108 மஹாராஷ்டிர மாநில புனிதத் தலங்கள் – 4 (Post No.11,939)

Veerabhadra Swami

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,939

Date uploaded in London – –  26 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

16..சிஞ்ச்வாடா கணபதி  கோவில்

இது புனே நகரில் இருக்கிறது மோரோபா என்றும் மோர்யா கோசாவி என்றும் அழைக்கப்படும் ஒரு மஹான் நிறுவிய கோவில் இது. காணாபத்யம் என்னும் வழிபாட்டை பரப்பியவர். அவரையும் அவரது வழிவந்தோரையும் கணபதியின் அம்சமாகவே  அவர்களுடைய பக்தர்கள் வழிபட்டு வந்தனர் அவர்கள் தலைமுறை 7 தலைமுறை வரை நீடித்தது.தேவா வகுப்பினர் என்று அறியப்பட்ட அவரது சந்ததியினர் இன்னும் இருக்கின்றனர். அந்த 7 பேர் நினைவாக மார்கழி மாத கிருஷ் ணபட்ச ஷஷ்டி முதல் நவமி வரை ஆராதனை நடைபெறுகிறது பழைய சிஞ்ச்வாடா,  காந்தி பேட்டையில், மோரியா கோசாவி சமாதி இருக்கிறது .

17.தேஹு துகாராம் கோவில்

இது புனே நகரின் புறநகர். 

துகாராம் என்ற பெரிய மராட்டிய மகானின் பிறப்பிடம். இவர் மூலமாக பண்டரீபுர விட்டோபா (பாண்டுரங்கனின்) பக்தி இயக்கம் பரவியது. பங்குனிமாத கிருஷ்ண படச த்விதீயை முதல் பஞ்சமி வரை பெரிய திருவிழா நடக்கும். வருடத்தில் வரக்கூடிய 24 ஏகாதசிக்களிலும் இங்குள்ள விட்டோபா கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் வரும்; ஆஷாட மாதத்தில் துகாராம் பல்லக்கு இங்கிருந்து பண்டரீபுரம் நோக்கிப் புறப்படும். இந்திர யாணி நதிக்கரையில் துகாராம் கோவில் உள்ளது . இதை அவர் மகன் கட்டினார் . இது தவிர அவர் தொடர்புடைய பல கோவில்களும் இங்கே இடம்பெற்றுள்ளன.

தேஹூவில் உள்ள துகாராம் காதா மந்திரில் அவர் இயற்றிய 4000 அபங்கங்களும் (துதிப் பாடல்கள்) பொறிக்கப்பட்டுள்ளன . அவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு இடமும் கோவில் ஆக்கப்பட்டுவிட்டது .

xxx

18.தேவ்காட் கால பைரவ கோவில்

கால பைரவ கோவில் உள்ள இடம்.

பேய் பிசாசு, பில்லி, சூனியம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 

இங்கு வந்து மன நோய் தீர வழிபடுகின்றனர்.. மகா சிவராத்திரி காலத்திலும், கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதசி முதல் பெளர்ணமி வரை உள்ள காலத்திலும் விழாக்கள் நடைபெறும்.இப்போது இது சிந்துதுர்க் ஜில்லாவில் ஹிந்தலே என்னும் இடமாக இது இருக்கிறது.

xxxxxx

19.தாமன்கேல் கண்டோபா கோவில் 

புனே மாவட்டத்தில் ஜுன்னார் நகரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் பலருக்கு குல தெய்வமான, கிராம தெய்வமான, கண்டோபா கோவில் இருக்கிறது ஆண்டுதோறும் மாசி, சித்திரா மாத பெளர்ணமியில் விழாக்கள் நடைபெறும்.இது தவிர , கண்டோபா கையில் வாள் ஏந்தும் திருவிழாவும் நடக்கிறது. சூரபத்மனை அழிக்க முருகப்பெருமான் போவது போல மணி, மால்யா ஆகிய இரு அசுரர்களை அழிப்பதற்காக சம்ப சஷ்டி விழா நடத்தப்பட்டுகிறது அன்று சிவனே கண்டோபாவாக வருவதாக  ஐதீகம்

இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அஷ்ட வினாயக் என்னும் எட்டு பிள்ளையார் கோவில்களில் ஒன்றும் இருக்கிறது .

xxx

20.தோம் நகர கோவில்கள்

சாதாரா மாவட்டத்தில் வை தாலுகாவில் உள்ள தோம் கிராமத்தில் நிறைய கோவில்கள் உண்டு. கிருஷ்ணா நதி உற்பத்தியாகும் இடத்திகற்கு அருகில் தோம் கிராமம் அமைந்துள்ளது லட்சுமி நரசிம்ம கோவில் , சித்தேஸ்வர்  சிவன் கோவில் ஆகியவை முக்கியமானவை. வைசாக பெளர்ணமி தினத்தை ஒட்டி கோவில் விழாக்கள் நடக்கின்றன.

இவை சிற்பச் சிறப்புடைய கோவில்கள் . குறிப்பாக நரசிம்ம சுவாமி கோவிலில் உள்ள தாமரைக்குளம் , சித்தேஸ்வர் கோவிலில் உள்ள நந்தி மண்டபம் ஆகியன நுணுக்கமான கலை வேலைப்பாடுகளைக் காட்டுகின்றன.

xxx

21.டோங்கர் கான் மஹாதேவர் கோவில்

அகமத் நகர் ஜில்லாவிலுள்ள டோங்கர் கான் மஹாதேவர் கோவிலில் சிராவண மாத மூன்றாம் திங்கட்கிலையில் கொண்டாட்டங்கள் நடக்கின்றன .

xxxx

22.காராபுரி (எலிபண்டா தீவு)

மும்பைக்கு அருகிலுள்ள தீவு எலிபண்டா தீவு என அழைக்கப்படும். இங்குள்ள பெரிய சிவபெருமான் உருவங்கள் மிகவும் புகழ்பெற்றவை. யுனேஸ்கோ நிறுவனத்தால் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டது. அதிலுள்ள திரிமூர்த்தி சிலை மிகப்பெரியதும் மிகப்பிரசித்தி பெற்றதும் ஆகும் .மகா சிவராத்திரி நாளில் பெரிய விழா நடைபெறுகிறது.

எலிபண்டா தீவு

எலிபெண்டா தீவு, இதனை காராபுரி தீவு அல்லது போரித் தீவு என்றும் அழைப்பர் (Elephanta Island or Gharapuri Island or Pory Island) மகாராட்டிரா மாநிலத் தலைநகரம் மும்பை நகரத்தின் துறைமுகத்திற்கு கிழக்கே அமைந்த பல தீவுகளில் ஒன்றாகும். இந்து, பௌத்தக் குடைவரைக் கோயிலைக் கொண்டுள்ளது.16 கிமீ பரப்பளவு கொண்டது.

எலிபெண்டா தீவு, ராய்காட் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இரண்டு குன்றுகளும் இடையில் பள்ளத்தாக்கும் உடைய பகுதி. தென்னை, மா, புளி போன்ற மரங்களுடைய அடர்ந்த காடாக உள்ளது. 2200 ஆண்டுக்கு முந்திய தொல்பொருட் துறைத் தடை யங்கள் கிடைத்தாலும் குடைவரைக் கோவில்கள் ஜந்தாம் நூற்றாண்டிலிருந்துதான் செதுக்கப்பட்டுள்ளன.

முதல் குகையில் 7 மீட்டர் உயர சிவபெருமான்  உருவத்தைக்  காணலாம். சிவனின் அகோர, தத்புருஷ, வாமதேவ முகங்களை இவை குறிக்கின்றன. இந்த பிரம்மாண்டமான திரிமூர்த்தி உருவம் இந்தியாவின் தபால்தலைகளிலும் அஞ்சல் அட்டைகளிலும் இடம்பெற்றன 

இன்னும் ஒரு இடத்தில் லிங்கத்தைச் சுற்றி புடைப்புச் சிற்பங்கள் செ துக்கப்பட்டுள்ளன. நடராஜர், அர்த்த நாரீஸ்வரர் யோகீஸ்வரர், கல்யாண சுந்தர மூர்த்தி, கங்காதர மூர்த்தி ஆகியன வடிவமைக்கப்பட்டுள்ளன.

மும்பை நகரிலிருந்து கடலில் படகில் சென்றால் சுமார் ஒன்றரை மணி நேரத்தில்  தீவை அடையலாம் . மாலை 5 மணிக்கு மேல் எவரும் தங்க அனுமதி இல்லை.

Xxx

23.கொடாச்சி வீரபத்ர சுவாமி கோவில் (கர்நாடகம் )

கர்நாட- மஹாராஷ்ட்ரா எல்லையில் உள்ள பெல்காம் மாவட்ட, ராம் துர்க் அருகில் இந்த கிராமம் இருக்கிறது. இப்பொழுது இது கர்நாடக மாநிலத்திற்குள் அமைந்துள்ளபோதிலும் இங்குள்ள வீரபத்ர சுவாமி கோவிலுக்கு இரு மாநில மக்களும் வருகின்றனர் . தட்ச யக்ஞத்தை அழிப்பதற்காக சிவன் உண்டாக்கியவர் வீரபத்ரர்.

இது லிங்காயத் சமூகத்தினருக்குப் புனிதமான இடம்; .வீரபத்ரரின் பெரிய சிலை இங்கே இருக்கிறது.  பலவண்ணம் படைத்த இந்த கம்பீரமான சிலை, தக்ஷனை வீரபத்திரர் சம்ஹாரம் செய்யும் கோலத்தில் இருக்கிறது  கோவிலின் கட்டிடக்கலை  சாளுக்கிய மற்றும் விஜயநகர அம்சங்களைக் கொண்டு இருக்கிறது . எல்லா  அமாவாசை , பெளர்ணமி நாட்களிலும் பக்தர் கூட்டம் வருகிறது .மார்கழி மாத பெளர்ணமி தினத்தில் பெரிய விழா நடக்கிறது  இது அமைந்துள்ள பெல்காம் மாவட்டத்தை மகாராஷ்டிரம் சொந்தம் கொண்டாடும் செய்திகள் இன்னும் பத்திரிகையில் வந்து கொண்டு இருக்கின்றன.

To be continued………………

 Tags- எலிபெண்டா, குகைக்கோயில், காண்டோபா, துகாராம் , நரோபா கோசாவி, வீரபத்ர சுவாமி கோவில்

ஹிட்லருக்கு அழிவைத் தந்த தவறான ஸ்வஸ்திகா! (Post.11,938)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,938

Date uploaded in London –   26 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்புதிய நெடுந்தொடர்.     

அத்தியாயம் 7 

ஹிட்லருக்கு அழிவைத் தந்த தவறான ஸ்வஸ்திகா! 

ச.நாகராஜன்

பகுதி 9 

உலகம் செய்த நற்தவத்தின் பயனாக ஹிட்லர் தேர்ந்தெடுத்த ஸ்வஸ்திகா சின்னம் அவனுக்குப் பேரழிவைத் தந்தது.

அது அவனது தற்கொலையில் முடிந்தது.

தனது இனமே உயரிய ஆரிய இனம் என்று கர்வம் கொண்ட ஹிட்லர்

தனது இனப்பெருமையைப் பறை சாற்றும் வண்ணம் ஒரு சின்னத்தை அடையாளக் குறியீட்டைத் தேர்ந்தெடுத்தான்.

ஹிந்துக்கள் தொன்று தொட்டு ஸ்வஸ்திகா சின்னத்தை மங்கலச் சின்னமான அனைத்து நல்ல வைபவங்களுக்கும் பயன்படுத்தி வந்தது வரலாறு எடுத்துக் கூறும் உண்மை.

கோவில்களிலும் கொடிகளிலும், கோலங்களிலும் இந்த ஸ்வஸ்திகா சின்னம் இடம் பெறும்.

ஸ்வஸ்தி என்றால் மங்கலத்தைத் தருவது என்று பொருள்.

ஸ்வஸ்தி வசனம் என்று ஆசீர்வாதம் தரச் செய்யப்படும் நல்ல வாசகங்களை ஓதுதல் கூறப்படும்.

இந்த சின்னத்தை – ஹிந்துக்களிடமிருந்து எடுத்து உலகெங்குமுள்ள இதர இனங்கள் தங்கள் பயன்பாட்டிற்கும் கொண்டு வந்தன.

வலது புறம் சுழற்சியைக் கொண்ட இந்தச் சின்னமே தைவிக் ஸ்வஸ்திகா.

இதை ஆரியர் சின்னம் என்று பழைய நூல்களிலிருந்து அடையாளம் கண்டு கொண்ட ஹிட்லர் அதைத் தனது வெற்றிச் சின்னமாக அறிவிக்கக் கருதி அதைத் தேர்ந்தெடுத்தான்.

ஆனால் அனைவரின் நற்பயனாக அவன் அதில் ஒரு தவறு செய்தான்.

ஸ்வஸ்திகாவை வலது புறச் சுழற்சிக்குப் பதிலாக இடது புறம் சுழலச் செய்தான்.

அது ஆசுரிக் ஸ்வஸ்திகாவாக ஆனது. இந்த அசுர ஸ்வஸ்திகா அவனுக்கு அசுர வளர்ச்சியைத் தந்து இறுதியில் அதல பாதாளத்தில் ஆழ்த்தியது.

இடது புற சுழற்சியாக இதை மாற்றியதோடு அல்லாமல் 45 டிகிரி அதைச் சுழற்றி மாற்றி வேறு அவன் பயன்படுத்தினான்.

உலகில் ஆதி காலம் தொட்டு இன்று வரை சுமார் 20000 சிம்பல்கள் – சின்னங்கள் அல்லது அடையாளக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.

அபாய அறிவிப்புகள், இடம் குறித்த செய்திகள் தரும் சின்னங்கள் என நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் சின்னங்களை நாம் நன்கு அறிவோம்.

The Swastika : Symbol Beyond Redemption என்ற தனது புத்தகத்தில் அமெரிக்க கிராபிக் டிசைனர் ஸ்டீவன் ஹெல்லர் (Steven Heller)  எப்படியெல்லாம் மேலை நாடுகள் கட்டிடக்கலையிலும் விளம்பரக் கலையிலும் இந்த ஸ்வஸ்திகாவைப் பயன்படுத்தின என்பதை விளக்குகிறார்.

கோகோகோலோ பான வகைகளிலும், கார்ல்ஸ்பெர்க் பீர் பாட்டில்களிலும் கூட விளம்பரமாக ஸ்வஸ்திகா பயன்படுத்தப்பட்டது.

பாய் ஸ்கவுட்ஸ் இதைத் தமது சின்னமாகத் தேர்ந்தெடுத்தனர். அமெரிக்க பெண்கள் சங்கம் (Girl’s Club of America) தங்கள் பத்திரிகைக்கு ஸ்வஸ்திகா என்று பெயர் சூட்டியது.

முதல் உலகப் போரில் அமெரிக்க ராணுவம் தனது ஆர் ஏ எஃப் விமானங்களில் அதைப் பயன்படுத்தியது. 1939ஆண்டு வரையிலும் கூட அதை அந்த விமானங்களில் பார்க்க முடிந்தது.

நாஜிக்கள் அதைப் பயன்படுத்த ஆரம்பித்ததிலிருந்து உலகெங்கும் இந்தச் சின்னம் குறித்த பெருத்த மாறுதல் ஒன்று ஏற்பட்டது.

நாஜிக்களுக்கு எதிரான அனைவரும் இதைப் பார்த்தாலே பயப்பட ஆரம்பித்தனர்.

யூதர்களுக்கோ இது கொலைகாரச் சின்னம் ஆனது. ஹோலோகாஸ்ட் சின்னம் என்று இதை அவர்கள் கருதினர்.

நாஜிக்களின் கொடி

பல்வேறு வண்ணங்கள், வடிவமைப்புகளைப் பரிசீலித்த பின்னர் ஹிட்லர் தானே முடிவு செய்த கொடி நாஜிக்களின் கொடியானது.

இது பற்றி ஹிட்லர் தான் எழுதிய மெய்ன் காம்ஃப்’ (1925) நூலில் குறிப்பிட்டிருப்பது:

“I myself, meanwhile, after innumerable attempts, had laid down a final form; a flag with a red background, a white disk, and a black swastika in the middle. After long trials I also found a definite proportion between the size of the flag and the size of the white disk, as well as the shape and thickness of the swastika.”

— Adolf Hitler, Mein Kampf (1925)

“நானே பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர் இறுதி வடிவத்தை அமைத்துள்ளேன். கொடியின் பின்ணனியில் வெள்ளை வட்டில் கறுப்பு ஸ்வஸ்திகா நடுவில் இருக்கும். நிறைய சோதனைகளுக்குப் பின்னர் சரியான விகிதம் கொண்ட கொடியை வெள்ளை வட்டில் வடிவத்துடனும் ஸ்வஸ்திகாவின் கனத்துடனும் இதைக் கண்டுபிடித்துள்ளேன்.”

ஹிட்லர் 1933ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி  ஜெர்மனியின் சான்ஸலராக நியமிக்கப்பட்டவுடன் கறுப்பு சிவப்பு தங்க நிறக் கொடி நீக்கப்பட்டது; மார்ச் 12 முதல் கறுப்பு-வெள்ளை- சிவப்பு மூவண்ணக் கொடி நாஜி கட்சியின் கொடி ஆனது.

A flag from Nazi Germany found near the south bank of the Rapido River about 4,000 feet (1,200 meters) west of Monte Cassino by J. McQuorkindale on the night of 17–18 February 1944. Note that the swastika appears to be left-facing in this image.

பஸ்மாசுரன் தன் தலையில் தானே கை வைத்துக் கொண்டு அழிந்த புராண வரலாறு போல ஹிட்லர் தன் அழிவுக் கொடியைத் தானே வடிவமைத்து வண்ணம் பூசி மகிழ்ந்து அழிந்தான் எனலாம்.

***

Two Marathi Proverbs on Lord Dattatreya (Post No.11,937)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,937

Date uploaded in London – –  25 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

There are two interesting proverbs in Marathi on Lord Dattatreya; to understand the proverbs one must know the story of Dattatreya and the belief of his devotees about his wanderings.

This story illustrates the power of chastity. Greatest of the Tamil poets ,Tiru Valluvar, said in his Tirukkural that chaste women can even control Nature. If a chaste woman who worships only her husband says ‘Let it rain’ and the rain will pour down according to Valluvar. And another great Tamil poet Kamban in his Tamil version of Ramayana also says it through the mouth of Sita Devi. When Hanuman met her in Asoka vana of Sri Lanka, Hanuman requested her to sit on his shoulder so that she can straight away fly to Rama’s place. She frowned at Hanuman said, ‘Hey, What do you think of me? I can burn even the 14 worlds with the power of my chastity. The reason I am not doing it is to show the world the power of my husband. Rama has to rescue me’. Then Hanuman saluted her and went back to Rama.

xxx

Narada, the inter galactic traveller, who can beat Einstein’s theory on the speed of light and fly from one galaxy to another galaxy with his thought power, wanted to show the power of Chastity to the world. He went to wives of Brahma, Vishnu and Shiva and teased them saying that there is one lady on earth who is more chaste and more powerful. As soon as they heard it, they became jealous and asked their husbands to test her.

They went to that powerful chaste woman as mendicants. Her name was Anasuya, wife of great Rishi Atri. He is one of the Sapta Rishis (Seven saints in the constellation of Ursa Major in the Northern Sky). His name is recited by Brahmins three times every day in their Sandhyavandana. More over, he is the highest contributor to Rig Veda. And he is also mentioned by Panini 2700 years ago in the world’s first grammar book Ashtadyayi.

When Atri was away for his morning worship Brahma, Vishnu Siva- Tri Murtis, came and begged for alms at her door. Then Anasuya told them to go to near by river and bathe and come. She prepared the food by the time they returned. Just before she spread the leaves to serve food they said to her that there is a condition for them to eat there.

Anasuya felt uneasy but yet the Vedic command is Athithi Devo Bhavah– Treat your guest as God. So she agreed to  follow their condition. They put an impossible condition – that is, she must give them food without her clothes on.

The poor woman felt that the laws of hospitality compelled her to comply, but the power of her virtues was such that at the moment of her appearance before them they were changed into three little babies. She threw her sari and took them one by one to suckle.And she put them in the cradles and lulled to sleep.

When their wives were searching for their husbands, Narada showed them the cradles. They were surprised to see their husbands as three little babies and begged Anasuya to bring them to their original form.  In the mean time Atri came and requested them to leave the children with them. They told Atri that they will be born as three children to Anasuya.

The Brahma baby was named after moon/ Chandra and it soon left them and went to moon. The Siva baby was named Durvasa and it soon left them to lead a wandering pilgrim’s life. The third baby Vishnu, was named Dattatreya and became the representative of the three. Another version is that Atri made the three children as one with three heads.

Women fast on Datta Purnima on the Margasirsha full moon day to honour the birth of Datta and it is called Datta Jayanti. He is drawn with three heads accompanied by four dogs, representing Four Vedas.

Worshippers may belong to any sect or caste. He is worshipped in Maharashtra and Karnataka.

Various tales about him are current, e.g. he became a mendicant and, travelling daily to Benares (Kasi) for his morning ablutions, for Kolhapur for his lunch and to Sahyadri range (the Western Ghats) for his ret at night. Hence two Marathi proverbs have arisen:

1.Dattatreyaachi Ferii (Dattareya’s pilgrimage)

2.Datta Karoon Yenen (To come, having played Dattatreya), meaning to appear in time to profit by the fruits of others’ labours.

His teachings are in Avadhuta Gita. He learnt from 24 animals,Insects and flowers. His famous lessons from Nature are part of Bhagavata Purana. He is said to meditate under Audumbara tree. His shrines are in many places in Maharashtra.

–subham–

Tags- Marathi proverbs, Dattatreya, Anasuya, Atri, Sapta Rishi, three babies, power of Chastity, Narada

தத்தாத்ரேயர் பற்றி 2 சுவையான மராத்தி பழமொழிகள் (Post No.11,936)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,936

Date uploaded in London – –  25 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று பேரின் அம்சங்களும் ஒன்று சேர்ந்த தத்தாத்ரேயரை  மஹாராஷ்டிரர்கள் வழிபடுகின்றனர். மேலைக் கடற்கரை ஓரமாக கர்நாடகம் வரை இந்த வழிபாடு பரவியிருக்கிறது.. மார்கழி மாத பெளர்ணமி  அன்று அவரது ஜயந்தி கொண்டாடப்படுகிறது.

தத்தாத்ரேயர் பற்றி தெரியாதவர்களுக்கு இதோ சுருக்கமான கதை:-

சப்த ரிஷிகளில் ஒருவர் அத்ரி. இன்றும் பிராமணர்கள் தினமும் மூன்று வேளை செய்யும் சந்தியா வந்தனத்தில் அவரது பெயரைச் சொல்லுவர் . சப்த, அதாவது ஏழு ரிஷிகளின் பெயர்களில், முதலில் அவர் பெயர்தான் வரும். அது மட்டுமல்ல. ரிக் வேதத்தில் அதி கமான கவிகளை இயற்றியவர் அவர்தான் . 2700 ஆண்டுகளுக்கு முன்னர் பாணினி எழுதிய உலகின் முதல் இலக்கண புஸ்தகத்தில் அதே வரிசையில் சப்த ரிஷிக்களின்  பெயர்கள் வருவது இது எவ்வளவு பழமையானது என்பதைக் காட்டுகிறது .

அத்ரி மஹரிஷியின் மனைவியின் பெயர் அனுசூயா . அவருடைய கற்பின் திறத்தினை உலகிற்கு உணர்த்த பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் ஒரு நாடகம் ஆடினார்கள். மூவரும் சந்யாசிகள் வேடம் தாங்கி , முனிவர் இல்லாத நேரத்தில் அந்த வீட்டுக்குப் பிச்சை கேட்கச் சென்றனர்.

அனுசூயா உணவினைச் சமைத்துக் கொண்டுவந்த பின்னர் பெண்கள் ஏற்க முடியாத ஒரு நிபந்தனையை விதித்தனர். அவர் அதை மறுக்க முடியாது ஏனெனில் வேதம், அதிதி தேவோ பவஹ = விருந்தாளி என்பவன் இறைவன் , என்று செப்புகிறது. அவளும் நிபந்தனைக்கு இசைவு தெரிவித்து என்ன நிபந்தனை என்று வினவினாள். பெண்ணுடைய தாய்ப்பாலை அருந்த வேண்டும். அதுவும் ஆடை யின்றி வரும் பெண்மணியிடம்தான் தாங்கள் சாப்பிட முடியும் என்றனர்.

கற்புடைய பெண்கள் உலகில் எதையும் செய்ய முடியும். கணவனை மட்டுமே மனதில் கொண்ட பெண், மழையே பெய் – என்று கட்டளையிட்டால் உடனே மழை கொட்டும் என்று வள்ளுவன் சொல்லுவான். சீதையோ , அம்மையாரே என் தோளில் அமர்க ; இப்போதே ராமபிரானிடம் சேர்த்துவிடுகிறேன் என்று அசோக வனத்தில் சொன்ன அனுமனிடம், என் கற்பினால் ஈரேழு உலகங்களையும் எரித்துவிட முடியும். அந்த ஆண்சிங்கம் இராமபிரானுக்கு இழுக்கு வரக்கூடாதென்று காத்திருக்கிறேன். அவரே வந்து காப்பாற்றட்டும் என்கிறாள் சீதா தேவி .

அப்படிப்பட்ட கற்பின் ஆற்றலால், விருந்துக்கு வந்த மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றி உணவூட்டுகிறாள் அனுசூயா தேவி. அவர்கள் மூவரும் அவளது கற்பின் சக்தியை உலகிற்கு உணர்த்திவிட்டோம் என்ற திருப்தியுடன் தேவ லோகம் செல்கின்றனர்.

அத்ரி மகரிஷி, வீடு திரும்பியவுடன் அனுசூயா , அன்று நடந்த வினோத விருந்து பற்றி எடுத்துரைத்தாள். வந்தவர்கள் மூவரும் மும்மூர்த்திகள் என்பதை ஞான சக்தியால் உணர்ந்த அத்ரி பிரார்த்தனை செய்யவே மூவரும் தோன்றி, அவளுடைய மனைவியின் கற்பின் திறத்தைக் கண்டு வியந்ததாகக் கூறி  என்ன வரம் வேண்டும் என்று வினவ , மூவரும் மீண்டும் குழந்தைகளாக வரவேண்டும் என்று அத்ரி சொல்ல , அவர்கள் குழந்தையற்ற அந்த வீட்டில் அவதரிப்பதாக வரம் தந்தனர்.

பின்னர் சந்திரன் என்ற பெயரில் பிரம்மா, அவதரிக்க, அந்தக் குழந்தை, சந்திரனிடமே சென்று விட்டது.

துர்வாசன் என்று பெயரிட்ட குழந்தை (சிவன்) , முனிவராக சஞ்சாரம் செய்யப் புறப்பட்டுவிட்டது . விஷ்ணுவோ தத்தாத்ரேயர் என்ற பெயரில் பிறந்தவுடன் அது மட்டும் தங்கி, மூவரின் பிரதிநிதியாக இருந்தது. அதைக் குறிக்கும் வகையில் தத்தாத்ரேயர் உருவத்தை மூன்று தலைகளுடன் வரைவார்கள் . சிலர் அவரை விஷ்ணுவின் அவதாரமாகவே கருதுவர். இன்னும் ஓர் கதை அந்த மூன்று குழந்தைகளையும் இணைத்து தத்தாத்ரேயரை அத்ரி மகரிஷியே உருவாக்கினார் என்பதாகும்.

xxx

இந்தக் கதையில் பல கருத்துக்கள் உள்ளன

மனம், மொழி, மெய் ஆகிய மூன்றினாலும் கணவனைத் தவிர வேறு யாரையும் நினையாத கற்பரசிக்கு மகத்தான  சக்தி உண்டு

இறைவனும் கூட பெண்களின்  கற்பின் சக்திக்குட்பட்டவன்

பெண்கள் திறமைசாலிகள்;0- எந்த கஷ்டமான சூழ்நிலையையும் சமாளிக்க அவர்கள் திட்டம் வைத்துள்ளனர். இதை சாவித்ரி , யமனிடம் கேட்ட  புத்திசாலித்தனமான 3 வரங்களிலிருந்து அறியலாம்.

xxx

Picture shows 24 Gurus of Datta, aaccording to Bhavatha Puraana

அவதூத கீதை என்ற நூலில் தத்தாத்ரேயர் உபதேசங்கள் இருக்கின்றன

அத்தி மரத்தின் கீழ் நான்கு நாய்களுடனும் மூன்று தலைகளுடனும் இவரை சித்தரிப்பர். அந்த 4 நாய்களை  வேதங்கள் என்று பக்தர்கள் கூறுவார்கள். இவர் இயற்கையில் உள்ள 24 பொருள்களிடமிருந்து என்ன கற்றார் என்பது பாகவத புராணத்தில் உள்ளது

இப்படிப் புகழ் பெற்ற தத்தாத்ரேயர் பற்றி பல கதைகள் உண்டு அவர் காலையில் காசிக்குச் சென்று காலை வழிபாட்டை முடிப்பார் . பகலில் பிச்சை எடுத்து உண்ணுவதற்காக மஹாராஷ்டிரத்திலுள்ள கோலாப்பூருக்கு வந்து விடுவார்.   மாலையில் சஹ்யாத்ரி மலைக்கு வந்து ஓய்வெடுப்பார் என்பது ஒரு நம்பிக்கை. இதை ஒட்டி இரண்டு மராத்தி பழமொழிகள் தோன்றின.

1.தத்தாத்ரேய பேரி – தத்தாத்ரேய பயணம் போல (இருக்கிறதே)

யாரேனும் காலை, மதியம், மாலை என்று வெவ்வேறு இடத்திற்குச் சென்றால் இப்படிக் கிண்டல் செய்வார்கள் . நாமோ தமிழ்நாட்டில் இதை ஆள் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு இருக்கிறான் போல என்று நக்கல் செய்வோம்.

2.தத்த கரூன் யேணேன் (வந்தான், தத்தாத்ரேயர் போல நடித்தான்./ நாடகம் ஆடினான் .

இதன் பொருள் – யாரோ செய்த உழைப்பின் பலனைப் பெற்றுக்கொள்ள உரிய நேரத்தில் வருதல் .

அதாவது தமிழ் சினிமா பாட்டின் கதை- ஆத்துல தண்ணி வர,

அதுல ஒருத்தன் மீன் பிடிக்க,

காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டுபோக — என்ற கதை .

xxx

இதோ கருத்துள்ள அந்த முழுப் பாட்டு :

ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க

ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க

காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக்கொண்டு போவதும் ஏன்?

கண்ணம்மா

 அதைப் பாத்து அவன் ஏங்குவதேன் சொல்லம்மா

பாத்தி கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே

பூத்ததெல்லாம் வேறொருவன் பாத்தியமாப் போவதும் ஏன்

 கண்ணம்மா

கண்ணம்மா கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா

பஞ்செடுத்துப் பதப்படுத்தி பக்குவமா நூல்நூற்று

நெஞ்சொடிய ஆடை நெய்தோம் கண்ணம்மா – இங்கு

கந்தலுடை கட்டுவதேன் சொல்லம்மா

காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே

நேத்து வந்த ஒருவனுக்கு மாத்துமாலை போடுவதேன்

கண்ணம்மா கண்ணம்மா அவள்

நேத்திரத்தைப் பறிப்பதும் ஏன் சொல்லம்மா

ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில் இருப்பதுதான்

இத்தனைக்கும் காரணமாம் கண்ணம்மா

 – இதை

எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா கண்ணம்மா

எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா

படம்: வண்ணக்கிளி

இயற்றியவர்: மருதகாசி

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்

–சுபம் —

Tags- தத்தாத்ரேயர் , அத்ரி, அனுசூயா, சப்த ரிஷி, பழமொழி, மராத்தி,

சோஹம் ஸ்டேஷனில் நேர்ந்த சோக விபத்து! (Post No.11,935)

Battle of Stalingrad

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,935

Date uploaded in London –   25 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்

புதிய நெடுந்தொடர்.     

அத்தியாயம் 6

சோஹம் ஸ்டேஷனில் நேர்ந்த சோக விபத்து!

ச.நாகராஜன்

பகுதி 7 

இரண்டாம் உலகப் போரில் புழங்கிய வெடி மருந்துகள், குண்டுகள், துப்பாக்கிகளுக்கு ஒரு கணக்கேயில்லை.

வெடி மருந்துகள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ரயில், கார், டிரக் என பலவகை வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் டி டேD DAY  என்று சொல்லப்படும் நாள் ஜூன் 6 1944.

அதற்கு நான்கு நாட்கள் முன்பாக 1944 ஜூன் 2ஆம் தேதி டிரைவர் பெஞ்சமின் ஜிம்பர்ட் (Benjamin Gimbert) மற்றும் பயர்மேன் ஜேம்ஸ் நைட்டால் (James Nighttall) ஆகிய இருவரும் ஒரு குட்ஸ் ட்ரெயினுக்கு இன் சார்ஜாக இருந்தனர். அவர்களது வேலை யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏர்ஃபோர்ஸுக்கு இங்கிலாந்தில் எஸக்ஸில் ஒயிட் கொல்ன் (While Colne, Essex, UK) என்னுமிடத்தில் பாம்ப்களை – குண்டுகளை டெலிவரி செய்ய வேண்டும்.

சோஹம் (SOHAM) என்பது ஒரு சிறிய கிராமம். அதை நோக்கி ரயில் விரைந்து கொண்டிருந்த போது  பெஞ்சமின் தனது லோகோமோடிவுடன் இணைக்கப்பட்ட அடுத்த வாகன் தீப் பற்றிக் கொண்டது என்பதை உணர்ந்தார்.

என்ன ஆகும்? வெடி மருந்துகள் டன் கணக்கில் வண்டியில் உள்ளன. பிரம்மாண்டமான வெடி விபத்து ஏற்பட இருக்கிறது.

உடனே அவர் வண்டியை நிறுத்தினார். எரிகின்ற வாகனை இணைப்பிலிருந்து விடுபடச் செய்ய முயன்றார்.

சோஹம் ஸ்டேஷனிலிருந்து சுமார் 128 மீட்டரில் (420 அடி) வண்டி நின்று கொண்டிருந்தது.

வண்டி நின்ற முற்றத்தில் ஒரு பள்ளம் பறித்து அதில் வேகனைத் தள்ளி விட அவர்கள் முயன்றனர்.

ஆனால் அது எப்படி முடியும்? பெஞ்சமின் தீ பிடித்ததைப் பார்த்த ஏழு நிமிடங்களில் குட்ஸ் ட்ரெயின் வெடித்தது.

ஸ்டேஷன் தரைமட்டமாகியது. பெஞ்சமினை 200 மீட்டர் தூக்கி எறிந்தது. இரண்டு ரெயில் ஊழியரை சிதற அடித்தது.

வெடியினால். 20 அடி ஆழம் உள்ள ஒரு பெரும் பள்ளம் ஏற்பட்டது.

ஆனால் அங்குள்ளவர்கள் சோர்ந்து விடவில்லை.

உடனடியாக ரயில் டிராக்கை சரி செய்ய ஆரம்பித்தனர்.

மாலைக்குள் ரயில் டிராக் சரியாகி விட்டது.

சண்டையில் போர்க்களத்தில் அல்லாது இதர விதத்தில் தைரியத்துடன் செயலாற்றிய அபூர்வமான வீரர்களுக்கு பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் தரப்படும் ஜார்ஜ் க்ராஸ் நான் – காம்பாட் ப்ரேவரி விருது (Non Combat Bravery Award) அந்த இருவருக்கும் தரப்பட்டது.

சோஹம் ஸ்டேஷனில் அவர்கள் நினைவாக இரு ப்ளேட்டுகளும் வைக்கப்பட்டன!

பகுதி 8

ஒரு சண்டையிலேயே அதிகம் உயிரை விட்ட ரஷிய வீரர்கள்!

பிரிட்டிஷ், அமெரிக்க வீரர்களை விட அதிக அளவில் ரஷிய வீரர்கள் இரண்டாம் உலகப் போரில் இறந்தனர்.

ஸ்டாலின்கிராட் சண்டையில் தான் இது நிகழ்ந்தது.

ஜூலை 1942 முதல் 1943 பிப்ரவரி முடிய இந்தச் சண்டை நீடித்தது

ஜெர்மனி இந்த தொழில்நகரத்தை எப்படியேனும் பிடிக்க வேண்டும் என்று முயன்றது.

விமானத் தாக்குதல், வீட்டுக்கு வீடு சென்று சண்டை என எல்லாவிதத்திலும் கடுமையான போராக இது அமைந்தது.

ரஷிய வீரர்கள் சளைக்கவில்லை.

ஆயிரக் கணக்கானோர் ரஷிய தரப்பிலும் அதே போல ஜெர்மானிய தரப்பிலும் இறந்தனர்.

ஆக்ஸிஸ் பவர் என்பது ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாட்டு அணியைக் குறிக்கும்

அல்லைஸ் என்பது பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாட்டு அணியைக் குறிக்கும்.

ஆக்ஸிஸ் பக்கம் 650,000 முதல் 868,000 வீரர்கள் இறந்தனர்.

ரஷிய தரப்பிலோ – 1100000 – பதினோரு லட்சம் வீரர்கள் இறந்தனர்

ஒரே ஒரு சண்டையில் அதிகமான வீரர்களை இப்படி ரஷியா இழந்தது இந்த ஸ்டாலின்கிராட் போரில் தான்!

***

108 Famous Hindu Shrines in Maharashtra-3 (Post No.11,934)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,934

Date uploaded in London – –  24 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 3

10.BHIMASANKARA JYOTIRLINGA TEMPLE

Bhimasankara is one of the 12 Jyotirlinga shrines in the country. It attracts a big crowd on Shivratri day.

It is at 120 kilometres from Pune. It is in the middle of a thick forest of the Western Ghats known as Sahyadri Mountains in Sanskrit. It is the source of Bhima river which is known as Chandrabhaga in Pandharpur. They associate the name with Bhima, one of Pandava brothers as well.

The top of the Linga is divided by a narrow groove in the Linga. Each half of the Linga signifies Lord Shiva and Goddess Parvati. The Lord appears as “Ardhanareeshwara” in the Bhimashankar temple.

According to beliefs, water flows continuously from the Linga since time immemorial.

There are two big Nandi statues in the temple premises.

The Bhimashankar temple complex is small and has a simple structure with numerous sculptures depicting different Gods and Goddesses. The architecture of the temple follows the Nagara style and the Hemadpanthi style of construction. The temple consists of GarbhagrihaSabhamandap, and the Kurmamandap.

The main door of the Bhimashankar temple is made of solid wood with figures of several gods and goddesses. A huge bellis there at the entrance of the temple. Chimaji Appa, brother of Bajirao Peshwa I gifted this bell. Two large Nandis are also there in the Temple. The one in front of the sanctum is very old and the other one is new. One can also visit the shrines of Lord Shani, Nandi, Lord Ram, and Dutta.

Some of the temples near Bhimshankar temple are:

·         Gupt Bhimashankar: A small trekking path from the Bhimashankar temple will lead you to the place of discovery of the Jyotirlinga. The Linga is on the banks of a waterfall and has greenery around.

·         Sakshi Ganapati Temple: The temple is 2 km away from the Bhimashankar temple. The Ganapati here is “Sakshi” because he is the witness to the visit of the pilgrims to the Jyotirlinga. He keeps the attendance of whoever visits the Bhimashankar shrine. The pilgrims visit the temple to show their respects to the Lord Ganapati and Lord Shiva.

·         Kamalaja Devi Temple: The temple is for Goddess Parvati, wife of Lord Shiva. She helped the Lord in his battle against the demons. Also, She sits on a lotus in this temple.

xxxx

11.BHUDARGAD

A temple to Lord Bhairava is built here. Magha Krishna Paksha Prathamai to Dasami is the festival period in the temple. It is in Kolhapur district. The fort here attarats more people. It is used by trekkers. Shivaji won the fort and made it stronger.

xxx

12. CHANDUR KHANDOBA TEMPLE

It is a hill fort near Manmad. A festival in honour of Khandoba is held on Pausa Full moon. Khandoba, is Kula Devata for lot of Marathis. Khandoba is a folk deity like Munisamy or Ayyanar of Tamil Nadu. He apperad wit a knife in his hand.

Xxx

13. CHAPHAL RAM TEMPLE

Chaphal is situated at the distance of 35 kilometer from Satara. Chaphal is very famous for ‘Shri Ram Temple’. The temple was built by Ramdas Swami the spiritual guru of great Maratha king Shivaji Maharaj. Its located on the banks of river’Maand’. The temple is built of marbles.Swami Ramdas retrieved the idol of ‘Lord Surya’ from Angapur Pond and installed the same in this temple. Lord Ram is without a bow, but lotus on both hands.

In front of Shri Ram Temple is the Temple of Lord Das Maruti and at the rear side is Veer Maruti (Pratap Maruti) temple housing 8 ft tall idol of Lord Hanuman, wearing ornaments as described in the Hanuman Stotra.

xxx

14.CHATURSING (Chatur Srnga)

It is a four peaked hill near Pune. That is why named Chatur Srnga.

Chathushrungi Temple, situated on the slope of a hillock about 4. 5kms from Pune Railway station and is  is dedicated to Goddess Chaturshringi. The Goddess is also known by the name Ambareshwari, Mahalakshmi, Mahakali and Mahasaraswati. Goddess Chaturshringi is considered to be the main deity of Pune. Built during Chatrapati Shivaji era, the temple is 90 feet high and 125 feet wide. One can reach the temple by climbing more than 100 steps. 

There is a story behind this temple. It is said that once there lived a moneylender . He was a great devotee of Saptashringee devi. Every year on the full moon day of Chaitra, he travelled from Pune to Vani and visits all the temples of goddess to worship her.  But when he became old, it was difficult for him to travel and visit the temples. So he felt great grief and prayed to the goddess for Darshan. The Goddess heard his prayer and appeared to him in his dream. The Goddess told him that she would stay on a mountain in the North-West of Pune and asked him to come there. There he found a natural statue of goddess i. e. (swayambhu devi) and so he constructed the present temple there. 

At the entrance one can found the scale model of the entire premises of the temple. The temple celebrates the nine-day Navaratri festival in the month of October every year. During the festival the temple is fully decorated in the traditional Indian style and lit up with lamps. In Navaratri, fair Big Giant Wheels, Merry Go Round, Food Stalls are there in the fair. Main attraction of the festival is the procession of carrying out the silver statue of goddess Chattushringi in a silver chariot, which is held in the evening on the tenth day (on Vijaya Dashami/ Dashahara) of the festival. 

Xxx

15.CHAUL DATTAREYA TEMPLE

It is a temple dedicated to Dattatreya near Alibag.

Datta Mandir located in the Chaul part of Revdanda. The temple is situated atop the peak with almost 1500 steep stairs that are to be climbed up. The entire region around the Revdanda can be viewed from the temple. The temple is said to be built during the Shivaji Maharaj reign to keep an eye on the enemies.

The red domed temple of Datta Mandir is situated at the hill top is said to be constructed by Swami Bramhendra. The temple has three headed statue of Shri Datta and this idol represents the trinity of Lord Brahma, Vishnu and Maheshwara

It is around 15 kilo meters from Alibag town
Once to the top, the amazing temple complex along with the atmosphere and the surrounding natural beauty makes you forget all the exhaustion. The temple complex is not very big with the main sanctorum containing a pair of Lord Dattatreya’s “Padukas” (footwear) on a black stone. Just behind this stone is the main idol of the Lord with three faces who here represents the main “Trimurti” of Hindu religion, the Brahma, Vishnu and Maheshwar. On the way up to this main temple people can find out many small temples various other Gods and Goddesses. Since summer is very hot and steps are slippery during monsoon period, winter is the best time to visit this hill -top mandir.

To be continued……….


Tags- Maharashtra, Shrines, Part 3, Bhimasankara, Chaul, Chaphal Ram mandir, Ramdas

மஹாராஷ்டிர மாநிலத்தின் 108 புனிதத் தலங்கள் – Part 3 (Post No.11,933)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,933

Date uploaded in London – –  24 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

Part 3

10.பீமசங்கரம் சிவன் கோவில்

12 ஜோதிர் லிங்க தலங்களில் மூன்று,  மஹாராஷ்டிர மாநிலத்தில் இருப்பதோடு எங்கு நோக்கினும் சிவன் கோவில்களைக் காணலாம். பீமா நதிக்கரையில் அமைந்த பீம சங்கரம், 12 ஜோதிர் லிங்க தலங்களில் ஒன்றாகும்  இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவிலும், நாசிக்கிலிருந்து 120 கிமீ தொலைவிலும் உள்ளது

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் மற்றும் அயோத்தி மன்னன் பீமன் ஆகியோருடனும் தொடர்புடைய கோவில் இது.

அழகான மேற்குத் தொடர்ச்சி மலையின் காடுகளுக்கு இடையே அமைந்த கோவில் இது. இயற்கையும் இறைவனும் மனிதனின் மனச்  சாந்தியை மேம்படுத்தும். இதை அறிந்த இந்துக்கள் காடு மலையிலும் கிராமத் தொலைவிலும் கோவில்களை அமைத்துள்ளனர் . இதனால் யாத்திரை செல்லும் காலம்  முழுதும் ஆண்டவன் சிந்தனை ஒன்றே நிலைத்து நிற்கும்.

இந்தக் கோவிலில் வேறு எங்கும் இல்லாத சில சிறப்புகள் உண்டு.

பூமிக்கு அடியில்- தரை மட்டத்துக்கு கீழே லிங்கம் இருப்பது ;

அந்த லிங்கம் கூம்பு வடிவத்தில்,இருப்பது ;

எல்லா பக்தர்களும் அருகில் சென்று தாமே லிங்கத்தை வழிபட முடிவது;

கர்ப்பக்  கிரகத்துக்கு முன்னர் நந்திக்குப் பதில் ஆமை  இருப்பது;

பழைய சிவன் கோவிலானாலும் ராமர் லட்சுமணர் மூர்த்தங்கள் இருப்பது

சிறப்பு அம்சங்கள் .

பக்கதர்கள் காடு , மலை வழியே நடந்து சென்று வழிபடுவது முக்கிய யாத்திரை அம்சம்.

போர்ச்சுகீசியரை வென்று மராட்டியர் எடுத்து வந்த பெரிய மணியும் இந்தக் கோவிலை அலங்கரிக்கிறது.

மஹா சிவராத்திரி இங்கு மிகப்பெரிய பண்டிகை

xxx

11. புதர் காட் பைரவர் கோவில்

கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பைரவர் கோவில் பழமையான பைரவர் கோவில்.. மாசி மாத கிருஷ்ண பட்ச பிரதமை முதல் தசமி வரை பெரிய விழா நடைபெறுகிறது. இங்கு மேலும் சில கோவில்கள் இருக்கின்றன. இங்குள்ள கோட்டை காரணமாக சமீப காலத்தில் மலை  ஏறுவோரின் சுற்றுலாத் தலமாக மாறிவிட்டது. சிவாஜி மஹாராஜ் இந்தக் கோட்டை யைக் கைப்பற்றி அதை மேலும் வலுப்படுத்தினார்

12.சாந்துர் கண்டோபா கோவில்

கண்டோபா என்பவர் சிவனின் ஒரு அம்சமாக கருதப்படும் கிராமப்புற தெய்வம். மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஏராளமானோருக்கு குல தெய்வம். தமிழ் நாட்டின் முனியாண்டி, ஐயனார் போல ஒரு கடவுள். கத்தி ஏந்திய கோலத்தில் காட்சி தருவார். சாந்தூர் கண்டோபா கோவிலில் பெளஸ (தை ) மாத பெளர்ணமியில் பெரிய விழா நடைபெறுகிறது .

xxxx

13.சாப்பால் ராம் மந்திர்

இது வீர சிவாஜியின் குருவான சமர்த்த ராமதாஸ் சுவாமிகளின் கோவில். இங்கு சித்திரை சுக்லபட்ச நவமியான ராம நவமி அன்று பெரிய திரு விழா நடக்கிறது. சாதாராவிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் சாப்பால்  கிராமம் , மாண்ட்  நதிக்கரையில் அமைந்துள்ளது . சுமார் 400 ஆண்டுப் பழமையான இக் கோவில் சலவைக் கற்கலால் ஆனது. இதன் மற்றும் ஒரு சிறப்பு, சூரிய விக்ரகம் இருப்பதாகும். இதை ராமதாஸ் சுவாமிகள் அங்கபூர் குளத்திலிருந்து மீட்டு வந்து இங்கே நிறுவினார்.

xxxx

14.சதுர் சிருங்க (சதர்சிங் ) தேவி கோவில்

நாசிக் அருகிலுள்ள சப்த ஸ்ருங்கி தேவி கோவில் மிகவும் பிரசித்தமானது. இந்தக் கோவிலுக்கு ஆண்டுதோறும் சென்றுவந்த ஒரு வணிகர்,  முதிய வயதில் புனே நகரிலிருந்து செல்ல முடியாமல் தவித்தார். அப்போது தேவியே அவர் முன் (கனவில்) தோன்றி புனே அருகிலுள்ள நான்கு சிகரத்தில் (சதுர் சிருங்க) தான் உள்ளதாக தெரிவித்தார். அவரும் அங்கு சென்று பார்த்தபோது ஸ்வயம்பூ (தாமாகத் தோன்றும்) தேவி உருவம் அங்கே கிடைத்தது. அங்கு கோவில் எழுப்பிய பின்னர் நவராத்திரி காலத்தில் ஒன்பது நாட்களும் பெரிய விழா ஏற்பாடாகியது . பத்தாவது நாளான விஜய தசமியில் பெரிய வெள்ளி ரதம் உலா வரும். அதை ஒட்டி அந்த ஊரே கடை, கன்னிகள், கேளிக்கை, ராட்டினம் முதலியவற்றுடன் விழாக்கோலம் பூணும்.

xxx

15.செளல் தத்த மந்திர்

கடற்கரையை ஒட்டிய மலை முகட்டில் அமைந்த இந்த தாத்தாத்ரேயர் கோவில் இயற்கை வனப்பு சூழ அமைந்துள்ளது. சுமார் 1000 படிகளுக்கு மேல் ஏறி பிரம்மா , விஷ்ணு, சிவனின் அவதாரமான தத்தாத்ரேயர் உருவத்தைக் காணலாம்.அவருடைய பாதுகைகளையும்  காணலாம் மார்கழி மாத பெளர்ணமி தினத்தன்று பெரிய விழா நடைபெறுகிறது. ரெவ் தண்டா என்னும் ஊரிலிருந்து செல்லுவது எளிது. சற்று தொலைவில் அலிபாக் என்னும் பெரிய ஊர் உள்ளது சிவாஜி மஹராஜ் காலத்திலிருந்து புகழ்பெற்ற இடம் இது. இங்கிருந்து தொலைதூர இடங்களைக் காணமுடியும் . அண்மைக்காலத்தில் பிரம்மேந்திரா என்பவர் கோவிலைக் கட்டினார் . ஆனால் புனிதத் தலம் மிகப்பழமையானது.

–subham—

Tags- தத்தாத்ரேயர், கண்டோபா , மந்திர் , செளல் , சதுர்ச்ருங்க , பீம சங்கர, ஜோதிர்லிங்க 

கிழமைகளுக்கு பெயர் சூட்டியது யார் ? (Post no.11,932)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,932

Date uploaded in London – –  24 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

ஞாயிறு , திங்கள், செவ்வாய், புதன் , வியாழன், வெள்ளி , சனி என்ற ஏழு கிழமைகளும்  சின்னக் குழந்தைகளுக்கும் தெரியும்.

யார் இதைக் கண்டுபிடித்தார்கள் ?

இந்துக்களே இதைக் கண்டு பிடித்தார்கள்;

தமிழில் மட்டுமே அதற்கான பழைய ஆதாரங்கள் உள்ளன.

லண்டலிலிருந்து வெளியான மேகம் பத்திரிக்கையில் 1990ம் ஆண்டுகளில் நான் எழுதிவந்த கட்டுரைத் தொடர் –தமிழ் இலக்கியத்தில் அதிசயச் செய்திகள்.. அதில் ஒரு கட்டுரை-

நாள், கிழமையைக் கண்டுபிடித்தது யார் ? தமிழனா? எகிப்தியனா ? என்பதாகும் .

இந்தக் கட்டுரைத்தொடர் அடங்கிய புஸ்தகம் 2009ல் நாகப்பா பதிப்பகம் மூலமும் இபோது புஸ்தக .கோ .இன் வழியாகவும் வெளியிடப்பட்டுள்ளது .

இப்போது மேலும் பல புதிய செய்திகள் கிடைத்திருப்பதால் இந்தத் தலைப்பை மேலும் அலச ஆசை.

பள்ளிகளிலும், என்சைக்ளோபீடியா என்னும் கலைக்களஞ்சியங்களிலும் தவறான தகவல் தரப்படுகிறது

நாள் கிழமைகளைக் கண்டுபிடித்தது எகிப்தியானா ? இல்லை

பாபிலோனியர்களா ? இல்லை

கிரேக்கர்களா? இல்லை

ரோமானியர்களா ? இல்லை

ஆங்கிலோ சாக்ஸன் இனத்தினரா ? இல்லை

இந்துக்களா ? ஆமாம், ஆமாம், ஆமாம்

இந்துக்களே! எதை எடுத்தாலும் நாங்கள்தான் முதலில் கண்டுபிடித்தோம் என்று பெருமை பேசுகிறீர்களே ! ஒரு பல்கலைக்கழகக்  கூட்டத்தில் வந்து பேசினால், மாணவர்களே உங்கள் முகத்திரையைக் கிழித்து விடுவார்களே என்று எதிர்க்குரல் எழுப்புவோருக்கு இதோ பதில்கள்:

பொதுவாக எழுதப்படும் விஷயம் : எகிப்தியர்கள்தான் வாரத்துக்கு ஏழு நாள் என்பதை முதல் முதலில் குறிப்பிடுகிறார்கள். அதற்கு அடுத்தபடியாக பாபிலோனியர்களின் எழுத்துக்களில் இது உள்ளது. பின்னர் கிரேக்கர்கள் மூலம் இது இந்தியாவுக்கு வந்தது  என்பது புஸ்தங்களில் காணப்படும்  தவறான தகவல்.

இதை மறுத்து நன் எழுதிய 1990ம் ஆண்டுக் கட்டுரையில் எழுதிய இரண்டு விஷயங்கள் :

ஞாயிறு , திங்கள் , செவ்வாய், புதன் வியாழன்

வெள்ளி சனி பாம்பும் இரண்டும் உடனே

— கோளறு திருப்பதிகம், தேவாரம்

இதைப்  பாடிய திருஞான சம்பந்தர் வாழ்ந்தது மஹேந்திர பல்லவன் காலத்தில்- நின்ற சீர் நெடுமாறன் என்னும் பாண்டியன் காலத்தில்; அதாவது கிபி (பொது ஆண்டு) 600.

ஆனால் கிரேக்க , ரோமானிய, பாபிலோனிய, எகிப்திய நாகரீகக் குறிப்புகள் சம்பந்தரைவிடக் காலத்தால் முந்தியவை என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆயினும் ரிக்வேதத்திலேயே ஆண்டுக்கு 360+ 5 நாட்கள் போன்ற குறிப்புகள் காணக்கிடக்கின்றன ; வாரத்துக்கு 7 நாள் என்ற குறிப்பு இல்லை .

வியாழனையும் அதை அடுத்து வெள்ளியையும் இணைத்துப்பேசுவது இந்துமதத்தில் தேவ குரு , அசுரர் குரு என்ற கச்ச தேவயானிக் கதைகளிலும், திருப்பாவையிலும் காணப்படுகிறது .

xxxx

புதிய ஆதாரங்கள்

இப்போது நான் சொல்லும் புதிய ஆதாரங்களைக் கேளுங்கள்

ஞாயிறு என்னும் கிழமையில் வாரத்தினைத்  துவக்கியதும் அவைகளுக்கு கிரகத்தின் பெயர்களை வைத்ததும் இந்துக்களே.

அது எப்படி ?

திருஞான சம்பந்தர் சொன்ன அதே வரிசையை நாம் இன்று பயன்படுத்துகிறோம்.

அதற்கு முன்னர் எழுந்த தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமை என்ற குறிப்பு வருகிறது. அதன் காலம் கி பி 132 என்பது கடல் சூழ் இலங்ககைக் கயவாகு வேந்தனும் என்ற குறிப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது ரோமானியர் காலம்.

கிரேக்க நாட்டிலிருந்து இறக்குமதியான சரக்கை, இளங்கோவோ சம்ப ந்த்ரோ  உடனே பாட்டில் பயன்படுத்தினர் என்பது நகைப்பை ஏற்படுத்தும். ஏனெனில் மக்களுக்குப் புரியாத, தெரியாத விஷயங்களை அவர்கள் பேசமாட்டார்கள்.

மேலும் ஆர்ய தேவ என்ற புத்தமத அறிஞர் எழுதிய நூல்களிலும் கிழமைகள் வருகின்றன .

xxxxx

கிழமைகளின் பெயர்கள்

இதையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு ஞாயிறு முதல் சனி வரையுள்ள பெயர்களைக் காண்போம்.

இந்துக்கள் மட்டுமே இன்றுவரை கிழமைகளுக்கு கிரகங்களின் பெயர்களை பயன்படுத்துகின்றனர். ஏனெனில் ஆங்கிலத்திலுள்ள ஏழு பெயர்களில் நான்கு கிரகங்கள் இல்லை. ட்யூஸ் டே Tuesday , வெட்னஸ் டே Wednesday, Thursday தர்ஸ் டே, Friday ப்ரை டே என்ற நான்கு கிழமைகளில் உள்ள டிர் , வோதன் , தோர் , பிறைக் என்ப நார்டிக் இன மக்களின் கடவுளர் ; கிரகங்கள் இல்லை. இவைகளை கிழமைகளின் பெயர்களில் நுழைத்தது ஆங்கிலோ சாக்ஸன் Anglo- Saxon  இனத்தினர். இதை ரோமானிய (லத்தீன் மொழி) இலக்கியங்களில் காண்பது இரண்டாம் நூற்றாண்டில்தான்! ஆனால் நம் சிலப்பதிகாரத்திலும், ஒரு கல்வெட்டிலும் அதற்கு முன்னரே கிழமைகள் வந்துவிடுகின்றன .

மேலும் அவர்கள், கிரேக்க நாட்டிலிருந்து இதை பெற்றதாகவும், அ வர்களுக்கு  பாபிலோனியர்கள் சொன்னதாகவும் அரை வேக்காட்டுப் பேர்வழிகள் ஆங்கிலத்தில் பிதற்றி வைத்துள்ளார். அதுவும் தவறு.

கிரேக்கர்களின் முதல் நாள் சனிக்கிழமை. அடுத்துவருவது வியாழன் , பின்னர் புதன் , சூரியன் …..

ஆக அவர்கள் கிரகங்களின் பெயர்களை இட்டாலும் வரிசை பிறண்டுள்ளதைக் காண்கிறோம் . அது மட்டுமல்ல மேலை உலகம் முழுதும் இன்று வரை இந்தக் குழப்பம் நீடிக்கிறது.

நங்கள் எல்லோரும் லண்டலில் பேசிக்கொள்ளும்போது வீக் எண்டில் Week end சந்திப்போம் என்போம் . அது என்ன வீக் எண்ட்?

வீக் எண்ட் WEEK END  (வார இறுதி நாட்கள் ) என்றால் சனி ஞாயிறு ! ஆனால் மேலை நாட்டுக் காலண்டர்களில் சண்டே முதல் துவங்குவர் அல்லது பழைய கால கிரேக்க நாட்டில் சனிக்கிழமை முதல் நாள்.

நாம் ஒருவர்தான் ஞாயிறு துவங்கி சனியில் முடிக்கிறோம். நாம் ஒருவர்தான் வானில் உலவும் கிரகங்கள் பெயர்களை வைத்து இருக்கிறோம். ஆங்கிலப் பெயர்களில் நான்கு, கிரகங்கள் இல்லை .

(முன்னர் எழுதிய மற்றும் ஒரு விஷயத்தையும் நினைவு படுத்துகிறேன். கிரகங்கள் என்றால் பிளாணட்ஸ் Planets என்று அகராதிகள் கூறும். அப்படியானால்  நாம் சொல்லும் சூரியனும் சந்திரனும் கிரகங்கள் இல்லையே, ராகுவும் கேதுவும் கிரகங்கள் இல்லையே என்று சிலர் கேள்வி எழுப்பலாம் ; கிரஹ என்றால் ஈர்ப்பு விசை= பிடிமானம்- கவ் வுதல் ; ஐசக் நியூயூட்டனுக்கும் முன்னரே நாம் ஈர்ப்பு விசையைக் கண்டுபிடித்ததால் வானில் உலவும் சூரியன் சந்திரன் முதலிய அனைத்துக்கும் நவ கிரஹங்கள் என்று பெயர் சூட்டினோம்; இதனால் தான் GRIP. GRAB கிரிப் , கிராப் , கிராவிடி Gravity என்ற ஆங்கிலச் சொற்களும் பாணிக்கிரஹணம் சந்திர, சூர்ய கிரஹணம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொற்களும் புழக்கத்தில் உள்ளன ) 

மீண்டும் கிழமைகளுக்கு வருவோம் .

ரோமானிய (லத்தீன்) கால காலத்திலிருந்து   வந்தது பிரெஞ்சு மொழி. அங்கு இன்றும் கூட ஆறு கிரகங்களின் பெயர்களைச் சொல்லிவிட்டு ஞாயிற்றுக் கிழமைக்கு திமான்ஸ்  Dimanche என்பர். அது சூரியன் தினம் இல்லையாம். கடவுள் தினமாம். அதாவது அவர் ஓய்வெடுக்கிறார் . நாமும் ஓய்வெடுத்து ‘சர்ச்’ Church சுக்குப் போவோம். 

சொல்லப்போனால் மேலை உலகம் முழுதும் ஒரே குழப்பம். ஆயினும் இவர்கள் கிரேக்க, ரோமானிய ஆங்கிலோ சக்ஸன்  உருவாக்கிய கிழமைகளை இன்று நாம் பயன்படுத்துகிறோம் என்று பெருமை பேசுவார்கள்.

கடைசியாக ஒரு கேள்வி எழும் / இவ்வளவு சொல்கிறீர்களே; ஒரு தேவா ரக் குறிப்பு, சிலப்பதிகாரக் குறிப்பு, கல்வெட்டுக் குறிப்பு, ஆர்யவேதக் குறிப்பு தவி வேறு எங்கும் கிழமைகள் ஏன் குறிப்பிடப்படவில்லை ?

அதற்கும் இதோ பதில் 

கடிகாரங்களும் மணிக்கூண்டுகளும் இல்லாத கிராமவாசிகள் சந்திரனை வைத்தே நேரம் அறிவர். நாளையும் அறிவர். ஒரு மாதத்தை அமாவாசை முதல் 14 நாட்கள் பெளர்ணமி முதல் 14 நாட்கள் என்று பிரித்து எளிதில் நாளையும் (திதி), நேரத்தையும் அறிந்தனர். இதனால்தான் இன்றும் இந்துக்களின் பெரும்பாலான பண்டிகைகள் திதிக்கணக்கில் பெயரிடப்பட்டுள்ளன . ராம நவமி, ஜன்மாஷ்டமி , நாக பஞ்சமி , நரக சதுர்த்தசி (தீபாவளி), ஏகாதசி உபவாசம் என்று. 

இந்துக்களின் 12 பெளர்ணமி நாட்களிலும் நாடு முழுதும் திருவிழாக்கள் நடக்கும். காலண்டர் இல்லாமல் இவைகளை மக்கள் அறிவர். ஆகையால் நமக்கு நாள், கிழமை தெரிந்தும், திதிகளையே வழக்கத்தில் பின்பற்றினோம்.

முடிவுரை : 7 நாட்களுக்கு கிரகங்களின் பெயர்களை சூட்டியது இந்துக்களேஅதைப் பின்பற்றுவதும் இந்துக்களே . மற்ற எல்லாப் பண்பாடுகளிலும் இது முழு அளவில் இல்லை. அப்படி இருந்தாலும் நமக்குப் பின்வந்தவர்களாக இருப்பார்கள் .

நமக்கு அருமையான  ஆதாரம் நல்கிய இளங்கோ அடிகளுக்கும் , சம்பந்தருக்கும் நாம் என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளோம்.

–SUBHAM—

TAGS -கிழமை, பெயர்கள், கோளறு திருப்பதிகம், சிலப்பதிகாரம், ஆடி வெள்ளி, ஞாயிறு திங்கள் , வாரத்துக்கு 7 நாட்கள்

நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்!பகுதி 6(Post No.11931)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,931

Date uploaded in London –   24 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

இரண்டாம் உலகப் போர் யுத்தத் துளிகள் – ரத்தத் துளிகள்

புதிய நெடுந்தொடர்.     

அத்தியாயம் 5

நாஜிக்களின் சித்திரவதையால் பிறந்த புதிய மின்னல் வேகக் கணிதம்!

ச.நாகராஜன்

பகுதி 6 

டிராக்டன்பெர்க் லெய்ப்ஜிக் நகருக்கு அனுப்பப்பட்டார். அந்த நகரோ அப்போது பெரும் வெடிகுண்டு தாக்குதலுக்கு இலக்காகி இருந்தது. நகர் முழுவதும் ஒரே குழப்பம். குடிக்க நீர் இல்லை. உண்ண உணவில்லை. படுக்க இடமில்லை. ஆகவே கைதிகள் அனைவரும் நின்று கொண்டே இருந்தனர். இறந்தவர்களைப் புதைக்கக் குழி வெட்ட வேண்டுமே, குழி வெட்டக் கூட சக்தி கைதிகளிடம் இல்லை. அவர்களைப் புதைக்குமாறு கூற வார்டர்களுக்குத் தென்பு இல்லை.

இந்த நிலையில் தான் டிராக்டன்பெர்க் ஒரு நாள் நள்ளிரவில் இரட்டை  வயர் வேலி ஒன்றின் அடியில் ஊர்ந்தவாறே சிறை முகாமிலிருந்து வெளியேறித் தப்பினார். அவருக்காகவே அவரது மனைவி ஆலிஸ் காத்திருந்தார். அவருடன் இணைந்து கொண்டார்.  பாஸ்போர்ட், அடையாளப் பேப்பர் எதுவுமில்லாமல் இருந்ததால் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவரும் இல்லை!

இந்த ஒரு காரணத்தை வைத்தே அவர் எங்கும் யாராலும் கைது செய்யப்படலாம். அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.  ட்ரியெஸ்ட் என்ற இடத்தில் இருந்த முகாமுக்கு அவர் அனுப்பப்பட்டார்.  அங்கே கல் உடைக்கும் வேலை அவருக்குத் தரப்பட்டது.  ஆனால் அந்த இடத்தில் சிறை அதிகாரிகள் முரட்டுத்தனமாக இல்லாமல்  மென்மையாக இருந்தனர். சீதோஷ்ணமும் சகிக்கக் கூடியதாகவே இருந்தது.

சிறை அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து ஆலிஸ் தன் கணவருக்குச் செய்திகளை அனுப்பலானார். தப்புவதற்கு ஒரு திட்டமும் வகுக்கப்பட்டது.  1945ஆம் ஆண்டில்  கண்காணிப்பு கோபுரங்களையும் மீறி ஒரு நாள் நள்ளிரவில் அவர் முள் கம்பியினால் அமைக்கப்பட்ட வேலியின் மீது ஏறி அடுத்த பக்கம் குதித்தார்.ஆனால் காவலாளிகள் அவர் தப்புவதை அறிந்து துப்பாக்கியால் சுட்டனர்.  ஆனால் டிராக்டன்பெர்க் ஊர்ந்தவாறே நீண்ட புல்வெளியைக் கடந்து தன் மனைவியைக் குறித்த இடத்தில் சந்தித்தார். இருவரும் ஸ்விட்ஸர்லாந்து வந்து சேர்ந்தனர்.

அங்கு அகதிகளுக்கான முகாமில் இருவரும் தஞ்சம் அடைந்தனார். ஒல்லியான உடல். நரைத்த தலை. மனம் மட்டும் தளராத நிலை.  நீல நிறக் கண்களில் இனி யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை என்ற தெளிவுடன் அவர் புது வாழ்க்கையைத் துவங்கினார்.

கணக்கை வெறுத்து வந்த குழந்தைகளிடம் அவர் தன் புதுமுறைக் கணிதத்தைக் கற்பிக்க ஆரம்பித்தார். என்ன ஆச்சரியம்! அந்தக் குழந்தைகள்  கணிதத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு மின்னல் வேகத்தில் கணிதத்தைச் செய்து முதலிடத்தைப் பெற ஆரம்பித்தன. செய்தி வெகு வேகமாகப் பரவியது. அவரது முறையில் மக்கள் அதிக ஆர்வம் காண்பிக்க ஆரம்பிக்கவே 1950ஆம் ஆண்டு ஒரு புது கல்வி நிறுவனத்தையே அவர் ஜூரிச் நகரில் தொடங்கினார்.

‘டிராக்டன்பெர்க் முறை’ என்றால் என்ன? இந்த முறையில் பெருக்குவதற்கு வாய்பாடுகள் கிடையாது.  எண்ணுவதற்கும் மட்டும் தெரிந்தால் போதும்.  சில முக்கிய திறவுகோல் விதிகளை (KEYS) மட்டும் மனப்பாடல் செய்தால் போதும். மின்னல் வேகத்தில் துல்லியமாகக் கணக்குகளைப் போட்டு முடித்து விடலாம்.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் எண்கணிதம் தான் உலகிலேயே மிகவும் மோசமாகக் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்படுகிறது என்பது தெரிய வருகிறது.

இந்தக் குறையை புதிய முறை கணிதம் நீக்கி விடுகிறது.

டிராக்டன்பெர்க் முறையில் உள்ள எளிய குறுக்கு வழிகளை கடைப்பிடித்து ஜூரிச் நகரில் மருத்துவம் மற்றும் கட்டிடக்  கலை மாணவர்கள் மிக சுலபமாக கணிதத்தில் அதிக மார்க்குகளை எடுத்தனர்.  அந்த நகரில் டிராக்டன்பெர்க் பள்ளியை ‘மேதைகளின் பள்ளி’ என்று பொது ஜனங்கள் குறிப்பிடுவது வழக்கமானது.

கால்குலேட்டர்களுடன் இருப்பவர் ஒரு பக்கம், டிராக்டன்பெர்க் முறையில் கற்றவர்கள் மறு பக்கம் என்று இருக்கும் போது, கால்குலேட்டரைத் தொடுவதற்கு முன்பேயே  பளீரென பதில் மின்னல் வேகத்தில் குழந்தைகளிடமிருந்து பறக்கும்!

ஒரு உதாரணத்திற்கு மின்னல் வேகக் கணித முறையில் இரண்டு கணக்குகளைப் போட்டுப் பார்க்கலாம்.

48ஐ 5 ஆல் பெருக்க வேண்டுமா? 48இல் பாது எவ்வளவு? 24. அதைப் பத்தால் பெருக்கினால் வருவது 240.  இது தான் விடை.

5இல் முடியும் இரு எண்களைப் பெருக்க வேண்டுமா? 25ஐ 25ஆல் பெருக்க வேண்டும். இப்படி இரு எண்களிலும் 5 முடிந்தால் விடையின் கடைசிப் பகுதி 25.  பின்னர் முதல் இலக்கமான 2ஐ அதற்கு அடுத்த எண்ணான மூன்றால் பெருக்கி வரும் விடையான 6ஐ முதலில் போட்டுக் கொள்ள வேண்டும். அதாவது விடை 625.

35ஐ 35ஆல் பெருக்கினால் வரும் விடை 1225!

45ஐ 45ஆல் பெருக்கினால் வரும் விடை 2025!

இந்த மின்னல் வேகக் கணித முறை பற்றிய விதிமுறைகளின் ஆரம்பப் பாடத்தை http://www.mediafire.com/download/vw95bohd354wz65/Trachternberg+Speed+Mathematics+-+Gr8AmbitionZ/pdf

மற்றும்

https://archive.org/details/TheTrachtenbergSpeedSystemOfBasicMathematics_201803

உள்ளிட்ட பல இணைய தளங்கலில் காணலாம்.

டிராக்டன்பெர்க் கணிதம் என்று டைப் அடித்தாலும் போதும் விவரங்களைப் பெறலாம்.

டிராக்டன்பர்க் வாழ்க்கைச் சரித்திரமும் புத்தகமாக வந்துள்ளது. மிகச் சுவையான புத்தகம்!

கொடுமையான இரண்டாம் உலகப் போர் ஒரு நன்மையையும் தந்துள்ளது என்றால் அது அதிசயம் தானே!

       ***                தொடரும்

108 Famous Hindu Shrines in Maharashtra-2 (Post No.11,930)

Picture of Bhuleshwar Temple

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,930

Date uploaded in London – –  23 APRIL 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Part 2

5.Ambarnath Shiva Temple

It is a very old temple of Ambaresvar Mahadeva with an inscription dated Saka year 982 (CE.1060) it is on the banks of Wadvan river. Big festival is held during Maha Sivaratri. It is at fifty kilometres from Mumbai. The strange thing about the temple is the Garba griha (sanctum sanctorum) is in the underground, 20  steps down from the surface and the roof is incomplete. Ambara in Sanskrit means sky. May be they have left it incomplete deliberately, so that the Linga is facing the sky. Ambaram is like ambalam in Tamil, which also means Open space (no roof). Chidambaram, most famous Siva temple in Tamil Nadu is also called Ambalam and its Sanskrit equivalent is Chid+ Ambaram (Sitramabalam in Tamil).

Amberanath Temple picture

6.Awas (Avaasa) Snake Temple

Now it is known as Nogoba temple. Snake festival was held at this noted snake shrine, with dancing, on Kartika Sukla Chaturdasi. The devotes hold canes tipped with Naga / snake images. (Probably after the ban on snakes in Hindu festivals by High court, this is dropped). But the Yatra/festival continues.

Nagobachi Yatra

Shri Nageshwar Devasthan yatra is held  on Kartik Chaturdashi Vaikunth Chaturdashi which as per Hindu calendar  is Fourteenth Day of Holy month of Kartik (November) . It marks the start of Yatra season of Alibaug Taluka. It is the first Yatra of Alibag Taluka. It is popular amongst farming  community of Alibaug .Devotees come to Awas village for Darshan of Nagoba and other revered saints in Temple. Metal Bells and miniature idol Nag Devata (Snake god) is offered  to Temple.

Devotees take Vibhuti or Holy ash to apply on forehead as a mark of honour and gratitude to Shri Nageshwar. Stalls selling local sweets and snacks are setup during fair. Devotees come in Bullock carts to visit Shri Nageshwar at Awas. They take back Dudhi halwa and other sweets as Prasad.  

Known for legends to its origins and its hanging clusters of countless bells, Nagoba Mandir is a significant religious centre, near the Saswane Beach.

7.Bahe Sri Rama Linga Temple

Both Saivites and Vaishnavism worship here. The story is that Rama came here during his wanderings and worshipped the Linga. Since then his name is associated with the place Festivals are help on Pausha new moon day and on Chaitra Sukla Navami (Rama Navami)

Antoba Naik Bhide built the chief temple of Ramlinga about 2 centuries ago on a 2 ft high plinth. A 30 ft high, mortared brick pinnacle caps the entire 20 sq ft temple chamber.

8.Bhuleshwar Siva Temple

It is at a distance of 45 kilometres from Pune and ten kilometres from Yavat. This temple is very ancient, and it has a history for at least 1200 years. Since beautiful carved sculptures are in the temple it has been declared a protected monument. The folk lore about this temple is that at least one or two sweets disappear mysteriously when offered to the Lord. Milind Gunaji, actor/ travel writer, has also written about his experience in the temple in his book MYSTICAL MAGICAL MAHARSHTRA. It is a hill top temple built by Krishna Deva Yara. Pancha Pandavas was also associated with the building of this temple.

Strange this about this temple is that Ganesh is carved in his feminine form and the devotees call her Ganeshwari or Lambodari.

9. Banpuri Siva Temple.

This is a Siva temple

Banpuri  near Patan in the Vang Valley, ten miles south-south-east of Patan, is a village on Dhebevadi Salve road. To the south of the village on the hill side is a temple of Naikba, a form of Shiva. The linga has a silver mask which is carried in procession on the two fair days, the fifth of Chaitra (March-April) and the tenth of Ashvin (September-October). The legend is that a cultivator named Abasaheb Yeshvantarav Janugade devotedly worshipped God Shiv on this spot until he grew old and infirm. God Shiv ordered him to go home and promised to follow him if he did not look back. The old man obeyed till on his way hearing a terrible noise he looked back and saw an enormous boulder fall from the hill and smashed to pieces. That night he had a dream that the boulder was Shiva who should be worshipped on the spot and styled Naikba.

In Banpuri, Maharashtra, the Naikba Yatra is performed. During the month of Chaitra (April), the Shigaon Naikba Yatra is held. Shakti, the Mother Goddess, is honoured at the Naikba Temple. Maharashtra is where Naikba Devi, a manifestation of Goddess Shakti, is most revered.

Rituals related to Goddess Durga are performed during the Yatra.

To be continued……………………….

Tags- Hindu shrines, Maharashtra, Banpuri, Bhuleshwar, Nagoba, Naikba