நீடித்த ஆயுள் பெற ஒரு வழி : சிருங்கேரி ஆசார்யாளின் அருளுரை!(11,826)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,826

Date uploaded in London –   22 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

நீடித்த ஆயுள் பெற ஒரு வழி : சிருங்கேரி ஆசார்யாளின் அருளுரை!

ச.நாகராஜன்

 சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் தக்ஷிணாம்னாய சிருங்கேரி சாரதா பீடத்தின் 35வது பீடாதிபதிகளாக 35 வருடங்கள் திகழ்ந்தார்கள்.

அவர் ஆற்றிய அருளுரைகள் பல; நிகழ்த்திய லீலைகள் பல.

மஹாஸ்வாமிகள் பிங்கள வருடம் ஆச்விஜ மாதம் கிருஷ்ண பக்ஷம் சதுர்த்தசி திதி – 13-11-1917 அன்று பெங்களூர் நகரில் கைபு ராமா சாஸ்திரிகள் மற்றும் வெங்கடலக்ஷ்மி அம்மாள் ஆகிய புண்ணிய தம்பதிகளுக்கு மூத்த புத்திரனாக அவதரித்தார்கள்.

அவருக்கு ஶ்ரீநிவாஸன் என்ற பெயர் சூட்டப்பட்டது.

ப்ராஜபதி வருடம் – 1931ஆம் ஆண்டு அவர் சந்யாஸ ஆஸ்ரமத்தை ஏற்றார்.

ஜய வருடம் – 1954இல் – ஶ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் பீடாதிபதியாக ஆனார்கள்.

அவர் புகழ் எங்கும் பரவியது.

சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதியான பாபு ராஜேந்திர பிரசாத் அவர்கள் குருவின் தரிசனத்திற்காக 24-8-1954 அன்று சிருங்கேரி வந்தார். தரிசனம் பெற்றார். மகிழ்ச்சியுற்றார்.

ஏராளமான ஞானிகள், தலைவர்கள், சாதகர்கள், பக்தர்கள் உள்ளிட்டோர் உலகெங்கிலுமிருந்து வந்து அவரை தரிசித்தார்கள். அருளாசி பெற்றார்கள்.

சுக்ல வருடம் பாத்ரபத சுக்ல ஸப்தமி – 21-9-1989 அன்று அவர் விதேஹ முக்தி அடைந்தார்கள்.

அவர் 21-12-1982 அன்று மத்தியப் பிரதேச மாநிலத்தில் பரமஹம்ஸி கங்கா ஆசிரமம் என்ற இடத்தில்  ஒரு மாபெரும் கூட்டத்தில் அருளுரை வழங்கினார்.

அப்போது அம்பாளைத் தகுந்த வகையில் தியானம் செய்து எவ்வாறு மக்கள் தங்களுக்கு வேண்டியதை அடையலாம் என்ற ரகசியத்தையும் தெளிவாக எடுத்துரைத்தார்.

நீண்ட ஆயுளை விரும்புவோர் என்ன செய்ய வேண்டும்?

அதற்கான ஆதார பூர்வமான ஸ்லோகத்தை அவர் அப்போது கூறி அருளினார் இப்படி:

சீர்ஷாம்போருஹமத்யே சீதலபீயூஷவர்ஷிணீம் பவதீம் |

அநுதினமனுசிந்தயதாமாயுஷ்யம் பவதி புஷ்கலமவன்யாம் ||

தலையிலுள்ள தாமரையினுள் இருந்து கொண்டு அம்பாள் குளிர்ந்த அம்ருதத்தைப் பொழிவதாக யார் அனுதினமும் தியானிப்பார்களோ அவர்களின் ஆயுள் இவ்வுலகில் அதிகரிக்கும்.

ஆசார்யாள் பின்னர் லம்பிகா யோகம் என்னும் அதிசய யோகம் பற்றி விளக்கினார். சாஸ்திரம் மட்டுமின்றி, நமது அனுபவமும் கூட தலையில் ஒரு தாமரை இருப்பதையே உணர்த்துகிறது என்றும் அவர் அந்த உரையில் அருளினார்.

லலிதா சஹஸ்ர நாமத்தில் 105வது நாமமாக வரும் நாமம்:

ஸஹஸ்ராராம்புஜாரூடா

ஸஹஸ்ர (கணக்கில்லாத) தளங்களையுடையது ஸஹஸ்ரார பத்மம். ப்ரும்ஹ ரந்த்ரத்தின் கீழ் இருப்பது. அந்த பத்மத்தின் மேல் எழுந்தருளியிருப்பவள். (அங்கு வரும்படி செய்யப்பட்டவள்)

அடுத்த 106வது நாமமாகத் திகழ்வது :

ஸுதா ஸாராபி வர்ஷிணீ

மேலே சொல்லியபடி ஸஹஸ்ரார பத்மத்தின் நடுவிலிருக்கும் சந்த்ர மண்டலத்திலிருந்து அம்ருதத்தை (ஸமஸ்த நாடிகளிலும்)

பெருகும் படி செய்கிறவள்.

சௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரர்,

ஸுதாதாரா ஸாரை: சரணயுகலாந்தர் விகலிதை:

ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாய மஹஸ:

–    சௌந்தர்ய லஹரி ஸ்லோகம் 10

என்று கூறுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.

இந்த ஸ்லோகத்தின் பொருள்:

தாயே! உன் திருவடிகளிலிருந்து பெருகுகின்ற அமிர்தத்தின் பிரவாகத்தால், உடலிலுள்ள எழுபத்திரண்டாயிரம் நாடிகளை நனைக்கிறாய். பிறகு சந்திர மண்டலத்திலிருந்து உன் இருப்பிடமான

ஆதார சக்ரத்தை அடைந்து, த உருவத்தைச் சர்ப்பம் போல் வட்டமாக அமைத்துக் கொண்டு சிறிய துவாரமுள்ளதும், தாமரைக் கிழங்கு போன்றதுமான மூலாதார சக்ரத்தில் யோக நித்திரையில் அமர்ந்திருக்கிறாய்.

இம்மாதிரி அம்ருதப்ரவாஹம் ஆவதைப் பற்றி சுருதியும் கூறுகிறது இப்படி:-

அம்ருதஸ்ய தாரா பஹுதா தோஹமானம் |

சரணம் கோ லோகே ஸுதிதாம் ததாது |

இந்த நாமமானது, ஸுதாதாராபிவரிஷிணீ என்றும் சொல்லப்படும்.

மனித குலத்தின் மீதுள்ள எல்லையற்ற கருணையால் அவ்வப்பொழுது தோன்றும் ஆசார்யர்கள் இப்படிப்பட்ட ரகசியங்களை உசிதமான சமயத்தில் எடுத்துரைத்து வந்திருக்கின்றனர்.

அந்த வகையில் நீடித்த ஆயுளுக்கான ரகசியத்தை இப்படி சிருங்கேரி மஹா ஸ்வாமிகள் எடுத்துரைத்துள்ளார்.

ஆதாரம் நன்றி : – யோகமும் ஞானமும் ஜீவன் முக்தியும்

சிருங்கேரி ஜகத்குருவின்  ஆன்மீக சாதனை என்னும் தெய்வீக லீலை குறித்த விவரங்களை அருமையாகத் தரும் நூல்

கிடைக்கும் இடம் : ஶ்ரீ வித்யாதீர்த்த ஃபவுண்டேஷன், Sri Vidyatheertha Foundation, G 8, Sai Karuna Apartments, 49 Five Furlong Road, Guindy, Chennai 600032

போன் : 90031 92825

***

எனது தந்தையார் மதுரை தினமணி பொறுப்பாசிரியராக இருந்த போது அவ்வப்பொழுது சிருங்கேரி ஜகத்குரு அவர்களின் அருளுரையைப் பிரசுரிப்பது வழக்கம்.

ஶ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் அவர்கள் மதுரைக்கு விஜயம் செய்த போது எங்கள் இல்லத்தில் எழுந்தருளி பரிபூரண ஆசிகளை வழங்கியதோடு ஒவ்வொருவருக்கும் ப்ரசாதம் கொடுத்து அனுக்ரஹித்தார்.

Beautiful Architecture of Thiruvalamchuzi Temple (Post No.11,825)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,825

Date uploaded in London – –  21 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Location

Six kilometres from Kumbakonam in Tamil Nadu.

Thiruvalam chuzi means Holy Right Whorl or Turn

People believed that the River Kaveri took a right turn here and so it is called by this name. Others believe that the trunk of the elephant faced god Vinayaka is turning or curving towards right is the reason for the name. Both may be right.

Appar , one of the Four Great Saivite Singers, composed  hymns on the God Siva here.

Siva temple famous for its architectural pillars and granite windows.

Ganesh here is called White Vinayaka = Swetha Vinayaka.

Moreover its made up of sea shells (Sea Animal shells and white in colour)

There is a beautiful Ashta Bhuja Kali- Eight Armed.

The temple needs renovation and refurbishment.

I took some pictures from outside.

I always avoid taking the pictures of the idols.

We went there in February 2023.

There are paintings/ pictures on the wall; they need protection and preservation as well.

Swamimalai , one of the Six Abodes of Lord Skanda/ Murugan/ Kartikeyan is very near.

–subham—

Tags – Ashta bhuja Kali, White Ganesh, Swetha Vinayaka, Thiruvalam chuzi.

குடந்தை சக்ரபாணியும் சாரங்கபாணியும் (Post No.11,824)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,824

Date uploaded in London – –  21 MARCH 2023                  

Contact –swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

திருமங்கை ஆழ்வார் அருளிய திரு எழு கூற்றிருக்கை 

கும்பகோணத்துக்கு பிப்ரவரி 19, 2023 அன்று மதியம் 3 மணிக்குச் சென்றோம். இரவு எட்டரை மணிக்குள் 6 கோவில்களைத் தரிசித்தோம். அதாவது ஒரே கல்லில் ஆறு மாங்காய்கள் !

ராமசாமி,சக்ரபாணி, சாரங்கபாணி , கரும்பாயிரம் பிள்ளையார் , நாகேஸ்வரர், கும்பேஸ்வரர் கோவில்கள்.

கும்பகோணத்திலும் சுற்று வட்டாரங்களிலும் உள்ள கோவில்களைத் தரிசிக்க பல வாரங்கள் தேவைப்படும்.

முதலில் சாரங்க பாணி கோவிலையும் சக்ரபாணிகோவிலையும் தரிசிப்போம்.

குடந்தை சாரங்கபாணி கோவிலுக்கு பாஸ்கர க்ஷேத்ரம் என்ற பெயரும் உண்டு. இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று.

மூலவர் சாரங்க பாணி, ஆராவமுதன்

தாயார் – கோமளவல்லி , படிதாண்டாப்பத்தினி

ஹேம ரிஷியின் புதல்வியாகத் தோன்றிய கோமளவல்லியை பெருமாள் மணந்ததாக ஐதீகம்

 தீர்த்தம் –ஹேம புஷ்கரிணி (பொற்றாமரை)

திருமங்கை ஆழ்வார் அருளிய திரு எழு கூற்றிருக்கை 

 இங்கு சயன திருக்கோலத்தில் இருந்தாலும் இந்த வடிவம், உத்தான சாயி என்று அழைக்கப்படுகிறார். திருமழிசை ஆழ்வாருக்காக “கிடந்தவாறு எழுந்திருக்க ” முயலும் நிலையில் இருப்பதால் இந்தப் பெயர்.

பெருமாளுக்கு எதிரே நதி தேவதைகள்  வணங்குவது  இந்தக் கோவிலின் சிறப்பு.

இன்னுமொரு சிறப்பு என்னவென்றால், நாதமுனிகள், நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைத் தொகுக்கத் துவங்கியதும் இங்குதான். திருவா

ய்மொழிகளைக் கேட்டவுடன் அவருக்கு இந்த எண்ணம் உதித்தது.

மேலும் ஒரு சிறப்பு திருமழிசை ஆழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்க அவருக்குத் தரிசனம் கொடுத்ததாகும். இந்தக் கோலத்தைக் கருவறையில் காணலாம்.

பெருமாளின் சித்திரைத் தேர் மிகவும் பிரசித்தமானது. பெருமாள் சந்நிதியே தேர் வடிவ மண்டபத்தல் சக்கரங்களுடன் காணப்படுகிறது  மஹேந்திர பல்லவனால் கட்டப்பட்ட மண்டபமும் இருக்கிறது.

ஆழ்வார் அருளிய நாலாயிரம் பாசுரங்களையும்  தொகுத்த நாதமுனிகள் பெருமாளை ஆராவமுதாழ்வான் என்று போற்றினார் . நம்மாழ்வார் திராவிட சுருதி தர்சகர் என்கிறார்.

ஏழு ஆழ்வார்கள் 51 பாசுரங்கள் பாடி மங்களா சாஸனம்  செய்த பெருமை உடையது.

Xxxx

சக்ரபாணி கோவில் 

சக்ரபாணி கோவிலில் , பெருமாள் அஷ்ட புஜங்களுடன் காட்சி தருகிறார்.சாரங்க பாணியும் சக்ர பாணியும் சகோதர்கள் என்று கருதப்படுவதால் பல உற்சவங்கள் சேர்த்து நடைபெறுகின்றன.

தாயார் விஜயவல்லி , சுதர்சனவல்லி

இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் காட்சி தருகிறார். எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சி தருகிறார். சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது

xxxx

12 கருட சேவை

கும்பகோணத்தில் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்து வருகின்ற 3ஆவது திதியான அட்சய திருதியையில் காலையில் இவ்விழா கொண்டாடப்பெறுகிறது. கும்பகோணத்திலுள்ள சார்ங்கபாணி, சக்கரபாணி, இராமஸ்வாமி, ராஜகோபாலஸ்வாமி, வராகப்பெருமாள், வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராமர், மல்லுக தெரு சந்தான கோபாலகிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன், புளியஞ்சேரி வேணுகோபால சுவாமி, மேலக்காவேரி வரதராஜப்பெருமாள், நவநீதகிருஷ்ணன், சோலையப்பன் தெரு ராமசுவாமி ஆகிய 12 வைணவ கோயில்களைச் சேர்ந்த உற்சவப் பெருமாள் சுவாமிகள் கருட வாகனத்தில் புறப்பட்டு பெரிய கடைத் தெருவில் ஒரே இடத்தில் எழுந்தருளுகின்றனர்.

 முதலாம் சரபோஜியின்  (கி.பி.1712-1728) பித்தளை உருவம்  கோயில் மண்டபத்தில் சுமார் 6 அடி உயரமுடைய, நின்ற நிலையில்  உள்ளது. அதற்கு அருகே சுமார் 3 அடி உயரமுடைய ஒரு பெண்ணின் உருவமும் பித்தளையில் உள்ளது.

விஷ்ணுவுக்கு 3 கண்கள்

மூன்று கண்களுடன் ஸ்ரீ சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது. சூரிய பகவான், பிரம்ம தேவர், அக்னி பகவான், மார்க்கண்டேயர் போன்றோர் வழிபட்ட தலம் இது.

–subham— 

Tags –  சக்கரபாணி , சாரங்க பாணி, நாதமுனிகள், திவ்வியப்பிரபந்தம், கும்பகோணம், கோவில், முக்கண் , 12 கருட சேவை, திருமங்கை ஆழ்வார் , திரு எழு கூற்றிருக்கை 

கோவில் சொத்தை துஷ்பிரயோகம் செய்யும் திராவிட மாடல் அதிகாரிகளுக்காக ஒரு ராமாயண சம்பவம்! (11,823)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,823

Date uploaded in London –   21 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com  

கோவில் சொத்தை துஷ்பிரயோகம் செய்யும் திராவிட மாடல் அதிகாரிகளுக்காக ஒரு ராமாயண சம்பவம்!

ச.நாகராஜன் 

ஒவ்வொரு நாளும் யூ டியூபில், செய்தித் தாளில், தொலைக்காட்சி செய்திகளில் கோவிலில் நடக்கும் அக்கிரமங்களைப் பார்க்கும் போது, கேட்கும் போது நெஞ்சம் பதை பதைக்கிறது.

கோவில் பணத்தில் சொகுசு கார், கோவில் பிரகாரத்திலேயே நிற்கிறது.

அர்ச்சகர் பணம் அம்பேல்.

கோவில் நிலத்தைச் சொந்தக்காரர்களுக்கும், லஞ்சம் தரும் வியாபாரிகளுக்கும் தரத் தயார்!

இப்படி நூற்றுக் கணக்கான அவலங்கள்.

இந்த திராவிட மாடல் டிரஸ்டிகளுக்கும் கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கும் கும்பலுக்கும் என்ன கதி கிடைக்கும்?

ஓ, ராமா. ஒரு பதிலைச் சொல்லேன்.

பதில் கிடைத்தது வால்மீகி ராமாயணத்தில்!

வாருங்கள் ராமாயணத்திற்குள் புகுவோம்!!

*

ராமராஜ்யம் அமோகமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு விதவை இல்லை. ஒரு பிச்சைக்காரன் இல்லை.

கொடுக்க யாரும் இல்லை, ஏனெனில் கொள்வோர் இல்லை.

வண்மை இல்லை ஓர் வறும இன்மையால்.

இப்படி கம்பனின் வர்ணனைப்படி அற்புதமாக நடந்து கொண்டிருந்தது ராம ராஜ்யம்.

அரண்மனை வாயில் வெறிச்சோடிக் கிடக்கும் எப்போதும்.

ஏன், யாருக்கும் எந்தக் குறையும் இல்லையே, இருந்தால் தானே அரண்மனை வாசலில் வந்து நிற்க வேண்டும்?

*

ஒரு நாள் ராமர் லட்சுமணனை அழைத்தார். ‘லட்சுமணா. அரண்மனை வாசலுக்குப் போய் யாராவது நிற்கிறார்களா, பார்த்து வா’ என்றார்.

லட்சுமணருக்கு ஒரே ஆச்சரியம்!

ராம ராஜ்யத்தில் ஒரு குறை இருக்குமா, என்ன!

என்றாலும் அண்ணா சொல்கிறாரே போய்ப் பார்ப்போம் என்று வாசலுக்கு வந்து பார்த்தார்.

யாரையும் காணோம்.

திரும்பிச் சென்று ராமரிடம், ‘யாரும் இல்லை’, என்றார்.

இந்த முறை ராமர், “ நீ மீண்டும் சென்று கவனமாகப் பார்.” என்றார்.

லட்சுமணர் திரும்பி அரண்மனை வாயிலுக்கு வந்தார்.

யாரும் இல்லை.

ஆனால் அண்ணா கவனமாகப் பார்க்கச் சொல்லி இருக்கிறாரே!

கவனமாக லட்சுமணர் பார்த்தார்.

ஒரு நாய் வாலை ஆட்டிக் கொண்டு முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தது.

லட்சுமணர் அதன் அருகே சென்றார்.

“என்ன, எதாவது சொல்ல வேண்டுமா? உள்ளே வா!” என்றார்.

“சொல்ல வேண்டும். ஆனால் நாய்ப் பிறப்பான நாங்கள் அரண்மனைக்குள் வரலாமா, கூடாதே” என்றது நாய்.

“இல்லை, இல்லை, யார் வேண்டுமானாலும் வரலாம், வா, வா” என்று நாயை அழைத்துக் கொண்டு ராமரிடம் சென்றார்.

*

ராமர் நாயைக் கூர்ந்து பார்த்தார்.

அதன் மண்டையில் அடிபட்டதற்கான ரத்தக் காயங்கள் மூன்று இருந்தன.

திகைத்த ராமர், “என்ன ஆயிற்று? சொல், ஏன் மண்டையில் காயம்?” என்று பரிவுடன் கேட்டார்.

நாய் பேச ஆரம்பித்தது : “நான் ஒன்றுமே செய்யவில்லை. நடந்து வந்து கொண்டிருந்தேன். சர்வசித்தி என்ற பிராம்மணன் என் தலையில் அடித்தான். இப்படிக் காயங்கள் ஏற்பட்டன. நீங்கள் தான் நீதி வழங்க வேண்டும்” என்றது நாய்.

ராமர் அரசவையைக் கூட்டினார்.

அந்த சர்வசித்தி பிராம்மணனை உடனே அவைக்கு அழைத்து வர ஆணை பிறப்பித்தார்.

பிராமணனும் வந்து சேர்ந்தார்.

“ஏன் இப்படிச் செய்தீர்?” என்று ராமர் பிராமணனைக் கேட்டார்.

பிராமணன் ராமரைப் பார்த்து, “ஓ! ராமா! பசியோடு நடந்து வந்து கொண்டிருந்தேன். இந்த நாய் நடு வழியில் வந்து நின்று வாலை ஆட்டி என்னை ஏளனம் செய்வது போல நடந்து கொண்டது. கோபம் வந்தது. களைப்பு, பசி! என்ன செய்வதென்று தெரியவில்லை. அது நடந்து கொண்ட விதத்திற்காக அடித்தேன். சிறு காயங்கள் ஏற்பட்டு விட்டன” என்றார்.

அரசவையினர், பிராமணனை தண்டிக்கும் அளவு இது பெரிய குற்றமில்லை என்று அபிப்ராயப்பட்டனர்.

ஆனால் நாய் ராமரைப் பார்த்து, ‘நான் தண்டனையைச் சொல்லலாமா’ என்று கேட்டது.

ராமர் அனுமதிக்கவே நாய், “இந்த பிராமணனை காலாஞ்சர் மடத்தின் தலைவராக நியமித்து விடுங்கள்” என்றது.

அனைவருக்கும் தூக்கி வாரிப் போட்டது.

ப்ரம்மாண்டமான மடத்தின் அதிபதியாக அவரை அமர்த்துவதா?

ராமர் நாய் சொல்வதற்கு இணங்கினார்.

பிராம்மணன் நன்கு அலங்கரிக்கப்பட்டு பெரிய யானையின் மீது ஆசனத்தில் அமர்த்தப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

அவையினர் பலரும் நாயைப் பார்த்து, “ ஒரு சந்தேகம்! இது தண்டனை அல்ல, வரம்! எவ்வளவு பெரிய கௌரவம் இது. இதை தண்டனையாக எப்படி எடுத்துக் கொள்வது?” என்று கேட்டனர்.

*

நாய் பதில் அளிக்க ஆரம்பித்தது:

“நான் இந்த ஜன்மத்தில் நாய். போன ஜன்மத்தில் ஒரு பெரிய மடாதிபதி. எல்லோருக்கும் நல்லது தான் செய்தேன். ஆனால் அன்றாட வாழ்க்கையில் தேவ திரவியங்களை எடுத்துப் பயன்படுத்தினேன். உண்டேன். அதனால் தான் எனக்கு இந்த இழிபிறப்பு கிடைத்து விட்டது. ஆகவே பிராமணனுக்கு எனக்குத் தெரிந்த அளவில் சரியான தண்டனையைத் தான் கொடுத்திருக்கிறேன்.” – இப்படி பதில் சொல்லியது நாய்.

அனவைரும் விஷயத்தை நன்கு புரிந்து கொண்டனர்.

கோவில் சொத்தைக் கொள்ளை அடிப்போருக்கு உரித்தான நரகம் எது?

கோவில் தெய்வ சொத்தை துஷ்பிரயோகம் செய்வது, மனைவி, பிராமணர், மற்றவர் சொத்தை அபகரிப்பது, ஒரு மைனரின் சொத்தை அபகரிப்பது இப்படிப்பட்ட செயல் படுபாதகச் செயல். இதைச் செய்தவருக்கு அவிச்சின்ன நரகமும் நாய்ப் பிறப்பும் தான் கிடைக்கும்.

இதை அவையோர் உணர்ந்தனர்.

நாயைப் புகழ்ந்தனர். நாய் தன் வாலை நன்றியுடன் ஆட்டியது.

*

திராவிட மாடல் கோவில் சொத்துக் கொள்ளையர்களுக்கு என்ன கதி என்று இனி நாம் எண்ண வேண்டாம்.

வால்மீகி ராமாயணத்திலேயே பதில் இருக்கிறது.

சிவன் சொத்துக் குல நாசம் என்று வழி வழியாக நமது முன்னோர் கூறியதோடு கோவிலில் அர்ச்சகர் கொடுக்கும் விபூதியில் நெற்றியில் இட்டது போக மீதியை அங்கேயே கோவிலிலேயே விட்டு விட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருப்பதை இப்போது நினைக்கத் தோன்றுகிறது!

என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை முறை ஹிந்து வாழ்க்கை முறை!

கோவிலைக் காப்போம்! இறைவனின் உடைமைகளை துஷ் பிரயோகம் செய்ய அனுமதியோம் இனி! – கொள்ளையரின் நலன் கருதியே!!!!

***

சுக்கிரன் பரிகார ஸ்தலம் கஞ்சனூர் (Post No.11,822)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,822

Date uploaded in London – –  20 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தில், சூரியனார்கோவில் ஸ்தலத்தைப் பார்த்துவிட்டு சுக்கிரன் (வெள்ளி) கிரக பரிகார ஸ்தலமான திருக் கஞ்சனூருக்குச் சென்றோம் கும்பகோணத்திலிருந்து 20 கிலோமீட்டர் செல்லவேண்டும் .

மாயவரம்- தஞ்சாவூர் மார்க்கத்தில் நாரசிங்கன்பேட்டை ரயில் நிலயத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் இருக்கிறது

இங்குள்ள சிவன் கோவிலில் சுவாமி பெயர்- அக்கினீசுவரர்

தேவியின் திருநாமம் – கற்பக நாயகி

சுக்கிரனுக்கு இங்கு தனி சந்நிதி இருப்பது சிறப்புடைய விஷயமாகும்

நடராஜர், சிவகாமி அம்மையார் உருவங்கள் இங்கு  சிலைகள் உருவத்தில் உள்ளன. வேறு இடங்களில் பஞ்சலோகத்தில் அவர்களைக் காண்கிறோம்.

அப்பர், சுந்தரர் ஆகிய இரு தேவார அடியார்கள் இங்குள்ள சிவ பெருமானைப் பாடிப் பரவியுள்ளனர்.

மானக்கஞ்சார நாயனார் அவதரித்த தலம்.

கலிக்காம நாயனார் திருமணம் நடைபெற்ற தலம்.

இந்த தலத்தின் மரம்- புரச மரம்  (இதன் இலைகள் யாகத்தில் நெய்யையும் அவிஸையும் எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.)

ஹரதத்த சிவாசாரியார் சைவத்தின் மேன்மையை ஸ்தாபித்த தலம் . அவருக்குத் தனி ஆலயம் இருக்கிறது. அவர் பூஜித்த சிவலிங்கமும் இருக்கிறது .

கோயிலுக்குக் கிழக்கில் அக்கினி தீர்த்தம் அமைந்துள்ளது.

அக்கினியும் பிரமனும் பூஜித்த தலம்.

இங்கு அற்புதமான  செப்புத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

பலருடைய ரோகங்களைத் தீர்த்த இறைவன் இவர் என்று பல தல புராணக்கதைகள் இருக்கின்றன. ஜாதகத்தில் சுக்கிர தோஷமுள்ளவர்கள் வந்தால் அவைகள் நீங்கும் என்பதால் நிறைய பக்தர்கள் வருகின்றனர்

பராசர முனிவருக்கு சிவன் தாண்டவ கோலத்தைக் காட்டியதால் பராசபுரம் என்றும், பிரம்மனுக்கு திருமண கோலத்தைக் காட்டியதால் பிரம்மபுரி  என்றும், கம்சன் என்ற வடநாட்டு மன்னனுக்கு நோயைத் தீர்த்தத்தால் கம்சனூர்/ கஞ்சனூர் என்றும் இந்த ஊர் அழைக்கப்படுகிறது

சுரைக்காய் பக்தர் என்பவர் தன் மனைவியுடன் காட்சி தருகிறார். அவருடைய வரலாறும் செவிவழியாக வந்துள்ளது. அவர் சுரைக்காயை விற்று வாழ்க்கை நடத்திய பொழுது, கடைசி சுரைக்காயை விதைக்காக வைத்திருந்ததாகவும் சிவனடியார் போல இறைவனே வந்து யாசித்தபோது அவர் ஏது செய்வதென்று திகைத்தார் என்றும் சொல்லப்படுகிறது.  பாதி  சுரைக்காய் கறிக்கு, மீதி பாதி விதைக்கு என்று சிவனே சொன்னார் என்றும் கதை போகிறது. இதனால் இவர் சிலையும் இடம்பெற்றுவிட்டது.

ஹரதத்தர் என்ற  பெரியார் ஒரு வைணவக்  குடும்பத்தில் பிறந்தாலும் சிவனை வழிபட்டு பல அற்புதங்களைச்  செய்தார் . ஒரு பிராமணர் தவறுதலாக ஒரு பசுவின் கன்று மரணம் அடையக்  காரணமாகியதால் பயந்து நடுங்கினார். சிவ பெருமானின் ஐந்தழுத்தை உச்சரித்தால் பாவம் நீங்கிவிடும் என்று சொல்லியும் அவர் நம்பவில்லை. உடனே ஹரதத்தர் அவரைப் புல்லைப்பறித்துக் கொணருமாறு கூறினார். கோவிலில் இருந்த கல் நந்தியிடம் அதைக் காட்டி இந்தக் கல் நந்தி புல்லைச் சாப்பிடுமானால் சிவனின் பஞ்சாட்சரமும் உமது பாவத்தை நீக்கும் என்று சொன்னவுடன் கல் நந்தி  புல்லைச் சாப்பிட்டதாம். இவ்வாறு பல அற்புதங்கள் நிறைந்த இடம் என்பதால் மக்கள் நம்பிக்கையுடன் இங்கு வருகின்றனர்.

நம்பினார் கெடுவதில்லை; இது நான்கு மறைத் தீர்ப்பு என்ற பாரதியார் வாசகமும் இதை உறுதிப்படுத்துகிறது.

Xxxx

அப்பர் அருளிய தேவாரம்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

திருமுறை : ஆறாம்-திருமுறை

மூவிலைநற் சூலம்வல னேந்தி னானை மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை நாவலனை நரைவிடையொன் றேறு வானை நால்வேத மாறங்க மாயி னானை ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை அயன்றிருமா லானானை அனலோன் போற்றுங் காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.   1

தலையேந்து கையானை என்பார்த் தானைச் சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக் குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக் கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை மலையானை மற்றொப்பா ரில்லா தானை மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங் கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக் கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.   2

 –subham–

Tags- கஞ்சனூர் , சுக்கிரன் தலம்,

ஹரதத்தர், புரச மரம், பராசர முனிவர் , அப்பர்

திருடனின் கம்பு! (Post No.11,821)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,821

Date uploaded in London –   20 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருடனின் கம்பு!

ச.நாகராஜன்

பழைய காலத்தில் நியாயாதிபதிகள் எவ்வளவு புத்திகூர்மையுடன், தர்க்கரீதியாக, துப்பறிவதில் சிறந்து விளங்கினர் என்பதற்கு ஒரு சம்பவம் சொல்லப்படும். 

அது இது தான்: 

ஒரு கிராமத்தில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவரிடம் இரண்டு வேலைக்காரர்கள் வேலை பார்த்து வந்தனர்.

செல்வந்தர் அவர்களைப் பெரிதும் நம்பினார். அவர்களும் நன்கு நடந்து கொண்டு வந்தனர்.

நாளடைவில் நம்பிக்கையின் பேரில் வீட்டின் பொறுப்பை அவர்களிடமே தந்தார் செல்வந்தர்.

தனது நகைகளை அவர் பத்திரமாக ஒரு பீரோவில் வைத்துப் பூட்டி இருந்தார். சாவி பீரோவின் மேலேயே வைக்கப்பட்டிருந்தது.

ஒரு நாள் தனது பீரோவைத் திறந்த செல்வந்தர் திடுக்குற்றார்.

நகைகளைக் காணோம்.

வீட்டில் இருப்பதே இரு வேலைக்காரர்கள் தான்; உடனே வேலைக்காரர்களை அழைத்த அவர், ‘யார் நகைகளைத் திருடியது, உண்மையைச் சொல்லுங்கள்’ என்றார்.

இருவரும் தாங்கள் திருடவில்லை என்று உறுதியாகக் கூறினர்.

ஊர் நியாயாதிபதியிடம் சென்ற செல்வந்தர் நடந்ததைக் கூறினார்.

அனைத்தையும் பொறுமையாகக் கேட்டார் நியாயாதிபதி.

அவர் மிகுந்த புத்திகூர்மை உள்ளவர். திருடர்களின் சைக்காலஜி தெரிந்தவர்.

அவர் திடமாக செல்வந்தரிடம் இவர்கள் இருவருமே நிரபராதிகள் போலத் தான் எனக்குத் தோன்றுகிறது என்றார்.

இதைக் கேட்ட இரு வேலைக்காரர்களும் மகிழ்ந்தனர். அவர்களில் ஒருவனே நகை முழுவதையும் எடுத்திருந்தான். அவன் இன்னும் அதிகமாக மகிழ்ச்சியுற்றான்.

பின்னர் செல்வந்தரைத் தன் அருகே அழைத்த நியாயாதிபதி, “இருந்தாலும் உங்கள் திருப்திக்காக இதை நிரூபிக்க முயல்கிறேன்” என்று சொல்லி விட்டு அவர் காதோடு ரகசியமாகப் பேச ஆரம்பித்தார்.

அவர் தனது பேச்சை ரகசியமாக ஆனால் சற்று உரக்கவே சொன்னார்.

அதை இரு வேலைக்காரர்களும் உன்னிப்பாகக் கேட்டனர்.

“என்னிடம் மர்ம மூங்கில் தடிகள் இரண்டு உள்ளன. இரண்டும் ஒரே அளவு உயரம் கொண்டவையே. அந்த இரண்டையும் இவர்களிடம் ஆளுக்கு ஒன்றாகத் தருகிறேன். அதில் மர்மம் என்னவென்றால் திருடியவன் கையில் சென்ற தடி இரவு நேரத்தில் ஆறு அங்குலம் வளர்ந்து விடும். நாளை பார்ப்போம்” என்றார்.

“இரு வேலைக்காரர்களிடம் நாளைக்குக் காலை இதைக் கொண்டு வாருங்கள், இப்போது போகலாம்” என்றார்.

நல்ல வேலைக்காரன் தடியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் அதை ஒரு ஓரத்தில் பத்திரமாகச் சாத்தி வைத்தான்.

திருட்டு வேலைக்காரனோ சற்று சிந்தித்தான்.

“இரவில் ஆறு அங்குலம் திருடியவனின் தடி வளரப் போகிறது. ஆகவே சரியாக ஆறு அங்குலத்தை இப்போது வெட்டி விடுவோம். அப்போது நாளைக்கு தடி சரியான பழைய உயரத்தை அடைந்து விடும்” என்று எண்ணினான்.

சரியாக ஆறு அங்குலம் தடியை வெட்டினான்.

மறுநாள் காலை இருவரும் நியாயாதிபதியிடம் குறித்த நேரத்தில் சென்றனர்.

திருட்டு வேலைக்காரனின் தடி ஆறு அங்குலம் குறைந்திருந்தது.

அவனைச் சுட்டிக் காட்டிய நியாயாதிபதி, செல்வந்தரிடம், “இவன் தான் உங்கள் நகையைத் திருடியவன்” என்றார்.

திருட்டு வேலைக்காரனோ கத்தினான் :”நேற்று நீங்கள் திருடியவனின் தடி ஆறு அங்குலம் வளரும் என்று சொன்னீர்களே! என் தடி ஆறு அங்குலம் குறைவாக அல்லவா உள்ளது” என்றான்.

“உனது தவறான செய்கையால் உன் மனச்சாட்சி உன்னை உறுத்தவே நீ தான் ஆறு அங்குலம் தடியை வெட்டினாய். இந்தத் தடி நியாயத்தை இப்படித் தான் வழங்கும்” என்றார் நியாயாதிபதி.

அந்த வேலைக்காரனின் வீட்டைச் சோதனை போட்ட போது அனைத்து நகைகளும் கிடைத்தன.

செல்வந்தர் நியாயாதிபதியின் புத்திகூர்மையை எண்ணி வியந்தார்.

அந்தக் கால நியாயாதிபதியின் செயல்பாட்டை விளக்கும் சம்பவம் இது!

—subham—

திருச் சேறை கோவில்களைத் தரிசிப்போம் (Post No.11,820)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,820

Date uploaded in London – –  19 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கும்பகோணத்திலிருந்து சுமார் 25  கிலோமீட்டர் தொலைவில் திருச்சேறை இருக்கிறது. இங்கு சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் இருக்கின்றன.

சம்பந்தரும் அப்பரும் பாடிய இத்திருத்தலத்தில் குடிகொண்டுள்ள ஈசனின் பெயர் செந்நெறி அப்பர்.

தேவியின் பெயர்- ஞானாம்பிகை

தீர்த்தம் – மார்க்கண்டேய தீர்த்தம்,

ஸ்தல விருட்சம் – மாவிலங்கை மரம்

தெளம்ய ரிஷி பூஜித்த கோவில் .

கும்பகோணத்திலிருந்து சென்றால் அரிசிற்கரை புத்தூர், திருநறையூயூர் தலங்களையும் தரிசிக்கலாம். போகும் வழியில் பெரிய விஷ்ணு / பெருமாள் கோவில்களும் இருக்கின்றன.

திருவாரூரில் தங்கியும் தரிசித்து வரலாம்.

XXX

திருச் சேறை பெருமாள் கோவில் , மற்றுமொரு விஷ்ணு தலமான நாச்சியார் கோவிலிருந்து (கல் கருடன்) 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது . வைணவ பக்தர்கள் இவ்விரு  தலங்களுடன் உப்பிலியப்பன் பெருமாளையும் அடுத்தடுத்து தரிசிக்கலாம்.

திருச் சேறை, பஞ்ச ஸார க்ஷேத்ரங்களில் ஒன்று .இது முடிகொண்டான் ஆற்றுக்கும், குடமுருட்டியாற்றுக்கும் இடையில் அமைந்துள்ளது. .

குடவாசல் அருகிலுள்ள பெரிய ஊர்.

மூலவர் – ஸாரநாதன் , நின்ற திருக்கோலம், கிழக்கே பார்த்து நிற்கும் பெருமாள்.

தாயார் -ஸாரநாயகி , பஞ்ச லக்ஷ்மி

தீர்த்தம் – ஸார புஷ்கரிணி

காவேரி அம்மனுக்கு பெருமாள் காட்சி தந்ததால், குளக்கரையில் காவேரி அம்மனுக்கும் ஒரு சந்நிதி உள்ளது.

பிரம்மாவும் விஷ்ணுவும் இங்கு அம்மனைத் தரிசிப்பதாக இருப்பது ஒரு அபூர்வம் ஆகும் .

xxxx

உலகில் எல்லா நதிகளையும் கடவுளாக வணங்குவதும் , தாயாக வணங்குவதும் இந்துக்கள் மட்டுமே. இந்துக்கள் இந்த நாட்டிலேயே தோன்றி இந்த நாட்டிலேயே வளர்ந்ததால் அவர்களுக்கு ‘நீர்’ WATER IS GOD ஒரு கடவுள். வேறு எந்த மதத்திலும்  பிறப்பு முதல் இறப்பு வரை  தண்ணீர் பயன்படுவதில்லை . நீர் Water Mantras மந்திரங்கள் உலகின் மிகப் பழைய புஸ்தகமான ரிக்வேதத்திலேயே உள்ளன ஆரிய – திராவிட வாதம் பேசும் வெளிநாட்டுக் கும்பல்களுக்கு செமை அடி கொடுப்பது கோவில் தீர்த்தங்களும், காவேரி, கங்கை நதி தேவதை வழிபாடுகளும் ஆகும்.

xxxxx

திருச் சேறை பெருமாள் கோவிலில் , தைப்பூச காலத்தில் பிரம்மோற்சவம் நடக்கும். அப்போது தேரில் ஸ்ரீ தேவி பூ தேவி , நீலா தேவி, மகா லட்சுமி, சார நாயகி ஆகிய ஐந்து தேவியாருடன் பெருமாள் பவனி வருவார்.

பிரளய காலத்தில், இவ்வூரின் கெட்டியான மண்ணைக்கொண்டு செய்யப்பட கடத்தில் (Mud Pot) வேதங்களை வைத்துக் காப்பாற்றியதாக தல புராணம் சொல்லும் .

பெருமாள் மீது திருமங்கை ஆழ்வார் 13 பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்துள்ள தலம் இது.

புஷ்கரணியின் மேற்குக்கரையில் ஆஞ்சனேயர் கோவிலும் இருக்கிறது. ஈசான்ய திசையில் ஸாரபரமேஸ்வரர் (செந்நெறியப்பர்- சிவன்) கோவில் இருக்கிறது.

xxx

பஞ்ச ஸார க்ஷேத்ரம் என்றால் என்ன?

இங்கு சாரநாதன், சாரநாயகி, சார புஷ்கரிணி, சார விமானம் , சார க்ஷேத்ரம் இருப்பதால் இப்படிப் பெயர் பெற்றது .

சார = சேறு

இது திருச் சேறை என்ற பெயருடன் தொடர்பு உடையது

பிரம்மா இந்தப் பிரபஞ்சத்தைப் படைப்பதற்கான உபகரணங்களை வைப்பதற்காக ஒரு பானை செய்த போது அது உடைந்து கொண்டே இருந்ததாகவும் இறுதியில் விஷ்ணுவின் கட்டளையின் பேரில் இந்த ஊர்ச் சேற்றைக் கொண்டு கட்டம்/ பானை செய்தபோது அதுநிலைத்து நின்றதாகவும் அதனால் இந்த இடம் திருச் சேறு என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது .

Xxxx

திருச் சேறை பெருமாள் கோவிலில், ராஜ கோபால சுவாமிக்கும் சந்நிதி இருக்கிறது. இது பற்றியும் ஒரு கதை சொல்லப்படுகிறது. தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரின் உத்தரவின்பேரில் அவருடைய மந்திரி நரச பூபாலன் மன்னார்குடியில் ராஜ கோபால சுவாமிக்கு  கோவில் எழுப்புகையில் , அந்தக் கோவிலுக்காக  வாங்கிய கற்களில் ஒவ்வொரு பெரிய கருங் கல்லை சாரநாதன் கோவில் கட்டவும் இறக்கியதாகவும் இதை ஒற்றர் மூலம் அறிந்து நாயக்க மன்னர் வந்த போது , அவரது கோபத்தைத் தணிக்க இங்கும் ராஜ கோபாலருக்கு சந்நிதி எழுப்பியதாகவும் செவி வழிச் செய்தி கூறும்.

xxx

நாச்சியார் கோவில், திருச்சேறை முதலிய தலங்களுக்குச் செல்லும் இந்துக்கள் அடுத்தடுத்து ‘பாடல்பெற்ற’ , ‘மங்களாசாஸனம்’ செய்யப்பட தலங்களை தரிசித்துக் கொண்டே செல்லலாம்.

அடியேனும் இவ்வாறு பிப்ரவரி 2023ல் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்

–சுபம்–

Tags- திருச் சேறை , பெருமாள் கோவில் , சிவன் கோவில்,சாரநாதன் , செந்நெறி அப்பர் , நீலாதேவி, பஞ்ச ஸார க்ஷேத்ரம்    .

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 4 (Post.11,819)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,819

Date uploaded in London –   19 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருநெல்வேலியிலிருந்து மாதந்தோறும் வெளிவரும் ஹெல்த்கேர் மார்ச் மாத இதழில் (March 2023) வெளியாகியுள்ள கட்டுரை!

How Food Powers Your Body

உணவு உங்கள் உடலுக்கு எப்படி சக்தியூட்டுகிறது? – 4

ஆங்கில மூலம் : ஜேம்ஸ் சாமர்ஸ் (James Somers)

தமிழில் : ச.நாகராஜன்

நாம் உண்ட பின்னர் நடக்கும் ஆச்சரியங்கள்!

ஆச்சரியகரமான இந்தப் பிரித்தெடுத்தலானது நாம் உணவை விழுங்குவதற்கு முன்னரேயே நடக்கிறது, ஏனெனில் வாயில் உள்ள உமிழ்நீர் அதை ஸ்டார்ச்சாக தூளாக்குகிறது. உணவு ஜீரணம் ஆவதற்கு முன்பேயே நாம் திருப்தி அடைகிறோம், ஏனெனில் நமது வாய் நமது மூளைக்கு ஆற்றல் வருகிறது என்று சொல்கிறது. சில குறைந்த கால சேமிப்புகளை வெளி விடுவது பாதுகாப்பானது என்றும் சொல்கிறது.

இந்தச் சமயத்தில் வயிற்றில் உள்ள அமிலங்களும் சிறுகுடலில் உள்ள என்ஜைம்களும் எது வந்ததோ அதை செயலாக்கம் செய்ய ஆரம்பிக்கின்றன. அவை தங்கள் வேலையை முடித்து விடும் போது உணவில் உள்ள ஆற்றல் மிகு பேரணுக்கள் (molecules) தங்களது அமைதியற்ற எலக்ட்ரான்களை திருப்பி மாற்றி அமைத்து குளுகோஸாக திரட்டிக் கட்டுகிறது. அதாவது சாதாரண ஜீனியாக!

குளுகோஸ் என்பது ஒரு இரசாயனம் கொண்ட ஷிப்பிங் கண்டெய்னர் என்று கூறப்படும் கப்பல் சரக்குக் கொள்கலம் (Shipping container) போல! அது எலக்ட்ரானை எடுத்துச் செல்ல ஒரு அருமையான ‘ஏற்றி செல்லும் வாகனம்’ போல. இதற்கு ஒரு காரணம் அதன் உச்ச பட்ச திறன் மற்றும் அது வசதியாக வடிவம் கொண்டது, சுலபமாக கிடைப்பது. அதுமட்டுமல்ல அது வழக்கத்தை விட அதிகம் கரையும் ஒன்றாகும். அதாவது இரத்தஓட்டத்தில் மிகச் சிறப்பாக பயணப்படுவதாகும். மேலும் அது கார்பன், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜன் அணுக்களை மட்டுமே கொண்டுள்ளதாகும். ஆக்ஸிஜன் மற்றும்   ஹைட்ரஜன் அணுக்கள் உயரிய எதிர்வினை கொண்டவை – அதனால் தான் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் தொட்டிகள் (tanks) எளிதில் தீப்பற்றக் கூடியது என்ற அடையாளக் குறிகளைக் கொண்டிருக்கும் – மேலும் பல நிலையற்ற எலக்ட ரான்கள் ஒவ்வொரு கார்பன் அணுவையும் மற்ற பேரணுக்களுக்கும் நகர்வதற்கான ஆவலுடன் சுற்றுகிறது.  கணிக்க முடியாத படி ஆற்றல் தேவைகளைக் கொண்டுள்ள நமது மூளைகள்,  நியூரான் செயல்பட ஆரம்பித்தவுடன் பெரிய  மிக அதிக தேவையை உருவாக்குகிறது – பிரத்யேகமாக ஆற்றலுக்காக குளுகோஸை நம்பி!

மிக அதிக வளர்சிதை மாற்றத்தை மற்ற எந்த விலங்கினத்தையும் விட அதிகம் கொண்டிருக்கும் ஹம்மிங்பேர்ட் பறவைகள் தன்னுடைய இறக்கைகளுக்கு உடனடியாக தீனியைத் தருகின்றன, அவை சுத்தமான குளுகோஸையும் சுக்ரோஸையும் (கரும்பில் உள்ள முக்கியப் பொருள்) கலந்து உடனடியாக அனுப்புகின்றன. குளுகோஸ் நமது உயிரணுக்களைச் சென்று அடையும் போது – கப்பல் கண்டெய்னர் போல அல்லாமல் அவை முறையாகப் பிரிக்கப்படுகின்றன.

ஒரு தொடர் போன்ற  எதிர்வினைகள் உயரிய ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்களை உரித்தெடுத்து அவற்றை சிறிய “ஏந்திச் செல்லும் பேரணு”வை உருவாக்கப் பயன்படுத்துகின்றன. இவற்றிற்கு ஒரு பெயர் தனியே உண்டு. அது தான் என் ஏ டி ஹெச் – NADH!

குளுகோஸ் ஒரு கப்பல் கண்டெய்னர் போல என்று கொண்டோமானால், NADH  (கண்டெய்னரிலிருந்து பொருள்களை எடுத்து) டெலிவரி செய்யும் லாரிகள் என்று கொள்ளலாம்.  இப்படி லாரிகளில் எலக்ட்ரான்களை ஏற்றி விடுவது க்ளைகோலிஸிஸ் என்று கூறப்படுகிறது. இது மிகப் பழமையானது. உண்மையில் ஈஸ்ட் திசுக்கள் (Yeast) ஆற்றலை எடுத்துக் கொள்கிறது. ஆக்ஸிஜன் இல்லாத நிலையில் க்ளைகோலிஸிஸ் ஏற்படும் போது அது ஃபெர்மெண்டேஷன் (புளிப்பேறுதல்) என்று சொல்லப்படுகிறது. உங்கள் தசைகள் அவற்றின் எல்லைக்குத் தள்ளப்பட்ட்டால், உங்கள் இரத்த ஓட்டத்தில் போதுமான ஆக்ஸிஜன் இல்லை என்றால், உங்கள் உயிரணுக்கள் (செல்) குளுகோஸை ஆற்றல் உற்பத்திக்காக தற்காலிக அளவாக ஃபெர்மெண்ட் (புளிப்பேற்றம்,) செய்கிறது.

இதில் ஆக்ஸிஜன் உட்படுத்தப்பட்டால் உடைந்து தூளாகும் குளுகோஸ் இன்னும் அதிகமாக சுத்தப்படுத்தப்படுகிறது. ஆக்ஸிஜனானது எலக்ட்ரான் மீது தீராப் பசி கொண்டதாகும். அதன் வெளி உறைகள் முழு அமைப்பாக ஆவதற்கு இன்னும் இரண்டே இரண்டு தான் தேவை! அதன் விளைவாக க்ரெப் சுழற்சி மூலமாக அவற்றை இழுக்கிறது. அது தான் உண்மையான வளர்சிதை மாற்றத்தில் ஆற்றல் சேமிப்பகம்.

இந்த சுழற்சியே சற்று சிக்கலானது.. அது மாணவர்களை பேரதிர்ச்சி தருவதை நோக்கமாகக் கொண்டது போன்ற பல இரசாயன சூத்திரங்களின் தொடரைக் கொண்டது. ஆனால், முக்கிய விஷயம் என்னவெனில் குளுகோஸ் இரண்டாக உடைக்கப்படுகிறது. அதன் இரு பகுதிகளும் ஒரு தொடர் எதிர்வினைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அந்த எதிர்வினைகள் அவற்றை பாகங்களிலிருந்து உரிக்கின்றன. பின்னர் அவற்றின் முதுகெலும்புகள் மறுபடியும் இன்னொரு சுழற்சிக்குப் பயன்படுத்தப்படுகின்றன. முக்கிய விஷயம் என்னவெனில், போகின்ற வழியில் ஆற்றல் மிகு எலக்ட்ரான்கள் உரிக்கப்படுகின்றன; பின்னர் இன்னும் அதிக NADHகளில் ஏற்றப்படுகின்றன – க்ளைகோஸிஸில் மட்டும் இருப்பதை விட இன்னும் அதிகமாக!

அநேகமாக ஆற்றல் எதுவும் வெப்பத்தில் இழக்கப்படுவதில்லை; அதற்குப் பதிலாக அது பாதுகாக்கப்பட்டு உருமாற்றப்படுகிறது. அதுபோலவே, குளுகோஸில் அதிக சுற்றுப்பாதையைக் கொண்ட எந்த ஒரு எலக்ட்ரானும் NADHகளில் தனது முழு ஆற்றலுடன் சமநிலையில் இருக்கும்.  

தொடரும்………………………………………..

இந்தியா முழுதும் சூரியன் கோவில்கள்: தமிழ் நாட்டில் சூரியனார் கோவில் (11,818)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,818

Date uploaded in London – –  18 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

இந்தியா முழுதும் சூரியன் கோவில்கள் இருக்கின்றன. குமரி முதல் இமயம் வரை சூரியனை இந்துக்கள் வழிபட்டதற்கு இவை சான்றாகத் திகழ்கின்றன. தமிழில் சிப்பதிகாரத்தில் உச்சிக்கிழான் கோவில் குறிப்பிடப்படுகிறது. ஆயினும் தமிழ் நாட்டிலுள்ள சூரியனார் கோவில் தலத்தைவிட காஷ்மீரில் உள்ள மார்தாண்ட் , குஜராத்திலுள்ள மதேரா , ஒடிஸாவிலுள்ள கொனார்க் ஆகிய கோவில்கள் பமைவாய்ந்தது ஆகும்.

டில்லியிலுள்ள விமானநிலையத்தில் பிரம்மாண்டமான சூரியன் சிலை உள்ளது. முதலில் இந்தியாவில் உள்ள சிறப்பு மிகு சூரியன் கோவில்களைப்  பட்டியல் இடுகிறேன்

ஆந்திரப்பிரதேசம் – அரசவல்லி சூரியன் கோவில்

பீஹார்  – தக்ஷிணார்க்க  சூரியன் கோவில் (கயா அருகில்)

கர்நாடகம் – தோல்மூர்/பெங்களூர்  சூரியன் கோவில்

அஸ்ஸாம்- சூர்ய பஹர்  கோவில்

ஜார்கண்ட் – ராஞ்சி சூரியன் கோவில்

மத்திய பிரதேசம்- உணாவோ பாலாஜி-சூரியன் கோவில்

மத்திய பிரதேசம்- குவாலியர் சூரியன் கோவில்

ஜம்மு காஷ்மீர் — மார்த்தாண்ட சூரியன் கோவில்

குஜராத் – மதேரா சூரியன் கோவில்

உத்தர கண்ட் — கதர்மால் சூரியன் கோவில்

ஒரிஸ்ஸா (ஒடிசா)- கொனாரக் சூரியன் கோவில்

தமிழ் நாடு -சூரியனார் கோவில்

பழைய கோவில்களில் பூஜைகள் கிடையாது. அவைகள் வரலாற்றுச் சின்னங்களே ; பெங்களூர் (தோல்பூர்) முதலியன இடங்களில் உள்ள புதிய கோவில்களில் வழிபாடு உண்டு .

கும்பகோணத்தைச் சுற்றி ஒன்பது கிரகங்களுக்கும் கோவில்கள் உள்ளன. சிலர் இவைகளை மட்டும் தரிசித்து வருவதற்காக செல்லுவார்கள். உடம்பை வருத்திக்கொண்டு ஒரே நாளில் செல்லுவர் அல்லது இரண்டு நாட்களில் செல்லுவார்கள். நான் பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின்போது ஆர , அமர வைத்தீஸ்வரன் கோவில், (செவ்வாய்) சூரியனார் கோவில், சுக்கிரன் கோவிலான கஞ்சனூர் கோவில், திருப்பாம்புரம் (ராகு கேது) திருநாகேச்வரம் (ராகு) முதலிய கோவில்களுக்குச் சென்றுவந்தேன். இன்னும் போகாத கோவில்கள் திருநள்ளாறு (சனைச்சரன்); ஆலங்குடி (குரு ). புதன் தலமான திருவெண்காட்டுக்கு முன்னரே (2022) சென்று வந்தேன் . இன்று சூரியனார் கோவிலை தரிசிப்போம்.

xxxxx

சூரியனார் கோவில் தலத்தின் சிறப்பு

கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் திருமங்கலக்குடிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியாவில் சூரியபகவானுக்கு சிறப்பு மிகு தலங்கள் நிறைய உள்ளன. ஆயினும் தென்னிந்திய சம்பிரதாயப்படி பூஜை புனஸ்காரங்கள் நடைபெறுவது இதன் சிறப்பு. அதுமட்டுமல்ல சூரியன் தவிர ஏனைய கிரக தேவதைகளுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளது

இங்குள்ள சூரிய பகவானுக்கு எதிரில் அவருடைய வாகனமான குதிரையைக்  காணலாம்.

சூரிய பகவான் தனது இரண்டு மனைவிகளான (இடது புறத்தில்) உஷா , (வலது புறத்தில்) பிரத்யுஷா தேவிகளுடன் காட்சி தருகிறார்.

உஷா என்பது காலைச்  சூரிய ஒளி; அதாவது சூரியன் உதிக்கும் முன் தோன்றும் ஒளி.

பிரத்யுஷா என்பதை பிரதிபலிப்பு, நிழல் (சாயா ) என்று சொல்லலாம்

மேற்கு திசை பார்த்து இருப்பதால் அவரை காலையில் கிழக்கில் உதித்த சூரியன் என்றும் கருதலாம். அவருடைய உக்கிரத்தைத் தனிக்க எதிரே குரு என்னும் வியாழ பகவான் சந்நிதி இருக்கிறது

ரத சப்தமி  போன்ற காலங்களில் பெரிய விழா நடைபெறும். ஜாதகத்தில் சூரிய தோஷம் உடையோருக்கு பரிகாரத் தலமாக இருப்பதால் எப்போதும் கூட்டம் இருக்கிறது. மேலும் நகைக்கிரகங்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பும் கிட்டுகிறது.

பிற்கால சோழர் காலம் முதல் , இந்தக் கோவில் இருந்து வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு உகந்த நாள் என்பதால் சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன . இந்தக் கோவிலின் மஹிமை பற்றி ஒரு கதையும் உண்டு. காலவ முனிவர் என்பவருக்கு குஷ்ட நோய் ஏற்பட்டதாகவும் அது தீரவேண்டுமென்று பிரார்த்தனை செய்தவுடன் இங்கு நோய் அகன்ற தாகவும் சொல்லப்படுகிறது..

எல்லாக் கோவில்களிலும் நவக்கிரஹ சந்நிதிகள் உள்ளன. இங்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி சந்னகிதி இருப்பது சிறப்பாகும்

அருகிலுள்ள திருமங்கலக்குடி பாடல் பெற்ற சிவன் தலம் என்பது குறிப்பிடத்தக்கது.

—subham—-

TAGS–இந்தியா முழுதும்,  சூரியன் கோவில்கள், பட்டியல்,  சூரியனார் கோவில் , சந்நிதிகள், நவக்கிரகங்கள்,

கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி எடுத்த ஆரத்தி! – 3 (Post No.11,817)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,817

Date uploaded in London –   18 MARCH 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

கடவுள் துகளைக் கண்ட பாரத விஞ்ஞானி

 எடுத்த ஆரத்தி! – 3 

.நாகராஜன் 

ஒரு நாள் சத்யேந்திரநாத் போஸின் மிக நெருங்கிய உறவினரிடமிருந்து அவர் இல்லத்தில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு அழைப்பு வந்தது.

விவேகானந்தா சாலையில் அவர் வாழ்ந்து வந்தார். மிக அருகில் நடந்த திருமணத்தில் கலந்து கொள்ள அங்கு சென்றார்.

ஹிந்துக்களுக்கே உரித்தான வைதீக முறைப்படியான அந்த திருமணத்தை ஶ்ரீ குருமோகன் பட்டாசார்யா என்பவர் நடத்தி வைத்தார்.

அவர் ஒரு வேத விற்பன்னர், நல்ல பக்தர்.

மேற்கு வங்கத்தில் நாடியா மாவட்டத்தில் சாந்திபூரில் அவர் வசித்து வந்தார். திருமணத்தை வேத முறைப்படி அவர் நடத்தி வைக்க அதைப் பார்த்த சத்யேந்திரநாத் அந்த வைபவத்தால் மிகவும் கவரப்பட்டார்.

அவரது சம்ஸ்கிருத ஞானம், வேத உச்சரிப்பு எல்லாவற்றையும் உற்றுக் கவனித்த சத்யேந்திரநாத் அவரிடம் சென்றார்.

“எல்லா வைபவங்களும் இரவுக்குள் முடிந்து விடுமே. இரவு என்னுடன் வந்து தங்க முடியுமா?” என்று அவர் குருமோகன் பட்டாசார்யாவைக் கேட்டார்.

குருமோகன், “சாந்திபூருக்கு நள்ளிரவில் செல்ல முடியவே முடியாது. ஆகவே நாளை காலை தான் போகப் போகிறேன். உங்களுடன் தங்க எனக்கு எந்த ஆக்ஷேபணையும் இல்லை” என்றார்.

சத்யேந்திரநாத் அவரைத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.

இரவை குருமோகன் அவரது இல்லத்தில் கழித்தார்.

காலையில் அவர் எழுந்த போது ஒரு அதிசயக் காட்சியைக் கண்டார்.

சத்யேந்திரநாத் வேஷ்டியைக் கட்டிக் கொண்டு துளசி மாடம் அருகே நின்று கொண்டிருந்ததையும் அவர் துளஸிக்கு ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பதையும் கண்டு வியந்தார்.

அவரது பிரமிப்பைக் கண்ட சத்யேந்திரநாத், புன்சிரிப்புடன், “என்ன பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

குருமோகன் வியப்புடன் கூவினார்: “நீங்கள் ஒரு புகழ் பெற்ற விஞ்ஞானி! நீங்கள் ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பதை என் கண்ணால் காண்கிறேன்!” என்றார்.

சத்யேந்திரநாத் நிதானமாகக் கூறினார் :’ ஆம், ஆரத்தி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அது பெரும் சக்தியின் ஆதாரம்!” என்றார்.

துளஸிக்கு ஆரத்தி எடுக்கும் போது, ஆரத்தி எடுப்பது சக்தியின் ஆதாரத்திற்கானது என்ற அவரது கூற்று கோடிக்கணக்கான ஹிந்துக்கள் காலம் காலமாக ஆரத்தி எடுக்கும் பழக்கத்திற்கான பெரும் பயனை எடுத்துரைத்தது.

ஒரு விஞ்ஞானியின் கூற்று என்பதால் அதை அவர் எவ்வளவு ஆழமாக ஆராய்ந்து அதன் பயனைக் கண்டுபிடித்திருக்கிறார் என்பதை உணர்வது சுலபமே.

குருமோகன் அவரை வணங்கிப் போற்றினார்.

தன்னுடைய இந்த அனுபவத்தை அவர் அனைவருடனும் பின்னால் பகிர்ந்து கொண்டார்.

ஆரத்தியின் மஹிமையே மஹிமை!

குறிப்பு:

சத்யேந்திரநாத், கடவுள் துகள், போஸான் பார்டிகிள், செர்ன் விஞ்ஞான கூடம், உள்ளிட்டவை பற்றிய பல சுவையான விவரங்களை எனது அறிவியல் துளிகள் மூன்றாம் பாகத்தில் 76,77,78 அத்தியாயங்களில் விரிவாகக் காணலாம்.

ஆகவே அவை இங்கு தரப்படவில்லை.

இதே போல கண் திருஷ்டியைப் பற்றி பிரபல விஞ்ஞானி கூறியவை பற்றியும் அறிவியல் துளிகள் தொடரில் அதைப் பற்றிய விஞ்ஞான விளக்கம் தரப்பட்டுள்ளதையும் இங்கு அன்பர்கள் நினைவு கூரலாம்.

***

இந்தத் தொடர் இத்துடன் நிறைவடைகிறது.