முன்னேஸ்வரம் கோவில் பற்றி இந்து இளைஞர் மன்றம் 2010 ஆம் ஆண்டில் வெளியிட்ட செய்திகள் இதோ:
குளக்கோட்டு மகராசனின் பணி:
சோழ நாட்டின் திருவாரூரில் மனுநீதி கண்ட சோழன் வம்சத்தவரான வாமதேவ மகாராஜாவின் புத்திரரான பாலசிருங்க மகாராஜா எனப்படும் குளக்கோட்டு மகாராஜா கலியுகம் 512ல் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு வருகைத் தந்து பல்வேறு திருப்பணிகளை செய்வித்தான். குளக்கோட்டு மன்னன் முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு வருகை தருகையில் மிகவும் பழம் பெருமையை ஆலயம் இழந்து அழிந்து சிதைவடைந்து இருந்துள்ளது. மன்னன் மனம் வெதும்பி திருக்கோவிலை மீண்டும் கட்டுவித்தார்.
சித்தாமிர்த தீர்த்தம், சிவதீர்த்தம், முதலான குளங்களை சுத்தம் செய்து தன்குல குருவாகிய நீலகண்ட சிவாச்சாரியார், அவரது துணைவியார் விசாலாட்சி அம்மையார், அவர்களின புத்திரர்களையும் முன்னேஸ்வரம் வரவழைத்து மற்றும் சோழ நாட்டிலிருந்து பிரமண குருமார்களையும் வரவழைத்து சுபநாளில், சுப முகூர்த்தத்தில் கும்பாபிஷேகத்தையும் நடத்திவைத்தான்.
சோழ நாட்டிலிருந்து ஆலயத்தின் அனைத்து வேலைகளையும் செய்வதற்காக பிராமணர், செட்டி, வோளர், வீரமுட்டி, சங்கமநாதர், கொல்லர்,……………………………
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
செப்டம்பர் 16 : ஓஸோன் தினம்!
இதையொட்டி மாலைமலர் நாளிதழில் 14-9-2023 அன்று வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
அதிகரித்து வரும் புவி வெப்பம்!
ஓஸோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்!
(இரண்டாம் பகுதி)
ச.நாகராஜன்
காற்றுத் தரக் குறியீட்டு எண்
காற்றுத் தரக் குறியீட்டு எண் எனப்படும் ஏர் க்வாலிடி இண்டெக்ஸில் பூஜ்யம் முதல் 300க்கும் அதிகம் என ஆறு மட்டங்கள் உள்ளன. இதில் 50 என்ற எண் அளவு உலகளாவிய விதத்தில் ஏற்புடைய அளவு ஆகும். 350 என்ற எண் காற்றின் மிக மிக மோசமான நிலையைக் குறிப்பதாகும். 400க்கும் மேற்பட்ட நிலையில் ஆரோக்கியமான ஒருவர் கூட சுவாசக் கோளாறை அடைவர். 999 என்ற எண் நச்சு நிரம்பிய அறையில் இருப்பது போலாகும்.
PLEASE CONTINUE IN FACEBOOK OR SWAMIINDOLOGY.BLOGSPOT.COM
முன்னேஸ்வரம் சிவன் கோவில்: இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள் – 3
இலங்கையின் தலைநகர் கொழும்பு நகரிலிருந்து சுமார் 82 கிலோமீட்டர் தொலைவில் முன்னேஸ்வரம் சிவன் கோவில் இருக்கிறது நாங்கள இரண்டு மணி நேரத்தில் கோவிலை அடைந்து விட்டோம் .
நல்ல பெரிய கோவில்.. கோவில்; பிரகாரத்தில் உள்ள விஸ்வ ரூப தரிசன சிலை மிகவும் பெரியது. பார்த்தவுடனேயே அனைவரையும் போட்டோ எடுக்கத் தூண்டுவதும் ஆகும் . சுவாமி தரிசனத்துக்குப் பின்னர் நான் எழுதிய 106 புஸ்தங்களில் சைவ சமயம் தொடர்பான 14 புஸ்தகக்ங்களை கோவில் அலுவலகத்தில் அன்பளிப்பாகக் கொடுத்தேன்.
இனி கோவில் பற்றிய விஷயங்களைக் காண்போம் .
இந்தத் தீவில் ஐந்து சிவாலயங்களை இணைத்து பஞ்ச ஈஸ்வரங்கள் என்று அழைப்பதுண்டு. அவை — திரு கோணேஸ்வரம் (திருகோணமலை), திருக் கேதீஸ்வரம் , முன்னேசுவரம் நகுலேஸ்வரம் , தொண்டீஸ்வரம் என்பன.
இவைகளில் முன்னேஸ்வரம், அங்கே நடைபெறும் விழாக்கள் காரணமாக தனிச் சிறப்பு உடையது.
இந்தியாவில் உள்ள கோவில்கள் அனைத்தையும் எப்படி முஸ்லீம் வெறியர்கள் நாசமாக்கினார்களோ அதே போல இலங்கை முழுதுமுள்ள இந்துக் கோவில்களை கிறிஸ்தவ வெறியர்கள் நாசமாக்கினார்கள். போர்ச்சுகீசிய கிறிஸ்தவ வெறியர்கள் கைவைக்காத இந்துக் கோவில் இலங்கையில் இல்லை .
கத்தோலிக்க கிறிஸ்தவர்களில் மிகவும் வெறி பிடித்தவர்கள் போர்ச்த்துகீசியர்களும் ஸ்பானியர்களும் ஆவர் . ஸ்பெயின் நாட்டு பாதிரிகள் தென் அமெரிக்கா , மத்திய அமெரிக்காவில் உள்ள இன்கா , மாயா , அஸ்டெக் (ஆஸ்தீக), ஒல்மெக் நாகரீக சின்னங்களை அழித்து தங்கக் கட்டிகளை TON டன் கணக்கில் ஐரோப்பாவுக்குக் கொண்டு சென்றனர்
உலகிலுள்ள ஏனைய பண்பாடுகளுக்கும் இந்துப் பணப்பாட்டுக்கும் உள்ள வித்தியாசம் , எத்தனை முறை அழித்தாலும் இந்துமதம் புத்துயிர் பெறும் . இந்து என்ற பெயரை நம் மதத்துக்கு கிரேக்கர்களும் பாரசீகர்களும் சூட்டுவதற்கு முன்னர் நம்முடைய மதத்தின் உண்மையான பெயர் சநாதன தர்மம் . அதன் பொருள் ஆரம்பமோ, முடிவோ இல்லாதது ; இந்தத் தனிச் சிறப்பு காரணமாக முன்னேஸ்வரமும் புத்துயிர் பெற்றது.
முன்னேஸ்வரம் கோவில் அருகிலுள்ள ஊர் சிலாவம் (Chilaw ) எனப்படும். இந்தக் கோவிலில் முன்னை நாதர், வடிவாம்பிகை சமேதராகக் காட்சி தருகிறார்
சிவ பெருமானை வழிபட, பிரம்மாவே இந்தக் கோவிலை, அமைத்ததாக தட்சிண கைலாசபுராணம் (அத்தியாயம் 16) கூறுகிறது
இராம பிரானும் இங்கே வந்து கவலைகள் நீங்கியவராகச் சென்றாராம் ; தர்மத்தின் உருவமாகத் தோன்றிய இராம பிரானுக்கு, போரில் பல வீரர்களை அழித்துவிட்டோமே என்ற கவலை இருந்தது . இந்தக் கோவில் அந்த மனச்சுமையை நீக்கியது என்பது ஐதீகம் ( வாய்மொழி வரலாறு).
அல்லி அரசாணியின் மூன்று முத்துக் குவியல்கள்
உலகில், நாட்டை ஆண்ட பெண்ணரசிகளில் மதுரை மீனாட்சியையும் அல்லி ராணியையும் அனைவரும் அறிவர். 2300 ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையை ஆண்ட மீனாட்சி பற்றி மெகஸ்தனிஸும் குறிப்பிடுகிறார் (பண்டேயா ராணி = பாண்டிய ராணி). அதே போல அல்லி அரசாணி பற்றி நாட்டுப் புறப்பாடல்களும் உண்டு . அர்ஜுனனும் வந்து விட்டார் அல்லி ராணி என்ற பாடல் பிரசித்தமானது . அந்த அல்லி ராணி, கடலில் எடுத்து வந்த முத்துக்களை மூன்று குவியல்களாக்கி ஒரு குவியலை மதுரை மீனாட்சிக்கும் இன்னும் ஒரு குவியலை முன்னேஸ்வரம் வடிவாம்பிகைக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது குவியல் முத்துக்களை தனக்கு எடுத்துக் கொள்ளுவாராம் .
மஹாவம்சம் கூறும் இலங்கையின் முதல் மன்னனான விஜயனும் , சோழ மன்னர்களும், குளக்கோட மஹாராஜனும் கோவிலுக்கு வந்து வழிபட்டதாகவும் கூறுவர் .
வரலாற்றுச் சான்றுகளின்படி ஆறாம் பராக்கிரம பாஹு (1412-1467CE ) இந்தக்கோவிலுக்கு நில தானம் செய்தார் என்று தெரிகிறது . 1578-ம் ஆண்டில் போர்ச்சிகீசிய வெறியர்கள் கோவிலை இடித்து தரைமட்டமாக்கினர் .
ஆயினும் 1753ம் ஆண்டில் கீர்த்தி ராஜ சிங்கம் இக்கோவிலுக்கு புத்துயிர் ஊட்டினார் ; பின்னர் பிரம்ம ஸ்ரீ குமார சுவாமி குருக்கள் 1919ம் ஆண்டில் கோவிலை மேம்படுத்தினார் . 1963-ம் ஆண்டில் இலங்கை வாழ் சைவ அன்பர்கள் நன்கொடை மூலம் கோவிலின் கோபுரம் எழுப்பப்பட்டது.
27 நாள் உற்சவம்
இந்தக் கோவிலின் தனிச் சிறப்பு 27 நாட்களுக்கு நடக்கும் நீண்ட விழா ஆகும். ஆவணி பெளர்ணமியில் மாயவன் ஆறு தீர்த்தவாரியுடன் அது நிறைவுபெறும்.
9 நாள் நவராத்ரி உற்சவம்
ஆதிகாலத்தில் இது ஒரு சக்தித் தலமாகவே விளங்கியது.. ஆகையால் தீவிலுள்ள ஏனைய கோவில்களை விட இங்கு நவராத்ரி உற்சவம் வெகு விமரிசையாக் கொண்டாடப்படுகிறது; ஒன்பது நாட்களும் 108 சங்குகளைக் கொண்டு சங்காபிஷேகம் நடைபெறும். விஜயதசமி அன்று வடிவாம்பிகை மானம்பு நிகழ்ச்சிக்காக ஊர்வலமாக எழுந்தருளுவார் .
இத்துடன் விக்கிபீடியா தரும் தகவலையும் காண்போம் :–
இங்கு திருவிழாக் காலத்திலே தினமும் காலையும் மாலையும் சோமாஸ்
கந்த மூர்த்தத்தின் வீதியுலா இடம்பெறும்.
மாலையில் சுவாமியின் திருவுலா நடைபெறும்போது சுவாமியை எதிர்நோக்கியவாறே அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருவுருவங்களைக் கொண்ட அழகிய தேர் பின்னோக்கிப் பவனிவரும். இதே விழாவன்று இரவு தீ மிதிப்பு வைபவம் நடைபெறும்.
பிட்சாடணோற்சவத் திருவிழா நடைபெறுகையில் . இங்குள்ள ஐந்தரை அடி உயரம் கொண்ட பிட்சாசாடண மூர்த்தி விக்கிரகம், கபாலம் ஏந்தி, அவிழ்த்துவிட்ட சடாமுடி அலங்காரங்களோடு திரு வீதிவுலா வருவார்.
அன்னை வடிவாம்பிகையின் உற்சவம் மாசி மாத மக நட்சத்திரத்தைத் தீர்த்தோற்சவமாகக் கொண்டு பத்து நாட்கள் நடைபெறும்.
சிவனுக்கும் சக்திக்கும் சமமாக உள்ள இத்தகைய விழாக்கள், மதுரை மீனாட்சி கோவிலை நமக்கு நினைவுக்குக் கொண்டுவரும்.
முன்னேஸ்வரம் கோவில் பற்றி இந்து இளைஞர் மன்றம் 2010 ஆம் ஆண்டில் வெளியிட்ட செய்திகள் இதோ:
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
செப்டம்பர் 16 : ஓஸோன் தினம்!
இதையொட்டி மாலைமலர் நாளிதழில் 14-9-2023 அன்று வெளியான கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
அதிகரித்து வரும் புவி வெப்பம்!
ஓஸோன் மண்டலத்தைப் பாதுகாப்போம்!
(முதல் பகுதி)
ச.நாகராஜன்
உயிர் காக்கும் ஓஸோன் மண்டலம்
பூமியைச் சுற்றி உள்ள ஓஸோன் மண்டலம் பூமியைப் பாதுகாக்கும் பெரும் வளையமாகும். இது வாயுக்களினால் ஆன ஒரு உறையாகும்.
சூரிய மண்டலத்திலிருந்து வரும் அல்ட்ரா வயலட் கதிர்களிலிருந்து பூமியை ஓஸோன் மண்டலம் காக்கிறது. மனிதர்களையும் தாவரங்களையும் காப்பது இந்த மண்டலம் தான்.
சூரியன் தனது அளவற்ற சக்தியை பூமியின் மீது வீசும் போது அது மனிதன் தாங்க முடியாத அளவு அளப்பரியதாகும். அதைத் தாங்கக் கூடியதாக ஆக்கி, மனிதர்கள் ஆரோக்கியமாக உயிர் வாழும்படி செய்வது இந்த ஓஸோன் மண்டலமே.
இந்த ஓஸோன் உறை மட்டும் இல்லாவிட்டால் இன்னும் அதிக அளவில் புற்று நோயும் காட்ராக்ட் போன்ற கண் நோய்களும ஏற்படும்.
ஓஸோனில் துளை
ஆனால் நகரங்களிலிருந்து எழும்பும் நச்சுப் புகைகள் இந்த ஓஸோன் உறை மீது பட்டுப் பட்டு அதில் அபாயகரமான அளவில் துளை
ஏற்பட்டுள்ளது; ஆஸ்திரேலியாவிற்கு மேலே அபாயகரமான அளவு பரந்து விரிந்தது மட்டுமின்றி பெரிதாகி வருகிறது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா விண்ணில் ஏவிய
சாடலைட்டிலிருந்து எடுக்கப்பட்ட படம் பூமியின் அபாயகரமான நிலையைக் காட்டுகிறது. அண்டார்டிகாவின் மேலே ஓஸோன் துளை பெரிதாகிக் கொண்டே போகிறது. இதன் பரப்பு 110 லட்சம் சதுர மைல்கள்.
அதாவது அமெரிக்க தேசத்தின் பரப்பளவைப் போல இது மூன்று மடங்கு அதிகம்!
1970ம் ஆண்டிலிருந்து விஞ்ஞானிகள் ஓஸோன் மண்டலத்தைக் கண்காணித்து வருகின்றனர். கவலைப்படும்படியாக சீஸனுக்குத் தகுந்த படி இது சுருங்கியும், விரிந்தும் வருகிறது.
செப்டம்பர் 16 ஓஸோன் தினம்
1995ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி உலக நாடுகள் அனைத்தும் ஓஸோன் லேயர் பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடியது. அது முதல் செப்டம்பர் 16ஆம் நாள் ஆண்டுதோறும் உலக ஓஸோன் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சங்கத்தின் மெட்ரோலாஜிகல் கண்காணிப்பு மையம் ஓஸோன் துளை
பெரிதாகி வருவது குறித்துக் கவலை தெரிவித்து ஓஸோனைக் காப்பாற்றுமாறு உலக நாடுகளை வேண்டி கேட்டுக் கொண்டது.
1987ல் அனைத்து நாடுகளும் நச்சுப் புகை கக்கும் விஷ வாயுக்களைக் கட்டுப்படுத்த உறுதி எடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டன.
ஆனால் இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
போதுமானதாக இல்லை என்பதை இந்த ஓஸோன் துளை தெரிவிக்கிறது.
நச்சு வாயுக்களே காரணம்
நச்சு வாயுக்கள் பூமியிலிருந்து அதிக அளவில் வெளிப்படுவதால் தான் ஓஸோனில் துளை ஏற்பட்டது. இந்த அபாயகரமான வாயுக்களில் குறிப்பிடத் தகுந்தது CFC எனப்படும் க்ளோரோ ஃப்ளோரா கார்பன் – Chloro Floro Carbon – ஆகும். இது ரெப்ரிஜரேஷன் எனப்படும் குளிர் சாதனக் கருவிகளில் உபயோகப்படுத்தப்படுகிறது. PUF எனப்படும் பாலி யூரிதேன் ஃபோமிலும் (Poly Urethane foam) இந்த சி.எப்.சி உள்ளது. இது ரெப்ரிஜரேட்டர்களிலும், இன்சுலேடட் மற்றும் ரெப்ரிஜரேடட் வாகனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
உலக நாடுகள் இதன் உபயோகத்தைத் தடுத்து நிறுத்தி மாற்றுப் பொருளாக 134ஏ என்ற வாயுவை ரெப்ரிஜரேஷன் சம்பந்தப்பட்ட கருவிகளில் உபயோகிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றன.
இது மட்டுமன்றி அனேக ஆலைகள் கக்கும் விஷப்புகைகள் பூமியின் மேலே உள்ள வளி மண்டலத்தை மோசமாகத் தாக்குகின்றன. ஆகவே விஷ வாயுக்களைத் தடுப்பதில் அனைவரும் விழிப்புணர்வு பெற்று அதைத் தடுக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
பர்டிகுலேட் மேட்டர்
காற்றில் உள்ள பர்டிகுலேட் மேட்டர் (Particulate Matter) எனப்படும் துகள்மப் பொருள்கள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்துபவை என்பதால் அதைப் பற்றிய விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகும். பி எம் 2.5 – PM 2.5 – என்பது துகள்மப் பொருள்கள் குறுக்களவில் 2.5 மைக்ரானுக்கும் குறைவாக இருப்பதைக் குறிக்கும்.
இவை மிகவும் நுண்ணிய சிறிய பொருள்களாக இருப்பதால் வேகமாகவும் எளிதாகவும் பரவும். அத்துடன் சுலபமாக மனிதர்களின் நுரையீரல்களைச் சென்றடையும். இவை சுலபமாகக் கண்ணுக்குப் புலப்படாமல் இருப்பதால் இவற்றைத் தவிர்ப்பதும் சற்று கஷ்டமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் முக்குக்கு முக்கு பிள்ளையார் கோவில்களும் , வட இந்தியாவில் பேட்டைக்குப் பேட்டை அனுமார் கோவிலும் இருப்பதைப் போல இலங்கை முழுதும் ஆங்காங்கே புத்தர் சிலைகளைக் கண்டேன். தலை நகரான கொழும்பில் குறிப்பிடத் தக்க இரண்டு பெளத்த விகாரங்களுக்கு வெளிநாட்டினரும் வருவதைக் கண்டேன். வெளியில் ஓரிரு பூக்கடைகள் இருக்கின்றன. அவை வெண் தாமரை மலர்களையும் அல்லி மலர்களையும் விலைக்கு விற்கின்றன . அவைகளை வாங்கும் பக்தர்கள், புத்தர் சிலையின் காலடிகளில் / பாதங்களில் அவைகளைப் பக்தியுடன் சமர்ப்பித்து ஓரிரு நிமிடங்களுக்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
முதலில் கங்காராமய ஆலயம் செல்வோம்.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புகழ்பெற்ற அறிஞர்-துறவி ஹிக்கடுவ ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரோவால் ஆரம்பிக்கப்பட்ட கங்காராமய கொழும்பின் மிகவும் பிரபல பௌத்த ஆலயங்களில் ஒன்றாகும். அழகான எரிக் கரையில் அமைந்த இக்கோவிலில் தங்க நிறம் பூசப்பட்ட புத்தர்கள் வரிசையாக உள்ளன. அவைகளோடு நாமும் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். இந்துக் கோவில்களைப் போலவே எவரும் காலணிகளுடன் உள்ளே நுழைய முடியாது. பெளத்த உருவங்களுடன் பிள்ளையார், முருகன் உருவங்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துக்கள், புத்தரையும் தசாவதாரங்களில் ஒன்றாகச் சேர்த்து பெளத்த மதத்தை ஜீரணம் செய்துவிட்டனர். ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்த அஷ் டபதிகளில் புத்தர் ஒன்பதாவது அவதாரம். இது போலவே பெளத்தர்களும் தற்கால விஹாரங்களில் இந்து தெய்வங்களை நிறுவியுள்ளனர்.
இலங்கைத் தீவுக்கு புத்தர். விஜயம் செய்ததாக மக்கள் நம்புகின்றனர் ராமாயண , மஹாபாரத கதாபாத்திரங்கள் நாடு முழுதும் விஜயம் செய்ததாகப் பல இடங்களை இந்துக்கள் காட்டுவது போல அவர்களும் புத்தர் விஜயம் செய்த இடங்களைக் காட்டுகின்றனர் .
பெய்ரா BEIRA ஏரிக்கரையில் அமைந்த இந்தக்கோவில் சீன, இந்திய, தாய்லாந்து கலை அம்ஸங்களைக் கொண்டது . வெசாக் (வைகாசி விசாகம்) விழாக் காலத்தில் ஏரியில் விளக்குகள் விடப்படுகின்றன . கோவிலுடன் இணைந்த நூலகம் புத்த பிட்சுக்களுக்குப் பயிற்சி தருகிறது . பல கல்வி, சமூக சேவைகளை செய்யும் இந்த ஆலயத்தின் புத்த குருமார்கள், பெரிய அறிஞர்களாக இருந்தவர்கள். அமைதியான சூழ்நிலையில் பல சந்நிதிகளில் புத்தரை தரிசிக்கலாம். சுமார் 200 ஆண்டு வரலாறு உடைய நவீன கால கோவில் இது.
XXXX
12. அசோகரமாய கோவில், கொழும்பு
Asokaramaya Buddhist Temple
இதே பெயரில் கொழும்புக்கு வெளியேயும் ஒரு கோவில் உண்டு. கொழும்பிலுள்ள கோவிலில் பெரிய புத்தர் சிலை இருக்கிறது. படிக்கட்டு வரிசையில் ஏராளமான புத்தர் சிலைகள் உள்ளன. நாங்கள் சென்றபோது கல்யாணத்துக்கு சிங்கள உடைகளுடன் வந்திருந்த பெண்களையும் கண்டோம். பழங்கால கடிகாரங்கள் , காமெராக்கள் முதலிய Antique ஆன்ட்டிக் – பழம் கலைப்பொருட்கள் ஒரு அறை முழுதும் நிரம்பி இருந்தது ; அதே போல பழைய நகைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் , வெண்தாமரை, அல்லி மலர்களை சிலைகளுக்கு சமர்ப்பித்தனர் .
இலங்கைத் தீவில் 3000–க்கும் மேலான புத்தர் கோவில்கள் உள்ளன. கொழும்பிலுள்ள புத்தர் கோவிலில் அசோகராமயா புத்தர் கோவிலை எளிதில் அடையலாம். புத்தரை பல்வேறு போஸ் Pose களில் பார்ப்பதோடு வண்ண ஓவியங்களையும், அருங்காட்சியகத்தையும் ஒருங்கே காணலாம்.
சிங்கள மக்கள் வீட்டிலுள்ள விலையுயர்ந்த ஒருபொருளை அல்லது புத்தர் சிலையை காணிக்கையாகக் கொடுப்பதாகச் சொல்லி விரதம் ஏற்பர் . அந்தக் காரியம் நிறைவேறினால் அதை ஆலயத்துக்கு அன்பளிப்பாகக் கொடுத்து விடுவார்கள் ; அப்படிச் சேர்ந்த ஏராளமான பொருட்களையும் காணலாம்.
பெரிய போதி மரம் (அரச மரம்) பாதுகாப்பு வளையத்துடன் காணப்படுகிறது புத்தர் தவம் செய்த முதல் அரச மரத்திலிருந்து உண்டாக்கப்பட்ட மரங்களை, அசோகர் இலங்கைக்கு மகன் மூலமும், மகள் மூலமும் அனுப்பிவைத்தார். ஆகையால் மக்கள் அதை பய பக்தியுடன் போற்றி வழிபடுகின்றனர்,
இறந்து போன கோவில் யானையின் தோலை அப்படியே போர்த்தி உயிருள்ள யானை நிற்பதை போலவே அமைத்துள்ளனர்
ஒரு மூத்த புத்த குருமாரை சக்கர நாற்காலியில் வைத்து கோவிலின் நுழை வாயிலில் அமர்த்தி இருந்தனர். அனைவரும் அவரிடம் ஆசி வாங்கிச் சென்றனர்
xxxx
வஜ்ஜிராமாய பெளத்த கோவில் Vajiraramaya Temple
1901ம் ஆண்டில் வஜ்ஜிராமாய மஹா தேரோ துவக்கிய இந்தக் கோவில் உலகம் முழுதுமுள்ள புத்த பிட்சுக்களுக்குப் பயிற்சி தருவதால் மிகவும் பிரபலம் அடைந்தது’.
இலங்கைத் தீவிலுள்ள கோவில்கள் பற்றி அறிய உதவும் புஸ்தகங்கள்:
Hundred Hindu Temples of Sri Lanka Ancient Medieval Modern by
Sanmugam Arumugam 1981, Colombo
To be continued………………………..
Tags- part 2, இலங்கை, 108 கோவில்கள், பெளத்த விகாரங்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
SNR Article Index : AUGUST 2023
AUGUST 2023
1-8-23 12352 இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள்! – அத் 14 – ஹிட்லரும் ஜோதிடமும்! 2-8-23 12356 SNR Article Index : JULY 2023 3-8-23 12361 மஹாத்மா காந்திஜியை சிலர் வெறுப்பது ஏன்?
4-8-23 12367 வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை (முதல் பகுதி)2-8-2023 அன்று மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. 5-8-23 12372 வெற்றி தரும் கொல்லூர் மூகாம்பிகை (இரண்டாம் பகுதி)
2-8-2023 அன்று மாலைமலர் இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரை. 6-8-23 12377 ஶ்ரீ சௌந்தர்ய லஹரீ – சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 7 7-8-23 12382 கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை – 1 மாலைமலர் 3-8-2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 8-8-23 12386 கல்வி ஞானம் வழங்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பிகை – 2 மாலைமலர் 3-8-2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 9-8-23 12391 நாரத பக்தி சூத்ரம் – சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 8 10-8-23 12395 சாணக்ய நீதி! சம்ஸ்கிருத செல்வம் 11-8-23 12400 இரண்டாம் உலகப் போர் – அத் 15 ஹாலிவுட் திரைப்படம் ஓப்பன்ஹீமர் 12-8-23 12404 இதிஹாஸப் பெண்மணிகள்! (முதல் பகுதி) குமுதம் 17-8-23 Suplement 13-8-23 12409 இதிஹாஸப் பெண்மணிகள்! (இரண்டாம் பகுதி) குமுதம் 17-8-23 Suplement 14-8-23 12415 இதிஹாஸப் பெண்மணிகள்! (மூன்றாம் பகுதி) குமுதம் 17-8-23 Suplement 15-8-23 12419 இதழியலில் ஆன்மீகம் ஏற்றிய இனியவர், இனிய கீதங்கள் புனைந்தவர் : திரு வெ.சந்தானம்! 16-8-23 12424 நீதி சதகம் – சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 9 17-8-23 12430 கொடுக்கல் வாங்கல் செய்ய உகந்த தினங்கள்! 18-8-23 12435 சகுனியின் மகனைக் கொல்லாத அர்ஜுனனின் கருணை! 19-8-23 12440 கடல் நீர் ஏன் உப்புக் கரிக்கிறது? ஜப்பானிய நாடோடிக் கதை தரும் காரணம்! – ஜப்பானிய நாடோடிக் கதை! 20-8-23 12445 காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 8
21-8-23 12448 புத்தக அறிமுகம்திருஆர். சேஷாத்ரிநாதன் அவர்கள்
எழுதியுள்ளஇராமாயணம்அயோத்தியா காண்டம் –கம்பர்
முதல் பாகம்22-8-23 12452 சோட்டாணிக்கரை பகவதி அம்மன்! (முதல் பகுதி) 15-8-23 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை 23-8-23 12457 சோட்டாணிக்கரை பகவதி அம்மன்! (இரண்டாம் பகுதி) 15-8-23 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை24-8-23 12461 நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 7 – ஐந்தாம் ஜார்ஜ் பாராட்டிய எழுத்தாளர்!25-8-23 12465 எல்லாம் அறிந்த சர்வக்ஞரை மடக்கிய சிறுவன் யார்?
26-8-23 12468 மோக்ஷ வாயில் காப்பாளர்கள் நால்வர் யார்? 27-8-23 12471 உடலுக்குச் சக்தி தரும் உணவுத் துணைப்பொருள்கள்! ஹெல்த்கேர் மாத இதழில் ஆகஸ்ட் 2023 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை 28-8-23 12475 மூன்று மன்னர்களைத் திகிலடையச் செய்த வாணனைப் பிடித்த சூரிய காங்கேயன்! -கொங்குமண்டல சதகம் பாடல் 54 29-8-23 12479 மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி – விசாலாக்ஷி (முதல் பகுதி) – 16-8-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 30-8-23 12483 மங்கல வாழ்வளிக்கும் அன்னபூரணி – விசாலாக்ஷி (இரண்டாம் பகுதி) – 16-8-2023 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. 31-8-23 12486 இரண்டாம் உலகப் போர் அத் 16 ஹிட்லரின் மண்டை ஓடு!