கர்நாடக மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் -Part 2 (Post No.12,237)

Kote Venkatramana Temple in Bengaluru

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,237

Date uploaded in London – –  7 July , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

THIS IS PART TWO; PART ONE WAS POSTED  YESTERDAY

9. Hulimavu cave temple

ஹுலி மாவு குகைக் கோவில்

பன்னர்கட்டா சாலை ஹுலிமாவில் இந்தக் குகைக் கோவில் இருக்கிறது.  இது ஒரு சிவன் கோவில். அங்கே சிவன், கணபதி, தேவி ஆகியோரைத் தரிசிக்கலாம். 500 ஆண்டுகளு க்கும் மேலாக பழமையுடைய கோவில் . ஸ்ரீ பால  கங்காதர சுவாமியினால் நிறுவப்பட்டது. அவரது சமாதியும் அங்கே உளது.XXXX

10. Kote Venkataramana Temple

கோடி வெங்கடரமண  கோவில்

300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் வேங்கட ரமணனைத் தரிசிக்கலாம் . பசவனக்குடியில் கிருஷ்ண ராஜேந்திர ரோடில் அமைந்த இந்தப் பழைய கோவிலில் சுவற்றில் பிரம்மா, விஷ்ணு சிவன் உருவங்களும் இருக்கின்றன

திப்புசுல்தானின் கோடைகால அரண்மனைக்கு அருகில் உள்ளது 1790-92-ல் மூன்றாம் மைசூர் யுத்தம் நடந்தது. அப்போது பீரங்கிக் குண்டுகள்  விழுந்த தடயங்களை இன்றும் தூண்களில் காணலாம். 300 ஆண்டுகளுக்கு முன்னர் சிக்க தேவராய உடையார் இந்தக் கோவிலைக் கட்டினார்..

XXX

11. Jagannath Temple

ஜகந்நாத் கோவில்

ஒரிஸ்ஸாவில் பூரி ஜகன்னாத் கோவில் பாணியில் கட்டப்பட்ட கோவிலில் ஜகந்நாதர்,  அவர் சகோதரர் பலபத்ரா , சகோதரி சுபத்திரா ஆகியோரை தரிசிக்கலாம். அகரத்தில் சர்ஜாபூர் சாலையில் கோவில் இருக்கிறது.

XXXXXX 

12. Gavi Gangadhareshwara Temple

கவி கங்காதரேஸ்வர கோவில்

கெம்ப கவுடா கவி புரத்தில் இடம்பெறும் இக்கோவிலில் சிவ பெருமானைத் தரிசிக்கலாம். இது ஒரு குடைவரைக் கோவில். கவி என்றால் குகை.

ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தன்று சூரியனுடைய கிரணங்கள் நந்தியின் கொம்புகளுக்கு இடையில் விழுந்து குகையினுள் உள்ள சிவலிங்கத்தின் மேல் படும். இந்துக்களின் வியத்தகு வான சாத்திர அறிவுக்கு இதுவும் ஒரு சான்று.

XXXXX

13. Halasuru Someshwara Temple

ஹலசுரு சோமேஸ்வர கோவில்

பெங்களுர் கண்டோன்மெண்ட் பகுதி  சோமேஸ்வரபுரத்தில் எழுப்பப்பட்டுள்ள ஹலசூரு சோமேஸ்வர் கோவில் ஒரு சிவன் கோவில்.12 ரிஷிகள் உள்ள நவக்ரஹ சந்நிதியும் உள்ளே இடம்பெற்றுள்ளது நுழைவாயிலின் அருகே பெரிய ஸ்தம்பம் இருக்கிறது . 48 தூண்கள் உள்ள மண்டபத்தின் தூண்களிலும் நல்ல சிற்ப வேலைப்பாடுகளைக் காணலாம்.. முன்னர் இங்கு பெரிய குளமும் இருந்ததாம்.

சிவ – பார்வதி கல்யாணமும் சுவற்றில் செதுக்கப்பட்டுள்ளது. சோழர் கால கோவிலை 16ஆம் நூற்றாண்டில் கெம்ப கவுடா புதுப்பித்தார் .

XXXXX

14. Kadu Malleshwara Temple

கடு மல்லேஸ்வர கோவில்

Kadu Malleshwara Temple Picture

சத்ரபதி சிவாஜியின் சகோதரர்,  தஞ்சாவூரிலிருந்து ஆட்சி செய்த காலத்தில் எழுப்பப்பட்ட கோவில் இது . இதன் அருகிலுள்ள மல்லேஸ்வரம் முதலிய இடங்கள் அந்தக் காலத்தில் காடுகள் நிறைந்த பகுதியாக இருந்தது . சிவராத்திரி காலத்தில் ஒரு வாரத்துக்கு பெரிய திருவிழா நடைபெறும். ஒரு நீர்வீழ்ச்சி இங்கு இயற்கையாக அமைந்தது குறிப்பிடத்தத்தக்கது . மேலும் நிறைய நாகர் சிலைகளும் இங்கே இருக்கின்றன.  இருப்பிடம் சிங்க்ரி ஹல்லி .மல்லிகார்ஜுன என்ற பெயரில் சிவன் வணங்கப்படுகிறார் . கோவிலுக்கு எதிரே நந்தீஷ்வர தீர்த்தக் கோவில் இருக்கிறது விருஷபநதி இங்கே தோன்றுகிறது

XXXX

15. Ragigudda Sri Prasanna Anjaneyaswamy Temple

ராஜி குட்ட பிரசன்ன ஆஞ்சனேய  சுவாமி கோவில்

ஜய நகர் குன்றில் அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட ஆஞ்சனேயர் கோவில் இது. அமைதியான சூழ்நிலையில்  ராம, லட்சுமண, சீதை ஆகியோருடன் அநுமனைக் கண்டு வணங்கலாம். அருகிலுள்ள பாறையில் பிரம்மா , விஷ்ணு சிவன் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

XXXX

 16. Nageshwara Temple

 நாகேஸ்வர கோவில்

பெங்களூரின் புறநகர்ப்பகுதியில் பேகூர் மெயின் ரோட்டில் அமைந்த பழமையான சிவன் கோவில் இது. சோழர்கால,கங்க வம்ச கலை அம்சங்களைக் காணலாம் பெங்களூரு யுத்தம் பற்றிக் குறிப்பிடும் ஒன்பதாவது நூற்றாண்டுக் கல்வெட்டு இருப்பதால் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது ஐந்து லிங்கங்கள் இருப்பதால் பஞ்சலிங்கேஸ்வர கோவில் என்ற பெயரும் உண்டு  

XXXX

17. Shri Abhaya Anjaneya Temple

 ஸ்ரீ அபய ஆஞ்சனேய  சுவாமி கோவில்

அகரம் கிராமத்தில் ஜகந்நாத் கோவிலுக்கு அருகில் அமைந்த இந்த ஆஞ்சநேயர்  கோவிலின் சிறப்பு 102 அடி உயர பிரமாண்டமான அனுமன் சிலை ஆகும்

XXXXX

18.Sri Dwadasa Jyotirlinga Devasthana

ஸ்ரீ த்வாதச ஜ்யோதிர்லிங்க தேவஸ்தானம்

ஓம்கார குன்றில் அமைந்த 12 ஜோதிர் லிங்க கோவில் இது.  ஸ்ரீனிவாசபுரத்தில்  இருக்கிறது 12 லிங்கங்களையும் ஒரே கோவிலில் தரிசிக்கலாம்.

ஒம்கார குன்று  பெங்களூரில் மிக உயர்த்த இடம் அங்கு . ஓம்கார ஆஸ்ரமும் , பல சிறிய கோவில்களும், புனித ஆலமரமும், 1500 கிலோ எடையுள்ள பெரிய மணியும் இருக்கின்றன .

XXXXX

.Kanyakaparameswari Temple Picture

19..Kanyakaparameswari Temple

கன்யகா பரமேஸ்வரி கோவில்

அண்மைக்காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில் குமரா பார்க்கில் உள்ளது. இதன் சிறப்பு அம்சம் நாடு முழுதுமுள்ள முக்கியக் கோவில்களை சலவைக்கற்களில் அமைத்துள்ளனர். அந்த சலவைக்கல் மண்டபத்தில் வண்ண ஓவியங்களில் அவைகளைக் காணலாம் . கோவிலுக்கு மேல் மாடத்தில் உள்ள தர்ப்பண / கண்ணாடி மண்டபத்தில் பகவத் கீதை, ரிஷிகள், வாசவி சரிதம் ஆகியனவும் தீட்டப்பட்டுள்ளன . Address10/3, Kumarapark West, Kumara Park West, Seshadripuram, Bengaluru, Karnataka 560020, India

பெங்களூரில் இன்னும் நிறைய கோவில்கள் இருக்கின்றன. இனி பெங்களூருக்கு வெளியே உள்ள கோவில்களைக் காண்போம் .

TO BE CONTINUED……………………………………

TAGS- கர்நாடக, கோவில்கள், 108, பகுதி 2, பெங்களூர் , கோவில்கள்

Leave a comment

Leave a comment