரூபிணீ ||
– கிஷ்கிந்தா காண்டம், 66-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 9
தாத – ஒ அப்பனே (என்று இப்படி ஹனுமானை ஜாம்பவான் விளித்துக் கூறுகிறார்)
த்ரிஷூ – மூன்று
லோகேஷு – உலகங்களிலும்
விக்யாதா – புகழ் பெற்றவளாய்
அபிஷாபாத் – ஒரு சாபத்தினால்
புவி – பூவுலகில்
ரூபேண – அழகில்
அப்ரதிமா – ஒப்புவமை இல்லாத
காமரூபிணீ – இஷ்டமான வடிவு எடுக்கவல்ல
வானரீ – வானரப் பெண்ணாய் அவள்
அபூத – பிறந்தாள்.
குஞ்சரர் என்ற வானர சிரேஷ்டருடைய பெண்ணான அவள் இஷ்டப்படி உருவம் எடூக வல்லவள். ஒரு நாள் மனித உருவத்தை எடுத்துக் கொண்டு ஒரு மலையில் உலாவிக் கொண்டிருக்கும் போது வாயு அவள் அழகில் மயங்கி அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். ‘யார் என்னைக் கெடுக்க நினைக்கிறான்’ என்று அவள் கூற, உடனே வாயு, “ உன்னை நான் கெடுக்கவில்லை. உனக்கு ஒரு தீங்கும் இல்லை. “உன்னைக் கட்டித் தழுவி தர்மாதர்ம விசாரணையுடனேயே நான் வியாபித்தேன். ஆகையால் வீர்யவானான ஒரு புத்திரன் உனக்குப் பிறப்பான். அவன் எனக்குச் சமமானவனாக் ஐருப்பான்” என்று கூறினார்.
இப்படியாக ஹனுமானின் வரலாறு அவருக்கே ஜாம்பவானால் கூறப்படுகிறது.
வானில் பறக்கும் போது இந்திரனின் வஜ்ராயுதம் அவரது இடது கன்னத்தில் காயத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து அவர் பெயர் ஹனுமான் – மேன்மையான கன்னம் உடையவர் – என்று சொல்லப்பட ஆரம்பித்தது.
இங்கு சாபத்தைப் பற்றிய முழு விவரங்கள் தரப்படவில்லை.
புஞ்சிகஸ்தலைக்கு யாரால், எதற்காக, எப்போது சாபம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இங்கு தரப்படவில்லை.
இத்துடன் கிஷ்கிந்தா காண்டத்தில் வரும் நான்கு சாபங்களும் முடிகிறது.
அடுத்து சுந்தர காண்டத்தில் வரும் ஒரே ஒரு சாபம் பற்றிப் பார்ப்போம்
Why do Tamil Poets praise Tirukkural a ‘Tamil Veda’?- Part 5; Brahma and Lakshmi in Tamil Veda Tirukkural
Tiru Valluvar refers to Lakshmi , Hindu Goddess of Wealth, in Kural couplets 179, 519, 617, 920; her sister Alakshmi in 617 and 936
And
Brahma in 377, 1062.
These couplets show how God fearing were Hindus in the ancient Tamil Nadu. They worshipped al Hindu Gods. They believed in Curses and boons.
xxx
The word THIRU is SRI in Sanskrit and SIR in English.
My linguistics research shows they are cognate words.
T becomes S according to linguistics rule. All English words with TION is pronounced as SION (T=S). That means even the name of TIRUkkural and the name of author TIRU vallluvar – all have Lakshmi.
SIR title given by the British Government is nothing but SRI (Wikipedia gives different origin which is wrong).
xxx
Now let us look at Lakshm in Tirukkural. TIRU means sacred, wealth, Lakshmi and honorific prefix in Tamil just exactly same as SRI in Sanskrit. Fortune is synonym for Lakshmi.
The Goddess of wealth will make her abode with the worthy ones
Who, knowing the right path, refrain from casting covetous glances.-179
Or
The Goddess of Fortune will abide in the wise who know that coveting what belongs to another is unrighteous and acts accordingly- 179
Simple message is don’t be greedy.
xxx
Next Kural
Good fortune will desert the chief, who mistrusts and misinterprets
the actions of his trustworthy and efficient executives-519
or
Fortune forsakes the leader who suspects the loyalty of him that endeavour to carry out a design- 519
We see such things in big companies. Good workers are sent out and the company loses heavily.
xxxx
Next Kural
The dark elder sister representing misfortune will go with the man of indolence
while the lotus born Lakshmi will reside with man of industry-617
or
Ill luck resides with the indolent and good luck of the lotus deity Lakshmi with strenuous strivers – 617
Successful stories of big companies prove this.
xxxx
Valluvar condemns three vices.
For those forsaken , misfortune’s device
Is double faced women , drink and dice- 920
Or
Prostitutes, liquor and gambling are the friends of those who have forsaken by the Goddess of Wealth -920
Strangely these are not considered vices in the Western world
xxxx
Now about Alakshmi in 936
Lakshmi’s elder sister is Alakshmi who symbolises poverty and misfortune.
Gambling is the ogress misfortune. Those who are deluded and swallowed by her, suffer grief, misery and poverty —936
Or
The habitual gamblers, who are blindfolded by their passion for the game ,
Will lose all sense of values and suffer untold evil-936
(Yudhisthira of Mahabharata is the best example. Manu Smriti included gambling as one of the vices of kings).
xxxx
BRAHMA is the God of Creation in Hindu religion.
Except as ordained by the lord, who measures out each man’s meet
Even the millionaire cannot enjoy his hoards -377
Or
Even to those who have acquired immense wealth the enjoyment of it may not be possible except as ordained by the Disposer of all things-377
All religions that appeared on Indian soil believe in Karma theory and fate.
Nala Damayanti story is the best example and in Tamil Kovalan- Kannaki story of Silppadikaram are the best examples.
xxxx
May the Creator perish wandering about if he has ordained begging too as a means of existence- 1062
Or
If the creator intended that some people should beg in order to eke out their livelihood
May he too wander about in such a world and perish-1062
Rajaji’s comment on this Kural is as follows-
If the world were so ordered that one of its inhabitants lives in dependence and on the mercy of others, the Creator would indeed deserve the curse of becoming a wandering beggar himself- 1062
(Valluvar, being a Sanatan Hindu believes in cursing. Hindu Puranas have many stories where Gods themselves were cursed ) .
Valluvar becomes angry at the very thought of begging. He envisages a Utopian world where there is no begging.
–subham–
Tags- Lakshmi, Brahma, Goddess, wealth, fortune, Sri, Thiru, Sri, Sir, Brahma, Creator, Valluvar, Tamil Poets, Tirukkural a ‘Tamil Veda’, Part 5, Tamil Veda
திருமூலர் இயற்றிய திருமந்திரத்தில் நிறைய பூகோள விஷயங்களை தத்துவ உபதேசத்திற்குப் பயன்படுத்துகிறார். யோகா செய்தி களைத் தருவதற்கு அவர் பின்பற்றும் இந்த உத்தியால் அந்தக் காலத்தில் தமிழில் எந்த அறிவுக்கு புராணத்தில் சொல்லப்பட்ட பூகோளம் பரவி இருந்தது என்பது தெரிகிறது . திருமூலர் சொன்ன ஏழு மாகடல், எட்டு குலவரை/ மலைகள் மற்றும் ஒன்பது கண்டங்கள் இன்றைய அட்லாஸ் வரைபடத்தில் காணும் இயற்கை வரை படங்களுடன் ஒப்பிட்டால் ஏறத்தாழ சரியாகவே இருக்கிறது. நாம் பெரிய மலைகள் , பெரிய கடல்கள், பெரிய கண்டங்கள் என்று எடுத்துக்கொண் டால் சரியாகவே இருக்கிறது ஆனால் அவர் புவியியலைப் போதிக்க இதைச் சொல்லவில்லை. இவை மூலம் யோக, ஞான கல்வியையே போதிக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது.
ஏழு கடல், எட்டு மலை, ஒன்பது கண்டம் பற்றி திருமூலர் பாடல்கள்
2707.ஏழு வளைகடல் எட்டுக் குலவரை
யாழும் விசும்பினில் அங்கி மழைவளி
தாழு மிருநிலந் தன்மை ய்துகண்டு
வாழ நினைக்கில தாலய மாமே.42
2907: Reach the Holy Temple of Sahasrathala
Seven the circling Seas, eight the Mountain ranges
In the depths of Space is Fire, Rain and Wind
And the Land expansive;
Visioning it, if you dwell in it
That verily a Holy Temple is.
பொருள்
இந்தப் பூவுலகில் ஏழு கடல்களும் எட்டு புனித மலைகளும் உள . நமது உடலும் உலகமும் நிலம், நீர், நெருப்பு, காற்று , வானம் ஆகியவற்றால் ஆனதை உணர்ந்து செயல்படவேண்டும். அவை சிவன் உறையும் திருக்கோயில்கள். . அதை உணர்ந்து பயன்பெறுக
திருக்குறள் 27 பாடலிலும் இக்கருத்து உளது
குறள் 27:
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
பொருள்
பரிமேலழகர் உரை
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தின் வகை – சுவையும், ஒளியும், ஊறும், ஓசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும்; தெரிவான்கட்டே உலகு – ஆராய்வான் அறிவின்கண்ணதே உலகம்
அதாவது
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.
பிரளயம் வந்தவுடன் அழிவுக்காலத்தில் உலகிலுள்ள ஏழு கடல்களும் எட்டு மலைகளும் அழிகின்றன .அப்போது சிவன் எல்லோருக்கும் அருள் புரிகிறான்; இதை அறிந்தவர்களுக்கு இது வியப்பை உண்டாக்காது. பதஞ்செய்யும் பார் என்று திருமூலர் செப்பியதைக் கவனிக்கவும்; இங்கு பிறப்போர் பக்குவம் பெற்று உய்வு பெறுவதற்கு உதவும் உலகு இது.
423: The Fire Spreads*
The earth on which we tread
The snow-clad mountains eight.
The seven seas whose ebbing tides roar,
Over all these and else
The Fire that resides in Muladhara spreads;
And the spreading conflagration turned
Earth and sky seem alike;
–This the truth, imagination none.
xxxx
9 கண்டம்
1425. கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்
கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே. 3
பொருள்
நாவலந்தீவு முதலிய ஒன்பது தீவுகளையும் வலம் வருவோர் சிவா பெருமானின் அருவம் நான்கு ,உருவம் நான்கு , அருஉருவம் ஒன்று ஆகிய ஒன்பது திருமேனிகளையும் கண்டவராவார். அவர்களே கடுஞ்சுத்த சைவர்..
1425 Pure Suddha Saivam (Jnana)
They who transcended the nine spiritual Centers
Verily saw God,
Whom the nine continents seek;
They saw the Continent beyond all continents
They, indeed, are the Pure Suddha Saivas.
xxxx
3014.ஈசனென்று எட்டுத் திசையும் இயங்கின
ஓசையில் நின்றெழு சத்தம் உலப்பிலி
தேசமொன்று ஆங்கே செழுங்கண்டம் ஒன்பதும்
வாச மலர்போல் மருவி நின் றானே.33
பொருள்
சிவபெருமான் எட்டுத் திசைகளிலும் உள்ளான். அவனது நறுமணம் / பெருமை ஒன்பது கண்டங்களிலும் வீசுகிறது. எல்லா நாதங்களும் அவனிடமிருந்தே வருகிறது (சிவனின் உடுக்கை ஒலியிலிருந்தே தமிழும் ஸம்ஸ்க்ருதமும் தோன்றின என்று சிவஞான முனிவர், பரஞ்சோதி முனிவர் கூறுவர் . பாணிணி 2700 ஆண்டுகளுக்கு முன்னர் சிவன் உடுக்கை ஒலியின் மூலம் கிடைத்த எழுத்துக்களை மஹேஸ்வர சூத்ராணி என்று எழுதி வைத்துள்ளார் )
3014: He Spreads Like Flower’s Fragrance
The Lord is the Light that moves directions eight;
He is the source of all Sound;
He is the eternal;
As on one land,
The nine universes He pervaded;
Unto the flower’s fragrance,
He spread everywhere.
xxx
கடலும் மலையும் அவனே
தானே திசையொடு தேவரு மாய்நிற்கும்
தானே உடலுயிர் தத்துவ மாய்நிற்கும்
தானே கடல்மலை யாதியு மாய்நிற்கும்
தானே உலகில் தலைவனு மாமே.- திருமந்திரம்
412: He is the Totality
Himself as space and celstials stands,
Himself as body, life and matter stands,
Himself as sea, hill and dale stands,
Himself–all worlds’ Lord Supreme.
கடலும் மலையும் அவனே ;விண்வெளியும் அதற்கப்பாலும் வியாபித்து நிற்கிறான் சிவபெருமான் தான் ஒருவனே பல பொருள் களினும் நிறைந்து நின்று அவற்றை நிலைப்பித்தலுடன், அவற்றைத் தன் இச்சைவழி நடத்துபவனுமாகின்றான்.
XXXX
பிரளய காலம்
362.கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்
திருவருங் கோவென் றிகல இறைவன்
ஒருவனும் நீருற ஓங்கொளி யாகி
அருவரை யாய்நின் றருள் புரிந் தானே- திருமந்திரம்
பொருள்
பிரளய காலம் வந்தது; கடல் பொங்கிற்று; மலைகள் மூழ்கின. பிரம்மாவும் திருமாலால் திகைத்து நின்றனர் ; சிவபெருமான் பேரொளிப் பிழம்பாகத் தோன்றி அஞ்சற் க என்று சொல்லி அருள் புரிந்தனன்
362: The Lord Blesses the Two Who for Primacy Contended
When the swelling deluge at the end of Time
Swallowed the black mountain tops
Hari and Brahma fought
For primacy contending;
And then from amidst the floods arose
As an immeasurable mountain of Light
The One Lord, manifesting the Truth,
And thus blessing both.
xxxx
கடல் சூழ்ந்த உலகு என்ற செய்தியை அளிக்கும் பாடல்கள் – 45, 1013, 1338, 1992, 2248, 2988, (சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் வெளியிட்ட திருமந்திர நூலின் கண்ட எண்கள் )
-SUBHAM—
TAGS–ஏழு கடல், எட்டு மலை, ஒன்பது கண்டம் பற்றி திருமூலர் பாடல்கள், திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை -25
பரம்பொருள் 9 வாசல்களைக் கொண்ட புரம் என்னும் உடலில் வசிக்கிறது .அதனால் புருஷன் என்கிறோம்.
ஏற்கனவே வசித்தவர் என்ற பொருளும் உண்டு. இன்னும் ஒரு பொருளும் உண்டு. பூரணத்தை /முழுமையை உண்டாக்குபவன்.
மஹாபாரத உத்யோக பர்வம் 7-11 சொல்லுவதாவது
பூரணாத் சதநாத் சைவ ததோ செள புருஷோத்தமஹ
கடவுளை புருஷோத்தமன் என்று சொல்லுவதற்கு காரணம் அவன் எல்லாவற்றையும் நிரப்பி/ வியாபித்து அதை நிலை நிறுத்துகிறான்.
என் கருத்துக்கள்
நவத்வார புரி — ஒன்பது வாசல் கோட்டை — என்று உடலை வருணிப்பது பகவத் கீதை முதல் தமிழ் தேவார, திருவாசக, திவ்யப் பிரபந்தம் வரை எல்லா நூல்களிலும் உள்ளது ஆனால் வேறுயெந்த மதத்திலும் கலாசாரத்திலும் இதைக் காண முடியாது
நவத்³வாரே புரே = ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில்
ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்ய = எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து
ஸுக²ம் ஆஸ்தே = இன்புற்றிருக்கிறான்
தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.
xxxxx
யோகஹ -நாம எண் 18
யோகத்தால் அடையத்தக்கவர் அல்லது முக்திக்கு உபாயமாகவும் தானே ஆகியவர்.யோகம் என்பதைக் கீழ்கண்ட ஸ்லோகம் வரையரை செய்கிறது:
ஞானேந்திரியாணி ஸர்வாணி நிருத்திய மனசா ஸஹ
ஏகத்வ பாவனா யோகஹ க்ஷேத்ரக்ஞ பரமாத்மனோ
பொருள்
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஐக்கியமாவதை மனத்தால் சிந்திப்பது யோகம் ஆகும்.
ஸ்ம்ருதி மாத்ரேண யத் பும்ஸாம் ப்ரஹ்ம தன் மங்கலம் விதுஹு
பொருள்
எவர் ஒருவரை நினைத்தாலே சுபமற்றவை நீங்குகிறதோ , அபரிமிதமாக சுபங்களை அருள்கிறதோ அந்த பிரம்மனையே மங்களம் என்கிறோம் என்று எல்லாம் அறிந்தோர் சொல்லுவர் . அத்தோடு அதிஉயர்ந்த / பரம் என்பது அதிக மங்களம் என்பதாகும்
XXXX
வ்ருஷா கபிஹி – நாம எண் 101
தர்ம ரூபியாகவும் வராக ரூபியாகவும் இருப்பவர். எல்லா விருப்பங்களையும் வர்ஷிப்பதால் தர்ம வ்ருஷஹ (மழை ) எனப்படும். காத் நீரிலிருந்து பூமியை அபாத் காப்பாற்றியதால் வராகம் கபி எனப்பட்டது. .
மதங்க முனிவரின் சாபம் பற்றி கிஷ்கிந்தா காண்டத்தில் நாற்பத்தி ஆறாவது ஸர்க்கத்திலும் காண்கிறோம்.
சுக்ரீவன் வாலி பெற்ற சாபத்தைப் பற்றி தனக்கு ஹனுமார் நினைவூட்டுவதை இங்கு குறிப்பிடுகிறார்.
அனைத்து வானரர்களையும் ஒவ்வொரு திக்கிலும் சீதா தேவியைத் தேடும்படி பணித்தான் சுக்ரீவன். அவர்களும் செல்கின்றனர்.
அப்போது ராமர் சுக்ரீவனிடம், ‘எப்படி நீ இப்படி ஒரு பரந்த பூகோள அறிவைக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்கிறார்.
சுக்ரீவன் உடனே பதில் கூறுகிறான் இப்படி: “துந்துபி என்ற அரக்கன் எருமை உருவை எடுத்து மலயபர்வத குகைக்குள் நுழைய, அவனைத் துரத்தி வாலியும் குகையின் உள்ளே சென்றான். அப்போது கடுமையான யுத்தம் நடந்தது. ஒரு வருடம் ஆகியும் வாலி வராததைக் கண்ட நான் அவன் கொல்லப்பட்டான் என்று நிச்சயம் செய்தேன். துந்துபி திரும்பி வரக்கூடாதென்று குகையின் வாயிலையும் அடைத்தேன். கிஷ்கிந்தா வந்து ராஜ்யத்தை அரசாள ஆரம்பித்தேன். ஆனால் குகையிலிருந்து வெளியே வந்த வாலி என் மேல் கோபம் கொண்டு என்னைக் கொல்வதற்காகத் துரத்த ஆரம்பிக்க, நான் பூமியின் ஒவ்வொரு பக்கமும் சென்றேன். இறுதியில் ஹனுமார் எனக்கு மதங்கரின் சாபத்தைப் பற்றி நினைவூட்டி அங்கு சென்றால் வாலி வர முடியாது என்பதைத் தெரிவிக்கவே அங்கே சென்று வசிக்கலானேன்”
ஹனுமார் சுக்ரீவனுக்குக் கூறும் ஸ்லோகங்கள் 46-ம் ஸர்க்கத்தில் 21,22, ஸ்லோகங்களாக அமைகின்றன.
இதானீம் மே ஸ்ம்ருதம் ராஜன்யதா வாலீ ஹரீஷ்வர: |
மதங்கேன ததா சபதோ அஸ்மின்னாஸ்ரம மண்டலே |\
ராஜன் – அரசே
ஹரீஷ்வர: – வானரமன்னனான
வாலீ – வாலி
அஸ்மின் – இந்த
ஆஸ்ரம மண்டலே – ஆசிரமப் பிரதேசத்தில்
ததா – ஒரு காலத்த்ல்
மதங்கேன – மதங்க முனிவரால்
சபத: சபிக்கப்பட்டவனாயிருக்கிறான் என்பது
இதானீம் ஹி – இப்போது தான்
மே – எனக்கு
ஸ்ம்ருதம் – ஞாபகத்திற்கு வந்தது.
ப்ரவிஷேத்யதி வை வாலீ மூர்தாஸ்ய சததா பவேத் |
தத்ர வாஸ: சுகோஸ்மாகம் நிருத்விக்னோ பவிஷ்யதி ||
வாலீ – வாலி
ப்ரவிஷேத் – பிரவேசிக்கின்றான்
யதி வை – என்றால்
அஸ்ய – அவனது
மூர்தாம் -தலை
ஷததா – நூறு துண்டுகளாக
பவேத் – பிளந்து போகும்
அஸ்மாகம் – நமக்கு
தத்ர – அந்த இடத்தில்
வாஸ: – வாசம் செய்வது
நிருத்விக்னோ – அச்சமற்றதாகவும்
சுக: – சுகமானதாகவும்
பவிஷ்யதி – இருக்கும்
ஆக இப்படி ஹனுமாரால் மதங்க முனிவரின் சாபம் மறுபடியும் கிஷ்கிந்தா காண்டத்தில் நினைவூட்டப்படுகிறது.
ராமாயணத்தில் சாபங்கள் (32) கண்டு முனிவர் வனத்தை சபித்தது
தாரன் அங்கதனோடு ஹனுமார் தெற்கு திசை நோக்கிச் சென்று விந்தியாசல மலையில் சீதையைத் தேடுகிறார். அங்கே இன்னொரு பிரதேசத்தை அவர்கள் அடைந்தனர். அங்கு கண்டு என்ற ஒரு முனிவர் தனது மகன் பதினாறு வயதில் இறந்ததால் மிகவும் கோபம் கொண்டு அந்த வனத்தைச் சபித்தார்.
இந்து கிஷ்கிந்தா காண்டம் 48-ம் ஸர்க்கத்தில் 14-ம் ஸ்லோகத்தில் விவரிக்கப்படுகிறது இப்படி:-
Not only Indra and his Amrita (Ambrosia, Elixir, Nectar) are sung by Valluvar in his Tirukkural, but also Vishnu’s Avatars/ incarnations and Lord Shiva are also praised by Tiru Valluvar. Over 70 Kurals praised Hindu Gods and Hindu values. And 130 couplets under Ascetic Value gives the gist of Vedas. Even if all Hindu scriptures in Sanskrit disappear tomorrow, these 200 Kurals will save Hinduism. Valluvar is praised for his brevity. He gave us the essence of Hinduism.
Vishnu’s Avatars
Refer Kurals 1103, 1258,1228, 610,
Vishnu’s consort Lakshmi 179, 519, 617, 920
Lakshmi’s sister – 617, 936
Lord shiva – 580
Here are some examples:
Vamana (vaamana)/Trivikrama Avatar
A prince, who gives no room at all for sloth, will gain the whole universe,
Which was measured in three steps by the Lord Trivikrama – 610
Or
The king who is free from sloth shall gain all that has been measured by the feet of Lord Vishnu -610
The reference is to Lord Vishnu , who in his incarnation as Trivikrama measured the whole universe in three strides. He came as Vamana, a short dwarfish brahmin boy to king Mahabali and asked him to give land measuring only three steps. When the king said, granted, Vaamana measured the earth in one step, the heaven in second step and with the third he sent the king to the nether world (South America). But he was allowed to return to India once a year which is celebrated as Onam in Kerala. Thiru Onam is the star of Lord Vishnu. Sambandar also listed it as one of the famous festivals in his Tevaaram.
Vaamana became gigantic Trivikrama to do this. The three stride episode is in Rig Veda as well.
Whole Tamil Nadu knew this story and other Vishnu stories which is evident from 2000 year old Sangam Tamil Literature.
xxx
Valluvar is neither a Buddhist nor a Jain
Can the lotus -eyed vishnu’s heaven be indeed as sweet to those who delightto sllep in the delicate arms of their beloved?- Kural 1103
Or
Is the world of the lotus eyed God Himself any sweeter than the tender arms,
Of the loving maiden in delightful embrace?- 1103
Buddhists and Jains won’t say this type of thing; they don’t praise Grihasta Dharma (Sex and family life)
Buddha was dead against women in the Ashrams; but his prime disciple Ananda begged him to include women as monks. Buddha agreed and said because of this, my religion would have shorter life of 500 years only. Dr Radhakrishnanan, President of India and philosopher has given these details in his beautiful introduction to his Dhammapada translation ( I have posted it in my blog with more details) .
xxxx
Caution
Following two are my interpretations.
There are two more Kural couplets where Krishna is mentioned. I interpret it Krishna because of evidence from Tamil Literature.
In one Kural 1258 Valluvar used two words MAAYA and KALVAN
Maaya- magic/ magician
Kalvan – Thief/ Chor in hindi; chora in Sanskrit
Krishna hiding Gopi’s saris when they were bathing in River Yamuna is already in Sangam literature. Krishna is ‘praised’ as a chor/thief in Bhajan songs and other hymns. He plundered not only butter from every Yadav’s house but also the hearts of his devotees, particularly Gopi women. He did it as a boy not as an adult. Vaishnavite woman saint Andal of Thiruppavai also used the Tamil word Maayan/magician. Greatest Saivite saint Thiru Gnana Sambandar also called Lord Shiva as a Thief/Kalvan in Tamil in his very first verse when he was only three years old. Vishnu Sahasranama in Mahabharata called Vishu as Maya (maaya) in at least two places.
Ilango , author and brother of Chera king Senguttuvan, also used Maayavan to praise Lord Vishnu .
My research shows that Tolkappiyam, Tirukkural and Silappadikaram (Tamil epic) belong to the same period, i.e. fifth century CE because of the Sanskrit word ADHIKAARAM. So we see a pattern of the use of word Maaya. Andal who followed these authors, also used the same word in her Tiruppaavai.
Here is the Kural 1258
It is the weapon of soft words wielded by this wily and fraudulent character
That breaks the modesty of my womanhood-1258
Or
Are not the enticing words of my roughish lover capable of many lies, the weapon that breaks up my feminine firmness –1258
0r
It is the subdued speech of that false one , skilled in many a wily art, that breaketh through all the defences of our womanly decorum ( V V S Iyer’s Translation)
Those who are familiar with Mira Bhajans can feel the echoes of her Bhajans here.
In both devotional hymns and Lover’s poems/Kural they use the words Thief, Fraud, False one with positive connotation. Actually, it is ‘praising and not criticising.
Tamil literature has many more examples of Thief in positive connotations.
My second interpretation – Kural 1228
Like a shepherd’s flute it heralded a happy evening before, when my beloved was here,
Now it is a murderous weapon bringing total grief- 1228
Or
The shepherds flute now sounds as a fiery precursor of night and become a weapon that kills me – 1228
Lord Krishna and Saivite Saint Aanaaya Nayanar used flute to mesmerise both humans and animals. Music instrument flute is always associated with Lord Krishna; he is praised in Bhajan songs and hymns as one who is an expert in Murali, Vamsi/Flute.
This Kural brings us to our memory Radha, Mira and Gopi women.
Valluvar might have had Krishna in his mind when he used Flute in this couplet.
xxx
Lord Shiva in Kural 580
Caution : this is also my interpretation. I wrote an article in Megam magazine in London in the 1990s linking Shiva- Socrates and -Valluvar. Again, it was published in my book in 2005.
First let us look at the couplet 580
Men of refined courtesy accept even a cup of poison and look cheerfully calm- 580
Or
He is said to possess the very pink of courtesy and graciousness,
Who can drink poison, seeing even seeing it poured in his presence—580
The same thought and words are found in Natrinai poem 355 which shows it is very familiar in Tamil speaking world. Natrinai is part of 2000 year old Sangam literature.
Valluvar’s description in this Kural fits to Socrates more than to Lord Shiva. But Tamils never knew Socrates at that time. But Socrates’ wealthy friend Crito described Socrates exactly the same way as Valluvar.
So if you leave Socrates out, another poison drinking case is Lord Shiva. When the poison came out of Samudra Manthan (Churning of ocean for getting Amrita), Shiva happily took it. It is thousands of hymns in Tamil. But Parvati, Shivas wife, stopped the poison half way through his throat. Sangam Tamil literature called him Neela kantan ( Blue Throated God). So, I conclude Valluvar described only Shiva and not Socrates. Already I showed that Valluvar used the Sanskrit word AMRITA in many of his couplets. The same Amrit episode contains this ‘poison drinking’ as well.
Picture- Death of Socrates
All the above Hindu episodes justify the name Tamil Veda for Tirukkural.
—subham—
Tags- Vishnu Avatars, Tirukkural, Lord Siva, Socrates, Poison Drinking, Maya, Tri Vikrama, Krishna Avatar, Lotus eyed
பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் உலகப் புகழ் பெற்று விளங்கிய நாளந்தா பல்கலைக் கழகத்துக்கு முஸ்லீம் படை எடுப்பாளர்கள் தீ வைத்து எரித்து அழித்தனர் ; அப்போது அந்த லைப்ரரி/ நூலகம் மூன்று மாதங்களுக்கு எரிந்து பல்லாயிரம் ஓலைச்சுவட்டிகளை எரித்துக் கரி யாக்கியது. பீகார் மாநிலத்தில் பல்கலைக்கழகம் எரி ந்த இடத்தில் புதிய பல்கலைக் கழகம் உயிர்பெற்று எழுந்து நிற்கிறது பீனிக்ஸ் பறவை போல , சாம்பலிலிருந்து உயிர் பெற்றுவிட்டது. புதிய பல்கலைக் கழகத்தைத் திறந்துவைத்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி புஸ்தகங்களை எரித்து விடலாம். அறிவினை எரிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகமாக விளங்கிய நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார்.
உலகின் முதல் கல்வி நிறுவனங்களில் ஒன்றான நாளந்தா பல்கலைக்கழகம், பீகாரில் உள்ள ராஜகிருகம் தலைநகர் பாட்னாவுக்கு தென் மேற்கே, 95 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாக நாளந்தா நூலகம் உருவாக்கப்படும் என்றும் அதில் மூன்று லட்சம் புஸ்தகங்களும் ஓலைச் சுவடிகளும் இருக்கும் என்றும் துணை வேந்தர் பேராசிரியர் அபய குமார் சிங் Prof. Abhay Kumar Singh அறிவித்தார். துவக்க விழா நிகழ்ச்சியில் வெளிநாட்டுத் தூ தர்கள் பங்கேற்றனர். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பீஹார் முதலமைச்சர் நிதிஷ் குமார், கல்வி அமைச்சர் முதலியோர் கலந்துகொண்டனர் .
பிரதமர் மோடி திறந்து வைத்துள்ள நாளந்தா பல்கலைக்கழக புதிய வளாகத்தை புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் பத்ம விபூஷன் மறைந்த பி.வி. தோஷி வடிவமைத்திருக்கிறார். பழங்கால வாஸ்து கொள்கைகளுடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடக்கலையை இணைத்து, பசுமையான 100 ஏக்கர் நீர்நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 1,900 மாணவர்கள் தங்கக்கூடிய 40 வகுப்பறைகள் கொண்ட இரண்டு கல்வித் தொகுதிகள், இரண்டு நிர்வாகத் தொகுதிகள், 300-க்கும் அதிகமான இருக்கைகள் கொண்ட இரண்டு பெரிய அரங்குகள் மற்றும் 550 மாணவர்கள் தங்கும் விடுதிகள், மற்றும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கல்வி சார்ந்த வசதிகளுடன் கூடிய பிரத்யேக குடியிருப்புப் பகுதிகள் இந்த வளாகத்தில் உள்ளன..
xxxxx
நாளந்தா பல்கலைக் கழகம் அழிந்தது எப்படி?
இந்துக்களின் பொற்கால ஆட்சியை அமைத்தவர்கள் குப்தர்கள். சம் ஸ்க்ருத மொழிக்கு பேராதரவு கொடுத்தவர்கள் அவர்களது காலத்தில் பெளத்தர்களுக்காக இந்து மத ஆட்சியினர் அமைத்துக் கொடுத்த பல்கலைக் கலக்கம் இது .இதன் துணை வேந்தர் பதவி வகித்த தத்துவ வித்தகர் நாகார்ஜுனா பெரிய மந்திர வாதி; உலக ரசாயன பாடத்தின் மூலகர்த்தா; இரும்பைத் தங்கமாக்கி ஏழை எளிய மக்களை வாழ வைத்தவர். அவர் எழுதிய புஸ்தகங்களை அங்கு படிக்க வந்த சீன அறிஞர்கள் மொழி பெயர்த்து எடுத்துச் சென்றனர். முஸ்லீம்கள் அழித்த புஸ்தகங்களை நாம் இப்போது சீன மொழியிலிருந்து மீண்டும் இந்திய மொழிகளுக்கு கொண்டு வருகிறோம் .
(இந்த பிளாக்கில் அவர் வரலாறும் அவருடைய யோக ரத்ன மாலா என்ற மந்திரவாத நூலும் வெளியாகியுள்ளன.)
புத்த மத, இந்து மத விஷயங்களைப் பயின்றவர்கள் இந்தப் பலகலைக்கழகத்தின் புகழை உலகெங்கும் பரப்பினர் கி.பி 450 முதல் கி.பி.1200 வரை கொடிகட்டிப் பறந்த இடம் இது
நமது காலத்திலேயே ஆப்கானிஸ்தானில் பாமியன் என்னும் இடத்திலிருந்த உலகபுகழ் பெற்ற அதி பிரம்மாண்டமான புத்தர் சிலைகளை வெடிவைத்ததுத் தகர்த்த பயங்கர வாதிகள் நாளந்தாவை நாசமாக்கியத்தில் வியப்பில்லை .
குஜராத்தில் சோமநாத புரம் சிவன் கோவிலைக் கொள்ளையடித்தான் கஜினி முகமது . தமிழ் நாட்டிலுள்ள அத்தனை கோவில்களையும் சேதப்படுத்தி , டன் கணக்கில் தங்கத்தைக் கொண்டு சென்றான் மாலிக்கா பூர். பாபர் முதல் அவங்க சீப் வரை காசி, மதுரா, அயோத்தியா முதலிய இடங்களில் இந்துக்களை அவமானப்படுத்த கோவில் மீது மசூதி கட்டினார்கள் பயங்கர வாதிகள்.
இரண்டாம் சந்திரகுப்தரின் மகனான, குமார குப்தரால், கிபி 5 ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தை “மகாவிஹாரா” என்னும் சிறப்புப் பெயராலும் அழைக்கின்றனர்.
சிறந்த கல்வி நிறுவனமாக மட்டுமில்லாமல் சிறந்த புத்த மடாலயமாகவும் நாளந்தா பல்கலைக்கழகம் திகழ்ந்திருக்கிறது. உலகின் முதல் தங்கிப் படிக்கும் பல்கலைக்கழகமாகவும், உலகின் முதல் சர்வதேச பல்கலைக்கழகமாகவும் நாளந்தா விளங்கியது.
கி.பி 1193ம் ஆண்டில் தில்லி சுல்தான் குத்புத்தீன் ஐபக்கின் முதன்மை படைத் தலைவரான பக்தியார் கில்ஜியால் நாளந்தா
பல்கலைக்கழகம் எரித்து அழிக்கப் பட்டது.. மாற்று மத புஸ்தகங்களை வெறுத்த , மத வெறியர்களில் அவனும் ஒருவன்.
இந்து மத வேதத்தின் அனைத்து அறிவையும் அழிக்கவும், இந்து மற்றும் புத்த மதத்தை அழித்து இஸ்லாத்தை நிலைநாட்டவும் நாளந்தாவை அழித்த கில்ஜி, சுமார் 90 லட்சம் ஓலைசுவடிகள் மற்றும் கைப்பிரதிகள் இருந்த நாளந்தாவின் நூலகங்களுக்குத் தீ வைத்தான்.. மேலும் அறிஞர்களிடமிருந்து பண்டைய வேத அறிவு பிறருக்கு செல்வதை விரும்பாத கில்ஜி நாளந்தாவில் வசித்துவந்த ஆயிரக்கணக்கான துறவிகளையும் அறிஞர்களையும் கொன்றதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
புகழ்பெற்ற சீனப் பயணி யுவான் சுவாங், இந்தப் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலம் தங்கியிருந்து பாடம் கற்றுள்ளார். தனது பயணக் குறிப்புக்களில், யுவான் சுவாங், நாளந்தாவில் 10,000-க்கும் மேற்பட்ட துறவிகள் மற்றும் 2000-க்கும் ஆசிரியர்கள் இருந்ததாகவும்,சீனா,திபெத்,கொரியா, இந்தோனேசியா, பாரசீகம் (இப்போது ஈரான் என்று பெயர் ), துருக்கி மத்திய ஆசியாவின் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும், தங்கியிருந்து கல்வி கற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எட்டு தனித்தனி பாட சாலை வளாகங்கள், 10 கோவில்கள், பல தியான மண்டபங்கள், வெவ்வேறு பாடங்களுக்கான தனித் தனி வகுப்பறைகள், 3 ஒன்பது அடுக்கு நூலகங்கள், ஏரிகள் மற்றும் பூங்காக்கள் கொண்ட நாளந்தா பல்கலைக்கழகத்தில், பல லட்சக்கணக்கான ஓலைச்சுவடிகள் இருந்தன.
ஹர்ஷவர்தனா, நாகார்ஜுனா, வசுபந்து போன்ற சிறந்த அறிஞர்களை உருவாக்கிய இந்த நாளந்தா பல்கலைக்கழகம் 800 வருட பாரம்பரியத்தின் அடையாளமாக இன்றும் விளங்குகிறது.
1915ம் ஆண்டு நடந்த அகழ்வாராய்ச்சியின் போது 11 மடாலயங்களும்,6 செங்கல் கோயில்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், பழங்கால நாணயங்கள்,செப்பேடுகள்,,சிற்பங்கள் போன்ற பல்வேறு அடையாள சின்னங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. எனவே 1980 ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக நாளந்தா பல்கலைக்கழகம் அறிவிக்கப்பட்டது.
நாளந்தா பல்கலைக் கழகத்தின் மறுமலர்ச்சி 2006ம் ஆண்டில் முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் முயற்சியில் துவங்கியது , பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பரிந்துரையின் பேரில், 2010 ஆம் ஆண்டு, நாளந்தா பல்கலைக்கழக மசோதா நிறைவேற்றப்பட்டது. 2014 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் முதல் நாளந்தா பல்கலைக்கழகத்தில், புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். நாளந்தாவின் புதிய வளாகத்திற்கு 455 ஏக்கர் நிலத்தை பீகார் மாநில அரசு ஒதுக்கியது . புதிய நாளந்தா பல்கலைக்கழகத்தின் ஆட்சிக் குழுவின் முதல் தலைவராகவும் அதன் முதல் வேந்தராகவும் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் இருந்தார்.
—subham—
Tags நாளந்தா, பல்கலைக் கழகம் , முஸ்லீம்கள் தாக்குதல் , நூலகம் எரிப்பு, பக்தியார் கில்ஜி, மோடியின் பொன்மொழி, நாகார்ஜுனா , யுவாங் சுவாங்