YOUNG and OLD: PIMPLES and WRINKLES (Post No.10,977)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,977

Date uploaded in London – –   13 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 73

Kattukutty

When YOUNG,

I was WORRIED about MY PIMPLES.

When I am OLD,

I am WORRIED about MY WRINKLES.

When I was YOUNG,

I was WAITING to HOLD someone’s HAND.

When OLD,

I am WAITING for SOMEONE to HOLD MY HAND.

When YOUNG,

I wanted my parents to leave me alone

When I AM OLD

I am worried to be left alone

When I was YOUNG,

I HATED being ADVISED.

When OLD,

there is NO ONE around to TALK or ADVISE.

When YOUNG,

I ADMIRED BEAUTIFUL THINGS.

When I am OLD,

I see BEAUTY in THINGS around ME.

When I was YOUNG,

I felt I was ETERNAL.

When I am OLD,

I know SOON it will be MY TURN.

When I was YOUNG,

I CELEBRATED the MOMENTS.

When I am OLD,

I am CHERISHING MY MEMORIES.

When I was YOUNG,

I found it DIFFICULT to WAKE UP.

When OLD,

I find it DIFFICULT to SLEEP.

When I was YOUNG,

I WANTED to be a HEART – THROB.

When OLD,

I am WORRIED when will MY HEART STOP.

At EXTREME STAGES of OUR LIFE,

WE WORRY but WE DON’T REALIZE,

LIFE NEEDS to BE EXPERIENCED.

It DOESN’T MATTER whether YOUNG or OLD. LIFE needs to be LIVED and LIVED WITH LOVE & LOVED ONES on. You are surely one of these.

**

Tags – Young, old, pimples, wrinkles

கடவளை எங்கே தேடுவது? (Post.10,976)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

 Post No. 10,976

 Date uploaded in London – –   13 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் 70

Kattukutty 

கடவளை எங்கே தேடுவது?

 நம்மிடம் ஒரு ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம், ‘கை, கால் நல்ல தானே இருக்கு, உழைத்து சாப்பிடு’, என்று அறிவுரை கூறும் நாம், கோவிலுக்குச் சென்று 100 ரூபாயை கடவுளின் உண்டியலில் போட்டு விட்டு ‘எனக்கு பணம் கொடு, வீட்டை கொடு, சொத்தை கொடு’ என்று கேட்கிறோம். பூசாரிகளையும் வளர்த்து விடுகிறோம்.

நாம் அவர்களிடம் சொல்வது போல கடவுள் நம்மிடம் சொன்னால் என்ன ஆகும்? உனக்கும் கை, கால் இருக்கு, உழைச்சு சம்பாதிச்சு வாங்குனு சொல்லிட்டா…

 இல்லாதவன் இல்லை என்று கேட்கும் போது இருப்பவன் கொடுத்தால் அவனும் ஒரு வகையில் கடவுள் தான்…

கடவுளைக் கோவிலில் தேடாதே. உன்னில் உருவாக்கித் தேடு!

 **

பார்வைகள் பலவிதம்!

எனக்குத் திருமணமான வருடம்.

தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளைப் பயன்படுத்துவேன்.

வாசல் வரண்டாவில் சைக்கிளை வைத்திருப்பேன். கீழே ரோட்டிற்கு இறங்க மொத்தம் நான்கு படிகள். தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளை கீழே இறக்க வேண்டும். காலில் செருப்போது சைக்கிளை இறக்கினால் சறுக்கி விட்டு விடும். எனவே காலில் செருப்பு இல்லாமல் சைக்கிளை கீழே இறக்குவேன்.

என் மனைவி, என் செருப்புகளை கையில் எடுத்து, கீழே வந்து தருவாள். நான் செருப்பை காலில் மாட்டிக் கொண்டு சைக்கிளில் அலுவலகம் செல்வேன்.

இது தினசரி நடக்கும் நிகழ்ச்சியாகும். ஒரு நாள் என் மைத்துனன், எங்கள் வீட்டிற்கு மூன்று நாட்கள் தங்குவதற்குவ் வந்தான். நான் தினமும் அலுவலகம் செல்ல சைக்கிளை எடுப்பதையும், என் மனைவி என் செருப்புகளை எடுத்து, கீழே வந்து கொடுப்பதையும் கவனித்து வந்தான்.

மூன்று நாட்கள் கழித்து, ஊருக்குப் போனவனை, என் மாமனார், “மாப்பிள்ளை எப்படி?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு அவன் சொன்ன பதில் :” மாமா மற்ற விஷயங்களில் நன்றாகத் தான் இருக்கிறார். ஆனால், அக்கா கையில் செருப்பை எடுத்தால் தான், மாமா ஆபீஸ் போகிறார்.:

 இப்படித் தான் எல்லோருக்கும் தகவல்கள் பரிமாற்றப்படுகிறது.

 **tags-  பார்வைகள்,எங்கே தேடுவது, கடவுள்

அலங்காரம் செய்து கொண்டு உடலைப் பேணுங்கள்! (Post.10,975)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,975

Date uploaded in London – –     13 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஹெல்த்கேர் மே 2022 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

அலங்காரம் செய்து கொண்டு உடலைப் பேணுங்கள்!

ச.நாகராஜன்

புராதனமான பாரதத்தில் பெண்கள் தனியொரு முக்கியத்துவத்தைக் கொண்டு வாழ்க்கையில் பிரதானமான பங்கு வகித்து வந்தார்கள் என்பதை நமது இலக்கியங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

பெண்கள் சிறு வயது முதல் உடலைப் பேணிப் பாதுகாத்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்வதற்கு எத்தனை வழிகள் உண்டோ அத்தனையையும் நமது நூல்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.

பெண்களுக்கு 16 வித அலங்காரங்கள் உண்டு.

இவற்றைச் செய்து கொண்டு உடலைப் பேணிப் பாதுகாத்து தன் கணவன், குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தாரையும், அண்டை அயலாரையும் தனது அன்பான நடை, உடை, பாவனைகளால் மகிழ்விக்க வேண்டும் என்பது அடிப்படையான வாழ்க்கை நெறியாக அமைந்து இருந்தது.

16 வித அலங்காரங்களைப் பற்றி வல்லப தேவர் தனது சுபாஷிதாவளி என்ற நூலில் விவரமாகக் குறிப்பிடுகிறார்.

அவையாவன:

1) ஸ்நானம்

2) அழகிய ஆடை

3) திலகம்

4) கண்ணுக்கு மை

5) காதணி

6) மூக்குத்தி

7) கூந்தல் அலங்காரம்

8) ரவிக்கை (மார்க்கச்சு)

9) சிலம்பணி (நூபுரம்)

10) நறுமணம் (உடல் முழுவதும் வீசும் சுகந்த மணம்)

11) வளையல்

12) பாத அழகு (கொலுசு உள்ளிட்டவை)

13) மேகலை

14) தாம்பூலம்

15) மோதிரம்

16) அலங்காரம் செய்யும் திறமை

இதே போல இந்த 16 வகைகளை ரஸ கௌமுதி என்ற நூலும் மிக விவரமாகக் குறிப்பிடுகிறது.

இலக்கியங்களில் சுட்டிக் காட்டப்படும் (கதா) நாயகிகளின் அழகை இந்தப் பதினாறையும் சொல்லி விவரிப்பது இலக்கிய மரபாக இருந்தது.

ஶ்ரீ ரூப கோஸ்வாமி தனது ஶ்ரீ ராதா ப்ரகரணம் என்ற நூலில் ராதையை இந்த பதினாறையும் சொல்லி வர்ணிக்கிறார்.

கேஸ அலங்காரம் என்று எடுத்துக் கொண்டால் கூந்தலை எப்படிப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பது என்று ஒரு பெரிய நூலையே எழுதி விடலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சாந்து, கண் மை உள்ளிட்டவற்றை ஆங்காங்கே உள்ள பெண்மணிகள் கூடி ஒருங்கிணைந்து தாமே செய்து கொள்வதை அனைவரும் அறிவோம்.

நதிகளில் குளிப்பது ஒரு விதமான மூலிகைக் குளியலாக அமைந்து உடலில் இருக்கும் அனைத்து ரத்த நாளங்களையும் ஊக்குவித்து, தோலையும் அழுக்கற்றதாக்கி மேனியைப் பளபளப்பாக்கி வந்தது.

நோயில்லா நெறி என்ற தஞ்சை சரஸ்வதி மஹால் வெளியீட்டில் காவிரி, தாமிரபரணி, வைகை உள்ளிட்ட ஆறுகளின் நீர் எந்த விதமான அருமையான தன்மைகளைக் கொண்டு நன்மைகளைத் தருகிறது என்பதை விளக்கிக் கூறுகிறது.

இவ்வளவு அலங்கார பூஷிதையாக இருக்கும் பெண்மணிக்குத் திருஷ்டிப் பொட்டு வைப்பதும் ஒரு வித கலையாக இருந்தது.

காதம்பரி, சாகுந்தலம், ருது சம்ஹாரம் உள்ளிட்ட நூல்களை பெண்களும் ஆண்களும் ஒரு முறையேனும் படித்தால் நம் பண்டைய மரபில் அழகு எப்படிப் பேணிப் பாதுகாக்கப்பட்டு போற்றப்பட்டு வந்தது என்பதை அறியலாம்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியை வர்ணிக்கும் இளங்கோ அடிகள் “வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்” என்கிறார்.

பூமா தேவியே கண்ணகியின் வண்ணச் சீறடியை – பாதங்களைப் பார்த்ததில்லையாம்.

அப்படி இல்லத்திலேயே போற்றி வளர்க்கப்பட்டவள் அவள்.

திருமணத்திற்கு முன் தினம் ‘மெஹந்தி கி ராத்’ என்று அழைக்கப்படுகிறது. இன்றும் கூட ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் பெண்கள் மெஹந்தி அலங்காரம் செய்து கொள்வதை அனைவரும் அறிவோம்.

ஆக நமது இன்றைய நாளில் மகளிர் அனைவரும், கன்னியராக இருந்தாலும் சரி, மணம் முடித்தவராக இருந்தாலும் சரி உடலை அக்கறையோடு பாதுகாத்து இயல்பான அழகுக்கு மெருகூட்டும்  விதத்தில் 16 வகையான அலங்கார வகைகளைச் செய்து இன்னும் கொஞ்சம் அழகைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

உலகளாவிய விதத்தில் நவீன நாகரிக நாரீமணிகள் அலங்காரத்தை மேற்கொள்வது வியக்க வைக்கும் ஒரு பெரிய வணிகமாக ஆகி விட்டது.

உலக ஃபேஷன் தொழிலின் மொத்த மதிப்பு இன்று : 3000 பில்லியன் டாலர்கள் ( ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி; ஒரு டாலரின் இன்றைய இந்திய மதிப்பு சுமார் 76 ரூபாய்! மொத்த மதிப்பை நீங்களே இந்திய ரூபாயில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்!)

இதில் பெண்களுக்கான ஆடை அணி அலங்காரம் மட்டும் 621 பில்லியன் டாலர்கள்!

மணப் பெண்களில் அலங்கார ஆடைகள் மட்டும் 57 பில்லியன் டாலர்கள்!

அடிப்படையான ஃபேஷியல் வகைகள் 7.

7 வகையான அடிப்படை முகங்களில் தாங்கள் எந்த வகை என்பதைப் பெண்மணிகள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேனியின் பளபளப்பைத் திகைக்க வைக்கும் அளவு கூட்டும் பொருள்கள் இன்றைய சந்தையில் உள்ளன.

லோஷன், சீரம், மாய்ஸ்சரைஸர் என்று இந்தப் பட்டியல் மிக நீண்ட ஒன்று.

நமக்குத் தேவையானவற்றை உடலுக்கு ஏற்றபடி தேர்ந்தெடுக்க வேண்டும்.

பழைய காலத்தில் (கிராமங்களில் பெண்மணிகள் கூடி) இதற்கென நேரம் ஒதுக்கியது போல இன்றைய அவசர – சாஃப்ட்வேர் – கணினி யுகத்திலும் சிறிது நேரத்தை ஒதுக்க வேண்டும்.

இதனால் தனக்கு தீவிரமான வியாதிகள் வராமல் தடுப்பதோடு தானும் ஆரோக்கியமாக இருந்து தான் உருவாக்கும் சந்ததியரும் ஆரோக்கியமானவர்களாக இருக்க ஒவ்வொரு பெண்மணியும் உதவி செய்யலாம்.

அழகு என்றால் என்ன?

பார்க்கும் ஒவ்வொரு தடவையும் ஒரு நுட்பமான நூதன உணர்வை பார்ப்பவரின் மனதில் ஏற்படுத்துவது தான் அழகு!

அனைவரும் சற்று அழகாகத் தான் இருப்போமே!

***

tags- அலங்காரம், அழகு, பெண்மணிகள்

HIMALAYAS IN THE RIG VEDA AND TAMIL SANGAM LITERATURE -1 (Post No.10,974)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,974

Date uploaded in London – –    12 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

            The reference to Himalayan mountains in the Vedic literature gives a severe blow to Max Muller gangs and Marxist gangs ; Rig Veda talks about Ganga- Yamuna and 30 other rivers towards West (up to Afghanistan). And the mention about camels as gifts to Vedic seers in Dhana Stuti hymns thrash and smash Max Muller gangs who said Aryans were nomads, they did not know agriculture, they came and settled in Punjab. All these bluffs are thrown to winds by geographical references upto Vidharba , the birth place of the beautiful princess Lopamudra who was married to Agastya. When one points out all these things to so called 30+ Indologists, they bluff more and more saying ‘it may be an interpolation’, ‘it was from the latter part of the Vedas’, ‘it may mean a different river or hill’ etc. It will remind everyone of us of the Aesop fable ‘The Wolf and the Lamb’. I want to eat you under some excuse.

Like Max Muller gang misled the entire world with Aryan Migration Theory, like Max Muller gang created Hitler (who said in his auto biography that he was an Aryan and they only can rule the word) by putting capital A for the common word ‘arya’ three other western idiots John Marshall , Mortimer Wheeler and Mackay misled the entire world saying Indus Valley Civilization is  non Aryan may be Dravidian. Now all their bluffs are dust binned due to excavations in a vast area and BARC’s Sarasvati River Research and NASA’s aerial pictures.

These two gangs rejected all the 154 generations of kings in our epics and Puranas as myths, rejected 100+ kings in Vedas and started our history from Buddha period.

Zend Avesta, the Veda of Zoroastrians/Parsis , also give a severe blow to these gangs of charlatans by referring to 16 regions including Sapta Sindhu (now Panch a Sindhu= Pancha Aapa= Punjab) covering areas of severe cold and severe heat. There also western idiots poked their noses and gave 100 explanations for each of the 16 geographical locations. The 16 place names cover Himalayas, Hindukush and Mujavant (land of Soma plant). In short they got confused by giving false statements and confused others as well.

xxx

‘Hima’ denoting cold, cold weather occurs several times in the Rigveda .  Himavant for the snowy mountains occurs both in the Rigveda and Atharvana Veda. It may cover a long range of the Himalayas .

AV- 12-1-11; RV 10-121-4

There are lot of other indirect references to mountains in River Hymns (Nadhi Stuti)

Then we see it several Brahmanas (later Vedic books) . Later we see it in Kalidasa of first century BCE followed by Sangam Tamil literature of first three centuries of modern era (CE).

The Vedas mentioned elephants which are not found in Europe. The Vedas insisted water for all the ceremonies from birth to death. All these showed that the Vedic Hindus were the sons of the soil and they migrated to Mesopotamia, Misra desa(Egypt) and Turaga desa/horse land (Turkey) and Aryan desa  (Iran), Surya desa (Syria) etc.

We see Tamils naming their native places of South India in Sri Lanka when they migrated there. We see river Ganga/s name in Sri Lanka, South East Asia and central Africa (Congo=Ganga) when they migrated to those places. English also named places in Canada, Australia, New Zealand, America and South Africa after their native places in England or other parts of Europe. In the same way when Zoroaster or his followers migrated to Iran, he/they named it Aryan/Iran.

Xxx

Now let us look at Himalayas in detail

The word Hima/Snow in Sanskrit changes to

Imaya – in Tamil Sangam literature

Zyma – Avestan  (h= z or s)

Kheima – Greek (H=K)

Hiems- Latin (closer to Tamil word Imaya)

Zima – Slavic languages (Hindus went to Iran and from there to Europe or via Slavic areas they went to Iran)

Gem – Celtic languages (H=G)

Xxx

Himalayas in the Vedas

His, through his might, are these snow covered mountains, and men call sea and Rasa his possession

His arms are these , his are these heavenly regions. What God shall we adore with our oblation” -RV.

10-121-4

(Griffith translation itself is wrong; ‘Ka’ means Prajapati; ‘K’a also means ‘What’; Probably the poet used it as a Sleshma= Doble entendre; The Rishi/poet’s name is Hiranyagraban, son of Prajapati)

The River Rasa in the same stanza is also an unsolved mystery in the Rig Veda. Some think it is a river in Punjab; Griffith and others think it is a mystical river in heaven or in atmosphere)

Rig Veda Mandala 10 Hymn 121-4


यस्येमे हिमवन्तो महित्वा यस्य समुद्रं रसया सहाहुः |
यस्येमाः परदिशो यस्य बाहू कस्मै देवाय हविषाविधेम ||

xxx

From the Atharvana Veda (AV)

12-1-11 of Bhumi Sukta the poet used the word Himavanto again:-

“Pleasant be thy hills, O Earth,

Thy snow-clad mountains and thy woods

Earth – – brown, black, ruddy and multi coloured

the firm earth protected by Indra,

on this earth I stand , unvanquished, unslain, unhurt  (AV 12-1-11)

We have more references to Himalayan rivers including Ganga, Sindhu and Sarasvati.

Xxx

Kalidasa, the greatest of the Indian poets was the Royal poet in the court of the greatest Hindu King Vikramaditya who drove out Yavanas and Sakas and other foreign invaders from India, ruled in the first century BCE. Government of India follows his year as official year until this day. Kalidasa knew the whole geography of greater India; he is the one who called 1500 mile long Himalayan range as the Measuring rod of earth’; he must have looked at it from space! Or Hindus have drawn a clear map of northern mountains 2100 years ago. His description of the Himalayas is translated verbatim in the oldest part of Sangam Tamil literature. Probably Tamil Brahmin poets Kapilar and Paranar were thorough with Kalidasa’s works; particularly the first 10 slokas of Kumarasambhavam where Kalidasa describes the Himaalayaas in beautiful verses.

“There is in the northern quarter, the deity souled lord of mountains , by name Himalaya who stands like the measuring rod of the earth spanning the eastern and western oceans (Devataatma, earth’s Maanadandah)”

The Tamils never mentioned anything about River Sindhu (Indus) until seventh or eighth centuries. They can never be linked with Indus Valley Civilization!

Devatatma Himalaya, Kanchana Srnga (kanchunjanga) Himaalaya, Northern border – all such Sanskrit expressions are found in oldest part of Tamil literature. They were greatly influenced by Kalidasan Terminolgy.

From Tamil literature

Puranaanooru – 2-24; 34-21; 39-15; 132-7; 166-33; 214-11; 369-24; 39-15

Akanaanooru – 127-4; 265-3

Paripatal 8-11; 8-12; 1-51; 5-48

Sirupan – line 48;

Natrinai – 356, 369,

Kurunt – 158;

Pathitruppaththu – 11-23; 43-7;

Perum- line 429

Kali – 38-1; 92-18; 105-75

POST SANGAM SILAPPADIKAARAM-  about 20 places

Tamil used Imaya and Imaiya, both spellings

We have got more words for Himalayas with the prefix Vada= North (Vadavarai, Vada imayam, Vada kundram etc)

My old Articles on Himalayas

GEM STONES IN KALIDASA & TAMIL LITERATURE

https://tamilandvedas.com › 2012/02/13 › gem-stones-i…

13 Feb 2012 — Kalidasa uses 16 names for the Himalayas including Kailash and Kubera sailaHe is all praise for the HimalayasHe is so excited whenever …


Raguvamsam | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › raguvamsam

13 Feb 2012 — Kalidasa uses 16 names for the Himalayas including Kailash and Kubera sailaHe is all praise for the HimalayasHe is so excited whenever …

To be continued……………………..

Tags- Himalayas,Kanchenjunga, Kalidasa, Rigveda, Tamil literature

இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!—2 (Post No.10,973)

WRITTEN BY B. KANNAN, DELHI

Post No. 10,973

Date uploaded in London – –   12 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இலக்கியத்தில் நையாண்டி, பரிகாசம்!–2

Written By B.Kannan,Delhi

இப்போது நாம் இதுவரை இந்தி இலக்கியத் துறையில் படித்தோ, கேட்டோ அறிந்திராத  பிரபல சாகித்தியக் கர்த்தாக்களின் நகைச்சுவை மிளிரும் நையாண்டிப் பாக்கள், உரைநடை நவீனங்கள் சிலவற்றைப் பார்க்கப் போகிறோம்.

18, 19-ம் பொ.ஆ.காலக்கட்டம் “ரிதி காவியக் கால்” (செயல் முறைக் காலம்) என அழைக்கப்படுகிறது. அப்போது பல கவிஞர்கள் காலத்தால் அழியாதக் கவிதைகளை இயற்றினர்.வாதப் பிரதிவாதங்கள் நடந்தன; அறிவியல் கோட்பாடுகளும், தத்துவ விளக்கங்களும் எழுதப்பட்டன. ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தின் போது, சமுதாயத்தில் புரை யோடிப் போயிருந்தக் குறைகளைச் சீர்திருத்தும் நோக்கில் எழுதப்பட்டக் கதை கட்டுரைகளைத் தாங்கி வெளிவந்த இதழ்களுள் வெகு பிரபலமானவை, “பாரதேந்து மண்டல்”, மத்வாலா’ (கட் குடியன் வெறியாட்டம்), ‘சரஸ்வதி’, ‘அப்யுதை’ (விடியல்), ‘பாரத் மித்ரா’, ‘ஹிந்தி பிரதீப்’, முதலி யனவாகும். இவற்றில் மத்வாலா ஆங்கில ஏகடிய சஞ்சிகை “பஞ்ச்” (PUNCH) போன்றது எனப் போற்றப்பட்டது.

அதன் சந்தா விவரமே பரிகாசத் தொனியில் தான் அமைந்திருந்தது– ” (தனி பிரதி) ஒரு அணா ஒரு கப், வருடாந்திரப் பாட்டிலுக்கு முன் பணம் மூன்று ரூபாய்!” இதில் வெளியானக் “கல் வெட்டுக் கருத்து ஓவியங்கள்”, சல்தி சக்கி (நிறுத்த முடியாத அரவைக் கல்), சாபுக் (சாட்டை) போன்றவை நக்கலுக்குப் பெயர் போனவை. பாரத் மித்ராவில் வெளியிடப்பட்ட “சிவசம்புவின் கடிதங்கள்” அன்றைய அரசாங்கத்தின் கொள்கைகளை நையாண்டியுடன் கடுமையாகச் சாடியது. அச்சமயம் இந்தி இலக்கியவானில் தங்களது தனி முத்திரையைப் பதித்த இரு பெரும் கவிஞர் கள் பாரதேந்து ஹரிஷ்சந்திரா (1850-1884), ராதாசரண் கோஸ்வாமி (1858-1925). இருவரும் அன் றைக்கு நிலவிய சமய சீர்திருத்த முயற்சிகள், கலாச்சார மதிப்புகள்,காலனி ஆதிக்க சட்ட-ஒழுங்குப் பிரச்சினை, சாதி சங்கங்களின் நிலை ஆகியவற்றைக் கேலியும், கிண்டலும் செய்து கட்டுரைகளும், பாடல்களும் எழுதியுள்ளனர்.

நாம் இப்போது பார்க்கப் போவது ஶ்ரீராதாசரண் கோஸ்வாமி இயற்றியப் பிரஹசனக் கவிதை “நாபித் ஸ்தோத்திரா” (நாவிதர் தோத்திரம்) சமூகத்தில் நாவிதர்களின் நிலை, அவர்களது முக்கி யத்துவம், ஆகியவற்றை நகைச்சுவையுடன் கூறியுள்ளார். இவர்களை ஆசிதையன், ஏனாதி, சண்டிலன், சீமங்கலி, மங்ககிலி, மயிர்களைவோன், மயிர்வினையாளன், மாசுநீப்போன், மாஞ் சிகன் என அழைக்கிறார்கள். இவர்கள் ஐவகைப் பண்டிதர்களின் குணாதிசயங்களைப் பெற்றி ருப்பதால்,( ஆன்மிக வாழ்க்கை நெறி, உயிர்க் காக்கும் மருத்துவம், வாழ்வியல் ஒழுக்கம், இசை ஞானம், நாடகவியல் திறமை),ஐம்பட்டன் (ஐந்து+பட்டர்) என்றும் அறியப்படுகிறார்கள். ஒருவர் பிறக்கும் போது மருத்துவச்சியாக, உடல் பிணியின்றி வாழவைக்கும் போது வைத்தி யனாக, மரிக்கும்சமயம் கர்மபிணி போக்கும் பரிகாரியாக விளங்குகிறார்கள் என்பதைக் கவிஞர் அங்கெங்கே சுட்டிக் காட்டுகிறார்.

அம்பட்டன் என்ற வார்த்தை தவறான உச்சரிப்பு, ஐம்பட்டன்= ஐந்து+பட்டர் ஐந்து வகைப் பண்டி தர்களின் குணாதிசயங்களைப் பெற்றிருப்பவர் என்பதே இதன் பொருள். அந்த ஐந்துவகைப் பண் டிதன் என்றால் என்ன என்பது பலரின் மனதில் தோன்றும் கேள்விகள் இதோ அதற்கான விளக்கம்! 1,தத்துவம்(கடவுளை உணரும் ஆன்மாவின் ஆன்மீக தர்மம் வளர்க்கும் வாழ்க்கை நெறி) 2,மருத்துவம்(மறு+தத்துவம் என்ற பொருள் தரும் பூதஉடலின் உயிர்க் காக்கும் தர்மத் தின்படி விதி) 3,இயல்(அறிவு+ இயல்=அறிவியல் உலக மாற்றத்தை அறிந்து கொள்ளும் விதி நடனம் ஆடும் நாயகன் நடராஜன் தந்த வாழ்வியல் ஒழுக்கம்) 4,இசை (உலகத்திற்குப் புதிய தோர் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி அவர்களின் மனோபலத்தை அதிகரித்தல்) 5,நாடகம் (வாழ்வி யல் இலக்கணம் நீதி போன்றவற்றை நாடகத்தின் வழியாக கற்பித்தல்) இதில் குறிப்பிட வேண் டிய விஷயம் என்னவென்றால் மனிதன் பிறக்கும் போது மருத்துவச்சியாக வளமுடன் வாழ வைக்கும் போது வைத்தியனாக அவன் இறந்த போதும் கர்ம பிணிபோக்கும் பரிகாரியாக அவர்கள் இருக்கிறார்கள் மறவாதே என்றும் கோஸ்வாமி கூறுகிறார்.

அக்காலத்தில் கிராமங்களில் சுதந்திரமாகவும், பிரபலமானவர்களாகவும் விளங்கியவர்கள். ஊரில் நல்லதோ, கெட்டதோ எது நிகழ்ந் தாலும் முன்நிறுத்தப் படுபவர்கள் அவர்களே. அதுவே அவர்களுக்கு வலிமைச் சேர்த்தாலும் சிலர் அதிலும் குறை காணத் தவறவில்லை. ஏனெனில், கிராமத்து மிராசு, ஊர் பெரியோர்களின் அந்தரங்க ரகசியங்கள் அவர்களுக்கு அத்துப்படி! ஆகை யால் அச்சமூகத்தில் படித்து முன்னேறி யவர்கள் தங்கள் நட-உடை பாவனை, பழக்க வழக்கங் களைக் காலத்துக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் என்று எழுதுகிறார் கோஸ்வாமி.

அவர்களது நற்செயல்களைப் பாராட்டிப் புகழும் அதேசமயம் அவர்களின் மறுமுகத்தை வஞ்சப் புகழ்ச்சி செய்துவிடுகிறார். ஊரிலுள்ளத் தனிநபர்களின் உல்லாசக் கேளிக்கைகள், விருப்ப வெறுப்புகள் அனைத்தையும் அறிந்தவர்கள் என்பதால் காலனி ஆதிக்கம் தங்களின் ஆதாயத் துக்காக அவர்களைத் தந்திரமாக உபயோகித்துக் கொண்டது. இதன் மூலம் மற்றவர்களின் ஒருவித பயம் கலந்த வெறுப்பையும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டனர் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும் எனவும் குறிப்பிடுகிறார். தவிர, வருடாந்திரப் பெருவிழாவில்

நம்பெருமாள் பழையமுதும்-மாவடு ஊறுகாயும் சாப்பிட ஆர்வமுடன் ஜீயபுர யாத்திரை மேற் கொள்கையில் அங்கு, பெருமான் நாவிதச் சமூகத்துக்குப் பிரத்தியேகமாக அளிக்கும் மரியா தையைத்தான் மறக்க முடியுமா? ஆனால் இதற்குப் பிறகு தான் நம் பெருமாள் ரகசியமாக உறையூர் சென்று ஶ்ரீகமலவல்லித் தாயாரைச் சந்திப்பதும் அதற்காக ரங்கநாயகித் தாயாரிடம் மட்டையடி வாங்குவதும் நினைவுக்கு வருகிறது, அல்லவா?! அதுதான் நாவிதர் மகானின் ‘அதிர்ஷ்டக் கைராசி’!

இச்சிறு குறிப்புடன் இப்போது நாவிதரைத் துதிப்போமா…….?

சில முக்கியத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தி மூலப் பாடல்களின் தமிழாக்கத்தையும், அவற்றின் பொருளையும் கொடுத்துள்ளேன். மற்றவற்றைப் படித்து ரசிக்க வேண்டும்.

அக்காலத்துச் சூழ்நிலை, பழக்க வழக்கங்களைக் கருத்தில் கொண்டு நக்கலாகப் புனையப் பட்டக் கவிதையே இது என்பதை நினைவில் நிறுத்திக் கொள்வது அவசியம்.

சாஹித்திய அகாடமி, தில்லி, வாராணசி சௌகம்பா வெளியிட்டாரிடமும், தேசிய நூலகங் களிலும் ராதாசரண் கோஸ்வாமியின் புத்தகங்கள் கிடைக்கும்.”பாரதேந்து மண்டல்– ராதாசரண் கோஸ்வாமியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்”, தொகுப்பாளர்: கர்மேந்து ஷிஷிர்

“ஹே! ஹமாரே உஷ்ணதா சந்தாபித் சிர் கே ஷீதல் கர்ணேவாலே நாபித், ஆப்கோ ப்ரணாம் ஹை| யதி ஆப் ந ஹோ தோ, ஹமாரீ படீ துர்தசா ஹோ,க்யோங்கி தாடீ பட்கர் ஹமே பக்ரா பநா தே, சிர் கே பால் பட்கர் ஜடா ஹோ ஜாயே, ப்ரேத் மே ஔர் ஹம் மே குச் பீ பேத் ந ரஹே| லோக் ந மானே தோ சன் 1887 மே ஜப் பனாரஸ் மே நாயீ ஔர் லுஹாரோங் கா ஜஹ்டா ஹுவா தா உஸ் சமைய் கீ தவாரீக் தேக் லே| அதஏவ ஹே, ப்ரம்மாஜீ கே பால் பகீசே கே மாலீ, ஆப்கோ தன்ய ஹை!  (பாடல் 1)

 “ஹே, நாவித மகாபிரபு, எங்கள் மண்டைச் சூட்டைத் தணித்துத் தலையைக் குளிர்விப்பவரே, தங்களைச் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம். ஒருவேளை நீங்கள் இல்லாவிட்டால் நாங்கள் பெரும் வேதனையிலும், துன்பத்திலும் ஆழ்ந்திருப்போம். ஏனெனில், முகத்தில் நீண்ட தாடி வளர்ந்து ஆட்டுக் கிடா போல் ஆகியிருப்போம். ஜடாமுடி போல் சிகை வளர்ந்து நமக்கும் பேய், பிசாசுகளுக்கும் இடையே வித்தியாசம் தெரியாமல் போயிருக்கும். உங்களுக்குச் சந்தேகமாய் இருந்தால் காசியில் 1887-ல் நாவிதருக்கும், கொல்லருக்கும் இடையே நடந்த சச்சரவின் விளை வை ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். ஆகையால், ஓ,பிரம்மதேவனின் முடி தோட்டத்தைப் பராம ரிப்பவரே, எங்கள் பாராட்டு உங்களுக்கு உரித்தாகட்டும்!

ஹே நாபித் மஹாஷய! சர்காரீ கர்மசாரீ ரவிவார் கோ ஔர் ஷௌகீன் ராஜாபாபு புதவார் கோ அவஷ்யஹீ ஆப்கீ பூஜா கர்தீ ஹை, அதஏவ ஹே கல்க்ரஹ, அதவா ரவி-புத் கே

பிரகாஷ் ஹோனேவாலே அர்த்சாப்தாஹிக் சமாசார் பத்ர! ஆப்கோ தன்ய ஹை!

ஐயா, ஏனாதியாரே! அரசாங்க உத்தியோகஸ்தர்கள் ஞாயிற்றுக் கிழமையன்றும், டாம்பீகத்தில் மோகங்கொண்ட சமஸ்தான இளவரசர்கள் புதனன்றும் மாறாமல் சொல்லிவைத்தாற்போல் போற்றித் துதித்து உங்கள் சேவைக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். (முடி திருத்திக்கொள்ளப் புதன், ஜோதிடப்படி நேர்மறை எண்ணம் ஓங்கும் நல்ல நாள் என்பது நம்பிக்கை, ஞாயிறு விடுமுறை தினம்). ஆதலால், ஜனங்களுக்கு அறிவூட்டி, உற்சாகமளிக்கும் விதமாக வாரமத்தியில் வெளிவரும் பத்திரிகையைப் போன்றவரே, பசுவின் கழுத்தில் தொங்கும் சதை போல் எங்களையும் விடாமல் சுற்றியிருக்கும் கிருஹதேவரே! உண்மையில் நீங்கள் ஒரு ‘பெரிய’ மனிதர் தான்!

இஸ் பாரதவர்ஷமே கித்னீ சுகுமார் கன்யாவோன் கா தும்னே சிர் காடா, கித்னே படே ஆத்மி யோன் கோ லட்கியோன் சே தனக் சே லோப்மே ஃபஸ்கர் தரித்ரோங்கே யஹாங் சக்கீ பிஸ் வாயீ, கித்னீ தரூன் காமினியோங்கோ பாலகோங் கே சிர் மடா, கித்னீ பாலிகாவோங்கோ புட்டோங் கீ சிதா கீ லக்டீ பனாயீ, கித்னோ கா அனேக சல்பல் சே சர்வனாஷ் கியா, அதஏவ ஹே, அதாலத் கே உர்தூ காக(ஸ்)ஜோங்கே மாதா பிதா! ஹே மஹ்மூத் கஜ்னபீ, ஔரங்கஜீப், நாதிர்ஷா ஆதி பாரத் சர்வ நாஷகோன் கே படேபாயீ! தும் தன்ய ஹோ!

நம் பாரததேசத்தில் குல வழக்கத்தைக் கடைபிடிப்பவர்களின் அழகானப் பெண் குழந்தைகளின் தலைமுடியை  அதுவும் எண்ணிலடங்கா முறையில் மழித்து விட்டவர், தானே, நீங்கள்?

உங்கள் பணத்தாசைக்கும், பேராசைக்கும் எல்லையே இல்லை, போலும்! வறியக் குடும்பப் பெண்களை ஆசைக் காட்டி பெருந்தனக்காரர்களிடம் அடிமையாக வாழ கட்டி வைத்து, அவர் களை அரவை இயந்திரத்தில் அகப்பட்டுக் கொண்ட தானியம் போல் ஆக்கிவிட்டீர்களே, நியாயமா? அதேசமயம் எத்தனை இளமை வாய்ந்தக் கன்னியரை அதிகம் வயது முதிராத இளம் பையன்களிடம் ஒப்படைத்து இருக்கிறீர்கள்? உங்களால் எத்தனைப் பெண்கள் கிழ மனிதர்களின் சிதைக்குக் கட்டையாகிக் கருகியுள்ளனர்? எத்தனைப் பேர்களை உங்கள் தந்திரத்தாலும், நம்பிக்கைத் துரோகத்தாலும் படுகுழியில் தள்ளியிருக்கிறீர்கள், தெரியுமா மாஞ்சிகரே? முகலாயரது நீதிமன்ற உருது தஸ்தாவேஜு போன்றவரே! அதுவுமின்றிப் பாரதத் தைச் சூறையாடி அழிக்கத் துணிந்த, கஜனி முகமது, அவுரங்கசீப், நாதிர் ஷா போன்றோரின் மூத்த சகோதரரே, நிஜமாகவே நீங்கள் ஒரு ‘பெரிய’ ஆள் தான்!

பாரத்வர்ஷ கீ அனேக் சத்வா, விதவா ஸ்த்ரீயாங் நித்ய பிராதக்கால் உட்கர் துமே ஹஜாரோன் காலியாங் தேதீ, ஔர் அப்னே க்ருத (நெய்) சமான் கர்ப அஸ்ருவோன் ஸே நித்ய துமாரே மார்னேகோ ஹ்ருதயாக்னி மே ஹோம் கர்தீ, பர் தப் பீ தும் நஷ்ட நஹீ ஹோதே, வரன் பட்தேஹீ ஜாதே ஹோ, அத ஏவ ஹே ரக்தபீஜ் கே சந்தான்! ஹே ஹமாரே பூர்வ சஞ்சித் ப்ராரப்த கர்மோங்கே சஜாதீய! ஹே தேவதாவோங்கே சமான் அஜர், அமர்! துமே தன்ய ஹை!

இப் பாரததேசத்தின் அநேக சுமங்கலிப் பெண்மணிகளும், விதவை ஸ்த்ரீகளும் தினமும்  காலையில் எழுந்தவுடன், வெவ்வேறு காரணங்களுக்காக, உங்களைப் பலவாறு திட்டித் தீர்க்கிறார்கள், அவர்களின் அடிவயிற்றிலிருந்து மேலெழும்பி இதயமெனும் ஹோமகுண்டத் தில் நெய் வார்க்கப்பட்டு வெகுண்டெழும் தீப்பிழம்புப் போன்றக் கோபக்கனலால் உங்களுக்கு மரணம் சம்பவிக்க வசை பாடுகிறார்களே! ஆனாலும் உங்களுக்கு நஷ்டம் ஏதுமில்லை,மாறாக வளர்ந்து கொண்டேதான் போகிறீர்கள், அதாவது அரக்கன் ரக்தபீஜனின் வாரிசே! எங்கள் பூர்வ ஜன்மக் கர்மங்களை ஒன்றிணைப்பவரே! நீங்கள் தேவர்களைப் போல் இளமையாகவும், சிரஞ் சீவியாகவும் திகழ்வீர்களாக! நிஜமாகவே நீங்கள் பாராட்டுக்குரியவர் தான்!

TO BE CONTINUED……………………………………………….

TAGS– இலக்கியத்தில் ,நையாண்டி, பரிகாசம்,

கோபம் வந்தா என் மனைவி பத்ர காளியாயிடுவா………..(Post No10,972)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,972

Date uploaded in London – –   12 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 72

Kattukutty

சிரிக்காவிட்டால் விட மாட்டேன் -1

டாக்டர்- பல்லு எப்டி விழுந்துச்சு?

வந்தவர் – அத சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்ன்னு

என் பொண்டாட்டி சொல்லிருக்கா…….

xxxx

மன்னா! அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து

நம் ராணியை கடத்திச் சென்று விட்டான்….

ராணி சத்தம் போடவில்லையா???

“சீக்கிரம், சீக்கிரம் என்று அஙறினார்கள் மன்னா!

xxx

கட்ன பொண்டாட்டிய கை நீட்டி அடிச்சயே நீயெல்லாம்

ஒரு மனுஷனா?

கயிறால கட்டாம விட்டிருந்தா அவ என்ன அடிச்சிருப்பா……

xxxx

கோபம் வந்தா என் மனைவி பத்ர காளியாயிடுவா………..

என் மனைவி பாத்திர காளியாயிடுவா……….

xxx

அனுமதி கேட்கவும் இல்லை,

அனுமதி கொடுக்கவும் இல்லை,

ஆனால் பிடிவாதமாக ஒரு

முத்தம் கன்னத்தில்!!!

கொசுக்கடி………

xxxx

வெற்றி என்பது இட்லியைப்போல

வெந்தபின்தான் தெரியும்!!!

xxx

உங்கள் கணவரிடம் உங்களுக்கு பிடிக்காத விஷயம் என்ன?

அந்த ஆளையே பிடிக்காது……….

Xxx

காலையில என் வீட்டு வாசல்ல நான் தண்ணி தெளிச்ச போதும்,

என் வீட்டுக்காரர் எழுந்துக்குவார்……..

எப்படி?

குடிச்சுட்டு அங்கதான விழுந்து கிடப்பாரு…….

xxxx

என்னங்க சார், தலையில காயம்?

விறகு இடிச்சட்டுட்டது

பார்த்து போகக்கூடாது? … ஆமா விறகு எங்க இருந்தது???

என் பொண்டாட்டி கையில……

xxx

எங்க படத்தில டயலாக்கும் கிடையாது டைட்டிலும் கிடையாது….

ஆனா செம ஓட்டம் ஓடுது!

ஆர்ட் பிலிமா?

இல்ல ப்ளூ பிலிம்!!!

xxx

என்னங்க கல்யாண பொண்ணு காதுலே, கழுத்துல கையில்லலாம்

பூவை சுத்தி அனுப்பியிருக்காங்க?

பொன்ன வைக்கிற இடத்திலே பூவ வச்சாப் போறும்ன்னு சம்பந்தி

சொல்லி இருந்தாங்களாம்…….

xxx

இளைஞர்களை கவரணும்னு தலைவர் இப்படியா பண்ணுவாரு?

ஏன் என்ன சொன்னரு?

நாங்க ஆட்சிக்கு வந்தால் மாணவ மாணவியரின் “அரியர்ஸ் “

அத்தனையும் தள்ளுபடி செய்வோம்ன்னு வாக்குறுதி கொடுத்திருக்காரு!

xxx

மன்னர் போதேல இருக்கும்போது பாடப்போனது தப்பாப் போச்சே….

ஏன் புலவரே?

குவாட்டருக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையான்னு

கேட்கறார்……..

xxx

என்னய்யா இது இவ்வளவு மட்டமா இருக்கு போதையே ஏறல…

தண்ணி நிறைய கலந்துட்டீங்களா???

தலைவரே நீங்க குடிச்சது தண்ணி மட்டும்தான் நீங்க பார்ல இல்ல

மீட்டிங்ல இருக்கீங்க…….

Xxx

நகை கடைக்காரர் பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டீங்களே,

எப்படி போகுது……

பொண்ணு தங்கச்சிலை மாதிரி இருக்கான்னு வாய் தவறி சொல்லிட டேன்

இப்போ என மாமியாரும் மாமனாரும் “செய் கூலி”வேணும்ன்னு

அடம் பிடிக்கிறாங்க………..

xxx

அவர போலி டாக்டர்ன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க???

மாவுகட்டு போட “கிரைண்டர்” வாங்கணும்ன்னு சொன்னாரே!

xxx

சார்! செத்தவனின் பாடியையும் காணோம், கொலைகாரனும் தலை

மறைவாகி விட்டான் இப்போ என்ன சார் பண்ணறது?

கொலையானவனும், கொலையாளியும் சமாதானமாகி விட்டனர்ன்னு

“பைலை”க்ளோஸ் பண்ணி விடு.

டாக்டர் நூறு வயசு வரை வாழ என்ன செய்யணும்?

இதை நீங்க எங்கிட்ட வர்ரதுக்கு முன் யோசிச்சிருக்கணும்!

ஏசி போட்டதுக்கெல்லாம் ஒரு ஆளை தூக்குல போடுவாங்களா?

யோவ், அவன் ‘போட்டது” அஸிஸ்டென்ட் கமிஷனரை!

என் மனைவி சாரதா ரொம்ப நல்லவ…..

பின்ன ஏன் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டே???

அவ நல்லவன்னு இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்ட

பிறகுதான் தெரியுது!

என் பொண்ணு கல்யாணத்த வெறும் 5,500 ரூபாயில முடிச்சுட்டேன்!

எப்படி?

ஒரு மொபைல் போன் வாங்கி கொடுத்தேன்! ஓடியே போய்ட்டா!

xxx

வர்ணனையாளர்- நீங்க எங்கேர்ந்து பேசுறீங்க

அழைத்தவர்- T நகர்

வர்ணனையாளர் – அட நானும் T நகர்தான் . நீங்க எந்த ஏரியா?

அழைத்தவர் – சாய் அப்பார்ட்மென்ட்

வர்ணனையாளர் – நானு அதே அப்பார்ட்மென்ட்தான், ஆமா

உங்க பிளாட் நம்பர் என்ன?

அழைத்தவர் – 13

வரணனையாளர் -கிண்டல் பண்ணாதீங்க அது என் வீடு……

அழைத்தவர் – நான் உன் புருஷன்டி. மூதேவி, வீட்டு சாவியை

எங்கேடி வச்சிருக்கே???

வர்ணனையாளர் – .???

Xxx

எனக்கு 98 ல குழந்த பொறந்தது, உனக்கு???

108 ல……

xxx

***

அவள் என்னை திரும்பிப் பார்த்தாள், நானும் அவளைப் பார்த்தேன், அவள் மறுபடியும்…………. (Post10,971)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,971

Date uploaded in London – –   12 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழி – 71

Kattukutty

KITCHEN கிச்சன் மொழிகள்

தோல்வி என்பது பெருங்காயத்தப் போல

தனியாக சாப்பிட்டால்கசக்கும்…….

வெற்றி என்னும் சாம்பாரில் கரைத்து விட்டால்

மணக்கும்!

XXX

ஒரு குக்கரைப் போல இருங்கள். பிரஷர் அதிகமாகும்போது

‘விசில்’ அடுத்து கோண்டாடுங்கள்!

XXX

லட்சியமும் முட்டையும் ஒன்றே, தவற விட்டால் உடைந்து விடும்.

XX

சோம்பேறித்தனம் என்பது மிளகாய் காம்பு போல,

உடனே கிள்ளி எறிந்துவிட வேண்டும்.

XX

வாழ்க்கை என்பது சிக்கலான இடியாப்பம் தான்…..

அதில அன்பு என்ற தேங்காய்ப் பாலை கலந்தால்

வாழ்க்கை சுவைக்கும்!

XX

‘பொய்’, நூடுல்ஸ் போல தற்காலிகமானது.

‘உண்மை’, இட்லி’ போல நிரந்தரமானது!

XXX

கோபத்தை உப்பைப் போல பயன் படுத்துங்கள்

அதிகமானால் வாழ்க்கை சுவைக்காது.!

XXX

தலைக்கனம் என்பது வென்னீர் போன்றது.

அதை அடுக்தவர் மீது கொட்டாதீர்…….

நம் மீதே சிந்தி விடும்.

XXX

தாமதமாக கிடைக்கும வெற்றி பல் இழந்த போது

கிடைத்த முறுக்கு போல, அனுபவிக்கவே முடியாது.!

XXX

தன்னம்பிக்கை சூத்திரங்கள் சமையல் ‘ரெசிப்பி’ போல,

சமைப்பது உங்கள் கையில்தான் உள்ளது.!

XXXX

நமது சட்டையில் முதல் பட்டனை தவறாக போட்டுவிட்டால்,

பின் வரும் எல்லா பட்டன்களும் தவறாகவே அமையும்…..

By டெய்லர் பழனிச்சாமி்

எல்லாத் தத்துவங்களும் ஷேக்ஸ்பியர் மட்டும் தான்

சொல்ல முடியுமா??? ஏன எங்க டெய்லர் சொல்ல மாட்டாரோ?

XXX

அவள் என்னை திரும்பி பார்த்தாள்,

நானும் அவளைப் பார்த்தேன்

அவள் மறுபடியும் என்னைப் பார்த்தாள்

நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்

இப்படிக்கு

பரிட்சையில் ஒன்றும் தெரியாமல் முழிப்போர் சங்கம்

XXX

உன் பெயரைக் கூட நான் எழுதுவதில்லை அன்பே!

பேனா முனை உன்னைக் குத்திவிடுமோ என்று !

இப்படிக்கு

Spelling தெரியாமல் முழிப்போர் சங்கம்

XXX

எதுக்கு பையனை போட்டு அடிக்கிறீங்க?

லெட்டர போஸ்ட் பாக்ஸுல போடுன்னு சொன்னா

லெட்டர் பாக்ஸ் பூட்டிருக்குன்னு வந்துட்டான் சார்!

XXX

பார்க்கலாம் கேட்கக் கூடாதது?

நரியைப் பார்ப்பது நன்மையே.!

நரியின் ஊளையை கேட்பது தீமை.

XXX

பார்க்கவும் கூடாது, கேட்கவும் கூடாதது?

பூனையை பார்ப்பதும் தீமை, குரலைக் கேட்பதும் தீமை்.

XXX

கேட்பது நல்லது, பார்ப்பது நல்லதில்லை எது?

கழுதை கத்துவதை கேட்பது நல்லது,!

பார்ப்பது நல்லதில்லை.

XXX

பார்ப்பதும், கேட்பதும் நல்லது எது ?

கருடனைப் பார்ப்பதும் நல்லது, குரலை கேட்பதும் நல்லது.!

மயிலைப் பார்ப்பதும் நல்லது, குரலை கேட்பதும் நல்லது.!

இது வராஹ மிகிரரின் “பிருஹத் ஸம்ஹிதா” என்ற

நூலிலிருந்து எடுக்கப்பட்டது.

XXXX

ஒரு தனியார் துப்பறியும் நிறுவனம் உதவியாளர் வேலைக்கு

இன்டர்வியூ நடத்தியது. இன்டர்வியூ நடத்தியவர்கள்

வந்தவர்களிடம், ஒரு மனிதனின் பக்க வாட்டு முகம் கொண்ட

போட்டோவை காட்டி அதைப் பற்றிய கருத்துக்களை கேட்டனர்.

முதல் ஆள் – சார், இந்த ஆள் மூக்குக் கண்ணாடி போட்டிருக்க

முடியாது…….

து . நிறுவன மேனேஜர். – எப்படிச் சொல்கிறீர்கள்?

முதல் ஆள் – இவனுக்கு ஒரு காது தானே இருக்கு , எப்படி சார்

கண்ணாடி போட முடியும் ?

து.நி -அறிவுக் கொழுந்து, போய்யா வெளிலே………

இரண்டாவது ஆள் – இந்த ஆள் மூக்குக் கண்ணாடி போட்டிருக்க

மாட்டான் சார்……..

து. நி – என்னையா காரணம்???

இரண்டாவது ஆள் – இவனுக்கு ஒரு கண்ணுதானே இருக்கு……

து.நி – போய்யா வெளிலே

மூன்றாவது ஆள் – சார் ! இவன் பயங்கரமான டெர்ரரிஸ்ட் சார்!

பாதி தல இவன்கிட்ட இருக்கு மீதி தல காஷ்மீர்ல இருக்கு, இப்ப

சொல்லங்க புடிச்சுட்டு வந்துடறேன்…..

மயங்கி விழுந்தார் துப்பறியும் நிபுணர்!!!

**tags- ஞான மொழி – 71

பொன் கொண்டு இழைத்த மாட மாளிகை ஸ்ரீ லங்கா (Post.10,970)

MAP OF RAMAYANA LANKA

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,970

Date uploaded in London – –     12 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இனிமை தரும் இடங்கள் நிறைந்த இலங்கை என்ற தலைப்பில் 10-5-2022 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

பொன் கொண்டு இழைத்த மாட மாளிகை ஸ்ரீ லங்கா

ச.நாகராஜன்

‘எப்படி இருந்த ஆளு இப்படி ஆயிட்டயேப்பா’ என்று வாழ்ந்து கெட்ட மனிதரைப் பார்த்து வருத்தப்படுகிறோம். ‘சூப்பர் கம்பெனியா இப்படி ஆயிடிச்சு’ என்று லாபம் கொழித்த கம்பெனி நஷ்டம் அடைந்த போது ஆச்சரியம் கலந்த வருத்தத்தை வெளிப்படுத்துகிறோம். அதே போல் தான் நாடுகளைப் பற்றி நினைக்கும் போது இன்றைய ஸ்ரீ லங்காவைச் சொல்ல வேண்டி இருக்கிறது.

எப்படி இருந்த இலங்கை இன்று இப்படி ஆகி விட்டதே!

கம்பன் வர்ணித்த இலங்கை இது:

பொன்கொண்டு இழைத்து மணியைக் கொடு பொதித்த

மின் கொண்டு இழித்த வெயிலைக் கொடு சமைத்த

என் கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாத

வன் கொண்டல் தாவி மதி முட்டுவன மாடம்

அதாவது, “தங்கத்தைக் கொண்டு இழைத்து அதில் ரத்தினங்களைக் கொண்டு வந்து பதித்து வலிய மேகங்களையும் தாண்டி சந்திரனைத் தொடும் மாடங்கள் மின்னலைக் கொண்டு செய்யப்பட்டவையோ அல்லது சூரிய காந்தியைக் கொண்டு செய்யப்பட்டவையோ? எதை வைத்துத் தான் செய்தார்கள் என்று உண்மை அறிய முடியாமல் இருக்கின்றனவே!” என இப்படி கம்பன் இலங்கையை வர்ணிக்கிறான்!

இன்று தங்க மாளிகைகளும் இல்லை; குழல், வீணை, யாழ் ஒலியும் இல்லை; அழுகுரல் தான் கேட்கிறது அங்கு!

உணவுப் பொருள்களுக்கு டிமாண்ட். போக்குவரத்திற்கான உயிர்நாடியாக உள்ள டீஸல் பெட்ரோலுக்குத் தட்டுப்பாடு. இத்யாதி இத்யாதி

இந்திய அரசு அங்கு தமிழர்களுக்கு வீடுகளைக் கட்டித் தருகிறது, ஆயிரக் கணக்கான டன்கள் உணவுப் பொருள்களை அனுப்பி வைக்கிறது, இலங்கையை விட்டு விட மாட்டோம் என்று நாம் சொல்லக் காரணம் என்ன?

வரலாற்றின் ஆரம்ப காலத்திற்குச் செல்ல வேண்டும். சங்க இலக்கியத் தொகுப்பில் ஈழத்து பூதன் தேவனார் என்ற புலவர் இயற்றிய பாடல்கள் உள்ளன. சக்ரவர்த்தி அசோகன் புத்தரின் கொள்கைகளைப் பரப்ப தனது மகனான மகேந்திரனையும் மகள் சங்க மித்ரையையும் இலங்கைக்கு அனுப்பியதை மகாவம்சம் பதிவு செய்திருக்கிறது.

பாண்டிய மன்னர்களும் ஈழத்து மன்னர்களும் பெண் ‘கொடுத்தும் கொண்டும்’ வாழ்ந்ததை வரலாற்று ஏடுகள் குறிப்பிடுகின்றன.

ஆகவே தான் பாரம்பரியத் தொடர்புக்கேற்ப, இலங்கையை ஒரு போதும் நாம் விட்டு விட மாட்டோம் என்று மெய்ப்பிக்கிறோம்.

கால வசத்தால் பொருளாதார நெருக்கடியில் இலங்கை இப்போது சிக்கியிருந்தாலும் அதன் இயற்கை வளங்கள் மாறவில்லை.

திருச்சியிலிருந்து சில நிமிடங்கள் பறந்தாலே போதும் கொழும்பு விமான நிலையத்தை அடைந்து விடலாம்.

ராமேஸ்வரத்திலிருந்து 46 மைல் தூரத்தில் உள்ளது தலை மன்னார். இந்தியப் பகுதியிலிருந்து கப்பலில் செல்வோரும் சில நிமிடங்களில் இலங்கையின் வடக்குக் கோடியைச் சென்றடைந்து விடலாம்.

தங்குவதற்கு ஏராளமான வசதியான ஹோட்டல்கள் இலங்கையில் உண்டு. அமெரிக்க லாஸ்வேகாஸ், சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள தரம் வாய்ந்த ஹோட்டல்களுக்கு இணையாக அனைத்து வசதிகளும் கொண்ட ஹோட்டல்கள் கால் ஃபேஸ் பகுதியில் உண்டு.

குட்டித் தீவான இலங்கையின் இன்றைய ஜனத்தொகை இரண்டு கோடியே பதினாறு லட்சம். பரப்பளவு 65610 சதுர கிலோமீட்டர். 28 டிகிரி உஷ்ணநிலை.

பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இலங்கையில் உள்ளன.

முதலில் கொழும்பு நகரை வலம் வரலாம்.

கால் ஃபேஸ் கடற்கரை

கொழும்பு நகரையொட்டி உள்ள  கால் ஃபேஸ் கடறகரை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று. உல்லாசப் பயணமாக வரும் அனைத்துப் பயணிகளும் இந்தக் கடற்கரையில் இளைப்பாறி ஆனந்தமாகப் பொழுது போக்குவதோடு உலகப் பிரசித்தி பெற்ற கால் ஃபேஸ் கிரீன் பார்க்கில் நேரத்தைக் கழிப்பது வழக்கம். இப்பகுதியில் உள்ள புத்தர் ஆலயம், நேஷனல் மியூஸியத்தையும் பார்க்காமல் விட்டு விடக் கூடாது.

கொழும்பில் உள்ள ப்ளானிடோரியமும் பார்க்க வேண்டிய வானக் காட்சிகளைக் காட்டும் ஒரு இடமாகும்.

கண்டி புத்தர் ஆலயம்

இலங்கை எங்கும் பரவி இருக்கும் புத்த ஆலயங்களுக்குள் ஊதுபத்தியை ஏற்றி வழிபடுவது மரபு. ஆலயங்கள் தெய்வீக நறுமணத்துடன் திகழும்.

புத்தரின் புனிதப் பல் இருக்கும் ஆலயம் கண்டியில் அமைந்துள்ளது. அற்புதமான இந்த ஆலயத்தில் ஒரு தங்கப் பேழையில் புத்தரின் புனிதப் பல் 2500 ஆண்டு காலமாக பாதுகாக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆலயத்தை ஒட்டி இருக்கும் ஏரி இயற்கை வனப்புக் கொண்டது. பௌர்ணமி இரவில் இதில் காணும் பிரதிபிம்பத்தையும், தினசரி சூரியோதயத்தையும் கண்டு மகிழ ஏராளமானோர் இங்கு கூடுகின்றனர்.

அனுராதபுரம்

பழம்பெரும் நகரான அனுராதபுரம் இலங்கையின் பாரம்பரியச் சிறப்பு வாய்ந்த நகரமாகும். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய பண்பாட்டு இடம் இது. இங்குள்ள மகாபோதி மரம் உலகின் மிகப் பழமையான மரம் என்பதோடு தெய்வீக மரமும் கூட என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்த போதி மரம் இந்தியாவில் உள்ள போதி மரத்தின் ஒரு சிறப்பான கிளையிலிருந்து உருவாகியது என்று வரலாறு கூறுகிறது.

புத்தர் ஞானம் பெற்றது போதி மரத்தின் அடியில் என்பதால் இதன் தெய்வீக மஹிமையை அனைவரும் போற்றி போதி மரத்தை வணங்குகின்றனர் இங்கு.

அனுராதபுரத்தில் உள்ள ஸ்தூபமே உலகின் மிக அதிக உயரமான ஸ்தூபம் என்பதும் ஒரு சுவையான செய்தி.

ஆடம்ஸ் பீக்

இலங்கையின் தெற்கே அமைந்துள்ள ஆடம்ஸ் பீக் அனைவரும் விரும்பிச் செல்லும் ஒரு இடம். இங்கு தான் உலகின் ஆதி மனிதனான ஆதாம் சுவர்க்கத்திற்குப் போகும் முன்னர் தன் காலடியைப் பதித்தான் என நூல்கள் கூறுகின்றன.

இந்தக் காலடிகளை புத்தரின் பாதம் என்றும் கூறுவர்; இது சிவபிரானின் திருப்பாதம் என்றும் கூறுவர். ஆகவே அனைவரும் விரும்பும் இடமாக அமைந்து விட்டது இது.  2200 மீட்டர் உயரமுள்ள இதன் உச்சியை அடைய சாலை வசதி உண்டு.

தமிழ் போற்றும் யாழ்ப்பாணம் (ஜாஃப்னா)

தமிழைப் போற்றி வளர்த்த பெருமை அன்றும் இன்றும் ஈழத்திற்கு உண்டு. ஏராளமான சைவ சமய நூல்களும் தத்துவ நூல்களும் இந்தப் பகுதியில் எழுந்துள்ளன. இந்தப் பகுதியில் உள்ள ஏராளமான கோவில்கள் தனக்கென ஒரு தனிப் பெருமையைக் கொண்டவை.

சில முக்கியமான கோவில்களை மட்டும் இங்கு சுட்டிக் காட்ட முடியும்.

கதிர்காமம்

‘இத மொழி பகரினும் மத மொழி பகரினும் ஏழைக்கு இரங்கும் பெருமாள்’ என்றும் ‘கதிர காம வெற்பிலுறைவோனே, கனக மேரு ஒத்த புயவீரா மதுர வாணி யுற்ற கழலோனே, வழுதி கூன் நிமிர்த்த பெருமாளே’ என்றும் அருணகிரிநாதர் உளமுருகி திருப்புகழ் பாடிப் பரவும் கதிர்காமத்தை அறியாதோர் இருக்க முடியாது. அருணகிரிநாதர் அற்புதமான திருப்புகழ் பாடல்கள் பதிமூன்றை இத்தலத்திற்கு அருளியுள்ளார். திருகோணமலைக்கு அவர் அருளியுள்ள ஒரு பாடல் உள்ளது.

கதிர்காமத்தில் உள்ள முருகன்கோவில் சிறியதானாலும் கீர்த்தியில் பெரியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடும் தலம் இது. இங்குள்ள மூல அறைக்குள் யாரும் செல்ல முடியாது. மூல அறைக்குள் விக்ரஹம் எதுவும் கிடையாது. திரை ஒன்று தொங்கவிடப்பட்டிருக்கிறது.

திருகோணமலை

அழகிய இயற்கை துறைமுகமான இதன் பெருமையை கடல் பற்றி ஆய்வு செய்யும் நிபுணர்கள் வியந்து போற்றுகின்றனர்.

இங்குள்ள கோணேஸ்வரர் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வணங்கி வழிபடுவது பாரம்பரிய வழக்கமாக அமைந்துள்ளது. இராவணன் தினமும் வழிபட வந்த தலம் இது என்று தலப் பெருமை கூறப்படுகிறது.

திருகோணமலை கடற்கரைப் பகுதிகளில் திமிங்கிலம் மற்றும் டால்பின்களைப் பார்க்க முடியும் என்பதால் ஆர்வமுள்ளோர் இங்கு வந்து அவற்றைப் பார்த்து மகிழ்வது வழக்கம்.

கேதீஸ்வரர் ஆலயம்

திருஞானசம்பந்தராலும் சுந்தரராலும் பாடல் பெற்ற தலம் இலங்கையின் மேற்குப் பகுதியில் உள்ள கேதீஸ்வரம். இறைவன் கேதீஸ்வரர். இறைவி : கௌரியம்மை. இது தலைமன்னார் ரயில் நிலையத்திலிருந்து 5 மைல் தூரத்தில் உள்ளது. நவகிரகங்களுள் கேது பகவான் இங்கு வந்து வழிபட்டதால் இறைவன் திருநாமம் கேதீஸ்வரர் என்றும் ஊர் கேதீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.

காடுகளும் தேயிலைத் தோட்டங்களும்

இயற்கையான காட்டுப் பகுதிகளும் அழகிய தேயிலைத் தோட்டங்களும் அமைந்துள்ள நாடு இலங்கை.

அலுவலகப் பணியாக ஒரு வாரம் சென்று வாருங்கள் என அலுவலகம் ஆணை பிறப்பிக்கவே கொழும்பு சென்ற நான் 9 மாதங்கள் பல் வேறு காரணங்களினால் அங்கு வசிக்க நேர்ந்தது.

ஆகவே பல இடங்களையும் சுற்றிப் பார்த்ததோடு அற்புதமான தேயிலைத் தோட்டங்களிலும் உலவ முடிந்தது. நமது மூணாறில் உள்ள தேயிலைத் தோட்டங்களை நினைவு படுத்துபவை இவை.

தேயிலை பறிப்பது, அவற்றை தரம் பிரிப்பது, தேயிலைத் தூள் தயாரிக்கும் தொழிற்சாலை என தேயிலை பற்றிய பல நுட்பமான விஷயங்களை நேரில் பார்த்து அனுபவித்து தெரிந்து கொள்ளலாம். இங்குள்ள தேயிலைத் தூள் சுவை மிக்கது; மணம் மிக்கது. அத்தோடு இலங்கையில் கிடைக்கும் ஏலக்காயின் மணமும் சுவையும் தனி தான்!

எனது பணி முடிந்த சமயம் நண்பர் ஒருவர் தான் காட்டிற்குள் அமைத்திருக்கும் பங்களாவைப் பார்க்க அழைப்பு விடுத்தார். நம்ப முடியாத அதிசயம் – மனித நடமாட்டமே இல்லாத பகுதியில் அவ்வளவு பெரிய பங்களாவை அவர் எப்படி அமைத்தார் என்பது. ஜெனரேட்டர் மூலம் மின் வசதியும் அவர் அமைத்திருந்தது வியக்க வைத்தது.

ஆனால் ஓய்வெடுக்க இப்படி இலங்கையின் வளப்பமான கிராமம் மற்றும் காட்டை ஒட்டிய பகுதிகளுக்கு வருபவர் எண்ணிக்கை இப்போது அதிகம் என்பதை இலங்கையைப் பற்றி நன்கு அறிந்த பின்னர் புரிந்து கொள்ள முடிந்தது.

பிரபல எழுத்தாளரான ஆர்தர் க்ளார்க் உள்ளிட்ட

உலக பிரபலங்கள் ஓய்வெடுக்க இலங்கையைத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத் தகுந்தது.

யானை சஃபாரி

ஆங்காங்கே உள்ள பகுதிகளில் யானை சஃபாரி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.

நிறைய கடற்கரைகள் இருப்பதால் கடற்கரை சார்ந்த விளையாட்டுக்களையும் விளையாடலாம்.

பல மியூஸியங்கள் இருப்பதால் வரலாறு சார்ந்த பல விஷயங்களை அருங்காட்சியகச் சேகரிப்புகள் மூலம் பார்த்து மகிழலாம்.

நவமணிகளின் நாடு

பழைய காலத்தில் ரத்ன த்வீபம் என்று அழைக்கப்பட்ட இலங்கை தரம் வாய்ந்ரத நவமணிகளை அளிக்கும் இடம். அதுமட்டுமல்ல 200க்கும் மேற்பட்ட உபரத்தினங்களும் இங்கு கிடைக்கின்றன. இங்கு கிடைக்கும் அலெக்ஸாண்டரைட் உட்பட்ட பல உபரத்தினங்கள் உலகத் தரம் வாய்ந்தவை. மகளிருக்கான மாலைகள், நெக்லஸ் உள்ளிட்டவைகளை இங்கு கடைகளில் வாங்கலாம்.

அது மட்டுமல்ல கொழும்பு மாநகரில் உள்ள கடைகளில் வாங்க வேண்டிய பொருள்கள் ஏராளமாகக் கிடைக்கும் என்பதால் இங்கு வருகை தரும் பயணிகள் ஷாப்பிங் செய்யத் தவறுவதில்லை.

டக் டக் சவாரி

இலங்கையில் ஒரு அதிசய சவாரி டக் டக் சவாரி. ஆட்டோபோல உள்ள டக் டக் வண்டிகளில் முதலில் கறாராக தொகையைப் பேசி விட்டு, செல்ல வேண்டிய இடம் எங்கும் செல்லலாம். ஊரைச் சுற்றிப் பார்க்க வேண்டுமானாலும் டக் டக் டிரைவர்கள் தங்களது ரேட்டைச் சொல்லி விட்டு அழைத்துச் செல்வார்கள். சில சமயம் டக் டக்கை பயணிகளே ஓட்டவும் அதன் டிரைவர்கள் அனுமதிப்பதுண்டு.

எழுத்தறிவுள்ள, படித்தவர்கள் அதிகம் உள்ள நாடு என்ற பெருமை வாய்ந்த இந்த நாடு சிங்களம் மற்றும் தமிழ் மொழியை அதிகார பூர்வமான பயன்பாட்டு மொழிகளாகக் கொண்டுள்ளது.

இலங்கையில் அதிக காலம் தங்க திட்டம் தீட்டுவோர் யலா நேஷனல் பார்க் (இங்கு 123 மிருக வகைகள், 227 பறவை இனங்கள் உள்ளன), க்ளென் நீர்வீழ்ச்சி, சிகிரியா கோட்டை, யானைகளின் சரணாலயம் உள்ளிட்ட ஏராளமான இடங்களைப் பார்க்க முடியும்.

ராமாயண டூர்

ராமாயண டூர் ஒன்றை மேற்கொண்டால் நுவரெலியாவில் உள்ள சீதையம்மன் ஆலயம், ஹனுமானின் பாதச் சுவடுகள் உள்ள இடம், என்பதில் ஆரம்பித்து ராவணன் வெட்டு என்று ராவணன் வாளால் மலையை வெட்டிய இடம் உள்ளிட்ட இராமாயண சம்பந்தமான இடங்களைப் பார்க்க முடியும்.

ஒரு வரியில் இலங்கையை வர்ணிக்க முடியுமா? காலம் காலமாகச் சொல்லி வரும் வரி என்ன தெரியுமா:

‘இந்து மாகடலின் முத்து இலங்கையே’ என்பது தான்!

இலங்கை தன் பழம் பெரும் வளத்தை மீண்டும் பெற இந்தியர்கள் வாழ்த்துவதிலும் உதவுவதிலும் வியப்பே இல்லை!

***

தமிழர்களுக்கு முத்தம் இடத் தெரியாது? பகுதி 2 (Post No.10,969)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,969

Date uploaded in London – –    11 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

முதல் பகுதியில் உத்தமியும் பத்தினியுமான இராவணன் மனைவி  மண்டோதரியைக் கண்டவுடன் அவள்தான் சீதை என்று தவறாக கருதி, அனுமன், அதிக சந்தோஷத்தில் வாலில் முத்தம் கொடுத்துக் கொண்டதை வால் மீகி வருணித்ததைக் கண்டோம்.

பெண்களையே பார்க்காமல் ஆஸ்ரமத்தில் வசித்துவந்த இளம் முனிவர் ரிஷ்ய ஸ்ருங்கரை (கலைக்கோட்டு முனிவன்) நடன அழகிகள், விலைமாதர்கள் வந்து வாயில் முத்தம் கொடுத்ததை அவர் தேவலோக இளைஞர்கள் என்று கருதி அப்படியே அப்பாவிடம் சந்தோஷமாக உரைத்தை மஹாபாரத வனபர்வத்தில் கண்டோம்.

கடல் கதாநாயகன், நதிகள் என்னும் காதலிகளுக்கு ஒரே நேரத்தில் பூமியின் பலவேறு இடங்களில் முத்தம் கொடுப்பதை உலக மஹா கவிஞன் காளிதாசன் ரகு வம்ச காவியத்தில் வருணித்ததையும் கண்டோம்.

இப்படியிருக்கும் நிலையில், தமிழர்கள் மட்டும் மிக அடக்கமாக முத்தத்ததை மறைத்து வைத்து இருப்பதையும் கண்டோம். சங்க காலத் தமிழர்களுக்கு முத்தம் என்றால் முத்து/ pearl என்று அர்த்தம். கிஸ்/kiss அல்ல. உதடு/lips என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லையும் கூட அவர்கள் சங்கத் தமிழின் 30,000 வரிகளில் எழுதவில்லை.

xxx

argument from silence (Latinargumentum ex silentio)

வாத்ஸ்யாயன மகரிஷி எழுதிய காம சூத்திர நூலில் உள்ள  பல விஷயங்களைக் குறிப்பிடும் வள்ளுவன் கூட வாய் முத்தத்தை , காம சூத்திரம் வருணிப்பது போல எழுதாமல் பயந்து ஒதுங்கிவிட்டான். தமிழர்களைப் பொறுத்தவரையில் முத்தம்/kiss வெளியே சொல்லக்கூடாத விஷயம் போலும!!!

ஒரு விஷயம் சொல்லப்படாததால் அது நடக்கவில்லை என்று பொருள் அல்ல.

‘சொல்லாது மவுனமாயிருப்பதை வைத்து வாதாடுதல்’ ‘argument from silence (Latin: argumentum ex silentio’ என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். அதாவது அப்படி வாதாடுவது தவறு. தமிழர்கள் ‘இதயம்’ என்றே சொல்லாததால் அவர்களை இதயமற்றவர் என்று சொல்லாதே; ரிக் வேதத்தில் ‘உப்பு’ பற்றி  சொல்லாததால் அவர்களுக்கு கடல் என்பதே தெரியாது அவர்கள் உப்பில்லாமல் சாப்பிட்ட ‘உப்பிலியப்பன்’கள் என்று எழுதாதே , மெகஸ்தனீஸ் ‘புத்தர்’ பற்றியே கதைக்காததால் அக்காலத்தில் புத்தர் என்றே ஒருவர் இல்லை என்று சொல்லாதே, மார்கோபோலோ சீனா பற்றி எழுதிவிட்டு உலக அதிசயமான நெடுஞ்சசுவர் (Great Wall of China) பற்றி எழுதாததால் அவர் சீனாவுக்கே போகவில்லை என்று எழுதாதே ; இப்படி எழுதுவதை ஆங்கிலத்தில் . argument from silence (Latin: argumentum ex silentio) என்று

சொல்லுவர். ஆகையால் தமிழன் முத்தக் கலைபற்றி எழுதாததை தவறாக எடை போடாதே . உதடுகள் (உஷ்ட்ர =ஸம்ஸ்க்ருதம் ) இல்லாமலா தமிழன் பிறந்தான் ? தாய்மார்கள் குழந்தைகளைக் கொஞ்சி முத்தமிட்டாமலா தமிழர்கள் வளர்த்தார்கள் ? இல்லையே!

XXXX

இதோ சில ‘குமார சம்பவ’ முத்தக் காட்சிகள்

உலக மஹா கவிஞன் காளிதாசன் முத்தங்களை வருணிக்கும் இடம் தேவலோகம். சிவனும் உமையும் கல்யாணம் செய்த பின்னர் முருகன் பிறப்பதற்கு முன்னர், நடந்தவை. தாரகாசுரனைக் கொல்ல வல்ல தேவ சேனாபதியை – திரு முருகனை — அவதரிக்கச் செய்ய – நடந்த செயல் அது.; காமத்தை வென்ற சிவ பெருமான் மனதில் காமத்தை தோற்றுவிக்க மன்மதனை அனுப்புகின்றனர் தேவர்கள் ; சிவன் தனது ஞானக் கண்ணால் மன்மதனை எரிக்கவும் ரதி தேவி அழுது புலம்பினாள். போகட்டும் போ ; மனித இனம் உள்ளவரை உன் புருஷன் அநங்கன் (Bodyless)  ஆக – அங்கம் இல்லாதவனாக – என்றும் (in abstract form) இருப்பான் என்று அருளுகிறார். அதனால்தான் இன்றும் நம் மனதில் உருவம் இல்லாத எண்ணம் (Abstract but not concrete)  ஆக காமம் உலவுகிறது; அதனால்தான் உலக ஜனத்தொகை நிமிடம் தோறும் ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது மன்மதனை (Sexual desire) எவரும் அழிக்க முடியாது.

xxx

Kumara sambhavam sloka 8-8

அவர்கள் முத்தத்தில் உமாதேவி கீழ் உதட்டை சுவைக்க அனுமதியாள் .

சிவனோ முரட்டுப் பிடியில் அவளை வைத்திருந்தான்.

உமாதேவிக்கு வேதனையாக இருந்தாலும், செய்கையில் ஆதரவு காட்டாவிட்டாலும்,

சிவனின் சிந்தை மகிழ்ந்தது 8-8

Xxx

Sloka 8-9

“அவள் வாயை அகற்றினாள் ;

ஆனால் கீழ் உதடு கடிபடவில்லை .

நகத்தால் கீறினாலும் காயம் ஏற்படும் அளவுக்கு இல்லை ;

சிவனது செய்கைகளும் பார்வதியின் மெல் மேனி

தாங்கும் அளவே இருந்தது 8-9

Xxx

8-16

கணவனின் கவர்ச்சியில் சொக்கிப்போனாள்  மனைவி;

மனைவியின்  கவர்ச்சியில் சொக்கிப்போனான் கணவன்.

ஜானுவின் புதல்வியான கங்கா ,

சமுத்திரத்தை நோக்கித்தானே ஓடும் .

அவளுடைய வாய் அமுதம் சிவனுக்குக்

கிடைத்த வரப் பிரசாதம் 8-16

தம் யதா த்ம ஸத்ருசம் வரம் வதூர்

அன்வரஜ்யத வரஸ் த தைவ தாம்

சாகராத் அனபகா ஹி ஜாஹ்னவி

ஸோ அபி தன் முக ரஸை க நிர் வ்ருத்தி ஹி 8-16

Xxx

8-18

லோக மாதா அம்பிகாவின்

பூங் கொடி போன்ற கைகள்

வலியில் துடித்தன ;

கடிபட்டு விடுதலை பெற்ற

அவளுடைய கீழ் உதடு விரைவில் குளிர்ந்தது ;

முக்கோல் தாரியான சிவன் முடிமேல்

உள்ள பிறைச் சந்திரன் போல (குளிர்ந்தது) 8-18

xxxx

8-19

சிவன் முத்தம் இட்டபோது உமை அம்மையின்

கூந்தல் பொடியினால் மூன்றாவது கண் எரிச்சலுற்றது ;

மலர்ந்த தாமரையின் மணம் வீசியது

பார்வதியின் மூச்சுக் காற்றும் கூட  8-19

சும்பனாத் அலக சூரண தூஷிதம்

ஸத்காரோபி நயனம் லலாடஜம்

உத்சவசத் கமல கந்த யே ததெள 

பார்வதி வதன  கந்த வாஹினே 8-19

Xxx

8-90

காதலியின் இதழ் ரசம் அருந்திய

சிவனுக்கு தாகம் தணியாது, அதிகரித்தது ;

இரவும் பகலும் வாழ்க என்று கருதிய தருணத்தே ,

வெளியே பெரும் கூட்டம் தரிசனத்துக்காக

காத்திருப்பதை விஜயா அறிவிக்கவே,

சிவனும் அவ்விடத்தில் இருந்து மறைந்தார்.

ஸ ப்ரியா முகரஸம் திவானிசம்

ஹர்ஷவ்ருத்தி ஜனனம் சிஷே விஷுஹூ

தர்சன ப்ரணியினாம்  அத் ர்ஷ்யதாம்

ஆஜ காம விஜயா நிவேதநாத் 8-90

8-90

XXXX

MY RESEARCH ON MOUTH= MUTHA= KISS= CHUMBANA

தமிழ் மொழியில் இருந்து தோன்றிய தெலுங்கு, மலையாளத்தில் தமிழ் அல்லது ஸம்ஸ்க்ருத்ச் சொல்லே உள்ளன.

ஐரோப்பிய மொழிகளை மொழியியல் அணுகுமுறையில் பார்த்தால், வாய் (Vaai= Baai) என்ற சொல்லை பல மொழிகளில் காணலாம். ‘முத்த’ (M=P) என்ற சொல்லை வேறு சில மொழிகளில் காணலாம். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து :-

மவுத் / வாய் = MOUTH= MUTH/A

முத்த (ஆங்கிலம்)

Albanian          puthje= புதுஜெ = முத்தம் (ப=ம)

Some examples for B=M changes;பத்ர= மத்ர , பனுவல் = மானுவல்

Basque musu=  ச = த  முசு =முத 

Some examples for T=S (ஓசை= ஓதை ; தானை=சேனை ; வித்தை = விச்சை )

Catalan            petó =ப=ம; பெத்த=முத்த

xxx

வாய் என்ற சொல்லின் ஒலியை  பிரெஞ்சு, இத்தாலியன், போர்ச்சுகீசிய மொழிகளில் காணலாம் ;

B=V

baiser/பிரெஞ்சு;      bacio/ இத்தாலியன் ; beijo/ போர்ச்சுகீசியம் ;Beso/ஸ்பானிஷ்

உலகம் முழுதுமுள்ள எந்த மொழிச் சொல்லையும் சம்ஸ்க்ருதம் அல்லது தமிழுடன் தொடர்புபடுத்திவிடலாம். அவ்விரு மொழிகளே உலகம் முழுதும் பண்பாட்டைப் பரப்பிய மொழிகள் என்பது என்னுடைய ஆராய்ச்சிக்களின்  துணிபு

XXX

FROM WEBSITES:–

चुम्बित

adjective

kissedचुम्बित
kissedप्रणिंसित

noun 

  1. चुम्बनम्

verb 

  1. चुम्ब्

–SUBHAM—

Tags-  முத்தம், சும்பன , அனுமன், காளிதாசன், குமார சம்பவம், தமிழர், kissing

“காய்கறி” குறள். (Post No.10,968)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,968

Date uploaded in London – –   11 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 69

Kattukutty

*”காய்கறி” குறள்.*

*தக்காளி எப்போதும் உட்கொண்டால் தரணியில் எக்காலும் நோயில்லை காண்.*

*எலுமிச்சை புளித்தாலும் எடுத்ததை உட்கொள்வீர் எலும்புக்கு வலு சேர்க்குமே*

*வெங்காயம் இல்லாச் சாம்பார் எஞ்ஞான்றும் தங்காதே நாவில் ருசி.*

*பொல்லாத பேரையும் நல்லவராக்குமே புடலங்காய் போற்றிச் சுவை.*

*தள்ளாத வயதிலும் உள்ளே தள்ளுவாய் முள்ளங்கி மூன்றினைத்தான்*.

*வெண்டைக்காய் இருக்கையில் சுண்டை எந்நாளும் தொண்டையில் இறங்காது காண்.*

*வள்ளிக் கிழங்குண்ணார் வையத்தில் வாழ்ந்தும் வாழாதார் என்பது வழக்கு*.

*கத்தரி உண்பாரே உண்பார் மற்றெல்லாம் இத்தரையில் பித்தருக்குச் சமமெனக் கொள்.*

*பூசணியைச் சேர்த்தாரே புண்ணியர் பூவுலகில் புகழோடு வாழ்வார் அவர்* .

*காய்கறியைத் தின்னாதார் வாழ்க்கை எப்போதும் நோய் நொடியில் வீழ்ந்து கெடும்.*

*முருங்கைக்காய் ருசித்தாரே ருசித்தார் மற்றோரெல்லாம் வெறுங்கையில் முழம் போடுவர்*

*காரிருளில் கண்தெரிய வேண்டுமெனில் பாரிலுள்ள கரிசலாங் கண்ணியைச் சேர்.*

*இரும்பைப் போல் இதயமது வேண்டுமெனில் கரும்பைப் போய் விரும்பிச் சுவை*

*உரிக்க உரிக்கத் தோல் தான் வெங்காயம் என்றாலும் செரிக்குமோ உரிக்காவிடில்.*

*பறித்தவுடன் உண்ணுவீர் பரங்கியை எப்போதும் பலனது வேண்டுமெனில்*

*பாகற்காய் கசக்கும் என்பதால் சீண்டாதார் சோகத்தில் சேர்ந்து விழும்*.

*வெல்லத்தில் இரும்புண்டு ஆகையினால் சாப்பாட்டில் ஒரு துண்டு சேர்த்துச் சமை*

*வாழ்வதனால் ஆய பயனென்கொல் வாழைக்காய் தாழ்வேயெனவே எண்ணு பவர்.*

*கேரட்டைச் சேர்க்காத சமையல் கிணற்றுக்குள் தேரை வாழ்ந்த கதை*

*பீடுநடை போடுதல் வேண்டுமெனின் தினமும் பீட்ரூட்டை உணவில் சமை*.

*கொத்தவரை பீன்ஸ் முட்டைகோஸ் இவையெல்லாம் சத்தே எனவே சரியாய் உணர்*

*கறிவேப்பிலை மல்லி கடுகு சேராதோர் சொறி பிடித்தோடுவார் காண்.*

*பொன்னிற மேனி வேண்டுமெனில் நீ அந்த பொன்னாங் கண்ணியைச் சேர்*

*கண் இருந்தும் குருடரே காசினியில் காய்கறியை உண்ணாதவர்.*

 xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

tags-  ஞான மொழிகள் – 69, Kattukutty, காய்கறி குறள்,