Rabindranath Tagore Quotes- December 2023 Calendar (Post No.12,779)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,779

Date uploaded in London – –  –  29 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Festival Days- Bharatiyar Birthday-11; Tamil month Markazi begins-17; Vaikunda Ekadasi-23; Christmas- 25; Arudra Darshan-27

New moon day/Amavasai-12;Full moon day- 26; Ekadasi Fasting Days- 8 & 23; Auspicious Days- 1,7,14

December 1 Friday

You cannot cross the sea merely by standing and staring at the water.

XXXX

December 2 Saturday

Everything comes to us that belongs to us if we create the capacity to receive it.

XXXX

December 3 Sunday

The small wisdom is like water in a glass: clear, transparent, pure. The great wisdom is like the water in the sea: dark, mysterious, impenetrable.

XXXX

December 4 Monday 

If you cry because the sun has gone out of your life, your tears will prevent you from seeing the stars.

XXXX

December 5 Tuesday

It is very simple to be happy, but it is very difficult to be simple.

XXXX

December 6 Wednesday

Reach high, for stars lie hidden in you. Dream deep, for every dream precedes the goal.

XXXX

December 7 Thursday

Death is not extinguishing the light; it is only putting out the lamp because the dawn has come.

XXXX

December 8 Friday

I slept and dreamt that life was joy. I awoke and saw that life was service. I acted and behold, service was joy.

XXXX

December 9 Saturday

Faith is the bird that feels the light when the dawn is still dark.

XXXX

December 10 Sunday

We come nearest to the great when we are great in humility.

XXXX

December 11 Monday 

Let me not pray to be sheltered from dangers,

but to be fearless in facing them.

XXXX

December 12 Tuesday

Let me not beg for the stilling of my pain, but

for the heart to conquer it.

XXXX

December 13 Wednesday

“The small wisdom is like water in a glass:

clear, transparent, pure.

The great wisdom is like the water in the sea:

dark, mysterious, impenetrable.”

XXXX

December 14 Thursday

Clouds come floating into my life, no longer to carry rain or usher storm, but to add colour to my sunset sky.

XXXX

December 15 Friday

“A mind all logic is like a knife all blade. It makes the hand bleed that uses it.”

XXXX

December 16 Saturday

“The butterfly counts not months but moments, and has time enough.”

XXXX

December 17 Sunday

“Don’t limit a child to your own learning, for she was born in another time.”

XXXX

December 18 Monday 

“By plucking her petals you do not gather the beauty of the flower.”

XXXX

December 19 Tuesday

“Let your life lightly dance on the edges of

Time like dew on the tip of a leaf.”

XXXX

December 20 Wednesday

“A dewdrop is a perfect integrity that has no filial memory of its parentage.”

XXXX

December 21 Thursday

“In our desire for eternal life we pray for an eternity of our habit and comfort, forgetting that immortality is in repeatedly transcending the definite forms of life in order to pursue the infinite truth of life.”

XXX

December 22 Friday

Emancipation from the bondage of the soil is no freedom for the tree.

XXXX .’

December 23 Saturday

The flower which is single need not envy the thorns that are numerous.

‘XXXX

December 24 Sunday

Life is given to us, we earn it by giving it.

XXX

 December 25 Monday 

We gain freedom when we have paid the full price.

XXXX

December 26 Tuesday

Age considers; youth ventures.

XXXXX

December 27 Wednesday

“Most people believe the mind to be a mirror, more or less accurately reflecting the world outside them, not realizing on the contrary that the mind is itself the principal element of creation.”

XXXX

December 28 Thursday

“Love is an endless mystery, because there is no reasonable cause that could explain it.”

XXXXX

December 29 Friday

“Patriotism cannot be our final spiritual shelter; my refuge is humanity. I will not buy glass for the price of diamonds, and I will never allow patriotism to triumph over humanity as long as I live. ”

XXXX

December 30 Saturday

“Those who are near me do not know that you are nearer to me than they are

Those who speak to me do not know that my heart is full with your unspoken words

Those who crowd in my path do not know that I am walking alone with you

Those who love me do not know that their love brings you to my heart”

XXXX

December 31 Sunday

“Where the mind is without fear and the head is held high;

Where knowledge is free;

Where the world has not been broken up into fragments by narrow domestic walls;

Where words come out from the depth of truth;

Where tireless striving stretches its arms toward perfection;

Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;

Where the mind is led forward by thee into ever-widening thought and action –

Into that heaven of freedom, my Father, let my country awake.”

BONUS QUOTES

“Music fills the infinite between two souls”

XXXX

“If I can’t make it through one door, I’ll go through another door- or i’ll make a door. Something terrific will come no matter how dark the present.”

XXXX

“The biggest changes in a women’s nature are brought by love; in man, by ambition”

XXXX

“I have spent many days stringing and unstringing my instrument

while the song I came to sing remains unsung.”

XXXX

“Let my thoughts come to you, when I am gone, like the afterglow of sunset at the margin of starry silence.

—SUBHAM—

Tags- Tagore Quotes, December 2023, Calendar

திருவண் வண்டூர் வைணவ கோவில் (Post No.12,778)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,778

Date uploaded in London – –  –  29 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள்- PART 18

கோவில் எண் 15 –  திருவண் வண்டூர்  கோவில்

வைணவ ஆழ்வார்கள் பாடி, மங்களாசாசனம் செய்த 13 மலைநாட்டுத் திருப்பதிகள் கேரளத்தில் இருக்கின்றன. இவைகளில் சில இப்பொழுது கேரளத்தில் இல்லை; தமிழ் நாட்டு எல்லைக்குள் வந்துவிட்டன

கேரளத்தில் உள்ள மேலும் ஒரு வைணவ ஸ்தலத்தைத் தரிசிப்போம். இதன் பெயர் வண்டூர்.

நம்மாழ்வார் பாடியதால் குறைந்தது 1200 ஆண்டு பழமையானது

செங்கன்னூரைச் சுற்றியுள்ள 5 வைணவ தலங்களில் இதுவும் ஒன்றாகும். அங்கிருந்து ஆறு கிலோமீட்டர்தான்

மூலவர் பெயர் — பாம்பணையப்பன் ; அருமையான தமிழ்ப் பெயர். இன்னும் ஒரு பெயர் – கமலநாதன் ; மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், பெருமாள் அருள் மழை பொழிகிறார் .

தாயார் பெயர் – கமலா வல்லி நாச்சியார்

தீர்த்தம்- பம்பா நதி, பாபநாச தீர்த்தம்

விமானம் – வேதாலய விமானம்

ப்ரத்யக்ஷம் – மார்க்கண்டேயருக்கும் நாரத மகரிஷிக்கும்

சிறப்பு அம்சங்கள்

கேரளத்தில் உள்ள கோவில்கள்  பெரும்பாலும் பரசுராமர், தசரத புத்திரர்கள் நால்வர் அல்லது பஞ்ச பாண்டவர் ஐவருடன் தொடர்பு கொண்டிருக்கும். இந்த திருவண் வண்டூர் கோவில் விக்கிரகத்தை பாண்டவ சகோதரர் நகுலன் பிரதிஷ்டை செய்ததாக ஐதீகம் .

பெருமாளுக்கு நைவேத்தியம் – பால் பாயசம் (தமிழ் நாட்டில் பெரும்பாலும் புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் )

தசாவதாரக் காட்சிகளை கோவில் சித்திரங்களில் காணலாம்

காளிங்கன் என்னும் பாம்பின் தலையில் கண்ணன் ஆடுவதைப் பார்த்தவுடன் நம்மை அறியாமலே பாரதியாரின் ஓம் சக்தி ஓம்சக்தி ஓம் பாடல்வரிகள் நினைவுக்கு வரும் :

.பாம்புத் தலைமேலே-நடஞ்செயும் 

பாதத்தினைப் புகழ்வோம்

மாம்பழ வாயினிலே -குழலிசை

வண்ணம் புகழ்ந்திடுவோம்(  ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்)

ஸ்தல புராணம் சொல்லும் அதிசய விஷயம் : நாரதர் இங்கே நாரதீய புராணத்தை இயற்றினார். அதில் 25, 000 ஸ்லோகங்கள் இருக்கின்றன

கோவிலின் தோற்றம்

பாண்டவ சகோதரர்கள் ஐவரும் வனவாசம் செய்த 13 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சென்று திருத்தலங்களை தரிசித்தனர். அந்தக் காலங்களில் ஒவ்வொரு சகோதரரும் ஏதேனும் ஒரு கோயிலை தத்து எடுத்து திருப்பணி செய்வது வழக்கம். இதனால் பாரத நாடு முழுவதும் அவர்க சம்பந்தப்பட்ட கோவில் இருக்கும். ராமர் இலங்கை வரை சென்ற பொழுது, அடல் பிஹாரி வாஜ்பாய்  போல யாரும் நேஷனல் ஹைவே போடவில்லை; பாலங்களும் கிடையாது ; ராமர் போன்றோர் பெரும்பாலும் கடற்கையை ஒட்டி பயணம் செய்தனர். பின்னர் ஒவ்வொரு நகர் வரும்போதும் உள்நாட்டில் நுழைவார்கள்; பின்னர் 18 ஜாதி மக்களுடன் அகஸ்தியர் என்னும் சிவில் என்ஜினீயர் தென்னாட்டுக்கு வந்தார்; அவரை சிவ பெருமானே அனுப்பியதால் விந்திய மலையை கர்வ பங்கம் செய்து– அதாவது உயரத்தை மட்டம் தட்டி –ரோடு போட்டார்; இதனால் மகாபாரத கால பலராமனும்  தம்பி கிருஷ்ணுட்ன் சண்டை போட்டு விட்டு தென்னகம் வரை வந்தார் அதே பாதையில் பாண்டவர்களும் வந்தனர் . நகுலன் இந்த இடத்திலுள்ள கோவில் சேதம் அடைந்திருப்பதைப்  பார்த்து திருப்பணிகளை செய்தார் .

ஆனால் காலத்தின் கோலம், 5000 ஆண்டுகளுக்கு முன்னர் நகுலன் செய்த விக்கிரகங்கள் அங்கு இல்லை. பூமியைத் தோண்டுகையில் புதிய பெருமாள் விக்கிரகங்களைக் கண்டுபிடித்தனர். அவைகளைக் கோவிலில் பிரதிஷ்டை செய்தனர்.; பின்னர் புதிய மண் டபங்கள் கட்டப்பட்டன.

ஒரு முறை பிரம்மாவுக்கும் நாரதருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது ; நாரதர் பிரம்மாவை சாபித்த்தார் ; இதனால் அவருக்கு படைப்புத் தொழில்  சிலபஸ் Syllabus மறந்து போனது. வண்டூருக்கு வந்து இறைவனை வேண்டவே மறந்து போன பாட திட்டம்/Syllabus நினைவுக்கு வரவே மீண்டும் தனது பணிகளை செவ்வனே செய்தார்.

வடக்கில் கங்கை நதி ஒடும் இடமெல்லாம் தலங்கள் இருப்பது போல கேரளத்தில் பம்பை நதி ஓடும் இடம் எல்லாம் தலங்கள் இருக்கும். இந்த ஊர்ப் பெருமாள் பம்பை நதியின் வட கரையில் இருக்கிறார். 1200 ஆண்டுகளுக்கு முன், இங்குவந்த நம்மாழ்வார், பெருமாளைப் பார்த்து ஆனந்தித்து ,

தேறு நீர் பம்பை வடபாலைத் திரு வண் வண்டூர் என்று துதித்தார்.

ஏனைய கோவில்களைப் போலவே இங்கும் கணபதி சாஸ்தா , தட்சிணாமூர்த்தி, நாகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர் .

ஊர்ப்பெயர் விளக்கம்

திருவண் வண்டூர் பாசுரம் நாயகி- நாயகன் பாவத்தில் பாடிய பாசுரம். அதில் அன்னம், குயில் போன்ற பறவைகளைத் தூது விடுவதாக நாயகி பாடினாலும் வண்டு விடு தூதுதான் இந்த ஊரில் ஓடும் பம்பை நதி வருகிறது . ஆகையால் நம்மாழ்வார் காலத்திலேயே வண்டுகள் ரீங்காரம் மிக்க இடமாகத் திகழ்ந்தது போலும். இதோ நம்மாழ்வார் வரிகள் :–

வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்*  வெறி வண்டினங்காள்*

தேறு நீர்ப் பம்பை வடபாலைத் திருவண்வண்டூர்*

மாறு இல் போர் அரக்கன்*  மதிள் நீறு எழச் செற்று உகந்த*

ஏறு சேவகனார்க்கு*  என்னையும் உளள் என்மின்களே* 

திருவிழா

மாசி மாதம் பத்து நாட்களுக்கு விழா நடக்கும் .

குழந்தை வரம் வேண்டி இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள்,  கோசாலை கிருஷ்ணர் சன்னிதிக்கு வெளியே மரத் தொட்டில்கள் வாங்கி வைத்து  பிராத்தனை செய்கிறார்கள்.

–SUBHAM-

TAGS – பம்பா நதி, திருவண் வண்டூர், நம்மாழ்வார், நகுலன்

அஹிம்சையே உயர்ந்த தர்மம்! (Post No.12,777)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,777

Date uploaded in London –  –  29 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஒரு வரி சுபாஷிதங்கள்

அஹிம்சையே உயர்ந்த தர்மம்!

ச.நாகராஜன்

அழகிய சில சொற்களிலேயே மிக உயர்ந்த கருத்துக்கள் சம்ஸ்கிருத சுபாஷிதங்களில் வழங்கப்படுகின்றன. ஒரே ஒரு வரி தான், அதில் அடங்கியுள்ள கருத்துக்களை கீழே பார்க்கலாம். இதை நினைவு வைத்துக் கொள்வதும் சுலபம் தான்

1. அக்ரோதேன ஜயேத் க்ரோதம் |

அமைதியாக இருப்பதன் மூலம் பகையை வெல். 

2. அக்ஷீணோ வித்தத: க்ஷீணோ வ்ருத்தஸ்து ஹதோ ஹத: |

செல்வத்தை இழந்ததனால் வறுமையோடிருக்கும் ஒருவன் நிஜத்தில் ஏழை இல்லை; ஆனால் எவன் ஒருவன் தன் நல்ல குணத்தை இழக்கிறானோ அவனே நிஜத்தில் ஏழை.

3. அஞ்ஞாத குலசீலஸ்ய வாஸோ தேயோ ந கஸ்யசித் |

எவன் ஒருவனுடைய குலம் மற்றும் வசிப்பிடம் ஆகியவை தெரியாமல் இருக்கிறதோ அவனுக்கு வசிக்க இடம் கொடுக்கக் கூடாது.

4. அதி சர்வத்ர வர்ஜயேத் |

எதிலும் அளவுக்கு அதிகமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.

5. அர்த்தோ கடோ கோஷமுபைதி நூனம் |

பாதி நிரம்பியிருக்கின்ற குடம் அதிக சத்தம் போடும்!

நிறைகுடம் தளும்பாது என்ற தமிழ்ப் பழமொழியையும்,

Empty vessel creates more noise என்ற ஆங்கில பழமொழியை இங்கு ஒப்பு நோக்கலாம்.

6. அவஸ்யமேவ போக்தவ்யம் க்ருதம் கர்ம சுபாசுபம் |

ஒருவன் தான் செய்த செயல்களின் நல்லது, கெட்டவற்றை அனுபவித்தே ஆக வேண்டும்.

7. அஹிம்ஸா பரமோ தர்ம: |

அஹிம்சையே உயர்ந்த தர்மம்.

8. ஆர்ஜவம் ஹி குடிலேஷு ந நீதி: |

கெட்டவரிடம் நேர்மை என்பது சிறந்த வழி ஆகாது.

9. ஆலஸ்யம் ஹி மனுஷ்யானாம் சரீரஸ்தோ மஹான் ரிபு: |

சோம்பலே ஒருவனின் உடலுக்கான மகத்தான எதிரி.

10. ஆஹு: சாப்தபதி மைத்ரி |

ஒருவருடன் ஏழு அடிகள் நடந்தாலே நட்பு உறுதி ஆகி விடுகிறது.

11. ஈஸ்வரேச்சா பலீயஸி |

ஈஸ்வரனுடைய் இச்சை (விதி) மிகவும் வலிமையுடையது.

12. உதாரசரிதாநாந்து வசுதைவ குடும்பகம் |

உதாரபுருஷர்களுக்கு உலகமே குடும்பம்.

13. ருண சத்ரு வ்யாதிஸ்வஷேஷ: கர்தவ்ய: |

கடன், எதிரி, வியாதி ஆகிய மூன்றையும் முற்றிலுமாக ஒருவன் ஒழிக்க வேண்டும்.

14. ஏகசித்தே த்வயோரேவ கிமசாத்யம் பவேதிதி |

இருவர் ஒரே மாதிரி நினைத்து விட்டால் எந்தக் காரியம் தான் அசாத்யம் (செய்யமுடியாததாக) ஆகும்!

15. ஏகமேவ வ்ரதம் ச்லாக்யம் ப்ரஹ்ம்சரியம் ஜகத்ரயே |

மூன்று உலகங்களிலும் சிலாகிக்கப்படுவது பிரம்மசரியமே!

16. க: பர: ப்ரியவாதினாம் |

பிரியமான சொற்களைச் சொல்பவரை விட வேறு யார் உயர்ந்தவர்கள்!

17. கதாபி கலு பாபநாமலமஸ்ரேயஸே யத: |

பாவிகளின் கதைகள் கூட கெடுதி விளைவிப்பவையே.

18. கஷ்டாத்கஷ்டதரம் க்ஷுதா |

கஷ்டத்திலும் கஷ்டம் பசியே!

19. காமதுராணாம் ந பயம் ந லஜ்ஜா |

காமவெறியுடையவர்களுக்கு பயமும் கிடையாது; வெட்கமும் கிடையாது!

20. குரூபதா சீலதயா விராஜதே |

அழகற்ற உருவம் நல்ல குணத்தால் சரி செய்யப்படலாம்.

21. க்ஷமாதுல்யம் தபோ நாஸ்தி |

பொறுமைக்குச் சமமான தவமே கிடையாது.

22. கலேன மைத்ரி ந சிரேண திஷ்டதி |

கெட்டவருடனான நட்பு நீடித்து நிலைக்காது.

23. கதஸ்ய சோசனம் நாஸ்தி-கதம் ந சோசாமி |

கடந்ததை நினைத்து அழுவதால் பயன் ஒன்றும் இல்லை.

24. குணீ குணம் வேத்தி ந குணம் வேத்தி நிர்குண: |

நல்ல குணங்களைக் கொண்டவர்களை நல்ல குணம் கொண்டவர்களே அறிவர்; கெட்ட குணங்களைக் கொண்டவர்கள் அறிய மாட்டார்கள்.

25. க்ருஹே சேன்மது விந்தேத் கிமர்த்தம் பர்வதம் வ்ரஜேத்?

வீட்டிலேயே தேன் கிடைக்கும் போது ஒருவன் மலையை நோக்கிச் செல்வது ஏன்?

***

Gandhiji explodes Vaikom Dravidian Myth! -Part 2(Post No.12,776)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,776

Date uploaded in London – –  –  28 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Vaikom – new spelling; Vaikam -old spelling

TEMPLE  ENTRY PROCLAMATION WAS ISSUED ON THE EVENING OF THE 12TH NOVEMBER 1936 BY THE MAHARAJA OF TRAVANCORE.

Over 25,000 people listened to Gandhiji on the Old Satyagraham Ashram ground in perfect silence.

Vaikam 18-1-1937 (Gandhiji’s speech)

“ I suppose you can better imagine than I can describe my joy for being second time in your midst and under such happy  auspices as you all know. Only a few years ago one had to struggle hard to get the roads leading to the great temple thrown open to Avarna Hindus (Dalits). Good Madhavan assisted by  Krishnswami of revered memory and by Kelappan laid the foundation of that struggle; it is a matter of deep sorrow to me – as it must be to you – that neither Madhavan nor Krishnswami  is here to share your rejoicings.”

The above Viakam speech mentioned the three great heroes of Vaikam struggle. Dravidian fraud Ramaswami Nayakkar was not even in volunteers list. In the 251 page book I could not even find his name. Now we know these gangs made a mountain out of a mole.

xxxx

Praise to Travancore Maharaja

Etamanoor 19-1-1937

Gandhiji speaks,

“ I am deeply grateful to you for your beautifully worded Sanskrit address and the gift of the bark tree cloth . I cannot say I am going to wear this cloth. For one thing it is too dear for me to wear, but it will adorn the museum that we have set up in Maganwadi containing specimens of village craft.

(varkala in Sanskrit, Varkalai in Kambaramayanam; now a town’s name in Kerala; V changes to B in all ancient languages following Sanskrit; Varka of Sanskrit  changed to Bark(a) in English)

“As I was being taken round the temple and as I approached the centre part of the temple, I had a Pulaya boy shown to me, and he boldly mounted the steps with me. A few months ago I should not have considered  such a thing possible in my life time, but what impossible for man is easily possible for God to fulfil. (it is a severe blow to anti Hindu Nayakkar)  And as I said last night and have repeated in several meetings, I see in this Proclamation the spirit of God working though the hand of the Maharajah.

( in the above passage we see the heroes were Maharajah and the God)

xxxx

in Pandalam meeting (20-1-1937), Gandhi said

“I have regarded this Proclamation as an act of Divinity, though outwardly it is the act of a great prince

(see the difference. The king made the Proclamation that every Hindu can enter the temple. And Gandhi praised God and the King. But Dravidian gang attributed the success to an anti God , anti Brahmin fellow!!)

xxxx

Praise to Maharani

Gandhiji said to an American lady who interviewed him, “the proclamation is due to the influence one woman Her Highness  Maharani of  Travancore. When I was in Travancore some years ago, I met the present Maharani. She was determined to do what was the purest act of justice and it is she who is at the back of the  Maharaja’s decision. It was a most courageous act to issue that Proclamation and still more courageous to carry it out to the letter. The Maharaja could not have done it without the support of his mother. So I see the hand of woman in this modern miracle.

xxxx

Vaikam Heroes:–

T K Madhavan

T R Krishnaswami Iyer

Kelappan Nair

C K Parameswaram Pillai

M Govindan

Ramachandran 

Aiyyan Kali

Raman Pillai

Padmanabha Pillai

Y ogakshema Sabha of  Malayali  Brahmins – Nambudiris

Kshatriya Mahasabha

Nair Service Society

Nambudiri Yogakshema Sabha

Kesava Menon

C Rajagopalachari

C P Ramaswami aiyyar

S N D P Yogam with Shri Narayan Guru

Dr M E Naidu , Nagerkoil

The above list is from the book.

Please tell all Tamils to read The Epic of Travancore by Mahadev Desai so that Dravidian fake heroes will be exposed.

I will give the gist of it in Tamil as well.

—-subham—-

Tags- Vaikam Satyagraha, Temple entry, Proclamaion, Trvancore Maharaja, Vaikom heroes, Dravidian frauds

சரகரும் சுஸ்ருதரும் என்ன எழுதினார்கள் ? (Post No.12,775)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,775

Date uploaded in London – –  –  28 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 சரகர் , சுஸ்ருதர்  (Charaka and Susruta) என்ற இரண்டு பெயர்களில் உள்ள ஆயுர்வேத நூல்கள் உலகம் முழுதும் பிரசித்தமானவை; இப்போது இவர்களுடைய சிலைகளை வெளிநாடுகளிலும் காணலாம் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் மருத்துவக் கல்லூரியில் சுஸ்ருதர் சிலை இருக்கிறது. இந்தியாவில் ஹரித்வார் நகருக்கு அருகில் கங்கை நதிக்கரையில் சரகர் சிலை இருக்கிறது

நிறைய பேருக்கு தெரியாத விஷயம் என்னவென்றால் சரக சம்ஹிதை என்ற பெயரில் உள்ள ஆயுர்வேத நூலை அவர் இயற்றவில்லை ; அதன் ஆசிரியர் அக்னிவேஷ் என்பவர் ஆவார்.சரகர் அதை முறையாக தொகுத்தும் வகுத்தும் கொடுத்தார் (Edited).

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் வடமேற்குப் பகுதியை ஆண்ட குஷான வம்சத்தது கனிஷ்கர் காலத்திலேயே இவர் பெயர் பிரபலம் ஆகிவிட்டது இவரை கி.மு 600 ல் வாழ்ந்தவர் என்று அறிஞர்கள் முடிவு செய்துள்ளனர் இது ஒரு மிகப்பழைய மருத்துவ நூல் என்பது அவர்களுடைய கருத்து .

இதற்கு அறிஞர்கள் 3 காரணங்களை முன்வைக்கின்றார்கள் :

1.புத்தரைப் பற்றியோ அவரது மதத்தினர் பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை.

2. நூலின் உரைநடை புத்தருக்கு முந்திய பிராமண நூல்கள், உபநிஷத நூல்கள் நடையில் உள்ளன .

3. வேத கால கடவுளரை மட்டும் குறிப்பிடும் இந்த நூலில் புராணக் கதைகளைக் காண முடியாது.

சரக சம்ஹிதையின் மூல நூலில் 120 அத்தியாயங்கள் இருந்தன; அவற்றை எட்டு பிரிவுகளாகப் பிரித்துவைத்தார். துரதிருஷ்டவசமாக அவற்றின் பெரும்பகுதியை நாம் இழந்துவிட்டோம். ஆறாவது பிரிவின் 17 அத் தியாயங்களும் ஏழாவது, எட்டாவது அத்தியாயங்களும் கிடைக்கின்றன . த்ருதபலா என்பவர் பல விஷயங்களை பிற்சேர்க்கையாக சேர்த்துள்ளார்.

ஆயுர்வேத நூல்களில் காணப்படும் எட்டு பிரிவுகளில் 6 பிரிவுகளை இவருடைய நூல்களில் காண முடிகிறது ; அவை உள்ளுக்கு சாப்பிடும் மருந்துகள், விஷ முறிவு மருத்துவம், மனநோய்கள், குழந்தை மருத்துவம், புத்திளமை பெறுதல் (Rejuvenation) , பாலியல் (Sexology) ஆகியன உள்ளன. அறுவைச் சிகிச்சையும் , கண்- காது மூக்கு  நோய்ப்பிரிவும்  கிடைக்கவில்லை.

நமக்குக் கிடைத்த பகுதிகளில் உடற்கூறு (Anatomy), நோய்கள் தோன்றும் முறை , அவைகளுக்கான சிகிச்சை , மருந்துகள், உபகரணங்கள் , மருத்துவர்கள் நடந்து கொள்ளவேண்டிய முறைகள் முதலியன விவாதிக்கப்படுகின்றன. சாப்பிட வேண்டிய உணவுகள்  பத்தியத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் (Diets) ஆகியன விவரிக்கப்பட்டுள்ளன. கரு, குழந்தை (Embryology) உருவாதல், மருத்துவர்களுக்குப் பயிற்சி ,முதிலியவற்றையும் நூல் விவரிக்கிறது

இந்த நூலிலிருந்து இந்துக்களின் பழங்கால நம்பிக்கைகளையும் அறிகிறோம்.

xxxxxx

சுஸ்ருத சம்ஹிதை

சுஸ்ருதர் என்ற மருத்துவர் சுஸ்ருத சம்ஹிதை என்னும் நூலின் ஆசிரியர். இவருடைய தந்தை விசுவாமித்திரர்; அவர் திவோதாச தன் வந்திரி என்பவரின் மாணவர் ; திவோதாஸர் காசி ராஜ்யத்தின்  அரசர்..இவருடைய காலம் கி.மு 1000 என்பது அறிஞர்களின் கருத்து. இவர்களுடன்  சம்பந்தப்பட்ட பெயர்கள் எல்லாம் வேத காலப் பெயர்கள் .

முன் காலத்தில் யுத்தம் செய்யும் அரசர்கள், படைகளுடன் டாக்டர்களையும் அழைத்துச் செல்லுவார்கள். காயமடைந்தவர்களை குணப்படுத்துவதும் மருந்து கொடுப்பதும் அவர்களுடைய பணி . சுஸ்ருதர் மிகப்பெரிய சர்ஜன் (Surgeon) ; அதாவது அறுவைச் சிகிச்சை நிபுணர். அவர் கூறும் ஆபரேஷன் அறை உபகரணங்கள் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தும். லண்டன் முதலிய நகரங்களில் அதன் அச்சுக்களை (Replicas)  காட்சியில் வைத்துள்ளனர். செயற்கை மூக்கு பொருத்தும் ஆபரேஷனில் அவர் வல்லவர்; அவர்தான் இதை முதலில் உலகிற்குக் கற்பித்தவர் ஆவார்.

நூலின் அமைப்பு

சுஸ்ருத சம்ஹிதை நூலில் 186 அத்தியாயங்கள் உள்ளன. அவைகளை கீழ்கண்ட ஆறு பிரிவிவுகளாக  பிரித்துள்ளனர்.

1.சூத்ர என்னும் முதல் 46 அத்தியாயங்களில் சர்ஜரி Surgery என்னும் அறுவைச் சிகிச்சை , உணவு, பான வகைகள் ஆகியவற்றை அறியலாம்.

2.நிதான என்னும் தலைப்பின் கீழ் 16 அத்தியாயங்கள் எந்தெந்த நோய்களுக்கு அறுவைச் சிகிச்சை தேவைப்படும்  என்பதை விவரிக்கின்றன

3. சாரீர என்னும் பிரிவில் 10 அத்தியாயங்களில் பிரபஞ்ச உற்பத்தி, , கர்ப்பத்தில் கரு வளருதல், பெண் கர்ப்ப வளர்ச்சி, உடற்கூறு இயல் முதலியன உள்ளன.

4.சிகிச்சை என்னும் பிரிவில் 40 அத்தியாயங்கள் அறுவைச் சிகிச்சை பற்றிப் பேசுகின்றன.

5.கல்ப பிரிவில் எட்டு அத்தியாயங்கள் விஷத்தின் Toxicology தாக்கத்தை விவரிக்கின்றன.

6. உத்தர என்னும் கடைசி பிரிவில் 66 அத்தியாயங்களில்  கண், காத்து, மூக்கு, தொண்டை நோய்களை கண்டறிதல், குழந்தை நோய் சிகிச்சை, கெட்ட ஆவிகளால் ஏற்படும் பிரச்சினைகள், பொதுவாக உடலுக்குள் ஏற்படும் நோய்கள் முதலியன பற்றி விளக்குகின்றன.

யார் ஒருவர் சர்ஜன் ஆக விரும்புகிறாரோ அவர் மனித உடலின் உட்பகுதியை அறிந்திருக்க வேண்டும் இதற்காக இறந்தவரின் உடலை அறுத்துப் பார்க்க வேண்டும் என்கிறார்.ஏராளமான ஆபரேஷன் கருவிகளை வருணிக்கிறார் . ஆபரேஷன் செய்யும்போதும், பின்னரும் செய்யவேண்டிய அறுபது வகையான உத்திகளையும் சொல்கிறார்.. சிறுநீரக கற்களை அகற்றும் முறையையும் விளக்குகிறார்.  ஒரு மனிதனின்  உடல் நோவினைப் போக்குவதைவிட உலகில் வேறு எதுவும் புண்ணியம் ஆகாது என்றும் வலியுறுத்துகிறார்.

உலகிலுள்ள ஏனைய  மருத்துவ நூல்களில் இவ்வளவு முற்போக்கான சிந்தனை  இல்லை என்பதை பார்க்கையில் பாரத நாட்டின் மருத்துவத்துறை 3000  ஆண்டுகளுக்கு முன்னரே மிக முன்னேறிய நிலையில் இருந்தது தெரிகிறது.

–சுபம்—

Tags- சரகர், சுஸ்ருதர், சம்ஹிதை, சிலைகள், சர்ஜரி,

செங்கன்னூர் பகவதி மாத விடாயை எப்படி அறிகிறார்கள் ? சுவையான 10 கதைகள்–17 (Post.12,774)

DEVI IN CHENGANNUR

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,774

Date uploaded in London – –  –  28 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

செங்கன்னூர்  பகவதி கோவில் பற்றி சுவையான கதைகள் தொடர்ச்சி –17

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற  108 கோவில்கள்- PART 17

PART 3 OF CHENGANNUR TEMPLE STORIES

கதை 8

ஸ்ரீ ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் (1860-1880) காலத்தில் அவரிடம்  சூரிய நாராயணன் என்பவர் பணியில் இருந்தார்.அவர் காலத்தில்தான் திருவங்கூர் ஒரு முன்னுதாரண ராஜ்யமாக மாறியது மன்னருக்கும் சூரிய நாராயணனுக்கும் இடையே மனத்தாங்கல் ஏற்படவே , அவரும் கம்பன் போல கோபித்துக்கொண்டு ‘உண்டோ குரங்கேற்றுக்கொள்ளாத கொம்பு?’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். கற்றவருக்கு சென்றவிடம் எல்லாம் சிறப்பு அல்லவா ! திருவல்லாவில் வித்துவான் பட்டத்திரி யிடம்  சென்று மந்திரம் ஒன்றைக் கற்றார். அதை செங்கன்னூர் பகவதி/ மகா தேவன் கோவிலில் உரு ஏற்றினார் ; 41 நாட்கள் ஆயின; இதே நேரத்தில் மன்னர் மன நிலையில் மாற்றம் ஏற்பட்டது;  எப்படியாவது சூரிய நாராயணனைக்  கண்டுபிடித்து  அழைத்து வாருங்கள்   என்று உத்தரவிட்டார் மகாராஜாவின் ஆட்கள் எங்கெங்கோ தேடி, கடைசியில், பகவதி கோவிலில் அவரைக் கண்டுபிடித்து அழைத்துச் சென்றனர். அவருக்கு மன்னர் படிப்படியாக பெரிய பெரிய பதவிகளை வழங்கி கெளரவித்தார் . சூரிய நாராயணன் ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தது 3 முறையாவது செங்கன்னூருக்கு பகவதியைத் தரிசிக்க வந்துவிடுவார்.

கதை 9

கும்பகோணத்தில் ஒரு பணக்கார ராயர் இருந்தார். அவருடைய மனைவிக்கு  பேய் பிடித்தது. மலையாள

மக்கள், மன நோய் வந்துவிட்டால்  பேய் பிடித்து விட்டது என்றே சொல்லுவார்கள்;  நம்புகிறார்கள். (ALL MENTAL DISEASES ARE ATTRIBUTED TO EVIL SPIRITS; MALAYALI APPROACH).

கும்பகோணம் ராயரும் பேயோட்டும் மந்திரவதிகளை  அழைத்து ஓம் சூம் மந்திரக்காளிமலையாள பகவதி என்றெல்லாம் மந்திரம் போட்டுப் பார்த்தார். மனைவி குணம் அடையவில்லை; அவரை ராமேஸ்வரத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டு மதுரையில் தங்கினார். அப்போது யக்ஞவேத சாஸ்திரி என்பவரைச் சந்தித்தார்; அவர் அந்த தம்பதிகளை செங்கன்னூருக்குச் சென்று பிரார்த்தியுங்கள், குணம் ஆகிவிடும் என்றார். ராயரும்   அவ்வாறே செய்தார் . கோவிலில் தினமும் புஷ்பாஞ்சலியும் பஜனையும் செய்தார்; அவருடைய மனைவி குணம் அடைந்தவுடன் அவர் அணிந்த நகைகளை எல்லாம் கோவிலுக்கே காணிக்கையாகக் கொடுத்துவிட்டார்.

கதை 10

பெருந் தச்சன் என்பவர் கேரளத்தில் உள்ள பல பெரிய கோவில்களைக் கட்டியவர் ஆவார் ; ஒரு நாள்  அவர் பம்பா நதியில் படகில் செங்கன்னூருக்கு வந்தார். பிராமணர்கள் பூஜை செய்து மிஞ்சிய பூக்களும் பழங்களும் இலைகளும் நதியில் மிதந்து வந்தன . பிராமணர்களின் பக்தியைப் பார்த்த அவர், இப்படியே போனால் பிராமணர் அல்லாதோர் இறைவனை வணங்க வாய்ப்புகள் குறையும் என்று எண்ணி கோவில் கட்டுவதில் மாறுதல்களை செய்தார். பிராமணர்கள் உட்கார்ந்து வேதம் சொல்லும் முக மண்டபத்தை வழக்கத்துக்கு மாறாக தாழ்வாக கட்டினார் . இதற்குப் பின்னர் நடந்த விபத்தில் அவர் சொந்த மகனையே இழந்தார். கீழைக் கோபுரத்தின் மேல் பகுதியில் பெரும் தச்சன் வேலை செய்து கொண்டிருந்தார் ; அப்போது அவர் கையில்  வைத்திருந்த கூர்மையான ஆயுதங்கள் கைதவறி விழுந்து, கீழே பணியாற்றிக்கொண்டிருந்த மகன் மீது விழுந்தன.மகன் உயிரும் பறி போனது.

பெரும் தச்சன் கட்டிய நம்பூதிரி இல்லங்களும் அழிந்து நம்பூதிரிகளின் எண்ணிக்கையும் விறல் விட்டு என்னும் அளவுக்கு குறைந்தன. தவறான முறையில் வடிவமைத்ததே இதற்குக் காரணம்  என்ற பழிச்சொல்லும் அவர் மீது விழுந்தது

கோவிலின் தோற்றம்

இவ்வளவு கதைகள் பின்னனியில் இருந்தாலும் பகவதியின் கருணை எல்லையற்றது.வேண்டுவோருக்கு வரம் தரும் வரத முத்திரையுடனும் அஞ்சியோருக்கு அபயம் அளிக்கும் அபய முத்திரையுடனும் தேவி காட்சி தருகிறாள்

கோவிலில் கணேசர், நீலக்ரீவன், சண்டீசன், கிருஷ்ணர் மூர்த்திகளும் உள்ளனர். வடக்குப் பக்கத்தில் ஊட்டுப் புரா  என்னும் DINING HALL டைனிங் ஹால் இருக்கிறது; கோவில் மதிலுக்கு வெளியே சக்தி குண்டம் தீர்த்தம் இருக்கிறது.

கோவில் வளாகத்தில் நிறைய அரச மரங்கள் இருக்கின்றன. மேல நடா அரச மரம் பேயோட்டுமிடமாக இருக்கிறது; சோட்டாணிக்கரா போலவே அந்த அரச மரத்தில் ஆணி அடித்தால் மன நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோவிலில் தினமும் புஷ்பாஞ்சலி செய்வதும் குறிப்பிட்ட நாட் கள் பஜனை செய்வதும் நினைத்தை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையும்  இருக்கிறது..

மாத விடாயை எப்படி அறிகிறார்கள் ?

தேவியின் விக்கிரகம் பஞ்ச லோகம் என்னும் ஐம்பொன்னால் FIVE METAL ALLOY ஆனது. இதில் மாத விலக்கு ஏற்படுவது அதிசயமே. தேவியின் பழைய சிலை கல்லால் ஆனது; தீவிபத்தில் அது சேதம் ஆனதால் பஞ்ச லோக சிலை வைக்கப்பட்டது ;இரண்டரை அடி உயரமுள்ள விக்கிரகம் மிகவும் அழகானது !

சிவ பெருமானின் சிலையும் உருவமற்ற ஸ்வயம்பு லிங்கம்தான். ஆயினும் அந்த லிங்கத்தின் மீது அர்த்த நாரீ — பாதி ஆண்/சிவன், பாதி பெண்/பார்வதி உருவம் சார்த்தப்பட்டுள்ளது ; மூன்று அடியுள்ள அந்தக் கவசம் தங்கத்தில் செய்யப்பட்டுள்ளது.

முன்னரெல்லாம்  அம்மனுக்கு மாத விடாய் MENSES  மாதம் தோறும் ஏற்பட்டதாகவும் இப்போது ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை மட்டுமே ஏற்படுவதாகவும் மேல் சாந்தி தெரிவித்தார்  அதி காலையில் கர்ப்பக் கிரகத்தைத் திறக்கும் அர்ச்சகர், தேவியின் உடைகளை வாரியரிடம் தருவார். அவர் அந்த உடைகளை பரிசோதித்து ஏதேனும் ரத்தக்கரைகளைப்  பார்த்தால் உடனே  தாழமன்  மடத்துக்கு அனுப்புவார். அதுதான் கோவில் தந்திரியின் வசிப்பிடம்.; அங்குள்ள பெண்மணி அதைப் பரிசோதித்து அது மாத விடாய் என்பதை உறுதி செய்வார்.

பின்னர் அந்த உடையை கோவில் நிர்வாகம் விற்றுவிடும். அதை வாங்க போட்டா போட்டி! கடந்த காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த வி வி கிரி, திருவாங்க்கூர் சமஸ்தான திவான் சி பி ராமசுவாமி ஐயர்  ஆகியோர் அதை விலைக்கு வாங்கினார்கள் .

மாத விலக்கிற்குப் பின்னர் கோவிலின் மூலஸ்தானம் மூன்று நாட்களுக்கு மூடப்படும் . அப்போது நாலம்பலத்தின் வடகிழக்கு மூலையில் உள்ள அறையில் சிறிய விக்கிரகத்தை வைத்து பூஜைகள் செய்வார்கள். நாலாவது நாளன்று பெண் யானையின் மீது விக்கிரகத்தை வைத்து பம்பா நதிக்கு பவனி செல்வர். இரு புறமும் விளக்குகளை ஏந்தி பெண்கள் துணையாக வருவார்கள். அங்கே நீராட்டு நடைபெறும்; தேவியின் வருகைக்காக சிவ பெருமான் யானையின் மீது அமர்ந்து காத்திருப்பார் பின்னர் சிவன், தேவி பகவதியின் உருவங்கள் கோவிலில் அவரவர் கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்பட்டு வழக்கமான பூஜைகளைச் செய்வார்கள்; இதைக் காண்பது குடும்பத்தில் கல்யாண  விஷயங்களை உண்டாகும் என்பதால் பெருந் திரளான பக்தர்கள் தரிசனத்துக்காகக் காத்திருப்பார்கள் .

—SUBHAM—-

TAGS- செங்கன்னூர், கதைகள், மாதவிலக்கு, மாதவிடாய், தேவி, பகவதி, புஷ்பாஞ்சலி

ஆதி சங்கரரின் 108 அடி உயரமுள்ள சிலை திறப்பு! (Post No.12,773)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,773

Date uploaded in London –  –  28 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

ஆதி சங்கரரின் 108 அடி உயரமுள்ள சிலை திறப்பு!

ச.நாகராஜன் 

1

மத்யபிரதேசத்தின் முதல் அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹான் அவர்கள் மத்ய பிரதேசத்தில் காந்த்வாரா மாவட்டத்தில் ஓம்காரேஸ்வரில் 108 அடி உயரமுள்ள ஆதிசங்கரரின் சிலையை 2023 செப்டம்பர் 21 ஆம் தேதி திறந்து வைத்துள்ளார்.

வரவேற்று மகிழ வைக்கும் இந்த சிலை திறப்பு விழா பற்றிய விவரங்களை இங்கு காணலாம்.

2

12 வயது பாலகனாக இங்கு ஆதி சங்கரர் சிலை வடிவில் எழுந்தருளுகிறார்.

இந்த ஆலயம் உருவாவதற்கான செலவான ரூ 2200 கோடியை அரசு ஏற்றுள்ளது.  இது காந்த்வாரா மாவட்டத்தில் மாந்தாதா திவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஏகாத்மதா கி ப்ரதிமா – ஏகாத்மத்தின் சிலை – என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.

தனது 32 வருட ஆயுள் காலத்தில் சங்கரர் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடந்தே சென்று பாரதத்தின் ஒருமைப்பாட்டை நிரூபித்துள்ளார்.

அவர் தனது வாழ்நாள் காலத்தில் சுமார் 116 நூல்களை இயற்றியுள்ளார். இவற்றில் பத்து உபநிடதங்களுக்கான பாஷ்யம். ப்ரஹ்ம சூத்ரம் மற்றும் பகவத்கீதைக்கான விரிவுரைகளும் அடக்கமாகும்.

3

இந்தச் சிலையை அமைக்க மாந்தாதா தீவு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது?

மாந்தாதா தீவு நர்மதா நதியில் அமைந்துள்ளது. இங்கு 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களுள் ஓம்காரேஸ்வரர் தலமும் அமரேஸ்வரர் தலமும அமைந்துள்ளன.  அதுமட்டுமின்றி இது உஜ்ஜயினில் உள்ள மஹாகாலேஸ்வரர் ஜோதிர்லிங்க தலத்திற்கு சுமார் 110 கிலோமீட்டர் அருகில் உள்ளது.

14 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சைவ, வைணவ, ஜைன ஆலயங்கள் இந்தப் பகுதியில் அமைந்துள்ளன.

ஓம்காரேஸ்வரர் என்ற பெயருக்குத் தக்கபடி இந்தத் தீவு ஓம் வடிவில் அமைந்துள்ளது. அதனாலேயே இந்தப் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

ஓம்காரேஸ்வரர் என்றால் ஓம் என்ற மந்திரத்திற்கு அதிபதி என்று பொருள்.

4

புராண வரலாறுகளை எடுத்துப் பார்த்தால் இதன் பெருமை நன்கு புரியும்.

சிவபிரான் ஒளிவடிவமாக ஆதியும் அந்தமுமின்றி வடிவம் எடுத்ததால் இது ஜோதிர்லிங்க தலமாக ஆனது. 12 ஜோதிர்லிங்க தலங்கள் பாரதத்தில் உள்ளன.

மகாகாலர் – உஜ்ஜயினி, சோம்நாத், நாகேஸ்வரர் – குஜராத், மல்லிகார்ஜுனர் – ஆந்திர பிரதேசம், ஓம்காரேஸ்வரர் – மத்யபிரதேசம், கேதார்நாத் – உத்தரகாண்ட், பீம்சங்கர், திரியம்பகேஸ்வரர் மற்றும் கிரிஷ்னேஸ்வரர் – மஹராஷ்டிரம், விஸ்வநாதர் – வாரணாசி, வைத்யநாதர் – ஜார்கண்ட், ராமேச்வரர் – தமிழ்நாடு ஆகியவை 12 ஜோதிர்லிங்க தலங்களாகும்.

5

மூன்று வரலாறுகள் இந்தத் தலம் பற்றி உண்டு.

முதலாவது வரலாற்றின் படி, விந்திய மலையின் தேவதையான விந்தியா சிவபிரானை தனது பாவங்கள் போக்க வணங்கவே சிவபிரான் ஓம்காரேஸ்வரராகவும் அமேரேஸ்வரராகவும் இங்கு எழுந்தருளினார்.

இரண்டாவது வரலாற்றின் படி, மாந்தாதா என்ற அரசன் சிவபிரானைத் தொழவே அவனது தீவிரமான பக்தியை  மெச்சி சிவபிரான் இங்கு எழுந்தருளினார்.

அடுத்த மூன்றாவது வரலாற்றின்படி, அசுரர்களை அழித்து தேவர்களைக் காத்து ஓம்காரேஸ்வரராக இங்கு எழுந்தருளினார்.

6

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9ஆம் தேதி முதல் அமைச்சர் திரு சிவராஜ்சிங் சௌஹான் 108 அடி உயரமுள்ள ஆதிசங்கரரின் சிலை திட்டத்தை அறிவித்தார். இத்துடன் சங்கரர் கண்காட்சி மற்றும் ஆசார்ய சங்கரர் இன்ஸ்டிடியூட் ஆஃப் அத்வைத வேதாந்தாவும் இங்கு நிறுவப்படும் என்று அவர் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து 23000 கிராம பஞ்சாயத்துகளில் இதற்கான உலோகம் திரட்டும் வேலை நடைபெற்றது.

2022, ஜூன் 4ஆம் தேதி லார்ஸன் அண்ட் டூப்ரோ நிறுவனத்திடம் இந்த திட்டத்திற்கான பணி ஒப்படைக்கப்பட்டது.

இந்த சிலை சுமார் 500 வருடங்களுக்கும் மேலாக நீடித்து இருக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

7

மாந்தாதா பர்வதத்தில் தெற்கு நோக்கி நர்மதா நதியை நோக்கி இது அமைக்கப்பட்டுள்ளது. 54 அடி உள்ள பீடத்தின் மேல் 27 அடி உயரமுள்ள ஒரு தாமரை பீடத்தில் இது அமைக்கப்பட்டுள்ளது. தாமரை பீடமோ சிவப்புவண்ணக் கல்லில் அமைந்துள்ளது.

இதன் எடை 100 டன். இதில நூற்றுக்கணக்கான கலைஞர்கள், எஞ்ஜினியர்கள், சிற்பிகள் ஈடுபட்டனர். சீனாவில் உள்ள நான்செங்கில் இதற்கான உலோக வார்ப்பு செய்யப்பட்டது.  மும்பை வழியாக கடல் மார்க்கமாக இது பத்திரமாக கொண்டு வரப்பட்டது.

சிலையின் எடை 100 டன். 75 அடி உயரமுள்ள மேடையில் இது நிறுவப்பட்டுள்ளது. 88% தாமிரம், 4% துத்தநாகம், 8% காரீயம்(டின்) கொண்டது இது. உள் அமைப்போ வலிமையான ஸ்டீலினால் அமைக்கப்பட்டிருக்கிறது.

சிலையின் அடியில் சங்கர் ஸ்தம்பம் உள்ளது. அதில் 32 மாடங்கள் ஆசார்ய சங்கரரை நினைவுறுத்தும்படி கற்சிற்பங்கள் மற்றும் மர ஸ்தூபங்களுடன் உள்ளன.

ஓவியர் வாசுதேவ காமத் இதற்கான வடிவமைப்பை நிர்மாணித்தார்.

இவருடன் பகவான் ராம்புரா என்பவரும் இணைந்து பணியாற்றினார்.

இத்துடன் பிரம்மாண்டமான கண்காட்சியும் அத்வைத இன்ஸ்டியூட்டும் அமைக்கப்படுவது பாரத தேசத்திற்கு பெருமை சேர்க்கும் ஒன்றாக அமைகிறது. 22.1 ஹெக்டேர் நிலப்பரப்பில் இவை அமைக்கப்படுகின்றன.

வாழ்த்துவோம். சங்கரரை வணங்கிப் போற்றுவோம்!

***

Gandhiji explodes Vaikom Dravidian Myth! (Post No.12,722)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,772

Date uploaded in London – –  –  27 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Where is Vaikom (old spelling Vaikam)?

Vaikom is a small town in Kottayam district of Kerala. It is famous for its Mahadeva Swami temple and Vaikaththu Ashtami festival where several thousands are fed.

What is Vaikom  (Vaikam) Satyagraha?

During the Freedom Struggle, the Congress party leaders joined Mahatma Gandhi in demanding entry for all Hindus including Dalits/ Harijans into temples and approaching  roads.

Who were the people warned by Gandhiji?

Christians and Sikhs wanted to exploit the situation and show it as Anti Hindu movement. Gandhiji warned them not to interfere in Hindu matters. He drove away Christians and asked to close the free kitchens of Sikhs. He never allowed any anti God fellows.

The local Christian leadership was alienated by a statement by Gandhi asking them to keep clear from ‘a Hindu affair’ (April, 1924).[4][17] Sikh Akali activists from Amritsar had also arrived at Vaikom to establish free food kitchens to the satyagrahis (April, 1924).[17] Gandhi called for the closure of the Sikh kitchens (from Wikipedia)

I have got a beautiful book titled

THE EPIC OF TRAVANCORE, MAHADEV DESAI, NAVAJIVAN KARYALAYA, AHMEDABAD, 1937

It requires reprint because it shows the Nambudiri Brahmins, C P Ramaswami Iyer, Narayana Guru, Menons and Nairs brought about a revolution in accepting low caste Hindus entry into the temple. At last, the historical proclamation was issued by the Ruler of Travancore. No where the so called Dravidian Ramaswami Nayakkar name is mentioned. One Dr M E Nayudu from Nagerkoil and Rajaji were the Vaikom heroes from Tamil Nadu. Hundreds of participants were mentioned  except the  so called Vaikam Hero. Everyone must read the book. It is also necessary to bring the book in Tamil. Gandhiji and Mahadev Desai who accompanied him clearly mentioned the names of all important participants.

First let me give an interesting episode narrated by Mahadev Desai in the book:

“We left Pune for Trivandrum on the tenth January. Gandhiji deliberately asked young Kanu, his grand nephew,  to arm himself this time with Dilruba.

I slightly remonstrated. I said to Gandhiji:

You always object to our taking superfluous articles of luggage. Now it is my turn to object . Why add the  Dilruba this time?

We have already added the carding bow and cotton. Why this musical instrument also ?

He smiled and said,

You are right. You may drop out the carding bow if you like, but not the Dilruba. this visit to Travancore is going to be a pilgrimage. We shall have to have Tulsi Ramayan reading everywhere and sometimes, if god wills it, at public places also, and we cannot get a Dilruba there.

I was silenced.

I saw that Gandhiji was already mentally preparing himself for the great pilgrimage” – Mahadeva Desai.

The above incident shows that all those who were associated with Gandhiji in this struggle were great supporters of Hinduism and so Dravidian Nayakkar wont fit into this struggle.

(I know Tamils even erected a statue in Vaikam; but that is nothing but a political gimmick)

In the second part of the article, I will give the names and organisations as told by Gandhiji and Mahadev Desai.

Gandhiji Group with Dilruba instrument in Salt Satyagraha

In fact, the great poet Bharati was the one who inspired all these people. He sang before 1921 Freedom to Paraiahs and Pualaiyas. The two words used in the book.

PARAIYARUKKUM INGU THEEYAR PULAIYARUKKUM VIDUTHALAI; PARAVARODU KURAVARKKUM MARAVARKKUM VIDUTHALAI – Bharati

What a great Deergadarisi / prophet !

விடுதலை! விடுதலை! விடுதலை!

பறைய ருக்கும் இங்கு தீயர்

புலைய ருக்கும் விடுதலை

பரவ ரோடு குறவருக்கும்

மறவ ருக்கும் விடுதலை!

திறமை கொண்டதீமை யற்ற

தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே. (விடுதலை)

ஏழை யென்றும் அடிமையென்றும்

எவனும் இல்லை ஜாதியில்,

இழிவு கொண்ட மனித ரென்பது

இந்தி யாவில் இல்லையே

To be continued…………………………………..

Ags- vaikam, Temple entry, Harijans, Dalits

செங்கன்னூர்  பகவதி கோவில் பற்றி சுவையான கதைகள் தொடர்ச்சி –16 (Post.12,771)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,771

Date uploaded in London – –  –  27 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற  108 கோவில்கள்- PART 16

PART 16

கோவில் எண் 14 – செங்கன்னூர் /செங்கண்ணூர் /திருச் செங்குன்றூர் கோவில் தொடர்ச்சி – part 2

முந்தைய கட்டுரையில் செங்கன்னூர் மஹாதேவர்/ பகவதி கோவில் பற்றிய 3 கதைகளைக் கேட்டோம்

அகஸ்தியர் சோனாத்ரி (Red Hills)  மலைக்கு வந்த கதை, கர்னல் மன்றோ கதை கோவலனின் மனைவி கண்ணகி திருச்செங்குன்றூர் வந்த கதைகளை சொன்னேன்.

இதோ மேலும் 6 சுவையான கதைகள் .

கதை 4

செங்கன்னூர் கிராமத்தின் தாசில்தாராக எம் சி நாராயண பிள்ளை இருந்தார் . டிசம்பர்- ஜனவரியில் 28 நாள் நடக்கும் வருடாந்திர உற்சவத்தை மிக விமரிசையாக நடத்த திட்டமிட்டார்.. 25 நாட்களுக்கு உற்சவம் தடையின்றி நிகழ்ந்தது. 26-ஆவது நாளன்று தேவியின் மாதவிடாய் துவங்கிய அறிகுறிகள் தென்படவே நாராயண பிள்ளையிடம் அர்ச்சகர்கள் சொன்னார்கள் ; பிள்ளைக்குப் பேரதிர்ச்சி ; ஆயினும் இவ்வளவு  விமரிசையாக நடந்து கொண்டிருக்கும் விழாவினை நிறுத்தராதீர்கள் என்று சொன்னார். அர்ச்சகர்களையும் மெளனம் காக்கும்படி  கட்டளையிட்டார். அனறிரவு அவருடைய மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டதோடு கவலைப்படும் அளவுக்கு நிலைமை மாறியது. அவர் தேவியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தக்க பரிகாரங்களை செய்தார். பின்னர் மனைவி குணம் அடைந்தார்

கதை 5

தட்சன் (தக்கன்) என்பவன் பார்வதியின் தந்தை; மாமனார்- மருமகன் மோதலால் சிவனை அவமானப்படுத்த ஒரு பெரிய யாகத்தை ஏற்பாடு செய்தான். பார்வதிக்கு விஷயம் எட்டியது; அவள் தட்சனின் மக்கள் ஆதலால் சம்ஸ்க்ருத இலக்கணப்படி அவளை தாட்சாயினி என்றும் அழைப்பர் (மிதிலைப் பெண்ணை மைதிலி என்போம்; காந்தார நாட்டிலிருந்து வந்தவளை காந்தாரி என்போம்; ஜனகரின் மகளை ஜானகி என்போம் ; தசரதன்  மகனை தாசரதி என்போம்; இது ஸம்ஸ்க்ருதப் பெயரிடும் முறை .)

தட்சாயியினி ‘என் அப்பனை ஒரு கேள்வி கேட்டு மடக்கிவிட்டு வருகிறேன்’ என்று புறப்பட்டாள்; சிவன் சொன்னார் :

போகாதே போகாதே என் டார்லிங் /DARLING

பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன் (வீர பாண்டிய கட்டபொம்மன் திரைப்படப் பாடல் போல).

அவளுக்கோ அப்பாவை ஒரு கை பார்த்துவிடவேண்டும் என்ற ஆவேசம்;.

கணவன் சொல்லியும் மீறிப்போனாள் .

டேய் உங்கப்பன் மவனே! என்னடா நினைத்ததாய் என் கணவனைப் பற்றி;  ;திரிபுரங்களையும் ஒரு சிரிப்பு சிரித்து எரித்தவன் என் கணவன்; காம வேட்கையைத் தூண்ட வந்த மன்மதனை எரித்தவன் என் கணவன் என்று டயலாக் பேசினாள் ; அகந்தையின் மறு உருவான தக்கனோ அடிப் போடீ! பைத்தியக்காரி நான் அறியாத தவனா ? சின்னஞ் சிறியவனா  (தாமரை நெஞ்சம் திரைப்படப்பாடல் ) என்று பாடினான் .

அப்பா, உன் யாகத்துக்கு முடிவு காட்டுகிறேன் என்று யாகத்தீயில்  விழுந்தாள் ; உடல் கருகியது ! உலகமே இருண்டது ! பூவுலகம் சக்தியை இழந்தது; காரணத்தை அறிந்த சிவன் உடுக்கை ஒலியை எழுப்பி புறப்பட்டார்; தக்கனைத் துவம்சம் செய்தார்; கருகிய மனைவியின் உடலைத் தூக்கிக்கொண்டு பாரத நாடே அதிரும்படி ஆடினார். சிவனின் ஆட்டத்தை அடக்கும்படி எல்லோரும் விஷ்ணுவிடம் மன்றாடினார்கள் ; சிவனின் ஆட்டத்துக்குக் காரணம் தாட்சாயியினியின்  உடல் என்பதை அறிந்து சுதர்சன சக்கரத்தை ஏவி துண்டு துண்டாக வெட்டினார் ;அப்போது தேவியின் உடற்பகுதிகள் விழுந்த இடம் எல்லாம் புனிதம் அடைந்தன . அவை விழுந்த 51 இடங்களையும் ரிஷி முனிவர்கள் கண்டறிந்து சக்திக் கேந்திரங்களை உண்டாக்கினர் ; மன்னர்களை அழைத்து கட்டிடம் கட்ட கட்டளையிட்டனர்  அப்போது தேவியின் இடுப்பின் கீழ்ப் பகுதிகள் அஸ்ஸாமில் கெளஹாத்தியிலும் கேரளத்தில் செங்கனூரிலும் விழுந்தன. ஆகையால் இந்த இரண்டு கோவில்களில் இறைவிக்கு  மாதவிலக்கு உண்டு .

அஸ்ஸாம் கோவிலை ஒப்பிட்டுப் பார்த்தால் மேலும் பல ஒற்றுமைகள் விளங்கும். ஒரு வேளை பெண்களின் மாதவிலக்கு எவ்வளவு புனித மானதுமதிக்கப்பட வேண்டியது என்பதை ஆண்களுக்கு உணர்த்தவே அஸ்ஸாமிலும் கேரளத்திலும் இத்தகைய கோவில்கள் உருவாயின என்றும் சொல்லலாம். மாதவிலக்கு பற்றிய சங்க இலக்கிய பாடல்தான் இந்த வகையில் முதல் பாடல் (எனது குறுந்தொகை ஆராய்ச்சிக் கட்டுரையில் மேல் விவரம் உளது.)

கதை 6

 1724ம் ஆண்டில் நடந்த சம்பவம் .

கோவிலுக்கு அஷ்ட பந்த கலசம் நிறுவ கோவில் நிர்வாகம் முடிவு செய்ததது. கோவிலின் கீழத்தெருவில் வசித்த பிரபல ஜோதிடர் கிருஷ்ணபி ள்ளையிடம் நல்ல நேரம், நல்ல நாள் குறித்துத் தருமாறு வேண்டினர். அவரும் மீனம் மாதம் எட்டாம் நாள் நண்பகல் என்று நாள் குறித்தார். அதை உறுதிசெய்யும் வகையில் அன்று பகலில் கோவில் கோபுரம் மீது மயில் வந்தது அமரும் என்றும் சொன்னார். மணி 12 ஆயிற்று மயிலைக் காணோம்; பிள்ளையையும் நூறுக்கணக்கான மக்கள் வானத்தை பார்த்தபடி நின்றனர். விழா ஏற்பாட்டினைச் செய்தவர்களும் திகைத்து நின்றனர் . ஆனால் போட்டி ஜோதிடர் மூத்தது அங்கே இருந்தார். அவருக்கும் கிருஷ்ன பிள்ளைக்கும் ஆகாது. அந்த நேரத்தில் ஒரு ஆண்டிப் பண்டாரம் மயில் தோ கையுடன் வந்து நின்றான். இது போதுமே; தொடங்குங்கள் நிகழ்சசியினை என்றார் . சடங்குகள் முடியும் தருவாயில் கிருஷ்ண பிள்ளையும் வந்து சேர்ந்தார் அடக் கடவுளே; கெட்ட நேரத்தில் விழாவைத் துவங்கி விட்டீர்களே! இது கோவிலுக்கே ஆபத்தே  என்றார் . சில மாதங்களில் பெரிய தீ விபத்து ஏற்பட்டு கீழைக் கோபுரம், கூத்தம்பலம் முதலியன எரிந்து சாம்பல் ஆயின. பின்னர் சீர்திருத்த வேலைகள் ஆமை வேகத்தில் நடந்தன. திவான் வேலையில் இருந்த கர்னல் மன்றோ இந்தக் கோவிலையும், ஏனைய கோவில்களையும் அரசாங்கக் கட்டுப்பாட்டின்கீழ் கொணர்ந்தார்.

கதை 7

தமிழ் நாட்டில் அந்தக்காலத்தில் சொல்லுவார்கள் : சாமிக்கு முன்னால் நின்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறேன் என்று. இதே போல கேரளத்தில் பகவதி கோவில் சத்தியமும் பிரசித்தம் . கோவிலின் மேற்கு கோபுரத்தின் வல து புறம் மேலை நடாவில் . ஒரு துவாரம் உள்ளது. யாரேனும் தான் சொல்லுவது சத்தியம் என்று காட்ட அந்த துவாரத்தில் கைவிரலை விட்டு சத்தியம் செய்வார். பொய் சொன்னால் அந்தப் பொந்திலுள்ள பாம்பு அவரைக் கடித்து சாக வைத்துவிடும் என்ற நமபிக்கையே இதற்கு காரணம். செங்கன்னூர் மேல நடா என்றால் எல்லோருக்கும் பயம்தான் !

தமிழ் நாட்டிலிருந்து வந்த ஒரு வைத்தியர் தானும் பாம்புக்கடிக்கு மருந்து வைத்திருப்பதாக பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தார். அந்த ஊரில் ஏற்கனவே பாம்புக் கடிகளைத் தீர்த்து வந்த குலத்தில் ஒரு விதவையும் ஒரு 12 வயதுச் சிறுவனும் மட்டுமே எஞ்சி இருந்தனர். ஒரு நாள் அந்தப் பையன் கோவிலுக்கு பிராத்தனை செய்யச் சென்ற போது , கோவிலில் யாராவது நோயாளி வரமாட்டானா என்று தமிழ் வைத்தியரும் காத்திருந்தார். ஒருவர் அந்தப் பையனை அழைத்துச் சென்று இந்தப் பையன் குடும்பமும் பரம்பரை, பரம்பரையாக விஷக்கடி  வைத்தியம் செய்துவருகின்றனர் என்று சொல்லி அறிமுகப்படுத்தினார் . அவர் உடனே பையனுக்கு சவால் விடுத்தார் அந்தப் பையன் அம்மாவிடம் சென்று அம்மா புதுசா ஊருக்கு வந்த ஆள் நமக்கு எல்லாம் ஒன்னும் தெரியாதுன்னு சொல்றான் அம்மா என்று வருத்தத்தோடு சொன்னான். அன்றிரவு அந்தப்பையன் கனவில் ஒரு குழாயும் அதற்குள் நாகப்பாம்பும் இருப்பதாக வந்தது. நாக தேவன் இதை அந்த வைத்தியரிடம் எடுத்துச் சென்று உன் சக்தியைக்காட்டு என்று உத்தரவு வந்தது .

நாக தேவன் கனவில் சொன்னபடி குழாய் இருந்தது. மறுநாள் அந்தப் பையன் வைத்தியரிடம் சென்று இதோ பார்! பாம்பு என்று குழாயைக் காட்ட அந்த பாம்பு வெளியே குதித்து அவனைச் சுற்றி வந்து மிரட்டியது. தமிழ் வைத்தியன் பயந்து போய் மன்னிப்புக் கேட்டவுடன் பாம்புக்கு சின்னப்பையன் கட்டளையிடவே அவன் சொ ன்னபடி பாம்பும் குழாய்க்குள் சென்றது. அந்தக் குழாயை அவன் மேல நடாவில் புதைத்து வைத்தான். அதுதான் இன்றுவரை சத்தியப் பிரமாண துவாரமாக இருக்கிறது  தமிழ் வைத்தியன் தான் கொண்டு வந்த பாம்புக்கடி மருந்துகளைக் குழி தோண்டி புதைத்துவிட்டு நடையைக் கட்டினான். இப்போதும் மக்கள் அந்தக் குழியின் மீது நின்று பிராத்திக்கிறார்கள் அப்படிச் செய்தால் பாம்புக் கடி பயம் வராது.

To be continued……………………………….

–subham—

Tags– செங்கன்னூர், கதைகள், விஷக்கடி வைத்தியம். பாம்பு, தட்சன் கதை, கெளஹாத்தி போலவே ; உடலின் கீழ்ப்பகுதி, 51 சக்திக் கேந்திரங்கள்

அதீத உளவியலும் அதிசயங்கள் கண்ட அறிஞர்களும்! (Post No.12,770)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,770

Date uploaded in London –  –  27 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

 1 அதீத உளவியலும் அதிசயங்கள் கண்ட அறிஞர்களும்! 

இமானுவேல் ஸ்வீடன்பர்க்

ச.நாகராஜன்

 பிரபல டைரக்டரும் கதாசிரியரும் பத்திரிகை ஆசிரியருமான திரு கே. பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழில் விந்தை மனிதர்கள், விந்தைப் பெண்மணிகள் பற்றிய ஒரு கட்டுரைத் தொடரை எழுதி வந்தேன்.

இந்தத் தொடரில் மேஜிக் மன்னன் ஹௌடினி, மேஜிக் நிபுணர் அலெக்ஸாண்டர் ஹெர்மன், உல்ப் மெஸ்ஸிங், ரஸ்புடீன், எட்கர் கேஸ், மெஸ்மர், க்விம்பி, அரிகோ, ஹோம், எக்லிங்டன், முல்டூன், லியனார்டோ டாவின்சி, மைக்கேல் காக்லின், சீரோ, ஜான் டீ, நாஸ்டர்டாம், நெல்ஸன் பால்மர், ராபின் வின்போ, சார்லஸ் ஃபோர்ட், யூரி கெல்லர், ஆரூட ராணி லெனார்மனா, ஜீன் டிக்ஸன், ஃபாக்ஸ் சகோதரிகள், ஃப்ளோரென்ஸ் குக், மேடம் ப்ளாவட்ஸ்கி, பெட்டி ஷைன், ஜோன் குய்க்வி, ஜோயன்னா சௌத்காட் ஆகியோர் பற்றி சுவையான தகவல்களைத் தந்தேன்.

இது தவிர பாக்யாவில் ஒன்பது வருடங்கள் தொடர்ந்த அறிவியல் துளிகள் தொடரில் கார்ல் ஜங் உள்ளிட்ட இன்னும் பலரைப் பற்றிய விவரங்களைத் தர முடிந்தது.

என்றாலும் கூட அதீத உளவியலையும், ஆவி உலகையும் ஆராய்ந்த ஏராளமானோரின் பட்டியல் மிக நீண்ட ஒன்று.

நம்ப முடியாத ஆனால் நிஜமாகவே நடந்த பல விஷயங்களை இந்த அறிஞர்கள் ஆராய்ந்தனர்; உலகிற்குத் தங்கள். முடிவுகளை அறிவித்தனர்.

இவர்களில் இன்னும் சிலரைப் பற்றி அறிமுகம் செய்வதே இந்தத் தொடரின் நோக்கம்.

உள்ளே நுழைவோம்; இன்னும் சிலரைப் பார்ப்போம்.

இமானுவேல் ஸ்வீடன்பர்க்

இமானுவேல் ஸ்வீடன்பர்க் (Emanuel Swedenborg – 1688-1772) ஸ்வீடனைச் சேர்ந்த ஒரு எஞ்ஜினியர், தத்துவஞானி, இறையியல் வல்லுநர், அதீத உளவியலாளர்.

பைபிளில் உள்ள உரைகளுக்கு அவர் புதிய விளக்கங்களை அளித்தார். இதனால் நியூ சர்ச் உருவானது.

இவர் ஆவிகள் உலகத்தை நன்கு அறிந்தவர். ஆகவே பல அதிசய சம்பவங்களை இவரால் செய்து காண்பிக்க முடிந்தது.

ஏராளமான சம்பவங்களில் இங்கு சிலவற்றைப் பார்ப்போம்.

இது 1759ஆம் ஆண்டு நடந்தது. கோதன்பர்க்கில் ஒரு வீட்டில் பார்ட்டி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஸ்வீடன்பர்க், 420 கிலோமீட்டர் தள்ளி உள்ள ஸ்டாக்ஹோமில் இருந்த தனது வீட்டருகில் தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி வருவதாக உணர்ந்தார். பிறகு சற்று நேரத்தில் தீயானது தனது மூன்று வீட்டிற்கு முன்னால் அணைக்கப்பட்டு விட்டதாக உணர்ந்து அமைதியானார். அவர் மனக்கண்ணில் கண்ட காட்சி பின்னால் சரிபார்க்கப்பட்டு உண்மைதான் என்று அறியப்பட்டது. எமில் க்ளீன் (Emil Kleen) என்ற மருத்துவர் இது ஒரு கட்டுக்கதை என்று நினைத்தவர் தீவிரமாக விசாரணை செய்து ஆராய ஆரம்பித்தார். அது உண்மை என்பது தெரிய வந்தது. இதை எப்படி பகுத்தறிவு மூலம் விளக்குவது என்று அவருக்குப் புரியவில்லை; திகைத்தார்.

இன்னொரு சம்பவமும் 1759இல் நடந்தது. இது பற்றி அதிகம் பேசாமல்

ஸ்வீடன்பர்க் மௌனம் சாதித்தார். ஏனெனில் இது ப்ரஷ்யா ராணி லூசியா உல்ரிகா (Queen Lousia Ulrika) மற்றும் அவரது காலம் சென்ற இளவரசர் விஹெல்ம் (Prince Wilhelm of Prussia) சம்பந்தப்பட்ட விஷயம்!  ராணியும் இளவரசரும் தோல்வி அடைந்த ஒரு சதிவேலையில் ஈடுபட்டிருந்தனர். இறந்துபோன இளவரசர் ஆவியைத் தொடர்பு கொண்டு இளவரசரிடமிருந்து ராணி அறிய வேண்டிய விஷயத்தைக் கேட்டு அவருக்குச் சொன்னார் ஸ்வீடன்பர்க். ‘நான் சுலபமாக ஏமாறுபவள் இல்லை’ என்று ராணி கூறினார். ஸ்வீடன்பர்க் கூறிய விஷயம் மிகச் சரியாகவே இருந்தது.

மூன்றாவது சம்பவம் இது:

ஸ்வீடனில் நியமிக்கப்பட்ட நெதர்லாந்தை சேர்ந்த தூதுவரின் விதவை மனைவி தான் வாங்கிய ஒரு வெள்ளிப்பாத்திரத்திற்கான பில்லைக் காணவில்லை என்று தேட ஆரம்பித்தார். வெள்ளிப்பாத்திரத்தைச் செய்த வியாபாரியோ அந்தப் பாத்திரத்திற்கான பணம் தனக்கு வரவில்லை என்றும் வந்திருப்பதாக இருந்தால் பில் இருக்க வேண்டுமே என்றும் ஆணித்தரமாக வாதிட்டார். ஸ்வீடன்பர்க்கிற்கு இந்த விவரம் தெரிய வந்தது. உடனே அவர் தூதரின் ஆவியோடு தொடர்பு கொண்டார். பில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும் அறிந்தார். அதை அவரது விதவை மனைவிடம் கூற அவர் அந்த இடத்தில் இருந்த பில்லை எடுத்து வியாபாரியிடம் காட்ட பிரச்சினை முடிவுக்கு வந்தது. இன்னொரு கூற்றின் படி ஸ்வீடன்பர்க் தூதரிடம் அவரது மனைவியின் பிரச்சினையை விளக்கியதாகவும் அன்று இரவு தூதர் தனது மனைவியின் கனவில் வந்து பில் இருக்கும் இடத்தைக் காட்டியதாகவும் கூறப்படுகிறது.

இப்படி ஏராளமான சம்பவங்கள் ஸ்வீடன்பர்க் வாழ்க்கையில் உண்டு.

அவரது ஹெவன் அண்ட் ஹெல் (Heaven and Hell) என்ற புத்தகம் ஏராளமானோரால் படிக்கப்பட்ட புத்தகம்.

இவரைப் பற்றித் தொடர்ந்து ஏராளமான நூல்கள் இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன.

ஆவி உலகம் உண்டு என்பதையும் இறந்த ஆத்மாக்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டியவர் ஸ்வீடன்பர்க்!

இவர் ஒரு விந்தை மனிதர் தானே!

***