Post No. 15,173
Date uploaded in London – 11 November 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
பிருஹத் தேவதா
செளநகர் எழுதிய நூல் ; இந்து தெய்வங்களை பற்றி அவர் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதியுள்ளார்
Brhad devata
It is text on deities. It is believed that Saunaka wrote it in fifth century BCE.
***
பெனாரஸ்
வாரணாசி என்பது ஆங்கிலத்தில் பெனாரஸ் ஆகிவிட்டது தமிழில் காசி என்று சொல்லுவோம் இந்துக்களின் முக்கியமான புனித தலம் வாழ்நாளில் ஒவ்வொருவரும் ஒரு முறையாவது காசிக்குச் செல்ல வேண்டும் என்பது சம்பிரதாயம் அங்குள்ள காசி விஸ்வநாதர்- விசாலாட்சி கோவிலும் மிகவும் வணங்கப்படும் தெய்வங்கள் ஆகும் காசி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது வருணா ,அசி
இரண்டு நதிகளுக்கு இடையில் இருப்பது; இந்துக்கள் கடைசி காலத்தை அங்கு கழிப்பதைக் குறிக்கோளாக கொண்டுள்ளார்கள். கங்கா ஆரத்தி மிகவும் பிரசித்தமானது . மோட்சம் தரும் ஏழு நகரங்களில் ஒன்று
Benares
The greatest pilgrimage destination for the Hindus. Hindus are supposed to visit and bathe in Ganges and have Dasrshan of Lord Viswanatha and Vishalaskhi at least once in a life time. Varanasi is the name that denotes two rivers Varuna and Asi. Centre of great intellectuals from Vedic days. One of the Sapta Puris. Kasi kingdom is one of the oldest kingdoms in the world. We hear about it Mahabharata and other scriptures. Varanasi is corrupted to Benares in English. Ganga Arti is watched by thousands every day.
***
பீஜ மந்திரம் பீஜ என்றால் விதை/ வித்து சில மந்திரங்களுக்கு அபூர்வ சக்தி உண்டு; அதாவது அந்த ஒலியானது சில விளைவுகளை /நன்மைகளை ஏற்படுத்தக் கூடும் அதை முறையாக சுத்தமாக இருக்கும் போது பெரியோர்கள் பயன்படுத்துவார்கள் சில உதாரணங்கள் : க்ரீம், க்லிம், ஸ்ரீம் ,ஐம் ஆகும். மேலும் சில:1. லம் 2. வம் 3. ரம் 4. யம் 5. ஹம் 6. ஓம் 7. க்ஷம் இவைகளை பாட்டரி அல்லது பவர் ஹவுஸ் என்றும் சொல்லுவார்கள்
; இத்தகைய மந்திரங்கள் தேவி வழிபாட்டில் பயன்படுத்தப்படுகிறது ஓம் கம் கணபதயே என்ற மந்திரத்தில் கம் வருகிறது; யந்திரத் தகடுகளில் இவைகளை எழுதி பூஜை செய்து அபூர்வ சக்திகளை பெறலாம் என்பது நம்பிக்கை .
Bheeja Mantras
Bheeja Mantra are brief mantras. These consist of a few syllables and are often characterized by meanings that are not readily apparent. They are a specific type of mantra. Some people describe them as batteries or power houses.
Some examples used in the worship of devatas:
Devi worship will be usually done by using bheeja (seed) mantras:
“Hreem” ,”Kleem”,”kreem” ,”Aim” ,”Sreem” ,Kreem ,Hreem,
Kleem, Sreem , Aim , Gam, Ham , Ram ,Yam ,Ksham ,Tam.
Such mantras are written on Yantras (metal plates with drawings) and worshipped. They repeat it several times to get some powers.
***
பிரம்ம சூத்திரம்– இது இந்துக்களின் மூன்று முக்கிய நூல்களில் ஒன்று இதில் 555 சூத்திர வடிவில் இறைவனின் குணாதிசயங்கள் உள்ளன. பிரஸ்தான த்ரயம் என்ற மூன்று நூல்களில் பகவத் கீதை உபநிஷதம் பிரம்ம சூத்திரம் ஆகியன அடங்கும் இது இந்து மதத்தின் ஆதார/ அஸ்திவார நூல்கள். பிரம்ம சூத்திரம் என்ற சம்ஸ்க்ருத நூலை எழுதியவர் பாதராயண வியாசர். இதற்கு ஆதிசங்கர உரை எழுதியுள்ளார் காலம் 2500 ஆண்டுகளுக்கு முந்தியது
Brahma sutras
Written by Badarayana Vyasa around 500 BCE. It is one of the Prasthana Trya. That is the foundation of Vedanta comprising Bhagavad Gita, Upanishads and the Brahma sutras. This book contains 555 sutras. Adi Shankara’s commentary on it is the most popular among the commentaries. The aphoristic verses (sutras) are arranged in in four chapters dealing with attaining knowledge of Brahman. Rejecting the smriti as a base of knowledge, it declares that the Vedic Upanishads are the only acceptable source of truth.
***
பிரம்ம சமாஜம் ராஜாராம் மோகன் ராய் என்பவர்1828 ஆண்டில் துவங்கிய இந்துமத சீர்திருத்த இயக்கம் ஆகும் அவர் சதி போன்ற பழக்கங்களை நீக்கும்படியும் பால் ய விவாகத்தை தடுக்கும் படியும் கோரி இயக்கம் நடத்தினார். விக்ரக வழிபாடு, யாத்திரை , பல சமயச் சடங்குகளையும் இந்த இயக்கம் எதிர்த்தது. கேசவ சந்திர சென், தேவேந்திர நாத் மற்றும் விண்கலத்தில் வசித்த அறிஞர்கள் ஆதரித்தனர்
Brahmo samaj
It is a reform movement founded in Kolkata in 1828 by Rajaram Mohan Roy. It opposed features like polytheism, pilgrimages, image worship, animal sacrifices, social practices such as sati, child marriages and caste regulations. Debendranath Tagore and Keshu Chandra Sen were some of the prominent people who supported it.
****

பெரிய கோவில் தஞ்சாவூர் ராஜராஜ சோழன் கட்டிய பிரகதீஸ்வரர் கோவில் ஒரு மகத்தான பொறியியல் அதிசயம் ஆகும் அங்குள்ள சிவனை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகின்றார்கள் பெரிய நந்தியும் கர்ப்ப கிரகத்தில் உள்ள மிகப்பெரிய லிங்கமும் ஓவியங்களும் மிகவும் புகழ் பெற்றவை தஞ்சாவூர் பெரியகோவிலில் ஐந்து அதிசயங்கள் உள்ளன:
1.வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்!
2.பெரிய சிவலிங்கம்; சிவலிங்கம் என்பதன் பொருள் கடவுள் உருவமற்றவர் என்பதாகும். 13 அடி உயரம்!
3.கர்ப்பகிரகத்துக்கு நேராக மிகப் பெரிய நந்தி; சிவபெருமானின் வாஹனம்; 12 அடி உயரம். எடை 12 டன்!
4.கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம். அங்குள்ள கல்லின் எடை 81 டன்!
5.இறுதியாக ஆயிரம் ஆண்டு பழமையான அற்புத ஓவியங்கள்
Big Temple in Thanjavur is a famous Shiva temple. It is built by Rajraja Choza about 1000 years ago. The tower the Nandhi/Bull statue and the Shiva Linga in the Garbha Griha (Sanctum sanctorum) are huge. The tower is 216 feet tall. Inside the temple old frescoes are on the walls. A stone weighing 80 tons is on top of the min building. It is an engineering marvel.
***
பிரம்மோற்சவம் ஒவ்வொரு கோவிலிலும் ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய விழா பிரம்மோற்சவம் எனப்படும். ஒவ்வொரு நாளும் தெய்வத்தை ஊர்வலமாக வீ தி களின் வழி யாக கொண்டு வருவார்கள். கோவிலுக்குச் சென்று வணங்க முடியாதவர்களுக்கு கடவுளே நேரில் வந்து தரிசனம் கொடுக்கும் ஒரு அருமையான ஏற்பாடு இது. மேலும் கடைசி நாளில் நடைபெறும் தேர்த் திருவிழாவில் ஜாதி மத இனம் வேறுபாடு இன்றி அனைவரும் ஒன்று கூடி தேர் இழுப்பது சமுதாய ஒற்றுமையை உறுதி படுத்துகிறது. பிரம்மோற்சவம் மஹாபாரத விராட பருவத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக பத்துநாட்கள் நடைபெறும். முதல் நாள் ஏற்றப்பட்ட கொடி/ த்வஜம் பத்தாவது நாள் இறக்கப்படும். அதற்கு முன்னர் தீர்த்தவாரி என்னும் சம்பிரதாய நீர்ச் சடங்கு நடைபெறும். அன்றையதினம் இறைவனை ஆறு அல்லது கடலுக்கு எடுத்துச் செல்வார்கள்.
Brahmorchava : It is the main annual temple festival. Normally it is celebrated for ten days with the Flag hoisting on the first day. During the ten days deities will be taken around the town on different Vahanas. It gives an opportunity to see God at their door step for those who could not go to the temples. Last day or the ninth day, Chariot festival is held. Thousands of people join to pull the huge wooden chariot. Since any one can participate in it, it strengthens the unity of the community. The festival comes to an end when the flag s brought down. Before that, God is taken to the nearest water source for bathing.
To be continued……
Tags- part 14, HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL இந்துமத கலைச்சொல் அகராதி 14, பிரம்ம சூத்ரம், Big Temple, Brahmorchava


