சிந்து வெளி: தமிழர்கள் அறிவைச் சோதிக்க இதோ ஒரு பரீட்சை(Post.9443)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 9443

Date uploaded in London – –31 MARCH  2021     

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

சிந்து நதி தீர -ஸரஸ்வதி நதிக்கரை நாகரீகம் பற்றி நாளுக்கு நாள் உளறல்கள் அதிகம் ஆகிக்கொண்டே வருகின்றன. ஸம்ஸ்ருதமும் தமிழும் தெரிந்த ஐராவதம் மஹாதேவன் முதல் அஸ்கோ பர்போலா வரை அத் தனை பேரும் திணறிப் போய் நமது வாழ்நாளில் இந்தப் புதிரை விடுவிக்கமுடியாது  என்று சொல்லிவிட்டனர். ஒருவேளை ரோசட்டா கல்வெட்டு (Rosetta Stone)  மாதிரி மும்மொழிக் கல்வெட்டு கிடைத்தால் புதிர் தீரும்; இதை முதல் முதலில் அகழ்வாராய்ச்சி செய்த மார்ஷல் ,மக்கே , மார்ட்டிமர் வீலர் ஆகிய மூவரும் தவறான கருத்துக்களை வெளியிட்டு ஆராய்ச்சியாளர்களை திசை திருப்பிவிட்டனர்.

“போதாக்குறைக்கு பொன்னியும் வந்தாளாம்”- என்ற பழ மொழிக் கேற்ப சோவியத்- பின்னிஷ் “அறிஞர்கள்” இது திராவிட மொழிபோல ஒட்டு மொழி (agglutinative language) அமைப்புடைய மொழி என்று உளறிவைத்தனர். இப்படி எல்லா அரைவேக்காடுகளும் உளறி 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. சிந்துவெளி அகழ்வாராய்ச்சி நடந்து ஒரு நூற்றாண்டு ஆகிவிட்டது பிரம்மமாண்டமான (Ultra-modern, super-fast computers) கம்பியூட்டர்களில் 4000 முத்திரைகளில் உள்ள எழுத்துக்களைக் கொடுத்த பின்னரும் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு இருக்கிறோம். முதல் மூவர் உளறலுக்குப் பின்னர் சரஸ்வதி நதி பற்றிய விஞ்ஞானத்  தகவல் வெளியாகின. மேலும் பல இடங்களில்– அதாவது கங்கைக் கரைவரை இந்த நாகரிக சுவடுகள் பல்லாயிரம் சதுர மைல்களுக்குக்  காணப்பட்டன. இவை எல்லாம் சர்ச்சசையை உண்டாக்கி மேலும் குழப்பிவிட்டன.

இதற்கிடையில் பல ‘கால் வேக்காடுகள்’ கீழடியைப் பார் , யாழ்ப்பாணத்தைப் பார் தமிழன் தான் உலகத்தையே கண்டு பிடித்தான் என்று ‘பிளாக்கு’களில் முழங்கி வருகின்றனர். இந்தப் பயல்கள் யாரும் சிந்துவெளி பற்றிய வரலாற்றையோ உலக மொழிகள் வளர்ந்த வரலாற்றையோ சத்தியமாகப் படித்தது இல்லை என்பது கட்டுரையின் முதல் பாரா விலேயே தெரிந்து விடுகிறது; ஆகவே தமிழர்கள் தாங்களே மார்க் போட்டு — மதிப்பெண்கள் கொடுத்து — இதற்கும் நமக்கும் சம்பந்தம் உண்டா என்று தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு படத்தையும் உற்று நோக்குங்கள் . தமிழர் தொடர்புடையது என்று உங்கள் மனச் சாட்சி சொல்லுமானால் பத்து மார்க் போட்டுக் கொள்ளுங்கள். கொஞ்சம் சம்சயம்/ஐயப்பா டு /சந்தேகம் இருந்தால் 5 மார்க் ; இதற்கும் தமிழனுக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது என்றால் பூஜ்யம் மார்க் !

பின்னர் கூட்டிக்கழித்து  டோட்டல் Total போடுங்கள் . 50 மார்க்குக்கு மேல் தமிழர்கள் நாகரிகம் என்று வந்தால் கொஞ்சசம் சிந்துவெளி புஸ்தகங்களைப் படித்துவிட்டு திருப்பியும் பாருங்கள். தமிழில்  சிந்துவெளி நாகரிகம் பற்றி நானும் இந்த பிளாக்கில் நிறைய கட்டுரைகளை வெளியி ட்டு  உள்ளேன். ஆனால் நான் எல்லோருக்கும் ரெக்கமண்ட் ( I recommend the book DECIPHERING THE INDUS SCRIPT by Asko Parpola)  செய்வது அஸ்க்கோ பர்போலா எழுதிய ‘டிசைப்பரிங் தி இண்டஸ் ஸ்க்ரிப்ட்’ என்ற புஸ்தகம்தான்.

பழங்காலத் தமிழர்கள் சிந்து என்ற நதியை குறிப்பிடவே இல்லை. ஆனால் கங்கை, இமயம் பற்றி நிறையக் குறிப்பிட்டுள்ளனர். சங்க இலக்கியத்தில் சோழர்கள் தங்களுடைய மூதாதையர் வரிசையில் சிபிச் சக்ரவர்த்தி, மாந்தாதா ஆகியோரைக் குறிப்பிடுகின்றனர். அந்த ஒரு சில குறிப்புகள் தான் இவர்களுக்கு வடமேற்கு இந்தியா பற்றி கொஞ்சம தெரியும் என்று காட்டுகின்றன . இது வரலாற்றுக் குறிப்பு அல்ல; புராணக் குறிப்பு.

இதோ படம் ஒன்று ; இது ஏன் ஒரு கொம்போடு Unicorn இருக்கிறது. இதன் முன் இருப்பது ரிக்வேதம் குறிப்பிடும் சோம பான வடிகட்டி என்பது பெரும்பாலோர் கருத்து. நீங்கள் தமிழர்களுடையது என்று நினைத்தால் 10 மார்க் கொடுங்கள் .

இதோ படம் 2: ஒரு பெண்மணி புலியுடன் பேசுகிறாள் . யார் இவள் ? நம்ம ஊர் கருப்பாயி, மாரியாத்தா , மூக்காயி , பேச்சி ?

படம் 3:- இதோ ஒருவர் யானைமீது  நிற்கிறார். இவரை இந்திரன் என்றும், பரதன் என்றும் சிலர் கூறுவர். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? கரிகாலன், நெடுஞ்செழியன்?

படம் 4: இதோ ஒரு சாமி ; இதை கண்டுபிடித்தவுடனேயே இதை ப்ரோட்டோ சிவன் – அதாவது ‘பசுபதி’ என்று யஜுர்வேதம் குறிப்பிடும் சிவனுக்கு முன்னோடி Proto Shiva இவர் என்று வெள்ளைக்காரர்கள் உளறிவிட்டனர். அனால் இதே போல மத்திய கிழக்கில் பஹ்ரைன் தீவில் மிருகங்கள் சூழ்ந்த உருவமும். கெல்டிக் கடவுளரில்  ஒருவரும் இப்படி உள்ளனர். பிறகாலத்தில் தத்தாத்ரேயர் , செயின்ட் பிரான்சிஸ் ஆப் அஸிஸி (Saint Francis of Assisi) போன்றோர் உருவங்களும் இப்படி உள்ளன. இது தமிழர் உடையதா ?

இதோ படம் 5; இதைப் பார்த்தவுடன் நமக்கு கோவிலில் உள்ள சப்த மாதர் என்பதுதான் நினைவுக்கு வரும். ஆனால் சங்க இலக்கியத்தில் ஏழு கன்னியர் இல்லை. மற்ற இந்து தெய்வங்கள் உள . நீங்கள் தமிழர் நாகரீக காட்சி என்று நினைத்தால் பத்து மார்க் போடுங்கள் . இந்தக் காட்சியை நர பலி என்றும் மேல்நாட்டார் வருணிக்கின்றனர்

படம் 6: இவள் ஒரு நடன மாது. இந்து சிற்ப சாஸ்திர புஸ்தகங்களில் தேவி சிலைகளை வருணிக்கும் ‘த்ரிபங்க’ போஸ் Tribhanga Pose கொடுக்கிறாள். அதாவது மதுரை மீனாட்சி போல மூன்று வளைவு கொடுத்து உடலைக் காட்டுவது பெண்கள் நிலை. ஆண்கள் நேராக நிமிர்ந்து நிற்பார்கள். இவள் முகத்தை, உதட்டைப் பார்த்தால் ஆப்பிரிக்க நீக்ரோ போல உளது ; தமிழச்சிதான் என்று உங்கள் மனச் சாட்சி சொன்னால் போடுங்கள் 10 மார்க்.

படம் 7; இதை பேய் (Devil, Ghost)  பூதம் என்று வருணிக்கின்றனர். யார் இந்த உருவங்கள்?

படம் 8. உடலில் பாதி புலி உருவம் யார் இவள்? தமிழசசியோ?

படம் 9: இவரை யோகி என்றும் மன்னர் என்றும் புரோகிதர் என்றும் வருணிப்பர். பூவாடை– பூக்கள் பொறித்த பொன்னாடை அணிந்து பிராமணர்கள் போல left தோளில் ஆடையை விட்டுள்ளார். ஆனால் இவருடையய முக க்ஷவரம் (Shaving style) இவரை மத்திய கிழக்கு பேர்வழி என்று காட்டுவதாக அறிஞர்கள் பகர்வர்.

படம் 10: உலக மஹா அதிசயம்! ஏராளமான காளைகள் உருவம் பொறி த்த முத்திரைகள் உள்ளன . குதிரையோ பசுவோ ஒரு முத்திரையிலும் இல்லை! ஏன் ? ஏன் ?ஏன் ? காளை என்பது பசு இல்லாமல் வந்திருக்க முடியாதே!

இன்னும் சுவஸ்திகா, கூட்டு மிருகங்கள் என்று ஏராளமான புதிர்கள் உள்ளன. சாம்பிளுக்காக பத்து படம் கொடுத்தேன் .

இந்த முத்திரைகள் பற்றி அறிஞர்களிடையே கருத்து ஒற்றுமை இல்லை. ஆளாளுக்கு ஆள் ஒரு விளக்கம் சொல்லுவர். நீங்களும் கொஞ்சம் சிந்தித்து மார்க் போட்டு இது தமிழன் நாகரீகமா என்று சொல்லுங்கள். நான் கொடுத்த மதிப்பெண்களை பின்னொரு கட்டுரையில் மொழிவேன்.

tags – சிந்து வெளி, தமிழர்கள்,  பரீட்சை, புலிப் பெண் , பசுபதி, யோகி, சோம பானம் 

பிள்ளையாரைத் தமிழர்கள் கும்பிடவில்லையா??!! (Post No.3123)

ganesh laddu

Written by S NAGARAJAN

 

Date: 5 September 2016

 

Time uploaded in London: 5-05 AM

 

Post No.3123

 

Pictures are taken from various sources; thanks.

 

ச.நாகராஜன்

 

ganapathy, mysore

இணைய தளம் வந்து விட்ட காலத்திலிருந்து எல்லோரும் அறிஞர்களே!

மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதி இணையத்தில் “போடுவதைக்” கருத்துச் சுதந்திரம் என்று எடுத்துக் கொண்டு விட்டு விடலாம்.

ஆனால் நச்சுக் கருத்துக்களைப் பரப்புவர்களை மன்னிக்க முடியாது!

 

 

தீய சக்திகளின் கொள்கை பரப்பாளர்களுக்கு இணைய தளம் ஒரு வேடிக்கையான விளையாட்டுக் களம்

ஆரியர், ஐயர் என்று திட்டுவது, பிள்ளையாரில் ஆரம்பித்து கிராமத்து ஐயனார் வரை எல்லாக் கடவுளரையும் (இயேசு அல்லா நீங்கலாக – இவர்களைத் திட்டினால் தீட்டி விடுவார்களே) திட்டுவது – இதுவே இவர்களுக்குப் பொழுது போக்கு.

 

 

இவர்களின் எழுத்துக்களில் கருத்துக்களை விட ஆபாசமான வார்த்தைகளுக்கே முதலிடம் தருவது வழக்கம்.

இப்போது விநாயக சதுர்த்தி வருவதை  முன்னிட்டு பிள்ளையார் தமிழர் தெய்வமே இல்லை, பிள்ளையார் வழிபாடு பிற்காலத்தில் புகுத்தப்பட்ட வழிபாடு என்று ஒரு புரளியை தீய சகதியின் ‘அறிஞர்’ ஒருவர் இணையதளத்தில் பதிய விட்டிருக்கிறார்.

 

 

ஆனால் அது பதிய விட்ட போதே வாடி வதங்கி விட்டது.அந்தக் கருத்து பதிய விட்ட போதே அதைத் தமிழர்கள் அபார்ஷன் செய்து விட்டார்கள்!

 

ஏனெனில் பிள்ளையார் தமிழரின் தெய்வம் இல்லை என்றால் வேறு யார் தான் தமிழர் தெய்வம்!

 

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பது தமிழர்களின் முழக்கம்.

 

சிவன் அமைத்த தமிழ்ச்சங்கத்தை இன்றும் மீனாட்சி அம்மன் கோவிலில் கண்டு மகிழலாம்.

 

புலவர்கள் புடை சூழ இறையனார் அமர்ந்திருக்கும் கம்பீரமே கம்பீரம். அங்கு முழக்கமிட்ட தமிழ் மொழியே உண்மையில் தெய்வ மொழி.

 

 ganapathy swastik

சிவனின் அருமை மகனான பிள்ளையார் அல்லவா சங்கத் தமிழ் மூன்றையும் தருபவர். அவரது தம்பியான முருகன் அல்லவா தமிழ் முருகன்! அப்பனுக்கு மந்திரத்தின் பொருள் விளக்கம் சொன்ன தகப்ப்ன் சாமி தமிழுக்கும் அல்லவா பொருளுக்கும் பொருளானவர்!

 

ஆக இந்தப் பிள்ளையாரை தமிழர்களாகிய நாம் கும்பிடவே இல்லை என்பது தீய சக்திகளின் இமாலயப் பொய்!

 

திருமுருகாற்றுப்படை என்பது சங்க இலக்கியத்தில் பழமையான நூல். இதன் காலம் குறைந்த பட்சம் 2000 ஆண்டுகளுக்கு  முந்தையது.இதில் கடைசியில் உள்ள பத்து வெண்பாக்களில் ஏழாம் வெண்பாவில் “ஒரு கை முகன் தம்பியே” என்று விநாயகர் குறிப்பிடப்படுகிறார்.

 

 

தமிழ் மூதாட்டியும் உலக அறிஞர்களில் ஒருவருமான ஔவையார் யாரிடம் சங்கத் தமிழைத் தனக்குத் தந்து அருளுமாறு வேண்டினார்?

 

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை                            

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  – கோலஞ்செய்                                 

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு                            

சங்கத் தமிழ் மூன்றும் தா!”

 

 

அடடா, என்ன ஒரு வணிக நேர்த்தி!

 

நான்கு தருகிறாராம், ஆனால் மூன்று கொடுத்தால் போதுமாம்!

பாகும் தேனும் பாகும் பருப்பும் ஆகிய நான்கையும் பெற்ற பிள்ளையார் முத்தமிழையும் அள்ளித் தராமலா இருப்பார்!

அருளினார்! ஔவையைப் பாட வைத்தார்! இறவாப் புகழை அளித்தார்.

 

 

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்               

நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு                       

துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம்                

தப்பாமல் சார்வார் தமக்கு!

 

 ganesa shrine,thailand

ஔவையின் வாக்கைக் கடைப்பிடித்து பூக்கொண்டு விநாயக சதுர்த்தி அன்று தப்பாமல் பிள்ளையாரை வணங்குவோம்!

தீய சக்திகள் அழிந்து தமிழ் நாடு நல்ல சக்திகளின் இருப்பிடமாக ஆக வேண்டுவோம்!

*********