தமிழ் நாட்டைப்போலவே மஹாராஷ்டிர மாநிலத்திலும் எங்கு சென்றாலும் கோவிலும், புனிதக் குளங்களும் மரங்களும் இருக்கும். நிவ்ருத்தி, ஞானதேவ், சோபான முக்திபாய், ஏகநாத் நாமதேவ், துக்காராம், சமர்த்த ராமதாஸ் ஆகிய புனிதர்கள் நடமாடிய பூமி. எங்கு சென்றாலும் இவர்களுடன் தொடர்புடைய இடங்களோ, பொருட்களோ இருக்கும். அவைகளைத் தரிசிக்க ஆயிரக்கணக்கானோர் காத்திருப்பார்கள். த்ரயம்பகேஸ்வரர், ஓம்காரேஸ்வரர், பீமசங்கரர் போன்ற சிவத் தலங்களும் , பிள்ளையாரைப் போற்றும் அஷ்ட விநாயகர் கோவில்களும், மகாலெட்சுமி கோவில்களும் நிறைந்த பூமி. மும்பாய் என்ற பம்பாய் நகரமே தேவியின் பெயர் உடைத்து. அண்மைக்காலத்தில் புகழ்பெற்ற பம்பாய் நகர மகாலெட்சுமி கோவில் , சித்தி விநாயகர் கோவில்,ஷீரடி என்னும் ஊரிலுள்ள சாய்பாபா கோவில்களும் பக்தர்களைக் கவர்ந்து இழுக்கும். இவ்வளவுக்கும் காரணம் அவங்கசீப்பின் கொட்டத்தை அடக்கி ஹிந்து சாம்ராஜ்யத்தைத் தாபித்த வீர சிவாஜியாகும் .
ஞானேஸ்வர் 700 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் வாழ்ந்தார். திருஞான சம்பந்தரைப் போலவே இளம் வயதிலேயே பல அற்புதங்களை செய்தார். அவரைப் போலவே இளம் வயதிலேயே முக்தியும் அடைந்தார். அவர் முக்தி அடைந்த ஆலந்தி என்னும் ஊர் புனே நகருக்கு அருகில் உள்ளது. அவர் எழுதிய ஞானேஸ்வரிஎன்ற நூல் மிகவும் பிரசித்தமான மராட்டிய பக்தி நூலாகும். மிகப்பெரிய இந்துமத தத்துவங்களை எளிய மொழியில் மராட்டியர்களுக்கு உபதேசம் செய்தார். அவருடன் உடன்பிறந்தவர்கள்தான் நிவிருத்தி , சோபான , முக்தாபாய் என்னும் மூவர் ஆவர் .
ஆலந்தியில் உள்ள ஞானேஸ்வர் சமாதி அதற்கு முன்னரே அங்கிருந்த சித்தேஸ்வரர் கோவிலில் இருக்கிறது. சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த சமாதி மீதும் கோவில் எழுப்பப்பட்டது. மராட்டிய மஹான்கள் அனைவரும் பண்டரீபுரத்திலுள்ள விட்டல் , பண்டரிநாதன், விட்டோபா என்று அழைக்கப்படும் விஷ்ணுவின் பக்தர்கள் ஆவர் . செங்கல் மீது நின்று காட்சி தந்ததால் விட்டல் என்று அழைத்தனர் (விட்+ தல = செங்கலையே தலமாகக் கொண்டவன் )
இந்த ஆலந்தியில் ஒரு அபூர்வ மரம் இருக்கிறது. பொதுவாக இந்தியாவில் அதிகமாகக் காணப்படாத விருக்ஷம் / மரம் இது. அதை அஜான விருட்சம் என்று அழைப்பர். புத்தருக்கு போதி /அரச மரம் எப்படியோ, நம்மாழ்வாருக்கு புளிய மரம் எப்படியோ அப்படி ஞானேஸ்வரருக்கு ஞானம் தந்த மரம் இது.
ஆலந்தியில் அவர் சமாதி அடைந்த மரத்தின் தாவரவியல் பெயர் Ehretia laevis (Boraginaceae or borage family.) இதைத் தமிழில் குரு விச்சை மரம் என்று அழைப்பர். கடந்த சில நூற்றாண்டுகளாக ஆலந்தியில் ஒரு விழா கொண்டாடப்படுகிறது. அங்குள்ள ஞானேஸ்வரரின் பாதுகைகளை பண்டரீபுரம் பாண்டுரங்கன் கோவிலுக்குப் பல்லக்கில் கொண்டு செல்லுவார்கள். கேரளத்தில் ஐயப்பனின் ஆபரணங்களைக் கொண்டு செல்லுவது போல இது ஒரு புனித ஊர்வலம். இது 21 நாட்களுக்கு நடைபெறும். மதுரை சித்திரைத் திருவிழாவின் போது 13 மைல் தொலைவிலுள்ள அழகர் கோவிலில் இருந்து எப்படி கள்ளழகர் (விஷ்ணு, பெருமாள்) மண்டகப்படிகளில் தங்கி வருவாரோ அது போல ஞானேஸ்வரரின் பாதுகைகளைச் சுமந்து வரும் பல்லக்கும் மண்டகப்படி தோறும் நின்று வரும் . அந்த 21 நாட்களில் பல்லக்கு தங்கும் இடங்களில் எல்லாம் அஜான மரத்தின் நாற்றுகள் நடப்படுகின்றன. இதற்கு ஞானத்தை வழங்கும் சக்தி உண்டு என்ற நம்பிக்கையால் தாவரவியல் நிபுணர்களும் பக்தர்களும் சேர்ந்து இதற்கு ஏற்பாடு செய்துள்ளனர் .
இந்த மரம் ஞானேஸ்வரர் வைத்திருந்த ஒரு குச்சியிலிருந்து வந்ததாக பக்தர்கள் நம்புகின்றனர் . இது போன்ற நம்பிக்கைகள் அபூர்வ மரங்களைப் பாதுகாக்கவும் பெருகச் செய்யவும் உதவுகின்றன.
அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தை வழங்கும் அஜான மரத்தை நாமும் வணங்குவோம் .
Native to: China, Bhutan, India, Pakistan, Laos, Myanmar, Vietnam
இது சீனா, பூடான், இந்தியா, பாகிஸ்தான் , லாவோஸ், பர்மா வியட்நாம் நாடுகளில் வளருகிறது
கண்டுசக்க என்று ஆயுர்வேத மருத்துவர் அழைக்கும் இந்த மரத்தின் பாகங்கள் எலும்பு முறிவுச் சிகிச்சையில் பயன்படுகிறது. தலைவலி, சொறி, சிரங்குகள், புண்களைக் குணப்படுத்தவும் இதை மராட்டியர்கள் பயன்படுத்துகின்றனர் . இது ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவுக்கு வெளியே, அதிகம் வளருகிறது.
The application of Khanduchakka (Ehertia Laevis) Kalka (paste) in the case of Delayed-union of metatarsal fracture is an innovative idea. It is a case report having the fracture of 3rd and 4th metatarsal of right foot. Ehertia Laevis is folklore plant locally known as Khanduchakka used in fracture and wound healing in various forms by the tribal people.(Journal of Indian System of Medicine)
–subham–
Tags-ஆலந்தி, அற்புத தல விருட்சம், ஞானேஸ்வர், ஞானேஸ்வரி, கண்டுசக்க, குருவிச்சை, பட்டைவிரசு, மரம்
பிரபஞ்சத்தில் உள்ள அதிசய பூமியில் அதிசய நாடு பாரதம்! அதில் கலியுகத்தில் செகுலர் இந்தியாவில் சில அபூர்வ பிறவிகள் உள்ளனர்.
இவர்களுக்குப் ‘பாடம் சொல்லித் தர’ அதி மேதாவிகள் போல பிபிசி போன்ற உலகப் “புகழ் பெற்ற” நிறுவனங்களும் ஏராளமான அறிவு ஜீவிகளும் உள்ளனர்.
இவர்கள் இந்திய நாட்டை எவ்வளவு இழிவாகப் பேச முடியுமோ அவ்வளவு இழிவாக உலக அரங்கில் எடுத்துரைக்க வழி வகுப்பர்.
சரி, விஷயத்திற்கு வருவோம்.
டாக்டர் ஹரிவம்ச மித்ரா என்பவர் சுப்ரீம் கோர்ட்டின் அட்வகேட். இவர் 5-6-2022இல் சில விஷயங்களை நம் முன் வைத்தார்.
அவற்றின் சாரமே இந்தக் கட்டுரைக்கான விஷயம்.
உங்களுக்குத் தெரியுமா? என அவர் ஆரம்பித்து சில சுவையான செய்திகளைத் தந்திருக்கிறார்!
1) ஐரோப்பாவில் உள்ள 32 நாடுகள் கிறிஸ்தவ மதத்தை அதிகாரபூர்வமாக வெவ்வேறு தர நிலைப்பாடுகளில் அங்கீகரித்துள்ளன. ஒன்று அரசு சார்ந்த மதமாக அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது அல்லது அரசியல் சாஸன சட்டத்தில் உறுதி செய்யப்பட்டுள்ள சில விசேஷ சலுகைகள் அதற்குத் தரப்பட்டுள்ளது. அதாவது கிறிஸ்தவர்களுக்குத் தரப்பட்டுள்ளது. இது வடிகனின் கன்கார்டட் மூலமாக – through Vatican Concordat – தரப்பட்டுள்ள சலுகைகள்.
2)
அதென்ன வடிகன் கன்கார்டட்?
வடிகன் கன்கார்டட் என்றால் அந்தந்த தேச அரசுகள் வடிகனுடன் சர்ச்சையும் அதன் நலன்களையும் பாதுகாக்க செய்து கொண்ட உடன்படிக்கைகள்.
2) இங்கிலாந்து அரசாங்க மதமாக ஒரு மதத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.
அது தான் சர்ச் ஆஃப் இங்கிலாந்து – Church of England.
யேசு கிறிஸ்து ஒருவரே கடவுள் என்று அது தெள்ளத் தெளிவாகக் கூறுகிறது.
மேலை நாட்டு பத்திரிகைகளோ, செக்குலரிஸ்டுகளோ, பிபிசியோ இதர உலகப் பத்திரிகைகளோ அறிவு ஜீவிகளோ ஏன் இங்கிலாந்து இன்னும் ஒரு கிறிஸ்தவ அரசாக இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இருக்கிறது, இருக்க வேண்டும் என்று கேள்வி கேட்டதில்லை. ஆனால் இந்த அனைத்து ஆர்வலர்களும் இந்தியாவின் மதம் சம்பந்தமான விஷயங்களில் அன்றாடம் கவலைப்படுபவர்கள்.
ஒரு சிறு விஷயத்திற்குக் கூட அது இந்து மதத்தைக் கேவலப்படுத்துவதாக இருந்தால் பேச மாட்டார்கள், இந்து மதத்தைத் தவிர கிறிஸ்தவம், இஸ்லாம் என்றால் அதற்கு பாதிப்பு வரலாம் என அவர்கள் நினைத்ததெற்கெல்லாம் ஓடி வந்து ஓவென்று கத்திக் கூப்பாடு போடுவார்கள்.
3) இங்கிலாந்து பாராளுமன்றத்தில் 26 சீட்டுகள் பிஷப்ஸ் ஆஃப் சர்ச் ஆஃப் இங்கிலாந்திற்கென ரிஸர்வாக ஒதுக்கப்பட்டவை. 2015 முடிய சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு பெண் பிஷப் கூட அதற்கெனத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. உலகெங்கும் பெண்ணுரிமைக்கு வக்காலத்து வாங்க ஓடி வரும் ஒருவர் கூட இது பற்றி வாயைத் திறந்து முணுமுணுத்தது கூட இல்லை!! ஆனால் யுனைடெட் கிங்டத்தின் ஜனநாயகம் உலகிற்கே ஒரு எடுத்துக்காட்டு என்று இந்தக் கூட்டம் தினசரி முழங்கி வருவது மட்டும் கண்கூடு.
இதைத் தட்டிக் கேட்டால் அவ்வளவு தான்!!!
இந்த 26 சீட்டுகளும் வெள்ளை கிறிஸ்தவ ஆண்களுக்கே ஒதுக்கப்பட்ட சீட்டுகள் – நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக.
4) சும்மா ஒரு உதாரணத்திற்காக, உதாரணத்திற்காகத் தான், இல்லையென்றால் அறிவு ஜீவிகள் ஓடி வந்து விடுவார்கள் – சொல்ல விழைவோம் – ஏன் இந்தியாவில் மதத் தலைவர்களுக்கு நமது பாராளுமன்றத்தில் இருக்கைகள் ரிஸர்வ் அடிப்படையில் தரப்படக் கூடாது?
நமது பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகமோ அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகவாதிகளோ இந்து மதத்தைப் போற்றினால அது ஜனநாயகத்திலிருந்து நழுவும் போக்கு என்று எச்சரிக்கை விடும் அறிவு ஜீவிகள், ஏன் 26 பிஷப்புகள் ரிஸர்வ் அடிப்படையில் இங்கிலாந்து பாராளுமென்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை?
அந்த பாராளுமன்ற ஜனநாயகம் உலகிற்கே எடுத்துக்காட்டு. ஆனால் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது மாநில முதன் மந்திரிகள் சிலரோ இந்து மத வழிபாட்டை மேற்கொண்டு அதைப் புகழ்ந்தாலோ அது ஜனநாயகத்திற்கு ஆபத்தான செயலாகும் என்ற அறிவிப்பு!
ஜனநாயகத்தின் முழுச் சுமையும் இந்தியர்களில் ஹிந்துக்களுக்கு மட்டுமே தான் உலகில் உண்டு.
என்ன ஐயா விசித்திரம் இது??!!!
கட்டுரை தொடரும்
***
நன்றி, ஆதாரம் கல்கத்தா வார இதழ் ட்ரூத் தொகுதி 90 இத 49 தேதி : 7-4-2023
Earlier in 2016, I wrote about the stories behind famous and notorious Tamarind Trees. I told you about the trees used by Tansen, Tamil Vaishnavite saint Nammalvar, Tirumangai Alvar and the ghost driven by Anantharama Dikshitar’s family from a garden tamarind tree. Now let us learn about two more tamarind trees.
Sirala in Maharashtra is the site of a gigantic tamarind tree, the trunk of which is scored with lines and cracks. By the side of the tree , a temple has been built to Gorakhnath, a manifestation of Shiva.
Once Gorakhnath had stuck a stick in the ground from which the tree sprung. It is believed that some unknown writing is on the lines and cracks of the tree trunk.
This small village hit the head lines 15 years ago because of the Nag Panchami (Snake Festival) show. Live snakes were brought on that day in hundreds in pots by the snake charmers. Women used to worship them every year and then the snakes were let free in the bushes in different parts.
Anti Hindu groups filed a case against the Hindu festival in the name of animal rights. Bombay High court banned it and now every year drones are used to prevent snake catching . The same anti Hindu group filed a case against Tamil Bull Fighting in the courts, but the courts did not ban the Bull Fighting in Tamil Nadu fearing peoples revolt. The anti -Hindu groups spoiled the income of thousands of snake charmers and the Hindu women are also deprived of their age old custom.
Xxx
Nammalvar Tamarind Tree
Goraknath tamarind tree story is confirmed by the Maharashtra Gazeteer as well:
Sirala, 16. 59′ north latitude and 74. 11′ east longitude, is the headquarters of the mahal of the same name . It lies 14.43 km (nine miles) south-west of Peth on the Varna valley and has sprung up on either side of a stream which flows into the Morna, a tributary of the Varna a mile down-stream. It is surrounded on three sides by barren hills with broken and undulating ground in the neighbourhood.
The brass lamps or samais manufactured here are well-known all over the district. The village was surrounded by mud walls and during the times of the Marathas was fort of some strength.
Gorakhnath Shrine
About three quarters of a mile from the village there is an old shrine dedicated to Gorakhnath situated amidst a small grove of tamarind trees. In ancient days the grove was very large and was frequented by a large number of peacocks whose lives were carefully respected and which fed on the grains thrown to them by the Gosavis inhabiting the math or the monastic house.
The image of the presiding deity is a large mill-stone placed on the north side of a gigantic old tamarind tree of the species known as Gorakh Amli. There is an image of Gorakhnath installed in the math by the Gosavis. A remarkable property is attributed to this tree. Its bark is scored everywhere in every direction by natural lines and cracks. These are believed to be the characters written by the deity in an unknown tongue and every devotee coming to worship there has his name written on the tree. A fair in great local repute is held in the month of Chaitra or March-April. It is attended by many Lingayat Varus, Marathas and other people.
Nagapancami Festival.
Perhaps the most distinguishing feature of the village is the way the Nagapancami festival is observed and celebrated by its inhabitants. It is celebrated by the village folk of Battis Sirala with a difference in that venomous snakes are made to sport by the village folk. This unique way of observance of the festival has aroused the curiosity of even foreigners. Legend tells us that the village was formerly known as Srigal and the local inhabitants used to worship a clay image of the snake-god. One day while Gorakhnath was on his usual rounds for alms he had to wait on the threshold of a house for quite some time. The woman of the house who came with alms a little later, regretted the delay and told the saint that she was engaged in the worship of clay image of Naga. The saint thereupon produced a live snake by his divine powers and asked her to worship it instead, assuring her and the village folk at the same time that on Nagapancami day the snakes would do no harm. The inhabitants of the thirty-two neighbouring villages following this incident became his ardent devotees and hence significantly enough the village has earned the name Battis Sirala.
Following this practice, even to this day, when the festival approaches, people round-up hundreds of venomous snakes from the neighbouring hilly regions and take them out in a procession on the Nagapancami day. A spacious platform has specially been constructed on which snakes are made to dance to the tune of pebble filled earthen pots which are gently made to roll on the ground. It is. very interesting to note the village folk both young and old going about merrily with snakes round their necks without the slightest expression of fear on their faces. Fights between snakes and wild lizards are also arranged. To witness this unusual spectacle thousands of enthusiasts gather, coming from Bombay, Kolhapur, Poona, Satara and many other places.
Xxx
One more story about the town is
On the following day of Naga Panchami, i.e Sravana sukla Sashti, a fair held in memory of a banker Siraala Setti, once a king for one and a quarter hours. An earthen image of him is made and worshipped, women dancing round it. It is then thrown into a tank or a well.
A certain woman was anxious that her husband should return home soon ,when he was preparing to go on a long business tour. She sought help from an astrologer who is also a medicine man. He advised her husband to sleep under a Tamarind Tree on his way out every night during his travels, and to sleep under a neem tree on his return journey. He did so and he was soon taken ill owing to the unhealthy air given out by the tree and its tamarind fruits. He therefore did not prolong his journey . He had to turn back.
This folk tale among the villagers instruct the villagers not to use Tamarind Trees for night halt. Since neem leaves are good for health Hindus use them on New Year and Gudi Padwa festival time. They hang the neem leaves outside the houses if someone is afflicted with small pox.
26 Mar 2016 — There is a tamarind tree in Gwalior at the tomb of Tansen, the great singer of Moghul period. People believe that whoever chew the leaves of ..
26 Mar 2016 — There is a tamarind tree in Gwalior at the tomb of Tansen, the great singer of Moghul period. People believe that whoever chew the leaves of …
ஒரு புளிய மரத்தின் கதை என்ற தலைப்பில் சுந்தரம் ராமசாமி எழுதிய நாவல் உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பெருமை சேர்த்ததை நாம் அறிவோம்.
Botanical term- Tamarind (Tamarindus indica)
உலகப்புகழ்பெற்ற வடஇந்திய பாடகர் தான்சேன், ஒரு புளியமரத்தின் இலைகளை சுவைத்து நல்ல சாரீரம் பெற்ற குவாலியர் நகர் புளியமரத்தின் கதையையும் நாம் அறிவோம்.
Tansen Tamarind Tree
16 ஆண்டுக்காலம் தவம் செய்து புளிய மரத்துக்கு அடியில் ஞானம் பெற்ற நம்மாழ்வாரால் புகழ்பெற்ற ஆழ்வார்திருநகரி உறங்காப்புளிய (Never Sleepinng Tamarind Tree) மரத்தின் கதையையும் நாம் அறிவோம்.
புத்தருடைய விக்கிரகத்தைத் திருடி, அதிலுள்ள தங்கத்தை புளியமரத்துக்கு அடியில் புதைத்து விட்டு நீண்ட நேரம் தூங்கிப்போன, திருமங்கை ஆழ்வாரை இலைகளை உதிர்த்து எழுப்பிய புளியமரத்தின் கதையையும் நாம் அறிவோம்.
புகழ்பெற்ற சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்கள் வெளியிட்ட ஜய மங்கள ஸ்தோத்திரம் எட்டாவது பாகத்திலுள்ள பிராமணப் பேயின் கதையும் அது சொன்னபடி ஒருநாள் இரவில் புளியமரக்கிளையை ஒடித்து பரலோகம் சென்ற கதையையும் நாம் அறிவோம்.
இவை எல்லாம் என்னுடைய 2016-ம் ஆண்டுக் கட்டுரையிலும் தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன் ? என்ற நூலிலும் வெளியான விஷயங்கள் . மேலும் சில புளிய மரங்களைக் காண்போம்.
கோரக்நாத் புளிய மரம் Tamarind (Tamarindus indica)
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிராலா (Sirala) என்ற கிராமம் உள்ளது. இங்கு ஒரு பெரிய பூதாகார புளியமரம் இருக்கிறது. அதனுடைய அடிமரத்தில் விரிசல்களும் குழிகளும் உண்டு. அருகில் கோரக் நாத் (Gorakhnatha Shrine) கோவில் இருக்கிறது. அவர் ஒரு குச்சியை பூமியில் ஊன்றியவுடன் அது புளிய மரமாகி கிளைவிட்டுப் பெருகியதாம் இந்த ஊர், பத்திரிக்கைச் செய்தியில் மிகவும் அடிபட்ட இடம். ஆண்டுதோறும் நாக பஞ்சமி அன்று பாம்புகளைப்ப பிடித்து வழிபட்ட பின்னர் அதை மீண்டும் புதருக்குள் விடுவது வழக்கம் . பாம்புகளைத் துன்புறுத்தக்கூடாது என்று ஒரு இந்து விரோதக் கும்பல் கும்பல், கோர்ட்டுக்குப் போகவே பம்பாய் ஹைக்கோர்ட்டும் பாம்பு பிடி விழாவுக்குத் தடை விதித்தது . இப்போது ஆண்டு தோறும் ட்ரோன்களை Drones இயக்கி பாம்புப் பிடாரர்களை கண்காணிக்கிறது அரசு.
கோரக்நாதர் நட்ட புளியமரத்தில் வாசிக்க முடியாத, புரியாத எழுத்துக்கள் இருப்பதாக ஒரு ஐதீகம் ; இது அங்கு வரும் பக்தர்களின் பெயர் என்ற
நம்பிக்கை இருப்பதை மஹாராஷ்டிர அரசு கெஜட் செய்தி கூறுகிறது.
இதே ஊரில் இன்னும் ஒரு கதையும் உள்ளது. சிரால செட்டி என்பவர் ஒன்னேகால் மணி நேரத்துக்கு அரசனாக இருந்தாராம். அவர் நினைவாக ஆண்டுகோரும் ஆவணி மாத சுக்கில பட்ச சஷ்டி யன்று ஒரு விழா நடக்கிறது. . அவருடைய உருவத்தை மண்ணால் செய்து அதைச் சுற்றி பெண்கள் நடனம் ஆடுவர். பின்னர் மண் பொம்மையை ஆற்றில் கரைத்து விடுவார்கள்.
ஒரு காலத்தில் இது பெரிய புளியம் தோப்பாக இருந்தது. அங்கு ஏராளமான மயில்கள் வரும். அதற்கு கோரக்நாத மடத்திலுள்ளோர் தானியங்களைப் போட்டு அதைப் புனிதப் பறவைகளாக கருதுவர். மேலும் அந்தப் புளியமரத்தின் ஒவ்வொரு சுழிவும் நெளிவும் , விரிசலும் அங்கு வரும் பக்தர்களின் பெயர்கள் என்றும் அது மக்களுக்குப் புரியாத ஒரு எழுத்தில் எழுதப்படுகிறது என்றும் சொல்லுவார்கள். கோரக்நாத் , சிவனின் உருவம் என்று மக்கள் நம்புவதால் லிங்ககாயத் பிரிவினர் இங்கு பெருமளவில் வருவார்கள்
Xxx
இன்னும் ஒரு புளிய மரக்கதையைக் காண்போம்
ஒரு பெண்மணியின் கணவன், திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பழமொழியை மனதிற்கொண்டு நீண்ட காலம் வெளிநாட்டுக்குப் போக திட்டமிட்டான். அன்பு மனைவியிடமும் அதைச் சொன்னான். மனைவிக்கு அவனை, நீண்ட காலம் பிரிந்துவாழ இஷ்டமில்லை . உடனே ஒரு ஜோதிடரைப் போய்ப் பார்த்தாள் . அந்தக் காலத்தில் ஜோதிடர்கள் மருத்துவ விஷயங்களையும் கதைப்பார்கள். அவர் சொன்னார்- உன் கணவனை அன்புடன் வழி அனுப்பி வை. ஆனால் ஒரு கண்டிஷன் Condition போடு; அன்பே , ஆருயிரே; போகும்போது புளிய மரத்துக்கு அடியிலும் வரும்போது வேப்ப மரத்துக்கு அடியிலும் நீங்கள் உறங்க வேண்டும். அது ஒன்றே என் நிபந்தனை என்று சொல் என்றார் . அவளும் அப்படியே கண வனிடம் பகர்ந்தாள் ; கணவனும் புறப்பட்டான்;, அவள் சொன்னபடியே இரவில் புளிய மரத்துக்கு அடியில் உறங் குவதை வழக்கமாகக் கொண்டான். சில வாரங்களுக்குள் அவன் உ டல் நலம் குன்றவே பாதியில் பயணத்தைக் கைவிட்டு வீட்டுக்குத் திரும்பினான். கணவனின் விரைவான திரும்புதலுக்கு உதவிய புளிய மரத்தை அவளும் மனதார வாழ்த்தினாள். இந்த நாட்டுப்புற கதை , புளிய மரத்துக்கு அடியில் உறங்காதே என்பதை விளக்குகிறது .
xxxx
பேய்க்கு வாக்குப்பட்டால் புளிய மரத்தில் ஏறித்தான்ஆக வேண்டும் என்ற பழமொழியால், புளிய மரத்துக்கு பெரிய அவப்பெயர் ஏற்பட்டுவிட்டது . உண்மையில் மரங்கள் இரவு நேரத்தில் கார்பன் டை ஆக்சைட் வாயுவை வெளியிடுகிறது. அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மேலும் புளிய மரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடிக்கொள்ளும். இதைத் தூங்குகிறது என்று சொல்லுவார்கள். இந்த குணமும் இதற்குப் பேயின் பெயரைக் கொடுத்துவிட்டது போலும்!
இன்னும் எங்கெங்கோ எத்தனை புளிய மரங்கள் இப்படிக் கதைகளுடன் உள்ளனவோ! யார் அறிவார்?
புதிய கதை ஏதேனும் இருந்தால், உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்; அது எதிர்கால மரத்தடியர்களுக்கு , மர மண்டைகளுக்கு உதவும்.
மரத்தடியர் = மரங்களின்பால் பேரன்பு கொண்ட அடியார்
மர மண்டை= மரங்களைப் பாதுகாப்பதே கடமை என்ற சிந்தனையில் ஊன்றி நிற்போர்..
–subham—
Tags— புளிய மரம், கோரக்நாத், சிராலா , கதை, கணவன் பயணம், மனைவி கண்டிஷன், பேய்க்கு வாக்குப்பட்டால்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! என்ற தலைப்பில் இரண்டாவது கட்டுரை 11807 என்ற கட்டுரை எண்ணாக 15-3-23 அன்று வெளியிடப்பட்டது.
காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! என்ற தலைப்பில் மூன்றாவது கட்டுரை 11897 என்ற கட்டுரை எண்ணாக 3-4-23 அன்று வெளியிடப்பட்டது.
காலம் வருமுன்னே காலன் வரமாட்டான்! – 4
ச.நாகராஜன்
மார்ச் இரண்டாம் தேதி, வருடம் 2023. வியாழக்கிழமை.
உத்தரபிரதேசத்தில் பதான் மாவட்டத்தில் 20 அடி ஆழம் உள்ள ஒரு கிணற்றில் விழுந்து விட்ட ஒரு நாளே ஆன குழந்தை ஒன்று மீட்டு எடுக்கப்பட்டு ஒரு வாரம் கழிந்த நிலை.
புதிதாக ஒரு சம்பவம் நடைபெற்றது. பிறந்து இரண்டே நாள் ஆன ஒரு பெண் குழந்தை பரெய்லி மாவட்டத்தில் கடாவா கிராமத்தில் (Bareilly District, Khataua village) ஒரு குளத்திலிருந்து மீட்டு எடுக்கப்பட்டது.
குளத்தில் தூக்கி வீசி எறியப்பட்ட போதும் கூட அது உயிருடன் இருந்தது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
குளத்தின் ஆழம் சுமார் 15 அடி.
பின்னர் எப்படி அது உயிருடன் இருந்தது?!
அந்தக் குழந்தையைத் தாங்கியது குளத்தில் இருந்த நீலோற்பல மலர்க்கூட்டம்.
அதனது தலையை நீலோற்பல மலர்க் கூட்டம் (Hyacinth) தாங்கி இருந்தது.
குழந்தையைப் பார்த்த கிராமவாசி ஒருவர் அலறியவாறு உள்ளூர் போலீஸிடம் இதைத் தெரிவித்தார்.
கிராமத்தின் முன்னாள் தலைவரான வகீல் அஹ்மத் குளக்கரையோரம் வழக்கம் போலச் சென்று கொண்டிருந்த போது தான் இந்தக் குழந்தையைப் பார்த்து அலறினார். அவர் குழந்தையை எடுத்தவுடன் செய்தி தெரிந்த கிராமவாசிகள் கூட்டம் கூட்டமாக குளத்திற்கு விரைந்தனர்.
மீட்புக் குழுவும் குளத்திற்கு விரைந்தது.
குழந்தையை பத்திரமாக மீட்டெடுத்த போலீஸார் அதை உடனே நவாப்கஞ்ச் (Nawabganj) மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பதிவு செய்தனர். குழந்தை பரிசோதனை செய்யப்பட்டது. நலமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. குழந்தைக்கு ஒரு வித காயமும் இல்லை!
குழந்தையை நீலோற்பல மலர்க் கூட்டம் தாங்கி இருந்த காட்சி வீடியோவில் படமாக எடுக்கப்பட அது வைரல் ஆகியது.
அடிஷனல் எஸ்.பி. (ரூரல்) ராஜ்குமார் அகர்வால், “ அந்தப் பெண் குழந்தை அதிர்ஷ்டவசமாக நீலோற்பல மலரில் விழுந்திருந்தது. அதுவே குழந்தையை நீரில் மூழ்கி உயிரிழக்க விடாமல் செய்தது” என்று கூறினார்.
குழந்தை சைல்ட் வெல்ஃபேர் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் பரெயிலி நகரில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
“இன்னும் 72 மணி நேரம் காத்திருப்போம். அதற்குள் குழந்தையின் பெற்றோர் வரவில்லை எனில், விதிப்படி ஒரு புகாரைப் பதிவு செய்வோம்” என்று கூறினர் போலீஸார்.
சைல்ட் வெல்ஃபேர் கமிட்டி தலைவரான தினேஷ் சந்திரா குழந்தைக்குத் தாங்கள் ஒரு பெயரைச் சூட்டி இருப்பதாகத் தெரிவித்தார்.
பெயர் : கங்கா!
கங்கையே! காலன் வரும் முன்னே காலன் வர மாட்டான் என்பது எவ்வளவு உறுதியான ஒரு விஷயம்!
1. Nyagrodhaḥ: Ficus Indica or Ficus bengalensis (That which remains above all and grows downward. That is, He is the source of everything that is manifest.)
1. Udumbaraḥ: Ficus glomerata (One who as the Supreme cause is ‘above the sky’, that is, superior to all).
1. Aśvatthaḥ: Ficus religiosa (That which does not last even for the next day.)
Hinduism is the only religion in the world where flora and fauna on earth are part of their day to day worship. They can’t think about God without flowers or leaves or plant twigs. Tulsi and Bilva (Vilva) are found in all Vishnu and Shiva temples. Whenever Hindus use one flower or plant leaf or twig, it means there is some medicine in it.
patraṁ puṣhpaṁ phalaṁ toyaṁ yo me bhaktyā prayachchhati tadahaṁ bhaktyupahṛitam aśhnāmi prayatātmanaḥ
BG 9.26: If one offers to Me with devotion a leaf, a flower, a fruit, or even water, I delightfully partake of that item offered with love by My devotee in pure consciousness.
Hindus are great botanists that they selected three plants from the same genus of same family in botany and named them after Vishnu. In the Vishnu Sahsranama of Mahabharata ,we see the plants of Ficus genus of family Moraceae. Leaves and flowers are part of their worship.
Of the three Ficus plants, the story of Ficus glomerata is very interesting. It is called Aththi in Tamil or Udumbara or cluster fig (Ficus glomerata or Ficus racemosa).
We have the magical properties of this tree praised in the Atharva Veda (3000 BCE) and later Satapata Brahmana (1000 BCE)
During the days of Atharva Veda they used it as an amulet. Hindus used its sticks to kindle ( Yaga, Yagna) sacrificial fire. Sacrificial posts, ladles were also made from its wood.
Harichandra, Hindu King , Embodiment of Truth, used it for his throne.
Atharvana Veda 19-31 reports its magical properties in 14 mantras. It is used as a charm to get wealth, cows, grains, victory, and general prosperity.
Later prose work in Sanskrit, Satapatha Brahmana ,reports how Indra created the three important plants of Ficus genus, namely Fig, Banyan and Pipal trees in addition to Rice from his body parts. These came after he drank magical Soma herbal juice. This indicates the magical herbal properties of Soma Juice and the importance of Ficus plants.
The story doesn’t stop there. Buddha used one of these three Ficus plants, Ficus religiosa,( pipal, Peepul) tree to attain wisdom. The same genus plant, Ficus glomerata (Fig Tree), helped Lord Dattatreya and his disciples to attain wisdom.
Here is the story of Fig Tree :
It is in Guru Charita, a 15th century work in Marathi , later translated into Sanskrit
Swami Narasimha Sarasvathi was the disciple of Lord Dattatreya, who is considered the Avatara of Tri Murtis- Brahma, Vishnu and Shiva.
Gangadhar Saraswati wrote Guru charitra in Marathi first time in 15th century. Then Vasudevananda Saraswati translated it into Sanskrit. It gives the story of Sri Narasimha Sarasvathi (1378- 1458). He is considered the second avatara/incarnation of Dattatreya.
In 20th chapter the glory of Audumbara was described thus.
Dattatreya
“When Lord Vishnu manifested himself as Narasimha in Narasimha Avatara to protect Prahlada and for destroying Hiranyakasyapa (Hiranyakashyapu), he had to make use of his nails (claws) to kill him. He tore open the belly of Hiranyakashyapa with his claws. In the stomach of Hiranyakashyapa, there was the Kalaloota poison. The nails of Narasimha were drenched with the poison when he tore the stomach and entrails of the demon. As a result, Narasimha’s nails were seething with great heat and pain. Goddess Lakshmi, seeing the suffering of Her Lord, plucked some fruits of the Audumbera Tree which she happened to find nearby. The Lord stuck his nails into the fruit deep into it’s pulp. The Lord’s pain vanished instantly by this. Lord Vishnu was immensely pleased and blessed the AudumberaTree and said it would from then onwards be as powerful on earth as the Kalpa Vriksha tree in the heaven. He said that whoever worship the Audumbara Tree, would get all desires and wishes fulfilled. Thus, the Audumbara Tree had become a wish fulfilling Tree, by Vishnu’s grace.
Narasimha swami did meditation for 12 years under the tree. The tree is considered the seat of Lord Dattareya. Now in the temple of Narasimha swami in Narasimhawadi, a village in Maharashtra, only his Padukas ( Shoes in wood), are worshipped under the sacred Udumbara/ Fig tree.
(Nrusinhawadi commonly known as Narsobawadi or Narsobachi Wadi is a small town in Shirol Tahasil in Kolhapur district, Maharashtra. Narsobawadi gets its name from the presence of ‘Shri Nrusinha Saraswati’, the Avatar of Lord Dattatreya. It is at the junction of River Krishna and Pancha Ganga).
The Datta cult devotees never cut the fig trees. They view it with great reverence. Those who got to Narasmihawadi temple recite Guru Charitra for a week or more following all fasting and Vrata rules. They believe that all their wishes will be fulfilled.
I believe Hindus built lot of cults or stories around plants to save plants of medicinal values. Every plant worshipped by Hindus has a great medicinal value.
Even their proverbs have old wisdom about the plants.
Beat your Body with Kadamba wood (Udambaik Kadambaal Adi) is a Tamil proverb. The meaning is Kadamba wood is good for making cots and beds. My grandma died on the Kadamba Cot at her ripe old age without any health problem.
Another proverb is about women who long for issues for a long time. If there is a fertility problem, elders used to advise Hindu women to go around Ficus religiosa tree (Peepal, Peepul, Pipal). In Tamil they used to say After going around the Pipal Tree she put her hands in the abdomen (to see whether she is pregnant) (Arasa Maraththai Surrivittu Adi Vayitrai Thottup Paarththaalaam) . The fact is you have to do such rounds everyday around the tree to attain it. It means good exercise and good inhalation of oxygen. Ficus trees give out large amount of Oxygen. This will help or expedite one becoming pregnant. In Tamil Nadu, all Ganesh statues are placed under the Ficus genus trees.
Even in Maharashtra and border Karnataka, women go around Fig trees to become pregnant.
An old book says, “It is much worshipped and women desirous of getting sons go round it a thousand times every morning. Its dry wood is used for producing sacrificial fire.”
These stories help the humanity to save the flora and fauna of earth.
உலகில் வேறு எந்த சமய மக்களையும்விட இந்து சமயத்தினரின் வாழ்வே தாவர , பிராணிகளின் உலகத்துடன் பின்னிப் பிணைந்திருக்கிறது . தமிழர்கள் மரங்களை வழிபடுவது ஏன்? என்ற எனது நூலில் இது தொடர்பான என்னுடைய கட்டுரைகளைத் தொகுத்து அளித்தேன் .
துளசி, வில்வம் முதலிய தாவரங்களை இந்துக்கள் வழிபடுவது எல்லோருக்கும் தெரிந்ததே. இவை மருத்துவ குணங்கள் உடையவை அரச மரத்தைச் சுற்றிப்பார்த்து அடிவயிற்றில் கைவைத்தாளாம் என்று பிள்ளைப் பேற்றுக்காக ஏங்கும் பெண்களைப்பற்றிச் சொல்வதெல்லாம் விஞ்ஞான உண்மையே என்பதையும் சொன்னேன். குழந்தை இல்லாதவர்கள் அரச மரத்தைச் சுற்றி, அங்கே வீற்றிருக்கும் பிள்ளையாரையோ அல்லது வேறு தெய்வத்தையோ வழிபடும்போது, அந்தப் பெண்மணி நல்ல ஆக்சிஜனை சுவாசிப்பதோடு உடற்பயிற்சியும் செய்வதால் ஆரோக்கியம் பெருகி குழந்தை பிறப்பது வேகப்படுகிறது- விரைவாகிறது. அரசமர இலைகள் வெளிவிடும் காற்றின் – ஆக்சிஜனின் அளவும் அதிகம் . எங்கெங்கோ ஞானத்தைத் தேடி அலைந்த புத்த பிரானுக்கு இறுதியில் அரச மரத்துக்கடியில் ஞானம் கிடைத்ததும் இதனாலன்றோ! இன்று இலங்கை வரை அந்த அரச மரத்தை எடுத்துச் சென்று வழிபடுகிறார்கள் அல்லவா?!.
இவை தவிர இந்தியா முழுதும் பல்வேறு மரம், செடி, கொடிகளை இறைவனுடன் இணைத்து வழிபடும் விஷயங்களை மேலும் ஆராய்வோம் இன்று தாவர இயல் விஞ்ஞானிகள் FICUS பைகஸ் என்னும் ஒரே பிரிவில் வைத்துள்ள ஆல மரம், அரச மரம், அத்தி மரம் மூன்றையும் அன்றே விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் விஷ்ணுவின் திருநாமங்களாக வைத்து பெருமைப்படுத்தினார்கள் இந்துக்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களுடைய தாவரவியல் அறிவு அந்த அளவுக்கு வளர்ந்து இருந்தது.
அந்த மூன்றில் அத்தி மரம் (Fig Tree) பற்றிய புதிய செய்தி இதோ:
உடும்பரா என்பது இதன் ஸம்ஸ்க்ருதப் பெயர்.
பைகஸ் க்ளோமெரெட்டா (Ficus glomerata, Ficus racemose) என்பது தாவர வியல் பெயர் (Botanical name)
இதன் பழங்களை இன்று வரை நாம் சத்துணவாக உண்கிறோம்.
இதை திரிமூர்த்தியின் வடிவமான தத்தாத்ரேயரின் இருப்பிடமாக மக்கள் வழிபடுகின்றனர் . குழந்தை இல்லாதோர் இந்த மரத்தைப் பலமுறை சுற்றி வணங்குகின்றனர்.
இதை அவுதும்பரா, உமரரோ என்றும் வட இந்திய மொழிகளில் அழைப்பர் .
தத்தாத்ரேயரின் அவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீ நரசிம்ம சரஸ்வதி சுவாமி (1378- 1458 )நரசிங்கவாடி (நர்ஸோபவாடி Narsobawadi) ) மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளது . அங்கு அவரது கோவிலில் உருவங்கள் கிடையாது. ஆனால் அவரது பாதுகைகள் மட்டும் அத்தி மரத்துக்கடியில் வைக்கப்பட்டுள்ளன . அவைகளை தத்த பக்தர்கள் வணஙகி குரு சரித்திர என்ற நூலை வாசிப்பார்கள் . இதனால் அவர்கள் எண்ணிய பலன்கள் கிடைக்கும். இந்த குரு சரித்திரத்தில் அத்தி மரத்தின் பெருமை உள்ளது .
நரசிம்ம வாடி கிருஷ்ணா நதி- பஞ்ச கங்கா நதிகளின் சங்கமத்தில் உள்ளது. அங்கு நரசிம்ம சரஸ்வதி 12 ஆண்டுக்காலம் தவம் செய்தார்.
கங்காதர சரஸ்வதி என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டில் குரு சரித்திர என்ற நூலை மராட்டிய மொழியில் இயற்றினார். அதை பின்னர் வாசுதேவானந்த சரஸ்வதி சம்ஸ்க்ருதத்தில் மொழிபெயர்த்தார். அந்த நூலின் இருபதாவது அத்தியாயத்தில்தான் அத்தி மர மஹிமை உள்ளது . எப்படி அரசமரத்துக்கடியில் புத்தர் ஞானம் பெற்றாரோ அதே போல அதே குடும்பத்தைத் (Family- Moraceae, Genus- Ficus) சேர்ந்த அத்தி மரத்தின் கீழ் தத்தாத்ரேயரும் அவரது சீடர்களும் ஞானம் பெற்றனர்.
xxx
இதோ அந்தக் கதை :
பிரஹலாதனைக் காப்பாற்றுவதற்காக விஷ்ணு, நரசிம்ம அவதாரத்தை எடுத்தார். ஹிரண்யகசிபு என்னும் அசுரனை சிங்க விரல்களால் கிழித்தார். பின்னர் அந்த விரல்கள், நகங்களில் பெரும் வலி துவங்கியது. அப்போது லெட்சுமி வந்து அருகிலுள்ள அத்திப் பழங்களில் நகங்களை நுழைக்கச் சொன்னார். அதனால் அவர் நக வலி அகன்றது. உடனே அத்தி மரத்துக்கு ஒரு வரம் தந்தார் . உன்னை வழிபடுவோர் சகல நன்மைகளையும் பெறுவார்களாகுக என்று.
இந்தக் கதை மராட்டிய மொழி, பின்னர் அதன் வடமொழி பெயர்ப்பு குரு சரித்திர நூல்களில் உளது.
இதனால் தத்தாத்ரேயரை வழிபடும் கர்நாடக, மகாராஷ்டிர பக்தர்களுக்கு அத்தி மரத்தின் மீது மதிப்பும் மரியாதையும் பய பக்தியும் உண்டு. அதை வெட்ட மாட்டார்கள்.
அத்தி மரத்தின் ,மருத்துவப் பயன்களை உலகிற்கு அறிவிக்கவே தத்தாத்ரேயர், நரசிம்ம சரஸ்வதி சுவாமிகளின் அவதாராம் தோன்றியது என்றாலும் மிகையாகாது.
Xxx
வேதத்தில் அத்தி மர தாயத்து
இந்துக்கள் யாக, யக்ஞங்களில் இதன் குச்சிகளைப் போட்டு வழிபட்டனர்.
வேத காலம் முதலே இந்த அவுதும்பர /அத்தி மரம் பிரபலமாகிவிட்டது . அதர்வண வேதத்தில் இதன் மரத்திலான தாயத்துக்களின் பெருமை பேசப்படுகிறது அதர்வண வேதம் 19-31 சூக்தத்தின் பெயர் ஒளதும்பர மணி. இதிலுள்ள 14 மந்திரங்களும் இந்த தாயத்தை அணிந்தவர்களுக்கு, தனம் , தானியம் , பசுமாடுகள், வீரம், வெற்றி கிடைக்கும் என்கிறது .
பிற் கால புராணங்களும் ஹரிச்சந்திரன் முதலிய ராஜாக்கள் அத்தி மர சிம்மாசனத்தில் அமர்ந்து உலகப் புகழ் பெற்ற செய்தி வருகிறது. இந்த மரத்தின் மஹிமை தொடர்ந்து வருவதை அதற்குப் பின்னர் வந்த நூல்களும் இயம்புகின்றன
3000 ஆண்டுகளுக்கு முந்தைய சதபத பிரமாணம் என்னும் நூலிலும் இது பற்றிய வேறு ஒரு கதை உள்ளது . இந்திரன் சோம பானம் என்னும் மூலிகை திரவத்தை அருந்திய பின்னர் அவனுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும் ஒரு தாவரமாக மாறியதைப் போற்றுகிறது. அவனது உடலின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் அரச மரம், ஆல மரம், சதையிலிருந்து அத்திமரம், அரிசி முதலியன தோன்றியதாகப் பகர்கிறது.
இதன் காரணமாகத்தான் மஹாபாரதத்தில் வரும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திலும் 3 மரங்களும் விஷ்ணுவின் பெயர்களாக வருகின்றன . இன்றுவரை அந்த துதியை பல லட்சம் பேர் தினமும் சொல்லும்போது அத்தி, ஆல, அரச மரங்கள் போற்றுதலுக்கு உள்ளாகின்றன
.-subham—
Tags அத்தி மரம், கதை, தத்தாத்ரேயர், நரசிம்ம சரஸ்வதி, குரு சரித்திரம் , மர வழிபாடு, ஒளதும்பர மணி, தாயத்து, அதர்வண வேதம்.
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ராமாயண வழிகாட்டி!
சீதையைப் பற்றிய வால்மீகி முனிவரின் ப்ரதிக்ஞை!
ச.நாகராஜன்
ஆதி காவ்யமான ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் தான் இயற்றிய காவியத்தில் தானே ஒரு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்வது எந்த காவியத்திலும் காண முடியாத அபூர்வமான உத்தி.
அவரே சீதையின் கற்பு பற்றி கூறுவதோடு, லவகுசர்கள் ஶ்ரீ ராம- சீதா தம்பதியினரின் புதல்வர்களே என அறுதியிட்டு உறுதி கூறுகிறார்.
சுவையான காவியத்தில் சுவாரசியமான உத்திகள் இடம் பெறுகின்றன.
ராமரின் யாகசாலையில் வந்த லவகுசர்கள் ராமாயணத்தை வால்மீகி இயற்றியபடி அருமையாகப் பாடத் தொடங்கினர்.
கேட்ட அனைவரும் விக்கித்துப் போயினர்.
ராமர் உடனே உணர்ந்து கொண்டார்- இந்தக் காவியத்தை அமைத்த வால்மீகி மாமுனிவர் லவகுசர்களை இங்கு அனுப்பி இதைப் பாட வைத்திருக்கிறார் என்று.
உடனே தன் தூதர்களை அனுப்பி வால்மீகி மஹரிஷியை தன் யாகசாலைக்கு வருமாறும் சீதையின் அற்புத கற்பின் மஹிமையை உணர்த்துமாறும் வேண்டுகிறார்.
தூதர்களிடம் ஶ்ரீ ராமர் கூறுகிறார்:
“இங்கிருந்து நீங்கள் பகவானது சந்நிதிக்கும் போக வேண்டும். எனது பின் வரும் விண்ணப்பதை நீங்கள் தெரியப் படுத்துங்கள். ‘அவளைப் போல் கற்புடையவள் வேறொருத்தி இல்லாதவளாக இருக்கும் பக்ஷத்தில் மனம், வாக்கு, காயம் இவைகளால் ஏற்படும் எப்படிப்பட்டதாகிய பாவத்திற்கும் இடமாகாதவளாய் இருக்கும் பக்ஷத்திலும் முனிவர் பெருமானை கேட்டு அனுமதி பெற்றுக் கொண்டு இப்படி தோஷமற்றவளாக இருப்பதை இவ்விடத்தில் நிரூபிக்க வேண்டும்.
மத்வசோ ப்ரூத கச்சத்வமிதோ பகவதோந்திகம் |
யதி சுத்தசமாசாரா யதி வா வீதகல்மஷா ||
கரோத்விஹாத்மன: சுத்திமனுமான்ய மஹாமுனிம் ||
“எனது சபையின் நடுவில் ஜனகரின் திருமகளாகிய மைதிலீ உள்ளது உள்ளபடியே இருக்கும் தீர்மானத்தைப் பெற வேண்டிய காரணமாய் சபதத்தை நாளை காலையிலேயே செய்யக் கடவள்.
பிரமாணம் செய்யும் விஷயத்தில் முனிவரது திருவுள்ளத்தையும் எவருக்கும் ஹிதமே செய்யும் மனம் உடையவளாகிய சீதையினது அபிப்ராயத்தையும் அறிந்து அவ்விடமிருந்து சீக்கிரமாய் திரும்பி வந்து எனக்கு நீங்கள் தெரியப் படுத்த வேண்டும்.”
சந்தம் முனேச்ஸ விஞ்ஞாஉஅ சீதாபாச்ஸ மனோகதம் |
ப்ரத்யம் தாதுகாமாயாஸ்தத: சம்ஸத்க மே லகு ||
ஸ்வ ப்ரபாதே து சபதம் மைதிலீ ஜனகாத்மஜா |
கரோது பரிஷன்மத்யே ஷோதநார்த்தே மமைவ ச ||
ராமரின் இந்த மொழியைக் கேட்ட தூதர்கள் வால்மீகி முநிவரிடம் சென்று இதைத் தெரியப்படுத்தினார்கள்.
உடனே முனிவர் இந்த பதிலை விடுத்தார்:
“உங்களுக்கு மெச்சுதலே கிடைக்கும். அங்ஙனமே ஆகட்டும். ஸ்திரீயாகிய எவளுக்கும் கணவன் ஒருவனே போற்ற வேண்டிய தெய்வம் அன்றோ! சீதை ஶ்ரீ ராகவர் எதைச் செய்தால் மனத் திருப்தி அடைவாரோ அதையே செய்வாள்.
ஏவம் பவது பத்ரம் வோ யயா துஷ்யதி ராகவ: |
ததா கரிஷ்யதே சீதா தைவதம் ஹி பதி: ஸ்த்ரீயா: ||
வால்மீகி முனிவரின் அற்புதமான ப்ரதிக்ஞை சீதையின் கற்புத்தன்மையை உலகிற்கு பறை சாற்றியது.
Little Girl Puja/ worship is called Kanyaa Poojaa. Nava means Nine and Ratri means Night.
Nine Night/s Festival before Deepavali (Diwali) is famous throughout India. That falls in Bhadrapada month corresponding to September/ October in English calendar. Instead of Bhadrapada it may be even Asvina, because outside Tamil Nadu Hindus calculate a month from New moon day called Amaavaasai. Tamil calendar is solar calendar. Each month begins when the sun enters the particular zodiac sign.
Let us look at Four Navaratris covering Four Seasons
1.Aashaada Navaraatri; starting after the New moon
day of the month Aashaada
xxx-
2.Saaradhaa Navaraatri- starting after the New moon
day of the month Bhaadrapada
xxx
3.Shyaamalaa Navaraatri- starting after the New moon
day of the month Tishya or Pausa (Thai in Tamil)
xxx
4.Vasantha Navaratri- starting after the New moon
day of the month Falguna or Chaitra
xxx
Of the four Nine Nights Festivals, Saradha and Vasantha Navaratris are famous and celebrated until this day.
Here is a description of Kanchi Shankaracharya Sri Chandrasekarendra Sarasvati’s (1894-1994) Navaratri celebration in 1957.
“Sankaracharya of Kanchi Kamakoti Peetam has been performing Navaraatri Poojaa at the premises of the Madras Sanskrit College, Mylapore, since September 24 (1957) and it concluded this afternoon (3 October) with the worship connected with Vijaya Dasami. His Holiness broke the Mouna Vrata (Silence), which he has been observing for the past nine days, with his talk on Sri Sankara Bhashya.
Kanya Puja formed part of the daily worship. Puja was offered to one Kanya (little girl), aged one year, on the first day, to two kanyas, aged one year and two years each on second day, to three kanyas, aged one, two, three years each on the third day and so on.
On the Saraswathi Puja day, in addition to Kanya Puja, Brahmachari puja and Suvasini Puja were also performed.
Brahmachari= Brahmachaari; Nava ratri= Nava raatri.)
At the conclusion of Vijaya Dasami Puja, abishekam with sanctified waters was performed to His Holiness Jagadguru and His Holiness Sri Jayendra Saraswathi Swamigal.
Xxx
From the above report we come to know the Mouna Vrata (silence),and Kanya Puja part of Navaratri.
Women and Sakthi worshippers observe fasting, silence, Puja/worship during the Nine days. During day time they recite Lalithaa Sahasranaama Hymn.
-xxx
This Navaratri, falls before Deepavali and it has taken different dimensions in different states. The common theme is the destruction of evil forces by the goddess Durga.
The demon is known as Buffalo demon (Mahisha) and the goddess who destroyed him is known as Mahisa Asura Mardhani.
In West Bengal and Bangladesh, it is called Durga Puja culminating in the Tenth Day- Vijaya Dasami- Victorious Tenth Day.
In Gujarat the nine day Garba dance worship is performed.
In Tamil Nadu, all the temples have different Alankaras (decorations) the same Goddess. Most of the houses have Doll Shows known as Kolu or Golu. Women visit other houses and exchange Turmeric and Kunkum (vermillion powder). They eat Boiled Spicy Pulses called Sundal as Prasaad.
In Mysuru, big Dasara (Dusserah) festival is celebrated.
Mysuru itself is derived from Mahisasura killing
In Delhi and other North Indian towns Ram Lila (raam leelaa) is celebrated and the effigies of demons Raavana, Kumbakarna and Meganaatha were burnt.
All over India, all Devi Temples do special pujas for nine days.
Xxx
Devi Bhagavatha’s third and 27th Chapters give more details of these Pujas (Worship). Following is taken from Wisdomlib.org
Number Sixteen
As ordained in the Vedas, the Nine nights’ worship is to be made in the seasons of spring and autumn. These two seasons are called Kāladaṃṣtrās (the tusks of seasons). Diseases and deaths occur in these seasons in excess, and so it is ordained that this fast and worship should be conducted in the months of Meḍam (Meṣa) and Tulām.
Vyāsa has ordered that navarātri worship should be conducted as follows. The things necessary for the worship and oblations should be collected on the new moon day. Only clarified butter could be eaten on that day. An open temple should be erected with pillars and flag-posts in an open flat place which is pure. It will be good if the shed has a circumference of sixteen cubits. There should be sixteen pillars. The shed should be floored with the mixture of cowdung and white clay. In the middle of the shed there must be a dais having a height of one cubit and a circumference of four cubits. This is the place for the seat. The shed and the dais should be decorated.
The throne placed on the dais must be covered with a white silk and Devī (goddess) should be consecrated on it. A calm Brahmin should read the Vedas and at that time the worship of the goddess should begin. This worship will continue for nine days. Another ritual of this ‘navarātripūjā’ is the worship of virgins. (See under Kumārīpūjā)
xxx
Virgin Puja
Navaratri ot the holy nine nights is a period of festivity observed by the Hindus for nine days or rather nights after sunset in temples in the month of Purattasi corresponding to the English month September-October, commencing on the first day in the bright fortnight of the month every year. The object or aim with which it is observed is said to be to propitiate the Goddess symbolising every possible kind of energy in the universe, with a view to obtain perpetual happiness and prosperity.
A noteworthy feature in the observance of the Navaratri Vratha is that virgins, ranging from the age of two to ten, are especially noticed with gifts of saffron, vermilion flowers, sandal paste, fruits, etc., after the Gauripuja. The reason for this is obvious. Nine Saktis or forces of Devi are recognised. These are personified and given the names of (1) Kumari, (2) Trimurti, (3) Kalyani, (4) Rohini, (5) Kalika, (6) Chandika, (7) Sambavi, (8) Durga and (9) Subhadra.
The Navaratri festival is also known as the Dasara festival. On the ninth and the last day of this period, the goddess Saraswati is worshipped. The worship goes by the name Saraswathi Puja. It is interesting to note that this puja is performed in honour of the element Vayu (air). The goddess is installed in a pot called ‘gadam’.
Xxxx
5. In all the cases, the Kumārīs, born of the Brāhmin families, can be taken; when victory is desired, the Kumārīs of the Kṣattriya families are preferred; when profit is wanted, the Vaiśya Kumārīs and, when general welfare is wanted, the Śūdra Kumārīs are to be taken.
6-7. O king! In the Navarātri Pūjā, the Brāhmins should select for worship the Brāhmin Kumārīs; Kṣattriyas, Brāhmin or Kṣattriya; the Vaiśya worshippers can select for worship Brāhmin, Kṣattriya, or Vaiśya Kumārīs. And the Śūdra worshippers can select, for worship, any of the four classes. But artists and artisans should select for worship the Kumārīs from their own families and tribes respectively.Chapter 27 of Devi Bhagavata
Xxx
Kumārīpūjā (कुमारीपूजा).—It is a special item in Navarātripūjā. According to the definition ‘Kumārikā tu sā proktā dvivarṣā yā bhavediha,’ Kumārī is a two-year old female child. To worship such a child is Kumarīpūjā, and it should be conducted accompanied by sumptuous feasts and presentation of clothes etc. There are no hard and fast rules as to how many Kumārīs should be worshipped and as to the manner and method of the worship. The same Kumārī may be worshipped during all the days of the Pūjā, or every day one more girl may be worshipped like this:—one girl on the first day, two on the second day and so on. Or it may be in the order 4, 6, 8 etc or 4, 8, 12, 16 etc. Even if the daily number be nine it is in order. There is no rule that Kumārīs alone should be worshipped; any one of the navakanyakās would do. A girl two years old is called Kumārī, three years old Trimūrti; four years old Kalyāṇī; five years old Rohiṇī; six years old Kālī; Seven years old Caṇḍikā; eight years old Śāmbhavī; nine years old Durgā and ten years old Subhadrā. These girls are called Navakanyakās. (Devī Bhāgavata, 3rd Skandha).
Xxx
Lord Rama did Navaratri Puja
49. In former days, Śrī Rāma Candra suffered very much owing to his being deprived of his kingdom; and, then on account of his wife being stolen away. Subsequently he performed this Navarātra vow in Kiskindhyā, his heart being heavily laden with grief.
50. Though troubled very much, on account of the bereavement of Sītā, still Rāma Candra observed the Vow of Navarātra and worshipped the Goddess according to the prescribed rules and rites.
51-52. As a fruit of this worship he was able to bridge the great ocean and kill the giant Kumbha Karṇa, Meghanāda, the Rāvaṇa’s son, and Rāvaṇa, the king of Lanka; and subsequently he was able to recover his Sītā. He installed Vibhīṣaṇa on the throne of Lanka (Ceylon) and at last returned to Ayodhyā and reigned there without any enemies.
53. O best of the Vaiśyas! Rāma Candra, of incomparable prowess, was able to obtain happiness in this world on account of the influence of this Navarātra ceremony.
Lord Rama shifted the importance from Vasanta Navratri to Saradha Navaratri, because he became victorious in the Rama- Ravana battle after worshipping Durga.
xxxx
Vasantha Navaratri (Spring Season= Vasantha)
Falguna or Chaitra month in Hindu Calendar
The Vasant or Spring Navratri is widely observed in Himachal Pradesh, Uttarakhand (Uttaranchal), Haryana, Punjab , Gujarat and Jammu and Kashmir. Most Hindu devotees in this part of India undertake Navratri Vrat or fasting. It coincides with Ram Navami.
There is a long story about it in the Devi Bhagavata. To cut it short, Goddess destroyed King Yudhajit of Ujjain, the father of Queen Lilavati, and King Virasena of Kalinga, He installed his grand son Satrujit as the King of Ayodhya. But Goddess helped the genuine prince Sudrasana who married Sasikala to win back the kingdom by killing Yudhajit.
Vasant Navratri nine days are celebrated :
Day 1.Ghatsthapana – Navratri.
Day 2. Sindhara Dooj, Dwitiya.
Day 3. Varadvinayak Chaturthi.
Day 4. Sri Laxmi Panchami Vrat, Naag Vrat Pujan.
Day 5. Panchami.
Day 6. Skand Shashthi, Yamuna Jayanti.
Day 7. Mahasaptami Vrat, Chaiti Chath, Vijaya Saptami .
Day 8. Sri Durga Mahaashtami, Annapurna Ashtami.
Day 9. Vasant Navratri ends – Ram Navratri Day.
Now all the Sankaracharya Mutts and the Sakthi worshippers observe this Navaratri with the same fervour.
Devi Bhagavata says the three days Saptami, Ashtami and Navami (7th, 8th , 9th day) are more important. Even if one is not able to do Nine Night worship, all must observe these three days.
இந்து மத நூல்களில் நான்கு நவராத்ரி விழாக்கள் குறிப்பிடப்படுகின்றன . அவைகளில் வசந்த நவராத்திரியும் பெரிய நவராத்ரியான சாரதா நவராத்திரியும் மட்டுமே இன்று பிரசித்தமாக உள்ளன
1.ஆஷாட நவராத்ரி – ஆஷாட மாதம் அமாவாசைக்குப் பிறகு
xxx
2.சாரதா நவராத்ரி — புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு
xxx
3.சியாமளா நவராத்ரி – தை மாதம் அமாவாசைக்குப் பிறகு
xxx
4.வஸந்த நவராத்ரி – பங்குனி மாதம் அமாவாசைக்குப் பிறகு
Xxx
தமிழர்கள் சொல்லும் மாதங்களுக்கும் பிற மாநில மக்கள் சொல்லும் மாதங்களுக்கும் இடையே ஒரு மாதம் (பெயர் அளவில்) வித்தியாசம் இருக்கும். ஏனெனில் அமாவாசை அன்றே அடுத்த மாதம் துவங்கி விடுவதாக வடக்கேயுள்ளவர்கள் கருதுகிறார்கள்.
நவ என்றால் ஒன்பது; ராத்திரி என்றால் இரவு.
9 நாட்களில் இரவில் தேவி பூஜை செய்வதோடு பகல் முழுதும் விரதம் இருப்பதும் வழக்கம். அதாவது நோன்பின்போது கடைப்பிடிக்கும் எல்லா விதிகளையும் பெண்களும், சக்தி வழிபாடு செய்யும் சாக்தர்களும் கடைப்பிடிப்பார்கள். தேவியின் துதிகளை குறிப்பாக லலிதா சஹஸ்ர நாமடத்தைப் பாராயணம் செய்வார்கள்.
காஞ்சி, சிருங்கேரி போன்ற சங்கராசார்ய மடங்களில் பெரிய அளவில் பூஜைகள் நடைபெறும்.
நான்கு நவராத்ரிக்கள் இருந்த போதிலும் தீபாவளிக்கு முன்னர் வரும் புரட்டாசி மாத சாரதா நவராத்ரிதான்கொலு பொம்மை அலங்காரத்துடன் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியர்கள் வாழும் இடங்களில் எல்லாம் கொலு பொம்மைக் காட்சிகளைக் காணலாம். மைசூரில் இதன் இறுதிநாள் — அதாவது பத்தாவது நாள் – தசரவாகவும் வங்காளத்தில் மிகப்பெரிய துர்கா பூஜாவாகவும் கடைப் பிடிக்கப்படுகிறது.
பத்தாவது நாளின் மற்றோர் பெயர் விஜய தசமி. வெற்றித் திருநாள்.
ஒன்பதாவது நாளை ஆயுத பூஜை அல்லது சரஸ்வதி பூஜை என்ற பெயரில் கொண்டாடுவார்கள்
XXX
விஜய தசமி, ஸரஸ்வதி பூஜை ஆகியவற்றைத் தனியாகக் காண்போம்.
முதலில் நவராத்ரி பூஜைகளைக் காண்போம் .
1957-ம் ஆண்டில் காஞ்சி மஹா சுவாமிகள் (1894-1994) சென்னை ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் கொண்டாடிய நவராத்ரி நமக்கு சில சுவையான செய்திகளைத் தருகிறது; செப்டம்பர் 24, 1957ல் துவங்கிய நவராத்ரி அக்டோபர் 3 ஆம் தேதி விஜய தசமியுடன் நிறைவு பெற்றது. சுவாமிகள் ஒன்பது நாட்களும் பேசாமல் மவுன விரதம் அனுஷ்டித்து விஜயதசமி நாளன்று அருளுரை ஆற்றினார்.
ஒன்பது நாட்கள் இரவிலும் ஏராளமான பக்தர்கள் கூடி நவராத்ரி பூஜையைக் கண்டுகளித்து சுவாமிகளின் தரிசனத்தையும் பெற்றனர் பூஜை நேரத்தில் மேடையில் தோன்றி தரிசனம் கொடுத்ததோடு பகல் நேரத்திலும் திடீரென்று வெளியே வந்து பக்கதர்கள் கூட்டத்திற்கு அருகில் நின்று அருள் பார்வை செலுத்துவார் . இதனால் எந்நேரமும் பக்தர் கூட்டம் இருந்தது. ஒன்பது நாட்களும் கூட்டம் அதிகரித்துக் கொண்டு போகவே பந்தலைப் பெரிதாக்கிக் கொண்டே போனார்கள்
காலையில் நடக்கும் வழக்கமான பூஜைகளும் மதியம் வரை நீடித்தது. அடுத்த பீடாதிபதியாக நியமிக்கப்பட்ட ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் உடன் இருந்தார். வழிபாட்டின் ஒரு பகுதியாக
கன்யா பூஜையும் நடந்தது.
முதல் நாள் – ஒரு வயதுக் குழந்தைக்கு
இரண்டாம் நாள் – ஒரு வயதுக் குழந்தைக்கும் , 2 வயதுக் குழந்தைக்கும்
மூன்றாம் நாள் – ஒரு வயதுக் குழந்தைக்கும் , 2 வயதுக் குழந்தைக்கும் , 3 வயதுக் குழந்தைக்கும்
இப்படி ஒன்பது நாட்களும் கூடிக்கொண்டே போனது.
சரஸ்வதி பூஜை அன்று, கன்யா பூஜையோடு பிரம்மச்சாரி பூஜை, சுவாசினி பூஜைகளும் நடத்தப்பட்டன
விஜய தசமியன்று இரண்டு சங்கராசார்யார்களுக்கும் புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்விக்கப்பட்டது.
(இந்தச் செய்தி மூலம் நவராத்திரியின் சில அம்சங்கள் நமக்குத் தெரிகின்றன )
Xxxx
குமாரி பூஜையின் சிறப்பு பற்றி தேவி பாகவதத்தின் மூன்றாவது , 27 ஆவது ஸ்கந்தத்தில் (அத்தியாயத்தில்) விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.
நவராத்ரி என்பது துர்கா தேவியின் வழிபாடு. துர்க்கையை ஒன்பது வித ரூபங்களில் வழிபடுவதே இதன் கருத்து
பொது இடங்களில் 16 தூண்களுடன் மண்டபம் கட்டி தேவியை நடுவில் வைத்து வழிபட வேண்டும். அங்க ஹீனம் இல்லாத சின்னப் பெண்களை தேவியாக வழிபடவேண்டும் . ஒரே குமாரியையும் இப்படி வழிபடலாம் அல்லது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெண்ணையாவது அதிகரித்துக் கொண்டே போகலாம் என்றும் தேவி பாகவதம் இயம்புகிறது
நவராத்ரி பூஜையால் வறுமையை அகற்றிய கதைகளும் தேவீ பாகவதத்தில் உள்ளது .
மொத்தக் கருத்து அசுரர் சக்தியை உலகிலிருந்து அழிப்பதாகும் . எருமை அசுரன் எனப்படும் மகிஷாசுரனை தேவி, அழித்த நாளே வெற்றித் திருநாள் – விஜய தசமி
இந்தப் பண்டிகை ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு உருவில் வளர்ந்தது வினோதமானது.
குஜராத்தில் ஒரு பெரிய மண்டபம் அல்லது பந்தலில் தேவியை வைத்து அவளை சுற்றி கர்பா நடனம் ஆடுவது தேசீயத் விழாவாக வளர்ந்துவிட்டது. மேலை நாடுகளில் வாழும் குஜராத்திகள் இந்த நவராத்ரி கர்பா நடனத்தை டிக்கெட் கட்டணம் வைத்து நடத்துகின்றனர். புனிதத் தன்மையைக் காப்பதற்காக இந்துக்களை மட்டுமே, நடனத்தைக் காண அனுமதிக்கின்றனர்.
வங்காளத்திலும் வங்காளிகள் வாழும் உலகின் ஏனைய பகுதிகளிலும் துர்கா பூஜை தேசீயத் திருநாள் ஆகிவிட்டது.
மகிஷாசுரனை வதம் செய்ததால் மைசூரு என்று பெயர்பெற்ற கர்நாடக மாநிலத்தில் தசரா விழா தேசீய விழாவாக மாறிவிட்டது.
தெய்வீகம் பொங்கும் தமிழ் நாட்டின் கோவில்களிலும் இந்துக்களின் வீடுகளிலும் கொலு பொம்மைக் காட்சியாக இது உருவெடுத்துள்ளது. வித விதமான சுண்டல் என்னும் சத்துணவு, நாள் தோறும் வித விதமான பாட்டுக் கச்சேரிகள், வீடு தோறும் சுமங்கலிப் பெண்களும் கன்னிப் பெண்களும் சென்று குங்குமம், மஞ்சள் பெறுவது, கோவில்களுக்கு அணி அணியாகப் படையெடுப்பது என்று பல வகைகளில் பரிணமித்து இருக்கிறது. எல்லா கோவில்களிலும் அம்மனுக்கு வேறு வேறு அலங்காரம் செய்வது, விளக்குகள் மூலம் கோவிலை ஜெகஜ் ஜோதியாக மாற்றுவது போன்றவையும் குறிப்பிடத் தக்க அம்சங்கள்.
நவராத்ரி காலத்தில் அலங்கரிக்கப்படாத , பூஜிக்காப்படாத தேவி கோவில்களைக் காண முடியாது. இமயம் முதல் குமரி வரை ஏதெனும் ஒருவகையில் கொண்டாடப்படுகிறது.
பெரிய சங்கர மடங்களில் தேவிக்கு நவாவரண பூஜையும் நடக்கிறது.
நவ ஆவரணம் என்பது தேவியை ஒன்பது மதில் கோட்டையில் உருவகித்து வழிபடும் பூஜை . தேவியானவள் நடுவில் மலை உச்சியில் , அதாவது மஹா மேருவில் வீற்றிருப்பாள்
Xxx
ராம் லீலா
ராமனும் கூட வனவாசத்தின் போது நவராத்ரி விரதம் அனுஷ்டித்து பூஜை செய்ததாக புராணங்கள் செப்பும் .வடக்கில், ராம் லீலா என்ற பண்டிகையாக இது உருவெடுத்துள்ளது. விஜய தசமி நாளன்று ராவணன், கும்பகர்ணன் , மேகநாதன் ஆகிய மூன்று அரக்கர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது டில்லி முதலிய பெரிய நகரங்களில் நடைபெறுகிறது
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் வழிபட முடியாதோர் குறிப்பாக சப்தமி, அஷ்டமி, நவமி (7th, 8th,9th) நாட்களில் வழிபட வேண்டும் என்றும் தேவீ பாகவதம் கூறும்
நவராத்ரி என்பது கர்பா , துர்கா பூஜை , தசரா , ராம லீலா , கொலு பொம்மைக் காட்சி என்று நாடு முழுதும் பேருரு எடுத்துள்ளது.
Xxx
வசந்த நவராத்ரி
வசந்த காலத்தில் நடைபெற்ற நவராத்ரி இப்போது கோவில்களிலும் மடங்களிலும் மட்டுமே பூஜைகளுடன் நின்று விட்டது. ஆயினும் இப்போதும் பெண்கள் விரதம் அனுஷ்டிக்கின்றனர்
ஹிமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் , ஹரியானா, பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் இந்துக்கள் வசந்த நவராத்ரியைக் கொண்டாடுகின்றனர் . குறிப்பாக விரதம் காரணமாக உணவுக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுகின்றனர் .
துர்கா பூஜை செய்து ராணவனை, ராமர், கொன்றதால் புரட்டாசி மாத நவராத்ரி பெரிதாகி, வசந்த நவராத்ரி புகழ் இழந்துவிட்டது என்று கூறுவோருமுளர்.
வசந்த நவராத்ரி பற்றி தேவி பாகவதத்தில் நீண்ட கதை உள்ளது. யுதாஜித் என்பவன் பேராசைகொன்டு ஆட்சியைப் பிடிக்க முயன்றபோது தேவியானவள் நியாயமாக பதவி கிடைக்கவேண்டிய சுதர்சனனுக்கும் அவனை மணந்த சசிகலாவுக்கும் அவளது தந்தைக்கும் உதவிய கதை அது. யுதாஜித் என்ற மன்னனை தேவி அழித்து விடுகிறாள்.