QUIZ சுந்தரர்  பத்து QUIZ (Post No.12,244)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,244

Date uploaded in London – –  8 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

1.நால்வரில் ஒருவரான  சுந்தரரின் இரண்டு மனைவிகள் பற்றி நாம் அறிவோம்? அவர்களுடைய முற்பிறப்பு என்ன?

XXXX

2.சுந்தரர் பிறந்த ஊர் எது ? பெற்றோர் யாவர்?

XXXX

3.இளமையில் அவரை வளர்த்தவர் யார்?

xxxx

4. சுந்தரர் கல்யாணத்தில் என்ன கலாட்டா/ ரகளை நடந்தது?

xxxxx

5.சிவபெருமான் சுந்தரருக்கு வழங்கிய பெயர் என்ன ?

xxxxx

6. சுந்தரர் ஏது பாடுவதென்று திகைத்து நின்ற காலையில் சிவனே எடுத்துக்கொடுத்த பாடல் அடி என்ன?

Xxxxx

7.சுந்தரரின் 2 மனைவியர் யாவர் ?

xxxxx

8.செங்கற்களே தங்கக்கட்டியாக மாறி சுந்தரரை வியப்பில் ஆழ்த்திய ஊர் எது?

xxxxx

9.ஒரு ஊரில் ஆற்றில் போட்டு, மறு ஊர்க்குளத்தில் தங்கக்காசுகளை எடுத்த கதை என்ன ?

xxx

10.முதலை விழுங்கிய பிள்ளையை Parellel Universe  பாரல்லல் யூனிவெர்சிலிருந்து வளர்   அடைந்த நிலையில் மீட்டுக்கொடுத்த ஊர் எது?

Xxxxx

விடைகள்

1.கயிலை மலையில் சிவபெருமானுக்கு நெருங்கிய தொண்டர் ஆலால சுந்தரர். அங்கு உமை அம்மையாரின் சேடிகளாக விளங்கிய அநிந்திதை கமலினி மீது அவர் காதல் கொண்டார். அவர்களும் அப்படியே மையல் கொண்டனர். ஆக மூவரையும் இகலோக சுகம் அனுபவித்த பின்னர், பரலோகம் வர அம்மையும் அப்பனும் ஆசீர்வதித்தனர் . மூவரும் நம்பி ஆரூரர் பரவை , சங்கிலி என பூவுலகில் அவதரித்தனர்.

Xxxxx

2.திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருநாவலூரில் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் நம்பி ஆரூரர் . தந்தை பெயர் –சடையனார். தாயார் பெயர் — இசை ஞானியார்.

xxxxx

3.திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்க முனையரையர் , வீதி உலா வருகையில் முகப்பொலிவுடன் விளங்கிய சுந்தரரைக் கண்டு வியந்து, பெற்றோர் அனுமதியுடன் தனது பிள்ளை போல வளர்த்தார் .

xxxxx

4.சிவ பெருமான் ஒரு வேதியர் வடிவத்தில் வந்து இந்தப் பையன் எனக்கு அடிமை. அந்த விஷயம் முடிவுக்கு வந்த பின்னர் திருமணத்தை நடத்தலாம் என்கிறார். வாக்குவாதம் வளரவே, முதியவர் ஊரான திருவெண்ணெய் நல்லூருக்குச் சென்று ஒரிஜினல்/ மூல ஓலையைப் பார்த்து சுந்தரர் அடிமைதான் என்று முடிவு செய்தனர் . முதியவரின் முகவரியைக் கேட்டபோது அவர் ஆலயத்துக்குள் சென்று மாயமாய் மறைந்தார் சிவ பெருமானே அவரை ஆட்கொள்ளவந்ததை அறிந்து அனைவரும் பிரமித்து நின்றனர்.

xxxxx

5. வன் தொண்டன்

மற்றுநீ வன்மை பேசி வன்றொண்ட னென்னு  நாமம்

 பெற்றனை; நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின்   மிக்க

அர்ச்சனை பாட்டே யாகு; மாதலான் மண்மே   னம்மைச்

சொற்றமிழ் பாடு’ கென்றார் தூமறை பாடும்   வாயான்.

xxxxxx

6.நானும் நீயும் வாதிட்டபோது நீ என்னை பித்தன் என்று ஏசினாய். அதையே சொல்! பாடல் வரும் என்றார் சிவா பெருமான் . உடனே சொற்றமிழ் பாடல் ஊற்று போல வெளியே பொங்கியது :–

திருவெண்ணெய்நல்லூர் பாடல் எண் : 1

பித்தாபிறை சூடீபெரு

மானேயரு ளாளா

எத்தான்மற வாதேநினைக்

கின்றேன்மனத் துன்னை

வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய்

நல்லூரருட் டுறையுள்

அத்தாஉனக் காளாய்இனி

அல்லேனென லாமே.

xxxxx

7.கயிலையில்  இருந்த கமலினி , பூவுலகில் பரவை நாச்சியார் என்ற பெயரில் பிறந்தார். அவர் முதல் மனைவி..

அநிந்தினி , வேளாளர் குடியில் ஞாயிறு என்னும் ஊரில் சங்கிலியார் என்ற பெயரில் பிறந்தார். அவர் சுந்தரரின் இரண்டாவது மனைவி

xxxxx

8.திருப்புகலூரில் செங்கற்களை தலையணையாகப் பயன்படுத்தி உறங்கும்போதுப் பணம் வேண்டுமே என்ற கவலையில் உறங்கினார் . காலையில்  கண்விழித்தபோது கற்கள் அனைத்தும் தங்கக்கட்டிகளாக மாறியிருந்ததைக் கண்டார் .

xxxxx

9.திருமுது குன்று சென்று சிவனை வேண்டியபோது பன்னீராயிரம் பொற்காசுகள் கிடைத்தது. அதை மணிமுத்தாற்றில் போட்டுவிட்டு  திருவாரூர்க் குளத்தில் மூழ்கி எடுத்தார் . இப்போது இவைகளை சைன்ஸ் பிக்ஸன் (Science Fiction Films)  திரைப்படங்களில் டெலி ட்ரான்ஸ்போர்டேஷன் Tele Transportation என்ற பெயரில் காண்கிறோம். .

xxxxx

10.சேரமான் பெருமாள் நாயனாரைக் காண மலைநாட்டுக்குச் செல்லுகையில் திருப்புக்கொளியூரில் ஒரு வீட்டில் மேள தாளமும் எதிர் வீட்டில் அழுகையும் ஒலித்ததைக்கண்டு காரணம் வினவினார். இரு வீட்டுப் பையன்களும் பல ஆண்டுகளுக்கு முன்னர் குளத்திற்குச் சென்ற பொழுது ஒரு சிறுவனை முதலை விழுங்கியதால் அந்த வீட்டுக்காரர்கள் அழுகின்றனர் என்று ஊர்மக்கள் விளம்பினார்கள் .மடுவின் கரைக்குச் சென்று பதிகம் பாடவே அந்தச் சிறுவனை முதலை கொண்டுவந்து கொடுத்தது.

(இறுதியில் சுந்தரர் வெள்ளை யானையில் ஏறி கயிலை செல்லுகையில் சேரமான் பெருமாள் நாயனார் குதிரையில் பின்தொடர்ந்து கயிலைக்கு ஏகி னார் ;அதே நேரத்தில் பிள்ளையார் தன் துதிக்கையால் அவ் வையாரையும் அவர்களுக்கு முன்னதாகவே கயிலைக்கு கொண்டு சென்றதாக ஒரு கதை உண்டு.)

–subham—

Tags–சுந்தரர், நம்பி ஆரூரர், பரவை , சங்கிலியார் , பித்தா பிறை சூடி , சொற்றமிழ் பாடு , அர்ச்சனைப்பாட்டு , அடிமை, வழக்கு , சேரமான் பெருமாள் நாயனார், முதலை

 answers 

–subham—Tags–சுந்தரர், நம்பி ஆரூரர், பரவை , சங்கிலியார் , பித்தா பிறை சூடி , சொற்றமிழ் பாடு , அர்ச்சனைப்பாட்டு , அடிமை, வழக்கு , சேரமான் பெருமாள் நாயனார், முதலை

நிவேதிதா வாழ்க்கையில் நடந்த அற்புதம்;  லண்டனில் சிலை திறப்பு (Post No.12,243)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,243

Date uploaded in London – –  8 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

சிஸ்டர் நிவேதிதா (Sister Nivedita) என்று அழைக்கப்பட்ட , சுவாமி விவேகானந்தரின் சிஷ்யையான , மார்கரெட் நோபிளின் (Margaret Noble) சிலை, சென்ற சனிக்கிழமை, ஜூலை 1, 2023ல் லண்டனின் தென்பகுதி பேட்டையான விம்பிள்டனில் (Wimbledon, London) திறக்கப்பட்டது

முதலில் அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு அற்புதத்தைக் காண்போம்.

1902-ம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி காலை 9-10 க்கு சுவாமி விவேகானந்தா சமாதி அடைந்தார் அப்போது நிவேதிதா அங்கு இல்லை. ஆனால் அன்றிரவு அவருக்கு ஒரு கனவு ஏற்பட்டது. விவேகானந்தரின் குரு வான ராமகிருஷண பரமஹம்சர் , அவருடைய உடலிலிருந்து மீண்டும் ஒரு முறை செல்வது போன்ற கனவு அது. இதன் பொருள் விளங்காமல் திகைத்தார். மறுநாள் காலையில் பேலூர் மடத்திலிருந்து சுவாமி சாரதானந்தர் , ஒரு துறவி மூலமாக கடிதம் அனுப்பினார். அதில் சுவாமி விவேகானந்தரின் சமாதி செய்தி இருந்தது மறுநாள் காலை 7 மணிக்கு சுவாமிஜியின் சடலம் இருந்த அறைக்குள் சிஸ்டர் நிவேதிதா நுழைந்தார் . சடலத்தின் தலைமாட்டில் உட்கார்ந்துகொண் டு விசிறியால் வீசினார் . அன்று, அதாவது ஜூலை 5 பிற்பகலில் சடலம் தகனம் செய்யப்பட்டது. சுவாமிஜியின் சடலம் காவித் துணியால் சுற்றப்பட்டிருந்தது . அதிலிருந்து ஒரு சிறிய துண்டினை வெட்டி மற்றோர் சிஷ்யையான Josephine MacLeod  ஜோசபைன் மக் லியொடுக்கு அனுப்ப விரும்பினார் . சுவாமி சாரதானந்தா அதற்கு அனுமதி கொடுத்தார். மனதில் ஏதோ ஒரு தயக்கம் ஏற்படவே நிவேதிதா அதைச் செய்யவில்லை. எல்லோரும் மயானத்துக்குச் சென்றனர் . சடலம் ‘தகதக’  என்று எரிந்து கொண்டிருந்தது . அனைவரும் வருத்தத் தோடு  அக்காட்சியைக் கண்டு கொண்டிருந்தனர் . மாலை ஆறு மணி ஆனது . சிதைத் தீ அவிந்துகொண்டிருந்த தருணத்தில் திடீரென்று காற்று வீசியது. ஏதோ ஒன்று சிதைத் தீயிலிருந்து பறந்துவந்து நிவேதிதா அருகில் விழுந்தது. அதை அவர் காணவில்லை. யாரோ ஒருவர் தன்னுடைய உடையை இழுப்பது போல உணர்ந்தார். அப்போதுதான் அருகில் விழுந்த துண்டு,  தான் வெட்டி எடுக்க நினைத்த, காவித்துண்டு என்பதை உணர்ந்தார் சுவாமிஜியே அதைத் தனக்கு அனுப்பிய தாகக் கருதி , அதை விரும்பியவாறே ஜோசப்பைனுக்கு அனுப்பிவைத்தார். அவருக்கு எழுதிய கடிதத்தில் நிவேதிதா குறிப்பிடுகிறார் : நான் வெட்டி எடுக்க நினைத்த 2, 3 அங்குலத் துணி திடீரென்று பறந்துவந்து என் காலடியில் விழுந்தது  . தோள்பட்டையை யாரோ உலுக்கியது போல உணர்ந்தேன் . இதை சுவாமிஜி அனுப்பிய கடிதம் என்றே கருதலாம் என்று ஜோசப்பை னுக்கு  1902 செப்டம்பர் 14ம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

xxxx

சிஸ்டர் நிவேதிதாவுக்கு விம்பிள்டனில் சிலை ஏன் ?

வட அயர்லாந்தில் (இப்போது பிரிட்டனின் பகுதி; இது தவிர, தென் பகுதி அயர்லாந்து உள்ளது அது தனி நாடு) பிறந்த மார்கரெட் நோபிள் 17 வயதிலேயே ஆசிரியர் பணியாற்றினார் . பின்னர் அவரே விம்பிள் டன் பகுதியில் பள்ளிக்கூடம் ஒன்றைத் துவங்கி புதுமையான திட்டங்களை செயல்படுத்தினார். சுவாமி விவேகாநந்தரைச் சந்தித்து கல்கத்தாவுக்கு வந்த பின்னரும் ஒரு பள்ளிக்கூடத்தைத் திறந்தார். இப்போது லண்டனின் மெர்ட்டன் கவுன்சிலின் கீழ் வரும் விம்பிள்டன் பேட்டையில் ரிச்சர்ட் லாட்ஜ் பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் முன்னால் , லேக் ரோடில் சிலை திறக்கப்பட்டுள்ளது. இது கல்கத்தாவிலிருந்து இங்கே கொண்டுவரப்பட்டது.

xxxx

சிலையை யார் திறந்தனர் ?

மெர்ட்டன் மேயரும் இங்கிலாந்தின் டாரிங்டன் ஊர் மேயரும் சிலையைத் திறந்தனர் Mayor Councillor Doug Smyth Mayor of Great Torrington where w sister Nivedita Celebrations have installed another statue of Nivedita . it was donated by West Bengal Government 

Second Person is the Madam Mayor Jill Manly she is the mayor of Merton where the statue is installed now ).

xxxx

டாரிங்க்டனுக்கும் நிவேதிதாவுக்கும் என்ன சம்பந்தம்?

நிவேதிதா , இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள டார்ஜிலிங்கில் இறந்தார். ஆயினும் அவருடைய அஸ்தி, அவரது குடும்ப கல்லறை டாரிங்டனில் (Great Torrington, Devon, England) இருப்பதால் அங்கே புதைக்கப்பட்டுள்ளது. அங்கே ஏற்கனவே மேற்கு   வங்க அரசு அனுப்பிய ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது . ஆக விம்பிள்டன் சிலை இரண்டாவது சிலை ஆகும் .

xxxx

சிலைத் திறப்புவிழாவில் டாக்டர் உமா பாசு அருமையாக நிவேதிதா படலைப் பாடினார் . இன்னும் ஒரு பாடலை சுதீப் சக்ரவர்த்தி பாடினார் . சபை நிறைந்த கூட்டம். லண்டனில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் கேந்திர தலைவர் சுவாமிஜி சர்வஸ்தானந்தா , பிரேசில் நாட்டு ராமகிருஷ்ணா மிஷன் கேந்திர தலைவர் நிர்மலாத்மானந்தாஜி ஆகியோர் சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி  Rev Swami Nirmalatmanandaji maharaj Minister in charge of Sao Paolo Brazil , Rev Swami Sarvasthanandaji MIC London ) செலுத்தினர் . கூட்டத்தில் பேசிய அனைவரும் சிஸ்டர் நிவேதிதா ஆற்றிய சேவையைக், குறிப்பாக, பெண்கள் கல்விக்கு ஆற்றிய சேவையை, புகழ்ந்தனர். பெண்கள் பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி கே பேஜ் (Mrs K Page) பேசுகையில் பள்ளி மாணவிகள் வந்து கூட்டத்தில் தொண்டாற்றியமைக்கு நன்றி கூறினார் . வருங்காலத் தலைமுறைக்கு நிவேதிதா ஊற்றுணர்ச்சி தருவார் என்றார்.  திருமதி சாரதா சர்க்கார் (Mrs Sarda Sircar) அனைவருக்கும் நன்றி நவின்றார் .

சிலைத் திறப்பு விழாவினை ஒட்டி ஒரு மலரும்(Souvenir)  வெளியிடப்பட்டது .

லேக் ரோட் , விம்பிள்டனில் (Lake Road, Wimbledon, London)  உள்ள சிலையை எவரும் எப்போதும் தரிசிக்கலாம்.

xxxxxxx

நிவேதிதா வாழ்க்கையில் சில மைல் கற்கள்

Sister Nivedita (பிறப்பு 28 October 1867 – மறைவு 13 October 1911)

1867, October 28

இயற் பெயர் –Margaret Elizabeth Noble (later called Sister Nivedita by Swami Vivekananda) iதாயார் – Mary Isabel Hamilton and தந்தை —Samuel Richmond Noble of Scotch Street, பிறந்த ஊர் –Dungannon, Northern Ireland.

சகோதரர்–:Richmond Noble, சகோதரி —May Noble  (Wilson)

1891-94

விம்பிள்டனில் பள்ளி ஆசிரியை வேலை

1894

Margaret co-founds the Sesame Club, சீசேம் கிளப் துவக்கம்

1895 November.

Margaret meets Swami Vivekananda at a lecture at Isabella Margesson’s residence at West End, London. சுவாமி விவேகானந்தருடன் சந்திப்பு

1898, January 28.

கப்பல் மூலம் கல்கத்தாவுக்கு வருகை

1898, March 17.

சாரதா தேவியுடன் சந்திப்பு

1898, March 25.

பிரம்மச்சர்ய ஆஸ்ரமம் ஏற்பு . நிவேதிதா என்று சுவாமிஜி பெயர் சூட்டல்

1898, May 11.

இமயமலைக்குப் பயணம் with Swamiji and fellow disciples Sara Bull and Josephine McLeod.

xxxx

1898, November 13.

நிவேதிதா துவக்கிய பெண்கள் பள்ளியை சாரதா தேவி துவக்கிவைத்தல்

1899, March.பிளேக் நோய் பரவல்; கல்கத்தாவில் நிவேதிதா சேவை

1899, May 28.

காளி மாதா வழிபாடு பற்றி வீர கர்ஜனை மிகுந்த சொற்பொழிவு   Kali Worship at the Kalighat Temple.

1899, June 20.

சுவாமிஜியுடன் ல ண்டன்  பயணம் Nivedita leaves for England with Vivekananda and Turiyananda to raise funds for the school. In London, Vivekananda meets her family for the first time.

1900, February 27.

அமெரிக்காவில் ராமகிருஷ்ணா உதவி அமைப்பு ஏற்படுத்தல் Nivedita establishes the “Ramakrishna Guild of Help” in America,

1900, 8 July.காளி மாதா பற்றிய நூல் வெளியீடு

Nivedita’s book Kali the Mother is published.

1900, 29 August.நிவேதிதாவுக்கு சுவாமிஜி வாழ்த்து 

Nivedita receives Swamiji’s now famous benediction at Perros-Guirec village, in Brittany, France. “Be thou to India’s future son / The mistress, servant, friend in one.”

1901 May. நார்வே நாட்டுக்குப் பயணம்

1901 September-December. பிரபல விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸின்  புஸ்தகம் வெளியிட உதவி

1902 பேலூர் மடத்தில் சுவாமிஜியுடன் இறுதிச் சந்திப்பு

Xxxx

1905 கர்சன் பிரபுவின் வங்கப் பிரிவினையால் கிளர்ச்சி; நிவேதிதா நாட்டு சேவையில் தீவிரம்

1906

சுப்பிரமணிய பாரதியார் சந்திப்பு; பெண் விடுதலைக்கு நிவேதிதா ஆசி வழங்கல் 

1906 to 1911

வங்கத்தின் பிரபலங்களை சந்தித்தல் ; இலங்கை ஆனந்த குமாரசாமியுடன் நூல் எழுதல்

1911 டார்ஜீலிங் நகரில் நிவேதிதா மரணம்

Nivedita died on 13 October 1911, aged 43, at Roy Villa in Darjeeling, West Bengal

Xxx

பல நூல்களை எழு திய நிவேதிதா என்றும் நினைவில் நிற்பார்

Old articles:

அயர்லாந்தில் சகோதரி நிவேதிதா வீட்டுக்கு …

tamilandvedas.com

https://tamilandvedas.com › அயர…

6 Dec 2018 — அங்கு ஸிஸ்டர் நிவேதிதா (Sister Nivedita) பிறந்த ஊருக்கு என்னையும் என் மனைவியையும் ..

VISIT TO SISTER NIVEDITA’S HOME TOWN (Post No.5734)

tamilandvedas.com

https://tamilandvedas.com › 2018/12/04 › visit-to-siste…

4 Dec 2018 — This is a non- commercial blog. I went to Dungannon, the birth place of Sister Nivedita, disciple of Swami Vivekananda. The Mayor of the town …

Sister Nivedita

tamilandvedas.com

https://tamilandvedas.com › tag › si…

 ·

11 Dec 2018 — This is a non- commercial blog. Greatest of the Modern Tamil Poets Subrahmanya Bharati met Sister Nivedita on his way back to Madras from the …

NIVEDITA BOOK

https://tamilandvedas.com › tag › ni…

9 Oct 2021 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. Tagged with NIVEDITA BOOK …

—-subham—-

Tags– நிவேதிதா சிலை, விம்பிள்டன், சுவாமி விவேகா நந்தா , டாரிங்டன், மேயர்

மாறி வரும் மும்பை! (Post No.12,242)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,242

Date uploaded in London –  July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

மாறி வரும் மும்பை! 

ச.நாகராஜன்

மும்பை மாறி வருகிறதாம்!

இணையதளத்தில் ஒரு அன்பர் இதை வெளியிட அது எங்கும் பரவி வருகிறது.

என்ன தான் சொல்கிறார் அந்த அன்பர் என்பதைப் பார்ப்போம்.

முடிவு மும்பைவாசிகளுடையது தான்!

அவரது பார்வை அவரது வார்த்தைகளிலேயே இதோ:

மும்பையை ஒரு சுற்று சுற்றி வாருங்கள்

டீ, நொறுக்குத் தீனிகள், முட்டை ஆம்லெட், தண்ணீர்  ஆகிய அனைத்தும் கடற்கரையிலும் தெருக்களிலும் இஸ்லாமியரே கடைகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மற்ற வெளி மாநிலங்களிலிருந்து மும்பைக்கு வந்தவர்கள் அல்லது ரோஹிங்யாக்கள்!

சாலை ஓரம் இருக்கும் தள்ளுவண்டிகளில் தேங்காய்களும் கறிகாய்களும் விற்பனை செய்கிறார்களே அவர்கள் அனைவரும் பெரும்பாலும் இஸ்லாமியரே.

மனீஷ் மார்கெட், க்ராஃபோர்ட் மார்கெட், க்ராண்ட் ரோட் ஆகிய இடங்கள் ஒரு காலத்தில் மராத்தியருக்கும் மார்வாரிகளுக்கும் சொந்தமாக இருந்தது. இன்றோ நீங்கள் ஒரு மார்வாரியையோ மராத்தியரையோ அங்கு பார்க்க முடியாது.

இந்த மாற்றம் திடீரென்று ஏற்பட்ட ஒன்று அல்ல.

ஆஜ்மி அல்லது நவாப் மாலிக் போன்றோர் இதற்காகவே வரிந்து கட்டிக் கொண்டு வேலை பார்த்து வந்தனர்.  தேசீயவாதிகளும் சிவசேனாக்காரர்களும் அவர்களுக்கு ஆதரவைத் தந்தனர்.

இவர்கள் ஒரு நிறுவனத்தை உருவாக்கினர்.  உத்தரப்பிரதேசத்திலிருந்து வரும் ஒரு இஸ்லாமியர் அல்லது பீஹார், பங்களா தேஷ், வங்காளம் அல்லது ஒரு ரோஹிங்யா தங்கள் இடத்திலிருந்து மும்பை வந்தவுடன் அருகிலிருக்கும் ஒரு மசூதிக்குச் செல்வார். அங்கிருந்து அவர்கள் நவாப் மாலிக் அல்லது அபு ஆஜ்மி நடத்தும் ஒரு என் ஜி ஓ அலுவலகத்திற்குக் கூட்டிச் செல்லப்படுவார்.

அவர்களின் ஆட்கள் யார் யார் எங்கு எங்கு என்ன என்ன தொழிலை நடத்துகிறார்கள் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பவர்கள்.

வருகின்ற ஆளுக்கு ஒரு தள்ளு வண்டி தரப்படும். முழு சாதனங்களும் தரப்படும். அவர் எங்கு செல்ல வேண்டும் என்ன தொழில் செய்ய வேண்டும் என்பதும் சொல்லித் தரப்படும். வருகின்ற வருமானத்தில் ஒரு சிறிது தொகையை கமிஷனாக அவர் என் ஜி ஓ விற்குத் தர வேண்டும்.

மும்பையின் ஜனத்தொகை இப்படியாக வெகு வேகமாக மாறி வருகிறது.

மிரா ரோட், கார், க்ராண்ட் ரோட், பைகுல்லா, அப்துல்ரஹ்மான் வீதி, மொகம்மது அலி ரோட், பாம்பே சென் ட் ர ல், க்ராஃபோர்ட் மார்கெட், சாந்தாக்ரூஸ், அந்தேரி வெஸ்ட், ஜோஹேஸ்வரி, ஓஷிவாரா, ராம் மந்திர் ஸ்டேஷன், கோரேகான் வெஸ்ட், மல்வானி, சார்கோப் மற்றும் இதர பல பகுதிகள் இஸ்லாமியரின் வலிய கோட்டையாக மாறி வருகிறது.

இப்போது இந்தப் பகுதிகளில் ஒரு ஹிந்து தேர்தலில் நின்று நிச்சயம் ஜெயிக்க முடியாது.

என் சி பி தலைமையில் மேலே சொல்லப்பட்ட என் ஜி ஓக்கள் ஒரு புதிய இயக்கத்தைத் துவங்கி உள்ளனர்.

அது என்னெவெனில் மும்பை காவல் படையில் அதிகமதிகம் இஸ்லாமியரைச் சேர்ப்பது தான்.

இதற்காகப் பல பயிற்சி மையங்கள் ஸதாரா கோல்ஹாபூர், சாங்லி, ராய்காட், அஹ்மத்நகர், புனே, நாக்பூர், மும்பை ஆகிய இடங்களில் துவங்கி உள்ளன. இவைகள் உத்தரபிரதேசம், பீஹார், வங்காளம் ஆகிய இடங்களிலிருந்து வரும் இஸ்லாமியருக்கு மராத்தி மொழியைக் கற்பிக்கின்றன. ஆகவே அவர்கள் எளிதாக போலீஸ் சோதனைத்தாள்களை எதிர் கொள்ள முடியும்.

அவர்களுக்குத் தங்குமிடம் இலவசம். மாதம் உதவித்தொகை ஒவ்வொருவருக்கும் 8000 ரூபாய் வழங்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டுக்குள் மஹராஷ்டிரா போலீஸ் படையில் 30 சதவிகிதம் பேர் இஸ்லாமியராக இருக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை ஒரு கடிதத்தில் நவாப் மாலிக் தெரிவித்துள்ளது வெளி வந்திருக்கிறது.

‘மராத்தி மண் எனக்கே’ என்று சொல்லிக்கொண்டு மார் தட்டும் மராத்திய வீரனுக்கு இப்படி கோஷம் போடத் தான் தெரியுமே தவிர உண்மையான நாட்டு நடப்பு என்ன என்பதே தெரியாது.

அட, என்ன ஒரு பரிதாபம்!

இப்படி முடிகிறது கட்டுரை.

மும்பைவாசிகள் தான் இதைப் பற்றி யோசித்து, அங்குமிங்கும் சென்று பார்த்து உண்மையைச் சொல்ல வேண்டும்!

நன்றி : கல்கத்தா ஆங்கில வார இதழ் ட்ரூத்  தொகுதி 91 இதழ் 8

9-7-2023 தேதியிட்ட இதழ்

***

தமிழ் இந்துமத  குறுக்கெழுத்துப் போட்டி 7 7 2023 (Post No.12,241)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,241

Date uploaded in London – –  7 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

இந்தக் கட்டத்தில்  24 சொற்கள்  உள்ளன. கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்  .

கீழேயுள்ள விடையைப் பார்க்காமல் சொல்லுங்கள்

       1
  2      
   3     
  3a  4 4a  
      5 
    67 8 9
10       
11. ⇡       
    12  13  
    14    
   15    
        
16 17     

ACROSS குறுக்கே (இடம் வலமாக அல்லது வலம் இடமாகச் செல்லவும்)

2.பாற்கடலைக் கடைந்தவுடன் கிடைத்தது

3.நாக்கு வறண்டால் தண்ணீர் கேட்கவைப்பது  (left to right)

4.மீன், சுறா மீன், ஒரு ராசியின் பெயர்

4.பழங்காலத்தில் கேரளத்தை வெளிநாட்டினர் இப்படிச் சொன்னார்கள் (left to right)

5.பாடல் என்பதை சம்ஸ்க்ருதத்தில் இப்படிச் சொல்லுவர் (left to right)

6ஹர்ஷரின் சபையில் இருந்த பாணபட்டர் எழுதிய நூல்

11.இயற்பெயர் மார்கரெட் நோபிள்; விவேகானந்தரின் சிஷ்யை ஆனபின் இந்தப் பெயர்

12.அர்ஜுனன் இடது கையினாலும் அம்புவிடவல்லவன் என்பதால் இந்தப் பெயர்

 15.அடுப்பு எரிக்க உதவும். இப்போது காஸ் வந்தவுடன் இதை வாங்க ஆள் இல்லை

16.அன்னத்தின் ஸம்ஸ்க்ருதப் பெயர்; வெள்ளை நிறப்பறவை

Xxxxxxxxxxxxxxxxx

DOWN கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.கண்ணாடியில் காணும் உருவம்

2.வாசனைப்பொருள்தரும் மரம்; ஊது பத்தியுடன் தொடர்புடையது

3a.சாளுக்கியரின் தலைநகர்; இப்போது கர்நாடகத்தில் குடைவரைக் கோவில் உள்ள இடம்  (go up)

4 a .பலவகைப் பூக்களைத் தொடுத்தால் அதை இப்படி அழைப்பர்

 6., ரகுவம்சம் குமார சம்பவம் முதலியவற்றை புலவர் பெயருடன் இப்படிச் சொல்வோம்

7.பவுத்தர்களின் புனித நூல்  (go up)

8.பல ஆயிரம் ஆண்டு தவம் செய்து கங்கையைக் கொண்டுவந்த புராண புருஷன்  (go up)

9.மான் கொம்பு முனிவரின் ஸம்ஸ்க்ருதப் பெயர்

10.வேதத்தின் ஒரு பிரிவு; ஆர் எஸ் எஸ் .காரர்கள் தினமும் சந்திக்கும் கிளை  (Go diagonal)

11.ஒரு தேசம்; நள சக்ரவர்த்தி நாடு  , (go up)

11. வண்ணம் என்பதன் தமிழ்ச் சொல்

13.கிருஷ்ணருடைய குலம்

 14.செயல், வேலை என்பதற்கு எல்லோரும் பயன்படுத்தும் ஸம்ஸ்க்ருதச் சொல்

17. ஒருவன் குடும்பஸ்தனாக மாறி மனைவி மக்கள் வந்துவிட்டால் இப்படிச் சொல்லுவோம், (go up)

Xxxxx

விடைகள்

2.அமிர்தம்;3.தாகம், (left to right);4.மகரம்; 4.மலபார்(left to right); 5.கீதம்(left to right); 6.காதம்பரி; 11.நிவேதிதா; 12.சவ்யசாசி;  15.விறகு; 16.ஹம்சம்

Xxxxxxxxxxxxxxxxx

DOWN கீழே (மேல் கீழாக அல்லது கீழ் மேலாகச் செல்லவும்)

1.பிம்பம்; 2.அகர்; 3a.பாதாமி (go up); 4 a .கதம்பம்;  6.காளிதாஸ காவியம்; 7.தம்மபதம் (go up); 8.பகீரத (go up); 9.ரிஷ்ய சிருங்கர்; 10.ஷாகா (Go diagonal); 11.நிஷாதம், (go up); 11. நிறம்; 13.யது குலம்;  14.காரியம்,; 17.சம்சாரி, (go up)

    ம்  பி1
 அ 2மிர்ம் ம்
ம்தா 3  
 ர்பா3a 4க 4aம்
ம்   ம்கீ 5 
கா கா 67ம்8ரி 9
ஷா10  ளி  ஷ்
நி11. ⇡வேதிதா ம் 
  ச 12வ்ய 13சாசி
ம்ரிகா 14 து ரு
 சாவி15கு ங்
 ம்  
ஹ16ம்17ம் ம் ர்

Xxxxx  subham xxxxxx

Tags- Tamil CW 772023

Model Wedding Engagement/ Lagna Patrika in English (Post No.12,240)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,240

Date uploaded in London – –  7 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

(Names are imaginary in the following Patrika)

Model Lagna Patrika in English

Om Ganesaya Nama:

Nichayathaartha (Engagement) Patrikai

Vivaaha Lagna Patrika

On the auspicious day of 6 July 2023, between 11 am and 12 noon, it has been decided by the elders of Vivekanandan and Ramaswami families that the wedding between

Chiranjeevi  Viswanathan

(the Dauhitran of Shrimathi Mathangi, grandson of Ramachandran and son of Vivekanandan)

( Note dauhitra—grandson (daughter’s son))

and

Sowbhagyavathi Visalakshi

(Dauhitri of Shrimathi Shyamala, granddaughter of Ramanathan and daughter of Ramaswami)

Note — Dauhitrī (दौहित्री).—A daughter’s daughter.

will take place on 31 August 2023 at Radhika Kalyana Mahal, Second Street, Thanjavur. It has been decide at 20 North Masi street, Madurai.

Yours sincerely

Vivekanandan

Fifth Street, Jayanagar

Bengaluru (Give full address with mobile number and e mail)

                                                                                    Ramaswami

Third Street, Kumbakonam (Give full address with mobile number and e mail)

In foreign countries Postcode or Zip code is very important)

Tags- Model Lagna Patrika, Engagement, Wedding, Model

Sudarsana Homam : Hindu Guide to Havan Homas and Yagas (Post No.12,239)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,239

Date uploaded in London – –  7 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

In Part 9 , we learnt about Purushasukta Homam, Sri Sukta Homam and Gayatri Homam.

In Part 10 , we learnt about Bhagavad Gita homa, Pratyangara Sarabha Sulini Homa and Chandi Homa

xxxx

Now Part 11

Sudarsana Homam is one of the powerful Homas to control enemies and eliminate evil forces. It is done as a ghost busting homa as well. If one is worried about some inimical activities of enemies Sudrsana Homam is the best solution to nullify the evil effects. Vaishnavites don’t do Saivite Homas and so they do Sudarsana Homa.

Sudarsana is the wheel in the right hand of Vishnu. It has eliminated many of his and Krishna’ enemies. Hindus, and not Australian aborigines, invented boomerang. If Sudarsana wheel is thrown in a particular angle it will finish the intended action and comes back to the thrower. Mythology lists a long list of victories that obtained through Sudarsana wheel. In all the Tamil Vaishnavite tempes there is a shrine for Sudarsana Chakra/wheel. In Tamil it appears as a man amidst wheel and it is called Chakra (th) Alvar.

Xxx

How to do it ?

We need priests who know the Vedic rituals to do it. It contains all the preliminaries of erecting a fire pit and Sankalpa (purpose).

There are special Sudarsana mantras to be used in the homa. Varuna is invoked in the water filled metal pots.

Then Sudarsana is worshipped with the Dhyaana Mantra. Pancha Puja (Chandan, Pushpa/flowers, Doopa, Deepa, Naivedyam) offering is done.

Main Homa

With rice and ghee, with Sweet Pongal, with Naayuruvi Samiththu (Plant Achyranthes aspera)336 times or 1008 times offerings are placed in the fire. During this Sudarsana mantras are used.

Priests recite Purusha suktam, Vishnu Suktam and Narayanasuktam from the Vedas.

Final offering (Purnaahuti) is done with the relevant mantras.

This Homa is done in the houses as well as in the temples.

Vaishnavite priests are very familiar with the rituals.

–subham–

Tag- Sudarsana Homa, Chakraththalvar, Wheel, Hindu Boomerang

QUIZ அப்பர் பத்து QUIZ (Post No.12,238)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,238

Date uploaded in London – –  7 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

 This is 32nd part in Tamil Quiz Series

1.நால்வரில் ஒருவரான அப்பர் பெருமானுக்கு இருந்த வேறு பெயர்கள் என்ன ?

XXXX

2.அப்பர் பாடிய தேவார பாடல்கள் எந்த திருமுறையில் உள்ளன?

XXXX

3.அப்பருக்கு என்ன நோய் ஏற்பட்டது ? அது நீங்க அவர் பாடிய முதல் பதிகம் எது ?

XXXX

4.அப்பருக்குப் பல கொடுமைகள் செய்த மன்னர் யார் ?

XXXX

5.அப்பர் எனும் திருநாவுக்கரசரின் பெற்றோர்கள் யாவர்?

XXXX

6.திருநாவுக்கரருக்கு ஞான சம்பந்தர் கொடுத்த பெயர் என்ன?

XXXX

7.சைவ மத முத்திரைகள் என்ன? அவை அப்பருக்குக் கிடைத்தது எப்படி?

XXXX

8.திருவீழிமிழலை , திருமறைக் காடு, திருவையாற்றில் அப்பர் செய்த அற்புதங்கள் என்ன?

XXXX

9. மாசில் வீணையும், கற்றூணைப் பூட்டிக் கடலில் பாய்ச்சினும் , நாமார்க்கும் குடியல்லோம் என்ற பிரபல பாடல்களை எப்போது பாடினார் ?

XXXXX

10.நால்வர் சிலைகளில் அப்பரை அடையாளம் காட்டும் சின்னம் என்ன ?

XXXX

விடைகள்

1.மருள்நீக்கியார், தருமசேனர், திருநாவுக்கரசர், தாண்டக வேந்தர்,  வாகீசர்

XXXXX

2.நாலாம், ஐந்தாம், ஆறாம் திருமுறைகளில் உள்ளன.

XXXX

3.அவருக்கு சூலை நோய் ஏற்பட்டது? திருவதிகையில் கூற்றாயினவாறு விலக்ககிலீர் என்ற பதிகத்தைப் பாடியவுடன் நோய் நீங்கியது.

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல செய்தன நான்அறியேன்

ஏற்றாய்அடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட

ஆற்றேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. என்று துவங்கும் பதிகம்.

XXXXX

4.பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் (600 CE )

XXXXX

5.தந்தை பெயர்- புகழனார்; தாயார் பெயர்- மாதினியார்; தமக்கை பெயர்- திலகவதியார். பிறந்த ஊர்- திருவாமூர்

XXXX

6.சீர்காழிக்கு வந்து ஞான சம்பந்தரைக் கண்டு  வணங்கியபோது , அவர் திருநாவுக்கரசரின் கைகளைப் பிடித்துக்கொண்டு அப்பரே என்று அழைத்து வணங்கினார்.

XXXXX

7.பெண்ணாடகத்துக்கு வந்து சிவனை வணங்கிய போது ஒரு சிவ பூதம் தோன்றி, அவருடைய தோள்களில் சூல இடப இலச்சினைகளைப் பொறித்தது.

XXXX

8.திருவீழி மிழலையில் மக்களின் பசி, பட்டினி தீர பதிகம் பாடியபோது அவருக்கு படிக்காசுகள் (தங்கக் காசுகள்) கிடைத்தன .

திருமறைக் காட்டு உறை சிவபெருமானைப் பாடியபோது வேதங்கள் அடைத்திருந்த கதவை பாடல்கள் பாடி திறக்கச் செய்தார் .

கயிலை செல்ல முயன்றபோது உடல் வருத்தவே, சிவபெருமான் ஒரு முனிவர் வடிவத்தில் வந்து, தோன்றி இக்குளத்தில் மூழ்கி திருவையாற்றில் கைலைக் காட்சியைக் காண்க என்றார் . அவர் அவ்வாறு செய்ய டெலி ட்ரான்ஸ்போர்டேஷன் TELE TRANSPORTATION மூலம் அவர் திருவையாற்றில் நின்றார். மாதர் பிறைக்கண்ணியானை என்ற பாடல் பாடி கயிலை தரிசனம் பெற்றார் .

xxxxx

9.சமணர்களின் துர் போதனையால் அப்பரை சுண்ணாம்புக் காளவாயில்  போட, அவர் மாசில் வீணையும் பாடியவு டன் , அது இனிமையான சோலை போல குளிர்ந்தது.

அவரைக் கற்களைக் கட்டி கடலில் வீசியபோது ,கற்றூணைப் பூட்டிக் கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயமே என்று பாட, கல் தூண்களும் மிதந்தன . மகேந்திர பல்லவன் அவரை அழைத்துவர காவலர்களை ஏவிய போது அவர் நாமார்க்கும் குடியல்லோம் என்று  வீர முழக்கம் செய்தார்

xxxxx

10.அவர் கையில் உழவாரப்படை இருக்கும்.. அதைக் கொண்டு கோவில்களில் முளைக்கும் செடிகொடிகளை அகற்றி அவர் திருப்பணி செய்தார். இறுதியில் எண்பதாவது வயதில் சித்திரை மாத சதய நன்னாளில் சிவனடி சேர்ந்தார் .

xxxx

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈச னெந்தை யிணையடி நீழலே.

XXX

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

XXXX

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை

தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்

கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே.

XXXX

மாதர் பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர் சுமந்து ஏத்தி, புகுவார் அவர் பின் புகுவேன்!

யாதும் சுவடு படாமல், ஐயாறு அடைகின்ற போது

காதல் மடப் பிடியோடு, களிறு வருவன கண்டேன்!

கண்டேன் அவர் திருப்பாதம்!கண்டறியாதன கண்டேன்!!

— சுபம் —

TAGS-  அப்பர், திருநாவுக்கரசர் , தரும சேனர் , சம்பந்தர் , சந்திப்பு, மகேந்திர பல்லவன் , மாசில் வீணையும், நற்றுணை ஆவது நமச்சிவாயமே

கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் -Part 2 (Post No.12,237)

Kote Venkatramana Temple in Bengaluru

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,237

Date uploaded in London – –  7 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

THIS IS PART TWO; PART ONE WAS POSTED  YESTERDAY

9. Hulimavu cave temple

ஹுலி மாவு குகைக் கோவில்

பன்னர்கட்டா சாலை ஹுலிமாவில் இந்தக் குகைக் கோவில் இருக்கிறது.  இது ஒரு சிவன் கோவில். அங்கே சிவன், கணபதி, தேவி ஆகியோரைத் தரிசிக்கலாம். 500 ஆண்டுகளு க்கும் மேலாக பழமையுடைய கோவில் . ஸ்ரீ பால  கங்காதர சுவாமியினால் நிறுவப்பட்டது. அவரது சமாதியும் அங்கே உளது.XXXX

10. Kote Venkataramana Temple

கோடி வெங்கடரமண  கோவில்

300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் வேங்கட ரமணனைத் தரிசிக்கலாம் . பசவனக்குடியில் கிருஷ்ண ராஜேந்திர ரோடில் அமைந்த இந்தப் பழைய கோவிலில் சுவற்றில் பிரம்மா, விஷ்ணு சிவன் உருவங்களும் இருக்கின்றன

திப்புசுல்தானின் கோடைகால அரண்மனைக்கு அருகில் உள்ளது 1790-92-ல் மூன்றாம் மைசூர் யுத்தம் நடந்தது. அப்போது பீரங்கிக் குண்டுகள்  விழுந்த தடயங்களை இன்றும் தூண்களில் காணலாம். 300 ஆண்டுகளுக்கு முன்னர் சிக்க தேவராய உடையார் இந்தக் கோவிலைக் கட்டினார்..

XXX

11. Jagannath Temple

ஜகந்நாத் கோவில்

ஒரிஸ்ஸாவில் பூரி ஜகன்னாத் கோவில் பாணியில் கட்டப்பட்ட கோவிலில் ஜகந்நாதர்,  அவர் சகோதரர் பலபத்ரா , சகோதரி சுபத்திரா ஆகியோரை தரிசிக்கலாம். அகரத்தில் சர்ஜாபூர் சாலையில் கோவில் இருக்கிறது.

XXXXXX 

12. Gavi Gangadhareshwara Temple

கவி கங்காதரேஸ்வர கோவில்

கெம்ப கவுடா கவி புரத்தில் இடம்பெறும் இக்கோவிலில் சிவ பெருமானைத் தரிசிக்கலாம். இது ஒரு குடைவரைக் கோவில். கவி என்றால் குகை.

ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தன்று சூரியனுடைய கிரணங்கள் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் விழுந்து குகையினுள் உள்ள சிவலிங்கத்தின் மேல் படும். இந்துக்களின் வியத்தகு வான சாத்திர அறிவுக்கு இதுவும் ஒரு சான்று.

XXXXX

13. Halasuru Someshwara Temple

ஹலசுரு சோமேஸ்வர கோவில்

பெங்களுர் கண்டோன்மெண்ட் பகுதி  சோமேஸ்வரபுரத்தில் எழுப்பப்பட்டுள்ள ஹலசூரு சோமேஸ்வர் கோவில் ஒரு சிவன் கோவில்.12 ரிஷிகள் உள்ள நவக்ரஹ சந்நிதியும் உள்ளே இடம்பெற்றுள்ளது நுழைவாயிலின் அருகே பெரிய ஸ்தம்பம் இருக்கிறது . 48 தூண்கள் உள்ள மண்டபத்தின் தூண்களிலும் நல்ல சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.. முன்னர் இங்கு பெரிய குளமும் இருந்ததாம்.

சிவ – பார்வதி கல்யாணமும் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது. சோழர் கால கோவிலை 16ஆம் நூற்றாண்டில் கெம்ப கவுடா புதுப்பித்தார் .

XXXXX

14. Kadu Malleshwara Temple

கடு மல்லேஸ்வர கோவில்

Kadu Malleshwara Temple Picture

சத்ரபதி சிவாஜியின் சகோதரர்,  தஞ்சாவூரிலிருந்து ஆட்சி செய்த காலத்தில் எழுப்பப்பட்ட கோவில் இது . இதன் அருகிலுள்ள மல்லேஸ்வரம் முதலிய இடங்கள் அந்தக் காலத்தில் காடுகள் நிறைந்த பகுதியாக இருந்தது . சிவராத்திரி காலத்தில் ஒரு வாரத்துக்கு பெரிய திருவிழா நடைபெறும். ஒரு நீர்வீழ்ச்சி இங்கு இயற்கையாக அமைந்தது குறிப்பிடத்தத்தக்கது . மேலும் நிறைய நாகர் சிலைகளும் இங்கே இருக்கின்றன.  இருப்பிடம் சிங்க்ரி ஹல்லி .மல்லிகார்ஜுன என்ற பெயரில் சிவன் வணங்கப்படுகிறார் . கோவிலுக்கு எதிரே நந்தீஷ்வர தீர்த்தக் கோவில் இருக்கிறது விருஷபநதி இங்கே தோன்றுகிறது

XXXX

15. Ragigudda Sri Prasanna Anjaneyaswamy Temple

ராஜி குட்ட பிரசன்ன ஆஞ்சனேய  சுவாமி கோவில்

ஜய நகர் குன்றில் அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட ஆஞ்சனேயர் கோவில் இது. அமைதியான சூழ்நிலையில்  ராம, லட்சுமண, சீதை ஆகியோருடன் அநுமனைக் கண்டு வணங்கலாம். அருகிலுள்ள பாறையில் பிரம்மா , விஷ்ணு சிவன் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

XXXX

 16. Nageshwara Temple

 நாகேஸ்வர கோவில்

பெங்களூரின் புறநகர்ப்பகுதியில் பேகூர் மெயின் ரோட்டில் அமைந்த பழமையான சிவன் கோவில் இது. சோழர்கால,கங்க வம்ச கலை அம்சங்களைக் காணலாம் பெங்களூரு யுத்தம் பற்றிக் குறிப்பிடும் ஒன்பதாவது நூற்றாண்டுக் கல்வெட்டு இருப்பதால் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது ஐந்து லிங்கங்கள் இருப்பதால் பஞ்சலிங்கேஸ்வர கோவில் என்ற பெயரும் உண்டு  

XXXX

17. Shri Abhaya Anjaneya Temple

 ஸ்ரீ அபய ஆஞ்சனேய  சுவாமி கோவில்

அகரம் கிராமத்தில் ஜகந்நாத் கோவிலுக்கு அருகில் அமைந்த இந்த ஆஞ்சநேயர்  கோவிலின் சிறப்பு 102 அடி உயர பிரமாண்டமான அனுமன் சிலை ஆகும்

XXXXX

18.Sri Dwadasa Jyotirlinga Devasthana

ஸ்ரீ த்வாதச ஜ்யோதிர்லிங்க தேவஸ்தானம்

ஓம்கார குன்றில் அமைந்த 12 ஜோதிர் லிங்க கோவில் இது.  ஸ்ரீனிவாசபுரத்தில்  இருக்கிறது 12 லிங்கங்களையும் ஒரே கோவிலில் தரிசிக்கலாம்.

ஒம்கார குன்று  பெங்களூரில் மிக உயர்த்த இடம் அங்கு . ஓம்கார ஆஸ்ரமும் , பல சிறிய கோவில்களும், புனித ஆலமரமும், 1500 கிலோ எடையுள்ள பெரிய மணியும் இருக்கின்றன .

XXXXX

.Kanyakaparameswari Temple Picture

19..Kanyakaparameswari Temple

கன்யகா பரமேஸ்வரி கோவில்

அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில் குமரா பார்க்கில் உள்ளது. இதன் சிறப்பு அம்சம் நாடு முழுதுமுள்ள முக்கியக் கோவில்களை சலவைக்கற்களில் அமைத்துள்ளனர். அந்த சலவைக்கல் மண்டபத்தில் வண்ண ஓவியங்களில் அவைகளைக் காணலாம் . கோவிலுக்கு மேல் மாடத்தில் உள்ள தர்ப்பண / கண்ணாடி மண்டபத்தில் பகவத் கீதை, ரிஷிகள், வாசவி சரிதம் ஆகியனவும் தீட்டப்பட்டுள்ளன . Address10/3, Kumarapark West, Kumara Park West, Seshadripuram, Bengaluru, Karnataka 560020, India

பெங்களூரில் இன்னும் நிறைய கோவில்கள் இருக்கின்றன. இனி பெங்களூருக்கு வெளியே உள்ள கோவில்களைக் காண்போம் .

TO BE CONTINUED……………………………………

TAGS- கர்நாடக, கோவில்கள், 108, பகுதி 2, பெங்களூர் , கோவில்கள்

நக்ஷத்திர ரகசியம்! (Post No.12,236)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,236

Date uploaded in London –  July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

நக்ஷத்திர ரகசியம்!

ச.நாகராஜன்

அர்ஜுனனுக்கு ஒரு அழைப்பு வந்தது.

இந்திர லோகத்திலிருந்து.

இந்திரனிடமிருந்து!

இந்திரபுத்திரனான அர்ஜுனனை இந்திரன் பார்க்க விரும்பினான்.

ஆகவே தனது ரதத்தையும் அனுப்பினான் – அர்ஜுனனை அதில் அழைத்து வரச் சொல்லி!

ரதம் வந்தது.

ரதத்தை ஓட்டி வந்த ரத சாரதியான மாதலி அர்ஜுனனைப் பார்த்து,  “உன்னை இந்திரன் பார்க்க விரும்புகிறான். நீ இந்திரனுக்குப் பிரியமான இந்தத் தேரில் சீக்கிரம் ஏறு” என்றான்.

குந்திபுத்திரனான அர்ஜுனனை தேவலோகத்தில் வசிப்பவர்கள் அனைவரும் பார்க்கட்டும் என்று உனது தந்தையான இந்திரன் கூறினான் என்றான் மாதலி.

இந்திரனின் ரதம்!

எப்படிப்பட்டது அது?

ஒளியுள்ளது. ஆகாயத்தை இருளற்றதாகச் செய்ய வல்லது.

மேக ஓசைக்கு ஒப்பான ஒலிகளால் திக்குகளை நிரப்பிக் கொண்டு மேகங்களைப் பிளப்பது போல அது வந்து சேர்ந்தது.

வாயு வேகம் கொண்ட பொன்னிறமான பதினாயிரம் குதிரைகளால் இழுக்கப்பட்டது அந்த இந்திர ரதம்.

அதில் கத்திகள், பயங்கர சக்திகள், கொடிய தோற்றம் கொண்ட கதைகள், பிராஸங்கள், மின்னல்கள் அசனிகள், காற்றினால் வெடிப்பவை, நாகங்கள் உள்ளிட்ட ஏராளமானவை இருந்தன.

அர்ஜுனன் மாதலியைப் பார்த்துக் கூறினான்:” நூற்றுக் கணக்கான அச்வமேத யாகங்களைச் செய்தவர்களாலும், தேவர்களாலும் அசுரர்களாலும் ஏற முடியாத இந்த ரதத்தில் நீ முதலில் ஏறு. நானும் புண்ணியம் செய்தவன் நல்ல கதியில் ஏறுவது போலப் பின்னால் ஏறுகிறேன்” என்றான்.

பின்னர் தான் இருந்த மந்தர மலையிடம் முறையாக விடை பெற்றான் அர்ஜுனன்.

ரதம் கிளம்பியது.

தர்மானுஷ்டத்தைச் சிறந்த முறையில் செய்யும் மனிதர்களாலும் கூடப் பார்க்க முடியாத வான மார்க்கத்தை அது அடைந்தது; பறந்தது.

அந்த இடத்தில் ஆயிரக்கணக்கான விமானங்களை அர்ஜுனன் பார்த்தான்.

அங்கு சூரியனோ, சந்திரனோ அல்லது அக்னியோ பிரகாசிப்பதில்லை.

புண்ணியத்தால் அடைந்த தமது காந்தியினாலேயே அந்த இடத்தில் அனைத்தும் பிரகாசிக்கின்றன!

ஒளியுள்ள அவைகள் மிகப் பெரியவையாக இருந்தாலும் கூட வெகு தூரத்திற்கு அப்பால் இருப்பதால் சிறிய நக்ஷத்திர ரூபங்களாக  பூமியிலிருந்து பார்ப்பதற்குக் காணப்படுகின்றன.

அவற்றை அர்ஜுனன் அந்த இடத்தில் மிக ஒளி பொருந்தியவையாகவும் தம் வடிவம் உள்ளவையாகவும் தம்மிடங்களில் தமது காந்தியால் பிரகாசிக்கின்றவையாகவும் பார்த்தான்.

அங்கே ராஜ ரிஷிகளும், சித்தர்களும், யுத்தத்தில் கொல்லப்பட்ட வீரர்களும் தவத்தால் ஜெயிக்கப்பட்ட சுவர்க்கத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.

சூரியன் போல ஜொலிக்கும் ஆயிரக் கணக்கான கந்தர்வர்கள், குஹ்யகர்கள், ரிஷிகள், அப்ஸரஸ்கள் ஆகியோரின் கூட்டங்களை அவன் பார்த்தான்.

தாமாகவே ஜொலிக்கின்ற லோகங்களை அவன் பார்த்து ஆச்சரியமுற்றான்.

அர்ஜுனனின் வியப்பைப் பார்த்த மாதலி, “ ஓ! பார்த்தா! தம் தம் இடங்களில் இருக்கின்ற இவர்கள் புண்ணியம் செய்தவர்கள்! இவைகளைத் தான் பூமியிலிருந்து நீ நக்ஷத்திரங்களாகப் பார்க்கிறாய்” என்றான்.

யாரெல்லாம் நக்ஷத்திரங்களாக ஜொலிக்கிறார்கள் என்பதை உள்ளது உள்ளபடி மாதலியிருந்து அறிந்து கொண்டு நேரிலும் பார்த்து வியந்தான் அர்ஜுனன்.

பின்னர் ஐராவத்தைப் பார்த்தான். பின்னர் சித்தமார்க்கத்தை அடைந்தான்.

அங்கிருந்து அரசர்களின் லோகங்களையும் தாண்டி ஸ்வர்க்கலோகத்தில் போய்க்கொண்டே இருந்தான்.

கடைசியில் இந்திரனுடைய பட்டணமான அமராவதியைக் கண்டான்.

மஹாபாரதத்தில் வன பர்வத்தில் நாற்பத்தி இரண்டாவது அத்தியாயமாக அமைகிறது இந்த நக்ஷத்திரப் பயணம்!

அர்ஜுனனுடன் பயணம் செய்து நக்ஷத்திர ரகசியத்தை நம்மால் அறிய முடிகிறது.

அடுத்த முறை நக்ஷத்திரங்களைப் பார்க்கும் போது எத்துணை ஆயிரம் புண்யசாலிகளை வானத்தில் பார்க்க முடிகிறது என்று வியக்கலாம்; அவர்களை வணங்கலாம்; புண்ணியமும் பெறலாம்!

***

QUIZ சித்தர் பத்து QUIZ (Post No.12,235)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,235

Date uploaded in London – –  6 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கேள்வி -பதில் பகுதியில்  இது 31 ஆவது க்விஸ்

1.பிரபல சித்தர்களைப் பொதுவாக எத்தனை பேர் என்று குறிப்பிடுவார்கள் ?

XXXX

2.சித்தர்கள் அடக்கமான கோவில்களை எப்படி கண்டு பிடிக்கலாம்?

XXXXX

3.மதுரை, பழநி , ராமேஸ்வரம், திருப்பதி, ஸ்ரீரங்கம், சிதம்பரம் கோவில்களில் மக்களை ஈர்க்கக் காரணமான சமாதிகள் யாருடையவை ?

XXXXX

4. சங்கரன் கோவிலில் சித்தியான பாம்பாட்டிச் சித்தர் பாடல்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்?

XXXX

5.திருவாரூர், மயிலாடு துறை, வைதீஸ்வரன் கோவிலில் யாருடைய சமாதிகள் இருக்கின்றன?

XXXXX

6.பதஞ்சலியை  யார் அம்சம் என்று கோயில்புராணம் கூறுகிறது ?

XXXXX

7.திருவண்ணாமலை , திருப்பரங்குன்றம், கரூரில் சமாதி அடைந்தோர் யாவர்?

XXXX

8. தஞ்சைப் பெரிய கோயிலில் லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய முடியாமல் தவித்தபோது எந்த சித்தர் வந்து உதவினார் ?

XXXX

9.சித்தர்களிடத்தில் காணப்படும் எட்டுவகை அபூர்வ சக்திகள் என்ன ?

XXX

10.சித்தர்கள் எதை ஏற்கவில்லை ?

XXXXXXXXXXXXX

விடைகள்

1.பதினெட்டு  சித்தர்கள்

XXXX

2அங்கு பக்தர்கள் எண்ணிக்கை 2.பெருமளவில் இருக்கும். அதைக்கொண்டே அங்கு சித்தர் சமாதி இருப்பதை அறிந்துகொள்ளலாம்

XXXXXX

3.மதுரை- சுந்தரானந்தர் ,  பழநி– போகர், ராமேஸ்வரம் – பதஞ்சலி, திருப்பதி–கொங்கணர் , ஸ்ரீரங்கம் – சட்டமுனி  சிதம்பரம் – திருமூலர்

XXXX

4.பாடல்கள் ஆடு பாம்பே என்று முடியும்

XXXXXX

5.திருவாரூர்– கமலா முனி ,

மயிலாடு துறை– குதம்பைச்  சித்தர்

வைதீஸ்வரன் கோவில்– தன்வந்திரி

XXXXX

6.ஆதிசேஷனின் அவதாரம் என்று சொல்கிறது

XXXXX

7.திருவண்ணாமலை– இடைக்காடர்,

திருப்பரங்குன்றம்–மச்சமுனி,

கரூர் — கருவூரார்

XXXX

8.கருவூர் சித்தர் உதவினார்

XXXXX

9.அணிமா, மஹிமா, லஹிமா,கரிமா, ப்ராகாம்ய, ஈசித்வா, வசித்வா , காம வசயித்தவா

XXXX

10.ஆகம வழிபாடுகள், சமயச் சடங்குகள் ஆகியவற்றை பொதுவாக ஏற்க மறுத்தனர். திருமூலர் போன்ற சிலர் மட்டும் விதி விலக்கு

XXXX  SUBHAM XXXXX

Tags– சித்தர்கள், சமாதிகள், அஷ்டமா சித்திகள் , 18,