ஏப்ரல் 2026 காலண்டர்: காஞ்சி சுவாமிகள் பொன்மொழிகள் (Post No.15,553)

Written by London Swaminathan

Post No. 15,553

Date uploaded in London – 30 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஏப்ரல் 2026 மாத பண்டிகைகள்

ஏப்ரல் 01- புதன் பங்குனி உத்திரம்;ஏப்ரல் 03 வெள்ளி-புனித வெள்ளி; 05 ஞாயிறு     ஈஸ்டர் டே; 14  சித்திரை 01 செவ்வாய்     தமிழ் வருடப்பிறப்பு:  20 திங்கள் அட்சய திருதியை; 21 சங்கர ஜயந்தி; 22 ராமானுஜர் ஜயந்தி; 28 செவ்வாய்     மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்; 30 வியாழன்  நரசிம்ம ஜெயந்தி, மதுரை கள்ளழகர் எதிர்சேவை

***

அமாவாசை-17; பெளர்ணமி-2; ஏகாதசி உண்ணாவிரத நாட்கள் 13,27

***

ஏப்ரல் 2026 முக்கிய சுப முகூர்த்த நாட்கள் (விவாஹ முகூர்த்தம்):

ஏப்ரல் 20, ஏப்ரல் 23, ஏப்ரல் 30;

(தேய்பிறை முகூர்த்த நாட்கள் 6, 12, 13, 16)

***

ஏப்ரல் 1 – புதன் கிழமை

“பிள்ளையார்” என்றே அன்போடு கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை” என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறுமே “பிள்ளை” என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்” என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.

காஞ்சி சுவாமிகள் (1894-1994),தெய்வத்தின் குரல்

***

ஏப்ரல் 2 – வியாழக் கிழமை

“குமாரன்” என்றால் “பிள்ளை” என்றே அர்த்தம். பாரததேசம் முழுவதிலும் குமாரன், குமாரஸ்வாமி என்றால் பார்வதி பரமேசுவரர்களின் இளைய பிள்ளையாகிய சுப்பிரமணியரையே குறிப்பிடும். தமிழிலும் “குமரக் கடவுள்” என்கிறோம். ஆனால், அவரைக் “குமரனார்” என்பதில்லை; “குமரன்” என்றுதான் சொல்வார்கள். மூத்த பிள்ளைக்கே மரியாதை தோன்றப் பிள்ளையார் என்று பெயர் தந்திருக்கிறோம்.

***

ஏப்ரல் 3 – வெள்ளிக்கிழமை 

பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் பிரீதி ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.அகங்கார மண்டையோட்டை உடைத்தால் உள்ளே அமிருத ரஸமாக இளநீர் இருப்பதை இந்தச் சிதறுகாய் உணர்த்துகிறது.

***

ஏப்ரல் 4- சனிக்கிழமை 

யானை எதை ரட்சிக்கும்? தன் தந்தத்தைத் தீட்டி வெள்ளை வெளேர் என்று வைத்திருக்கும். இந்தப் பிள்ளையார் என்கிற யானை என்ன பண்ணுகிறது என்றால், அந்தக் கொம்பில் ஒன்றையே ஒடித்து, அதனால் மகாபாரதத்தை எழுதிற்று. தன் அழகு, கௌரவம், கர்வம் எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கிற ஒன்றைக் காட்டிலும், தர்மத்தைச் சொல்கிற ஒன்று தான் பெரிது என்பதை இவ்விதம் இந்த யானை காட்டியது.

***

ஏப்ரல் 5 – ஞாயிற்றுக் கிழமை

பிள்ளையாருக்கு எதிரே நின்று தோப்புக்கரணம் போடுகிறோமே, அதை நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தவர் மஹாவிஷ்ணுதான் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு சமயம் மஹாவிஷ்ணுவினுடைய சக்கரத்தை அவரது மருமகனான பிள்ளையார் விளையாட்டாகப் பிடுங்கிக் கொண்டு தம் வாயில் போட்டுக்கொண்டு விட்டாராம். பிள்ளையாரிடமிருந்து திரும்பப் பிடுங்குவது முடியாது. அவர் மிகவும் பலம் உடையவர். அதட்டி மிரட்டி வாங்கவும் முடியாது. ஆனால், அவரைச் சிரிக்க வைத்துச் சந்தோஷத்தில் அவர் வாயிலிருந்து சக்கரம் கீழே விழுந்தால் எடுத்துக்கொண்டு விடலாம் என்று மஹாவிஷ்ணுவுக்குத் தோன்றியதாம். உடனே நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு ஆடினாராம். விநாயகர் விழுந்து விழுந்து சிரித்தார். சக்கரம் கீழே விழுந்தது. விஷ்ணு எடுத்துக் கொண்டு விட்டார்.

***

ஏப்ரல் 6 – திங்கட் கிழமை

“தோர்பி: கர்ணம்” என்பதே தோப்புக்கரணம் என்று மாறியது. “தோர்பி” என்றால் “கைகளினால்” என்று அர்த்தம். ‘கர்ணம்’ என்றால் காது. “தோர்பி கர்ணம்” என்றால் கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது.

***

ஏப்ரல் 7- செவ்வாய்க்கிழமை 

ஜீவனும் பிரம்மமும் ஒன்றுதான் என்கிறார் ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதர்கள். அதாவது நாமேதான் ஸ்வாமி என்கிறார்.

***

ஏப்ரல் 8 – புதன் கிழமை

“நான்தான் ஸ்வாமி” என்று ஹிரண்யகசிபு சொன்னபோது தன்னைத் தவிர வேறு ஸ்வாமியே கிடையாது என்ற அகங்காரத்தில் சொன்னான். பகவத் பாதர்களோ ஸ்வாமியைத் தவிர வேறு எதுவுமே கிடையாது என்பதால் நாமும் ஸ்வாமிதான் என்கிறார். ஜீவன் தனக்கு உள்ள அகங்காரத்தை அடியோடு விட்டு விட்டால் இவனே பிரம்மத்தில் கரைந்து பிரம்மமாகி விடுகிறான் என்கிறார்.

***

ஏப்ரல் 9 – வியாழக் கிழமை

சமுத்திரமாக இருக்கிற அவரேதான் ஆற்று ஜலம், குளத்து ஜலம், கிணற்று ஜலம், அண்டா ஜலம், செம்பு ஜலம், உத்தரணி ஜலம்போல் தம் சக்தியைச் சிறுசிறு ரூபங்களாகச் செய்துகொண்டு பலவித ஜீவ ஜந்துக்களாகியிருக்கிறார். இதில் மனிதனாகும்போது பாப புண்ணியத்தை அனுபவிக்கவும், பாப புண்ணியம் கடந்த நிலையில் தாமே ஆகிவிடவும் வழி செய்திருக்கிறார். மனிதனாகும்போது மனசு என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாப புண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்கச் செய்கிறார்.

***

ஏப்ரல் 10 – வெள்ளிக்கிழமை 

மனசை அவர் குரங்காகப் படைத்திருக்கிறார். அந்தக் குரங்கு இப்போது தேகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்வாமி இந்தத் தேகத்தை நசிப்பதாக அல்லவா வைத்திருக்கிறார்? இந்த அழுகல் பழத்தை மனக்குரங்கு விட்டுவிட வேண்டும். அழுகாத பழம் கிடைத்தால் அழுகல் பழத்தைக் குரங்கு போட்டுவிடும். அழுகாத மதுரமான பழம் பரமாத்மாதான். அதை மனத்தால் பிடித்துக்கொண்டு சரீரப் பிரக்ஞையை விட்டுவிட அப்பியசிக்க வேண்டும்.

***

ஏப்ரல் 11 – சனிக்கிழமை 

‘அத்வைதம்’ என்பதே ஆதி சங்கர பகவத் பாதர்கள் நிலைநாட்டிய சித்தாந்தம் .‘அ-த்வைதம்’ என்றால் ‘இரண்டு இல்லை’ என்று அர்த்தம். எந்த இரண்டு இல்லை? இப்போது ஸ்வாமி என்று ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு இரண்டாவதாக ஜீவர்கள் என்ற நாம் இருக்கிறோம் என்று நினைக்கிறோம் அல்லவா! இப்படி இரண்டு இல்லவே இல்லை. ஸ்வாமி (பிரம்மம்) என்கிற ஒரே சத்திய வஸ்துக்குப் புறம்பாக எதுவுமே இல்லை. அது தவிர, இரண்டாவது வஸ்து எதுவுமே இல்லை. அந்த ஒன்றேதான் மாயா சக்தியினால் இத்தனை ஜீவர்கள் மாதிரியும் தோன்றுகிறது.

***

ஏப்ரல் 12 – ஞாயிற்றுக் கிழமை

ஜாக்ரத், ஸ்வப்னம், ஸுஷுப்தி என்று மூன்று அவஸ்தை (நிலை)களுண்டு. சாதாரணமாக விழித்துக் கொண்டிருப்பது ஜாக்ரம்; கனாக் காண்பது ஸ்வப்னம்; ஒன்றும் தெரியாமல் தூங்குவது ஸுஷுப்தி. இந்த மூன்று அவஸ்தைகளிலும் ஒருவனேதான் இருக்கிறான். கனாக் கண்டவனும் விழித்துக் கொண்டவனும் ஒருவனே. ஆனால், கனாக் கண்ட பொழுது நடக்கிறவைகளுக்கும், விழித்துக் கொண்டபின் நடக்கிறவைகளுக்கும் முன்னுக்குப் பின் சம்பந்தமே இல்லை. கனவில் வேற விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. விழித்துக்கொண்டபோது வேறே விதமான நடவடிக்கைகள் இருக்கின்றன. அவஸ்தை வேறுபட்ட போதிலும், மனோபாவம் வேறுபட்ட போதிலும் இரண்டிலும் ஒருவனே இருப்பதுபோல, வேறு வேறு மனோபாவம் கொண்ட பல பிராணிகளிடத்திலும் இருப்பவன் ஒருவனே: அவனே நாம் என்று தெளிய வேண்டும்.

***

ஏப்ரல் 13 – திங்கட் கிழமை

இந்த உலகமும் ஒரு கனவுதான். உலக வாழ்வும் மாயா ஜுரத்தில் வந்த ஜன்னி என்று தெரிந்து கொண்டால், உண்மையில் எல்லாம் ஒன்று என்று உணர்வோம். நம் கனவில், நம் ஒருத்தரின் மனமே இத்தனை பேரை சிருஷ்டித்த மாதிரி, மகா பெரிய மனசு ஒன்றின் எண்ணங்கள்தான் இத்தனை ஜீவராசிகளும் என்று தெரியும்.

***

ஏப்ரல் 14- செவ்வாய்க்கிழமை 

ஒரு கோயிலுக்கு யானை வாகனம் செய்தான் ஒரு மரத்தச்சன். அதைப் பரீட்சிப்பதற்காக இன்னொரு தச்சன் போனான். அவனோடு அவனுடைய குழந்தையும் போயிற்று. மர யானையைப் பார்த்ததும் குழந்தை பயந்தது.  குழந்தைக்கு அந்த வாகனம் அசல் யானையாகவே இருந்தது. அதுமரம் என்கிற ஞானத்தைக் குழந்தையிடமிருந்து மறைத்தது. அது யானையாக்கும் என்கிற நினைப்பு, அதே சமயத்தில், அது தத்ரூபம் யானை மாதிரி இருந்தும் கூடத் தச்சன் பயப்படாததற்குக் காரணம், அதன் யானைத் தன்மை அவனைப் பொறுத்தமட்டில் மறைந்து அது மரம்தான் என்கிற அறிவு இருந்ததேயாகும்.

***

ஏப்ரல் 15 – புதன் கிழமை

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

என்று இந்த இருவர் நிலையையும் திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியிருக்கிறார்.

திருமூலர் பெரிய யோகீசுவரர். பெரிய தத்துவங்களை லகுவாகச் சொல்லிவிடுவார் அவர். அவரது திருமந்திரத்தில் தான் மேலே சொன்ன வாக்கு இருக்கிறது. திருமூலர் எதற்கு இந்தக் கதையைச் சொன்னார்? செய்யுளின் அடுத்த இரண்டு அடிகளைப் பார்த்தால் அது புரியும்.

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்.

யானை வேறு, மரம் வேறு இல்லை என்பதுபோல் பரமாத்மா வேறு, உலகம் வேறு இல்லை என்று இப்படித் திருஷ்டாந்தம் காட்டி விளக்குகிறார் திருமூலர்.

***

ஏப்ரல் 16 – வியாழக் கிழமை

பரமாத்மா என்கிற மரத்தினாலேயே ஆனதுதான் இந்தப் பார் முதலிய பிரபஞ்சம் என்கிற பொம்மை. குழந்தைக்குப் பொம்மையில் மரம் தெரியாததுபோல், நமக்கு உலகத்தில் பரம் தெரிவதில்லை. நம் பார்வையில் பார் முதலான பஞ்சபூதங்கள் பரத்தை மறைத்துவிட்டன. ஞானிகளுக்கோ எல்லாம் பிரம்ம மயமாகவே தெரிகிறது. அவர்கள் விஷயத்தில், பார்முதற் பூதங்கள் மரத்தில் மறைந்துபோய் விடுகின்றன.

***

ஏப்ரல் 17 – வெள்ளிக்கிழமை 

எல்லாரும் பணக்காரராகி விடுவதாகவே வைத்துக் கொள்வோம். நிம்மதியாக, சாந்தமாக, நிர்ப்பயமாக இருக்க அது உதவுமா? பணக்காரர்கள் நிறைந்த தேசங்களைப் பாருங்கள். அங்கே எத்தனை சச்சரவு, நிம்மதியின்மை? எல்லோருக்கும் நிறையப் பணம் வந்துவிட்டாலும், ஒவ்வொருவனுக்கும் மற்றவனைவிட அதிகம் இருக்க வேண்டும் என்கிற ஆசையும், அதனால் போட்டியும், சச்சரவும் இருந்து கொண்டேதான் இருக்கும்.

***

ஏப்ரல் 18 – சனிக்கிழமை 

மகானாகிய நீலகண்ட தீக்ஷிதர் தம்முடைய ‘ஆனந்த ஸாகர ஸ்தவ’த்தில் இதற்குப் பதில் சொல்லுகிறார். ‘அம்மா மீனாக்ஷி, உன்னிடம் எதையும் சொல்லவே வேண்டாம். சகலமும் தெரிந்தவள் நீ. ஆனாலும் உன்னிடம் கஷ்டங்களை வாய் விட்டுச் சொல்லாவிட்டால் மனம் புண்ணாகிறது. வாய்விட்டுச் சொல்லிவிட்டாலே தற்காலிகமாக ஒரு ஆறுதலாக, தெம்பாக இருக்கிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் குறைகளைச் சொல்கிறேன்” என்கிறார்.

***

ஏப்ரல் 19 – ஞாயிற்றுக் கிழமை

பாபங்கள் இரண்டு தினுசு, ஒன்று சரீரத்தால் செய்த பாப கர்மா, இன்னொன்று மனசினால் செய்த பாப சிந்தனை. பாப கர்மாவைப் போக்கிக் கொள்ள புண்யகர்மா செய்ய வேண்டும். பாப எண்ணங்களைப் போக்கிக் கொள்ள புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

***

ஏப்ரல் 20 – திங்கட் கிழமை

காரியமே இல்லாமல் உட்காருகிறேன் என ஆரம்பித்தால் அப்போது மனசில் இல்லாத கெட்ட எண்ணங்கள் எல்லாம் படை எடுத்து வரும். இங்கிலீஷில்கூட “வேலையில்லாத சித்தம் சைத்தானின் பட்டடை” என்று ஒரு பழமொழி உண்டு. ஆகவேதான்—சித்தம் நின்று அத்வைத ஞானம் ஸித்திக்க வேண்டுமானால் அதற்குமுன் அந்தச் சித்தம் சுத்தப்பட வேண்டும்! ஆரம்பத்தில் ‘கர்மங்களாலேயே இந்தச் சித்த சுத்திக்கு வழி பண்ணிக் கொள்ள முடியும்’ என்பதால்தான் ஆசாரியாள் வேத கர்மாக்களை நிலைநாட்டினார்.

***

ஏப்ரல் 21 – செவ்வாய்க்கிழமை 

பாப சிந்தனைகளைப் போக்குகிற புண்ணிய சிந்தனைதான் பரோபகாரம், சேவா மனப்பான்மை, தியாகம் எல்லாம். பொதுவாக அன்பு என்று சொல்லலாம். இந்த அன்பை சகல ஜீவ ஜடப் பிரபஞ்சத்துக்கும் மூலமான பரமாத்மாவிடம் திருப்பி விடுவதுதான் பக்தி.

***

ஏப்ரல் 22 – புதன் கிழமை

மனித வாழ்வு உள்ள வரையில் ஆசை உண்டு, துன்பம் உண்டு, பயம் உண்டு, துவேஷம் உண்டு. இவற்றிலிருந்து விடுபடுவதே மோக்ஷம். அத்வைத அநுபவத்தால்தான் பாசமும், துன்பமும், பயமும், துவேஷமும் நிவிருத்தியாகி மோக்ஷ ஆனந்தத்தை இங்கேயே அநுபவிக்க முடியும். நமக்கு அந்நியமாக இன்னொரு வஸ்து உள்ள போதுதான் அதனால் துன்பம், அதனிடம் ஆசை அல்லது பயம், அதன்மீது துவேஷம் இவை உண்டாக முடியும். இன்னொன்றே இல்லை – காண்பன எல்லாம் ஒரே பரமாத்மா – என்ற அத்வைத ஞானம் அநுபவமாக வந்துவிட்டால், அப்புறம் ஆசையும், பயமும், கோபமும், துயரமும் ஏற்பட வழி ஏது?

***

ஏப்ரல் 23 – வியாழக் கிழமை

உலகம் மாயை என்று அத்வைதம் கூறுவதற்குப் பொருள் யாதெனில், ‘உலகம் இறுதி சத்தியமல்ல! இது விவகாரத்துக்கு மட்டுமே சத்தியம்; இதனுடைய இருப்பும் பிரம்மம் என்ற ஒன்றைச் சார்ந்ததே’ என்பதுதான்; இதையே மேற்சொன்ன ஸயன்ஸ் நிபுணர்களும் சொல்கிறார்கள். பிரம்மமே பாரமார்த்திக சத்தியம், உலகம் விவகாரிக சத்தியமே என்று அத்வைதம் சொல்வதைத்தான் இவர்கள் “உலக இயக்கமெல்லாம் இன்னொன்றைச் சார்ந்தவை (“relative”) தான்; முழு உண்மை (“absolute”) அல்ல” என்கிறார்கள்.

***

ஏப்ரல் 24 – வெள்ளிக்கிழமை 

நாம் கண்ணால் மட்டுமே பார்க்கிறோம். ஒன்றை ரோஜா என்கிறோம். இன்னொன்றை ஊமத்தை என்று சொல்கிறோம். ஞானம் என்கிற அறிவால் பார்த்தால் அது ரோஜா அன்று. ஆனந்தமாகத்தான் தெரியும். ஊமத்தம் பூவும் அப்படியே தெரியும். நமக்கு ஞானம் இல்லாதபடியால் ஒன்றை ரோஜாவாகவும், மற்றொன்றை இன்னொரு பொருளாகவும் பார்க்கிறோம். உண்மையில் எல்லாம் ஆனந்தம்தான். உண்மை நமக்குப் புலப்படாததற்குக் காரணம், நமக்குச் சித்தத்தில் அழுக்கு இருப்பதும், ஒருமைப்பாடு இல்லாததும்தான்.

***

ஏப்ரல் 25 – சனிக்கிழமை 

கண்ணாடி ஆடிக் கொண்டிருந்தால், அதில் தெரியும் பிரதி பிம்பம் யதார்த்தமாக அல்லாமல் விரூபமாகத் தெரியும். ஆட்டத்துடன் அந்தக் கண்ணாடியில் அழுக்கும் இருந்தால் பிரதிபிம்பத்தில் யதார்த்த பாவமே கொஞ்சங்கூட இராது. நம்முடைய மனக்கண்ணாடி ஆடிக் கொண்டும், அழுக்குப் படிந்தும் இருப்பதால் பொருள்களை அது உள்ளபடி ஆனந்த வஸ்துவாகப் பிரதிபலிப்பதில்லை.

***

ஏப்ரல் 26 – ஞாயிற்றுக் கிழமை

தானம், தருமம், கர்ம அநுஷ்டானம், ஈசுவர நாமோச்சாரணம், ஆலய தரிசனம் முதலியவையே ஸத்காரியங்கள். பாவத்தைப் போக்குவதற்கு இவையே உபாயம். இவற்றால் பாபத்தைப் போக்கிக் கொண்டு பிறகு ஞான மார்க்கத்தில் ஈடுபட்டு, எல்லையில்லாத ஞானமாக ஆனந்தமாக ஆக வேண்டும்.

***

ஏப்ரல் 27 – திங்கட் கிழமை

ஒரே ஒரு சூரியன்தான் உள்ளது; கையிலே கொஞ்சம் ஜலத்தை எடுத்துக் கொண்டு நல்ல வழுவழுப்பான தரையில் அதைத் தெளித்தால் ஒவ்வொரு முத்து ஜலத்திலும் பிரதி ரூபமாக ஒரு சூரியன் தெரிகிறது. அவை எல்லாம் பிரிந்து பிரிந்து காணப்பட்டாலும் அநேக சூரியன்கள் இருப்பதாக ஆகாது. சூரியன் ஒன்றுதான். அவ்வாறே, உலகில் காணும் இத்தனை ஜீவராசிகளுக்குள் சிறியதாக மினு மினுக்கின்ற அறிவொளி அனைத்தும் ஒரே பிரம்மத்தின் பிரதிபலிப்புத்தான். இதைத்தான் ஸ்ரீ ஆதி சங்கராச்சார்யரவர்கள் ப்ரம்ம ஸூத்ர பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார்.

***

ஏப்ரல் 28 – செவ்வாய்க்கிழமை 

பழுத்த நிலையை அடைவதற்குமுன், மொட்டாக, பூவாக, பிஞ்சாக, காயாக இருந்துதான் முதிர வேண்டும். பழுக்கும் நிலைவரைக்கும் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும். காயாக இருக்கும்போதே பழமாவதற்கு அவசரம் காட்டி, வெம்பி விழுந்துவிட்டால் பயன் இல்லை. ‘வெம்பி விழுந்திடுமோ?’ என்று ராமலிங்கர் சொல்லுகிறார். நமக்கும் அந்தக் கவலை இருக்க வேண்டும். கனிந்த பழம் ஆகும் வரையில் பூஜை, ஜபம், தபம் எல்லாம் இருக்கவேண்டும்.

***

ஏப்ரல் 29 – புதன் கிழமை

இதை ஸ்ரீ கிருஷ்ணனே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.

‘பொம்மலாட்டப் பொம்மை மாதிரிதான் சகல பிராணிகளும்; உள்ளே இருந்து ஈச்வரனே அவற்றை ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறான்.’ [ஈச்வர: ஸர்வ பூதானாம் ஹருத் தேசே (அ) ர்ஜுன திஷ்டதி ப்ராமயன் ஸர்வ பூதானி யந்த்ரா ரூடானி மாயயா] என்கிறார்.

***

ஏப்ரல் 30 – வியாழக் கிழமை

தெருவிலே ஒரு பூமாலை கிடக்கிறது. அரை இருட்டு. எவனோ அந்தப் பக்கம் வந்தவன் அதை மிதித்துவிட்டு, “ஐயோ, பாம்பு, பாம்பு!” என்று பயத்தால் கத்துகிறான். மாலையாக இருப்பதும் பாம்பாக இருப்பதும் ஒன்றுதான். இது மாலைதான் என்று தெரிந்தவுடன், அவனுக்குப் பாம்பு இல்லை என்று தெரிந்து விடுகிறது. அதனால் முதலில் பாம்புக்கு ஆதாரமாக இருந்தது என்ன? மாலைதான்.

மாலையைப் பாம்பு என எண்ணுவதுபோல், அஞ்ஞானிகள் ஒன்றேயான பிரம்மத்தைப் பலவான பிரபஞ்சமாகப் பார்த்து மயங்குகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்துக்கு ஆதாரம் பிரம்மம்தான்.

***

BONUS QUOTES

கம்பர் சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்லுகிறார்:

‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை

அரவுஎனப் பூதம் ஐந்தும்

விலங்கிய விகாரப் பாட்டின்

வேறு பாடுற்ற வீக்கம்

கலங்குவ தெவரைக் கண்டால்

அவர் என்பர் கைவி லேந்தி

இலங்கையில் பொருதா ரன்றே

மறைகளுக் கிறுதி யாவார்.’

அலங்கல் என்றால் மாலை. அரவு என்றால் பாம்பு. ‘அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு’ – மாலையில் தோன்றும் பாம்பு என்ற பொய்யான எண்ணம். இதுபோலப் பஞ்ச பூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கமாகி மயக்குகிறதே. அது யாரைக் கண்டால் விலகிப்போய் மாலையான ஈசுவரன் மட்டும் தெரியுமோ, அந்த மாயா நாசகனான பரமாத்மாதான் ராமசந்திர மூர்த்தி என்றார்.

***

நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒரு நாள் நாம் ஆசைப்படும் வஸ்துக்கள் நம்மை விட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைவிட்டுப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை ராஜினாமா செய்து விட்டுவிட்டால், அத்தனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனை முளைகளை துக்கத்துக்கு அடித்துக்கொண்டு நம்மைக் கட்டிப்போட்டுக் கொள்கிறோம். ஆசைகளைக் குறைக்கக் குறைக்க துக்கஹேதுவுங் குறையும். இந்தப் பிறவி முடியுமுன் நாம் சகல ஆசைகளையும் விட்டுவிட்டால் மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படவே வேண்டாம்; அப்படியே பரமாத்மாவில் கரைந்து ஆனந்தமாகி விடலாம்.

***

வெளி வஸ்துக்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தேதான் ஆனந்தம் பிறக்கிறது. நமது உண்மை ஸ்வரூபமான ஆனந்தத்தை நாம் அஞ்ஞானத்தினால் மூடி மறைத்துக் கொண்டிருக்கும் நிலையில்கூட ‘நம்முடையது’ என்று ஒன்றிடம் சம்பந்தம் வைக்கும்போதுதான் அதிலிருந்து ஆனந்தத்தை அடைகிறோம். அந்த சம்பந்தம் போய் விட்டால் ஆனந்தம் போய் விடுகிறது.

***

மாயையை எப்படி உடைப்பது என்றால் ஆசைகளை அடக்குவதுதான் வழி. மனம் இருக்கும் வரை ஆசைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் மனத்தை அடக்கிவிட வேண்டும். மனம் அடங்கி விட்டால் மரண நிலையில் இருப்பதுபோல் ஒரு சக்தியுமின்றி ஜடம் மாதிரி ஆவோம் என்று எண்ணக்கூடாது. மாறாக, இதுதான் சகல சக்திகளுக்கும் ஆதாரமான நிலை. சாதாரணமாக ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீக்ஷண்யம் இருக்கும். பல வாய்க்கால்களில் ஒன்றில் ஜலத்தை அடைத்துத் திருப்பினால் இன்னொன்றில் அதிகம் நீர் பெருகுவது போல், ஓர் அங்கத்தில் ஊனம் இருப்பதே இன்னொன்றில் தீக்ஷண்யத்தைத் தருகிறது. ஆத்ம சக்தியைப் பலவாறாகச் சிதறச் செய்யும் எல்லாம் இந்திரியங்களையும் அடைத்துக் கொண்டு விட்டால், அப்போது சகல சக்திகளும் ஒரே இடத்தில் அமைதியாக, ஆனந்தமாகக் கூடி நிற்கும். மிகுந்த சக்தியுடன் உலகுக்கு நல்லது செய்யலாம்.

***

வடக்கே ஒரு நதிக்கு ‘ஸோன்’ என்று பெயர். ‘சோணம்’ என்றால் சிவப்பு. இந்த நதி சிவப்பான மண் வழியே ஓடுகிறது. ஆந்திராவில் கிருஷ்ணா நதி இருக்கிறது. ‘கிருஷ்ண’ என்றால் கறுப்பு. இந்த நதி கறுப்பு மண் மீது ஓடுகிறது. ‘கங்கை’ என்றால் வெளுப்பு. இதுவும் அது ஓடிவருகிற பிரதேசத்தைப் பொறுத்து ஏற்பட்ட பெயர்தான். மூன்றும் ஒரே சமுத்திரத்தில்தான் கலக்கின்றன. சிகப்பு ரஜோ குணம், கறுப்பு தமோ குணம், வெள்ளை ஸத்வ குணம். மனசானது முக்குணங்களில் எதில் பாய்கிறதோ, அதை ஒட்டி ஜீவாத்மாவின் சுபாவம் அமைகிறது. எப்படியானாலும், கடைசியில் பரமாத்ம சமுத்திரத்தில்தான் கலந்தாக வேண்டும்.

***

மநுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்து விட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.

வெளியில் இருக்கிற வஸ்து வந்தால்தான் சந்தோஷம், ஆனந்தம் என்று துரத்திக்கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்?***

***

உலக வாழ்வில் சகல மனிதர்களுக்கும் அளவில்லாத கஷ்டங்கள் உண்டாகத்தான் செய்யும். பணக்காரன், பெரிய பதவியில் இருப்பவன் கஷ்டமில்லாமல் இருப்பதாக மற்றவர்கள் நினைக்கலாம். அப்படி நினைத்துத் தாங்களும் அவர்களைப் போலப் பணமும் பதவியும் பெறப் பாடுபடலாம். ஆனால், பணக்காரனை, பதவியில் உள்ளவனைக் கேட்டால் தெரியும், அவனுக்கு எத்தனை கஷ்டங்களென்று. நாம் திண்ணையில் இருக்கிறோம்; விழுந்தால் சிராய்த்துக் கொள்வதோடோ, சுளுக்காவதோடோ போய்விடும். பணக்காரனும், பதவிக்காரனும் மாடிமேல் இருக்கிறான். எனவே, அவன் விழுந்தால் எலும்பெல்லாம் முறிந்து விடும்.

***

துக்கம் நம் உடன் பிறப்பு. நம் பூர்வ கர்மாவின் பயனாக இந்தத் துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதை போட்டிருக்கிறோம். இதிலிருந்து தப்ப வழி இல்லை.

ஆனால் கர்மத்தினால் ஏற்படும் கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு சாந்தமாக இருக்க வழி உண்டு. புதிதாக கர்ம மூட்டையைப் பெருக்கிக் கொண்டு எதிர் காலத்தில் கஷ்டத்தை அதிகமாக்கிக் கொள்ளாமலிருக்க வழி உண்டு. முதலில் சொன்ன ஞானம்தான் அந்த வழி.

***

யோகிக்கு அநேக துக்கம் வரும்; அதாவது ஊர் உலகத்துக்கெல்லாம் அது துக்கமாகத் தோன்றும். ஆனால் அவனுக்குத் துக்கம் லவேசமும் தெரியாது. பட்ட கட்டை மாதிரி இருப்பான். பட்ட கட்டை என்பதுக்கூடச் சரியில்லை. அது உணர்ச்சியே இல்லாத நிலை அல்லவா? யோகி ஒருத்தன் தான் பூரணப் பிரக்ஞையோடு இருக்கிறவன். அவன் ஸதானந்தமாக இருக்கிறவன். அது வேண்டும், இது வேண்டும் என்பதேயில்லாமல் சதா ஆனந்தமாக உட்கார்ந்து கொண்டிருந்து விட்டால் அதுதான் யோகம்.

***

நல்லது கெட்டதுகளில் விழுகிற மாதிரி, இச்சரீரம் போய்ச் சிரம பரிகாரம் ஆனபின், இன்னொரு சரீரத்தில் விழித்துக் கொள்கிறோம். இந்த அலைச்சல்—புனரபி ஜனனம், புனரபி மரணம்—கூடாது. இந்தச் சரீரம் போனால் இன்னொரு முறை சரீரம் வரக்கூடாது. அப்படிச் செய்து கொள்ள வேண்டும். கட்டுப்பாடு, ஒழுங்கு, பரம கருணை, தபஸ், பூஜை, யக்ஞம், தானம் எல்லாம் அதற்குத்தான்.

–SUBHAM—

TAGS- ஏப்ரல் 2026 காலண்டர்:, காஞ்சி சுவாமிகள், பொன்மொழிகள்

யாதவர்களும் கிருஷ்ணனும் அழிந்த கதை; முருகனுக்கு ஆட்டு வாகனம் ஏன் ? (Post.15,552)

Written by London Swaminathan

Post No. 15,552

Date uploaded in London – 30 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 60

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 60

உலக கண்டம் இட்டு ஆகாச மேல் விரி சலதி கண்டிடச் சேர்

ஆயம் ஆம் அவருடன் மடிந்திடக் கோபாலர் சேரியில்

மகவாயும் உணர் சிறந்த சக்ராதார நாரணன் மருக …

உலக்கையை* துண்டு துண்டாகப் பொடி செய்து ராவித் தூளாக்கி, ஆகாயம் மேலே விரிந்துள்ள நடுக் கடலில் (அப்பொடிகளைச்) சேரும்படி செய்தும், கூட்டமான ஆயர் அனைவரும் (சாபத்தின் காரணமாக) ஒருசேர இறந்து பட, இடையர்கள் வாழும் சேரியில் குழந்தையாக வளர்ந்தும், ஞானம் சிறந்த சக்ராயுதத்தை ஏந்தியும் இருந்த நாராயணனின் மருகனே,

மந்திரக் காபாலியாகிய உரக கங்கணப் பூதேசர் பாலக

வயலூரா … (ஐந்தெழுத்து) மந்திரத்தின் மூலப் பொருள் ஆனவரும்,

பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவரும், பாம்பைக் கையில் வளையாகக்

கொண்டவரும், பூதகணங்களைக் கொண்ட தலைவருமாகிய ஈசர்

சிவபெருமானின் பிள்ளையே, வயலூரில் வாழ்பவனே,

கொலை தரும் வி(ல்)லைப் போர் வேடர் கோ என இனையும்

அம் குறப் பாவாய் வியாகுலம் விடு விடு என்று கைக் கூர்

வேலை ஏவிய இளையோனே … கொலை செய்யும் வில்லைக்

கொண்டு போர் புரியும் வேடர்கள் கோ கோ என்று பேரொலி இட்டு

நெருங்க, (அதைக் கண்டு) வருந்திய வள்ளி நாயகியை நோக்கி,

வருந்துகின்ற அழகிய குறப் பாவையே, நீ வருத்தத்தை விடு விடு

என்று கூறி, தான் கையில் ஏந்திய கூர்மையான வேலை (வேடர்கள்

மீது) செலுத்திய இளையோனே,

விறல் சுரும்பு நல் க்ரீ தேசி பாடிய விரை செய் பங்கயப் பூ

ஓடை மேவிய விஜயமங்கலத் தேவாதி தேவர்கள்

பெருமாளே. … வீரம் வாய்ந்த வண்டுகள் நல்ல முயற்சியுடன் தேசி

என்னும் ராகத்தைப் பாடிடும், நறு மணம் கொண்ட தாமரைப் பூக்களைக் கொண்ட நீர் நிலைகள் உள்ள விஜயமங்கலத்தில்** வீற்றிருக்கும், தேவாதி தேவர்களின் பெருமாளே.

யாதவர்கள் தங்களுள் சாம்பன் என்பவனுக்கு கர்ப்பிணி வேஷமிட்டு, துர்வாச முனிவரை இவளுக்குப் பிறப்பது ஆணோ பெண்ணோ எனக் கேட்க, கோபமடைந்த துர்வாசர் ஓர் இரும்பு உலக்கை பிறக்கும், அதுவே யாதவர் குலத்தை அழிக்கும் என்று சபித்தார். இதை அறிந்த கண்ணன், பிறந்த உலக்கையைப் பொடியாக்கி நடுக்கடலில் கரைக்கச் செய்தான். பின்னர்

உலக்கைப் பொடி கரையிலே வந்து கோரைப்புல்லாக முளைக்க, யாதவர் தம்முள் கலகம் மூண்டதும் அப்புல்லைப் பிடுங்கி ஒருவரை மற்றவர் குத்தி இறந்தனர். இரும்புத் துண்டு ஒன்று மீனின் வயிற்றில் வளர, அம்மீனைப் பிடித்த ஒரு வேடன் அதன் வயிற்றிலிருந்த துண்டைத் தன் அம்புநுனியில் வைத்தான். கண்ணனின் இறுதி நாளன்று தூக்கி வைத்திருந்த கண்ணனின்

பாதத்தைப் பறவையென எண்ணி வேடன் அந்த அம்பை எய்தான்.

யாதவகுலத்தில் கடைசியாக எஞ்சிய கண்ணனும் பரமபதம் அடைந்தான்.

** விஜயமங்கலம் ஈரோட்டுக்கும் திருப்பூருக்கும் இடையே உள்ள ரயில் நிலையத்திலிருந்து 2 மைல் வடக்கில் உள்ளது.

***

முருகனுக்கு ஆட்டு வாகனம் ஏன் ?

சவதமொடுந் தாண்டித் தகர் ஊர்வாய் … சபதம் செய்து இந்த

ஆட்டை* அடக்குவேன் என்றுரைத்து, குதித்து ஆட்டின் மீது ஏறி

அதனை வாகனமாகச் செலுத்துவாய்.

சடுசமயங் காண்டற்கு அரியானே … ஆறு** சமயத்தவராலும்

காணுதற்கு அரியவனே,

சிவகுமர அன்பு ஈண்டிற் பெயரானே … சிவகுமாரனே, உன்னை

அன்பு கொண்டு நெருங்கினால் நெருங்கியவரை விட்டு ஒருநாளும்

பிரியாதவனே,

திருமுருகன் பூண்டிப் பெருமாளே. … திருமுருகன்பூண்டி***

என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.

நாரதர் செய்த யாகத்தில் தோன்றிய ஒரு முரட்டு ஆட்டுக் கிடாவை வீரபாகு மூலமாக பிடித்துவரச் செய்து, முருகன் அதனை அடக்கி வாகனமாகக் கொண்ட வரலாறு – கந்த புராணம்.

***

சுந்தர வாழ்வில் நடந்த அற்புதங்கள்

இதப் பட்டிடவே கமலாலய ஒருத்திக்கு இசைவான பொன் ஆயிரம் இயற்றப் பதி தோறும் உலாவிய தொண்டர் … இன்பம் அடையுமாறு திருவாரூரில் இருந்த ஒப்பற்ற காதலி பரவை நாச்சியாருக்கு ஏற்றதான ஆயிரம் பொன்னைச் சம்பாதிக்க தலங்கள்* தோறும் சென்றுதரிசித்த அடியராகிய சுந்தரர்

தாள இசைக்கு ஒக்க இராசத பாவனை உ(ள்)ளப் பெற்றொடுபாடிட வேடையில் இளைப்பு உக்கிட வார் மறையோன் எனவந்து கானில் திதப்பட்டு எதிரே … தாளத்தின் இசைக்குப்பொருந்தும்படி உறுதியான முயற்சித் தெளிவுடன் உள்ளப்பெருக்கத்துடன் தேவாரப்பதிகம் பாடி வருகையில், கோடைக் கால வெப்பத்தால் அவருக்கு ஏற்பட்ட இளைப்பு நீங்க, நேர்மையான ஒருமறையவர் கோலத்துடன், சுந்தரர் வந்து கொண்டிருந்த காட்டில் வந்து நிலையாகவே சுந்தரரின் எதிரே தோன்றி,

பொதி சோறினை அவிழ்த்து இட்ட அவிநாசியிலே வரு

திசைக்கு உற்ற சகாயனும் ஆகி மறைந்து போம் … (தாம்

கொண்டு வந்த) சோற்றுக் கட்டை அவிழ்த்துத் தந்தவரும், அவிநாசிஎன்னும் தலத்துக்கு வரும்போது, சுந்தரர் திசை தடுமாறிய சமயத்தில் அவருக்குத் திசையைக் காட்டி உதவி செய்து மறைந்து போனவரும்,

முன் செறிப்பு இத்த கரா அதின் வாய் மகவு அழைப்பித்த

புராண க்ருபாகர … முன்பு ஏரியில் இருந்த முதலையின் வாயிலிருந்து(உள்ளிருந்த) பிள்ளையைச் (சுந்தரர் பாட்டுக்கு இரங்கி) வரச் செய்த**பழையவராகிய கருணாமூர்த்தியும்,

திருப்புக் கொளியூர் உடையார் புகழ் தம்பிரானே. …

திருப்புக்கொளியூர்*** என்னும் தலத்தை உடையவருமாகிய சிவபெருமான் புகழும் தம்பிரானே.

சுந்தரர் இறைவனைப் பொன் வேண்டிய இடங்கள் திருப்புகலூர், திருப்பாசிலாச்சிராமம், திருமுது குன்றம் என்பன.

** திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது.

திருப்புக்கொளியூர் அவிநாசிக்கு மிகச் சமீபத்தில் உள்ளது.

***

சிவபெருமான் கொடு கொட்டி நடனம் ஆடிய கதை

பச்சை மா மயில் மெச்ச ஏறிய பாகா … பச்சை நிறம் கொண்டதும், அழகுள்ளதுமான மயில் மீது தேவர் முதலானோர் மெச்சும்படி ஏறிய பாகனே,

சூரா ஆகா போகாது எனும் வீரா … அடா சூரனே, ஆஹா,

அப்புறம் போகாதே (நில்) என்று சொன்ன வீரனே,

பட்டி ஆள்பவர் கொட்டி ஆடினர்* பாரூர் ஆ சூழ் பேரூர்

ஆள்வார் பெருமாளே. … (பிரமனாகிய) முனிவனுக்கு அருள்

செய்தவரும், கொடு கொட்டி என்னும் நடனத்தை ஆடினவரும், பூமியில் சிறந்த ஊராகத் திகழும் தலமும், (தேவலோகத்துப் பசு) காமதேனுவாக வந்த திருமால் வலம் செய்ததுமான பேரூரை** ஆண்டருள்பவருமாகிய சிவபெருமானுக்கு குருவாக வந்த பெருமாளே.

பிரமன் படைப்புத் தொழில் வராது வருந்திச் சிவபெருமானிடம் முறையிட, நீ பட்டி முனியாய் பேரூரில் வந்து பக்தி செய்வாயாகில் எமது நடனத்தைக் காணலாம் என்றார். திருமால் காமதேனுவாகவும், பிரமன் பட்டி முனிவராகவும் பேரூரில்

வழிபட்டு, நடராஜப் பெருமானின் கொடு கொட்டி என்ற ஆடலைக் கண்டனர்.

** பேரூர் கோயமுத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 3 மைலில் உள்ளது.

—subham—

Tags- யாதவர்களும் கிருஷ்ணனும் அழிந்த கதை, முருகனுக்கு ஆட்டு வாகனம் ஏன் ?, கொடு கொட்டி நடனம்

வண்டியை டிரைவ் செய்து கின்னஸ் ரிகார்டில் இடம் பெற்ற கோல்ட் ஃபிஷ்! (Post No.15,551)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,551

Date uploaded in London – 30 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

27-3-26 கல்கிஆன்லைன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

வண்டியை டிரைவ் செய்து கின்னஸ் ரிகார்டில் இடம் பெற்ற கோல்ட் ஃபிஷ்! அதிசயம் ஆனால் உண்மை! 

ச. நாகராஜன்

 அதிசயம் ஆனால் உண்மை!

கின்னஸ் ரிகார்டில் ஒரு கோல்ட்ஃபிஷ் இடம் பெற்று சாதனை செய்து விட்டது? அதுவும் எதற்காக என்று தெரியுமா? ஒரு வண்டியை டிரைவ் செய்ததற்காக!

என்ன உளறல் என்று நினைக்க வேண்டாம். உண்மை தான் இது!

அந்த தங்கமீனின் பெயர் ப்ளப் (BLUB). அந்த இத்தாலிய மீனை வளர்ப்பவரின் பெயர் தாமஸ் டி உல்ப்.)  (Thomal de Wolf). அவர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர். 

ஒரே ஒரு நிமிடத்தில் அதிகமான தூரத்தை நகர்தலை உணரும் ஒரு வண்டியை ஓட்டியதற்காக – டிரைவ் செய்ததற்காக -அதற்கு கின்னஸ் வோர்ல்ட் ரிகார்ட் சாதனை தரப்பட்டது. தாமஸ் ஒரு கம்ப்யூட்டர் எஞ்ஜினியர்.

அவர் அமைத்திருக்கும் தனிச்சிறப்பைக் கொண்ட கார், ஒரு வாட்டர் டேங்கைக் கொண்டிருக்கிறது. அதற்குள் நீந்தும் தங்கமீனின் இயக்கங்களால் வண்டி நகர்கிறது. அது தனது இயக்கங்களால் ஒரு நிமிடத்தில் மலைக்க வைக்கும் 12.28 மீட்டர் – 40 அடி 3.46 அங்குலம்-  தூரத்திற்கு வண்டியை நகர்த்தி இருக்கிறது. இத்தாலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘லோ ஷோ டெய் ரிகார்ட்’ என்ற நிகழ்ச்சி மிலன் நகரில் நடந்தது. அதில் பங்கு பெற்ற தாமஸ், “எனது வேலை பொதுவாகவே ஒரு போர் அடிக்கும் வேலை. ஆகவே ஏதாவது புதிதாக ஒன்றைச் செய்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்று நினைத்தேன். எனது சீரியஸான வேலையை விளையாட்டாக மாற்ற முயன்றேன்” என்றார்.

மோஷன் சென்ஸிங் கேமரா எனப்படும் நகர்தலை துல்லியமாக அறியும் கேமரா ஒன்று ப்ளப்பின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து அது நீர்த்தொட்டியின் உள்ளே எந்த திசையில் நகர்கிறதோ அந்த திசையில் காரை நகர்த்த வழி வகுத்தது. இதனால் ப்ளப் தான் காரை டிரைவ் செய்கிறது என்ற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டது.

“இப்படிப்பட்ட தொழில்நுட்ப உத்தியால் எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதை மக்களுக்கு உணர்த்தவே இதை நான் வேடிக்கைக்காகச் செய்தேன்” என்றார் தாமஸ்.

என்றாலும் இந்த ஷோவை நிகழ்த்திய ஜெர்ரி ஸ்காட்டி (Gerry Scotti)  இப்படிப்பட்ட நவீன தொழில்நுட்பமானது உடலில் குறை உள்ளவர்களுக்குப் பெருமளவில் உதவும் என்று குறிப்பிட்டார். “ஆமாம், ஆமாம். நகர முடியாதபடி உடல் இயக்கங்கள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய என்னால்  உதவ முடியும்” என்றார் தாமஸ்.

இந்த வண்டி பிரகாசமான சிவப்பு மீனால் மட்டுமே இயங்கும். ஏனெனில்

அப்போது தான் கேமரா அதன் இயக்கங்களைப் பளிச்சென்று படம் பிடிக்க

முடியும். இந்த வகையில் குட்டி ப்ளப் சிறந்த வகையில் இயங்கியதால்

அதுவே இதை இயக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டது. கின்னஸ் சாதனையில்

பெயர் இடம் பெற வேண்டுமெனில் குறிப்பிட்ட நேரத்திற்குள் தங்க மீன் ஐந்து மீட்டர் தூரத்திற்கு வண்டியை இயக்க வேண்டும். வண்டி முன்னாலோ அல்லது பின்னாலோ எந்தப் பக்கம் வேண்டுமானாலும் போகலாம். ஆனால் ப்ளப் வெற்றிகரமாக 12 மீட்டர் ஓடி அனைவரையும் மலைக்க வைத்து விட்டது. நிகழ்ச்சியாளர் ஸ்காட்டி இந்த நிகழ்ச்சியைக் காணும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் இனி எனக்கு டிரைவ் செய்யும் மீன் தான் வேண்டும் என்று அடம் பிடிக்கப் போகின்றன என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

 ரிகார்ட் சர்டிபிகேட்டைப் பெற்ற தாமஸ், “அது சரி, உலக ரிகார்டை நீ படைத்து விட்டாய் என்று ப்ளப்புக்கு நான் எப்படி புரிய வைக்கப் போகிறேன்” என்று அங்கலாய்த்தார்.

நிகழ்ச்சியைக் கண்காணித்துத் தீர்ப்பை அளித்த சோபியா கிரீனாக்ரே, “சரியான தூரத்தை நிர்ணயிப்பதற்காக ஒவ்வொரு சக்கரத்திலும் உள்ள வண்ணக் குறி தரையைத் தொட்டதா என்று நான் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியிருந்தது” என்றார்.

Purananuru Wonders 15- Ancient Tamil Encyclopaedia Part 55 ; Chozas are not Tamils! (Post.15,550)

Written by London Swaminathan

Post No. 15,550

Date uploaded in London – 29 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

 Last item was posted on –  24 February 2026; this is part 55

Ancient Tamil Encyclopaedia -Part 55; One Thousand Interesting Facts -Part 55 

***

Item 400

In Puram 36 we get two interesting details

Geography

Aan Porunai river is now called Amaravathy

Vanji of olden days is called  Karur now.

ஆன் பொருநை ஆறு – வஞ்சி நகரின் அருகில் உள்ள ஆறு, வஞ்சி – இன்றைய கரூர், ஆன் பொருநை – இன்றைய அமராவதி. 

***

Item 401

Ancient Pastime of Tamil Girls is Kazangu Aaduthal. Girls in pairs or more sit in a circle and throw the pebbles or big seeds upward and catch them before they fall on the ground. Skilful girls use more than two pebbles at the same time. This is like modern jugglery. It is the physical skill of keeping items in the air, such as balls or torches or wooden things.

In western countries, we  see jugglery in big city squares or tourist spots. In London jugglers are performing in Covent Garden.

Tamil game is like this jugglery, but they sit and do it. Jugglers stand and do it.

***

Item 402

Tamil kings had totem trees and they are protected or guarded. Cutting such trees is equal to insulting the king. Here the poet Aalathur Kizaar sings about  it. Trees and flowers occupy very important place in Tamil life.

***

JUGGLING IN PURA NANURU- KAZANGU AADUTHAL BY GIRLS

Puranānūru 36, Poet Ālathūr Kizhār sang to Chozhan Kulamutrathuu Thunjiya Killivalavan

 Young girls wearing small bangles and long, rounded

anklets filled with pebbles, are playing with gold
kalangu beans on the high mounds, crushing the white

sands on the banks of the cool Ānporunai River.

***
In his guarded palace within tall fort walls, the sounds
of protected trees chopped in his groves with axes with
long handles and blades filed sharp by a blacksmith with
strong hands, are heard. 

*** 

புறநானூறு 36பாடியவர்: ஆலத்தூர் கிழார்பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்திணை: வஞ்சிதுறை: துணை வஞ்சி
அடுநை ஆயினும், விடுநை ஆயினும்,
நீ அளந்து அறிதி, நின் புரைமை, வார் கோல்
செறி அரிச் சிலம்பின் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி ஆடும்
தண் ஆன்பொருநை வெண்மணல் சிதையக்,  5
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து,
வீ கமழ் நெடுஞ் சினை புலம்பக், காவுதொறும்
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர்
நெடுமதில் வரைப்பின் கடி மனை இயம்ப,  10
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின்
சிலைத் தார் முரசும் கறங்க,
மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே.

****

Item 403

In Puram Verse 37 sung by Nappasalai we see Five Headed Snake and the origin of Chozas. Through out Sangam literature, and in later Tamil poems we see Five Headed Snake. In nature there is no Five Headed Snake. Nowhere in the world it is recorded. Five Cows, Five Elephants or Five Headed snake represent five senses in the human body. One who has self control is lauded as a Yogi.

Five Headed Snake is in Paripatal 19-72 and

Tiruvasagam – neeththal vinnappam

***

Item 404

Chozas were not Tamils.

They came from the North Western part of India. Sibi or Shibi is in the Rig Veda and Sanskrit gramma .

Saibhya is derived from it. Saibhya is changed in to Sembian in Tamil. Chozas claim their forefathers were Mandhata, Musukunda etc. Rama also was from the same Solar Dynasty.

Story of Dove and Hawk are in Purananuru and Tamil Epic Silappadikaram. Vedas and Mahabharata have the story of Sibi.

Shibi was an ancestor of Rama, born in the Ikshvaku dynasty. He is best known for his devotion to truth and justice. To test his devotion to truth, Indra and Agni took the forms of a hawk and a pigeon respectively and went to his kingdom. The pigeon (Agni) sought refuge with the King, with the hawk in hot pursuit. The King promised the pigeon asylum, and when the hawk demanded that the pigeon be given to him as his natural food, the Shibi tried to satisfy it with the flesh  from his own body.

SIBHI STORY IN SCULPTURES

Shibi as proper name is found in many places.

Śibi (शिबि).—Inhabitants of the country called Śibi; they are called Śaibyas also.

 People of Śibi attended the Rājasūya yajña conducted by Yudhiṣṭhira with presents. (Sabhā Parva, Chapter 52, Verse 14).

 Śibi (शिबि).—A son of Dṛṣadvatī and Uśīnara known for his munificence; Parīkṣit compared to him. Knew the yoga power of Hari;1 father of Vṛṣādarbha and three other sons (ten sons, Matsya-purāṇa); gave up life in service, and attained permanent fame.2 Śivapuram was his capital;3 engaged in a sacrifice with Vasumat, Aṣṭaka and Pratardana when his grandfather Yayāti fell from heaven;4 discoursed with Yayāti about other worlds;5 went to heaven in a golden chariot;6 gifts of, to attain heaven.7

***

SIBI STORY IN INDONESIA

Item 405

The name of the poetess is Nappasalai with the prefix Na , equivalent to Su in Sanskrit. So I guess this Brahmin poetess name is Subhadra.

Na KKannai- Su Lochana

Na PPsalai – Su Bhadra or Su Patra

Na Ppinnai- Su Kundala

Sanskrit names are abundant with Su (na) as prefix: Sukeerti, Su Kanya, Su bhadra, Su Lochana, Su Varchasa , Su Neeti, Su Lakshana etc.

Some people tried to link her name with Pasalai colour that girls develop when they are love sick. But there is no basis or proof for such an assumption.

***

Item 406

City with copper walls is also unique. In Ramayana and other Puranas we come across city with golden walls. Ravana’s Lanka also had golden walls. Here we come across Copper Walls, which is very rare.

****

Puranānūru 37, Poet Mārōkkathu Nappasalaiyār sang to Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan

O heir of Chempiyan who removed the anguish of a
dove and owned a rage-filled army with bright spears!

…………………………..

ancient great city with
copper walls
, where many vicious crocodiles gather
in the darkness of the huge, deep moats and rush up and

………………………………

புறநானூறு 37பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார்பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்திணை: வாகைதுறை: அரச வாகைமுதல் வஞ்சி


நஞ்சுடை வால் எயிற்றுஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென,
விசும்பு தீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உரும் எறிந்தாங்குப்,
புள்ளுறு புன்கண் தீர்த்த வெள் வேல்,  5
சினங்கெழு தானைச் செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டு கண் அகழி,
இடம் கருங்குட்டத்து உடந்தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
கடு முரண் முதலைய நெடுநீர் இலஞ்சிச்  10
செம்பு உறழ் புரிசைச் செம்மல் மூதூர்,
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்,
நல்ல என்னாது, சிதைத்தல்
வல்லையால் நெடுந்தகை செருவத்தானே.

Notes:  The Sibi Chakravarthi story appears to have adopted by the Chozha kings as theirs.  It is referred to in Puranānūru 37, 39, 43 and 46. 

Copper Walled Cityசெம்புச் சுவர்: புறநானூறு 201 – செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, அகநானூறு 375, புறநானூறு 37 – செம்பு உறழ் புரிசை, மதுரைக்காஞ்சி 485 – செம்பு இயன்றன்ன செஞ்சுவர், நெடுநல்வாடை112 – செம்பு இயன்றன்ன செய்வுறு நெடுஞ் சுவர்.

*****

Item 407

Poet Avūr Moolankizhār says Earth is better than Heaven because there is none to give and no one to beg. It is echoed by Valluvar as well.

ஈவாரும் கொள்வாரும் இல்லாத வானத்து வாழ்வாரே வன்கணவர்

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற.

              (குறள் 213: ஒப்புரவறிதல் அதிகாரம்)

There is nothing better good than helping those who are poor and incapacitated physically even in heavenly abode of Gods, and on this earth. This is what this verse conveys.

Why is it rare even to heavenly beings? Since there is no poverty in heavens, there is none to ask alms and hence none to give either. So the pleasure of giving is not there for heavenly beings. Hence the very thought that the heaven is a pleasurable place is false.

In the chapter on “seeking alms”, (Chapter 106, verse 8) Parimelazhagar quotes, “IvArum koLvArum illAdha vAnaththu vAzhvArE vankaNavar”.  This verse says since the heavens don’t have anybody to seek alms and because of which there is none to give, the people of heavens are rude and evil people. This seems to be an extreme conclusion or simply an exalted poetic expression. That verse says, if there is no one to seek alms on this earth, it is like a lifeless wooden toy.

****

Item 408

He also praises the power of Choza king in Puram verse 38. It is a beautiful decscription.

Puranānūru 38, Poet Avūr Moolankizhār sang to Chozhan Kulamutrathu Thunjiya Killivalavan

1

If you look with rage, fire spreads.  If you look with
kindness, gold springs up.  You have the power to make
the hot sun have the moon, and the white moon to be hot.……………………….

2

Those in need believe that even for those who live in the
upper world where groves have golden flowers, there is
something that is missing, for there is no rich to give, or
poor to request. 

புறநானூறு 38பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்திணை: பாடாண்துறை: இயன் மொழி


வரை புரையும் மழ களிற்றின் மிசை
வான் துடைக்கும் வகைய போல,
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!

1


நீ உடன்று நோக்கும்வாய் எரி தவழ,  5
நீ நயந்து நோக்கும்வாய் பொன் பூப்பச்,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண்திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்,


நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த  10
எம் அளவு எவனோ மற்றே? இன் நிலைப்

2


பொலம் பூங்காவின் நன்னாட்டோரும்
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை.
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்


கடவது அன்மையின் கையறவு உடைத்து என,  15
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்
நின் நாடு உள்ளுவர், பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்தெனவே.

 FIVE HEADED SNAKE IN PURA NANURU

To be continued……………….

Tags- Item 408, Purananuru wonders 15, Tamil Encyclopaedia part 55, Heaven, Earth, Sibi, Origin of Chozas, Not Tamils,

Hinduism through 500 Pictures in Tamil and English 49; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-49 (Post.15,549)

Written by London Swaminathan

Post No. 15,549

Date uploaded in London – 29 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நவக்கிரகங்களில் கடைசி மூன்று கிரகங்களைக் காண்போம்

இதோ அவரைப்பற்றிய விவரங்கள்:-

சனீஸ்வரன்

பெயர்கள் – மந்தன்,சாயாபுத்திரன்,சூர்யபுத்திரன்,காரி,அனிலன்,முதுமகன்,

முடவன், ஊனன், பாவணன்,சஞ்சலன்,செனரி,நீலன்,கரியவன்,

மனைவிகள் – நீளா தேவி

இவளுக்கு பிறந்த குழந்தையே “குளிகன் “

எந்த நல்ல காரியங்களும், குளிகன்”நேரத்தில் செய்ய

வேண்டும் .அந்த காரியங்களைத் திரும்பத் திரும்ப செய்ய நேரிடும்

ஜேஷ்டா தேவி-

இவள் மகன் “தரித்திரன்” இவர் யாரென்று உங்களுக்கு புரிந்திருக்கும்

மந்தா தேவி-

நிறம் – கறுப்பு.ஆகையினால்தான் கறுப்பாக இருக்கும் எந்தப்

பொருளையும் அவருக்குப் பிடிக்கிறது.

வாகனம் – காகம் – கறுப்பு

தானியம் – எள் – கறுப்பு

உலோகம் – கறுப்பாயுள்ள இரும்பு

வஸ்திரம் – கரு நீலப் பட்டு அல்லது கறுப்புத் துணி

புஷ்பம் – கருங் குவளை

திசை – மேற்கு

சமித்து – வன்னி

ரத்தினம் – நீலம்

தேசம் – சௌராஷ்டிரம்

காரகன்- ஆயுள் காரகன்

ஆதிக்கம் உள்ள நட்சத்திரங்கள்- பூசம், அனுஷம், உத்ரட்டாதி

தைலம் – நல்லெண்ணெய்

ப்ரீதி செய்ய தானம் – காராம் பசு, நல்லெண்ணெய், இரும்பு

ப்ரியமான பலகாரம்- வெல்லம் கலந்த எள் உருண்டை, எள்ளும்,உளுந்தும் கலந்த சாதம்

கோவில்கள் – திரு நள்ளாறு, கொள்ளிக்காடு,திருநெல்வேலி

அருகில் உள்ள ஸ்தலங்களான,குன்னத்தூர் என்ற திரு வேங்கடநாதபுரம் , திருக்குளந்தை

என்ற பெருங்குளம், சென்னையில் உள்ள பொழிச்சலூர்,

மதுரை அருகில் உள்ள குச்சனூர்,

சென்னை மேற்கு மாம்பலத்திலுள்ள சனீஸ்வரன் கோவில்

***

ஏழரை நாட்டு சனி

ஏழரை நாட்டு சனி, முதல் இரண்டரை வருடம், மங்கு சனி, இரண்டாவது இரண்டரை வருடம்; பொங்கு சனி, மூன்றாவது இரண்டரை வருடம் இறுதிச்சனி- நடுங்க வைத்துவிடும்; அனைவரையும் சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்ந்ததினால், தண்டிப்பதில் கடுமையான நீதிபதி!!!

தண்டிப்பதில் அவருக்கு நிகர் அவர் தான்,,அவர் சிவனாக இருந்தாலும்

சரி, சொந்த சகோதரன் யமனாக இருந்தாலும்சரி……விடமாட்டார்!!!

அவர் அள்ளிக் கொடுப்பதில் வள்ளல், பிடிக்காதவர்க்கு கொள்ளி

வைக்கும் சூரர்!!!

***

ராகு கேது தோன்றிய கதை
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யார் பெரியவர்

என்று….அடிதடி சண்டை……ஆளும்கட்சி எதிர்கட்சி மாதிரி.

தேவர்கள் குரு “குருபகவானும்”, அசுரர் குரு சுக்கிர பகவானும்

பரமசிவனிடம் பஞ்சாயத்திற்குப் போனார்கள்.  இந்த மாதிரி கேஸ்களை

“டீல்”பண்ணக்கூடிய ஒரே கடவுள் மிஸடர் மகாவஷ்ணு தான்.

அவரிடம் போங்கள்” என்று “மலையேறி “விட்டார். அப்புறம் நடந்தது தான் உங்களுக்குத்ந்தெரியுமே……மந்தார மலையை மத்தாகவும்,வாசுகியை பாம்பாகவும் பாற்கடலை கடைந்தனர்,

மகாலடசுமி முதல்ஆல கால விஷம் வரை வந்தன.

அமிர்தம் வந்தவுடன் பங்கு போடுவதில் தகராறு…….

பார்த்தார் மகாவிஷ்ணு. இதை வேறு விதமாகத் தான்

“டீல்” செய்யவேண்டும், என எடுத்தார் மோகினி அவதாரம்.

அசுரர்களுக்கெல்லாம், சுரா பானம் வாங்கிக் கொடுத்து விட்டு, அமிர்தத்தைக் கரண்டியால் கொடுக்க ஆரம்பித்தார்

சுவர் பானு என்ற அசுரன் மட்டும்,  சாப்பிடாமல் இருந்தான். தேவர்கள்

ஒவ்வொருவராக அமிர்தத்தை வாங்கிக் கொண்டிருக்கும்

போது சுவர்பானுவும் குறுக்கே நுழைந்து கையை நீட்டினான்.

சூரியனும் சந்திரனும் இதைப்பார்த்து “ சத்தம் போட மகாவிஷ்ணு தனது

சக்ராயுதத்தால் சுவர்பானுவை இரண்டு துண்டாக வெட்டினார்.

தலை ராகுவாகவும், உடல் கேதுவாகவும் மாறியது.; இருவரும் மகாவிஷ்ணு காலில் விழுந்து மன்னிக்க வேண்டினார்கள். நீங்கள் அமிர்தத்தை தொட்டதினால் உங்களுக்கு அழிவு கிடையாது; ஆகையால்  கிரக பதவி கொடுக்கிறேன் என்றார்.

ராகுவின் உருவம்:  பயங்கரமான முகம் கொண்டவர், கறுப்பு ஆடை அணிந்தவர். நான்கு கைகளுடன் வாள், திரிசூலம் மற்றும் கேடயம் ஏந்தி, கறுப்பு சிங்கத்தின் மீது அமர்ந்து பவனி வருகிறார் .

கிரகணங்கள் ஏற்படும்போது சந்திர சூரியர்களி ராகு என்னும் பாம்பு விழுங்குவதாக பாமர மக்களுக்காக கதை சொல்லுவது வழக்கம்

ராகுவைத் திருப்தி செய்ய அவர் அருள் புரியும் திருநாகேசுவத்துக்குச் சென்று பாலாபிஷேகம் செய்ய வேண்டும். இது கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது . பெரும்பள்ளம் எண்ணமுமிடத்தில் கேது உள்ளார் .வேறு சில தலங்கள்- காளஹஸ்தி,  திருக்களர் , RAAMESVARAM.

ராகு – கேது என்பவை நிழல் (சாயா)  கிரகங்கள் உண்மையான கோள வடிவிலுள்ள கிரகங்கள் அல்ல 

ஏனைய விவரங்கள் –

திசை- தென் மேற்கு திசைக்கு அதிபதி

ரத்தினம்- கோமேதகம்

தானியம் – உளுந்து

ஆடை- கருப்பு நிறம்

சேமித்து- அருகு

வாகனம் – ஆடு

****

கேது

 நவகிரகங்களில் ஒன்றான கேது, ஒரு நிழல் கிரகம் . இது ஞானம், ஆன்மீக விடுதலை (மோட்சம்), பற்றற்ற தன்மையில் ஈடுபாட்டினை உண்டாக்கும் கிரகம் . அசுர வாலாகக் கருதப்படும் கேது, பெரும்பாலும் திடீர் மாற்றங்கள், ஞானம் போன்ற பலன்களைத் தருகிறார். நிழல் கிரகம்: இது ராகுவின் மறுபாதி. ராகு தலை என்றால், கேது வால்.

ஆன்மீக ஞானம்: கேது ஞானம் மற்றும் ஆன்மீக எழுச்சியைத் தருகிறார். இது ஒருவரை பொருள்சார்ந்த உலகத்திலிருந்து ஆன்மீக பாதைக்கு இட்டுச் செல்கிறது.

கேது பகவானை அமைதிப்படுத்தவும், தோஷ நிவர்த்தி பெறவும் விநாயகர் வழிபாடு சிறந்தது. கேதுவின் நட்சத்திரங்களாக அஸ்வினி, மகம், மூலம் ஆகியவை உள்ளன.

முக்கியத் தலம்- கீழப்பெரும்பள்ளம் , காளஹஸ்தி

திசை- VATAMERKU

ரத்தினம் – வைடூர்யம் / கோமேதகம்

தானியம்- கொள்ளு

வஸ்திரம் – பல நிறங்கள் உடைய ஆடை

வாகனம் – சிம்மம்

பல தலங்களில் ராகுவும் கேதுவும் ஒரே சந்நிதியில் இருக்கிறார்கள்  .

–SUBBHM—

TAGS- Hinduism through 500 Pictures in Tamil and English 49; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-௪௯, சனி, ராகு, கேது

கொங்கணச் சித்தர் செய்த அற்புதம்  பற்றி அருணகிரி நாதர் -59 (Post No.15,548)

Written by London Swaminathan

Post No. 15,548

Date uploaded in London – 29 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

திருப்புகழில் அருணகிரிநாதர் சொல்லும் அரிய செய்திகள் Part 59

திருப்புகழில் அருணகிரி நாதர் சொல் அழகும், பொருள் வளமும்- Part 59

***

விபூதி பூசாத தமிழ்நாடு

பால் அறாத் திரு வாயால் ஓதிய ஏடு நீர்க்கு எதிர் போயே …

(பார்வதி தேவியின்) முலைப்பால் மணம் நீங்காத திருவாயால் நீ

(திருஞானசம்பந்தராக வந்து) பாடிய பாடல் உள்ள ஏடு (வைகையாற்றின்) நீரை எதிர்த்துப் போகவும்,

வாது செய் பாடல் தோற்ற இரு நாலாம் ஆயிரம் சமண் மூடர்

பாரின் மேல் கழு மீதே ஏறிட … வாது செய்த பாடலுக்குத் தோற்ற

எண்ணாயிரம் சமண மூடர்கள் இப்பூமியில் கழு மேல் ஏறவும்,

நீறு இடாத் தமிழ் நாடு ஈடேறிட பாதுகாத்து … திருநீற்றை

இடாதிருந்த தமிழ் நாடு ஈடேற (திரு நீறு அனைவருக்கும் தந்து)

பாதுகாத்து,

அருளாலே கூன் நிமிர் இறையோனும் ஞாலம் ஏத்தியதோர்

மா தேவியும் ஆலவாய்ப் பதி வாழ்வாமாறு எ(ண்)ணும் … உனது

திருவருளால் கூன் நிமிர்ந்த பாண்டியன் நெடுமாறனும், உலகெலாம்

போற்ற நின்ற ஒப்பற்ற மாதேவியான (பாண்டியன் மனைவி)

மங்கையர்க்கரசியும், திருஆலவாய் என்ற மதுரையில் உள்ளவர்களும் நல் வாழ்வு அடையும்படி திருவுள்ளத்தில் நினைந்தருளிய

ஞான பாக்கிய பாலா வேலவ மயில் வீரா ஞான தீக்ஷித

சேயே … ஞான பாக்கிய பாலனே, வேலனே, மயில் வீரனே, ஞான

அறிவுரைகளைச் செய்த குழந்தையே,

காவிரி ஆறு தேக்கிய கால்வாய் மா மழ நாடு போற்றிய

பூவாளூர் உறை பெருமாளே. … காவிரி ஆறு நிறைந்து வரும்

கால்வாய்கள் உள்ள சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் உள்ள

பூவாளூரில்* வீற்றிருக்கும் பெருமாளே.

* பூவாளூர் லால்குடிக்கு அருகில் உள்ளது.

***

மலைகளுக்கு இடையே போட்டி

கண பண புயங்கமும் கங்கையும் திங்களும் குரவும் அறுகும்

குறும் தும்பையும் கொன்றையும் கமழ் சடில சம்புவும் கும்பிடும்

பண்புடைக் குரு நாதா … கூட்டமான படங்களை உடைய பாம்பும்,

கங்கை நதியும், சந்திரனும், குரா மலரும், அறுகம் புல்லும், சிறிய

தும்பையும், கொன்றை மலரும் நறுமணம் கமழும் சடையை உடைய சிவபெருமானும் வணங்கும் பெருமையைக் கொண்டுள்ள குரு நாதனே,

கன குடகில் நின்ற குன்றம் தரும் சங்கரன் குறு முனி

கமண்டலம் கொண்டு முன் கண்டிடும் கதி செய் … சிறப்பு வாய்ந்த

குடகில் உள்ள மலையினின்று வரும் காவிரி, சிவபெருமானை வழிபடும் குட்டை வடிவம் கொண்ட அகத்தியர் கொண்டு வந்த

கமண்டலத்திலிருந்து முன்பு தோன்றி வெளி வந்த*

நதி வந்து உறும் தென் கடம்பந்துறை பெருமாளே. … காவிரி

நதி வந்து பொருந்தும் தென் கடம்பந்துறையில்** வீற்றிருக்கும்

பெருமாளே.

நாரதர் சூழ்ச்சியால் விந்திய மலை மேரு மலைக்குப் போட்டியாக உயர்ந்து வழியை அடைத்தது. தேவர்கள் சிவபெருமானை வேண்ட, சிவபெருமான் காவிரியை அழைத்து ஒரு கமண்டலத்தில் அடங்கச் செய்து அகத்தியருடன் அனுப்பினார். அகத்தியர் தென் தேசத்துக்குச் சென்று காவிரியின் நீரைப் பரப்பினார்.

** திருச்சிக்கு மேற்கே உள்ள குழித்தலைக்கு வடமேற்கே 1 மைலில் உள்ளது.

***

மகாபாரதக் கதைச் சுருக்கம்

பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர் வென்றிட … தருமன் முதலாய பஞ்ச பாண்டவர்களை கெட்ட செயலைக் கொண்ட துரியோதனன் முதலிய நூற்றுவரும் வெற்றி கொள்ள,

சகுனி கவறால் பொருள் பங்கு உடை அவனி பதி தோற்றிட …

சகுனி ஆடிய சூதாட்டத்தினால் தங்கள் பொருளையும், பாகமாய் இருந்த பூமியையும், ஊர்களையும் தோற்றுப் போனதினால்,

அயலே போய்ப் பண்டையில் விதியை நினையாப்

பனிரண்டுடை வருஷ முறையாப் பல பண்புடன் …

வேற்றிடத்துக்குச் சென்று தமது பண்டைய விதியை நினைத்து,

பன்னிரண்டு ஆண்டுகள் பல விதமான விதங்களில் இருந்து,

மறைவின் முறையால் திருவருளாலே வஞ்சனை நழுவி நிரை

மீட்சியில் … அஞ்ஞாத வாசமாக (ஓராண்டு சென்றபின்) இறைவன்

திருவருளால் சபத நாள் (13 ஆண்டுகள்) முடிவு பெற, (துரியோதனால் கவரப்பட்ட) பசுக்களை மீட்டபின்,

முந்து த(ம்) முடைய மனை வாழ்க்கையில் வந்த பின் உரிமை

அது கேட்டிட இசையா நாள் … முன்பு தங்களுக்கு இருந்த இல்லற

நிலையில் வந்த பிறகு, தங்களுக்கு உரிய பாகத்தைக் கேட்க, (அதற்குத் துரியோதனன்) இணங்காத நாளில்,

மண் கொள விசையன் விடு தேர்ப் பரி உந்தினன் மருக

வயலூரக் குக … அவர்கள் பாகத்துப் பூமியைப் பெறும்படி, போரில்

அர்ச்சுனன் விட்ட தேரின் குதிரையைச் சாரதியாகச் செலுத்திய

திருமாலின் மருகனே, வயலூரில் உள்ள குகனே,

வஞ்சியில் அமரர் சிறை மீட்டு அருள் பெருமாளே. … தேவர்கள்

சிறையை மீட்டருளி, வஞ்சி எனப்படும் கருவூரில்* உறையும் பெருமாளே.

இப்பாடலில் மகாபாரத கதைச் சுருக்கத்தைக் காணலாம்.

***

கொங்கணச் சித்தர் செய்த அற்புதம்

மூலமெனக் கருடனில் ஏறி விண் பராவ அடுக்கிய மண்

பராவ அதற்கு இதம் பராவ அடுப்பவன் மருகோனே … ஆதி

மூலமே என்று கூச்சலிட்ட போது, கருடன் மேல் ஏறி, விண்ணுலகம்

போற்றவும், அடுக்காயுள்ள பதினாலு உலகங்கள் போற்றவும், அந்த

யானைக்கு வேண்டிய நன்மைகளைப் பெருகும்படி அடுத்து உதவும்

திருமாலின் மருகனே,

கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு கொங்கின்

வீர கண ப்ரிய குமரா … கொங்கண முனிவர் முதலியோரால் (பொன்)

தரப்பட்ட*3 கொங்கு நாட்டில் சுகமாக இருக்கின்ற, மணம் வீசும்

மாலைகள் அணிந்த, வீரனே, பதினெண் கணங்களும் விரும்புவனே, குமரனே,

பொன் கொங்கு உலாவு குறக் கொடி கொங்கையே தழுவி …

கொங்கு நறு மணம் வீசும் குறப்பெண்ணாகிய வள்ளியின் அழகிய மார்பகங்களை அணைந்தவனே,

செறி கொங்கு ராஜபுரத்து உறை பெருமாளே. … செழிப்பான

கொங்கு மண்டலத்தில் உள்ள ராசிபுரத்தில்*4 வீற்றிருக்கும் பெருமாளே.

 கொங்கு நாட்டில் இருந்த கொங்கணச் சித்தர் தாமிரம் முதலிய

உலோகங்களைப் பொன் செய்து விரும்பினோர்க்குக் கொடுத்தார். எனவே இங்ஙனம் கூறப்பட்டுள்ளது.

(*4) ‘ராஜபுரம்’ இப்போது ‘ராசிபுரம்’ என வழங்கப்படுகிறது. இது சேலம் ரயில் நிலையத்திலிருந்து 20 மைலில் உள்ளது.

***

கொங்கணச் சித்தர், போகரின் சீடரான பதினெண் சித்தர்களில் ஒருவர், உலோகங்களை தங்கமாக மாற்றும் இரசவாதம் (Alchemy) மற்றும் முருகப் பெருமானை நேரில் தரிசித்து வரம் பெற்ற அற்புதங்களுக்குப் பெயர் பெற்றவர்.

பொன்மயமான திருப்பதி: கொங்கணச் சித்தர் திருப்பதி திருமலையில் தவம் செய்து, முருகப் பெருமானின் அருளால் அந்த இடத்தையே தங்கமயமான பொன்னாக மாற்றினார்.

இரசவாதம்: இவர் இரும்பை தங்கமாக மாற்றும் வித்தை தெரிந்தவராக (இரசவாதம்) அறியப்படுகிறார்.

முருகன் தரிசனம்: கொங்கணப் பிரதேசத்தில் பிறந்து, போகரிடம் யோகம் மற்றும் ஞானம் பயின்ற இவர், அம்பிகை மற்றும் முருகனை வழிபட்டு அவர்களின் தரிசனம் பெற்றார்.

வாலைக் கும்மி: இவர் அருளிய “வாலைக்கும்மி” என்னும் நூல், சித்திப் பெண்களை வழிபடும் முறையையும், ஞானத்தையும் விளக்குகிறது.

சமாதி: இவர் திருப்பதி திருமலையில் சித்திரை மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் திருமலை பெருமாளின் பாதத்தில் சமாதியானார்.

திருப்பூர் மாவட்டம் ஊதியூர் மலையில் இவரது தவபீடம் உள்ளது, இது புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகும்

தோற்றிய செம்பு தராவீயம் பித்தளை சூழ்பச்சிலைச்

சாற்றுடனாக ரசங்கந் தகமிட்டுத் தந்திரமாய்

தேற்றுந் தவம்பெற்ற கொங்கணச் சித்தர்முன் செம்பொன்செய்து

மாற்றுரை கண்டது பொன்னூர்தி யூர்கொங்கு மண்டலமே

இதன் பொருள் :- செம்பு,பித்தளை முதலிய உலோகங்களுடன் பச்சிலைச் சாறு, ரச கந்தகம் முதலியன சேர்த்துப் பொன்னாக அதை மாற்றிக் காணும் கொங்கண சித்தர் வசிக்கும் ஊதியூர் மலையும் கொங்கு மண்டலத்தில் உள்ளதே ஆகும்.

தென்கரை நாட்டில் உள்ள ஊதியூர் சிவபெருமான் கொங்கணேசர் என்ற திருநாமம் கொண்டவர். இங்கு சிவபிரானின் அநுக்கிரகம் பெற்று வசித்தலால் இறைவன் திரு நாமமான கொங்கணர் என்ற பெயரைப் பெற்று வாழ்ந்து வந்தார் இந்த சித்தர்.

இராசிபுர நாட்டிலும் கொங்கண சித்தர் மலை, கொங்கண சித்தர் ஆலயம் ஆகியவை உள்ளன.

கொங்கண சித்தர் அருளிச் செய்த நூல்களாக பஞ்சபட்சி, வாதம், வைத்தியம் ஆகிய நூல்கள் உள்ளன.

—subham—

Tags- மலைகளுக்கு இடையே போட்டி கொங்கணச் சித்தர் செய்த அற்புதம்  பற்றி அருணகிரி -59, விபூதி பூசாத தமிழ்நாடு, Part 59

Swastika in Iran

Swastika shared heritage of Tehran, New Delhi: Iran Consulate

Diplomats highlight long-standing cultural, civilisational ties between nations on social media

Ajay Banerjee
Tribune News Service

New Delhi,Updated At : 02:04 AM Mar 29, 2026 IST

  • Rabindranath Tagore at the Tomb of Poet Hafez in Iran. Photo: Iranian ConsulateEmphasising Iran’s long-standing cultural and civilisational ties with India, Iranian diplomats stationed in the country are using social media to bring out anecdotes dating back to 7,000 years, including the commonality of the Hindu religious symbol, ‘Swastika’, in both culturesconsulate%2F&referer=https%3A%2F%2Fwww.tribuneindia.com%2FWithin this week, important posts on ‘civilisational-ties’ have included a picture of poet and philosopher Rabindranath Tagore visiting Iran several decades ago; and a painting depicting Zoroastrian (Parsi) religious leader Zoroaster to mark his birth anniversary.tThe Iranian consulate in Mumbai posted a picture of a 7,000-year-old rock carving in Iran showing the ancient Hindu symbol, Swastika. “The Swastika is in fact a prehistoric motif, deeply rooted in the shared cultural heritage of ancient Iran and India,” it said.It claimed that Swastika emerged from an Indo-Iranian civilisational continuum, where early Persian and Indian cultures were intertwined through language, cosmology and symbolic expression.It provided archaeological evidence on one such rock carving in ‘Loch Math’ near Birjand in eastern Iran. “A motif known as the ‘cosmic wheel’ or rotating cross has been dated back to almost 7,000 years ago,” it said.Similar engravings have been found etched into mountain stone walls across Iran from Kurdistan to Gilan and Khorasan.In parts of Khorasan and southern Iran, families would tie small wooden charms shaped like the Swastika around children’s arms. These were believed to protect against the evil eye and to promote health and well-being, the social media post said.Notably, Swastika’s symbolism continued into later periods of Iranian religious history, including during the era of Zoroastrian influence.Earlier, another post by the Consulate included a picture of Tagore with a group of Iranians. “An Indian heart finding itself in Persian verse: 1932, when Rabindranath Tagore sat in reflection at the Tomb of Hafez.”Iranian travel websites describe Hafez was the most celebrated Persian poet. His full name was Khwaja Shams-ud-Din Muhammad Hafez-e Shirazi (1320-1389). Known by his pen name Hafez, he lived and died in Shiraz. Hafez’s collection of poetry is mostly composed of short poems with mystical themes and is commonly considered to be the zenith of Persian poetry.Another social media post on the birth anniversary of Zoroaster said: “We honour his timeless message: Good (Thoughts, Words, Deeds). He elevated humanity beyond darkness and practices tied to deities that demanded human sacrifice (especially baby girls like what the US did to the schoolchildren of Minab)”.Zoroastrians or Parsis have populations in Mumbai and nearby areas. In December 2024, a high-ranking Zoroastrian priest from Iran, Mobed Mehraban Pouladi, and President of the Council of Iranian Mobeds, had visited India, a first such visit in five centuries. The Parsi community in India had hosted Pouladi.India’s Zoroastrian community, which migrated from Persia in the eighth century, has left an indelible mark on the nation. Prominent Parsi families like the Tatas, Godrejs, Wadias, Mistrys and Poonawalas have contributed significantly to India’s industrial, social and cultural development.. ***

உணவருந்தும் பழக்கத்தை விளக்கும் இடாடாகிமாஸ்! (ITADAKIMASU)(Post.15,547)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 15,547

Date uploaded in London – 29 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ஹெல்த்கேர் பிப்ரவரி 2026 இதழில் வெளியான கட்டுரை! 

உணவருந்தும் பழக்கத்தை விளக்கும் இடாடாகிமாஸ்! (ITADAKIMASU) 

ச. நாகராஜன் 

இடாடாகிமாஸ் என்பது ஒரு ஜப்பானிய வார்த்தை. இது ஒருவர் சாப்பிடும்போது எப்படி அதை ஏற்று அருந்த வேண்டும் என்ற ஜப்பானியரது பாரம்பரிய பழக்கத்தைப் பற்றி விளக்கும் வார்த்தை. 

இந்த வார்த்தையின் அர்த்தம் – நான் பணிவுடன் பெறுகிறேன் என்பதாகும்.

நமக்குக் கிடைக்கும் உணவை எப்படி அது கிடைத்தது என்பதை நினைத்து உண்ண வேண்டும். அந்த உணவு உருவாகக் காரணமான விவசாயிகள், கறிகாய் தோட்டத்தில் வேலை பார்ப்போர், சமைக்கின்றவர்,அந்த உணவு உருவாகக் காரணமான உப பொருள்கள் ஆகிய அனைத்தையும் நன்றியுடன் ஒரு கணம் உண்பதற்கு முன்னர் நினைக்க வேண்டும்.

 இந்திய பாரம்பரியமும் கூட இதை வலியுறுத்துகிறது. உணவு வகைகள் பரிமாறப்பட்டவுடன் இறைவனுக்கு நன்றி செலுத்திய பின்னரே அதை உண்ண ஆரம்பிப்பது இந்தியர்களின் பாரம்பரியப் பழக்கமாகும்.

 அன்னம் பரபிரம்மம் என்பது நமது அறநூல்கள் கூறும் தத்துவம். அதாவது அன்னமே தெய்வம்; உணவானது பிரம்மத்தின் வடிவம் என்று பொருள்.

 வீட்டிலோ அல்லது ஒரு விருந்திலோ உணவையும் அதை அளிப்பவரையும் மதிக்கும் ஒரு பண்பே இடாடாகிமாஸ். தெளிவான மனநிலை என்னும் மைண்ட்ஃபுல்நெஸ்ஸுடன் உணவருந்தும் போது அது உடலுக்கு வலிமையையும் சக்தியையும் தருவதோடு உள்ள மேம்பாட்டையும் நல்குகிறது.

 இப்படிச் சாப்பிடும் போது தேவையான அளவே நாம் சாப்பிடுகிறோம்.

சுவைத்து, அதை நன்கு ஜீரணமாகும் படி கடித்துச் சாப்பிடுகிறோம்.

உணவின் மீது கவனத்துடன் மெதுவாகச் சாப்பிடுகிறோம்.

 டிவியைப் பார்த்தவாறோ அல்லது புத்தகத்தைப் படித்தவாறோ சாப்பிடக் கூடாது. மொபைல் போனை தூர வைத்து விட வேண்டும்.

 அவசரம் அவசரமாக உணவை விழுங்கி விட்டு அரக்கப் பரக்க ஓடும் இந்த வேக யுகத்தில் ஜீரணம் சம்பந்தமான வியாதிகள் வராமல் இருக்க ஒரு நல்ல வழி இடாடாகிமாஸ்!

 உணவு சமைப்பவரும் கூட உணவு தயாரிக்கும் உப பொருள்களின் மீது கவனத்தைச் செலுத்தி சமைக்கும் முறைக்கும் முக்கியத்துவம் கொடுப்பது இந்த இடாடாகிமாஸில் தான்! 

விருந்தை உண்டு முடித்த பின்னர் இடாடாகிமஷிடா என்று சொல்லி ஜப்பானியர் உணவை முடிப்பர்.

இந்தச் சொல்லுக்கான அர்த்தம் நான் விருந்தை பெற்றுக் கொண்டேன் என்பதாகும். 

ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜப்பான் நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்போது இந்தப் பழக்கம் பிரபலமானது.

அனைவரும் உணவைப் போற்றி மதிக்கவே இந்த பிரச்சினையை சுலபமாக ஜப்பான் சமாளித்தது. இரண்டாம் உலகப் போரின் போதும் ஜப்பானியர் உணவை இடாடாகிமாஸ் பழக்கத்தின் மூலம் வெகுவாக மதித்து தேவையான அளவே மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

 புத்த மதம் பரவலாகப் பரவிய போது அனைவரும் இந்தப் பழக்கத்தை ஆரம்பித்ததாக வரலாறு கூறுகிறது. 

உலக நாடுகள் இடாடாகிமாஸ் பழக்கத்தை இப்போது பெரிதும் மதித்துப் போற்ற ஆரம்பித்துள்ளன!

***

Hinduism through 500 Pictures in Tamil and English 48; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-48 (Post.15,546)

Moon

Written by London Swaminathan

Post No. 15,546

Date uploaded in London – 28 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

நவக்கிரகங்கள் தொடர்ச்சி………………………………………..

ஒவ்வொரு கிரகத்துக்கும் உண்டான வாஹனங்கள்ஹோமத்தில் போடப்படும் தானியங்கள்உரிய நவரத்தினக் கல் முதலிய விவரங்கள் முந்திய கட்டுரையில் உள்ளன

***

சந்திரன் / திங்கள் MOON

பெற்றோர்கள் -அத்திரி மகரிஷி, அனசூயை.

மூன்று குழந்தைகளை பெற்றெடுத்தனர் அவர்கள் : சோமன், துர்வாசர், தத்தாத்திரேயன்.

சந்திரனின் அழகில் மயங்கிய தட்சனின் மகள்கள் 27 பேரும் சந்திரனையே மணந்தனர்.அந்த 27 பேர்களில் ரோகிணியிடம் மிக அன்பாக நடந்தான் சந்திரன்

அரிஸ்டாட்டில் கூறுவது- “சந்திரன் மனித உடலில் மிகுதியாக ஆதிக்கம் செலுத்துகிறது”.

சூரியனின் மாற்றத்தைப் பொறுத்தே மாதங்கள் பிறக்கின்றன.ஆனால் மாதங்களின் பெயர்களோ பௌர்ணமி எந்த நட்சத்திரத்தின் அருகில் சந்திரன் வருகிறதோ அந்த நட்சத்திரத்தின் பெயரால் அந்த மாதம் விளங்குகிறது.

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே, சந்திரன் கெட்டதும் பெண்ணாலே ! சந்திரன் ஒரு பெரும் யாகம் நடத்தினான்.எல்லா முனிவர்களும், தேவர்களும் கலந்து கொண்டனர்.தேவ குருவின் மனைவி தாரையும் கலந்து கொண்டாள். யாகம் முடிந்து குருவுடன் திரும்பாமல் சந்திரனிடையே தங்கிவிட்டாள் தாரை. கர்ப்பமானாள் தாரை!தேவர்களனைவரும் சந்திரனைக்  கண்டித்து தாரையை திருப்பி அனுப்புமாறு கேட்டனர்.

வில்லெடுத்தார் சிவன். பயந்த பிரும்மா ஒரு வழியாக “ பஞ்சாயத்து” பண்ண தாரையை அனுப்பினான் சந்திரன். குரு ஏற்றக்கொள்ள மறுத்தார்.சாபம் கொடுத்தார். அழகான குழந்தையான“ புதனை“பெற்றெடுத்தாள்.சந்திரனின் மனைவி ரோகிணியே புதனை வளர்த்தாள்.ந்தினுக்கு

“மதி”என்றும் MIND பெயர்…..இந்த மதிக்கதிபதி சந்திரனே!!!

சந்திரனுக்கு “ஔஷதி” எனப்பெயருண்டு. மருத்துவ செடிகளுக்கும். கொடிகளுக்கும், இரவில் அல்லி பூப்பதற்கும் சந்திரனே காரணம்.

சஎல்லா நாட்டினருக்கும் இதுவே காதல் தெய்வம்!

ஆங்கிலத்தில் “LUNA “ என்பார்கள் இந்த மதி கெட்டால் தமிழில் “கிறுக்கன்”என்றும் “பைத்தியம்” ஆங்கிலத்தில் “LUNATIC” என்றும் கூறுகிறார்கள்.

சந்தரனின் வேறு பெயர்கள்:

இந்து, விது,அம்புலி,பதி, நிசாகரன்,திங்கள், அலவன்,சோமன், குமுத, நண்பன்,உடுபதி, ரஜினிபதி,சசி,ஆலோன்,சகி, முயிலன்கூடு, சுதாகரன்,களங்கன்,பிறை உடுவின் வேந்தன், கலாநிதி,சுகுபராக.

சந்திரனுக்குரிய தலங்கள் :திங்களூர்திருப்பதி நவ திருப்பதிகளில் ஒன்றான வர குண மங்கைநவ கைலாசங்களில் ஒன்றான சேரன் மா தேவி,  சென்னை அருகில் உள்ள சோமங்கலம்.

***

செவ்வாய்,அங்காரகன் MARS

உஜ்ஜைனி என்ற நகரத்தில் அந்தகாசுரன் என்ற ஒருவன் சிவனை் நோக்கி தவம் புரிந்து என் இரத்தம் பூமியில் விழுந்தால், ஒவ்வொரு சொட்டிலிருந்தும், என்னை மாதிரி அசுரர் தோன்ற வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். அன்றிலிருந்து அந்த நாட்டிலிருந்த

முனிவர்களுக்கும், மக்களுக்கும் பிடித்தது பீடை. அவன் அட்டகாசம் தாங்க முடியாமல் சிவனிடம் முறையிட்டனர்.  சிவபிரான் சண்டையிடும்போது அவர் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி அந்த அசுரன் உடலிலிருந்து விழுந்த ரத்தத்தை குடிக்க, அசுரனைக் கொன்றார் சிவன். அந்த வியர்வைத்துளியை அவர் பூமா தேவியிடம் ஒப்படைத்தார். அதுவே குழந்தையாக வளர்ந்தது. குஜன் எனப் பெயர் பெற்றது.

செவ்வாய் பற்றிய மற்றொரு கதை: பரத்வாஜ முனிவர் நர்மதை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த தேவ கன்னிகையின் மீது மோகம் கொண்டதால் ஒரு குழந்தை பிறந்தது. அதை   பூமா தேவி எடுத்து வளர்த்தள் ;கு- என்றால் பூமி. ஜன்- என்றால் புத்திரன். ஆகையினால் குஜன். பூமியின் புதல்வன் செவ்வாய் என்பதன் விஞ்ஞான ரகசியத்தை இனிமேல்தான் மேலை உலகம் எழுதும். தவத்தின் மகிமையால் உடல் நெருப்பான காரணத்தால் “அங்காரகன்” எனவும் பெயர் பெற்றார்.

வேறு பெயர்கள்

செந்தீ வண்ணன்,சேய்குருதிவக்ரன்,பௌமன்,நில மகன்ஆரல்உதிரோன்மங்களன்உக்கிரன்மகா காயன்அர்த்தன்சக்தி தரன்,த னப்ரதன்லோகிதாங்கன் கிரேக்கர்களும்ரோமானியர்களும் இவரை “GOD OF வார்ஸ்” என்றும் கூறுகிறார்கள்.

செவ்வாய் ஒருவருடைய ஜாதகத்தில் நன்றாக இருந்தால்,ராணுவத்தில் உள்ள பெரிய அதிகாரிகள்,

காவல் துறையில் உள்ள பெரிய அதிகாரிகள்,

முதல் வரிசையில் உள்ள அரசியல் தலைவர்கள் ஆவர்.

சந்திரனும் செவ்வாயும் சேர்ந்து ஒருவருடைய ஜாதகத்தில் இருந்தால் அதை “சசி மங்கள யோகம்” எனக் கூறுவார்கள்.

***

mars/ mangal/kujan/angarakan

BUDHA/MERCURY

GURU/BRIHASPATI/JUPITER/VIYAAZAN

புதன் MERCURY

வித்யாகாரகன், கல்விக்குஅதிபதி அதாவது அறிவுச் சுரங்கம் ஞான காரகன் விவேகத்தின் வேந்தன்,புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஆதாரமாக இருப்பவன், கதைகளுக்கும், கவிதைகளுக்கும் உரியவன், வரும் காலத்தை கணக்கிட்டுக் கூறும் ஜோதிடத்தின் அதிபதி லாஜிக், பேச்சு, பத்திரிக்கை, போன்றவற்றுக்கு அதிபதி;  ரோமானியர்கள் இவரை “தூதுக் கடவுள்” அதாவது “மெர்குரி” என்று அழைத்தனர்.

புதனின் வேறு பெயர்கள்

கணக்கன், அறிஞன், சௌம்யன், விகட கவி, புத்தி தாதா, மதிமகன், தேர்பாகன்,அருணன், தூதுவன், சிந்தை கூரியன், சாமன், தனப்ரதன், கொம்பன்.

புதனின் வரலாறு- சந்திரன்  கிரகம் பற்றிய பகுதியில் இக்கதை கொடுக்கப்பட்டுள்ளது.

புதனுக்கு சாபம்

இமய மலையில் கௌரிதடாகம் என்ற ஒரு இடத்தில் ஆஸ்ரமம்அமைத்து கொண்டு தவ வாழ்க்கையை மேற் கொண்டார். சகல கலைகளிலும் தேர்ச்சி பெற்று அழகாக இருந்த அவரை தேவ கன்னிகை தன்னை திருமணம் செய்து கொள்ளமாறு வற்பறுத்தினாள். புதன் அவளுக்கு இணங்க மறுத்தான்.

அத் தேவகன்னிகை புதனை அலியாக மாறுமாறு சபித்தாள். புதன், நாராயணனைக் குறித்து தவம் செய்தார். நாராயணன் தோன்றி சிவனை நோக்கி தவம்செய்யச் சொன்னார். சிவன் தோன்றி அலி சாபத்தை மாற்றி மீண்டும் ஆணுருவாக திரு வெண் காடு என்னும் ஸ்தலத்திற்கு போய் அங்குள்ள மூன்று குளங்களில் குளித்து தன்னை வழிபட்டால் அலித்தன்மை நீங்கும் என்றார். புதனும் அவ்வாறு செய்து தன் அலித்தனமை நீங்கப் பெற்றார். மீண்டும் கௌரி தடாகம் அருகில் உள்ள ஆஸ்ரமத்தில் தவம் செய்ய ஆரம்பித்தார்.  சூரியனின் புதல்வனான வைவஸ்வத மனு, பத்து புத்திரர்களைப் பெற்றான். அவர்களில் மூத்த புத்திரனான இளன் புதன் ஆஸ்ரமத்தின் சற்று தூரத்தில் உள்ள கௌரிதடாகத்தில் குளித்தான்,

புதன் பற்றிய மற்ற விவரங்கள்

மனைவியின் பெயர்- இளா என்ற ஞான தேவி

மகன். புரூரவன்

அதி தேவதை – விஷ்ணு

கோத்திரம் – ஆக்னேய கோத்ரம்

தேசம் – மகத தேசம்

வாகனம் – குதிரை

திக்கு – வட கிழக்கு

ரத்தினம் – மரகதம்

மலர் -வெண் காந்தள்

தானியம்-  பச்சைப் பயறு

சமித்து – நாயுருவி

உலோகம் – பித்தளை

வேதம் – ரிக் வேத த்தின் 5-ம்பகுதி

***

குரு/ வியாழன்/ பிருஹஸ்பதி / ஜூபிட்டர் / தேவ குரு 

 தனது படைப்புத்தொழிலைச் செய்ய பிரும்மா, உதவிக்கு 9 பிரஜாபதிகளை நியமித்தார்.நவ பிரஜாபதிகள் எனப்படும் இவர்கள் பிரும்மாவின், “மானஸ புத்திரர்கள்” எனப் படுவார்கள்.இவர்களில் மிகச் சிறந்தவரும் தபஸ்வியுமானவர் “ஆங்கிரஸர்” என்ற முனிவர்!!! இவருக்கும் வசுதா என்ற இவரது மனைவிக்கும் பிறந்தவர் தான் குரு பகவான்..

இவர், நீண்ட நெடிய உருவத்தினர்.பொன்னிறமானவர்.

ஒரு கரத்தில் தண்டத்தையும், இரண்டாவது கரத்தில் கமண்டலத்தையும், நான்காவது கரம் அபயஹஸ்தத்துடனும் இருப்பவர்.இவரை வைணவர்கள்,ஹயக்ரீவராகவும, சைவர்கள் தட்சிணாமூர்த்தியாகவும் வழிபடுவதுண்டு.

இவரது வேறு பெயர்கள்:

குரு, அந்தணன், அமைச்சன்,அரசன், ஆசான், சிகண்டீசன், சீவன், சுரகுரு,தாராதிபதி, தெய்வ மந்திரி, பிருஹஸ்பதி, பீதகன், பொன்னன்,மறையோன் வேதன்..

மனைவி. தாரை

மகன்கள். பரத்வாஜன், எம கண்டன், கசன்.

நிறம் – பொன்னிறம்

வஸ்திரம் மஞ்சள் பட்டு

ஜாதி – அந்தணர்

அதி தேவதை – இந்திரன்

திசை – வட கிழக்கு

தேசம் – சிந்து தேசம்

வாகனம் – யானை

பிறந்த தேசம் – அவந்தி

பிறந்த நட்சத்திரம் – அவிட்டம்

கோத்திரம் – ஆங்கிரச கோத்திரம்

நட்சத்திரங்கள். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

தானியம் –  கொண்டக்கடலை என்ற மூக்குக் கடலை

நிவேதனம்-  தயிர் சாதம்

சமித்து – அரசு

ரத்தினம் – புஷ்ப ராகம்

உலோகம் – தங்கம்

ஸ்தலங்கள்  – திருச்செந்தூர், ஆலங்குடி, திட்டை

மதுரை அருகில் உள்ள குருவித்துறை, திருவலி தாயம் ( பாடி).

***

SUKRA/ VENUS/ VELLI ON CROCODILE

சுக்கிரன் வீனஸ் VENUS , அசுரர்  குரு

மகாபலியின் ஆணவத்தை , கொட்டத்தை அடக்க வாமனவதாரம்

எடுத்தார் ஸ்ரீ மகா விஷ்ணு . யாகத்தின் போது யார் எதைக்கேட்டாலும் தருவேன் என்ற மமதையோடு இருந்த மகாபலி மன்னனிடம், மூன்றடி மண் கேட்டார் வாமனன். வந்திருப்பவர் மகா விஷ்ணுவே என்று தெரிந்து கொண்ட சுக்கிராச்சாரியார், தானம் வார்த்து கொடுக்க கிண்டியில் உள்ள தண்ணீரைவிட மகாபலி முயற்சித்த போது, கிண்டியின் மூக்கின் நுனியை வண்டு ரூபமாக போய் அடைத்தார். இதை அறிந்த மகா விஷ்ணு ஒரு தர்பைப் புல்லை எடுத்து குத்த வண்டான சுக்கிராச்சாரின் கண் குத்தப்பட்டு குருடானது. அதிலிருந்து சுக்கிராச்சாரியாருக்கு “ஒற்றைக் கண்”தான்!

சுக்கிரன் ஜாதகத்தில் பலமில்லையென்றால்

பாலியல் நோய்களான V D முதல் AIDS வரை,சிற்றின்ப சுகமில்லாமை, குழந்தையில்லாமை,

வேறு பெயர்கள் – ப்ருகு, காப்பியன், அசுர மந்திரி,உசனன்,வெள்ளி,

பளிங்கு, சுங்கன், கவி, மழைக் கோள்,வேதாங்க பாரகன்,பிரபு

மனைவிகள் – சுக்ருதி, ஊரஜஸ்வதி

ஜாதி – பிராமணர்

கோத்திரம் – பார்க்கவ

நிறம் – வெண்மை

அதி தேவதை – இந்திரன்

திசாதிபதி – தென் கிழக்கு

வாகனம் – கருடன்

தானியம் – மொச்சை

சமித்து – அத்தி

புஷ்பம் – வெண் தாமரை

ரத்தினம் – வைரம்

உலோகம் – வெள்ளி

தேசம் – காம்போஜம்

பரிகார ஸ்தலங்கள்

சுக்கிரனே பூஜித்த ஸ்தலம் – திருநாவலூர் (பாடல் பெற்ற ஸ்தலம்)

கஞ்சனூர், ஸ்ரீ ரங்கம், நவ திருப்பதி ஸ்தலம்-தென் திருப்பேரை

நவ கைலாச ஸ்தலம் – சேந்தமங்கலம்; சென்னை – மாங்காடு, சைதையில் உள்ள வெள்ளீஸவரர்.

Line drawings shown above are taken from this beautiful book on Navagrahas

TO BE CONTINUED…………………

TAGS- Hinduism through 500 Pictures in Tamil and English 48; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்48, நவக்கிரகங்கள் தொடர்ச்சி, சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி , பிருஹஸ்பதி ,கிரகங்கள் , குரு

Hinduism through 500 Pictures in Tamil and English 47; படங்கள் மூலம் இந்து மதம் கற்போம்-47 (Post.15,545)

Budha/ Mercury

Sukra/ Venus

Written by London Swaminathan

Post No. 15,545

Date uploaded in London – 28 March 2026

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx  

Chandra and other Grahas/Planets / Thingal in Tamil

The moon is regarded as one of the grahas surrounding the sun and going round and round the mountain Meru. He is born of the sea and of sage Atri. He is said to have only face and hands , but no body. He turns towards the sun and holds white lotuses in his hands or sometimes a club and the boon conferring hand- Abhaya hasta.  He rides on a two wheeled chariot drawn by ten horses. His caste is Vaisya.

***

Mars/ Kuja/ Mangal / Sevvay in Tamil

Kuja is the son of the earth and of sage Bharadwaja; his country is Avanti. His caste is Kshatriya . He wears red garments and a crown and has four arms holding weapons Sakti and club, and the postures Abhaya and Varada hastas. He faces the sun and rides on a ram.

He is called Angaaraka, Bhauma ,Bhuumii putra and

Mahiisuta. He is also called Siva- gharmaja/born of the sweat of Siva,Gaganolmuka- the torch of the sky,

Lohita – the red, Navaarchi- the nine rayed,Chara- the spy, Rinaantaka- the ender of the debts or the patron of the debtors.

Mangala / Mars/Angaaraka

The planet Mars, is identified with Kaartikeya , the god of war. He was the son of Siva and the earth/bhu

***

Budha / Mercury / Budhan in Tamil

Budha , the son of moon is a Vaisya of the Magadha country born in the lineage of Atri. He has four arms, a yellow body and the lion vehicle. He shows in his hands the shield, club, Varada mudra and the sword. He also faces the sun.

Budha /Mercury

Wise, intelligent ; buddhisaali- brainy.

The planet mercury, is son of soma, the moon, by Rohini or by Taaraa , wife of Brihaspati. He married Ilaa, daughter of Manu Vivasvata, and ha da  son, Puruuruva. Budha was an author of a hymn in the Rig Veda. From his parents he is called Saumya and Rauhineya. He is also called Praharshana, Rodhana, Tunga, and Syaamaanga, black bodied.

The intrigue of Soma with Taaraa was the cause of a great quarrel, in which the Gods/Devas and Asuras/demons fought against each other. Brahma compelled Soma to give up Taaraa and when she was returned to her husband she was pregnant.  A son was born, who was handsome that Brihaspati and Soma both claimed him. Taaraa for long refused to tell his paternity, and so excited the wrath and nearly incurred the curse of her son. At length, upon the command of Brahma, she declared Soma to be the father, and she gave the boy name Budha.

 ***

Brihaspati /Guru /Jupiter/ Viyaazan in Tamil

Brihaspati is a Brahmana and the Guru of Devas. Born of Angiras he comes from the Sindhu country. He has either two or four arms holding the book and the rosary. He also faces the sun.

***

Kanjanur Sukra Shrine

Sukra /Venus /Velli in Tamil

He is also a Brahmana, born of Bhrigu  and a native of Bhojakata. He is the teacher/ guru of Asuras/ demons. He is seated in a golden chariot drawn by eight horses or in a silver chariot yoked to ten horses. He has two hands one of which holds a Nidhi/treasure and in the other a book. According to other authorities, he has four arms in which are seen the staff, rosary, water pot and the Varada hasta.

Sukra

The planet Sukra/ Venus is the son of Bhrigu and the priest of daityas/demons. He is also called the son of Kavi. His wife’s name was Susumaa or Sataparwa. His daughter Devayaani married Yayaati of the lunar race/ Chandra vamsa and her husband’s infidelity induced Sukra to curse him.

Sukra is identified with Ushanas, and is author of a code of law- Sukra Niti.

The Harivamsa relates that he went to god Siva  and asked for means of protecting the asuras/demons against the gods. , and for obtaining his object, he performed a painful rite, inhibiting the smoke of chaff with his head downwards for a thousand years. In his absence, the gods attacked the asuras and Vishnu killed his mother, for which deed he cursed him to be born seven times in the world of men.

Sukra restored his mother to life, and the gods being alarmed lest sukra’s penance should be accomplished, indra sent his daughter Jayanti to lure him from it. She waited upon him and soothed him, but he accomplished his penance and afterwards married her.

Sukra is known by his patronymic Bhargava and also Bhrigu. He is also called Kavi, Kaavya, the poet.

Sukra/ Venus is called

Asphujit and

Maghaabhava- son of maghaa

Shodasaansu- having sixteen rays;

Sweta- the white.

***

Sani /Sanaischara /Saturn / Sani in Tamil

Sani is a Shudra from the Saurashtra country and a descendent of Kasyapa Rishi , also facing the sun.

He is supposed to be born of the sun, to have blue garments  and to ride on a crow or vulture or in an iron chariot drawn by eight horses. He is represented with two or four arms and stands on a lotus pedestal, but is more  often found  seated with four arms., his weapons  being the arrow, trident and the bow. 

Sani

The planet Saturn/ Sani is represented as a black man in black garments. Sani was the son of sun and Chaayaa, but another statement is that he was the offspring of Balarama and Revati. He is also known as

Aara ,Kona,Kroda  and by the patronymic  Saura

His influence is evil and hence he is called Kruura-dris

Kruura lochana- the evil eyed one. He is also

Manda- the slow moving, Pangu- the lame, Sanais chara- the slow moving , Saptaarchi- seven rayed and

Asita- the dark.

***

Rahu and Ketu

Rahu and Ketu are the ascending and descending nodes , but also represented as images. Rahu is a Shudra. He is of fearful face, wears black clothes and four arms holding the sword, trident and the shield. He rides on a black lion and faces the sun.

Ketu

Ketu is also a Shudra, comes from Kusadwipa  and is born in the lineage of Jaimini. He has an ugly face , rides on a vulture and exhibits in his two arms the club and the Varada posture.

Rahu Ketu

Rahu and Ketu are in astronomy the ascending and descending node. Rahu is the cause of eclipses, and the term is used to designate the eclipse itself. He is also considered one of the Nava Grahas, as king of meteors and the guardian of the south west quarter.

Mythologically Rahu is a Daitya/demon, who is supposed to seize the sun and moon and swallow them. It is described in literature as a snake devouring sun and moon. Since it is in Sangam Tamil literature as well, the belief has been there for at least 2000 years from south to north of India.

Rahu was son of Vipachitti   and Simhika, and is called by metronymic Sainhikeya. He had four arms and his lower part ended in a tail. He was a great mischief maker, and when the gods produced amrita by churning the ocean, he assumed a disguise, and insinuating amongst them, drank some of it. The sun and moon detected him and informed Vishnu, who cut off his head and two of his arms, but as he had secured immortality, his body was placed in the stellar sphere, the upper parts, represented by a dragon’s tail, being  Ketu the descending node.

Vishnu purana says eight black horses draw the dusky chariot of Rahu .  He is called  Abhra pisacha- the demon of the sky; Bharani- bhuu- born from the asterism Bharani; Graha- the seizer; And Kabandha – the headless.

Ketu

The descending node in astronomy, represented by a dragon’s tail; also a comet or meteor .

Dhumaketu is comet. He is said to be a daanava and son of Vipachitti and Cimhikaa. He is also calle

A-kacha- hairless

Asleshaa- bhava- born of asterism aaslesha;

Munda- bald

—subham—

Tags- Nine planets, Chandra, Mangal, Budha, Guru, Sukra, Rahu, Ketu, Navagraha, Sani, Sanaischara