6. வள்ளலாருக்கும் யாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது? ஏன்?
XXXX
7.வள்ளலார் மறைந்தது எப்படி ?
XXXX
8.வடலூரில் இன்றும் கண்ணுக்கு முன் காணப்படும் அதிசயம் என்ன ?
XXXX
9.எல்லோரும் மேற்கோள் காட்டும் , சுவாமிகளின் வரி என்ன ?
XXXX
10.ராமலிங்க சுவாமிகள் யார் மீது பாடினார்? சென்னையை தரும மிகு என்று போற்றிப் பாராட்ட காரணம் என்ன ?
XXXX
விடைகள்
1.அருட் பெரும் ஜோதி
XXXZ
2.சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் இவர் சத்திய ஞானசபையை அமைத்தார்.அதுதான் அவரது பணிகளின் தலைமையிடம். அங்குதான் அவர் அமைத்த கோவிலும் இருக்கிறது
XXXXX
3.இவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் புரட்டாசி 19 (5 அக்டோபர் 1823) இல் கருணீகர் குலத்தில் பிறந்தார் . தந்தை இராமையாபிள்ளை, தாய் சின்னம்மையார்.; உடன்பிறந்தார் -சபாபதி, பரசுராமன், உண்ணாமுலை, சுந்தராம்பாள் ஆகிய நால்வரும் உடன்பிறந்தவர்கள்.
XXXX
4. “எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே” என்பதை குறிக்கும் வண்ணம், இவர் தோற்றுவித்த மார்க்கத்திற்கு “சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம்” என்று பெயரிட்டார்.
XXXX
5.இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது.
XXXX
6.வள்ளலார் – இலங்கையிலுள்ள ஆறுமுக நாவலர் ஆகிய இருவரிடையே மோதல் ஏற்பட்டதுதிரு அருட்பா என்ற பெயரில் நூலை வெளியிட்டதும் அதிலுள்ள பாடல்களை திருமுறைகள் என்று பெயரிட்டதையும் , வள்ளலாரின் சீடர்கள் அதை தேவார , திருவாசகத்துக்கு சமமாக வைத்ததையும் சைவர்கள் விரும்பவில்லை . இதனால் நாவலர், வள்ளலார் இருவரின் ஆதரவாளர்கள் இடையே ஏச்சுப்பேச்ச்சுகள் எழுந்து கோர்ட் வரை சென்றனர் ; வழக்கு ஒருவிதமாக முடிந்தது.
XXXXX
7.இதை ஸ்பான்டேனியஸ் கம்பஷன் SPONTANEOUS COMBUSTION என்று சொல்லுவார்கள். இந்து மதத்தில் இப்படி சோதியில் கலந்தோர் பலர். வள்ளலாரும் ஒரு அறைக்குள் சென்று கதவைத் தாளிடச் சொல்லிவிட்டு ஜோதி வடிவில் மறைந்தார் . இது 1874 தைப்பூசத்தன்று (ஜனவரி 30) நடந்தது.
XXXXXX
8.சுமார் 150 ஆண்டுகளாக இங்கு அணையா அடுப்பு உளது; அதாவது எல்லோருக்கும் எப்போதும் உணவு படைக்கப்படும். இதை ராமலிங்க சுவாமிகளே 23-5-1857ல் ஏற்றி வைத்தார். இன்றுவரை அடுப்பில் சமையல் நடந்து கொண்டிருக்கிறது .
XXXXX
9.வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்
XXXXXXX
10.சிவன், முருகன், கணபதி ஆகிய மூவர் மீது பாடினார்
அவரது தெய்வமணி மாலையில் 31 பாடல்கள் உள்ளன. அவர் சென்னையில் வசித்த காலத்தில் கந்த கோட்டத்துக்குச் செல்லுவது வழக்கம் ;அங்குள்ள சுப்ரமண்ய சாமி மீது பாடிய பாடல்கள் மிகவும் பிரசித்தமானவை. அப்போது கந்த கோட்டம் காரணமாக தருமமிகு சென்னை என்று பாடினார்.
குந்தாப்பூரிலிருந்து 3 கி.மீ தூரத்தில் , இயற்கை வனப்புமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைக்கிடையே அமைந்தது க்ரோத க்ஷேத்ரா என்று அழைக்கப்படும் சங்கர நாராயணர் கோவில் ஆகும் .
கரா சுரன், ரக்தாசுரன் என்ற இருவர் அட்டூழியம் செய்தபோது க்ரோத மஹரிஷி , சங்கரனையும் நாராயணனையும் வழிபட்டு இரு அரக்கர்களையும் அழித்தார் என்பது புராண செய்தி. அருகிலுள்ள மலைக்கு க்ரோத கிரி என்று பெயர். அதன் உச்சியில் சங்கர நாராயணர், கெளரி, லட்சுமி ஆகியோருள்ள கோவில் இருக்கிறது .முக்கிய கருவறையில் வலது புறத்தில் சங்கரலிங்கமும் இடது புறத்தில் நாராயண லிங்கமும் காணப்படுகின்றன நாராயண லிங்கத்தின் மீது காமதேனுவின் காலடிச் சுவடுகளைக் காணலாம் . கோவிலுக்கு எதிரே அழகான கோடி தீர்த்தம் உளது.. லிங்கங்களைச் சுற்றி எப்போதும் நீர் இருக்கும்.
கோவிலில் அழகான ஹரிஹரர் விக்கிரகமும் உண்டு பரிக்ரமத்தில் வெள்ளி சங்கரநாராயண விக்கிரகத்தைத் தரிசிக்கலாம். போர்ச்சுகீசிசிய மணியும் அங்கே தொங்குகிறது . பல கல்வெட்டுகளும் உள . ஒரு கல்வெட்டு 1563 ஆம் ஆண் டு கல்வெட்டு என்பதால் குறைந்தது 500 ஆண்டுப் பழமையான கோவில்.
Xxxx
குந்தாப்பூரிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் பைந்தூர் என்னும் இடத்தில் ஒரு சனீச்வர கோவில் இருக்கிறது
76.ஹொரநாடு அன்னபூர்ணேஸ்வரி கோவில் The Annapoorneshwari Temple , Horanadu
சிக்மகளூரிலிருந்து 100 கி.மீ தொலைவில் காடுகளுக்கு இடையே அன்ன பூர்ணேஸ்வரி கோவில் அமைந்துள்ளது அகஸ்தியர் ஸ்தாபித்த விக்ரகம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குறைந்தது 400 ஆண்டு வரலாறு உடைய கோவில். பத்ரா நதிக்கரையில் கோவில் இருக்கிறது .அக்ஷ்ய திருதியை முக்கிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது .அன்னபூர்ணேச்வரி சங்க சக்ரத்தை ஏந்தி நிற்கிறாள்.வேறு இரு கைகள் அபய முத்திரை வரத முத்திரை காட்டும் வகையில் உள்ளது.. அவற்றில் ஸ்ரீ சக்ரம், காயத்ரீ வரையப்பட்டுள்ளது . தங்க நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அன்ன பூரணியைத் தரிசி ப்போருக்கு உணவுப் பஞ்சமே இராது என்பது பக்தர்களின் நம்பிக்கை .
கோவிலின் சிறப்பு என்னவென்றால் கூரையில் செதுக்கப்பட்ட கூர்ம, ஆதி சேஷ சிற்பங்கள் ஆகும் இங்கு பிராசதாமாக மூன்று வேளைகளிலும் உணவு, காப்பி, தே நீர் வழங்கப்படுகிறது . இந்த ஊரை ஸ்ரீக்ஷேத்ர ஹொரநாடு என்று சொல்லுவார்கள்.
Xxxxx
77.அம்ருதபுர அம்ருதேஸ்வரர் கோவில் The Amruteshvara temple
சிக்மகளூ ரிலிருந்து 67 கி.மீ.; ஷிமோகாவிலிருந்து 50 கி.மீ.அம்ருதபுரம் இருக்கிறது
இது தாரிகரே அருகில் இருக்கிறது. ஸ்படிக லிங்கத்தினால் ஆன சிவலிங்கம் இருக்கிறது
இங்குள்ள அம்ருதேஸ்வரர் கோவில்1196 C.E யில் கட்டப்பட்டுள்ளதால் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையுடையது . ஹொய்சாள மன்னன் வல்லாளனின் படைத்தளபதி கட்டியது
இதன் சிறப்பு ஆளுயர சரஸ்வதி சிலை, அமர்ந்த நிலையில் இருந்து அருள் சுரப்பதாகும். இதனால் கல்வியில் குறையுள்ளவர்கள் முறையிட இவளிடம் வருகின்றனர் .
எல்லா ஹொய்சாள கோவில்களிலும் உள்ளது போல புராணக் காட்சிகள் கற்களில் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் 70 ராமாயணக் காட்சிகள் தென்புறச் சுவரில் யுத்த காண்டத்திலிருந்து பால காண்டம் செல்லுவது போல தலை கீழ் வரிசையில் செதுக்கப்பட்டுள்ளன வட புறச்ச சுவரில் கிருஷ்ணர் பற்றிய 25 காட்சிகளையும் மஹாபாரதப் போர் பற்றிய 45 காட்சிகளையும் காணலாம் .கல்வெட்டுகள் நிறைந்த கோவில்.மத்திய கால கன்னடக் கவிஞ்சரான கவிச்சக்கரவர்த்தி ஜன்னாவின் கவிதைகள் அடங்கிய க ல் வெட்டு சிறப்புடையது
XXXXX
78.இந்து முஸ்லீம் வழிபடும் பாபா- புதன் தத்த கிரி Baba Budangiri / Chandradrona Hill ( Dargah and Dattapeeta)
பாபா புதன் கிரி, தத்தாத்ரேயரை வழிபடும் ஒரு தத்த பீடமாகக் கருதப்படுகிறது. முஸ்லீம்கள் இதை சூபி பிரிவு மகானின் நினைவிடமாக வழிபடுகின்றனர். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாபா புதன் , முதல் முதலில் காப்பி பயிரை வெளிநாட்டிலிருந்து கொண்டுவந்தார் என்று சொல்லப்படுகிறது . இது 1895 மீட்டர் உயர பாபா புதன் கிரி சிகரம், 1926 மீட்டர் உயர பாபா முல்லைன கிரி சிகரம்,உடைய பிறைச்சந்திர வடிவ குன்றுத்தொடர். இதனால் சந்திர த்ரோண பர்வதம் என்றும் அழைக்கப்படுகிறது. அருகிலேயே இதிஹாஸக் கதைகளுடன் இணைத்துப் பேசப்படும் 3 நீர்வீழ்ச்சிகளும் இருக்கின்றன. ஆகையால் இந்துக்களும் முஸ்லிம்களும் அதிகம் வரும் இடம் இது.. தத்தாத்ரேயர் என்பவர் பிரம்மா, விஷ்ணு, சிவனின் ஒன்றிணைந்த அவதாரமாகக் கருதப்படுகிறது
வங்காளத்தில் பிறந்து டேராடூனில் சமாதி எய்திய மா ஆனந்த மயீ சொன்ன கதை :-
ஒரு பணக்கார வியாபாரி பிஸினஸ் Business (வியாபாரம்) தொடர்பாக ஒரு பயணத்தை மேற்கொண்டார். அவரிடமுள்ள பணத்தைப் பறிப்பதற்காக ஒரு திருடனும் பிஸினஸ் மேன் போல டிப் டாப்பாக உடை அணிந்து கொண்டு அவருடன் பயணம் செய்தான். அவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கினார்கள் . பணக்கார வியாபாரி தினமும் தனக்கு வரும் பணத்தை, திருட்டு வியாபாரிக்குத் தெரியும்படி பகிரங்கமாக எண்ணி, பையில் போடுவார். திருட்டு வியாபாரிக்கு அந்த பணத்தை எப்படியாவது பறிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. உண்மை வியாபாரி நனறாக குறட்டை விட்டுத் தூங்கும் நேரத்தில், வியாபாரி போல வேடம் அணிந்து வந்த திருடன் எல்லா இடங்களையும் தேடிப்பார்ப்பான். அவனால் கண்டுபிடிக்க முடியவே இல்லை. இனி ஒளித்து வைக்க எந்த இடமும் இல்லை என்ற அளவுக்கு அவன் அத்தனை இடங்களையும் பார்த்துவிட்டான் . அவனுக்கு பணத்தை எப்படி மறைத்து வைப்பது என்பதையாவது இந்த உண்மை வியாபாரியிடம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கை பிறந்தது . தன் ஆர்வத்தை அடக்க முடியாமல் மறுநாள் உண்மையைக் கக்கினான் .
அன்பரே, நான் பிசினஸ்மேன் அல்ல. உன் பணத்தை அபகரிக்க ஒரு பிசினஸ்மேன் போல வேஷம் போட்டு வந்தேன். உன்னிடம் ஒன்றையாவது கற்றுக்கொள்ள ஆசை. பகிரங்கமாக பணத்தை எண்ணி அதைப் பையில் போடுகிறீர்கள் . அந்தப் பையை நானும் ஒவ்வொரு நாளும் தேடிப் பார்த்தேன் ; கிடைக்கவில்லை. அதை எங்கே ஒளித்து வைக்கிறீர்கள்? பக்காத் திருடனான என்னால் கூட கண்டுபிடிக்க முடியவில்லையே – என்றான்.
உண்மை வியாபாரி சிரித்துக் கொண்டே சொன்னார்: உன் நடை உடை பாவனைகளைப் பார்த்தபோதே நீ திருடன் என்பது எனக்குத் தெரியும். அந்தப் பணப் பையை நீ எங்கெல்லாம் தேடுவாய் என்பதும் எனக்குத் தெரியும். ஒவ்வொரு நாள் இரவிலும் அதை உன்னுடைய தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு நான் நிம்மதியாகத் தூங்கினேன். நீ எல்லா இடங்களையும் சந்தேகப்படுவாய்.; ஆனால் உன் தலையணை பற்றி சந்தேகம் வராது ; அங்கே தேட மாட்டாய் என்பது எனக்குத் தெரியும் என்றான். திருடனுக்கு வெட்கமும் ஏமாற்றமும் ஏற்பட்டது
கடவுளும் இப்படித்தான். நமக்குளேயே ஒளிந்து கொண்டு அவரது லீலைகளால் நம்மை வெளியே தேட வைக்கிறார் .. உங்களுக்குளேயே ஒளிந்து கண்டிருக்கும் கடவுளை வெளியே தேட அவசியமில்லை !
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
மஹாத்மா காந்திஜியை சிலர் வெறுப்பது ஏன்?
ச.நாகராஜன்
மகாத்மா காந்திஜியை சிலர் வெறுப்பது ஏன்?
இந்தக் கேள்விக்கு விரிவான விடைகளைப் பலர் தந்து கொண்டே இருக்கின்றனர்.
அவர் முஸ்லீம்களிடம் காட்டிய பரிவும் அதில் ஹிந்துக்களின் நியாயமான உணர்வுகள் பலியானதும் ஒரு காரணம் என்பது ஒரு விடை.
இதை விளக்கும் முகமாக குருதத் என்பவர் விஸ்வாஸ்கட்டில் பதிவு செய்துள்ள ஒரு பதிவு இது. (Viswhwashghat by Guru Dutt)
ஆங்கிலத்தில் உள்ள கட்டுரையின் தமிழாக்கம் இது:
காந்திஜி ஒரு முறை டெல்லியில் வால்மீகி பாஸ்தி கோவிலில் (Valmiki Basti Temple) குர் ஆனை ஓதினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு பெண் எழுந்திருந்து காந்திஜியிடம் அப்படிச் செய்ய வேண்டாம் என்று கூறினார்.
காந்திஜி ‘ஏன்’ என்று கேட்டார்.
உடனே அந்தப் பெண்மணி ‘அது நமது மதத்திற்கு எதிரானது’ என்று பதிலளித்தார்.
காந்திஜி, “அப்படி என்று நான் நம்பவில்லை” என்று கூறினார்.
உடனே அந்தப் பெண்மணி, “நாங்கள் உங்களை எங்கள் மதத்தில் கட்டளையிடத் தகுதி உடையவர் என்று எண்ணவில்லை” என்றார்.
காந்திஜி அங்கிருந்தவர்களிடம் இது பற்றி ஓட் எடுக்கச் சொன்னார்.
“மதமானது ஓட்டின் அடிப்படையில் முடிவு செய்யக்கூடிய விஷயமா?” என்று அந்தப் பெண்மணி கேட்டார்.
காந்திஜி, “நீங்கள் எனது மதத்திற்கு இடையூறு செய்கிறீர்கள்” என்றார்.
அந்தப் பெண்மணி அவர் கோடிக்கணக்கான ஹிந்துக்களின் மதத்தில் சட்ட விரோதமாகக் குறுக்கிடுகிறார்” என்றார்.
காந்திஜி, “நான் குர் ஆனைக் கேட்கிறேன்” என்றார்.
அந்தப் பெண்மணி தான் அதை எதிர்ப்பதாகக் கூறினார்.
வால்மீகி இளைஞர்கள் நூற்றுக் கணக்கானோர் அந்தப் பெண்மணிக்கு ஆதரவாக எழுந்தனர்.
அவர்கள் அனைவரும், “இந்த கோவிலில் குர் ஆனை ஓதுவதற்கு முன்பாக கீதை அல்லது இராமாயணத்தை மசூதியில் ஓதுங்கள்’ என்றனர்.
எதிர்ப்பு அதிகமாக வலுப்பதை உணர்ந்த காந்திஜி உடனே போலீஸை வரவழைத்தார். அவர்கள் உடனே எதிர்த்தவர்களைப் பிடித்தனர். 107 கேஸ்கள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டன.
போலீஸ் பாதுகாப்பில் அதே கோவிலில் காந்திஜி குர் ஆனை ஓதினார்.
இந்த இரட்டை வேடப் பித்தலாட்டத்தினால் தான் காந்திஜியை சிலர் விரும்பவில்லை.
நன்றி, ஆதாரம் : கல்கத்தாவிலிருந்து வெளி வரும் வார இதழ் ட்ரூத்
As usual thousands of people participated in the Annual Hare Krishna Rath Yatra in London on 29-7-2023.
Only one Ratham/ Chariot with Jagannatha, Balabhadra and Subadra was pulled by the devotees.
Scores of Devotees prostrated before the Ratha on roads.
Since it began at Hyde Park corner and finished at Trafalgar square, several thousands watched the procession with wonder. It is the tourist area in London.
At the Hinduja Foundation fed all the people with tasty vegetarian food.
The devotees, particularly women devotees, sang and danced all along the route.
Two youngsters in Radha Krishna disguise attracted the attention of everyone. (See the attached pictures)
I have been covering Ratha Yatra for over 30 years.
முப்பது அல்லது 33 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் உள்ள மார்பிள் ஆர்ச்MARBLE ARCH பகுதிகளை போட்டோ எடுக்கப்போனபோது எனக்கு ஒரு சர் ப்ரைஸ் SURPRISE காத்திருந்தது . அங்கே இரண்டு அல்லது மூ ன்று தேர்கள் நின்று கொண்டிருந்தன. அதைச் சுற்றி குடுமி வைத்த வெள்ளைக்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். நான் கொண்டுபோன ‘டப்பா’ காமெரா மூலம் சில புகைப்படங்கள் எடுத்தேன் அவை என்னிடம் இன்றும் உள்ளன . அவர்கள் Battersea Park பாட்டர் ஸீ பார்க் வரை ஊர்வலமாகச் செல்வார்கள் என்று கேள்விப்பட்டேன் . எனக்கு அப்போது லண்டன் புதிது என்பதால், படம் மட்டும் எடுத்துவிட்டு, வீட்டுக்குப் புறப்பட்டேன். அதற்குப் பின்னர் ஆண்டுதோறும் ரத யாத்திரை அன்று போய்க்கொண்டிருக்கிறேன். கோவிட் காலத்தில் 2 ஆண்டுகள் நடக்கவில்லை.
இந்த ஆண்டு 30-7-2023 ஆண்டு ஹரே கிருஷ்ணா ரதம் லண்டனின் HYDEPARK CORNER ஹை ட் பார்க் கார்னரிலிருந்து புறப்பட்டு டிரபால்கர் ஸ்கொயர் TRAFALGAR SQUARE வரை வந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வெள்ளைக்கார கிருஷ்ண பக்தைகள் தெருவில் நடன ம் ஆடி வந்தனர் . ராதா, கிருஷ்ண வேடம் தரித்த இரண்டு குழந்தைகளை எல்லோரும் புகைப்படம் எடுத்தனர்.
ஊர்வலம் செல்லும் வழி, TOURIST AREA டூரிஸ்டுகள் குவியும் இடம் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் ரதத்தைக் கண்டு வியந்தனர் இந்த ஆண்டு ஒரே ரதம் மட்டுமே ஜகந்நாதரையும் பலபத்ராவையும் சுபத்ராவையும் தாங்கி பவனி வந்தது .தெருவெல்லாம் பக்தர்கள் சாலையில் விழுந்து நமஸ்காரம் செய்தது எல்லோரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. ; பல நாடுகளிலிருந்தும், பல ஊர்களிலிருந்தும் ஆண்டுக்கு ஒரு முறை சந்திக்கும் நிகழ்சசி ஆதலால் எல்லோரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி அன்பைப் பரிமாறிக்கொண்டனர். வழக்கம்போல பெண்கள் குழந்தைகள் சகிதம் , பிராம் PRAM சகிதம் வந்திருந்தனர். குழந்தைகள் விளையாடும் ஹரே கிருஷ்ணா பொம்மையைத் தலையில் வைத்துக்கொண்டு ஒருவர் பவனி வந்தார் . பல பஜனைக்குழுக்கள் தமுக்கு அடித்துக்கொண்டு ஆடியும் பாடியும் வந்தனர், தெருவெங்கும் ஹரே கிருஷ்ண கோஷம்தான் ;
இறுதியில் டிரபால்கர் ஸ்கொயரில் பல்லாயிரக் கணக்கானோருக்கு ஹிந்துஜா பவுண்டேஷன் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பல கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இத்துடன் உள்ள படங்களில் பக்தர்களின் உற்சாகத்தை காணலாம்.
–subham—
Tags–London, Rath Yatra , லண்டன், ஹரே கிருஷ்ண ரத யாத்ரா
ON SATURDAY 29 JULY 2023 , LONDON MURUGAN DEVOTEES HELD THEIR 11TH YEAR ANNUAL THIRUPPUGAZ VIZA (Festival) AT LONDON MURUGAN TEMPLE. MRS JAYANTHI SUNDAR LEAD THE GROUP WITH HER DISCIPLES, THE THREE-HOUR FUNCTION WAS ATTENDED BY 100 PEOPLE. MR SUNDAR AND MR.RAJA GOPALAN SPOKE. PRASAD/LUNCH WAS SERVED AT THE END. THIS IS THE 11TH YEAR OF THE FESTIVAL. MR AND MRS BALA OF ILFORD CORDINATED THE EVENT EFFICIENTLY . MR BALA DID THE DEEPARADHANA. SELECTED THIRUPPUGAZ SONGS OF ARUNAGIRINATHAR WERE RENDERED BEAUTIFULLY BY THE ARDENT DEVOTEES. PICTURES TAKEN BY LONDON SWAMINATHAN ARE ATTACHED
ஆண்டுதோறும் நடைபெறும் திருப்புகழ் விழா 10 ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது ; பதினொன்றாவது ஆண்டு திருப்புகழ் விழா ஜுலை 29-ஆம் தேதி (2023) லண்டன் முருகன் கோவிலில் நடைபெற்றது. சுமார் 100 பக்தர்கள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தப் பாடல்களை இனிய ராகங்களில் பாடினார்கள். சுமார் மூன்று மணிநேரத்துக்குப் பாடினார்கள் ; முருகன், வேல் படங்களுக்கு பூஜையும் செய்யப்பட்டது திருமதி ஜெயந்தி சுந்தர் இதை முன்னின்று நடத்தினார். அவரிடம் திருப்புகழை வாரம்தோறும் கற்கும் அன்பர்களுடன் பொது மக்களும் சேர்ந்து பாடினார்கள். நிகழ்ச்சியில், திரு சுந்தர், திரு ராஜகோபாலன் ஆகியோர் பேசினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இல்போர்ட் ILFORD திரு பாலா, திருமதி பத்மா பாலா, ஆகியோர் செய்தனர் ; நிகழ்ச்சி முடிவில் பஞ்சாமிர்தம் உள்பட அறுசுவை உண்டி பரிமாறப்பட்டது.
இத்துடன் இணைத்துள்ள புகைப்படங்களில் பங்கேற்ற அன்பர்களைக் காணலாம். புகைப்படங்களை நான் எடுத்தேன் .
—subham—
Tags- லண்டன் திருப்புகழ் விழா , LONDON THIRUPPUGAZ FESTIVAL
1.Sanskrit word for reason, cause; even Tamils use this word with the same meaning
6. Sanskrit word for night; even Tamils use this word with the same meaning
8.Diamond in Sanskrit; Indra’ s weapon is as strong as this.
9.Hither and thither in Sanskrit
10. Sanskrit word for mountain; even Tamils use this word with the same meaning in many names of towns and hills
XXXXX
DOWN
1.Greatest of the Kalinga/ Orissa Kings; his Hathikumbha Cave inscriptions give us lot of information about Tamil Nadu etc
2.word for fleshless or kingless in Sanskrit .
3.No cruelty is one meaning; also name of a great Yadava. English word Cruel is derived from this root
4.auspicious word with letter A; many commentaries and books begi with thi word
5.Word for Cupid; love god and love in Sanskrit
7. Strength; courage; valour; brilliance; splendour. HAL named Indian fighter planes with this word. Brahmin boys pray for this in early morning Samithadhanam fire ritual.
கடையில் சுழுமுனைக் கபாலமுங் காட்டி- என்ற வரிகளில் இடைகலை, பிங்கலை, சுழுமுனை என்றால் என்ன அர்த்தம் ?
xxxxxx
7.நான்று எழுபாம்பின் நாவில் உணர்த்தி
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டுஎழு மந்திரம் வெளிப்பட உரைத்து– என்ற வரிகளில் பாம்பு, அசபை என்றால் என்ன ?
xxxx
8.மூலா தாரத்தின் மூண்டுஎழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முகத் தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முக மாக இனிது எனக்கருளி
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி– என்பதன் சுருக்கமான பொருள் என்ன ?
xxxx
9.சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி—
இதில் சத்தம், சித்தம் என்பன என்ன ?
xxxxxx
10.ஒளவை எப்படி விநாயகர் அகவலை முடிக்கிறார் பொருள் என்ன ?
xxxxx
விடைகள்
1.ஆறு ஔவையார்களில் பிற்கால ஔவையார் வழங்கிய விநாயகர் அகவல் துதியில் 72 வரிகள் உள .
Xxxxxx
2.ஐந்து கைகள் மூன்று கண்கள் .
Xxxx
3.மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம்
Xxxx
4.மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி என்று சிவபுராண துதியில் மாணிக்கவாசகர் பாடுகிறார்.
xxxx
5.மூன்று மலங்கள் – ஆணவம், கன்மம், மாயை
நான்கு தலங்கள் — சரியை, கிரியை, யோகம் , ஞானம் ஆகிய நான்கால் அடையும் சாலோக, சாமீப, சாரூப , சாயுஜ்ய என்னும் நான்கு நிலைகள்
ஐந்து புலன்கள் – கண், காது, , மூக்கு, , வாய், மெய்/உடல்
ஒன்பது வாயில் — பகவான் கிருஷ்ணர் கீதையில் நவத் வாரபுரி என்று உடலை வருணிக்கிறார்; அவை இரு கண், இரு செவி, நாசியின் இரு துளை, வாய், எருவாய், (Anus) கருவாய் (Genital organ).
ஆறு ஆதாரங்கள் – மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்கினேயம்
xxxxxx
6.இடைகலை – இடது துளை வழியாக மூச்சு விடுதல் /சந்திரன்
பிங் கலை வலது துளை வழியாக மூச்சு விடுதல் / சூரியன்
சுழுமுனை — இருதுளை வழியாகவும் மூச்சுக்காற்று சென்று வருதல் /அக்கினி
Xxxxx
7.பாம்பு- மூலாதாரத்தில் உறைந்து கிடக்கும் குண்டலினி என்னும் மகத்தான சக்தி
அசபை — அஜபா என்னும் ஸம்ஸ்க்ருதச் சொல்லின் தமிழ் வடிவம்; நாம் வாயால் சொல்லாமலேயே நம் மனது முனுமுனுக்கும் மந்திரம்; இதை ஹம்சம் என்றும் சொல்லுவார்கள்; அதை உணர்ந்தவர்களை பரம ஹம்சர் என்று அழைப்போம். வெளியேறும் மூச்சின் ஒலி – ஹம் ; உள்ளே இழுக்கும் மூச்சின் ஒலி- சம் .பிராணாயாமம் செய்வோர் இதை ஊமை எழுத்து என்றும் சிவோஹம் என்றும் சொல்லுவர்.
xxxxxx
8. யோகத்தின் மூலம் இறைவனை அடைய முயலுவோருக்கு ஏற்படும் அனுபவம் இது. குண்டலினி என்னும் மகத்தான சக்தியை எழுப்பி தலையில் உள்ள ஆறாவது சக்கரத்துக்கு கொண்டு சென்றால் அமுதம் சுரக்கும். அதை அனுபவிக்கும் நிலை எல்லையில்லாத ஆனந்தம் அளிக்கும். எட்டு என்பது- ஓசை, ஊறு , ஒளி, சுவை, நாற்றம் என்ற ஐந்து உணர்வுகளுடன் இறுப்பு , எழுச்சி, மனம் என்ற மூன்றும் சேர்த்து எட்டு.
xxxx
9.புற உலகில் சதாசிவனையும், மனம் ஆகிய அக உலகில் சிவலிங்கத்தையும் காட்டுவாயாக
xxxx
10.கரும்பு போல் இனிமையைச் சுரக்கும் வழியைக் காட்டி, அஞ்செழுத்தாகிய நமசிவாய என்பதன் பொருளும் காட்டி, என்னை ஆட்கொண்ட விநாயகனை சரண் அடைகிறேன் உன்னுடைய திருவடிகளே எனக்கு புகலிடம் ஆகிறது.
xxxxx
விநாயகர் அகவல் – ஔவையார்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும்
வன்ன மருங்கில் வளர்ந்தழகு தெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (5
வேழ முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன (15
இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந்து எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்துஎன் உளந்தனில் புகுந்து (20
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் (25
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிது எனக்கருளிக்
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்து
இருவினை தன்னை அறுத்து இருள்கடிந்து (30
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி
ஆறா தாரத்து அங்கிசை நிலையும் (35
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே
இடைபிங் கலையின் எழுத்து அறிவித்து
கடையில் சுழுமுனைக் கபாலமுங் காட்டி
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின்
நான்று எழுபாம்பின் நாவில் உணர்த்தி (40
குண்டலி அதனில் கூடிய அசபை
விண்டுஎழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டுஎழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45
குமுத சகாயன் குணத்தையுங் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டி
சண்முகத் தூலமும் சதுர்முக சூக்கமும்
எண்முக மாக இனிது எனக்கருளி (50
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்திமுத்தி இனிது எனக்கு அருளி
என்னை அறிவித்து எனக்கருள் செய்து (55
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி இரண்டுக்கும் ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத் தழுத்திஎன் செவியில் (60
எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டி
சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டி
சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் (65
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கரத்தின் நிலையறி வித்து
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே. (72
—- SUBAM —–
TAGS- விநாயகர் அகவல், பொருள் என்ன, ஒளவையார், க்விஸ், கேள்வி-பதில்
1-7-23 12210 பழைய கேள்வி தான்; ஆனால் புதிய பதில்கள்!
2-7-23 12214 எப்போதும் நினைவில் இருத்த வேண்டியவர்கள்!
சுபாஷிதம்
3-7-23 12218 SNR Article Index : JUNE 2023.
4-7-23 12222 சுவாமி விவேகானந்தர் தன்னைப் பற்றிக் கூறியவை!
5-7-23 12226சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த நாத்திகவாதி, கோடீஸ்வரர், விஞ்ஞானி, பாடகி! – முதல் பகுதி – 2-7-23 மாலைமலர் இதழில் வெளி வந்தது. 6-7-23 12231 சுவாமி விவேகானந்தரைச் சந்தித்த நாத்திகவாதி, கோடீஸ்வரர், விஞ்ஞானி, பாடகி! – இரண்டாம் பகுதி – 2-7-23 மாலைமலர் இதழில் வெளி வந்தது. 7-7-23 12236 நக்ஷத்திர ரகசியம்! 8-7-23 12242 மாறி வரும் மும்பை!9-7-23 12247 காலன் வரும் முன்னே காலன் வரமாட்டான் – 6 10-7-23 12252 நடந்தவை தான் நம்புங்கள்! பாகம் 2 – அத்தியாயம் 5 11-7-23 12257 800 கோடி மக்களால் விழி பிதுங்கும் பூமித் தாய்! -(முதல் பகுதி). 12-7-23 12261 800 கோடி மக்களால் விழி பிதுங்கும் பூமித் தாய்! (இரண்டாம் பகுதி). 13-7-23 12266 காலம் வரும் முன்னே காலன் வர மாட்டான்! – 7 14-7-23 12271 பிசாசு ரௌடி கார்! 15-7-23 12276 எது கொடியது? எது இனியது? 16-7-23 12280 வெற்றி தரும் விஜய யோகம் – சுபாஷித செல்வம் 17-7-23 12285 சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின்
அறிமுகம்! – 1 18-7-23 12290 நடந்தவை தான் நம்புங்கள் பாகம் 2 அத்தியாயம் 6
19-7-23 12294 நள சம்பு சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – 2 20-7-23 12299 திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்! (முதல்
பகுதி) – மாலைமலர் 18-7-23 கட்டுரை
21-7-23 12303 திருமண வரம் அருளும் குமரி பகவதி அம்மன்! (இரண்டாம் பகுதி) – மாலைமலர் 18-7-23 கட்டுரை 22-7-23 12307 நீதி த்விசஷ்டிகா – சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 3 23-7-23 12311 நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்! (முதல் பகுதி) 20-7-23 அன்று மாலைமலர் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை24-7-23 12316 நிலவை வசப்படுத்த துடிக்கும் மனிதன்! (முதல் பகுதி) 20-7-23 அன்று மாலைமலர் வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை25-7-23 12320வியாஸ சுபாஷித சங்க்ரஹா சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 4 26-7-23 12325 சரஸ்வதி கண்டாபரணம் – சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 5. 27-7-23 12330 திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை – கர்ப்பரட்சாம்பிகையின் கருணை (பகுதி 1) மாலைமலர் 22-7-23 இதழில் பிரசுரமானது 28-7-23 12334 திருக்கருகாவூர் கர்ப்பரக்ஷாம்பிகை – கர்ப்பரட்சாம்பிகையின் கருணை (பகுதி 2) மாலைமலர் 22-7-23 இதழில் பிரசுரமானது 29-7-23 12339 கிராதார்ஜுனீயம் சம்ஸ்கிருத இலக்கியக் கடல் – சில துளிகளின் அறிமுகம்! – 6 30-7-23 12343 இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி – முதல் பகுதி – மாலைமலர் 25-7-2023 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை 31-7-23 12347 இல்லற பிரச்சினைகளைத் தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி – இரண்டாம் பகுதி – மாலைமலர் 25-7-2023 இதழில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை.