RV.3-53-19 (with Khadira), a stately and beautiful tree
AV.20-129-7; 6-129-1
wood
xxx
126 a.SIPALA
Water plant, Blyxa Cylanica
RV.10-68-5 later form Saivala; Siyalya overgrown with Sipala plants.
AV 6-12-3
xxxx
127.SOMA
Cannot now be identified with certainty; variously identified:
1.Sacrostemmabrevistigma= Asclepias acida
2.S.intermedium= S.viminale
3.Periploca asphylla
4.Ephedra vulgaris
5.Cannabis sativa
RV. The whole of Ninth Mandala and Six hymns of other mandalas devoted to this plant. Soma is described the best among plants all trees prostrate to Soma who is their king.
Drink.
xxx
128.SOMAVATI
RV.5-10-97,7
One of the four principal medicinal plants in Rigveda
xxx
129.SPANDANA
A certain tree
RV.3-53-19
xxx
130.SPHURJAKA
Diospyros perigrina
SB.13-8-1-16
Timber, fruit
xxx
131.SRAKTYA
Cleodendron phlomidis
Amulet derived from its wood, according to commentators on AV.8-5-4-7,8
(See Bloomfield in Amer. Jour.Phil.7, 477)
Medicinal
xxx
132.SREKAPARNA
Nerium odorum
Taittriya Bra.3-6-6-3
Aiareya Bra.2-6-15
Medicinal
xxx
133.SUGANDHI TEJANA
Andropogan squarrosus
Tittr; Kathak, samhitas
Aitare, Panca. Bra
SB .3-5-2-17
Grass
xxx
134.SVADHA
A plant
AV.6-96-3
xxx
135.SVADHITI
A great tree with hard wood, according to Roth
RV.5-32-10; 9-96-6; 1-82-2
xxx
136.SYAMAKA
Millet
Echinochla colona var fumentacea
Tait, Mait, Vaja. Kath.Samhitas
SB.10-6-3-2
Food of pigeons – AV.20-35-12
Also Cha.Upa 3-14-3
Max Muller says Canary seed.
Cereal
xxxx
137.SYANDANA
Wood of a plant according to Roth
Kausika Sutra- 8-15
xxx
138.TAAJABHANGA
Ricinis communis
AV.8-8-3; Kau. Sut.14-14
Oil, medicinal
xxx
139.TALASA
Flacourtia cataphracta
AV 6-15-3
xxx
140.TARSTAAGHA
Tree
Kaus. Sut. 25-23
Its adjective tarstaaghi is found in AV.5-29-15
Weber thinks it is mustard plant.
xxxx
141.TANDI
AV 10-4-25
xxx
142.TILA, TIRYA
Sesamum indicum
AV.2-8-3; 6-140-2; 18-3-694-32
As an epithet of Kurambha- AV4-7-3
Many samhias, Upanishads
SB 9-1-1-3; often mentioned with Masa- AV6-140-2
Medicinal, Ritual
xxxx
143.TILVAKA
Symplocos racemosus
SB. 13-8-1-16
Yupa made of is wood
xxx
144.TRAYAMBANA
AV 8-2-6; also mentioned in Amarakosa
xxx
145.UDOJASA
One of the four principal medicinal plants
RV.10-97-7
xxx
146.UDUMBARA
Ficus glomerata
AV.19-31-1
Many samhitas and many brahmnas
Fruit as sweet as Madhu
Medicinal, eatable, ritual
Yupa and ladle made of its wood
Amulets- AV19-31-1
TO BE CONTINUED………………………….
Tags- Vedic Plants, Part 8, Soma, Sesamum, 4 principal, medical palnts, RV, AV
குடந்தைக்கு — அதாவது கும்பகோணத்துக்கு — சுமார் ஐந்து மைல் தொலைவில் ஸ்ரீவத்சம் என்ற பெயரில் முதியோர் குடியிருப்பு இருக்கிறது. அங்கே எங்கள் நண்பர் ஸ்ரீனிவாசன் வசிக்கிறார். அவரது அழைப்பை ஏற்று அங்கே தங்கினோம் . இந்த முறை 3 வார இந்திய விஜயத்தில் நான்கு நாட்களை அங்கு செலவிட்டோம்.
இந்தக் குடியிருப்பு — ஹோட்டல்– லாட்ஜ் என்பது முதியோர் இல்லம் ஆகும். இந்துக்கள் மட்டுமே வசிக்கும் இடம். பெரும்பாலும் பிராமணர்கள்தான் அங்கே இருந்தாலும், வெஜிட்டேரியன் விஷயங்களை அப்படியே பின்பற்றும் பிராமணர் அல்லாத சிலரும் வசிக்கிறார்கள். சொந்தக் கட்டிடம் வாங்கியோ அல்லது அறைகளை நீண்ட காலத்துக்கு வாடகைக்கு எடுத்தோ இங்கு பல முதியோர்கள் வசிக்கினறனர்.
மகன்களோ, மகள்களோ வெளிநாட்டில் குடியேறிய பின்னர், வயதான தாய் தந்தையரை இங்கே தங்க வைக்கின்றனர். இது போல சில ஊர்களில் உள்ளது . மேலும் பல குடியிருப்புகள் அவசியம்.
ஸ்ரீ வத்சம் குடியிருப்பில் சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் சிறிய அளவில் கட்டி வைத்திருக்கிறார்கள் ; சுப்ரபாதங்களும் ஸ்லோகக்ங்களும் காலையில் ஒலிக்கும்.
இந்த complex உள்ளேயே Divine Inn என்ற லாட்ஜும் உள்ளது. அப்பா, அம்மாவைப் பார்க்க வருபவர்களோ, என்னைப்போல நண்பர்களை பார்க்கச் செல்பவர்களோ ‘வசிப்போர் அறை’யிலும் தங்கலாம். பிரைவசி Privacy வேண்டுமானால் அறை எடுத்தும் தங்கலாம். நாங்கள் ஒரு Double Bedroom AC டபுள் பெட்ரூம் ஏஸி அறை எடுத்து 4 நாட்கள் இருந்தோம். நண்பர் மூலமாகப் போனதால் தினசரி வாடகை 1500 க்குப் பதிலாக 1300 ரூபாய்தான் கொடுத்தோம். ரூ.300 தள்ளுபடி.
xxx
நல்ல பிராமண உணவு
காலை ஐந்தரை மணிக்கு, கும்பகோணம் பில்டர் காப்பி. அதே போல மாலை மூன்றரை மணிக்கும் அசல் பில்டர் காப்பி Filter Coffee . பகல் 12 மணிக்குப் பின்னர் ரசம், சாம்பார், கறியுடன் சாப்பாடு. மாலை 7 மணி வாக்கில் டிபன் என்று சொல்லக்ககூடிய பலகார வகைகள். பெரும்பாலும் வெங்காயம் பூண்டு இராது.
ஆனால் உலகின் பல பகுதிகளில் இருந்து தாய் தந்தையரைப் பார்க்க வருவோருக்கு Divine Inn டிவைன் இன் மாடியில் சப்பாத்தி, தால் தால் Dhal , புட்கா Putka சஹிதம் சாப்பாடு உண்டு. எப்போதும் கிடைக்கும் இட்லி தோசை பொங்கல் வகையாறாக்களும் இருக்கும். மேலே, கீழே இரண்டு உணவு விடுதிகளிலும் சாப்பிடும் ஐட்டங்களுக்கு ஏற்ப நாம் பணம் கொடுக்கவேண்டும் . நல்ல ஏற்பாடு. அங்கேயே தங்கி வசிப்போர் சாப்பாடு வேண்டாம் என்று உபவாசம் இருக்கும் நாட்களும் உண்டு. அறையிலேயே சாப்பாட்டைப் (Room Service) பெரும் வசதியும் உண்டு.
xxx
அமாவாசைச் சாப்பாடு
நாங்கள் தங்கிய நாட்களில் (பிப்ரவரி 2023)ஒரு அமாவாசையும் வந்துவிட்டது. நானும் என் சகோதரனும் அறையிலேயே தர்ப்பணம் செய்துவிட்டு மதியச் சாப்பாட்டுக்குச் சென்றோம். மூன்றே ஐட்டம்கள்தான். சாதம் மோர்க்குழம்பு, வாழைக்காய் கறி (பொடித்தூவல்)
எங்களுக்கு டாக்சி ஓட்டி வந்தவர் பிராமணர் அல்ல. அவரிடம் மன்னிப்பு கேட்கும் தொனியில்
Sorry சாரி, நீங்கள் வேண்டுமானால் கும்பகோணம் வரை சென்று உங்களுக்குத் பிடித்த உணவைச் சாப்பிட்டு வாருங்கள் அல்லது மாடிக்குப் போய் சப்பாத்தி, தால் , புட்கா சாப்பிடுங்கள் என்றேன்.
ஸார் , 15 நாட்களுக்கு கூட நன் பிராமண உணவைத் திருப்தியாகச் சாப்பிடுவேன் என்றார் .
xxxx
இதைச் சொல்லும்போது வேறு ஒரு விஷயமும் ஞாபகத்துக்கு வருகிறது. என் தந்தை வெ . சந்தானம் மதுரை தினமணி பத்திரிக்கையின் பொறுப்பு ஆசிரியராக இருந்தார். வீட்டில் கல்யாணம், கார்த்திகை என்று வந்தால் தினமணி ஊழியர் அதிகாரிகள் 300 பேர் வரை சாப்பிட வருவார்கள். வெங்காயம், பூண்டு என்பதை பிராமணர்கள் அறியாத காலம் அ து. 300 ஊழியர்களும் ‘அய்யர் வீட்டு சாப்பட்டைப் போல ருசி வேறு எங்கும் இல்லை’ என்று சொல்லி மனம் மகிழ்ந்து சாப்பிடுவார்கள். இன்றோ வெங்காயம் இல்லாமல் சமைக்க பிராமணர்களுக்குத் தெரியுமா என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது .
xxxx
நான் வேலை பார்த்த இடத்தில் இரண்டு சீக்கிய பெண்மணிகளுடன் மதிய உணவுக்குச் செல்வேன். சில நாட்களில் நான் , வெங்காயம் பூண்டு உணவுகளைத் தவிர்ப்பேன். அவர்களும் என்னை விநோதமாகப் பார்ப்பார்கள். இது பற்றி ஒரு நாள் சம்பாஷணை Conversation எழுந்தது.
எங்களுக்கு எல்லாம் இந்த இரண்டும் இல்லாமல் சமைக்கத் தெரியாது. அலுவலத்திலிருந்து வீட்டுக்குச் சென்ற அடுத்த நிமிடத்தில் சமையல் அறைக்குள் நுழைந்து எங்களை அறியாமலேயே வெங்கா யம், பூண்டு இவைகளை வெட்டிவிட்டு பின்னர், இன்று என்ன சமைக்கலாம் என்று யோசிப்போம் என்றார்கள். அதாவது வெங்காயம்- பூண்டு இல்லாத வாழ்க்கை இல்லை.
மீண்டும் ஸ்ரீவத்சத்துக்குத் திரும்புவோம்.தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாமம் படிப்போர் ஸ்ரீவத்சம் என்ற சொல்லுக்கு அடுத்த படியாக கெளஸ்துபம் என்ற சொல் வருவதை அறிவார்கள். அந்தக் கெளஸ்துபம் பெயரில் மேலும் ஒரு பெரிய குடியிருப்பு உருவாகிறது. முதலில் ஸ்ரீவத்சம் போய் தங்கி உங்களுக்குத் பிடித்திருந்தால் கெளஸ்துபம் குடியிருப்பில் வீடு வாங்க அப்ளிகேஷன் போட்டு வையுங்கள்.
xxx
டாக்டர் வசதி
வயதானோர் வசிக்கும் இடத்தில் தினமும் உடல் நல பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்காக தினமும் டாக்டரும் இரண்டு நர்ஸுகளும் அங்கே குறிப்பிட்ட நேரத்தில் வருகிறார்கள்.
கும்பகோணத்தைச் சுற்றி 30, 40 கிலோ மீ ட்டர் சுற்று வட்டாரத்தில் 200 கோவில்கள் உள்ளன. ஆகவே யாத்திரைப் பிரியர்களுக்கு இந்த அமைதியான இடம் உதவும். அங்கேயே டாக்சி, ஆட்டோ வசதிகள் கிடைக்கும் என்றாலும், நம்முடைய சொந்த டாக்சியோ அல்லது காரோ இருப்பது அவசியம். நினைத்த நேரத்தில் புறப்பட்டு , இரவில் நினைத்த நேரத்தில் திரும்பலாம். நாங்கள் 4 நாட்களில் 40 கோவில்களையும் அதிஷ்டானங்களையும் தரிசித்து வந்தோம். காலையில் ஒரு ட்ரிப்.Trip ; மாலையில் ஒரு Trip . மதிய நேரத்தில் ஓய்வு.
xxxx
ஒரு சம்ஸயம் ! Doubt!
ஒரு வயதான நபரோ, தம்பதிகளோ இப்படிப்பட்ட இடத்தில் வசித்தால் போர் BOREDOM அடித்துவிடாதா என்ற எண்ணம்/ சந்தேகம் மனதில் எழுந்தது. என் நண்பர் அங்கு ஒன் றரை ஆண்டுகளாக வசித்து வருகிறார்.அவரால் வெளியே சென்று வரும் அளவுக்கு உடல் வலு இருப்பதால் ஆக்டி Active வாக உள்ளார். ஆனால் மிகவும் வயதானவர்கள் அங்கேயே பார்த்த முகத்தையே பார்த்துக் கொண்டு வாழவேண்டும். வீட்டில் இருந்தாலும் அதையேதான் செய்யப்போகிறார்கள்.
என் நண்பரிடம் கேட்டேன். இங்கு நீண்ட காலம் வசிப்பவர் எவ்வளவு காலம் இருந்தார் என்றேன். மூன்று ஆண்டுகள் என்று பதில் கொடுத்தார்.
ஆயினும் ஸ்ரீ வத்சம் நிர்வாகம் அவ்வப்போது உபந்யாசம், பாட்டுக் கச்சேரி, யோகா முதலியவற்றை ஏற்பாடு செய்து எல்லோரையும் ஆ னந்தப்படுத்த முயற்சி செய்கிறார்கள். நாங்கள் இருந்த நாட்களில் பெரிய சினிமாப்பாட்டு இன்னிசை நிகழ்ச்சி ஏற்பாடாகி இருந்தது.
சொந்தமாக வீடு வாங்கி இருப்பவர்கள் அங்கேயே சமைத்துச் சாப்பிடவும் வசதி உண்டு. சமைக்க விரும்பாதோருக்கு 24 மணி நேரமும் காப்பி, டிபன், சாப்பாடு வசதியும் உண்டு.
கார் அல்லது டாக்சியில் சென்று தாங்கித்தான் பாருங்களேன். காலையிலும் மாலையிலும் கோவில் தரிசனம் கிடைக்கும்
ஸ்ரீவத்சம் என்று கூகிள் செய்தாலேயே முழு விவரங்களும் கிடைத்துவிடும் .
We, SR Estates & SR Realtors – The premium real estate firms based in Kumbakonam have been operating in Kumbakonam and its surroundings for the last 10 years …
17 Nov 2022 — In this Project, they are going to build about 400 flats (approximately), and in this project also, they are going to build temples for Shiva …
–SUBAHAM—
Tags- ஸ்ரீவத்சம், குடியிருப்பு , பிராமணர், முதியோர், கும்பகோணம், Srivatsam, Divine Inn
திருவிடை மருதூர் , மாயவரம்- தஞ்சாவூர் மார்க்கத்தில் கும்பகோணத்திலிருந்து 7 கிலோ மீட்டர்.
திருவிடை மருதூர் ரயில் நிலையத்திலிருந்து கோவில் 2 பர்லாங் தூரத்தில் இருக்கிறது.
மூவர் பாடிய தலம்.
திருவிடை மருதூர் , திருப்புடை மருதூர், ஸ்ரீ சைலம் பற்றி காஞ்சி மகா சுவாமிகள் சொற்பொழிவுகளைப் படித்தோருக்கு மூன்று மருத மரத்தலங்களின் மஹிமை புரியும்
அர்ஜுன மரம் =மருத மரம்
xxxx
எங்களது பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின்போது தரிசித்த முக்கிய சிவன் கோவில் திருவிடை மருதூர் ஆகும். ஆந்திரத்திலும் நெல்லை வட்டாரத்திலும் உள்ள இரண்டு மருதூர்களுக்கு இடையில் இந்த ஊர் அமைந்திருப்பதால் இது இடை மருதூர் என்று அழைக்கப்படுகிறது . திரு என்ற அடைமொழியே தேவாரப்பாடல் பெற்ற தலம் என்பதைக் காட்டும். ஆகவே 1500 ஆண்டுக்கு முந்திய கோவில் இது.
திருவிடை மருதூர் தலம் மத்யார்ஜுனம் என்றும் அழைக்கப்படும். ஆந்திரத்தில் இருப்பது ஸ்ரீசைலம் இறைவன்- மல்லி கார்ஜூனர் ; திருநெல் வேலி வட்டாரத்தில் அம்பாசமுத்திரத்துக்கு அருகில் இருப்பது புடார்ஜுனம்.அர்ச்சுன / மரத்தின் பெயர் மூன்று ஊர்ப்பெயர்களிலும் இறைவன் பெயரிலும் உண்டு.அதுதான் தல விருட்சமும்.
சுவாமியின் திருநாமம் – மருதப்பர், மருதப்ப ஈஸ்வரர்
தேவியின் திருநாமம்- பெருநல மாமுலை நாயகி
xxx
திருவிடை மருதூர், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது. தைப்பூசத்தில் இங்கே ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம் . .பாசமொன்றிலராய் என்ற திருக்குறுந்தொகையில், அப்பர் பெருமான் , பூச ஸ்நானத்தைச் சிறப்பித்துப் பாடி இருக்கிறார்.
வரகுண பாண்டியனின் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிய தலம் இது. அவர் அநேக தொண்டுகள் செய்து முக்தி பெற்ற தலமும் இதுதான்
உருத்திரர், உமையம்மை, பிரம்மா, விஷ்ணு, பிள்ளையார், முருகர் பூஜித்த கோவில் .
இத்தலம் மஹா லிங்கம் என்றும் சுற்றியுள்ள தலங்கள் பல சுவாமிகளின் சந்நிதிகளும் என்றும் சொல்லுவர்.
கோவிலின் கிழக்கு வாயிலில் பட்டினத்தடிகளும், மேற்கு வாயிலில் பத்ரகிரியாரும் எழுந்தருளி இருந்தனர்.
பிரகாரத்தில் கயிலாயக் காட்சிகளைக் காணலாம்.
திருவிடை மருதூர் தெருவழகு , திருவாரூர்த் தேரழகு என்பது பழமொழி. நான்கு பெரிய கோபுரங்களும், பெரிய தெருக்களும், திருக்குளமும் உடையது..
இங்கு மூகாம்பிகைக்கு தனி சந்நிதி இருக்கிறது. அவர் மவுனமாக இருந்து தவம் செய்த்ததால் இப்பெயர். பெரிய கோவில் பிரகாரத்துக்கு அஸ்வமேத பிரகாரம் என்று பெயர்.அதை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த புண்ணியம் கிட்டும் என்றும், பேய் பிடித்தவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் வலம் வந்தால் நோய்கள் நீங்கிவிடும் என்பதும் நம்பிக்கை.
கர்நாடகாத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகையை நமக்கு நினைவுபடுத்தும் சந்நிதி
xxxx
149 கல்வெட்டுகள் தரும் அரிய செய்திகள்
இந்த தலம் பற்றிய கல்வெட்டுகள் 149. அவை பராந்தகன் (CE 905-947) குலோத்துங்கன், வரகுண பாண்டியன், சுந்தர பாண்டியன் முதலிய மன்னர்கள் காலத்தவை .
கோவில் கல்வெட்டுகள் , அரிய விஷயங்களை நமக்கு அளிக்கின்றன.
1.முதலாம் ராஜேந்திரன் மூன்றாம் ஆட்சி ஆண்டில் ஏக நாயகன் வாசலுக்கு விளக்குப்போட ஆடுகள் அளித்த செய்தி இருப்பதால் மகாலிங்க சுவாமிக்கு ஏக நாயகன் என்ற பெயர் இருந்ததை அறிகிறோம்.
2.இங்கு உள்ள சோமாஸ்கந்தர் ஆடல் விடங்கத் தேவர் என்று அழைக்கப்பட்டதை ஒரு கல்வெட்டு காட்டுகிறது
3.முதல் பராந்தகன் 37-ஆம் ஆட்சி ஆண்டில் திருவாதிரை, சதயம்,அமாவாசை நாட்களைக் கொண்டாட மானியம் கொடுத்து இருக்கிறான் .
4.மூலஸ்தான தெற்குப் பக்கத்திலுள்ள பூர்ண கணபதிக்கு எட்டு இலைக் காசுகள் மான்யம் கொடுத்ததால் அந்த விநாயகருக்கு பூர்ண கணபதி பெயர் இருந்ததும் தெ ரகிறது
5.தைப்பூச விழா பற்றியும் சில கல்வெட்டுகள் பேசுகின்றன.
6. மஹா லிங்க சுவாமிக்கு தினமும் செண்பகப்பூ சாத்தி வர, திருவெண்காடு பிச்சனால் நிபந்தம் அளிக்கப்பட்டது ஒரு கல்வெட்டில் காணப்படுகிறது
7.சோழன் இராஜகேசரி வர்மன் காலத்தில் (CE 985-1003), பத்தாவது ஆட்சி ஆண்டில் 278ம் நாளில் அரசி பஞ்சவன் மாதேவியரால் உமா சகிதருடைய தங்க உருவம் அமைக்கப்பட்டது .
ஒன்பதாம் ஆண்டில் நம்பிராட்டியார் பஞ்சமாதேவியால் 9 கழஞ்சு பொன் வழங்கப்பட்டது
9. பல கல்வெட்டுகள், திரு மஞ்சனம் கொண்டு வர, மண் குடங்கள் அளிக்கப்பட்டதைக் காட்டுவதால் அபிஷேகத்துக்கு மண் குடங்களில் தீர்த்தம் கொண்டு வரப்பட்டதையும் அறிகிறோம்.
10. விக்கிரம சோழனின் ஐந்தாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டு மாணிக்கக்கூத்தர் கோவிலை குறிப்பிடுகிறது. இது நடராஜர் கோவிலா என்பதை உறுதிப டக் கூற முடியவில்லை
11. ஆறலூரிலுள்ள வாணாதிராயர் , ஆளுடைய பிள்ளையார் சிலை அமைக்க பணம் கொடுத்தான்
12.ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய நம்பி இவர்களுடைய படிவங்களை அமைக்க , வரியில்லாத நிலத்தை, இருமரபுந் தூய பெருமாள் , சதுர்வேதி மங்கலத்தில் அளித்தான் .
13.விக்கிரம பாண்டியன் சாந்தி திருவிழா என்ற ஒரு விழாக் கொண் டாடப்பட்டதை , அவனது கால கல்வெட்டு அறிவிக்கிறது .
14. நாலாவது பிரகாரத்திலுள்ள மூகாம்பிகைப் பிடாரி, யோகிருந்த பரமேச்வரி என்று அழைக்கப்படுகிறார் .
15. ஏனைய கல்வெட்டுகள், அரசனும் அரசியும், கோவிலில் விளக்கீட்டுக்காக, நிலமும், பொன்னும், ஆடும் அ ளித்தமை அறிவிப்பின.
If you appoint people with inherent bad qualities in higher posts, that will harm you. People with bad qualities seldom change. There may be a few exceptions. There is a proverb in Tamil that says You can never straighten the tail of a dog. There is also another Tamil proverb that says Even if you bathe a dog and place it in the hall of your house, that will run away to eat the XYZ. There is another beautiful Tamil proverb which says If you give authority to a scorpion that will always sting you.
Nature or Nurture what decides one’s fate is answered in the following story. Narrating this story Sri Kripananda Varaiar, a famous Tamil religious speaker, advised his audience not to elevate people with low virtues to higher positions.
Xxx
Story of a Mangy Dog
There was a mangy dog living outside the Ashram of a saint. An ashram is a simple hut where a saint lives. This saint was full of compassion. And this Ashram was just outside the town where the forest begins.
The mangy dog was skinny and looked like a skeleton.
One day a wolf appeared suddenly from the forest and tried to eat the dog. The saint who watched it through his window immediately changed the dog into a big wolf by his power. And the dog that became a wolf chased the forest wolf.
Months rolled by. A tiger came to the Ashram and tried to devour the big wolf. The saint who watched it made the wolf into a large tiger by his magical power. And the larger tiger chased the forest tiger back into the forest.
Now years rolled by. There came a mad elephant blaring towards the Ashram. And the large tiger was ready to attack the elephant to save itself and the Ashram.
The saint thought of an idiom which says it is like a lion in the dream of an elephant. The meaning is that elephants fear lions even in a dream. So the saint changed the tiger into a lion and the blaring elephant ran back into the forest.
Now the dog-wolf-tiger- changed lion was the king of the forest. As Bacon says ‘Power corrupts; absolute power corrupts absolutely’, the lion became arrogant and vicious. It thought Oh My God. Our saint has a lot of power through his penance. If I eat him, I will get all his powers. Thinking this way, the lion peeped through the window of the ashram. The saint was a Tri Kaala Jnaani that means One Who can see the Past, Present and Future. When the lion entered the Ashram with very bad thoughts, the saint called it
Oh Ye Dog, Oh Ugly Dog, Go back Dog
Immediately,it changed back to its original form. The mangy dog was chased away.
This is how the low lives behave. We see bad people in power lose all morals and harm only good people. They are always anti religion.
Never give them higher positions.
Xxx
In Hindu religion, dog is praised as a grateful animal. At the same time, it is seen as a dirty animal. Even in Bhagavad Gita it is portrayed as a low life. Krishna says Panditaah Sama darsinah 5-18
vidyā-vinaya-sampanne brāhmaṇe gavi hastini śhuni chaiva śhva-pāke cha paṇḍitāḥ sama-darśhinaḥ
BG 5.18: The truly learned, with the eyes of divine knowledge, see with equal vision a Brahmin, a cow, an elephant, a dog, and a dog-eater.
The Vedas do not support the view that the Brahmins (priestly class) are of higher caste, while the Shudras (labor class) are of lower caste. The perspective of knowledge is that even though the Brahmins conduct worship ceremonies, the Kṣhatriyas administer society, the Vaiśhyas conduct business, and the Shudras engage in labor, yet they are all eternal souls, who are tiny parts of God, and hence alike.
Xxx
Manikkavasagar (maanikkavaasagar) was a great Saivite saint. He called himself A DOG in over hundred places in his famous Hymn Tiruvasagam.
Though he was a great person he used the word DOG to represent the common man. In one of the hymns, he says You elevated me to such a higher place that looks like Enthroning a dog as a king. We are reminded of those lines when we read the story above.
TIRU SATAKAM- Section 5 of TIRU VASAGAM
28. No one has heard of him. No one knows him. He is faultless. He has no relatives. He knows everything and hears everything. Your devotees wait for you sleeplessly. I am like a dog yet you put me up on a seat, made me your devotee and showed me things that you have never shown to anyone. You made me hear things that no one has ever heard. You removed my future births and made me yours. What a wonder you do for me! [32]
எனது பிப்ரவரி 2023 இந்திய விஜயத்தின் போது சில திவ்ய தேசங்களுக்கு சென்று பெருமாளைத் தரிசித்தேன்.
முதலில் ஒப்பில்லாத அப்பன்/ உப்பிலியப்பன் கோவிலுக்குச் செல்வோம்.
கோவிலுக்குள் நான் பட்டாச்சார்யாவிடம் கேட்ட கேள்வி:
இப்போதும் உப்பில்லாத பிரசாதம்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறதா?
அவர் ‘ஆமாம்’ என்று விடை கொடுத்தார்.
ஒப்பில்லாத அப்பன் என்பதும் உப்பிலியப்பன் என்பதும் சரிதான். எல்லா மொழிகளிலும் பல பொருள் உடைய சொற்களும் விஷயங்களும் உண்டு. நேற்று முன் தினம் கிருபானந்த வாரியாரின் சுந்தர காண்ட சொற்பொழிவைக் கேட்டேன். கம்ப ராமாயணத்தில் ஒரே பாடலுக்கு ஆறுவிதமாகப் பதம்பிரித்து பொருள் சொன்னார். அத்தனையும் பொரு த்தமாகவே இருந்தன.
108 திவ்ய தேசங்களில், கும்பகோணம் அருகே உள்ள பூமாதேவி சமேத ஒப்பிலியப்பன் பெருமாள் கோயில் 13-வது திவ்ய தேசமாக போற்றப்படுகிறது. தென் திருப்பதி என்று இத்தலம் சிறப்பு பெற்றுள்ளதால், இப்பெருமாளுக்கும் தனி சுப்ரபாதம் உண்டு.
நாங்கள் கும்பகோணத்திலிருந்து காரில் சென்றோம். சுமார் 7 கிலோமீட்டர்.
தென் திருப்பதி என்றும் ,திரு விண்ணகர் என்றும் மார்க்கண்டேய க்ஷேத்ரம் என்றும் அழைக்கப்படுகிறது இது.
திருமங்கை ஆழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட து ; அதாவது பாடப்பெற்றது. மொத்தம் 47 பாசுரங்கள்.
xxxxx
இந்தக் கோவிலின் சிறப்பு என்ன?
திருப்பதிக்குப் போக இயலாதவர்கள், இதையே திருப்பதியாக நினைத்து, பாலாஜிக்கு- வெங்கடாசலபத்திக்கு- செய்யவேண்டிய பிரார்த்தனைகளை இங்கேயே செய்கின்றனர். இதற்கு காரணம் இவரை வெங்கடேசனின் தமையனாராகக் கருதுவதே.
மிருகண்டு முனிவரின் பத்தினியின் விருப்பப்படி பெருமாளுக்கு உப்பில்லாத தளிகை நைவேத்யம். உப்புள்ள பண்டங்களை கோவிலுக்குள் எடுத்துச் செல்வதே பாபம் என்றும் கருதப்படுகிறது.
திருமணம் புரிந்த நாள்:
எம்பெருமான் பூமிப்பிராட்டியை ஐப்பசி மாதத்தில் திருவோணத்தன்று மணந்து கொண்டான். ஆண்டுதோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் தொடங்கி பல்வகை இசை நிகழ்ச்சிகளுடன் 12 நாட்கள் நடந்து வருகிறது.
இத்திருகல்யாணத்தில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி குழந்தை பேறு கிட்டும் என நம்பப்படுகிறது
சிரவணம் = திரு ஓணம்
நம்மாழ்வாருக்கு ஐந்து வடிவங்களில் காட்சி அளித்துள்ளார். அவை பொன்னப்பன், மணியப்பன், முத்தப்பன், என்னப்பன், திருவிண்ணகரப்பன்.
xxxx
அமெரிக்காவில் உப்புக்குத் தடை
மனிதர்கள் சேர்த்துக்கொள்ளும் காய்கறி பழங்களில் உள்ள உப்புச் சத்தே உடலுக்குப் போதுமானது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனால் அமெரிக்காவில் உப்பு பற்றி எச்ச ரிக்கும் அறிவிப்பை, ஓவ் வொரு உணவு விடுதியிலும் வைத்திருப்பார்கள் ;ஒரு கருப்பு ச் சட்டமிட்ட இடத்துக்குள் உப்பை மறைத்து வைக்க வேண்டும் என்று 2016ம் ஆண்டில் நியூயார்க் நீதிபதி உத்தரவிட்டார்..உப்பிலியன் இதற்கெல்லாம் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே No Salt Policy நோ சால்ட் பாலிசியைப் பின்பற்றினார்.ரிக் வேதத்தில் உப்பு குறிப்பிடப்படவில்லை. சர்க்கரை மட்டுமே காணப்படுகிறது
Xxxx
ஆழ்வார்களால் படப்பட்டதால் இந்தக் கோவில் குறைந்தது 1500 ஆண்டு பழமை உடையது எனலாம்.
இந்தக் கோவிலில் பணம் செலுத்தி பெருமாள் கல்யாண உற்சவம் முதலியனவும் செய்யலாம்.
ஒவ்வொரு மாதமும் சிரவண நட்சத்தன்று சிரவண தீபம் எடுத்துச் சென்று குறி சொல்வது விசேஷம்.
ஒப்பிலியப்பன்- நிகரற்றவன் – ஸ்ரீநிவாசன் இங்குள்ள விக்ரகங்கள்
திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்ற நின்ற திருக்கோலம்
பகவத் கீதையில் வரும் முக்கிய வாசகமான மாம் ஏகம் சரணம் வ்ரஜ = என் ஒருவனையே சரண் அடை , என்ற வாசகம் எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது.
Judge upholds NYC rule on restaurant salt warnings 2016 news
NEW YORK (Reuters) – A New York judge on Wednesday shot down a challenge by a restaurant trade group, upheld a city rule requiring many chain eateries to post warnings on menu items that are high in sodium.
The rule, believed to be the first of its kind in the United States, mandates restaurants with 15 or more locations nationwide to post a salt shaker encased in a black triangle as a warning symbol next to menu items with more than 2,300 milligrams of sodium, the daily limit recommended by many nutritionists.
“Information is power,” Justice Eileen Rakower of New York state Supreme Court in Manhattan said in a ruling from the bench. Unlike the city’s unsuccessful large-soda ban, she said, the rule did not restrict the use of sodium.
New York City adopted the rule, which took effect in December, to help lower blood pressure and reduce the risk of heart attacks and strokes.
The National Restaurant Association, a restaurant trade group, then sued the city’s Board of Health saying the rule unfairly burdened restaurant owners.
In court on Wednesday, Rakower denied the group’s motion for a preliminary injunction to stop enforcement of the rule. Starting March 1, violators will be punished by $200 fines. In addition to chain restaurants, the rule also applies to concession stands at some movie theaters and sports stadiums.
Xxx
பேயாழ்வார் பாசுரங்கள் 2342, 2343
2342. பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்,
கொண்டங் குறைவார்க்குக் கோயில்போல், – வண்டு
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை,
இளங்குமரன் றன் விண் ணகர். 61
2343. விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடம்,
மண்ணகரம் மாமாட வேளுக்கை, – மண்ணகத்த
தென்குடந்தை தேனார் திருவரங்கம் தென்கோட்டி,
தன்குடங்கை நீரேற்றான் தாழ்வு. 62
Xxxx subham xxxx tags–ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன், பகலிராப்பொய்கை, திரு விண்ணகர், உப்பு, பிரசாதம், தளிகை , இல்லாத , no salt policy
தன் உடலில் அம்பிகைக்குப் பாதி இடம் கொடுத்து சிவபிரான் அர்த்தநாரீஸ்வரராக ஆன வரலாறு ஹிந்து மதத்தில் பெண்மைக்கு எப்படிப்பட்ட உயரிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான நிரூபணமாகும்.
வரலாறு இது தான்:
பண்டொரு காலத்தில், ஒரு சமயம் பிருங்கி முனிவர் சிவபிரானை வணங்குவதற்குக் கைலாயம் சென்றார். பரமசிவனைத் தவிர மற்றுள்ளனவெல்லாம் அழிவுள்ளவை என்ற தனது எண்ணத்தினால் பார்வதி தேவியை வணங்க வேண்டாம் என்று நினைத்து பரமசிவனை மட்டும் அவர் வணங்கினார். இன்னொரு நாள் அவர் கைலாயம் சென்ற போது பார்வதி தேவியைப் பிரிவில்லாதபடி அணைத்தவாறு ஒரே ஆசனத்தில் சிவபிரான் அமர்ந்திருந்தார்.
இதைக் கண்ட பிருங்கி முனிவர் சிவபிரானை மட்டும் வணங்க வேண்டும் என்ற தனது கருத்தினால் ஒரு வண்டு உருவம் எடுத்தார். வண்டாகப் பறந்த அவர் கழுத்தில் இருந்த சந்து வழியாகப் புகுந்து சிவனை மட்டும் வலம் செய்யலானார்.
தேவியார் சினந்தார். பிருங்கி முனிவரை நோக்கி, ‘என்னை அவமதித்தனை. ஆகவே என் கூறு ஆன பொருளையும் நீக்கி விடு’ என்றார்.
உடனே பிருங்கி முனிவரின் உடலில் இருந்த ஊன் முதலியன கழன்று விட்டன.
பிருங்கி முனிவர் வலுவை இழந்தார். வலிமை போன காரணத்தால் முனிவர் கீழே சாயலானார். உடனே சிவபிரான் இன்னொரு கால் தோன்ற அருள் பாலித்தார்.
முனிவரிடம் சிவபிரான், “கிரணமின்றி சூரியன் இல்லை; சூடின்றி நெருப்பில்லை. ஆதலில் சக்தி இன்றி சிவம் இல்லை. சக்தி இன்றி இந்த சத்தன் இல்லை. இந்த உண்மை காணாது மயங்கினையே” என்று கூறி அவரைத் தேற்றினார்.
பிருங்கி உண்மை உணர்ந்து மகிழ்ந்தார். பார்வதி பரமேஸ்வரரை உளமாரத் தொழுதார்.
‘சிவன் வேறு, நாம் வேறு என்ற கருத்தினால் அல்லவோ ஒரு முனிவன் நம்மை இப்படி இகழ நேர்ந்தது’ என்று எண்ணிய பார்வதி தேவியார் கேதாரம், காசி, காஞ்சி, திருவண்ணாமலை முதலிய தலங்களில் தவம் புரிந்து பின்னர் திருச்செங்கோட்டை அடைந்தார்.
அங்கு கேதார விரதம் இயற்றி சிவ பரம் சுடரின் இடது பாகத்தைப் பெற்றார்.
ஶ்ரீ அர்த்தநாரீஸ்வரர் என்னும் திருப்பெயரைக் கொண்டு இருவரும் ஒன்றாக இணைந்து அருள் பாலிக்கலாயினர்.
திருச்செங்கோடு கொங்கு மண்டலத்தில் கீழ்கரைப் பூந்துறை நாட்டைச் சேர்ந்தது. திருச்செங்கோடு தற்போதைய ஈரோட்டிலிருந்து கிழக்கே 18 கிலோமீட்டர் தொலைவிலும் சேலத்திலிருந்து தெற்கே 45 கிலோமீட்டர் தொலைவிலும் நாமக்கல்லிலிருந்து மேற்கே 32 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயம். திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.
மூலவர் அர்த்தநாரீஸ்வரர்,
அம்பிகை பாகம் பிரியாள்.
வேலவனுக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.
இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் போது ஆணாகவும் மறு புறம் பார்க்கும் போது பெண் போலவும் தோற்றமளிப்பது ஒரு தெய்வீக விந்தையாகும்
இப்படிப்பட்ட அரிய தலம் கொங்கு மண்டலத்தில் உள்ளதேயாம் என்று கொங்கு மண்டல சதகம் பாடல் 13இல் பெருமையுடன் பதிவு செய்கிறது.
பாடல் இதோ:
நெடுவா ரிதிபுடை சூழுல கத்தி னிமலியுமை
யொடுவாகு பெற்ற திருமேனி காணு முயிர்கட்கெல்லாம்
நடுவாக நின்ற பரஞ்சோதி தானர்த்த நாரிச்சிவ
வடிவான துந்திருச் செங்கோடு சுழ்கொங்கு மண்டலமே.
பாடலின் பொருள் : கடல் சூழ்ந்த இந்த உலகில் உமா தேவியாரோடு சிவபிரான் அர்த்தநாரீஸ்வரர் என்று ஒரு வடிவான திருச்செங்கோடு மேவியது கொங்கு மண்டலமே ஆகும்.
பெண்ணின் பெருமையை உணர்த்தும் திருத்தலம் திருச்செங்கோடு என்பதில் ஐயமுண்டோ!
தமிழ் நாட்டிலுள்ள சில சைவக் கோவில்கள் மிகவும் பாழடைந்த, பரிதாப நிலையில் உள்ளன. வைணவக் கோவில்களை வைணவர்களே நன்கு பராமரிக்கிறார்கள்; அல்லது அந்த மடாதிபதிகள் (ஜீயர்கள் ) நன்கு நிர்வகிக்கின்றனர். பட்டாசார்யார்களின் வாட்ட சாட்டமான உடல் அமைப்புகளே இதற்கு சான்று.
நான் பிப்ரவரி 2023ல் சென்ற கோவில்களில் உண்டியலில் காசு போடவில்லை. அவை திராவிட திருடர்களுக்கு, இந்து தெய்வங்களைத் திட்டும் அயோக்கியர் கைகளில் சிக்கிவிடும் என்ற அச்சத்தால் இப்படிச் செய்கிறேன். பத்திரிக்கைச் செய்திகளும் என் அச்சத்தை நியாயப் படுத்துகின்றன. இன்னொரு விஷயமும் எனக்குப் புரியவில்லை. புதிய கோவில்களை ஏன் கட்டுகிறார்கள்?
கோவிந்தபுரத்தில் விட்டல் மந்திர் என்ற பெயரில் பிரமாண்டமான புதிய கோவிலை நிர்மாணித்து இருக்கிறார்கள். அதற்குச் செல்ல லிப்ட் LIFT இல்லை. வெய்யில் காலத்தில் சலவைக்கல் படிகளில் ஏறிச் சென்று தரிசிக்க வயதான பெரியோர்களால் இயலாது.
இந்தக் கோவில் எங்கள் லண்டனிலுள்ள நீஸ்டன் சுவாமி நாராயண் கோவில் NEASDEN SWAMINARAYAN TEMPLE IN LONDON போலத்தான் உள்ளது. அதாவது பொம்மைக் கண்காட்சி. ஆகமக் கோவில்கள் போல புனித வைப்ரேஷன்கள் DIVINE VIBRATIONS அங்கு இராது. ஆயினும் அப்படியே இளமை முதல், பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு உதவக் கூடும். நம்பிக்கைதானே முக்கியம்! சூட , தீபாராதனை, அபிஷேக ஆராதனை அல்லவே!! என்னுடைய சுவாமி நாராயண் நண்பர்கள் பூண்டு, வெங்காயம் வாசனை கூட அறியாதவர்கள்; தூய STRICT VEGETARIANS வெஜிட்டேரியன்கள் .இதுவல்லவோ பெருமை!!
xxxx
என் மனதில் எழுந்த கேள்விகள்????????????????????????
பழைய கோவில்கள் பாழடைந்து போகும் நிலையில் புதிய கோவில்கள் அவசியமா?
50, 60 அடி உயரத்தில் மார்பிள் / சலவைக்கல் படிகள் அமைத்தால் கிழவர்கள், கிழவிகள் ஏற முடியுமா?
லிப்ட் lift வைத்தால் புனிதமும் போய்விடும்; வீண் செலவும் ஏற்படும்.
புதிய கோவில்களுக்குத் தடை விதிக்க சாமியார்கள் மகாநாடு அறிவுரை சொல்லக்கூடாதா?
அதே கோவிந்தபுரத்தில் எல்லா சாமியார்களும் போட்டி போட்டுக்கொண்டு மடங்கள் அமைப்பது அவசியமா?
பிரம்மாண்டமான சிவன், ஆஞ்சனேயர் , ராமானுஜர், வீர சிவாஜி, பேனா சிலைகள் தேவையா?
அவர்கள் பெயரில் மிகப்பெரிய கல்யாண மஹால்கள், கூட்டம் நடத்தும் மண்டபங்கள்; மருத்துவ மனைகள், பள்ளிக்கூடங்களைக் கட்டலாமே ; அவர்கள் பெயரில் சிறந்த மாணவர்களுக்கு உபகாரச் சம்பளம் கொடுக்கலாமே , ஆராய்ச்சிசாலைகளை அமைக்கலாமே ; தபால்தலைகள், நாணயங்களை வெளியிடலாமே ஏனைய நாடுகள் இத்தகைய வீண் செலவுகளைச் செய்கிறார்களா? என்று சிந்திக்கலாமே?
XXX
எனது யோஜனைகள் MY SUGGESTIONS
எந்தக் கோவில் உண்டியலிலும் காசு போடாதீர்கள்.
திராவிட திருடர்களுக்கு, திராவிட கமிசன் ஏஜெண்டுகளுக்குத் தெரியாமல் பட்டர்களிடம் காசு கொடுங்கள்.
சில இடங்களில் இத்தகைய ஏஜெண்டுகள் பட்டர் தட்டில் விழும் பணத்தை பைகளில் நிரப்பிக் கொள்வதைக் கண்டேன் (பெரிய வரும்படி கோவில்களில், அல்லது திருவிழாக் காலங்களில் இப்படி நடக்கிறது.)
எந்தக் கோவிலுக்கும் பூ , தேங்காய் பழம் என்ற வடிவத்தில் செலவு செய்தால், சிறு வியாபாரிகளும் வயிற்றுப பிழைப்பை நடத்தலாம்.
xxxxx
நல்லதொரு காட்சியும் கண்டேன் ; 1000 பசுக்கள்
1000 COWS; BIG GO SAALAA
விட்டல் மந்திருக்கு எதிராக பெரிய கோ சாலா / பசு மடம் இருக்கிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 1000 பசுக்களை வளர்க்கிறார்கள். அதற்கு நன்கொடை கொடுத்தபோது ரசீதும் கொடுத்தார்கள். கண்ணுக்கு முன்னால் காணும் காட்சிக்கு பணம் கொடுத்து உதவுவது மகிழ்ச்சியும் திருப்தியும்/ மன நிறைவும் தந்தது . இந்தப் பசும்பால் நல்ல இடங்களுக்கு அனுப்பப்படுகிறது
இதை எல்லாம் பார்த்துவிட்டு சென்னைக்கு வந்து ஒரு பத்திரிக்கையைத் திறந்தபோது கோவிந்தபுரத்தில் மனைகள் விற்கப்படும் என்ற விளம்பரத்தையும் கண்டேன். கொஞ்ச காலத்தில் இந்த கிராமம் கமர்ஷியல் சென்டர் ஆகிவிடுமே என அச்சமும் மனதை ஆக்ரமித்தது .
நான் முதல் முதலில், ரிஷி கேஷ் சென்றது 1977ல்; கங்கை நதியைக் கண்டேன். ஆனந்தம் கொண்டேன். ரிஷிகேஷ் சிவானந்தர் ஆஸ்ரமத்தில் ஒரு பெளர்ணமி இரவில் தங்கி எளிமையான சாப்பாட்டையும் சாப்பிட்டேன் . மதுரைக்குத் திரும்பியவுடன், சிவானந்தர் புகழ் பரப்பும் தெய்வ நெறிக்கழகத்தினரிடம் இது பற்றி சொல்லி வியந்தேன்.
சாமிநாதா ! இப்போது நீ காணும் காட்சி உண்மையல்ல; 10, 15 ஆண்டுகளுக்கு முன்னர் இதை நீ பார்த்திருக்கவேண்டும்; அதுதான் இமய மலை முனிவர்களின் தபோவனம் என்றனர்.
எனக்குக் கொஞ்சசம் ஏமாற்றம்தான். ஆனால் அ எல்லாம் மறைக்கும் பெரிய ஏமாற்றம் காத்திருந்தது .
ஆண்டு நினைவில்லை; 2003 என்று நினைக்கிறேன். என் குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு, ரிஷிகேஷ், ஹரித்வார் முதலிய இடங்களுக்குச் சென்றேன். அங்கு கங்கை நதியைக் காண முடியவில்லை!!! கங்கை நதியின் இருபுறங்களிலும் கடைகள், கடைகள், கடைகள்!!! கங்கா தேவி மறைந்துவிட்டாள் . என்னுடன் வந்த ஹிந்தி பேசும் உறவினர்களிடம் படித்துறை எங்கே இருக்கிறது என்று கேளுங்கள் என்றேன். அவர்களும் ஒரு சிறிய குறுகிய படித்துறையைக் காட்டினார்கள். அங்கே விலைக்கு வாங்கிய கேன்களில் water cans வேண்டுமளவுக்கு ஒரிஜினல் கங்கா ஜலத்தை நிரப்பிக்கொண்டோம் . அதற்கு முன்னதாக கங்கையின் புனித நீரைத் தலையில் ப்ரோக்ஷ்சித்துக் கொண்டோம்.
இதே அனுபவம் புட்டபர்த்தியிலும் எங்களுக்குக் கிடைத்தது. 1962 அல்லது 1963 என்று நினைவு. குடும்பத்துடன் சத்ய சாய் பாபாவைத் தரிசிக்க காரில் சென்றோம். பெண்கள் தங்குவதற்கு மட்டும் ஒரு ஷெட் உள்ளது. ஆண்கள் ஆங்காங்கே படுத்துக் கொள்ளலாம் என்றனர்நாங்கள் சிலர் கார் சீட்டிலும் சிலர் கட்டாந் தரையில் போதைய விரித்தும் படுத்தோம் . நல்ல குளிர். போதுமான ஸ்வெட்டர்களுடன் சென்றோம்.காலையில் அருகிலுள்ள கூரைக் கொட்டகைகலில் குளிப்பதற்காக வெந்நீர் விலைக்கு வாங்கலாம் என்றனர். ஆளுக்கு ஒரு வாளி வெந்நீர் விலைக்கு வாங்கி குளித்தோம். அது நவம்பர் மாதம்.
கூட்டமே இல்லாத பிரசாந்தி நிலையத்துக்குள் எளிதில் சென்று பஜனையில் அமர்ந்தோம். காலையில் நல்ல கெட்டித்தயிர் மண் கலயத்தில் விலைக்குக் கிடைத்தது.
30, 40 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே புட்டபர்த்திக்குச் சென்றபோது மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் தென்பட்டன. பிரசாந்தி நிலையத்துக்குள் நுழைய லாட்டரி லக்கி பிரைஸ் முறை. வரிசை ஒவ்வொன்றுக்கும் Number எண் கொடுப்பார்கள் . குலுக்கலில் எந்த நம்பர் NUMBER வருகிறதோ அந்த வரிசை முதலில் செல்லும். பிரசாந்தி ஹாலுக்குள் நுழைவதற்கு முன்னர் எலெக்ட்ரானிக் கேட். மொபைல் போன், காமெரா முதலிய சாதனங்களுக்கு அனுமதி இல்லை.
உலகமும் தர்மமும் தலை கீழாக மாறிவிட்டது .
xxxx
கடைசி யோஜனை:– LAST SUGGESTION
கூட்டம் இல்லாத கோவிலுக்கு இப்போதே போய்விடுங்கள்
பள்ளி, கல்லூரி பரிட்சை நடக்கும் நேரத்தில் தலங்களுக்குப் போங்கள் .கூட்டம் இராது .
கூட்டம் வராத, திரைபோடாத நேரத்தை அறிந்து செல்லுங்கள்.
xxxxx
காஞ்சி மஹா சுவாமிகள் பிஸினஸ் !!!
காஞ்சி புரத்தில், ஓரிருக்கையில் காஞ்சி மகா சுவாமிகள் அதிஷ்டானம், மணி மண்டபம் இருப்பதில் பொருள் உண்டு. ஆனால் ஊருக்கு ஊர் அவர் பெயரில் மணி மண்டபம், கோவில் கட்டுவதில் அர்த்தமில்லை. அவர் பெயரில் வேத பாட சாலைகள் , ஸம்ஸ்க்ருதக் கல்வி நிலையங்களை அமைக்கலாம். இப்படி ஒரு புதிய மஹாசுவாமிகள் மணி மண்டபம் கும்பகோணத்துக்கு அருகில் உள்ளது. கட்டிடத்தைக் கட்டி பராமரிப்பதற்குப் பதிலாக வேத பாட சாலைகளை பராமரிப்பது, அவர்களுக்காக தங்கும் வசதிகளை செய்து கொடுப்பது புண்ணியமாக இருக்கும். அங்கு சிறிய அளவில் படங்களுடன் சந்நிதிகள் இருப்பது போதுமானது .
ஒரு 50, 100 ஆண்டுகளுக்குப் பின்னர் இவைகளை யார் நிர்வகிப்பர்? அவர்களுக்கு நமக்குத் தெரிந்த அளவுக்கு மதிப்பும், மரியாதையும் தெரியுமா? மஹா ஸ்வாமிகள் மணி மண்டபத்தை இதே பக்தி சிரத்தையுடன் பராமரிப்பாளர்களா ?
இது போன்ற விஷயங்களில் மடாதிபதிகள் தங்கள் கருத்துக்களைப் பட்டவர்த்தனமாகத் தெரிவிக்க வேண்டும்; காசியிலோ அயோத்தியிலோ, மதுராவிலோ, செட்டியார்கள் தங்கும் விடுதிகளைக் கட்டுவதில் பொருள் உண்டு. தமிழ்நாட்டில் மணி மண்டபங்கள், சிலைகள் தேவையா? சிந்திக்க வேண்டும். அவர்களுடைய சொற்பொழிவுகளை சிறிய பிரசுரங்களாக பல மொழிகளில் வெளியிடலாமே. இலவசமாக விநியோகிக்கலாமே
xxxx
ஒரு சுவையான கான்வர்சேஷன் INTERESTING COVERSATION
2022ல் ஒரு முறை இந்தியாவுக்குச் சென்றேன். அப்போது திருவண்ணா மலை கோவிலுக்குச் சென்றேன். கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருந்தது; இரண்டு குடும்பங்களின் அபூர்வ சந்திப்பு அங்கே வாயிலில் TEMPLE GATE நடந்தது. அதை நான் ஓட்டுக் கேட்காமலேயே என் காதில் சம்பாஷணை விழுந்தது.
என்ன குழந்தைகளுடன் கோவிலுக்கு வந்திருக்கிறீர்கள்?– முதல் குடும்பம்
ஓ அதுவா? பையன்களுக்கு இன்றுதான் கடைசி விடுமுறை நாள்;; பையன்களின் நச்சரிப்புத் தாங்கவில்லை; விடுமுறைக்கு எங்கும் கூட்டிச் சொல்லவில்லையே என்று இங்கு அழைத்து வந்தேன்.– இரண்டாம் குடும்பம்.
என் மனதில் தோன்றிய எண்ணம்:
அடக் கடவுளே! வண்டலூர் மிருகக் காட்சி சாலையும் இந்தக் கோவிலும் ஒன்றுதானோ!
கோவில் என்பது ஒரு மியூசியமோ!
எப்படியாகிலும் இருக்கட்டும்; பிஞ்சு உள்ளங்களுக்கு இந்தக் கடவுள்களை அறிமுகம் செய்துவைத்த குடும்பங்களைப் பாரட்டத்தானே வேண்டும்?
–சுபம்—
tags-புதிய கோவில்கள், சிலைகள், தேவையா, விட்டல் மந்திர் , கோவிந்தபுரம், கோ சாலை, 1000 பசுக்கள், என் யோஜனைகள் , மஹா ஸ்வாமிகள் , மணி மண்டபம், , பிஸினஸ்