கணவனுடன் எரிந்து கருகிய தமிழ்ப் பெண்கள் பட்டியல்-2 (Post No.11,206)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,206

Date uploaded in London – 19 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

புறநானூற்றின் பாடல்கள் 246, 247 பெருங்கோப்பெண்டு உடன்கட்டை ஏறி இறந்ததை வர்ணிப்பது போல மற்ற பாடல்கள் விரிவாகப் பேசுவதில்லை. காரணம். எல்லோருக்கும் தெரிந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் இது பரவி இருந்ததே .

புறம் பாடல் 256,  கணவனுடன் உயிருடன் புதைக்கப்படும் வழக்கத்தையும் காட்டுகிறது; பாடியவர் பெயரோ, பாடப்பட்டவர் பெயரோ இல்லை. கணவனை இழந்த ஒரு பெண் என்னையும் சேர்த்து தாழியில் புதைத்துவிடு என்று பாடுகிறாள்

கலம் செய் கோவே கலம் செய் கோவே

 அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய

சிறு வெண் பல்லி போலத் தன்னொடு

சுரம் பல வந்த எமக்கும் அருளி,

வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி

அகலிது ஆக  வனைமோ”

நனந்தலை  மூதூர்க் கலம் செய் கோவே

இதே போல ஒரு பாடல் புறம் 226-லும் இருப்பதை ஒப்பிட்டால் வளவனின் மனைவிதான் இதைப் பாடினாளோ என்று எண்ண வேண்டியுள்ளது.

XXX

குறைந்தது 7 மன்னர்களின் மனைவியர், கணவன் இறந்தவுடன் நாணத்தால் இறந்த செய்தியை புறப்பாடல் 78 பாடுகிறது . இதைப் பாடியவர் இடைக்குன்றுர் கிழார்.  இளம் வயதில் அரசுக்கட்டில் ஏறிய பாண்டியன் நெடுஞ்செழியனைத் தோற்கடிக்க வந்த அந்த மன்னர்கள் போரில் இறந்துபட்டனர்.அதன்பின்னர் மனைவியர் இறந்தனர் என்பது சதி முறையில்தான் நிகழ முடியும் .அவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்று கவி பாடவில்லை.

78. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்

தலையாலங்கானத்துச் செருவில் பாண்டியன் நெடுஞ்செழியனைப் போரெதிர்ந்த பகைவேந்தர் எழுவர் புறங்கொடுத் தோடுமாறு வென்றதனோடமையாத எங்கள் இறைவனான செழியன் அவர்தம் மகளிர் நாணமுற்று உயிர் விடுமாறு அவர்கட்குத் தொன்றுதொட்டுரிய ஊர்கட்கும் சென்று ஆங்கே அவ் வேந்தர்களைக் கொன்றழித்தான்” என்று பாடிக் காட்டுகின்றார்.


வணங்குதொடைப் பொலிந்த வலிகெழு நோன்றாள்
அணங்கருங் கடுந்திற லென்னை முணங்குநிமிர்ந்
தளைச்செறி யுழுவை யிரைக்குவந் தன்ன
மலைப்பரு மகல மதியார் சிலைத்தெழுந்து
விழுமியம் பெரியம் யாமே நம்மிற்         5
பொருநனு மிளையன் கொண்டியும் பெரிதென
எள்ளி வந்த வம்ப மள்ளர்
புல்லென் கண்ணர் புறத்திற் பெயர
ஈண்டவ ரடுதலு மொல்லா னாண்டவர்
மாணிழை மகளிர் நாணினர் கழியத்         10
தந்தை தம்மூ ராங்கண்
தெண்கிணை கறங்கச்சென் றாண்டட் டனனே.         (78)

https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0494_02.html

XXX

புறநானூறு பாடல் 280- பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார். கணவனை இழந்த ஒரு பெண் நான் உயிர் வாழ்தல் அரிதினும் அரிது. விதவை வாழ்க்கையை நான் வாழ மாட்டேன் என்கிறார். சிலர் விதவைகளாக வாழ்வதும் விருப்படுவோர் கணவனுடன் இறப்பதையும் இது காட்டுகிறது கெட்ட சகுனங்கள் பற்றியும் இப்பாடல் தெரிவிக்கிறது: விளக்கு அணைதல் , ஆந்தை குரல் கேட்டல், குறி சொல்லும் பெண்கள் நல்லதைச் சொல்லாமை, உறக்கம் வராமல் தவிப்பது ஆகியன கெட்ட நிமித்தங்கள் 

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

நடுநாள் வந்து தும்பியுந் துவைக்கும்

நெடுநகர் வரைப்பின் விளக்கு நில்லா

துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்

அஞ்சுவரு குராஅற் குரலுந் தூற்றும்

நென்னீ ரெறிந்து விரிச்சி யோர்க்கும்

செம்முது பெண்டின் சொல்லு நிரம்பா

துடிய பாண பாடுவல் விறலி

என்னா குவிர்கொ லளியிர் நுமக்கும்

இவணுறை வாழ்க்கையோ வரிதே யானும்

மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்

தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரியற்

சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும்

கழிகல மகளிர் போல

வழிநினைந் திருத்த லதனினு மரிதே.

XXX

குறுந்தொகையில் ஒரு குரங்கு கூட  , கணவன் இறந்ததைப் பொறுக்க மாட்டாது இறந்ததை பாடல் 69 காட்டுகிறது.

குட்டியை வேறு ஒருவர் பொறுப்பில் விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்டதைக் காண்கிறோம் 

குறுந்தொகை பாடல் 69

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்

கைம்மை உய்யாக் காமர் மந்தி

கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி

ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்

சாரல் நாட நடுநாள் 5

வாரல் வாழியோ வருந்துதும் யாமே.     

– கடுந்தோட் கரவீரனார்

கரிய கண்ணையும் தாவுதலையும் உடைய ஆண்குரங்கு இறந்தவுடன், கைம்மைத் துன்பத்தை விரும்பாத  பெண்குரங்கானது மரமேறுதல் முதலிய தம் தொழிலைக் கல்லாத வலிய குட்டியை, சுற்றத்தினிடத்து கையடையாக ஒப்படைத்துவிட்டு,  ஓங்கிய மலைப் பக்கத்தில் தாவி உயிரை மாய்த்துக் கொள்ளும் சாரலையுடைய நாட்டுக்குத் தலைவனே! நள்ளிரவில் வரவேண்டாம் ; அங்ஙனம் நீவரின் நினக்குத் தீங்குண்டா மென்றெண்ணி நாம் வருந்துவோம் நீ தீங்கின்றி வாழ்வாயாக!

XXX

சிலப்பதிகாரம்மணிமேகலையில் ‘சதி’

இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும் சோழ மன்னனும் போட்ட சண்டையில் இருவரும் உயிர்துறந்தனர். உடனே அவர்களுடைய மனைவியர் தீயில் பாய்ந்து இறந்தனர் என்பதை பழைய சிலப்பதிகார உரைகளில் காண்கிறோம்.அப்படிப்பட்ட தருணங்களில் மஹா சதிக்  கல் நிறுவுவார்கள். இதைப் பேச்சு வழக்கில் மாஸ்திக்கல் என்பர். தொல்காப்பியம் இதிலுள்ள ஆறு கட்டங்களை விரிவாகப் பேசுகிறது சேரன் செங்குட்டுவன் முதல் தடவை இமய மலைக்குச் சென்று நடு கல் கொண்டுவந்தான்.. இரண்டாம் முறை கண்ணகிக்கு நடு கல் கொண்டுவந்தான் .

மணிமேகலையில்  ஆதிரை சதி

மணிமேகலை என்னும் காப்பியத்தில் கப்பல் விபத்தில் “கணவன் சாதுவன் இறந்ததை” அறிந்தவுடன் ஆதிரை என்பவள் தீப்பாய்ந்து இறக்க முயற்சிப்பதைக் காணலாம். அத்தகைய பெண் எப்படி அதற்குத் தயார் செய்கிறாள் என்பதும் விரிவாகவே உள்ளது .

ஆனால் ஆதிரையின் கணவன் உண்மையில் இறக்காததால் ஆதிரை உடலை அக்கினி எரிக்கவில்லை . பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர் என்று கதை தொடர்ந்தாலும், புத்தமத நூல்களும் இதை ஆதரித்தன என்பதை உணரலாம். இதோ ஆதிரை பற்றிய பகுதி :-

இடை இருள் யாமத்து எறி திரைப் பெருங் கடல்

உடை கலப் பட்டு ஆங்கு ஒழிந்தோர் தம்முடன்  16-020

சாதுவன் தானும் சாவுற்றான்” என

ஆதிரை நல்லாள் ஆங்கு அது தான் கேட்டு

ஊரீரேயோ! ஒள் அழல் ஈமம்

தாரீரோ?” எனச் சாற்றினள் கழறி

சுடலைக் கானில் தொடு குழிப்படுத்து

முடலை விறகின் முளி எரி பொத்தி

மிக்க என் கணவன் வினைப் பயன் உய்ப்பப்

புக்குழிப் புகுவேன்” என்று அவள் புகுதலும்

படுத்து உடன் வைத்த பாயல் பள்ளியும்

உடுத்த கூறையும் ஒள் எரி உறா அது     16-030

ஆடிய சாந்தமும் அசைந்த கூந்தலில்

சூடிய மாலையும் தொல் நிறம் வழாது

விரை மலர்த் தாமரை ஒரு தனி இருந்த

திருவின் செய்யோள் போன்று இனிது இருப்பத்

“தீயும் கொல்லாத் தீவினையாட்டியேன்

யாது செய்கேன்?” என்று அவள் ஏங்கலும்

“ஆதிரை! கேள் உன் அரும் பெறல் கணவனை

ஊர் திரை கொண்டு ஆங்கு உய்ப்பப் போகி

நக்க சாரணர் நாகர் வாழ் மலைப்

பக்கம் சேர்ந்தனன் பல் யாண்டு இராஅன்   16-040

சந்திரதத்தன் எனும் ஓர் வாணிகன்

வங்கம் தன்னொடும் வந்தனன் தோன்றும்

நின் பெருந் துன்பம் ஒழிவாய் நீ” என

அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும்”

XXXX

தர்ம சாஸ்திரங்களிலோ, அர்த்த சாஸ்திரத்திலோ இதுபற்றிய குறிப்புகள் இல்லாததால் இது பொதுவாகப் பின்பற்றப்படவில்லை என்று தெரிகிறது.

கணவன் இறந்ததை அறிந்த உடனே கணவனுடன் தீப்பாய்ந்த ஒரு வகையினரையும், அதற்குப்பின்னர் தீ மூட்டி இறந்த ஒரு வகையினரையும் காண்கிறோம். இன்னும் சிலர், பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதற்காக கைம்மை நோன்புடன் உயிர் வாழ்ந்ததையும் பார்க்கிறோம். சதி என்பது கட்டாயம் ஆக்கப்படவில்லை .

–SUBHAM —

Tags- ஆதிரை, சதி , உடன்கட்டை ஏறுதல் , நெடுஞ்சேரலாதன் , தீப்பாய்தல்

விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 6

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,205

Date uploaded in London – –    19 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 6

ச.நாகராஜன்

 விண்வெளி பற்றி வெளிவந்துள்ள மேலும் சில திரைப்படங்களைப் பார்ப்போம்:

டீப் இம்பாக்ட் (Deep Impact):- 1998ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது. விண்வெளி பற்றிய திரைப்படங்களில் சிறந்த படங்களில் ஒன்றாக இன்று வரை போற்றப்பட்டு வரும் படம் இது. ஒரு பெரும் பாறை பூமியை நோக்கி மோதும் வகையில் வருகிறது. அதை விண்கலம் இடைமறித்துத் தடுக்கிறது.

இன் தி டெட் ஆஃப் ஸ்பேஸ் (In the Dead of Space):- 1999 ஆம் ஆண்டு வெளி வந்த இந்தப் படம் ரஷிய ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒன்று தீவிரவாதிகளின் தாக்குதல் முயற்சிக்கு இலக்காவதைச் சித்தரிக்கிறது.

ஆஸ்டின் பவர்ஸ்: தி ஸ்பை ஹூ ஷேக்ட் மி (Austin Powers: The Spy Who Shagged Me):- 1999 ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் வெளியான ஸ்பை திரைப்படங்களை கௌரவிக்கும் விதமாக எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் டாக்டர் ஈவில் (கயவன் ஒருவன்) விண்வெளி சுற்றுப்பாதையிலிருந்து சில சக்திகளைத் திருட வருகிறான். ஆனால் அறுபதுகளில் வெளியான ஸ்பை படங்களைப் போல இது அமையவில்லை.

ஃபோர்ட்ரெஸ் 2: ரீ-எண்ட்ரி (Fortress 2: Re-Entry) :- 2000ஆம் ஆண்டில் வெளியான படம் இது. 1992ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஃபோர்ட்ரெஸ் படத்தின் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டது. பூமியைச் சுற்றும் ஒரு விண்கலம் சிறையாகப் பயன்படுத்தப்பட்டு அங்கு கிரிமினல்கள் அடைத்து வைக்கப்படுகின்றனர். அந்த விண்கலச் சிறை பூமிக்கு மேலே 22300 மைல்கள் மேலே சுற்றுவதால் பூமிக்கு இணையாக அதே 24 மணி நேர சுழற்சியைக் கொண்டிருக்கிறது. அதனால் எப்போதும் பூமிக்கு மேலே ஒரே இடத்தில் நிலையாக இருப்பது போலச் சுழலும். (இதை ஜியோசிங்க்ரனஸ் கலம் என அறிவியல் கூறும்) இதிலிருந்து தப்புவது என்பது முடியவே முடியாது. ஆனால் கதாநாயகன் ஜான் விண்கலம் ஒன்றின் மூலமாகத் தப்பி பூமியை அடைகிறான்.இது தான் கதை.

ஸ்பேஸ் கௌபாய்ஸ் (Space Cowboys):- 2000ஆம் ஆண்டு வெளியான படம் இது.நான்கு விண்வெளிவீர்ர்கள் சோவியத் யூனியனின் கலத்தில் உள்ள அபாய ஆயுதங்களை செயலிழக்கச் செய்வதைச் சித்தரிக்கிறது.

சோலார் ஃபோர்ஸ் (Solar Force) :- 1995 ஆம் ஆண்டு வெளியான படம் இது. பூமியின் ஓஜோன் படலம் சீரழிந்து விடுகிறது ஸ்பேஸ் ஸ்டேஷனில் வசிக்கும் பூமி வாசிகள் சிலர் பூமியின் பசுமையைக் காக்க முயல்கின்றனர். இதைத் தடுக்க சுயநலமிகள் முயல அவர்களை வெற்றி கொண்டு பூமியைக் காப்பது தான் கதை.

2001: எ ஸ்பேஸ் ட்ராவெஸ்டி (A Space Travesty) :- 2000ஆம் ஆண்டு வெளியான படம் இது.அமெரிக்க ஜனாதிபதி வேகன் என்ற சந்திரனில் உள்ள தளத்திற்கு விஜயம் செய்ய தீயவர்கள் அவரைக் கடத்தி விடுகிறார்கள்.அவரைப் போலவே உள்ள க்ளோனை ஜனாதிபதியாக இருக்க வைக்கிறார்கள். மார்ஷல் டிக் டிக்ஸன் என்ற ஒரே ஒருவர் தான் அவரைக் காப்பாற்ற முடியும். அவரின் சாகஸம் மூலம் எல்லாம் சுபமாக முடிகிறது!

ப்ளாக் ஹொரைஸன் (Black Horizen):- ரஷிய விண்வெளி நிலையம் ஒன்றை மீட்கச் செல்லும் மீட்புக் குழு எதிர்கொள்ளும் சிக்கல்களைச் சித்தரிக்கும் இப்படம் 2001ஆம் ஆண்டு வெளி வந்தது.

தண்டர்பேண்ட்ஸ் (Thunderpants):- 2002ஆம் ஆண்டு வெளியான படம் இது. சின்னக் குழந்தைகள் விரும்பும் படம்.இளைஞன் ஒருவன் அளிக்கும் பரிசுகள் விண்வெளியில் ஒரு மீட்புப் பணியையே செய்ய வைப்பதை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது.

தி அட்வெஞ்சர்ஸ் ஆஃப் ப்ளூடோ நாஷ் (The Adventures of Pluto Nash):- 2002ஆம் ஆண்டு வெளியான படம் இது. பூமியில் உள்ள மதவாதிகளின் பிடியிலிருந்து தப்பி வெளியேறும் சிலர், சந்திரனை அடைந்து அங்கு குடி, கும்மாளம், சூதாட்டம், இதர “கெட்ட” காரியங்கள் அனைத்தையும் செய்வதைக் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் பட்ம் கடுமையான விமரிசனத்திற்கு உள்ளானது. பார்த்து ரசித்த ரசிகர்களும் ஏராளம் தான்!

தற்போதைய படங்கள்

விண்வெளியில் ஏராளமான விண்கலங்கள் இன்று செலுத்தப்படுகின்றன. அறிவியல் வெகுவாக முன்னேறி விட்டது. திரைப்படத் தொழில்நுட்பமோ மிகுந்த முன்னேற்றத்தை அடைந்து விட்டது. தற்போது வெளி வரும் படங்கள் காலத்திற்கு ஏற்றபடி அற்புத திரை ஓவியங்களாக வெளி வருகின்றன. மேலும் சில படங்கள் இதோ!

ப்ளானெடஸ் (Planetes) :- 2003ஆம் ஆண்டு அக்டோபரில் ஆரம்பித்து 26 எபிசோடுகளைக் கொண்ட ஜப்பானிய தொலைக்காட்சித் தொடர் இது. விண்வெளியில் ஏராளமான விண்கலக் குப்பைகள் சுழன்று கொண்டே இருக்கின்றன. இவற்றை விண்வெளியிலிருந்து நிபுணர் குழு ஒன்று அகற்றுகிறது. அவர்களது நிறுவனத்திற்கு போதுமான நிதி இல்லை என்பதால் எல்லாமே அரைகுறையாகவே அவர்களுக்குக் கிடைத்து வருகிறது. பாதி அளவே பணியாளர்கள், பாதி சாதனங்கள் எல்லாமே பாதி பாதி தான். ஆகவே இந்த டீமே அரைகுறை டீம் என்று அழைக்கப்படுகிறது அவர்கள் விண்வெளிச் சுற்றுப்பாதையிலும் சந்திரனிலும் செய்யும் சாகஸங்கள் இந்தத் தொடரில் சித்தரிக்கப்பட்டன. விண்வெளிக் குப்பையை அகற்றும் விதங்களைச் சுவைபடச் சொல்வதால் அனைவராலும் பாராட்டப்பட்டது.

ரேஸ் டு ஸ்பேஸ் (Race to Space) :- 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது. குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் நல்ல பண்புகளை வலியுறுத்திய படம். ஒரு ராக்கெட் விஞ்ஞானியின் மகன் ஒரு சிம்பன்ஸியுடன் நட்பு கொள்கிறான். இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தயாராகின்றனர். ஆனால் அவன் திடீரென்று சதி ஒன்றைக் கண்டுபிடிக்கிறான். தந்தையுடன் இணைந்து அபாயத்திலிருந்து மீள்வது தான் கதை.

டிசாஸ்டர்! (Disaster!) :- 2005ஆம் ஆண்டு வெளியான படம் இது. பேரிடர்களை வைத்து ஏராளமான ஹாலிவுட் படங்கள் வெளி வந்து விட்டன. இந்தப் படம் ஆர்மெகடானைப் பார்த்து எடுக்கப்பட்ட படம். எல்லா பேரிடர் படங்களில் உள்ள நல்ல காட்சிகளையும் அம்சங்களையும் துணுக்குகளாக்க் கோர்த்து எடுக்கப்பட்ட படம் என்றே சொல்லலாம். விண்ணில் உள்ள கிரகம் போன்ற பெரிய பொருள் ஒன்று பூமியை நோக்கி வருகிறது. அது மோதினால் நிச்சயம் மனித குலமே அழிந்து விடும். ஸ்பேஸ் நிறுவனம் ஒன்றுடன் அரசு ஒப்பந்தம் செய்து அதில் பணிபுரியும் எரிமலை பற்றிய நிபுணரான ஹாரி பாட்டம்ஸ் என்பவரை இந்த அபாயத்தை நீக்க அமர்த்துகிறது. அவர் தலைமையில் ஒரு குழு விண்வெளி சென்று விண்வெளிப் பொருள் மோதுவதைத் தடுத்து நிறுத்துகிறது.

******************** (தொடரும்)

புத்தக அறிமுகம் – 34

மாறி வரும் பெண்கள் உலகம்

பொருளடக்கம்

என்னுரை

1. மாறி வரும் டீன் ஏஜ் பெண்கள்!

2. ஏ டு இஸட் – உங்கள் கணவரை அலசுங்கள்!

3. பெண்களின் 64 கலைகள்!

4. அலங்காரம் செய்து கொண்டு அழகுக்கு மெருகூட்டலாமா?

5. என்ன விலை அழகே? சொன்ன விலைக்கு வாங்க வருவேன்!!

6. என்றும் இளமையோடு இருக்கலாமே!

7. பெண் சக்தி பெரும் சக்தியாக மாற புது வழி!

8. ஐந்து தளைகளை உடைத்தால் பெண்களும் சி.இ.ஓ. தான்!

9. பாரதி பாடிய மூன்று காதல் பாடல்!

10. ஆயிரம் மலர்களே மலருங்கள்! அன்னை கீதம் பாடுங்கள்!

11. ஸ – கோத்ர திருமணம் சரிதானா?

12. இசை என்னும் இன்ப மருந்து!

13. சிரித்து மகிழுங்கள்! சிறப்புடன் வாழுங்கள்!

14. சின்னச் சின்ன செயல்கள்!

15. குழந்தைகள் காட்டிய வழி!

16. நினைவாற்றலைக் கூட்டுவது எப்படி?

17. IQ வை அதிகப்படுத்துவது எப்படி?

18. குழந்தைகளின் அறிவுத்திறனைக் கூட்டுவது எப்படி?

19. சிறந்த மூளைத் திறனுக்கான பத்து பழக்க வழக்கங்கள்!

20. சண்டையைத் தீர்க்கும் திருப்பு வார்த்தைகள்!

21. உங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க புதிய வழிமுறைகள் – அவுட் ஆப் தி பாக்ஸ், செலக்டிவ் என்கோடிங் சிந்தனா முறைகள்!

22. அதிர்ஷ்டத்தை அழைப்பது எப்படி?

23. மேனகா காந்தி கூறும் அதிர்ச்சி தரும் உண்மைகள்!

24. பேசுவது மானம் இடை பேணுவது காமம்! விழித்தெழுவோம்!

25. ஏமாற்றுவதற்கென்றே அலைகிறார்கள், ஜாக்கிரதை!

26. வித்தியாசமான பெண்மணிகள்!

27. ஒரு அம்மாவும் மூன்று பெண்களும்!

*

நூலில் என்னுரையில் ஒரு பகுதி இது:

என்னுரை

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காண் என்று கும்மியடி

என்ற மஹாகவி பாரதியாரின் புதுமைக் கும்மியைப் படித்த போது இப்படி ஒரு பொற்காலம் விரைவில் வந்து விடுமா என்ற எண்ணம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அனைவருக்கும் இருந்தது. ஆனால் வியக்கத்தக்க விதத்தில் மஹாகவியின் தீர்க்க தரிசனம் இன்று உண்மையாகி இருப்பதைப் பார்க்கிறோம்.

எங்கும் பெண்கள்; எல்லாத் துறைகளிலும் பெண்கள்!, ஜனாதிபதியாக, பிரதம மந்திரியாக, முதன் மந்திரியாக, பாராளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினராக, விண்வெளியில் விண்கலத்தில் செல்லும் வீராங்கனையாக, பைலட்டாக, பேராசிரியையாக, விஞ்ஞானியாக, பத்திரிகை ஆசிரியராக, வக்கீலாக, நீதிபதியாக, விளையாட்டு வீராங்கனையாக, முதன்மை அதிகாரியாக எதிலும் எங்கும் பெண்கள் என்ற நிலையைப் பார்த்து இன்று பிரமிக்கிறோம்.

பெண் சக்தி பெரும் சக்தியாக ஆகி உலகை எப்படியெல்லாம் முன்னேற்றம் அடையச் செய்து வருகிறது என்பதையும் ஆச்சரியத்துடன் பார்க்கிறோம்.

பெண்ணுலக முன்னேற்றம் பற்றியும் பெண்கள் முன்னேற்றம் சார்ந்த கட்டுரைகளையும் மங்கையர் மலர், கோகுலம் கதிர், சினேகிதி ஆகிய பத்திரிக்கைகளில் எழுதி வந்தேன்.

இந்தப் பத்திரிக்கைகளில் ஆசிரியர்களாக இருப்பவர்கள் அனைவருமே மங்கையரே! கோகுலம் கதிரில் திருமதி கமலி ஸ்ரீ பால், சினேகிதியில் திருமதி மஞ்சுளா ரமேஷ் ஆகியோர் அளவற்ற ஊக்கத்துடன் மங்கையர் முன்னேற்றத்தில் அக்கறை செலுத்துவதோடு எனது கட்டுரைகளையும் தொடர்ந்து பிரசுரித்து வந்தனர்.

அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

வழக்கம் போல இந்த நூலையும் வெளியிட முன் வந்த Pustaka Digital Mediaவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் என் நன்றி உரித்தாகுக!

இந்த நூல் தரும் நல்ல கருத்துக்களினால் பெண்கள் அனைவரும் உத்வேகம் பெற்று பாரதத்தைப் பொன்னொளிர் பாரதமாக உயர்த்த இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

நன்றி!

பங்களூர்                                        ச. நாகராஜன்
13-1-2022
மின்னஞ்சல்: snagarajans@yahoo.com

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

கணவனுடன் எரிந்து கருகிய தமிழ்ப் பெண்கள் பட்டியல்-1 (Post No.11204)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,204

Date uploaded in London – 18 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

கணவன் இறந்தவுடன் அன்பின் காரணமாக அவனுடைய சிதைத் தீயில் புகுந்து உயிர் விடும் வழக்கம் “சதி” அல்லது “உடன்கட்டை ஏறுதல்” எனப்படும்

மனு ஸ்ம்ருதி இது பற்றி எதுவும் சொல்லாதது, வேத காலத்தில் இந்த வழக்கம் இல்லை என்பதைக் காட்டுகிறது. மேலும் ரிக் வேதத்திலுள்ள 1000 துதிகளில்  (10,000 மந்திரங்களில்) ஒரே ஒரு இடத்தில் சதி என்று ஊகிக்க ஒரே ஒரு குறிப்பு வருகிறது. அதுவும் சிதைத் தீயில் இருந்து வெளியே வா என்று சதிக்கு எதிராகவே உள்ளது. ராமாயண காலத்தில் இது இல்லை போலும். தசரதனின் மனைவியர் அவன் இறந்த போதும் தீப் பாயவில்லை. மஹாபாரதத்தில் பாண்டு இறந்த போது குந்தி தீப்பாயவில்லை. மாத்ரி மட்டுமே சதி முறையில் இறந்தாள் . ஆக இது கட்டாயம் இல்லை என்றே தோன்றுகிறது. ராமாயண காலத்தில் இலங்கையில் மட்டும் ‘சதி’ இருந்தது. மண்டோதரி, ராவணனுடன் உயிர் நீத்தாள்  .ஆனால் சங்க இலக்கியத்தில் இது அதிகமான இடங்களில் வருவது வியப்புக்குரியது. குறிப்பாக மன்னர்கள் இறந்தவுடன் மஹாராணிகள் சதி முறையில் கணவனுடன் தீயில் கருகி இறந்தனர்.

புறநானூற்றில் வரும் பூதப் பாண்டியன் பெருந்தேவி (பாடல் 246) மரணம் எல்லோரும் அறிந்ததே. அறிஞர்கள் தடுத்தும் அவள் தீப்பாய்ந்து இறந்தாள் . மஹா பாரதத்தில் புறாக்கள் உயிர்விட்டது போல, குறுந்தொகை என்னும் சங்க நூலில் குரங்குகள் ‘சதி’ செய்துகொண்டதை முன்னரே எழுதியுள்ளேன் (கீழேயுள்ள இணைப்புகளைக் காண்க)

இப்போது மேலும் சில ‘சதி’ மரணங்களைக் காண்போம்

கே.வி.ராமகிருஷ்ணராவ் 1991ம் ஆண்டு எழுதிய ஆங்கிலக்கட்டுரையில் உலகம் முழுதும் இவ்வழக்கம் இருந்ததையும் தமிழ் இலக்கியத்தில் இது பற்றி உள்ள விஷயங்களையும் விரிவாக எழுதியுள்ளார்

இந்த வழக்கம் எகிப்து முதலிய நாடுகளில் இருந்து உலகெங்கும் பரவியதாக ஆங்கிலேயர்கள் எழுதி வைத்துள்ளனர். சதி என்றால் நல்ல பெண் என்று பொருள்; அதாவது உத்தமி; கணவனிடத்தில் பேரன்பு கொண்டவள் .

கர்ம வினைக் கொள்கையிலும் மறு பிறப்பிலும் தமிழர்கள் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அவர்கள் அதி தீவிர இந்துக்கள் என்பதை புற  நானூற்றுப் பாடல்கள்  27, 214, 236, 240 பறை சாற்றுகின்றன .

வட இந்தியா போல தமிழ் மன்னர்கள் பலதார மணத்தைக் கைப்பிடித்தாலும், ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நல்லது என்பதை தமிழர்கள் உணர்ந்து இருந்தனர். புறம் 71, 73, 245 பாடல்களில் இக்கருத்தைக் காண்கிறோம்.

புறம் 62-ம் பாடல், சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதனும் , சோழன் வேற்பல் தடக்கைப் பெருவிரற் கிள்ளியும் சண்டை போட்டு இறந்த போது கழாத்தலையார் பாடியதாகும் . மன்னர்கள் இறந்து சொர்க்கத்துக்குப் போனார்கள். அவர்களுடைய மனைவியரும் மார்புகளைத் தழுவியபடி இறந்தனர் என்றும் அவர்கள் கீரை உணவையும் குளிர்ந்த நீரில் நீராடும் விதவை வாழ்க்கையை விரும்பவில்லை என்றும் அவர்கள் தேவர் உலகத்துக்கு விருந்தினர் ஆயினர் என்றும் காண்கிறோம்.

………………………………………………பெண்டிரும்

பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார்

மார்பகம் பொருந்தி ஆங்கமைந்தனரே 

………….

அரும்பெறல் உலகம் நிறைய

விருந்து பெற்ற யாரால் பொலிக நும் புகழே (புறம் 62)

போரில் இறந்தால் சொர்க்கத்துக்கு நேரடியாக செல்லலாம்  என்று கிருஷ்ண பரமாத்மாவும் பகவத் கீதை 2-32, 2-37 ஸ்லோகங்களில் தெளிவாகவே சொல்கிறார்.

புறம் பாடல் 240 ஆய் அண்டிரன் இறந்தது பற்றியும் அவனுடைய மனைவியர் அனைவரும் அவனுடன் இறந்தது பற்றியும் கூறுகிறது . அந்தக் காலத்தில் ‘சதி’ என்பதை அனைவரும் அறிந்து இருந்ததால் குறிப்பாக தீப்பாய்ந்தாள் , தீக்குளித்தாள் என்ற சொற்கள் காணப்படவில்லை. ஆனால் போர்க்களத்திற்கு மனைவியர் செல்வதில்லை என்பதால் தகனத்தின்போது அவர்கள் சென்று தீப்பாய்ந்தது வெள்ளிடை மலை .

பாடுநர்க்கு அருகா ஆய் அண்டிரன்

கோடு ஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு

காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப

மேலோர் உலகம் எய்தினன்

இதைப்படியவர் குட்டுவன் கீரனார். ஆய் அண்டிரன் இறந்தவுடன் ஈமத் தீயில் அவனது உரிமை மகளிரையும் இட்டு எரித்ததை நேரில் கண்டு பாடுகிறார்.

அவர்கள் மேல் உலகம் சென்றவுடன் இந்திரா லோக ‘ஆர்க்கெஸ்ட்ரா’ ORCHESTRA  இசை பாடி வரவேற்றதை உறையூர் ஏணிச் சேரி முடமோசியார் அடுத்த பாடலில் நமக்குத் தெரிவிக்கிறார்.

திண் தேர்  இரவலர்க்கு ஈத்த தண் தார்

அண்டிரன் வரூ  உம் என்ன ஒண் தொடி

வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்

போர்ப்புறு  முரசும் கறங்க

ஆர்ப்பு எழுந்தன்றால் விசும்பினோனே

–புறம் 241.

புறம் 246, 247 பாடல்களில் பெருங் கோப்பெண்டு , பூதப் பாண்டியன் இறந்தவுடன் பலர் தடுத்தும் தீயில் புகுந்ததோடு அந்த சிதைத்தீ தாமரைக்குளம் போன்ற குளிர்ச்சி உடையது என்றும் வருணிக்கிறார்.

இந்தப் பாடல்களை பெருங் கோப்பெண்டும், மதுரைப் பேராலவாயாரும் பாடியுள்ளனர்  பெருங்கோப்பெண்டு காட்டில் உள்ள காளி கோயிலின் முன் மூட்டப்பட்ட தீயை வ  ம் வந்து தீப்புகுந்து உயிர்விட்டாள்.

XXXX

PREVIOUS POSTS

பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்? (Post No.3210)

பாண்டிய மஹாராணி தீயில் குதித்ததற்கு …

https://tamilandvedas.com › பாண…

· Translate this page

2 Oct 2016 — … Post No.3210 Pictures are taken from various sources; thanks. … குதித்ததற்கு தொல்காப்பியமே காரணம்?

You visited this page on 18/08/22

சங்கத் தமிழ் நூல்களில் “சதி”

சங்கத் தமிழ் நூல்களில் “சதி” | Tamil and Vedas

https://tamilandvedas.com › சங்க…

· Translate this page

15 Jun 2014 — Suttee in Bali in 1597 (Wikipedia picture) சங்கத் தமிழ் நூல்களில் “சதி” (உடன்கட்டை ஏறுதல்) …

“Aryan SATI” in Sangam Tamil Literature!

“Aryan SATI” in Sangam Tamil Literature!

https://tamilandvedas.com › 2014/06/14 › aryan-sati-in-…

14 Jun 2014 — Tamil and Vedas. A blog exploring themes in Tamil and vedic literature. “Aryan SATI” in Sangam Tamil Literature …

தொடரும் —————–

TAGS-சதி , உடன் கட்டை ஏறுதல் , சங்க இலக்கியம் , பெருங்கோப்பெண்டு

விண்வெளிச் சாலை , சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 5 (Post No.11203)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,203

Date uploaded in London – –    18 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 5

ச.நாகராஜன்

சோலார் க்ரைஸிஸ் (Solar Crisis):- 1992ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது. பிரபல நடிகர்கள் நடித்த இந்தப் படத்தில் ஸ்பெஷல் எபெக்டுகளும் ஏராளம் உண்டு.விண்வெளி பற்றிய விநோதமான கதையைக் கொண்டது இந்தப் படம். அதிக சூரிய ஒளியால் பூமி தகிக்கிறது. இதற்காக சூரியனில் ஒரு குண்டை போட ஒரு விண்கலம் பறக்கிறது.ஒரே குழப்பமான கதை என்றாலும் அதிலும் ஒரு சுவை இருக்கத்தான் இருக்கிறது.

ராக்கெட் கேர்ள்ஸ் (Rocket Girls) :- 1993ஆம் ஆண்டு வெளியான படம் இது. விண்வெளியில் ஓஜோன் படலத்தை சீராக்க ஒரு விண்கலம் அனுப்பப்படுகிறது. இதில் கிளுகிளுப்பூட்டும் பெண்கள் இடம் பெறுவதால் சற்று ஆபாசமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சாப்ட் போர்ன் படம் என்று சொல்லக்கூடிய படம்.

பவுண்டி டாக் (Bounty Dog):- 1994 ஆம் ஆண்டு வெளியான படம் இது பணத்திற்காக எதையும் செய்யும் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட ஒரு கூலிப்படை சந்திரனுக்குச் செல்கிறது. அசுர சக்திகளுடன் மோதுகிறது. சந்திரனைப் பற்றி  ஆர்வமூட்டும் தகவல்களை அழகிய காட்சிகள் மூலமாகச் சித்தரிக்கும் சுவாரசியமான படம் இது.

மைட்டி ஸ்பேஸ் மைனர்ஸ் (Mighty Space Miners):- 1994ஆம் ஆண்டு வெளியான படம் இது.விண்வெளியில் நிலையாக ஒரு இடத்தில் நின்று ஆய்வுகளை நடத்த ஏதுவாக இருக்கும் புள்ளிகளை லாக்ரேஞ்ஜ் புள்ளிகள் அல்லது எல் பாயிண்ட்ஸ் என்று சொல்வது வழக்கம். பிரபல இத்தாலிய வானியல் விஞ்ஞானியான ஜோஸப் லூயிஸ் லாக்ரேஞ்ஜ் பெயரால் இந்தப் புள்ளிகள் அழைக்கப்படுகிறது. இந்த புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒரு விண்கல்லைப் பற்றிய கதை இது.

ஸ்பேஸ் ஐலேண்ட் ஒன் (Space Island One) :-  1996ஆம் ஆண்டு வெளியான பிரிட்டிஷ்-ஜெர்மானிய தொலைக்காட்சித் தொடர் இது. விஞ்ஞான ஆய்வுக்காக விண்வெளியில் தொலை தூரத்தில் நிறுவப்படும் ஸ்பேஸ் ஸ்டேஷன் ஒன்றைப் பற்றிய கதை இது. அங்கு ஏற்படும் சிக்கல்களையும் பிரச்சினைகளையும் நகைச்சுவையுடன் சொல்லும் தொடரில் ஆர்வமூட்டும் ஆய்வுப் பயணங்களும் உண்டு.

எல்5:ஃபர்ஸ்ட் சிடி இன் ஸ்பேஸ் (L5:First City in Space):- 1996ஆம் ஆண்டு வெளியான படம் இது. பூமி-சந்திரனுக்கு இடையே உள்ள லாக்ரேஞ்ஜ் 5 என்ற புள்ளியில் இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் இறுதியில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய கதை இது. சிக்கோ என்ற பெண்மணியும் அவளது குடும்பமும் நிகழ்த்தும் சாகஸச் செயல்கள் முதலாவதாக அமைக்கப்பட்டுள்ள விண்வெளிக் குடியிருப்பில் நிகழ்கின்றன. ஒரு வால்நட்சத்திரத்தில் நீர் மிகுதியாகக் கிடைக்கிறது. அதைத் திரும்பப் பெற முயல்கையில் குடியிருப்பிற்கே பெரும் ஆபத்து நிகழ இருக்கிறது. இள வயதினருக்கான படம் இது.

டெட் ஃபயர் (Dead Fire):- 1996ஆம் ஆண்டு வெளிவந்த படம் இது. பூமியில் நாளுக்கு நாள் சுற்றுப்புறச் சூழ்நிலை சீர் கெட்டு காற்று மாசுபடுகிறது. ஆகவே பூமி வாழ் மக்கள் விசேஷமாக அமைக்கப்பட்ட க்ரையோஜெனிக் கலங்களில் வசிக்கும் படி செய்யப்பட்டு பூமியைச் சுற்றி உள்ள விண்வெளிச்சாலையில் சுழன்று கொண்டே இருக்கும்படி செய்யப்படுகிறார்கள். யுஎஸ்எஸ் லெகஸி நிலையம் என்ற ஒரு இடத்திலிருந்து சூரிய ஒளியின் மூலமாக காற்றைச் சுத்தப்படுத்த முயல்கின்றனர். ஆனால் ஒரு பைத்தியக்கார வில்லனோ இந்த சூழ்நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு புதிதாகப் பிறந்த பூமியைத் தன் கைவசம் கொண்டு வரப் பார்க்கிறான். ஆனால் அவன் முயற்சி தோல்வி அடைகிறது இது தான் கதை.

ஹெல்ரைசர்: ப்ளட்லைன் (Hellraiser: Bloodline):- 1996ஆம் ஆண்டு வெளியான படம் இது. “உங்கள் காதலியுடன் எந்த இடத்துக்கும் போக முடியவில்லை எனில் விண்வெளிக்குச் செல்லுங்கள்” என்ற கோஷத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட படம் இது. விண்வெளி நிலையம் ஒன்றில் நிகழும் சதியும் அதை முறியடிக்கும் விதமும் இதில் கதையாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது

ப்ரிஸியஸ் ஃபைண்ட் (Precious Find):- 1996இல் வெளியான படம் இது. 2049ஆம் ஆண்டில் நிகழ்வதாக அமைந்துள்ள கதை இது. சந்திரனில் உள்ள தளமொன்றில் இருக்கும் சிலர் விண்கல்லுக்குச் சென்று பணக்காரராக ஆக முயற்சிக்கின்றனர். ஒரு புதையல் வரைபடம் வேறு அவர்களுக்குக் கிடைக்கிறது.கேட்க வேண்டுமா என்ன, சாகஸ செயல்களுக்கு!

ஸ்கார்பியோ ஒன் (Scorpio One):- 1997ஆம் ஆண்டு வெளியான படம் இது. ஸ்பேஸ் ஸ்டேஷனில் உள்ளோரை மீட்கச் செல்லும் ஒரு மீட்புப் பணியில் சென்றோர் அங்கு திடுக்கிடும் கண்டுபிடிப்பைக் கண்டுபிடிக்கின்றனர். மீட்புப் பணியில் சென்றவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இலட்சியம் இருக்கிறது. ரகசியமாகச் செல்லும் வில்லனின் படைகளுக்கோ பேராசையின் அடிப்படையிலான மோசமான லட்சியங்கள் உள்ளன. அவர்கள் முயற்சி வெற்றி பெறுகிறதா என்பதைச் சித்தரிக்கும் படம் இது.

ஸ்பேஸ்ஜாக்ட் (Spacejacked):- 1997ஆம் ஆண்டு வெளியான படம் இது. சந்திரனுக்குச் செல்லும் பணக்காரர்களின் சொகுசு விண்கலம் ஒன்று கடத்தப்படுகிறது. பணக்காரப் பயணிகளின் சொத்துக்களை கபளீகரம் செய்வதே கடத்தல்காரர்களின் நோக்கம். மாயாஜாலக் காட்சிகள் ஏராளம் உண்டு என்பதால் மாயாஜாலம் விரும்புவோருக்கான படம் இது.

மூன்பேஸ் (Moonbase) :-1998ஆம் ஆண்டு வெளியான படம் இது. சந்திரனில் கழிவுகளை அகற்றும் தொழிலகத்திற்கு சிறையிலிருந்து தப்பிச் சென்ற கைதிகள் செல்கின்றனர்.எப்படியேனும் பூமிக்குத் திரும்பி வந்து தங்கள் கிரிமினல் தொழிலை ஆரம்பிப்பதே அவர்களின் நோக்கம். ஆனால் அவர்களின் முயற்சிகள் தவிடுபொடியாகின்றன. இதைச் சுவைபடக் காட்டுகிறது இந்தப் படம்.

ஆர்மகெடான் (Armageddon) :-1998 ஆம் ஆண்டில் வெளியான படம் இது. இந்தப் படமும் டீப் இம்பாக்ட் என்ற படமும் உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன. விண்கல் பூமியை நோக்கி மோத வருவது தான் கதையின் பின்னணி. இந்தப் பேரழிவை எப்படித் தடுத்து நிறுத்துவது? பெரும் குழப்பம் ஏற்படுகிறது. ஆழ்கடல் துளை இயந்திரங்கள் மூலம் விண்கல்லில் அணுகுண்டுகள் வைக்கப்பட்டு விண்கல் துண்டு துண்டாக்கப் படுகின்றது.. விண்கல்லின் துண்டுப் பகுதிகள் பூமிக்குச் சேதமின்றி பூமியின் பக்கவாட்டில் பறந்து செல்ல, அவை அழிக்கப்படுகின்றன. விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பக் கருத்துகள் இதில் கொஞ்சம் கூட சரியான படி இல்லை என்றாலும் கூட பிரம்மாண்டமான திரைப்படத்திற்கே உரித்தான மசாலா காட்சிகள் நிறைந்திருந்ததால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை இந்தப் படம் பெற்றது! ****************** (தொடரும்

புத்தக அறிமுகம் – 32

புத்தரின் போதனைகளும் ஜென் குட்டிக் கதைகளும்   

பொருளடக்கம்

என்னுரை

1. நிகழ்காலத்தில் வாழ்க!

2. பிக்‌ஷுவே, அப்போது என்ன செய்வாய்?

3. கர்ம பலன்: அந்த மாங்காய் இது அல்லவே!

4. மன்னனின் பிரச்சனையும் ஆனந்தரின் தீர்வும்!

5. சுவர்க்கமும் நரகமும்!

6. ஜென் குருமார்களும் சீடர்களும் – சுவையான சம்பவங்கள்!

7. ஜென் மாஸ்டர் ஹோஷினின் கடைசிக் கவிதை!

8. இதோ, இதோ இங்கேயே இருக்கிறது ஜென்!

9. ப்ரக்ருதியின் ஆசையும், புத்தரின் கேள்விகளும்!

10. மஹராஜா புக்குசாதியின் ஆசை!

11. நான் புத்தர்!

12. புத்தரும் அற்புதங்களும்!

13. எல்லையற்ற கருணை வெள்ளம் புத்தர்

14. அடிமைக்கு அருளிய புத்தர்!

15. புத்தரின் எல்லையற்ற தேஜஸுடன் கூடிய அழகு!

16. நான் கொன்று விடுவேன்! – புத்தரின் பதில்!!

17. ஷாலின் ஆலயமும் போதி தர்மர் மர்மமும்!

18. அதிசயமான கும்-பம் மரம்!

19. மனதிற்கு மனம் மூலமாக அனுப்பப்பட்ட புத்தரின் முதல் உபதேசம்!

20. புத்தரின் போதனை: சேற்றில் மலரும் செந்தாமரை மலர் போல இரு!

21. துறவி தந்த உபதேசம்!

22. காட்டு வாத்துக்கள் பறக்கின்றன, குருவே!

23. அமர்ந்தவாறே தியானம் செய்தால் புத்தராகி விட முடியுமா?

24. புத்தர் வழியில்!

25. போதிசத்வர்! – நாணயத்திற்குக் கிடைத்த பரிசு!

26. கர்மா என்றால் என்ன? புத்தரின் விளக்கம்!

27. புத்தபிரானே! எனக்கு அந்த லட்டைக் கொடுங்கள்!: கர்ம சதகம்!

28. புத்தரின் உருவ வழிபாடு!

29. இந்தப் பழம் பழுத்து விட்டது!

30. ஞானம் பெற்று விட்டேனா, குருவே!

31. வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகள்!

32. ஜென் வாழ்க்கை முறை சுலபம் தான்!

*

நூலில் உள்ள எனது என்னுரை இது:

என்னுரை

எனது ‘ஜென் காட்டும் வாழ்க்கை நெறி’ என்ற புத்தகத்தைப் படித்தவர்கள் ஜென் பிரிவின் பால் ஒரு ஈர்ப்பைக் கொண்டிருப்பார்கள் என்றே நம்புகிறேன்.

ஜென் பிரிவில் உள்ள குருமார்கள் ஏராளமான பேர்கள்! அவர்களது உபதேச உரைகளும், ஜென் பிரிவில் உள்ள குட்டிக் கதைகளும் இன்னும் ஏராளம் உள்ளன.

வாழ்க்கையில் மாபெரும் வெற்றிக்கு வழி காட்டும் இந்த போதனைகளும் குட்டிக் கதைகளும் மேலை நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளிலும் முனைப்புடன் படிக்கப்படுகின்றன. ஜென் தியான முறையைப் பயிற்றுவிக்கும் பல மையங்கள் உலகெங்கும் பரவி உள்ளன.

இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு புத்தரின் போதனைகளையும் ஜென் பிரிவு தரும் குட்டிக் கதைகள் பலவற்றையும் அறிமுகப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இந்த நூல் மலர்கிறது.

தைவானில் உள்ள ‘The Corporate Body of the Buddha Educational Foundation’ நிறுவனம் விலை மதிக்கவே முடியாத புத்தரைப் பற்றிய ஏராளமான புத்தகங்களை எனக்கு இலவசமாக அனுப்பி உதவியது. அருமையான இந்தப் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவுடன் மேலும் பல கட்டுரைகளை எழுதலானேன்.

அவ்வப்பொழுது பல்வேறு இதழ்களிலும், இணையதள ப்ளாக்கிலும் வெளி வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது. இந்தக் கட்டுரைகளை வெளியிட்ட அனைத்து தமிழ் பத்திரிகைகளுக்கும் எனது நன்றி. குறிப்பாக லண்டன் திரு. சுவாமிநாதன் அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றி.

இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு ராஜேஷ் தேவராஜ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அறிவு பூர்வமான வெற்றிக்கான உத்திகளை ஜென் பிரிவு தருகிறது! அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்வில் வெற்றி உறுதி! இதைப் படிக்கும் அனைவருக்கும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

பங்களூர்                                             ச. நாகராஜன்


13-1-2022

உதயாதித்யனின்  சர்ப்ப – கத்தி பந்த கல்வெட்டு (Post No.11 202)

PICTURE OF SNAKE SCIMITAR CHART INSCRIPTION , UJJAIN

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,202

Date uploaded in London – 17 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

பந்து என்ற புலவர் இயற்றிய சரப்பபந்த கல்வெட்டு பாம்புக்கத்தி (SNAKE SCIMITAR  CHART INSCRIPTION, UJJAIN) உருவத்தில் உள்ளது. இது மத்திய பிரதேச உஜ்ஜைனி சிவன் கோவிலில் இருக்கிறது . அந்தக் கோவில் மஹா காலேஸ்வர் கோவில் என்று அழைக்கப்படும். இதில் ஸம்ஸ்க்ருத எழுத்துக்கள் அகரவரிசையில் உள்ளன. அதன் கீழ் கவிதையும் உளது. இதை மாணவர்கள் அணிந்தால் அவர்களுக்கு மொழி அறிவு எளிதில் கிட்டும் என்பது நம்பிக்கை. உதயாதித்யன் பரமார வம்ச அரசன்.

இந்தக் கல்வெட்டு சுமார் ஆயிரம் ஆண்டுப் பழமை உடைத்து. நீண்ட செய்யுள் அடங்கிய கல்வெட்டை நரவர்மன் என்ற மன்னன் புதுப்பித்தான். அதன் கீழே சரப்ப  பந்த கல்வெட்டு இருக்கிறது. தலைப்பகுதியில் அகரவரிசை எழுத்துக்களும் வால்பகுதியில்  வினைச் சொற்களின் விகுதியும் (SUFFIX) எழுதப்பட்டுள்ளன  

கல்வெட்டில் எழுதப்பட்ட ஸ்லோகம் சொல்வதாவது :

இது உதயாதித்ய வர்மனின் சர்ப-கத்தி பந்தம். இதில் மொழியின் சப்தங்கள் உள்ளன.இதை அரசர்களும் கவிஞர்களும் கழுத்தில் அணிந்து கொள்ளவேண்டும். சிவ பெருமானை வழிபடுவோரின் அபூர்வமான (மந்திர) சக்தி உடைய கத்தி இது;  அரசர்களான உதயாதித்யனும், நர வர்மனும் –வர்ண ஸ்திதியை – மொழியைப் –  பாதுகாக்கிறார்கள்

உதயாதித்ய தேவஸ்ய வர்ண நாக க்ருபாணிகா

கவீநாம் ச ந்ருபாணாம் ச வேஷோ வக்ஷஸி ரோபிதஹ

ஏகேயம் உதயாதித்ய நரவர்மன் மஹீ பு ஜோஹோ

மஹேச ஸ்வா மி நோரவர்ண ஸ்தித் யை ஸித்தாஸி புத்ரிகா

மன்னர்கள் இருவரும் வர்ண ஸ்திதியைப் பாதுகாக்கிறார்கள் என்னும் சொற்றொடர் இருபொருள் உடைத்து ; வர்ண என்றால் நான்கு ஜாதி சமூக கட்டுக்கோப்பு; வர்ண என்றால் நிறம், எழுத்து என்றும் பொருள். ஆகவே மன்னர்கள் சமூக நீதியைப் பாதுகாப்பவர்கள், மொழியைப் பாதுகாப்பவர்கள் என்று மொழி பெயர்க்க முடியும்.

கல்வெட்டில் குருகுல புத்திரனின் சொல்லாடல்

 கல்வெட்டுகளில் உள்ள ஸம்ஸ்க்ருத இலக்கியம் பிரம்மாண்டமானது. இதுவரை யாரும் அவைகளை வெளியிட்டு ஆராயவில்லை. அவைகளை பற்றிய குறிப்புகளை மட்டுமே புஸ்தகத்தில் இருந்து அறிகிறோம். அது மட்டுமல்ல. அந்தக் கல்வெட்டுகளில் காணப்படும் புலவர்கள் குறிப்பிடும் நாடகங்களோ, நூல்களோ, துதிகளோ, கவிதைகளோ  அல்லது பிற கல்வெட்டுகளோ நமக்குக்  கிடைக்கவில்லை . முஸ்லீம்களின் படையெடுப்புகளினாலும், இந்துக்களின் கவனக்குறைவினாலும் அவைகள் அழிந்து போய்விட்டன. அவைகளின் பட்டியலை சேகரித்தால், அழிந்து போன இலக்கியங்களின் பெயர்களே பல தொகுதிகளாக (IN VOLUMES) வெளிவரும். அவ்வளவும் அழிந்துபோனாலும் அதன் அளவாவது  நமக்குத் தெரியும். உலகில் அதிகமான இலக்கியம் உடைய ஒரே மொழி சம்ஸ்க்ருதம். கி.மு 800ல்- ஒரு கோடு கிழித்து, அதற்கு முன்னர் ஏதேனும் இலக்கியம் இருந்ததா என்றால் இப்போது அழிந்துபோன நாகரீகங்களின் சரக்குகள் மட்டுமே காணப்படும். தமிழோ, லத்தீனோ, கிரேக்கமோ, சீனமோ இராது. பாரசீக, எபிரேய (HEBREW) மொழிகளின் படைப்புகள் ஒரு கீற்று போல தென்படும்.. சம்ஸ்க்ருத வேத, உபநிஷத, பிராமண, ஆரண்யக, இதிஹாச, சரக. சுஸ்ருத மருத்துவ நூல்கள் இமயமலை அளவுக்கு உயர்ந்து நிற்கும். இவைகளில் உள்ள ரகசியங்கள் அனைத்தும் இன்னும் அறியப்படவில்லை. அவைகளைக் காப்பாற்றி ஆராய்வது நம் கடமை.

“கல்வெட்டுகளில் காணப்படும் 800 ஸம்ஸ்க்ருத, ப்ராக்ருத மொழிப்  புலவர்கள்”– என்ற தலைப்பில்  புனே நகரைச் சேர்ந்த பேராசிரியர் திஸ்கல்கர் எழுதிய நூலில் சில மாதிரி செய்யுட்களை, வசனங்களை மட்டும் கொடுத்துள்ளார் . இதோ குரு குல புத்ரன் எழுதியது:

ஸந்திவிக்ரஹ ஸமாஸநிஸ்சயநிபுணஹ  ஸ்தானானுரூபமாதீசம் தததாம்

குண விருத்திவிதான ஜனித ஸம்ஸ்கார ஸாதூனாம்  ராஜ்யசாலாதுரீய

தந்த்ரயோருபயோராபி நிஷ்ணாதஹ

பொருள்

ஒரு புறத்தில் சமாதானம், போர் முதலியவற்றை முடிவு செய்வதில் சமர்த்தர்; மறுபுறத்தில் சொற்களை சேர்ப்பதிலும், இணைப்பதிலும், அலசி ஆராய்வதிலும் வல்லவர் ;  அரசியல் விஷயங்களிலும் சாலாதுரீய விஷயங்களிலும் நிபுணர்

இதில் ஸந்தி , விக்ரஹம் என்ற இலக்கணச் சொற்களை சமாதானம் போர் , சொற்களின் சேர்க்கை , பிரித்தல் முதலிய இரு பொருள் வருமாறு புனைந்து மைத்ரக மன்னன் சிலாதித்யனைப் புகழ்கிறார் கவிஞர் குரு குலபுத்ர.

சாலாதுரீய என்பது உலகப் புகழ்பெற்ற இலக்கண வித்தகர் பாணினியின் மற்றொரு பெயர். அவர் பிறந்த ஊர் சாலா துரீய இப்பொழுது பாகிஸ்தானில் லாகூருக்கு அருகில் இருந்தது.

ஹேம்பட  என்பவரின் மகன் குரு குலபுத்ர ; அவரை சித்தசேனன் என்பவர் மைத்ரக அரச குடும்பத்துக்கு அனுப்பிவைத்தார். அவர் செய்த தாமிர சாசனம்/ அலினா செப்பேடுகள் என்று அழைக்கப்படும். அது ஏழாவது சிலாதித்யனைப் பற்றியது. அவர் கிபி. அல்லது பொது ஆண்டு 766-ல் இருந்தார். இரண்டாம் துருவசேனன் என்னும் மன்னரைப் புகழும் இடத்தில் ,மன்னரைப் புகழும் சாக்கில், கவிஞர் தன் மேதாவிலாசத்தையும் சம்ஸ்க்ருத இலக்கண அறிவையும் வெளிப்படுத்தியுள்ளார். பாணினியின் இலக்கணத்தை நன்கு அறிந்தவர் என்பதும் தெரிகிறது . சந்தி , விக்ரஹம் என்னும் சொற்களை சிலேடைப் பொருளில் பயன்படுத்தியுள்ளார் .

XXX SUBHAM XXX

TAGS- சரப்பபந்தம், கல்வெட்டு, உஜ்ஜைனி, குருகுல புத்ர, சந்தி , விக்ரஹ ,  ஸர்ப்ப , கத்தி, உதயாதித்யன் , நரவர்மன்

விண்வெளிச் சாலை ,சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 4 (Post.11201)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,201

Date uploaded in London – –    17 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 4

ச.நாகராஜன்

விண்வெளிச் சாலை பற்றிய மேலும் சில திரைப்படங்களைப் பற்றிப் பார்ப்போம்:

சால்வேஜ் -1 (Salvage – 1) 1979ஆம் ஆண்டு வெளியான தொலைக்காட்சித் தொடர் இது. ஒரு சிறிய நகரில் பழைய சாமான்களின் பட்டறை வைத்திருக்கும் ஆண்டி கிரிப்பித்திற்கு திடீரென சந்திரனுக்குச் செல்லும் ஆசை வருகிறது. அங்குள்ள அபல்லோ கலத்தின் மிச்ச மீதங்களை கலைப்படைப்பாக எண்ணி எடுத்து வருவதே அவரது நோக்கம். விண்கலத்தின் பழைய பாகங்கள் கூட எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை என்பதைச் சித்தரிக்கும் படமாக இது அமைந்தது.

தி ஷேப் ஆஃப் திங்ஸ் டு கம் (The Shape of Things to Come):- 1933ஆம் ஆண்டு ஹெச்.ஜி.வெல்ஸால் எழுதப்பட்ட பிரபலமான நாவல் இது. 1979ஆம் ஆண்டு திரைப்படமாக வெளிவந்தது. நாவலில் உலகில் 2106ஆம் ஆண்டு வரை நிகழப் போவதை கற்பனையால் படம் பிடித்துக் காட்டுகிறார் வெல்ஸ். மனித இனத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வாக உலக சாம்ராஜ்யம் ஒன்று அமைக்கப்படுகிறது. சர்வாதிகாரிகள் உலகில் அனைவரையும் அடக்கி ஆள நினைக்க, நல்லவர்களோ அவர்களை எதிர்த்துப் போராடுகின்றனர். உலகில் அமைதி மீண்டும் நிலவுகிறது/

ஏர்ப்ளேன் 2: தி சீக்வல் (Airplane 2: The Sequel) :- 1982ஆம் ஆண்டு வெளியான படம் இது. சந்திரனில் உள்ள தளமான ஆல்பா பீட்டாவிற்கு மேற்கொள்ளும் பயணத்தை சித்தரிக்கும் படம். வில்லியம் ஷாட்னர் என்ற காப்டன் அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்கிறார்.

ஜெனரேஷன் எக்ஸ்

உலகில் ஏராளமான மாற்றங்கள் காலப்போக்கில் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் பெரும் தோல்வியை அடைந்தார். வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது. ஸ்கைலாப் என்ற முதல் ஸ்பேஸ் ஸ்டேஷன் தோல்வியில் முடிந்தது. மாறுதலைத் தர ரீகன் வந்தார். விண்கலங்கள் புதிய பாணியில் வெற்றிகரமாக உருவாக ஆரம்பித்தன. இதைத் தொடர்ந்த காலம் ஜெனரேஷன் எக்ஸ் என அழைக்கப்படுகிறது. இதில் உருவான படங்கள் இன்னும் சிறப்பாக அமையலாயின.

ஸ்பேஸ் கேம்ப் (SpaceCamp):- 1986ஆம் ஆண்டு வெளியான படம் இது. விண்வெளிப் பயணத்தின்  ஒத்திகையின் போது நிஜமாகவே ஒரு விண்கலம் விண்வெளியில் பறந்து விடுகிறது. அபல்லோ விண்கல ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தர இந்தப் படம் எடுக்கப்பட்ட்து.

ஸ்டார் கேப்ஸ் (Star Caps) :- 1987ஆம் ஆண்டு வெளி வந்த தொலைக்காட்சித் தொடர் இது. சந்திரனில் கிரிமினல் குற்றங்கள் நிகழ்கின்றன. அவற்றைத் துப்புத் துலக்கும் கதையாக இந்தத் தொடர் எடுக்கப்பட்டது. முதல் தொடரின் அடுத்த சீஸனாக இது அமைந்தது. ஆனால் தொலைக்காட்சித் தொடர்களுக்கே உரித்தாக அமையும் மிக மிக மெதுவாகச் செல்லும் கதைப் போக்கு ரசிகர்களைச் சற்று சோதித்தது. என்றாலும் கூட சந்திரனைப் பற்றிய அரிய தகவல்கள் தரப்பட்டதால் இதற்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது..

விங்ஸ் ஆஃப் ஹனியமைஸ்:ராயல் ஸ்பேஸ் ஃபோர்ஸ் (Wings of Honneamise: Royal Space Force) :- 1987 ஆம் வெளியான படம் இது. பூமி போன்ற இன்னொரு பூமியில் நிகழும் கதை இது. பெயர் தெரியாத ஒரு ஆசிய தேசம் (ஜப்பானை மனதில் வைத்து புனையப்பட்ட கதை) ஒரு ராக்கெட்டைத் தயாரிக்கிறது. இதனால் அடுத்த நாட்டிற்கும் (சீனா என நாம் புரிந்து கொள்வோம்) அதற்கும் பகை ஏற்படுகிறது. இரண்டிற்கும் போர் உருவாகும் சூழ்நிலை உருவாகிறது. கதையின் பின்னணி புது மாதிரியாக இருந்ததால் இப்படத்தை ரசிகர்கள் ரசித்தார்கள்.

மர்டர் பை மூன்லைட் (Murder by Moonlight): 1989ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது. சோவியத் ரஷியாவும் அமெரிக்காவும் இணைந்து சந்திரனில் ஒரு தளத்தை அமைக்க அங்கே குவியலாக இறந்த உடல்கள் காணப்படுகின்றன. இதைத் துப்புத் துலக்க ஒரு ரஷிய டிடெக்டிவும் ஒரு அமெரிக்க டிடெக்டிவும் களத்தில் இறங்குகின்றனர். ஒரு பைத்தியக்ககார கொலைகாரனைக் கண்டுபிடித்து அவனது கொலைகார முயற்சியைத் தடுத்து நிறுத்துகின்றனர். வேடிக்கையும் திரில்லும் சேர்த்து ஃபன் – த்ரில்லராக அமையவே படம் வெற்றி பெற்றது.

மூன் ட்ரேப் (Moontrap) :-1989ஆம் ஆண்டில் வெளியான படம் இது. சந்திரனிலிருந்து கிடைத்த ஒரு அபூர்வப் படைப்பு பூமிக்கு வருகிறது. அந்த உயிரியல்-இயந்திர (bio-mechanical) உயிரினம் பூமியையே பயமுறுத்துகிறது. விளைவு என்ன என்பதைப் படம் நன்கு சித்தரிக்கிறது.

பியாண்ட் தி ஸ்டார்ஸ் (Beyond the Stars) :- 1989 ஆம் ஆண்டு வெளியான படம் இது. ஒரு இள வயதுச் சிறுவன் அபல்லோ கலத்தினால் கிளர்ச்சியூட்டப்படுகிறான். ராக்கெட்டை அவன் தவறாகப் பயன்படுத்த, மூன்வாக்கர் ஒருவரைச் சந்திக்கிறான் அபூர்வ ரகசியத்தை கற்றுக் கொள்கிறான். இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டும் வகையில் எடுக்கப்பட்ட படம் இது.

தி டார்க் சைட் ஆஃப் தி மூன் (The Dark Side of the Moon) :- 1990 ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது. ஒரு சாத்தான் கப்பல்களையும் விமானங்களையும் விண்வெளியில் ஒரு பகுதியிலிருந்து ஒரு விண்கலத்தையும் கடத்துகிறது.பூமியில் பெர்முடா ட்ரை ஆங்கிள் பகுதியில் செல்லும் கப்பல்கள் அந்தப் பகுதியில் பறக்கும் விமானங்கள் ஆகியவை மர்மமாய் மறைந்து போவதைப் போலவே இந்த மர்ம சம்பவங்களும் அமைகின்றன. சந்திரனில் வெகு தூரத்திற்கு அப்பால் உள்ள ஒரு பகுதியில் இவை அனைத்தும் நிகழ்கின்றன. சாத்தான் சித்தரிக்கப்பட்ட விதத்தை ரசிகர்கள் வெகுவாக வரவேற்றனர். சந்திரனின் இருளான பக்கம் ரசிகர்களால் வரவேற்கப்பட படம் வெற்றியைப் பெற்றது.

ப்ளிமவுத் (Plymouth) :- 1991 ஆம் ஆண்டு வெளி வந்த இது பின்னால் எடுக்கப்பட இருக்கும் பெரிய தொலைக்காட்சித் தொடரின் முன்னோடியாக அமைக்கப்பட்டு எடுக்கப்பட்ட ஒன்று. சுரங்கம் உள்ள ஒரு சிறிய நகரம்.  அதை ஒரு தீயவன் சுயநலம் காரணமாக அழிக்கிறான் அங்குள்ள மக்கள் அனைவருக்கும் மறுவாழ்க்கை அமைத்துக் கொள்வதற்காக சந்திரனில் புலம் பெயர்ந்து வாழ வாய்ப்பு வழங்கப்படுகிறது. நல்ல படமாக அமைந்த இதை விண்வெளி மாநாடுகளில் அடிக்கடி குறிப்பிடுவர்.

டெஸ்டினேஷன் மூன்/ எக்ஸ்ப்ளோரர்ஸ் ஆன் தி மூன் (Destination Moon/Explorers on the Moon):- 1992ஆம் ஆண்டு வெளி வந்த படம் இது. ஹெர்ஜ் என்பவர் 1953ஆம் ஆண்டு துப்பறியும் சிறுவனை கதாநாயகனாக வைத்துப் பல நாவல்களை எழுதினார். இந்தச் சிறுவன் சந்திரனுக்குப் பயணப்படுகிறான். இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்த கதை என்பதால் இது திரைப்படமாக எடுக்கப்பட்டது. மூலக் கதை சிறிதும் மாற்றாமல் எடுக்கப்பட்டதால் இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரும் இந்தப் படத்தை வெகுவாக ரசித்து மகிழ்ந்தனர்.

***************  (தொடரும்)

புத்தக அறிமுகம் – 31

Saints, Wonderful Temples, Scriptures And God’s Ways!

INDEX OF CONTENTS

Part I SAINTS

1) Miracles of Shirdi Sai Baba

2) Avathar of Miracles – Sri Sathya Sai Baba

3) Indian Scientist and Sri Sathya Sai Baba, Avathar of Miracles – Part I

4) Indian Scientist and Sri Sathya Sai Baba, Avathar of Miracles – Part II

5) How Paul Brunton was directed to go to Bhagavan Ramana Maharishi – Part I

6) How Paul Brunton was directed to go to Bhagavan Ramana Maharishi – Part II

7. Yogic Powers – Part I: Great Yogi Paramahansa Yogananda’s body was fresh even after 20 days after death!

7) Yogic Powers – Part II: Bhagavan Ramana Maharishi

8) Ah! It was a wonderful phenomenon – Swami Vivekananda!

9) MILLIONS OF VIVEKANANDAS WILL APPEAR!

10) Wonderful Divine Saint Vadalur Vallalar and Some of His Miracles

11) Inspiring Anecdotes in the Life of Swami Chinmayananda Saraswati

Part II WONDERFUL TEMPLES

12) The One and Only Big Temple at Tanjore, an Architectural Wonder of the World!

13) Marvelous Musical Pillars in Hindu Temples

14) Wonderful Episodes of Temples That Were Protected and Saved During Muslim Invasion

15) Four Wonderful Major Sri Chakra Temples Near Chennai in India to Visit and Get All Types of Benefits

16) Pigeons in Amarnath and Eagles at Thirukkazukkundram – A Miracle That Happens Even Today!

17) Thousand Pillar Hall – An Acoustic Marvel in Madurai Meenakshi Temple

Part III SCRIPTURES

18) Hindu Vedas, Vedangas and the Great Sages Associated With Vedas – Part I

19) Hindu Vedas, Vedangas and the Great Sages Associated With Vedas – Part II

20) The Glory of Bhagavat Gita – Part I

21) The Glory of Bhagavat Gita – Part II

22) Thousand Secret Names of Goddess Shakthi: Lalitha Sahasranama – Part I

23) Thousand Secret Names of Goddess Shakthi: Lalitha Sahasranama – Part II

24) Efficacy of Vishnu Sahasranamam

25) Gayatri Rahasya By His Holiness Shri Prabhu Ashrit Swamiji

26) The True Friend Who Comes Along With You After Your Death

27) Hinduism and Modernity by David Smith

28) The Greatness of Mahabharata – Part I

29) The Greatness of Mahabharata – Part II

30) Great Secret from Mahabharata: Bharatha Savitri – the four slokas one should read daily!

31) Mahabharata: Great Warrior Arjuna’s Glorious Ten Names and Their Meanings

32) Memory Queen Draupadi of Mahabharata

33) This is Heaven! Beautiful Description in Mahabharata!!

34) Disadvantages in Heaven! Mahabharata Description!!

Part IV GOD’S WAYS

36) What Will You Get Through Prayer?

37) Can Prayer Bend the Time?

38) Silent Prayer is the Best Prayer: Vinoba Bhave

39) 50 reasons people give for believing in a God by Guy P.Harrison

40) God Is Not Dead

41) How God Changes Your Brain

42) Be Always on God’s Side or Pray for God to Come to Your Side

43) Baffling Questions and Beautiful Answers in Spirituality

About the Author

Dedication by Santhanam Nagarajan

This book is dedicated to my parents

Sri V.Santhanam

and

Srimathi Rajalakshmi Santhanam

*

நூலாக வெளியிடவேண்டுமென்று விரும்பிய அன்பர்களின் விருப்பம் இப்போது நிறைவேறி விட்டது.

இதை 1) படிப்பதற்காகவும் 2) மின் நூலாகப் பெறவும் 3) அச்சுப்பதிப்பாகப் பெறவும் என இப்படி மூன்று திட்டங்களை www.pustaka.co.in அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் உரிமையாளர் திரு டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.Hd அவர்கள்.

சந்தா விவரங்களையும் நூல் விலை விவரத்தையும் admin@pustaka.co.in

என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு பெறலாம்

தொடர்புக்கான தொலைபேசி எண் :   9980387852  

**

எம்.ஆர்.ஐ. (MRI Scan) சோதனையில் பயன்படும் கடோலினியம் (Post No.11,200)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,200

Date uploaded in London – 16 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பிரபஞ்சம்  என்னும் கட்டிடத்தைக் கட்டுவதற்கு 118 வகையான செங்கற்கள் இருக்கின்றன. இவற்றை தனிமம் அல்லது மூலகம் (element) என்போம். இரும்பு, தங்கம், வெள்ளி, தகரம் (tin), ஈயம் (lead) என்பன போல டோலினியம் (Gadolinium) என்ற உலோக தனிமம் இருக்கிறது. புற்றுநோய் அல்லது வேறு வகைக் கட்டிகள் உடலில் இருக்கிறதா என்பதைக் காண்பதற்காகச் செய்யும் எம்.ஆர். ஐ ஸ்கேன் ( MRI –  Magnetic Resonance Imaging) சோதனையில் இதைப் பயன்படுத்துவர்.

எல்லா எம் ஆர்.ஐ. சோதனைகளிலும் இல்லாவிடினும் மூன்றில் ஒரு சோதனையில் கடோலினியம் பயன்படுத்தப்படுகிறது. கர்ப்பிணிகள்,  மற்றும் சிறுநீரக நோயுள்ளவர்களிடத்தில் பொதுவாக இதைப் பயன்படுத்துவதில்லை. தேவையானால் நோயாளியின் அனுமதியுடன் பயன்படுத்துவர். நியூட்ரான்களை உறிஞ்சும் (absorbing Neutrons)  அபூர்வ குணம்  இதற்கு இருக்கிறது.

முதலில் கடோலினியம் வரலாற்றைக் காண்போம்

தற்போது பின்லாந்து நாட்டிலுள்ள அபோ என்னும் ஊரில் பிறந்த ஜொஹான் (யுவான்) கடோலின்  (Johan Gadolin) இந்த மூலகம் அமைந்த தாதுவை முதலில் கண்டுபிடித்ததால் இதன் பெயர் கடோலினியம் எனப்படுகிறது . அவர் கண்டுபிடித்த காலத்தில் அவருடைய ஊர் சுவீடன் நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது.

15 மூலகங்களை அபூர்வ மூலகம் அல்லது லாந்தனைட் என்பர். அவற்றில் ஒன்று கடோலினியம். இது மனித உடலிலோ வேறு உயிரினங்களிலோ அதிகம் காணப்படுவதில்லை. இதன் உப்புக்கள் கொஞ்சம்  விஷ சத்துள்ளவை.

இதற்குள்ள சிறப்பான குணம் நியூட்ரான் அணுக்களை கிரகிப்பதாகும். இதனால்தான் இதை எக்ஸ் ரே, ஸ்கேன் கருவிகளில் பயன்படுத்துகின்றனர். இதற்கு ஓரளவு காந்த சக்தியும் உண்டு. உடலுக்குள் ஊசி மூலம் இதைச் செலுத்திய பின்னர் காந்தப்புலன் படம்காட்டும்/எடுக்கும்( MRI –  Magnetic Resonance Imaging) இயந்திரத்துக்குள் நம்மை படுக்கை நிலையில் வைத்து படம் எடுப்பார்கள் . அப்போது உடல் உறுப்புகளின் தெளிவான படம் கிடைக்கிறது. அதை பார்க்கும் மருத்துவ நிபுணர்களுக்கு நம் உடலில் கட்டிகள் புற்றுகள் இருக்கிறதா என்பது தெரியும் மேலும் இதை உடலில் செலுத்தும்போது அதற்கு ஒரு கேடயம் போட்டு (Chelation ) போட்டு அனுப்புவர் ; இதனால் நோயாளிகளுக்கு கடோலினியம் வாயிலாக எந்தத் தீங்கும் வராமல் தடுக்கிறார்கள் .

கடோலின் என்பவரின் பெயர் சூட்டப்பட்டாலும் இதை ‘மூலகம்’ என்று கண்டுபிடித்து அறிவித்தவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த  சார்லஸ் கலிஸார்ட் (CHARLES GALISSARD DE MARIGNAC  )ஆவார்.

எங்கே கிடைக்கிறது?

பொதுவாக இந்த மூலகம், ஏனைய அபூர்வ  உலோக தாதுக்களுடனேயே கிடைக்கிறது. அவ்வகையில் சீனா , அமெரிக்கா , ஆஸ்திரேலியா , இந்தியா , இலங்கை, பிரேசிலில் இது கிடைக்கிறது. இதன் தோற்றம் வெள்ளி போல இருக்கும். காற்று படும் படி வைத்தால் கறுத்துவிடும்

இதன் ரசாயன குணங்கள்

குறியீடு Gd ஜிடி

அணு எண் -64

உருகு நிலை – 1313 டிகிரி C

கொதிநிலை – 3270 டிகிரி C

ஐசடோப்புகள் –  7 வகைகள்

பொருளாதாரப் பயன்கள்

மருத்துவ சோதனைகளில் பயன்படுவதோடு மின் அணு சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு இரும்பு போல காந்த சக்தி இருந்தாலும் 20 டிகிரி சி – யில் காந்த சக்தியை இழந்துவிடும். இதனால் இதை உலோகமாக தனியே பயன்படுத்தாவிடினும் கலப்பு (alloys) உலோகமாகப் பயன்படுத்துவர். வீடியோ ரிக்கார்ட் கருவிகளில் பதிவு செய்யும் பகுதிகளில் ( Recording Heads ரெகார்டிங் ஹெட்ஸ்) இதைப் பயன்படுத்துவர். தகவல்களை பதிவு செய்து காப்பாற்றும் தகடுகளில்  ( Magnetic Data Storage Discs  மேக்னெட்டிக் டாட்டா ஸ்டோரேஜ் டிஸ்க்ஸ்) இது முக்கியப்பங்கு வகிக்கிறது

அணுசக்தி உலைகளில் (Nuclear Reactors)   தீங்கு விளைவிக்கும் நியூட்ரான்களை  விழுங்குவதற்கு இது மிகவும் உதவுகிறது ; இதனுடைய இரண்டு ஐசடோப்புகள், முன்னர் பயன்படுத்தப்பட்ட போரான் (Boron)களைவிட 300 மடங்கு அதிகமாக நியூட்ரான்களை கிரஹித்து விடுகிறது . தற்காலத்தில் அணுமின்சார உலைகளில் வைக்கப்படும் யுரேனியம்-235 தண்டுகளுடன் 5 சதவிகித கடோலினியம் ஆக்ஸைடையும் கலந்துவிடுகின்றனர் .

உடலுக்குள் சென்று சத்து ஊட்டாவிடினும் , வெளியேயிருந்து வந்து  உ டலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுக்கதிர்களைத் தடுப்பதால் கடோலினியத்தின் பெருமையை விஞ்ஞானிகள் போற்றுகின்றார்கள்.

–சுபம் –tags-கடோலினியம், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் , நியூட்ரான் 

LONGEST COMPOUND WORD IN INSCRIPTION (Post No.11199)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,199

Date uploaded in London – 16 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

In Sanskrit one can join words and form a compound word. This is unique to Sanskrit language and one of the wonders of the language.

Two words occupying  five lines is found in an inscription of a Chalukya king.

An Atharvana Veda pandit by name Pambeya Sarvottama has composed this in praise of king Sarvalokasraya. He was the son of Vishnuvardhana II and grandson of Indrabhattaraka . it is in Chendalur plates (Nellur district) dated 673 CE.

The two compound words in five lines run like this,

Nijabhujaparaakramaavavanamithaanekasatrusaamantaathiitatviradhapathimadhadhaaraabishekakardamithasaptanhadasurabhiramyaangganopavishtaanaikaraajanyaamita

Samitikolaahaliibhutaraajadwaarah

madaalasamatakaaminiijanaganapayodharaavalupyamaanakunkumapangkaavasesasobhitakanakagirisilaavisaalavakshasthalah

As far as I know, no one has explored the beauty of Sanskrit language in the inscriptions on stones and copper plates. We have materials available for at least two thousand years from Rudradaman (150 CE).

Apart from available materials, the inscriptions mention several plays, books, hymns and other stone inscriptions by the same author or king. They have all disappeared. One must  do a list of all those lost materials and I am pretty sure the list will cover many volumes. If put together they will show the largest corpus of literature comes from Sanskrit language.

Even the available 60,000 plus Tamil inscriptions use a lot of Sanskrit words. There is no book or inscription in Tamil language without Sanskrit words.

Xxx

GURU KULAPUTRA WORDPLAY

Here is another inscription from the copper plates of Maitraka king Silaaditya VII (747- 766 CE) of  Valabhi. Guru kulaputra was his minister; he was son of Hembata who was deputed by Siddhasena of royal family ; he composed the Alina copper plates. The record is in prose and very lengthy. It is written in a flowery language. The poet displays a good knowledge of grammar of Panini  for whom he used the word Saalaaturiiya .

His ingenious play on words on the ordinary and grammatical meanings of  Sandhi, Vigraha, and other grammatical terms deserve to be noted.  While describing the qualities of Dhruvasena II he speaks of him thus :

SandhiVigrahasamaasanischayanipunah sthaanaanuroopamaadesam dadataam

Gunavrddhividhaanajanitasamskaarasaadhuunaam raajyasaalaaturiiyatantrayorubhayorapi

nishnaatah

Meaning:

Who being clever (on the one side) in determining peace and war and reconciliation (and on the other) in settling the euphonic joining of letters and the analysis of words and composition, was thoroughly well versed even in the rituals of  sovereignty and Saalaaturiiya

(Salaturiya was the birth place of world’s greatest grammarian Panini; now it is near Lahore in Pakistan)

Source Book: Sanskrit and Prakrit Poets known from Inscriptions, D B Diskalkar, Pune, 1993; with my inputs.

-subham–

tags- compond word, Sanskrit Inscription, Guru Kulaputra, Siladitya

விண்வெளிச் சாலை, சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 3 (Post No.11,198)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 11,198

Date uploaded in London – –    16 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

விண்வெளிச் சாலை மற்றும் சந்திரன் பற்றிய திரைப்படங்கள்! – 3

ச.நாகராஜன்

ஏராளமாக உள்ள விண்வெளி பற்றிய திரைப்படங்களில் மேலும் சிலவற்றைக் காண்போம்:

இன் லைக் ஃப்ளிண்ட் (In Like Flint):- 1967ஆம் ஆண்டு வெளியான படம் இது. சூப்பர்-ஸ்பை படம் இது. பெண்கள் குழு ஒன்று உலகை அடக்கியாள விரும்பி ஸ்பேஸ் ஸ்டேஷனைக் கைப்பற்றி உலகையே பயமுறுத்துகிறது. கதாநாயகன் ஃப்ளிண்ட் உலகைக் காப்பாற்றுகிறார்.

தி ரிலக்டண்ட் அஸ்ட்ரானட் (The Reluctant Astronaut):- 1967ஆம் ஆண்டு வெளியானது இந்தப் படம். சோவியத் ரஷியாவின் விண்வெளிப் பயணத்தைத் தோற்கடிக்கும் வகையில் சிவிலியனாக உள்ள ஒரு விண்வெளி வீர்ர் விண்வெளிச் சாலையில் பறப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டது இந்தப் படம்.

மிஷன் ஸ்டார்டஸ்ட் ( Mission Stardust):- 1967ஆம் ஆண்டு வெளியான படம் இது.1961ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து பெர்ரி ரோடான் நாவல்கள் என அறிவியல் புனைகதைகளின் தொடர் ஒன்று வெளியானது. அதில் முதல் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இது. இதில் கதாநாயகன் சந்திரனுக்குச் சென்று பல விதமான புது தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்து அதன் மூலம் பிரபஞ்ச பயணத்தை மேற்கொள்கிறான்.

2001: எ ஸ்பேஸ் ஒடிஸி (A Space Odyssey) : 1968ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிக பிரமாதமான படம். சந்திரனை அடிப்படையாக்க் கொண்ட படங்களில் ஒவ்வொரு சிறு விஷயத்திலும் கவனம் செலுத்தி எடுக்கப்பட்ட அருமையான படம் இது. மனிதர்கள் நிச்சயமாக சந்திரனில் வாழ முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்          விதத்தில் எடுக்கப்பட்ட படமாக இது அமையவே ரசிகர்களை வெகுவாக இது கவர்ந்தது

மூன் ஜீரோ டூ (Moon Zero Two)- 1969ஆம் ஆண்டு வெளியான படம் இது. சுவாரசியமான கதையைக் கொண்ட படம்  இது. 2021ஆம் ஆண்டில் மனிதர்கள் சந்திர குடியிருப்பில் குடியேறுகிறார்கள். மூன் சிடி மற்றும் ஃபார் சைட் 5 போன்ற குடியிருப்புகள் அங்கு தோன்றுகின்றன. ஹபார்ட் என்ற கோடீஸ்வரர் சந்திரனைச் சுற்றி 6000 டன் எடையுள்ள ஒரு விண்கல் சுற்றுவதைப் பற்றி அறிகிறார் அந்த விண்கல் சபைர் எனப்படும் நீல ரத்தினக்கல்லால் ஆனது. கோடானு கோடி விலை மதிப்பை உடையது. அவர்  பில் கெம்ப் என்ற விண்வெளி வீர்ரிடம் அந்த விண்கல்லைக் கைப்பற்றித் தருமாறு கேட்கிறார் அதைச் சந்திரனின் இன்னொரு பக்கத்திற்கு பத்திரமாகக் கொண்டு சேர்க்குமாறு கெம்பை வேண்டிக் கொள்ள அது சட்டத்திற்கு விரோதமானது என்ற போதிலும் கூட  கெம்ப் அதில் ஈடுபடுகிறார் இடையில் ஒரு அழகிய இளம் பெண் கெம்பின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள். அவளது சகோதரன் உயிருடன் இருக்கிறானா என்பதை அறியுமாறு அவள் வேண்ட அதில் ஈடுபடும் போது ஹபார்டின் உண்மையான உள் நோக்கத்தை அறிகிறார் கெம்ப். நீலக்கல்லைக் கைப்பற்றி அதிக சக்தி வாய்ந்த ராக்கெட்டுகளை அமைத்து விண்வெளியைத் தன் ஆதிக்கத்தில் கொண்டு வர விரும்புவதே ஹபார்டின் உண்மையான நோக்கம். இந்த சூழ்ச்சியை அறிவதை கதை திறம்படச் சொல்கிறது.

மரூண்ட் (Marooned):- 1969ஆம் ஆண்டு வெளியான படம் இது.மூன்று விண்வெளி வீர்ர்கள் விண்வெளிச் சாலையில் கலம் பழுதுபடவே தனியாக விடப் படுகிறார்கள். அதைப் பற்றிச் சுவை படச் சொல்லும் படம் இது.

டயமண்ட்ஸ் ஆர் ஃபார் எவர்(Diamonds are for ever) :- 1971ஆம் ஆண்டு வெளியான பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் படம் இது. வில்லன் எர்னஸ்ட் ஃப்ளோபீல்ட் உலகின் பல்வேறு இடங்களை ஒரே சமயத்தில் தாக்கி அழிக்க லேஸர் ராக்கெட்டுகளின் பயன்பாட்டிற்காக வைரங்களைச் சேர்க்கிறான். அதற்காக லாஸ் வேகாஸ் செல்கிறான். வைரம் பதித்த சாடலைட்டால் அமெரிக்காவின் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ராக்கெட், ரஷிய அணு ஆயுத சப்மரீன் ஆகியவற்றோடு சீன தளம் ஒன்றையும் அழிக்கிறான். பல சாகஸ செயல்கள் செய்து ஜேம்ஸ் பாண்ட் இறுதியில் வில்லனின் சதியை முறியடிக்கிறார்.

அபல்லோ காலம்

அமெரிக்கா விண்ணில் ஏவிய அபல்லோ விண்கலங்கள் உலகையே மாற்றி விட்டது. விண்வெளி பற்றிய பெரும் நம்பிக்கையை உலக மக்களிடையே அபல்லோ கலங்கள் ஏற்படுத்தின. இதையொட்டி திரைப்படங்களிலும் ஒரு புது மாறுதல் உருவானது.விஞ்ஞான உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் உருவாக ஆரம்பித்த காலத்தை அபல்லோ திரைப்படக் காலம் எனக் கூறலாம். மேலும் இந்த அடிப்படையிலான விண்வெளிச் சாலை படங்கள் சிலவற்றைக் காண்போம்:

மூன்பேஸ் 3 (Moonbase 3):- இது ஒரு தொலைக்காட்சித் தொடர். சந்திரனில் நாம் அமைக்க இருக்கும் தளம் எப்படி இருக்கும்? அது பற்றிச் சித்தரிக்கிறது இந்தத் தொடர்.

ஸ்பேஸ்: 1999 (Space:1999) 1975ஆம் ஆண்டு தொடங்கி இரு ஆண்டுகள் வெற்றி நடை போட்ட ஒரு தொடர் இது. சந்திரனை ரேடியோ-ஆக்டிவ் கழிவுகளால் நிரப்ப, அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளை மையமாகக் கொண்ட தொலைக்காட்சித் தொடர் இது. ஒரு தொடருக்கு இருபத்திநான்கு எபிசோடுகளைக் கொண்ட இரு தொடர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒளிபரப்பப்படவே விண்வெளி பற்றிய ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமானது.

மூன்ரேகர் (Moonraker) : 1979ஆம் ஆண்டு வெளியான இன்னொரு பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் படம் இது. ஸ்டார் வார்ஸ் தொலைக்காட்சித் தொடர் உலகெங்கும் ஏற்படுத்திய எழுச்சியைத் தொடர்ந்து வெளி வந்த படம் இது.  ஒரு பேராசைக்கார வில்லன் உலகில் உள்ள அனைவரையும் ஒழித்துக் கட்டி விட்டு தன் இஷ்டப்படி ஆடும் ஒரு இனத்தை உருவாக்க முயல்கிறான். நாஸாவின் ஒரு விண்கலம் கடத்தப்படவே அதை ஆராய்வதற்காக ஜேம்ஸ் பாண்ட் அனுப்பப்படுகிறார். நரம்பு வாயு மூலமாக அனைவரையும் ஒழித்துக் கட்ட வில்லன் முயல்வதைக் கண்டு பிடித்த ஜேம்ஸ் பாண்ட் வழக்கம் போல பல சாகஸ செயல்களைச் செய்து உலகைக் காப்பாற்றுகிறார்.

******************* தொடரும்

புத்தக அறிமுகம் – 30

ஜென் காட்டும் வாழ்க்கை நெறி

 பொருளடக்கம்

என்னுரை

1. ஸ்வர்ண புத்தர்!

2. சர்ச்சிலுக்கு சாந்தி தந்த புத்தர்

3. தேராவாதம், மஹாயானம் தோன்றிய வரலாறு!

4. புத்தம் சரணம் கச்சாமி!

5. உலகப் போரின் போது அனைத்தையும் இழந்த சோகோ!

6. தோட்டத்தைப் பெருக்கு – முதல் பாடம்!

7. எல்லோர் முன்னிலையிலும் பேசத் தகுதியற்றவன்!

8. ஆலயத்தை விட்டு வெளியே போ!

9. ஒரு போதும் இதை நீ அவிழ்க்கக் கூடாது!

10. நீ உள்ளே வரலாம்!

11. ஜென் மாஸ்டர் சொன்ன மூன்று உண்மைகள்!

12. ஜென் கோயன்கள்!

13. ஹகுயின் கோயன்கள்!

14. அப்படியா?!

15. பாங்கெய் யோடாகு

16. உள்ளொளி பெற்ற உத்தமர்!

17. மூ!

18. இதோ, ஒரு கோப்பை டீ, எடுத்துக் கொள்ளுங்கள்!

19. இப்போது விழுகிறது ஒரு இலையுதிர்கால இலை!

20. சோடோ பிரிவை நிறுவிய டோஜென்!

21. டோஜெனின் அற்புத கோயன்கள்!

22. சில ஜென் குட்டிக் கதைகள்!

23. மேலும் சில ஜென் கதைகள்!

24. மேலும் சில ஜென் கதைகள் – 2

25. மேலும் சில ஜென் கதைகள் – 3

26. மேலும் சில ஜென் கதைகள் – 4

27. வாழ்வையும் சாவையும் புரிந்து கொள்ளுங்கள்!

28. முடிவுரை

நூலாசிரியர் பற்றிய குறிப்பு

*

நூலுக்கு நான் வழங்கிய என்னுரை :

என்னுரை

உலகில் உள்ள அறிஞர்கள் முதல் சாமானியர்கள் வரை கண்டு வியக்கும் மதம் புத்த மதம். ‘அறிவால் அறிந்து நீயே கண்டு பிடி’ என்று அது சொல்வதால் அனைவருக்கும் உகந்த ஒன்றாக அது ஆகிறது.

புத்தமதத்தின் ஜென் பிரிவு சுவாரசியமான ஒரு பிரிவு. அதில் உள்ள ஆசார்யர்களின் கதைகளையும், கோயன்களையும் அனைவரும் படித்து அதில் உள்ள உண்மைகளை அறிந்து அவற்றைப் பின்பற்றினால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.

இளம் வயதிலிருந்தே புத்தர் பால் எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டு. பின்னால் நான் நிறைய கட்டுரைகள் எழுத ஆரம்பித்த போது தைவானில் உள்ள ‘The Corporate Body of the Buddha Educational Foundation’ பற்றிய தகவல் கிடைத்து தொடர்பு கொண்டேன். அங்கிருந்து எனக்கு புத்தரைப் பற்றிய ஏராளமான புத்தகங்கள் இலவசமாகக் கிடைத்தன. நேர்த்தியான இந்தப் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றவுடன் கிடைத்தற்கரிய ஒரு பெரும் செல்வம் கிடைத்த மகிழ்ச்சி.

அந்தத் தொடரே உங்கள் கையில் இப்போது இந்த நூலாகப் பரிமளிக்கிறது.

இந்த நூலை டிஜிடல் வடிவமாக வெளியிட முன் வந்த பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIAவின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றிக்கான மந்திர நூல் இதோ உங்கள் கையில்! பிறகு என்ன, வெற்றி பெற வேண்டியது தானே!

பங்களூர்

ச. நாகராஜன்

20-12-21

கல்வெட்டில் சொற்சிலம்பம்;  திரிபுவன பாலனின் கவிதைகள் (Post N.11197)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 11,197

Date uploaded in London – 15 AUGUST 2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

கெளட வம்ச அக்ஷபதாலிக அனந்தபாலநின் புத்ரன் த்ரி புவன பாலன்.

அவன் ஒரு சிறந்த கவிஞன். ரதன்பூர் கல்வெட்டுப் பாடல்களை இயற்றியவன் . கல்வெட்டின் காலம் பொ .ஆ அல்லது கி.பி.1163-64. இது  காலசூரி வம்ச இரண்டாம் பிருத்விதேவன் கீழ் அரசாண்ட பிரம்மதேவன் என்னும் சிற்றரசனின் புகழ் பாடும் பிரசஸ்தி ஆகும்.

சோமநாதர் கோவிலில் கல்வெட்டு இருக்கிறது. இதில் நல்ல நடையிலுள்ள 45 செய்யுட்கள் இருக்கின்றன. நறுமணம் மிக்க , நல்ல தெளிந்த நீர்நிலை போன்றவை என் கவிதைகள்; ஏரி  போல தெளிவும், ஆழமும் உடையவை. மேலும் கவிஞர்களின் மனதுக்கு திருப்தி தர வல்லவை என்று பாடல்கள் வருணிக்கப்படுகின்றன.

இதோ அந்தக் கவிதை ,

கண ரசவதீம் கபீராம் ஸ்வச்சதராம் கவி விசார ரமணீயாம்

ஸரஸீமிவ பிரசஸ்திம் த்ரிபுவனபாலோ வ்யதாத்வி புதஹ

பின்னர் அதை முத்துமாலைக்கு ஒப்பிடுகிறார்,

கல்வியிலும் கலையிலும் சிறந்த குமார பால இந்தச் செய்யுட்களை ஆர்வத்துடன் எழுத்தில் வடித்தார். அந்தக் கவிதைகள் முத்துமாலை போன்றது. வட்டவடிவில் முத்துக்கள் திரண்டது போல செய்யுட்களின் யாப்பு அணிகள் ஜொலிக்கின்றன. முத்து மாலை போல கவர்ச்சியும், பளபளப்பும் உடைய இந்தச் செய்யுட்கள் குணமும் மணமும் நிரம்பியவை.

ஹாராலீமிவ  ஸுவ்ருத்த குணாம் குணாட்யாம்

காந்த்யான்விதாம் கண ரச ப்ரகராம் பிரசஸ்திம்

XXX

அதர்வண வேத அறிஞனின் சொற் சிலம்பம்

சாளுக்கிய வம்ச இரண்டாம் விஷ்ணுவர்தனனின் மகனும், இந்திர பட்டாரகனின் பேரனுமான சர்வலோகாஸ்ரயனின் சேந்தளூர் செப்பேடுகளை அதர்வண வேத அறிஞர் பந்தேய சர்வோத்தம இயற்றியுள்ளார். இந்த இடம் ஆந்திராவில் நெல்லூரில் இருக்கிறது. கி.பி. அல்லது பொது ஆண்டு 673ம் ஆண்டு சாசனமான இதில் ஒரு பிராமணனுக்கு நிலதானம் — பிரம்மதேயம் — செய்யப்பட்டது குறிப்பிடப்படுகிறது.

மன்னன் சர்வலோகாஸ்ரயனின் வீரத்தையும் அரசாண்மையையும் புகழ வந்த கவிஞன், ஸம்ஸ்க்ருத மொழிக்கே உரித்தான  நீண்ட கூட்டுச் சொற்றொடர்களைப் (Compound words)  பயன்படுத்தியுள்ளார் :

நிஜபுஜபராக்ரமாவநமி தானைகசத்ருஸாமந்தாதீதத் விரதபதிமத தாராபிஷேககர்தமிதஸப்தன் ஹதசுரபிராம்யங்கணோபவிஷ்டாநைகராஜன்யாமித     

இது ஒரு சொல். சம்ஸ்க்ருதத்தில் இப்படிச் சொற்களை இணைத்துக் கூட்டுச் சொல் உண்டாக்குவதுண்டு. உலகில் இவ்வளவு நீண்ட கூட்டுச் சொற்களை வேறு மொழியில் காண்பது அரிது.

அவரே சொல்லும் வேறு ஒரு நீண்ட சொல் தொடர்,

ஸமிதி கோலாஹலீபூதராஜத்வாரஹ மதாலஸமதகாமினீ ஜனகணபயோதராவலுப்ய மானக்துங்குங்துமபங்காவசேஷ சோபித கனக கிரிசிலா விசாலவக்ஷஹஸ்தலஹ

இது இன்னும் ஒரு சொல் அல்லது கூட்டுச் சொல் ஆகும்.

xxxx

நரவர்மனின் 58 கவிதைகள்

பரமார  வம்ச அரசன் நர வர்மன் பொது ஆண்டு (கி.பி.) 1094 முதல் 1133 வரை மால்வா பிரதேசத்தை ஆண்டான். அவனுடைய தந்தை பெயர் உதயாதித்ய; சகோதரனின் பெயர் லக்ஷ்மண தேவ .மன்னரின் பட்டப் பெயர் நிர்வாண நாராயண இவருடைய சாசனம் நாகபுரி மியூனஸியத்தில் உளது. . மன்னரின் வம்சாவளியைப் புகழ்ந்துரைத்த பின்னர் தானே கட்டிய கோவிலுக்கு தேவதானமாக மூன்று கிராமங்களை தானம் கொடுத்ததை கல்வெட்டு விவரிக்கிறது பல்வேறு யாப்பு அணிகளில் இயற்றப்பட்ட 58 செய்யுட்கள் இது பற்றிப்  பாடுகின்றன.

கவிதைகள் பாரதீ  (சரஸ்வதீ) வணக்கத்துடன் துவங்குகின்றன.

ப்ரஸாதெள தார்யமா தர்ய ஸமதாதயஹ

யுவயோர்யே குணாஹா ஸந்தி வாக்தேவ்யெள  தேஅபி ஸந்து நஹ

பின்னர் தன் கவிதைகளைப் படிப்போருக்கு வேண்டுகோள் விடுக்கிறார்,

ஹம் ஹோ புதாஹா  ஸாது ஸமுத் ஸஹத்வம்

குசா ப்ரக ல்யாம் ச தியம்  விதத்வம்

மத்யஸ்த பாவம் ச  ஸமாச்ர யத்வம் ஸுகம் ச நஹ

ஸு க்தி  சுதாமுபாத்வம்

ஓஓ அறிவாளிகளே !! நன்றாக முயற்சி செய்து உங்கள் அறிவினை தர்ப்பைப் புல்லின் நுனி போல கூராக்குங்கள் . நடுநிலை நின்று தீர்ப்புச் சொல்லுங்கள் தேன் போன்ற கவிதைகளுக்கு மகிழ்ச்சியோடு தீர்ப்புச் சொல்லுங்கள்.

இதில் அபூர்வமாகக் காணப்படும் சொற்பிரயோகங்கள் காணப்படுகின்றன.

செய்யுள் 56 , மன்னர் யாத்த மேலும் பல கவிதைகளைக் குறிப்பிடுகின்றன . ஆனால் அவை நமக்கு கிடைத்தில.

XXX

–subham—

Tags- ரதன்பூர் , செப்பேடு, நர வர்மன், அதர்வண , வேத அறிஞர்