மரங்களை வளர்த்தால் சொர்க்கம் கிடைக்கும் (Post No.11,453)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,453

Date uploaded in London – 18 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

“परोपकाराय फलन्ति वृक्षाः परोपकाराय वहन्ति नद्यः ।

परोपकाराय दुहन्ति गावः परोपकारार्थ मिदं शरीरम् ॥”

Paropakārāya Falanti Vr̥kṣāḥ Paropakārāya Vahanti Nadyaḥ.

Paropakārāya Duhanti Gāvaḥ Paropakārārtha Midaṁ Śarīraṁ.

பரோப காராய பலந்தி வ்ருக்ஷாஹா பரோப காராய வஹந்தி நத்யஹ

பரோப காராய துஹந்தி காவஹ பரோபகாரார்தம் இதம் சரீரம்

பிறர் நலனுக்காகவே மரங்கள் பழுக்கின்றன

பிறர் நலனுக்காகவே ஆறுகள் பாய்கின்றன

பிறர் நலனுக்காகவே பசுக்கள் பாலைத் தருகின்றன

பிறர் நலனுக்காகவே நமது உடலும் (படைக்கப்பட்டுள்ளன)

இமயம் முதல் குமரி வரை, தமிழும் ஸம்ஸ்க்ருதமும் பழு மர உவமைகளைக் (Fruit Tree similes) கையாளுகின்றன. வேறு எந்த நாட்டு பழங்கால இலக்கி யத்திலும் இதைக் காண முடியாது

Xxxx

“तडागकृत् वृक्षरोपी इष्टयज्ञश्च यो द्विजः ।

एते स्वर्गे महीयन्ते ये चान्ये सत्यवादिनः ॥”

Taḍāgakr̥t Vr̥kṣaropī Iṣṭayajñaścha Yo Dvijaḥ.

Ete Svarge Mahīyante Ye Chānye Satyavādinaḥ.

தடாக க்ருத் வ்ருக்ஷரோபி  இஷ்ட யக்ஞஸ்ச யோ த்விஜஹ

ஏதே ஸ்வர்க மஹீயந்தே யே சாந்யே  ஸத்ய வாதினஹ

யாருக்கு சுவர்க்கம் கிடைக்கும்? உண்மை பேசுவோருக்கும், மரங்களை நடும் , குளங்களை வெட்டும், வேள்விகளைச் செய்யும் இரு பிறப்பாளருக்கு சுவர்க்கத்தில் பெரிய வரவேற்பு  கிடைக்கும்..

இரு பிறப்பாளர் : பிராமண, க்ஷத்ரிய வைஸ்யர்கள் 

Xxxx

“तस्मात् तडागे सवृक्षा रोप्याः श्रेयोऽर्थिना सदा।

पुत्रवत् परिपाल्याश्च पुत्रास्ते धर्मतः स्मृताः ॥”

Tasmāt Taḍāge Savr̥kṣā Ropyāḥ Śreyo’rthinā Sadā.

Putravat Paripālyāścha Putrāste Dharmataḥ Smr̥tāḥ

தஸ்மாத் தடாகே ஸ வ்ருக்ஷா ரோப்யாஹா ஸ்ரேயோ ர்த்தினா  ஸதா

புத்ரவத் பரிபால்யாஸ் ச புத்ராஸ்தே தர்மதஹ  ஸ்ம்ருதாஹா

தனக்கு நன்மை கிடைக்க வேண்டுமாயின், ஒருவர் செய்யவேண்டிய  சிறந்த செயல், குளங்களுக்கு அருகில் மரங்களை நட்டு அவைகளைச் சொந்த மகன்கள் போல போற்றி வளர்க்கவேண்டும் . ஏனெனில் மரங்கள், ஒருவரின் மகன்களுக்குச் சமம் என்று தர்ம சாஸ்திரங்கள் செப்புகின்றன.

Xxx

வேள்விக்கான மரங்கள்

பலாச பல்குன் யக்ரோதாஹா ப்லக்க்ஷா அச்வத்தா விகங்ருதாஹா

உதும்பரஸ் ததா பில்வஹ சந்தனோஞ  யாக்ஞயாஸ்ச யே

ஸ ஹலோ தேவதாருஸ்ச  சாலஸ் ச கதிரஸ் ததா

ஸமிதர்த்தே ப்ரஸஸ்தாஹா ஸ்யுஹு  ஏதே வ்ருக்ஷாஹா விசேஷதஹ

வாயு புராணம்

வேள்விகளில் ஸமித்துகளாக  சில வகை மரங்களின் குச்சிகளைப் பயன்படுத்துவதே சாலச்  சிறந்தது .

அவை புரசு, பல்குனீ , ஆல் , இத்தி, அரச மரம், விகங்கதம், அத்தி, வில்வம், சந்தனம்  ஆகியன யாகத்துக்கானவை.

ஸஹல , தேவதாரு, சால மரம், கதிர , கருங்காலி, இவைகள் ஹோம ஸமித்துக்கள் .

எனது கருத்து :

புராணத்தில் எவ்வளவு பயனுள்ள விஷயங்கள் இருக்கின்றன என்பதற்கு இந்த இரண்டு ஸ்லோகங்கள் எடுத்துக்காட்டு . ஒரு மரம் பத்து மகன்களுக்குச் சமம் என்ற மத்ஸ்ய புராண ஸ்லோகத்தை முந்திய கட்டுரையில் கண்டோம். இங்கு 14 வகை மரங்களைப் பற்றி பேசப்படுகிறது. பிராமணர்களுக்கு இவை மட்டுமின்றி வேறு பல தாவரங்களை பற்றியும் தெரிந்து இருந்தது எடுத்துக்காட்டாக பிள்ளையாருக்குப் பயன்படுத்தும் 21 இலைகள்/ பத்திரங்கள் ஆகும்.

இப்போது பெரும்பாலோருக்கு மரம் எது, கொடி எது என்று கூடத்  தெரியாது தாவரவியல் (Botany) தெரிந்து இருந்ததால் இந்த மரங்கள்தான் யாக, யக்ஞங்களுக்குச் சிறந்தவை என்பதை அவர்களால் சொல்ல முடிந்தது. 2000, 3000ஆண்டுகளுக்கு முன்னர் வேறு எந்த மத நூல்களிலும் இவ்வளவு விஷயங்கள் இராது. புராணங்களை ஒதுக்காமல் பாதுகாப்பது நம் கடமை.

XXX

மனுவின் “மர  மண்டை”!! Green Headed Manu !

விவசாயிகளிடையே அடிக்கடி வரும் தகராறு, என்னுடைய நிலத்தின் எல்லையை மீறி நீ பயிரிட்டாய் அல்லது மாடுகளை மேயவிட்டாய் என்பதாகும். இதற்கு மனு (Manu)  ஒரு அழகான யோஜனையைச் சொல்கிறார்.

லண்டனில் என் தோட்டத்துக்கு இரண்டு புறங்களில் மர பலகைகளினால் வெளி போட நான் இரண்டாயிரம் பவுன்களுக்கு மேல் செலவிட்டேன் (2020-ம் ஆண்டில்). என்னுடைய தோட்டத்தைப் பார்த்து  நிற்கும்போது வலது புற முள்ள வேலி  எனக்குச் சொந்தம். இடது புறமுள்ள வேலி அடுத்த வீட்டுக்காரருக்குச் சொந்தம் (in semi-detached houses or row type houses). ஆகையால் அவற்றைச் செப்பனிடுவது, பராமரிப்பது அவரவர் கடமை. பின்புறமுள்ள வேலியும்  என்னுடையதே.ஒட்டியுள்ள வீடுகளில் இந்த விதி பொருந்தும். தனித்தனி வீடுகளாக (Detached Hoses) இருந்தால் முழுச் செலவும் நம்முடையதே.

அந்தக் காலத்தில் ஏதேனும் மரங்கள் அல்லது செடிகள்தான் வேலி . ஒரு செலவும் கிடையாது. இப்பொழுது அடுத்தவீட்டு, நாய், பூனை, சிறுவர் சிறுமியர் வந்து பிரச்சனை  செய்யக்கூடாது என்பதற்காக தண்டச் செலவு.

விவசாய வேலி தொடர்பான சண்டைகளைத் தவிர்க்க அரசாங்கமே மரங்களையும், குளங்களையும் வேலிகளாகச் செய்ய வேண்டும் என்கிறது மனு ஸ்ம்ருதி. மநு சொல்லாத விஷயமே இல்லை.

மன்னரானவன் ஆல மரம், அரச மரம் முள் முருங்கை , இலவம் , சால மரம், பனை மரம் ஆகியவற்றால் வேலிகளை அமைக்கலாம் என்கிறார் மநு.

sImAvR^ikShA.nshcha kurvIta nyagrodhAshvatthaki.nshukAn |

shAlmalIn sAlatAlA.nshcha kShIriNashchaiva pAdapAn |

सीमां प्रति समुत्पन्ने विवादे ग्रामयोर्द्वयोः ।

ज्येष्ठे मासि नयेत्सीमां सुप्रकाशेषु सेतुषु ॥ ८.२४५॥

सीमावृक्षांश्च कुर्वीत न्यग्रोधाश्वत्थकिंशुकान् ।

शाल्मलीन् सालतालांश्च क्षीरिणश्चैव पादपान् ॥ ८.२४६॥

——மனு ஸ்ம்ருதி 8-46

8-246. Let him mark the boundaries (by) trees, (e.g.) Nyagrodhas, Asvatthas, Kimsukas, cotton-trees, Salas, Palmyra palms, and trees with milky juice- MANU SMRITI

அந்தப் பணியை ஆனி ( ஜேஷ்ட) மாதத்தில் செய்ய வேண்டும் என்றும் மநு விளம்புகிறார். ஏனெனில் அப்பொழுது நல்ல வெளிச்சம் உடைய நீண்ட பகற்பொழுது இருக்கும். எவ்வளவு பிராக்டிகலாக (Practical approach) மனு ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுகிறார் என்பற்கு இதுவும்  ஒரு எடுத்துக்காட்டு.

Xxx

புறச்சூழல் வாழ்க ; அசுத்தம் செய்யாதே

नाप्सु मूत्रं पुरीष वाष्ठीवनं वा समुत्सृजेत्।

अमेध्यमलिप्तमन्यद्वा लोहतं वा विषाणि वा।”

Nāpsu Mūtraṁ Purīṣa Vāṣṭhīvanaṁ Vā Samutsr̥jet.

Amedhyamaliptamanyadvālohataṁ Vā Viṣāṇi Vā.

நாப்ஸு மூத்ரம் புரீஷ வாஷ்டிவனம் வா ஸமுத்ஸ்ருஜேத்

அமேத்யமலிப்த மன்யத்வா லோஹதம் வா விஷாணி வா

மலம், மூத்திரம் குப்பை, ரத்தம், விஷம் முதலியவற்றை நீர்நிலையில் கலக்கக்கூடாது. அவை புறச்சூழலை மாசு படுத்துவதோடு மனிதர்களின் நலனுக்கும் கேடு செய்யும்.

–subham—

Tags– மரம் ,வளர்ப்பு , சுவர்க்கம் , சொர்க்கம் மநு , வேலி , மாசு, அசுத்தம் , புறச்சூழல்

அருள்வாயே! – 1 (Post No.11,452)

 WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,452

Date uploaded in London – –   18 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அருணகிரிநாதர் தொடர்!

அருள்வாயே! – 1

ச.நாகராஜன் 

அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.

திருப்புகழை ஓதி விநாயகர், முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் அருளை வேண்ட விழையும் அன்பர்கள் இந்தப் பாடல்களை ஓதும் போது பரவசம் அடைவது இயல்பு.

அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் தொகுப்பு இது:

படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!

 1) விநாயகர்

இன்பரசத் தே பருகிப் – பலகாலும்

   என்றனுயிர்க் காதரவுற் – றருள்வாயே

பாடல் எண் 3 –  உம்பர் தரு எனத் தொடங்கும் பாடல்

பொருள் : இன்பச் சாற்றை நான் உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக!

விநாயகரிடம் அருள் வேண்டிப் பாடும் பாடல் இது.

 2) விநாயகர்  

    கலவிதனில் மூழ்கி – வறிதா

கயவறி வீனன் இவனுமுயர் நீடு

  கழலிணைகள் சேர  – அருள்வாயே

பாடல் எண் 5 –  விட மடைசு வேலை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : சுக போகத்தில் மூழ்கி ஏழ்மை அடைந்த கீழ்மகனும் அறிவில்லாதவனும் ஆகிய அடியே உனது உயர்ச்சி மிக்க திருவடி இணைகளை சேர அருள்வாயாக!

விநாயகரிடம் அருள் வேண்டிப் பாடும் பாடல் இது. 

3) திருப்பரங்குன்றம்   

நடித்தெ ழுங்குரல் குமுகுமு குமுவென

  இசைத்து நன்கொடு மனமது மறுகிட

    நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற – அருள்வாயே

பாடல் எண் 10 –  கறுக்கும் அஞ்சன எனத் தொடங்கும் பாடல்

பொருள் : கண்டத்தோடு நடித்து எழுகின்ற புட்குரல் குமுகுமு குமுவென்று ஒலி செய்ய, நன்றாக மனம் கலங்கும்படி பசப்பி மயக்கும் விஷம் போன்ற விலைமாதர்களால் வரும் துன்பம் நீங்க நீ அருள்வாயாக!

4) திருப்பரங்குன்றம்   

    பஞ்சஇந் த்ரிய வாழ்வைக்

கணத்திற் சென்றிடந் திருத்தித் தண்டையங்

   கழற்குத் தொண்டுகொண் டருள்வாயே

பாடல் எண் 15 –  தடக்கை பங்கயம் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : ஐம்பொறிகளால் ஆட்டுவிக்கப்படும் இந்த வாழ்வை, நொடியிலே வந்து என் இதயமாம் இடத்தைத் திருத்தி வீரக்கழல்கள் அணிந்த நின் அழகிய திருப்பாதங்களுக்குத் தொண்டு செய்ய என்னை ஏற்றுக் கொண்டு அருள்வாயாக!

5) திருப்பரங்குன்றம்  

    துவக்குணும் பங்கப் பித்தன வத்தன்

     புவிக்குளென் சிந்தைப் புத்திம யக்கந்

       துறக்கநின் தண்டைப் பத்மமெ னக்கென் – றருள்வாயே

பாடல் எண் 16 –  பதித்த செஞ்சந்த எனத் தொடங்கும் பாடல்

பொருள் : கட்டுப்பட்டிருக்கும் பாவியாகிய பித்தன், பொய்யன் நான். இப்பூமியில் என்னுடைய மனதிலும், புத்தியிலும் உள்ள மயக்கத்தை விட்டொழிக்க உனது தண்டை அணிந்த தாமரை போன்ற திருவடிகளை எனக்குத் தந்து அருள்வாயாக!


 6) திருப்பரங்குன்றம்  

    இசைத்திடுஞ் சந்த பேதம்

      ஒலித்திடுந் தண்டை சூழும்

         இணைப்பதம் புண்ட ரீகம் – அருள்வாயே 

பாடல் எண் 20 –  வரைத்தடங் கொங்கை எனத் தொடங்கும் பாடல்

பொருள் : இசையுடன் கலந்த பல வகையான சந்த ஒலிகளை எழுப்பும் தண்டைகள் சூழ்ந்த நினது திருவடிகளாகிய தாமரைகளைத் தந்து அருள்வாயாக!

7) திருச்செந்தூர் 

     திங்கு நின்றதென் வீடே வாரீ

        ரென்றி ணங்கிகள்  மாயா லீலா

          இன்ப சிங்கியில் வீணே வீழா – தருள்வாயே

பாடல் எண் 21 –  அங்கை மென்குழலாய்வார் எனத் தொடங்கும் பாடல்

பொருள் : நான் இங்கு நிற்கும் இந்த வீடு என்னுடையது தான், உள்ளே வாருங்கள் என்று மனப் பொருத்தம் பேசும் விலைமாதரின் மாயா லீலைகள் ஆகிய இன்பமாகிய நஞ்சுக் குழியில் வீணாக விழாத வண்ணம் அருள்வாயாக!

8) திருச்செந்தூர் 

     செறியுமிரு வினைகரண மருவுபுல னொழியவுயர்

       திருவடியி லணுகவர – மருள்வாயே

பாடல் எண் 28 –  அறிவழிய மயல் பெருக எனத் தொடங்கும் பாடல் 

பொருள் : என்னை நெருங்கியுள்ள நல்வினை, தீவினை ஆகிய இரு வினைகளும், என் மனமும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் ஒழிந்து நீங்கும்படியாக உனது உயர்ந்த திருவடிகளை அணுக எனக்கு வரம் அருள்வாயாக!

9) திருச்செந்தூர் 

     முழுமதி புரிந்த சிந்துர அரிவைய ருடன்க லந்திடு

       முகடியு நலம்பி றந்திட – அருள்வாயே 

பாடல் எண் 32 –  இரு குழையெறிந்த எனத் தொடங்கும் பாடல்

பொருள் : முழுநிலாப் போன்ற திலகம் இட்டுக் கொண்டுள்ள விலைமாதர்களுடன் கலந்திடும் கசடனாகிய எனக்கும் நன்மை பிறக்க அருள்வாயாக!

குறிப்பு நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன்  விளக்கத்தையும் இதில் காணலாம். 

**      (தொடரும்)

புத்தக அறிமுகம் – 117

ஜோதிடம் உண்மையா?

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

 1. ஜோதிடத்தை நம்பாதே – விஞ்ஞானிகளின் அறிக்கை!

 2. ஆரூட ராணி லெனார்மனா!

 3. ஜீன் டிக்ஸனின் பிரசித்தி பெற்ற ஜோதிடக் கணிப்புகள்!

 4. ஜங்கும் சிக்மண்ட் ப்ராய்டும்

 5. ஜோதிடம் பொய்யே என்று நிரூபிக்கத் துடித்தவர்

 6. அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட மாயக்கலை ஜோதிடம்!

 7. வானில் உள்ள கிரகங்களுக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?

 8. வியாழ கிரக ஈர்ப்பும் நர்ஸ் குழந்தை மீது ஏற்படுத்தும் ஈர்ப்பும்!

 9. நான்கே நான்கு பிரபஞ்ச விசைகள்

10. நேருஜியின் கடிதம்!

11. லண்டனில் விவேகானந்தரை எதிர் நோக்கிய கேள்வி!

12. சுவாமிஜி பஞ்சாங்கம் பார்த்துத் தேர்ந்தெடுத்த நாள்!

13. சங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட 

   ஜோதிடக் குறிப்புகள்! -1

14. சங்க இலக்கியத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட 

   ஜோதிடக் குறிப்புகள்! -2

15. சனி தப்பினாலும் செங்கோல் மழை தரத் தப்பாது!

16. ஒன்பது எழுத்துக்களில் தமிழன் கணிக்கும் பஞ்சாங்கம்

17. இரும்புத் திரை நாட்டில்  மெடிகல் அஸ்ட்ராலஜி!

18. நியூட்டனின் பதில்!

19. உயிர்காக்கும் கலையே ஜோதிடம்!

முடிவுரை

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது: 

Everyone knows that Scientists have always been disagreed with the concept of Astrology. But this book analyses the astrology in a scientific manner. Jeane Dixon, who was a famous American astrologer was initially claimed to be fake by Michale Conklin, later accepted and astonished by her ability to predict precise astrology. He proved this by comparing the various phenomenons like the impact of The Moon in human mentality and accurate calculation of rain by Almanac and so on! A must read book, not for the believers but who would disagree with Astrology. 

விஞ்ஞானிகளால் மறுக்கப்படும் கலை ஜோதிடம் என்பதை அனைவரும் அறிவர். ஆனால் ஜோதிடத்தை அதே அறிவியல் நோக்கில் ஆய்வு செய்யும் நூல் இது. அமெரிக்காவின் பிரபல ஜோதிடர் ஜீன் டிக்ஸன், பொய்யென்று சொல்ல வந்து பிரமித்துப் போன மைக்கேல் காக்லின், ஜோதிடம் உண்மையே என்பதற்கான பத்து அறிவியல் காரணங்கள், சந்திரன் மன நிலையைப் பாதிப்பது பற்றிய அறிவியல் தகவல்கள், பஞ்சாங்கத்தின் மழைக்குறிப்பு விஞ்ஞான பூர்வமாகப் பலிப்பது பற்றிய ஆதாரங்கள் என ஏராளமான தகவல்கள் அடங்கிய ஆய்வு நூல்! ஜோதிட ஆர்வலர்களை விட ஜோதிடத்தை நம்பாதவர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்! 

       *

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘ஜோதிடம் உண்மையா?’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Tamil Hindu Encyclopaedia 25 ( Thirty Three Devas and Yama- தேவர்கள், யமன்) in Sangam Tamil Poems (11,451)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,451

Date uploaded in London – 17 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

The Five Elements Pancha Bhuta, Nine Celestial Bodies Nava Graha, Yama, the God of Death, and his assistant The Time Kaala, 33 Devas, 3X7= 21 Lokas and all the Living Beings in these places came from Lord Vishnu says the Vedas— This found in Paripatal (paatal) 3-1/14

This is very clear indication to show that the Tamil Hindus living in the southernmost part of India were thorough with all the Puranas (mythology).

Of the 18 books of Sangam period, we find more religious materials in Tiru Murugaatuppadai (Murugu) and Paripatal (Pari.). Unfortunately, Tamils lost most of the 70 Paripatal poems.

The date of Paripatal cannot be questioned, because a few poets of these verses are sung and praised by Sangam poets. For instance, Nallanthuvanaar of Pari. is praised by Maruthan Ila Nagan of Sangam period.

xxx

Thirty Three Devas and Yama 33 தேவர்கள்யமன்

All Hindu scriptures group the Devas (dwellers of Heaven) as 33 and they are divided into four sub groups again.

11 – Ekadasa Rudras (ekaadasa Rudraas)

12- Adityas (aadityaas)

8 – Ashta Vasus

2 – Doctors (Medicine Men of Heaven) = Total 33

( I  am not going to explain 33 Devas here; it is already in my blogs)

The reference to 33 Devas shows that these stories are part and parcel of Tamil land and Tamil folks. They did not come from North, because the Tamils claim them as their own Gods.

Further references are found  in,

Murugu 167; Pari.3-6/8; 27/28 and 8-4/7.

The groups are clearly shown in Pari.8-3/7

Xxx

18 Groups

Were there Aryas and Dravidas in Sangam Period?

Before the anti Hindu gangs divided the entire Hindu society into Aryas and Dravidas and before the anti Indian linguistic gangs divided the entire Indian languages into Aryan ,Dravidian and Munda, ancient Tamils never knew anything about it. They considered everyone their own kith and kin.

Though the word ARYA is found in Sangam literature it is used in good sense like the Rig Veda without any racial connotation. They used to mean ‘Saints, Cultured, Literate’ etc. The greatest proof comes from the greatest of the Modern Tamil Poets Bharatiyar, who used only ARYA in Rig Vedic sense throughout his pomes and  Dravida not even once. He also said that both Tamil and Sanskrit came from Lord Shiva.

If the society was not divided into Aryas and Dravidas, what else the Hindus did? They divided the living beings in to 18 groups. It is in Puranas and Sangam Tamil literature.

The 18 groups (Gana) are mentioned following the 33 Devas in Murugu. ()Lines 167-168 by Nakkirar.

UTTARAKURU- Ever happy place.

These people live ever happy in Uttarakuru (Pathitru 68-12/13.

It looks like this Utopian land Uttarakuru is used in two ways. One is actual heaven and another is Heavenly Place on earth. Even today when one describes some beautiful tourist spots, one compares it to heaven. Kabilar in Pathitruppathu simply says the ‘northern land’ (Vada Pulam in Tamil)  where people live happily for ever. Unknown ancient commentator explains it as Uttarakuru.

பதினெண் கணங்கள்

ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி (தமிழ் கலைக் களஞ்சியம்) தரும் பட்டியல்:

அமரர் – Amarar- Devas

சித்தர்- Sidhdhar- Those who attained 8 Suprnatural Powers

அசுரர்- Asura- Asura of Vedas

தைத்தியர்- Daityas

கருடர்- Garuda (meant all birds led by Eagle pr Falcon

கின்னரர்- Kinnar

நிருதர்- Nirudhar (Departed People)

கிம்புருடர்- Kimpurusha

கந்தர்வர்- Gandharva

இயக்கர் (யக்ஷர்)- Yakshas

விஞ்ஞையர் (வித்யாதரர்)- Vidhyadharas

பூதர்- Bhutas (Ghosts or Strange Natural Phenomena)

பைசாசர்- Paisasar (Dead People’s Spirit)

அந்தரர்- Antharar (People in the Sky)

முனிவர்- Munis (Saints)

உரகர்- Uragas (Nagas who lived in Islands below India)

ஆகாயவாசியர்- Living in the Sky ( ETs, Aliens who visit earth in UFOs)

போகபூமியர் — (பிங்கலம்)- Bhoaga Bhumiyar (Ever Living Happily) may be People of Uttarakuru

The most beautiful and most notable thing in this list is that Asuras and Devas are shown as part of Hindu Society. Hindu Epics and Puranas also show them as half brothers or cousins. Anti Hindu Gangs, particularly from foreign countries, poisoned Indian History and wrote about Aryas and Dravidas as fighting with each other.

(I am not going to explain the meaning of 18 groups here.)

Tamils mentioned the Gandharvas in many places. Murugu (lines 141-142) praises them as beautiful singers.

Xxx

Ashta Dik Palakas அஷ்ட திக் பாலகர் – எண் திசைக் காவலர்

Hindus believe that the universe is guarded by 8 Devas in Eight Directions. Ancient Tamils never forgot it to mention.(Pari.8-7)

Name         consort

 1.Kubera The God of Fortune (North)   Bhadra

2.Yama The God of Justice and Death (South)         Dhumorna

3.Indra The Lord of Heaven and God of the Weather, Sky, Rain, and Storms (East)          Indrani

4. Varuna OR Samudra God of the Seas, Oceans, and Rain (West)    Varuni

5.Īśāna OR Sadashiva God of Birth, Death, Resurrection, and Time (Northeast)          Ishwari

6.Agni God of Fire (Southeast)      Svāhā In the image incorrectly shown on southwest.

7.Vayu God of the Winds and Air (Northwest)        Svasti

8.Nirriti (Demigod of Death, Sorrow, and Decay)|(Southwest)[2][3]          Nirṛta In the image incorrectly shown on southeast.

(The above list is taken from Wikipedia)

Commentators listed all the eight devas; but individually they are mentioned in several poems by the Tamil poets. Indra and Varuna are found even in the oldest Tami book Tolkappiam. Indra and Amrita of Devaloka are also mentioned by several poets(  we have already seen it in earlier parts).

xxx

YAMA, God of Death

கூற்று- kuutru, கூற்றம்- kuutram, காலன்- kaalan , ஞமன்- gnaman , மடங்கல்- madangal , தருமன்- dharuman are the names used by the Sangam poets for YAMA.

There is a strange reference in Pari.5-56/57. Lord Muruga/Skanda received the cock from Agni/Fire God and the goat from Yama.

At the end of time , Yama and Agni join the Sun god/Soorya to destroy the world- says Pari-3-22/23

Yama is referred to by Sangam poets more than Indra.

Following are some references where he is called the death, one who folds or finishes or the Time/r

Because he knows the time for departure of every living being he is called Mr Time (kaalan)

Puram 4-12; 5-1; 226-6; Kuru.283-5; Pathitr.14-10- KUUTRU

Akam.61-1; Pathitr26-13; 51-35; 84-7; Puram.75-11; 98-17; 210-8; 221-8; 227-1; 230-1; 237-9; 361-1; 362-7 – KUUTRAM

Puram.41-1; 240-5; Kali.105-19; 147-40; Pathir.39-8- KAALAN

Puram.6-9; Pari.5-61 – GNAMAN

Puram. 363-9; 366-23; Pari. 3-8 MADANGAL

Pari.3-8 DHARUMAN

Kali.101-25; 100-43 ERUMAI/|BUFFALO (Vehicle of Yama)

The description that he is a just person, he is impartial in passing judgement because his balance shows how much good (Punya) how much bad (paapa) were done in one’s life.

This pure Hindu concept is reflected in Kali.100-13/16 and Pari.5-16

The poets sing about the balance he is holding.

xxxx

Apart from these direct references we see several similes such as comparing a heroic king, a beauty who “kills” a man with her look(Kali.56-7/9

Let us look at some more interesting poems:

Like Sanskrit poets Yama is compared to kings who kill their enemies.

But in one poem a woman curses Yama because he separated her daughter before he killed her. She cursed Yama , let him be buried in the funeral urn (Natrinai 271- 11/12

Another poet says Yama is like a hunter who spreads his net to catch the animals (pathitru-51-36)

Yama is always roaming with rage to kill (Puram 361-42)

He is a BLIND:  Puram 240 (he kills good and bad at the decided  date)

His FOOD is living beings on earth – (Puram.4-2)

He is Moral less; he has no scoop for morals because he is taking the lives of Good People as well (Puram 210-8; 237-9; 255-4)

Whether you do good or bad he is after you- Puram 221-1/8

But all powerful YAMA becomes POWERLESS in front of Lord Skanda Muruga and he gives a goat to him

Yama was punished and kicked by Lord Shiva when he tried  to snatch his devotee Markandeya’s life at the age of 16. Without mentioning Markandeya this anecdote is seen in Kali 101-24/26; 103-43/45

Since Lord Shiva is the Final Destroyer (Mahaa Kaala), the above two poems described Shiva tearing Yama to pieces.

Sangam poets were very well versed not only in Hindu mythological stories but also in the philosophy behind it. Thanks to commentators we know the hidden meaning in Sangam poems.

TAMIL REFERENCE:

All the Devas, Pancha Bhutas, Nine Celestial bodies came from Vishnu

திருமாலிடமிருந்து தோன்றிய பரந்த பொருள்கள்

மா அயோயே! மாஅயோயே!

மறு பிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி

மணி திகழ் உருபின் மா அயோயே!

தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும்,

ஞாயிறும், திங்களும், அறனும், ஐவரும்,    5

திதியின் சிறாரும், விதியின் மக்களும்,

மாசு இல் எண்மரும், பதினொரு கபிலரும்,

தா மா இருவரும், தருமனும், மடங்கலும்,

மூ-ஏழ் உலகமும், உலகினுள் மன்பதும்,

மாயோய்! நின்வயின் பரந்தவை உரைத்தேம்   10

மாயா வாய்மொழி உரைதர வலந்து:

‘வாய்மொழி ஓடை மலர்ந்த

தாமரைப் பூவினுள் பிறந்தோனும், தாதையும்,

நீ’ என பொழியுமால், அந்தணர் அரு மறை.

xxxxx

33 Devas and 8 Dik Palakas in Sangam Poems

பரிபாடல் 8

மலர்மிசை முதல்வனும்மற்று அவனிடைத் தோன்றி

உலகு இருள் அகற்றிய பதின்மரும்இருவரும்,

மருந்து உரை இருவரும்திருந்து நூல் எண்மரும்,               5

ஆதிரை முதல்வனின் கிளந்த

நாதர் பன்னொருவரும்நன் திசை காப்போரும்,

யாவரும், பிறரும், அமரரும்அவுணரும்,

மேஅரு முதுமொழி விழுத் தவ முதல்வரும்—

பற்றாகின்று, நின் காரணமாக;  10

Xxx

18 Groups of Hindus and 33 Gods/Devas

திருமுருகாற்றுப்படை 167- 168

பகலிற் றோன்றும் இகலில் காட்சி

நால்வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு

ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர்

Xxxx

What a beauty she is! Is she YAMA that came to kill me with her beauty!!!

வல்லவன் தைஇய பாவை கொல்? நல்லார்

உறுப்பு எலாம் கொண்டு, இயற்றியாள் கொல்? வெறுப்பினால்

வேண்டு உருவம் கொண்டது ஓர் கூற்றம் கொல்?

–கலித்தொகை 56-7/9

Xxx

Woman cursing Yama to die

நற்றிணை 271

மா இருந் தாழி கவிப்ப,

தா இன்று கழிக, எற் கொள்ளாக் கூற்றே.

Xxx

Even the great Choza king is dead

புற  நானூறு 221

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;

………………………..

துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;

அனையன் என்னாது, அத்தக் கோனை,

நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று;

Xxx

Yama roaming with rage to snatch life

கார் எதிர் உருமின் உரறிக், கல்லென,

ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்!

— புற நானூறு 361-42

Xxx

Yama holding a balance to weigh good and bad actions

ஆனிலை உலகத் தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரிசீர்த்
தெரிகோல் ஞமன் போல, ஒரு திறம்

— புற நானூறு 6- 8/10

Xxx

Yama spreading net like a hunter

பதிற்றுப்பத்து 51-36/37

மாற்று அருஞ் சீற்றத்து மா இருங் கூற்றம்   35

வலை விரித்தன்ன நோக்கலை;

கடியையால், நெடுந்தகை செருவத்தானே.

 Xxx

எல்லா குறிப்புகளையும் கொடுக்கவில்லை. சில குறிப்புகளை மட்டுமே கொடுத்துள்ளேன்.

–subahm–

யமன், 33 தேவர்கள், ஞமன், 18 கணங்கள், Yama, 18 Ganas, 33 Devas

சேவையே பிரார்த்தனை! (Post No.11,450)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,450

Date uploaded in London – –   17 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com 

சேவையே பிரார்த்தனை! 

ச.நாகராஜன்

ஜன்மாஷ்டமி அன்று சரியான செயல்!

 கேரளத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர ராவா. ஏழைகளுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்ட அவர் சேவையையே தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தார்.

காடுகளில் உள்ள வனவாசிகளுக்கும் கடற்கரை ஓரத்தில் வசித்து வரும் மீனவர்களுக்கும் சேவை செய்வதில் அவர் மிகவும் உற்சாகம் கொண்டார். ஒரு சிறிய குடிசையில் தான் அவர் வாழ்ந்து வந்தார்.

காட்டில் என்னென்ன பிரச்சினை என்று கேட்டு அதை அவர் தீர்த்து வைப்பார்.  அனைத்து மக்களையும் ஒருங்கு திரட்டி ராமசரிதமானஸத்தைச் சொல்லி உற்சாகப்படுத்துவார். இதர நல்ல ஆன்மீக விஷயங்களையும் எடுத்துரைப்பார். குடி, சூதாட்டம், புகை பிடித்தல் ஆகியவற்றை விட்டு விடுமாறு அவர் அந்த மக்களுக்கு அன்புரை கூறுவார். குழந்தைகளைக் கல்வி கற்கச் செய்யுங்கள், வீடுகளை சுத்தமாக வைத்திருங்கள் என்று அவர் போதிப்பது வழக்கம்.

கிராமத்தை அபிவிருத்தி செய்ய வனவாசி கல்யாண சேவா ஆஸ்ரமம் என்று ஒரு ஆஸ்ரமத்தையே அவர் நிறுவினார்.

ஒரு சமயம் ஜன்மாஷ்டமி தினத்தன்று ஒரு வயதான பெண்மணி காலரா வியாதியால் பீடிக்கப்பட்டார்.

உடனே பாஸ்கர ராவா அவருக்கு சிகிச்சை அளிப்பதில் மும்முரமாக ஈடுபட்டார்.

அப்போது அவரது நண்பர்கள் அவரிடம் வந்து, “இன்று ஜன்மாஷ்டமி தினம். நாம் கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்” என்று கூறி அவரை அழைத்தனர்.

அதற்கு அவர், “இந்த ஆதரவற்ற வயதான பெண்மணிக்கு சேவை செய்வதை விட  கோவில் தரிசனம் முக்கியமானதா என்ன? ஒன்றுமே இல்லாத, உதவி தேவைப்பட்டு அவஸ்தைப்படும் இந்தப் பெண்மணிக்கு உதவுவதும் பக்தியின் ஒரு அம்சம் தான்” என்றார் அவர்.

இதைக் கேட்ட அனைவரும் மனம் உருகிக் கண்ணீர் உகுத்தனர்.

அவர் சேவை இப்படித் தொடர்ந்து நடைபெற்றது.

*

சர்ச்சில் செய்வதை விட சிறந்த பிரார்த்தனை!

ரவீந்திரநாத் தாகூரால் ஈர்க்கப்பட்ட தீனபந்து ஆண்ட்ரூஸ் சாந்திநிகேதனுக்கு வந்து தியானம் உள்ளிட்டவற்றில் ஈடுபடலானார்.

ஒரு நாள் அவரது பழைய தொடர்பில் இருந்த கிறிஸ்தவ பாதிரி அவரைப் பார்க்க வந்தார்.

சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பாதிரியார், “இங்கு கோவில் ஒன்று இருக்கிறதே! அப்படியானால் சர்ச்சும் இருக்க வேண்டுமே” என்றார்.

ஆண்ட்ரூஸ், “இங்கு சர்ச் இல்லை” என்றார்.

“அப்படியானால் ஞாயிற்றுக்கிழமைகளில் உங்களால் சர்ச்சுக்குச் செல்ல முடியாதே!” என்றார்.

“எனது பிராத்தனை எல்லாம் சேவை, சாதனா, படித்தல் ஆகியவை தான். ஞாயிற்றுக்கிழமைகளில் ஏழைகள் மற்றும் தொழுநோயாளிகள் இருக்குமிடம் செல்கிறேன். அவர்களுக்கு சேவை செய்கிறேன்.  இதை விட சிறந்த பிரார்த்தனையை சர்ச்சில் செய்ய முடியுமா?” என்று கேட்டார்.

பாதிரியார் மௌனமாக அகன்றார்.*

புத்தக அறிமுகம் – 116 

நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்! 

பொருளடக்கம் 

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன்!

2. காமனை எரித்த சிவனின் நட்சத்திரம் திருவாதிரை!

3. கார்த்திகை மைந்தா கந்தா சரணம்!

4. பிருந்தாவனத்தில் நந்தகுமாரன்.. அந்த நாளும் வந்திடாதோ!

5. வானில் நாம் காணும் அர்ஜுனனும் திரௌபதியும்  

6. வானில் ஒரு மாபெரும் மஹாபாரதப் போர்!  

7. சப்த ரிஷி மண்டல அதிசயங்கள்!  

8. ஒன்பது கோடி சூரியன்களை தனக்குள் அடக்கக்கூடிய அதிசய

   கேட்டை நட்சத்திரம்!

9. அதிசயமான அகத்திய நட்சத்திரம்! 

10. வானத்தில் ராமாயணக் காட்சிகள்!

11. அதிசய நட்சத்திரம் ஸ்வாதி!

12. வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 1 

13. வான மண்டலத்தைப் பிரிக்கும் விசாகம்! – 2 

14. அஸ்வினி ரஹஸ்யம்! – 1  

15. அஸ்வினி ரஹஸ்யம்! – 2  

16. நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 1

17. நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2

18. விண்ணிலே வீணை மீட்டும் சரஸ்வதியும், பிரம்மாவும்!

19. ரேவதி ரஹஸ்யம்!    

20. 27 நட்சத்திரங்களின் பெயர்களும் வானவியல் பெயர்களும்

21. நலம் தரும் நட்சத்திர சூக்தம்! 

*

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது: 

The mysteries of Stars are beautifully explained by Vedas, Myths and Epics. Many incredible truths are coming out when the results of modern space exploring devices are coinciding with the Vedic facts quoted many centuries ago. A must read for both Agnostics and Devotees.

நட்சத்திர ரகசியங்களை வேதங்களும், புராணங்களும், இதிகாசங்களும் அழகுறத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. நவீனச் சாதனங்கள் மூலம் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட வானியல் உண்மைகள் வேத, இதிகாசக் கூற்றுகளுடன் ஒப்பிடப்படும்போது அரிய உண்மைகள் தெரிய வருகின்றன! ஆன்மிக அன்பர்கள் மட்டுமின்றி அதை நம்பாத அறிவியல் கட்சியினரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது!

      *

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘நட்சத்திர அதிசயங்களும் மர்மங்களும்!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

 Tags-  ஆண்ட்ரூஸ், சேவை, பிரார்த்தனை

தமிழில் 1030 சம்ஸ்க்ருத பொன்மொழிகள் (Post No.11,449)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,449

Date uploaded in London – 16 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

 20,000-க்கும் மேலான சம்ஸ்க்ருத சுபாஷிதங்களை ஆங்கில மொழியில் பலரும் வெளியிட்டுள்ளனர். தமிழ் மொழியில் மிகவும் குறைவான நூல்களே வந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு நூலை லண்டனில் உள்ள திருச்சி ஸ்ரீ கல்யாண சுந்தர குருக்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர் எனக்குப் பரிசாகக் கொடுத்தார். அது ஒரு அருமையான நூல் . அதன் விவரம் பிணவருமாறு:

நற் கூற்று மணிமாலை SUBHASHITA BOOK IN TAMIL WITH 1030 SUBASHITAS

(ஸம்ஸ்கிருத சுபாஷித ரத்ன மாலா – தமிழுரையுடன் )

ராமாயண, மஹாபாரத, ஸ்மிருதி , புராண, காவியங்களிலிருந்து தொகுத்துள்ள நீதி சாஸ்திர, ஸநாதன ஹிதோபதேச, ஸதாசார ஸூக்திகள் மனித குல வாழ்வியல் நெறிமுறை போதனைகள் 1030 அடங்கியது.

வெளியீடு

சென்னை சிவாசார்யர் அறக்கட்டளை சார்பில்

14-07-2018 சனிக்கிழமை அன்று

சிவ ஸ்ரீ  V. சோம சேகர சிவாசார்யார்

மணி விழாவில் வெளியிடப்பட்டது

XXX

352 பக்கங்கள், விலை ரூ.400

நிதியளித்த நிறுவனம் – சிவ ஸ்ரீ ஸாம்ப மூர்த்தி சிவாசார்யார் பவுண்டேஷன்

தொகுப்பாசிரியர் , உரையாசிரியர் சிவ ஸ்ரீ  V. சோம சேகர  சிவாசார்யார்

XXX

கிடைக்குமிடம்

சிவாசார்யார் டிரஸ்ட் & நூலாசிரியர்

தொலைபேசி எண்கள் – 98402 / 994022 01849

98401  51409 / 044 – 2849 5115

XXXX

-ஸ்ரீ ஸாம்ப மூர்த்தி  சிவாசார்யார் பவுண்டேஷன்

207/101 THAMBUCHETTY STREET, CHENNAI, 600 001

CHENNAI SRI SOMA SEKARA SIVACHARYAR HAS PUBLISHED 1030 SANSKRIT SUBASHITAS WITH MEANING IN TAMAIL IN 2018.

XXXX

ஸம்ஸ்க்ருதம் = பசிபிக் மஹா சமுத்ரம்

SANSKRIT LITERATURE IS AS VAST AS PACIFIC OCEAN, THE DEEPEST, THE LARGEST, MOST MYSTERIOUS, UNFATHOMABLE WATER SOURCE- London swaminathan

தமிழ் மொழியில் 20,000-க்கும் மேலான பழமொழிகள் உள்ளதைப் போல சம்ஸ்க்ருதத்தில் 20,000க்கும் மேலான  சம்ஸ்க்ருத பொன்மொழிகள் உள்ளன. அவை பொதுவாக ஸ்லோக வடிவில் இருக்கும். ஒவ்வொன்றிலும் 2 முதல் 4 விஷயங்களாவது இருக்கும். அப்படிப் பார்த்தால் சுமார் ஒரு லட்சம் பழமொழிகள் என்று சொல்லலாம்.

இவைகளில் முக்கியமானது சுபாஷித ரத்ன பாண்டாகாரம்  Subhāṣitaratnabhāṇḍāgāra (सुभाषितरत्नभाण्डागार, subhashitaratnabhandagara). இதில் மட்டுமே 10,000க்கும் மேலான ஸ்லோகங்கள் உள்ளன . இது தவிர தனி நூல்களாக  கீழ்கண்டவை  இருக்கின்றன:-

1.சுபாஷித ரத்ன கோச – 1738 ஸ்லோகங்கள்

11ம் நூற்றாண்டு ; தொகுத்தவர் வித்யாகர

220 கவிஞர்களின் கவிதைகள் அடக்கம்.

XXX

2.சுபாஷிதாவலி — 3527 ஸ்லோகங்கள்

12 -15 ம் நூற்றாண்டு ; தொகுத்தவர் வல்லப தேவ

350 கவிஞர்களின் கவிதைகள் அடக்கம்.

XXX

3.சாரங்கதர பத்ததி — 4620 ஸ்லோகங்கள்

14 ம் நூற்றாண்டு ; தொகுத்தவர் -சாரங்கதர

XXX

மொத்தம் 9885 கவிதைகள். இது தவிர சுபாஷித ரத்ன பாண்டாகாரத்தில் 10,000க்கும் மேல் உள்ளதா? அல்லது பல விஷயங்கள் திரும்பச் சொல்லப்பட்டுள்ளனவா என்பதை ஆராய வேண்டும். எப்படியாகிலும் பஞ்ச தந்திரம், ஹிதோபதேஷம் கதைகளில் பக்கத்துக்குப் பக்கம் பத்து பொன்மொழிகள் இருப்பதால் சம்ஸ்க்ருத மொழியில்தான் உலகிலேயே பொன்மொழிகள் அதிகம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமே இல்லை.

இவை தவிர 4 வேதங்களில் உள்ள 20,000 மந்திரங்கள், சம்ஸ்க்ருத மொழியில் உள்ள 650 நாடகங்கள், காளிதாசன் முதல் தோன்றிய பல நூறு கவிஞர்களின் பொன் மொழிகளையும்  சேர்த்துக்கொள்ள வேண்டும்; சொல்லப்போனால் எவராலும் கணக்கிட இயலாது.

xxx

ஒரே ஒரு நூலைப்பற்றி மட்டும் விஸ்டம் லைப்ரரி இணைய தளம் கொடுக்கும் விஷயங்களைப் பாருங்கள்:-

FROM WISDOM LIBRARY WEBSITE

Subhāṣitaratnabhāṇḍāgāra (1952, by Nārāyaṇa Rāma Ācārya)

Introduction and authorship:

The Subhāṣitaratnabhāṇḍāgāra (सुभाषितरत्नभाण्डागार, subhashitaratnabhandagara) is a Sanskrit book compiled by Nārāyaṇa Rāma Ācārya in 1952: Literally, “Gems of Sanskrit poetry”. This work is a recent compilation of more than 10,000 Subhāṣitas, or ‘sanskrit aphorisms’.

About the author:

Nārāyaṇa Rāma Ācārya (नारायण राम आचार्य, narayana rama acarya) (1900 A.D.) is the compiler of the Subhāṣitaratnabhāṇḍāgāra.

Book topics:

Subhāṣita (सुभाषित, subhashita) refers to Sanskrit metrical aphorisms. Compilations of this kind of literature usually goes by the name subhāṣitasaṃgraha.

Book editions:

This book has the following editions. The lists are categorised by ‘print editions’, some of which you can buy, and ‘digital links’, most of which you can download for free. The language of the referenced work is indicated in [brackets].

Digital links (online resources):

[sanskrit]

Subhâshita-ratna-bhândâgara, by Kâshinâtha Pâṇḍurang Parab, year: 1929, pages: 547; publisher: Pândurang Jâwajî; Sixth Edition; Revised by Wâsudev Laxman Śâstrî Paṇśîkar

Subhāṣita-ratna-bhāṇḍāgāra, by Nārāyaṇ Rām Āchārya, year: 1952, pages: 521; publisher: Nirnaya Sagar Press; Eighth edition

[gujurati]

Subhasita Ratna Bhandagara, by Sastu Sahitya Vardhak, pages: 705; publisher: Sastu Sahitya Vardhak Karyalaya

Print publications:

[sanskrit]

Subhasita Ratna Bhandagara (With Sources of Verses), by Narayan ram Acharya, year: 2011, pages: 490; publisher: Chowkhamba Sanskrit Series Office; ISBN-10: 817080003X

Subhasita Ratna Bhandagara or Gems of Sanskrit Poetry, by Narayan ram Acharya, year: 2011, pages: 508; publisher: Chaukhambha Sanskrit Pratishthan; Enlarged and re-edited with sources etc.

[hindi]

Subhasita-ratna-bhandagara (Gems of Sanskrit Poetry), Vol. 2, by Shri Ram Prakash Jha, year: 2014, pages: 499; publisher: Chowkhamba Sanskrit Series Office; ISBN-13: 9788170804369; Enlarged and Re-Edited With sources et.c By Narayana Ram Acharya

Subhasita-ratna-bhandagara (Gems of Sanskrit Poetry), Vol. 1, by Shri Ram Prakash Jha, year: 2009, pages: 216; publisher: Chowkhamba Sanskrit Series Office; ISBN-13: 9788170803096; Enlarged and Re-Edited With sources et.c By Narayana Ram Acharya

Translated verses from this book:

Most of the following verses are English translations of the Subhashitaratnabhandagara. These are primarily taken from the Mahāsubhāṣitasaṃgraha, a compendium of Sanskrit metrical aphorisms (subhāṣita) collected from various sources. More translations will be added over time, and the latest addition will be shown first here.

2017-05-19, Subhāṣitaratnabhāṇḍāgāra 380.140, English translation by P. C. Roy.
2017-05-18, Subhāṣitaratnabhāṇḍāgāra 372.141, English translation by A. A. Ramanathan.
2017-05-13, Subhāṣitaratnabhāṇḍāgāra 303.123, English translation by A. A. Ramanathan.
2017-04-23, Subhāṣitaratnabhāṇḍāgāra 76.21, English translation by Raghu Vira.
2017-04-23, Subhāṣitaratnabhāṇḍāgāra 308.3, English translation by A. A. Ramanathan.
2017-04-23, Subhāṣitaratnabhāṇḍāgāra 59.217, English translation by B. S. Miller.
2017-04-23, Subhāṣitaratnabhāṇḍāgāra 351.25, English translation by A. A. Ramanathan.

xxx

For anything and everything in Sanskrit, visit wisdom library website.

–subham–

 TAGS- சம்ஸ்க்ருத, சுபாஷிதங்க

ள், தமிழ் மொழி, நற்கூற்று மணிமாலை, சோமசேகர, சிவாசாரியார், SUBHASITAS IN TAMIL

ஒரு மரம் = பத்து மகன்கள் ; மரங்கள் நோய்களைப் போக்கும் (Post.11,448)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,448

Date uploaded in London – 16 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

Picture: This board is found in Vazhachal, Athirappilly Panchayath of Thrissur district in Kerala

1.

वायूनां शोधकाः वृक्षाः रोगाणामपहारकाः ।

तस्माद् रोपणमेतेषां रक्षणं च हितावहम् ।।”

20,000– க்கும் மேற்பட்ட ஸம்ஸ்க்ருத சுபாஷிதங்களில் இருந்து மரங்கள், செடி, கொடிகள் பற்றிய சுவையான பொன்மொழிக் கவிதைகளைக் காண்போம்

வாயூனாம் சோதகாஹா வ்ருக்ஷாஹா ரோகாணாமபஹாரகாஹா

தஸ்மாத் ரோபணமே தேஷாம் ரக்ஷணம்  ச ஹிதாவஹம்

மரங்கள் காற்றைத் தூய்மையாக்குகின்றன ; நோய்களை விரட்டுவதில் உதவி புரிகின்றன..ஆகையால் மரங்களை நட்டு வளர்ப்பதும்  பாதுகாப்பதும் உயிரினங்களுக்குநன்மை பயக்கும்.

Xxx

2

“त्वक्शाखापत्रमूलैश्च पुष्पफलरसादिभिः।

प्रत्यङ्गरुपकुर्वन्ति वृक्षाः सद्भिः समं सदा ।।”

த்வக் சாகா பத்ர மூலைஸ் ச புஷ்ப பல ரஸா திபிஹி

ப்ரத்யங்க ரூப குர்வந்தி சத்பிஹி ஸமம் ஸதா

மரங்களும் நல்லோரைப் (முனிவர்களைப் ) போல பட்டை, கிளைகள் வேர், பூக்கள், பழங்கள், சாறு முதலியன மூலம் உயிரினங்களுக்கு நன்மை செய்கின்றன.

Xxx

3

पश्यैतान् महाभागान् पराबैंकान्तजीवितान्।

वातवर्षातपहिमान सहन्तरे वारयन्ति नः॥”

பஸ்யைதான மஹாபாகான் பராபைங்கான்தா ஜீவிதாம்

வாதவர்ஷாதப ஹிமான் ஸஹந் தரே  வாரயந்தி நஹ

மரங்கள் மற்றவர்களுக்காகவே  வாழும் மஹத்தானவை  (ஏனெனில் ).அவைகள் யார் உதவியும் இன்றி, தாங்களாகவே  புயல், மழை, குளிர், வெப்பம்  அனைத்தையும் பொறுத்துக் கொள்கின்றன

Xxx

4

“अहो एषां वरं जन्म सर्वप्राण्युपजीवनम्।

सुजनस्यैव येषां वै विमुखा यान्ति नार्थिनः॥”

அஹோ ஏஷாம் வரம் ஜன்ம ஸர்வ ப்ராண யுபஜீவனம்

சுஜனஸ்யைவ  யேஷாம் வை விமுகா யாந்தி நார்த்தினஹ

இதன் பிறப்பு நல்லதாய்ப் போயிற்று; அதனால்தான் மற்ற உயிரினங்கள் வாழ்கின்றன. ஒரு நல்ல வள்ளலைக் காண வந்த எவரும் வெறும் கையோடு போவதில்லை ; அது போலவே மரத்தை நாடிய எவரும் வெறும் கைகளோடு போவதில்லை .

Xxx

5

“पत्रपुष्प फलच्छाया मूलवल्कलदारुभिः।

गन्धनिर्यासभस्मास्थितौस्मैः कामान वितन्वते॥”

பத்ர புஷ்ப   பலச்சாயா மூல வல்க  லதாருபிஹி

கந்தனிர்யாச பஸ்மாஸ்தி தெளஸ்மைஹி காமான் விதன்வதே 

அவை (மரங்கள் ) நம் விருப்பங்களைப் பூர்த்தி செய்கின்றன.( எப்படியெனில் )நமக்கு எழுதுபொருள் (ஓலை , மரவுரி), பூக்கள், பழங்கள், நிழல்,வேர், விறகு, மரம், நறுமணம் சாம்பல், விதைகள், காய்கள் கிளைகள் ஆகியவற்றைத் தருகின்றன.

xxx

6

दश कूप समा वापी, दशवापी समोहद्:।

दशहृद समः पुत्रो, दशपुत्रो समो द्रुमः।”

A pond equals ten wells, a reservoir equals ten ponds.

A son equals ten reservoirs, and a tree equals ten sons!

dasha-kūpa-samā vāpī, dasha-vāpī-samo hradaḥ |

dasha-hrada-samaḥ putro, dasha-putra-samo drumaḥ ||

Matsya-purāṇa 154:512

தச கூப ஸமா வாபி தச  வாபி ஸமோ ஹ்ரதஹ

தசஹ்ரதஹ  ஸமஹ புத்ரோ  தச புத்ரோ ஸமோ த்ருமஹ

–மத்ஸ்ய புராண ஸ்லோகம்

பத்து கிணறுகளுக்குச்  சமம் ஒரு குளம், ; பத்து குளங்களுக்குச் சமம் ஒரு ஏரி ; பத்து ஏரிகளுக்குச் சமம் ஒரு மகன்.  பத்து மகன்களுக்குச் சமம் ஒரு மரம்.

–Subham–

 tags- ஒரு மரம் , 10 மகன்கள் ,மரம், நோய்,சுபாஷிதம் 

ஆஹா! அதிரடிச் செய்திகள்! (Post.11,447)


WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,447

Date uploaded in London – –   16 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஆஹா! அதிரடிச் செய்திகள்!

ச. நாகராஜன் 

இன்று (15-11-2022) டைம்ஸ் ஆஃப் இந்தியாவைப் புரட்டிய போது, ஆஹா, பல அதிரடி செய்திகளைப் பார்க்க முடிந்தது.

800 கோடி பேர்!

உலகத்தின் ஜனத்தொகை 8 பில்லியனை இன்று எட்டி விட்டதாம்.

அதாவது 800 கோடி பேர் உலகில் இன்று வாழ்கின்றனர்!

2100ஆம் ஆண்டு வாக்கில் 10 பில்லியனை உலக ஜனத்தொகை எட்டுமாம்.

அதாவது ஆயிரம் கோடி!

மலைக்க வைக்கும் இந்த எண்ணிக்கையுடன் விரிவான விளக்கம் ஒன்றும் தரப்பட்டுள்ளது.

2100 இந்தியாவும் சீனாவும் உலக ஜனத்தொகையைக் குறைப்பதில் வழிகாட்டும் தலைமை இடத்தில் இருக்குமாம்!

மதமாற்றம் தேசத்திற்கு எதிரான செயல்! நீதிபதிகள் கருத்துரை!

இதே இதழில் (15-11-2022) சுப்ரீம் கோர்ட்டின் அருமையான கருத்துரை ஒன்றும் வெளியாகியுள்ளது.

Forced conversions a threat to national security, says SC

Court Asks Govt to detail steps it has taken to curb Trend

இது தான் தலைப்பு.

திங்கள் கிழமையன்று (14-11-2022) அஸ்வினி உபாத்யாயா என்பவர் போட்டிருந்த ஒரு பெடிஷன் மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் அருமையான கருத்துக்களைத் தந்துள்ளது.

மத சுதந்திரம் என்றால் அவரவர் மதத்தைக் கடைப்பிடிக்க உள்ள சுதந்திரம் தான். அடுத்தவரை மதமாற்றம் செய்ய உள்ள முயற்சிகள் தேச துரோகமாகும். இதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்ற வினாவை எழுப்பியுள்ளது சுப்ரீம் கோர்ட்.

நீதிபதிகள் எம்.ஆர். ஷா மற்றும் ஹிமா கோஹ்லி தங்கள் கருத்துரையில் பல விஷயங்களைக் கூறியுள்ளனர்.

பெடிஷனர், கடந்த இருபது ஆண்டுகளில் ஷெட்யூல்டு வகுப்பினரை ஆசைகளைக் காட்டி ஏமாற்றி கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும் போக்கைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

2010இல் மட்டும் ஹூஸ்டனை தளமாகக் கொண்டு இயங்கும்  சென்ட்ரல் கிறிஸ்டியன் மிஷன் 3.2 லட்சம் பேர்களை மதம் மாற்றியுள்ளது. மத்திய இந்தியாவில் மட்டும் 1.9 லக்ஷம் பேர் மதம் மாற்றப்பட்டுள்ளனர்.

2010 அக்டோபரில் ஜாய்ஸ் மேயர் மினிஸ்ட்ரீஸ் ஒரு வார மருத்துவ  முகாம் ஒன்றை கொல்கத்தாவில் நடத்தியது.அதில் 3200 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் 1300 பேர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புதிய சர்ச்சுகளைக் கட்ட ஒரு குழு தனியே இயங்குகிறது.

ஏமாற்றி ஆசை வார்த்தைகள் சொல்லி ஏழ்மையையும் இதர ஷெட்யூல்ட் வகுப்பினரின் பிரச்சினைகளையும் அடிப்படையாக வைத்து மதம் மாற்றும் போக்கு அதிகரித்து வருகிறது.

நீதிமன்றம் மிகச் சரியான அணுகுமுறையை மேற்கொண்டு உரிய நேரத்தில் கொடுத்துள்ள எச்சரிக்கை இந்தியா கிறிஸ்தவ நாடாக ஆகி மீண்டும் அடிமைப்படுத்தப்படும் நிலையைத் தடுக்கும் ஒன்று என்பதில் ஐயமில்லை.

யூ டியூப் காணொளிக் காட்சிகள்!

இந்த அதிரடி செய்தியைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் நுழைந்தால் யூ டியூபில் இப்போதுள்ள வீடியோக்கள் 33 பில்லியன் என்ற எண்ணிக்கையைப் பார்த்து மயக்கம் போடும் நிலை வருகிறது.

அதாவது 3300 கோடி யூ டியூப் வீடியோக்கள் இன்று உள்ளன.

இவற்றிற்கு எந்த விதக் கட்டுப்பாடும் சரிபார்க்கும் தன்மையும் இல்லை.

பல கோடி பொய்கள். பல ஆபாச வீடியோக்கள். எது உண்மை எது பொய் என்றே எந்தச் செய்தியிலும் தெரியாத நிலை நோக்கி உலகம் போய்க் கொண்டிருக்கிறது.

எந்தச் செய்தி உண்மை என்பதே தெரியாத நிலையை அடைகிறோம் என்பதே பரிதாபகரமான உண்மை!

சமூக ஊடகங்களால் மனச்சோர்வு, ஏமாற்றம் அடைவதாக பலரும் சொல்ல இது ஒரு வியாதியாக உருப்பெறுவதை உளவியல் மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இவ்வளவும் அதிரடிச் செய்திகள்!

300 கோடி டாலர் உதவி!

இதில் ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தியாக  16-9-2022 அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தந்துள்ள செய்தி ஒன்று நம்மைக் கவர்கிறது.

படகோனியா (Patagonia)    நிறுவனத்தின் உரிமையாளரான வான் சூயினார்ட் (Yvon Chouinard) தனது 300 கோடி டாலர் நிறுவனத்தை ஒரு டிரஸ்டுக்கு உரிமையாக்கி அந்த டிரஸ்ட் உலக தட்பவெப்ப மாற்றத்தின் சீர்கேடுகளைத் தடுக்க தனது முழு சக்தியையும் பணத்தையும் பயன்படுத்தும் என்று அறிவித்திருக்கிறார்.

ஒரு வருடத்திற்கு அந்த நிறுவனம் பெறும் லாபம் பத்து கோடி டாலராம்.

ஆக இப்படி ஒரு  அருமையான செய்தி மனதிற்கு பெரிதும் ஆறுதல் அளிக்கிறது.

உலகம் எப்படிப் போகிறது என்பதை இந்த அதிரடிச் செய்திகள் சொல்கின்றன, சொல்லிக் கொண்டே இருக்கின்றன!

***

புத்தக அறிமுகம் – 115

டயானாவின் கதை                                          

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள் 

1. உலகிற்குப் பெருமை என்ன?   

2. காதல் மலர்ந்தது!  

3. அரண்மனைத் திருமணம் 

4. தேனிலவு

5. நிலவில் ஒரு களங்கம்   

6. புதுவரவு 

7. வசந்த காலம் 

8. பாஷன் ராணி 

9. புதிய காதலன் 

10. மேலும் சில நட்புகள்

   11. சுதந்திர இளவரசி  

   12. அதிரடிப் பேட்டி    

   13. ஓலம் தீர்க்க ஏலம் 

   14. டோடியின் துணை 

   15. ரோஜா உதிர்ந்தது! 

   16. மறைவுக்குப் பிறகு 

   17. பின்னுரை    *

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது:

 This book is an excellent work that tells the story of British Princess Diana. All the details such as Diana’s birth, upbringing, becoming the British Princess and transformation that made her the favorite angel of the world, are given in this book. It also describes the bitter truth of her fate which ended her life that made her to flee to hide from the eyes of Paparazzi. Diana Lovers! This is going to be a lovable gift to all of you.

 பிரிட்டிஷ் இளவரசியாகி உலகையே கவர்ந்த டயானாவின் வரலாற்றைச் சுவைபடக் கூறும் நூல்! டயானாவின் பிறப்பு, வளர்ப்பு, அவர் பிரிட்டிஷ் இளவரசியானது, உலக மக்களின் அபிமான தேவதையாக மாறியது என அனைத்து விவரங்களையும் இதில் காணலாம். இறுதியில் பாப்பராசிகளின் பிடியிலிருந்து தப்பிக்க அவர் மேற்கொண்ட பயணமே அவர் வாழ்க்கையின் இறுதிப் பயணத்திற்குக் காரணமான நிகழ்ச்சியையும் உருக்கமாக இந்நூல் விளக்குகிறது! டயானா அன்பர்களே நீங்கள் விரும்பக்கூடிய நூல் இது!

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘டயானாவின் கதை!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*

Learn Tamil Verbs -24 : Prohibitive, Permissive and Potential (Impersonal Verbs)—Post.11,446

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,446

Date uploaded in London – 15 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Let us learn the following today:

1.Potential – May, can

2.Prohibitive,- should not, must not

3.Permissive- let someone to do something

Please use all the verb charts posted here so far. At the bottom, we have these three impersonal verbs.

This means there is no personal ending (forget PGN for the time being)

Xxx

கூப்பிடு = Call Chart

1.Potential

To form Potential add ‘laam’ லாம்  to the infinitive

This is similar to May in English.

லாம் = laam added to Infinitive Vara/ to come, Saappita/ to eat, Padikka/ to read

நீங்கள்/ அவர்கள், அவள் ——- உள்ளே வர+லாம்.

You/ they/ she  may come in VARA+LAAM

xxxxx

நீங்கள், நீ, அது, நாய்., பூனை  ———-சாப்பிட+லாம்

You, you, that, dog, cat  — may eat

SAAPPITA+LAAM

xxx

அவன் , நான், நாங்கள் ———படிக்க+ லாம்

He , I, we —– may read

PADIKKA+LAAM

Xxxxx

2.Prohibitive

To form Prohibitive  you add Kkoodaathu க்கூடாது

 to the Infinitive

வர +க்கூடாது = VARAKKOODAATHU= MUST NOT COME

போக+க்கூடாது= POGAK KOODAATHU = MUST NOT GO/ SHOULD NOT GO

XXXX

3.PERMISSIVE

ADD ‘TTUM’ –ட்டும் to the infinitive

ஆடு  – ஆட = AADA=TO DANCE

Aadattum = let (him, her, it, them) dance ஆட+ ட்டும்,

தூங்கு – தூங்க= THOONGA= TO SLEEP

Thoongattum = let (him, her, them, us) sleep தூங்க+ ட்டும்

Xxxx

Some verbs and their infinitives

வா – வர = VARA= TO COME

போ- போக = POKA= TO GO

சொல்- சொல்ல = SOLLA= TO SAY, TO TELL

கூப்பிடு -கூப்பிட= KOOPPITA= TO CALL

சாப்பிடு -சாப்பிட= SAAPPITA= TO EAT

ஆடு  – ஆட = AADA=TO DANCE

பாடு – பாட= PAADA= TO SING

தூங்கு – தூங்க= THOONGA= TO SLEEP

வாங்கு – வாங்க = VAANGA = TO BUY

குதி – குதிக்க = KUTHIKKA= TO JUMP

படு- படுக்க = PADUKKA= TO LIE DOWN/SLEEP

பேசு= பேச = PESA= TO SPEAK

நில் – நிற்க= NIRKA= TO STAND

வில்- விற்க = VIRKA = TO SELL

Xxxx

IS IT A COMMAAND OR AN ORDER OR JUST A STATEMENT?

Depending upon the context and tone, one can say whether it is a command or not.

— subham—-

Tags- Tamil verbs, Impersonal Verbs, Lesson 24

புறச் சூழல் விஷயத்தில் இந்துக்களின் அபார முன்னேற்றம் (Post No.11,445)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,445

Date uploaded in London – 15 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

 Xxx 

பழங்கால இந்துக்கள் இயற்கையை மிகவும் மதித்தனர். இது பாம்பையும் மரத்தையும் வழிபடும் மூட நம்பிக்கையில் எழுந்த சிந்தனை அன்று. மிகவும் விஞ்ஞான பூர்வமாக எழுந்த சிந்தனை. இதற்கு தெள்ளிய எடுத்துக் காட்டு மரம் என்ற ஸம்ஸ்க்ருத்ச் சொல்லில் உள்ளது. தரு என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு மரம் என்று பொருள். பல தமிழ்ச் செய்யுட்களிலும் இச் சொல் கையாளப்பட்டுள்ளதால் தமிழர்களும் அறிந்த சொல்லே. ஆங்கிலத்தில் மரத்தை ட்ரீ TARU= TREE என்பர். அதுவும் சம்ஸ்க்ருத தரு- விலிருந்து பிறந்ததே.

மரம் என்றால் என்ன?

தரு (மரம்) என்ற சொல் தாரணே  என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தது. தாரணே என்றால் பாதுகாக்க TO PROTECT என்பது பொருள். இந்த பூமியையும் அதில் வாழும் மனிதர்களையும் பாதுகாப்பது மரங்கள் என்ற அறிவியல் சிந்தனையில் எழுந்தது இந்தச் சொல்.

மரத்திற்கு சம்ஸ்க்ருதத்தில் இன்னும் ஒரு நல்ல சொல் உளது. பாத பாஹா ; இதன் பொருள் கால்கள் மூலம் தண்ணீர் குடிப்பவன். அதாவது மனிதர்கள் கைகளில் தண்ணீரை எடுத்து, பருகுகிறோம். ஆனால் மரங்களோவெனில் கால்கள் மூலம் — அதாவது கால் பகுதியில் உள்ள வேர்கள் மூலம் — நீரை உறிஞ்சுகிறது. என்ன அற்புதமான நாமகரணம்!!

XXXX

ஜீவகன்  கதை

மனிதர்களின் நோய்களுக்கு மருந்துகளையும் சிகிச்சை முறைகளையும்  கண்டுபிடித்த இந்துக்கள்  அதை சம்ஸ்க்ருதத்தில் எழுதியும் வைத்தனர். 2600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த சிந்தனை உலகில் வேறு எங்கும் எழுந்தது இல்லை மஹாபாரதக் கதை ஒன்று நம் எல்லோருக்கும் தெரிந்ததே. துரியோதனனுக்கும் தரும புத்திரனான யுதிஷ்டிட்டிரனுக்கும் உள்ள சிந்தனை வேறுபாட்டைக் காட்டுவதற்காக கிருஷ்ணன் ஒரு டெஸ்ட் வைக்கிறார். உலகிலுள்ள நல்லவர் யார் கெட்டவர் யார் என்று கண்டுபிடித்து வாருங்கள் என்பது அந்தப் பரீட்சை. இருவரும் திரும்பி வந்த போது தர்மன் சொன்னான்: கண்ணா ! இவ்வுலகில் எவருமே கெட்டவர் இல்லை; எல்லோரிடத்திலும் ஒரு நல்ல குணமாவது இருக்கிறது. துரியோதனன் சொன்னான்; கண்ணா ! இந்த உலகத்தில் நல்லோர் இல்லை; அத்தனை பேரிடத்திலும் கெட்ட குணமே உளது என்று. இது இருவரின் மனத்தின் உயர்வு தாழ்வைக் கட்டுகிறது .

இதே போல மற்றொரு கதை உளது. ஜீவகன் என்பவன் புத்தர் காலத்தில் வாழ்ந்த ஒரு புகழ்பெற்ற மருத்துவன்/ டாக்டர். அவனுடைய குரு மருத்துவ உபயோகமில்லாத ஒரு மூலிகையைக் கொண்டு வா என்று அனுப்புகிறார். அவன் திரும்பி வந்து குருவிடம் சொல்கிறான்: குருவே ! இந்தப் பூவுலகில் மருந்துக்குப் பயன்படாத தாவரம் இல்லை ; விஷ சத்துடைய மூலிகைகளையும் பயன்படுத்த முடிகிறதே என்று வியக்கிறான் . உடனே குரு  அவனை சிறந்த மாணவன் என்று ஏற்றுக்கொண்டு எல்லா ரகசியங்களையும் கற்பிக்கிறார். இதனால்தான் சம்ஸ்க்ருதத்தில் நாஸ்தி மூலம் ஒளஷதம் என்பர். மருந்ததாகப் பயன்படாத  வேர், தாவரம் எதுவுமே இல்லை.

அமந்த்ரம் அக்ஷரம் நாஸ்தி நாஸ்தி மூலம் ஔஷதம்

அயோக்யப் புருஷோ நாஸ்தி யோஜகஸ் தத்ர துர்லப:

 எல்லா எழுத்துக்களும் மந்திரங்களில் பயன்படும்; மந்திரத்துக்கு உதவாத எழுத்து என்று எதுவுமே இல்லை. 

எல்லா செடிகளின் வேரும் ஏதோ ஒரு மருத்துவ குணம் உடையதுபயன்படாத தாவரம் எதுவும் இல்லை. 

தகுதியற்ற மனிதர், உதவாக்கறை என்று உலகில் யாருமே இல்லை; ஒவ்வொருவரும் ஒருதுறையில் வல்லவன். 

ஆனால் அரிதான விஷயம், அவர்களைக் கண்டுபிடித்து, அவரவர் திறமைக்கேற்ற பணியைக் கொடுப்பவன் இருக்கிறானே– அவன் தான் அரிதானவன்.

அந்தக் காலத்திலேயே எல்லா தாவரங்களும் மருத்தாகப் பயன்படும்; அதைக் கண்டுபிடிப்பதே திறமை; அருமை என்று சொல்லி வைத்தனர்.

விஷஸ்ய விஷம் ஒளஷதம் என்ற சொல் வழக்கும் சம்ஸ்க்ருதத்தில் உண்டு. விஷத்தை விஷத்தால் முறிக்கலாம் . ஹோமியோபதி தத்துவமும் இதுதான். எந்தக் கிருமி நோயை உண்டாக்குகிறதோ அதையே மிகச் சிறிய அளவில் உடலில் ஏற்றினால் அதுவே நோயை எதிர்த்துப் போராடும் .

மஹா பாரதக்  கதையும்  இதை நமக்கு காட்டுகிறது. பீமன் மீது பொறாமை கொண்ட துரியோதனாதிகள்  அவனுக்கு விஷத்தைக் கொடுத்து பாம்புகளும் முதலைகளும் நிறைந்த குளத்தில் தூக்கி எறிந்தனர். அங்குள்ள விஷப் பாம்புகள் பீமனைக் கடித்தபோது அவன் உடலில் ஏறியிருந்த விஷம் முறிந்து அவன் ஆரோக்கியத்துடன் மேலே வந்தான்.எவ்வளவு உண்மைகளை வியாசர் நமக்கு எழுதி வைத்துச் சென்றார் என்று எண்ணி எண்ணி வியக்கிறோம்.

பூமி எனது தாய்நான் அவள் மகன் என்ற வரிகள் அதர்வண வேத பூமி சூக்தத்தில் இருப்பதைப்  பலரும் அறிவர் (அ .வே மாதா பூமிஹி; புத்ரோஹம் ப்ருதிவ்யாஹா)

இதைவிட ஒருபடி மேலே செலல்கிறது ரிக் வேதம்!

வானமே என் தந்தை;

பூமியே என் தாய்;

சோம என்னுடைய சகோதரன்;

இயற்கை/அதிதி  என் சகோதரி –1-191-6

த்யெளர் வஹ பிதா ப்ருதிவீ மாதா ஸோம ப்ராதாதிதிஹி ஸ்வஸா

அத்ருஷ்டா விச்வ த்ருஷ்டா ஸ்திஷ்டதே லயதா ஸுகம் 1-191-6

ரிஷி அகஸ்தியர் சொன்ன இந்த மந்திரம் “நம்மை அவைகள் காண்பதாகவும் நாம் அவர்களைக் காண்பதில்லை” என்றும் பாடி இருக்கிறார்.அவைகள் என்பதை நாம் வைரஸ் கிருமிகள் எனலாம்; அல்லது இயற்கையில் மறைந்திருக்கும் அற்புத சக்திகள் நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. நாம் கண்ணிருந்தும் காணாத/ அறியாத குருடர்களாக இருக்கிறோம் என்றும் சொல்லலாம்.

தாவர வைத்தியம் பற்றிய நூல்கள் நிறைய இருந்து அழிந்து போயின. ஆயினும் வராஹமிஹிரர் எழுதிய பிருஹத் சம்ஹிதா என்னும் என்சைக்ளோபீடியாவில்/ கலைக்  களஞ்சியத்தில் இதற்காக ஒரு அத்தியாயமே ஒதுக்கியுள்ளார். அதற்கு வ்ருக்ஷ ஆயூர்வேதம் என்று பெயரும் சூட்டியுள்ளார். இது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது.. பராசரரும் இது பற்றி எழுதியுள்ளார்.

700 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட சாரங்க பத்ததியில் ‘உபவன விஹார’ இருக்கிறது. நகரங்களில் சுற்றுலா பூங்காக்களை அமைப்பது எப்படி என்பதை இந்த நூல் விளக்குகிறது. மணி மேகலை முதலிய தமிழ் நூல்களிலும் புத்த மதக் கதைகளிலும் காளிதாசன் நூல்களிலிலும் பூங்காக்கள் வருகின்றன. இவற்றை மனிதர்கள் திட்டம் தீட்டிக் கட்டியதையும் காண்கிறோம்.

பத்தாம் நூற்றாண்டில்  வாழ்ந்த சுரபால,  வ்ருக்ஷ ஆயூர்வேதம் என்ற முழு நீள  நூலையே எழுதி நமக்கு விட்டுச் சென்று இருக்கிறார்.

வேத கால ஆஸ்ரமங்கள்

பெரிய கட்டிடங்கள், ஏழு நிலை மாடங்களையும் வருணிக்கும் தமிழ் சம்ஸ்க்ருத நூல்களும் கூட முனிவர்களை வருணிக்கையில் அவர்கள் பர்ண சாலைகளில் வசித்ததாகவே வருணிக்கின்றன ; பர்ண என்றால் இலை / ஓலை. . அவர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை நடத்தியதால் மரம் செடி கொடிகளுக்கு எவ்வளவு முக்கியம் கொடுத்தனர் என்பதை இராமாயண, மஹாபாரதத்திலும் காளிதாசனின் சாகுந்தலத்திலும் காண முடிகிறது.

ரிக் வேதத்தில் உள்ள அரண்யாணி  சூக்தம் காடுகளை அற்புதமாக வருணிக்கிறது. அதை உயிருள்ள ஒரு ஜீவனாக நமக்குக் காட்டுகிறது. காளிதாசனும் வன தேவதை பற்றி வர்ணிக்கிறன். சங்கத் தமிழ் நூல்கள் இயற்கையின் எல்லா அம்சங்களிலும் அணங்கு என்னும் தேவதை இருப்பதைப் பாடுகிறது. ஒரு பயம்/ மரியாதை கலந்த பக்தியை நாம் உணர்கிறோம்.

உபநிஷத்தில் வரும் தத்துவ விஷயங்களுக்குப் பின்னால் இயற்கைக்கு அவர்கள் கொடுத்த மதிப்பு, மரியாதையை அறிய முடிகிறது  இதோ ஓரிரு உதாரணங்கள் . உடலை மூடியுள்ள பல அடுக்குகளில் முதலாவது இருப்பது அன்னமய கோசம் . சுவரை வைத்துதான் சித்திரம் என்பது போல உடலே கோவில் என்று முன்னோர்கள் அறிந்தனர். தமிழில் திருமூலர் இதைத் தெளிவாகப் பாடியுள்ளார். ஆயினும் அவர்க்கு சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரிஷிகளும் இது பற்றிப் பேசியிருக்கின்றனர்.

சாந்தோக்ய உபநிஷத்தின் ஆறாவது அத்தியாயத்தில் உத்தாலக / ஆருணி அவருடைய மகன் ஸ்வேதகேதுவுடன் பேசுகையில் மனம், உயிர், பேச்சு இவை உணவு, தண்ணீர், வெப்ப நிலையைச் சார்ந்தவை என்றும் ஒருவனுடைய அறிவும் நினைவாற்றலும் உண்ணுவதாலும் உண்ணாவிரதம் இருப்பதாலும் பாதிக்கப்படும் என்றும் அறிவுறுத்துகிறார்.

தைத்ரீய உபநிஷத்தில் தந்தை வருணன் கட்டளைப்படி,  ப்ருகு , கடவுளைத் தேடி — பிரம்மனை அறியச் செல்கிறான். அவன் முதலில் கண்டது உணவு தானியங்கள் ; மனிதர்கள் அவைகளை உண்டு வாழ்வதால்  அதுவே பிரம்மன்/ கடவுள் என்று கருதுகிறான். பின்னர் பிராணன் இல்லாமல் தானியம் வறண்டு அழிகிறது ; பிராணனும்/ உயிரும் தானியம் இல்லாமல் அழிகிறது; ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது என்பதை உணர்கிறான். உடலை மூடியுள்ள முதல் திரையான அன்னமய கோசம் மாசுபடக்கூடாது என்பதில் வேத கால ரிஷிகள் கண்ணும் கருத்துமாக இருந்தனர் ; அது  எப்படித் தெரியும் என்ற வினா நம் மனதில் எழக்கூடும். பொது இடங்களில் எல்லா பூஜைகள், பஜனைகள் முடியும் போதும்  ஒரு சாந்தி மந்திரத்தைச் சொல்லி முடிப்பார்கள். அது உலக நாடுகளின், ஐ.நா  சபையின் தேசீய கீதமாக அமையும் தகுதி உடைத்து.

சுக்ல யஜுர் வேதத்தில் வரும் அந்த அற்புத மந்திரம் புறச் சூழலைப் போற்றும் மந்திரம் மட்டுமல்ல. உலகம் முழுதும் சாந்தி  அளிக்கும் மந்திரமும் ஆகும்.

வானம் (நமக்கு) அமைதி வழங்கட்டும்

காற்றுமண்டலம் அமைதி வழங்கட்டும்

பூமி அமைதி வழங்கட்டும்

தண்ணீர் நமக்கு அமைதியை நல்கட்டும்

மூலிகைகள் அமைதி வழங்கட்டும்

தாவரங்கள் நமக்கு அமைதியை நல்கட்டும்
எல்லாக் கடவுளரும் நமக்கு அமைதியை நல்கட்டும்
எங்கும் அமைதி நிலவட்டும்
பிரபஞ்சம் முழுதும் அமைதி நிலவட்டும்
நலங்கள் பெருகட்டும்.

ஓம் த்யெள சாந்திஹி ; அந்தரிக்ஷம் சாந்திஹி; ப்ருதிவீ சாந்திஹி ; ஆபஹ சாந்திஹி ;ஓஷதயஹ சாந்திஹி; வனஸ்பதயஹ சாந்திஹி ; விச்வே தேவாஹா சாந்திஹி ; ப்ரஹ்ம சாந்திஹி; ஸர்வே சாந்திஹி ; சாந்திரேவ சாந்திஹி ; ஸா மா சாந்திரேதி  — சுக்ல யஜுர் வேதம்

 द्यौः शान्तिरन्तरिक्षं शान्तिः
पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः 
वनस्पतयः शान्तिर्विश्वेदेवाः शान्तिर्ब्रह्म शान्तिः
सर्वं शान्तिः शान्तिरेव शान्तिः सा मा शान्तिरेधि 
 शान्तिः शान्तिः शान्तिः 

XXX 

பிராமணர்கள் மாதம் தோறும் செய்யும் தர்ப்பண மந்திரத்திலும் புறச் சூழலுக்காகப் பிரார்த்திக்கிறார்கள் ; இதோ அந்த மந்திரம்

ஓம் மதுவாதா ரிதாயதே
மதுக்ஷரந்தி ஸிந்தவ:
மாத்வீர் நஸ்ஸந்த்வோஷதீ:
மது நக்தமுதோஷஸி
மதுமத் பார்த்திவக்ம் ரஜ:
மது த்யௌரஸ்து ந: பிதா
மதுமான் நோ வனஸ்பதிர்
மதுமாகம் அஸ்து ஸூர்ய:
மாத்வீர் காவோ பவந்தி ந:

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

(சிறந்த செயலைச் செய்ய விரும்புகின்ற நமக்கு காற்று இனிமையாக வீசட்டும், நதிகள் இனிய நீருடன் ஓடட்டும், செடிகொடிகள் வளம் பெற்று விளங்கட்டும், இரவும் பகலும் நன்மையைத் தரட்டும், பூமி இனிமையைத் தரட்டும், நமது தந்தையான வானம் இனிமையைப் பொழியட்டும்,  செடிகொடிகளின் அதிபதியான சந்திரன் இனிமையாக இருக்கட்டும், பசுக்கள் அதிக பாலைப் பொழியட்டும்.)

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் !

லோகாஸ் சமஸ்தா சுகினோ பவந்து!

—SUBHAM—-

 tags-  சாந்தி மந்திரம், புறச்சூழல், மந்திரம், இந்துக்கள், தரு, மரம், வேதம் , பிருஹத் சம்ஹிதா 

திருப்புகழில் கணபதி! (Post No.11,444)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,444

Date uploaded in London – –   15 November 2022                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

திருப்புகழில் கணபதி!

ச.நாகராஜன்

1.       கைத்தலநிறைக  – வயலூர் பாடல் 1

கைத்தல நிறைகனி அப்ப மொடு அவல் பொரி கப்பிய

கரிமுகன் அடிபேணி … கரதலத்தில் நிறைந்துள்ள பழம், அப்பம்,

அவல், பொரி (இவைகளை) வாரி உண்ணும் யானை முகக் கடவுளின்

திருவடிகளை விரும்பி,

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ கற்பகம் எனவினை

கடிதேகும் … அறிவு நூல்களைக் கற்கும் அடியவர்களுடைய மனதில்

நீங்காது வாழ்பவனே, நினைத்தவற்றை அளிக்கும் கற்பக விருட்சமே,

என்று உன்னைத் துதி செய்தால் வினைகள் யாவும் விரைவில்

ஓடிப் போய்விடும்.

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் மற்பொரு

திரள்புய மதயானை … ஊமத்த மலரும், (பிறைச்) சந்திரனும்

சடையில் தரித்த சிவபெருமானுடைய மகனும், மற்போருக்குத் தக்க

திரண்ட தோள்களையுடையவனும், மத யானையை ஒத்தவனும்,

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டு அவிழ்

மலர்கொ(ண்)டு பணிவேனே … மத்தளம் போன்ற பெருவயிறு

உடையவனும், உத்தமியாகிய பார்வதியின் மகனும் ஆகிய கணபதியைத்

தேன் துளிர்க்கும் புது மலர்களைக் கொண்டு நான் வணங்குவேன்.

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய

முதல்வோனே … இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் நூல்

முறைமையை, மலைகளுள் முற்பட்டதான மேரு மலையில் முதல்

முதலில் எழுதிய முதன்மையானவனே,

முப்புரம் எரி செய்த அச்சிவன் உறை ரதம் அச்சு அது

பொடிசெய்த அதிதீரா … (அசுரர்களின்) திரி புரங்களையும் எரித்த

அந்தச் சிவ பெருமான் எழுந்தருளிய ரதத்தின் சக்கர அச்சை ஒடித்துத்

தூளாக்கிய மிகுந்த தீரனே*,

அத்துயர் அது கொ(ண்)டு சுப்பிரமணி படும் அப்புனம்

அதனிடை இபமாகி … (வள்ளி மீது கொண்ட காதலாகிய) அந்தத்

துயரத்தோடு (உன் தம்பியாகிய) சுப்பிரமணியன் நடந்த அந்தத் தினைப்

புனத்திடையில் யானையாகத் தோன்றி,

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணம்

அருள் பெருமாளே. … அந்தக் குற மகளாகிய வள்ளியுடன் அந்தச்

சிறிய முருக வேளை அத்தருணத்திலேயே மணம் புரியுமாறு திருவருள்

பாலித்த பெருமாளே.

xxxx

2. பாடல் 353 அஞ்சன வேல்விழி இட்டு – திருவானைக்கா

குஞ்சர மாமுக விக்கிந ப்ரபு அங்குச பாச கர ப்ரசித்தன் ஒர்

கொம்பன் மகோதரன் முக்கண் விக்ரம கணராஜன் …

யானையின் அழகிய முகத்தைக் கொண்ட விக்ன விநாயகன் என்னும்

பெரியோன், (சினத்தை அடக்கும்) அங்குசம், (காமத்தை அடக்கும்) பாசம்

இரண்டும் கையில் கொண்ட பிரசித்தி பெற்றவன், ஒற்றைக் கொம்பன்,

பெரு வயிற்றன், (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) முக்கண்ணன்,

வலிமை வாய்ந்தவன், கணபதி,

கும்பிடுவார் வினை பற்று அறுப்பவன் எங்கள் விநாயகன்

நக்கர் பெற்று அருள் குன்றைய ரூபக கற்பக பி(ள்)ளை

இளையோனே … துதிப்பவர்களுடைய வினைகளையும் ஆசையையும்

தீர்ப்பவன், எங்கள் விநாயக மூர்த்தி, திகம்பரரான சிவபெருமான்

பெற்றருளிய மலை போன்ற உருவத்தை உடையவன், ஆகிய கற்பக

விநாயகப் பிள்ளைக்குத் தம்பியே,

xxxx

3. பாடல் 127 பழநி கடலை பொரியவரை பாடல்

கடலை பொரியவரை பலகனி கழை … கடலை, பொரி, அவரை,

பலவிதமான பழங்கள், கரும்பு

நுகர் கடின குட உதர … இவற்றைப் புசிக்கின்ற கடினமான குடம்

போன்ற வயிற்றையும்,

விபரீத கரட தட மு(ம்)மத … அதிசயமான மதம் பாய்ந்த

அடையாளத்தையும், மும்மதத்தையும்*

நளின சிறுநயன … தாமரை இதழ் போன்ற சிறிய கண்களையும்

கொண்ட

கரிணி முகவரது துணைவோனே … யானைமுகத்தோருக்கு

இளையவனே,

xxxx

4. பாடல் 1002 பொதுப்பாடல்

கடலை பயறொடு எனத் தொடங்கும் பாடல்

கடலை பயறொடு துவரை எள் அவல் பொரி சுகியன் வடை

க(ன்)னல் கதலி இ(ன்)னமுதொடு … கடலை, பயறு

இவைகளுடன், துவரை, எள், பொரி, சுகியன், வடை, கரும்பு, வாழை

இனிய அமுது போன்ற சுவையுடன்

கனியும் முது பல கனி வகை நலம் இவை இனிதாகக் கடல்

கொள் புவி முதல் துளிர்வொடு வளம் உற … பழுத்துள்ள முதிர்ந்த

பலவிதமான பழ வகைகள் நல்லபடியாக இவைகளை இன்பத்துடன்,

கடலால் சூழப்பட்ட பூமியில் உள்ளவர்கள் முதல் யாவரும் தழைத்து

வளப்பம் பெறுவதற்காக,

அமுது துதி கையில் மனம் அது களி பெற கருணையுடன்

அ(ள்)ளி திருவருள் மகிழ்வுற … அமுதாக தனது துதிக்கையில்

மனம் மகிழ்ச்சி பெற கருணை மிகுந்து அள்ளி எடுத்து திருவருள் பாலிக்க,

நெடிதான குடகு வயிறினில் அடைவிடு மத கரி பிறகு வரும்

ஒரு முருக சண்முக என … பெரிய குடம் போன்ற வயிற்றினில்

அடைக்கின்ற மத யானை போன்ற கணபதியின் பின் தோன்றிய ஒப்பற்ற

முருகனே, ஷண்முகனே என்று

xxxx

5. பாடல் 409 கரிமுகக் கடகளிறு எனத் தொடங்கும் பாடல் –

திருவருணை

கரிமுகக் கடகளிற் றதிககற்பக … யானை முகத்தையும் மதத்தையும்

கொண்ட களிறு, சிறந்த கற்பக விநாயகர்,

மதக் கஜமுகத்து அவுணனைக் கடியானை … மதங்கொண்ட

யானைமுகத்து கஜமுகாசுரனை அடக்கிய யானை,

கடலை எள் பயறு நற் கதலியிற் கனிபலக் கனி … கடலை, எள்,

பயறு, நல்ல கதலி வாழைப்பழம், பலாப் பழம்

வயிற் றினிலடக்கிய வேழம் … முதலியவற்றை வயிற்றினில் அடக்கிய

யானை,

அரிமுகத்தினன் எதிர்த்திடு களத்தினின் … அழகிய முகத்தை

உடையவன், எதிர்த்துச் சண்டைசெய்யும் போர்க்களத்தில்

மிகுத்து அமர்புரிக் கணபதிக்கு இளையோனே … பெரிய போரைச்

செய்யும் கணபதிக்குத் தம்பியே,

–subham–

புத்தக அறிமுகம் – 114

விலங்கு உலகப் புதுமைகள்                                               

பொருளடக்கம்

நூலில் உள்ள அத்தியாயங்கள்

1. மிருகங்கள் பேசும் மொழி   

2. இது மனித காதல் அல்ல   

3. ஆணா, பெண்ணா எது வேண்டும்?

4. மிருகங்களின் செக்ஸ் வாழ்க்கை!

5. மிருகங்களின் புத்திசாலித்தனம்   

6. மிருக ஆராய்ச்சி 

7. கடல் நாகம்

8. ராட்சஸ மிருகம் ஒகோபோகோ! 

9. கடல் வேதாளம் 

10. நிலா ஜெல்லி மீன்!  

11. டார்ச்போல் விளக்காக ஒளிரும் மீன்! 

12. தேவதை மீன்  

13. புதிய கடல் வாழ் உயிரினங்கள் கண்டுபிடிப்பு   

14. அன்னத்துக்கு என்றுமே ஒரு துணைதான்! 

15. நீலத் திமிங்கலங்களின் ஓலக்குரல்   

16. நீர் யானையும், கடல் சிங்கமும்!

17. நட்புக்கு ஒரு யானை

18. யானை ஆஸ்பத்திரி  

19. யானைகள் ஜாக்கிரதை

20. பழங்கால கம்பளி யானை மண்டை ஓடு!  

21. அதிசயக் கிளி! 

22. ‘A’ to ‘Z’ பட்டர்ஃப்ளைஸ்   

23. எருமை அளவுள்ள சீமை பெருச்சாளி 

24. ராஜ நண்டு

25. திரும்பி வந்த பூனை

26. யமனுக்கும் நாய்க்கும் என்ன தொடர்பு?    

27. அதிசய நாய்   

28. குரங்கினால் உயிர் பிழைக்கும் பறவைகள் 

29. பேசும் குரங்குகள்!   

30. பல் வலிக்கு உதவி கேட்கும் குரங்கு 

31. டாக்டர் குரங்கு 

32. உலகின் பெரிய ஆமைகள் உலவும் தீவு!   

33. இராட்சஸ கடல் சிலந்திகள்

34. சிலந்தி வலையிலிருந்து சில ரகசியங்கள்   

நூலைப் பற்றிய சிறு குறிப்பு இது: 

The world of animals has been barely explored by humanity. Though we attempt to analyze human anatomy by studying the behavior of animals, there are several thousands species of animals which have not been completely understood. This book spells out several interesting facts regarding animals. In addition to discussion regarding how animals communicate amongst themselves, there are descriptions about rare animal species – a monstrous animal named Ogobogo, self-illuminating fishes, incredibly huge rats, etc. The readers are sured to be lured into a discovery channel-like world while reading this book.

விலங்குகளின் உலகம் ஓர் அதிசய உலகம்! அங்கு பல ரகசியங்கள் உள்ளன! மனிதனின் இன்றைய அறிவியல் முன்னேற்றத்திற்கு உயிரினங்களின் செயல்பாடுகளை ஆராய்வது ஒரு முக்கிய விஷயமாகி விட்டது. உயிரினங்கள் தமக்குள் பேசிக் கொள்ளும் மொழி பற்றியும், ஓகோபோகோ எனும் ராட்சச விலங்கு, விளக்கு போல் ஒளிரும் மீன், எருமை அளவுள்ள சீமைப் பெருச்சாளி போன்ற அதிசய விலங்குகள் பற்றியும் கூறுகிற இந்த நூல் ஓர் எழுத்து வடிவ டிஸ்கவரி சேனல் என்றால் அது மிகையாகாது!

*

இந்த நூல் திருமதி நிர்மலா ராஜூ அவர்களால் அவரது www.nilacharal.com மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. இதை (EBOOK) டிஜிடல் வடிவமாகப் பெற விரும்புவோர் www.nilacharal.com இணையதளத்தில் EBOOKS என்ற பகுதியில் AUTHOR-ஐ தேர்ந்தெடுத்தால் எழுத்தாளர் பகுதியில் ச.நாகராஜன் (61) என்ற பெயரைக் காணலாம்.

அங்கு சொடுக்கினால் ச.நாகராஜன் எழுதிய 61 புத்தகங்களின் விவரத்தைக் காண முடியும். ‘விலங்கு உலகப் புதுமைகள்!’ நூலைப் பற்றிய  சிறுகுறிப்பு, விலை விவரத்தைக் காணலாம்; அதை வாங்கலாம்.

*