If you appoint people with inherent bad qualities in higher posts, that will harm you. People with bad qualities seldom change. There may be a few exceptions. There is a proverb in Tamil that says You can never straighten the tail of a dog. There is also another Tamil proverb that says Even if you bathe a dog and place it in the hall of your house, that will run away to eat the XYZ. There is another beautiful Tamil proverb which says If you give authority to a scorpion that will always sting you.
Nature or Nurture what decides one’s fate is answered in the following story. Narrating this story Sri Kripananda Varaiar, a famous Tamil religious speaker, advised his audience not to elevate people with low virtues to higher positions.
Xxx
Story of a Mangy Dog
There was a mangy dog living outside the Ashram of a saint. An ashram is a simple hut where a saint lives. This saint was full of compassion. And this Ashram was just outside the town where the forest begins.
The mangy dog was skinny and looked like a skeleton.
One day a wolf appeared suddenly from the forest and tried to eat the dog. The saint who watched it through his window immediately changed the dog into a big wolf by his power. And the dog that became a wolf chased the forest wolf.
Months rolled by. A tiger came to the Ashram and tried to devour the big wolf. The saint who watched it made the wolf into a large tiger by his magical power. And the larger tiger chased the forest tiger back into the forest.
Now years rolled by. There came a mad elephant blaring towards the Ashram. And the large tiger was ready to attack the elephant to save itself and the Ashram.
The saint thought of an idiom which says it is like a lion in the dream of an elephant. The meaning is that elephants fear lions even in a dream. So the saint changed the tiger into a lion and the blaring elephant ran back into the forest.
Now the dog-wolf-tiger- changed lion was the king of the forest. As Bacon says ‘Power corrupts; absolute power corrupts absolutely’, the lion became arrogant and vicious. It thought Oh My God. Our saint has a lot of power through his penance. If I eat him, I will get all his powers. Thinking this way, the lion peeped through the window of the ashram. The saint was a Tri Kaala Jnaani that means One Who can see the Past, Present and Future. When the lion entered the Ashram with very bad thoughts, the saint called it
Oh Ye Dog, Oh Ugly Dog, Go back Dog
Immediately,it changed back to its original form. The mangy dog was chased away.
This is how the low lives behave. We see bad people in power lose all morals and harm only good people. They are always anti religion.
Never give them higher positions.
Xxx
In Hindu religion, dog is praised as a grateful animal. At the same time, it is seen as a dirty animal. Even in Bhagavad Gita it is portrayed as a low life. Krishna says Panditaah Sama darsinah 5-18
vidyā-vinaya-sampanne brāhmaṇe gavi hastini śhuni chaiva śhva-pāke cha paṇḍitāḥ sama-darśhinaḥ
BG 5.18: The truly learned, with the eyes of divine knowledge, see with equal vision a Brahmin, a cow, an elephant, a dog, and a dog-eater.
The Vedas do not support the view that the Brahmins (priestly class) are of higher caste, while the Shudras (labor class) are of lower caste. The perspective of knowledge is that even though the Brahmins conduct worship ceremonies, the Kṣhatriyas administer society, the Vaiśhyas conduct business, and the Shudras engage in labor, yet they are all eternal souls, who are tiny parts of God, and hence alike.
Xxx
Manikkavasagar (maanikkavaasagar) was a great Saivite saint. He called himself A DOG in over hundred places in his famous Hymn Tiruvasagam.
Though he was a great person he used the word DOG to represent the common man. In one of the hymns, he says You elevated me to such a higher place that looks like Enthroning a dog as a king. We are reminded of those lines when we read the story above.
TIRU SATAKAM- Section 5 of TIRU VASAGAM
28. No one has heard of him. No one knows him. He is faultless. He has no relatives. He knows everything and hears everything. Your devotees wait for you sleeplessly. I am like a dog yet you put me up on a seat, made me your devotee and showed me things that you have never shown to anyone. You made me hear things that no one has ever heard. You removed my future births and made me yours. What a wonder you do for me! [32]
எனது பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின் போது சில திவ்ய தேசங்களுக்கு சென்று பெருமாளைத் தரிசித்தேன்.
முதலில் ஒப்பில்லாத அப்பன்/ உப்பிலியப்பன் கோவிலுக்குச் செல்வோம்.
கோவிலுக்குள் நான் பட்டாச்சார்யாவிடம் கேட்ட கேள்வி:
இப்போதும் உப்பில்லாத பிரசாதம்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறதா?
அவர் ‘ஆமாம்’ என்று விடை கொடுத்தார்.
ஒப்பில்லாத அப்பன் என்பதும் உப்பிலியப்பன் என்பதும் சரிதான். எல்லா மொழிகளிலும் பல பொருள் உடைய சொற்களும் விஷயங்களும் உண்டு. நேற்று முன் தினம் கிருபானந்த வாரியாரின் சுந்தர காண்ட சொற்பொழிவைக் கேட்டேன். கம்ப ராமாயணத்தில் ஒரே பாடலுக்கு ஆறுவிதமாகப் பதம்பிரித்து பொருள் சொன்னார். அத்தனையும் பொரு த்தமாகவே இருந்தன.
108 திவ்ய தேசங்களில், கும்பகோணம் அருகே உள்ள பூமாதேவி சமேத ஒப்பிலியப்பன் பெருமாள் கோயில் 13-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. தென் திருப்பதி என்று இத்தலம் சிறப்பு பெற்றுள்ளதால், இப்பெருமாளுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு.
நாங்கள் கும்பகோணத்திலிருந்து காரில் சென்றோம். சுமார் 7 கிலோமீட்டர்.
தென் திருப்பதி என்றும் ,திரு விண்ணகர் என்றும் மார்க்கண்டேய க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது இது.
திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட து ; அதாவது பாடப்பெற்றது. மொத்தம் 47 பாசுரங்கள்.
xxxxx
இந்தக் கோவிலின் சிறப்பு என்ன?
திருப்பதிக்குப் போக இயலாதவர்கள், இதையே திருப்பதியாக நினைத்து, பாலாஜிக்கு- வெங்கடாசலபத்திக்கு- செய்யவேண்டிய பிரார்த்தனைகளை இங்கேயே செய்கின்றனர். இதற்கு காரணம் இவரை வெங்கடேசனின் தமையனாராகக் கருதுவதே.
மிருகண்டு முனிவரின் பத்தினியின் விருப்பப்படி பெருமாளுக்கு உப்பில்லாத தளிகை நைவேத்யம். உப்புள்ள பண்டங்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்வதே பாபம் என்றும் கருதப்படுகிறது.
திருமணம் புரிந்த நாள்:
எம்பெருமான் பூமிப்பிராட்டியை ஐப்பசி மாதத்தில் திருவோணத்தன்று மணந்து கொண்டான். ஆண்டுதோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் தொடங்கி பல்வகை இசை நிகழ்ச்சிகளுடன் 12 நாட்கள் நடந்து வருகிறது.
இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது
சிரவணம் = திரு ஓணம்
நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன்.
xxxx
அமெரிக்காவில் உப்புக்குத் தடை
மனிதர்கள் சேர்த்துக்கொள்ளும் காய்கறி பழங்களில் உள்ள உப்புச் சத்தே உடலுக்குப் போதுமானது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் அமெரிக்காவில் உப்பு பற்றி எச்ச ரிக்கும் அறிவிப்பை, ஓவ் வொரு உணவு விடுதியிலும் வைத்திருப்பார்கள் ;ஒரு கருப்பு ச் சட்டமிட்ட இடத்துக்குள் உப்பை மறைத்து வைக்க வேண்டும் என்று 2016ம் ஆண்டில் நியூயார்க் நீதிபதி உத்தரவிட்டார்..உப்பிலியன் இதற்கெல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே No Salt Policy நோ சால்ட் பாலிசியைப் பின்பற்றினார்.ரிக் வேதத்தில் உப்பு குறிப்பிடப்படவில்லை. சர்க்கரை மட்டுமே காணப்படுகிறது
Xxxx
ஆழ்வார்களால் படப்பட்டதால் இந்தக் கோவில் குறைந்தது 1500 ஆண்டு பழமை உடையது எனலாம்.
இந்தக் கோவிலில் பணம் செலுத்தி பெருமாள் கல்யாண உற்சவம் முதலியனவும் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்தன்று சிரவண தீபம் எடுத்துச் சென்று குறி சொல்வது விசேஷம்.
ஒப்பிலியப்பன்- நிகரற்றவன் – ஸ்ரீநிவாசன் இங்குள்ள விக்ரகங்கள்
திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்ற நின்ற திருக்கோலம்
பகவத் கீதையில் வரும் முக்கிய வாசகமான மாம் ஏகம் சரணம் வ்ரஜ = என் ஒருவனையே சரண் அடை , என்ற வாசகம் எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
Judge upholds NYC rule on restaurant salt warnings 2016 news
NEW YORK (Reuters) – A New York judge on Wednesday shot down a challenge by a restaurant trade group, upheld a city rule requiring many chain eateries to post warnings on menu items that are high in sodium.
The rule, believed to be the first of its kind in the United States, mandates restaurants with 15 or more locations nationwide to post a salt shaker encased in a black triangle as a warning symbol next to menu items with more than 2,300 milligrams of sodium, the daily limit recommended by many nutritionists.
“Information is power,” Justice Eileen Rakower of New York state Supreme Court in Manhattan said in a ruling from the bench. Unlike the city’s unsuccessful large-soda ban, she said, the rule did not restrict the use of sodium.
New York City adopted the rule, which took effect in December, to help lower blood pressure and reduce the risk of heart attacks and strokes.
The National Restaurant Association, a restaurant trade group, then sued the city’s Board of Health saying the rule unfairly burdened restaurant owners.
In court on Wednesday, Rakower denied the group’s motion for a preliminary injunction to stop enforcement of the rule. Starting March 1, violators will be punished by $200 fines. In addition to chain restaurants, the rule also applies to concession stands at some movie theaters and sports stadiums.
Xxx
பேயாழ்வார் பாசுரங்கள் 2342, 2343
2342. பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், – வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன் விண் ணகர். 61
2343. விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,
மண்ணகரம் மாமாட வேளுக்கை, – மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62
Xxxx subham xxxx tags–ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன், பகலிராப்பொய்கை, திரு விண்ணகர், உப்பு, பிரசாதம், தளிகை , இல்லாத , no salt policy
தன் உடலில் அம்பிகைக்குப் பாதி இடம் கொடுத்து சிவபிரான் அர்த்தநாரீஸ்வரராக ஆன வரலாறு ஹிந்து மதத்தில் பெண்மைக்கு எப்படிப்பட்ட உயரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான நிரூபணமாகும்.
வரலாறு இது தான்:
பண்டொரு காலத்தில், ஒரு சமயம் பிருங்கி முனிவர் சிவபிரானை வணங்குவதற்குக் கைலாயம் சென்றார். பரமசிவனைத் தவிர மற்றுள்ளனவெல்லாம் அழிவுள்ளவை என்ற தனது எண்ணத்தினால் பார்வதி தேவியை வணங்க வேண்டாம் என்று நினைத்து பரமசிவனை மட்டும் அவர் வணங்கினார். இன்னொரு நாள் அவர் கைலாயம் சென்ற போது பார்வதி தேவியைப் பிரிவில்லாதபடி அணைத்தவாறு ஒரே ஆசனத்தில் சிவபிரான் அமர்ந்திருந்தார்.
இதைக் கண்ட பிருங்கி முனிவர் சிவபிரானை மட்டும் வணங்க வேண்டும் என்ற தனது கருத்தினால் ஒரு வண்டு உருவம் எடுத்தார். வண்டாகப் பறந்த அவர் கழுத்தில் இருந்த சந்து வழியாகப் புகுந்து சிவனை மட்டும் வலம் செய்யலானார்.
தேவியார் சினந்தார். பிருங்கி முனிவரை நோக்கி, ‘என்னை அவமதித்தனை. ஆகவே என் கூறு ஆன பொருளையும் நீக்கி விடு’ என்றார்.
உடனே பிருங்கி முனிவரின் உடலில் இருந்த ஊன் முதலியன கழன்று விட்டன.
பிருங்கி முனிவர் வலுவை இழந்தார். வலிமை போன காரணத்தால் முனிவர் கீழே சாயலானார். உடனே சிவபிரான் இன்னொரு கால் தோன்ற அருள் பாலித்தார்.
முனிவரிடம் சிவபிரான், “கிரணமின்றி சூரியன் இல்லை; சூடின்றி நெருப்பில்லை. ஆதலில் சக்தி இன்றி சிவம் இல்லை. சக்தி இன்றி இந்த சத்தன் இல்லை. இந்த உண்மை காணாது மயங்கினையே” என்று கூறி அவரைத் தேற்றினார்.
பிருங்கி உண்மை உணர்ந்து மகிழ்ந்தார். பார்வதி பரமேஸ்வரரை உளமாரத் தொழுதார்.
‘சிவன் வேறு, நாம் வேறு என்ற கருத்தினால் அல்லவோ ஒரு முனிவன் நம்மை இப்படி இகழ நேர்ந்தது’ என்று எண்ணிய பார்வதி தேவியார் கேதாரம், காசி, காஞ்சி, திருவண்ணாமலை முதலிய தலங்களில் தவம் புரிந்து பின்னர் திருச்செங்கோட்டை அடைந்தார்.
அங்கு கேதார விரதம் இயற்றி சிவ பரம் சுடரின் இடது பாகத்தைப் பெற்றார்.
ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் என்னும் திருப்பெயரைக் கொண்டு இருவரும் ஒன்றாக இணைந்து அருள் பாலிக்கலாயினர்.
திருச்செங்கோடு கொங்கு மண்டலத்தில் கீழ்கரைப் பூந்துறை நாட்டைச் சேர்ந்தது. திருச்செங்கோடு தற்போதைய ஈரோட்டிலிருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவிலும் சேலத்திலிருந்து தெற்கே 45 கிலோமீட்டர் தொலைவிலும் நாமக்கல்லிலிருந்து மேற்கே 32 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம். திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.
மூலவர் அர்த்தநாரீஸ்வரர்,
அம்பிகை பாகம் பிரியாள்.
வேலவனுக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.
இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் போது ஆணாகவும் மறு புறம் பார்க்கும் போது பெண் போலவும் தோற்றமளிப்பது ஒரு தெய்வீக விந்தையாகும்
இப்படிப்பட்ட அரிய தலம் கொங்கு மண்டலத்தில் உள்ளதேயாம் என்று கொங்கு மண்டல சதகம் பாடல் 13இல் பெருமையுடன் பதிவு செய்கிறது.
பாடல் இதோ:
நெடுவா ரிதிபுடை சூழுல கத்தி னிமலியுமை
யொடுவாகு பெற்ற திருமேனி காணு முயிர்கட்கெல்லாம்
நடுவாக நின்ற பரஞ்சோதி தானர்த்த நாரிச்சிவ
வடிவான துந்திருச் செங்கோடு சுழ்கொங்கு மண்டலமே.
பாடலின் பொருள் : கடல் சூழ்ந்த இந்த உலகில் உமா தேவியாரோடு சிவபிரான் அர்த்தநாரீஸ்வரர் என்று ஒரு வடிவான திருச்செங்கோடு மேவியது கொங்கு மண்டலமே ஆகும்.
பெண்ணின் பெருமையை உணர்த்தும் திருத்தலம் திருச்செங்கோடு என்பதில் ஐயமுண்டோ!
தமிழ் நாட்டிலுள்ள சில சைவக் கோவில்கள் மிகவும் பாழடைந்த, பரிதாப நிலையில் உள்ளன. வைணவக் கோவில்களை வைணவர்களே நன்கு பராமரிக்கிறார்கள்; அல்லது அந்த மடாதிபதிகள் (ஜீயர்கள் ) நன்கு நிர்வகிக்கின்றனர். பட்டாசார்யார்களின் வாட்ட சாட்டமான உடல் அமைப்புகளே இதற்கு சான்று.
நான் பிப்ரவரி 2023ல் சென்ற கோவில்களில் உண்டியலில் காசு போடவில்லை. அவை திராவிட திருடர்களுக்கு, இந்து தெய்வங்களைத் திட்டும் அயோக்கியர் கைகளில் சிக்கிவிடும் என்ற அச்சத்தால் இப்படிச் செய்கிறேன். பத்திரிக்கைச் செய்திகளும் என் அச்சத்தை நியாயப் படுத்துகின்றன. இன்னொரு விஷயமும் எனக்குப் புரியவில்லை. புதிய கோவில்களை ஏன் கட்டுகிறார்கள்?
கோவிந்தபுரத்தில் விட்டல் மந்திர் என்ற பெயரில் பிரமாண்டமான புதிய கோவிலை நிர்மாணித்து இருக்கிறார்கள். அதற்குச் செல்ல லிப்ட் LIFT இல்லை. வெய்யில் காலத்தில் சலவைக்கல் படிகளில் ஏறிச் சென்று தரிசிக்க வயதான பெரியோர்களால் இயலாது.
இந்தக் கோவில் எங்கள் லண்டனிலுள்ள நீஸ்டன் சுவாமி நாராயண் கோவில் NEASDEN SWAMINARAYAN TEMPLE IN LONDON போலத்தான் உள்ளது. அதாவது பொம்மைக் கண்காட்சி. ஆகமக் கோவில்கள் போல புனித வைப்ரேஷன்கள் DIVINE VIBRATIONS அங்கு இராது. ஆயினும் அப்படியே இளமை முதல், பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு உதவக் கூடும். நம்பிக்கைதானே முக்கியம்! சூட , தீபாராதனை, அபிஷேக ஆராதனை அல்லவே!! என்னுடைய சுவாமி நாராயண் நண்பர்கள் பூண்டு, வெங்காயம் வாசனை கூட அறியாதவர்கள்; தூய STRICT VEGETARIANS வெஜிட்டேரியன்கள் .இதுவல்லவோ பெருமை!!
xxxx
என் மனதில் எழுந்த கேள்விகள்????????????????????????
பழைய கோவில்கள் பாழடைந்து போகும் நிலையில் புதிய கோவில்கள் அவசியமா?
50, 60 அடி உயரத்தில் மார்பிள் / சலவைக்கல் படிகள் அமைத்தால் கிழவர்கள், கிழவிகள் ஏற முடியுமா?
லிப்ட் lift வைத்தால் புனிதமும் போய்விடும்; வீண் செலவும் ஏற்படும்.
புதிய கோவில்களுக்குத் தடை விதிக்க சாமியார்கள் மகாநாடு அறிவுரை சொல்லக்கூடாதா?
அதே கோவிந்தபுரத்தில் எல்லா சாமியார்களும் போட்டி போட்டுக்கொண்டு மடங்கள் அமைப்பது அவசியமா?
பிரம்மாண்டமான சிவன், ஆஞ்சனேயர் , ராமானுஜர், வீர சிவாஜி, பேனா சிலைகள் தேவையா?
அவர்கள் பெயரில் மிகப்பெரிய கல்யாண மஹால்கள், கூட்டம் நடத்தும் மண்டபங்கள்; மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்களைக் கட்டலாமே ; அவர்கள் பெயரில் சிறந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கலாமே , ஆராய்ச்சிசாலைகளை அமைக்கலாமே ; தபால்தலைகள், நாணயங்களை வெளியிடலாமே ஏனைய நாடுகள் இத்தகைய வீண் செலவுகளைச் செய்கிறார்களா? என்று சிந்திக்கலாமே?
XXX
எனது யோஜனைகள் MY SUGGESTIONS
எந்தக் கோவில் உண்டியலிலும் காசு போடாதீர்கள்.
திராவிட திருடர்களுக்கு, திராவிட கமிசன் ஏஜெண்டுகளுக்குத் தெரியாமல் பட்டர்களிடம் காசு கொடுங்கள்.
சில இடங்களில் இத்தகைய ஏஜெண்டுகள் பட்டர் தட்டில் விழும் பணத்தை பைகளில் நிரப்பிக் கொள்வதைக் கண்டேன் (பெரிய வரும்படி கோவில்களில், அல்லது திருவிழாக் காலங்களில் இப்படி நடக்கிறது.)
எந்தக் கோவிலுக்கும் பூ , தேங்காய் பழம் என்ற வடிவத்தில் செலவு செய்தால், சிறு வியாபாரிகளும் வயிற்றுப பிழைப்பை நடத்தலாம்.
xxxxx
நல்லதொரு காட்சியும் கண்டேன் ; 1000 பசுக்கள்
1000 COWS; BIG GO SAALAA
விட்டல் மந்திருக்கு எதிராக பெரிய கோ சாலா / பசு மடம் இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1000 பசுக்களை வளர்க்கிறார்கள். அதற்கு நன்கொடை கொடுத்தபோது ரசீதும் கொடுத்தார்கள். கண்ணுக்கு முன்னால் காணும் காட்சிக்கு பணம் கொடுத்து உதவுவது மகிழ்ச்சியும் திருப்தியும்/ மன நிறைவும் தந்தது . இந்தப் பசும்பால் நல்ல இடங்களுக்கு அனுப்பப்படுகிறது
இதை எல்லாம் பார்த்துவிட்டு சென்னைக்கு வந்து ஒரு பத்திரிக்கையைத் திறந்தபோது கோவிந்தபுரத்தில் மனைகள் விற்கப்படும் என்ற விளம்பரத்தையும் கண்டேன். கொஞ்ச காலத்தில் இந்த கிராமம் கமர்ஷியல் சென்டர் ஆகிவிடுமே என அச்சமும் மனதை ஆக்ரமித்தது .
நான் முதல் முதலில், ரிஷி கேஷ் சென்றது 1977ல்; கங்கை நதியைக் கண்டேன். ஆனந்தம் கொண்டேன். ரிஷிகேஷ் சிவானந்தர் ஆஸ்ரமத்தில் ஒரு பெளர்ணமி இரவில் தங்கி எளிமையான சாப்பாட்டையும் சாப்பிட்டேன் . மதுரைக்குத் திரும்பியவுடன், சிவானந்தர் புகழ் பரப்பும் தெய்வ நெறிக்கழகத்தினரிடம் இது பற்றி சொல்லி வியந்தேன்.
சாமிநாதா ! இப்போது நீ காணும் காட்சி உண்மையல்ல; 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதை நீ பார்த்திருக்கவேண்டும்; அதுதான் இமய மலை முனிவர்களின் தபோவனம் என்றனர்.
எனக்குக் கொஞ்சசம் ஏமாற்றம்தான். ஆனால் அ எல்லாம் மறைக்கும் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது .
ஆண்டு நினைவில்லை; 2003 என்று நினைக்கிறேன். என் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு, ரிஷிகேஷ், ஹரித்வார் முதலிய இடங்களுக்குச் சென்றேன். அங்கு கங்கை நதியைக் காண முடியவில்லை!!! கங்கை நதியின் இருபுறங்களிலும் கடைகள், கடைகள், கடைகள்!!! கங்கா தேவி மறைந்துவிட்டாள் . என்னுடன் வந்த ஹிந்தி பேசும் உறவினர்களிடம் படித்துறை எங்கே இருக்கிறது என்று கேளுங்கள் என்றேன். அவர்களும் ஒரு சிறிய குறுகிய படித்துறையைக் காட்டினார்கள். அங்கே விலைக்கு வாங்கிய கேன்களில் water cans வேண்டுமளவுக்கு ஒரிஜினல் கங்கா ஜலத்தை நிரப்பிக்கொண்டோம் . அதற்கு முன்னதாக கங்கையின் புனித நீரைத் தலையில் ப்ரோக்ஷ்சித்துக் கொண்டோம்.
இதே அனுபவம் புட்டபர்த்தியிலும் எங்களுக்குக் கிடைத்தது. 1962 அல்லது 1963 என்று நினைவு. குடும்பத்துடன் சத்ய சாய் பாபாவைத் தரிசிக்க காரில் சென்றோம். பெண்கள் தங்குவதற்கு மட்டும் ஒரு ஷெட் உள்ளது. ஆண்கள் ஆங்காங்கே படுத்துக் கொள்ளலாம் என்றனர்நாங்கள் சிலர் கார் சீட்டிலும் சிலர் கட்டாந் தரையில் போதைய விரித்தும் படுத்தோம் . நல்ல குளிர். போதுமான ஸ்வெட்டர்களுடன் சென்றோம்.காலையில் அருகிலுள்ள கூரைக் கொட்டகைகலில் குளிப்பதற்காக வெந்நீர் விலைக்கு வாங்கலாம் என்றனர். ஆளுக்கு ஒரு வாளி வெந்நீர் விலைக்கு வாங்கி குளித்தோம். அது நவம்பர் மாதம்.
கூட்டமே இல்லாத பிரசாந்தி நிலையத்துக்குள் எளிதில் சென்று பஜனையில் அமர்ந்தோம். காலையில் நல்ல கெட்டித்தயிர் மண் கலயத்தில் விலைக்குக் கிடைத்தது.
30, 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே புட்டபர்த்திக்குச் சென்றபோது மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் தென்பட்டன. பிரசாந்தி நிலையத்துக்குள் நுழைய லாட்டரி லக்கி பிரைஸ் முறை. வரிசை ஒவ்வொன்றுக்கும் Number எண் கொடுப்பார்கள் . குலுக்கலில் எந்த நம்பர் NUMBER வருகிறதோ அந்த வரிசை முதலில் செல்லும். பிரசாந்தி ஹாலுக்குள் நுழைவதற்கு முன்னர் எலெக்ட்ரானிக் கேட். மொபைல் போன், காமெரா முதலிய சாதனங்களுக்கு அனுமதி இல்லை.
உலகமும் தர்மமும் தலை கீழாக மாறிவிட்டது .
xxxx
கடைசி யோஜனை:– LAST SUGGESTION
கூட்டம் இல்லாத கோவிலுக்கு இப்போதே போய்விடுங்கள்
பள்ளி, கல்லூரி பரிட்சை நடக்கும் நேரத்தில் தலங்களுக்குப் போங்கள் .கூட்டம் இராது .
கூட்டம் வராத, திரைபோடாத நேரத்தை அறிந்து செல்லுங்கள்.
xxxxx
காஞ்சி மஹா சுவாமிகள் பிஸினஸ் !!!
காஞ்சி புரத்தில், ஓரிருக்கையில் காஞ்சி மகா சுவாமிகள் அதிஷ்டானம், மணி மண்டபம் இருப்பதில் பொருள் உண்டு. ஆனால் ஊருக்கு ஊர் அவர் பெயரில் மணி மண்டபம், கோவில் கட்டுவதில் அர்த்தமில்லை. அவர் பெயரில் வேத பாட சாலைகள் , ஸம்ஸ்க்ருதக் கல்வி நிலையங்களை அமைக்கலாம். இப்படி ஒரு புதிய மஹாசுவாமிகள் மணி மண்டபம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது. கட்டிடத்தைக் கட்டி பராமரிப்பதற்குப் பதிலாக வேத பாட சாலைகளை பராமரிப்பது, அவர்களுக்காக தங்கும் வசதிகளை செய்து கொடுப்பது புண்ணியமாக இருக்கும். அங்கு சிறிய அளவில் படங்களுடன் சந்நிதிகள் இருப்பது போதுமானது .
ஒரு 50, 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இவைகளை யார் நிர்வகிப்பர்? அவர்களுக்கு நமக்குத் தெரிந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் தெரியுமா? மஹா ஸ்வாமிகள் மணி மண்டபத்தை இதே பக்தி சிரத்தையுடன் பராமரிப்பாளர்களா ?
இது போன்ற விஷயங்களில் மடாதிபதிகள் தங்கள் கருத்துக்களைப் பட்டவர்த்தனமாகத் தெரிவிக்க வேண்டும்; காசியிலோ அயோத்தியிலோ, மதுராவிலோ, செட்டியார்கள் தங்கும் விடுதிகளைக் கட்டுவதில் பொருள் உண்டு. தமிழ்நாட்டில் மணி மண்டபங்கள், சிலைகள் தேவையா? சிந்திக்க வேண்டும். அவர்களுடைய சொற்பொழிவுகளை சிறிய பிரசுரங்களாக பல மொழிகளில் வெளியிடலாமே. இலவசமாக விநியோகிக்கலாமே
xxxx
ஒரு சுவையான கான்வர்சேஷன் INTERESTING COVERSATION
2022ல் ஒரு முறை இந்தியாவுக்குச் சென்றேன். அப்போது திருவண்ணா மலை கோவிலுக்குச் சென்றேன். கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருந்தது; இரண்டு குடும்பங்களின் அபூர்வ சந்திப்பு அங்கே வாயிலில் TEMPLE GATE நடந்தது. அதை நான் ஓட்டுக் கேட்காமலேயே என் காதில் சம்பாஷணை விழுந்தது.
என்ன குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்திருக்கிறீர்கள்?– முதல் குடும்பம்
ஓ அதுவா? பையன்களுக்கு இன்றுதான் கடைசி விடுமுறை நாள்;; பையன்களின் நச்சரிப்புத் தாங்கவில்லை; விடுமுறைக்கு எங்கும் கூட்டிச் சொல்லவில்லையே என்று இங்கு அழைத்து வந்தேன்.– இரண்டாம் குடும்பம்.
என் மனதில் தோன்றிய எண்ணம்:
அடக் கடவுளே! வண்டலூர் மிருகக் காட்சி சாலையும் இந்தக் கோவிலும் ஒன்றுதானோ!
கோவில் என்பது ஒரு மியூசியமோ!
எப்படியாகிலும் இருக்கட்டும்; பிஞ்சு உள்ளங்களுக்கு இந்தக் கடவுள்களை அறிமுகம் செய்துவைத்த குடும்பங்களைப் பாரட்டத்தானே வேண்டும்?
–சுபம்—
tags-புதிய கோவில்கள், சிலைகள், தேவையா, விட்டல் மந்திர் , கோவிந்தபுரம், கோ சாலை, 1000 பசுக்கள், என் யோஜனைகள் , மஹா ஸ்வாமிகள் , மணி மண்டபம், , பிஸினஸ்
ஒரு காட்டில் ஒரு முனிவரின் ஆஸ்ரமம் இருந்தது. அவர் கருணையே வடிவானவர். அந்த ஆஸ்ரமத்துக்கு வெளியே ஒரு சொறி நாய் வசித்தது. அது ஒரு சோனி நாய்; எலும்பும் தோலுமாகக் காட்சி அளித்தது. ஒருநாள் ஒரு ஓநாய் திடீரென்று தோன்றியது. அதைச் சாப்பிட இருந்த நேரத்தில் முனிவர் பார்த்துவிட்டார். உடனே தனது மந்திர சக்தியால் அதை பெரிய ஓநாய் ஆக்கினார். உடனே ஓநாயாக மாறிய அந்த நாய், காட்டிலிருந்து வந்த ஓநாயை விரட்டி அடித்தது.
நாட்கள் உருண்டோடின. ஒரு நாள் திடீரென்று ஒரு சிறுத்தை தோன்றியது. அது ஒநாயைத் தாக்க வரும் தருணத்தில் முனிவர் பார்த்துவிட்டார். உடனே சொறிநாயாகஇருந்து ஓநாயாக மாறிய பிராணியை நீ வலிமையான சிறுத்தை ஆகக்கடவது என்றார் . அந்த ஓநாயும் பெரிய சிறுத்தைப் புலியாக மாறி, காட்டிலிருந்து வந்த சிறுத்தையை விரட்டி அடித்தது.
வாரங்கள், மாதங்கள் சென்றன. ஒருநாள் காட்டிலிருந்து ஓரு மதயானை பிளிறல் சப்தத்துடன் ஒடி வந்தது. உடனே ஆஸ்ரமத்துக்கு வெளியே நின்ற சிறுத்தை அதன் மீது பாய்ந்தது. ஆனால் மத யானையை அதனால் சமாளிக்க முடியவில்லை. உடனே யானையின் எதிரி சிங்கம் என்பதால் முனிவர் அந்த சிறுத்தைப் புலியை சிங்கம் ஆக்கினார்.
யானைக்கு சிம்ம சொப்பனம் என்பது பழமொழி. அந்த சிங்கம் யானையை எளிதில் விரட்டி அடித்தது.
சிங்க ராஜா காட்டில் எதிர்க்கட்சி இன்றி உலவி வந்தார். பதவி மோகம் தலைக்கு ஏறியது. அது நினைத்தது- சொறிநாயாக இருந்த என்னை இன்று சிங்க ராஜா நிலைக்கு உயர்த்திய முனிவருக்கு எவ்வளவு சக்தி இருக்க வேண்டும். அவரையே சாப்பிட்டால் அது நமக்கு முனிவரின் அபூர்வ தவ வலிமையைக் கொடுத்துவிடும் என்று எண்ணியது.
இந்த தீய எண்ணத்துடன் ஆஸ்ரமத்தை அணுகியது. முனிவரோ தியானத்தில் அமர்ந்து இருந்தார். ஆனால் அவர் முக்காலமும் உணர்ந்த த்ரிகால ஞானி. சிங்கத்தின் தீய நோக்கம் அவருக்கு ஞான த்ருஷ்டியில் தெரிந்தது.
ஆஸ்ரமத்துக்குள் சிங்கம் நுழைவதைக் கண்டார்.
சீ நாயே !
ஓ நாயே !
வா நாயே !
போ நாயே !!!
என்று சொன்ன மாத்திரத்தில் அது ஓநாயாகி , சீ நாய் என்று சொல்லும்படி மீண்டும் சொறி நாயாகியது .
அவர் போ நாயே என்று சொன்னபோது அது போயாகிவிட்டது.
XXX
MY COMMENT’S
கீழ் மக்களை உயர் மட்டத்தில் வைத்தாலும் அவர்களின் நாய்க்குணம் மாறாது..
ஆன்மீகத்தில் உயர் நிலையை அடைந்த மாணிக்க வாசகர், அவரது திருவாசகத்தில் நூற்றுக்கும் மேலான இடங்களில் தன்னை நாயேன் என்று சொல்லி பாடுகிறார். உண்மையில் அவர் தன்னைச் சொல்லவில்லை .நாய்க்குணம் உடைய மனிதர்களின் பிரதிநிதியாக தன்னை முன்னிலைப்படுத்தி பாடுகிறார். நாய்க்கு சிம்மாசனம் கொடுத்தது போல என்னையும் உயர்த்தினாயே என்று பாடுகிறார். இந்தக் கதைக்குப் பொருத்தமான வரி அது.
பாடல் எண் : 28
கேட்டாரும் அறியாதான் கேடொன் றில்லான் கிளையிலான் கேளாதே எல்லாங் கேட்டான் நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங் கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான் எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே . பொருள்ஒருவராலும் கேட்டு அறியாதவனும், தனக்கு ஒரு கேடில்லாதவனும், உறவு இல்லாதவனும், கேளாமலே எல்லாம் கேட்பவனும் ஆகிய இறைவன், என் சிறுமை நோக்காது நாய்க்குத் தவிசிட்டாற் போலத் (தவிசு – இருக்கை; ஆசனம்) தன் அருகில் இருத்தி, காட்டுதற்கரிய தன் உண்மை நிலையைக் காட்டி, நான் எக் காலத்திலும் கேட்காத வேத சிவாகமங்களின் பொருள்களைக் கேட்பித்து, மீட்டும் நான் பிறவாமல் என்னைத் தடுத்து ஆட் கொண்டான். இது ஒரு விந்தையாகும்.
XXXX
கீழ் மக்களை ஆட்சியில் அமர்த்தினால் அவர்கள் குணம் மாறாது, தீய செயல்களை செய்வார்கள். இதை தசாவதாரக் கதைகளிலும் காண்கிறோம்.
தேளுக்கு அதிகாரம் கொடுத்தால் அது கொட்டிக்கொண்டே இருக்கும், நாயைக் குளி ப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக் கொண்டு ——— தின்னத்தான் போகும் என்ற பழ மொழிகளை நினைவுபடுத்தும் கதை இது .
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஏழை கோடீஸ்வரனாகி செய்த அற்புத சேவை!
ச.நாகராஜன்
ஒருவேளை உணவுக்கு வழி இன்றித் தெருவில் பிச்சை எடுக்க மனமின்றித் தவித்த ஒரு சிறு பையன் மனதில் உழைக்க உறுதி பூண்டு அனாதைகளைக் காப்பாற்றுவேன் என்று சபதம் செய்து அதில் வெற்றி பெற்றான் என்றால் ஆச்சரியமாக இல்லை?
உண்மை இது, வெறும் பொய்யுரை இல்லை.
ஸ்காட்லாந்தில் க்ளாஸ்கோவில் பிரம்மாண்டமாக இன்று விளங்கும் அனாதை விடுதிகளுக்கு ஒரு ஆச்சரியமான மூல கதை உண்டு.
அதன் ஹீரோ வில்லியம் க்வாரியர் (William Quarrier)
வில்லியம் க்வாரியர் 1829ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி க்ரீன்நாக் என்னுமிடத்தில் பிறந்தார். ஆனால் அவர் பின்னால் மூன்றாம் வயதிலேயே க்ளாஸ்கோவிற்கு இடம் பெயர்ந்தார். 1903ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி அவர் மறைந்தார்.
அவரது தந்தையார் அவரது மூன்றாம் வயதிலே மனைவியை விதவையாக்கி மூன்று குழந்தைகளை ஆதரவற்று விட்டு விட்டு மரணமடைந்தார். ஒரே ஏழ்மை நிறைந்த குடும்பம். சாப்பிடவே வழியில்லை. பள்ளிப் படிப்பை நினைக்கக் கூட முடியாது.
ஒரு சமயம் 36 மணி நேரம் எந்த உணவும் இல்லாமல் வாடி வதங்கிய அவர் தெருவிளக்கின் அடியில் வந்து நின்றார். யாராவது உதவி செய்வார்களா என்று பார்த்தார். ஒருவரும் வரவில்லை.
பிச்சை எடுக்கவோ மனம் கூசியது. பின் தயாரிக்கும் வேலையில் சேர்ந்த அவர் வாரத்திற்கு ஒரு ஷில்லிங் சம்பாதித்தார். கூடவே தானாகவே படிக்க ஆரம்பித்தார்.
மிகக் கடுமையாக உழைக்க ஆரம்பித்த வில்லியம் ஷூ தயாரிக்க ஆரம்பித்தார். தனது குடும்பத்தையும் தனது வருமானத்தை வைத்துக் காப்பாற்றினார்.
இன்னும் அதிக உழைப்புத் தேவையாக இருந்தது. இன்னும் உழைத்தார். 23ஆம் வயதில் ஒரு சிறிய கடையை வைத்தார். கடை பெரிதானது.
பணம் சற்று சேர்ந்தது. ஆனால் 2000 ஷில்லிங் அவருக்குத் தேவையாக இருந்தது – ஒரு அனாதை இல்லத்தை ஆரம்பிக்க.
சில நண்பர்கள் உதவினர். 3 அனாதைச் சிறுவர்களை வைத்து ஒரு அனாதை இல்லத்தை ஆரம்பித்தார். நாளடைவில் அது பெரிதாக வளர்ந்து 2000 அனாதைக் குழந்தைகளுக்குப் புகலிடத்தைத் தந்தது.
1872ஆம் ஆண்டில் தனது 43ஆம் வயதில் ஓரளவு வெற்றி பெற்ற போது அவர் தான் பட்ட கஷ்டத்தை இப்படிக் கூறினார்:
“When a little boy, I stood in the High Street of Glasgow, barefoot, bareheaded, cold and hungry, having tasted no food for a day and a half, and, as I gazed at each passer-by, wondering why they did not help such as I, a thought passed through my mind that I would not do as they when I would get the means to help others. “
1890களில் அவர் பெயரால் ஒரு கிராமமே உருவானது. க்வாரியர்’ஸ் கிராமத்தில் (Quarrier’s Village) 34 விடுதிகள் உருவாயின. கூடவே ஒரு பள்ளி, ஒரு தீயணைப்பு நிலையம், ஒரு தேவாலயம் உருவாயின.
உலகம் அவரை வியப்புடன் பார்க்க, அரிய சேவை செய்த அவர் 1903இல் மறைந்தார். தனது மனைவியின் அருகேயே அடக்கமாக விரும்பினார். அப்படியே க்வாரியர் கிராமத்தில், மவுண்ட் ஜியான் சர்ச்சில் உள்ள கல்லறையில் அவர் அடக்கம் செய்யப்பட்டார்.
இன்றும் க்வாரியர் அனாதை இல்லங்கள் தம் சேவையைத் தொடர்கின்றன.
உத்வேகம் ஊட்டும் உன்னத சேவா மனப்பான்மை கொண்டோரில் ஒருவர் க்வாரியர்!
Vyasa was the greatest writer and compiler in the world. No one in the world of literature comes closer to him. He is credited with the world’s longest epic Mahabharata and 18 Puranas. He compiled all these along with his original mater. They run to millions of pages with billions of words. Mahabharata itself has 200,000 lines with over million words.
No one in his or her life can easily read and understand the real meaning of all his writings. He lived just before the beginning of Kali Yuga in 3102 BCE. He knew that in the Age of Iron/ Kali Yuga , no one will have time to read them in Sanskrit or in translations. So he summarised the message of the Eighteen Puranas in two lines:
Harming others is Sin (Paapam); that is the gist of the contents conveyed by Vyasa in his 18 Puranas.
Purana is translated as Mythology by half baked westerners. That is wrong. Sumerian, Egyptian, Greek and Babylonian stories are rubbish myths. But Hindu Puranas are ancient lore, ancient history. They follow a structure. It is defined as the Pancha Lakshana (Five Principles) It has History, Geography, Morals etc.
Xxxx
Coming back to Vyasa’s message, ‘Help others’, we are told a story by famous religious speaker Sri Kripananda variar (kripaananda vaariyaar).
There was a king in a country who had 12 wise ministers. The king announced a big feast on a particular date, may be his birth day or his coronation day. All the government servants including the ministers were eagerly waiting for the day. Their imagination went wild. They thought of all the tastiest dishes in the country. The very thought made their mouths to water.
The big day came. The king took them to the dining hall. Their expectation was proved true. They were not disappointed. The tastiest dishes in the cookery book were all there. Hundreds of dishes were arranged in order. All the invitees were seated.
The king made a big announcement. No, it was an order by the king.
No one should eat with their hands bent. If anyone sees bending their hands while eating, the hands will be cut off. Here are my soldiers who will keep an eye on you to execute my orders.
Enjoy your meals, saying this, he went out.
All were surprised and shocked; dumbfounded and stunned. One of the wisest ministers stopped panicking and thought laterally. His lateral thinking helped all in the hall.
He announced,
Please stretch your hand and mix the food as we do it at home; but don’t take it to your mouth; with the stretched hand feed the nearby person. Every one heaved a sigh of relief and did what he said. They enjoyed the meals fully without leaving a single bit on their plates. The king entered the hall to see how they were coping with his order. He felt very happy to see everyone enjoying the meal.
He said ‘Stop Eating and Listen to me’.
I want everyone in the country to help his neighbour this way. That is the message I wanted to convey. Now you can eat normally with your hands.
This is what Vyasa also conveyed through his Eighteen Puranas. If everyone in the country help others, the world will be a paradise.
Xxx
Before finishing this story ,Sri Variar added one more illustration.
When you use your Index finger to say something, the other three fingers except thumb are folded and they point towards you.
If you say YOU ARE A FOOL pointing to someone the other three fingers say the same to you.
If you say YOU ARE A WISE MAN, the other three fingers say the same to you.
If you help one person, and many will help you or your family.
So helping others is Good and earns Punya.
(Hindus believe that earning Punya is like depositing money in your bank account in the heaven. Accumulating Paap/ sin is taking loan from the Bank of Heaven. Your bank balance will decide your fate after you die.)