ராம நாம மஹிமை – 8 (Post No.13,061)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.061

Date uploaded in London – — 4 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 

ராம நாம மஹிமை பற்றிய சிறப்புக் கட்டுரைத் தொடரில் இது எட்டாவது கட்டுரை! வால்மீகி ராமாயணத்தில் வரும் அருமையான கருத்துக்களின் தொகுப்பும் கூட இது! 

ராம நாம மஹிமை – 8 

ச.நாகராஜன்

 

க்ருதாந்தஸ்ய  கதி: புத்ர  துர்விபாக்யா சதா புவி!

அயோத்யா காண்டம் 23 – 16

தெய்வத்தின் செயல் உலகில் என்றென்றைக்கும் அறிய முடியாதுகுழந்தாய்!

**

இத்யேதைர்விவிதைஸ்தைரன்யபார்திவதுர்லபை: \

சிஷ்டைரமரிமேயைஸ்ச லோகே லோகோத்தரைர்குணைள: ||

 

தம் சமீக்ஷ்ய மஹாராஜோ யுக்தம் சமுதிதை: சுபை|

நிச்சித்ய சசிவை: சார்த யுவராஜமமன்யத||

அயோத்யா காண்டம் 1 – 41,42

சக்கரவர்த்தியார் இன்னுமிப்படியும் அவனை அந்த பல நல்ல குணங்களோடும் உலகில் வேறு எந்த மன்னனிடம் இல்லாதவைகளும் எங்கும் எவனிடத்தும் இல்லாதவைகளும் ஸர்வோத்கிருஷ்டமானவைகளும்அபூர்வ பிறப்பில் ஸ்வபாவ சித்தமாய் இருக்கின்றவைகளும், அளவு கடந்தவைகளுமான அந்த சிறந்த குணங்களோடும் விளங்குகின்றவனாய் தன் மனதிற்குள் கவனித்துமந்திரிமார்களோடு கலந்து பேசி அவர்கள் அபிப்ராயத்தை அறிந்து கொண்டு (ராமரை) இளவரசராய் நியமிக்க வேண்டும் என்று தனக்குள்ளேயே நிச்சயம் செய்து கொண்டார்.

**

சமர்தான் சம்ப்ரக்ருஹந்தி ஜனானபி பராநபி நராதிபா |

 

அயோத்யா காண்டம் 26 – 36

 

அரசர்கள் நலம் செய்யும் புத்திசாலிகளா,, ஒருவிதமான உறவுமில்லாத வேற்று மனிதர்களையும் கூட சேர்த்துக் கொள்கிறார்கள்.

   

**

பர்து பாக்யந்து நார்யேகா ப்ராப்நோதி புருஷர்ஷப |

அயோத்யா காண்டம் 27 – 5

 

புருஷோத்தம! மனைவி ஒருத்தி தான் கணவரின் வினைப்பயனை பகுத்துக் கொண்டு அனுபவிக்கிறாள்.

**

இஹ ப்ரேத்ய ச நாரீணாம் பதிரேகோ கதி: சதா |

                             பால காண்டம் 27-6

கணவரின் வினைப்பயனில் மனைவி மட்டுமே எப்போதும் பங்கெடுக்கிறாள்.

**

சர்வாவஸ்தாகதா பர்து: பாதச்சாயா விஷிஷ்யதே |

                             பால காண்டம் 27-8

 

எல்லா நிலைகளிலும் கணவனே மனைவியின் ஒரே புகலிடம்.

**

பதிஹீனா து யா நாரீ ந சா ந ஸா ஷஸ்யதி ஜீவிதும்

 

அயோத்யா காண்டம் 29 – 7

 

ஏதேனும் ஒரு குலமகள் கணவனை விட்டுப் பிரிந்து விட்டவளாய் ஆகின்றாள் எனில் அவள் உயிருடன் பிழைத்திருக்க உரியவள் ஆகாள் (என்று இப்படி தேவரீரால் எனக்கு உபதேசிக்கப்பட்டருக்கிறது)

**

ந ஹி க்ஷுப்யதி துர்கர்ஷ: சமுத்ர: சரிதாம் பதி:

அயோத்யா காண்டம் 34 – 46

 

 நதிகளுக்கு பதியாகிய ஆழ்கடல் கலக்கமுறுவதில்லை. கலங்கச் செய்ய முடியாததன்றோ அது!

**

பிதா ஹி தைவதம் தாத தேவதானாமபி ஸ்ம்ருதம் |

அயோத்யா காண்டம் 34 – 52

 

தந்தையே! தந்தை தான் தெய்வங்களுக்கெல்லாம் மேலான தெய்வமென்று சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறது.

**

பர்துரிச்சா ஹி நாரீணாம் புத்ரகோட்யா விசிஷ்யதே |

அயோத்யா காண்டம் 35 – 8

பெண்களுக்கு கணவனின் மனம் கோணாது நடத்தல் புத்திரப் பேறின் பெருமையை விட மேலானது.

***

London Swaminathan’s Article Index for February 2024 (Post No.13,060)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,060

Date uploaded in London – –   3 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Index No.135

London Swaminathan’s  Article Index for January 2024 (Post No.12,987) 5/2

Ayodhya Ram may beat Tirupati Balaji ! (Post No.12,990) 6/2

Rare Facts about Peacocks in  Asokan Inscription and Tamil Literature (Post No.13,000)- 1 (11/2)

Rare Facts about Peacocks in Asokan Inscription and Tamil Literature—2 (Post No.13,003)12/2

Why Women have Short Neck? Tamil Poet’s Parody (Post No.13,006)13/2

Akbar and Birbal on Conversions; Ass in Ayurveda (Post No.13,009) 14/2

Cuckoo/Koel Bird/ Kokila in Hinduism (Post No.13,018)18/2

Parrots in Hinduism (Post No.13,021)19/2

Swan /Hamsa in Hinduism (Post No.13,024)20/2

Garuda bird in Hinduism (Post No.13,027)21/2

Owl in Hinduism (Post No.13,032) 23/2

March 2024 Calendar with Garuda Purana Quotations (Post No.13,037) 25/2

Einstein and Garuda Purana; Big Bang and Black Hole (Post No.13,041) 26/2

Lizard worship in Hinduism (Post No.13,042)26/2

Bees in Hinduism and Bee Goddess Temples- Part 1 (Post No.13,049)28/2

Bee in Hinduism and Bee Goddess Temples – Part 2 (Post No.13,051) 29/2

World’s first Vedic clock installed in Ujjain 27/2

Good News from Tirupati; Hindu Conference Welcomes Non Hindus to Join Hinduism 8/2

Hindu Temple in Muslim World : Modi Miracles Increasing day by  day! 14/2

XXXX

In Portsmouth with my grandson

TAMIL POSTS

QUIZ வைஷ்ணவ தேவி கோவில் பத்து QUIZ  (Post No.12,976) 1/2

QUIZ பஞ்சப் பிரயாகை பத்து QUIZ (Post No.12,980) 2/2

QUIZ  பஞ்ச கேதார் பத்து QUIZ (Post No.12,982) 3/2

QUIZ அதிசய காமாக்யா கோவில் பத்து QUIZ(Post No.12,984) 4/2

QUIZ சிம்லா பத்து QUIZ  (Post No.12,986) 5/2

QUIZ ஜெய்ப்பூர் பத்து QUIZ (Post No.12,994) 8/2                                    109

QUIZ  மயில் பத்து QUIZ (Post No.12,998) 10/2

QUIZ குயில் பத்து QUIZ (Post No.13,015) 17/2

QUIZ கிளி பத்து QUIZ (Post No.13,020) 19/2

QUIZ அன்னம் பத்து QUIZ (Post No.13,023) 20/2

QUIZ கருடன் பத்து QUIZ (Post No.13,029)22/2

Quiz ஆந்தை பத்து Quiz (Post No.13,031)23/2

QUIZ பல்லி பத்து QUIZ (Post No.13,038) 25/2

QUIZ நாமக்கல் பத்து QUIZ (Post No.13,047)28/2

அக்பரும் மதமாற்றமும்; ஆயுர்வேதமும் கழுதையும் (Post No.13,008) 14 /2

உஜ்ஜைனி நகரில் வேத கடிகாரம் (Post No.13,045)27 /2

மயில் பற்றி கவிஞர்கள் சொல்லும் அதிசயச் செய்திகள் ! (Post No.13,002)12 2

கருட புராண பொன் மொழிகள்– மார்ச் 2024 காலண்டர் (Post No.13,040)26/2

மயில் தோகை மர்மமும், மகத்துவமும் (Post No.13.013)  16 /2

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!-4 (Post No.12,977)1/2

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!-5 (Post No.12,989)6/2

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!—7 (Post No.13005)13 /2

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்!- 6 (Post No.12,996)9/2

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்-8 (Post.13011)15/2

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 9 (Post No. 13,017)18/2

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 10 (13,026)21/2

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 11 (Post 13,034)24/2

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 12 (Post No.13,044)27/2

முஸ்லீம் நாட்டில் கொழுந்து விட்டு எரியும்

வேத கால அக்கினி (Post No.13,035)24/2

லாபம்  தரும் லாவெண்டர் ஏற்றுமதி; மும்பை அருகில் மூலிகைப் பண்ணை (Post No.12,979)2/2

வெட்டிவேர் VETTIVER ஏற்றுமதி; மருத்துவ குணங்கள் (Post No.12,992)7/2

—SUBHAM—

TAGS- Index No.135London swaminathan, February 2024 index,

தேனீக்கள் தேவி பிரமராம்பா- Part 3 (Post No.13,059)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,059

Date uploaded in London – –   3 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

இந்த மூன்றாவது பகுதியில் இந்து சமயக் கருத்துக்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரப்பிய உலகப் புகழ்பெற்ற சம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாசனும் சங்கத் தமிழ் புலவர்களும் தேனீக்கள் பற்றி என்ன செப்பினார்கள் என்று காண்போம்.

காளிதாசன் காவியங்களில் தேனீக்கள்

சாகுந்தல நாடகத்தில்

காளிதாசனுக்கு  உலகப் புகழ் ஈட்டித்தந்தது   அவனது சாகுந்தலம் என்னும் நாடகம் ஆகும் . அதில் முதல் காட்சிலேயே தேனீக்கள் முக்கிய பங்கினை ஆற்றுகிறது ; சகுந்தலை என்றாலேயே பறைவப்பெண் என்று தமிழில் பொருள்  ; அவளை வளர்த்தது பறவைகள் ; இயற்கை மீது காதல் கொண்ட கானகப் பெண் அவள் ; மல்லிகைச்  செடிக்குத் தாண்ணீர் ஊற்றப் போகிறாள்; அப்போது  ஒரு தேனீ பறந்து வந்து அவளுக்குத் தொல்லை கொடுக்கிறது ; அவள் பொறுக்க மாட்டாமல் ‘உதவி உதவி’ என்று சொல்லி தோழிகளை அழைக்கிறாள் ; இதே நேரத்தில் அவள் அழகை   புதர் மறைவிலிருந்து அனுபவித்துக்கொண்டிருந்த மன்னன் துஷ்யந்தன் அவளது உதவிக்கு ஒடி வருகிறான் . ஆக,  கதா நாயகியையும் கதாநாயகனையும் அறிமுகப் படுத்த, காளிதாசன் தேனீயையே பயன்படுத்துகிறான் !

xxxx

மேக தூதத்தில்

மேக தூதத்தில் குறைந்தது மூன்று இடங்களிலாவது காளிதாசன்  தேனீக்களை  பாடுகிறான் :

ஏ மேகமே ! நீ போகும் வழியில் நடன மாதர்கள் ஆடுவதைக் காண்பாய்; அவர்கள் போட்டியான மணிகள் ஓசையை எழுப்பும் ; ரத்தினம் பதித்த சாமரங் களை வீசி வீசி கைகள் ஓய்ந்து போயிருக்கும்; கைவர்களால் விரல் ஏற்பட்ட காயங்களுக்கு உன் மழைத்துளிகள் ஆறுதல் தரும்; அந்த நடனமாதர்களின்  கடைக்கண்   பார்வை தேனீக்கள் வரிசைபோல இருக்கும்.

xxxx

மேகமே! நதியைக் கடந்து போன பின்னர் தாசபுர பெண்கள் உன்னை விநோதமாகப் பார்ப்பார்கள் ; அவர்களுடைய பார்வை கீழே விழுந்து கிடக்கும் மல்லிகை மலர்களை வட்டமிடும் தேனீக்களைவிட அழகாக இருக்கும்; பிறை வடிவ புருவங்கள் நெளிந்து சுழியும் ; மேலும் கீழும் செல்லும்  (தேனீக்களின் கருமையையும் அவை பிறை வடிவில் பறந்து செல்வத்தையும் கற்பனை செய்கிறான் காளிதாசன்)

xxxx

சிவபெருமான் அருகில் இருப்பதை அறிந்த மன்மதன் சாதாரண வில் அம்பினை எடுக்க அஞ்சி கரும்பு வில்லை எடுத்தான் ; அதன் நாண், தேனீக்களால் ஆனது;  காதல் வசப்பட்ட பெண்கள் தான் விரும்பும் ஆடவன் மீது வீசும் பார்வை எப்படி ஆண்மகனை வசமாக்குமோ அப்படி குறியிலக்கை அடிக்கக்கூடிய (மலர்) அம்பு அது .

(தமிழிலும் மன்மதனின் கரும்பு வில்- மலர் அம்புகள் வருகின்றன. )

xxxx

ரகுவம்ச காவியத்தில்

சீதா தேவிக்கு அனுசுயா தேவி நறுமணப் பொருட்களை அளித்தாள்; அந்த வாசனையானது தேனீக்களை அவர்பால் ஈர்த்தன ; அவை மலர்களை விட்டு சீதையை வட்டமிடத் துவங்கின   [12-27]

अनसूयातिसृष्टेन पुण्यगन्धेन काननम्।

सा चकाराङ्गरागेण पुष्पोच्चलितषट्पदम्॥ १२-२७

இதில் தேனீக்களுக்கு காளிதாசன் பயன்படுத்தும் சொல் ஷட்பதம் ; அதாவது ஆறு கால் ; சங்கத் தமிழ் நூல்களிலும் இதே போல அறு கால் பறவை, அறு காலி என்ற சொற்களே தேனீ, வண்டு ,தும்பி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது .இமயம் முதல் குமரி வரை  ஒரே அணுகுமுறை ! 

xxxx

अथ मदगुरुपक्षैलोकपालद्विपाना
मनुगतमलिवृन्दैर्गण्डभित्तीर्विहाय।
उपनतमणिबन्धे मूर्ध्नि पौलस्त्यशत्रोः
सुरभि सुरविमुक्तम् पुष्पवर्षम् पपात॥ १२-१०२

பின்னர் ராமபிரான் தலையில் கிரீடம் இறங்கியது ; தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர் ; அஷ்ட திக் பாலகர்களின் யானைகளின் மதத்தை மொய்த்திருந்த தேனீக்கள்/ வண்டுகள் அவைகளை விட்டுவிட்டு மலர்களை மொய்க்க துவங்கின [12-102]

யானைகளின் மதத்தை மொய்க்கும் வண்டுகளும் தமிழ் இலக்கியத்தில் நிறைய இடங்களில் வருகிறது .

xxxx

  • खर्जूरीस्कन्धनद्धानां मदोद्गारसुगन्धिषु|
    कटेषु करिणां पेतुः पुंनागेभ्यः शिलीमुखाः॥ ४-५७
  • kharjūrīskandhanaddhānāṁ madodgārasugandhiṣu|
    kaṭeṣu kariṇāṁ petuḥ puṁnāgebhyaḥ śilīmukhāḥ || 4-57
  •  
  • भल्लापवर्जितैस्तेषां शिरोभिः श्मश्रुलैर्महीम्|
    तस्तार सरघाव्याप्तैः स क्षौद्रपटलैरिव॥ ४-६३
  • bhallāpavarjitaisteṣāṁ śirobhiḥ śmaśrulairmahīm|
    tastāra saraghāvyāptaiḥ sa kṣaudrapaṭalairiva || 4-63

பாரசீகர் சிற்பங்களை பார்ப்போர் அவர்களுடைய தாடிகள், தேன்கூடு போல இருப்பதைக் காணலாம் . இதையும் காளிதாசன் குறிப்பிடத்  தவறவில்லை  !

ரகு, தனது ஈட்டி போன்ற அம்புகளால் மேற்கத்திய படைகளின் தலைகள் கீழே உருளும்படி செய்தான் ; பூமி முழுதும் தேனீக்கள் வலம் வரும் தேன்கூடுகள் போல அவை இருந்தன.  [4-63]

xxxx

விக்ரமோர்வசீய நாடகத்தில்

“காணாமற்போன பொருளை தாமரை இதழ்களுக்கு நடுவே ரீங்காரமிடும் தேனீக்களும் காணவில்லை :கடம்ப மரத்தின் கீழ் பெண்யானையுடன் படுத்திருக்கும் அரண்மனை யானையும் காணவில்லை”.

தாமரை மலரை வட்டமிடும் தேனீக்களும் தமிழ் இலக்கியத்தில் உள்ளன

xxxx

குமார சம்பவ காவியத்தில்

महीभृतः पुत्रवतो ऽपि दृष्टिस्तस्मिन्नपत्ये न जगाम तृप्तिम्।
अनन्तपुष्पस्य मधोर्हि चूते द्विरेफमाला सविशेषसङ्गा॥ १-२७

“ஹிமவானுக்கு எத்தனையோ புதல்வர், புதல்விகள் இருந்தபோதிலும் புதிதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பார்த்து மகிழ்வதில் அவன் ஆர்வம் தணியவே இல்லை ; எவ்வளவோ மலர்கள் இருந்தாலும் மாமரத்தின் பூக்களையே அதிகம் விரும்பும் தேனீக்களை போல இது இருந்தது” . [1-27]

xxxxx

அடுத்த பகுதியில் சங்கத் தமிழ்  நூல்களில் வரும் ஒப்புவமைகளைக் காண்போம்.

–subham—

Tags- காளிதாசன் , தேனீ, பகுதி 3, மேகதூதம், சாகுந்தலம் ,குமார சம்பவம் , அறு காலி, ஆறு கால் பறவை , தும்பி, வண்டு

யாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்? (Post No13,058)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.058

Date uploaded in London – — 3 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

யாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்? 

ச.நாகராஜன் 

யாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும்?

 அன்றாட வாழ்க்கையில் பல பலன்களை அடைவதற்காக நாம் இறைவனைத் துதிக்கிறோம்.

யாரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் என்பதை சூத சம்ஹிதை ஞான யோக காண்டம் எட்டாம் அத்தியாயம் விரிவாக உரைக்கிறது.

அதில் முக்கியமான விஷயங்கள் இங்கு சுருக்கமாகத் தரப்படுகிறது.

1)      முக்திக்கு விருப்பமுள்ளவர்கள் ஆத்ம ஞானிகளை வணங்க வேண்டும்.

2)      பிரம்ம தேஜஸை அடைய விரும்புபவர்கள்  சிவபக்தியுள்ள வேதியரை வணங்க வேண்டும்.

3)      வியாதி இல்லாமல் இருப்பதற்கு சூரியனை வணங்க வேண்டும்.

4)      பலத்தை அடைய விரும்புபவர்கள் வாயு தேவனை வணங்க வேண்டும்.

5)      கீர்த்தியை (புகழை) அடைய அடைய விரும்புபவர்கள் அக்னி தேவனை வணங்க வேண்டும்.

6)      நல்ல அறிவைப் பெறுவதற்கு விரும்புபவர்கள் சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும்.

7)      ஞானத்தை அடைவதற்கு உமா தேவியை வணங்க வேண்டும்.

8)      கர்மசித்தி அடைவதற்கு விநாயகரை வணங்க வேண்டும்.

9)      போகத்தை அடைய விரும்புபவர்கள் சந்திரனை வணங்க வேண்டும்.

10) பொறுமையை அடைய விரும்புபவர்கள் சிவபிரானை வணங்க வேண்டும்.

11) வைராக்கியம் அடைய விரும்புபவர்கள் இந்திரனைத் துதிக்க வேண்டும்.

சிவ பூஜையை விதிப்படி செய்பவர்களுக்கு எல்லாம் கிடைக்கும்.

சோதிஷ்டோமம் உள்ளிட்ட யாகங்களைச் செய்பவர்கள் தேவர்களே ஆவர்.

சதருத்திரம், சமகம், புருஷ சூக்தம், பஞ்சாட்சரம் ஆகிய இவற்றை ஜபிக்கின்றனவர்கள் சகல பாவங்களையும் ஒழிப்பர்.

21 தலைமுறைகளுடன் சிவ லோகம் அடைந்து  விரும்பிய போகங்களை நுகர்ந்து  அங்கேயே அநேக கற்பகாலம் வசித்து, பிறகு பூமியில் பிறந்து  மெய்ஞானத்தைப் பெற்று சாயுஜ்ய முக்தியைப் பெறுவார்.

இன்பமல்லாதவற்றை இன்பம் என்று கருதி அவற்றைப் பெற முயன்று வருந்துகின்றவர்கள் கனி இருக்கக் காய்களைப் பெறுபவர்களுக்குச் சமமாவர்.

அழியாத முக்தி இன்பம் இருக்க அதை விட்டு விட்டு உலக இன்பங்களை அடைய விரும்புவது ஆச்சரியமே அல்லவா!

இவ்வாறு விரித்து உரைக்கிறது சூத சம்ஹிதை.

ஞானம் ஏன் உண்டாவதில்லை?

சூத சம்ஹிதையில் முக்தி காண்டம் ஆறாம் அத்தியாயம் ஞானம் ஏன் உண்டாவதில்லை என்பதற்கு முக்கியமான காரணங்களைக் கூறுகிறது.

இந்தக் காரணங்களை திருமாலுக்கு சிவன் உபதேசித்து அருள்கிறார்.

அவற்றில் முக்கிய சுருக்கத்தை இங்கு பார்க்கலாம்:

1)      சிவனடியார்க்கு தீங்கு செய்வது

2)      ஞான நூல்களை வெறுப்பது

3)      விபூதி, ருத்திராட்சம் தரியாமல் இருப்பது

4)      பிறர் பொருள்களைத் திருடுவது

5)     வேதத்தை இகழ்வது

6)     வேதத்தை ஓதாமல் இருப்பது

7)     வேதம் ஓதுபவர்களை அவமதிப்பது

8)     வேத நிந்தையைக் கேட்க விரும்புவது

9)     வேதம் ஓதியவர்களுக்கு இடையூறு விளைவிப்பது

10)                        ஆகமம், ஸ்மிருதி, புராணம் இவற்றில் அன்பில்லாமலிருப்பது

11)                        பெரியாரோடு கூடாமை

12)                        சிவபக்தர்களைப் பெரியோர் என்று எண்ணாமல் இருப்பது

13)                        இழிந்தவருடன் கூடுவது

14)                        காமம், குரோதம்,மோகம், லோபம், மதம், மாச்சரியம், டம்பம் முதலிய குணங்களைத் தழுவுவது

15)                        பாவ, புண்ணியங்கள், தெய்வம் உண்டோ என்று சந்தேகப்படுவது

16)                        தாய் தந்தையருக்குத் தீங்கு விளைவிப்பது

17)                        மழை, வெயில், காற்று ஆகிய இவற்றால் நொந்து வந்தவர்களை உபசரியாமல் இருப்பது

18)                        திருடர்களாலும் பலவந்தர்களாலும் வருந்துகின்றவர்களுக்கு உதவி செய்யாமல் இருப்பது

19)                        சாதுக்களுக்குத் துன்பம் இழைப்பது

20)                        துஷ்டர்களுடன் சிநேகம் செய்து கொள்வது

21)                        பசுக்களுக்குத் துன்பம் விளைவிப்பது

22)                        வழிநடைப் பாதைகளைக் கெடுப்பது

23)                        ஆகர்ஷனம், வசியம், மோகனம், ஸ்தம்பனம்,  வித் த்வேஷணம், மாரணம் ஆகிய ஆறு கர்மங்களை செய்வது,

24)                        சூதாடுவது

25)                        பெண்கள் ஆடும் நடனத்தில் பிரியம் வைத்துப் பார்ப்பது

26)                        நல்லொழுக்கத்தை விடுவது

27)                        பொறுமையுள்ள பெரியோர்களுக்குச் சேவை செய்யாமலிருப்பது

28)                        மனைவி மக்களிடத்தில் அதீத பற்று கொள்வது

29)                        அதே அளவு அன்பு ஆசிரியரிடம் இல்லாமல் இருப்பது

30)                        குருவை வணங்க வெட்கப்படுவது

31)                        குருவுக்குத் தீமை செய்வது

32)                        குருவுக்குப் பிரியம் இல்லாததைச் செய்வது

33)                        குரு இப்படிப்பட்ட தன்மையை உடையவராய் இருக்கிறார் என்று மனதில் சிந்திப்பது

34)                        குரு நல்லொழுக்கம் இல்லாதவராக இருக்கிறார் என்று கருதுவது

35)                        குரு நிந்தையைக் கேட்பது

36)                        குரு அடையும் துன்பத்தைப் பார்த்துச் சகித்துக் கொண்டிருப்பது

37)                        குருவுக்கு எதிரில் அடக்கம் இல்லாமல் இருப்பது

38)                        குருவுக்கு எதிரில் சிரித்து பரிகாசமாக பேசுவது

39)                        குருவினிடத்தில் வீண் பேச்சு பேசுவது

40)                        குரு மொழியை  மறப்பது

41)                        குற்றமற்ற மனைவியை வெறுத்து நீக்குவது

42)                        அந்நிய மாதரை விரும்புவது

43)                        அந்நிய மாதரிடம் பாலியல் உறவு கொள்வது

44)                        அவரது அழகு முதலியவற்றைக் கேட்டு மகிழ்வது

45)                        ஏழைக்கு இரங்காமல் இருப்பது

46)  பிறருடைய கல்வி, செல்வம் ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொள்வது

47) தன்னையே பெரியவனாக நினைப்பது

48) தீர்த்த யாத்திரை முதலியவற்றை வெறுப்பது

49) சிவாலய தரிசனம் செய்யாமல் இருப்பது

50) பஞ்சாட்சரத்தை ஜபிக்காமல் இருப்பது

ஆகிய இவை ஞான உற்பத்தி ஆகாமைக்குக் காரணம் என்று சிவபெருமான் கூறி அருள்கிறார்.

ஸ்கந்த புராணத்தில் இல்லாதது எங்கு இல்லை. ஆகவே தான் எந்தப் பொருளும் கந்த புராணத்தில் என்று பெரியோர்கள் கூறுவது வழக்கம்!

***

Bee in Hinduism –Part 3 (Post No.13,057)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,057

Date uploaded in London – –   2 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 Bee in Hinduism –Part 3 (Post No.13,057)

Kalidas was the greatest Indian poet; he lived during the reign of Vikramaditya in the first century BCE. He was like a Vedic Rishi who dealt with Hindu Gods and Hindu values.

99.9 % of Sangam Tamil poets were also Hindus.  They approached Nature in the same way like their counterparts in the north.

Let me give some comparisons:

Kalidas in his most popular drama Shakuntalam used bee to introduce King Dushyanata. He came to forest and saw the beautiful Shakuntala from behind the trees. Shakuntala was  watering a Mallika plant and a bee got agitated and started buzzing around Shakuntala; she got annoyed and was looking for help. At that time Dushyanta came to help her. So, a bee brings the hero and heroine to the stage.

xxxxx

In Kumarasambhava

महीभृतः पुत्रवतो ऽपि दृष्टिस्तस्मिन्नपत्ये न जगाम तृप्तिम्।
अनन्तपुष्पस्य मधोर्हि चूते द्विरेफमाला सविशेषसङ्गा॥ १-२७

mahībhṛtaḥ putravato ‘pi dṛṣṭistasminnapatye na jagāma tṛptim |
anantapuṣpasya madhorhi cūte dvirephamālā saviśeṣasaṅgā || 1-27


Though Himavan has many sons and daughters his outlook towards this baby-girl remained insatiable; that said, though the vernal season is laden with innumerable flowers stings of honeybees have a yen for mango blossoms alone. [1-27]

xxxxx

In Vikramorvaseeyam

Neither the bees which murmur between the petals of the lotus, nor the royal elephant, that reclines with his spouse beneath the Kadamba tree, has seen the lost one.

xxxx

In Meghaduta

At least three interesting references are found in Kalidasa’s Meghaduta:-

There, their girdles jingling to their footsteps, and their hands tired from the
pretty waving of fly-whisks whose handles are brilliant with the sparkle of
jewels, having received from you raindrops at the onset of the rainy season
that soothe the scratches made by fingernails, the courtesans cast you
lingering sidelong glances that resemble rows of honey-bees.

1.     Their belts clattering with their dance steps,

Their arms worn out from the graceful shaking of decorated fly-whisks,

Their scratch marks soothed by the first drops of your rain,

Will let loose glances towards you like a line of bees.

2.Having crossed that river, move along,
Making your image a vessel for the curiosity of the eyes of the young women of Daśapura.
Their eyes steal the beauty of bees that follow cast aside Kunda flowers,

Gleaming black and white, moving higher and higher,

Lifting up their lashes,

Flirting with furrowed brows.

3.Knowing that Śiva lives nearby,
The god of love, afraid, does not bear his normal bow,
But rather one whose string is made merely of bees.
His efforts are carried out by women who flirt expertly with those they desire—
With arched brows and their eyes directed
They hit their mark, the target of love.

xxxx

in Ragu vamsa

अनसूयातिसृष्टेन पुण्यगन्धेन काननम्।
सा चकाराङ्गरागेण पुष्पोच्चलितषट्पदम्॥ १२-२७

anasūyātisṛṣṭena puṇyagandhena kānanam|
sā cakārāṅgarāgeṇa puṣpoccalitaṣaṭpadam || 12-27

With the richly fragrant unguent bestowed upon her by lady Anasuya Seetha made the forest fragrant, such that the bees gave up the flowers and swarmed around her. [12-27]

अथ मदगुरुपक्षैलोकपालद्विपाना
मनुगतमलिवृन्दैर्गण्डभित्तीर्विहाय।
उपनतमणिबन्धे मूर्ध्नि पौलस्त्यशत्रोः
सुरभि सुरविमुक्तम् पुष्पवर्षम् पपात॥ १२-१०२

atha madagurupakṣailokapāladvipānā

manugatamalivṛndairgaṇḍabhittīrvihāya|
upanatamaṇibandhe mūrdhni paulastyaśatroḥ

surabhi suravimuktam puṣpavarṣam papāta || 12-102

atha

,

Then gods poured down a shower of fragrant flowers which incidentally was accompanied by swarms of honeybees that have left swarming around the broad temples of the elephants of the guardian-deities of the quarters, and wings laden with ichor secreted from the temples of the elephants of the regents of the quarters, on the head of the enemy of Paulastya, namely Ravana, whereon the crown was soon to be placed. [12-102]

 Then fell on Rama’s head, which soon should wear / The Kingly crown, a rain of fragrant flowers,/Poured by the joyful Gods, while on them swarmed/(Their wings with honey laden) bees that late/Forsook the perfumed streams which from the brows/Distilled of Elephants that guard the Worlds.

–o)0(o–

·         खर्जूरीस्कन्धनद्धानां मदोद्गारसुगन्धिषु|
कटेषु करिणां पेतुः पुंनागेभ्यः शिलीमुखाः॥ ४-५७

·         kharjūrīskandhanaddhānāṁ madodgārasugandhiṣu|
kaṭeṣu kariṇāṁ petuḥ puṁnāgebhyaḥ śilīmukhāḥ || 4-57

·          

·         भल्लापवर्जितैस्तेषां शिरोभिः श्मश्रुलैर्महीम्|
तस्तार सरघाव्याप्तैः स क्षौद्रपटलैरिव॥ ४-६३

·         bhallāpavarjitaisteṣāṁ śirobhiḥ śmaśrulairmahīm|
tastāra saraghāvyāptaiḥ sa kṣaudrapaṭalairiva || 4-63

·        

·         raghu covered the ground with the bearded heads of westerners that are cut off with spear-like arrows, as if they are the sheaves of honeycombs swarming with bees. [4-63]

·         

When the swayamvara began in an ambient air, nobly attired Princess Indumati crisscrossed each row in the lofty hall to make her maiden’s Choice. Lord of beauty for herself, as she walked fast each row, through the veil of cloth which covered her face, she carefully noticed the arts of love expressed by the audience who sought her company in life. On their part, beaming noble chiefs from several states, swarming the hall like cluster of bees in garden, trifled with their gestures to reach the heart of the maid when she passed through them.
The assembled Princesses and Kings as gesture of pomp displayed their wealth in different ways. While a Prince twirled a Lotus, another carelessly pulled out the diamond necklace hanging from his neck and moved its sides on shoulder, another tossed the gold lined robe hither thither.

xxxx

Chanakaya on bees

Chanakya says,

The pious people should always give food and money in charity, never should they accumulate them. The glory of the illustrious Karna, Bali and Vikramditya persists unabated even now. Look, the honey bees rub their hands and feet because of the despondency of losing honey that they had gathered for long.

–Chanakya Niti 11-18 

deyam bhojyadhanam sadaa sukruthirbinaa sanchitavyam sadaa

sriikarnasya nhaleerasca vikramateradhyaapi kiirtihi sthithaa

asmaakammadhu daanabogarahitam nashtam chiraat sanchitam

wirvaanaaditi paanipaathayugale garshantyaho makshikaahaa

xxx

A Tamil poet in Naladiyar says

Naladiyaar is a Tamil didactic book composed by Jain saints in Tamil. The poet Padumanaar, who compiled 400 verses, says,

“Those who vexing their own bodies by stinting in food and clothing, perform not acts of charity that ever remain undestroyed, but avariciously hoard up a great wealth, will lose it all. O Lord of the mountains, which touch the sky, the bees that are driven away from the honey they have collected bear testimony to this.

xxxx

In Bhasa’s Svapnavasavadatta

45. King -no, no, do not do that one should never frighten the bees. Kale, M.R., Svapna-vāsavadattā, P.28

xxxxx

In Sangam Tamil Literature

The noise of the mountain stream or the humming of bees serves as a lullaby to the sleeping elephant– Akam 332

Tamil poet Tankal Porkollan Venkannanar hears the pleasant sweet music of humming bees in the blossomed branches  and sais it is like the sweet tune of lyre/ yaz—Akam355

Tayankannanar describes the activities of a bee in Akam 132

The bee opens a bud in the mountain pool. An then goes to the venkai tree flowers , sucks honey from them , flies to the honeyd kantal flowers  and sleeps there dreaming oh the flow of rut in the face of the elephant .

Naakkirar also in his work tirumurugatru padai sings that the bees visit  and hum in them and afterwards in the morning approach the like blossoms in the mountain  pools and warble melodious tunes there –Akam 290.

Nochi Niyamam Kilar describes that the gem like bees are humming among the kantal flowers- Kuruntokai 17

Anti Ilam Kiranar describes the evening scene in the rural area where he says the bees  are like ungrateful people. Like the ungrateful people deserting the poor and seeking the rich , the bees  fly from the blossoms in the mountain pools to those in the branches of trees- Akam 71.

Kavan Mullaip Putanar paints an original picture in his  Kuruntokai poen 21,

The bees in the scorching heat of the dry land seek honey in a bunch of maraam flowers but fly away with utter disappointment.

Tumpi Cer Kiranar refers  to  Tumpi in two poems which means any beetle. In both the poems the heroine addresses the Tumpi and expresses her feelings of suffering in the absence of her lover, Kuruntokai 392, Narrinai 277

Kalittokai 66 also has also has a picturesque description of beetle with lines on its body.

Though many more poets have sung the bees in  Sanskrit and Tamil, their approach is almost same.

The sound of the west wind passing through the holes made by the beetles in bamboos is compared to the sweet tune of the shepherd’s flute- Akam 225

The flow of rut in elephants attracts bees and their humming sound is musical enough to attract the mythical animal called Acunam which listens which listens to it and mistakes it for the tune of Yaaz/ lyre – Akam 88

xxxxx

Honey Bee in Sanskrit

 madhukaram. “honey-maker”, a bee   etc. View this entry on the original dictionary page scan. 
 
madhukaram. a lover, libertine  View this entry on the original dictionary page scan. 
 
madhukaram. Eclipta Prostrata or Asparagus Racemosus  View this entry on the original dictionary page scan. 
 
madhukaram. Achyranthes Aspera  View this entry on the original dictionary page scan. 
 
madhukaram. the round sweet lime  View this entry on the original dictionary page scan. 
 
madhukaragaṇam. a swarm of bees  View this entry on the original dictionary page scan. 
 
madhukaramayamfn. consisting of bees  View this entry on the original dictionary page scan. 
 
madhukararājanm. the king of bees id est the queen bees  View this entry on the original dictionary page scan. 
madhukaraśreṇif. a line of bees  View this entry on the original dictionary page scan.
madhukarāyaNom. A1. yate, to represent a bee  View this entry on the original dictionary page scan.
madhukaf. a female bee   (varia lectio) etc. View this entry on the original dictionary page scan.
madhukaf. Name of a girl  View this entry on the original dictionary page scan.
madhukarikāf. Name of woman  View this entry on the original dictionary page scan.
madhukarinm. a bee  (varia lectioView this entry on the original dictionary page scan.

—-subham—

Tags- Bees, Kalidasa, Chanakya, Tamil poets, part 3

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்—13 (Post No.13,056)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,056

Date uploaded in London – –   2 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 120  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

PART 13

xxxxx

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்–13

121. வயிற்றுக்கு கிருமிக்கு

எலிச்செவியம், முருங்கை வேர், திரிபலை  இவை நறுக்கி கிஷயமிட்டு ஒரு சங்கு அளவு கொடுக்க புழுக்கள் நிவர்த்தியாகும்.

XXXXX

XXXX

122. நீர் எரிவுக்கு

எலுமிச்சம்பழச்சாறும் நல்லெண்ணெயையும் சமன் கலந்து  ஒரு பலமிருக்கும்படி  சாப்பிட்டால் எரிவு தீரும் .

XXXX

XXXX

123. இரத்தம் போல் நீர் இறங்குவதற்கு

எருமைப் பாலிரண்டு படியில் பொன்னாங்கண்ணி வேர்  எலுமிச்சங்காய் அறைத்துப்போட்டு நன்றாய்க் காய்ச்சி புரை குத்திக் கடைந்து வெண்ணெய் எடுத்து அந்த வெண்ணையை அதிகாலை மூன்று நாள் சாப்பிடவும்; அந்த மோரை தாக சாந்தி செய்து வரவும் ; மேற்படி வியாதி  தீரும்.

XXXX

124. சர்வ சிரங்குக்கும்

எலியாமணக்கு சமூலத்தை பழச்சாற்றில் அறைத்து வேப்பெண்ணெயில் கலக்கிக் காய்ச்சி எல்லாவித சிரங்குக்கும்  தடவி வர ஆறிப்போகும்.

XXXX

125.நீரொழுக்கிற்கு

எள்ளுப்புண்ணாக்கும் கோவையிலையும் சரியிடை கூட்டி அறைக்காரம் சேர்த்தது புரட்டி ஒரு கொத்து கொடுத்துவரவும் . இப்படி மூன்று நாள் கொடுக்க சாந்தியாகும்.

XXXX

126. இரத்த மூலத்திற்கு

எருக்கன் கிழங்கும் புழுங்கலரிசியும் சரியிடை உளுந்து

கால் பங்கு கூட்டி அறைத்து புளிக்க வைத்து தோசை சுட்டுக்கொடுக்க இரத்த மூலம் தீரும்; இப்படி மூன்று நாள் அல்லது 5 நாள் கொடுக்கவும்.

XXXXX

127. காமாலைக்கு

எருமைச் சாணிப்பால் எருமைத் தயிர் இரண்டும் கலந்து சீரகம் வெங்கா…ம்  சமன் சேர்த்து  மேற்படி தயிர்விட்டு அறைத்து எருமைப்பாலில் கலக்கிக் கொடுக்கவும்; இப்படி 5- 7  வேளை கொடுக்க சாந்தியாகும்.

XXXX

128. கல் அடைப்புக்கு

எருக்கன் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு சேர்க்காமல் வெற்றிலை பாக்குடன் வைத்து தின்னவும். இப்படி 2 அல்லது 3 வேளை தின்னவும் ; கல்லடைப்பு தீரும்.

XXXX

129. உண்ணாக்கு வளர்த்திக்கு

எவாச்சாரம் கல் சுண்ணாம்பும் சமநிடை எடுத்து  எலுமிச்சம்பழச் சாற்றில் அறைத்து  பயரளவு எடுத்து உள் நாக்கில் தடவவும். குணமாகும்.

XXXX

130. இருதய வலிக்கு

எலுமிச்சம் பழம் 5 பிழிந்துகொண்டு  அகில் குலாப்புத் தூள் சந்தனத்தூள் ஜாதிக்காய்த் தூள் வகைக்கு ஒரு ரூபாயிடை காவிக்கல் ஒரு  விராகநிடை  கூட்டிக் கலக்கி வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு ஒரு ரூபாயிடை புசித்துவரவும். இருதய காபரா நெஞ்சத் துடிப்பு இதுகள் நீங்கும்

XXXX

— SUBHAM—

TAGS- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 13, எலுமிச்சம் பழம், எருக்கன் பூ

S.Nagarajan Article Index : FEBRUARY  2024 (Post No.13,055)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.055

Date uploaded in London – — 2 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

SNR Article Index : FEBRUARY  2024

FEBRUARY  2024 

1-2-2024 12975 ராம நாம மஹிமை – 7                                 2-2-2024 12978 மின்னல் வேக மன்னன் ப்ரூஸ் லீ – பயிற்சியே வெற்றி! 3-2-2024 12981 SNR Article Index : JANUARY  2024.                                                             4-2-2024 12983 மயிலுக்கும் அரசனுக்கும் சிலேடை! – மஹாபாரத ரகசியம் 5-2-2024 12985 கர்ம ரகசியம்! – 5 இறந்தவர்கள் செல்லும் மூன்று வழிகள்    – ரமணீயம், நிராபாதம், துர்த்தர்சம்!                                                                              6-2-2024 12988 மப்புலோ ஏமுண்டி, நா மனசுலோ ஏமுண்டி?             7-2-2024 12991 ஶ்ரீ ராமருக்கு வெற்றி!

8-2-2024 12993 புத்தக அறிமுகம் 131 செப்பு மொழி 500 +                                                    9-2-2024 12995    பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -1 மாலைமலர் 7-2-2024 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை.

10-2-2024 12997 பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -2 மாலைமலர் 7-2-2024 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை.

11-2-2024 12999 சிவ பக்தி!

12-2-2024 13001 17 வருடங்களில் 17 அறிவுரைகள்! – ஹெல்த்கேர்  பிப்ரவரி.                         2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை                       13-2-202413004  பாரதத்தை ஹிந்து ராஷ்ட்ரம் என்று அழைப்பதில்  

  என்ன தவறு?                                                                                           14-2-2024 13007 தயையின் மஹிமை!                                     15-2-2024 13010 புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன்

              எழுதிய இராமாயணம் – அயோத்யா காண்டம்- வால்மீகி –                  பாகம் 2                                                                                          16-2-2024 13012 தம் மாரோ தம்; மிட் ஜாயே கம்!                         

 17-2-2024 13014 ஹோண்டா : தோல்விகளால்                                துவளாதீர்கள் -1         மாலைமலர் 14-2-2024இல்   

                                  வெளியாகியுள்ள கட்டுரை.                                                                  18-2-2024 13016 ஹோண்டா : தோல்விகளால்

                                     துவளாதீர்கள் –       மாலைமலர் 14-2-2024இல்

                                     வெளியாகியுள்ள கட்டுரை                                                                    19-2-2024 13019 திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள நவகிரகங்கள் – கலைக்களஞ்சியம் :புத்தக அறிமுகம்                                                                                                                                         20-2-2024 13022 புத்தக அறிமுகம்   திரு சந்தானம் சீனிவாசன் அவர்கள் எழுதியுள்ள நவீன ஞான மொழிகள் பாகம் – 1    

21-2-2024  13025 சிதம்பரத் தலத்தின்   மஹிமை                                                                                                                                                                            

22-3-2024 13028 ஜரா சாம்னே தோ ஆவோ சலியே!                                            23-2-2024  13030 – ஸ்டீவ் ஜாப்ஸ் :  எதையும் நேசித்துச் செய்யுங்கள்! –1    21-2-2024 மாலைமலர் இதழில்   வெளியாகியுள்ள கட்டுரை.          24-2-204 13033 ஸ்டீவ் ஜாப்ஸ் :  எதையும் நேசித்துச் செய்யுங்கள்! –2      21-2-2024 மாலைமலர் இதழில்   வெளியாகியுள்ள கட்டுரை.                 25-2-2024 13036 அறிவியல் புதிர்கள்!                               26-2-2024 13039 கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி!                                                27-2-2024 13043 கர்ம ரகசியம்! – 6 ஐந்து வித நரகங்கள்!                                                28-2-2024 13046 கர்ம ரகசியம்! – 7 சுபஅசுப கர்மங்கள்அவற்றின் \  பலன்கள்!                                                                                                                                    29-2-2024 13050 ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன்    செயல்படுங்கள்! – 1  28-2-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.

 —–subham—-

தேனீக்கள் தேவி பிரமராம்பா -2 (Post No.13,054)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,054

Date uploaded in London – –   1 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

கட்டுரையின் முதல் பகுதியில் ஆந்திரத்திலுள்ள ஸ்ரீ சைலம் கோவில் பிரமராம்பாவையும் மேற்கு வங்கத்தில் ஜலப்பைக்குரி அருகிலுள்ள பிரமராம்பாவையும் தரிசித்தோம்.

மேலும் சில சுவையான செய்திகளைக் காண்போம் :

இந்து மதத்தில் மன்மதனைப் பற்றி புராணங்களும் காளிதாசனும் என்ன சொல்கின்றனரோ அதையே தமிழ்ப் புலவர்களும் செப்பினர். மன்மதனுக்கு கரும்பு வில். தேனீக்களான நாண்; அவன் ஐந்து மலர் அம்புகளை விட்டால் யாரும் காதல் வசப்படுவர். அவனுக்கும் மனைவி ரதி தேவிக்கும் கிளி வாகனம் ; இந்தச் சிலைகளை பல கோவில்களில் காணலாம். இதிலும் மலரும் தேனீயும் முக்கிய இடத்தைப் பெறுகிறது .

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜபுதனத்தில் வாழ்ந்த இளவரசி மீராபாய்  , தமிழ்நாட்டு ஆண்டாள் போலவே கிருஷ்ணன் மீது அபார பக்தி கொண்டவள் ; அவள் பல பாடல்களில் தன்னை தேனீயாகவே உருவகித்துப் பாடியிருக்கிறாள் ; இறைவன் திருவடியில் கிடக்கும் தாமரைப்பூக்களில் உறையும் தேனீ போல இருங்கள் என்கிறார். மீரா பஜனை பாடாத  பஜனைகள் இல்லை; ஹிந்துஸ்தானி இன்னிசைக் கச்சேரிகள் இல்லை .

இதே போல கோபிகளின் தலைவி ராதாராணியும் கண்ணன் மீது அபார காதல் கொண்டவள்; அது தெய்வீக காதல் ; தோல் மீதான காதல் அல்ல  என்று சுவாமி விவேகானந்தர் உரைகளில் விளக்கியுள்ளார். மேலும் கோபிகளின் சேலைகளை கிருஷ்ணன் ஒளித்துவைத்த செய்தி 2000  ஆண்டு பழமையான சங்க இலக்கியத்திலும் உள்ளது . தொழுனை என்னும் யமுனை நதி   பற்றி சங்க நூல்களும் சிலப்பதிகாரமும் பாடுகிறது . அவ்வளவு பழமையான ராதா ராணியும் தேனீ மூலம் செய்தி அனுப்புகிறாள் காதலன் கண்ணனுக்கு . அது மட்டுமல்ல ஏ தேனீயே! நீ என்னை ஏமாற்றப் பார்க்காதே. உன் மீசையில் ஓட்டிக்கொண்டிருக்கும் மகரந்தம் நீ எத்தனை மலர்களை மேய்ந்திருக்கிறாய் என்பதை காட்டுகிறது. கண்ணனும் அப்படித்தான் போலும்; வெவ்வேறு மலர்களை / பெண்களை நாடுகிறான் போலும் என்று பாடுகிறாள் ; இதுவும் சங்க இலக்கியத்தில் உள்ளது ; ஆண்களை மலர் மேயும் வண்டுகள் என்று நற்றிணைப் புலவர் சாடுகிறார் .

வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்

கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்

ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்

தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்

கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே!         5

நீயே பெரு நலத்தையே; அவனே,

நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,

தண் கமழ் புது மலர் ஊதும்

வண்டு” என மொழிப; ”மகன்” என்னாரே.

—-மதுரை மருதன் இளநாகனார் பாடல், நற்றிணை 290

அவன் (காதலன்),

நீர் நிறைந்த பொய்கையில்

அன்றாடம் மலரும் புது மலர்களை

ஊதித் தேனுண்ணும் வண்டு போன்றவன்

என்று கூறுகின்றனர்.

அவனை “மகன்” என்று யாரும் மதிப்பதில்லை.”

xxxx

ஆதி சங்கரரும் நாராயண தீர்த்தரும்

சில நூறு ஆண்டுகளுக்கு  முன்னர் வாழ்ந்த நாராயண தீர்த்தர் (1700 CE) என்ற மஹான் பாடிய க்ஷேமம் குரு கோபால என்ற பாடல் மிகவும் பிரசித்தமானது. இதைக் கேட்டாலே வீட்டில் சகல செளபாக்கியமும், நித்திய க்ஷேமமும் உண்டாகும் என்பது நம் பிக்கை.  அவரும் அப்பாடலில் இறைவனின் பாத கமலம் என்னும்  தாமரையில் மொய்க்கும் தேனீயாக இருக்க வேண்டும் என்று பாடுகிறார் :-

“க்ஷேமம் குரு கோபால-

க்ஷேமம் குரு கோபால.. ஸந்ததம் மம

க்ஷேமம் குரு கோபால

காமம் தவ பாத……………….கமலப்ரமரீபவது

ஸ்ரீமந்மம மானஸ………… மதுஸூதன

………………

பாத கமல- பாத தாமரைகள்

ப்ரமரீ பவது – தேனீயாக வேண்டும்

xxxx 

ஆதி சங்கரரின் செளந்தரிய லஹரி

செளந்தர்யா லஹரி 6

धनुः पौष्पं मौर्वी मधुकरमयी पञ्च विशिखाः

वसन्तः सामन्तो मलयमरु-दायोधन-रथः ।

तथाप्येकः सर्वं हिमगिरिसुते कामपि कृपां

अपाङ्गात्ते लब्ध्वा जगदिद-मनङ्गो विजयते-6

த⁴னு꞉ பௌஷ்பம்ʼ மௌர்வீ மது⁴கரமயீ பஞ்ச விஶிகா²꞉

வஸந்த꞉ ஸாமந்தோ மலயமருதா³யோத⁴னரத²꞉ .

ததா²ப்யேக꞉ ஸர்வம்ʼ ஹிமகி³ரிஸுதே காமபி க்ருʼபாம்

அபாங்கா³த்தே லப்³த்⁴வா ஜக³தி³த³-மனங்கோ³ விஜயதே .. 6..

******

भ्रुवौ भुग्ने किञ्चिद्भुवन-भय-भङ्गव्यसनिनि

त्वदीये नेत्राभ्यां मधुकर-रुचिभ्यां धृतगुणम् ।

धनु र्मन्ये सव्येतरकर गृहीतं रतिपतेः

प्रकोष्टे मुष्टौ च स्थगयते निगूढान्तर-मुमे-47

ப்⁴ருவௌ பு⁴க்³னே கிஞ்சித்³பு⁴வனப⁴யப⁴ங்க³வ்யஸனினி

த்வதீ³யே நேத்ராப்⁴யாம்ʼ மது⁴கரருசிப்⁴யாம்ʼ த்⁴ருʼதகு³ணம் .

த⁴னுர்மன்யே ஸவ்யேதரகரக்³ருʼஹீதம்ʼ ரதிபதே꞉

ப்ரகோஷ்டே² முஷ்டௌ ச ஸ்த²க³யதி நிகூ³டா⁴ந்தரமுமே .. 47..

மதுகர = தேனீ

Xxxx

மஹாபாரதத்தில் தேனீ / வண்டு

மஹாபாரதத்தில், கர்ணன் பொய் சொல்லி பிராமண பரசுராமரிடம் வில்வித்தை கற்கப்போன கதை எல்லோருக்கும் தெரியும் (இந்தப் பரசுராமர் வேறு ; ராமாயண பரசுராமர் வேறு). கர்ணன் மடி மீது குருநாதர் உறங்கும் பொழுது ஒரு வண்டு /தேனீ , கர்ணனின் தொடையில் உட்கார்ந்து குடைய, ரத்தம் வெளியேறியது ; ரத்தத்தால் உடல் நனைந்த பரசுராமர் எழுந்து நீ பிராமணனாக இருந்தால் அலறி ஒடியிருப்பாய்; உண்மையைச் சொல்; யார் நீ? என்று அதட்டிக் கேட்க கர்ணன் பிராமணன் இல்லை க்ஷத்திரியன் என்பதை ஒப்புக்கொண்டான்  இங்கும் அறுகால் பறவை  முக்கியம் பெறுவதோடு கதையின் போக்கையே மாற்றும் ஒரு அம்சமாகத் திகழ்கிறது .

xxxxx

இந்தியா ஒரே நாடு ; இமயம் முதல் குமரிவரை அவர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திப்பார்கள் ; இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியது காளிதாசனும் ஆதி சங்கரரும், கம்பரும்தான் ; வெள்ளைக்காரன் இல்லை என்பதற்கு தேனீ ஆராய்ச்சி மிகவும் உதவுகிறது

வடக்கு தெற்கு  ஆகிய இரு திசைப்  புலவர்களும் தேனீயை அறுகாலி  என்றே அழைத்தனர் .

இரு மொழிப்புலவர்களும் யானையின் மதத்தைச் சுற்றி வரும் வண்டுகள், தேனீக்கள் செய்யும் ரீங்காரம் இசைபோல தொனிக்கிறது என்று பாடியுள்ளனர் .

மேலும் மன்மதன் பற்றியும் ஒரே கருத்தை தெரிவித்துள்ளனர் .

தேனீக்களிடம் பேசுவது தூது அனுப்புவது ஆகியவற்றிலும் ஒரே நடை முறையைப் பின்பற்றியுள்ளனர் .

To be continued……………………………………………

Tags- தேனீ, மஹாபாரதத்தில், ஆதி சங்கரர் நாராயண தீர்த்தர், கர்ணன், ராதாராணி, மீராபாய்

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன் செயல்படுங்கள்! – 2 (Post No.13,053)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.053

Date uploaded in London – — 1 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

28-2-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன் செயல்படுங்கள்! – 2

ச. நாகராஜன் 

1960ல் எடுக்கப்பட்ட சைக்கோ படத்தின் முடிவை யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று அந்த நாவலின் பிரதிகள் முழுவதையும் இவர் வாங்கி விட்டார். அத்தோடு படம் ஆரம்பித்த பின்னர் யாரும் தியேட்டருக்குள் வரக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். அதை தியேட்டர் உரிமையாளர்களும் அப்படியே கடைப்பிடித்தனர். 109 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் இவருக்கு 320 லட்சம் டாலரை ஈட்டித் தந்தது. இவரது தயாரிப்பு செலவு எட்டுலட்சத்து ஏழாயிரம் டாலர்கள்.

குளியலறைக் காட்சி 78 காமராக்களை வைத்து 45 வினாடிகளில் 52 “கட்’ களுடன் படமாக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக நடித்த நடிகை ஜேனட் லீயின் கண் பார்வையை மட்டும் 26 முறை படமாக்கினார் ஹிட்ச்காக்!

இதில் நடிப்பவர்கள் எந்தக் காட்சியைப் பற்றியும் முடிவைப் பற்றியும் யாருக்கும் சொல்லக் கூடாது என்று உறுதிமொழியையும் எடுக்கச் சொன்னார் ஹிட்ச்காக். அத்தோடு தொலைக்காட்சியில் தனக்காகப் பணியாற்றிய குழுவினரையே படம் பிடிக்க அழைத்தார்.

1963இல் எடுக்கப்பட்ட தி பேர்ட் படத்திற்கு 3000 நிஜப் பறவைகளும் இன்னும் இரண்டு லட்சம் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட பல்லாயிரம் மெகானிக் பறவைகளும் பயன்படுத்தப்பட்டன.

பறவைகள் காமராவைப் பார்த்து வர வேண்டும் என்பதற்காக ஒரு இறைச்சித் துண்டு காமராவின் லென்ஸ்களுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.

பறவைகள் தாக்கும் காட்சியை இன்று பார்த்தாலும் பார்ப்பவர் கதிகலக்கம் அடைவது இயல்பே. இதில் கதாநாயகியாக நடித்தவர் டிப்பி ஹெட்ரன். 119 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் ஹெட்ரனைப் பறவைகள் தாக்கும் காட்சி மட்டும் 7 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் நடித்த அவர் ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் – அந்த ஷாக்கிலிருந்து விடுபட!

லண்டனில் பேர்ட் திரைப்படத்தைப் பார்த்து விட்டு தியேட்டரிலிருந்து வெளியேறிய ரசிகர்கள் அலறி விட்டார்கள் – தாங்கள் திரைப்படத்தில் பார்த்து விட்டு வந்த பறவைகள் நிஜமாகவே அலறும் சத்தத்தைக் கேட்டு! ஆம், வெளியே யாருக்கும் தெரியாதபடி மரக்கிளைகளில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் பறவைகள் அலறும் ஒலி ஒலிபரப்பப்பட்டது!

இசையை ஹிட்ச்காக் பயன்படுத்திய விதம் அனைவராலும் பிரமிக்க வைக்கும்படி அமைந்திருந்தது. ஒரு காட்சி முடியும்போது அடுத்த காட்சி ஆரம்பிக்கும் சில விநாடிகளில் அவர் இசையைப் பயன்படுத்திய விதம் அனைவரையும் வியப்படைய வைத்தது!

இப்படி ஹிட்ச்காக்கைப் பற்றிய ஏராளமான செய்திகள் உண்டு.

முக்கியமான காட்சிகளைப் பார்க்கவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். இந்த இணையதள யுகத்தில் இந்த மூன்று நிமிடக் காட்சிகளை இணையதளத்தில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். ( நிச்சயம் பார்க்கப்பட வேண்டியவை டு கேட்ச் எ தீஃப் – கார் ரேஸ், சைக்கோ -குளியலறைக் காட்சி, தி பேர்ட்  – பறவைகள் தாக்கும் ஃபைனல் அட்டாக் காட்சி)

அவரை வருத்திய ஒரே விஷயம்

தனது உடலைப் பற்றி அவர் வெகுவாக அதிருப்தி கொண்டிருந்தார். அப்படி ஒரு பருமன்! வாழ்நாள் முழுவதும் அவரை வருந்தச் செய்த விஷயம் இது தான்!

மறைவு

1980ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் நாள் ஹிட்ச்காக சிறுநீரகக் கோளாறால் லாஸ் ஏஞ்சல்ஸில் தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் பெவர்லி ஹில்ஸில் நடைபெற்றது. அவரது உடல் எரிக்கப்பட்டு, அஸ்தி பசிபிக் மகா சமுத்திரத்தில் தூவப்பட்டது.

அறுபது ஆண்டுகளில் அவர் எடுத்த படங்கள் 50.

46 முறை அகாடமி விருதுக்காக அவர் பரிந்துரைக்கப்பட்டாலும் ஒரு முறை கூட அவர் அந்த விருதைப் பெறவில்லை.

என்றாலும் கூட லட்சோபலட்சம் ரசிகர்களின் மனதில் அவர் பெற்றிருக்கும் இடம் அந்த விருதை விடப் பெரியதே!

2018இல் அமெரிக்க நேஷனல் பிலிம் பதிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய படங்களில் அவரது எட்டுப் படங்கள் இடம் பெற்றுள்ளன.

அவருக்கு க்னைட் விருது 1980இல் அவர் மறைவதற்கு நான்கு மாதங்கள் முன்பாக பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டது.

வெற்றிக்குக் காரணம்

ஏராளமான நகைச்சுவை கலந்த பொன்மொழிகளை அவர் உதிர்த்துள்ளார். அவற்றில் அவர் கண்ட அனுபவ உண்மைகள் பொதிந்திருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு இரண்டு இதோ:

ஒரு நல்ல படத்திற்குத் தேவையானது மூன்று விஷயங்கள். 1. ஸ்க்ரிப்ட் 2. ஸ்கிரிப்ட் 3.ஸ்கிரிப்ட் (கதையின் எழுத்து வடிவம்)

ஒரு படத்தின் நீளம் பார்ப்பவர் டாய்லெட்டுக்குப் போக வேண்டும் என்ற தாக்குப் பிடிக்கும் நேரத்தை விடக் குறைவாகவே இருக்க வேண்டும்.

தனது வெற்றிக்கான காரணத்தைப் பற்றி அவரே கூறி இருக்கிறார் இப்படி:

தர்க்கத்தை விட முக்கியமானது கற்பனை வளம்.

இமாஜினேஷன் (IMAGINATION) என்ற இதே காரணத்தை தனது வெற்றிக்குக் காரணமாகக் கூறிய இன்னொருவர் – உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!

நகல் எடுப்பவரை லட்சோபலட்சம் மக்களின் மனதில் ஏற்றி வைத்த  கற்பனை வளம் வெற்றிக்கு வழி காட்டும் அஸ்திவாரம் அல்லவா!

***

தேனீக்கள் தேவி பிரமராம்பா — 1 (Post No.13,052)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,052

Date uploaded in London – –   29 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 இந்துக்களின் தெய்வ  வடிவங்களுக்கு கணக்கே இல்லை ; தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார் ; எறும்பிலும் இருப்பார் ; யானையிலும் இருப்பார் ; தேனீக்களிலும் இருப்பார் ; வண்டுகளிலும் இருப்பார் .

ஆந்திர பிரதேசத்தில் ஸ்ரீ சைலத்திலுள்ள கோவில் உலகப் பிரசித்திபெற்றது அங்கே உறையும் தேவிக்கு தேனீ தேவி அதாவது பிரமராம்பா என்று பெயர்.; சம்ஸ்க்ருத மொழியில் பிரமரி என்றால் தேனீ. அங்குள்ள மல்லிகார்ஜுன சிவன் கோவில் 12  ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்று என்பதால் அதை அறியாத சிவ பக்தன் இந்தியாவில் இல்லை ; இதே போல மேற்கு வங்க கிராமம் ஒன்றிலும் பிரமரி அம்மன் உறைகிறார்.

பிரமராம்பா பற்றி சுவையான கதை உண்டு .

அருணன் என்பவன் ஒரு அசுரன் ; இந்துக்களில் அசுரர்களும் இந்து தெய்வங்களையே வணங்குவர் ; கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்த வெள்ளைக்காரன் மட்டும் இந்துக்களை பிரித்தாள்வதற்காக அசுரர்கள் என்பவர்கள் பழங்குடி மக்கள் என்றும் மற்றவர்கள் ஆரியர்கள் என்றும் கதை கட்டினான்.

அந்த அருணன் என்ற அரக்கன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து வெற்றியும் கண்டான் ; அசுரர்கள் எல்லோரும் புத்திசாலி போல வரம் கேட்பார்கள்; ஆனால் அதில் ஏதேனும் ஒரு ஓட்டை இருக்கும்; அதனாலேயே அழிவார்கள். அருணன் சொன்னான் ; என்னை ஆணோ பெண்ணோ கொல்லக்கூடாது;  இருகால்  பிராணியோ நாற்கால் பிராணியோ கொல்லக்கூடாது. போரிலோ ஆயுதங்களினாலோ கொல்லக்கூடாது; அப்படிப்பட்ட வரம் வேண்டும் என்றான் ; பிரம்மாவும் ததாஸ்து / அப்படியே ஆகட்டும் என்றார் . அதிகாரம் வந்தால் ஆணவம் வரும் ; இரண்டும் சேர்ந்தால் மற்றவர்களை  அழிக்கும்  எண்ணம் வரும் ; அருணனும் அளவில்லாத அக்கிரமங்களை செய்தான் ; தேவர்களுக்கு / அதாவது நல்லோருக்குக் கட்டுக்கடங்காத துன்பம் நேரிட்டது ; எல்லாம் வல்ல சக்தியிடம் , குறை நீக்குமாறு முறையிட்டார்கள் ; அவளும் அப்படியே ஆகட்டும் என்றாள்.

அந்த முட்டாளுக்கு புழுப்பூச்சிகள் பற்றி அறிவே இல்லை ; இறைவி , சக்தியாக உருவெடுத்து அருணனின் அட்டகாசக் கும்பலை அடியோடு அழித்தாள்; இறுதியில் அருணன் மட்டும் மிஞ்சினான்; அப்போது தேவி தன்  உடம்பு முழுவதும் தேனீக்களாகும்படி செய்தாள்; அவனைத் தாக்கி அவன் உடல் முழுதும்  தேனீக்கள் ஆக்கிரமிக்கும்படி செய்தாள் ; அவனும் மூச்சுத் திணறி அழிந்த்தான்.  அசுரர் குணம் படைத்தோர் அந்த குணத்தினாலேயே அழிவர் என்பதே நீதி.

உலகம் முழுதும் ஒரு காலத்தில் இந்துமதம் இருந்தது; ஆனால் இப்போது அதன் எச்ச சொச்சங்களே இருக்கின்றன; இந்து மதத்தில் என்னென்ன சொல்கிறோமோ அதன் ஒரு அம்சத்தையாவது உலக கலாசாரங்களில் காணலாம் ; எகிப்தீய , கிரேக்க , மாயன் நாகரிகங்களிலும் தேனீ தெய்வங்கள் உண்டு. கிரேக்க நாட்டிலும் தேனீ மாதாதான் ஒரு தெய்வம்

மேற்கு வங்கத்தில் ஒரு பிரமரி தேவி கோவில்

ஜல்பய்குரி  நகரிலிருந்து 19 கி.மீ தொலைவில் சல்பரி கிராமத்தில்  ஒரு பிரமரி தேவி கோவில் இருக்கிறது; இதை 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதுவார்கள்; சதி தேவியின் இடது கால் விழுந்த இடம் இது என்பது ஐதீகம் ( Trisotra, Salbari village, Bodaganj, Jalpaiguri, West Bengal).

xxxx

உலகில் முதல் முதலில் தேனீக்களைப் பாடியவர்கள் ரிக் வேத ரிஷிகள் ஆவார்கள் . மது என்றாலே தேன்; மதுவும் பாலும்தான் ரிஷிகளின் முக்கிய உணவு;  யார் வந்தாலும் இவை இரண்டும் கலந்த மதுபர்க்கத்தையே கொடுத்து விருந்துபசாரம் செய்வார்கள் ; அதுவும் காட்டிலிருந்து கிடைக்கும் இயற்கையான தேனையே அவர்கள் பயன்படுத்தினார்கள் . ரிக்வேதத்தில் வெள்ளைக்காரனுக்கும் புரியாத தெய்வங்கள் அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையர் ஆவார்கள்; அவர்களைத் தேனுடன் தொடர்பு படுத்தியே துதிகள் இருக்கின்றன. தேனீக்கு மட்டுமே வேதத்தில் பல பெயர்கள் இருக்கின்றன இதோ அந்த குறிப்புகள்   :

Aarangara Rig Veda 10-106-10; ஆரங்கரா/ ரிக் வேதம் 

Bhrngaa ப்ருங்க / அதர்வ வேதம் Atharva Veda 9-2-22;   யஜுர் வேதம் Yajur Veda- Maitraayani Samhitaa 3-14-8;  Vaajasaneyi Samhitaa  24-29; it is one of the sacrificed creatures in  Asvamedha yaga. அஸ்வ மேத யக்ஞத்தில் அக்கினியில் போடப்பட்ட 200++++ பொருட்கள் / பலிகளில் தேனீயும் ஒன்று .

Maksaa / Maksikaa – மக்ஷ மகிஷிகா fly or bee – Rig Veda 1-162-9; 10-40-6; 1-119-9; later Upanishads also use these words .Atharva Veda 11-1-2; 9, 10

மதுக்க்ருத் Madhukara -Prasna Upanishad 2-4 madhukara rajan= king bee .மதுகர

Madhukrt – honey maker- Taittriya Samhita; Taittriya brahmana ; Satapata Brahmana use this word; also Chandogya Upanishad

சரக் Saragh – Rig Veda 1-112-2 Taittriya Samhita v.3.12.12;  Satapata Brahmana 13-3-1-4; Panini also mentioned it.

தேனீக்களைப் பாடாத கவிஞர்கள் இல்லை ; காளிதாசன் முதல் கம்பன் வரை பாடியுள்ளனர் ; சங்க இலக்கிய நூல்களில் நிறைய குறிப்புகள் உள்ளன ; காளிதாசனின் மேக தூதத்தை பார்த்து இயற்கையிலுள்ள எல்லாப்பொருட்களையும் காதலன், காதலிக்குத் தூது விடுவதற்கு பயன்படுத்தினர் சங்கப் புலவர்கள் ; தேனீக்களையம் இப்படி பயன்படுத்தினர்.

xxxx

சங்க இலக்கியத்தில் தேனீக்கள்

Akananuru -4-10; 46  அக நானூறு

Ainkurunuru – 90 ஐங்குறு நூறு 

Narrinai 290 men are like bees visiting many women , 277

நற்றிணை

Kuruntokai 2, 392 குறுந்தொகை

Purananuru – 70; narrinai -55; akam 332 -six legged புறநானூறு

xxxx

காளிதாஸ காவியத்தில்

Kalidasa – Sakuntala; 3-23; 4-7; 5-1, 8; shadpata 1-23; 3-23; 5-19; சாகுந்தலம்

Kumarasambhava – 3-36; shadpata 5-9 குமார சம்பவம்

Vikramaorvaseeyam 4-22, 21; 2-23 விக்கிரமோர்வசீயம்,

Raghuvamsa – shadpata – 6-59; 8-55; 9-26; 11-27, ரகுவம்சம் ,

Raghuvamsa- elephant rut/ beetle – 5-43; 6-7; 30-57; 12-102, ரகுவம்சம் ,

தேனீக்களை சம்ஸ்க்ருத, தமிழ் கவிஞர்கள் ஆகியோர் அறுகால் பறவை என்றும் அழைத்தனர் ; இது தேனீ , வண்டு  முதலிய பல பூச்சிகளைக் குறிக்கும் ; அவற்றுக்கு ஆறு கால்கள் .

காளிதாசனுக்கும் முன்னர் வாழ்ந்த பாஷா எழுதிய நாடகங்களில் தேனீக்கள் உள்ளன .

ஆண்களும் தேனீக்களைப் போல மலர் மேயும் வண்டுகள் என்று தமிழ்ப்புலவர்( நற்றிணை 290)n  சாடுகிறார் ; பிற்காலத்தில் கண்ணனைப் பாடிய ராதா ராணியும் இதைக் குறிப்பிடுகிறார்.

“ஷட் பத” என்றால் ஆறு கால்கள் ; மத யானைகளை மொய்க்கும் வண்டுகள் , மலர் மேயும் ஆறு கால்கள்/ தேனீக்கள் , காட்டில் இசை பாடும் தேனீக்கள் என்று காளிதாசனும் சங்கப் புலவர்களும் பாடுவது இந்தியப் பண்பாடு இமயம் முதல் குமரி வரை ஒன்றே என்பதைக் காட்டுகின்றது.

To be continued………………………………….

TAGS- தேனீ , பிரமரி , பிரமராம்பா , ஸ்ரீ சைலம் காளிதாசன், வேதம்  அறுகால் பறவை , ஷட்பத , சங்க இலக்கியம்