தேனீக்கள் தேவி பிரமராம்பா- Part 3 (Post No.13,059)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,059

Date uploaded in London – –   3 March 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

இந்த மூன்றாவது பகுதியில் இந்து சமயக் கருத்துக்களை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பரப்பிய உலகப் புகழ்பெற்ற சம்ஸ்க்ருதக் கவிஞன் காளிதாசனும் சங்கத் தமிழ் புலவர்களும் தேனீக்கள் பற்றி என்ன செப்பினார்கள் என்று காண்போம்.

காளிதாசன் காவியங்களில் தேனீக்கள்

சாகுந்தல நாடகத்தில்

காளிதாசனுக்கு  உலகப் புகழ் ஈட்டித்தந்தது   அவனது சாகுந்தலம் என்னும் நாடகம் ஆகும் . அதில் முதல் காட்சிலேயே தேனீக்கள் முக்கிய பங்கினை ஆற்றுகிறது ; சகுந்தலை என்றாலேயே பறைவப்பெண் என்று தமிழில் பொருள்  ; அவளை வளர்த்தது பறவைகள் ; இயற்கை மீது காதல் கொண்ட கானகப் பெண் அவள் ; மல்லிகைச்  செடிக்குத் தாண்ணீர் ஊற்றப் போகிறாள்; அப்போது  ஒரு தேனீ பறந்து வந்து அவளுக்குத் தொல்லை கொடுக்கிறது ; அவள் பொறுக்க மாட்டாமல் ‘உதவி உதவி’ என்று சொல்லி தோழிகளை அழைக்கிறாள் ; இதே நேரத்தில் அவள் அழகை   புதர் மறைவிலிருந்து அனுபவித்துக்கொண்டிருந்த மன்னன் துஷ்யந்தன் அவளது உதவிக்கு ஒடி வருகிறான் . ஆக,  கதா நாயகியையும் கதாநாயகனையும் அறிமுகப் படுத்த, காளிதாசன் தேனீயையே பயன்படுத்துகிறான் !

xxxx

மேக தூதத்தில்

மேக தூதத்தில் குறைந்தது மூன்று இடங்களிலாவது காளிதாசன்  தேனீக்களை  பாடுகிறான் :

ஏ மேகமே ! நீ போகும் வழியில் நடன மாதர்கள் ஆடுவதைக் காண்பாய்; அவர்கள் போட்டியான மணிகள் ஓசையை எழுப்பும் ; ரத்தினம் பதித்த சாமரங் களை வீசி வீசி கைகள் ஓய்ந்து போயிருக்கும்; கைவர்களால் விரல் ஏற்பட்ட காயங்களுக்கு உன் மழைத்துளிகள் ஆறுதல் தரும்; அந்த நடனமாதர்களின்  கடைக்கண்   பார்வை தேனீக்கள் வரிசைபோல இருக்கும்.

xxxx

மேகமே! நதியைக் கடந்து போன பின்னர் தாசபுர பெண்கள் உன்னை விநோதமாகப் பார்ப்பார்கள் ; அவர்களுடைய பார்வை கீழே விழுந்து கிடக்கும் மல்லிகை மலர்களை வட்டமிடும் தேனீக்களைவிட அழகாக இருக்கும்; பிறை வடிவ புருவங்கள் நெளிந்து சுழியும் ; மேலும் கீழும் செல்லும்  (தேனீக்களின் கருமையையும் அவை பிறை வடிவில் பறந்து செல்வத்தையும் கற்பனை செய்கிறான் காளிதாசன்)

xxxx

சிவபெருமான் அருகில் இருப்பதை அறிந்த மன்மதன் சாதாரண வில் அம்பினை எடுக்க அஞ்சி கரும்பு வில்லை எடுத்தான் ; அதன் நாண், தேனீக்களால் ஆனது;  காதல் வசப்பட்ட பெண்கள் தான் விரும்பும் ஆடவன் மீது வீசும் பார்வை எப்படி ஆண்மகனை வசமாக்குமோ அப்படி குறியிலக்கை அடிக்கக்கூடிய (மலர்) அம்பு அது .

(தமிழிலும் மன்மதனின் கரும்பு வில்- மலர் அம்புகள் வருகின்றன. )

xxxx

ரகுவம்ச காவியத்தில்

சீதா தேவிக்கு அனுசுயா தேவி நறுமணப் பொருட்களை அளித்தாள்; அந்த வாசனையானது தேனீக்களை அவர்பால் ஈர்த்தன ; அவை மலர்களை விட்டு சீதையை வட்டமிடத் துவங்கின   [12-27]

अनसूयातिसृष्टेन पुण्यगन्धेन काननम्।

सा चकाराङ्गरागेण पुष्पोच्चलितषट्पदम्॥ १२-२७

இதில் தேனீக்களுக்கு காளிதாசன் பயன்படுத்தும் சொல் ஷட்பதம் ; அதாவது ஆறு கால் ; சங்கத் தமிழ் நூல்களிலும் இதே போல அறு கால் பறவை, அறு காலி என்ற சொற்களே தேனீ, வண்டு ,தும்பி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்படுகிறது .இமயம் முதல் குமரி வரை  ஒரே அணுகுமுறை ! 

xxxx

अथ मदगुरुपक्षैलोकपालद्विपाना
मनुगतमलिवृन्दैर्गण्डभित्तीर्विहाय।
उपनतमणिबन्धे मूर्ध्नि पौलस्त्यशत्रोः
सुरभि सुरविमुक्तम् पुष्पवर्षम् पपात॥ १२-१०२

பின்னர் ராமபிரான் தலையில் கிரீடம் இறங்கியது ; தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர் ; அஷ்ட திக் பாலகர்களின் யானைகளின் மதத்தை மொய்த்திருந்த தேனீக்கள்/ வண்டுகள் அவைகளை விட்டுவிட்டு மலர்களை மொய்க்க துவங்கின [12-102]

யானைகளின் மதத்தை மொய்க்கும் வண்டுகளும் தமிழ் இலக்கியத்தில் நிறைய இடங்களில் வருகிறது .

xxxx

  • खर्जूरीस्कन्धनद्धानां मदोद्गारसुगन्धिषु|
    कटेषु करिणां पेतुः पुंनागेभ्यः शिलीमुखाः॥ ४-५७
  • kharjūrīskandhanaddhānāṁ madodgārasugandhiṣu|
    kaṭeṣu kariṇāṁ petuḥ puṁnāgebhyaḥ śilīmukhāḥ || 4-57
  •  
  • भल्लापवर्जितैस्तेषां शिरोभिः श्मश्रुलैर्महीम्|
    तस्तार सरघाव्याप्तैः स क्षौद्रपटलैरिव॥ ४-६३
  • bhallāpavarjitaisteṣāṁ śirobhiḥ śmaśrulairmahīm|
    tastāra saraghāvyāptaiḥ sa kṣaudrapaṭalairiva || 4-63

பாரசீகர் சிற்பங்களை பார்ப்போர் அவர்களுடைய தாடிகள், தேன்கூடு போல இருப்பதைக் காணலாம் . இதையும் காளிதாசன் குறிப்பிடத்  தவறவில்லை  !

ரகு, தனது ஈட்டி போன்ற அம்புகளால் மேற்கத்திய படைகளின் தலைகள் கீழே உருளும்படி செய்தான் ; பூமி முழுதும் தேனீக்கள் வலம் வரும் தேன்கூடுகள் போல அவை இருந்தன.  [4-63]

xxxx

விக்ரமோர்வசீய நாடகத்தில்

“காணாமற்போன பொருளை தாமரை இதழ்களுக்கு நடுவே ரீங்காரமிடும் தேனீக்களும் காணவில்லை :கடம்ப மரத்தின் கீழ் பெண்யானையுடன் படுத்திருக்கும் அரண்மனை யானையும் காணவில்லை”.

தாமரை மலரை வட்டமிடும் தேனீக்களும் தமிழ் இலக்கியத்தில் உள்ளன

xxxx

குமார சம்பவ காவியத்தில்

महीभृतः पुत्रवतो ऽपि दृष्टिस्तस्मिन्नपत्ये न जगाम तृप्तिम्।
अनन्तपुष्पस्य मधोर्हि चूते द्विरेफमाला सविशेषसङ्गा॥ १-२७

“ஹிமவானுக்கு எத்தனையோ புதல்வர், புதல்விகள் இருந்தபோதிலும் புதிதாகப் பிறந்த பெண்குழந்தையைப் பார்த்து மகிழ்வதில் அவன் ஆர்வம் தணியவே இல்லை ; எவ்வளவோ மலர்கள் இருந்தாலும் மாமரத்தின் பூக்களையே அதிகம் விரும்பும் தேனீக்களை போல இது இருந்தது” . [1-27]

xxxxx

அடுத்த பகுதியில் சங்கத் தமிழ்  நூல்களில் வரும் ஒப்புவமைகளைக் காண்போம்.

–subham—

Tags- காளிதாசன் , தேனீ, பகுதி 3, மேகதூதம், சாகுந்தலம் ,குமார சம்பவம் , அறு காலி, ஆறு கால் பறவை , தும்பி, வண்டு

Leave a comment

Leave a comment