இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சென்ற பகுதியில் 120வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………
PART 13
xxxxx
முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்–13
121. வயிற்றுக்கு கிருமிக்கு
எலிச்செவியம், முருங்கை வேர், திரிபலை இவை நறுக்கி கிஷயமிட்டு ஒரு சங்கு அளவு கொடுக்க புழுக்கள் நிவர்த்தியாகும்.
XXXXX
XXXX
122. நீர் எரிவுக்கு
எலுமிச்சம்பழச்சாறும் நல்லெண்ணெயையும் சமன் கலந்து ஒரு பலமிருக்கும்படி சாப்பிட்டால் எரிவு தீரும் .
XXXX
XXXX
123. இரத்தம் போல் நீர் இறங்குவதற்கு
எருமைப் பாலிரண்டு படியில் பொன்னாங்கண்ணி வேர் எலுமிச்சங்காய் அறைத்துப்போட்டு நன்றாய்க் காய்ச்சி புரை குத்திக் கடைந்து வெண்ணெய் எடுத்து அந்த வெண்ணையை அதிகாலை மூன்று நாள் சாப்பிடவும்; அந்த மோரை தாக சாந்தி செய்து வரவும் ; மேற்படி வியாதி தீரும்.
கால் பங்கு கூட்டி அறைத்து புளிக்க வைத்து தோசை சுட்டுக்கொடுக்க இரத்த மூலம் தீரும்; இப்படி மூன்று நாள் அல்லது 5 நாள் கொடுக்கவும்.
XXXXX
127. காமாலைக்கு
எருமைச் சாணிப்பால் எருமைத் தயிர் இரண்டும் கலந்து சீரகம் வெங்கா…ம் சமன் சேர்த்து மேற்படி தயிர்விட்டு அறைத்து எருமைப்பாலில் கலக்கிக் கொடுக்கவும்; இப்படி 5- 7 வேளை கொடுக்க சாந்தியாகும்.
XXXX
128. கல் அடைப்புக்கு
எருக்கன் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு சேர்க்காமல் வெற்றிலை பாக்குடன் வைத்து தின்னவும். இப்படி 2 அல்லது 3 வேளை தின்னவும் ; கல்லடைப்பு தீரும்.
XXXX
129. உண்ணாக்கு வளர்த்திக்கு
எவாச்சாரம் கல் சுண்ணாம்பும் சமநிடை எடுத்து எலுமிச்சம்பழச் சாற்றில் அறைத்து பயரளவு எடுத்து உள் நாக்கில் தடவவும். குணமாகும்.
XXXX
130. இருதய வலிக்கு
எலுமிச்சம் பழம் 5 பிழிந்துகொண்டு அகில் குலாப்புத் தூள் சந்தனத்தூள் ஜாதிக்காய்த் தூள் வகைக்கு ஒரு ரூபாயிடை காவிக்கல் ஒரு விராகநிடை கூட்டிக் கலக்கி வைத்துக்கொண்டு ஒரு வேளைக்கு ஒரு ரூபாயிடை புசித்துவரவும். இருதய காபரா நெஞ்சத் துடிப்பு இதுகள் நீங்கும்
XXXX
— SUBHAM—
TAGS- முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள் 13, எலுமிச்சம் பழம், எருக்கன் பூ
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
SNR Article Index : FEBRUARY 2024
FEBRUARY 2024
1-2-2024 12975 ராம நாம மஹிமை – 7 2-2-2024 12978 மின்னல் வேக மன்னன் ப்ரூஸ் லீ – பயிற்சியே வெற்றி! 3-2-2024 12981 SNR Article Index : JANUARY 2024. 4-2-2024 12983 மயிலுக்கும் அரசனுக்கும் சிலேடை! – மஹாபாரத ரகசியம் 5-2-2024 12985 கர்ம ரகசியம்! – 5 இறந்தவர்கள் செல்லும் மூன்று வழிகள் – ரமணீயம், நிராபாதம், துர்த்தர்சம்! 6-2-2024 12988 மப்புலோ ஏமுண்டி, நா மனசுலோ ஏமுண்டி? 7-2-2024 12991 ஶ்ரீ ராமருக்கு வெற்றி!
8-2-2024 12993 புத்தக அறிமுகம் 131 செப்பு மொழி 500 + 9-2-2024 12995 பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -1 மாலைமலர் 7-2-2024 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை.
10-2-2024 12997 பெஞ்சமின் பிராங்க்ளின் – வெற்றிக்கான உங்கள் திட்டம் எது? -2 மாலைமலர் 7-2-2024 இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை.
11-2-2024 12999 சிவ பக்தி!
12-2-2024 13001 17 வருடங்களில் 17 அறிவுரைகள்! – ஹெல்த்கேர் பிப்ரவரி. 2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை 13-2-202413004 பாரதத்தை ஹிந்து ராஷ்ட்ரம் என்று அழைப்பதில்
என்ன தவறு? 14-2-2024 13007 தயையின் மஹிமை! 15-2-2024 13010 புத்தக அறிமுகம் : ஆர். சேஷாத்ரிநாதன்
எழுதிய இராமாயணம் – அயோத்யா காண்டம்- வால்மீகி – பாகம் 2 16-2-2024 13012 தம் மாரோ தம்; மிட் ஜாயே கம்!
17-2-2024 13014 ஹோண்டா : தோல்விகளால் துவளாதீர்கள் -1 மாலைமலர் 14-2-2024இல்
வெளியாகியுள்ள கட்டுரை. 18-2-2024 13016 ஹோண்டா : தோல்விகளால்
துவளாதீர்கள் –2 மாலைமலர் 14-2-2024இல்
வெளியாகியுள்ள கட்டுரை 19-2-2024 13019 திருசந்தானம் சீனிவாசன்அவர்கள் எழுதியுள்ளநவகிரகங்கள் – கலைக்களஞ்சியம் :புத்தக அறிமுகம் 20-2-2024 13022 புத்தக அறிமுகம்திருசந்தானம் சீனிவாசன்அவர்கள் எழுதியுள்ளநவீன ஞான மொழிகள் பாகம் – 1
21-2-2024 13025 சிதம்பரத் தலத்தின் மஹிமை
22-3-2024 13028 ஜரா சாம்னே தோ ஆவோ சலியே! 23-2-2024 13030 – ஸ்டீவ் ஜாப்ஸ் : எதையும் நேசித்துச் செய்யுங்கள்! –121-2-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 24-2-204 13033 ஸ்டீவ் ஜாப்ஸ் : எதையும் நேசித்துச் செய்யுங்கள்! –2 21-2-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.25-2-2024 13036அறிவியல் புதிர்கள்! 26-2-2024 13039கம்பன் காட்டும் புதிய கவிதை உத்தி! 27-2-2024 13043 கர்ம ரகசியம்! – 6ஐந்து வித நரகங்கள்!28-2-2024 13046 கர்ம ரகசியம்! –7சுப, அசுப கர்மங்கள், அவற்றின் \ பலன்கள்!29-2-2024 13050 ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன் செயல்படுங்கள்! – 1 28-2-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.
கட்டுரையின் முதல் பகுதியில் ஆந்திரத்திலுள்ள ஸ்ரீ சைலம் கோவில் பிரமராம்பாவையும் மேற்கு வங்கத்தில் ஜலப்பைக்குரி அருகிலுள்ள பிரமராம்பாவையும் தரிசித்தோம்.
மேலும் சில சுவையான செய்திகளைக் காண்போம் :
இந்து மதத்தில் மன்மதனைப் பற்றி புராணங்களும் காளிதாசனும் என்ன சொல்கின்றனரோ அதையே தமிழ்ப் புலவர்களும் செப்பினர். மன்மதனுக்கு கரும்பு வில். தேனீக்களான நாண்; அவன் ஐந்து மலர் அம்புகளை விட்டால் யாரும் காதல் வசப்படுவர். அவனுக்கும் மனைவி ரதி தேவிக்கும் கிளி வாகனம் ; இந்தச் சிலைகளை பல கோவில்களில் காணலாம். இதிலும் மலரும் தேனீயும் முக்கிய இடத்தைப் பெறுகிறது .
சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜபுதனத்தில் வாழ்ந்த இளவரசி மீராபாய் , தமிழ்நாட்டு ஆண்டாள் போலவே கிருஷ்ணன் மீது அபார பக்தி கொண்டவள் ; அவள் பல பாடல்களில் தன்னை தேனீயாகவே உருவகித்துப் பாடியிருக்கிறாள் ; இறைவன் திருவடியில் கிடக்கும் தாமரைப்பூக்களில் உறையும் தேனீ போல இருங்கள் என்கிறார். மீரா பஜனை பாடாத பஜனைகள் இல்லை; ஹிந்துஸ்தானி இன்னிசைக் கச்சேரிகள் இல்லை .
இதே போல கோபிகளின் தலைவி ராதாராணியும் கண்ணன் மீது அபார காதல் கொண்டவள்; அது தெய்வீக காதல் ; தோல் மீதான காதல் அல்ல என்று சுவாமி விவேகானந்தர் உரைகளில் விளக்கியுள்ளார். மேலும் கோபிகளின் சேலைகளை கிருஷ்ணன் ஒளித்துவைத்த செய்தி 2000 ஆண்டு பழமையான சங்க இலக்கியத்திலும் உள்ளது . தொழுனை என்னும் யமுனை நதி பற்றி சங்க நூல்களும் சிலப்பதிகாரமும் பாடுகிறது . அவ்வளவு பழமையான ராதா ராணியும் தேனீ மூலம் செய்தி அனுப்புகிறாள் காதலன் கண்ணனுக்கு . அது மட்டுமல்ல ஏ தேனீயே! நீ என்னை ஏமாற்றப் பார்க்காதே. உன் மீசையில் ஓட்டிக்கொண்டிருக்கும் மகரந்தம் நீ எத்தனை மலர்களை மேய்ந்திருக்கிறாய் என்பதை காட்டுகிறது. கண்ணனும் அப்படித்தான் போலும்; வெவ்வேறு மலர்களை / பெண்களை நாடுகிறான் போலும் என்று பாடுகிறாள் ; இதுவும் சங்க இலக்கியத்தில் உள்ளது ; ஆண்களை மலர் மேயும் வண்டுகள் என்று நற்றிணைப் புலவர் சாடுகிறார் .
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புதுப் பூக்
கன்றுடைப் புனிற்றா தின்ற மிச்சில்
ஓய்நடை முது பகடு ஆரும் ஊரன்
தொடர்பு நீ வெஃகினை ஆயின், என் சொல்
கொள்ளல் மாதோ, முள் எயிற்றோயே! 5
நீயே பெரு நலத்தையே; அவனே,
”நெடு நீர்ப் பொய்கை நடு நாள் எய்தி,
தண் கமழ் புது மலர் ஊதும்
வண்டு” என மொழிப; ”மகன்” என்னாரே.
—-மதுரை மருதன் இளநாகனார் பாடல், நற்றிணை 290
“அவன் (காதலன்),
நீர் நிறைந்த பொய்கையில்
அன்றாடம் மலரும் புது மலர்களை
ஊதித் தேனுண்ணும் வண்டு போன்றவன்
என்று கூறுகின்றனர்.
அவனை “மகன்” என்று யாரும் மதிப்பதில்லை.”
xxxx
ஆதி சங்கரரும் நாராயண தீர்த்தரும்
சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நாராயண தீர்த்தர் (1700 CE) என்ற மஹான் பாடிய க்ஷேமம் குரு கோபால என்ற பாடல் மிகவும் பிரசித்தமானது. இதைக் கேட்டாலே வீட்டில் சகல செளபாக்கியமும், நித்திய க்ஷேமமும் உண்டாகும் என்பது நம் பிக்கை. அவரும் அப்பாடலில் இறைவனின் பாத கமலம் என்னும் தாமரையில் மொய்க்கும் தேனீயாக இருக்க வேண்டும் என்று பாடுகிறார் :-
மஹாபாரதத்தில், கர்ணன் பொய் சொல்லி பிராமண பரசுராமரிடம் வில்வித்தை கற்கப்போன கதை எல்லோருக்கும் தெரியும் (இந்தப் பரசுராமர் வேறு ; ராமாயண பரசுராமர் வேறு). கர்ணன் மடி மீது குருநாதர் உறங்கும் பொழுது ஒரு வண்டு /தேனீ , கர்ணனின் தொடையில் உட்கார்ந்து குடைய, ரத்தம் வெளியேறியது ; ரத்தத்தால் உடல் நனைந்த பரசுராமர் எழுந்து நீ பிராமணனாக இருந்தால் அலறி ஒடியிருப்பாய்; உண்மையைச் சொல்; யார் நீ? என்று அதட்டிக் கேட்க கர்ணன் பிராமணன் இல்லை க்ஷத்திரியன் என்பதை ஒப்புக்கொண்டான் இங்கும் அறுகால் பறவை முக்கியம் பெறுவதோடு கதையின் போக்கையே மாற்றும் ஒரு அம்சமாகத் திகழ்கிறது .
xxxxx
இந்தியா ஒரே நாடு ; இமயம் முதல் குமரிவரை அவர்கள் ஒரே மாதிரியாகத்தான் சிந்திப்பார்கள் ; இந்தியாவை ஒற்றுமைப்படுத்தியது காளிதாசனும் ஆதி சங்கரரும், கம்பரும்தான் ; வெள்ளைக்காரன் இல்லை என்பதற்கு தேனீ ஆராய்ச்சி மிகவும் உதவுகிறது
வடக்கு தெற்கு ஆகிய இரு திசைப் புலவர்களும் தேனீயை அறுகாலி என்றே அழைத்தனர் .
இரு மொழிப்புலவர்களும் யானையின் மதத்தைச் சுற்றி வரும் வண்டுகள், தேனீக்கள் செய்யும் ரீங்காரம் இசைபோல தொனிக்கிறது என்று பாடியுள்ளனர் .
மேலும் மன்மதன் பற்றியும் ஒரே கருத்தை தெரிவித்துள்ளனர் .
தேனீக்களிடம் பேசுவது தூது அனுப்புவது ஆகியவற்றிலும் ஒரே நடை முறையைப் பின்பற்றியுள்ளனர் .
To be continued……………………………………………
Tags- தேனீ, மஹாபாரதத்தில், ஆதி சங்கரர், நாராயண தீர்த்தர், கர்ணன், ராதாராணி, மீராபாய்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
28-2-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன் செயல்படுங்கள்! – 2
ச. நாகராஜன்
1960ல் எடுக்கப்பட்ட சைக்கோ படத்தின் முடிவை யாரும் தெரிந்து கொள்ளக் கூடாது என்று அந்த நாவலின் பிரதிகள் முழுவதையும் இவர் வாங்கி விட்டார். அத்தோடு படம் ஆரம்பித்த பின்னர் யாரும் தியேட்டருக்குள் வரக் கூடாது என்றும் உத்தரவு போட்டார். அதை தியேட்டர் உரிமையாளர்களும் அப்படியே கடைப்பிடித்தனர். 109 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம் இவருக்கு 320 லட்சம் டாலரை ஈட்டித் தந்தது. இவரது தயாரிப்பு செலவு எட்டுலட்சத்து ஏழாயிரம் டாலர்கள்.
குளியலறைக் காட்சி 78 காமராக்களை வைத்து 45 வினாடிகளில் 52 “கட்’ களுடன் படமாக்கப்பட்டது. இதில் கதாநாயகியாக நடித்த நடிகை ஜேனட் லீயின் கண் பார்வையை மட்டும் 26 முறை படமாக்கினார் ஹிட்ச்காக்!
இதில் நடிப்பவர்கள் எந்தக் காட்சியைப் பற்றியும் முடிவைப் பற்றியும் யாருக்கும் சொல்லக் கூடாது என்று உறுதிமொழியையும் எடுக்கச் சொன்னார் ஹிட்ச்காக். அத்தோடு தொலைக்காட்சியில் தனக்காகப் பணியாற்றிய குழுவினரையே படம் பிடிக்க அழைத்தார்.
1963இல் எடுக்கப்பட்ட தி பேர்ட் படத்திற்கு 3000 நிஜப் பறவைகளும் இன்னும் இரண்டு லட்சம் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட பல்லாயிரம் மெகானிக் பறவைகளும் பயன்படுத்தப்பட்டன.
பறவைகள் காமராவைப் பார்த்து வர வேண்டும் என்பதற்காக ஒரு இறைச்சித் துண்டு காமராவின் லென்ஸ்களுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.
பறவைகள் தாக்கும் காட்சியை இன்று பார்த்தாலும் பார்ப்பவர் கதிகலக்கம் அடைவது இயல்பே. இதில் கதாநாயகியாக நடித்தவர் டிப்பி ஹெட்ரன். 119 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தில் ஹெட்ரனைப் பறவைகள் தாக்கும் காட்சி மட்டும் 7 நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் நடித்த அவர் ஒரு வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் – அந்த ஷாக்கிலிருந்து விடுபட!
லண்டனில் பேர்ட் திரைப்படத்தைப் பார்த்து விட்டு தியேட்டரிலிருந்து வெளியேறிய ரசிகர்கள் அலறி விட்டார்கள் – தாங்கள் திரைப்படத்தில் பார்த்து விட்டு வந்த பறவைகள் நிஜமாகவே அலறும் சத்தத்தைக் கேட்டு! ஆம், வெளியே யாருக்கும் தெரியாதபடி மரக்கிளைகளில் வைக்கப்பட்டிருந்த ஸ்பீக்கர்களில் பறவைகள் அலறும் ஒலி ஒலிபரப்பப்பட்டது!
இசையை ஹிட்ச்காக் பயன்படுத்திய விதம் அனைவராலும் பிரமிக்க வைக்கும்படி அமைந்திருந்தது. ஒரு காட்சி முடியும்போது அடுத்த காட்சி ஆரம்பிக்கும் சில விநாடிகளில் அவர் இசையைப் பயன்படுத்திய விதம் அனைவரையும் வியப்படைய வைத்தது!
இப்படி ஹிட்ச்காக்கைப் பற்றிய ஏராளமான செய்திகள் உண்டு.
முக்கியமான காட்சிகளைப் பார்க்கவில்லையே என்று யாரும் கவலைப்பட வேண்டாம். இந்த இணையதள யுகத்தில் இந்த மூன்று நிமிடக் காட்சிகளை இணையதளத்தில் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். ( நிச்சயம் பார்க்கப்பட வேண்டியவை டு கேட்ச் எ தீஃப் – கார் ரேஸ், சைக்கோ -குளியலறைக் காட்சி, தி பேர்ட் – பறவைகள் தாக்கும் ஃபைனல் அட்டாக் காட்சி)
அவரை வருத்திய ஒரே விஷயம்
தனது உடலைப் பற்றி அவர் வெகுவாக அதிருப்தி கொண்டிருந்தார். அப்படி ஒரு பருமன்! வாழ்நாள் முழுவதும் அவரை வருந்தச் செய்த விஷயம் இது தான்!
மறைவு
1980ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் நாள் ஹிட்ச்காக சிறுநீரகக் கோளாறால் லாஸ் ஏஞ்சல்ஸில் தனது இல்லத்தில் மரணமடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் பெவர்லி ஹில்ஸில் நடைபெற்றது. அவரது உடல் எரிக்கப்பட்டு, அஸ்தி பசிபிக் மகா சமுத்திரத்தில் தூவப்பட்டது.
அறுபது ஆண்டுகளில் அவர் எடுத்த படங்கள் 50.
46 முறை அகாடமி விருதுக்காக அவர் பரிந்துரைக்கப்பட்டாலும் ஒரு முறை கூட அவர் அந்த விருதைப் பெறவில்லை.
என்றாலும் கூட லட்சோபலட்சம் ரசிகர்களின் மனதில் அவர் பெற்றிருக்கும் இடம் அந்த விருதை விடப் பெரியதே!
2018இல் அமெரிக்க நேஷனல் பிலிம் பதிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாதுகாக்கப்பட வேண்டிய படங்களில் அவரது எட்டுப் படங்கள் இடம் பெற்றுள்ளன.
அவருக்கு க்னைட் விருது 1980இல் அவர் மறைவதற்கு நான்கு மாதங்கள் முன்பாக பிரிட்டிஷ் அரசால் வழங்கப்பட்டது.
வெற்றிக்குக் காரணம்
ஏராளமான நகைச்சுவை கலந்த பொன்மொழிகளை அவர் உதிர்த்துள்ளார். அவற்றில் அவர் கண்ட அனுபவ உண்மைகள் பொதிந்திருக்கின்றன. எடுத்துக்காட்டிற்கு இரண்டு இதோ:
ஒரு நல்ல படத்திற்குத் தேவையானது மூன்று விஷயங்கள். 1. ஸ்க்ரிப்ட் 2. ஸ்கிரிப்ட் 3.ஸ்கிரிப்ட் (கதையின் எழுத்து வடிவம்)
ஒரு படத்தின் நீளம் பார்ப்பவர் டாய்லெட்டுக்குப் போக வேண்டும் என்ற தாக்குப் பிடிக்கும் நேரத்தை விடக் குறைவாகவே இருக்க வேண்டும்.
தனது வெற்றிக்கான காரணத்தைப் பற்றி அவரே கூறி இருக்கிறார் இப்படி:
தர்க்கத்தை விட முக்கியமானது கற்பனை வளம்.
இமாஜினேஷன் (IMAGINATION) என்ற இதே காரணத்தை தனது வெற்றிக்குக் காரணமாகக் கூறிய இன்னொருவர் – உலகின் ஆகப் பெரும் விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்!
நகல் எடுப்பவரை லட்சோபலட்சம் மக்களின் மனதில் ஏற்றி வைத்த கற்பனை வளம் வெற்றிக்கு வழி காட்டும் அஸ்திவாரம் அல்லவா!
ஆந்திர பிரதேசத்தில் ஸ்ரீ சைலத்திலுள்ள கோவில் உலகப் பிரசித்திபெற்றது அங்கே உறையும் தேவிக்கு தேனீ தேவி , அதாவது பிரமராம்பா என்று பெயர்.; சம்ஸ்க்ருத மொழியில் பிரமரி என்றால் தேனீ. அங்குள்ள மல்லிகார்ஜுன சிவன் கோவில் 12 ஜோதிர் லிங்க ஸ்தலங்களில் ஒன்று என்பதால் அதை அறியாத சிவ பக்தன் இந்தியாவில் இல்லை ; இதே போல மேற்கு வங்க கிராமம் ஒன்றிலும் பிரமரி அம்மன் உறைகிறார்.
பிரமராம்பா பற்றி சுவையான கதை உண்டு .
அருணன் என்பவன் ஒரு அசுரன் ; இந்துக்களில் அசுரர்களும் இந்து தெய்வங்களையே வணங்குவர் ; கிறிஸ்தவ மதத்தை பரப்ப வந்த வெள்ளைக்காரன் மட்டும் இந்துக்களை பிரித்தாள்வதற்காக அசுரர்கள் என்பவர்கள் பழங்குடி மக்கள் என்றும் மற்றவர்கள் ஆரியர்கள் என்றும் கதை கட்டினான்.
அந்த அருணன் என்ற அரக்கன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்து வெற்றியும் கண்டான் ; அசுரர்கள் எல்லோரும் புத்திசாலி போல வரம் கேட்பார்கள்; ஆனால் அதில் ஏதேனும் ஒரு ஓட்டை இருக்கும்; அதனாலேயே அழிவார்கள். அருணன் சொன்னான் ; என்னை ஆணோ பெண்ணோ கொல்லக்கூடாது; இருகால் பிராணியோ நாற்கால் பிராணியோ கொல்லக்கூடாது. போரிலோ ஆயுதங்களினாலோ கொல்லக்கூடாது; அப்படிப்பட்ட வரம் வேண்டும் என்றான் ; பிரம்மாவும் ததாஸ்து / அப்படியே ஆகட்டும் என்றார் . அதிகாரம் வந்தால் ஆணவம் வரும் ; இரண்டும் சேர்ந்தால் மற்றவர்களை அழிக்கும் எண்ணம் வரும் ; அருணனும் அளவில்லாத அக்கிரமங்களை செய்தான் ; தேவர்களுக்கு / அதாவது நல்லோருக்குக் கட்டுக்கடங்காத துன்பம் நேரிட்டது ; எல்லாம் வல்ல சக்தியிடம் , குறை நீக்குமாறு முறையிட்டார்கள் ; அவளும் அப்படியே ஆகட்டும் என்றாள்.
அந்த முட்டாளுக்கு புழுப்பூச்சிகள் பற்றி அறிவே இல்லை ; இறைவி , சக்தியாக உருவெடுத்து அருணனின் அட்டகாசக் கும்பலை அடியோடு அழித்தாள்; இறுதியில் அருணன் மட்டும் மிஞ்சினான்; அப்போது தேவி தன் உடம்பு முழுவதும் தேனீக்களாகும்படி செய்தாள்; அவனைத் தாக்கி அவன் உடல் முழுதும் தேனீக்கள் ஆக்கிரமிக்கும்படி செய்தாள் ; அவனும் மூச்சுத் திணறி அழிந்த்தான். அசுரர் குணம் படைத்தோர் அந்த குணத்தினாலேயே அழிவர் என்பதே நீதி.
உலகம் முழுதும் ஒரு காலத்தில் இந்துமதம் இருந்தது; ஆனால் இப்போது அதன் எச்ச சொச்சங்களே இருக்கின்றன; இந்து மதத்தில் என்னென்ன சொல்கிறோமோ அதன் ஒரு அம்சத்தையாவது உலக கலாசாரங்களில் காணலாம் ; எகிப்தீய , கிரேக்க , மாயன் நாகரிகங்களிலும் தேனீ தெய்வங்கள் உண்டு. கிரேக்க நாட்டிலும் தேனீ மாதாதான் ஒரு தெய்வம்
மேற்கு வங்கத்தில் ஒரு பிரமரி தேவி கோவில்
ஜல்பய்குரி நகரிலிருந்து 19 கி.மீ தொலைவில் சல்பரி கிராமத்தில் ஒரு பிரமரி தேவி கோவில் இருக்கிறது; இதை 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதுவார்கள்; சதி தேவியின் இடது கால் விழுந்த இடம் இது என்பது ஐதீகம் ( Trisotra, Salbari village, Bodaganj, Jalpaiguri, West Bengal).
xxxx
உலகில் முதல் முதலில் தேனீக்களைப் பாடியவர்கள் ரிக் வேத ரிஷிகள் ஆவார்கள் . மது என்றாலே தேன்; மதுவும் பாலும்தான் ரிஷிகளின் முக்கிய உணவு; யார் வந்தாலும் இவை இரண்டும் கலந்த மதுபர்க்கத்தையே கொடுத்து விருந்துபசாரம் செய்வார்கள் ; அதுவும் காட்டிலிருந்து கிடைக்கும் இயற்கையான தேனையே அவர்கள் பயன்படுத்தினார்கள் . ரிக்வேதத்தில் வெள்ளைக்காரனுக்கும் புரியாத தெய்வங்கள் அஸ்வினி தேவர்கள் என்னும் இரட்டையர் ஆவார்கள்; அவர்களைத் தேனுடன் தொடர்பு படுத்தியே துதிகள் இருக்கின்றன. தேனீக்கு மட்டுமே வேதத்தில் பல பெயர்கள் இருக்கின்றன இதோ அந்த குறிப்புகள் :
Aarangara Rig Veda 10-106-10; ஆரங்கரா/ ரிக் வேதம்
Bhrngaa ப்ருங்க / அதர்வ வேதம் Atharva Veda 9-2-22; யஜுர் வேதம் Yajur Veda- Maitraayani Samhitaa 3-14-8; Vaajasaneyi Samhitaa 24-29; it is one of the sacrificed creatures in Asvamedha yaga. அஸ்வ மேத யக்ஞத்தில் அக்கினியில் போடப்பட்ட 200++++ பொருட்கள் / பலிகளில் தேனீயும் ஒன்று .
Maksaa / Maksikaa – மக்ஷ மகிஷிகா fly or bee – Rig Veda 1-162-9; 10-40-6; 1-119-9; later Upanishads also use these words .Atharva Veda 11-1-2; 9, 10
மதுக்க்ருத் Madhukara -Prasna Upanishad 2-4 madhukara rajan= king bee .மதுகர
Madhukrt – honey maker- Taittriya Samhita; Taittriya brahmana ; Satapata Brahmana use this word; also Chandogya Upanishad
சரக் Saragh – Rig Veda 1-112-2 Taittriya Samhita v.3.12.12; Satapata Brahmana 13-3-1-4; Panini also mentioned it.
தேனீக்களைப் பாடாத கவிஞர்கள் இல்லை ; காளிதாசன் முதல் கம்பன் வரை பாடியுள்ளனர் ; சங்க இலக்கிய நூல்களில் நிறைய குறிப்புகள் உள்ளன ; காளிதாசனின் மேக தூதத்தை பார்த்து இயற்கையிலுள்ள எல்லாப்பொருட்களையும் காதலன், காதலிக்குத் தூது விடுவதற்கு பயன்படுத்தினர் சங்கப் புலவர்கள் ; தேனீக்களையம் இப்படி பயன்படுத்தினர்.
xxxx
சங்க இலக்கியத்தில் தேனீக்கள்
Akananuru -4-10; 46 அக நானூறு
Ainkurunuru – 90 ஐங்குறு நூறு
Narrinai 290 men are like bees visiting many women , 277
தேனீக்களை சம்ஸ்க்ருத, தமிழ் கவிஞர்கள் ஆகியோர் அறுகால் பறவை என்றும் அழைத்தனர் ; இது தேனீ , வண்டு முதலிய பல பூச்சிகளைக் குறிக்கும் ; அவற்றுக்கு ஆறு கால்கள் .
காளிதாசனுக்கும் முன்னர் வாழ்ந்த பாஷா எழுதிய நாடகங்களில் தேனீக்கள் உள்ளன .
ஆண்களும் தேனீக்களைப் போல மலர் மேயும் வண்டுகள் என்று தமிழ்ப்புலவர்( நற்றிணை 290)n சாடுகிறார் ; பிற்காலத்தில் கண்ணனைப் பாடிய ராதா ராணியும் இதைக் குறிப்பிடுகிறார்.
“ஷட் பத” என்றால் ஆறு கால்கள் ; மத யானைகளை மொய்க்கும் வண்டுகள் , மலர் மேயும் ஆறு கால்கள்/ தேனீக்கள் , காட்டில் இசை பாடும் தேனீக்கள் என்று காளிதாசனும் சங்கப் புலவர்களும் பாடுவது இந்தியப் பண்பாடு இமயம் முதல் குமரி வரை ஒன்றே என்பதைக் காட்டுகின்றது.
To be continued………………………………….
TAGS- தேனீ , பிரமரி , பிரமராம்பா , ஸ்ரீ சைலம் காளிதாசன், வேதம் அறுகால் பறவை , ஷட்பத , சங்க இலக்கியம்
In the first part posted yesterday I gave details of two Hindu Bee Goddess temples in Andhra Pradesh and West Bengal.
Meerabai was a princess in Rajasthan. She lived 500 years ago and sang in praise of Lord Krishna. Her kirtans are widely used in Bhajans and concerts. She considered herself a Bee tasting the Divine lips of Lord Krishna.
Here are a few songs of Meerabai:
“Mira the Bee
O my friends
What can you tell me of Love,
Whose pathways are filled with strangeness?
When you offer the Great One your love,
At the first step you body is crushed.
Next be ready to offer your head as his seat.
Be ready to orbit his lamp like a moth
giving in to the light,
To live in the deer as she runs toward
the hunter’s call,
In the partridge that swallows hot coals
for love of the moon,
In the fish that, kept from the sea, happily dies.
Like a bee trapped for life in the closing
of the sweet flower.”
xxxx
“Mira has offered herself to her Lord.
She says, the single Lotus will swallow you whole.
If you want to offer love
Be prepared to cut off your head
And sit on it.
Be like the moth,
Which circles the lamp and offers its body.
Be like the deer, which, on hearing the horn,
Offers its head to the hunter.
Be like the partridge,
Which swallows burning coals
In love of the moon.
Be like the fish
Which yields up its life
When separated from the sea.
Be like the bee,
Entrapped in the closing petals of the lotus.
Mira’s lord is the courtly Giridhara.
She says: Offer your mind
To those lotus feet.” – Mirabhai
xxxxx
“I am true to my Lord,
O my companions, there is nothing to be ashamed of now
Since I have been seen dancing openly.
In the day I have no hunger
At night I am restless and cannot sleep.
Leaving these troubles behind, I go to the other side;
A hidden knowledge has taken hold of me.
My relations surround me like bees.
But Mira is the servant of her beloved Giridhar,
And she cares nothing that people mock her.
– Mirabai
xxxx
Radha’s Divine Love towards Lord Krishna
Gopi- Krishna episode of Krishna hiding the saris of Gopis is in 2000 year old Sangam poets. Krishna’s Bull Fighting is also found in detail in Sangam poems. Krishna’s lady love Radha rani also sang about Bees.
Like Sangam Tamil poets she used the bee as a messenger to send her Divine Love to Krishna.
“Bumblebee, you are accustomed to drinking honey from the flowers, therefore you have preferred to be a messenger of Krishna, who is the same nature of you! I have seen on your moustaches the red powder kumkum, which was smeared on the Krishna’s flower garland while He was pressing the breast of some other competitor. You felt proud touching that flower and your mustaches have become reddish. Now you come carrying a message for me and anxious to touch your feet. But My dear Bumblebee, let me warn you; don’t touch Me. I don’t want any message from your unreliable master and you are an unreliable servant.”
“Your master Krishna is exactly of your quality. You sit on a flower, taking a little honey, then you immediately fly away and sit on another flower to taste honey there….He gave us a chance to taste His lips and then left altogether. We are more intelligent and not going to be cheated anymore by Krishna or His messengers…..You foolish bumblebee, you are trying to satisfy me by singing his glories.
xxxx
Famous poet Narayana Theertha prays to god to make him a bee at his lotus feet in his famous song
To a great extent (let) my mind be (at) your lotus-feet,
Like a honeybee, O auspicious one, slayer of Madhu !
Madhu is the name of a demon as well as Honey. It is a word with double entendre.
It is a common scene in India to see honey bees buzzing around lotus flowers.
Xxxx
Manmata’s (God of Love) Bow and String
“O Daughter of the snow-capped Himalaya Mountain!
Manmatha, the God of love, has only a bow of flowers, whose bowstring is comprised of a cluster of honeybees; he has only five arrows and these are made of flowers. . . Yet with such frail equipment, bodiless and alone though he be, Manmatha, having obtained some grace through Thy benign side-glance, subjugates the entire universe and emerges victorious”
Saundaryalahari, by Adi Shankara
xxxx
Messenger Poems
India is one nation with same values is proved by Messenger Poems found in Kalidasa and Tamil Sangam Poems. Kalidasa who lived in first century BCE did the great Duta Kavya Megha duta. Sangam poets also used all in the Natures as Dutas/Messengers.
Like Radharani’s poem above, Tamil poets also criticised men looking for various flowers/women to taste like bees.
xxxx
When the bee hums over the Kaantal flower bud and tries to penetrate into it, the bud slowly yields to it and blossoms with fragrance like the dutiful and grateful men welcoming with delight the noble gentlemen with whom they are acquainted- Kuruntokai poem 265 .
XXXX
Kalidasa Kavyas on Stamps
Bees and Music
Beetles making holes in bamboos and making them as Nature’s flute is in Kalidasa and Sangam Tamil literature.
Elephant’s rut attracting bees and their buzz is compared to music from the lute is also in Kalidasa and Sangam Tamil literature.
Hindus from Kanyakumari to Kashmir thing in the same way.
The sound of the west wind passing through the holes made by the beetles in bamboos is compared to the sweet tune of the shepherd’s flute- Akam 225
The flow of rut in elephants attracts bees and their humming sound is musical enough to attract the mythical animal called Acunam which listens which listens to it and mistakes it for the tune of Yaaz/ lyre – Akam 88
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
28-2-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக் : கற்பனை வளத்துடன் செயல்படுங்கள்! – 1
ச. நாகராஜன்
திகிலூட்டும் திரைப்பட டைரக்டர்
திரைத் துறையில் நகல் எடுப்பவராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னால் உலகில் உள்ள லட்சக்கணக்கான மக்களை தியேட்டருக்கு வரவழைத்து நாற்காலியின் நுனியில் நடுநடுங்கும் படி அமர வைத்த மர்மக் கதை மன்னர் ஒருவர் உண்டு! அவர் யார் தெரியுமா? அவர் தான் மாஸ்டர் ஆஃப் சஸ்பென்ஸ் – Master of Suspense – என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட ஆல்ப்ரட் ஹிட்ச்காக்!
இதில் சுவையான விஷயம் என்னவெனில் தனது திகில் படங்களை தன்னால் தியெட்டரில் அமர்ந்து பார்க்க முடியாது என்பதை அவரே ஒத்துக் கொண்டது தான்! எப்படித்தான் மக்கள் தனது திகில் படங்களைப் பார்க்கிறார்களோ என்று வியந்தார் அவர்.
இவரைப் பற்றிய சுவையான விஷயங்கள் ஏராளம் உண்டு. அவற்றைப் பார்ப்போம்.
பிறப்பும் இளமையும்
ஆல்ப்ரட் ஜோஸப் ஹிட்ச்காக் 1899ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ம் நாள் இங்கிலாந்திலுள்ள லேடன்ஸ்டோன் என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தந்தையார் ஒரு பலசரக்கு வியாபாரி.
இளம் வயதிலேயே மோசமான ஒரு அனுபவத்தை இவர் தந்தையார் இவருக்குத் தந்தார். இவரது ஐந்தாம் வயதில் இவர் வீட்டில் ஒழுங்காக இல்லை என்று எண்ணி ஒரு கடிதத்தை இவர் கையில் கொடுத்து அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று கொடுக்குமாறு கூறினார் தந்தை. இவரும் அப்படியே செய்தார்.
அந்தக் கடிதத்தில் இவரை சிறிது நேரம் சிறையில் அடைத்து வைக்குமாறு கூறப்பட்டிருந்தது. லாக்-அப்பில் சிறிது நேரம் இருந்த இவருக்கு வாழ்நாள் முழுவதும் போலீஸைக் கண்டால் பயம் ஏற்பட்டது. ஆனால் இவர் தான் பின்னால் மர்மக்கதை தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் திகழ்ந்தார்.
லண்டனில் பொறியியலும் கலையையும் கற்ற இவருக்கு கதை எழுதுவதில் ஈடுபாடு ஏற்பட்டது.
1920இல் இவர் டைடில் கார்ட் என்று கூறப்படும் ஒரு திரைப்படத்தின் போக்கு பற்றி பிலிமும் வசனமும் எழுதும் கார்டுகளைத் தயாரிப்பவர் ஆனார். அந்தக் காலத்திய திரைப்படங்கள் மௌனப் படங்கள். ஆகவே இந்த டைட்டில் கார்ட் மிக முக்கியம். அத்தோடு காபி ரைட்டர் எனப்படும் நகல் எடுப்பவராக வசனங்களை எழுதுவதும் இவரது தொழிலாக ஆனது.
பாரமவுண்ட் பிலிம்ஸில் 1922இல் அவர் ஒரு சின்ன படத்தை எடுத்தார். 1925இல் கொலையை மையமாக வைத்த ‘தி ப்ளஷர் கார்டன்’ என்ற முழு நீளப் படத்தையும் எடுத்தார்.
திருமணம்
1926இல் திரைப்பட எடிட்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்த ஆல்மா ல்யூசி ரெவிலி என்பவரை ஹிட்ச்காக் மணம் புரிந்தார். கணவரின் எல்லா திரைப்பட முயற்சிகளிலும் ஆல்மா ஒரு பங்கு வகித்தார். குறிப்பாகச் சொல்லப் போனால் சைகோ என்ற உலகப் புகழ் பெற்ற படத்தின் குளியலறைக் காட்சியை அமைக்க இவரே ஆலோசனை கூறினார்.
இயல்பாகவே மற்றவரை பயமுறுத்தி ஆனந்திப்பது ஹிட்ச்காக்கின் வழக்கமாக ஆனது. குறும்புத்தனமும் ஏராளம். 39 ஸ்டெப்ஸ் என்ற படத்தில் நடிக்க வந்த நடிக நடிகையரின் கையில் விலங்கு மாட்டி விட்டு சாவி தொலைந்து விட்டதே என்று கூறி அவர்களைத் திடுக்கிட வைத்தார்.
அதே போல கரப்பான், எலிகளைக் கண்டால் பயப்படுவோருக்கு அவற்றை பார்சலில் அனுப்பி வைப்பதும் இவருக்குப் பிடித்தமான ஒரு பழக்கம்! இந்த வேடிக்கைகள் எல்லாம் ஸ்டுடியோ செட்டில் இருப்பவரை பயமுறுத்தும்; திகைப்படைய வைக்கும்!
ஹாலிவுட்டிற்குப் பயணம்
காலம் வேகமாக மாறத் தொடங்கியது. படங்கள் அனைத்தும் பேசும் படங்களாயின. பின்னால் அனைத்தும் வண்ணப்படங்களாக ஆயின.
இங்கிலாந்தை விட்டு அமெரிக்காவில் ஹாலிவுட்டுக்குச் செல்ல எண்ணினார் ஹிட்ச்காக்.
அவர் 1940இல் அமெரிக்கா சென்று கால் பதித்தார். அவர் கால் பதித்த நேரம் முதல் அமெரிக்காவே நடுநடுங்கி ஆட ஆரம்பித்தது. 7 வருட ஒப்பந்தம் ஒன்றை டேவிட் ஓ. செல்ஸ்நிக் என்பவருடன் செய்து கொண்ட அவரது திரைப்படப் பயணம் வெற்றி மேல் வெற்றியாக மாறி அவரைப் புகழேணியின் உச்சிக்கு ஏற்றியது-
இவரது புகழுக்குக் காரணம் அனைவரது பயமும் திகிலுமே தான்! ஒவ்வொரு மனிதரின் மனதின் ஓரத்திலும் பயம் இருக்கிறது என்கிறார் ஹிட்ச்காக்!
ஒரு காட்சியை அமைக்க இவரது கற்பனை வளமும் இவர் மேற்கொண்ட கடுமையான உழைப்பும் இணைந்து இவரது படங்களைப் பார்க்க அனைவரையும் தூண்டியது; ரசிகர்களை ஈர்த்தது. சஸ்பென்ஸ் மன்னனாக இவர் மாறினார்.
ஒவ்வொரு காட்சியிலும் லைட் எங்கே அமைப்பது, காமராக்களை எங்கே எப்படிப் பொருத்துவது, வசனம் என்ன, இசை எப்படி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் தீர்மானமாக முடிவு செய்வது இவர் பழக்கம்.
ஒரு காட்சியை மூன்று வருடங்கள் கழித்துப் பார்த்தாலும் அதில் ஒரு குறையும் காண முடியாதபடி அது இருக்க வேண்டும் என்பது இவரது கொள்கை.
தனக்கே உரித்தான பாணியில் திடீரென்று ஒரு காட்சியில் இவர் ஒவ்வொரு படத்திலும் தோன்றுவார். அது எந்தக் காட்சி என்பதும் சஸ்பென்ஸ் தான். ரசிகர்கள் அதைக் கண்டுபிடித்து ஆரவாரிப்பர்.
சைக்கோ மற்றும் தி பேர்ட்ஸ்
ஹிட்ச்காக் எடுத்த படங்களில் சைக்கோ, தி பேர்ட்ஸ், டயல் எம். ஃபார் மர்டர், ரியர் விண்டோ உள்ளிட்ட பல படங்கள் மிகவும் புகழ் பெற்றவையாகும்.
தனது படங்களில் நடிக்க வருபவர்களை கால்நடையை நடத்துவது போல நடத்த வேண்டும் என்று இவர் கூறியதாகச் சொல்வதுண்டு.
ஆனால் இவரிடம் படாதபாடு பட்டவர்கள் நடிகைகளே. அவர்களது அங்க அசைவு, கண் பார்வை, புன்சிரிப்பு, நடை,உடைகள், கேச அலங்காரம் என எல்லாவற்றிலும் முடிவு எடுப்பவர் இவரே.
கதாநாயகி க்ரேஸ் கெல்லி இவரிடம் அகப்பட்டுக் கொண்ட பெரும் நடிகை. ரியர் விண்டோ, டு கேட்ச் எ தீஃப், டயல் எம் ஃபார் மர்டர் ஆகிய மூன்று ஹிட்ச்காக்கின் வெற்றிப் படங்களில் நடித்த இவர், பின்னால் மொனாகோ இளவரசரைக் கரம் பிடித்தார். ‘டு கேட்ச் எ தீஃப்’ என்ற படத்தில் வரும் கார் ரேஸ் காட்சி அருமையாகப் படம் பிடிக்கப்பட்ட ஒரு காட்சியாகும்.
The earliest reference to the Bees comes from Hinduism. Rig Veda refers to it in many places with different names. Rig Veda is dated 2000 BCE by Wilson. Max Muller concluded that no one could tell the age of Rig Veda. It may be older than 1500 BCE. Hindu scriptures say that the Vedas were there even before the creation.
The mysterious Vedic Twins Asvins are linked to Honey and Bees. Later references are available in Egypt and Greece and Mayan Civilization.
The most interesting thing is each foreign culture repeats at least one aspect of bees from Hinduism.
Two thousand year old Sangam Tamil literature has innumerable references. They are mentioned as Six Legged in Tamil and Sanskrit literature which means both beetle and Bees.
Two Temples
sri sailam temple
Brahmari means black bee. We have at least two temples with this name for goddess. One of the two temples of Bee Goddess is very famous , because it is one of the twelve Jyotir Linga Shrines (Sthalaas). Sri Sailam in Andhra Pradesh has Lord Shiva known as Mallikarjuna and Goddess Parvati as Brahmaramba (Bee Goddess).
There is a very interesting story about Brahmari in Devi Bhagavata. The tenth book and thirteenth chapter of this book records the exploits of the goddess Bhramari in detail.
Aruna was a powerful Asura/demon. Since Asuras also were Hindus, they also pray to same Hindu Gods but with bad intentions (Half baked foreigners deliberately misled the world by dubbing Asuras as aborigines; all Asuras in Tamil and Sanskrit literature are shown praying to same Brahma, Vishnu, Shiva like Devas). After praying to Brahma for a long time Aruna received a boon from Him so that he could not be killed by by any man or any woman, by any biped or quadruped creature, or any combination of the two. He also got the boon of not meeting his end at any war, nor by any arms or weapons,. When he got this absolute power he carried out all sorts of atrocities. Devas were worried and prayed to Goddess and she took the form of Bees and Beetles (Brahmaramba). She killed all the soldiers of Aruna with her normal powers and then faced Aruna. He never thought he would die from insects. Now Devi (goddess) used her Bee form to enter all over his body and he was killed by the bees. So , the goddess in Sri Sailam temples is called Brahmaramaba.
Interestingly Greeks also called one of their Goddesses as Bee Goddess.
Temple in West Bengal
Bhramari Devi Mandir is one of the 51 Shaktipeethas belonging to Devi Sati/ Durga where the left leg of Devi Sati fell at Trisotra, Salbari village, Bodaganj, Jalpaiguri, West Bengal .
The Place is 18.5 kms from Jalpaiguri Town. It is also directly accessible from Siliguri Town via Belakopa. It is about 42 kms from Siliguri.
xxxx
Bees in Rig Veda
Aarangara Rig Veda 10-106-10;
Bhrngaa Atharva Veda 9-2-22; Yajur Veda- Maitraayani Samhitaa 3-14-8; Vaajasaneyi Samhitaa 24-29; it is one of the sacrificed creatures in Asvamedha yaga.
Maksaa / Maksikaa – fly or bee – Rig Veda 1-162-9; 10-40-6; 1-119-9; later Upanishads also use these words
Atharva Veda 11-1-2; 9, 10
Madhukara –Prasna Upanishad 2-4 madhukara rajan= king bee .
Madhukrt – honey maker- Taittriya Samhita; Taittriya brahmana ; Satapata Brahmana use this word; also Chandogya Upanishad
1.நாமக்கல் பெயரைச் சொன்னவுடன் உங்களுக்கு நினைவுக்கு வரும் மேதை யார் ?
XXXX
2.நாமக்கல் கோவிலில் உறையும் தெய்வங்கள் யார் ?
XXX
3.நாமக்கல் நரசிம்ம சுவாமி கோவிலின் சிறப்புகள் என்ன?
XXX
4.நாமக்கல்லில் உள்ள மற்றோரு கோவிலான ஆஞ்சனேயர் கோவிலின் சிறப்பு என்ன ?
XXX
5. நாமக்கல் கோட்டையில் என்ன இருக்கிறது? யார் இதைக் கட்டினார்கள் ?
xxxx
6. இந்தக் குன்று பற்றிய கதை என்ன ?
xxxx
7.இந்த நகரை முட்டை நகரம் என்று அழைப்பது ஏன்?
xxxx
8. நாமக்கல் எங்கே இருக்கிறது ?
xxxx
9.நாமக்கல் அருகிலுள்ள மலையும் , நதியும் எவை ? தொடர்புடைய கவிஞரும் கடை ஏழு வள்ளலும் யாவர்?
xxxx
10.நாமக்கல்லில் என்ன உற்சவம் நடக்கும்?
xxxx
விடைகள்
1.கணித மேதை ராமானுஜன் ; அவர் பிறந்தது ஈரோட்டில்; ஆயினும் அவருடைய குல தெய்வமான நாமகிரிப்பேட்டை தாயார்தான் தனக்கு கனவில் , கணித அற்புதங்களை வெளிப்படுத்தினார் என்கிறார்.
XXX
2.பிரதான தெய்வம் நரசிம்மர் ; அவர் கைகளில் சங்கு, சக்கரம் ஆகியவற்றைக் காணலாம். அவரது பாதத்தின் கீழ், சூரியனும் சந்திரனும் இரண்டு தனித்தனி உருவங்களில் சித்தரிக்கப்படுகின்றன. சிவனும் பிரம்மாவும் இருபுறமும் காணப்படுகின்றனர். எனவே இக்கோயில் திரிமூர்த்தி ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது. நாமகிரி தாயார் மற்றும் லக்ஷ்மி நாராயணா ஆகிய இரு சன்னதிகளில் அமர்ந்துள்ளனர். பிரதான கோவிலுக்கு மேலே ரங்கநாதருக்கு சன்னதி உள்ளது.
XXXX
3.இது பாண்டியர் கால கோவில் ; 1200 ஆண்டுகளுக்கு முந்தையது . மலையைக் குடைந்து கட்டப்பட்டுள்ளது. கல் தூண்களும் சிற்பங்களும் நிறைந்தது .
XXXX
4. நாமக்கல் பெருமாளை நோக்கி கைகூப்பிய வண்ணம் மிகப்பெரிய ஹனுமார் (அனுமன்) சிலை நின்ற வடிவத்தில் இருக்கிறது. இதன் உயரம் 22 அடி. அடி முதல் முடி வரை 18 அடி உயரம் . 1500 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது. அனுமார் கோவிலுக்கு கூரை கிடையாது.
XXX
5.நாமக்கல் கோட்டை 75 மீட்டர் (246 அடி) உயரம் கொண்ட ஒரே கல்லாலான மலையின் உச்சியில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோட்டையில் ஓரு கோயிலும், மசூதியும் உள்ளன. தற்காலத்தில் இந்தக் கோட்டை தமிழக அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோட்டை 16ஆம் நூற்றாண்டில் சேந்தமங்கலம் பாளையக்காரான ராமச்சந்திர நாயக்கரால் கட்டப்பட்டது. பின்னர் திப்பு சுல்தான் இந்தக் கோட்டையைப் பயன்படுத்தினான் .மலையின் கிழக்கு பகுதியில் அரங்கநாதர் கோவிலும் மேற்கு பகுதியில் நரசிம்மர் கோவிலும் உள்ளன. இக்கோவில்களை கி.பி. 784ல் அதியமான் மரபைச்சேர்ந்த குணசீலன் கட்டியதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
xxxx
6. ராமாயணக் கதையில் அரிய மூலிகைகளைக் கொண்ட சஞ்சீவி மலையை அனுமன் கொண்டுவந்த சம்பவம் வருகிறது . அப்போது அவர் கொண்டுவந்த ஒரு சாளக்கிராமக் கல்லை கீழே வைக்க அதை மீண்டும் எடுக்க முடியவில்லை; அதுவே குன்றாக வளர்ந்துவிட்டது .
xxxx
7.தமிழ் நாட்டிலுள்ள கோழிப் பண்ணைகளில் 75 சதவிகிதம் நாமக்கல் வட்டாரத்தில்தான் இருக்கின்றன. சுமார் 7 கோடி கோழிகள் மூலம் ஒவ்வொரு நாளும் 50 கோடி முட்டைகள் கிடைக்கின்றன.
xxxx
8.ஏறத்தாழ தமிழ் நாட்டின் மத்தியில் உள்ளது. வடக்கில் சேலமும் தெற்கில் கரூரும் உள்ளன . சேலத்திலிருந்து 52 கிமீ; கரூரிலிருந்து சுமார் 40 கி.மீ.
xxxx
9. கொல்லி மலை; காவிரி நதி ; கடையெழு வள்ளல் — வல்வில் ஓரி ; நாமக்கல் கவிஞர் –ராமலிங்கம் பிள்ளை
xxxxx
10. பங்குனி உத்தர உற்சவம் சிறப்பாக நடக்கும் ; அப்பொழுது இறைவனின் வீதி உலா நடைபெறும் . கோவில் உற்சவம் தவிர வல்வில் ஓரி உற்சவ மும் நடைபெறுகிறது .
—சுபம்—
tags- நாமக்கல் , கவிஞர், ஆஞ்சனேயர், கோட்டை , கணித மேதை, ராமானுஜன், ஓரி, கொல்லிமலை, நரசிம்மர் கோவில்
உமா தேவியார் பரம ரகசியம் ஒன்றை சிவபிரானிடம் கேட்க விரும்புகிறார். அதுவும் பூமியில் பிறக்கும் அனைத்து மக்களுக்காகவும் கேட்க விரும்புகிறார்.
இதை மஹாபாரதம் அநுசாஸன பர்வத்தில் 231வது அத்தியாயத்தில் விவரமாகப் பார்க்கலாம்.
அது என்ன ரகசியம்?
சுபம் மற்றும் அசுப கர்மம் எப்படிப்பட்டது?
அசுபம் பிராணிகளைக் கீழே தள்ளுவதும் சுப கர்மங்கள் மேலுலகத்தைக் கொடுப்பதும் எப்படி?
இது தான் கேள்வி.
பரமேஸ்வரன் பதில் கூறுகிறார்.
கர்மங்கள் புண்ணியம், பாவம் என இரு வகைப்படும்.
பாவ கர்மம் என்பது மனம், வாக்கு, காயம் (உடல்) ஆகியவற்றால் உண்டாகி மூன்று வகையாகிறது.
மனத்தினால் உண்டாகும் கர்மம் தெரியாமலும் தெரிந்தும் உண்டாகிறது.
அதன் பிறகு சொல் என்னும் கர்மம் உண்டாகிறது.
அதன் பிறகு அவற்றைச் செய்வதற்குறிய உடல் செயல் உண்டாகிறது.
துன்பம் செய்யக் கருதுவது, பொறாமை, பிறர் பொருளின் மீது ஆசை, நல்ல மனிதர்களுக்கும் கெட்ட மனிதர்களுக்கும் ஜீவனத்தைக் கெடுப்பது, தர்மச் செயல்களில் சிரத்தை இல்லாமை, பாவ காரியங்கள் செய்வதில் உற்சாகம், ஆகிய இவை அசுப கர்மங்களாகும்.
பொய், கடுஞ்சொல், யாருக்கும் அடங்காமல் உத்தண்டமாய்ப் பேசுவது, மனம் நோகப் பேசுவது, நிந்திப்பது, உண்மை பேசாமை ஆகிய இவை வாக்கினால் உண்டாகும் பாவங்கள்.
சேரத்தகாதவரிடம் சேருவது, பிறர் மனை புகுவது, அடிப்பதனாலும், கட்டுவதனாலும், கஷ்டப்படுத்துவதனாலும் பிற உயிர்களைத் துன்பப்படுத்துவது, திருடுதல், பிறர் பொருளை அபகரித்தல், அதனை அழித்தல், சாப்பிடத் தகாதவற்றைச் சாப்பிடுவது, (வேட்டை முதலிய)
விஷயங்களில் பற்றுதல் கொள்ளுதல், கர்வத்தினாலும் அலட்சியத்தினாலும் பிடிவாதத்தினாலும் பிறரை நோகச் செய்வது, அசுத்தமாய் இருப்பது, குடித்தல், கெட்ட ஒழுக்கம், தீயவர்களின் சேர்க்கை, பிறர் செய்யும் பாவங்களுக்கு உதவியாக இருப்பது, புண்ணியத்துக்கும் புகழுக்கும் ஆகாத செயல்களில் புகுவது ஆகிய இவை அனைத்தும் சரீர பாவங்கள் எனப்படுகின்றன.
மானஸ பாவத்தைக் காட்டிலும் வாக்கு பாவம் அதிகமென்றும், வாக்கு பாவத்தைக் காட்டிலும் சரீர பாவம் அதிகம் என்றும் நினைக்கப்படுகின்றன.
இம்மூன்று வகைப் பாவங்களும் மனிதனைக் கீழே தள்ளி விடும்.
பிறருக்குத் தீங்கு செய்வது அதிக பாவம்.
இப்படி மூவகைப் பாவங்களையும் செய்பவனை செய்பவனை மிகக் கொடிய நரகத்தில் சேர்ப்பிக்கும்.
பாவம் கர்ம வசத்தால் அறியாமலோ அவசியம் செய்ய நினைத்து ஒரு காரணத்தைச் சொல்லியோ எவ்விதம் செய்யப்பட்டாலும் செய்தவனை அடையவே செய்யும்.
பாவத்தை அவசியம் வெளியிடுவதனால் அதற்குக் காரணமான செய்கை பயனற்றுப் போகும் என்று பரமேஸ்வரன் சொல்ல உமா தேவியார், “பாவ காரியத்தை எவ்வகையில் செய்தால் குற்றம் ஏற்படாது?” என்று கேட்கிறார்.
மஹேஸ்வரர் இதற்கு பதில் அளிக்கிறார் இப்படி: “ குற்றம் செய்யாத ஒரு மனிதன் தன் உயிரைக் காத்துக் கொள்வதற்காக முதலில் தன்னை அடித்தவனும், அடிக்க ஆயுதத்தை ஓங்கினவனுமான பகைவனைத் திருப்பி அடித்துக் கொன்றால் அவனைப் பாவம் பற்றாது. ஒரு மனிதன், திருடனிடத்தில் அதிகமாகப் பயந்து அவனைத் தடுப்பதற்காக அவனை அடித்துக் கொல்லுவானாயின் அவனுக்குப் பாவம் இல்லை.
பஞ்சத்தில் இருந்து கொண்டு தான் உயிர் வாழ்வதற்காக யாருக்கும் தெரியாமல் தனிமையில் இருந்து கொண்டு அக்காரியத்தைச் செய்தாலும், உண்ணக்கூடாதவற்றை உண்டாலும் அவனைப் பாவம் அணுகாது.
இவையெல்லாம் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கை மேற்கொள்ளும் கிரஹஸ்தர்களுக்கே உபதேசிக்கப்படுகிறது.
இடத்தையும் காலத்தையும் அனுசரித்து புத்தியினால் ஆராய்ந்து அந்தப் பயனுக்குத் தக்கபடி பேசத் தகாததைப் பேசினாலும் செய்யத் தகாததைச் செய்தாலும் அவனைப் பாவம் சிறிது பற்றும், பற்றாமலும் போகும்,”
அடுத்து குடியினால் ஏற்படும் தீமைகளை விவரிக்கும் சிவபிரான் குடிப்பவர்கள் நரகத்திற்கே போவர் என்கிறார்.
ஆக இப்படி புண்ணிய பாவ கர்மங்கள் விளக்கப்படுகின்றன!