Tamil community’s most favourite god is Skanda also known as Kartikeya, Subrahmanya and Murugan. Both Tamil and Sanskrit names are used by the Tamils in naming their new born boys. Sangam Tamil literarture has a full book on Him called Tirumurugaatruppadai (shortened as Muruguதிருமுருகாற்றுப்படை (முருகு)). He is the god of mountainous area calledகுறிஞ்சி Kurinji . in addition to Murugu, we have several long poems devoted to him in Paripatal where 8 long poems are attributed to him.
In Tolkappiam , oldest tamil book, he is placed next to Vishnu and he was given the nameசேயோன் Seyon , meaning the Redman.
மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
Among the Ten Idylls of Sangam period, the long poem on Skanda Murugan, திருமுருகாற்றுப்படை (முருகு), ‘Tirumurugaatruppadai’ is given the first place. All these signify the importance given to Skanda/Murugan. Sangam poets called him வேள் , செவ்வேள் நெடுவேள் வேலான் , வேலன் in addition to Murugan.since he belonged to mountainous landscape calledகுறிஞ்சி KURINJI, he is called Kurinjik kizavan குறிஞ்சிக் கிழவன்.
Murugan means the Handsome one. He is always presented as a Young god. Nakkirar who composed the long poem on him portrayed him as young and beautiful :
என்றும் இளையாய் ,அழகியாய் ஏறூர்ந்தான் ஏறே
He is described as a Heroic god. He has Spear in his hand.. it is called Vel வேல்.
He is shown riding a peacock or an elephant named Pinimukam பிணிமுகம்
His consorts are Valli and Deivanai
Valli is a Tamil girl and Deivaanai is the daughter of Indra, according to Tamil books.
We see lot of similarities between Kumarasambhava of Kalidasa and Sangam books. But two important differences are marrying Tamil Valli and killing Tamil demon Suurapadman.
When Tamil girls become love sick, their mothers thought they are possessed possessed by Murugan and sought the help of special village priest to drive away the sickness. He used to come in special dress and stage a dance with spear and offer meat and rice balls smeared with goat’s blood.
Tiru murugatruppadai explains that he is also worshipped in other places as well
விபீஷண சரணாகதி படலத்தில் கம்பனுக்கும் வால்மீகிக்கும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்கள் உள்ளன .கண்வர் மகனான கண்டு மகரிஷி ஸ்லோகங்களை மேற்கோள் காட்டி அதையே தான் பின்பற்றப்போவதாக ராமபிரான் அறிவிக்கிறார் என்பது வால்மீகி சொல்லும் கதை
(நேற்றைய கட்டுரையில் விவரம் காண்க )
ஆனால் கம்பனோ, ராமபிரான் வாய் மூலமாக, விபீஷணனுக்கு முன்னர் சரண் அடைந்த 7 பேர் பட்டியலைத் தருகிறான் இரண்டு பேர் சொன்ன பாடல்களிலும் நமக்கு புதிய விஷயங்கள் கிடைக்கின்றன .
இன்னும் ஒரு வேறுபாடு, ராமனின் உறுதிமொழியில் காணப்படுகிறது..நான் உன்னவன் என்று யாரேனும் ஒரே ஒரு முறை சொன்னாலும் போதும் ; அவரைக் காப்பது என் விரதம் / கொள்கை என்று வால்மீகி ராமன் சொல்கிறான் . கம்பனிலோ இந்த உறுதி மொழி முன்னரே கிஷ்கிந்தா காண்ட சுக்ரீவன் சரணாகதியில் வந்து விடுகிறது . இதோ அந்த உறுதி மொழி
சுற்றம் உன் சுற்றம் நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்.
பொருள்:- FRIENDSHIP TREATY BETWEEN SUGREEVA AND RAMA
நட்புறவு ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள் (அம்சங்கள்):-
1.இனி உனக்கு வரக்கூடிய துன்பங்களைத் தவிர்க்க உதவுவேன்
2.இதற்கு முன் உனக்கும் எவருக்கும் பகைமை, சண்டை சச்சரவுகள் இருந்தால் அதில் எனக்குப் பொறுப்பில்லை
3.இனி உனக்கு இன்பம் வந்தால் அதில் 50 சதவிகிதம் உனக்கு; மீதி 50 சதவிகிதம் எனக்கு; அதே போல துன்பம் வந்தாலும் இருவரும் சமமாக பங்கு போடுவோம்
4.உன்னை யார் தாக்குகின்றனரோ அவர் என்னையே தாக்கியதாகக் கருதப்படுவார்
5.கொடியவரே என்றாலும் உன்னுடன் நட்புடையவர் எமக்கும் நண்பரே
6.உன் உறவினர் யாவரும் என் உறவினர்; அன்புகாட்டும் எம் உறவினரும் உனக்குச் சொந்தம் (யாதும் ஊரே, யாவரும் கேளிர்).
7.நீ இன்றுமுதல் என் ஆருயிர்த் தோழன்
எவ்வளவு தெளிவான பேச்சு. இக்காலப் பத்திரிக்கைகள் கூட இப்படி இரண்டே பாடலில் — எட்டே வரிகளில் இப்படிச் சுருக்கி வரைய முடியாது!
Xxx
இப்போது யுத்தகாண்டத்துக்குச் செல்வோம் –
அனுமன் வார்த்தை கேட்டு மகிழ்ந்து இராமன் கூறுவது (6595-6609)
மாருதி வினைய வார்த்தை செவிமடுத்து அமிழ்தின் மாந்திப்
‘பேர் அறிவாள! நன்று! நன்று!!’ எனப் பிறரை நோக்கிச்
‘சீரிது; மேல் இம் மாற்றம் தெளிவுறத் தேர்மின்’என்ன
ஆரியன் உரைப்பது ஆனான்; அனைவரும் அதனைக் கேட்டார். 6.4.104
அனுமன் சொன்னதே சரி . VERY, VERY GOOD வெரி,வெரி குட் என்று ஆரியன் ராமன் சொன்னான்
XXX
‘மற்று இனி உரைப்பது என்னோ? மாருதி வடித்துச் சொன்ன பெற்றியே பெற்றி; அன்னது அன்று எனின், பிறிது ஒன்றானும், வெற்றியே பெறுக, தோற்க, வீக, வீயாது வாழ்க, பற்றுதல் அன்றி உண்டோ, புகல் எமைப் பகர்கின்றானை.
இனி உரைப்பதற்கு என்ன உண்டு? அனுமன் கூறிய ஆலோசனையே மேலான ஆலோசனை; வீடணனை ஏற்றுக் கொள்வதால் வெற்றியே உண்டாகட்டும்; நாம் தோற்கட்டும் அழியட்டும் அழியாது வாழட்டும்; – அபயம் என்று வந்தவனை நாம் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறேதும் உள்ளதோ?
XXXX
‘இன்று வந்தான் என்று உண்டோ? எந்தையை யாயை முன்னைக் கொன்று வந்தான் என்று உண்டோ? புகலது கூறுகின்றான்; தொன்று வந்து அன்பு பேணும் துணைவனும் அவனே; பின்னைப் பின்றும் என்றாலும், நம்பால் புகழ் அன்றிப் பிறிது உண்டாமோ? 6.4.107
நம்மிடம் அடைக்கலம் என்று கூறி வந்த இவன்;
இன்றுதான் வந்தான் என்று விலக்குதல் உண்டோ;
எனது தந்தையையும், தாயையும் முன்பு கொன்றுவிட்டு வந்த
ஒருவனானாலும் விலக்குவதுண்டோ; நம்மை நெருங்கி வந்து
நமக்கு அன்பு செய்கின்ற துணைவன் அவனே; பின்பு நம்மிடம் மாறுபடுவான் என்ற போதிலும்; இவனை ஏற்றுக்கொள்ளும் நமக்கு புகழ்தானே அல்லாது; வேறு பழி
உண்டாகுமோ?
XXX
1.முதல் சரணாகதி –புறா
‘பிறந்த நாள் தொடங்கி யாரும் துலை புக்க பெரியோன் பெற்றி மறந்த நாள் உண்டோ? என்னைச் சரண் என்று வாழ்கின்றானைத் துறந்த நாட்கு இன்று வந்து துன்னினான் சூழ்ச்சி யாலே இறந்த நாள் அன்றோ என்றும் இருந்த நாள் ஆவது என்றான். 6.4.108
பிறந்தநாள் முதலாக; ஒரு புறாவுக்காகத்தானே தராசுக் கோலில் சென்றமர்ந்த பெரியோன் ஆகிய சிபிச்சக்கரவர்த்தியின் பெருமையை; யாரும் மறந்த நாள் உண்டோ இல்லை அன்றோ? என்னை அடைக்கலம் என்று கூறி வந்து வாழ இருக்கும் இந்த வீடணன் செயல்களால்; நான் இறக்க நேர்ந்தால் அவ்வாறு இறந்த நாள் அல்லவா; நான் என்றும் நிலை பெற்றிருந்த நாள் ஆவது என இராமன்கூறினான்.
XXX
இரண்டாவது சரணாகதி –சிவனிடம் தேவர்கள்
‘இடைந்தவர்க்கு”அபயம் யாம்” என்று இரந்தவர்க்கு, எறிநீர் வேலை கடைந்தவர்க்கு, ஆகி ஆலம் உண்டவற் கண்டிலீரோ? உடைந்தவர்க்கு உதவான் ஆயின், உள்ளது ஒன்று ஈயான் ஆயின், அடைந்தவர்க்கு அருளான் ஆயின், அறம் என் ஆம்? ஆண்மை என் ஆம்? 6.4.109
பாற்கடலைக் கடைந்த போது தோன்றிய
நஞ்சுக்கு அஞ்சி நாங்கள் உனக்கு அடைக்கலம் என்று
கெஞ்சிய தேவர்களுக்காக; நஞ்சைத்தான் உண்டு, அவர்களைக்காத்த சிவபிரானை நீங்கள்
அடைக்கலம் என்று வந்தவர்களுக்குக் கருணைகாட்டி அருள் செய்யவில்லைஎன்றால்; அறத்தால் என்னபலன்? ஆண்மையால் என்ன பயன்?
XXX
மூன்றாவது சரணாகதி — வே டனுக்காக புறா செய்த தியாகம்
பேடையைப் பிடித்துத், தன்னைப் பிடிக்கவந்து அடைந்த பேதை வேடனுக்கு உதவி செய்து விறகு இடை வெந்தீ மூட்டிப் பாடுறு பசியை நோக்கித் தன் உடல் கொடுத்த பைம்புள் வீடு பெற்று உயர்ந்த வார்த்தை வேதத்தின் விழுமிது அன்றோ? 6.4.110
பெண்புறாவைப் பிடித்துக்கொண்டு அதன் ஜோடியான தன்னையும் பிடிக்கவந்திருந்த வேடன் ஒருவனுக்கு; குளிர்காலத்தில்,
விறகு பொறுக்கி வந்து, வெப்பமான தீயை மூட்டிக் குளிரைப் போக்கி, அவனது பெரும்பசியைப் பார்த்து, அந்தத்தீயில் வீழ்ந்து தனது உடலையே அவனுக்கு உணவாகக் கொடுத்த ஒரு ஆண்புறா, பரமபதம் பெற்று உயர்ந்தது என்ற வார்த்தை; வேதத்தைவிட மேலான தொன்றல்லவா?
XXXX
நாலாவது சரணாகதி — கஜேந்திர மோட்சம்
‘போதகம் ஒன்று, கன்றி இடங்கர் மாப் பொருத போரின், “ஆதி அம் பரமே! யான் உன் அபயம்!” என்று அழைத்த அந்நாள், வேதமும் முடிவு காணா மெய்ப் பொருள் வெளிவந்து எய்தி, மாதுயர் துடைத்த வார்த்தை மறப்பரோ, மறப்பு இலாதார்? 6.4.111
கஜேந்திரன் என்ற பெயர் கொண்ட யானை ஒன்று; தாமரைப் பொய்கையில் சினம் கொண்ட முதலை ஒன்று தனது காலைப் பற்றி இழுத்துச் செய்த போரிலே, ஆதி மூலமாயுள்ள பரம்பொருளே நான் உனது அடைக்கலம்; என்று அழைத்த அந்த நாளிலே; வேதங்களும் தேடி முடிவுகாண முடியாத மெய்ப்பொருளாகிய பரமன் வெளிப்பட்டு அந்த
முதலையைக் கொன்று யானைக்குற்ற துன்பத்தை மாற்றியருளினார் என்ற வார்த்தையை; அடியார்கள் என்றும் மறப்பார்களோ?
XXXX
ஐந்தாவது சரணாகதி — மிருகண்டு, மார்க்கண்டேயன்
‘நஞ்சினை மிடற்று வைத்த நகை மழு ஆளன்,”நாளும் தஞ்சு”என, முன்னம், தானே தாதைபால் கொடுத்துச்,”சாதல் அஞ்சினேன்; அபயம்!”என்ற அந்தணற்கு ஆகி, அந்நாள், வெஞ்சினக் கூற்றை மாற்றும் மேன்மையின் மேன்மை உண்டோ? 6.4.113
பாற்கடலைக் கடைந்த தேவர்கள் நஞ்சினால் நலியாதபடி
உண்டு கண்டத்திலே நிறுத்தி வைத்த, சிவபிரான்;
வாழ்நாள் குறைவாக தந்தையான மிருகண்டு முனிவருக்கு வரம் தந்தும்; சாவுக்கு அஞ்சினேன் நான் உனக்கு அடைக்கலம் என்று சரணடைந்த; மார்க்கண்டனுக்கு அந்த நாளிலே உயிரைக் கவரவந்த எமனை விரட்டி ; வாழ்நாளை என்றும் பதினாறாக மாற்றிய சிவபெருமானுடைய பண்பைவிட; மேலானது வேறேதும் உண்டோ?
XXXX
ஆறாவது சரணாகதி – ஜடாயுவிடம் சீதை சரண்
“‘சரண் எனக்கு யார்கொல்?” என்று சானகி அழுது சாம்ப, “அரண் உனக்கு ஆவென்; வஞ்சி! அஞ்சல்!” என்று அருளின் எய்தி, முரணுடைக் கொடியோன் கொல்ல, மொய் அமர் முடித்து, தயெ்வ மரணம் என் தாதை பெற்றது என் வயின் வழக்கு அன்று ஆமோ? 6.4.114
இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டபோது, எனக்கு அடைக்கலமளித்துக் காப்பவர் யார் ? என்று கூறி, சீதா பிராட்டி அழுது சோர்ந்திருக்க, நான் உனக்கு அரணாக நின்று காப்பேன்; அஞ்சாதே என்று கருணை கொண்டு வந்து;
கொடியவனான இராவணன் வாளால் வெட்டிக்கொல்ல; , இராவணனுடன் போர் செய்து தெய்வீக மரணத்தை சடாயு பெற்றது; அது போலல்லாமல் நான் மாறுவது முறையல்லவே
XXXX
ஏழாவது சரணாகதி – ராமனிடம் முனிவர்கள் சரண்
உய்ய,’நிற்கு அபயம்’என்றான் உயிரைத் தன் உயிரின் ஓம்பாக் கையனும், ஒருவன் செய்த உதவியில் கருத்து இலானும், மை உறு நெறியின் நோக்கி மாமறை வழக்கில் நின்ற மெய்யினைப் பொய் என்றானும், மீள்கிலா நரகின் வீழ்வார். 6.4.115
நான் உய்யுமாறு உன்னைச் சரண்புகுந்தேன் என்று வந்த ஒருவனுடைய உயிரினைத் தன்னுயிராகக் கருதிப் பேணிக் காப்பாற்றாத கீழ்மகனும்நன்றி மறந்தவனும்; சிறந்த வேத நெறிப்படி நின்றொழுகும்; உண்மை நெறியைப் பொய் என்று கூறுபவனும்; மீண்டு வரமுடியாத கொடிய நரகத்திலே வீழ்ந்து துன்புறுவார்.
‘சீதையைக் குறித்த தேயோ,”தேவரைத் தீமை செய்த பேதையைக் கொல்வென்”என்று பேணிய விரதப் பெற்றி வேதியர்,”அபயம்” என்றார்க்கு, அன்று, நான் விரித்துச் சொன்ன காதையைக் குறித்து நின்ற அவ் உரை கடக்கல் ஆமோ? 6.4. 116
தேவர்களைத் துன்புறுத்திய இராவணனை; கொல்வேன் என்று
நானே விரும்பி ஏற்றுக்கொண்ட இந்த விரதத்தின் தன்மை; சீதையை மீட்டு வருவதற்கு மட்டுமல்ல; அரக்கனிடமிருந்து பாதுகாப்பு கோரி ,அந்தணர்கள் சரணடைந்தபோது நான் அஞ்சல் என்று கூறிய அந்தச் சொல்லை நான் மீறலாமோ?
XXXX
ராமன் உறுதிமொழி
6608. ‘காரியம் ஆக! அன்றே ஆகுக! கருணையோர்க்குச் சீரிய தன்மை நோக்கின், இதனின்மேல் சிறந்தது உண்டோ? பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தோர்க்குப் பொன்றா ஆர் உயிர் கொடுத்துக் காத்தார், எண் இலா அரசர் அம்மா? 6.4.117
நாம் எடுத்த காரியம் முற்றுப் பெறட்டும்; அல்லது முடியாமல் போகட்டும்; கருணையாளர்க்குரிய தன்மை என்னவென்றால் அடைக்கலம் என்று வந்தவனை
ஆதரித்துக் காப்பதே; அதைவிட மேலானதொன்று இல்லை.
கீழ் மக்களாயினும் தங்களைச் சரணடைந்தவர்களுக்கு; தங்களது
ஆருயிரைத் தந்து காத்த மன்னர்கள் தொகை எண்ணிலடங்காது .
‘ஆதலான்,”அபயம்” என்ற போதத்தே அபய தானம் ஈதலே கடப்பாடு என்பது; இயம்பினீர் என்பால் வைத்த காதலான்; இனி வேறு எண்ணக் கடவது என்? கதிரோன் மைந்த! கோது இலாதவனை நீயே என்வயின் கொணர்தி’என்றான். 6.4.118
ஆதலால் இவன் அபயம் என்று வந்த அந்தச் சமயத்திலேயே, அபயதானம் தருவதே நமக்கரிய கடமை என்பதை என்பாலுள்ள அன்பால் கூடாதென்று சொன்னீர்கள்; இனி இதற்கு மாறாக எண்ணுதற்கு வேறு என்ன இருக்கிறது? சூரிய குமாரனான சுக்கிரீவனே! குற்றமொன்றுமில்லாத இந்த வீடணனை; நீயே சென்று என்னிடம் அழைத்துக்கொண்டு வருக என்றான்.
நின்று ஆலிப்பது அவர் தந்த சந்ததியது ஆம் – பெற்றோரின் மலர்ந்த
முகத்தைக் கண்டு பூரிப்பது அவர்கள் பெற்ற சந்ததி ஆகும், சந்திரோதயம் கண்டு பூரிப்பது உயர்வாவி தங்கு பைங்குமுத மலர் ஆம் – திங்களின் வருகைநோக்கி மலர்வது உயர்ந்த பொய்கையிலே அமைந்த புதிய அல்லிமலர் ஆகும், புந்தி மகிழ்வாய் இரவி வருதல் கண்டு அகம் மகிழ்வ
பொங்கு தாமரை மலர்கள் ஆம் – மனம் மகிழ்வாக ஞாயிறு எழுதல்
நோக்கி மனம் களிப்பன மிகுதியான தாமரைப்பூக்கள் ஆகும், போதவும் புயல்கண்டு கண்களித்தே நடம் புரிவது மயூர இனம் ஆம் – முகிலை நன்றாகப் பார்த்துக் கண்களித்து நடனம்புரிவது மயிலின் கூட்டம் ஆகும்,
சிந்தை மகிழ்வாய் உதவு தாதா வினைக் கண்டு சீர் பெறுவது இரவலர்
குழாம் – மனக் களிப்புடன் கொடுக்கும் கொடையாளியைக் கண்டு
சிறப்புறுவது இரவலர் கூட்டம், திகழ் நீதி மன்னரைக் கண்டுகளிகூர்வது இச் செகம் எலாம் என்பர் – விளங்கும் முறை தவறாத அரசரைப் பார்த்து மகிழ்வது இந் நிலவுலகம் யாவும் என்று அறிஞர் கூறுவர்.
Xxxx
பெற்றோரைக் கண்டால் குழந்தைகள் மகிழும்
சந்திரனைக் கண்டால் அல்லி மலர்கள் மலரும்
சூரியனைக் கண்டால் தாமரைகள் விரியும்
மேகத்தைக் கண்டால் மயில்கள் ஆடி மகிழும்
கொடையாளிகளைக் கண்டால் பாவலர்கள் மகிழ்வர்
நல்ல அரசனைக் கண்டால் உலகமே வணங்கும் –அம்பலவாணர்
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. உலகில் யார் எந்தப் பக்கம் சர்வே எடுத்தாலும் எப்போதும் முன்னனியில் நிற்கிறார் மோடி .
Xxx
DAFFOLDILS டாஃபோடில்ஸ் மலர்கள் தரும் இன்பம் பற்றி ஆங்கிலக் கவிஞர் வோர்ட்ஸ்வொர்த் செப்புகிறார்
For oft, when on my couch I lie
In vacant or in pensive mood,
They flash upon that inward eye
Which is the bliss of solitude;
And then my heart with pleasure fills,
And dances with the daffodils.
சிந்தனைச் சூழலில் சிக்கி
அடிக்கடி படுக்கையில் புரள்வேன்
மனக்கண் முன்னே பளிச்சிடும்
அந்த தனிமை தருவதோ பிரம்மானந்தம்
இதயம் நிரம்ப மகிழ்ச்சி பொங்க
ஆடுவேன் டாபோடில்ஸ் மலர்களுடன் கூட
–WILLIAM WORDSWORTH
XXX
ஒப்பிடுக
சினிமா பாட்டு
மருதகாசி: ஐயா, என் பெயர் மருத காசி. நான் எழுதிய பாடலில் இன்பம் என்றால் என்ன என்று சினிமா பாட்டு வடிவிலேயே சொல்லிவிட்டேன்; நல்ல மனைவியும் மக்களும் தான் ஒருவனுக்கு இன்பம் தருவர்:
இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு – அது எங்கிருந்த போதுமதை நாடி ஓடு (2 முறை) இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு
இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை – இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை (2 முறை) இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை
அட நான் கூடத்தான் இன்பத்தமிழ் பற்றிப் பாடிய பாடலில்
தமிழுக்கும் அமுதென்று பேர்—அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
என்று ஒரே பாடலில் ‘’இன்பத் தமிழ்’’ என்ற சொல்லை எட்டு முறை பயன்படுத்தி தமிழ்தான் இன்பம் என்று நிரூபித்திவிட்டேன்.
Xxx
பாரதி
என் சீடன் பாரதிதாசன் கூறியது முற்றிலும் உண்மையே. அத்தோடு சுதந்திரமும் ஆனந்தம் தரும். உலகே ஒரு இன்பக் கேணி என்று வேதம் சொல்லுவதையும் கணக்கிற் கொள்ள வேண்டும். இதோ கேளுங்கள்;
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
காலத்தைவென்றகவிஞன்கண்ணதாசன் – 6
ச.நாகராஜன்
1965ஆம் ஆண்டு வெளியான படம் ஆயிரத்தில் ஒருவன். அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் சிறிது மனத்தாங்கலால் அவரைத் தவிர்த்துக் கொண்டிருந்தார். அவர் கவிஞரை ஆண்டவனே என்று அழைப்பது தான் வழக்கம். ஒரு குறிப்பிட்ட காட்சிக்கு கண்ணதாசனைத் தவிர வேறு யாரும் பாடலை எழுத முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தது. மெதுவாக எம்.ஜி.ஆரிடம் இதைத் தெரிவித்த போது ஆண்டவன் இந்தப் பாடலை எழுதுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை என்றவர் அவரையே அழைத்தார்.
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம் என்ற பாடல் மலர்ந்தது. உலகையே மகிழ்வித்தது!
பின்னால் ஒரு காலத்தில் முதல் அமைச்சர் எம் ஜி ஆரிடமிருந்து கவிஞருக்கு ஒரு போன் வந்தது. “ஆண்டவனே! நான் சொல்வதற்கு நோ என்று சொல்லக் கூடாது என்ற கண்டிஷனுடன் ஆரம்பித்தார் எம் ஜி ஆர். உங்களை அரசவை கவிஞராக அனவுன்ஸ் செய்யப் போகிறேன்.” என்றார் அவர். கவிஞர் மாபெரும் கூட்டத்தில் மனம் நெகிழ்ந்து பேசினார். அவர் கண்கள் கசிந்தன!
இதயக் கமலம் படத்தில் ஒரு பாடல்:
மலர்கள் நனைந்தது பனியாலே என்ற அந்தப் பாடலில் கடைசி வரிகளில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்தார் கவியரசர்.
இறைவன் முருகன் திரு வீட்டில்
என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரென்னும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலர் அடி போற்றி! என்று முடிந்தது பாடல்.
ஆழ்வார்கள் அன்பே தகளியாய், ஆர்வமே நெய்யாகவும், வையம் தகளியாய் வார்கடலே நெய்யாகவும், ஏற்றிய விளக்கு நம் நினைவிலே வந்து கண்ணதாசன் ஏற்றி வைக்கும் விளக்கு நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.
கேள்வி-பதில் பாணியில் அவர் ஒரு புதிய பிரமாண்டத்தை சிருஷ்டித்தார்.
நதி எங்கே போகிறது? கடலைத் தேடி!
நாள் எங்கே போகிறது? இரவைத் தேடி!
நிலவெங்கே போகிறது? மலரைத் தேடி!
நினைவெங்கே போகிறது? உறவைத் தேடி!
இப்படி நாற்பதுக்கும் மேற்பட்ட நல்ல அழகிய கேள்வி-பதில் பாடல்கள் உடனடியாக நம் நினைவுக்கு வரும்.
கன்னத்தில் என்னடி காயம்? இது வண்ணக்கிளி செய்த மாயம்
கனி உதட்டில் என்னடி தடிப்பு – பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு’
கண் காட்டுவதென்ன ஜாலம்? தலைவி தலைவனிடம் பெற்ற இன்பத்தை மாற்றிக் கூறி காதல் இன்பத்தை மேலும் மெருகூட்டிக் கொள்வது கண்ணதாசன் செய்யும் ஜாலம்!
என்னை யார் என்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்?
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்!
இது இன்னொரு உருக்கமான ரகம்.
ஒரு படத்தின் முழு சாரத்தையும் ஒரு பாடலிலே தருவது அவர் வழக்கம். முந்தைய கால கவிஞர்களுக்குக் கிடைக்காத திரைப்பட யுகத்திலே கிடைத்த இந்த வாய்ப்பை கவியரசன் போலச் சிறப்பாகப் பயன்படுத்திய கவிஞர் இன்னொருவர் இல்லை.
எடுத்துக்காட்டிற்கு ஒரு பாடல்:
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
என்னென்று நான் சொல்லலாகுமா
என்னென்று நான் சொல்லவேண்டுமா
பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏன் என்று நான் சொல்லலாகுமா
ஏன் என்று நான் சொல்லவேண்டுமா
நடமாடும் மேகம் நவநாகரீகம்
அலங்கார சின்னம் அலை போல மின்னும்
நடமாடும் செல்வம் பணிவான தெய்வம்
பழங்கால சின்னம் உயிராக மின்னும்
துள்ளி வரும் வெள்ளி நிலா
துவண்டு விழும் கொடியிடையாள்
விண்ணோடு விளையாடும்
பெண் அந்த பெண்ணல்லவோ
சென்றேன் அங்கே
கண்டேன் இங்கே
எனக்குள் ஒரு சக்தி இருக்கிறது. அந்த சக்தியினால் தான் நான் எதையும் செய்ய முடிகிறது என்று அவர் அடிக்கடி கூறுவது வழக்கம். அது ESP Power – EXTRA SENSORY PERCEPTION POWER! அதீத உளவியல் ஆற்றல் சக்தி தன்னிடம் இருக்கிறது என்பதை அவர் நிரூபித்த சம்பவங்கள் ஏராளம்.
சேலத்தில் கவிஞர் வாழ்ந்த காலத்தில் ஒரு நாள். கவிஞரின் எழுத்துக்களைத் தொலைபேசி வாயிலாகக் கேட்டு அவர் சொல்லச் சொல்ல எழுதி வந்தவருமான கற்பூரபாண்டியனிடம் தான் கண்ட கனவைத் துயரத்துடன் விவரிக்கிறார்.
“28-1-1947 அன்று இரவு பயங்கரமான கனவு ஒன்றைக் கண்டேன். மகாத்மா காந்தியை யாரோ சுட்டு விடுகிறார்கள்’ என்றார் கவிஞர்.
“அந்த மனிதருக்கா அப்படி ஆகும்” என்று அவர் கூற்றை மறுத்து அவர் கேலி செய்யப்படுகிறார்.
ஆனால் 30-1-1947 இரவு 7 மணி செய்தியில் வானொலி மகாத்மா காந்திஜியை கோட்ஸே சுட்டுக் கொன்றதை அறிவித்த போது அனைவரும் விக்கித்துப் போயினர்
1972இல் வரலாறு காணாத வறட்சியைத் தமிழகம் கண்டது. ஏரி, குளம், ஆறு அனைத்தும் வறண்டன. மக்கள் தவிதவித்துப் போயினர்.
கம்பன் விழாவில் கலந்து கொள்ள பாண்டிச்சேரி சென்றார் கவிஞர்.
பாண்டிச்சேரியிலும் மழை இல்லை. ஒரே வறட்சி.
விழாவின் இறுதி நாளன்று பேசிய கவிஞர் சொன்னார்:” நான் கண்ணனை வணங்குவது உண்மை எனில் புதுச்சேரி எல்லையைக் கடக்கு முன் மழை பெய்ய வேண்டும். பரந்தாமன் இங்கு நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவான்.”
அவர் வாக்கு பொய்க்கவில்லை.
வருணன் அதைக் கேட்டான். ஓடி வந்தான்.
பேச்சை முடித்து கவிஞர் திண்டிவனம் வந்து சேர்ந்த போது புதுச்சேரி மழையில் மிதப்பதாகச் செய்தி வந்தது!
இதே போல சென்னையில் வானதி பதிப்பகத்தார் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மழை வேண்டி ஒரு விசேஷ கவியரங்கம் ஏற்பாடு செய்திருந்தனர்.
கவிஞரும் அதில் பங்கேற்றார்.
பனிரெண்டு அறுசீர் விருத்தச் செய்யுள்களை அங்கு அவர் பாடினார்.
வான் முட்டும் கோபுரங்கள்
வானுக்குச் செய்தி சொல்வீர்!
தேன்முட்டும் இதழாள் சக்தி
தேவியைத் துயிலெ ழுப்பீர்!
கான்முட்ட மழைபொழிந்து
காவிரி பெருகி ஓடி
மீன்முட்டும் வெள்ளக் காடாய்
வியன் நிலம் ஆவதாக!
என்று இறுதி விருத்தத்தை முடித்தார்.
கவியரங்கம் முடிந்தது. மயிலை கபாலீஸ்வரர் கோவிலிலிருந்து கிளம்பினார் கவிஞர். தியாகராய நகர் வருவதற்குள் அடை மழை கொட்டியது.
கடலிலுள்ள நீரை சூரிய ஒளி சூடாக்குகிறது. அது ஆவி ரூபத்தில் மேலே சென்று மேகமாகிறது. பின்னர் உரிய சூழ்நிலை ஏற்படுகையில் மழையாகப் பொழிகிறது. இதெல்லாம் விஞ்ஞானம். அப்படியுள்ள மேகம் எப்போது புயல் உருவில் வந்து அழிக்கும் ;பருவ மழை உருவில் வந்து காக்கும் என்பதை இன்றும் விஞ்ஞானிகளால் சொல்ல முடியவில்லை. ஆண்டுதோறும் அமெரிக்காவைச சுற்றியுள்ள இடங்களை சூறாவளிகள் தாக்கி கோடிக் கணக்கில் சேதம் உண்டாக்குகின்றன. இந்தியாவில் புயல் மழை வெள்ளத்தில் கோடிக்கணக்கான டன் தானியங்கள் வீணாகின்றன . இவைகளையெல்லாம் கண்ணோட்டமிட்ட கிருஷ்ண பரமாத்மா, வள்ளுவர், அவ்வையார் ,விவேக சிந்தாமணி எழுதிய பெயர் தெரியாத ஆசிரியர், சதகம் எழுதிய அம்பலவாணர் வெவ்வேறு காரணங்களை முன்வைக்கின்றனர். அவைகளில் இழையோடும் கருத்து தர்மம் இருக்கும் இடத்தில் மழை பெய்யும். மன்னவர் ஆட்சி நேர்மையாக இருந்தால் பயிர் செய்யாமலே தானியம் விளையும் Magic மாஜிக்- மாயாஜாலம் பற்றி வள்ளுவனும் கதைக்கிறான்.
1.ஒப்பிடுக
நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் – தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை. 10 மூதுரை
பொருளுரை:
நெற்பயிருக்கு இறைக்கப்பட்ட தண்ணீர் வாய்க்கால் வழியாகச் சென்று அருகாமையிலுள்ள புற்களுக்கும் கசிந்து பசுமையைத் தரும்.
அதுபோல, நீடித்த இவ்வுலகத்தில் நல்லவர் ஒருவர் இருப்பாராயின் அவரது நற்குணத்திற்காகப் பெய்யும் மழை, உலகத்தில் உள்ளோர் அனைவருக்கும் பெய்து நன்மை பயக்கும்.
Xxxxx
2.இதோ வள்ளூவன் எழுதிய குறள்:–
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை (குறள் 55)
தெய்வத்தைத் தொழாமல் தன் கணவனைத் தொழுது எழுகின்ற ஒரு பெண் ‘பெய்’ என்றால் மழை பெய்யும்..
மநு நீதி நூலிலும் (9-247) நல்ல மன்னவன் ஆட்சியில் பருவ மழை தவறாது என்கிறார்.
9-247- நல்ல மன்னன் நாட்டில் நிலங்கள் தானாக விளையும் .(வள்ளுவனும் குறளில் 545, 559, 560 சொல்லும் அதிசயம்; காளிதாசனும் இந்த அதிசயத்தை விளம்புவான்
முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்–குறள் 559
அரசன் முறை தவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.
xxx
இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு–குறள் 545
நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.
ராமாயணத்தில் எல்லோரும் பார்ப்பது பக்திக் சுவையே; ராமன், சீதை, அனுமன் ஆகியோர் மீதுள்ள பக்தி காரணமாக வேறு பல முக்கிய விஷயங்களை கவனியாமல் விட்டுவிடுகிறோம் ஜனநாயகம், சரணாகதி தத்துவம் ஆகியன பற்றி அருமையான விஷயங்கள் இருக்கின்றன. சில இடங்களில் கம்பன் நீண்ட உரையாற்றுகிறான்; ஆனால் வால்மீகியில் வேறு விஷயங்கள் உள்ளன.ஒப்பிட்டு ரசிப்போம்
ஜனநாயகம்-1
ராமனை முடிசூட்ட விரும்புகிறேன் என்று அறிவித்த தசரதர் சொல்கிறார்
यदिदं मेऽनुरूपार्थं मया साधु सुमन्त्रितम्।
भवन्तो मेऽनुमन्यन्तां कथं वा करवाण्यहम्।।2.2.15।।
யதிதம் மே அனுரூபார்த்தம் மயா சாதி சுமந்த்ரிதம்
பவந்தோ மே அனுமன்யந்தாம் கதம் வா கரவாண்யாஹம்
இது எனது விருப்பம்; நன்கு பிறரை ஆலோசித்து எடுத்த முடிவு உங்களு
டைய அனுமதியையும் கோருகிறேன்; வேறு என்ன செய்யவேண்டும் என்றும் விளம்புங்கள் .
அங்கே ஒரு பொன்மொழியையும் உதிர்க்கிறார் ‘பாரபட்சமில்லாதோரின் கருத்துக்கள் பயனுடையவை’ என்கிறரர்.
यद्यप्येषा मम प्रीतिर्हितमन्यद्विचिन्त्यताम्।
अन्या मध्यस्थचिन्ता हि विमर्दाभ्यधिकोदया।।2.2.16।।
இது என்னுடைய விருப்பம் என்றாலும் மாற்றுவழிகள் இருப்பின் அவைகளையும் சிந்திக்கவேண்டும். நடுநிலையில் நின்று சிந்திப்போரின் வாதங்கள் பலன் தரக்கூடியவை
Xxxx
ஜனநாயகம்-2
இது தவிர வால்மீகியும் கம்பனும் சொல்லாத ஒரு ராமாயண ரகசியத்தை மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் அகநாநூற்றுக் கவிதையில் (அகநானூ.70) சொல்கிறார் . திருவணைக் கரைக்கு அருகில் ஒரு ஆலமரத்தின் கீழ் , இலங்கையின் மீது படையெடுப்பது பற்றி வானர சேனை COMMANDERS கமாண்டர்களுடன், ராமன் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் , அப்போது மரத்தின் மீதிருந்த ஏராளமான பறவைகள் கூச்சல் /இரைச்சல் போட்டதாகவும் SHUT UP YOUR MOUTH ராமன் ஷட் அப் யுவர் மவுத் என்று கட்டளையிட்டவுடன் பறவைகள் ‘கப் சிப்’ என்று அடங்கி மவுனமாயின என்றும் பாடியுள்ளார். இங்கேயும் அவர் ஜனநாயக நடைமுறையைப் பின்பற்றி பிறரைக் கலந்தாலோசித்தத்தைக் காண்கிறோம்
கடல் மீது பாலம் கட்டுவது பற்றி நீலன் என்ற தமிழ் சிவில் என்ஜினீயருடன் TAMIL CIVIL ENGINEER NEELAN ராமன் கலந்தாலோசித்தது வேறு இடங்களில் காணப்படுகிறது ; ஆக கலந்தாலோசித்து முடிவெடுக்கும் ஜனநாயக நடை முறையினை ராமாயணம் மஹாபாரதம் முழுதும் காண்கிறோம். ரிக் வேதத்தில் உள்ள சமிதி (கமிட்டி), ஸபா (சபை-அவை) என்பன எல்லாம் உலகிற்கே நாம் ஜனநாயத்தைக் கொடுத்ததைக் காட்டுகின்றன. பின்னர் எண்பேராயம், ஐம்பெ ருங்குழு என்பனவற்றை தமிழர்கள் அமைத்து, ஜனநாயக முறையில் முடிவெடுத்தனர். அரசனும் அவர்கள் சொல்லுவதைக் கொண்டே ஆட்சி நட்த்தினான்.
Xxxx
ஜனநாயகம்-3
ராமரின் சரணாகதி தத்துவம்
ராமரின் சரணாகதி தத்துவம் வால்மீகி இராமாயண யுத்த காண்டத்தில் தெளிவாகச் சொல்லப்படுகிறது. இதை அறிவிக்கும் முன்னர், அவர் எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு அறிவதில் நாம் ஜனநாயக நடை முறைகளைக் காண்கிறோம். அது மட்டுமல்ல இது KANDU MAHARISHI ‘கண்டு மகரிஷி’ யின் கொள்கை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் . அதாவது தன்னிச்சையான (NOT AUTOCRATIC) முடிவு இல்லை.
मित्र भावेन सम्प्राप्तम् न त्यजेयम् कथंचन |
दोषो यदि अपि तस्य स्यात् सताम् एतद् अगर्हितम् ||६-१८-३
நண்பன் என்ற முகத்துடன் வருபவனுக்கு சிறிய குறைகள் இருந்தாலும் அவனை நான் மறுக்கமாட்டேன் . அவனை ஏற்பதை நல்லோர் எல்லோரும் ஏற்பர் -6-28-3
மித்ரா பாவேன ஸம்ப்ராப்தம் ந த்யஜேயம் கதஞ்சன
தோஷோ யதி அபி தஸ்ய ஸ்யாத் ஸதாம் ஏதத் அகர்ஹிதம்
XXXX
புறாவின் கதை
श्रूयते हि कपोतेन शत्रुः शरणम् आगतः ||६-१८-२४
अर्चितः च यथा न्यायम् स्वैः च मांसैर् निमन्त्रितः |
ஒரு புறா கூட தன்னுயிரையும் ஈந்து , அதைக் கொல்லவந்த வேடனுக்கு தன்னுயிரையே தந்த கதையையும் ராமன் மேற்கோள் காட்டுகிறான்.
(இந்த இடத்தில் கம்பன் ஒரு நீண்ட பட்டியலே தருகிறான். அதையும் பின்னர் காண்போம் )
ஒரு புறா , அதனுடைய எதிரியான வேடன், அடைக்கலம் நாடி வந்த பொழுது விருந்தோம்பல் விதிகளைப் பின்பற்றி அவனை வரவேற்றத்தை நாம் கேட்டிருக்கிறோம் . அவனுக்குத் தன்னுடைய உடலையே விருந்தாகப் படைத்தது .
स हि तम् प्रतिजग्राह भार्या हर्तारम् आगतम् ||६-१८-२५
कपोतो वानर श्रेष्ठ किम् पुनर् मद् विधो जनः |
ஓ குரங்கினப் பெருந்தலைவர்களே ! அதே வேடன் புறாவின் மனைவியைக் கொன்றபோதும் அந்த வேடனை விருந்தாளியாக ஏற்றது ஆண் புறா . அப்படி இருக்கையில் என்னைப்போன்ற ஒரு மனிதன் எவ்வளவு செய்யவேண்டும் ?
ஸ ஹி தம் ப்ரதிஜக்ராஹ பார்யா ஹர்த்தாரம் ஆகதஹ
கபோதோ வானர ஸ்ரேஷ்ட கிம் புனர் மத் விதோ ஜனஹ
ஈசாப் கதைகள் அனைத்தும் இந்தியாவிலிருந்து சென்றன என்பதற்கு வேதம் ,ராமாயண , மஹாபாரதம், ஜாதகக் கதைகள், பஞ்ச தந்திரம், ஹிதோபதேசத்தில் ஏராளமான சான்றுகள் உள்ளன .
(புறாக்கதை , ஈசாப் காப்பி அடித்த கதைகள் பற்றி இந்த பிளாக்கில் ஏற்கனவே கட்டுரைகள் உள )
Xxxx
ऋषेः कण्वस्य पुत्रेण कण्डुना परम ऋषिणा ||६-१८-२६
शृणु गाथाम् पुरा गीताम् धर्मिष्ठाम् सत्य वादिना |
முன்னொரு காலத்தில் வாழ்ந்த ,உண்மையின் உறைவிடமாக விளங்கிய ,கண்வ மஹரிஷியின் மகனான கண்டு மகரிஷியின் கவிதைகளை கேளுங்கள் ; அவர் இது பற்றி சொல்லியுள்ளார்
எதிரிகளை அழித்தொழிக்க வல்ல அரசனே ! ஒருவன் கூப்பிய கரங்களுடன் வருகையில் எதிரியானாலும் கூட , அவனைக் கொல்லுவது கொடூரமான செயல் ஆகும். அதே போல பிச்சை கேட்டு வருவோனையும்,அடைக்கலம் கேட்டு வருவோனையும் கொல்லக்கூடாது
अर्तो वा यदि वा दृप्तः परेषाम् शरणम् गतः ||६-१८-२८
अरिः प्राणान् परित्यज्य रक्षितव्यः कृत आत्मना |
அர்த்தோ வா யதி வா த் ருப்தஹ பரேஷாம் சரணம் கதஹ
அரிஹி ப்ராணாம் பரித்யஜ்ய ரக்ஷிதவ்யஹ க்ருத ஆத்மனா
முன்னர் அகந்தையுடனும் அடக்கியாண்டவானுமாக இருந்த எதிரியானாலும் ஏனையோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு வந்தால் நல்ல மனதுடையவன் தன உயிரினைக் கொடுத்தாவது சரணடைந்தவனைக் காப்பாற்ற வேண்டும்
(விருந்தோம்பல் HOSPITALITY , கற்பு CHASTITY , நிலையாமை IMPERMANENCE, தூதர் இலக்கணம் AMBASSADOR RULES, சரணடைதல் SURRENDER, அகதிகள் REFUGEES பற்றி 2500 ஆண்டுகளுக்கு முன்னரே மிக தெளிவான நாகரீமிக்க கொள்கைகளை வேறு எந்த நாட்டு இலக்கியத்திலும் நான் கண்டதில்லை.)
Xxxx
स चेद् भयाद् वा मोहाद् वा कामाद् वा अपि न रक्षति ||६-१८-२९
स्वया शक्त्या यथा तत्त्वम् तत् पापम् लोक गर्हितम् |
பயத்தினாலோ , அறியாமையினாலோ, ஆசையினாலோ அவனைத் தன பலம் கொண்டமட்டும் பாதுகாக்காவிடில் அது பாபம் . உலகமே அவனை இகழும்
ஸ சேத் பயாத் வா மோஹாத் வா காமாத் வா அபி ந ரக்ஷதி
ஸ்வயா சக்த்யா யதா தத்வம் தத் பாபம் லோக கர்ஹிதம்
Xxxx
विनष्टः पश्यतस् तस्य रक्षिणः शरण आगतः ||६-१८-३०
आदाय सुकृतम् तस्य सर्वम् गच्चेद् अरक्षितः |
ஒரு அகதியைக் காக்கும் சக்தி இருந்தும் , அவன் நம் கண் முன்னாலேயே இறக்கநேரிட்டால் இதுவரை கிடைத்த நற்பெயர் , நன்மைகள் அனைத்தும் பறந்தோடிப் போய்விடும்
அடைக்கலம் கேட்டு வந்த அகதிகளை காப்பாற்றாமல் இருப்பது பெரிய இழுக்கு ; அவர்களுக்கு சொர்க்க போகமும் கிட்டாது ; புகழையும் வீரத்தையும் பலத்தையும் அழித்தும் விடும் .
धर्मिष्ठम् च यशस्यम् च स्वर्ग्यम् स्यात् तु फल उदये |
கரிஷ்யாமி யதா அர்த்தம் து கண்டோர் வசனம் உத்தமம்
தர்மிஷ்டம் ச யசஸ் மயம் ச ஸ்வர்க்யம் ஸ்யாத் து பல உதயே
நான் கண்டு மகரிஷி சொன்ன அற்புதமான வார்த்தைகளையே பின்பற்றுவேன் .அதுவே அறநெறி ; புகழ் ஈட்டும் ; சொர்க்கத்துக்கு வழி திறக்கும் ; கை மேல் பலன் தரும்
Xxx
யுத்த காண்டத்தில் முத்தாய்ப்பு வைக்கும் ஸ்லோகம் இதோ
सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ||६-१८-३३
अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम |
33. yaachate = he who seeks; prapannaaya = refuge; sakR^ideva = just once; iti = saying that; asmi = I am; tava = yours; dadaami = I shall give; abhayam = assurance of safety; sarva bhuutebhyaH = against all types of beings; etat = this; mama = is my; vratam = pledge.
“He who seeks refuge in me just once, telling me that ‘I am yours’, I shall give him assurance of safety against all types of beings. This is my solemn pledge”
ஒரே ஒரு முறை என்னைச் சரணடைந்தால் போதும்;நான் உன்னவன் என்று சொன்னால் , எல்லா உயிரினங்களிடமிடமிருந்தும் நான் அவனுக்குப் பாதுகாப்பு அளிப்பேன் இது என்னுடைய உறுதிமொழி . என்னுடைய உறுதியான கொள்கை
சம்ஸ்க்ருதத்தில் இது என் விரதம்VOW/ PLEDGR என்று செல்லப்பட்டுள்ளது
ஸக்ருத் ஏவ ப்ரபந்நாய தவ அஸ்மி இதி ச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம
Xxxx
கம்பன் சொல்லும் வேறு விஷயங்கள்
கம்ப ராமாயணத்தில் இந்த உறுதி மொழி, கிஷ்கிந்தா காண்ட சுக்ரீவ சரணாகதி விஷயத்திலேயே வந்துவிடுகிறது.. இந்த விபீஷண சரணாகதி படலத்தில் புறாக்கதையுடன் வேறு பல விஷயங்களை அடுக்குகிறான் .இதோ அந்தப் பட்டியல் :
கம்ப இராமாயண யுத்த காண்டத்தில் இராமன் தரும் அகதிகள் பட்டியல் வேறு
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
காலத்தை வென்ற கவிஞன் கண்ணதாசன் – 5
ச.நாகராஜன்
கவியரசு கண்ணதாசன் பன்மொழி விற்பன்னர் என்பது பலருக்கும் தெரியாது.
அவர் சம்ஸ்கிருதத்தில் கவிதை எழுதி இருக்கிறாரா? முதலில் அவருக்கு சம்ஸ்கிருதம் தெரியுமா?
கேள்விகள் நியாயமானவை தான்.
ஆரம்ப காலத்தில் அவர் எழுதிய கவிதை இது:
“செத்த மொழி பெற்ற மகன், தமிழைப் பார்த்துத்
திணறுகிறான்!
அத்திம் பேரும்
பூரிகளும் ஸ்வாமிகளும் ஆச்சார் யாளும்
பூரணமும் ஸ்வாகதமும் தமிழா?”
– தமிழ் போலும் – மொழி இல்லை என்ற கவிதையில்
–
ஆனால் பக்குவப்பட்ட நிலையில், அவர் கூறியது:
“முட்டாள்தனமாக ‘வடமொழி செத்த மொழி’ என்று எவனெவனோ சொன்னதைக் கேட்டு நான் தான் காலத்தை வீணாக்கி விட்டேன். இன்றைய இளைஞன் உடனடியாக வடமொழி கற்க வேண்டும். ஆங்கிலம் காப்பாற்றாத அளவுக்கு வடமொழி காப்பாற்றும். வடமொழியின் மூலம் சிறந்த எழுத்தாளனாகலாம்; பேச்சாளனாகலாம்; மொழிபெயர்ப்பாளனாகலாம்.”
“தமிழின் பெயரால் கூப்பாடு போடுவது அரசியல்; தமிழ் நம் உயிர்; அது போல் வடமொழி நமது ஆத்மா”
அவர் எழுதிய வடமொழிப் பாடல் இது:
அமர ஜீவிதம் சுவாமி அமுத வாசகம்
பதித பாவனம் சுவாமி பக்த சாதகம்
முரளி மோகனம் சுவாமி அசுர மர்த்தனம்
கீத போதகம் ஸ்ரீகிருஷ்ண மந்திரம்
நளின தெய்வதம் சுவாமி மதன ரூபகம்
நாக நர்த்தனம் சுவாமி மான வஸ்திரம்
பஞ்ச சேவகம் சுவாமி பாஞ்ச சன்னியம்
கீத போதகம் ஸ்ரீகிருஷ்ண மந்திரம்
ஸத்திய பங்கஜம் சுவாமி அந்திய புஷ்பகம்
சர்வ ரக்ஷகம் சுவாமி தர்ம தத்துவம்
ராத பந்தனம் சுவாமி ராஸ லீலகம்
கீத போதகம் ஸ்ரீகிருஷ்ண மந்திரம்
எப்படி இருக்கிறது சம்ஸ்கிருதக் கவிஞர் கண்ணதாசனின் சம்ஸ்கிருத கவிதை! மிகச் சிறந்த சம்ஸ்கிருத கவிஞர்களையும் புறம் தள்ளி விடும் சொல் ஜாலங்களும் அர்த்த கோலங்களும் கொண்ட அழகிய பாடல் இது!
‘கடவுளே, இன்னும் சிறிது காலம் என்னை வாழவிட்டால் ஆங்கிலத்தில் ஒரு காவியமும் சம்ஸ்கிருதத்தில் ஒரு காவியத்தையும் படைப்பேன்’ என்று எழுதினார் அவர்.
‘அடடா இது என்ன கண்ணா, இவள் அந்தர லோகத்துப் பெண்ணா’ என்று அவர் கூறிய போது மகிழ்ந்தது நடிகையர் திலகம் சாவித்திரி மட்டுமல்ல; முழு தமிழகமுமே மகிழ்ந்தது.
இசைஞானி இளையராஜா அற்புதமாக தனது கருத்தை இப்படிப் பதிவு செய்கிறார்:-
“இசையமைப்பாளனாக அறிமுகமான பின், அதே ‘அருண் பிரசாத் மூவிஸில்’ எனது இரண்டாவது படமான ‘பாலூட்டி வளர்த்த கிளிக்கு’ப் பணியாற்ற நேர்ந்த போது, கவிஞர் என்னைப் பார்த்ததும், “நீதானா அந்த இளையராஜா! நான் அப்பவே நெனச்சேன், நீயாகத் தான் இருக்குமென்று!” என்று தன் உள்ளம் திறந்த வாழ்த்தையும் கூறி, என்னை வரவேற்கும் விதத்தில், ‘கண்ணோட கண்ணு’ என்ற பாடலில்,
“வா, ராஜா, வா!”
என்ற தனது வாழ்த்து முத்திரையையும் பதித்தார்.
கண்ணதாசனின் சொல் விளையாட்டு அபூர்வமான ஒன்று.
‘அத்தான் என்னத்தான் அவர் என்னைத் தான் எப்படிச் சொல்வேனடி?!’
பாவ மன்னிப்பு படத்தில் சாவித்திரியும் தேவிகாவும் இணையும் காட்சியில் இடம் பெறும் இப்பாடல் எத்தனை ஆயிரம் பெண்களின் மனங்களில் என்னென்ன உணர்வுகளை ஏற்படுத்தியதோ! இளம் பெண்களின் மனதை வருடும் பாடலுக்கு மன்னன் கண்ணதாசன் அல்லவா! எப்படி சொல்வேனடி என்பதை இன்னொரு படத்தில் இன்னொரு பாடலிலும் சொல்லி விடுகிறார். மலர்கள் நனைந்தன பனியாலே என்ற பாடலில் ‘என்னை நிலாவினில் துயர் செய்தான், அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான்’ என்றார். இது போல அகத்துறையை விளக்கும் இன்னொரு பாடலை எந்த மொழியிலாவது காட்டுங்கள் பார்ப்போம். முடியவே முடியாது!
‘பிள்ளையாரு கோவிலுக்கு பொழுதிருக்க வந்திருக்கும் பிள்ளையாரு! இந்தப் பிள்ளை, யாரு?!’
பாகப்பிரிவினை படத்தில் வரும் இந்தப் பாடலில், பிள்ளையார் என்ற வார்த்தை பிள்ளையாரையும் இந்தப் பிள்ளை யார் என்ற கேள்வியையும் எழுப்பும் சிலேடையை ரசிக்காமல் இருக்க முடியாது.
அத்திக்காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ
காய்களை வைத்து சொல் விளையாட்டை நடத்தும் கவிஞரின் பாடலில் காய்ச்சீர் அருமையாக அமைந்திருப்பதையும் வியந்து ரசிக்கலாம்! எத்தனை காய்கள், எத்தனை அர்த்தங்கள்!! பலே பாண்டியா படத்தில் இடம் பெறும் இப்பாடலில் தேவிகாவும் சிவாஜி கணேசனும் காய்களின் இரு பொருள் அர்த்தங்களை விளக்கும் பாவமும் அதற்குக் கவிஞர் இடம் தந்திருப்பதையும் எந்தக் கால ரசிகர்களும் ரசிக்கலாம்!
சிவாஜி கணேசன் சொல்வாராம், கவிஞரின் பாட்டிற்குத் தக என் முகபாவமும் நடிப்பும் அமைய வேண்டுமே என்று!
தேன் சொட்டும் பாடல் ஒன்று வேண்டுமா? இதோ:
பார்த்தேன் சிரித்தேன், பக்கத்தில் அழைத்தேன் அன்று உனை தேன், என நான் நினைத்தேன் அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்
பாடல் முழுவதும் சிலேடை வார்த்தைகள்! வீர அபிமன்யு படத்தில் கவிஞர் சிலேடை பாடல் அமைப்பின் சிகரத்தில் ஏறி விடுகிறார்!
மன்னவன் வந்தானடி தோழி மஞ்சத்திலே இருந்து நெஞ்சத்திலே அமர்ந்த மன்னவன் வந்தானடி பாடலுக்காக சுரங்களை அவரே அமைத்தார். இசை வளம் கொண்ட இசை மேதை அவர் என்பதை நிரூபித்தார்.
The story of Rama has been an inspiration to Hindus for generations. We see him in the dramas of Bhasa and works of Kalidasa. If we take into account of all the songs composed by famous composers and poems by Alvars, his story would have been repeated thousaands of times. Even the great Saivite saints didn’t forget to mention him in their devotional poems.
Some of important matters in the epic may be missed by the devoted readers of Ramayana. They focus their mind only in devotion to Rama and Sita. There are many anecdotes where democracy is favoured instead of autocracy.
In all ancient cultures the eldest son is appointed as the next king. In Dasaratha’s Ayodhya one would expect the same. But Dasaratha humbly sought the opinion of all elders and ministers in the assembly before appointing his son Rama. It is in the second Sarga of Ayodhyaa Kaanda.
Tamil poems give another anecdote where Rama was conducting a consultation meeting under a banyan tree with the civil engineers about building a pontoon bridge between Dhanushkoti and Sri Lanka. It is in poem 70 of Akananuru. The birds on the tree were making huge noise. Perturbed by the interference, he asked them to shut up. Ad miraculously they all fell into silence. The ancient commentators commenting on this verse say that Rama was holding a secret consultation meeting with the heroes of the Monkey Brigade (Vaanara Sena) about the impending war with Ravana.
The third democratic consultation is seen in the chapter on Vibhishana’s surrender to Rama. Before giving him asylum Rama sought the opinion of all the important leaders assembled there.
Even in Ravana’s Sri Lanka we see Vibhishana, Kumbakarna giving their opinions boldly against Ravana’s detention of Sita Devi.
Xxx
Some of the slokas in the relevant chapters are worth quoting.
Dasaratha says that he wanted to appoint Rama as next king and he took this decision after consulting others. And he seeks the assembly’s consent
तस्मिन् when such, सुते son (Rama), इमाम् this, महीम् earth, निवेश्य entrusting, अनेन श्रेयसा to ensure the welfare of the world, एवम् thus, सद्य: without any delay, संयोज्य having united, गतक्लेश: relieved of my anxieties, भविष्यामि shall become.
I shall be relieved of my anxiety by entrusting the land (ruled by me) to my son (Rama) without any more delay and thus ensure the continued welfare of this world.
यदिदं मेऽनुरूपार्थं मया साधु सुमन्त्रितम्।
भवन्तो मेऽनुमन्यन्तां कथं वा करवाण्यहम्।।2.2.15।।
मया by me, सुमन्त्रितम् well thoughtover, इदम् this word, साधु proper, मे my, अनुरूपार्थं यदि if worthy of me, भवन्त: you, मे to me, अनुमन्यन्ताम् your consent shall be given, अहम् I, कथं वा how else, करवाणि I shall do?
Although it (this decision) is personally favourable to me and I have decided after seeking good counsel, you should also give me your consent and tell me what I should do.
यद्यप्येषा मम प्रीतिर्हितमन्यद्विचिन्त्यताम्।
अन्या मध्यस्थचिन्ता हि विमर्दाभ्यधिकोदया।।2.2.16।।
एषा this, मम my, प्रीति: यद्यपि even though I like, अन्यत् any alternative, हितम् means of welfare, विचिन्त्यताम् let it be thought over, मध्यस्थचिन्ता opinion of those without partiality, अन्या alternative, विमर्दाभ्यधिकोदया deliberations may bring good.
Although this is what I would like to do, please suggest alternative ways of achieving the welfare (of this kingdom). Deliberations by the unbiased (on this issue) may bring good.
इति ब्रुवन्तं मुदिताः प्रत्यनन्दन्नृपा नृपम्।
वृष्टिमन्तं महामेघं नर्दन्त इव बर्हिणः।।2.2.17।।
इति thus, ब्रुवन्तम् speaking, नृपम् king Dasaratha, नृपा: kings, मुदिता: delighted, वृष्टिमन्तम् raining, महामेघम् thick cloud, नर्दन्त: making sounds, बर्हिण: इव like peacocks, प्रत्यनन्दन् acclaimed.
Having thus heard king Dasaratha speak, the kings acclaimed him with delight, like peacocks crying (in joy) to see thick clouds.
After listening to the views of assembled monkey leaders including Sugriva and Hanuman, Rama decided to give Vibhishana, asylum. Vanara leaders did not give a unanimous verdict. Some of them opposed Vibhishana saying that he may be a spy or an unreliable person who even deserted his own brother. Rama weighed their opinions and gave the final judgement. He is very clear and says that it is MY POLICY to give asylum to anyone who surrenders humbly. And he also quoted the famous saying of Kandu Rishi. Here are the quotable quotes:
Vibhishana Saranagathi
मित्र भावेन सम्प्राप्तम् न त्यजेयम् कथंचन |
दोषो यदि अपि तस्य स्यात् सताम् एतद् अगर्हितम् ||6-18-23
“By any means, I do not desert anyone who arrives with a friendly appearance, even if he has a defect. His acceptance is irreproachable in the eyes of good men”
श्रूयते हि कपोतेन शत्रुः शरणम् आगतः ||६-१८-२४
अर्चितः च यथा न्यायम् स्वैः च मांसैर् निमन्त्रितः |
“It is narrated how by a dove, its enemy ( a fowler) when it came for a refuge, was received according to rules of hospitality and was invited for a feast with its own flesh.”
स हि तम् प्रतिजग्राह भार्या हर्तारम् आगतम् ||६-१८-२५
कपोतो वानर श्रेष्ठ किम् पुनर् मद् विधो जनः |
“O, the excellent of monkeys! The aforesaid dove indeed accepted as a guest, the fowler as he came, although he killed its wife .How much more a man like me has to do?”
ऋषेः कण्वस्य पुत्रेण कण्डुना परम ऋषिणा ||६-१८-२६
शृणु गाथाम् पुरा गीताम् धर्मिष्ठाम् सत्य वादिना |
“Hear the verses inculcating virtue so long ago, by Kandu, the son of a sage called Kanva, a great sage and a speaker of truth.”
“O, king the terminator of enemies! Even an enemy, who formed a cup with his hollowed hands, a miserable person, a person who is begging and who is seeking a refuge should not be killed with the aim of not being cruel.”
अर्तो वा यदि वा दृप्तः परेषाम् शरणम् गतः ||६-१८-२८
अरिः प्राणान् परित्यज्य रक्षितव्यः कृत आत्मना |
“An enemy who comes for protection against others, even if the aforesaid enemy is oppressed or arrogant, is to be protected by one who has a disciplined mind, even by abandoning one’s life.”
स चेद् भयाद् वा मोहाद् वा कामाद् वा अपि न रक्षति ||६-१८-२९
स्वया शक्त्या यथा तत्त्वम् तत् पापम् लोक गर्हितम् |
“If he does not protect rightly through his strength, by fear or by ignorance or by desire, it is a sin to be reproached by the world.”
विनष्टः पश्यतस् तस्य रक्षिणः शरण आगतः ||६-१८-३०
आदाय सुकृतम् तस्य सर्वम् गच्चेद् अरक्षितः |
“If having not been protected, a refugee dies before the eyes of a man who is able to protect him, the former takes along all his moral merit and goes.”
“In not protecting thus the persons who take refuge, there is a great blemish involved in it. It does not bestow heaven. It destroys reputation. It devastates strength and valor”
धर्मिष्ठम् च यशस्यम् च स्वर्ग्यम् स्यात् तु फल उदये |
“I will follow the excellent words of Kandu. It becomes a very righteous thing, gives reputation, leads to heaven and the rewards appear consequently.”
सकृद् एव प्रपन्नाय तव अस्मि इति च याचते ||६-१८-३३
अभयम् सर्व भूतेभ्यो ददामि एतद् व्रतम् मम |
“He who seeks refuge in me just once, telling me that ‘I am yours’, I shall give him assurance of safety against all types of beings. This is my solemn pledge” 6 -18 – 33