Rare Pictures from Anti Hindu Book : Strange Hindu Fakirs of India  – Part 3 (Post.12,750)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,750

Date uploaded in London – –  –  22 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART 3- Strange Hindu Fakirs of India

Book title

Story of The World’s Worships, Frank S Dobbins,

Chicago, 1901

Third part contains strange looking saints of India: This part is mocking at Hindu saints.

Tamils’ Thookku Kaavadi is mocked at.

–subham—

 Tags- rare pictures, Hindu fakirs, Strange saints, anti hindu book, Thookku Kavadi.

கூடல் மாணிக்யம் பரதன் கோவில் — Part 11 (Post No.12,749)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,749

Date uploaded in London – –  –  22 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 11

கோவில் எண் 10 –   கூடல் மாணிக்யத்தில் பரதனுக்கு கோவில்

ராம பிரான் தம்பிக்கு தனியாக கோவில் இருப்பது அபூர்வமே ; மலையாளி இந்துக்கள் தசரதனின் 4 மகன்களுக்கும் கோவில் கட்டிப் போற்றி வழிபடுகிறார்கள்

ஆயிரம் ராமனுக்கு ஒப்பானவன் பரதன் என்பான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்

2337.    ‘தாய் உரைகொண்டு தாதை உதவிய

     தரணிதன்னை,

‘‘தீவினை” என்ன நீத்து,

     சிந்தனை முகத்தில் தேக்கி,

போயினை என்றபோழ்து, புகழினோய்!

     தன்மை கண்டால்,

ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ,

     தெரியின் அம்மா! — கம்ப ராமாயணம்

பொருள் :–   புகழ் உடையவனே!;  (உன்)

தாயாகியகைகேயியின் ‘வரம்’ என்கின்ற வார்த்தையைக் கொண்டு;  (உன்) தந்தையாகிய தயரதன் அளித்த;  (கோசல நாட்டு) அரசாட்சியை;  தீயவினை வந்து சேர்ந்தது  போலக் கருதிக் கைவிட்டு;முகத்தில் கவலை தேங்கியவனாய்; (வனத்துக்கு) வந்தாய்; என்ற காலத்தில்; நல்லியல்புகளை  அறியுமிடத்து, ஆராய்ந்தால் ஆயிரம் இராமர் நின்கேழ்ஆவரோ – ஆயிரம் இராமர்கள் உளரானாலும் நின் ஒருவனுக்குச் சமானம் ஆவரோ; அம்மா!

பரதன் பெயரை நினைத்தாலே ஞானமும் பக்தியும் வரும்; வளரும் என்று ராஜாஜி, ராமாயணம் என்ற நூலில் குறிப்பிடுகிறார்

பரதன் கோவில் எங்கே இருக்கிறது ?

திருச்சூர் மாவட்டத்தில் திருச்சூர் நகரிலிருந்து 22 கிலோமீட்டரில் உள்ள இரிஞ்சாலக்குடா என்னும் ஊரில் பரதன் கோவில் இருக்கிறது . நாட்டிலேயே பரதனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில் இது ஒன்றுதான்.

ஆயினும் ராமர் கோவில் போலவே இங்கும் விஷ்ணுதான் இருக்கிறார்; அவர் பெயர் சங்கமேஸ்வரன் ; கோவிலில் நான்கு குளங்கள் இருப்பது இதன் தனிச் சிறப்பு. பரதன் நான்கு கரங்களுடன், வலதுபக்க மேற்கரத்தில் தண்டம், கீழ் கரத்தில் அட்சமாலை, இடதுபக்க மேற்கரத்தில் சக்கரம், கீழ் கரத்தில் சங்கும் கொண்டு நின்ற வாறு கரிசனம் தருகிறார் .

குலிப்பிணித் தீர்த்தம் கோவிலுக்குள் இருக்கிறது. ஏனைய 3 குளங்கள் கோவிலுக்கு வெளியே உள்ளன.

வக்கையில் கைமால் என்ற நிலப் பிரபுவிடம் மீனவர்கள் கடற்கரையில் கண்ட ராம லட்சுமண பரத , சத்ருக்கன ஆகிய  4 சிலைகளைக் கொண்டுவந்து கொடுத்தவுடன் அவர் அவைகளை 4 இடங்களில் பிரதிஷ்டை செய்ததால்  அவை நாலம்பலம் (நான்கு+ அம்பலம்) என்று அழைக்கப்பட்டன

XXXX

TAMIL WORD AROUND THE WORLD

TEMPLE டெம்பிள் என்ற ஆங்கிலச் சொல் மத்திய கிழக்கில் மெசபொடோமியாவில் உள்ள தளி TELE  என்ற சொற்கள் எல்லாம் ஒரே மூலத்திலிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது

TELE IN MESOPOTAMIA = TE(MP) LE

AMPLE= AMPALA = TEMPLE

XXXX

இனி கோவிலின் சிறப்புகளைக் காணலாம்

மீனவர்கள் அவைகளை மீட்டுக் கொணர்வதற்கு முன்னர், வக்கையில்  கைமால் கனவில் சிலைகளைக் கண்டதாகவும் அதனால்தான் அவர் மீனவர்களுக்கு கட்டளை இட்டார் என்றும் சொல்லப்படுகிறது

கோவிலில் உள்ள குலிப்பிணி  தீர்த்தக் குளம் பற்றியும் ஒரு கதை இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த இடம் எல்லாம் காடுகள் மண்டிக்கிடந்தன ; காட்டில் தவம் செய்த குலிப்பிணி மகரிஷி கங்கா தேவியை வேண்டிக்கொள்ளவே கங்கை இங்கு பாய்ந்ததாகவும் அதன் ஒரு பகுதியே என்று தீர்த்தக்குளமாக இருக்கிறது என்றும் செப்புவர். அந்தக்குளம் புனிதமாக கருதப்பட்டு அங்குள்ள மீன்களுக்கு உணவு படைப்பது மீனூட்டு என்ற நேர்த்திக் கடனாக இருக்கிறது

கூடல் மாணிக்யம் பெயர்க்காரணம்

இந்தக் கோவிலுக்கு கூடல் மாணிக்கம் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும் பார்ப்போம். இறைவனின் நெற்றியில் ஒரு ஒளிக்கற்றை தோன்றியபோது அதை ஒப்பிட்டுப்பார்ப்பதற்காக காயம்குள ம்  ராஜா கையிலிருந்த மாணிக்கக்  கல்லை கொண்டுவந்தபோது இரண்டும் ஒட்டிக்கொண்டாதாம் ; இவ்வாறு இரண்டு மணிகளும் கூடியதால் கூடல் மாணிக்கம் ஆனது. இவை எல்லாம் செவி வழிக் கதைகள்.

சங்கமேஸ்வரன் பெயர் ஏன் ?

இரண்டு அல்லது மூன்று நதிகள் கூடும்  இடத்தை சங்கம் /  சங்கமம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லால் குறிப்பிடுவர். (சம்ஸ்க்ருதத்தில் ச, ஸ ஷ ஆகிய எழுத்துக்களில் துவங்கும் சொற்கள்தான் அதிகம். இதனால் தமிழில் ச என்னும் எழுத்தில் சொற்களே இருக்கக்கூடாது என்று தொல்காப்பியன் என்ற பிராமணன் தடை விதித்தார் . சங்க இலக்கியத்தில் உள்ள ஒரு லட்சம் சொற்களில் ச எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்; அவையும் ஸம்ஸ்க்ருதச் சொற்கள்!)

முன்னொருகாலத்தில் இரிஞ்சால குடா என்னும் இந்த ஊர் இரண்டு நதிகளின் சந்த்திப்பில்/ சங்கமத்தில்  இருந்தன. காலப்போக்கில் நதிகள் தனது போக்கை மாற்றிக்கொண்டன. ஆயினும் இன்றும் கூட ஆராட்டு என்னும் இறைவனைக் குளிப்பாட்டும் வைபவம் சாலக்குடி ஆற்றில் ஓராண்டும் குரு மலி ஆற்றில் ஓராண்டும் நடைபெறுகிறது .

இதனால் இங்குள்ள இறைவனை  சங்கமேஸ்வரன் என்றும் பக்தர்கள் பகர்வர்.

வினோத வழிபாடு

சங்கம ஈஸ்வரன் பெயருக்கு இன்னும் ஒரு  சுவையான கதை !

இந்தக் கோவிலின் சிறப்பு வினோதம் , விசித்திரம் என்ன வென்றால் பூஜை செய்யும் அர்ச்சகர் இறைவனை  சிவன் , விஷ்ணு, தேவி என்ற பெயர்களில் அர்ச்சிப்பார். இதற்குப் பின்னாலும் ஒரு கதை உண்டு. தளிப்பரம்பா என்ற ஊரைச் சேர்ந்த  ஒரு மஹான் கேரளத்தில் பல கோவில்களுக்கு விஜயம் செய்து பல கோவில்களின் சக்தியை அவர் கொண்டுபோன சங்குக்குள் அடக்கினாராம். அவைகளைத் தங்கள் ஊர் தெய்வத்திற்குகே கொடுக்க அவர் இவ்வாறு செய்தார். தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது பழமொழி அல்லவா? அதற்கு ஏற்ப அவர் கொண்டு போன சங்கு கூடல் மாணிக்யம் சந்நிதியில் விழுந்து உடைந்தது. அப்போது அந்த சங்கிலுள்ள எல்லா சக்தியும் இறைவனிடத்தில் சங்கமம் ஆனதால் (இணைந்ததால்) இறைவனின் திருநாமம் சங்கம ஈஸ்வரனாக மாறியது .

XXXX

கோவிலின் தனிச் சிறப்புகள்

கேரளத்தில் எல்லா பெரிய கோவில்களிலும் 5 பூஜைகள் நடக்கும் ; இங்கு மூன்று வேளை பூஜைகள் மட்டும்தான் ( தமிழ் நாட்டில் ஆறு கால பூஜை!)

கோவிலில் பரிவார தேவதைகள் சந்நிதிகள் கிடையாது .

தாமரை, துளசி தெச்சி பூக்கள் போன்ற சில மலர்களை மட்டுமே பூஜைக்கு ஏற்பார்கள் ;

தீர்த்தக் குளத்தில் மீன்களைத் தவிர வேறு தவளை, தண்ணீர் பாம்பு முதலிய பிராணிகள்  இராது ;

வழுதுணங்காய் (கத்தரிக்காய்) நைவேத்யம் : ஒரு பக்தருக்கு வயிற்று வலி ஏற்பட்ட பொழு து இறைவனே கனவில் தோன்றி 101 கத்தரிக்காய்களைக் கொண்டுவந்து நைவேத்தியம் செய்யச் சொன்னாராம் அவர் அப்படிச் செய்தவுடன் வயிற்று வலியும் நீங்கியது . அதுமுதல் வழுதுணங்காயை இறைவனுக்குப் படைப்பது வழக்கம் ஆகிவிட்டது .

xxxx

கோவிலின் கலை வேலைப்பாடுகள்

திருச்குர் – எர்ணாகுளம்  பாதையில் உள்ள இரிஞ்சலகுடா ரயில் நிலையத்திலிருந்து   5 மைல் தொலைவில் ஊர் இருக்கிறது. பெரிய கிழக்கு வாயில் வழியாக கோவிலை அடையலாம் அந்த அலங்கார வாயிலில் பல கண்கவரும் சிற்பங்கள் உண்டு.

கோவிலுக்குள் இரு புறச் சுவர்களிலும் வண்ண ஓவியங்கள் நம்மை வரவேற்கும்; இடதுபுறம் கூட்டம்பலம் ; வலது புறம் குளம்;  ஸ்ரீ கோவில் வட்ட வடிவில் இருக்கிறது மேலே தங்க ஸ்தூபி; கூரை முழுதும் செப்புத் தகடுகள் ; வெளிப்புறச்ச சுவர்களில் அழகிய மரச் சிற்பங்கள்

xxx

திருவிழாக்கள்

துலா மாத (அக்டோபர்- நவம்பர்)  திருவோண நட்சத்திரத்தன்று அறுவடையான புது அரிசி ஆண்டவனுக்கு  அர்பணிக்கப்படும் இதைத் தொடர்ந்து பெரிய விருந்து நடக்கும். மறுநாள் முக்கிடி என்னும் ஆயுர்வேத மருந்து நைவேத்யம் நடக்கும். இது பல நோய்களுக்கு நல்ல மருந்து .

மேடம்/ மேஷ மாதத்தில் (ஏப்ரல் – மே ) ஆண்டு விழா நடக்கிறது கேரளத்திலுள்ளா எல்லாக் கோவில்களிலும் நடக்கும் யானைகள் பவனி, சங்கீதம் முதலியன இங்கும் உண்டு.. திருவாங்க்கூர் மஹாராஜா பிரதிநிதி தச்சுடைய கைமால் தலைமையிலுள்ள கமிட்டி,  கோவில் நிர்வாகத்தை நடத்துகிறது .

–subham—

Tags- கூடல் மாணிக்யம் , பரதன் கோவில், சங்கமேஸ்வரன், குலி பினி , தீர்த்தம், முக்கிடி, வைக்கையில் ,கைமால் ,

ஸ்டோன் பொய் பேசாது (‘Stones will never lie’) Post N0.12,748)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,748

Date uploaded in London –  –  22 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 11 

ச.நாகராஜன் 

டிக்கட் ப்ளீஸ்?

பிரபல எழுத்தாளரான ஜி.கே. செஸ்டர்டன் (G.K.Chesterton) (பிறப்பு 29-5-1874 மறைவு 14-6-1936) ஒரு முறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஏதோ ஒரு பத்திரிகையை அவர் படித்துக் கொண்டிருந்த போது அவரிடம் வந்த டிக்கட் பரிசோதகர், ‘டிக்கட் ப்ளீஸ்?’ என்று கேட்டார்.

உடனே செஸ்டர்டன் தனது பையில் தேட ஆரம்பித்தார்.

 டிக்கட் பரிசோதகரோ, “பரவாயில்லை, உங்களிடம் டிக்கட் இருக்கும் என்று எனக்குத் தெரியும். திரும்பி வரும்போது டிக்கட்டை பஞ்ச் செய்கிறேன்” என்றார்.

செஸ்டர்டன், “அதில்லை, நான் எங்கே போக வேண்டும் என்று எனக்குத் தெரிய வேண்டுமல்லவா, அதற்கு டிக்கட் வேண்டுமே” என்றார்.

ஸ்டோன் பொய் பேசாது (‘Stones will never lie’)

ஏ.எஸ்.பி. ஐயர் (A.S.P. Iyer) புகழ் பெற்ற எழுத்தாளர், பிரபல நீதிபதியாகவும் திகழ்ந்தவர். (பிறப்பு 26-1-1899 மறைவு 1963)

அவர் கேரளாவில் பிறந்தவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

அவர் ஆக்ஸ்போர்டில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் சரித்திரப் பேராசிரியாக இருந்தவர் திரு ஸ்டோன் என்பவர்.  அசோக மன்னரின் ஸ்தூபங்களைப் பற்றி அவர் விரிவாக விளக்கிக் கொண்டிருந்தார்.

அசோக மன்னன் அந்த ஸ்தூபங்களை நிறுவவே இல்லை என்றும் அவர் புகழைப் பரப்ப விரும்பிய ஒருவர் அந்த ஸ்தூபங்களில் அவர் பெயரைப் பொறித்து விட்டார் என்றும் ஸ்டோன் கூறினார். இதைப் பொறுக்கமாட்டாத ஏ.எஸ்.பி. ஐயர் தனது இருக்கையிலிருந்து எழுந்தார்.

பேராசிரியர் ஸ்டோனை நோக்கிச் சுட்டிக் காட்டிய வண்ணம் “கற்கள் எப்போதுமே பொய் சொல்லாது, இந்த ஸ்டோன் ஒருவேளை சொல்லலாம்” (Stones will never lie although this Stone may)

என்று கூறி விட்டு அவர் அமர்ந்தார்.

ஆதாரம் : 16-8-2000 அன்று திரு கே.வெங்கடராமன் என்பவர் ஆங்கில நாளிதழான தி ஹிந்துவில் எழுதிய கடிதம்.11-8-2000 அன்று ‘Ashoka’s edict’ என்று பிரசுரமான கடிதத்திற்கு அவர் இப்படி பதில் எழுதியிருந்தார்.

எல்லாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை!

காலம் சென்ற பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒரு சமயம் பாரிஸ் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலைப்பொருள் கண்காட்சிக்குச் சென்றிந்தார். அங்கு கலையம்சம் பொருந்திய ஓவியங்களைப் பார்த்துக் கொண்டே வந்தார். அப்போது அவரிடம், “ஓவியங்களைப் பார்க்கிறீர்களே, அவற்றைப் புரிந்து கொண்டீர்களா?” என்று கேட்ட போது அவர் பெருமூச்சு விட்டபடி கூறினார் இப்படி: “எனது வாழ்க்கை முழுவதும் கழிந்த பின்னர் நான் புரிந்து கொண்டது எல்லா விஷயங்களையும் புரிந்து கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை என்பதைத் தான்!” (With a sigh he said, “It has taken me all my life to understand that it is not necessary to understand everything.”)

ஆதாரம் : ஒஷோ எழுதிய Yoga : The alpha and omega என்ற நூல்.

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 26 (Post No.12,747)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,747

Date uploaded in London – –  –  21 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxxx

PART 26-Slokas     83, 84, 85,86

ऐश्वर्यस्य विभूषणं सुजनता शौर्यस्य वाक्संयमो

        ज्ञानस्योपशमः श्रुतस्य विनयो वित्तस्य पात्रे व्ययः ।

अक्रोधस्तपसः क्षमा प्रभवितुर्धर्मस्य निर्व्याजता

        सर्वेषामपि सर्वकारणमिदं शीलं परं भूषणम् ॥ 83॥

செல்வத்தில் திளைப்பவர்களின் அணிகலன் – கருணை வீரம் மிக்கவர்களின் அணிகலன்- மெளனம் ;

விவேகமுள்ளவர்களின் அணிகலன்– அடக்கம்கற்றோரின் அணிகலன்- பணிவுசெல்வத்துக்கு அழகு பகிர்ந்து கொள்ளுதல்தவ சீலர்களின் அணிகலன் சினமின்மைபலசாலியின் அணிகலன் சகிப்புத்தன்மைநேர்மையாளர்களின் அணிகலன் உண்மைஇவர்கள் எல்லோருக்கும் அணிகலன்—நல்லொழுக்கம்— 83

ஐஶ்வர்யஸ்ய விபூஷணம் ஸுஜனதா ஶௌர்யஸ்ய வாக்ஸம்யமோ

ஜ்ஞானஸ்யோபஶம ஹ ஶ்ருதஸ்ய வினயோ வித்தஸ்ய பாத்ரே வ்யய ஹ |

அக்ரோதஸ்தபஸ ஹ க்ஷமா ப்ரபவிதுர்தர்மஸ்ய நிர்வாஜதா

ஸர்வேஷாம் அபி ஸர்வகாரணம் இதம் ஶீலம் பரம் பூஷணம் || 1.83 ||

83. Kindness is the ornament of prosperity while silence is that of valour. Restraint is the adornment for wisdom and humility, that for learning.  Distribution to the deserving embellishes wealth. Lack of anger is the ornament of penance, forbearance that of a powerful one, and sincerity that of following righteousness. Good character, which is the root cause of all these, is the ornament of all.

XXXXX

निन्दन्तु नीतिनिपुणा यदि वा स्तुवन्तु

        लक्ष्मीः समाविशतु गच्छतु व यथेष्टम् ।

अद्यैव वा मरणमस्तु युगान्तरे वा

        न्याय्यात्पथः प्रविचलन्ति पदं न धीराः ॥ 84॥

நிந்தந்து நீதி நிபுணா யதி வா ஸ்துவந்து

லக்ஷ்மீ ஹி ஸமாவிஶது கச்சது வா யதேஷ்டம் |

அத்யைவ வா மரணம் அஸ்து யுகாந்தரே வா

நியாய்யாத்பத ஹ ப்ரவிசலந்தி பதம் ந தீரா ஹா || 1.84 ||

.தூற்றினால் தூற்றட்டும்; போற்றினால் போற்றட்டும்; தன லக்ஷ்மி  வீட்டுக்குள் நுழையட்டும் அல்லது வெளியேறட்டும் ; இன்றே மரணம் வருவதாக இருக்கட்டும் அல்லது பின்னர் வரட்டும் ; இது எவ்வாறானாலும் துணிச்சசல்மிக்கவர்களும்  புத்திசாலிகளும் நேர்மையான பாதையிலிருந்து விலக மாரட்டார்கள்– 84

84. Experts in policy or ethics may censure or praise (them); The Goddess of wealth may enter (their house) or leave at will; Death may come (to them) today or in a later eon; regardless, wise and courageous people do not swerve from the path of righteousness.

நிந்தனை செய்தாலுமன்றி நேராக வாழ்ந்ததிடி னும்

சந்ததமும் செல்வமிக ச் சேர்ந்தாலும் தீர்ந்தாலும்

விந்தையுடன் மரணம் மேவிடினும் வாழ்ந்திடினும்

சி ந்தை துணிந்த திறமுடையார் நேர்வழியில்

அந்தமு டன் அது தப்பி யோரடியும்

பந்தமுடன் வையாரப்பால்—84

XXXXX

भग्नाशस्य करण्डपिण्डिततनोर्म्लानेन्द्रियस्य क्षुधा

        कृत्वाखुर्विवरं स्वयं निपतितो नक्तं मुखे भोगिनः ।

तृप्तस्तत्पिशितेन सत्वरमसौ तेनैव यातः पथा

        लोकाः पश्यत दैवमेव हि नृणां वृद्धौ क्षये कारणम् ॥ 85॥

பக்னாஶஸ்ய கரண்டபிண்டிததனோர்ம்லானே னி த்ரியஸ்ய க்ஷுதா

க்ருத்வாகுர்விவரம் ஸ்வயம் நி பதிதோ நக்தம் முகே போகினஹ |

த்ருப்தஸ்தத்பிஶிதேன ஸத்வரம் அஸௌ தேனைவ யாதஹ யதா

லோகாஹா பஶ்யத தைவம் ஏவ ஹி ந்ருணாம் வ்ருத்தௌ க்ஷயே காரணம் || 1.85 ||

85. A mouse, making a hole in a basket at night, fell into the mouth of a despairing serpent whose body was constricted in the basket and limbs weak with hunger. Sated with its meat, the serpent quickly exited through the same way.  O people! See, it is fate that causes men’s rise and fall.

பாம்பிருந்த பெட்டியொன்றிற் பாரா தெலியொன்று

தூ ம்பு செய்து செல்லச் சுடு பசியாற் — சாம்பிய பாம்

பவ்வெ லியைத் தின்று பின்னர் அவ்வழியே தப்பியதால்

தெய்வ பலம் ஆரறிவார்  தேர்ந்து – 85

ஒரு பெட்டிக்குள் பாம்பு அடைப்பட்டுக்கிடந்தது ; அதற்கு ஒரே பசி; அப்போது பெட்டிக்குள் இருக்கும் உணவைச்சா பித்த ஒரு எலி ஓட்டை போட்டு உள்ளே புகுந்தது; காத்திருந்த பாம்பு அதைக்கவ் விப் பிடித்து பசியைத் தீர்த்துக்கொண்டது.. விதியின் போக்கை யார் அறிவார் ?-85

XXXX

आलस्यं हि मनुष्याणां शरीरस्थो महारिपुः ।

नास्त्युद्यमसमो बन्धुः कुर्वाणो नावसीदति ॥ 86॥

ஆலஸ்யம் ஹி மனுஷ்யாணாம்

ஶரீரஸ்தோ மஹாரிபுஹு |

நாஸ்த்யுத்யமஸமோ பந்துஹு

குர்வாணோ நாவஸீததி || 1.86 ||

XXXX

“Laziness is a arch  enemy residing  within all .Industry is man’s matchless friend.”– 86

மனிதர்களுக்குள் உறையும் மிகப்பெரிய எதிரி  சோம்பேறித்தனம்அவனுடைய மிகப்பெரிய நண்பன் தொழில் செய்தல் (முயற்சியில் இறங்கல்) – 86

—subham —

 tagss- Nitisataka,   83, 84, 85,86 Bhartruhari,  4 languages, snake and mouse

Rare Pictures from Anti Hindu Book :Dirty Dravidians Source Book– Part 2 (Post.12,746)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,746

Date uploaded in London – –  –  21 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART 2- SOURCE OF VATICAN FUNDED DRAVIDIAN ROWDIES

Book title

Story of The World’s Worships, Frank S Dobbins,

Chicago, 1901

For the past 100 years Dravidian rowdies are spreading lies about Hinduism. All those lies are in this book. Of late Vatican is hooking even famous Caranatic Music singers by giving huge sum of money. Now political party scoundrels are spreading the same lies.

For instance, this book also talks about SATI (wives burning in funeral pyre of husbands). But Christian frauds, Caldwell gangs and Max Muller gangs hid one big truth. Neither Manu Smrti, nor Rig Veda mentioned SATI. But 2000 year old SANGAM TAMIL LITERATURE glorified it. A PURA NANURU poem is the verse written by Bhutha Pandyan Devi; she ignored Brahmin ministers’ advise and threw herself in her husbands fire. All these facts were hidden by scoundrels. in North India Hindu women shunned Muslim raping them and threw themselves in Fire before the Muslims’ hands touched them. Whole of India knew the story of the greatest Hindu Woman Rani Padmini who threw herself into fire with hundreds of her palace friends before the Rape Maniac Alauddin Khilji entered the palace.

xxxx

This anti Hindu book showed RESCUED (from SATI) HINDU WOMEN and Odisha Hindus breaking Hindu Chariot of Lord Jagannath after becoming Christians. It says 2000 hHindus converted themselves and brough all Hindu Idols to Bishop’s place. Full of Fiction!!

Book is full of poison which the Dravidian rowdies vomit every day. If Vatican money can poison Carnatic Music Singers, cant they change already dirty mouthed politicians?

Here are some MORE pictures: 

also  read the matter with the pictures 

Read the matter with the pictures.

To be continued……………………..

–subham–

 Tags- Rare pictures, Part 2, Anti Hindu book, Dirty Dravidians ,Source book, 

திப்பு சுல்தான் தாக்கிய ராமர்  கோவில் — Part 10 (Post No.12,745)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,745

Date uploaded in London – –  –  21 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 10

கோவில் எண் 9 – திருப்பரையார் அல்லது த்ருபிரயார்   ராமர்  கோவில்

இந்தக் கோவில்  குருவாயூர் அல்லது திருச்சூரிலிருந்து 25  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோவில் தோன்றிய வரலாறு , சிலைகள் நிறுவிய வரலாறு எல்லாம் சுவையான அடிப்படையில் அமைந்துள்ளன; அது மட்டுமல்லாமல் 6 அடி உயர் ராமர் (விஷ்ணு) சிலையின் கையில் அட்சமாலை இருப்பது இன்னும் ஒரு வியப்பான விஷயம்.

கடற்கரையில் ஒதுங்கிய 4 சிலைகளை, வக்கையில் கைமால் என்ற உள்ளூர் பிரபுவிடம் மீனவர்கள் கொண்டுவந்து கொடுத்தனர். அவை ராம லட்சுமணபரத , சத்ருக்கனன் என்ற நால்வரின் சிலைகள் ஆகும். அவைகளை அவர் 4 இடங்களில் பிரதிஷ்டை செய்து கோவில் உருவாக்க உதவினார். இப்படி நான்கு/ நாலு

இடங்களில் கோவில்கள் உண்டானதால் அவை நாலம்பலம் FOUR TEMPLES  என்று அழைக்கப்பட்டன.

அவை அமைந்த இடங்கள் :

ராம பிரான் – திருப்பரையார் கோவில்

பரதன் – இரிஞ்சல குடா  கூடல் மாணிக்கம் கோவில்

திருமூழிக்களம் – லட்சுமணன் கோவில்

பையம்மல் – சத்ருக்னன் கோவில்

மலையாள பக்தர்கள் ஆனி / கற்கடக மாதத்தில் இந்த 4 கோவில்களையும் ஒரே நாளில் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

த்ருப்ரையாரில் எங்கே கோவிலை அமைப்பது என்று ஜோதிடர்களுடன் ஆராய்ந்தபோது ஒரு அசரீரி கேட்டது (ஆளற்ற குரல் =  அ +  சரீரம் = BODYLESS  VOICE ) . மயில் எங்கே பறக்கிறதோ அதன் கீழ் கோவிலைக் கட்டவும் என்றது அக்குரல். ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். ஆனால் மயில் வரவில்லை. ஒருவர் அங்கே மயில் தோகையுடன் வந்து நின்றார் ஓஹோ! இறைவன் ஓ கே O K சொல்லிவிட்டான் என்று சிலையைப் பிரதிஷ்டை செய்த்தனர். ஆனால் அதன் பிறகு உண்மையிலேயே ஒரு மயில் சற்று தள்ளிப் பறந்து சென்றது. உடனே அங்கே பலிக் (BALI STONE) கல்லை நிறுவினார்கள். அது ஆடிக்கொண்டே இருந்தது. அதாவது நிலையாக நிற்கவில்லை. கேரளத்தில் அபூர்வம் நிகழ்த்தும் சித்தர்கள் , சாமியார்கள் உண்டு. வில்வ மங்கலம் சாமியார் நாரணத்து ப்ராந்தன் (நாராயண பைத்தியக்காரன் ) ஆகியோர் மிகவும் பிரபலம் ஆனவர்கள். பைத்திய (ப்ராந்தன்) சித்தர்,  கோவில் தந்திரியை அழைத்து மந்திரங்களை சொல்லி ஒரு ஆணியை அடிக்கச் சொன்னார். கல்லும் ஆடாது , அசங்காது நின்றது. இன்றும் ஆணியைக் காணலாம் .

ஒரு முறை வில்வமங்கல சாமியார் வந்த போது ஸ்ரீ தேவியும் பூதேவியும் கோவிலின் கிழக்கு நுழைவாயிலைத் தவிர்த்து மேற்கு வாசல் வழியாக வந்ததைக் கண்டார். பின்னர் அவர் அந்தகக் கதவுகளை மூடச் சொல்லிலிவிட்டு ஸ்ரீதேவி ,பூதேவீ  விக்கிரகங்களை நிறுவினார்.

எல்லா வகையிலும் விநோதங்கள் நிறைந்த கோவில் இது; மூலஸ்தானம் ஒரு பக்கம்; பலி-க்கல் இன்னொரு பக்கம். கோதண்ட ராமர் என்றால் வில் மட்டும் இருக்க வேண்டும்; ஆயினும் இங்கு இருப்பதோ நாலு கைகளை உடைய விஷ்ணு; அதிலும் ஒரு கையில் பிரம்மா போல அட்ச மாலை. சங்கு சக்கரம், வில்/கோதண்டம் மற்றும் மாலை!! .அருகில் பெருமாள் போல ஸ்ரீ , பூ தேவிகள்.

ஆயினும் கோவிலில் ராமாயண மரச் சிற்பங்கள் நிறைந்திருப்பதால் இதை ராமர் கோவில் என்று சொல்லுவதும் பொருத்தமே; அது மட்டுமல்லாமல் பழங்கால ஓவியங்கள் அப்படியே இருக்கினறன .

இன்னொரு வினோதம் என்ன வென்றால் தட்சிணாமூர்த்தி, ஐயப்பன் , கணபதி சந்நிதிகள்  இருப்பதாகும்.

இவ் வாறு பல அம் சங்கள் கொண்ட இறைவனைப் பலரும் மும்மூர்த்திகளின் வடிவமாகவே காண்பதுண்டு.

வெடி வழிபாடு

ஒவ்வொரு ஸ்தலத்திலும் ஒரு வினோத வழிபாடு, ஒரு விசித்திர பிரசாதம் இருப்பது  இந்து மதத்தின் சிறப்பு லோகோ பின்ன ருசிஹி = உலகம் பலவிதம் என்பது காளிதாசனின் வாக்கு. இங்கு வெடிகளை வெடித்து காணிக்கை/ நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்; ஆதிகாலத்தில் வன விலங்குகள், பக்தர்களின் பாதைகளில் குறுக்கிடக்கூடாது என்பதற்காக இந்துக்கள் செய்த வேலை இது. இப்போது மனித விலங்குகள் அதிகம் ஆகிவிட்டதால் வன விலங்குகள் ஓடி ஒளிந்து கொண்டுவிட்டன.

தலை திரும்பிய ராம பிரான்

பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையின் தலை பக்கவாட்டில் திரும்பியவாறு இருந்தது. கணிப்பாயூர் நம்பூதிரி வந்து தலையைத் திருப்பிவைத்தார் மேலே பட்டுத்துணிகளைப் போட்டுவிட்டு வெளியே வந்தார்; ராமர் மீண்டும் தலையைத் திருப்பிக்கொண்டார் காலப்போக்கில் ஒரிஜினல் ராமர் விக்கிரகம் தேய் மானம் அடைந்தது . ஜோதிடர்களை அழைத்து ப்ரச்னம் போட்டுப்பார்த்தார்கள்; சிலையை மாற்றாதே என்ற உத்தரவே ப்ரச்னத்துக்கு (ப்ரஸ்னம் என்றால் கேள்வி) விடையாக வந்தது உடனே அர்ச்சகர்கள் புது வழி கண்டு பிடித்தனர் பஞ்ச லோகத்தில் (ஐம்பொன்) ஒரு ஆடை போல செய்து மேலே வைத்துவிட்டனர். அதிலுள்ள முகம் மிகவும் அழகாக அமைந்துவிட்டதால், பக்தர்கள் வைத்த கண்ணை எடுக்க மாட்டார்கள். அவ்வளவு அழகு ! கொள்ளை அழகு !!

திப்பு சுல்தான் தாக்குதல்

கர்நாடகத்தை ஆண்ட ஹைதர் அலி, அவனது மகன் திப்பு சுல்தான் ஆகிய இருவரும் தாக்காத கோவில்கள் மிகச் சிலவே. இந்தக் கோவிலும் மதவெறியன் திப்புவின் வாளுக்குத் தப்பவில்லை. ராமரின் 4 கைகளில் ஒன்றை வெட்டினான்; ரத்தம் கொட்டியது. உடனே பயந்து போய் என்ன செய்வதென்று திகைத்தான். அறிஞர்களின் கூற்றுப்படி வணங்கிவிட்டு கோவிலுக்கு காணிக்கையும் கொடுத்துவிட்டுச் சென்றான் (see page 131 of Temples and Legends of Kerala, K R Vaidyanathan, B V Bhavan, Bombay, 1982).

நமஸ்கார மண்டபமும் நவக்கிரக சிற்பங்களும்

கோவிலின் நடுப்பகுதி வட்டவடிவில் அமைந்தது. கூம்பு வடிவ கோபுரம். நமஸ்கார மண்டபம் செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது 24 பிரிவுகள் உள்ளன. அங்கே நவக்  கிரக  மரச் சிற்பங்களும் புராதன ஓவியங்களும் உள .

ஸ்ரீ கோவிலில் ராமாயண சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன .

கூத்து ஆட்டம்

அபிநயங்கள் மூலம் , வாக்கியங்கள் வசனங்கள் இல்லாத கூத்து ஆட்டம் இங்கே நடப்பது கோவிலின் மற்றொரு சிறப்பாகும் ; விருச்சிக மாதத்தில் (நவம்பர் மத்தி ) 12 நாட்களுக்கு கூத்து நடக்கும்; அனுமான் – சீதை சந்திப்பு , மோதிரம் (அங்குலீயம்) கொணர்தல் முதியன கருப்பொருள் ஆக இருக்கும் .

வருடத்தில் இரண்டு  பெரிய விழாக்கள் நடைபெறும்; விருச்சிக (நவம்பர்) மாத ஏகாதசி விழா , மீன மாத (மார்ச்- ஏப்ரல்) பூரம் விழா. ஏகாதசி அன்று ஐயப்பன் பவனி, பெருமாள் பவனிகள்  ஏராளமான யானைகளுடன் நடக்கும்

இந்தக்கோவில் ஜாமோரின் ZAMORIN என்ற இந்து மன்னர்களின் கீழ் இருந்து 1719- ம் ஆண்டு ஹாலந்து நாட்டு டச்சுக்காரர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் வந்தது  . பின்னர் திப்பு சுல்தான்,  டச்சுக்காரர்களை  விரட்டி அடித்ததான் . பின்னர் பிரிட்டிஷ் வெள்ளையர்கள், சுல்தானைத் தோற்கடித்தனர்  கொச்சி மன்னர்கள் பிரிட்டிஷாரிடமிருந்து  கோவிலைப் பெற்றனர். இப்போது கொச்சி தேவஸ்வம் போர்டின் கீழ் வந்துவிட்டது .

–subham—

Tags- ராமர் கோவில், கேரளம் , திருப்பறையார் , நாலம்பலம் ராமாயண சிற்பங்கள் ,திருப்ரையார், திப்பு சுல்தான்

விதியை வெல்ல முடியாது என்றாலும் முயற்சியும் தேவையே! (Post 12,744)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,744

Date uploaded in London –  –  21 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

விதியை வெல்ல முடியாது என்றாலும் முயற்சியும் தேவையே! 

ச.நாகராஜன் 

கர்ப்பத்தில் இருக்கும்போதே விதிக்கப்பட்ட ஐந்து விஷயங்கள்

கர்ப்பத்தில் இருக்கும்போதே ஒவ்வொருவருக்கும் ஐந்து விஷயங்கள் விதியால் நிர்ணயிக்கப்பட்டு விட்டன.

அவை யாவை?

விடை தருகிறது இந்த ஸ்லோகம்.

ஆயு: கர்ம ச வித்தம் ச வித்யா நிதனமேவ ச |

பஞ்சைதாநி ஹி ச்ருஜ்யந்தே கர்பஸ்தஸ்யைவ தேஹின: ||

ஆயுள், தொழில், செல்வம், கல்வி மற்றும் மரணம் ஆகிய ஐந்தும் மனிதர்களுக்கு அவர்கள் கர்ப்பத்தில் இருக்கும்போதே விதிக்கப்பட்டு விட்டன.

கடவுளுக்கே தெரியாத நான்கு விஷயங்கள்

ஒரு அரசன் தன் மனதில் என்ன நினைக்கிறான், ஒரு கருமியிடம் இருக்கும் செல்வம், ஒரு கெட்ட (கிரிமினலின்) மன ஓட்டமும் செய்கையும், பெண்களின் நடத்தை – ஆகிய இந்த நான்கு விஷயங்களையும் கடவுளே கூட அறிய மாட்டார் என்றால் (சாதாரண) மனிதர்களைப் பற்றி என்ன சொல்வது?

ந்ருபஸ்ய சித்தம் க்ருபணஸ்ய வித்தம் மனோரதம் துர்ஜனமானஸஸ்ய|

ஸ்திரியஸ்சரித்ரம் புருஷஸ்ய பாக்யம் தேவோ ந ஜானாதி குதோ மனுஷ்ய: ||

பூர்வஜென்ம புண்ணியத்தால் வரும் பார்வை!

பூர்வஜென்ம புண்ணியத்தால் பெரும் செல்வம் அடைந்த ஒருவன் அடர்ந்த வனத்தை தனது சொந்த நகரமாகக் கருதுவான்; எல்லா மனிதர்களும் மிக நன்றாக தன்னிடம் நடப்பதாக நினைப்பான்;  எல்லா நிலமும் ரத்னமயமாக அவனுக்குத் தெரியும்.

பீமம் வனம் பவதி தஸ்ய புரம் ப்ரதானம்

      சர்வோ ஜன: சுஜனதாமுபயாதி தஸ்ய |

க்ருதஸ்னா ச பூர்பவதி சன்னிதிரத்னபூர்ணா

       யஸ்யாஸ்தி பூர்வசுக்ருதம் விபுலம் நரஸ்ய ||

தலையெழுத்தில் எழுதாவிடில் என்ன பிரயோஜனம் இவற்றால்!

ஒருவனுக்கு விதியால் விதிக்கப்பட்டு அவன் தலையெழுத்தில் எழுதப்படவில்லை என்றால், அதிக படிப்பு, கூரிய அறிவு, வீரம், இன்னும் பல நற்குணங்கள் அவனிடம் இருந்தும் பயன் என்ன?

(விதி இல்லையென்றால் இவை அனைத்தும் இருந்தும் பயன் இல்லை என்று பொருள்)

கிம் சாஸ்த்ரைர்பஹுதாப்யஸ்தை: கிம் சாதுர்யேண வித்யா |

கிம் சௌர்யேணாதிவீர்யேண லலாடே சேன்ன லிக்யதே ||

முயற்சியின்றி அதிர்ஷ்டம் மட்டும் ஒன்றையும் சாதித்து விடாது!

ஒரு ரதமானது ஒற்றைச் சக்கரத்தை வைத்துக் கொண்டு ஓட முடியாது; அது போல மனித முயற்சி இல்லாமல் அதிர்ஷ்டம் (விதி) மட்டும் தானாகவே எதையும் சாதித்து விட முடியாது.

யதா ஹோயேகேன சக்ரேன ந ரதஸ்ய கதிர்பவேத் |

ஏவம் புருஷகாரேண வினா தைவம் ந சித்யதி ||

பிரம்மாவிஷ்ணுசிவனாலும் முடியாத காரியம்!

பிரம்மா, விஷ்ணு, சிவனாலும் முடியாத காரியம் ஒன்று உண்டு!

அது என்ன?

ஒருவன் நெற்றியில் எழுதி விட்ட கோடுகளை (தலையெழுத்தை அல்லது விதியை) ஹரி, ஹரன் அல்லது பிரம்மா யாராக இருந்தாலும் சரி முற்றிலுமாக அழித்து விட முடியாது.

ஹரிணாபி ஹரேணாபி ப்ரஹ்மணாபி சுரைரபி |

லலாடலிகிதா ரேகா ப்ரிமார்ஷ்டு ந சக்யதே ||

மனதை அடக்குவது மிகவும் கடினம்!

தாயுமானவர் கூறுகிறார்

குதிரையையும், மதயானையையும் வசப்படுத்தி விடலாம்.

கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்.

ஒரு சிங்கத்தின் முதில் ஏறி உட்கார்ந்து கொள்ளலாம்.

பாம்பை (கட்செவி) ஆட்டுதலும் செய்ய முடியும்.

நெருப்பில் பாதரசம் (இரதம்) இட்டு ஐந்து உலேகங்களையும் பொன்னாக்கி விற்று உண்ணலாம்.

வேறு யாரும் காணாமல் உலகத்திலே உலா வரலாம்.

தேவர்களை ஏவல் செய்து வேலை வாங்கலாம்.

என்றும் இளமையோடு இருக்கலாம்.

மற்றொருவர் உடலில் புகுந்து கொள்ளலாம்.

நீரின் மேல் நடக்கலாம். நெருப்பின் மேல் இருக்கலாம்.

நிகரில்லாத சித்திகளைப் பெறலாம்.

ஆனால், மிகவும் கஷ்டமான விஷயம் என்னவெனில் “மனத்தை அடக்கி சும்மா இருக்கின்ற திறம் தான்”.

இப்படி தேஜோமயானந்தப் பாடலில் அவர் குறிப்பிடுகிறார்

(உண்மையாகி என் மனதிற் குடி கொண்டிருக்கிற, அறிவான தெய்வமே, தேஜோமயானந்தமே)

கந்துக மதக்கரியை வசமா நடத்தலாம்;
கரடிவெம் புலிவாயையும்
கட்டலாம்; ஒரு சிங்க முதுகின்மேற் கொள்ளலாம்;
கட்செவி யெடுத்தாட்டலாம்;
வெந்தழலி னிரதம்வைத் தைந்துலே கத்தையும்
வேதித்து விற்றுண்ணலாம்;
வேறொருவர் காணாம லுலகத் துலாவலாம்
விண்ணவரை யேவல்கொளலாம்;
சந்ததமு மிளமையோ டிருக்கலாம்; மற்றொரு
சரீரத்தி ன்ம்புகுதலாம்;
சலமே னடக்கலாம்; கனல்மே லிருக்கலாம்
தன்னிகரில் சித்திபெறலாம்;
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
திறமரிது; சத்தாகியென்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே!
தெசோ மயானனந்தமே
                                                                        – தாயுமானவர்

இதை பிரதிபலிக்கும் சம்ஸ்கிருத சுபாஷிதம் இது:

ஷக்யா தமயிதும் தேவ! சிம்ஹவ்யாக்ரகஜாதய: |

ந து ராகாசவக்ஷீவவிஷயாபிமுகம் மன: |

ஸ்லோகத்தின் பொருள்:

ஓ கடவுளே! ஒருவன் சிங்கம், புலி, யானை போன்ற மிருகங்களை அடக்கலாம்; ஆனால் ஒருவன் தனது வலிமையினால் காமத்தினால் வரும் இன்ப விஷயங்கள், குடி, போதை ஆகியவற்றில் ஈடுபட்ட மனதை அடக்கவே முடியாது.

(சிம்மம் – சிங்கம்: வியாக்ரம் – புலி; கஜ – யானை)

***

Bhartruhari’s Nitisataka in Tamil, Hindi, English and Sanskrit – Part 25 (Post No.12,743)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,743

Date uploaded in London – –  –  20 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

PART 25-Slokas    80, 81, 82

किं तेन हेमगिरिणा रजताद्रिणा वा

        यत्राश्रिताश्च तरवस्तरवन्त एव ।

मन्यामहे मलयमेव यदाश्रयेण

        कङ्कोलनिम्बकुटजा अपि चन्दनाः स्युः ॥ ८०॥

வெள்ளி மலை யான கைலாசத்திலும் தங்க மலையான மேருவிலும் வளரும் மரங்கள் மற்ற எல்லா மரங்கள் போலத்தானே இருக்கின்றனஅவைகளால் என்ன பயன்ஆனால் மலய மலையோ கசப்பான கங்காளகூடஜவேப்ப மரங்களையும் சந்தன மர வாசனையால் கமழச் செய்கின்றதே ; ஆகையால்  அதைப்  போற்றுவோம் .– 8080. Of what avail are the golden and silver mountains, the trees growing on which remain the same trees. We respect the Malaya Mountain, inhabiting which even Kankola, Neem and Kutaja become sandal trees.

கிம் தேன ஹேமகிரிணா ரஜதாத்ரிணா வா

யத்ராஶ்ரிதாஶ்ச தரவஸ்தரவந்த ஏவ |

மன்யாமஹே மலயம் ஏவ யத்‌ஆஶ்ரயேண

கங்கோலநிம்பகடுஜா அபி ச ந் தனாஃ ஸ்யுஃ –80

xxxxxx

रत्नैर्महार्हैस्तुतुषुर्न देवा

        न भेजिरे भीमविषेण भीतिम् ।

सुधां विना न प्रययुर्विरामं

        न निश्चितार्थाद्विरमन्ति धीराः – 81

81. The Devas were not content with the precious gems (that emerged from the ocean). They did not take fright at the terrible poison. They did not stop till they obtained ambrosia. Courageous ones do not turn back from the determined goal.

பாற்கடலைக்  கடைந்த தேவர்கள் அதிலிருந்து வந்த ரத்தினங்களுடன் திருப்தி அடைந்து நின்றுவிடவில்லை.விஷம் வெளியே வந்த போதும் பயந்து ஓடவில்லை ;அமிர்தம் கிடைக்கும் வரை  கடைவதை  நிறுத்திவில்லை துணிவுள்ளவர்கள் லட்சியத்தை அடையும் வரை பின்வாங்க மாட்டார்கள் .

ரத்னைர்மஹார்ஹைஸ்துதுஷுர்ன தேவா

ன பேஜிரே பீமவிஷேண பீதிம் |

ஸுதாம் வினா ன பரயுர்விராமம்

ன னிஶ்சிதார்தாத்விரமன்தி தீராஃ -81

அமுதம் பெற சுரர் பாலாழி கடைந்தார்

அமுதம் பெறு முன்னர் ஆலம் — திமிதிமெ ன்று

மேலெழுந்ததற் கஞ்சார் மேலா மரத்தனங்கள்

பாலெழுந்தவற்றை ப் பரிந்து மன மா லெழுந்து

நாட்டார் அதுகாறும் நாடி எவராலும்

தேடா அமுதம் திரளுமட்டும் — வாடார்

பிடித்த பிடிவிடார் பெற்றி போல் நெஞ்சந் 

தடித்த துணிவுடை யார் தாமும் — முடித்தன்றி

எண்ணி முடியுங் கருமம் எப்படியும் கைவிடார்

மண்ணிலே நின்ற வழக்கு — 81

xxxxxx

क्वचित् पृथ्वीशय्यः क्वचिदपि च पर्यङ्कशयनः

        क्वचिच्छाकाहारः क्वचिदपि च शाल्योदनरुचिः ।

क्वचित् कण्ठाधारी क्वचिदपि च दिव्याम्बरधरो

        मनस्वी कार्यार्थी न गणयति च दुःखं न च सुखम् ॥ ८२॥

82. Sometimes sleeping on the (bare) earth and sometimes on a couch, sometimes eating only vegetables and sometimes tasting rice, sometimes wearing rags and beautiful clothes at other times : A brave person bent upon (accomplishing) a task does not care for comfort or hardship.

ஒரு குறிக்கோளை அடைய விரும்ம்பும் லட்சியவாதி பஞ்சு மெத்தையிலும்  தூங்குவான்தரையிலும் படுப்பான் வெறும் பழம் காய்களையும் சாப்பிடுவான்சமைத்த சாதத்தையும் சாப்பிடுவான் கந்தையையும் அணிவான்பட்டுப் பீதாம்பரங்களையும் அணிவான்;

இன்ப துன்பங்களைப் பொருட்படுத்தான்.

க்வசித்ப்றுத்வீஶய்யஃ க்வசிதபி ச பரங்கஶயனஃ

க்வசிச்சாகாஹாரஃ க்வசிதபி ச ஶால்யோதனருசிஃ |

க்வசித்கன்தாதாரீ க்வசிதபி ச திவ்யாம்பரதரோ

மனஸ்வீ கார்யார்தீ ன கணயதி துஃகம் ன ச ஸுகம் || 1.82 ||

காரியஞ் சாதிக்கும் கருத்துடையோன் பூசயனம்

ஓரிட த்தில் கொள்ளுவான் ஓரிட த்தில் பஞ்சசு மெத்தை

நேரிடினும் பள்ளி கொள்வான் நிண் ணயமாய் க்  காய்கறிகள்

சேர உண்ணுவான் ஓரிட த்தில் தெண்ணீராகாரமுண் பான்

ஓரிட த்தில் கந்தை வு கந்தணிவான் ஓரிட த்தில்  சீரிய

பட்ட ணிவான் சேர்ந்த மற்றோரிடத்தில்

கோரிய நன்மை வந்து கூடின் மகிழ்ச்சியும்

முரிய தீமை வந்து மூளின் விசனமும்

பூரியனாய் க் கொள்ளான் பெருந்துணிவுடனே

நேரியனாய் வாழ்வான் நிசம்

–subham–

tags- Bhartruhari’s Nitisataka , Part 25 , Slokas 80,81,82

Rare Pictures from Anti Hindu Book Dravidians worship Devils – Part 1 (Post No.12,741)

Tamils worship devils- Christian Prpaganda

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,741

Date uploaded in London – –  –  20 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

I published three parts from 1932 book in the past three days; now I am publishing more pictures from another anti Hindu book. Bishop Caldwell gang wrote to Europe Christians that Dravidians worship devils and ghosts. Cadwell wrote to them that Tirunelveli Nadar community, Sanars etc worship ghosts. The also spread the propaganda that Hindus throw their wives into funeral pyres of their husbands. They published pictures of rescued women. They also published pictures showing Brahmins dying holding the tail of a cow and strange pictures of Hindu saints.

Book title

Story of The World’s Worships, Frank S Dobbins,

Chicago, 1901

Here are some pictures:

Tri 

Lord Indra

Tri Murthy

Kanpur temple

Brahmins die by holding tails of cows- Christian Propaganda

Hindu boys are taught to worship animas

Hindu Mothers kill childrem poem

Hindu women are Slaves

Hindus commit suicide  in front of Temple Raths/  chariots

—subham—

tags – Anti Hindu Pictures, 1901 book, Dravidian , Devil, Worshippers, Caldwell propaganda, anti hindu poems

எட்டுமானூர் சிவன் கோவில் 500 ஆண்டு எரியும் விளக்கு  — Part 9 (Post No.12,740)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,740

Date uploaded in London – –  –  20 November , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் – Part 9

கோவில் எண் 8 –    எட்டுமானூர் சிவன் கோவில்

கோட்டயம் அருகிலுள்ள புகழ் பெற்ற சிவன் கோவில் இது.

எட்டுமானூர், ஏற்றமானூர் என்று அழைக்கப்படும் இடம் கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தொலைவில் இருக்கிறது. கோவிலின் த்வஜ ஸ்தம்பம் / கொடிமரம் தங்கத் தகட்டில் ஜொலிப்பதால் அதையும்,  மேற்கு நோக்கிய கோபுரத்தையும் தொலைவிலிருந்தே காணலாம். சுவாமி மேற்கு நோக்கி இருந்து அருள் புரிகிறார் .முதலில் வலிய விளக்கு எனப்படும் பெரிய விளக்கினை வழிபட்டுவிட்டு சிவனைத் தர்சிக்கச் செல்லுவது மரபு/ சம்பிரதாயம். ஏனெனில் 1545ம் ஆண்டு முதல் சுமார் 500 ஆண்டுகளாக எரியும் விளக்கு இது. ஆகையால் விளக்கிற்கு எண்ணெய் காணிக்கை செலுத்துவது முக்கிய வழிபாடு ஆகும்.  விளக்கு 3 லிட்டர் எண்ணெய் வரை தக்க வைத்துக்கொள்ளும். பகதர்கள் மேலும் மேலும் ஊற்றினால் கீழேயுள்ள தொட்டியில் அது சேரும். விழாக்காலத்துக்கு தேவையான எண்ணெய் அதில் சேர்ந்துவிடுகிறது. மேலும் திரியில் சேர்ந்துள்ள கருப்பு மையை பெண்கள் கண்களுக்கு இட் டுக் கொள்கிறார்கள். இது கண் நோய்களுக்கு மருந்தாகவும் கருதப்படுகிறது .

கரண் என்ற அசுரன் சிவ பெருமானை வேண்டி மூன்று சிவலிங்கங்களைப் பெற்று அவைகளை பிரதிஷ்டை செய்வதற்கு மூன்று இடங்களை தேர்ந்தெடுத்ததை முன்னொரு கட்டுரையில் கண்டோம். அதில் ஒன்று எட்டுமானூர் .

xxxx

வலிய விளக்கின் கதை

1542-ல் கோவில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது. அப்போது கோவில் வாசலில் நின்று கொண்டிருந்த சிப்பந்திகளிடம் ஒரு தட்டான் தங்கம் போல் ஜொலிக்கும் விளக்கினைக் கொண்டு வந்து, இதை கோவிலில் வையுங்கள் என்றார். ஒவ்வொருவரும் அவரைக் கேலி பேச்சுப் பேசி உதாசீனம் செய்தனர். இவ்வளவு பெரிய விளக்கிற்கு யார் எண்ணெய் ஊற்றுவார்? இது என்ன தண்ணீரில் எரியுமோ? என்றெல்லாம் பகடி பேசினர். அப்போது இடி மின்னலுடன் மழை ஆரம்பமானவுடன்  ஒருவர் விளக்கினை  எடுத்துக்கொண்டு கோவிலுக்குள் ஓடினார் . மழை நின்றபின்னர் அந்த விளக்கு திரிகளுடன் எண்ணெயில் எரிந்து கொண்டிருந்தது. அன்று முதல் இன்றுவரை அணையவில்லை.

இது போல வடலூரில் ராமலிங்க சுவாமிகள் ஏற்றி வைத்த அடுப்பும் விளக்கும் 200 ஆண்டுகளாக இன்றுவரை எரிந்து கொண்டு இருக்கிறது .

2 அடி உயர லிங்கம்

எட்டுமானூரில் இரண்டு அடி உயர லிங்கம் மஹாதேவன் என்று வழிபடப்படுகிறார். அதற்கு முன்னால் அழகிய விக்கிரகமும் இருக்கிறது. 2 நந்திகள் உண்டு. இதில் பஞ்ச லோகத்தால் ஆன நந்தி செம்பகசேரி மன்னர் கொடுத்தது; அவருக்கு வயிற்று வலி  வந் போது  கோவிலுக்கு வந்து 41 நாள் விரதம் இருந்தார் ; அந்த நோய் நீங்கியவுடன் இதை நெல் நிரப்பி அளித்தார்.

அதிலுள்ள ஓட்டையிலிருந்து நெல்லை எடுத்து பக்தர்களும் பிரசாதமாக கொண்டு சென்றனர். பின்னர் அது நிறுத்தப்பட்டதாகத் தெரிகிறது இந்தக் கோவிலின் அமைப்பு,  வைக்கம் மஹாதேவர் கோவில் போலவே வட்ட வடிவான கர்ப்பக்கிரகத்துடன் இருக்கும்; ஆயினும் வைக்கம் கோவிலை விடச் சிறியது.

கோவில் கூரை, தூண்கள் ஆகியன செப்புத் தகடுகளால் மூடப்பட்டுள்ளது

ராமாயண சிற்பங்கள்

கோவிலில் உள்ள தூண்கள், சுவர்கள் ஆகியவற்றில் நல்ல சிற்பங்களைக் காணலாம். ராமாயண காட்சிகள் மரச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ கோவில் எனப்படும் தேவி கோவில், சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, கணபதி சந்நிதிகளும் இருக்கினறன. சுவாமிக்கு தங்க வைர மாலைகள் அணிவிக்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்..

10 நாள் உற்சவம்

கும்ப மாதத்தில் (பிப்ரவரி மார்ச்) வருடாந்திர உற்சவம் நடக்கிறது. அதில் எட்டாம் நாள் உற்சவம் முக்கியமானது. அன்று நள்ளிரவுக்குப் பின்னர் சுவாமி, ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி அலங் கா ரத்துடன் தரிசனம் தருகிறார். அன்று பக்தர்கள் பெருந்திதிரளாக வருகிறார்கள்.

தங்க யானைகள் – ஏழரைப் பொன்

எட்டாம் நாள், பத்தாம் நாள் திருவிழாக்களின் முக்கிய அம்சம் ஏழரைப் பொன்னால் ஆன தங்க யானைகளைக் காண்பதாகும். இவைகளை திருவாங்க்கூர் மன்னர் அனிச்சம் திருநாள் மார்த்தாண்ட வர்மா , போர் வெற்றிக்குப் பின்னர் கோவிலுக்கு தானமாக அளித்தார் ஏழரைத் துலா தங்கத்தினால் ஆன ஒவ்வொரு யானையும் 2 அடி உயர தங்க யானை.கள் . எட்டாவது யானை ஒரு அடி உயரமே இருப்பதால் ஏழரை பொன் யானை என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது

பணக்கார கோவில்

எட்டுமானூர் மஹாதேவர் கோவில் பணக்கார கோவில். சிவன் அருள்பெற்ற மன்னர்கள், எல்லாவற்றையும் தங்கத்தினால் செய்து கொடுத்துவிட்டார்கள் தங்க நகைகள், வைர நகைகள், தங்கக் குடங்கள், தங்கம் பதித்த வலம்புரிச் சங்குகள் ,யானைக்கு தங்க முக பட்டாம், வெள்ளி நந்திகள்  முதலியன கோவில் கஜானாவில் உள்ளன.

மான் + ஊர் = மானூர்

ஊருக்கு வெளியே ஐந்து கி.மீ தொலைவில் தேவகிரி உள்ளது. சிவபெருமான் ஒரு மானை உருவாக்கி அங்கே விளையாட விட்டதாக ஒரு கதை. புராணங்களில் வரும் மணிமான் தீர்த்தம் அது. இதனால் எட்டு மானூர் (எட்டி இருக்கும் ) என்று பெயர் ஏற்பட்டதாம். கோவிலுக்கு சிவலிங்கத்தைக் கொண்டுவந்த கரண் தான் இப்படி மான் உருவம் எடுத்தானாம். இது போல இன்னும் பல கதைகளும் உண்டு

வில்வ மங்கள சாமியார் இங்கு வந்து சிவலிங்கத்தைக் கண்டுபிடித்து வெல்லமும் வாழைப்பழமு நைவேத்தியம் செய்தார். விஷ்ணு சிலை ஒன்றையும் நிறுவினார் அவர் அஷ்ட மங்கல மூத்தது இடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்தார் அந்தக் குடும்பம் எட்டு குடும்பங்களாகப் பெருகியது. மக்கள் எட்டு மனைகளோட  ஊர் என்று அழைக்கவே எட்டு மானூர் என்ற பெயர் நிலைத்து நின்றது என்ற விளக்கமும் உண்டு.

சிவ பக்தர்கள் அனைவரும் தரிசிக்க வேண்டிய கோவில் என்பதில்  ஐயமில்லை

சம்போ மஹாதேவ சிவா சம்போ மஹாதேவா !

—subham —

Tags- கேரள மாநில, புகழ்பெற்ற, 108 கோவில்கள், Part 9, எட்டுமானூர், சிவன் கோவில், தங்க யானைகள்