அறிவியல் புதிர்கள்! (Post No.13,036)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.036

Date uploaded in London – — 25 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

அறிவியல் புதிர்கள்!

 ச. நாகராஜன் 

சயின்ஸ் ஃபிக் ஷன் – அறிவியல் கற்பனைக் கதைகள் – கடந்த நூற்றாண்டில் ஆயிரக் கணக்கில் உருவாகி விட்டன.

அறிவியல் கற்பனையை அடிப்படையாகக் கொண்டு மார்டின் கார்ட்னர் ஏராளமான புதிர்களை உருவாக்கி உள்ளார்.

கார்ட்னர் பிரபல அறிவியல் பத்திரிக்கையான ‘சயின்டிபிக் அமெரிக்கன்[ பத்திரிக்கையில் புதிர்களை எழுதுவார். கணிதப் புதிர்களை அமைப்பதில் வல்லுநரான இவர் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

அவரது அறிவியல் கற்பனை புதிர்கள் அறிவுக்கு விருந்து. லேசில் அவிழ்க்க முடியாதவை. மாதிரிக்கு இரண்டு இதோ:

1)  ரொபாட் அழகிகள்

ரொபாட்டை வடிவமைக்கும் பேராசிரியர் மூன்று அழகிய பெண் ரொபாட்டுகளை வடிவமைத்து வகுப்பறைக்குக் கொண்டு வந்தார்.

மூன்று ரொபாட்டுகளுமே நல்ல அழகிகள். உருவத்தில் அப்படியே ஒத்திருப்பர்.

பேராசிரியர் கூறினார்: “மாணவர்களே! உங்கள் முன் இருக்கும் மூன்று அழகிகளில் ஒருத்தி உண்மையையே கூறுபவள். இன்னொருத்தி பொய்யே பேசுபவள். மூன்றாமவள் சில சமயம் உண்மையையும் சில சமயம் பொய்யும் பேசுபவள். கணினி மூலமாக இவர்கள் ஏதோ ஒரு இடத்தில் – இடது, வலது, நடு இடம் என்று உட்கார்ந்திருக்கிறார்கள்.  எந்த இடத்தில் யார் இருக்கிறார்கள் என்று நீங்கள் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். குறைந்தபட்ச கேள்விகளே அவர்களிடம் கேட்கலாம்.”

மாணவர்களில் புத்திசாலியான ஒருவன் எழுந்திருந்தான். ஒவ்வொரு அழகியிடமும் ஒரு கேள்வி கேட்டான்.

1.   இடது பக்கம் இருந்த அழகியிடம் அவன் கேட்ட கேள்வி : “உனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் யார்?”

பதில் வந்தது : “உண்மை விளம்பி”

2.   நடுவில் அமர்ந்திருந்த அழகியிடம் அவன் கேட்ட கேள்வி : “நீ யார்?”

வந்த பதில் : “சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் பேசுபவள்”

3.   வலது பக்கம் அமர்ந்திருந்த அழகியிடம் அவன் கேட்ட கேள்வி: “உனக்கு அருகில் அமர்ந்திருப்பவர் யார்?”

வந்த பதில் : “பொய் பேசுபவள்”.

மூன்று கேள்விகளுக்கும் பதிலைப் பெற்ற அவன், உடனே யார் யார் என்று அவர்களை சரியாக இனம் கண்டு கூறி விட்டான். எப்படி?

2. எதிர்காலம் உரைக்கும் கணினி

செயற்கை அறிவு – ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் – துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஒரு புதிய கம்ப்யூட்டரை வடிவமைத்திருந்தார்.

“லாபரட்டரியில் அது இருக்கும் இடத்திலிருந்து பத்து மீட்டர் சுற்றளவில் அடுத்து வரும் ஒரு மணி நேரத்தில் ஒரு நிகழ்ச்சி நடக்குமா, நடக்காதா என்று கேட்டால் கச்சிதமாக அது பதில் கூறி விடும். நூற்றுக்கு நூறு சதவிகிதம் இது சரியாக இருக்கும்” – என்று இப்படி பெருமிதப்பட்டார் பேராசிரியர்.

ஒரு நிகழ்ச்சி நடக்கும் என்று கம்ப்யூட்டர் கணித்தால் ஆம் என்பதற்கு அடையாளமாக சிவப்பு விளக்கை அது எரியவிடும்.

ஆனால் விளக்குகள் மறைவிடத்தில் இருக்கும். ஒரு மணி நேரம் கழித்த பின்னரே அதை சரி பார்க்க முடியும். இது ஏன் என்றால், ஒரு கரப்பான் பூச்சி சுவரை நோக்கிப் போகுமா என்ற கேள்விக்கு ஆம் என்று அது பதில் அளித்த போது யாரேனும் ஒருவர் பூச்சியை சுவரை நோக்கிப் போக விடாமல் செய்யலாமே! அதைத் தடுப்பதற்காக ஒரு மணி நேரம் கழிந்த பின்னரே விளக்கைப் பார்க்க முடியும் என்று விளக்கினார் பேராசிரியர்.

கணினியின் அறிமுக நிகழ்ச்சி பிரமாதமாக விளம்பரப்படுத்தப்பட்டு ஆரம்பமாக இருந்தது.

அப்போது பேராசிரியரின் உதவியாளர் லைலா அவரிடம் வந்து, “சார், நூறு சதவிகிதம் இது வெற்றி பெறும் என்று அறிவிப்பது தவறு” என்றாள்.

கோபமடைந்த பேராசிரியர், “எத்தனை முறை இதை நான் சோதித்திருக்கிறேன். இப்போது வந்து எனக்கு எதிராக இப்படிச் சொல்கிறாயே” என்றார்.

“சார், உண்மையிலேயே எனக்கு இப்படிச் சொல்ல வருத்தமாகத்தான் இருக்கிறது. ஆனால் வருபவர்கள் முன்னிலையில் நீங்கள் அவமானப்படக் கூடாதே. அதனால் நான் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யச் சொல்கிறேன்” என்றாள் லைலா.

அதோடு கணினியை ஒரு கேள்வியும் கேட்டாள். பேராசிரியர் திகைத்து மயக்கமடைந்தார்.

லைலா கேட்ட கேள்வி என்ன?

மேற்கண்ட புதிர்களுக்கான விடைகள்:

முதலாவது புதிரின் விடை:

உண்மை விளம்பியை ‘உ’ எனக் குறிப்போம்.

பொய் பேசுபவளை ‘பொ’ எனக் குறிப்போம்.

சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் பேசுபவளை ‘உபொ’ எனக் குறிப்போம்.

இடது, நடு, வலது ஆகிய மூன்று இடங்களால் ஆறே ஆறு அமைப்புகள் தான் ஏற்பட முடியும். அவை வருமாறு:

 இடதுநடுவலது
01)பொஉபொ
02)உபொபொ
03)பொஉபொ
04)பொஉபொ
05)உபொபொ
06)உபொபொ

ஆறு அமைப்புகளில் ஒவ்வொன்றாக எடுத்துக் கேள்விகளையும் பதில்களையும் அவற்றில் பொருத்திப் பாருங்கள்.

ஆறாவது அமைப்பில் தான் ஒருவித முரண்பாடும் இல்லாமல் இருக்கிறது.

ஆகவே இடது பக்கம் இருப்பவள் சில சமயம் உண்மையும் சில சமயம் பொய்யும் பேசுபவள்.

நடுவில் இருப்பவள் பொய்யே பேசுபவள்.

வலது பக்கம் இருப்பவள் உண்மை விளம்பி.

இரண்டாவது புதிரின் விடை:

“கணினி , தனது அடுத்த கணிப்பிற்கு சிவப்பு விளக்கை எரிய விட்டு பதில் சொல்லுமா?”

இது தான் லைலா கேட்ட கேள்வி!

தர்க்கரீதியான முரண்பாட்டை எதிர்நோக்கும் கணினியின் பாடு தர்மசங்கடமானது தான்!

‘இல்லை’ என்று சிவப்பு விளக்கை எரிய விட்டால், அது கேள்விக்குத் தகுந்த உண்மையான பதில் ஆகாது!

ஏனென்றால் பச்சை விளக்கை எரிய விட்டு பதில் தந்தால், அது தவறாக ஆகி விடும். ஏனெனில் அங்கு விளக்கு எரியாததால்!

கம்ப்யூட்டரிடம் லைலா இந்தக் கேள்வியைக் கேட்க அது ‘ஆம்-இல்லை’

லூப் வழியே மீண்டும் மீண்டும் சென்று ஒரு பெரிய முனகல் சப்தத்தைத் தந்தது.  தொடர்ந்து லூப் வழியே சென்றதால் உஷ்ணம் ஏறி கம்ப்யூட்டர் வெடித்தது!

பேராசிரியர் தான் ஏற்கனவே மயக்கம் அடைந்திருந்தாரே!!

நிகழ்ச்சி நடக்கவில்லை!!!

***

முஸ்லீம் நாட்டில் கொழுந்து விட்டு எரியும் வேத கால அக்கினி (Post No.13,035)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,035

Date uploaded in London – –   24 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஒருகாலத்தில் சோவியத் ரஷ்யாவின் பகுதியாக இருந்து இப்பொழுது தனி முஸ்லீம் நாடாக விளங்கும் அசர்பைஜானில் வேத கால அக்கினி( Vedic Fire Temple in Azerbaijan ) எரிந்து கொண்டு இருக்கிறது . ஜார்ஜியா, ஆர்மீனியா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு மத்தியில் அசர்பைஜான் உள்ளது.

இங்கே ஸம்ஸ்க்ருதக்  கல்வெட்டும் , பார்சி மற்றும் பஞ்சாபி குருமுகி லிபி கல்வெட்டுகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது . ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு கணபதியையும் சிவபெருமானையும் ஜ்வாலாஜி என்னும் அக்கினிதேவனையும் போற்றுகிறது.

அசர்பைஜானில் இரண்டு வேதகால அக்கினி கோவில்கள் உள்ளன. ஒரு காலத்தில் நாடு முழுதும் வேதகால கோவில்கள் இருந்தன. முஸ்லீம ஆக்ரமிப்புக்குப் பின்னர் அவை அழிக்கப்பட்டன. ஈரான் நாட்டிலிருந்து வைத்த ஜொராஷ்ட்ரிய மதத்தினர் வேத கால மக்களின் வழக்கப்படி அக்கினியை வழிபடுவார்கள்; பூணூல் அணிவார்கள் ஆனால் இறந்தோரை மட்டும் கழுகுகள் சாப்பிடுவதற்காக உயர்ந்த கோபுரத்தின் மீது வைத்துவிடுவார்கள் . அசர்பைஜான் மக்களில் பெரும்பாலோர் முஸ்லீம்களாக மாற்றப்பட்டபோதிலும் வேத கால வழக்கங்களை அவர்கள் வீட முடியவில்லை; வசந்த காலத்தில் பாரசீகர்கள் கொண்டாடும் நவ்ரோஜி என்னும் புத்தாண்டு தினத்தை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள் .

இரண்டு அக்கினி கோவில்களில் ஒன்று சுரக்கனி Aateshgah at Surakhani, என்னும் இடத்தில் உள்ளது இங்கு மனித உதவியின்றி எப்போதும் எரியும் அக்கினி ஒரு இயற்கை அதிசயம் ஆகும். பூமிக்கு அடியில் ஏராளமான எண்ணெய் வளமும் எரிவாயு வளமும் உடையது இந்த நாடு. பூமிக்கு அடியில் தேங்கிக் கிடக்கும் METHANE மீத்தேன் வாயு தப்பி வெளியே வரும் இடத்தில் இந்த அக்கினி கொழுந்து விட்டு எரிகிறது .ஆயினும் இதை பாரசீக ஜொராஷ்ட்ரிய மதத்தினரும் இந்துக்களும் சீக்கியர்களும் வழிபடுகிறார்கள்.

பாரசீகர்கள் இதை ஆதேஷ்க்கா என்று அழைக்கிறார்கள் .

சிந்து சமவெளி அழியும் காலத்தில் ஈரானுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் குடியேறிய மக்களே பார்சி மதக்காரர்கள் என்று இப்பொழுது வெளியான புதிய புஸ்தகம் ஒன்று கூறுகிறது .

அசர்பைஜான் நாட்டின் தலை நகர் பாகு (Baku is the capital city of Azerbaijan

. It is located on the Caspian Sea shore in the west) அதிலிருந்து 40 கி.மீ. தொலைவில் , யானர் டாக் மற்றும் சுரக்கனி உள்ளன (Yanerdag and Surakhani ); இதில் யானர் டாக்/Yanerdag, கோவில் மலை உச்சியில் இருக்கிறது; வரலாறு அறியாத காலத்திலிருந்து அங்கு அக்கினி எரிந்து கொண்டு இருக்கிறது . இந்த எரிவாயுக் கோவிலைச் சுற்றி நடந்த அகழ்வாய்வுகளில் பார்சி மத தடயங்கள் கிடைத்துள்ளன.

குன்றின் கீழேயே 15 மீட்டர் நெடுக  தீ எரிந்துகொண்டே இருக்கும். பார்ஸிக்கள் தங்கள் கடவுளை அசுர மஸ்தா என்று அழைப்பர்; பாரசீகர் இதை வணங்கி வந்ததை பாரசீக கல்வெட்டு காட்டுகிறது. இங்குள்ள கோட்டைச் சின்னங்களில் இந்துமதத்தின் தாக்கம் தெரிகிறது . 19ஆம் நூற்றாண்டு வரை இந்து புரோகிதர்கள் இங்கு வந்து சென்றுள்ளனர். பார்சிக்கள் அவர்களின் கடவுளுக்குப் பிரியமான மாதுளம்பழத்தைப் படைத்துள்ளனர் . இப்பொழுது சுற்றுலாப்பயணிகளுக்கும் சமய வழிபாட்டுக்கரர்களுக்கும் இது புனித இடமாகத் திகழ்கிறது .

-சுபம்–

அசர்பைஜான், அக்கினி கோவில், வேத காலா அக்கினி, எரிவாயு, மீத்தேன் , ஜ்வாலா

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 11 (Post 13,034)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,034

Date uploaded in London – –   24 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

முனிசாமி முதலியார் சொல்லும் மூலிகை அதிசயங்கள்- 11

நூலின் பெயர் — மூலிகை மர்மம்

வெளியிட்ட ஆண்டு 1899

 By முனிசாமி முதலியார்

இந்த நூலில் அகரவரிசைப்படி மூலிகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சென்ற பகுதியில் 100  வரை பார்த்தோம் ;இதோ தொடர்ச்சி………

XXXX

Nux vomica (Ettikkottai)

Part 11

101. கண் பிரிவிற்கு ,புழுவெட்டும், பூவிற்கு

ஊமத்தங் காயை விரை நீக்கி  பாலில் சுத்தி செய்த பூநாகத்தை உள்ளே  போட்டு மூடி சட்டியிலிட்டு எரித்து சாம்பலாக்கி அதற்கு சரியிடை துத்தம்-  மிக கூட்டி பசும் வெண்ணை போட்டு களிம்பு போல் அறைத்துக்கொண்டு கண்ணில் தீட்டி வரவும் நிவர்த்தியாகும் .

xxxxx

102.கண்குளிர்ச்சிக்கு

ஊசிப்பாலையை அறைத்து தயிரில் கலக்கியுண்டு வந்தால் கண்கள் குளிர்ச்சியுண்டாகும் .  ஆண் குறி  — துவார வெட்பம்–பிரமேகம் இவைகள் தீரும் .

xxxx

103.விஷம் நீங்க

ஊமத்ததன் வேரும்  அதன் வித்தும் வகைக்கு ஒரு விராகநிடையெடுத்து ஆவின்பால் விட்டறைத்துக்  கலக்கிக் கொடுக்க, எலிக்கடி — நாய்க்கடி- நரி கடி முதலிய விஷங்கள் போகும்.

xxxxx

104.காதில் சீழ் வருதலுக்கு 

எருக்கு – கள்ளி- இஞ்சி – – துளசி இதுகள்  சமனாயெடுத்து சிதைத்து நல்லெண்ணெய் விட்டு முறியக் காய்ச்சி வடித்து காதில் 2, 3 துளிவிட்டு பஞ்சடைத்து வைக்கவும். சீதள பதார்த்தம் கூடாது . இப்படி  2, 3 நாள் இருவேளையும் விடவும் .

xxxx

105.குழந்தைகளுக்கு சிறுநீர் கட்டினால்

எலிப் புழுக்கையும் வெள்ளரி விரையும் சமன் கொண்டரைத்து அடி வயிற்றில் பூசி வெண்காரத்தைப் பொறித்து  2 சிட்டிகையெடுத்து  முலைப்பாலில் கலக்கி உள்ளுக்கு புகட்டவும்; நீர் இறங்கும்.

xxxxx

106.ஒருதலைவலி மண்டையிடிக்குத் தைலம்

எருக்கன் பருப்புச் சாறு அரைக்கால்படி நல்லெண்ணெய் ஒரு படி சுக்கு …… அதிமதுரம் வசம்பு திப்பிலி திப்பிலிமூலம் வெள்ளுள்ளி வகைக்கு பலம் ஒன்று இடித்துபோட்டு காய்ச்சி வடித்து தலை முழுகி வந்தால் நிவர்த்தியாகும் .

இதுவுமது

எலுமிச்சம் பழச்சாறு வெற்றிலைச்சாறு பசும் நெய் நல்லெண்ணெய் வகைக்கு ஒருபடி- கருஞ்சீரகம் பலம் இரண்டரை பொடித்து போட்டுக்காய்ச்சி வடித்து . ஒன்றைவிட்டு ஒருநாள் முழுகி வரத்தீரும் .

XXXX

107.தேள் விஷத்திற்கு

எட்டிக்கொட்டையை பாலில்  அறைத்துக் கலக்கிக்கொள்ள தேள், நட்டுவாக்காலி  விஷமும், மற்ற விஷமும் நீங்கும்  

XXXX

108.நீர்க்கட்டி , புண்  முறைகளுக்கு

எட்டிக்கொட்டையை  அறைத்து சிலந்தி ரெத்தக் கட்டி  நீர்க்கட்டி , புண்,  படைகளுக்கு அறைத்துப் பூசினால் தீரும்

XXXX

Nux vomica

109. காயகல்பம்

எட்டிக்கொட்டையை முதல் தினத்தில்  மிளகளவு தின்று , இப்படித் தின்று வரும்போது நாளுக்கு நாள் பயறுப் பிரமாணம் அதிகரித்துக்கொண்டே வந்து, கடைசியில் காலையில் 1 மலையில் 1 ஆக வழக்கத்தில் கொண்டுவந்து மறுபடியும் தினம் குறைத்துக்கொண்டே வந்து நிறுத்திவிடவும்.  இப்படிச் செய்தவர்களுக்கு விஷ பயமே கிடையாது. தேள் நட்டுவாக்காலி  பாம்பு முதலிய விஷ ஜந்துக்கள் கடித்தாலும் அதுகள் இறந்து போகுமே தவிர தனக்கு விஷமே வராது;  குஷ்ட வியாதி இருந்தாலும் நிவர்த்தியாகும். வாதரோகம் தீரும்; ஆனால் பித்தம் அதிகரிக்கும்.

XXXX

110.பாதம் எரிச்சலுக்கு

எட்டிப் பழ த்தில் 7, 8 கொண்டுவந்து புது சட்டியில் போட்டு அடுப்பேற்றி வெதுப்பி தரையில் கொட்டி சூடாயிருக்கும்போதே பித்தஎரிவு பாதம் ஊரல் நமை முதலிய அருவருப்பு உள்ள பாதங்களினால் மிதித்துத் தேய்க்க வேண்டும். இப்படி 5,6 வேளை செய்ய பாத எரிச்சல் நீங்கும்.

Nux vomica

XXXX

—subham—-

Tags- எட்டிக்கொட்டை, காயகல்பம், விஷம் நீங்க, முனிசாமி முதலியார், மூலிகை அதிசயங்கள்- 11, மூலிகை மர்மம்

ஸ்டீவ் ஜாப்ஸ் :  எதையும் நேசித்துச் செய்யுங்கள்! -2 (Post No.13,033)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.033

Date uploaded in London – — 24 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 21-2-2024 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் :  எதையும் நேசித்துச் செய்யுங்கள்! -2

FIRST PART WAS POSTED YESTERDAY

உலகின் மிகச் சிறந்த உரை 

ஸ்டான்போர்டில் 2005 ஜூன் மாதம் 12ஆம் தேதி அவர் ஆற்றிய உரை உலகின் மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக அனைவராலும் போற்றப்படுகிறது. அதில் அவர் தன் வாழ்க்கையை மூன்று கதைகளில் சுருக்கமாக வர்ணித்திருந்தார்.

முதல் கதை – புள்ளிகளை இணைப்பது. (Connecting the dots) இதில் ஸ்டீவ்ஸ் தான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவனாக இருந்தது பற்றியும் வீட்டின் தரையில் படுத்திருந்து, கோவில்களில் சாப்பிட்டு அநேக வித கஷ்டங்களுக்கு உள்ளானதை விவரித்து அதனால் உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையையும் பெற்றதை விவரிக்கிறார். பத்து ஆண்டு கடினமாக உழைத்து மெகின் டோஷ் கம்ப்யூட்டரை வடிவமைத்ததையும் அவர் உருக்கமாக எடுத்துரைத்தார்

இரண்டாவது கதை – காதலும் இழப்பும் (Love and Loss) பற்றிய கதை.

இதில் இருபதாம் வயதில் ஆப்பிள் நிறுவனத்தை துவங்கிய அவர் பத்தே ஆண்டுகளில் 200 கோடி டாலர்கள் சம்பாதித்து 4000 பேரை வேலையில் அமர்த்த முடிந்ததை நினைவு கூர்கிறார். “முப்பது வயதில் என்னுள் எழுந்த வெறிக்கு அளவே இல்லை ஆனால் என் நிறுவனத்திலிருந்தே நான் வெளியேற்றப்பட்டேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நெக்ஸ்ட் மற்றும் பிக்ஸர் ஆகிய நிறுவனங்களைத் தோற்றுவித்தேன்”, என்று தெரிவித்த அவர், பிரபலமான அனிமேஷன் திரைப்படமான டாய் ஸ்டோரி உருவான கதையைத் தெரிவித்தார். நெக்ஸ்ட் நிறுவனத்தை ஆப்பிள் விலைக்கு வாங்கியதையும் தான் மீண்டும் ஆப்பிளுடன் இணைந்ததையும் அவர் இரண்டாம் கதையில் நினைவு கூர்கிறார்.

அடுத்து மூன்றாவது கதை இறப்பு. (Death) இதில் அவருக்குப் பிடித்த வாசகமான, ”ஒவ்வொரு நாளையும் உங்கள் வாழ்வின் இறுதி நாளாக நினைத்து வாழ்ந்தால் ஒரு நாள் நீங்கள் நினைப்பது சரியாகி விடும். இன்று தான் எனது வாழ்க்கையின் கடைசி நாள் என்றால் நான் இன்று செய்ய நினைப்பதைச் செய்ய விரும்புவேனா என்று ஒவ்வொரு நாள் காலையும் என்னைக் கண்ணாடியில் பார்த்துக் கேட்பேன்” என்பதைச் சுட்டிக் காட்டுகிறார்.

கணையம் என்றால் என்ன என்றே தெரியாத தனக்குக் கணையத்தில் புற்று நோய் வந்ததை அவர் உருக்கமாகக் குறிப்பிட்டு, டாக்டர்கள் இது குணப்படுத்த முடியாத வியாதி. நீங்கள் இன்னும் மூன்று அல்லது அதிக பட்சம் ஆறு மாதங்கள் மட்டுமே வாழ முடியும் என்று கூறியதைச் சொல்லி தான் வாழ்நாளின் இறுதியை நோக்கிச் செல்வதை வெளிப்படுத்தினார். அத்துடன் இறுதியில், ”உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறைவு. ஆகவே அதை வீணாக்காதீர்கள். மற்றவர்கள் கூறியவற்றை வேதவாக்காக நினைத்து வாழ்க்கையை நிர்ணையிக்காமல் உங்கள் உள்ளுணர்விற்கு மதிப்பளியுங்கள் என்று அறிவுரை பகர்ந்தார். பசியோடு இருங்கள்; புதிய சிந்தனைகளோடு வாழுங்கள் என்ற முத்திரை வாசகத்துடன் தன் உரையை அவர் முடித்தார்.

சிறப்பான கருத்துக்களை அனுபவத்தின் வாயிலாக உருக்கமாக பேசி அனைவரையும் உருக வைத்த அவரது உரை இன்று வரை அறிஞர்களால்,  இளைஞர்களுக்கும் கணினி துறையில் நுழைவோருக்கும் மேற்கோளாகச் சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது.

தனது முதல் கணினியின் விலையை 666 டாலர் என அவர் நிர்ணயித்தார். இது கிறிஸ்தவக் கொள்கையின் படி பாவகரமான எண் என்றும் சாத்தானின் எண் என்றும் பலரும் அவதூறைப் பரப்பினர். ஆனால் அவரோ அசரவே இல்லை.

   666 டாலரில் ஒரு கணினியின் விலை என்று ஆரம்பித்து 2014இல், 666 பில்லியன் டாலர்களை நிறுவனத்தின் மொத்த மதிப்பாக இருக்கும் அளவு அவர் ஆப்பிள் நிறுவனத்தை உயர்த்தினார்.

ஆப்பிள் நிறுவனத்தில் ஸ்டீவ் ஜாப்ஸின் சம்பளம் ஒரு ஆண்டிற்கு ஒரே ஒரு டாலர் தான்! உலகின் எந்த தலைமை அதிகாரியும் இப்படி ஒரு சம்பளத்தைப் பெற்றதாக சரித்திரமே இல்லை! பின்னால் இதைப் பின்பற்றி ஃபேஸ் புக்கின் தலைமை அதிகாரியான மார்க் ஜுகர்பெர்க்கும் ஆண்டிற்கு ஒரு டாலர் சம்பளம் பெறுவதை வழக்கமாகக் கொண்டார். 55 லட்சம் ஷேர்களைக் கொண்டு 2011இல் ஒவ்வொரு பங்கிற்கும் 377 டாலரை மதிப்பாகக் கொண்ட ஆப்பிள் பங்குகள் அவரிடம் இருந்ததால், “தான் வாங்கிய சம்பளத்தில் பெரிதாக இழப்பு ஒன்றும் இல்லை” என்று அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். “ஆண்டுக்கு 50 செண்ட்களை என் முகத்தைக் காட்டுவதற்காகவும் இன்னும் ஒரு 50 செண்ட்களை எனது திறனுக்காகவும் நான் பெற்றேன்” என்றார் அவர்!

2003ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருக்கு  கணையத்தில் புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற டாக்டர்களின் யோசனையை ஸ்டீவ்ஸ் முதலில் மறுத்து வந்தார். பின்னால் இதற்காகப் பெரிதும் வருந்தினார்.

2009இல் அவர் கல்லீரல் பதியம் செய்யப்பட்டு நியுமோனியாவிலிருந்து மீண்டு வந்த சமயம். அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு அவரது முகத்தை ஒரு முகமூடியால் மூட டாக்டர் முயன்றார். ஆனால் ஸ்டீவ் அதைப் பிய்த்தெறிந்தார். அதற்கு அவர் கூறிய காரணம் “இந்த மாஸ்கின் (mask) டிசைன் சரியில்லை” என்பது தான்! பேச  முடியாத அந்த நிலையிலும் கூட சைகை மூலம் ஐந்து வெவ்வேறு மாஸ்குகளைக் கொண்டு வரச் சொல்லி அதில் தனக்குப் பிடித்த டிஸைனைத் தேர்ந்தெடுத்து அதை அணிந்து கொண்டார் அவர்!

டிஸைன் எனப்படும் வடிவமைப்பை அவர் எவ்வளவு முக்கியமாகக் கருதி வந்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்!

மறைவும் வாழ்க்கைத் தத்துவமும்

புதிதாகக் கணையம் பதியம் செய்யப்பட்ட போதும் கூட அவரால் நோயின் தாக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை. 2011ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி மதியம் 3 மணிக்கு அவர் இல்லத்திலேயே காலமானார். உலகின் அனைத்துத் தரப்பு மக்களும் அவரது மறைவிற்கு இரங்கினர்.

தனது முன்னேற்றம் பற்றி அவர் ஒரு முறை கூறினார் இப்படி:

சில சமயம் வாழ்க்கை, உங்கள் தலையைச் செங்கல்லால் அடிக்கும். நம்பிக்கையை இழக்காதீர்கள்! நான் செய்ததை எல்லாம் நான் நேசித்துச் செய்தேன் என்ற ஒன்று தான் என்னை முன்னேற வைத்தது என்பது மட்டும் நிச்சயம்!”  

ஸ்டீவ் ஜாப்ஸின் இந்த வார்த்தைகளே அவர் வாழ்க்கையில் வெற்றி பெற மேற்கொண்ட வாழ்க்கைத் தத்துவம் என்று கொள்ளலாம்.

ஆப்பிள் கணினிஐ பாட்ஐ போன் மற்றும் அதன் நவீன மாற்றங்களுடனான சாதனங்கள் உலகில் இருக்கும் வரை ஸ்டீவ் ஜாப்ஸின் பெயரும் நிலைத்திருக்கும் அல்லவா!

எதையும் நேசித்து செய்து வெற்றி பெற்ற இந்த  மனிதரை உலகம் நேசிப்பதில் என்ன வியப்பு இருக்கிறது?!

***

Vedic Fire Temple in Azerbaijan

COMPILED BY LONDON SWAMINATHAN

Date uploaded in London – –   24 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Vedic Fire Temple in Azerbaijan Civilisational heritage and the unceasing continuity of Vedic culture even outside Bharat

ARTICLE USED FROM WWW.OPINDIA.COM

The inscriptions found there embody compositions in Sanskrit, Gurmukhi, and Farsi. The Sanskrit inscription presents salutations to Lord Ganesh and Shiva and venerates the holy fire Javalaji. The Hindu hermits, traders, and devotees used to visit this place quite frequently and perform their puja. This is established through the Hindu motifs and symbols found on the fortress walls.

The existence of a fire temple called Aateshgah at Surakhani, Azerbaijan, speaks significantly of the civilisational heritage and unceasing continuity of Vedic culture of fire worship even outside Bharat. The genesis of this Vedic culture goes back to the time of the migration of Vedic people from the Indus Valley. Contrary to the subjective claims of colonial scholarship that promoted the Aryan migration theory from Central Asia to Bharat, the trifurcation of migrating Vedic people took place from the Indus Valley in three different directions.

They migrated to the east till Sadanira in Bihar, to the north to Azerbaijan, known in antiquity as Airyana Vaejo, and to the Middle East establishing the Hittite culture. These migrations took place around 2000-1880 BCE when the Indus culture and topography were impacted by natural calamities. As substantiated in the book, The Vedic Entities and Identities (The Oriental Institute Vadodara 2012), the Indus Culture was an integral part of the Vedic Culture. They carried with them the most advanced Vedic culture which found no equivalent anywhere then. The migration of Vedic people northward coursed through Afghanistan, Iran, and then to Armenia and Azerbaijan.

This migration from the Indus Valley on a significant scale also accompanied the Vedic culture, philosophy, metaphysics, knowledge, rich rituals and worldview. The migratory progress it made in the Central Asian region left remarkable cultural footprints that built in the process foundations of several systems of culture, knowledge, rituals, and customs. The cultural treasures that it handed over had an incredible receptivity from the regions the Vedic people covered. The Vedic worldview of inclusivity, universal well-being, mutual respect, the spirit of inquiry and integration. Most importantly the concepts of the world as one family (Vasudhaiva Kutumbakam) and the dharmic consciousness contributed to the formation of civilisations. Therefore, it is not a matter of surprise to find the existence of Vedic myths, such as dragon killing, cultural practices, and the relics of the monuments that embody the memory of a rich Vedic past in Azerbaijan. 

Baku is the capital city of Azerbaijan. It is located on the Caspian Sea shore in the west. Close to Baku, around forty kilometers northeast, there are sacred sites namely Yanerdag and Surakhani easily accessible by road. In Yanerdag, on a hilltop, a sacred fire is burning from a very remote antiquity whose ancestry is difficult to determine but is considered to be a Zoroastrian sacred pilgrimage where relics having strong Avestan cultural connections were unearthed during archaeological excavations.

At the bottom of the hill, a fire burns continuously extending over a length of about fifteen meters. The archaeological remains found near the site present the images and motifs of the Zoroastrian fire and sun worship. The sun disc and Afrinagan pot used by Zoroastrians are carved on the stone slab confirming the Zorastrian past as the region has seen Persian rule in remote antiquity. The main reason for the Avestan people to arrive at Yanerdag and Surakhani was their search for sacred fire because of Angraminyu’s constant defilement of the sacred land created by Ahura Mazda. Angraminyu in Avestan literature is a destructive evil spirit and an antithesis to virtues and goodness Ahura Mazda stands for. The migration northward in search of undefiled space culminated in Azerbaijan which is Airyana Vaejo in Avestan literature. 

The fire temple at Surakhani is called Jvalaji temple. The temple today is more of a fortress. At the center, there exists the sanctum sanctorum. There is a fire altar with a stone structure and typically a yajnavedi where the fire burns constantly. The fortress-like structure having inner and outer courtyards is located on a plateau.

The inscriptions found there embody compositions in Sanskrit, Gurmukhi, and Farsi. The Sanskrit inscription presents salutations to Lord Ganesh and Shiva and venerates the holy fire Javalaji. The Persian inscription also refers to fire. It was once a very significant center of Hindu and Zoroastrian pilgrimage. The Hindu hermits, traders, and devotees used to visit this place quite frequently and perform their puja. This is established through the Hindu motifs and symbols found on the fortress walls.

Archaeological discoveries consolidate the Vedic connection with fire worship tradition. The Hindu priests used to visit this place until the end of the 19th century and over a century there seems no footfall of Hindus to this sacred site. The same is also true of the Zoroastrians who have stopped visiting the place. However, the offerings of pomegranate to the fire remain vaguely present in the folk memory of the locals there. The locals are of the opinion that the offerings given to the fire were largely pomegranate juice and branches. The concepts of fire god and offerings to the fire are essentially an integral part of the Vedic and Zoroastrian cultural and ritual practices.

Their continuity in Azerbaijan indicates the depth and extensiveness of Vedic culture and the certitude of migration from the Indus Valley to the north contrary to the colonial version of the Aryan Invasion. Dr. I N Aliev, an archaeologist who works in the Department of Archaeology, Baku, has done extensive excavations at Surakhani and confirms the discovery of the relics having shared Hindu and Avestan ancestry. Dr. Aliev also believes that his forefathers came from Bharat. This affirmation also opens up the scope of ancient Bharat’s deep connection with Azerbaijan and the region therein. There stands a centuries-old caravanserai in Baku built with Indian patronage.

A great deal of research is, therefore, required to be done to unearth the buried truths and assets of Vedic culture and its antiquity, historicity, and continuity both in Armenia and Azerbaijan. The development of a contradicting theological culture with rigid monotheism in Azerbaijan has unsettled the story of Vedic and Zoroastrian cultural continuity but time has come to recognise the Vedic heritage of Bharat and its outreach. The mood of the country today is to reach the root to form an enduring identity decoupled from colonial determinisms. The presence of Vedic cultural practices or relics of those monuments of Vedic cultural significance outside Bharat presents an opportunity to map the cultural extendedness of the Indus and Saraswati civilisation. 

(this article has been co-authored by Dr. Chandan K. Panda – an Assistant Professor in the Department of English at Rajiv Gandhi University (A Central University), Itanagar)

—-SUBHAM—–

Owl in Hinduism (Post No.13,032)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,032

Date uploaded in London – –   23 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Hindus look at owls in three angles:

Owl portends bad things;

Owl predicts good things;

Owl is a sweet singing bird.

Owl is the Vahana/vehicle of Goddess Lakshmi, who is the Minister of Finance in Hinduism and Chamundi

Owl is the name of great Rishi Visvamitra and Indra, Head of Devaloka (Heaven). Kausika means owl and Visvamitra. Uluka means owl and Indra.

Tamils also follow this. Very intelligent poets have Owl name as suffix. Without any basis people wrote probably they belonged to a town named after owl. That is not correct. Pisir Anthaiyaar (Ow ler)Otha Anthaiyaar (Owl er) are considered very intelligent poets. Several poets have Kausikan as prefix or suffix; there we have  reasonable explanation that they all belong to Kasusika Gotra (Brahmins Clan). Kausika alias Vsvamitra is the most celebrated Rishi/ seer because the most famous Gayatri Mantra is attributed to him. Born a Kshatria he became a Brahmin through his penance after three failed attempts. His name is Owl=Kausika.

My research shows like western educational institutions he also had owl as his logo.  Many Rishis/seers names are from animal kingdom or plant kingdom. That shows they all used totem symbols during Vedic times.(I have given the list of saints and their totem symbols elsewhere)

xxxx

Tamil Sangam Literature

Sangam Tamil Literature has 18 books where we see owl in bad light. The poets link it with crematorium or burial ground. A heroine says don’t scare my lover and I will give you good meat for dinner.

Akam.122;Puram.240;Puram.261; Narrinai 83

xxxxx

Music and Owls

At the same time the same poets link the bird with sweet music. They praise it like skylark Post Sangam epic Jeevaka Chintamani also confirm its musical talent. One poet compares it with the music of lyre (Yaaz in Tamil).

Tamil References: Narrinai 394; Akam 19;

Also Linga Puranam in Sanskrit also mentions the musical talent of owls. (Brown Wood Owl is said to consist of four deep musical syllables, who—hoo—hoo—hoo)

xxxx

Pancha Tantra and Asvattaman Massacre

Asvattaman was the hero who escaped alive after the great Mahabharata war. He wanted to avenge the death of his father Drona who was killed by evil means. So he also took to the wrong route and setfire to Pandava tents in the midnight. But Krishna saved Pandava brothers by giving them a clue. Asvattama got this bad idea by looking at owls and crows figt. Owls et fire to nests of crows at the dead of night. The most famous Hindu fables which teach five great tricks to Royal family has this as the last trick. Pancha Tantra fables mean Five great tricks or principes a King should follow. The Last trick is called Kakouluukeeyam (Kaka and Uluka- ism).

The same trick is also mentioned in by Valluvar in his Tirukkural (Kural 481) , Crows are powerful in daytime and they win over owls. So a king should act at his favourable time.

Athena , Greek goddess, has owl as her companion. So Westerners who follow Greeks blindly, use it in all logos of Educational Institutions. They consider owl as a symbol of wisdom.

xxxx

Goddess Athena with owl

West also links owls with Death

Shakespeare,1595, says in Midsummer Night’s Dream,
Whilst the screitch owle, sctritching loud,
Puts the wretch that lies in woe,
In remembrance of a shrowd 

In 1599, Shakespeare adds in Julius Caesar, adds
Yesterday the Bird of Night did sit,
Even at Noone day, upon the Market place,
Howting and shreeking
……..
I beleeve, they are portentous things Unto the Clymate
That they point upon (an omen of Caesar’s death)

xxxx

Theophrastus,319 BCE, says
If an owl is startled by him in his walk, he will exclaim Glory be to Athene!before he proceeds.

Ovid, 15 CE, says
The owl of the night sat on an opposite house top and uttered his ill boding funeral voice.
4.Pliny The Elder, 77 CE, in Natural History, says 
Owl seen in day time
The it is looked upon as a direful omen to see it in the city or in the day time.

It is similar to Hindu views. Sanskrit and Tamil literature link owls to crematorium and evil omens.

xxxx

In the Vedas
“Uluka is the ordinary word for owl from the Rig Veda (10-165-4) onwards. The bird was noted for its cry and was deemed the harbinger of (nairrta) ill fortune (AV 6-19-2;Taittiriya samhita 5-5-18-1;Vajasaneyi samhita 24-38). Owls were offered at the horse sacrifice to the forest trees (Vajasaneyi Samhita 24-23; Maitrayani Samhita 3-14-4)”.
(page 102, Vedic Index of Names and Subjects, A A Macdonell & AB Keith)

xxxx

Tamils use five birds in bad and good omens. It is in Tamil almanacs (Panchangam). It is called Pancha Pakshi Sastram.

–subham—

Tags- Owl, Omens, Music, Death, Vedas, Tamil literature, Lakshmi, Vahana

Quiz ஆந்தை பத்து Quiz (Post No.13,031)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,031

Date uploaded in London – –   23 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

Quiz Serial Number- 115

Greek Coin with Owl

1.வேதத்தில் ஆந்தைகள் பற்றிய குறிப்பு உண்டா?

ஆந்தை யார்யாருக்கு வாகனம் ?

xxxx

2.ஆந்தைக்கும் இசைக்கும் என்ன தொடர்பு ?

xxxx

3.ஆந்தை அலறினால் கேட்ட சகுனம்மரணம் சம்பவிக்கும் என்பதற்கு ஆதாரம் என்ன ?

xxxx

4.தேவர்களில் மற்றும் யாருக்கு  யாருக்கு ஆந்தை என்று பெயர் ?

xxxx

5.வெளிநாட்டு ஆந்தைக்கும்தமிழ்நாட்டு ஆந்தைக்கும் தொடர்பு உண்டா?

xxxx

6.வள்ளுவர் ஆந்தை பற்றி என்ன சொல்கிறார் ?

xxxx

7.அஸ்வத்தாமன் செய்த பாண்டவர் படுகொலைக்கு ஆந்தை எப்படி உதவியது? ?

xxxx

8.பஞ்சாங்கத்தில் ஆந்தை ஏன் வருகிறது?

xxxx

9.ஆந்தைக்கு தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் வேறு என்ன பெயர்கள் இருக்கின்றன ?

xxxx

10.ஆந்தை பற்றி 4 பழமொழிகள் கண்டுபிடியுங்கள்

xxxx

10.ஆந்தை அலறல் …….. சகுனம் .

ஆந்தை …….  ……… பெரிது .

ஆந்தை பஞ்சையாயிருந்தாலும் …………….. பஞ்சையில்லை .

ஆந்தை ………….     …………… விழிக்கிறான்.

xxxxxxxxxxx

Barn Owl

ANSWERS

1.இந்துக்களின் தெய்வங்களான சாமுண்டிக்கும் லெட்சுமிக்கும் ஆந்தை வாஹனம்; இதேபோல,  கிரேக்க நாட்டின் தேவதை அதீனாவுக்கு ஆந்தை வாகனம் அல்லது பிரியமான பறவை.

வேதத்தில் ஆந்தை

உலகின் மிகப் பழமையான மத நூல் ரிக் வேதம். இதிலும் ஆந்தை இடம் பெறுகிறது. உலூக (10-165-4; 7-104-17) என்ற பெயரில் ஆந்தையைக் குறித்தனர். தீய சகுனமாகவே வருணிக்கிறது (அதர்வ வேதம் 6-19-2)வாஜசனேய சம்ஹிதையில், அஸ்வமேத யாகத்தில் அக்னியில் போடப்பட்ட பட்டியலில் ஆந்தையை வனதேவதைகளுக்கு என சொல்லி இருக்கிறது.

xxxx

2.ஆந்தையும் இசையும்

“மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து

அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை

பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப”– (நற்றிணை 394, அவ்வையார்)

பொருள்:–மரங்கள் உள்ள அகன்ற காட்டில் வாடிய ஞெமை மரத்தில் பேராந்தை இருந்தது. அது பொற்கொல்லன் தொழில் செய்யும்போது ஏற்படும் ஒலி போல இனிய ஒலியை எழுப்பியது.

“உருள்துடி மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்

கடுங்குரல் குடிஞை” –(அகம் 19)

பொருள்: உருளும் இழுகு பறையின் ஓசையினைப் போல பொருள் தெரிய ஒலிக்கும் கடுமையான குரலை உடைய ஆந்தைகள் உள்ள பெரிய மலை.

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் ஆந்தையின் பாட்டு நல்ல நிமித்தம் எனப் பாடப்பட்டுள்ளது. இதற்கு உரை எழுதிய ‘’உச்சிமேற் புலவர் கொள்’’ நச்சினார்க்கினியர், “மணம் பரப்பும் கோங்கின் உச்சியிலே குவிந்த அரும்பின் முகட்டிலே தேன் போல இனிமை பொருந்திய ஒலியையுடைய யாழினைப் போல ஆந்தை அமர்ந்து பாடும்” – என்று கூறுகிறார். அதன் குரல் யாழின் ஒலிக்கு உவமையாக்கப் பட்டுள்ளது.

இதையே சம்ஸ்கிருதத்தில் உள்ள லிங்க புராணமும் கூறுகிறது.

ஆந்தைகள் எழுப்பும் ஒலி, சங்கீத ஸ்வரம் போல இருப்பதாக இந்துமத நூல்கள் சில கூறும். (Brown Wood Owl is said to consist of four deep musical syllables, who—hoo—hoo—hoo) மர ஆந்தையின் குரல் 4 ஸ்வரங்களை உடையது. லிங்க புராணத்தில் நாரத முனிவரை இமய மலையில் மானசரோவர் ஏரிக்கரையில் வசிக்கும் ஆந்தையிடம் சங்கீதம் கற்கச் சொன்னதாக எழுதி இருக்கிறது. ஆகவே ஆந்தையில் ஒருவகை எழுப்பும் இசை ஒலியை இந்துக்கள் போற்றினர் என்று இந்தக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.

xxxx

3.சாவுக்கும் ஆந்தைக்கும் தொடர்பு

புறநானூற்றுப் பாடல்கள் ஆந்தையை மரணத்துடனும் இடுகாடு–சுடுகாட்டுடனும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றன. தமிழர்களுக்கு சகுன சாத்திரத்தில், அதாவது புள் நிமித்தத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆந்தையின் கூக்குரல் பற்றி அவர்கள் பயப்படுகின்றனர். மரணத்தோடு தொடர்பு படுத்தும் மூன்று புறநானூற்றுப் பாடல்களே இதற்குச் சான்று கூறும்.

“திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்

இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை

கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்”– (அகம் 122)

பொருள்: நிலவானது மேற்குத் திசையில் மறைந்து இருளைப் பரப்பும் நேரத்தில் வீட்டில் வாழும் எலிகளை இரையாக உண்ணும் கூகை— பேய்கள் உறங்கும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும்.

“பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை

சுட்டுக்குவியென செத்தோர்ப்பயிரும்

கள்ளியம் பறந்தவை” – (புறம்.240)

பொருள்: ஆயண்டிரன் இறந்தவுடன் அவனது உரிமை மகளிரும் தீப்பாய்ந்து மாய்ந்தனர். பிளவுபட்ட வாயுடைய பேராந்தைகள், ‘சுட்டுக்குவி’ என்று செத்தோரை அழைப்பது போலக்கூவும். கள்ளிச் செடிகளை உடைய சுடுகாட்டில்,,,,,,,,,,,,,,,

பல் ஆ தழீஇய கல்லா வல்வில்

உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி–(புறம்.261)

இப்போது பல பசுக்கூட்டங்களைக் கைப்பற்றிய கல்லாத வன்மையான வில்வீரனை கூகையானது தன் இனத்தாரை அழைப்பது போல அலைத்து துரத்தும்

முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்

கூகைக் கோழி ஆனாத்

தாழிய பெருங்காடெய்திய ஞான்றே (புறம்.364, கூகைக் கோழியார்)

பொருள்:

முதிய மரத்தின் பொந்துகளில் இருந்து கதும் எனக்கூவும் பேராந்தைகள் நீங்காத தாழிகளை உடைய இடுகாட்டை………………………..

பொருள்: வலிமைமிகு கூகையே! ஊர்வாசலில் நீர்த்துறையில் நிற்கும், கடவுள் இருப்பதாகக் கருதப்படும் மரத்தில் இருப்பாய். வளைந்த வாய், தெளிந்த கண்கள், கூரிய நகங்கள் உடைய நீ, உன் வாயால் பிறரை வருத்துகிறாய்.. உனக்கு ஆட்டு மாமிசத்தோடு நெய் கலந்த சோறு தருவோம். வெள்ளெலியின் சூட்டிறைச்சியும் தருவோம். என் காதலர் வரும் இரவு நேரத்தில் பயமுறுத்தும் சப்தத்தைப் போடாமல் இரு.( நற்றிணை 83 )

குடும்பங்கள் வாழும் கூடாரத்தின் மேல் கோட்டான்கள் உட்கார்ந்தால் பழங்குடி மக்கள் சில பரிகாரங்களைச் செய்வர். சிலநேரங்களில் புதுக் கூரையே வேய்ந்துவிடுவர் என்று பிலோ இருதயநாத் கூறுவார். இவர் பழங்குடி இனங்களை ஆராய்பவர்.

xxxx

4.இந்திரனுக்கு உலூக  என்றும் விச்வாமித்திரருக்கு கெளசிக /ஆந்தை என்றும் பெயர் .

xxxx

Greek Goddess Athena with Owl

London Birkbeck College Logo

5.உண்டு என்றே சொல்லத் தோன்றுகிறது . மேலை  நாடுகள்  முழுதும் ஆந்தையை ஞானத்தின் சின்னமாகக் கருதி பல கல்வி நிறுவனங்களின் சின்னங்களில் ஆந்தையை சித்ததரித்து இருக்கிறார்கள் தமிழ்நாட்டிலும் பல புலவர்கள் பெயர்கள் ஆந்தை என்று முடிகிறது ; அவர்கள் ஆந்தையூர் என்ற ஊர்க்காரர்கள் என்று ஆதாரமில்லாமல் பலரும் எழுதி இருக்கிறார்கள் ; நான் நினைக்கிறேன் எப்படி விச்வாமித்திரனையும் இந்திரனையும் ஆந்தை என்று அழைத்தனரோ அப்படி அந்தப் புலவர்களையும் அழைத்திருப்பார்கள் என்று.  தமிழில் பிசிர் ஆந்தையார்ஓதல் ஆந்தையார்கூகைக் கோழியார் என்பன ஆந்தையின் பெயர்கள் உடையன. கௌசிகன் பெருங் கௌசிகன்,  என்ற புலவரும் சங்க காலத்தில் இருந்தனர்.

Xxxx

6.பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481)

பொருள் :-காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும், அதுபோல் பகையை வெல்லக்கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற காலம் வேண்டும்.

xxxx

7.பஞ்ச தந்திரக் கதைகளில் ‘காகோலூகீயம்’ (காகம்+ உலூகம்) என்ற ஐந்தாவது தந்திரத்தில் எப்படிப் பகைவர்களைக் காலம் அறிந்து தீர்த்து க்கட்டலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதை வள்ளுவரும் (குறள் 481) அப்படியே சொல்கிறார்.அஸ்வத்தாமனும் இதைக் கடைப்பிடித்து இரவு நேரத்தில் பாண்டவர்  கூடாரங்களை தீ வைத்து அழிக்கிறான் . பாண்டவர் ஐவர் மட்டும் தப்பிவிடுகின்றனர் .

xxxx

8.பஞ்சாங்கத்தில் ஆந்தை

பஞ்சாங்கத்தில் ஐந்து பறவைகளின் படங்களைப் போட்டு அதற்கான பலன்களை எழுதி இருப்பர். இதை பஞ்ச பக்ஷி சாஸ்திரம் என்பர்; அவைகளில் ஆந்தையும் ஒன்று. இது தவிர அவை பறக்கும் திசை, எழுப்பும் ஒலி, எத்தனை முறை ஒலி எழுப்பின என்பனவற்றின் அடிப்படையிலும் ஆரூடம் கூறுவர். மயில் வல்லூறு, சேவல்,காகம் ஆகிய நான்குடன் ஆந்தையையும் சேர்த்துக்கொண்டது இதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. நேரத்தையும் பறவைகளின் அடிப்படையில் பிரிப்பர்..

xxxx

9.ஆந்தைக்கு தமிழிலும் ஸம்ஸ்க்ருதத்திலும் உள்ள பெயர்கள் :

ஆந்தை -இகுடி, பிங்கலை, கின்னரம்

சகோரம்- பேராந்தை

கோட்டான்- கூகை, உலோகம் குட்டிஞை , குரால்

ஆந்தையின் பல பெயர்கள்

ஆண்டலை, ஆந்தை, இருடி, உலூக, ஊமன், கின்னரம், கின்னரி, குரால், குடிஞை, கௌசிக, கூகை,கூன், கோட்டான், பிங்கலை,

ஆந்தையின் வடமொழிப் பெயாரான உலூக என்பதில் இருந்தே ஆங்கிலச் சொல்லான ‘அவுல்’’OWL வந்தது. உலூக, கௌசிக, இருடி என்பதெல்லாம் ரிஷிகளின் பெயர்கள். இந்தப் பெயரில் பழங்காலத்தில் ரிஷிகள் இருந்தனர்.

xxxx

10.ஆந்தை அலறல் கெட்ட சகுனம் .

ஆந்தை சிறிது கீச்சு பெரிது .

ஆந்தை பஞ்சையாயிருந்தாலும் சகுனத்தில் பஞ்சையில்லை .

ஆந்தை விழிக்கிறது போல விழிக்கிறான்.

—-subham—

Tags–ஆந்தை, கெட்ட சகுனம், உலூக, கௌசிக, OWL, Quiz,கூகை,கூன், கோட்டான்

ஸ்டீவ் ஜாப்ஸ் : எதையும் நேசித்துச் செய்யுங்கள்! -1– 1 (Post No.13,030)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.030

Date uploaded in London – — 23 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

மாலைமலர் 21-2-2024 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஸ்டீவ் ஜாப்ஸ் :  எதையும் நேசித்துச் செய்யுங்கள்! -1 

ச. நாகராஜன்

ஆப்பிள் எப்படி இருக்கிறது?

ஆப்பிள் எப்படி இருக்கிறது என்று கேட்டால் அந்தக் காலத்தில் சுவையாக இருக்கிறது என்று பதில் வரும்!

அதே கேள்வியை இந்தக் காலத்தில் மாணவ மாணவியரிடம்  கேட்டுப் பாருங்கள்,  “பிரமாதமா இருக்கு, எல்லா வேலையையும் ஃபாஸ்டா செய்யுது” என்று சொல்வார்கள்.

ஆப்பிள் கணினி இல்லாத இடமே உலகில் இப்போது இல்லை.

அத்தோடு உங்கள் கையில் இருக்கும் ஐ பாட், ஐ போன் இவற்றையெல்லாம் உலகிற்கு அளித்து உலகின் போக்கையே மாற்றிய ஒருவர் யார் தெரியுமா? அவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ்!

நவீன சாதனங்களைப் பயன்படுத்தி வாழ்க்கையில் நாளும் முன்னேறுபவர்கள், இசை கேட்டு அனுபவிப்பவர்கள், குடும்பம், உறவு, நண்பர்களிடம் பேசி மகிழ்பவர்கள் ஆகிய அனைவரும் நன்றி சொல்ல வேண்டியது இந்த அமெரிக்கருக்குத் தான்!

பிறப்பும் இளமையும்

ஸ்டீவ் ஜாப்ஸ் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்ஸிஸ்கோவில் 1955ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி பிறந்தார்.

சிரியாவில் பிறந்த அப்துல்ஃபட்டா ஜான் ஜண்டலிக்கும், ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த அமெரிக்கரான ஜோன் கரோல் ஷியபிளுக்கும் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த போது, திருமணமாகாத நிலையில் பிறந்தவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ். இருவரும் ஜாப்ஸை தத்துக் கொடுக்க முடிவு செய்தனர்.

அதன் படி பால் ரெய்ன்ஹோல்ட் ஜாப்ஸுக்கும் அவர் மனைவி க்ளாரா ஜாப்ஸுக்கும் குழந்தை தத்து கொடுக்கப்பட்டது. பால் ஒரு மெக்கானிக். தச்சு வேலை செய்ததால் அவர் ஒரு கார்பெண்டரும் கூட! தனது பையன் ஸ்டீவ்ஸுக்கு அவர் அடிப்படை எலக்ட்ரானிக்ஸைக் கற்றுத் தந்தார். ரேடியோ, டெலிவிஷன் பெட்டிகளிலிருந்து பாகங்களை எப்படிப் பிரிப்பது, அவற்றை எப்படி மீண்டும் இணைப்பது என்பதை அவர் சொல்லித் தரவே ஸ்டீவ்ஸுக்கு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் மீது ஒரு அபாரமான ஈடுபாடு ஏற்பட்டது.

பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் ஸ்டீவ்ஸ் ஆரேகானில் ரீட் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அங்கு கட்டணம் மிக அதிகம்; அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஆறே மாதங்களில் அதை விட்டு வெளியேறினார். அடுத்த 18 மாதங்களில் தன் கையெழுத்து வன்மையைக் காட்டிப் பல்வேறு விதமாக எழுதுவதை க்ரியேடிவாகச் செய்ய ஆரம்பித்தார்.

இந்தியாவிற்கு வருகை

இந்த நிலையில் அவருக்கு ஆன்மீக தாகம் ஏற்பட்டது. ஆகவே இந்தியாவிற்கு 1974ஆம் ஆண்டு வந்தார். டெல்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பஸ்ஸில் செல்வது அவரது வழக்கம்.

அவர் நாடி வந்த நீம் கரோலி பாபாவோ 1973ஆம் ஆண்டு செப்டம்பர் மாதமே மரணம் அடைந்திருந்தார். ஆகவே அவர் ஹைடகன் பாபாஜி என்ற இன்னொரு மகானைச் சந்தித்தார். ஏழு மாதங்கள் இந்தியாவில் இருந்து விட்டு தியான முறைகளைக் கற்ற பின்னர் அமெரிக்கா திரும்பினார் ஸ்டீவ்ஸ்.

புத்த மதத்தின் ஜென் பிரிவில் அவருக்கு அபார ஈடுபாடு ஏற்பட்டது. வாழ்க்கையின் இறுதி வரை ஜஜென் என்னும் தியான முறையில் அவர் ஈடுபட்டார்.

ஆப்பிள் நிறுவனத்தின் தோற்றம்

எலக்ட்ரானிக்ஸில் நிபுணரான அவர் வீடியோ கேம்களுக்கான சர்க்யூட் போர்டைத் தயாரிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் தான் அவருக்கு வோஜ்னியக் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. அவருடன் இணைந்து தொலைபேசி நெட் ஒர்க்கிற்கான ப்ளூ பாக்ஸ்களை செய்ய ஆரம்பித்தார். இதுவே ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை நிறுவுவதற்கான அடிப்படையாக அமைந்தது. 1976அம் ஆண்டு ஸ்டீவ்ஸின் வீட்டிலிருந்த ஒரு காரேஜில் ஆப்பிள் கணினி நிறுவனம் வோஜ்னிக் மற்றும் ரொனால்ட் வெய்ன் ஆகியோருடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது.

மளமளவென்று உயர்ந்த நிறுவனத்தில் 1984ஆம் ஆண்டு அதிகாரப் போட்டி ஏற்பட்டது. ஸ்டீவ்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். மனம் தளராத அவர் நெக்ஸ்ட் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றி நடை போட ஆரம்பித்தார். ஆப்பிள் நிறுவனம் நலிவடைந்து விடவே, 1997ஆம் ஆண்டு ஸ்டீவ்ஸ் மீண்டும் ஆப்பிளின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதை உலகின் தலை சிறந்த நிறுவனமாக ஆக்க முயற்சிகளை மேற்கொண்டார்.

ஐபாட், ஐபோன் என உலகமே அவரது அறிமுகப்படைப்புகளால் “ஆட்டம்” போட ஆரம்பித்தது.

அவரைப் பற்றிய நூற்றுக் கணக்கான அதிசய சம்பவங்கள் உண்டு.

எடுத்துக்காட்டிற்கு ஒன்றாக இதைச் சொல்லலாம்:

  கார் நம்பர் ப்ளேட் பொருத்துவதைப் பற்றி கலிபோர்னியாவில் ஒரு விசித்திரமான விதி உண்டு. நம்பர் வழங்கிய பின்னர் ஆறு மாதம் வரை புது காரில் நம்பர் ப்ளேட்டைப் பொருத்தாமல் ஓட்டலாம். இந்த விதியைப் பயன்படுத்திக் கொண்ட ஸ்டீவ் ஜாப்ஸ் ஒவ்வொரு மாதமும் புதுக் காரை அதே மாடலில் மாற்றிக் கொண்டே இருந்தார். ஆகவே அவரது மெர்ஸிடஸ் பென்ஸ் SL 55 AMG மாடல் காரில் ஒரு போதும் நம்பர் ப்ளேட்டை அவர் பொருத்தியதே இல்லை! இதற்கான காரணம் என்ன என்பது யாருக்கும் தெரியாது! ஒருவேளை ‘வித்தியாசமாக யோசி’ என்ற அவரது வாழ்க்கை தாரக மந்திரமே இதற்கு காரணமாக இருந்திருக்கலாம்!!

*

TAGS- Apple, Steve Jobs, Part 1

QUIZ கருடன் பத்து QUIZ (Post No.13,029)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,029

Date uploaded in London – –   22 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

cambodia 

Quiz Serial Number- 114

1.கருடனின் சிறப்பு என்ன ? வேதத்தில் கருடன் பற்றி ரிஷிகள் என்ன சொல்கிறார்கள் ?

XXXX

2.சங்க இலக்கியத்தில் தமிழ்ப்புலவர்கள் கருடன் பற்றி என்ன பாடினார்கள் ?

xxxx

3.இந்தியாவுக்கு வெளியே அதிகம் புகழ்பெற்ற புனிதப் பறவை கருடன் தானா ?

xxxx

4.கருடனின் வரலாறு என்ன?

xxxx

5. கல் கருட வாகனத்தின் சிறப்பு என்ன ?

xxxx

6.கருட புராணத்தின் சிறப்பு என்ன ?

xxxx

7.கிரேக்க தூதர் நிறுவிய கருட ஸ்தம்பம் எங்கே உள்ளது ?

xxxx

8.ஆகாயத்தில் கருடனைக் கண்டால் இந்துக்கள் வணங்குவது ஏன்?

xxxxxx

9.கருடன் மீதுள்ள ஸ்லோகங்கள் என்ன ? கருட பஞ்சசமியை எப்போது ஏன் கொண்டாடுகிறார்கள் ?

xxxx

10.கருடன் பற்றிய 4 பழமொழிகள் – கண்டுபிடியுங்கள்

1.கருடனைக் கண்ட ……….

2.கருடன் …………. , எவன் கையில் பொருளும் தன் கையிற் சேரும் (COMPARE- காகம் வலமானால் ஆயுசு விருத்தியாகும் )

3……….. சதங்கை (கெச்சை) கட்டியது போல

4.ஏண்டா கருடா சுகமா? ……………. இருந்தால் சுகம்தான்

(COMPARE – கண்ணதாசன் பாடல்-பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா செளக்கியமா ?)

xxxx

indonesian coin 

விடைகள்

1.கருடன் பறவைகளின் அரசன்.

விஷ்ணுவின் கொடியில் உறைவோன்.  விஷ்ணுவுக்கு வாகனமும் ஆகும் . தமிழ் இலக்கியத்திலும், விஷ்னு சஹஸ்ரநாமத்திலும் கருடன் கொடி போற்றப்படுகிறது. பறவைகளுக்குள் நான் கருடன் என்று கிருஷ்ணன் பகவத் கீதையில் பகிர்கிறார்.

प्रह्लादश्चास्मि दैत्यानां कालः कलयतामहम् ।

मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् 10-30

ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் கால: கலயதாமஹம் |

ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ரோऽஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் || 10- 30||

அசுரரில் பிரகலாதன் யான்; இயங்குனவற்றில் காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்.

ரிக் வேதத்தில் கருத்மான் என்ற பெயரில் போற்றப்படுகிறார்; யஜுர் வேதத்தைச் சேர்ந்த சதபத பிராமணத்தில்  துணிவின் ஆற்றலாக கருடன் சித்தரிக்கப்படுகிறார் . மகாபாரதத்திலும் இவர் புகழ் உள்ளது அமரகோச நிகண்டில் கருத்மான் ,கருட, தார்க்ஷ்ய, வைநதேய, ககே ஸ்வரஹ, நாகாந்தக, விஷ்ணுரதஹ, சுபர்ணஹ, பன்னக நாசனஹ , கருடத்வஜ  என்ற பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது .

 Garuda: Krishna’s vehicle

(1.1.70) garutmāngaruḍastārkṣyo vainateyaḥ khageśvaraḥ

(1.1.71) nāgāntako viṣṇurathaḥ suparṇaḥ pannagāśanaḥ- AMARAKOSA

வேதாந்த தேசிகர் கருட தண்டகம் என்ற நூலை கருட பகவான் மீது  பாடியுள்ளார் ; இதை படிப்போருக்கு பயணத்தில் கஷ்டம் வராது

கருடன் காயத்ரீ மந்திரமும் உளது

மஹாபாரதத்தில் கருடன் வடிவில் படைகளை அணிவகுத்து நிறுத்தும் உத்தி பற்றி வருகிறது

யாகம் செய்வோர் கருடன் வடிவத்தில் செங்கல்களை அடுக்கி யாக குண்டம் அமைப்பர்; இதைக் கரிகால் சோழன் செய்ததாக சங்க இலக்கியம் கூறுகிறது,

xxxx

2.சங்க இலக்கியத்தில் கருடனின் கொடியை புள் கொடி என்று புலவர்கள் போற்றுகின்றனர்  . விஷ்ணுவைக் குறிப்பிடும்போதெல்லாம் கருடக்கொடி ஏந்தியவன் என்றே பாடுகின்றனர்

புறநானூற்றில் நக்கீரர் பாடுகிறார் :

புறநானூறு 56 Purananuru 56

ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,

மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;

கடல் வளர் புரி வளை புரையும் மேனி,

அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;

மண்ணுறு திரு மணி புரையும் மேனி,       5

விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,

மணி மயில் உயரிய மாறா வென்றி,

பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என

ஞாலம் காக்கும் கால முன்பின்,

தோலா நல் இசை, நால்வருள்ளும்,— பாடல் 56

XX

பரி பாடல் 8-2

மண்மிசை அவிழ்துழாய் மலர்தரு செல்வத்துப்

புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும்,

மலர்மிசை முதல்வனும், மற்று அவனிடைத் தோன்றி

உலகு இருள் அகற்றிய பதின்மரும், இருவரும்,

மருந்து உரை இருவரும், திருந்து நூல் எண்மரும்,    — நல்லந்துவனார் XX     

திருமுருகாற்றுப்படை வரி 151

 கடுவொடு ஒடுங்கிய தூம்புடை வால்எயிற்று – – – – – – 148

 அழல்என உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்

 பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் – – – – – – 150

 புள்அணி நீள்கொடிச் செல்வனும் …நக்கீரர் பாடியது

சங்கம் மருவிய நூல்களான சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் எண்ணற்ற இடங்களில் கருடன் கொடி வருகிறது.

XX

கருடத்வஜ என்பது விஷ்ணு சஹஸ்ரநாமத்திலும் வருகிறது

Xxxx

3.தாய்லாந்து நாட்டின் (சயாம்) தேசீய சின்னம் கருடன்.

இந்தோனேஷியா நாட்டின் அதிகாரபூர்வ விமான சேவையின் பெயர் கருடா ஏர்வேஸ் .

அமெரிக்காவின் தேசீய சின்னமும் கருடன்தான். இது வெள்ளை நிற கழுத்து உடைய கருடன் இனப்பறவை

தென் கிழக்கு நாடுகள் அனைத்தும் நாணயங்களிலும், தபால்தலைகளிலும், கரன்சி நோட்டுகளிலும் சிற்பங்களிலும் கருடனையே பயன்படுத்திவருகிறது . .தென் கிழக்கு ஆசிய நாடுகள் கருடன் சின்னதாய் பல இடங்களில் பயன்படுத்துகின்றன

வேறு பல நாடுகள் கருடர்- நாகர் மோதலை சித்தரிக்கும் வகையில் பாம்புடன் கருடன் படத்தைக் கொடியில் வரைந்துள்ளன.

XXXX

 national emblem of thailand

4.காஸ்யப ரிஷிக்கும் வினதாவுக்கும் மகனாக கருடன் பிறந்தார். அவருடைய அண்ணன் பெயர் அருணன் ;இந்திரன் செய்த ஒரு வேள்விக்கு கட்டைவிரல் அளவேயுள்ள வாலகில்ய ரிஷிகள் வந்தனர் அவர்கள் மிகவும் குள்ளமானதால் பக்கத்திலுள்ள தண்ணீர் குட்டையில் விழுந்து தவித்தனர். இதைக் கண்டு இந்திரன் சிரிக்கவே, அவனை வெல்லும் ஒருவன் வருவான் என்று வாலகில்ய ரிஷிகள் சாபமிட்டனர்.அதன்படி பலமுள்ள கருடன் பிறந்தான். காஷ்யப மஹரிஷியின் இன்னுமொரு மனைவி கத்ரு ; அவளுக்கும் வினதாவுக்கும் நடந்த போட்டியில் வினதா தோற்றுப்போகவே அடிமையானாள்; அவளை விடுவிக்க அவளுடைய மகன் கருடன் அமிர்தத்தின் ஒரு பகுதியை சிறிய தாய்க்கு கொண்டுவந்து கொடுத்தான் ; அவள் விடுதலை ஆனாள்.

xxxx

5.கோவில்களில் கருட வாகன தரிசனமே முக்கிய நாள்; வைஷ்ணவர்கள் அதைக் காண ஆர்வத்தோடு செல்வர்.

நாச்சியார் கோவில் (திருநறையூர்) பெருமாள் கோவிலின் பெருமை கல் கருடனால் அதிகரித்துவிட்டது. மரத்தினால், சுதையினால், உலோகத்தினால் அல்லது இவைகளின் கூட்டினால் ஆன கருட வாகனங்களை அறிவோம். முழு கல்லினால் ஆன கருடனை சுமந்து கொண்டுபோவது அதிசயம்தானே . மேலும் இதன் எடை கோவிலின் வெளியே போவதற்குள் அதிகரிக்கிறது என்ற நம்பிக்கையால்  மேலும் மேலும்  தூக்கும் சிப்பந்திகள் அதிகரிப்பது இன்னொரு விசேஷம்.

xxxx

6.கருட புராணம் : பதினெட்டு புராணங்களில் ஒன்று. சுமார் 16000 ஸ்லோகங்கள் சம்ஸ்க்ருத மொழியில் உள்ளன. நீண்ட புராணத்தில்  சில அத்தியாயங்கள் மட்டும் இறந்த பின்னர் ஆவிக்கு என்னாகும் என்று விளக்குகிறது ; கருட புராணத்தை இறந்தோர் வீட்டில் 13 நாள் துக்க அனுஷ்டிப்பு காலத்திற்குள் ஒருநாள் படிப்பது சம்பிரதாயம் ஆகும்; இறந்த பின்னர் மனிதனின் வாழ்க்கை பற்றிய பகுதிகள் இதில் இருப்பதே காரணம். இதை பொருளுடன் வாசிக்க ஒரு புரோகிதரை அழைப்பது உண்டு.

சம்ஸ்க்ருத ஸ்லோகங்கள் அனைத்தும், ஆங்கில மொழிபெயர்ப்புடன் இலவசமாக WISDOM LIBRARY வெப்சைட்டில் கிடைக்கின்றன

xxxx

7.தன்னை பரம பாகவதன் (கிருஷ்ணபக்தன்) என்று அழைத்துக்கொண்ட கிரேக்க தூதன் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய பிரதேச விதிஷா நகரிலுல் ஒரு ஸ்தம்பத்தை நிறுவியுள்ளான். அதில் பிராமி எழுத்தில் கல்வெட்டு உளது அவன் பெயர் ஹீலியோடோரஸ்

The Heliodorus pillar is a stone column that was erected around 113 BCE in central India in Besnagar/VIDHISA in Madhya Pradesh.

xxxx

8.வானத்தில் கருடனைக் கண்டால் உடனே அதை ஒரு ஸ்லோகம் சொல்லி வணங்குவார்கள் ; இது சுப சகுனம் ஆகும்.

வைநதேய மஹாஸத்வ சர்வ பக்ஷி பத்தே விபோ

பிரகிஹ்ருத்யதாம் பலிர்  தேவ மந்த்ரபூதோ மயோதியதாக ஹா

वैनतेय महासत्व सर्वपक्षिपते विभो ।

प्रगृह्यतां बलिर्देव मन्त्रपूतो मयोद्यतः ॥

vainateya mahāsatva sarvapakṣipate vibho |

pragṛhyatāṃ balirdeva mantrapūto mayodyataḥ ||

வினதாவின் மகனே; உயர்ந்த உள்ளம் படைத்தோனே , பித்ராபுவே, பறவைகளையும்களின்  அரசனே

Meaning – O the son of Vinatā, the high-souled one, the lord, the king of all the birds, accept this my best offering.. என்னுடைய வணக்கத்தை ஏற்றுக்கொள்வாயாக

xxxx

cambodia 

gupta sculpture

9.நாக பஞ்சமியில் பாம்புகளைப் போற்றுவது போல கருட பஞ்சமியில் கருடனைப் போற்றி வழிபடுகிறார்கள். ஆவணி மாத சுக்ல பக்ஷ பஞ்சமியில் சுமங்கலிகள் அனுஷ்டிக்கும் விரதம் இது. ஒரு அரசனின் 7 குமாரர்களும் பாம்பு கடித்து இறக்கவே அவர்களுடைய தங்கை பாம்புப்புற்றைப் பூஜித்து அரச குமாரர்களை உயிர்ப்பித்தாள்  என்பது கதை ; அதைப் பின்பற்றி இந்த விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது .

கருட காயத்ரீ மந்திரம் உளது; வேதாந்த தேசிகர்   தாண்டக மீட்டரில் எழுதிய –கருட தண்டகம் இருக்கிறது; இடைப்  படித்தா ல் பயணம் செல்லும் வழியிலுள்ள தடைகள் அகலும்

xxxx

10.கருடன் பற்றிய 4 பழமொழிகள்

1.கருடனைக் கண்ட பாம்பு போல

2.கருடன் இடமானால் , எவன் கையில் பொருளும் தன் கையிற் சேரும் (COMPARE- காகம் வலமானால் ஆயுசு விருத்தியாகும் )

3.கருடன்  காலில் சதங்கை (கெச்சை) கட்டியது போல

4.ஏண்டா கருடா சுகமா? இருக்கிற இடத்தில் இருந்தால் சுகம்தான்

(COMPARE – கண்ணதாசன் பாடல்-பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு கேட்டது கருடா செளக்கியமா ?)

—-subham—

Tags-கருடன், கருட பஞ்சமி , வாகனம், புள் கொடி, விஷ்ணு, தேசீய சின்னம் , காசு, நோட்டு, Thailand (Siam)

ஜரா சாம்னே தோ ஆவோ சலியே! (Post No.13,028)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.028

Date uploaded in London – — 22 FEBRUARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஜரா சாம்னே தோ ஆவோ சலியே! 

ச.நாகராஜன் 

ஹிந்தி திரைப்படப் பாடல்கள் மக்கள் அனைவரையும் கவர்ந்த அந்தக் காலத்தில் ஓர் பாடல்!

எழுதியவர் கவிஞர் பரத் வியாஸ்.

படம் : ஜனம் ஜனம் கே பேரே (Janam Janam Ke Phere)

1957ஆம் ஆண்டு வெளி வந்த படம்

பாடியவர்கள் : முஹம்மத் ரஃபி, லதா மங்கேஷ்கர்

இசை அமைத்தது : எஸ்.என். த்ரிபாதி


பாடல் இது தான்:

 ज़रा सामने तो आओ छलिये

छुप छुप छलने में क्या राज़ है

यूँ छुप ना सकेगा परमात्मा

मेरी आत्मा की ये आवाज़ है

ज़रा सामने …

हम तुम्हें चाहे तुम नहीं चाहो

ऐसा कभी नहीं हो सकता

पिता अपने बालक से बिछुड़ से

सुख से कभी नहीं सो सकता

हमें डरने की जग में क्या बात है

जब हाथ में तिहारे मेरी लाज है

यूँ छुप ना सकेगा परमात्मा

मेरी आत्मा की ये आवाज़ है

ज़रा सामने …

प्रेम की है ये आग सजन जो

इधर उठे और उधर लगे

प्यार का है ये क़रार जिया अब

इधर सजे और उधर सजे

तेरी प्रीत पे बड़ा हमें नाज़ है

मेरे सर का तू ही सरताज है

यूँ छुप ना सकेगा परमात्मा

ஜரா சாம்னே தோ ஆவோ சலியே

சுப் சுப் சல்னே மே க்யா ராஜ் ஹை

யூ சுப் நா சகே கா பரமாத்மா

மேரி ஆத்மா கி யே ஆவாஜ் ஹை

ஹம் தும்ஹே சாஹோ தும் நஹி சாவோ

ஐஸா கபி நஹி ஹோ சக்தா

பிதா அப்னே பாலக் சே பிசுட் சே

சுக் சே கபி நஹி சோ சக்தா

ஹமே டர்னே கே ஜக் மே க்யா பாத் ஹை

ஜப் ஹாத் மே திஹாரே மேரி லாஜ் ஹை

யூ சுப் நா சகேகா பரமாத்மா

மேரி ஆத்மா கி யே ஆவாஜ் ஹை

ப்ரேம் கீ ஹை யே ஆக் சஜன் ஜோ

இதர் உடே அவுர் உதர் லகே

ப்யார் கா ஹை யே கரார் ஜியா அப்

இதர் சஜே அவுர் உதர் சஜே

தேரி ப்ரீத் பே படா ஹமே நாஜ் ஹை

மேரே சர் கா து ஹீ சர்தாஜ் ஹை

யே சுப் நா சகேகா பரமா

zaraa saamane to aao chhaliye

chhup chhup chhalane me.n kyA rAz hai

yU.N chhup nA sakegA paramAtmA

merI AtmA kI ye AvAz hai

zarA sAmane …

ham tumhe.n chAhe tum nahI.n chAho

aisA kabhI nahI.n ho sakatA

pitA apane bAlak se bichhu.D se

sukh se kabhI nahI.n so sakatA

hame.n Darane kI jag me.n kyA bAt hai

jab hAth me.n tihAre merI lAj hai

yU.N chhup nA sakegA paramAtmA

merI AtmA kI ye AvAz hai

zarA sAmane …

prem kI hai ye Ag sajan jo

idhar uThe aur udhar lage

pyAr kA hai ye qarAr jiyA ab

idhar saje aur udhar saje

terI prIt pe ba.DA hame.n nAz hai

mere sar kA tU hI saratAj hai

yU.N chhup nA sakegA paramAtmA

merI AtmA kI ye AvAz hai

zarA sAmane …

கவிஞர் பரத் வியாஸ் 1918ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி பிகானீரில் புஷ்கரண பிராமணர் வகுப்பில் பிறந்தார். கல்கத்தாவில் பி.காம். தேர்வில் வெற்றி பெற்ற அவர் பம்பாய்க்கு வந்தார். 1943இல் துஹாய் என்ற படத்திற்கு முதன்முதலாக பாடலை எழுதினார்.

சுத்தமான ஹிந்தியில் பாடலை எழுதும் கவிஞர் அவர். 1941இல் ஆரம்பித்த அவரது கவிதா பிரவாகம் 1980 வரை நீடித்தது.

சதி சாவித்திரி, மஹரிஷி துளஸி உள்ளிட்ட ஆன்மீகப்படங்கள் அவர் பெயரை என்றும் சொல்லும்.

யே மாலிக் தேரே பந்தே ஹம் என்ற புகழ் பெற்ற பாடலையும் ஆதா ஹை சந்த்ர மா ராத் ஆதி பாடலையும் யாருமே மறக்க முடியாது.

ஹிந்தி படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

ஜரா சாம்னே தோ ஆவோ சலியே என்ற அவரது இந்தப் பாடலை ஒட்டிய உருக்கமான சம்பவம் ஒன்று உண்டு.

. சியாம் சுந்தர் வியாஸ் என்று பரத் வியாஸிற்கு ஒரு மகன். ஒரு நாள் ஏதோ ஒரு காரணமாக பரத் வியாஸ் பையனை கடிந்து கொண்டார்.

அவ்வளவு தான், கோபமடைந்த பையன் வீட்டை விட்டு வெளியேறினான்.

ஒரு நாள், இரண்டு நாள், ஒரு மாதம் என நாட்கள் ஓடின. பையன் வீடு திரும்பவில்லை.

பரத் வியாஸும் அவர் மனைவியும் சோகத்தால் துடித்தனர்.

இந்த சோகம் அவரது கவித்வத்தையும் பாதித்தது. படத்திற்கு பாடல் எழுதுவதையே நிறுத்தி விட்டார்.

எவ்வளவோ பேர் ஆறுதல் கூறி பாடல்களை மீண்டும் எழுதுமாறு கூறினர். அவர் மறுத்து விட்டார்.

ஒரு நாள் சுபாஷ் தேசாய் மற்றும் மன்மோகன் தேசாய் ஆகிய இருவரும் அவரை சந்தித்து தாங்கள் எடுக்கப்போகும் ஜனம் ஜனம் கே பேரே என்ற படத்திற்கு பாடல் எழுதுமாறு வேண்டினர்.

அவரது சகோதரரும் மனைவியும் பரத் வியாஸை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தனர்.

உள்ளத்தில் இத்தனை நாளும் இருந்த சோகம் கவிதை வடிவத்தில் பொங்கியது.

என் கண் முன்னால் வரமாட்டாயா?. உன் மேல் எனக்கு எவ்வளவு பிரியம், உன்னைப் பிரிந்ததால் உறக்கமே வரவில்லையே என புலம்பலாகப் பாடினார்.

ஆனால் பையன் வரவில்லை.

இந்தப் பாடல் ஆன்மீக தாபத்தை எழுப்புவதாக எண்ணிய பக்தர்கள் இதை ஆன்மீகப் பாடல் வரிசையில் சேர்த்து விட்டனர்.

அடுத்து ராணி ரூப்மதி என்ற திரைப்படம் வந்தது.

அதில் திரும்பி வாயேன் என்ற பாடலை எழுதினார் அவர்.

song lyric from Rani Rupmati.

Laut ke aa
Laut ke aa
Laut ke aaja
Aa laut ke aaja mere meet
Aa laut ke aaja mere meet
Tujhe mere geet bulate hain
Aa laut ke aaja mere meet
Tujhe mere geet bulate hain
Mera soona padha re sangeet
Mera soona padha re sangeet
Tujhe mere geet bulate hain
Aa laut ke aaja mere meet

Barse gagan mere barse nayan
Dekho tarse hai man ab to aaja
Barse gagan mere barse nayan
Dekho tarse hai man ab to aaja
Sheetal pavan yeh lagaye agan
O sajan ab to mukhada dikha ja
Toone bhali re nibhai preet
Toone bhali re nibhai preet
Tujhe mere geet bulate hain
Aa laut ke aaja mere meet

Ek pal hai hasna ek pal hai rona
Kaisa hai jeevan ka khela
Ek pal hai hasna ek pal hai rona
Kaisa hai jeevan ka khela
Ek pal hai milna ek pal bichhadna
Duniya hai do din ka mela
Tujhe mere geet bulate hain
Mera soona padha re sangeet
Mera soona padha re sangeet
Tujhe mere geet bulate hain
Yeh ghadi na jaye beet
Tujhe mere geet bulate hain
Aa laut ke aaja mere meet
Aa laut ke aaja mere meet.

எனது அன்பே, திரும்பி வா.

எனது பாடல்கள் உன்னை அழைக்கின்றன!

எனது பாடல் வெறுமையாகி விட்டது, தனிமையாக இருக்கிறது!

ஓ, வானம்  மழையைப் பொழிகிறது, ஓ, பாரேன், திரும்பி வா!

ஒரு நாள் சிரிக்கிறோம், இன்னொரு நாள் அழுகிறோம்.

இந்த உலகமே இருநாள் நடக்கும் உற்சவம் தான்!

ஒரு நாள் சேர்வோம், இன்னொரு நாள் பிரிவோம்.

ஆ, திரும்பி வாயேன், என்னை வந்து பாரேன்!

உன்னை எனது கீதம் அழைக்கிறது!

உருக்கமான பாடல்!

என்ன நடந்தது?

12 வருடங்களுக்குப் பிறகு பையன் திரும்பி வந்தான்; தந்தை தாயைப் பார்த்தான், குடும்பத்துடன் சேர்ந்தான்.

பம்பாய் வாழ்க்கை பிடிக்காமல் போன பரத் வியாஸ் சில காலம் சென்னையில் வசித்தார்.

64வது வயதில் 1982ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி  அவர் மறைந்தார். அவரது இறுதிக் காலத்தில் ராமாயணத்தை கவிதா வடிவத்தில் உருவாக்கிக் கொண்டிருந்தார்.

மறக்க முடியாத ஒரு  கவிஞர் பரத் வியாஸ்! அவரது பாடல்கள் காலத்தை வென்று இன்றும் நிலைத்து நிற்கின்றன.

(பாடல்கள் அனைத்தையும் யூ டியூபில் கேட்கலாம்)

***