ராம நாம மஹிமை – 3 (Post No.12,943)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,943

Date uploaded in London –  –   22 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழாவை ஒட்டி சிறப்புக் கட்டுரைத் தொடரில் மூன்றாவது கட்டுரை!

ராம நாம மஹிமை – 3

ச.நாகராஜன்

ராம நாம மஹிமையைப் பற்றிக் கூறும் போது ஶ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் நினைவு முதலில் வருவது இயல்பே. பல நூறு கிருதிகளை இயற்றிய அவரைப் போல ராம நாமத்தின் மஹிமையை கீர்த்தனைகளால் விளக்கியவர் இருக்க முடியாது!

தஞ்சை மன்னரின் சேவகத்தை விரும்பாமல் அவர் பாடிய

கிருதி இது :

பல்லவி

நிதி சால சுகமா
ராமுனி சன்னிதி சேவ சுகமா
நிஜமுக பல்கு மனசா
நிதி சால சுகமா.ஆ..

அனுபல்லவி

ததி நவநீதக்ஷீரமுலு ருசோ – தாஸரதி
த்யானபஜந ஸுதா ரஸமு ருசோ

சரணம்
தம ஸம மநு கங்கா ஸ்நாநமு ஸுகமா கர்த்தம
துர்விஷய கூப ஸ்நாநமு ஸுகமா

மமத பந்தன யுத நரஸ்துதி சுகமா??
ஸுமதி த்யாகராஜநுதநி கீர்த்தந ஸுகமா…

பொருள் : ஓ, மனமே உண்மையைச் சொல்! செல்வம் தான் சுகமா அல்லது ராம சந்நிதி சேவை சுகமா?

தயிர், வெண்ணெய், பால் ருசியா?

தாஸரதியின் தியானம், பஜனை ருசியா?

பாவத்தைப் போக்கும் கங்கையில் குளிப்பது புனிதமா?

இந்திரிய சுகம் தேடும் துர்க்கந்தமான இவ்வாழ்வுக்கு நிகரான கிணற்று நீரில் குளிப்பது சுகமா?

அகங்காரமுள்ள மனிதர்களைப் புகழ்வது சுகமா?

அல்லது நல்ல புத்தியுள்ள தியாகராஜனால் புகழப்படும் ராம கீர்த்தனம் சுகமா?




*

தனக்கு உற்றார் உறவினர் யார் என்று அவர் கூறுவது இது:

பல்லவி

ஸீதம்ம மாயம்ம ஸ்ரீ ராமுடு3 மா தண்ட்3ரி

அனுபல்லவி

வாதாத்மஜ ஸௌமித்ரி வைனதேய ரிபு மர்த3

தா4த ப4ரதாது3லு ஸோத3ருலு மாகு ஓ மனஸா (ஸீ)

சரணம்

பரமேஸ1 வஸிஷ்ட2 பராஸ1ர நாரத3 ஸௌ1னக ஸு1

ஸுர பதி கௌ3தம லம்போ33ர கு3ஹ 1ஸனகாது3லு

4ர நிஜ பா43வதாக்3ரேஸருலெவரோ 2வாரெல்லரு

வர த்யாக3ராஜுனிகி பரம பா3ந்த4வுலு மனஸா (ஸீ)




பொருள்:

ஓ! மனமே!

சீதம்மா நமது தாயார். ஶ்ரீ ராமன் நமது தந்தை.

வாயுமைந்தன்சௌமித்திரிவினதை மைந்தன்சத்துருக்கினன்தாதைபரதன் ஆகியோர் நமக்கு சகோதரர்கள்.

பரமேசன்வசிஷ்டர்பராசரர்நாரதர்சௌனகர்சுகர்தேவர் தலைவன்கௌதமர்லம்போதரன்குகன்சனகாதியர்இப்புவியில் பாகவதர்களில் சிறந்தவர் எவரோ அவர் யாவரும் அருளுடைய தியாகராஜனின் நெருங்கிய உறவினர் ஆவர்.

*

ஶ்ரீ ராம நாமத்தின் மஹிமையைப் பற்றி அவர் கூறுகிறார்:

மனஸா!

ஶ்ரீ ராம பஜன, பர லோக ஸாதனமே

ஸ்மர, லோப, மோஹ, ஆதி பாபுலனு ஸ்மரியஞ்சதே;

ஜனன ஆதி ரோக பயாதுலசே,

ஜகமந்து கல்கு துராஸலசே,

தனய ஆதி பாந்தவுல ப்ரமசே, தகலனு ஈது

கிருதியின் பொருள்:

ஓ, மனமே!

இராம பஜனை  மறுமைக்குச் சாதனம்

காமம், பேராசை, மயக்கம் ஆகிய பாவிகளை நினையாதே..

பிறவி முதலாக நோய்கள் என்னும் பெரிய பயங்களிலும், உலகினில் ஏற்படும் தீய ஆசைகளிலும், மனைவி மக்கள் முதலாக சுற்றமெனும் திகைப்பினிலும் (ராம நாமம்) சிக்க விடாது.

*

அடுத்து 108 உபநிடதங்களில் ஒன்றும் அதர்வண வேதத்தில் வரும் 31 உபநிடதங்களில் ஒன்றாகவும் அமையும் ஸீதோபநிஷத் ஸீதையைப் பற்றிக் கூறுவதைப் பார்க்கலாம்.

தேவர்கள் பிரம்மாவிடம், ‘ஸீதா என்பது யார்? அவளுடைய ரூபம் என்ன?’ என்று கேட்டார்கள்.

அப்போது பிரம்மா கூறினார்:

மூலப்ரக்ருதி ரூபத்வாத் ஸா ஸீதா ப்ரக்ருதி:

ஸ்ம்ருதா!

மஹாமாயா அவ்யக்த ரூபிணீ வ்யக்தா பவதி!!

பொருள் : மூலப்ரக்ருதி வடிவினள் ஆதலால் அந்த ஸீதா ப்ரக்ருதி எனக் கூறப்படுகிறாள். அவ்யக்த ரூபிணியான மஹா மாயை வெளிப்படையாகத் தோன்றுகிறாள்.

ஶ்ரீ ராமஸாந்நித்ய வசாஜ்ஜகதானந்தகாரிணீ!|

உத்பத்திஸ்திதி ஸம்ஹாரகாரிணீ

ஸர்வதேஹினாம் ||

ஸீதா பகவதீஜ்ஞேயா

மூலப்ரக்ருதிஸம்ஜ்ஞிதா!

ஸர்வாதாரா கார்ய காரணமயீ மஹாலக்ஷ்மீர்-தேவேசஸ்ய

பின்னாபின்ன ரூபா சேதனாசேதனாத்மிகா

பூதேந்த்ரிய மன: ப்ராண ரூபேதி ச விஜ்ஞாயதே!

பொருள் : ஶ்ரீ ராம ஸாந்நித்ய வசத்தால் அவள் உலகிற்கு ஆனந்தமளிப்பவள். உடல் படைத்தவர்களுக்கெல்லாம் உற்பத்தி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகியவற்றைச் செய்பவள். மூலப்ரக்ருதி எனப்பட்டவளே பகவதீ ஸீதா என அறிய வேண்டும். அனைத்திற்கும் ஆதாரமான காரிய காரணமயமான மஹாலக்ஷ்மீ. தேவநாயகரினின்று பிரிந்தும் பிரியாமலும் இருக்கும் ரூபமுடையவள். சேதன, அசேதன வடிவானவள். பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள், மனம், பிராணன் எல்லாம் அவளுடைய ரூபமே என்று உணர வேண்டும்.

இன்னும் விரிவாக அடுத்தடுத்து சீதையின் முழு மஹிமையையும் விளக்கமாகக் கூறுகிறது ஸீதோபநிஷத்!

தியாகராஜ கீர்த்தனைகள் பல நூறு. அவற்றைப் படித்தால் ராம நாம மஹிமை புரியும்; ஸீதோபநிஷத்தைப் படித்தால் ஸீதையின் அவதார மஹிமை புரியும்!

***

12 நிமிடத்தில் அருமையான ராகத்தில் ராமாயணம்!

POSTED ON 21-1-2024

அனைவரும் கேட்கவேண்டிய பாடல்

FILM LAVA KUSA IN TAMIL AND TELUGU; AVAILABLE IN YOUTUBE

ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

இகபர சுகமெலாம் அடைந்திடலாமே

இந்தக் கதை கேட்கும் எல்லோருமே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே

இனிக்குது நாவெல்லாம் உரைத்திடும் போதிலே

இணையே இல்லாத காவியமாகும்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

அயோத்தி மன்னன் தசரதனின் அருந்தவத்தால்

அவன் மனைவி கௌசல்யா கைகேயி சுமித்திரை

கருவினிலே உருவானார் இராம லக்ஷ்மணர்

கனிவுள்ள பரதன் சத்ருக்னர் நால்வர்

ஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

நாட்டினர் போற்றவே நால்வரும் பலகலை

ஆற்றலும் அடைய மன்னன் வளர்த்து வந்தானே

காட்டினில் கௌசிகன் யாகத்தைக் காக்கவே

கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

கண்மணி ராமலக்ஷ்மணரை அனுப்பினனே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே

தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே

தாடகை சுபாஹுவை தரையினில் வீழ்த்தியே

தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே

பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்

பாதையில் அகலிகை சாபத்தைத் தீர்த்தபின்

சீர்பெரும் மிதிலை நகர் நாடிச் சென்றனரே

வீதியில் சென்றிடும் போதிலே ராமன்

சீதையைக் கன்னிமாட மீதிலே கண்டான்

காதலினால் இருவர் கண்களும் கலந்தன

காதலினால் இருவர் கண்களும் கலந்தன

கன்னியை வில்லொடித்து சொந்தமும் கொண்டான்

ஆணவத்தால் அறிவிழந்த பரசுராமன்

அகந்தைதனை அடக்கி ராமன் வெற்றி கொண்டான்

அரும் புதல்வன் வீரத்தைக் கண்ட மன்னன்

அளவில்லா ஆனந்த நிலையைக் கண்டான்

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஆஆஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ ஆஆஆஆஆஆ

ஆஆஆஆஆஆஆஆஆஆஆ

மன்னவன் தசரதன் கண்மணி ராமனுக்கு

மணிமுடி சூட்டவே நாள் குறித்தானே

மக்கள் யாவரும் மகிழ்வுடன் நகரையே

மகர தோரணத்தால் அலங்கரித்தாரே

மந்தரை போதனையால் மனம் மாறிக் கைகேயி

மணிமுடி பரதன் சூடி நாட்டை ஆளவும்

வனத்தில் ராமன் பதினான்கண்டுகள்
வாழவும்

மன்னனிடம் வரமது கேட்டாள்

அந்த சொல்லைக் கேட்ட மன்னர்

மரண மூர்ச்சை அடைந்த பின்னர்

ராமனையும் அழைக்கச் செய்தாள்

தந்தையுனை வனம் போகச் சொல்லி

தம்பி பரதனுக்கு மகுடத்தைத் தந்தார்என்றாள்
 சஞ்சலமில்லாமல் அஞ்சலவண்ணனும்

சம்மதம் தாயே என வணங்கிச் சென்றான்

விஞ்சிய கோபத்தால் வெகுண்டே வில்லெடுத்த

தம்பி இலக்குவனை சாந்தமாக்கினான்

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே

மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு

இளையவனும் ஜானகியும் நிழல் போல் தொடரவே

மரவுறி தரித்து ராமன் செல்வது கண்டு

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ

கலங்கி நாட்டு மக்கள் கண்ணீர் சிந்தியே

இதயங்கள் போவதென்று தடுத்தனர் சென்றே

ஆறுதல் கூறியே கார்முகில் வண்ணன்

அன்புடன் அவர்களிடம் விடையும் கொண்டானே

அன்னையும் தந்தையும் சொன்ன சொல் காக்கவே

ஐயனும் கானகத்தை நாடிச் சென்றானே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்

அன்பால் ராமபிரான் நண்பனாகினான்

கங்கைக் கரை அதிபன் பண்பில் உயர்ந்த குகன்

அன்பால் ராமபிரான் நண்பனாகினான்

பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்

பஞ்சவடி செல்லும் பாதையைக் காட்டினான்

அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

அஞ்சனவண்ணன் அங்கு சென்று தங்கினான்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை

ராமபிரான் மீது மையல் கொண்டாள்

ராவணனின் தங்கை கொடியவள் சூர்ப்பனகை

ராமபிரான் மீது மையல் கொண்டாள்

கோபம் கொண்ட இளையோன் கூரம்பால் அவளை

மானபங்கம் செய்து விரட்டி விட்டான்

தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்

ஜானகி தேவியை சிறையெடுத்தான்

தங்கையின் போதனையால் தசகண்ட ராவணன்

ஜானகி தேவியை சிறையெடுத்தான்

நெஞ்சம் கனலாகி கண்கள் குளமாகி

தம்பியுடன் தேவியைத் தேடிச்சென்றான்

ராமன் தேடிச் சென்றான்

வழியிலே ஜாடாயுவால் விவரமெல்லாம் அறிந்தான்

வாயு மைந்தன் அனுமானின் நட்பைக் கொண்டான்

ஆழியைத் தாண்டியே இலங்கை சென்ற அனுமான்

அன்னையை அசோகவனத்தில் கண்டான்

ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆஆ

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான்

ராமசாமியின் தூதன் நானடா ராவணா என்றான் அனுமான்
லங்காபுரியைத் தீக்கிரையாக்கி கிஷ்கிந்தை சென்றான்

கண்டேன் அன்னையை என்றே ராமனை சேவித்தே நின்றான்

கடலைக் கடந்து அண்ணல் வானர சேனையுடன் சென்றான்

வானர சேனையுடன் சென்றான்

விபீஷணனின் நட்பைக் கொண்டான் ராவணனை வென்றான்

வீரமாதா ஜானகி தேவியைத் தீக்குளிக்கச் செய்தான்

ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்

கற்பின் கனலைக் கனிவுடன் ஏற்று அயோத்தி நகர் மீண்டான்

கலங்கிய மக்கள் களிப்புற ராமன் அரசுரிமை கொண்டான்

அரசுரிமை கொண்டான்

ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே உங்கள்

செவி குளிரப் பாடிடுவோம் கேளுங்கள் இதையே

ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே

ஸ்ரீ ராகவம் தசரதாத்மஜம் அப்ரமேயம்
சீதாபதிம் ரகுகுலான்மயரக்ஷமீயம்

ஆஜானுபாகும் அரவிந்த தளாய தாட்ச்ம்

ராமம் நிசாசர விநாசகரம் நமாமி

இப்படி அழகுற சம்ஸ்கிருத ஸ்லோகத்துடன் பாடல் முடிகிறது.

ஒரு கோடி வசூல்; விருதுகள் பல (எஸ். நாகராஜன்)—-SUBHAM—–

Amazing Facts about Hindu’s Holiest City – Varanasi (Post No.12,942)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,942

Date uploaded in London – –   21 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

 Hindu’s Holiest City Varanasi is in Uttar Pradesh on the banks of River Ganga. It is one of the 12 Jyotirlinga Shrines.

xxxx

Varanasi, also known as Kasi (kaasi) is the oldest city in the world. Hindus believe Mahabaharata war took place just before Kali Yug which began in 3102 BCE. Kasi Kingdom and the kings famous three daughters Amba, Ambika, and Ambalika lay the foundation for the great epic. So it is known from Vedic days.

xxxx

Author Mark Twain wrote in 1897 of Varanasi,

Benares is older than history, older than tradition, older even than legend, and looks twice as old as all of them put together.

xxxx

The presiding deity is Shiva with the name Viswanath. Goddess Visalakshi is his consort.

xxxx

On Deepavali day Priceless Gold statue of Goddess Annapoorani will be displayed worship. It is preserved in the vault of Reserve Bank of India at other times.

xxxx

The name Varanasi is derived from two rivers Varuna and Asi that go around Kasi area. Foreigners corrupted the name and Varanasi became Benares. Ganges tributaries forming the city’s borders: Varuna still flowing in northern Varanasi, and Assi, today a small stream in the southern part of the city, near Assi Ghat. 

xxxx

There  are 64 Ghats according to tradition; but modern count is 84 Ghats in the River Ganges. Dasa Asvamedh Ghat is the most famous one.

xxxx

Manikarnika and Harischandra Ghat are well known because the dead bodies are half bunt there and pushed into the river.

xxxx

Great saints like Tulsidas, Kabir das are associated with Kasi.

Buddha born as a Hindu king, came and delivered his first lecture at Kasi area and that place is known as Sarnath now.

xxxx

It is one of the Seven Holy Cities of India known as Saptapuris.

अयोध्या मथुरा माया काशी काञ्ची अवन्तिका ।  पुरी द्वारावती चैव सप्तैते मोक्षदायकाः Meaning: 1: Ayodhya, Mathura, Maya (Mayapuri or Haridwar), Kashi (Varanasi), Kanchi (Kanchipuram), Avantika (Ujjain) … 2: … and Dwaravati (Dwaraka); These seven cities are giver of Moksha (Liberation) (and are called Mokshapuri).

xxxx

Muslim fanatic Aurang Zeb demolished most famous Shiva Temple and built a mosque on it. He did the same in Ayodhya and Mathura as well. Later Kasi Viswanath Temple was built by a Maratha commander after Auranga Zeb’s demolition.

xxxx

Kasi is not only a pilgrim centre but also a centre for popular silk saris .

xxxx

Scholars from all over India came to Kasi to win the famous scholars of other sects.

xxxx

Now there over 4000 places of worship in Kasi.

Gnanvapi inside a mosque is in news nowadays; it is believed fanatic Aurang Zeb buried Hindu’s holy Shivlinga there.

xxxx

Nattukkottai Chettiar community of Tamil Nadu is doing amazing service there.  “Even if Punjab Mail is delayed Sambo Shankara won’t be delayed” is the popular saying in Kasi. The community is doing Puja thrice  a day and the Puja articles are taken along the streets from their Choultry to the temple. They do it with the slogan Sambo Shankara, Sambo Shankara and hence the saying.

xxxx

Famous Durga temples are there. After Narendra Modi became Prime Minister of India, vast improvements  are done so that devotees get easy access to the temple .

xxxx

Kasi is a holy pilgrim centre for Hindus, Jains , Buddhists and Sikhs because of their saints birth or visit to it.

xxxx

Ancient Tamil inscriptions end with a curse which shows the sanctity of the place. “If anyone violates the instructions in the inscription that person will get the sin of killing a holy cow on the banks river Ganga in Kasi. This shows Cow, Ganga and Kasi are the most sacred things for the Hindus

–subham—

Tags – Amazing facts, Kasi, Varanasi, Viswanath temple,

மாயா இன மக்கள் வணங்கிய இலவம் பஞ்சு மரம் போடும் புதிர் ! (Post No.12,941)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,941

Date uploaded in London – –   21 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

இலவு காத்த கிளிபோல என்பது தமிழ் பழமொழி . பழமொழி என்று சொன்னவுடனேயே அது காலத்தால் பழமையானது என்பது வெள்ளிடை மலையென விளங்கும் . இதை செய்பா (Ceiba) என்ற பொதுப்பெயரால் அழைப்பார்கள் ஆங்கிலத்தில் SILK COTTON TREE  சில்க் காட்டன் ட்ரீ என்பர். கபோக் KAPOK என்ற பெயரும் உண்டு .

முதலில் புதிர் என்ன என்பதைக் காண்போம் . இதற்கு சம்ஸ்க்ருதத்தில் ஷால்மலி என்று பெயர் . ஷால்மலித்

த்வீபம் என்பது சப்த த்வீபங்களில் ஒன்று என்று வராஹ புராணம் இயம்புகிறது. அதுமட்டுமல்ல ; அது ஸ்வயம்புவ மனுவின் புதல்வனான பத்து புதல்வர்களில் ஒருவரான த்யுதிமான் ஆண்ட ஏழு தீவுகளில் ஒன்று என்றும் சொல்கிறது . இது பற்றிய விளக்கங்கள் வரும் இடங்களில் அந்த ஷால்மலி மரத்தை வணங்குவோர் இருக்கும் இடத்தை அப்படி அழைத்தனர் என்றும் சொல்கிறார்கள் . ஆனால் என்சைக்ளோபீடியா என்னும் கலைக் களஞ்சியங்களில் இது மத்திய அமெரிக்க, தென் அமெரிக்க மரம் என்றும் பிற்காலத்தில் ஆப்ரிக்கா வழியாக இந்தியா வந்தது என்றும் எழுதியுள்ளனர் . அது உண்மை இல்லை என்பதை தமிழ்ப் பழமொழியும் புராண விளக்கங்களும் காட்டுகினறன் ; மகாபாரதத்திலும் இந்த மரம் பற்றிய குறிப்பு இருப்பதாக ஒருவர் எழுதியுள்ளார்

Śālmalidvīpa (शाल्मलिद्वीप) is one of the seven islands (dvīpa), ruled over by Dyutimān, one of the ten sons of Priyavrata, according to the Varāhapurāṇa chapter 74. Priyavrata was a son of Svāyambhuva Manu, who was created by Brahmā, who was in turn created by Nārāyaṇa, the unknowable all-pervasive primordial being.

மாயா அல்லது மாயன் இன மக்கள் இந்தியாவிலிருந்து கலியுகத் துவக்கத்தில் தென் அமெரிக்காவுக்குச் சென்றனர் என்று நான்

 எழுதிய ஆராய்ச்சிக்கு கட்டுரையில் கூறினேன். இந்த இலவம் பஞ்சு மரம் இபோது இன்னொரு  சான்றாக வந்துள்ளது .

மாயன் மொழியில் இதை யாக்ஸ் சி Yax Che (“Green Tree” or “First Tree”) என்பார்கள் ; பச்சை மரம் அல்லது முதல் மரம் என்று பொருள். 

இந்த மரப் பிரிவில் மூன்று வகை மரங்கள் இருக்கின்றன. வெப்ப மனதளக் காடுகளில் 230 அடி உயரம் வரை வளரும்; அதன் பட்டையில் முட்கள் இருக்கும். இதுதான் மாயா மக்கள் வணங்கும் மரம். மேற்கு ஆப்பிரிக்கப் புல்வெளிகளில் இதைவிடச் சிறிய மரம் வளர்கிறது. அதன் பட்டையில் முட்கள் இராது . மூன்றாவது வகை மரத்தை வர்த்தக ரீதியிலேயே பயிரிடுகிறார்கள் . இதன் காய்கள்தான் பஞ்சு உற்பத்திக்குப் பயன்படுகிறது ; தலையணை , மெத்தை ஆகியவற்றில் இலவம் பஞ்சினை அடைகிறார்கள் . கம்போடியாவிலுள்ள அங்கோர்வட்டில் பெரிய கோவில்களை (Cambodia’s Angkor Wat _வளைத்துப் பிடிக்கும் மரங்கள்தான் இவை . மரத்தின் அடிப்பகுதி பரந்தும் விரிந்தும் காணப்படும்

The Ceiba tree (Ceiba pentandra and also known as the kapok or silk-cotton tree) is a tropical tree native to North and South America and Africa. In Central America, the ceiba had great symbolic importance to the ancient Maya, and its name in the Mayan language is Yax Che (“Green Tree” or “First Tree”).

இது பூக்கும் நேரத்தில் மரத்தை நோக்கி வௌவால்களும் பட்டுப்பூச்சிகளும் தேனீக்களும் படையெடுக்கும் . அதிலுள்ள தேனினை உறிஞ்சிக் குடிக்க அவைகள் வருகின்றன. ஒவ்வொரு மரமும் தினமும் உற்பத்தி செய்யும் தேனின் அளவு 2 லிட்டர் ஆகும்.

இந்துக்கள் அரச மரத்தை எப்படி பிரம்மா, விஷ்ணு சிவன் என்று வழிபடுகிறார்களோ அதேபோல மாயா இனத்தினரும் இந்த மரத்துக்கு மூன்று தொழில்களைக் கற்பிக்கிறார்கள். வேர்ப்பகுதி பாதாள லோகத்தையும் நடுப்பகுதி பூலோகத்தையும் மேல்பகுதி சொர்க்கத்தையும் குறிக்கும் மரம் இது என்பது அவர்களின்  நம்பிக்கை.

மாயா இனமக்கள் இந்துக்களைப் போல மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டவர்கள்; கபோக மரத்தில் தொங்கும் கொடிகள் மூலம் இறந்தோரின் ஆவிகள் விண்ணுலகத்துக்குச் செல்வதாகவும் நம்பினர் .

xxxx

வணிக , மருத்துவ உபயோகம்

ஆப்பிரிக்காவில் இதன் மரத்தை பிளைவுட் டாகப் பயன்படுத்தி பெட்டிகள் தயாரிக்கிறார்கள்  இளம் மொட்டுக்களை வெண்டைக்காய் போல உணவாகப் பயன்படுத்துகிறார்கள் .

குவாத்திமாலா  போர்ட்டோரிக்கோ, ஈக்வடோரியல் கினி ஆகிய  நாடுகளில் இதைதேசீய மரமாக அறிவித்துப் பாதுகாக்கிறார்கள் ; யாரும் அவைகளை வெட்ட முடியாது. வியட்நாமின் சைகோன் நகரத்தின் பெயர் இந்த மரத்தின் வியட்நாமியச் சொல்லில் இருந்து பிறந்தது.

இந்த மரத்தின் பட்டையைக்கொண்டு தயாரிக்கும் கஷாயம் (Ceiba pentandra bark )  உடம்பில் நீர் கட்டாமல் தடுக்கவும், காம இச்சைகளைப் பெருக்கவும் தலைவலி, நீரிழிவு நோய்களைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது .

xxxx

எண்ணெய்

இதன் காய்களை நசுக்கி எடுக்கும் எண்ணெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.  பருத்திக்கொட்டை எண்ணெய் போன்றது ;ஆனால் காற்றுப்பட்டால் விரைவில் கெட்டு விடும் . இதில் அயோடின் சத்து அதிகம் ; எளிதில் உலராது. வருங்காலத்தில் எரிபொருளாகவும் பெயிண்ட் செய்யவும் பயன்  படலாம் .

–subham— 

 tags- மாயா இன மக்கள்,   இலவம் பஞ்சு மரம்,   புதிர், கபோக், செய்பா 

QUIZ காஞ்சிபுரம் 40 QUIZ- PART 1 (Post No.12,940)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,940

Date uploaded in London – –   21 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

பொதுவாக நான் 10 கேள்விகளை மட்டும் கேட்பேன் ; ஆனால் 

முன்னர் QUIZ காஞ்சி பத்து QUIZ என்ற பெயரில் பத்து கேள்விகளை வெளியிட்டேன்; இப்போது காஞ்சிபுரம் பற்றி மட்டும் நாற்பது  கேள்விகளைக் கேட்பதற்குக் காரணம் காஞ்சி பரமாசார்யார் , உலகப் புகழ்பெற்ற வரலாற்று, தொல்பொருள் அறிஞர் டாக்டர் இரா நாகசாமி போன்றோர்  இந்த நகரம் பற்றி நிறைய சொல்லியுள்ளனர் ; இந்த நகரம் சிவ காஞ்சிவிஷ்ணு காஞ்சிஜைன காஞ்சி என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது என்று காஞ்சி பரமாசார்யார் (1894-1994) குறிப்பிட்டுள்ளார்  பொதுவாகத் தமிழ் மன்னர்கள் சேர, சோழ, பாண்டிய  மன்னர்கள் படையெடுத்தால் எதிரி மன்னனின் ஊரையே  அழித்து, கழுதை பூட்டி ஏர் உழுது, கொள்ளும் எள்ளும் விதைப்பர் என்று சங்க இலக்கியம் விளம்பும் . ஆனால் ஒரு  மன்னன் காஞ்சியின் அழகைக்கண்டு இதைக் கொஞ்சமும் தொடக்கூடாது என்று உத்தரவிட்டான் என்பார் அறிஞர் நாகசாமி . ஆகையால் 40 கேள்விகளில் இந்த நகரத்தைக் காண்போம்.

1 .காஞ்சியில் எந்தக் கோவிலில் ஆழ்வார் பாடல் பெற்ற நான்கு வைணவ தலங்கள் உள்ளன ?

XXXX

2.காஞ்சிபுரத்திலும் அதைச் சுற்றியும் எத்தனை பாடல்பெற்ற திவ்ய தேச தலங்கள் இருக்கின்றன ?

XXXX

3.காஞ்சி உலகலந்தப் பெருமாள் கோவில் அர்ச்சகராக இருந்தவர் திருக்குறளுக்கு எழுதிய உரையே பத்துப் பேர் எழுதிய உரைகளில் சிறந்தது என்று உலகமே போற்றுகிறது ;அவர் பெயர் என்ன ?

xxxx

4.சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. புஷ்பங்களில் ஜாதி முல்லை/மல்லிகை சிறந்ததுபுருஷர்களில் பெரியவர் விஷ்ணுபெண்களில் சிறந்தவர் ரம்பாநகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம். இதை காளிதாசர் செய்ததாகச் சொல்லுவர். அது என்ன ஸ்லோகம்?

xxxx

5.சேர,சோழ,பாண்டிய நாடுகள் வாரிசையில் காஞ்சி எந்த நாட்டைச் சேர்ந்தது அதன் சிறப்பு என்ன?

xxxxx

6. காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலை அறியாதோர் இல்லை அங்கு அன்னைக்கு எத்தனை கரங்கள்அவற்றில் என்னென்ன இருக்கின்றன ?

Xxxx

7. காமாட்சி சந்நிதியில் உள்ள லெட்சுமி யார் ?

xxxx

8.அப்பர்சுந்தரர்திருநாவுக்கரசர்ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவன் கோவிலின் பெயர் என்ன ஏன் அந்தப் பெயர் வந்தது?

xxxxx

9.பஞ்ச பூத ஸ்தலங்களில் இங்குள்ள லிங்கம் எந்த வகை லிங்கம் ?

XXXX

10.முக்தி தரும் ஏழு  ஸ்தலங்களில் காஞ்சியும் ஒன்று அதன் பழைய  தமிழ்ப் பெயர் என்ன அதற்குக்  காரணம் என்ன?

xxxx

விடைகள்

1.பெரிய காஞ்சிபுரம், பகுதியில் உலகலந்த பெருமாள் கோவில் உள்ளது. அதில் ஊரகம், நீரகம், காரகம், கார்வானம் என்ற 4 பாடல் பெற்ற தலங்கள் அடக்கம்.

XXXX

2.ஒரு கோவிலுக்குள் நுழைந்தால் 4 திவ்ய தேச தலங்களைத் தரிசிக்கலாம். காஞ்சிபுரத்தை வலம் வந்தாலோ 14 திவ்ய தேசங்களைத் தரிசித்துவிடலாம்.

XXXX

3.அவர் பெயர் – பரிமேல் அழகர் ; உரை எழுதிய பத்துப் பேர் :-

தருமர் மணக்குடையர் தாமத்தர் நச்சர்

பரிலேழகர் பருதி – திருமலையர

மல்லர் கவிப் பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்

கெல்லையுரை செய்தா ரிவர்

1)தருமர் 2) மணக்குடவர் 3) தாமத்தர் 4) நச்சர் 5) பரிமேலழகர் 6) பருதி 7) திருமலையர் 8) மல்லர் 9) கலிப்பெருமாள் 10) காளிங்கர் ஆகிய பத்துப் பேரே திருக்குறளுக்கு உரை எழுதினார்கள் ..

XXXX

4.पुष्पेषु जाती पुरुषेषु विष्णुर्नारीषु रम्भा नगरीषु काञ्ची ।

नदीषु गंगा नरपेषु रामः काव्येषु माघः कवि कालिदासः ॥

“ புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு

நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி “

“Pushpeshu jati, purusheshu Vishnu

Naarishu Rambha, Nagareshu Kanchi.”

சிலர் இன்னும் ஒரு வரியையும் சேர்ப்பர் ;

नदीषु गंगा नरपेषु रामः काव्येषु माघः कवि कालिदासः ॥

நதீஷு கங்கா, நரசேஷு ராமஹ காவ்யேஷு மாகஹ கவி காளிதாஸஹ ; அதாவது அவர் ஒருவர் மட்டுமே புலவர் ; ஏனையோர் புலம்பர்  .

XXXX

5.தொண்டை நாடு;

வேழ முடைத்து மலைநாடு, மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து – பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை

நன்னாடு சான்றோர் உடைத்து—என்றார் ஒளவையார்

XXXX

6.காமாக்ஷி தேவி   வடிவத்திலும், ஸ்ரீ சக்ர வடிவத்திலும் சதுர் (4) புஜங்களோடு  காயத்ரி மண்டபத்தில் கொலு வீற்றிருக்கிறாள்.காமாக்ஷியின் நான்கு கரங்களில் ஒன்றில் கரும்பினால் ஆன வில்லும் இன்னொன்றில் புஷ்பங்களால ஆன அம்புகளும் உண்டு. மீதி இரு கரங்களில் பாசமும் அங்குசமும் உண்டு. காமாட்சி சந்நிதி 24 தூண்கள் உள்ள காயத்ரீ மண்டபத்தில் அமைந்துள்ளதையும் காயத்ரீ மந்திரம் 24 அக்ஷரங்களால் அமைக்கப்பட்டுள்ளதையும் அனைவரும் அறிவர்.

XXXX

7.காமாட்சி கோவில் கர்ப்பக்கிரகத்தில் அரூபலட்சுமி இருக்கிறாள்.

கருவறையின் வலது புறத்தில் கள்வர் என்ற பெயரில் திருமால்/விஷ்ணு  இருக்கிறார்.  அதேபோல காயத்ரீ மண்டபத்தின் இடது புறத்தில் அரூப லெட்சுமி சந்நிதி இருக்கிறது. இங்கு வினோதமான ஒரு நடைமுறை பின்பற்றப்படுகிறது.அங்கு அம்பாள் பிரசாதமான குங்குமம் இருக்கும். அதைக் கீழேயிருந்து எடுத்து மேலிருந்து கீழாகத் தடவ வேண்டும் . ஏனென்றால் ,

மஹா விஷ்ணுவின் சாபத்தால் உருவமிழந்த லெட்சுமி தேவி , காமாட்சியைப் பிரார்த்தித்து , உருவம் பெற்றாளாம் . அதாவது காமாட்சியின் குங்குமத்தை லெட்சுமியின் மீது தடவும்போது அவள் உருவம் பெறுவாள் என்று காமாட்சி அனுக்கிரஹித்தாள் . அதை இன்றும் எல்லோரும் பின்பற்றுகிறார்கள்

XXXX

8. ஏகாம்பரேஸ்வரர்  கோவில் அல்லது ஏகாம்பர நாதர் கோவில் . இதன் தமிழ் அர்த்தம் ஒற்றை மாமரக் கடவுள் . கயிலாயத்தில் சிவன் கண்களை பார்வதி விளையாட்டாக மூடினாள் ; ஊக்கமே இருண்டுபோனது ; இதனால் கோபம் அடைந்த சிவன், அவளை பூமியில் தவம் செய்து  திரும்பி வா என்று அனுப்பினார் ; அவர் காஞ்சியில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் (ஒற்றை மாமரக் கடவுள்) மணலால் லிங்கம் செய்து வழிபட்டார். வெள்ளம் வந்த போதும் அதை அழியாமல் பாதுகாத்தார் . இப்போதும் மா மரமே தல விருட்சம்.

XXXX

9. மண்ணால் ஆனதால் இது பிருத்வீ லிங்கம் என்று அழைக்கப்படுகிறது . ஆகையால் இதற்கு அபிஷேகம் கிடையாது

XXXX

10.கச்சி என்பதே பழைய பெயர்; இது தில்லை , மருதம் போன்ற மரங்களால் ஏற்பட்ட தலப்பெயர்கள் போல காஞ்சி மரத்தால் வந்த பெயர். காஞ்சி என்ற சொல் மருவி கச்சி ஆனது .

XXXX

Tags- QUIZ காஞ்சிபுரம் 40,  PART 1 , பரிமேலழகர் , கச்சி, காமாட்சி , அரூப லெட்சுமி , ஏகாம்பரேஸ்வரர் , மாமரம் , பிருத்வீ லிங்கம்

ராம நாம மஹிமை – 2 (Post No.12,939)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,939

Date uploaded in London –  –   21 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழாவை ஒட்டி சிறப்புக் கட்டுரை!

ராம நாம மஹிமை – 2

ச.நாகராஜன்

ராமதாபினீ உபநிடதம் விளக்கும் ராமநாம மஹிமை!

நூற்றெட்டு உபநிடதங்களில் ஒன்றான ராமதாபினீ உபநிடதம் ராம நாம மஹிமையைப் பற்றி நன்கு விளக்குகிறது.

இது அதர்வண வேதத்தில் உள்ள 31 உபநிடதங்களில் ஒன்று.

இதில் உள்ள சில பகுதிகளை இங்கு பார்க்கலாம்.

ஶ்ரீ ராமபூர்வதாபின்யுபநிஷத் என்ற முதல் பகுதியில் வருவது:

யதைவ வடபீஜஸ்த்த: ப்ராக்ருதச்ச மஹாத்ரும:!

ததைவ  ராமபீஜஸ்த்தம் ஜகதேதச்சராசரம் ||

பொருள் : எப்படி ஒரு ஆலின் விதையில் ப்ராக்ருதமான ஆலமரம் உறைகிறதோ, அப்படித்தான் ராம என்னும் பீஜத்தில் இந்த சராசர ப்ரபஞ்சம் உறைகிறது.

ஶ்ரீ ராமோத்தரதாபின்யுபநிஷத் என்ற இரண்டாம் பகுதியில் வருவது:

ஓம் யோ வை ஶ்ரீ ராமசந்த்ர: ஸ பகவான் அத்வைத ப்ரமானந்தாத்மா பூர்ப்புவஸ்தஸ்மை வை நமோ நம: |

பொருள் : எவர் ஶ்ரீ ராமச்சந்திரரோ அவர் தான் பகவான். இரண்டற்ற பரமானந்த ஆத்மா. பூலோகம், புவர்லோகம், ஸுவர்லோகம் எல்லாம். அவரை மீண்டும் நமஸ்கரிக்கிறேன்.

நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள்

பன்னிரெண்டு ஆழ்வார்கள் அருளிய பாடல்களில் ராமரைத் துதித்துப் போற்றும் பாடல்கள் ஏராளம் உள்ளன.

நாலாயிர திவ்ய ப்ரபந்தத்திலிருந்து சில பாடல்கள்:

ஶ்ரீ குலசேகர ஆழ்வார் அருளிச் செய்த பெருமாள் திருமொழியில் வரும் பாடல்:

மன்னுபுகழ்க் கௌசலைதன் மணி வயிறு வாய்த்தவனே!

தென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்து வித்தாய்

செம்பொன்சேர் கன்னி நன் மாமதிள் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே!

என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ.

                           பாடல் எண் 719, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

பாராளும் படர்செல்வம் பரத நம்பிக்கே அருளி

ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!

சீராளும் வரைமார்பா! திருக்கண்ணபுரத்து அரசே!

தாராளும் நீண் முடி என் தாசரதீ! தாலேலோ!

                           பாடல் எண் 723, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!

அற்றவர்க்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!

கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்து என் கருமணியே!

சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!

                           பாடல் எண் 724, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

ஶ்ரீ திருமழிசைப்பிரான் அருளிச் செய்த திருச்சந்த விருத்தம்

ஊனில் மேய ஆவி நீ உறக்கமொடு உணர்ச்சி நீ

ஆனில்மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ

வானினோடு மண்ணும் நீ வளங் கடற் பயனும் நீ

யானும் நீ அதன்றி எம்பிரானும் நீ இராமனே!

                           பாடல் எண் 845,  நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

ஶ்ரீ திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த பெரிய திருமொழி

பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்

இரவும் நன் பகலும் துதிசெய்ய நின்ற இராவணாந்தகனை எம்மானை

குரவமே கமழும் குளிர்பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால்

இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத திருவல்லிக்கேணி கண்டேனே

                           பாடல் எண் 1077, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

Picture shows PM Narendra Modi’s Ramayana Shrines Tour.

நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி

நீள்கடல் சூழ் இலங்கைக் கோன் தோள்கள் தலை துணி செய்தான்

தாள்கள் தலையில் வணங்கி நாள்கடலைக் கழிமினே

                           பாடல் எண் 2736, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

எந்தாய்! தண்திரு வேங்கடத்துள் நின்றாய்! இலங்கை செற்றாய்!

மராமரம் பைந்தாள் ஏழுருவ ஒருவாளி கோத்த வில்லா!

கொந்தார் தண்ணந் துழாயினாய்! அமுதே! உன்னை என்னுள்ளே குழைத்த எம் மைந்தாற்

வானேறே! இனியெங்குப் போகின்றதே?

                           பாடல் எண் 2848, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?

புற்பா முதலாப் புல் எறும்பு ஆதி ஒன்றின்றியே

நற்பால் அயோத்தியில் வாழும் சராசம் முற்றவும்

நற்பாலுக்கு உத்தனன் நான்முகனார் பெற்ற நாட்டுளே!

                           பாடல் எண் 3381, நாலாயிர திவ்ய ப்ரபந்தம்

***

To be continued……………………………….

Amazing Facts about Ujjain (Post No.12,938)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,938

Date uploaded in London – –   20 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

Not many people know that the earliest Tamil reference to Ujjain is in Tamil epic Silappadikaram that is 2000  year old . Later Saivite saint Appar sang about it in Thevaram that is 1400 year old. But Sanskrit references are 1000 older than Tamil references .

xxxx

Not many people know that Ujjain is mentioned as Avantika in the Saptapuri Sloka/couplet. It is mentioned there that Avantika is one of the Seven holy cities which will help one to attain  liberation from the birth and death cycle.

In the Seven Holy Cities sloka/couplet it is called Avantika, not Ujjain.

अयोध्या मथुरा माया काशी काञ्ची अवन्तिका ।  पुरी द्वारावती चैव सप्तैते मोक्षदायकाः Meaning: 1: Ayodhya, Mathura, Maya (Mayapuri or Haridwar), Kashi (Varanasi), Kanchi (Kanchipuram), Avantika (Ujjain) … 2: … and Dwaravati (Dwaraka); These seven cities are giver of Moksha (Liberation) (and are called Mokshapuri).

xxxx

Not many people know that Ujjain’s longitude time is the IST. Ujjain is in Madhya Pradesh on the banks of River Shipra.

xxxx

World famous poet Kalidas in his Megaduta Kayva, tells the Cloud Messenger not to miss Ujjain and its famous temple.

xxxx

Not many people know that Emperor Asoka was the Governor of Ujjain when his father ruled India. After him came the greatest emperor Vikramaditya who defeated all the foreign invaders and started new era.

xxxx

Maha kaleswar Shiva temple of Ujjain is one of the 12 Jyotirlinga Shrines.

xxxx

Hindus were well versed in Geography, map reading and astronomy and they rightly chose Ujjain as the middle point of India and built temple exactly on the longitude and called it  Temple of God of Mr Time (Kaala +Eswara). It is like Greenwich.

Not many people know the greatest astrologer and astronomer Varaha Mihira is from this city.

xxxx

Not many people know Jai Singh in the 18th century built five stone observatories called Jantar Mantar  in 5 towns and one of them is in Ujjain.

xxxx

World’s largest festival Kumbh Mela is celebrated in Prayag every 12 years; in between three Kumbh Melas are held in Nasik, Ujjain, Haridwar in 4 year interval.

Amrit that was churned out from ocean fell in these 4 places when flying Garuda stole part of it.

xxxx

The temple has Five Stories and five Sabha Mantaps. The idol of Mahakaleshwar is known to be Dakshinamurthi, which means that it is facing the south.  The idol of Omkareshwar Mahadev is consecrated in the sanctum above the Mahakal shrine. The images of GaneshParvati and Karttikeya are installed in the west, north, and east of the sanctum sanctorum. To the south is the image of Nandi, the vehicle of Shiva. The idol of Nagchandreshwar on the third storey is open for darshan only on the day of Nag Panchami. The temple has five levels, one of which is underground.

xxxx

Maa Harsiddhi temple is just a 2-minute walking distance from Baba Mahakal temple. Maa Harsiddhi is one of the most sacred Shaktipeeths in India.
The evening aarti is the best attraction at the temple, but there is not much space to accommodate the crowd. It’s better to enter the temple before the Aarti starts.

xxxx

There are famous Maha Kali Temples associated with Vikramaditya and Kalidas. Bhairava has got a separate temple with his Dog Vahana.

xxxx

Tags- Ujjain, Facts, Mahakaleshwar, Jyotirlinga, Saptapuri, Jantar Mantar, Maha Kali, Temple

QUIZ உஜ்ஜைனி பத்து QUIZ (Post   No.12,937)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,937

Date uploaded in London – –   20 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

உஜ்ஜைனி பத்து

QUIZ SERIAL No.97

1.உஜ்ஜைனி நகரம் எந்த மாநிலத்தில் எந்த நதியின் கரையில்  உள்ளது ?

xxxx

2.இந்த நகரில் இந்துக்கள் கண்டுபிடித்த அதிசயம் என்ன ?

xxxx

3.அயோத்யா, மதுரா , காசி முதலிய இந்துக் கோவில்களை மத வெறி கொண்ட முஸ்லீம் மன்னன்  ஒளரங்க சீப்  இடித்து மசூதிகளைக்  கட்டினான்.உஜ்ஜைனி சிவன் கோவிலை அழித்த  மஹா பாவி  யார்?

xxxx

4.தற்போதுள்ள சிவன் கோவிலை யார் எழுப்பினார் ?

Xxxx

5.இந்துக்கள் எளிதில் மோக்ஷம் அடைய உதவும் ஸ்தலங்கள் ஏழு ; அவற்றில் உஜ்ஜைனியும் ஒன்று . இதைச் சொல்லும் ஸ்லோகத்தில் உஜ்ஜைனியின் பெயர் என்ன?

XXXX

6.தமிழ் இலக்கியத்தில் உஜ்ஜைனி நகரம் எங்கே குறிப்பிடப்படுகிறது?

xxxx

7.உஜ்ஜைனியுடன் நெருங்கிய தொடர்புடைய உலகப் புகழ்பெற்ற புலவர் யார் ?

XXXX

8.உஜ்ஜைனியுடன் நெருங்கிய தொடர்புடைய உலகப் புகழ்பெற்ற சக்ரவர்த்தி யார் ?

XXXX

9.உஜ்ஜைனி நகரில் உள்ள சிவபெருமானின் பெயர் என்ன ?

XXXX

10.உஜ்ஜைனி கோவிலில் வேறு என்ன சந்நிதிகளைத் தரிசிக்கலாம் ?

xxxx

Jantar Mandar in Ujjain ( Observatory) 

விடைகள்

1.மத்தியப் பிரதேச மாநிலத்தில் , சிப்ரா ஆற்றங்கரையில் உஜ்ஜைனி உள்ளது.

xxxx

2. உஜ்ஜைனி இந்துக்களின் கிரீனிச் ஆகும். இந்தியாவின் மத்திய தீர்க்க ரேகை இதன் வழியாகத்தான் செல்கிறது  இதை வைத்தே இந்திய பொது நேரம் கணக்கிடப்படுகிறது . புகழ்பெற வான சாஸ்திர மேதை வராஹமிஹிரர் வாழ்ந்த இடம். இன்றும் பழங்களை வான சாஸ்திர ஆராய்ச்சி நிலையங்களைக் காணலாம்.

Xxxx

3. மதவெறி பிடித்த முஸ்லீம் மன்னன் சுல்தான் ஷம்ஸ்-உத்-தின் இலுட்மிஷ்,1234-5ல் உஜ்ஜைனைத் தாக்கி, ஜோதிர்லிங்கத்தை  கோவி லுக்கு அருகிலுள்ள ஒரு குளத்தில் வீசிவிட்டான் .

xxxx

4. மராட்டிய படைத் தளபதி  ரனோஜி ஷிண்டே 1734 இல் புதிய கட்டிடத்தைக் கட்டி னார் . மகாத்ஜி ஷிண்டே (1730–12 பிப்ரவரி 1794) மற்றும் தௌலத் ராவ் ஷிண்டேயின் மனைவி பைசா பாய் திருப்பணி செய்தனர் .

Xxxx

5. ‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா புரீ த்வாராவதீசைவ சப்தைதா: மோக்ஷதாயிகா’

அவந்திகா =உஜ்ஜைனி

முக்திதரும் ஏழு தலங்கள்:- அயோத்தி, மதுரா, மாயா(ஹரித்வார்), காசி(வாரணாசி), காஞ்சி, அவந்திகா(உஜ்ஜைனி),துவாரகா.

XXXX

6.சிலப்பதிகாரத்தில் இந்திரா விழவூரெடுத்த காதையில் அவந்தி வேந்தன் தோரண வாயிலும் என்பதில் அவந்தியென்பதை உரைகாரர்கள் உஞ்சை / உஜ்ஜைனி என்று விளக்கியுள்ளனர் . தேவாரத்தில் வைப்புத் தலமாக வைத்து அப்பர் பாடியுள்ளார் ; இதனை உஞ்சேனை என்று திருநாவுக்கரசர் தேவாரத்திலும் உஞ்சை என்று  பெருங்கதை நூலிலும் காணலாம் . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் போற்றிய சிவன் கோவில் இது.

xxxx

7.காளிதாஸ் ;

மேகத்தைத் தூதுவிடுவதாக அமைக்கப்பெற்ற மேகதூதம் என்ற காப்பியத்தில், மகாகவி காளிதாசன், மேகத்தை நோக்கி, “ விந்திய மலைக்கு வடக்கே செல்லும் “மேகமே, நீ செல்லும் வழியிலிருந்து சற்று விலகியிருந்தாலும், அவந்திகா நகரையும், அங்கு எழுந்தருளியுள்ள ஈசனையும் காணத் தவறாதே. ஒருவேளை நீ காணாவிட்டால் கண் பெற்ற பயனை அடைய மாட்டாய்” என்று சொல்வதாக அமைத்துள்ளது.

XXXX

 8.விக்ரமாதித்தன் . அதற்கு முன்னர் அசோகன் ; அவரது தந்தை மவுரிய சந்திர குப்தன் ஆண்ட போது, அசோகன் உஜ்ஜைனி நகர கவர்னராக இருந்தார்  ..

XXXX

9.மகாகாலேஸ்வரர் .

XXXX

10. கோவில் மூலத்தானம் மூன்று அடுக்குகளைக் கொண்டது. தரைமட்டத்துக்கு கீழேயும் ஒரு கருவறை அமைந்துள்ளது.  முதன்மைக் கருவறையானது பெரிதாக வட்டவடிவில் உள்ளது. அதில் மாகாளர் பெரிய லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். மகாகாலேஸ்வரர் கருவறைக்கு மேலுள்ள அடுத்த கருவறையில் ஓங்காரேஸ்வரர் சிலையைத் தரிசிக்கலாம்   அதற்கடுத்த மூன்றாவது தளத்தில் நாகசந்திரேஸ்வரர் சிலை உள்ளது. கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் பரிவார தெய்வங்களாக பிள்ளையார், பார்வதி, கார்த்திகேயன் பைரவர் ஆகிய கடவுளர் உள்ளனர். தென்புறம் நந்தி சிலை உண்டு.

பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் இங்கு மட்டும் சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் உள்ளார்.

ஐந்து தளங்களுக்கும், ஐந்து சபா மண்டபங்களும், கோபுரத்தில் பல கலசங்களைக் கொண்ட இவ்வாலயத்தின் உயரம் 88 அடிகளாகும்.

ஆலயத்தினுள்ளே காணப்படும் புஷ்கரணிக்கு கோடி தீர்த்தம் என்று பெயர். நான்கு மூலைகளிலும் பெருங்கிணறுகள் கொண்ட இக்குளத்தின் நீரின் நிறம் காலத்துக்கு ஏற்ப மாறி மாறி வருகிறதாம்.

XXXX

Bonus questions

11.உஜ்ஜைனிநாசிக்ஹரித்துவார் பிரயாகையில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் விழா எது ?

xxxx

11.பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது.

xxxx

12.‘உஜ்ஜைன் அடையாளம்‘ (Ujjain symbol) என்பது  என்ன ?

xxxxx

12. இந்த இடத்தில்  அகழ்வாராய்வுகளின்போது கண்டெடுக்கப்பட்ட  நாணயங்களில் ஒரு குறிப்பிட்ட குறி இடப்பட்டுக் காணப்பட்டதால், அதற்கு ‘உஜ்ஜைன் அடையாளம்‘ என்று பெயரிட்டனர்.  ‘உஜ்ஜைன் அடையாளம்‘ எனப் பெயரிட்டவர் ஆய்வாளரான A. Cunningham ஆகும்.

 XXXX

13. நகரில் பார்க்க வேண்டிய ஏனைய கோவில்கள் எவை?

XXXX

13.உஜ்ஜைனியில் உள்ள முக்கியக் கோயில்கள்:

விக்கிரமாதித்தனுக்கு அருளிய காளி நகருக்கு உள்ளும் , காளிதாசனுக்கு அருள் செய்த காளி ஊருக்கு 2 கி. மீ. வெளியிலும் கோவில் ( ஹர்சித்தி மாதா கோவில் ) கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள்.. இவளே விக்கிரமாதித்தனுடன் நேரிடையாகப் பேசியதாகவும் காளிதாசனை மகா கவியாக ஆக்கியவள் என்றும் உலகம் போற்றுகிறது. விக்கிரமாதித்தனுக்கு அருளிய காளியை ஹரசித்தி மாதா என்றும் அழைக்கிறார்கள்.

காசியைப்போலவே இங்கும் பைரவருக்கென்று தனிக் கோயில் உள்ளது. அவருக்கு எதிரில் நாய் வாகனம் காணப்படுகிறது.

:மகா கணபதி கோவில்  ;

ஸ்ரீ கோபால் மந்திர்: மற்றும் ஓங்காரேசுவரர், அகலேசுவரர், ரிண முக்தேசுவரர், மங்களேசுவரர், ஆகியோரது சன்னிதிகளையும், கிருஷ்ணனின் குருவான சாந்தீப ரிஷியின் ஆசிரமம் இருந்த இடத்தையும்பர்த்ருஹரியின் குகையையும் தரிசிக்கலாம்.

XXXX

14.உஜ்ஜைனியிலும் வானியல் ஆராய்ச்சிக்கூடம் உள்ளதா ?

XXXX

ஜந்தர் மந்தர் என்னும் பழைய ஆராய்ச்சிக் கட்டிடம் உள்ளது. ஜந்தர் மந்தர் (Jantar Mantar) என்பது, புவியின் அச்சுக்கு இணையாகச் செம்பக்கம் கொண்ட பிரம்மாண்ட செங்கோண முக்கோணவடிவக் கோல் அமைக்கப்பட்டதொரு பகலிரவு சமன்கொண்ட சூரிய மணிகாட்டி ஆகும். சூரியன் மற்றும் கிரகஙகளின் நிலையைக்  கணக்கிட இது உதவும் .

18 ம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரில் ஜெய் சிங் அரசரால் ஐந்து ஜந்தர் மந்தர்கள் கட்டப்பட்டன. அவை புதுதில்லி, ஜெய்ப்பூர், உஜ்ஜைன், மதுரா மற்றும் வாரணாசியில் அமைந்துள்ளன.

XXXX subham XXXX

Tags- உஜ்ஜைனி பத்து ,QUIZ SERIAL No.97, ஜந்தர் மந்தர், மகாகாலேஸ்வரர், அவந்திகா, கோவில்

ராம நாம மஹிமை – 1 (Post No.12,936)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,936

Date uploaded in London –  –   20 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழாவை ஒட்டி சிறப்புக் கட்டுரை!

ராம நாம மஹிமை – 1

ச.நாகராஜன்

அயோத்தியில் 2024 ஜனவரி மாதம் 22ஆம் தேதி மாபெரும் உற்சவம் நடைபெற இருக்கிறது.

ராமர் கோவிலில் ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது.

வரலாற்றில் மகோன்னத சிறப்பைக் கொண்டிருக்கும் இந்த தெய்வீகத் திருவிழா உலக மக்கள் அனைவருக்கும் நலத்தைத் தரும்.

500 ஆண்டுகளாக பக்தர்கள் கனவு கண்டு அதற்காகப் பாடுபட்ட இந்தக் கோவிலில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படும்  விழா ஹிந்துக்களுக்கு ஒரு புத்துணர்ச்சியையும் எழுச்சியையும் தரும் என்பதில் ஐயமில்லை.

ராமரே இதற்கென படைத்தது போல் இன்று பிரதமராக இருக்கும் திரு நரேந்திர மோடியின் அயராத உழைப்பும் ஈடுபாடும் அர்ப்பணிப்பு மனப்பான்மையும் போற்றுதற்குரியது.

மக்கள் இதற்கு உற்சாகத்துடனும், பக்தியுடனும், ஆவேசத்துடனும் தரும் ஒத்துழைப்பு வரலாறு காணாதது.

இது இந்த பாரத தேசத்தின் மக்களின் திருவிழாவாக ஆகி விட்டது.

இந்த நேரத்தில் ராமரின் உறுதிமொழியையும், ராம நாம மஹிமை பற்றி மகான்கள் அருளிய சில அருளுரைகளையும் காண்போம்.

ராமரின் உறுதி மொழி

सकृर्देव प्रपन्नाय थवास्मॆति च याचते

अभयं सर्वभूतेब्यो ढढाभ्येतत् व्रतं मम

Sakrud eva prapannaaya tavaasmeeti ca yaacate lAbhayam sarva bhootebhyo dadaamyetad vratam ma-ma ll

ஸக்ருʼதே³வ ப்ரபன்னாய தவாஸ்மீதி ச யாசதே |
அபயம்ʼ ஸர்வபூதேப்யோ த³தா³ம்யேதத்³ வ்ரதம்ʼ மம ||

(வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம் 18.34)

 “நான் உன்னைச் சேர்ந்தவன்” என்று ஒருமுறை கூறி விட்டால் என்னிடம் வந்து அடைக்கலம் புகுவோர் யாராயினும்அவர்களுக்கு உலகத்தின் அனைத்து உயிர்களிடமிருந்தும் அபயம் அளிப்பேன். இதுவே எனது விரதம்”.

ராம நாம மஹிமை

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்

கவிச் சக்கரவர்த்தி கம்பர் – கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14

நாடிய பொருள் கை கூடும் ஞானமும் புகழும் உண்டாம்

வீடு அயல் வழியுமாக்கும் வேரியன் கமலை நோக்கும்

நீடிய அரக்கர் சேனை நீறு பட்டு அழிய வாகை 

சூடிய சிலை இராமன் தோள் வலி கூறுவோர்க்கே

–    கவிச் சக்கரவர்த்தி கம்பர்

பொருள் :

பெரும் அரக்கர் சேனை சாம்பலாகி அழித்து வெற்றி பெற்ற வில்லைக் கொண்ட இராமன் தோளின் ஆற்றலைக் கூறுவோர்க்கு

நாடிய செல்வம் வந்து சேரும். ஞானம், புகழ் உண்டாகும். முக்திப் பேறு அடைய வழி வகுக்கும். தேன் நிறைந்த தாமரையில் இருக்கும் லக்ஷ்மி தேவி நோக்குவாள். 

***

ஆயிரம் திரு நாமங்களுக்குச் சமம்

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் சிவபிரான் கூறுவது:

ஶ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே

ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஶ்ரீ ராம நாம வரானனே

**

ராம நாம மணி தீப தரு : துளஸிதாஸரின் தோஹா

राम-नाम-मनि-दीप धरु, जीह देहरी द्वार।

‘तुलसी’ भीतर बाहिरौ, जौ चाहसि उजियार॥

Rama nama mani deepa dharu.

  Jih dehri dwar

Tulsi Bhitar Bhararo,

   Joo Chahasi Ujiyar

பொருள் : ராம நாமத்தை நாவில் வைத்து உச்சரித்தால் எப்படி வீட்டின் வாயிலில் வைத்திருக்கும் விளக்கு வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் வெளிச்சத்தைத் தருமோ அது போல உடலின் உள்ளேயும் வெளியேயும் நன்மையை நல்கும்.

அதாவது இகலோக க்ஷேமமும் பரலோக க்ஷேமமும் கிடைக்கும் என்பது பொருள்.

**

சாகா வரம் அருள்வாய் : பாரதியார் வேண்டுதல்

பல்லவி

சாகாவர மருள்வாய், ராமா!                        சதுர்மறை நாதா! சரோஜ பாதா

சரணங்கள்

1. ஆகாசந் தீகால் நீர்மண்                                அத்தனை பூதமும் ஒத்து நிறைந்தாய்,                ஏகாமிர்த மாகிய நின் தாள்                            இணைசர ணென்றால் இது முடியாதா?

2. வாகார்தோள் வீரா, தீரா,                              மன்மத ரூபா, வானவர் பூபா                            பாகார் மொழி சீதையின் மென்றோள்                 பழகிய மார்பா! பதமலர் சார்பா!                             

3. நித்யா, நிர்மலா, ராமா,                                 நிஷ் களங்கா, சர்வா தாரா,                                     சத்யா, சநாதநா, ராமா,                                  சரணம், சரணம், சரண முதாரகா!

         ***     தொடரும்

மாணவர்கள் சாப்பிட வேண்டியது வல்லாரைக் கீரை! வல்லாரை ஏற்றுமதி தகவல்!! (Post.12,935)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,935

Date uploaded in London – –   19 JANURARY 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

(இந்தக் கட்டுரை எழுதும் லண்டன் சுவாமிநாதன், இரண்டு முறை ரிஷிகேஷ், ஹரித்வார் சென்றவர் . மதுரையில் உள்ள  ரிஷிகேஷ் சிவானந்தா  சுவாமிஜியின் தெய்வ நெறிக்  கழகத்தில் வாரம்தோறும் பஜனை செய்தவர் . மதுரை சொக்கப்ப நாயக்கன் தெருவில் இருக்கும் ரமண மஹரிஷியின் வீட்டில் சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்துவிட்டு,  மாடியிலுள்ள சிவானந்தா புஸ்தக்கடையில் வல்லாரை சிரப் Syrup , வல்லாரை மாத்திரை வாங்கி சாப்பிட்டவர் . அத்தோடு மதுரையில் வாரம் இரண்டு முறை நடந்த புகழ்பெற்ற சந்தையில் வல்லாரைக் கீரை வாங்கி, அம்மா செய்த துவையலை சாப்பிட்டவர் )

உலகின் மொழி அற்புதம் வேதங்களை வாய் மொழியாக இன்று வரை பாதுகாத்து வருவதாகும்   இது சரஸ்வதி- சிந்து வெளியில் துவங்கி 5000 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் அற்புதம்; இதற்கு அபார ஞாபக சக்தி/ நினைவாற்றல் தேவை . பல மாணவர்கள் பயிலும் வேத பாடசாலையில் சில மக்குகளும் இருக்கத்தான் செய்யும். வேதத்தை மற்றவர்கள் போல உருப்போட முடியாது. இதற்காக வேத பாடசாலையில் வல்லாரைக் கீரையை சமைப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்;

உன் வாயில் தர்ப்பையை வைத்து சுட்டுக் பொசுக்கினாலும் வராது  என்று வாத்தியார்கள் திட்டுவார்களாம். தர்ப்பையை வைத்து சுட்டுக் பொசுக்கினாலும் — என்பதன் பொருள் தெரியவில்லை .

xxxx

வல்லாரை Centella asiatica (Asiatic pennywortIndian pennywort) gotu kola, Brahmi

சாகர டயத்துல சங்கரா சங்கரா என்று சொல்வதுபோல பரீட்சை வந்தால் மட்டுமே படிக்கும் மாணவர்கள்தான் அதிகம். அப்படியில்லாமல் வகுப்பறையில் பாடங்களை வாத்தியார் சொல்லும்போதே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமானால் வல்லாரைக் கீரையைக் கூட்டு வைத்தோ , துவையல் செய்தோ சாப்பிட வேண்டும் ; அதுவும் முடியாவிட்டால் வல்லாரை மாத்திரை , டானிக் /சிரப்  முதலியவற்றை நாடலாம் .

இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாடுகளில், மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில்,  ஈர்ப்பசையுள்ள இடங்களில் தானாக வளரக்கூடிய செடி இது . பூமியை ஒட்டி படர்ந்து வளரும் .

xxxxx

ரசாயனப் பகுப்பு

Centella contains pentacyclic triterpenoids and trisaccharide derivatives, including asiaticoside, brahmoside, asiatic acid, and brahmic acid (madecassic acid). Other constituents include centellose, centelloside, and madecassoside.

தோல் நோய்களுக்கும் dermatological diseases இதை மருந்தாக உபயோகிக்கின்றனர் . ஆயினும் அதிகம் சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு அடையும் என்பதை ஆராய்சசி காட்டுகின்றன. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது பழமொழி அல்லவா !

Xxxxx

Pharmacological Effects of Centella asiatica on Skin Diseases: Evidence and Possible Mechanisms by Kyoung Sik Park

என்ற கட்டுரை 2021ஆம் ஆண்டில் வெளியாகியுள்ளது அந்தக் கட்டுரையில் இது தோல் நோய்களைத் dermatological diseases தீர்ப்பதாக ஆசிரியர் க்யூங் சிக் பார்க் எழுதியுள்ளார் .

இது எல்லா நோய்களுக்கும் மருந்து என்று அந்தக் கட்டுரை கூறுகிறது ; இது நரம்பு மண்டலத்துக்கு தெம்பு ஊட்டுகிறது ; cardiovascular, இருதய நோய்கள், பார்க்கின்சன் நோய் Parkinson’s disease, அல்செமர் நோய் Alzheimer’s disease, நுரையீரல் நோய்கள் COPD =chronic obstructive pulmonary disease  , டைப் 2 சர்க்கரை வியாதி type 2 diabetes , முகத்தில் வரும் பரு acne, தோல் நோய்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் இது மருந்தாகப் பயன்படுகிறது ; ஆயினும் சோதனை முறையில் இதை எவரும் நிரூபிக்க வில்லை என்றும் கட்டுரையாளர் எழுதியுள்ளார்  .

A growing body of research suggests therapeutic potentials of C. asiatica in treatment of neurological, endocrine, cardiovascular, digestive, respiratory, and dermatological diseases [6]. Investigations have reported that C. asiatica enhances the functions of the nervous system; C. asiatica and its triterpenes have a positive effect in relieving symptoms of Parkinson’s disease [7] and Alzheimer’s disease [8]. In addition, C. asiatica extracts have been reported to be effective in the treatment of endocrine diseases such as type 2 diabetes [911] and obesity [12]. Asiaticoside and asiatic acid, the active compounds of C. asiatica, have positive effects on cardiovascular diseases including hypertension [1314] and atherosclerosis [1516]. C. asiatica extract and its triterpenes exert protective effects against liver injury [1720] and gastrointestinal tract damage [2122]. Asiaticoside and asiatic acid also have therapeutic effects on respiratory disorders such as pulmonary fibrosis [23], chronic obstructive pulmonary disease [24], and acute lung injury [25]. In particular, several in vitro and in vivo studies suggest that C. asiatica extracts and their triterpenes hold great promise as natural remedies that mitigate acne, burns, atopic dermatitis, and wounds [626].

xxxx

வல்லாரைக் கீரை ஏற்றுமதி

வல்லாரைக் கீரையை 740 நிறுவனங்கள்  ஏற்றுமதி செய்தன . அதை 1,251 நிறுவனங்கள் விலைக்கு வாங்கின.

உலக நாடுகள் அதை பெரும்பாலும் இந்தியா, பிரான்ஸ், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி  செய்தன .

அதை வாங்கிய இந்தியா தங்கள் சரக்கையும் சேர்த்து அனுப்புவதால் உலகில் வல்லாரை ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது.  அதற்கு அடுத்த இடத்தில் மடகாஸ்கர் (மலகாசி) நாடும், தென்கொரியாவும்  நிற்கின்றன.

·         As per Volza’s Global Export data, Centella asiatica export shipments stood from World at 5.3K, exported by 740 World Exporters to 1,251 Buyers.

·         World exports most of it’s Centella asiatica to IndiaUnited States and France

·         The top 3 exporters of Centella asiatica are India with 3,136 shipments followed by Madagascar with 370 and South Korea at the 3rd spot with 315 shipments.

xxxxx

ப்ராஹ்மி–. மண்டூகி  , மண்டூகபர்ணி

சம்ஸ்க்ருதத்தில் இதை ப்ராஹ்மி என்று அழைப்பார்கள் . மண்டூகி  , மண்டூகபர்ணி என்றும் சிலர் இதைக் குறிப்பிடுவார்கள் . சரக சுஸ்ருத சம்கிதைகள் இதைக் குறிப்பிடுவதால் 2500 ஆண்டுகளாக பயன்பட்டுவருகிறது. ஆயினும் தமிழ் மொழியிலும் , ஸம்ஸ்க்ருத்திலும் பெயர்க் குழப்பம் இருக்கிறது ; ஒரே தாவரத்தை பல பெயர்கள் இட்டுக் குழப்புவதும் , வெவ்வேறு தாவரங்ககளை ஒரே பெயரிட்டுக் குழப்புவதும் உண்டு. ஆயினும் பிராமி என்ற பொதுப்பெயரை வல்லாரைக்கு உபயோகிக்கின்றனர் .

 Maṇḍūkī (मण्डूकी) is also mentioned as a synonym for Brāhmī, a medicinal plant identified with two possibly species verse, according to verse 5.63-66. The fifth chapter (parpaṭādi-varga) of this book enumerates sixty varieties of smaller plants (kṣudra-kṣupa). Together with the names Suvarcalā and Brāhmī, there are a total of twenty-four Sanskrit synonyms identified for this plant. Note: Chopra identifies Brāhmī with 1) Centella asiatica (Linn.) Urban. while Bāpālāl and Th. B.S. et al identify it with 2) Bacopa monnieri (Linn.) Pennell.

xxxxx

Maṇḍūkī (मण्डूकी) is another name for Maṇḍūkaparṇī, which is a Sanskrit word referring to Centella asiatica (centella), from the Apiaceae family. Certain plant parts of Maṇḍūkaparṇī are eaten as a vegetable (śāka), according to Caraka in his Carakasaṃhitā sūtrasthāna (chapter 27), a classical Ayurvedic work. The plant is therefore part of the Śākavarga group of medicinal plants, referring to the “group of vegetables/pot-herbs”.

—subham—

Tags- பிராமி, வல்லாரை, நினைவாற்றல் , ஞாபக சக்தி , மாணவர்க்கு