அதிசய ஒற்றுமைகள்! 2 (Post no.11,217)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,217

Date uploaded in London – –    24 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதிசய ஒற்றுமைகள்! – 2

ச.நாகராஜன்

மேலும் சில அதிசய ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

வண்டு வந்த ஆச்சரியம் 

எந்த ஒருவரையும் அனாவசியமாக விமரிசனம் செய்யும் சில குதர்க்கவாதிகளும் அல்பமான தர்க்கவாதிகளும், அரைகுறை விஞ்ஞானிகளும் கார்ல் ஜங்கிடம் வாலாட்ட முடியாது.

அப்படிப்பட்ட அற்புத விஞ்ஞானி அவர்.

அவரை ஒரு சமயம் ஒரு இளம் பெண்மணி சந்தித்து தான் கண்ட கனவை விவரித்தார். அந்த பெண்ணின் கனவில் ஒரு தங்க நிற வண்டு ஒரு சிக்கலான நேரத்தில் தோன்றியது. அதை அவர் விவரிக்க, அதை ஜங் மூடிய தனது ஜன்னலுக்கு முன்னால் இருந்தவாறு கேட்டுக் கொண்டிருந்தார். 

திடீரென்று அவருக்கு ஒரு சப்தம் கேட்டது. யாரோ மெதுவாக தட்டுவது போல இருந்தது அந்த சப்தம்.

ஜங் திரும்பிப் பார்த்தார். என்ன ஆச்சரியம்!

ஒரு அபூர்வமான வண்டு ஜன்னல் தகடைத் தட்டிக் கொண்டிருந்தது!

ஜங் அவசரமாக ஜன்னலைத் திறந்தார். ஒரு பூச்சி பறந்து வந்தது. உள்ளே வந்த அந்தப் பறக்கும் பூச்சியை அவர் பிடித்தார்.

அது அபூர்வமான ஒரு வகை வண்டு.

இது போன்ற ஒரு சம்பவம் அவர் வாழ்வில் என்றுமே நிகழ்ந்ததில்லை என்பதை வியப்பின் உச்சிக்கே சென்ற ஜங் தனது The Structure and Dynamics of the Psyche இல் விவரித்துள்ளார்.

அதைக் கீழே காணலாம்.


From The Structure and Dynamics of the Psyche: “A young woman I was treating had, at a critical moment, a dream in which she was given a golden scarab. While she was telling me this dream I sat with my back to the closed window. Suddenly I heard a noise behind me, like a gentle tapping. I turned round and saw a flying insect knocking against the windowpane from outside. I opened the window and caught the creature in the air as it flew in. It was the nearest analogy to the golden scarab that one finds in our latitudes, a scarabaeid beetle, the common rose-chafer (Cetonia aurata) which contrary to its usual habits had evidently felt an urge to get into a dark room at this particular moment. I must admit that nothing like it ever happened to me before or since, and that the dream of the patient has remained unique in my experience.” – Carl Jung

புத்தகம் தந்த ஆச்சரியம்!

1973ஆம் ஆண்டு. பிரபல நடிகரான அந்தோணி ஹாப்கின்ஸ் ‘தி கேர்ள் ஃப்ரம் பெட்ரோவ்கா’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார். இதை எழுதியவர்  ஜார்ஜ் ஃபெய்ஃபர். ஆனால் இந்த நாவலை லண்டனில் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆனால் அவர் ஒரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உட்கார்ந்த போது அங்கு ஒரு புத்தகம் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்தார்.

என்ன ஆச்சரியம்!

அது அவர் தேடிக் கொண்டிருந்த அதே புத்தகம் தான்! அது மட்டுமல்ல, அது அந்த எழுத்தாளரின் சொந்த பிரதி. அதில் அவர் குறிப்புகளையும் எழுதி வைத்திருந்தார். அந்த எழுத்தாளர் அதை ஒரு நண்பரிடம் கொடுத்திருந்தார். அந்த பிரதி அவரது காரிலிருந்து திருடப்பட்டிருந்தது.

அது தான் அந்த ரயில்வே பிளாட்பாரத்தில் ஹாப்கின்ஸுக்குக் கிடைத்தது!

போட்டோ தந்த ஆச்சரியம்!

ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு பெண்மணி தனது ஆண் குழந்தையை 1914இல் போட்டோ எடுத்தார். அதை ஸ்ட்ராஸ்பர்க்கில் டெவலப் செய்தார். அந்தக் காலத்தில் ஃபிலிம் ப்ளேட்டுகள் தனித் தனியாகத் தரப்பட்டு வந்தது.


முதலாம் உலகப் போர் வெடித்தது. அந்தப் பெண்மணியால் ஸ்ட்ராஸ்பர்க்கிற்குச் செல்ல முடியவில்லை. போனது போனது தான் என்று அவர் அந்த பிலிமை வாங்காது விட்டு விட்டார்.

இரண்டு வருடங்கள் ஓடின.

அவர் நூறு மைல் தள்ளி இருந்த ப்ராங்க்ஃபர்ட்டில் ஒரு பிலிம் ப்ளேட்டை தனது புதிதாகப் பிறந்த பெண் குழந்தைக்காக வாங்கினார்.

அந்த பிலிம் டெவலப் செய்யப்பட்டது.

என்ன ஆச்சரியம்!

அந்தக் குழந்தையின் போட்டோ அதற்கு முன்னால் பிறந்திருந்த குழந்தையின் படத்தின் மீது சூப்பர் இம்போஸ் செய்யப்பட்டு பதிவிடப்பட்டிருந்தது!

முதல் பிலிம் டெவலப் செய்யப்படாத நிலையில் அதே பிலிம் இரு குழந்தைகளையும் காட்டிய போது அவர் பிரமித்தார்.

டெவலப் செய்யப்படாத பிலிம் விற்பனைக்குத் தரப்பட அதை இவர் வாங்க இவருக்கு அவரது இரு குழந்தைகளின் படமும் ஒன்றின் மீது ஒன்றாகக் கிடைத்தது. 

 இதையெல்லாம் என்னவென்று சொல்வது? விஞ்ஞானம் இதற்கு ஒரு விளக்கத்தை அளிக்க முடியுமா என்ன?

***

புத்தக அறிமுகம் – 38

மஹாபாரத மர்மம்!

 பாகம் 1

பொருளடக்கம்

என்னுரை

1.ஒரு லட்சம் ஸ்லோகங்கள், 2314 அத்தியாயங்கள் கொண்ட உலகின் மிகப் பெரும் நூல் மஹாபாரதம்

2. மஹாபாரதம் எத்தனை வருடங்களில் இயற்றப்பட்டது? மஹாபாரதம் படிப்பதால் என்ன பயன்?

3. மஹாபாரதத்தில் புதிர் ஸ்லோகங்கள்!

4. பலராமனும் கிருஷ்ணனும் கற்ற கலைகளும், கற்ற நாட்களும்!

5. ஒரே ஒரு ஸ்லோகத்தில் மஹாபாரதம்!

6. சிவனை நோக்கி கனவில் நடந்த கிருஷ்ணார்ஜுன பயணம்!

7.துரியோதனா! எங்கு தர்மமோ அங்கே ஜயம் : காந்தாரி!

8.ஸவ்யஸாசியே எழுந்திரு!

9.கிருஷ்ணரின் வருகையும் மறைவும்!

10. பிரபஞ்ச நாயகன் போரின் நாயகனாகிப் புரிந்த லீலைகள்!

11.பாண்டவர் வெல்லத் தடைகள் ஆயிரம்! தர்மம்

12. அஸ்வத்தாமனை துரியோதனன் நம்பாமலிருக்க மாயக் கண்ணன் செய்த ஜாலம்!

13. பதினெட்டாம் நாள் போர்: சல்ய பர்வம் தரும் துர்நிமித்தங்கள்!

14. மஹா வீரனான கர்ணனின் மரணத்திற்கான காரணங்கள் என்னென்ன?

15. பாஞ்சாலி சொன்ன தாம்பத்ய ரகசியம்!

16. கிருஷ்ண சபதம்!

17. “சூதாட்டப் போரை நடக்க விடாமல் நீ தடுத்திருக்கலாமே கிருஷ்ணா!” – உதங்கரின் கேள்வி!

18. மஹாபாரதம் தெரிவிக்கும் அஸ்திரங்களின் மர்மம்!

19. விஷ்ணு சஹஸ்ரநாமத்தை ரிகார்ட் செய்தது யார்?

20. மஹாபாரத ரகசியம் – கடவுளின் அருளைப் பெற என்ன செய்ய வேண்டும்?

21. தமிழகத்தில் உள்ள மஹாபாரதத் தலங்கள்!

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

உலகில் தோன்றிய இதிஹாஸங்களுள் மிகப் பெரிய இதிஹாஸம் மஹாபாரதம்.

இதன் பெருமையை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

இதைப் படிக்க ஒரு ஆயுள் போதாது.

இதில் இல்லாதது வேறெங்கும் இல்லை.

இதற்கான விளக்கங்கள், இதைப் பற்றிய நூல்கள், கட்டுரைகள் லக்ஷக்கணக்கில் இந்த நூல் தோன்றிய நாள் முதல் எழுந்துள்ளன.

விநாயகரே இதன் பொருளை சற்று சிந்தித்துச் சிந்தித்து தான் புரிந்து கொண்டார் என்று அறிகிறோம்.

அப்படியானால் சாமான்ய மனிதனின் நிலை என்ன என்பதை உணரலாம்.

வாழ்வாங்கு வாழ வேண்டிய நெறிகள், கர்ம பலன் விளக்கம் இதில் உள்ளன.

அது மட்டுமல்ல, பகவான் கிருஷ்ணர் தனது திருவுள்ளத்தினால் அருளிய பகவத் கீதையும் இதில் தான் அமைந்துள்ளது.

இன்னும் ஏராளமான பகுதிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.

விஷ்ணு சஹஸ்ர நாமம், யக்ஷ ப்ரஸ்னம், விதுர நீதி, சத ருத்ரீயம் போன்ற பல அபூர்வமான பகுதிகள் இதில் உள்ளன.

புராண விளக்கங்களை இதில் காணலாம். ரிஷிகளின் சரித்திரங்களும் இதில் உண்டு.

அஸ்திரங்களைப் பற்றிய விவரணம் இதில் உண்டு.

தர்ம, அர்த்த, காம, மோக்ஷ சம்பந்தமான எந்தக் கேள்விக்கும் இதில் பதில் உண்டு.

ஆன்மீக பூமியான பாரத தேசம் பற்றிய பிரமிக்க வைக்கும் செய்திகள் இதில் உண்டு.

ஆங்காங்கே உள்ள சம்வாதங்கள் என்னும் அர்த்தமுள்ள உரையாடல்கள் மனித குலத்திற்கு என்றும் துணை நிற்கும் வழிகாட்டும் நெறிகளைத் தருபவை.

இதற்கு பாஷ்யம் எழுதிய ஆசாரியர்கள், மேதைகள் பலர் உண்டு.

இதை ஒவ்வொரு கோணத்தில் ஆராய்ந்த அறிஞர்கள் உண்டு.

சுமார் 8000 கூட ஸ்லோகங்கள் என்னும் புதிர் ஸ்லோகங்களுக்கு விரிவான விளக்கம் இன்றும் கூடக் காணப்படவில்லை.

முதல் ஸ்லோகத்திலிருந்து கடைசி ஸ்லோகம் வரை ஒன்றுக்கொன்று முரண்படாது ஏராளமான அறிவியல் கலைகளையும், நுட்பமான சாஸ்திரங்களையும் கொண்டுள்ள இது போன்ற இன்னொரு நூல் இதுவரை எழவில்லை.

இந்தக் கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி இதைப் படிக்க ஆரம்பித்தோமானால் ஆனந்தம் தரும் இன்னொரு நூல் இருக்காது.

அவ்வப்பொழுது ஞான ஆலயம், www.tamilandvedas.com ப்ளாக் உள்ளிட்ட பத்திரிகைகள் மற்றும் ப்ளாக் வழியே மஹாபாரத மர்மங்களை விளக்கிக் கொஞ்சம் எழுதி வந்திருக்கிறேன்.

இந்தக் கட்டுரைகளையும் கீதை காட்டும் பாதை பற்றிய எனது கட்டுரைகளையும் ஒவ்வொரு பாகமாக வெளியிட எண்ணம் கொண்டு இந்த முதல் பாகத்தை முதலில் வெளியிடுகிறேன்.

இதை அழகுற நூலாக வெளியிட முன் வந்த முன்வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக!

நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ
27-7-2022

ச.நாகராஜன்

சமண சமய அறிஞரின் 70 பாடல் கல்வெட்டு காணவில்லை (Post No.11,216)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,216

Date uploaded in London – 23 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

குஜராத்தின் புகழ்பெற்ற சமண முனிவர் ஹேமசந்திர சூரியின் சீடர் ராமசந்திர சூரி.இவரைப் பற்றிய  அரிய தகவல்களைத் தருகிறது தோல்கா (Dholka வட குஜராத்) கல்வெட்டு. இது 12-ம் நூற்றாண்டுக் கல்வெட்டு.

அச்சுப் பொறித்த்தாற்போல அழகிய எழுத்துக்களில் உள்ள கல்வெட்டுத் துண்டில் எண் 71 முதல் 103 வரையுள்ள பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன. முதல் 70 பாடல்களைக் கொண்ட கல்வெட்டுகள் கிடைக்கவில்லை .

கடைசி பாடலை மட்டும் காண்போம்

ப்ரபந்த சத நிர்மிதிப்ரதித கீர்த்திகாம்யோதயஹ

ப்ரசஸ்திமதுலாமிமாமக்ருத  ராமசந்த்ரோ முனிஹி

இதிலிருந்து அவர் 100 பாடல்களைக் கொண்ட பிரபந்தம் எழுதியது தெரிகிறது. ஆனால் முதல் 70 பாடல்களைக் கொண்ட கல்வெட்டுகள் இதுவரை கிடைக்கவில்லை. 35 செய்யட்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கின்றன.

அவர் எழுதிய நாடகங்கள்

நள விலாஸ  யது விலாஸஸத்ய ஹரிச்சந்திரநிர்பய பீம வ்யாயோயக மல்லிகா மகரந்த ராகவாப்யுதய ரோஹிணி ம்ருகாங்க வனமாலா நாடிகா  கெளமுதீ மித்ரானந்தயாதவாப்யுதய ரகு விலாஸகுமார ரவி ஹாரா சதக .

இவை அனைத்தும் கிடைத்துவிட்டன. சுதா கலச என்ற பாடல் தொகுப்பையும் இவர் இயற்றினார் குண சந்த்ர சூரி என்பவருட இணைந்து அவர் எழுதிய நாட்யதர்பண என்ற நூலும் கிடைத்திருக்கிறது . அவர் கி.பி (பொ .ஆ.) 1110 முதல் 1173 வரை வாழ்ந்தார்  குஜராத் சாளுக்கிய வம்ச அரசர்கள் சித்தராஜ ஜெயசிம்ஹ, மற்றும் குமாரபால ஆகியோரின் ஆஸ்தான புலவராகவும் இருந்தார்..அவருடைய இலக்கிய படைப்புகளைக் கண்டு வியந்த மன்னன் சித்தராஜ ஜெயசிம்மன், புலவருக்கு ‘கவி கடார மல்ல’ என்ற சிறப்பு விருது வழங்கினார் .மன்னருக்கு முன்னர் நடந்த வாக்குவாதத்தில் அவர் திகம்பர சமணப் பிரிவினைச் சார்ந்த ஒரு அறிஞரை வென்றார். அவருக்கு ஒரு கண் தெரியாது என்பதும் வரலாற்றுக்குறிப்பில் காணப்படுகிறது..

Xxx

யசோதர்மன் புகழ் பாடிய கவி வாஸுல

ஹூண மன்னன் மிஹிரகுலனைத் தோற்கடித்த மன்னன் யசோதர்மன் ஆவார் . கல்வெட்டின் காலம் பொது ஆண்டு (கி.பி.) 532. கக்க என்பவரின் மகனான வாஸுல இயற்றிய கவிதைகள் மாண்டசோர் தூண் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது. ஒன்பதே செய்யுட்களானாலும் நல்ல தரமான கவிதைகள் அவை.

நல்ல கற்பனைத் திறனைக்கொண்ட அவரது பாடலின் ஒரு பகுதி இதோ :

காமேவோண்மாதுமூர்த்வம்  விகணயிதுமிவ  ஜ்யோதிஷாம் சக்ரவாளம்

நிர்தேஷ்ட்டும் மார்கமுச்சைர்திவ இவ ஸுக்ருதோ பார்ஜிதாயாஹா  ஸ்வ கீர்த்தே …….

இதே போல எட்டாவது பாடலின் பிற்பகுதியும் இவர் கற்பனை சிறகடித்துப் ப றப்பதைக் காட்டும்:

இத்யுத்கர்ஷம் குணானாம் லிகிதுமிவ யசோதர்மண ஸ் சந்த்ரபிம்பே

ராகாதுத் க்ஷிப்த உச்சைர் புஜ  இவ ருசிமான்யஹ  ப்ரு திவ்யாம் விபாதி

மேலும் 28 கவிகளைக் கொண்ட மற்றும் ஒரு மாண்டசோர் கல்வெட்டையும் இவரே செய்ததாகத் தெரிகிறது . மன்னர்கள் யசோதர்மன் மற்றும் விஷ்ணுவர்தனனின் (பொ .ஆ.532) புகழ்பாடும் பிரசஸ்தி இது.

புலவர் பெயர் இல்லாவிடினும் ஒரே ஆண்டு மூலமாகவும் கல்வெட்டைச் செதுக்கிய சிற்பி கோவிந்தன் என்ற பெயர் மூலமாகவும் ஒரே புலவர் யாத்தவை  என்பதை அறிய முடிகிறது.

Xxx

அரிய ஸம்ஸ்க்ருத நாடகம்

சம்ஸ்க்ருத மொழியில் உள்ள நாடங்கள் எண்ணிலடங்கா. தமிழில் 2000 ஆண்டுகளில் எழுதப்பட்ட ஒரு நாடகமும் நமக்குக் கிடைக்காதது தமிழர்களின் துர்பாக்கியமே.

சம்ஸ்க்ருத மொழியில் உள்ள நாடகங்களின் பெயர்களையும் ஆசிரியர் பெயர்களையும்  மட்டும் எழுதினாலேயே ஒரு புஸ்தகம் அளவுக்குப் பெரிதாகிவிடும் !

நாலாம் விக்ரஹ ராஜதேவ என்பவர் அருணாராஜனின் புதல்வர். இவர் ஆஜ்மீர்-சாகம்பரியை (Rajasthan) ஆண்ட சிற்றரசர். ஆண்டு; 1153-1164. அவர் இயற்றிய நாடகத்தின் பெயர் ஹரகேளி  நாடகம். இது ஒரு அருமையான நாடகம். இவருக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்னர் கி.மு. முதல் நூற்றாண்டில் காளிதாசன் நாடகம் இயற்றினான். அவருக்கு முன்னர் பாஷா எழுதிய நாடகங்களும் கிடைத்து இருக்கின்றன. ஆயினும் 1000 ஆண்டுக்குப் பின்னரும் அதே போல ஒரு சுவை குன்றாத நாடகம் எழுதியவர் விக்ரஹ ராஜ தேவ ஆவார். அர்ஜுனனும் சிவ பிரானும் போட்ட சண்டை பற்றியது இது.

ஆஜ்மீர் (Rajasthan) ஸம்ஸ்க்ருதக் கல்லூரியில் கல்வெட்டு இருந்தது . ஸம்ஸ்க்ருத கல்லூரியாக இருந்த இடத்தைப் பின்னர் முஸ்லீம்கள் மசூதி ஆக்கிவிட்டனர்

போஜ மன்னனின் நண்பனும் ஹுன வம்சத்தில் தோன்றியவனுமான பாஸ்கர என்பவன் இதைப் படி எடுத்துள்ளான். ஆயினும் முழு நாடகம் கிடைக்கவில்லை.

 புலவரும் மன்னருமான  விக்ரஹாராஜதேவ இறந்த பின்னர் , உலகம்  புலவர்களின் நண்பர்கள் இல்லாத அளவுக்கு வறியதாகிவிட்டதாம் !!

-சுபம்-

 TAGS- விக்ரஹாராஜதேவ, ஆஜ்மீர் , கல்லூரி, சம்ஸ்க்ருத,, நாடங்கள், ராமசந்திர சூரி.,தோல்கா, யசோதர்மன் , வாஸுல

அதிசய ஒற்றுமைகள்! – 1 (Post No,11215)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,215

Date uploaded in London – –    23 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

அதிசய ஒற்றுமைகள்! – 1

ச.நாகராஜன்

உலகில் நடைபெறும் நிகழ்வுகளில் பல நம்மை பிரமிக்க வைக்கும்.

இந்த பிரமிக்க வைக்கும் நிகழ்வுகளில் ஒன்று கோஇன்சிடென்ஸ் எனப்படும் தற்செயல் ஒற்றுமை.

ஆனால் இவை தற்செயலாக ஏற்பட்டவையா அல்லது இறைவனின் ஒரு திருவிளையாடலா?

இதோ சிலவற்றைப் படித்துப் பாருங்கள்; பின்னர் உங்கள் முடிவுக்கு வாருங்கள்!

அமெரிக்க ஆச்சரியம்!

 அமெரிக்காவை நிறுவிய ஸ்தாபகர்களான தாமஸ் ஜெஃபர்ஸனும் ஜான் ஆடம்ஸும் (Thoman Jefferson and John Adams)  சுதந்திர பிரகடனத்தைத் (Declaration of Independence) தயாரிக்க ஆரம்பித்தனர். ஜெஃபர்ஸன் பிரகடனத்தைத் தயார் செய்து ஆடம்ஸிடம் காண்பித்தார். பெஞ்சமின் ஃப்ராங்க்ளினுடன் சேர்ந்து ஜான் ஆடம்ஸ் அதை சீராக்கி மெருகூட்டித் தந்தார்.  1776ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் தேதி காண்டினெண்டல் காங்கிரஸ் (Continental Congress) அதை அங்கீகரித்தது. இது நடந்த 50 ஆண்டுகளுக்குப் பின்னர் 1826, ஜூலை 4ஆம் தேதி ஜெஃபர்ஸனும் ஆடம்ஸும் – இருவரும் – ஒரே தேதியில் இறந்தனர். அது அமெரிக்க சுதந்திர தினமாக அமைந்தது குறிப்பிடத் தகுந்தது!

ஹோட்டலில் ஆச்சரியம்!

 1953ஆம் ஆண்டு. தொலைக்காட்சி ரிபோர்ட்டரான இர்வ் குப்சினெட் (Irv Kupcinet)இரண்டாம் எலிஸபத்தின் முடிசூட்டு விழாவை நேரில் பார்த்து நிகழ்ச்சியைத் தயாரிக்க லண்டன் சென்றார். சவாய் ஹோட்டலில் அவர் தங்கி இருந்த அறையில் ஒரு டிராயரில் அவர் சில பொருள்களைப் பார்த்தார். அவையெல்லாம் ஹாரி ஹானின் (Harry Hannin) என்பவருடையது என்பதை அதிலிருந்த அடையாளங்கள் மூலம் அவர் கண்டுபிடித்தார். ஹாரி ஹானின் பிரபலமான ஒரு பேஸ்கட் பால் விளையாட்டு வீரர். அவர் ஹார்லெம் க்ளோபெட்ராட்டர்ஸின் நண்பர். ஹார்லெம் குப்சினெட்டுக்கு நண்பர். இதை நினைத்து ஆச்சரியப்பட்டார் குப்சினெட். இரண்டு நாட்கள் கழித்து ஒரு கடிதம் ஹானினிடமிருந்து அவருக்கு வந்தது. அதில் அவர் தான் பாரிஸில் ஹோட்டல் மெரிஸில் தங்கியிருந்த போது குப்செனெட்டின் ஒரு ‘டை’யைக் கண்டதாகத் தெரிவித்திருந்தார்!

டாக்ஸி ஆச்சரியம்!

 1975ஆம் ஆண்டு. பெர்முடா மொபெடை ஒரு மனிதர் ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது அவர் மீது ஒரு டாக்ஸி மோத அந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். ஒரு வருடம் கழித்து அவரது சகோதரரும் அதே போலவே உயிர் இழந்தார். அவர் ஓட்டியது அதே பெர்முடா மொபெட் தான்! இன்னும் ஆச்சரியம் என்னவெனில் அவர் மீது மோதியது அதே டாக்ஸி தான், அதை ஓட்டியவரும் அதே டிரைவர் தான், அவர் ஏற்றி வந்த பயணியும் முன்பு ஏற்றி வந்த அதே பயணிதான்!

மர ஆச்சரியம்!

 1883ஆம் ஆண்டு. ஹென்றி ஜைக்லேண்ட் என்பவர் தனது காதலியுடன் நட்பை முறித்துக் கொண்டார்.  மனமுடைந்த காதலி மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்டார். இதனால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் சகோதரர் ஜைக்லேண்டைத் தேடிக் கண்டுபிடித்து அவரைச் சுட்டார். தான் சுட்டதில் ஜைக்லேண்ட் இறந்து விட்டார் என்று நினைத்துக் கொண்ட அவர் தன்னையும் சுட்டுக் கொண்டார். ஆனால் ஜைக்லேண்ட் சாகவில்லை. குண்டு அவர் முகத்தை உராய்ந்து கொண்டு மட்டுமே சென்று ஒரு மரத்தைத் துளைத்தது. க்ஷண நேரத்தில் அவர் பிழைத்தார். சில வருடங்கள் கழித்த பின்னர் ஜைக்லேண்ட் அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தார். அந்த குண்டு அதனுள்ளேயே இருந்தது. மரம் பிரம்மாண்டமானதாக இருந்ததால் வெட்டி முறிப்பது என்பது சாத்தியப்படாது என உணர்ந்த ஜைக்லேண்ட் அதை டைனமைட் வைத்து தகர்க்க முயன்றார். டைனமைட் வெடித்தது.

அது வெடித்து மரம் சிதற அதன் உள்ளிருந்த குண்டு சீறிப் பாய்ந்து ஜைக்லேண்டின் மண்டையைத் துளைத்து அவரைக் கொன்றது!

ராஜ ஆச்சரியம்!

இத்தாலியில் மொன்ஸா என்ற இடத்தில் மன்னர் அம்பர்டோ I (Kinf Umberto I) தனது தளகர்த்தரான ஜெனரல் எமிலியோ போஞ்சியா வாடியா (General Emilio Ponzia- Vadia) என்பவருடன் ஒரு சிறிய உணவு விடுதியில் உணவருந்தச் சென்றார்.

அவரது ஆர்டரை எடுக்க வந்தவர் உணவு விடுதியின் உரிமையாளர்.

அவரைப் பார்த்த மன்னர் அசந்து போனார். ஏனெனில் அவர் அச்சு அசலாகத் தன்னைப் போல இருந்தது தான் அவரை அப்படி பிரமிக்க வைத்தது!

இருவரும் இந்த உருவ ஒற்றுமை பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

பேச்சில் அவர்கள் கண்டு பிடித்த சுவையான ஒற்றுமைகள் இவை:

இருவரும் ஒரே வருடம் ஒரே மாதம் ஒரே தேதியில் பிறந்தவர்கள்!

(மார்ச் 14, 1844)

இருவரும் பிறந்த இடம் ஒரே நகரம் தான்!

இருவரும் மணந்த பெண்ணின் பெயர் ஒன்றே தான். மார்கெரிடா (Margherita) என்பது தான் அந்தப் பெயர்.

இத்தாலியின் மன்னராக அம்பர்டோ என்று முடி சூட்டப்பட்டாரோ அதே தேதியில் தான் உணவு விடுதியை அதன் உரிமையாளர் திறந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து 1900ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி மன்னருக்கு ஒரு செய்தி வந்தது. அந்த உணவு விடுதி உரிமையாளர் மர்மமான முறையில் ஒரு துப்பாக்கிச் சூடில் இறந்து விட்டார் என்பது தான் அந்தச் செய்தி. உடனே மன்னர் தனது துக்கச் செய்தியை அனுப்பினார். அங்கு கூட்டத்தில் இருந்த ஒருவன் அவரைக் கொலை செய்தான். மன்னரும் அதே தேதி மாண்டு போனார்!

இவையெல்லாம் விளக்கம் சொல்ல முடியாத தற்செயல் ஒற்றுமைகளா, அல்லது இறைவனின் திருவிளையாடலா?!

***

புத்தக அறிமுகம் – 37

கொங்கு மண்டல சித்தர்கள்புலவர்கள்,

தலங்கள்! – பாகம் 2

பொருளடக்கம்

என்னுரை

முதல் பகுதி – கொங்குமண்டல சதகம் தரும் சித்தர்கள், திருத்தலங்கள் வரலாறுகள்!

1. தலையில் குட்டிக் கொண்டு விநாயகரை வணங்குவது ஏன்?

2. திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்!

3.மன்மதைனையும் மயங்க வைக்கும் கொல்லிப்பாவை!

4. கல் ரிஷபம் எழுந்து கடலையை உண்ண வைத்த சிவப்பிரகாசர்!

5. பயறு மிளகானது: சிவபிரான் திருவிளையாடல்!

6. முட்டை என்று தன் பெயரைச் சொன்ன முருகனின் அருள் விளையாடல்!

இரண்டாம் பகுதி – கொங்குமண்டல சதகம் தரும் அரசர்கள், வள்ளல்கள், புலவர்கள்

7. செங்குன்றூர் கிழார் பாடிய திருவள்ளுவ மாலை வெண்பா!

8. வில்லிபுத்தூராரை பாரதம் பாடச் செய்த ஆட்கொண்டான்!

9. யானை அரியணையில் அமர்த்திய கரிகாலன்!

10. பெரும் புகழ் படைத்த முத்தரையர் ஆண்ட இடம் எது?

11. கோசர்கள் ஆண்ட கொங்கு மண்டலம்!

12. தம்பிக்குத் தலை கொடுக்க முன் வந்த அண்ணன்!

13. சடையப்ப முதலியாரின் விருந்தோம்பும் பண்பும் திருவாவடுதுறை மட வரலாறும்!

14. ராஜ ராஜ சோழன் ஆதரித்த வீர சைவர்கள்!

15. பூந்துறை குப்பிச்சி!

16. சுரிகை ஆயுதப்போரில் வல்ல தித்தன் என்னும் அகளங்க சோழன்!

17. ஆணுக்கு அறிவு அதிகமா, பெண்ணுக்கு அதிகமா?

18. தமிழுக்காகத் தாலியை ஈந்த கொங்கு நாட்டுத் தமிழன்!

19. தொண்டைமான் வரலாறு!

20. மும்முடிப் பல்லவராயன் என்ற விருதைப் பெற்ற லிங்கயன்!

21. புலவருக்குக் குழந்தை அளித்த பொன் வண்டி!

22. வெண்மைப் பெண்மணி தமிழ்ச் சங்கம் அமைத்தது!

23. பாண்டியனின் சேனைக்கு அன்னம் தந்து உதவிய அன்னத்தியாகி!

24. காவிரியைக் கொங்கு நாட்டிற்குக் கொண்டு வந்த அல்லாளன் இளையான்!

25. புலவரின் பல்லக்கைச் சுமந்த உலகுடையான்!

26. பெற்ற மகளைப் பலி கொடுத்து அணையை நிலைத்திருக்கச் செய்த இம்முடிச் சோழியாண்டான்!

27. கொங்கக் குயவன் ராஜகுமாரியின் வலிப்பு நோய் தீர்த்த வரலாறு!

28. விசுவகன்மியருக்கான ஒரு சாசனம்!

29. வயிற்றைப் பீறி, குழந்தையை எடுத்த மருத்துவி!

30. பல்லவராயன் பட்டம் பெற்ற செய்யான்!

31. தேர் ஓடத் தன் தலைமகனைப் பலி கொடுத்த வேணாடன்!

32. வீட்டின் முகப்பில் பனையேடும் எழுத்தாணியும் மாட்டிய பண்பாளன்!

33. புலவனுக்குப் பரிசு கொடுக்க முடியவில்லை எனில் புலிக்கு இரையாவதே சிறந்தது!

34. கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதை!

பாடல் முதல் குறிப்பும், பாடல் எண்ணும், வரலாறும்

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்று கொங்கு மண்டலம்.

தங்கம் நிகர் கொங்குமண்டலத்தின் புகழ் வாய்ந்த சரித்திரம், பல நூறு வரலாறுகளைக் கொண்டது. இதை இயற்றியவர் கார்மேகக் கவிஞர் என்பவர்.

கொங்குமண்டலத்தில் குறும்பு நாட்டில் விஜயமங்கலம் என்னும் ஊரில் ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் ஔபாக்கிய சூத்திரம் விருத்தானிய யோகசாகை காசிபப் பிரவரணம் ஜைன பிராமண குலத்தில் பத்மநாப ஐயர் என்பாருக்கு இவர் மகனாகப் பிறந்தார். மேகம் பொழிவது போல் கவிதை மழை பொழிவதால் இவர் கார்மேகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். இவரது வரலாறு சிறப்பான ஒன்று. இவர் இயற்றிய அரும் நூலே கொங்குமண்டல சதகம்.

கொங்குமண்டல சதகம் என்னும் நூறு பாக்கள் அடங்கிய நூலில் கொங்குமண்டலத்தின் பெருமை அனைத்தும் அடக்கிய இவரது புலமை வியக்க வைக்கும் ஒன்று. கொங்குமண்டலம் பற்றி அறிய விரும்புவோரும் தமிழகத்தின் தலையாய வளர்ச்சியையும் பண்பாட்டையும் அறிய விரும்புவோரும் தமிழ்ச் சுவையைச் சுவைக்க விரும்புவோரும் படிக்க வேண்டிய அரிய நூல் இது.

இதில் கூறும் வரலாறுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்தேன்.

இந்தக் கட்டுரைகள் www.tamilandvedas.com ல் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வந்தன.

இந்த வரலாறுகளில் 32 வரலாறுகள் முதல் பாகமாக வெளியிடப் பட்டது. அதைத் தொடர்ந்து இன்னும் 34 வரலாறுகள் இப்போது இரண்டாவது பாகமாக வெளியிடப்படுகிறது.

இதைத் தொடராக வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மீது ஆர்வம் கொண்ட அனைத்து மக்களும் இதைப் படித்து உத்வேகம் பெற்றுத் தமிழைப் போற்றி வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இதைத் தமிழ் அன்பர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் எனது நன்றி.

சான்பிரான்ஸிஸ்கோ                            ச.நாகராஜன்
3-8-2022

* 

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

Sanskrit Verses in Bihar, Gujarat , Karnataka Inscriptions (Post No.11,214)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,214

Date uploaded in London – 22 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

Ravikirti (ravikeerti), a Jain poet composed the well known Aihoe (aykola) inscription of Chalukya king Pulikesin II alias Sathyaasraya dated 634 CE. It is in Karnataka. The poet built a Jain temple. The inscription is of great importance from the historical as well as from the literary point of view. He has mentioned both Kalidasa and Bharavi (kaalidaasa, bhaaravi), from which we come to know that these two great Sanskrit poets were very popular even in the South at that time.

Ravikirti tried to emulate them. He is thoroughly well versed in the rules of Alankaara saastra (poetics). He has freely used in the Prasasti many phrases and ideas which are parallel to those found in Kalidasa’s Raghuvamsa and Bharavi’s Kratarjuniyam (Kiraataarjuniiyam).

Xxx

Two Madhavas

We come across two poets by name Maadhava in Bihar and Gujarat inscriptions. Both of them are good poets.

Madhava composed Bhagirathpur stone inscription of Anumati Devi. It is in Mithila area of Bihar.

Anumati Devi, was daughter in law of Harinarayana, wife of Ramabhadra and mother of Kamsanarayana of the Oinsvaaraa dynasty of Mithila in Bihar. It is dated Lakshmana sena samvatsara 394 or 403 corresponding to 1512 CE. It records a temple built by Anumati Devi.

The poet belonged to the same family as Siva Jha , father of Makhadevi and is mentioned in the anthology Rasikajeevana of Gadhaadhara Bhatta of Mithila. The panegyric consists of nine verses. Here is verse no.2

“Through her gifts, she destroyed the extraordinary poverty of the world; through her glory she rendered tens of thousands of people more beautiful (delighted) than the autumn moon; through her modesty and prudence, she brought relatives under her control. Such a repository of bright virtues unique in the world got this temple built.”

Daanairyaa dalayaam babhoova jagathaam daaritrachamatyutkatam

Keertyaa yaa saradindusundarataraa lokaamschakaaraayuthaan

Kinchochchairvinayaannayaacha vasataam neetaa yayaa bhaandavaah

Seyam visvavilakshanojwalagunagraamaa matam nirmame

The record refers to another poet named Kuladhara who also seems to have composed a eulogy of the queen.

Xxx

Naagara Braahmana Maadhava

He was a Brahmin of Chamatkarapura, son of Munjiga. He composed a Saptasloki (seven verses) which is inscribed on a stone slab in Vanthali  in Saurashtra (Gujarat). The record refers to the time of Gujarat Chalukya king Sarngadeva and is dated 1290 CE.

The poet calls himself Visvamaadhava. He seems to be a good poet. The following verse is one from the Saptasloki:

Srngaara bhangisubagaah subagaana veechivaachaalakandakuharaa muhuraattaveenaah

Gaayanti …………… giraanagaraajasrngamaaruhya guhyachakoradrso yasosya

The same poet seems to have also composed the incomplete, but highly poetical, inscription preserved in the Rajkot Museum. The first half of verse 31 of the Rajkot inscription is identical with the first half of verse 3 of the Vanthalli inscription.

It is our duty to collect and publish all the verses from thousands of inscriptions spread all over India. If they are translated into English and vernacular languages, all can appreciate the beauty of those verses.

Source – Sanskrit and Prakrit Poets known from Inscriptions, Prof.D.B.Diskalkar, Pune, 1993 (with my inputs)

–subham–tags- Aihole, Mithila, Anumati Devi, Madhava, Ravikirti, Inscriptions, Sanskrit

அனுமதி தேவி புகழ்பாடும் பீஹார்  கல்வெட்டு (Post No.11,213)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,213

Date uploaded in London – 22 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

மாதவ என்ற புலவர் இயற்றிய ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டு பீஹார் மாநில பகீரதபுரியில் (பகிரத்பூர் ) உள்ளது. இது அனுமதி தேவி என்ற ராணியின் புகழை அழகிய ஸம்ஸ்க்ருதத்தில் வடித்துள்ளது .

அனுமதி தேவி என்பவர் ராமபத்ராவின் மனைவி; ஹரிநாராயணனின் மருமகள்; கம்ச நாராயணனின் தாயார் .

கம்சநாராயண, மிதிலா நகர ஒயின்வாரா வம்ச சிற்றரசர்.. கி.பி.1500 ஐ ஒட்டி வாழ்ந்தவர்.லட்சுமண சேன சம்வத்சரம் 403.

இந்தக் கல்வெட்டு, அனுமதி தேவி கட்டிய தேவி கோவில் பற்றிப் பேசுகிறது. ஒன்பது செய்யுட்களைக் கொண்டது.

புலவர் மாதவ, தன்னுடைய வம்சாவளியையும் சொல்கிறார். மஹாதேவியின் தந்தை சிவா ஜா தனது வம்சத்தைச் சேர்ந்தவர்என்கிறார்.. மிதிலா நகரைச் சேர்ந்த கதாதர பட்டர் இயற்றிய ரசிகஜீவன பாடல் தொகுப்பில் இது குறிப்பிடப்பட்டதாகவும் புகழ்ந்து கொள்கிறார்.

அனுமதி தேவி தனது தானங்களால் உலகிலுள்ள கொடிய வறுமையை ஒழித்தாள் ;

தன்னுடைய புகழ் ஒளி மூலம் சரத் கால சந்திரனின் ஒளியைவிட பல்லாயிரம் பேரின் ஒளியை மேலும் பிரகாசமாக்கினாள் ;தனது அடக்கத்தாலும், விவேகத்தாலும் உறவினர்களைக் கவர்ந்தாள் ;

ஒப்பற்ற குணங்கள் அடங்கிய இத்தகையவரே இந்தக் கோவிலை நிர்மாணித்தார்.

இதை சம்ஸ்க்ருத மொழியில் காணும்போது இதன் அழகு தெரியும். இது கல்வெட்டின் இரண்டாவது செய்யுளாக அமைந்துள்ளது . இதோ அந்தப் பாடல் :

தானைர்யா தலயாம் பபூவ ஜகதாம்  தாரித்ர்ய மத்யுத்கடம்

கீர்த்யா யா சரத்திந்துசுந்தரதரா லோகாம்ஸ் சகாராயுதான்

கிஞ்சோச்சைர் விநயான்யாச்ச  வசதாம் நீதா யயா  பாந்தவாஹா

ஸேயம்  விஸ்வவிலக்ஷணோஜ்வல  குண க்ராமா  மடம் நிர்மமமே 

ராணியின் புகழ்பாடும் குலதரா என்னும் புலவரின் பெயரையும் கல்வெட்டில் காண முடிகிறது.

xxx

வந்தலி கல்வெட்டு

குஜராத் மாநில செளராஷ்டிர பிரதேசத்தைச் சேர்ந்த இன்னும் ஒரு மாதவ என்ற புலவரையும் காண்போம்.இவர் சமத்காரபுர நாகர பிராஹ்மணர். தந்தை பெயர் முஞ்ஜீக  . குஜராத் சாளுக்கிய மன்னர் சாரங்கதேவரின் கி.பி. (பொ .ஆ) 1290 காலத்தியவர்

கல்வெட்டில் ஒரு ஸப்தஸ்லோகி ( ஏழு செய்யுட்கள்) இருக்கிறது.வந்தலி என்னும் இடத்தில் உள்ள இக்கல்வெட்டு ராஜ்கோட் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு கல்வெட்டைப் போல இருப்பதால் அதையும் இவர்தான் பாடி யிருக்க வேண்டும் என்று ஊகிக்கமுடிகிறது

வந்தலியில் நமக்குக் கிடைக்கும் ஏழு செய்யுட்களில் ஒன்று இதோ :

ச்ருங்கார பங்கிசஸு பகாஹா  சுபகானவீ சிவாசாலகண்டகுஹரா முஹராத்த வீணாஹா

காயந்தி ………… கிரா நகராஜச்ருங்கமாருஹ்ய  குஹ்யக சகோர த்ருசோ யசோ ஸ்ய

கல்வெட்டுகளில் காணப்படும் அத்தனை கவிதைகளையும் படி எடுத்து மொழிபெயர்ப்புடன் வெளியிடுவது நமது கடமை.

Xxx

காளிதாசனைப் பின்பற்றும் சமணமதப் புலவர்

கர்நாடக மாநில ஐஹோலவில் (அய்கொள) உள்ள சமண சமய ஸம்ஸ்க்ருதப் புலவர் ரவிகீர்த்தியின் கல்வெட்டு மிகவும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது . ஸத்யாஸ்ரய என்னும் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசியின் காலத்தைச் சேர் ந்தது . கிபி. 634.

புலவரும் துறவியூமான ரவி கீர்த்தி கட்டிய சமணர் கோவில் பற்றி அவரே பாடிய செய்யுட்களில் காளிதாசன், பாரவி ஆகியோரின் பெயர்கள் வருவதால் அக்காலத்திலேயே காளிதாசன் புகழ் கர்நாடகம் வரை பரவி இருந்தது உறுதி ஆகிறது அவர் அலங்கார சாஸ்திரம் என்னும் செய்யுள் இயலையும் நன்கு அறிந்தவர் என்பது இவர் இயற்றிய கவிகளில் இருந்து தெரிகிறது பாரவியின் கிரார்த்தஜூனியம், காளிதாசனின் ரகு வம்சம் நூல்களில் உள்ள சொல்லோவியங்களை ரவி கீர்த்தி கையாளுவதால் அவர் சம்ஸ்க்ருத இலக்கியத்தை நன்கு கற்றவர் என்பதையும் அறிய முடிகிறது  வரலாறு , இலக்கியம் இரண்டையும் காட்டுவதால் இந்தக் கல்வெட்டு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது .

–சுபம் –tags- அனுமதி தேவி, மாதவ, சப்தஸ்லோகி , செளராஷ்டிர , பீஹார் 

மூளை ஆற்றலைக் கூட்ட 10 திரைப்படங்களைப் பாருங்கள்! (Post No.11212)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,212

Date uploaded in London – –    22 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மூளை ஆற்றலைக் கூட்ட 10 திரைப்படங்களைப் பாருங்கள்!

ச.நாகராஜன்

பிரபல மூளை இயல் நிபுணரான டேவிட் டிசால்வோ மூளை ஆற்றலை முழுதுமாகப் புரிந்து கொள்வதையும் அதை எப்படிக்  கூட்டுவது என்பது பற்றியும் அருமையான ஒரு நூலை எழுதி இருக்கிறார்.

What Makes Your Brain Happy and Why You Should do the opposite என்ற இவரது புத்தகம் 15 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு பல்லாயிரம் பேர்களால் படிக்கப்பட்டது. ஃபோர்பஸ், சைக்காலஜி டு டே போன்ற பத்திரிகைகளில் எழுதி வருபவர் இவர்.

அவரது இன்னொரு புத்தகம் Brain Changer – How Harnessing Your Brain’s Power To Adapt Can Change Your Life.

இதில் ஏராளமான பயனுள்ள தகவல்களை அவர் தந்துள்ளார்.

அவற்றில் ஒன்று  – அவர் பரிந்துரைக்கும் பத்து திரைப்படங்களைப் பாருங்கள் என்பது தான்.

படங்களைப் பற்றிய சுருக்கமான தகவல்கள் இதோ:

1) Adaptation (2002) Director Spike Jonze

Narration narrating narrated narrative – தலை சுற்றுகிறதா? விவரிக்கப்பட்ட ஒரு விவரணத்தை விவரிக்கும் விவரணம்! அது தான் அருமையான இந்தப் படம். பிரக்ஞை (Consciousness) எப்படி விவரணத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது என்பதைச் சித்தரிக்கிறது இது.

2) Barcelona (1994) Director and Writer : Whit Stillman

பார்த்தால் பிரமிக்க வைக்கும் படம் இது. இதே இயக்குநர் The Last days of Disco என்ற படத்தை எடுத்துள்ளார். இவரது வசனம் தான் பிரமிக்க வைக்கும் நம்மை.

3) The Diving Bell and the Butterfly (2007) Director : Julian Schnabel

 பிரபலமான ஒருவருக்கு திடீரென்று பேச முடியவில்லை; நகர முடியவில்லை. இடது கண்ணை சிமிட்ட மட்டும் முடிகிறது. அவர் எப்படி உலகத்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறார். அவருடன் சேர்ந்து செய்யும் ஒரு பயணம் தான் இந்தப் படம்.

4) Rectorum (2005) Director : Bent hamer

சார்லஸ் புகோவ்ஸ்கி என்ற எழுத்தாளரின் எழுத்தின் அடிப்படையில் உருவானது இது. குழப்பம், ஏமாற்றம்! இதிலிருந்து மீண்டு சுயமாக தன்னைக் கண்டுபிடிப்பதைக் காட்டும் படம் இது.

5) The Grey (2011) Director L Joe Carnahan

கதையின் பிரதானமான பாத்திரம் ஃப்ளாஷ்பேக்கில் தனது கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறார். அவர் எதிர்கொள்ளும் சவால்களை அவரோடு பயணித்து இந்தப் படத்தில் பார்க்கலாம்.

6) The Insider (1999) Director : Michael Mann

ஒரு மனிதர் தனது குடும்பத்தை இழக்கிறார்; தனது தொழிலை இழக்கிறார்.எப்படி அவர் மாறுகிறார் – இந்தப் படத்தில் காணலாம்.

7) The Salton Sea (2002) Director : D.J.Caruso

தான் யார் என்பதை நிஜமாக உணர்ந்த ஒருவர் ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குகிறார். அதைச் சித்தரிக்கும் படம் இது.

8) The Spanish Prisoner (1997) ) Director (and Writer) : David Mamet

கண்ணால் பார்ப்பதைப் போலத் தான் ஒருவர் நிஜமாக இருக்கிறாரா? படத்தின் ஹீரோ எப்படி மாறுகிறார் என்பதை அருமையாக விவரிக்கிறது இந்தப் படம்.

9) There Will be Blodd (2007) ) Director : Paul Thomas Anderson

எண்ணெய் நிறுவனத்தில் பெரும் புள்ளி. எப்படி வெற்றி பெறுகிறார்? இந்தப் படம் சித்தரிக்கிறது.

10) Vanilla Sky (2001) ) Director : Cameron Crowe

ஆழ்மனம் சக்தி வாய்ந்தது, அது வாழ்க்கையை புனரமைக்க வல்லது. நீங்கள் விரும்பும் வகையில் சிறிது சிறிதாக முன்னேற முடியும். இதைச் சொல்கிறது இந்தப் படம்.

நினைத்தபடி வாழ முடியுமா? உங்கள் ஆழ்மனம் இதற்கு உதவுமா? இந்த இரு கேள்விகளுக்கு விடை இந்தப் படத்தைப் பார்க்கும் போது கிடைக்கும்!

ஆக பத்து படங்களைப் பார்த்து விட்டு ஆஹா என்று சொல்பவருக்கு அவர் இன்னும் முப்பது படங்களைப் பரிந்துரைக்கிறார்.

அதைப் பின்னர் பார்ப்போம்.

***

புத்தக அறிமுகம் – 36

கொங்கு மண்டல சித்தர்கள்புலவர்கள், தலங்கள்!

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

முதல் பகுதி : கொங்குமண்டல சதகம் தரும் சித்தர் வரலாறுகள்

1. அகத்தியர் சிவலிங்க பூஜை செய்த இடம்!

2. கருவூர்ச் சித்தர் வரலாறு!

3. கஞ்சமலைச் சித்தர்!

4. அதிசயம் அநேகமுற்ற பழனி மலையில் வசித்த போகர்!

5. செம்பைப் பொன்னாக்கி அனைவருக்கும் தந்த கொங்கண சித்தர்!

6. இடைஞானியார் வரலாறு!

இரண்டாம் பகுதி : கொங்குமண்டல சதகம் தரும் புலவர் வரலாறுகள்

7. சுந்தர மூர்த்தி நாயனாருக்கு சிவபிரான் பொன் கொடுத்த வரலாறு!

8. கம்பர் தமிழுக்குத் தந்த கலியாண வரி!

9. ஔவையாருக்குத் தங்க இலையில் அன்னமிட்டவன் யார்?

10. பவணந்தி மாமுனிவர்!

11. இது நாகமலை என்றால் நாகம் ஏன் படம் எடுத்து ஆடவில்லை? – பிரதிவாதி பயங்கரனின் இந்தக் கேள்விக்குப் பதில் என்ன?!

12. கவிதார்க்கிக சிங்கம் வேதாந்த தேசிகர் பரமத பங்கம் எங்கு இயற்றினார்?

13. கபிலதேவ நாயனார் போற்றிய செங்குன்றூர்!

14. இராமானுஜரை ஆதரித்த கொங்கு பிராட்டியார்!

15. பட்ட மரம் தழைக்கக் கவி பாடிய காழிப் புலவன்!

16. சாமிநாதப் புலவன் நெற்போர்கள் எரியப் பாடிய வசை வெண்பா!

17. உரிச்சொல் நிகண்டு எனும் வெண்பா நூலை இயற்றியவர்!

18. அடியார்க்கு நல்லார் பிறந்த ஊர் எது?

மூன்றாம் பகுதி – கொங்குமண்டல சதகம் தரும் தலங்கள் பற்றிய வரலாறுகள்

19. அகத்தியரின் கைப்பிடியில் அடங்கிய சிவபெருமான்!

20. பொன்னுலகம் தரும் வாலிப காசி எந்த ஊர் தெரியுமா?

21. திருத்தலங்களில் வேடுபறி நிகழ்ச்சி நடக்கக் காரணம் என்ன?

22. பேரூர் நந்தியின் முகம் வெட்டப்பட்டு பின் மீண்டும் வளர்ந்தது ஏன்?

23. பழம் நீ அப்பா!

24. இடும்பாசுரன் காவடியாகத் தூக்கி வந்த மலைகள்!

25. மொக்கணீசுரர் என்ற திருநாமம் சிவனுக்கு ஏன் உண்டாயிற்று?

26. இறந்த யானை எழுந்த கதை!

27. சிதம்பரம் கோவிலுக்குப் பொன் வேய்ந்தது எப்படி?

28. இளங்கோவடிகள் சொல்லி அருளிய வேலனின் தலம் எது?

29. சித்தன் வாழ்வைப் புகழ்ந்து பாடிய ஔவை!

30. வயோதிகன் குமரன் ஆன விந்தைச் சம்பவம்!

31. கற்பணிக் கோவிலும் எண்கோணமான குளமும் அமைத்த கட்டி முதலி!

32. மலையைக் குடைந்து அரங்கநாதன் ஆலயம் அமைத்த அதியன்!

பாடல் முதல் குறிப்பும், பாடல் எண்ணும், வரலாறும்

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

தமிழகத்தின் தலை சிறந்த மண்டலங்களுள் ஒன்று கொங்கு மண்டலம்.

தங்கம் நிகர் கொங்குமண்டலத்தின் புகழ் பல நூறு வரலாறுகளைக் கொண்டது.

அவற்றில் அருமையான நூறு வரலாறுகளைத் தொகுத்தார் கார்மேகக் கவிஞர் என்னும் பெரும் புலவர்.

கொங்குமண்டலத்தில் குறும்பு நாட்டில் விஜயமங்கலம் என்னும் ஊரில் ஸ்ரீ வத்ஸ கோத்திரத்தில் ஔபாக்கிய சூத்திரம் விருத்தானிய யோகசாகை காசிபப் பிரவரணம் ஜைன பிராமண குலத்தில் பத்மநாப ஐயர் என்பாருக்கு இவர் மகனாகப் பிறந்தார். மேகம் பொழிவது போல் கவிதை மழை பொழிவதால் இவர் கார்மேகக் கவிஞர் என்று அழைக்கப்பட்டார். இவரது வரலாறு சிறப்பான ஒன்று. இவர் இயற்றிய அரும் நூலே கொங்குமண்டல சதகம்.

கொங்குமண்டல சதகம் என்னும் நூறு பாக்கள் அடங்கிய நூலில் கொங்குமண்டலத்தின் பெருமை அனைத்தும் அடக்கிய இவரது புலமை வியக்க வைக்கும் ஒன்று. கொங்குமண்டலம் பற்றி அறிய விரும்புவோரும் தமிழகத்தின் தலையாய வளர்ச்சியையும் பண்பாட்டையும் அறிய விரும்புவோரும் தமிழ்ச் சுவையைச் சுவைக்க விரும்புவோரும் படிக்க வேண்டிய அரிய நூல் இது.

இதில் கூறும் வரலாறுகளைக் கட்டுரைகளாகத் தொகுத்தேன்.

இந்தக் கட்டுரைகள் www.tamilandvedas.com-ல் அவ்வப்பொழுது வெளியிடப்பட்டு வந்தன.

இந்த வரலாறுகளில் 32 வரலாறுகள் முதல் பாகமாக இப்போது வெளியிடப் படுகிறது.

இதைத் தொடராக வெளியிட்ட லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி.

இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மீது ஆர்வம் கொண்ட அனைத்து மக்களும் இதைப் படித்து உத்வேகம் பெற்றுத் தமிழைப் போற்றி வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இதைத் தமிழ் அன்பர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். அனைவருக்கும் எனது நன்றி.

பங்களூர்
10-3-2022

ச.நாகராஜன்

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

கணவனுக்காகப் போராடிய தமயந்தி, சாவித்திரி (Post No.11,211)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,211

Date uploaded in London – 21 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்’ ,’கணவனே கண்கண்ட தெய்வம்’ , ‘அடுத்த பிறவியிலும் நீயே கணவன்’ என்று சங்கத் தமிழ் நூல்களிலும் சம்ஸ்க்ருத நூல்களிலும் மீண்டும் மீண்டும் வரும் கருத்துக்களை 3, 4 கட்டுரைகளில் எழுதிவிட்டேன் (கீழே இணைப்புகள் உள்ளன)

கணவர்களுக்காக தமயந்தியும் சாவித்ரிரியும் எப்படிப் புலம்பினார்கள் என்பது மஹாபாரதத்தில் உள்ளது

எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.

நள-தமயந்தி காதல் கதை மிகவும் பிரசித்தமானது  ஆயினும் நளன் , தமயந்தியைக் காட்டில் தவிக்கவிட்டுப் போய்விடுகிறான். அப்போது அவள் கதறிய கதறலை வியாசர் நமக்கு அப்படியே கண்முன் கொண்டுவருகிறார்.

அதே போல சத்யவான்- சாவித்திரி கதையையும் அறியாத இந்துப் பெண்கள் இருக்க முடியாது. சத்தியவானின் உயிரை, விதிப்படி யமன் பறித்துச் சென்றபோதிலும், தன்னுடைய பேச்சுத் திறமையாலும், பதிவிரதா குணத்தாலும் மீட்டு வருகிறாள் .

இரண்டு கதைகளையும் சற்று விரிவாகக் காண்போம்.

இதோ காட்டில் தனித்து விடப்பட்ட தமயந்தியின் புலம்பல்

ஹா நாத ஹா மஹாராஜ ஹா ஸ்வாமின் . கிம் ஜஹாமி மாம்

ஹா ஹதாஸ்மி விநஷ்டாஸ்மி பீதாஸ்மி விஜனே வனே

நனு  நாம மஹாராஜ  தர்மக்ஞஹ ஸத்ய வாகஸி

கதமுக்த்வா ததா  ஸத்யம் ஸுப்தாமுத் ச்ருஜ்ய  மாம் கதஹ

பர்யாப்தஹ  பரிஹாஸோ அயமேதாவான் புருஷஷர்ப 

பீதாஹமதி துர்கர்ஷ  தர்சயாத்மான மீஸ்வர

த்ருஸ்யஸே த்ருஸ்யஸே ராஜன்னேஷ த்ருஷ்டாஸி நைஷத

ஆவார்ய குல்மைராத்மானம்  கிம் மாம் ந ப்ரதிபாஷஸே

ந்ரும்ஸ பத ராஜேந்த்ர யன்மாமேவங்கதாமிஹ

விலபந்தீம் ஸமாகம்ய  நாசவாஸயஸி  பார்த்திவ

ந சோசா ம்யஹமாத்மானம் ந சான்யதபி கிஞ்சன

கதம் து பவிதாஸ்யேக  இதி த்வாம் ந்ருப ரோதிமி

கதம் நு ராஜம்ஸ் தூஷிதஹ  க்ஷு திதஹ ஸ்ரம கர்ஷிதஹ

ஸாயாஹ்னே வ்ருக்ஷ மூலேஷு மாம பச்யன் பவிஷ்யஸி

வன பர்வம் , மஹாபாரதம்

பொருள்

“ஆ, என் தெய்வமே ! ஆ என் அரசனே! ஆ என் கணவா ! ஏன் என்னைக் கைவிட்டீர்கள்? நான் செத்தேன் .என் முடிவு வந்துவிட்டது; இந்தத் தனிக்காட்டில்  பயந்து நடுங்குகிறேன். மஹாராஜனே  எனக்கு நல்லவராகவும் விசுவாசமாகவும் இருந்தீரே ! இப்படித் தூங்கும்போது என்னைத் தவிக்கவிட்டு ஓடுவது நியாயமா? ஒருவேளை தமாஷுக்காக இப்படிச் செய்தாலும் இவ்வளவு நேரம் தவிக்கவிடலாமா ?

ஆண் சிங்கமே ! எனக்குப் பயமாக இருக்கிறது எவராலும் வெல்லமுடியாத வீரனே! உங்கள் முகத்தைக் காட்டுங்கள் . அரசனே, என் தெய்வமே ! இதோ நான் கண்டுபிடித்துவிட்டேன், கண்டுபிடித்துவிட்டேன், புதருக்குப் பின்னே ஒளிந்து இருப்பதைப் பார்த்துவிட்டேன்; ஏன் என்னிடம் பேசவில்லை ? என்ன கொடுமை! பயந்துகொண்டும் கதறிக்கொண்டும் இருக்கும் எனக்கு ஆறுதல் சொல்ல வரமாட்டீர்களா ? எனக்காக நான் துக்கப்படவில்லை; வேறு எவருக்காகவும் இல்லை. நீங்கள் தனிமையில் என்ன  பாடு படுவீர்களோ என்று அஞ்சுகிறேன் . நான் இல்லாதபடி ஒரு மரத்தின் கீழ் பசியுடனும், தாகத்துடனும் , களைப்புடனும் எப்படி காலம் தள்ளுவீர்கள், அரசே?”

XXX

திடீரென்று விஷயம் தெரிந்த ஒருவர் நடுக்காட்டில் மறைந்தவுடன் முதலில் பயம் வருகிறது. பின்னர் ஒருவேளை இது ஜோக் Joke – ஆக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. பின்னர் அப்படி இராது  என்று பயம் பற்றுகிறது. இறுதியில் அன்புள்ள மனைவிக்கு, எந்தத் தாய்க்கும் உள்ள பாசம் பீறிட்டெழுகிறது. நான் எப்படி வேண்டுமானாலும் சாவேன். நீங்கள் எப்படி பசியால், தாகத்தால் தவிப்பீர்களோ என்று எண்ணி அழுகிறேன்  என்கிறாள் தமயந்தி.

வியாசர்  ஒரு பெரிய PSYCHOLOGIST சைக்காலஜிஸ்ட். உள்ள இயல்/ மன இயல் நிபுணர். நடுக்காட்டில் திடீரென்று தொலைந்துபோன ஒருவரின் உணர்ச்சிகளை அற்புதமாக வடித்ததோடு பெண்ணுக்கே உள்ள உயரிய குணங்களையும் படம்பிடித்துக் காட்டிவிட்டார்.

இதே மஹாபாரதத்தில் நளோபாக்யானம் போல விரிவாக இல்லாவிடினும் ஸாவித்ரீ உபாக்யானமும் நமக்கு ஒரு  நல்ல காட்சியைத் தருகிறது மஹாபாரத்திலேயே ஸாவித்ரீ கதை மிகவும் பழையது என்று வியாஸர் சொல்லுவதால் அவருக்கும் முந்தைய காலக்  கதை என்பது புலப்படுகிறது. இன்றும் இந்து மதப் பெண்கள் ஸாவித்ரீ விரதம் அனுஷ்டிப்பதைக் காண்கிறோம்.

ஸாவித்ரீ விரதம் கடைப்பிடிப்போர் சொல்லும் ஸ்லோகத்தில் அவளை, கன்யா தேஜஸ்வினீ , தேவ கன்யா, ஜ்வலந்தீமிவ தேஜஸா , பதிவ்ரதா , த்யானயோக பராயணா என்று போற்றுவர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் ‘ஒளி மயமாகப் பிரகாசிப்பவள் , பத்தினி’

.

மத்ர தேசத்தின் அரசன் அஸ்வபதி. அவன் மனைவி பெயர் மாளவிகா. புத்திரப் பேறு இல்லாமல் நீண்ட காலம் தவித்த அவர்களுக்கு சவிதா என்னும் சூரிய தேவனை வழிபடும்படி நாரதர் உபதேசித்தார். பெண் குழந்தை பிறந்தவுடன் சூரியனைப் போற்றும் வகையில் ஸாவித்ரீ என்று பெயர் சூட்டினார். பேரழகியாக  வளர்ந்த ஸாவித்ரீயிடம் உனக்குப் பிடித்த இளைஞனை நீயே தேர்ந்தெடு என்று சொன்னார் . ஒரு முறை அவள் காட்டுக்குச் சென்றபோது சாளுவ தேச இளவரசன் சத்தியவான் என்பவன், அவனுடைய கண் தெரியாத, வயதான தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்வதைக் கண்டு அவனிடம் மனதை பறிகொடுத்தாள் . ஆனால் நாரதர் மீண்டும் தோன்றி  எச்சரிக்கை விடுக்கிறார். சத்தியவான்  ஜாதகப்படி அவன் ஒரே வருடம்தான் உயிர்வாழ்வான் என்கிறார். ஸாவித்ரீயின் மனதை மாற்ற தாய் தந்தையர் செய்த முயற்சி பலிக்கவில்லை. அப்போது அவள் சொல்கிறாள் கல்லானாலும் கணவன், புல்லானாலும் அவனே என் புருஷன் என்று .

இதோ அந்த மஹாபாரத ஸ்லோகம்

தீர்காயுரதவால்பாயுஹு  சகுணோ நிர்குணோபி வா

ஸக்ருத் துவ்ருத்தோ மயாபர்த்தா ந த்விதீயம் வ்ருணோ அம்யஹம்

பொருள்

“அவருக்கு குறைவான ஆயுளோ, அல்லது நீண்ட ஆயுளோ, அவர் நல்ல குணம் உடையவரோ  கெட்ட குணங்கள் உடையவரோ, ஒரு முறை கணவன் என்று நான் தேர்ந்தெடுத்துவிட்டால் , வேறு எவரையும் நான் நாடமாட்டேன்” .

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட இந்த சக்திமிகு வரிகள்தான் இன்றும் பெண்களை ஸாவித்ரீ விரதம் இருக்கச் செய்கிறது!

பின்னர் தன்னுடைய திறமை மிகு பேச்சினாலும் தவத்தினாலும் யமனையே ஸாவித்ரீ வெல்லுவதால், பெண்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஸாவித்ரீ திகழ்கிறாள் .

கணவன் தெய்வம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

· 

13 Mar 2017 — Pictures are taken from various sources; thanks. contact; swami_48@yahoo.com. கணவனே கண்கண்ட தெய்வம்; சாமியைக் …

கணவனே கண்கண்ட | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › க…

· 

13 Apr 2016 — (for old articles go to tamilandvedas.com OR … கணவனே கண்கண்ட தெய்வம்; உறவுகள் அல்ல.

விவாதம் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › வ…

11 Feb 2020 — … ‘கல்லானாலும் கணவன்புல்லானாலும் புருஷன்‘ என்று படிக்கிறோம்.

–சுபம்—

Tags- தமயந்தி, சாவித்திரி, புலம்பல், விரதம், பெண்கள் குணம், கல்லானாலும், கணவன், புருஷன்

விண்வெளி மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 8 (Post No.11,210)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,210

Date uploaded in London – –    21 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 8

ச.நாகராஜன்

  விண்வெளி பற்றிய படங்களின் தொகுப்பு தொடர்கிறது. மேலும் சில படங்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்:

லாக் அவுட் 2011இல் வெளியான படம் இது. அதிகமான பாதுகாப்புடன் உள்ள விண்வெளிச் சிறைச்சாலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் இது. இதற்கான சரியான தலைப்பு ‘எஸ்கேப் ஃப்ரம் லியோ” என்று இருந்திருக்க வேண்டும். ஜனாதிபதியின் மகள் மனிதாபிமானத்தின் அடைப்படையில் உண்மை அறியும் ஒரு பணியை விண்வெளியில் உள்ள நிலையத்திற்குச் சென்று மேற்கொள்கிறாள். ஆனால் அது தவறான திசையில் போகிறது. அவளை ஒரு ஹீரோ மீட்டுக் கொண்டு வரும் கதை இது!

லவ் : 2011இல் வெளியான படம் இது. ஐ எஸ் எஸ் படத்தில் வந்து விடுகிறது. ஒரு விண்வெளி வீரர் அவர்களிடம் சிக்கி விடுகிறார். மனித நேசம் தேவையாகிறது. அஸ்ட்ரானெட் : தி லாஸ்ட் புஷ் என்ற படம் போல அமைந்திருக்கும் இது. விண்வெளியில் எடையற்ற தன்மை இருக்கும் அல்லவா? அதைப் பற்றியெல்லாம் படத்தை எடுத்தவர்கள் கவலைப்படவில்லை. அதை அப்படியே காட்டவும் இல்லை. ஆனால் . ஐ எஸ் எஸ் பற்றிய பகுதி நன்றாக சித்தரிக்கப்படுகிறது.

க்வான் க்ஜு ரி லியான் (Quan Qiu Re Lian – விண்வெளிக் காதல்) : இது 2011இல் வெளி வந்தது. காதலும் நகைச்சுவையும் கலந்த சீனப்படம் இது. விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு விவாக ரத்து ஆன ஜோடி சந்திரனுக்குப் பயணமாகச் செல்கிறது. அங்கு ஒரு சிவப்புக் கொடியை நாட்டுகிறது. காதல் ஜெயிக்கிறதா? ஓ! விண்வெளிப் படம் என்றாலே பிடிக்காது என்று இருக்கும் பெண்மணிகளைக் கவர்ந்திழுக்க இந்த விண்வெளிக் கதை தயார் செய்யப்பட்டுள்ளது. ஓகே என்று சொல்லும்படியான படமாக ஆனது. மாண்டரின் மொழி பேசும் பெண்மணி அவள். இனிமையான உள்ளத்தைத் தொடும் சித்திரம் இது!

அபல்லோ 18 : 2011இல் வெளியான படம் இது. சந்திரனில் பல விசித்திரமான செயல்கள் நிகழ்வதை அங்கு செல்லும் அபல்லோ மிஷன் கண்டு பிடிக்கிறது. ஏன் அங்கு செல்வோர் திரும்புவதில்லை என்பதைச் சொல்கிறது.

அயர்ன் ஸ்கை : 2012 இல் வெளி வந்த படம் இது. இரண்டாம் உலகப் போரின் முடிவில் பூமியிலிருந்து தப்பிய நாஜிகள் சந்திரனுக்குச் சென்று பூமியின் மீது படையெடுக்க ஒரு சூப்பரான ஆயுதத்தை உருவாக்குகின்றனர். படம் பூமியில் உள்ள நாடுகள், நாஜிக்களால் சேமிக்கப்பட்டுள்ள ஹீலியம் -3 -க்காக சண்டையிடுவதைக் காட்டி முடிகிறது.

ஜெனிஸில் 7 : ஃபர்ஸ்ட் மிஷன் : 2012இல் வெளியான படம் இது. விண்வெளியை மையமாகக் கொண்ட கிறிஸ்தவப் படம் இது. இளம் சாகஸவீரர்கள் சூரிய மண்டலத்தை ஆராயப் புறப்படுகின்றனர்.  சில மாதிரிகளை சேகரிப்பதற்காகச் சந்திரனுக்குச் செல்கின்றனர்.  மதமாற்றம், கொஞ்சம் விஞ்ஞான உண்மைகள் என்ற அடிப்படையில் செல்கிறது படம்.

எலிஸியம் : 2013இல் வெளியான படம் இது. அதி நவீன முதலாளித்துவ மனப்பான்மை கொண்ட சிலர் விண்வெளிக்குச் சென்று அதிநவீன பூங்காக்கள், தோட்டங்கள், சுத்தமான காற்று ஆகியவற்றைத் தாம் மட்டுமே அனுபவிக்கத் திட்டம் இடுகின்றனர். இது எப்படி மாற்ற முனையப்படுகிறது என்பதைச் சித்தரிக்கும் படம் இது.

ஸ்பேஸ் வாரியர்ஸ் : 2013இல் வெளியான படம் இது. நவீன கால ஸ்பேஸ் முகாமைச் சித்தரிக்கிறது இது. ஒரு சிக்கலான நிலை உருவாகவே மாணவர்கள் விண்வெளி செல்கின்றனர். இளம் தலைமுறையினரை, விண்வெளி ஆய்விற்கு உத்வேகம் ஊட்டுவதை நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது.

ஸ்ட்ராண்டட் : 2013இல் வெளியான படம் இது. விண்கற்கள் சந்திர தளத்தில் பொழிகிறது. அதை ஆராயப் புறப்படுகின்றனர் ஆய்வாளர்கள். அதற்கான காரணம் ஒன்று உண்டு. பான்ஸ்பெர்மியா எனப்படும் ‘இசைவான சூழ்நிலையில் பெருக்கம் அடையத்தக்க எண்ணற்ற நுண்மங்கள் வளிமண்டலத்தில் நிறைந்துள்ளன’ என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் கதை செல்கிறது!

க்ராவிடி : 2013இல் வெளியான படம் இது டிவிடியில் வெளியான படம் இது. விண்வெளி பற்றிய இதை ஏராளமானோர் பார்த்தனர். ஒரு விண்வெளி வீரர் விண்கல ஓடுபாதையில்  விண்கலம் ஒன்று சோதனை செய்யப்படும் போது அபாயகரமாகச் சிக்கிக் கொள்கிறார். ஷட்டிலே கட்டுப்பாடை இழந்து சிதைகிறது. இதை இந்தப் படம் சித்தரிக்கிறது.

இதுவரை 87 சந்திரனைப் பற்றிய திரைப்படங்களின் விவரத்தை மிகச் சுருக்கமாகப் பார்த்தோம்.

2013க்குப் பின்னர் ஏராளமான படங்கள் வெளி வந்துள்ளன.

அவற்றையும் தொகுத்துப் பார்த்தால் சந்திரன் திரைப்படத்துறையை கவர்ந்த விதத்தையும், திரைப்படத் துறை சந்திரனை மையமாக வைத்து மக்களைக் கவர்ந்த விதத்தையும் அறியலாம்.

நிலா நிலா ஓடி வா, நில்லாமல் ஓடி வா என்று சின்னக் குழந்தையிலிருந்தே  அம்புலி மாமா பாட்டு கேட்டு வளர்ந்தோம்!.

இளைஞர்களான போது காதல் பாடல்களில் காதல் சுவை நனி சொட்டச் சொட்ட நிலாப் பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தோம்!

மனித வாழ்க்கையில் மகிழ்ச்சி தரும் ஒரு அங்கமாகத் திகழ்வது சந்திரன்!

அதிசயம் அநேகம் தரும் சந்திரனைப் பற்றிய திரைப்படங்கள் எண்ணற்றவை இனியும் உருவாகும் என்பதில் ஐயமில்லை.

***

சந்திரனைப் பற்றிய திரைப்படங்கள் பற்றிய இந்தத் தொடர் நிறைவுறுகிறது.

புத்தக அறிமுகம் – 33

திரைப்படங்களில் ராமர் பாடல்கள்!

பொருளடக்கம்

என்னுரை

1. ராமன் எத்தனை ராமனடி!

2. வசந்தத்தில் ஓர் நாள்!

3. ஜனகனின் மகளை மணமகளாக ராமன் நினைத்திருந்தான்!

4. வீணைக் கொடியுடைய வேந்தனே!

5. ஜகம் புகழும் புண்ய கதை இராமனின் கதையே!

6. ஸ்ரீ ராம பக்த ஹனுமான்

7. ஸ்ரீ ராமராஜ்யம்!

8. ராதைக்கேற்ற கண்ணனோ சீதைக்கேற்ற ராமனோ!

9. யாருக்கு ஜானகி காத்திருந்தாள்!

10. ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்!

11. ராம நாமம் ஒரு வேதமே!

12. ஸ்ரீ ராமனின் ஸ்ரீ தேவியே அனுமான் உன்னைக் காக்க!

13. ராமன் கதை கேளுங்கள்!

14. லாலி! லாலி! ஆகாயவண்ணனுக்கு தியாகையர் நானே!

15. ராகவனே ரமணா ரகுநாதா!

16. வைதேகி ராமன் கை சேரும் காலம்!

17. ஒருவனுக்கு உலகில் ஒரு தாரம் எனும் உயர்வினைக் காட்டிய அவதாரம்!

முடிவுரை

இந்த நூலில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பற்றிய குறிப்புகள்

*

நூலில் என்னுரையாக இடம் பெற்றுள்ளது இது:

என்னுரை

‘திரைப்படப் பாடல்களோடு ஒரு பயணம்’ என்ற எனது நூலைத் தொடர்ந்து இந்த நூல் எழுதப்பட்டது.

காலம் காலமாக பாரத தேச மக்கள் வழிபட்டு வரும் ராமரைப் பற்றிய பல்லாயிரக்கணக்கான ஸ்லோகங்கள், துதிகள், நூல்கள் எழுந்துள்ளன.

இமயம் முதல் குமரி வரை மக்கள் ராமரின் மீது கொண்டுள்ள பக்தியையும் சீதையைத் தாயாக மதிக்கும் பாங்கையும் கண்டு அனைவரும் மகிழ்வது இயல்பே. பாரத தேசம் ஒரே பண்பாடு உடையது என்பதற்குச் சான்றாக இலங்குவது வேதம், புராணங்கள், இதிஹாஸம் ஆகியவையே.

நவீன தொழில்நுட்பத்தின் ஒரு கண்டுபிடிப்பாக அமைந்துள்ள திரைத்துறையிலும் இதன் தாக்கம் இருப்பது இயல்பே.

திரைப்பாடல்களில் ராமர், சீதை என்று சொல்லும்போதே அதற்கென இருக்கும் ஒரு பெரும் பாரம்பரியத்தையும் அந்தச் சொற்கள் கொண்டு வந்து தருகின்றன; ஆகவே பாடலாசிரியர் சொல்ல வேண்டியதை அர்த்தத்துடனும் ஆழத்துடனும் சொல்கிறார். மக்களிடையே நல்ல வரவேற்பையும் இந்தப் பாடல்கள் பெறுகின்றன; பெறும்.

இப்படிப்பட்ட பாடல்களைத் தொகுத்து பாடலாசிரியர், படம் உள்ளிட்ட முழு விவரங்களையும் கொடுக்க எண்ணம் உண்டாயிற்று, அதன் வெளிப்பாடே இந்த நூல்.

லண்டன் திரு ச. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகுக.

இந்த நூலை வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொடராக வெளிவந்த போது இதைப் படித்து உற்சாகத்துடன் அனைவரும் வரவேற்ற ஆர்வத்தின் அடிப்படையில் இந்த நூல் வெளியிடப்படுகிறது.

தமிழ் உலகம் இந்த நூலை வரவேற்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இந்தப் புவி வாழ் அனைத்து மக்களும் நலமுடன் வாழ ஸ்ரீ ராமரைப் பிரார்த்திக்கிறேன்.

நன்றி

பங்களூர்                                               ச.நாகராஜன்
13-1-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

நேபாளத்தில் ‘சதி’ – கணவனுடன் மனைவி எரிப்பு (Post No.11209)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,209

Date uploaded in London – 20 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

முதலில் லண்டனில் பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள கல்வெட்டில் கிடைக்கும் செய்தியைக் காண்போம். இது கி.பி. 725-ல் செதுக்கப்பட்டது. இதில் 5 ஸம்ஸ்க்ருதச் செய்யுட்கள் இருக்கின்றன. தேவானந்த  என்ற புலவர் கவிதைகளை யாத்துள்ளார். வகுலஜா என்ற சந்நியாசியைப் பற்றியும் இறைவன் சித்தேஸ்வரா பற்றியும் பாடும் கல்வெட்டு  இது.

சிவன் கோவில் கட்டப்பட்ட செய்தியைக் கொடுக்கும் மற்றொரு கல்வெட்டும் இருக்கிறது. ராஸ்தானிலுள்ள ஒரே ஊரிலிருந்து இரண்டு கல்வெட்டுகளையும் பிரிட்டிஷார் கொண்டுவந்துள்ளனர்.

XXX

தரணீதர இயற்றிய 112 செய்யுட்கள்

குஜராத்தில் வெராவல் பகுதியில் தரணீதர என்னும் ஸம்ஸ்க்ருதப் புலவர் இயற்றிய 76 செய்யுட்கள் அடங்கிய கல்வெட்டும் 46 செய்யுட்கள் அடங்கிய இன்னும் ஒரு கல்வெட்டும் இருக்கின்றன. குஜராத் சாளுக்கிய அரசன் சாரங்க தேவனின்  — கி.பி. 1287—  காலத்தியவை இவை.

தொந்த என்பவரின் மகன் தரணீதர. அவர் லகுலீச பாசுபத சந்நியாசி கண்டபர  பிருஹஸ்பதியின் மற்றும்  த்ரிபுராந்தகரின் திருப்பணிகளைப் புகழ்ந்து எழுதியுள்ளார். அந்த சைவ சந்நியாசி 5 லிங்கங்களையும் கோவிலகளையும் சோமநாத பாடனவில்  ஸ்தாபித்தார். காவிய  பாணியில் எழுத தரணீதர முயற்சித்த போதிலும் அதன் தரம் அவ்வளவுக்கு உயர்ச்சியாக இல்லை என்றும், இடையிடையே குஜராத்திச் சொற்கள் வருவதாகவும் அறிஞர்கள் செப்புவர்.

46 செய்யுட்கள் அடங்கிய இன்னும் ஒரு கல்வெட்டில் மேலும் சில சைவ அடியார்களின் பெயர்கள் கிடைக்கின்றன – த்ரைலோக்ய ராசி, தர்ம ராசி, கண்டபர ப்ருஹஸ்பதி.

துண்டு துண்டுகளாக இருக்கும் சோமநாத பட்டண  கல்வெட்டுகள் ‘தாராத்வம்ஸ’  என்னும் நூல் பற்றியும் குறிப்பிடுகிறது. கல்வெட்டுகள் குறிப்பிடும் ஏராளமான நூல்களும் ,கோவில்களும், இரத்தின, தங்க நகைகளும் இப்போது இல்லை என்பது ஆராயப்படவேண்டிய விஷயங்கள் ஆகும் .

xxxx

“சதி” (Sati) அல்லது உடன்கட்டை ஏறுதல் என்னும் வழக்கம் கல்வெட்டில் முதல் முதலில் கிடைப்பது நேபாள நாட்டில்தான். தமிழ் இலக்கியத்தில் பெருங் கோப்பெண்டு (மஹாதேவி) , அவருடைய கணவன் சிதைத்தீயில் பாய்ந்து எரிந்தது புறநானுற்றின் 246, 247 பாடல்களில் இருப்பதை அனைவரும் அறிவர். மேலும் பல பாடல்களில் கரிகாற் சோழன் மனைவிமார்கள், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மனைவியர், ஆய் அண்டிரன் மனைவியர் தீப்பாய்ந்து கருகி எரிந்ததையும் , அவர்களில் இருவர் அதை ‘குளிர்ந்த தாமரைக்குளம்’ என்று வருணித்ததையும் தமிழ் கூறு நல்லுகம் அறியும் . ஆயினும் இதற்குச் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர் நேபாளத்தில் இவ்வழக்கம் கல்வெட்டில் பதிந்து இருப்பது முக்கியத் தகவலை அளிக்கிறது. இது க்ஷத்ரியர்கள் இடையே இமயம் முதல் குமரி வரை இருந்த வழக்கம் என்பதும் 2000 ஆண்டுக்குப் பின்பற்றப்பட்ட வழக்கம் என்பதும் தெரிகிறது.

எகிப்து நாட்டில் மன்னர் இறந்தவுடன் அவருடைய மனைவியர், மந்திரிகள், ஊழியர்கள் முதலிய அனைவரும்  உயிருடன் புதைக்கப்பட்டதையும் உலகம் அறியும். புற  நானூற்றில் ஒரு பெண்மணி “ஏ , குயவா என்னையும் சேர்த்துப் புதைக்கும் அளவுக்கு பெரிய தாழி (பானை) செய்துகொடு” என்று வேண்டும் பாடல் இருப்பதைப்பார்க்கும்போது உயிருடன் எரிப்பது மட்டுமின்றி உயிருடன் புதைக்கும் வழக்கமும் தமிழர்களிடையே இருந்ததை அறிய முடிகிறது . இது எகிப்து அல்லது கிரேக்கத்தில் இருந்து பரவி இருக்கலாம் என்பது ஒரு சிலர் கருத்து .

1991ம் ஆண்டில் கே.வி.ராமகிருஷ்ணராவ் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில் தமிழர்களின் “சதி” மரணங்கள் குறித்து முழு விவரங்களும் உள்ளன.

இப்பொழுது கல்வெட்டு விஷயங்களை ஆராய்வோம்

நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கில் புகழ்பெற்ற சங்கு நாராயணர் கோவில் உள்ளது. அங்கிருந்த கல்வெட்டு பாதி  மணலில்  புதைந்து கிடந்தது. வெள்ளைக்காரர் ஆட்சிக்காலத்தில் எல்லா கல்வெட்டுகளையும் படி எடுத்தபோது அதையும் படி எடுக்க அனுமதி கோரினர். கோவிலுக்குள் வெள்ளைக்காரர்கள் நுழையக்கூடாது என்று பூஜாரிகள் தடுத்தனர். பின்னர் வரலாற்று ஆராய்ச்சிக்காக என்று மன்றாடியவுடன் அர்ச்சகர்களின் அனுமதி கிடைத்தது. அது கி.பி. அல்லது பொது ஆண்டு 464 ஆண்டு  செதுக்கப்பட்ட கல்வெட்டு. அதில் ராஜ்யதேவி என்பவர் சதி முறையில் இறக்க விரும்பியபோது அனைவரும் அவரைத் தடுக்கவே அவர் விதவைகளுக்கான விரத வாழ்க்கையைக் கடைப்பிடித்தார் என்ற செய்திகள் உள்ளன. அருந்ததிக்கு நிகரான கற்புக்கரசியான அவர் கோவில் ,குளம் வெட்டி, புனித வாழ்க்கை நடத்தியத்தைக் கல்வெட்டு காட்டுகிறது.

‘மனு ஸ்ம்ருதி’ முதலான தர்ம சாஸ்திரங்களோ, ரிக் வேதமோ இதை ஆதரிக்கவில்லை.ராமாயணத்தில் தசரதன் இறந்தபோது அவரது மனைவியர் சதி  செய்துகொள்ளவில்லை. மஹாபாரதத்தில் குந்தியும் சதி மரணத்தைக் கடைப்பிடிக்கவில்லை. பாண்டுவின் மனைவி மாத்ரி மட்டும் அப்படி இறந்தாள் ராமாயணத்தில் ராவணன் மனைவி மண்டோதரியும் அப்படி இறந்தாள் . நேபாள கல்வெட்டும் சங்கத் தமிழ் இலக்கியமும் நமக்குச் சொல்லும் செய்தி- இமயம் முதல் குமரி  வரை இந்த வழக்கம் இருந்தது என்பதாகும். ஆனால் இது மனைவியரின் விருப்பத்தின் பேரிலேயே நடந்தது . பிற்காலத்தில்  சில இடங்களில் பெண்களைக் கட்டாயப்படுத்திய செய்தியும் உள்ளன. குறிப்பாக வங்காளத்தில் அப்படி நடந்தது . அதை எதிர்த்து ராஜாராம் மோஹன்ராய் முதலியோர் போர்க்கொடி தூக்கினர்.

xxx

1160-ம் ஆண்டு கல்வெட்டு ஹிமாச்சல பிரதேச சம்பா பகுதியை ஆண்ட நாக பால  என்ற சிற்றரசரைப் பற்றியதாகும் . அவர் இறந்தபோது அவருடைய மனைவி பலஹா,  ‘சதி’ முறையில் இறக்க விரும்பினார்.அவரையும் பலரும் தடுக்கவே அவர் விரத வாழ்க்கை மேற்கொண்டு புனிதப் பணிகள் செய்ததை கமல லாஞ்சன என்ற புலவர்  அழகிய கவிதை வடிவில் கல்வெட்டில் எழுதி வைத்துள்ளார்.

–SUBHAM–

tags-கல்வெட்டு, சங்கு நாராயணர் கோவில் , தரணீதர, “சதி” , ராஜ்யதேவி, நேபாளத்தில்,

விண்வெளி மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 7 (Post.11208)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,208

Date uploaded in London – –    20 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 7

ச.நாகராஜன்

  விண்வெளி பற்றிய படங்களின் தொகுப்பு தொடர்கிறது. மேலும் சில படங்களைப் பற்றிய விவரங்களைப் பார்ப்போம்:

ஃப்ரீடம் (Freedom) : 2006 ஆம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம் இது. பூமியின் சுற்றுப்புறச் சூழ்நிலை மோசமாகவே மனித குலத்தின் எஞ்சிய பகுதி சந்திரனுக்குக் குடி பெயர்கிறது.பூமியைப் பற்றிய புது செய்தி ஒன்றை ஒரு இளைஞன் கண்டு பிடிக்கிறான். சந்திரனிலிருந்து தப்பி விடுதலை அடைய நினைக்கிறான். அவன் நினைத்ததை சாதித்தானா என்பதை படம் சித்தரிக்கிறது.

எர்த்ஸ்டார்ம் (Earthstorm): 2006ஆம் ஆண்டு வெளியானது இந்தப் படம். ஒரு பெரிய விண்பொருள் சந்திரனைத் தாக்கி அதை இரண்டாகப் பிளக்கப் பார்க்கிறது. இதனால் வெடித்துச் சிதறும் விண்வெளிக் குப்பை பூமியின் மீது குப்பை மழையாகப் பொழிந்து பூமியும் அழியும். சந்திரனைக் காக்க ஒரு பெரும் நிபுணரால் மட்டுமே முடியும். அவரது சாகஸ செயலால் சந்திரன் அழிவு தடுக்கப்படுகிறது.

அஸ்ட்ரானட் ஃபார்மர் (Astronaut Farmer) :-2006ஆம் ஆண்டு வெளியானது இந்தப் படம் இதில் டெக்ஸாஸை சேர்ந்த மிருகப் பண்ணை ஒன்றின் உரிமையாளர் ராக்கெட் ஒன்றைத் தன் பண்ணையில் அமைத்து தானே விண்வெளியில் ஏவி விண்வெளிச்சாலையில் சுழல விடும் தனது கனவை நிறைவேற்ற நினைக்கிறார். வேடிக்கையும், குடும்பப் பின்னணியும் இணைந்த விண்வெளிக் கதை இது.

போஸ்ட்கார்ட்ஸ் ஃப்ரம் தி ஃப்யூச்சர் (Postcards from the Future) :- 2007ஆம் ஆண்டு வெளியான படம் இது. சந்திரனிலிருந்து சனி கிரகத்திற்கு முதலாவது பயணம் மேற்கொள்ளப்படும் நாட்களில் நிகழும் கதை இது. சீன் ஈவர் என்பவர் ஒரு எலக்ட்ரிகல் எஞ்சினியர்.அவருக்கு எதிர்காலம் பற்றிய அனைத்தும்  வீடியோ “போஸ்ட்கார்ட்” காட்சிகளாகத் தெரிகிறது. சுவாரசியமான இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு வருடமும் மூன் டே (MOON DAY) எனப்படும் சந்திர தினக் கொண்டாட்டத்தில் டல்லாஸில் (ஓவ்வொரு ஆண்டும் ஜூலை 20 ஆம் தேதி சந்திர தினமாக டல்லாஸில் கொண்டாடப் படுகிறது) இந்தப் படம் காண்பிக்கப்படுகிறது.2007ஆம் ஆண்டு பன்னாட்டு விண்வெளி மேம்பாட்டு மாநாட்டிலும் இந்தப் படம் திரையிடப்படும் பெருமையைப் பெற்றது!

ராக்கெட் கேர்ள்ஸ் (Rocekt Girls) :- 2007-2008ஆம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட 12 எபிசோடு அனிமேஷன் தொலைக்காட்சித் தொடர் இது. ஒரு விண்வெளி ஏஜன்ஸி, சாடலைட் ரிப்பேர் கம்பெனி ஒன்றைத் தொடங்குகிறது. அவர்களுக்குத் தேவையோ குட்டி விண்வெளி வீர்ர்கள் தான். பள்ளியில் படிக்கும் மூன்று மாணவிகள் இதற்குப் பொருத்தமானவர்களாக ஆகின்றனர் அவர்களை சித்தரித்து எடுக்கப்பட்ட தொடர் இது.

மூன்லைட் மைல் (Moonlight Mile):- 2008ஆம் ஆண்டு வெளியான இன்னொரு அனிமேஷன் படம் இது. இரண்டு நண்பர்கள் பூமியின் மிக உயரமான மலை சிகரத்தில் ஏறி வெற்றி பெறுகின்றனர். அங்கிருந்து ஆகாயத்தைப் பார்த்தால் தெரிவது சந்திரன். அதையும் வென்று விட எண்ணம் கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து ஏற்படும் சாகஸ செயல்களை இந்தத் தொடர் சித்தரிக்கிறது.

ஃப்ளை மீ டு தி மூன் (Fly Me to the Moon) :- 2008ஆம் ஆண்டு வெளியான படம் இது. சிறுவர்களுக்கான படம். அபல்லோ 11 விண்கலம் சந்திரனை அடைந்ததைப் பின்னணியாகக் கொண்ட படம். குட்டிகளுக்கான சுட்டிக் கதை!

ஸ்பேஸ் பட்டீஸ் (Space Buddies) :- 2009ஆம் ஆண்டு வெளியான படம் இது. ஐந்து நாய்க் குட்டிகள் விண்வெளிப் பயணத்தை மேற்கொள்கின்றன. ஒரு விண்வெளி கம்பெனி ராக்கெட் டெஸ்டை நடத்தும் போது இந்த நாய்க்குட்டிகள் அங்கு சென்று சேர்கின்றன. சுட்டிகள் இதைப் பார்த்தால் கும்மாளம் போடுவார்கள். ஒரே வேடிக்கை தான்!

ல்யூனாபோலிஸ் (Lunapolis) :- காலப் பயணம் மேற்கொள்ளும் ஒரு ரகசிய மார்க்கத்தினரைப் பற்றிய கதை இது. சந்திரன், காலப் பயணம் போன்ற அனைத்தையும் இணைத்த அறிவியல் புனைகதை படம் இது.

இம்பாக்ட் (Impact):- 2009ஆம் ஆண்டு வெளியானது இந்தப் படம். ஒரு பெரும் விண் பொருள் சந்திரனைத் தாக்குகிறது. அதனால் சந்திரனின் ஓடு பாதை இன்னும் விரிவடைகிறது. இந்த மாற்றத்தால் சந்திரன் பூமியுடன் மோதும் அபாயம் உருவாகிறது.இதைத் தடுக்க பெரும் சாகஸப் பணி ஆற்றப்பட வேண்டும். சந்திரனை இழுத்து அதன் சரியான ஓடுபாதையில் செல்ல வைத்து பூமி ஒருவழியாகக் காக்கப்படுகிறது.

மூன் (Moon) :- 2009ஆம் ஆண்டு வெளியான படம் இது. மனிதன் என்பதன் அர்த்தம் என்ன என்பதை தத்துவ ரீதியாகப் பார்க்கும் கதை இது. சந்திரனில் தனி  மனிதன் ஒருவன் ஹீலியம்-3 ஐ வெட்டி எடுக்கிறான். அதைப் பூமிக்கு அனுப்பத் தயார். மூன்று வருடப் பயணத்திற்குப் பின் அவன் மீண்டும் பூமியை அடைகிறானா? விடை படத்தில்!

ஸ்பேஸ் டாக்ஸ் (Space Dogs):- 2010 ஆம் ஆண்டு வெளியான ஒரு அனிமேஷன் படம் இது. ரஷியாவிலிருந்து வெளியானது. ஸ்ட்ரெல்கா மற்றும் பெல்கா ஆகிய இரு நாய்களைப் பற்றிய கதை இது.குழந்தைகள் ரசிக்கும் வேடிக்கைச் சித்திரம்!

மிக நீண்ட சந்திர பயணத்தை விண்வெளிச்சாலையில் மேற்கொண்டு விட்டோம். இன்னும் மீதமிருக்கும் சில படங்களையும் பார்த்து விடலாமே!

                    -அடுத்த இதழில் இந்தத் தொடர் முடிகிறது

********************

புத்தக அறிமுகம் – 35

வெற்றிக் கலை உத்திகள்! 

பொருளடக்கம்

என்னுரை

அத்தியாயங்கள்

1. ஓஷோவின் அறிவுரை : புத்தகம் படியுங்கள்!

2. படேரெவ்ஸ்கியின் அறிவுரை: பயிற்சி செய்யுங்கள்!

3. லிங்கனின் அறிவுரை: மன்னித்து விடுங்கள்!

4. மஹாத்மா காந்திஜியின் அறிவுரை: நேரத்தைக் கடைப்பிடியுங்கள்!

5. ஆதிசங்கரரின் அருளுரை: நல்லோரைச் சேருங்கள்!

6. ஜீன் ராபர்ட்ஸனின் அறிவுரை: சிரித்து மகிழுங்கள்!

7. புத்தரின் அருளுரை: நிகழ்காலத்தில் வாழுங்கள்!

8. ஸ்வாமி விவேகானந்தரின் அருளுரை : சேவை புரியுங்கள்!

9. எட்வர்ட் டீ போனோவின் அறிவுரை: மாற்றி யோசியுங்கள்!

10. வெப்ஸ்டரின் அறிவுரை: மொழிப்புலமை பெறுங்கள்

11. ஸ்டீவ் ஜாப்ஸின் அறிவுரை: தொழில்நுட்பம் பழகுங்கள்!

12. ஷேக்ஸ்பியரின் அறிவுரை: இசை மூலம் இன்புறுங்கள்!

13. பகவான் ரமணரின் அருளுரை: மௌனம் பழகுங்கள்!

14.பதஞ்சலி முனிவரின் அருளுரை: யோகம் புரியுங்கள்!

15. எமர்ஸனின் அறிவுரை: இயற்கையை நேசியுங்கள்!

16. கோப்மேயரின் அறிவுரை: கேளுங்கள்!

17. அருளாளர்களின் அருளுரை: கீதை படியுங்கள்!

18. கபீரின் அருளுரை: குறை காணாதீர்கள்!

19. டேல் கார்னீகியின் அறிவுரை: பாராட்டத் தவறாதீர்கள்!

20. பெஞ்ஜமின் ஃபிராங்க்ளினின் அறிவுரை: குறிப்புப் புத்தகம் எழுதுங்கள்!

21. மஸாகி இமாயின் அறிவுரை: படிப்படியாகத் தொடர்ந்து முன்னேறுங்கள்!

22. அம்பலவாணர் அறிவுரை : இரகசியம் காத்துக் கொள்ளுங்கள்!

23. மஹரிஷி வசிஷ்டரின் அருளுரை:சமநிலையுடன் இருங்கள்!

24. வள்ளுவரின் அருளுரை : குடும்பத்துடன் குலவுங்கள்!

25. ஹெட்விக் லூயிஸின் அறிவுரை : ஆளுமை கவர்ச்சியை அதிகரியுங்கள்!

26. ஜீன் கால்மெண்டின் அறிவுரை: அதிக வயது ஒரு தடையில்லை என்பதை உணருங்கள்!

27. அற்புதங்கள் புரியுங்கள்; ஆனால் அவற்றை விளக்காதீர்கள்!

28. முடிவுரை

*

நூலில் நான் வழங்கிய என்னுரை இது :

என்னுரை

வெற்றிக் கலை என்ற எனது புத்தகத்திற்குக் கிடைத்த ஆதரவு என்னை இன்னும் அதிகமதிகம் வெற்றிக் கலை பற்றி எழுத உந்தியது.

முதல் பாகத்திற்கு எனது இனிய நண்பரும் பிரபல டைரக்டரும் பாக்யா இதழ் ஆசிரியருமான திரு கே. பாக்யராஜ் அவர்கள் முன்னுரை தந்து கௌரவித்தார்.

இன்றைய போட்டி மிகுந்த உலகில் நாளுக்கு நாள் தொழில் நுட்ப வளர்ச்சி பெருகிக் கொண்டே போகிறது.

பழைய கால உத்திகளுடன் நவீன உத்திகளும் வாழ்க்கையில் வெற்றி பெற இன்றியமையாத ஒன்றாக அமைகிறது.

ஏராளமான பெரியோர்களும், வெற்றியாளர்களும் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பல்வேறு விதமாக எடுத்துக் கூறியுள்ளனர். தாங்கள் வெற்றி பெற்ற வழியைக் காண்பித்துள்ளனர்.

இவற்றையெல்லாம் சிறிய கட்டுரைகளாக இணைய தள இதழான நிலாச்சாரல் இதழில் 2015ஆம் ஆண்டு எழுதி வந்தேன்.

வாசகர்களின் பேராதரவு கிடைத்தது.

வெற்றிக் கலையின் இரண்டாம் பாகமாக மிளிர்ந்த அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இப்போது வெற்றிக்கலை உத்திகள் என்ற நூலாக உங்கள் முன் மலர்கிறது.

இதை நிலாச்சாரல் இதழில் வெளியிட்ட திருமதி நிர்மலா ராஜு அவர்களுக்கு எனது நன்றியை இங்கு பதிவு செய்கிறேன்.

இந்த நூலின் முடிவுரையில் வெற்றிகரமான வாழ்க்கைக்கான வரையறை தரப்பட்டுள்ளது. அதை அடைவதே ஒவ்வொரு மனிதனின் இலட்சியமாக காலம் காலமாக இருந்து வந்துள்ளது. அதை அடைய இந்த உத்திகள் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தப் புத்தகத்தை வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக!

இதைத் தொடராக வந்த போது இதைப் படித்து ஆதரவு தந்த பல்லாயிரக் கணக்கான வாசகர்களுக்கும் எனது நன்றி உரித்தாகுக!

வெற்றி பெற விழையும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.

இந்த வெற்றிக்கலை உத்திகளைப் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

நன்றி

பெங்களூர்                                       ச.நாகராஜன்
5-3-2022

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**