புதன் கிழமையானால் — மாசில் பல கலை பயில்வர் மேன்மையாம்; அதாவது நன்றாகக் கல்வி கற்று நிறைய பட்டங்கள் பெறுவார்கள்.
வியாழக் கிழமையானால் – ஆடை நன்மையுடனே வந்திடும்; அதாவது புத்தாடைகள் நிறைய குவியும்.
வெள்ளிக் கிழமையானால் — பெண்கள் எல்லாம் உங்களை வந்து மொய்ப்பார்கள். நாரியருடன் போகம் மிகவும் உண்டு!!!!!!!!!!!!!
சனிக் கிழமையானால்– சுகப்படாது. சுகபோகம் இல்லை.
நான் முன்னர் எழுதியதை நினைவு படுத்துகிறேன்; உலகிலுள்ள பல கோடிப்பேரை இப்படி 7 வகையாகப் பிரித்துப் பலன் சொல்லுதல் சரியாக இராது; அதாவது துல்லியமாக இராது. ஆகையால் யாரவது ஒரு ஆராய்ச்சியாளர், குறைந்தது கிழமைக்கு 1000 பேர் வீதம் தேர்ந்தெடுத்து புள்ளிவிவரம் திரட்டி சரிபார்க்க வேண்டும். அதுவரை இதை நம்பவும் வேண்டாம்; உதாசீனம் செய்யவும் வேண்டாம்.
நான் சில பேர் திட்டுவதை கேட்டு இருக்கிறேன் : பயல் ராகுகாலத்தில் பிறந்திருப்பான் போல என்று.
அப்படிப் பிறந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று புள்ளிவிவரம் திரட்டி ஆராயும் வரை அவை எல்லாம் பொருளற்ற வசை மொழிகள் என்றே கருத வேண்டும் .
அட சனியனே — என்று ஒருவரைத் திட்டுகிறோம். அதற்கு சனிக் கிரகமா காரணம்?
நமது தேசத்தின் அடித்தளம் மற்றும் முக்கியப் பெருமையே, அதன் கலாச்சாரமும், பண்பாடும் தான். அவற்றின் வெளிப்பாடுதான், நாம் கொண்டாடும் பல்வேறு பண்டிகைகள்.
ஒவ்வொரு பண்டிகையும் மகிழ்ச்சியும், உற்சாகத்தையும் கொடுப்பதுடன், வாழ்வியல் நெறிகளையும், கற்றுக் கொடுக்கிறது என்றால் மிகை ஆகாது. பண்டிகைகளின் சிறப்பு என்பது, மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் மட்டுமல்ல, இயற்கையைப் போற்றி, வணங்கி, பாதுகாத்து, வேளாண்மை மற்றும் உயிரினங்களை வாழ்த்தி வணங்கும் நிகழ்வும் ஆகும். இந்த வரிசையில் மிக முக்கியமான பண்டிகை தான் பொங்கல் பண்டிகை.
இந்திய நாட்டில் விவசாயம் பல்கிப் பெருகப் பெருந்துணை புரிவன நம் நாட்டில் ஓடும் வற்றா ஜீவ நதிகள் ஆகும். விவசாயத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தின் காரணமாக,
“இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணறும் பெரு நாடு
கனியும் கிழ்ங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரும் நாடு”
எனும் பாரதியின் கூற்றை மெய்ப்பித்துள்ளனர் நம் நாட்டு விவசாயிகள்.
காவிரி தென்பெண்ணை பாலாறு பொருள்
கண்டதோர் வையை பொருனை நதி என
மேவிய ஆறு பல ஓடத் திரு
மேனி செழித்த தமிழ்நாடு
என்று மஹாகவியால் பாடப்பெற்ற தமிழ் நாடும் இந்தியாவில் விவசாயத்தில் சிறந்து விளங்கும் முக்கியப் பகுதியாகும்.பொங்கல் பண்டிகை என்பது வேளாண்மை சார்ந்த ஒரு கொண்டாட்டம் என்பதே உண்மை.
பொங்கல் பண்டிகை – வரலாற்றுக் காலம்
சங்க காலமான கி.மு 200 – கி.மு. 300 களில் பொங்கல் என்பது சமஸ்க்ருத புராணத்தில் திராவிட அறுவடை பண்டிகையாக குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்று முன்னோர்கள் பொங்கல் சங்க காலத்தில் தை நீராடல் என்ற பெயரில் கொண்டாடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பாவை நோன்பு சங்கக் காலத்தில் கொண்டாடப்பட்ட தை நீராடல் தான் இன்று பொங்கலாக கொண்டாடப்படுகிறது என்றும். அந்த காலத்தில் பெண்கள் தை நீராடலின் போது பாவை நோன்பு விரதத்தை கடைப்பிடித்து வந்தனர் என்றும் கூறப்படுகிறது.
பல்லவர் காலத்தில் பல்லவர்களின் காலமான கி.பி 400 – கி.பி 800 க்கு இடையில், பொங்கல் மிகவும் முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. மழையும், வளமும் செழிக்க வேண்டி வணங்கி இளம் பெண்கள் விரதம் இருந்து வந்தனர். ஈர மண்ணில் செய்யப்பட்ட கட்யாயணி என்ற பெண் கடவுளை வணங்கி, தை மாதத்தின் முதல் நாளன்று விரதத்தை முடித்துக் கொள்வார்கள். மரபும், சடங்குகளும் நிறைந்த இந்த பொங்கல் கொண்டாட்டம். திருப்பாவை குறிப்பு ஆண்டாளின் திருப்பாவை, மாணிக்கவாசகரின் திருவெம்பாவை ஆகியவற்றில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் திருவள்ளூர் வீரராகவ கோவிலில் உள்ள கல்வெட்டிலும் கூட இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப பண்டிகை, இஸ்லாமியப் படைஎடுப்பு, ஆங்கில ஆட்சி, எல்லாக் காலங்களிலும், பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வந்தது. மேலும், இந்தப் பண்டிகை, குறிப்பாக, இந்த மண்ணின் மாண்பை, விவசாயத்தை, நீர் மேலாண்மையை இணைத்து இருப்பதால், தொடர்ந்து கொண்டாடப்பட்டது.
பொங்கல் பண்டிகை – 50 வருடங்கள் முன்னால்
1970களில் எங்கள் ஊரான தென்காசியில் (ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டம்) திருவிழாக்கள், பண்டிகைகளுக்கு பஞ்சமே இல்லை. மொத்த ஊரே விழாக் கோலம் பூண்டிருக்கும். இந்தக் கொண்டாடத்தில், நான் பள்ளி மாணவன். ஜாதி, இனம், பணக்காரர், இல்லாதார் என்ற வேறுபாடு நாங்கள் பார்த்ததேயில்லை. மார்கழி மாதம் பஜனையில் இருந்தே எதிர்பார்ப்பு ஆரம்பித்துவிடும். பள்ளிகளும் குறைந்தது ஒரு வாரம் விடுமுறை இருக்கும். ஜனவரி முதல் வாரத்திலேயே வீடுகள் எல்லாம் வெள்ளை அடிக்கப்பட்டு, காவி, வண்ணங்கள் பூசப்படும். பெரும்பாலும்,வீட்டில் உள்ளவர்களே, சுண்ணாம்புக்கல் வாங்கி, வீட்டின் கொல்லைபுறத்தில் வெள்ளாவி வைத்து, நீலம் சேர்த்து, வெள்ளை அடிப்பார்கள். தெருக்களே பளிச்சென்று இருக்கும்.
ஒரு வாரம் முன்னாலேயே, மஞ்சள்குலை, கரும்பு, கடைவீதி மட்டுமல்லாமல், வீதியிலும் வைக்கப்படும், எனது தந்தையின் நண்பர் திரு பழனியாண்டி முதலியார் என்பவர், குறைந்தது 6 கரும்புகள், மஞ்சகுளை, கிழங்குகள் என வீட்டில் கொண்டு வைத்துவிடுவார். வீட்டின் முற்றத்தில் அவை வைக்கப்பட்டிருக்கும். ஆனால் பொங்கல் மறுநாள் தான் கரும்பு வெட்டப்படவெண்டும், அதாவது மறுநாள் காகத்திற்குப் படைத்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டும் என்பது சாஸ்திரம் என்பார்கள் வீட்டில். மறுநாள் விடியலுக்கு காத்துக்கொண்டிருப்போம். எவ்வளவு தான் தந்தாலும், உடன் பிறப்புக்களுடன் (என் உடன் பிறந்தவர்கள் தான்) சண்டை உண்டு. நண்பர்களிடம் ஒப்பீடு என்ற பெயரில் சண்டையும் உண்டு.
அம்மாவின் வெங்கலப்பானை (வெறும் பானையைத் தூக்குவதேற்கே, 10 டம்ளர் ஆர்லிக்ஸ் குடிக்கவேண்டும்). சர்க்கரைப்பொங்கல், அவியல், வடை என அன்று முழுவதும் , உள்ளே போய்க்கொண்டிருக்கும்.
மறுநாள் யானைகள் வரும் – கரும்பின் தோகை மற்றும் கரும்பு, சொளகு நிறைய அரிசி, வெல்லம் என கொடுப்போம். அன்றைய ஒன்றுபட்ட காங்கிரஸ் கட்சியின் சின்னமான இரட்டைக் காளை என்பதை உணர்த்தும் விதமாக, நீண்ட வரிசையாக, இரட்டைக் காளைகள் கொம்புகளில் அன்றைய காங்கிரஸ் கொடியுடன் நடைபோடும். மாலை நேரத்தில் அதை பார்த்து ரசிப்பதே தனி அழகு.
இல்லம் முழுவதும் மக்கள். தெரு முழுவதும் மக்கள். எல்லாரது வீடுகளும் திறந்தே இருக்கும், பாவுள், குச்சில் என்று பொருட்கள் வைத்திருக்கும் அறைகள் இருந்தன. தனியாக எனக்கு தெரிந்து privacy என்று பகலில் மெத்தையுடன், படுக்கை அறை பார்த்த நினைவில்லை. எந்த வேறுபாடும் இல்லாமல் மகிழ்ந்து கொண்டாடிய தருணங்கள் அவை. இனி வருமா – காலம் தான் பதில் கூறவேண்டும்.
தொடர்ந்து, எனது மனைவி, மகன்கள் மற்றும் உறவு, நட்புக்களுடன், இது தொடர்கிறது. குறிப்பாக, காஞ்சிபுரத்தில் நாங்கள் இருந்த 10 வருடங்களிலும், பாரம்பரியமான மற்றும் விமர்சையான பொங்கல் விழாவைப் பார்த்து இருக்கிறோம்.
பொங்கல் பண்டிகை – இன்று
இன்றும் பொங்கல் சிறப்பாகவே கொண்டாடப்படுகிறது என்பதில் இரு கருத்துகள் இல்லை. மகிழ்ச்சி, பண்டிகை, சாப்பாடு, உறவுகள் (கொஞ்சமாக என்றாலும்), ஏதோ ஒன்று குறையாகவே நெருடுகிறது. அதற்கு காரணம் காலத்தின் ஓட்டமா, பணிச்சுமையா, பணம் தேடும் வேகமா, தொலைகாட்சி மற்றும் கைப்பேசிகளின் பாதிப்பா – பதில் தெரியவில்லை , பண்டிகை, நாட்களாக கொண்டாடப்பட்டது , நாள் என்று வந்து விட்டது. இருப்பினும , அந்தப் பண்பாடு தொடர்வது மகிழ்ச்சியே.
பொங்கல் பண்டிகை – என்றென்றும்
கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது
ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?
மண்ணிலே தங்கம் உண்டு மணியும் வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ?
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?
என்ற உலக மாகலைஞன் நடிகர் திலகம் நடித்த பழனி படத்தில் வரும் கவியரசின் வரிகளுகேற்ப நாம்கொண்டாடும் பண்டிகைகள் எல்லாமே இயற்கை மற்றும் மக்கள் வாழ்வு சார்ந்து இருப்பதால், இந்தப் பண்டிகைகள் நிச்சயம் எல்லாக் காலத்திற்கும் தொடரும். நமது கலாச்சாரம், பண்பாடு தொடரும், இது தான் உண்மை,
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
எந்த ராசிக்காரர்களுக்கு எந்த எந்த வர்ணங்கள் பலன் தரும்?
ச.நாகராஜன்
நமது முன்னோர்கள் உலக இயற்கைய அனைத்தையும் மிகத் தீவிரமாக, தெளிவாக ஆராய்ந்தவர்கள்.
மரம், செடி, கொடி, பறவைகள், புழு, பூச்சிகள், வர்ணங்கள், நேரம், காலம், இரவு, பகல், வெளி, விண்வெளியில் உள்ள கிரகங்கள், நக்ஷத்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான விஷயங்களை அவர்கள் கூர்ந்து கவனித்ததோடு அந்த உலக இயற்கைக்கும் மனிதனுக்குமான சம்பந்தத்தையும் ஆராய்ந்து முடிவுகளை சாஸ்திரங்களாக அமைத்துத் தந்தனர்.
இவற்றில் பல, இன்றைய நவீன அறிவியல் ஆராய்ச்சி ஆராய்ந்து தரும் முடிவுகளோடு ஒத்திருப்பது ஆச்சரியத்திற்குள்ள ஒரு விஷயமாகும்.
ஸ்வாமி விவேகானந்தர் கூறினார்: “நமது ரிஷிகள் காலத்திற்கு முற்பட்டவர்கள். அவர்கள் கூற்றெல்லாம் மெய் என்பதை உலகம் உணர பல காலமாகும்”
இதோ இங்கு ராசிகளுக்கு உகந்த வர்ணங்கள் கீழே தரப்படுகின்றன.
உடலிலுள்ள ஒவ்வொரு அங்கமும் இறைவனைத் தொழுவதற்குத்தான் உள்ளது என்ற விஷயம் அப்பர் பாடிய தேவாரத்தில் திரு அங்கமாலை என்னும் பதிகத்தில் உள்ளது. அதர்வண வேதத்திலும் இதே கருத்து இருக்கிறது அம்பலவாணரும் அதே கருத்தை இறைவனின் அடியார்களிடத்தில் எதிரொலிக்கிறார்.
ஹஸ்தெள ச பாதெள நயனே ப்ரஸன்னே
கர்ணெள சுதீக்ஷ்ணெள வதனம் ச காந்தம்
நாஸா சு ரம்யா மனநாய சித்தம்
ஈ சேன தத்தம் ததிதம் ஸமக்ரம்
— என்று ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு ஸுபாஷிதம் / பொன்மொழிப்பாடல் – உள்ளது.
இதன் பொருள்
இரண்டு கைகள், கால்கள், கண்கள் , காதுகள், அழகிய முகம் , மூக்கு, சிந்திப்பதற்காக ஒரு மனம் — இவையாவும் நல்வழியில் செயல்படவே இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன .
ஆதி சங்கரரும் பஜ கோவிந்தத்தில் சத் சங்க மஹிமையை ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம் — என்ற பாடலில் எடுத்துரைக்கிறார் .
ஆயினும் தமிழில் மிக எளிமையாகச் சொன்னது அவ்வையார்தான்
நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
இணங்கி இருப்பதுவும் நன்று— அவ்வையார்
Xxxx
அப்பர் பாடிய திரு அங்க மாலை பதிகத்தில் இருந்து பாடல் முதல் வரிகளை மட்டும் காண்போம்
தலையே நீ வணங்காய் – தலை மாலை தலைக்கணிந்து
தலையாலே பலி தேரும் தலைவனைத்
தலையே நீ வணங்காய்
கண்காள் காண்மின்களோ – கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை…………
செவிகாள் கேண்மின்களோ – சிவன்
எம்மிறை செம்பவள……………………………
மூக்கே நீமுரலாய் – முது
காடுறை முக்கணனை………………………….
வாயே வாழ்த்துகண்டாய் – மத
யானை யுரிபோர்த்துப்……………………………….
நெஞ்சே நீநினையாய் – நிமிர்
புன்சடை நின்மலனை……………………………
கைகாள் கூப்பித்தொழீர் – கடி
மாமலர் தூவிநின்று……………………………………..
ஆக்கை யாற்பயனென் – அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்
ஆக்கை யாற்பயனென்.
கால்க ளாற்பயனென் – கறைக்
கண்ட னுறைகோயில்……………………………
என்று ஒவ்வொரு பாட்டும் ஒரு அங்கத்தின் பயன், இறைவனைத் தொழுவதற்கானதே என்று சொல்கிறார்.
XXXX
இதோ இறைவனின் அடியார்கள் பற்றி சதகத்தின் பாடலும் பொருளும்:–
76. நற்சார்பு
காணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே
கண்ணிணைகள் செய்புண் ணியம்;
கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇரு
காதுசெய் திடுபுண் ணியம்;
பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்
பேசில்வாய் செய்புண் ணியம்;
பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகை
பெரிதுசெய் திடுபுண் ணியம்;
வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்
மேனிசெய் திடுபுண் ணியம்;
விழைவொடவர் சொற்படி நடந்திட லபிப்பதே
மிக்கபூ ருவபுண்ணியம்;
ஆணவம் எனுங்களை களைந்தறி வினைத்தந்த
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) ஆணவம்எனும் களைகளைந்து அறிவினைத் தந்த அண்ணலே
– நான் என்னும் களையை யெடுத்து, அறிவையருளிய பெரியோனே!, அருமை
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
மயூர கவியின் சூர்ய சதகத்தில் ஒரு அற்புதமான ஸ்லோகம்!
ச.நாகராஜன்
மயூர கவி இயற்றிய சூரிய சதகத்தில் 36, 70, 94 ஆகிய மூன்று ஸ்லோகங்களில் அவர் ஒரே அக்ஷரத்தைப் பல முறை பயன்படுத்தி இருக்கிறார், அதனால் அந்த அக்ஷரம் வலூவூட்டப்பட்டு ஒரு வித மந்திரசக்தியை ஏற்படுத்துகிறது என்பதை சென்ற கட்டுரையில் குறிப்பிட்டோம்.
எடுத்துக்காட்டாக 36வது ஸ்லோகத்தை விரிவாகப் பார்த்தோம்.
அடுத்து இங்கு 70வது ஸ்லோகத்தைப் பார்ப்போம்.
நி: ஸ்பந்தானாம் விமாந வஸி
விததிவாம் தேவவ்ருந்தாரகாணாம்
வ்ருந்தை: ஆனந்த – ஸாத்ரோத்யமமபி
வஹதாம் விந்ததாம் வந்திதும் நோ |
மந்தாகின்யாம் – அமந்த: புலிநப்ருதி
மருதுர்மந்தரே மந்திராபே
மந்தாரை: மண்டிதாரம் தததரி
திநக்ருத் ஸ்யந்தந: ஸ்தான்முதே வ: ||
மயூர கவி இந்த அற்புதமான ஸ்லோகத்தில் சூரிய ரதத்தின் வேகத்தைக் குறிப்பிடுகிறார்.
பாடலின் திரண்ட பொருள் :-
பெரிய மாடங்களைக் கொண்டு அதில் வாழும் தேவர்கள் மகிழ்ச்சி பொங்க சூரியனைக் கண்டு வணங்க விமானங்களில் செல்கினறனர். ஆயினும் அவர்களால் வணங்க முடியாதபடி மிகவும் தூரத்தில் சூரியன் இருக்கிறான். காரணம் சூரியனின் உத்வேகமே. சூரிய ரதத்தைத் தொடர்ந்து தேவ விமானங்கள் செல்ல முடியாமல் அவை ஆங்காங்கே நிற்கின்றன.
இவ்வளவு வேகமுடன் செல்கின்ற ரதம் ஆகாய கங்கையான மந்தாகினி மணற்பரப்பில் வேகம் குறையாமல் செல்லும் போதே, நகரம் போலக் காணப்படும் மந்தா மலைக் குன்றின் முகடுகளிலும் , குகைகளிலும் மெல்ல மெல்லச் செல்கின்றது. இத்தகைய சிறப்புடையதும் மந்தார மலர்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சூரியனின் ரதம் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கட்டும்.
இங்கு நாம் ரசிக்க வேண்டியது சூரியனின் ரதம் செல்லும் பாணியையே. பொதுவாக ஜனசந்தடி அதிகமுள்ள ஒரு நகரத்தில் ரதம் செல்லும் போது அது மெதுவாகவே செல்ல வேண்டி வரும். ஆனால் ஜன நடமாட்டமே இல்லாத இடத்தில் அதன் வேகம் கூடுதலாகும்.
இங்கு மாடமாளிகை போல உள்ள மந்தார மலைக் குன்றுகளில் மெதுவாகவும் ஜன சஞ்சாரமற்ற மந்தாகினி மணற் பரப்பில் வேகமாகவும் சூரிய ரதம் செல்கிறது. இதை மெல்ல மெல்லச் செல்லும் சூரிய ரதம் என மயூர கவி அழகுறக் குறிப்பிடுகிறார்.
இந்த ஸ்லோகத்தில் ‘ந்த’ என்னும் அக்ஷரம் 12 முறைகளுக்கும் மேலாக வருவதைக் காணலாம்.
உரை நூல்கள்
சூரிய சதகத்திற்கு 15 உரை நூல்கள் உள்ளன.
அவையாவன:
1) மதுசூதனர் இயற்றிய பாவபோதினீ என்னும் உரைநூல்
2) ஜகன்நாதர் இயற்றிய உரை நூல்
3) வல்லபதேவர் இயற்றிய ஸூர்யானுவாதினீ என்னும் உரை நூல்
4) யக்ஞேஸ்வர சாஸ்திரி இயற்றிய உரை நூல்
5) திரிபுவநபாலர் இயற்றிய உரை நூல்
6) ஜயமங்களர் இயற்றிய உரை நூல்
7) ரங்கதேவர் இயற்றிய உரை நூல்
8) கங்காதரர் இயற்றிய உரை நூல்
9) பாலமபட்டர் இயற்றிய உரை நூல்
10)ஹரிவம்சர் இயற்றிய உரை நூல்
11) கோபிநாதசூரி இயற்றிய ப்ரபாவளீ என்னும் உரை நூல்
12) ராமபட்டர் இயற்றிய உரை நூல்
13) அன்வயமுகர் இயற்றிய உரை நூல்
14)ராமச்சந்திரர் இயற்றிய உரை நூல்
15) லிங்கையர் இயற்றிய உரை நூல்
இவற்றில் பல நூல்கள் இன்னும் அச்சிடப்படவில்லை.
சுவடியில் இருந்த மயூர பட்டரின் சூர்ய சதகம் நூலை சரஸ்வதி மஹால் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது.
மேலே உள்ள தமிழ் அர்த்தம் சிறந்த ஆய்வை மேற்கொண்ட வேதாந்த சிரோம்ணி, தமிழ் வித்வான் திரு என்.சீனிவாசன், ஸம்ஸ்கிருத பண்டிதர், சரஸ்வதி மஹால், தஞ்சாவூர் அவர்களால் ஆய்ந்து எழுதப்பட்டு 1998ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
Sita using old proverb to avoid suicidal thoughts:-
Sundara kanda 5-33- 10/11 (Hanuman says)
रोदनादतिनिश्श्वासाद्भूमिसंस्पर्शनादपि।।5.33.10।।
न त्वां देवीमहं मन्ये राज्ञ स्सर्वज्ञावधारणात्।
“From your weeping, your sighing and your touching the earth (gods do not touch the earth) and your signs of sovereignty, I do not think you are a goddess (meaning otherwise she possessed divine grace).
व्यञ्जनानि च ते यानि लक्षणानि च लक्षये।।5.33.11।।
महिषी भूमिपालस्य राजकन्या च मे मता।
I do not think you can be a divine creature, for I see you weep, breathe heavily; also that your feet touch ground. I also think that you might be Sita herself because I hear you say Rama, Rama. Certainly I must be right in guess. Then she reveals her identity and at the end days,
xxxx
V-33-31/32 (Sita speaks)
द्वौ मासौ तेन मे कालो जीवितानुग्रहः कृतः।।5.33.31।।
“That awful being has given me two months respite. If during these two months I be not rescued, then the only alternative is for me to take my life.
Then Sita says, slowly making up her mind that this is Hanuman. I have heard of the famous proverb which has come down to us from all time.
V -34-6
Provided only life is granted to us, we need not at anytime give up hope. After a time at least , prosperity must return to everybody. I thought I was not going to live, but now you come here, sent by Sri Rama
कल्याणी बत गाथेयं लौकिकी प्रतिभाति मा।
एति जीवन्तमानन्दो नरं वर्षशतादपि।।5.34.6।।
“The adage that ‘joy comes to a living being even though it be at the end of a hundred years’ is popular. It appears true in my case”.
Xxx
73 TIMES ‘kaschit
Then to comfort herself , she puts a series of questions to hanuman , all in the style in which in the Ayodhya Kanda Rama puts questions about the kingdom to Bharata in that famous ‘kaschit, kaschit’ repeated 73 times in 76 slokas.
Kaścit (कश्चित्).—ind. Some boby, some one, a certain one:
Sita addresses to hanuman twenty two questions about her husband and Lakshmana and others, then she says
V -36-30/31
“My lord and husband Rama has none on earth so dear as myself. A dearer person there cannot be, not his mother, not his father, not his brothers, no one. Nor is there one who is of the same degree. I shall live only so long as I hear about him and his movements”.
The poet cleverly uses Rama four times.
न चास्य माता न पिता च नान्यः स्नेहाद्विशिष्टोऽस्ति मया समो वा।
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஜனவரி 15,2024 மகர சங்கராந்தி நன்னாள். சூரியனை வழிபடுவோம்; உயர்வோமாக!
மயூர கவியின் சூர்ய சதகம்!
ச.நாகராஜன்
1
ஹர்ஷ சக்ரவர்த்தியின் அவையில் அவைப் புலவராக இருந்தவர் மாபெரும் கவிஞர் மயூர கவி.
அவருக்கு கொடிய நோயான குஷ்ட ரோகம் பிடித்தது.
இதனால் அவர் அரசவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனால் மனம் நொந்து போன மயூர கவி சூரியனை உபாசிக்கலானார்.
சூரியனின் வழிபாட்டால் அவன் அருள் அவருக்குக் கிடைக்க அவரது கொடிய குஷ்டம் நீங்கியது.
2
அற்புதமான நூலான சூரிய சதகத்தில் சதகம் என்ற சொல்லின் பொருளுக்கு ஏற்ப நூறு ஸ்லோகங்கள் உள்ளன.
சொற்சுவையும் பொருள் சுவையும் கொண்ட இந்த ஸ்லோகங்கள் மந்திர சக்தியைக் கொண்டிருப்பதால் சூரியனின் அருளையும் பெற்றுத் தர வழி வகுப்பவை.
இதில் இன்றைய அறிவியல் கூறி நிரூபிக்கும் ஏராளமான கருத்துக்கள் உள்ளன.
தன் யோக சக்தியாலும், தவ மகிமையாலும், சூரியனின் அருளாலும் இந்தப் பேருண்மைகள் அவருக்குக் கிடைக்க அதை அவர் அப்படியே ஸ்லோகங்களில் பதித்தார்.
இந்த ஸ்லோகங்கள் மந்திர சக்தி உடையவை என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன.
ஒரே அக்ஷரத்தை சில ஸ்லோகங்களில் அவர் பயன்படுத்துகிறார்.
இதன் மூலம் அந்த அக்ஷரத்திற்கான சக்தியை வலுவூட்டி மந்திர சக்தியையும் வலுப்படுத்தி, இதைப் பாராயணம் செய்வோருக்கு சூரிய அருள் கிடைத்து அதனால் ஏராளமான நலன்களும் பலன்களாகக் கிடைக்க அவர் வழி வகை செய்திருக்கிறார்.
குறிப்பாக மூன்று ஸ்லோகங்களைச் சொல்லலாம்.
ஸ்லோகம் 36இல் ‘த்ய’ என்ற அக்ஷரம் பல முறை வருகிறது.
ஸ்லோகம் 70இல் ‘ந்த’ என்னும் அக்ஷரம் பல முறை வருகிறது.
ஸ்லோகம் 94இல் ‘ச’ என்னும் அக்ஷரம் பல முறை வருகிறது.
3
ஸ்லோகம் 36ஐ இங்கு காண்போம்:
கந்தர்வை: கத்ய பத்ய
வ்யதிகரித்வகோ ஹ்ருத்யமாதோ த்யவாத்யை:
ஆத்யைர்யோ நாரதாத்யை:
முநிபிரப்பிநுதோ வேதவேத்யைர் விபித்ய |
ஆஸாத்யாபத்யதே யம்
புநரபி ச ஜகத்யௌவநம் ஸத்ய உத்யந்
உத்யோதோ த்யோதிதத்யௌ: த்யது
திவஸக்ருதோ (அ) ஸாவவத்யாநி வோத்ய ||
த்ய என்ற அக்ஷரம் இந்த ஸ்லோகத்தில் குறைந்த பட்சம் 18க்கும் மேற்பட்ட தடவைகள் வருவதைக் காணலாம்.
சூரியனின் புதிய ஒளியைக் காண்கின்றனர் கந்தர்வர்கள். அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட சூரியனை வணங்கித் துதித்து வாத்தியங்களுடன் அவனது புகழிசை பாடுகின்றனர் என்கிறார் கவிஞர்.
எவனுடைய ஒளி பெற்று உலகம் அன்றாடம் உற்சாகம் மிக்க யௌவனப் பருவத்தை அடைகின்றதோ அவன், இனிமையான சொற்களைக் கொண்டு புனைந்த உரைநடையாலும், செய்யுள்களாலும், இன்னிசைக் கருவிகளுடன் கந்தர்வர்களால் துதிக்கப் படுகின்றான். வேதங்களில் வல்லவர்களான தும்புரு நாரதர் உள்ளிட்ட முனிவர்களால் துதிக்கப்படுகின்றவனும், ஆகாயத்தில் பிரகாசிக்கின்றவனுமாகிய சூரியனின் புத்தம் புதிய, அப்போதே தோன்றிய ஒளியானது உலகைப் புதிய யௌவனப் பூரிப்புடன் விளங்கச் செய்கிறது.
அது உங்களுடைய பாவங்களை அழிக்கட்டும்.
இந்த ஸ்லோகத்தில் ‘ஆதோத்ய வாத்யை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘ஆதோத்ய வாத்யம்’ என்பவை விரல்களால் இயக்கப்படுபவை ஆகும்.
அறப்பளீசுர சதகத்தில் மேலும் 3 பாடல்களை எடுத்துக் கொள்வோம். ஒன்று, என்ன இலையில் சாப்பிட வேண்டும் என்று கூறுகிறது. இரண்டு பாடல்கள் கவிஞர்கள் பற்றியவை..
வாழை இலையில் சாப்பிட்டால் நல்லது என்பது எல்லோரும் அறிந்ததே, நிறைய பேர், தாமரை இலையில் சாப்பிடுகின்றனர். கிராமப் புறத்தில் மந்தாரை முதலிய இலையில் சாப்பிடுவார்கள்; பல இலைகளை ஒன்றாகச் சேர்த்து தையல் இலை என்று பயன்படுத்துவார்கள்.
நான் மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரர் சமாதிக்குச் சென்றபோது தையல் இலையில்தான் சாப்பாடு போட்டார்கள்.
அந்தக் காலத்தில் பல ரயில்வே ஸ்டேஷன்களில் வடை, இட்லி, போண்டா முதலியவற்றை இலையில் மடித்துத்தாஹ்ன் விற்றார்கள். இப்பொழுது மேற்கு நாடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து சிறிது சிறிதாக அகற்றி வருகிறார்கள்.. இபொழுது சணல் பைகள் விற்பனையாகின்றன. இன்னும் கொஞ்ச்ம காலத்துக்குப்பின்னர் தையல் இலைகள், தொன்னை ஆகியன மேலை நாடுகளில் உபயோகத்துக்கு வரலாம்..
தையல் இலை (Patravali or Pattal or Vistaraku or Vistar or Khali ) என்பது உணவு உண்ண உலர்ந்த இலைகளைக் கொண்டு செய்யப்படும் உண்கலமாகும். இது பெரும்பாலும் குங்கிலிய இலை, மந்தார இலை ஆகியவற்றைக் கொண்டு செய்யப்படுகிறது. ஆலிலையும் இதற்குப் பயன்படுத்தப்படுகிறது என்று விக்கிபீடியா கூறுகிறது கர் நாடகத்தில் உள்ள தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் சுவாமி கோயிலில் அன்னதானத்திற்கு இப்போதும் இந்த தையல் இலைகளே பயன்படுத்தப்படுகின்றன.
(மதுரையில் தேர்முட்டி / கீழ மாசிவீதியில் உள்ள பல சரக்குக்கடைகளில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் நானே தையல் இல்லை, தொன்னை ஆகியவற்றை வாங்கியது நினைவுக்கு வருகிறது.)
அடுத்த பாடலில் கஞ்சனை கர்ணன் என்றும்,அவலட்சணமானவனை மன்மதன் என்றும்,ஆண்மையற்றவனை அர்ஜுனன் என்றும் பொய்யனை அரிச்சந்திரன் என்றும் ,புகழாதீர்கள் என்கிறார்.
Xxx
அடுத்த பாடலில் கவிஞன் என்பவனுக்கு என்ன தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு கடல் மடை திறந் தாற்போல சொற்பொழிவு ஆற்றும் திறன் வேண்டும் என்கிறார். இதைப் படிக்கும்போது பாரதியின் வரிகள் நமக்கு நினைவுக்கு வரும்
ஏரண்ட பத்திரம் – ஆமணக்கு இலை. இச்சில் இலை – இத்தியிலை.
சாதங்கள் பல : தயிர்ச்சோறு, புளிச்சோறு, சரக்கரைப்பொங்கல்,
வெண்பொங்கல் முதலானவை. பருகுதல் : நீர் முதலிய குடிவகைகளுக்கே வரும்; கெடுதி யென்றார்.
இச் செய்யுளில் இந்நூலாசிரியரை ஆதரவுசெய்த
மதவேளின் குலம் ‘வேளாளர் குலும்’ என அறியப்படுகிறது.
XXXXXXXXXXXXXX
74. கவிஞர் வறுமை
எழுதப் படிக்கவகை தெரியாத மூடனை
இணையிலாச் சேடன் என்றும்,
ஈவதில் லாதகன லோபியைச் சபையதனில்
இணையிலாக் கர்ணன் என்றும்,
அழகற்ற வெகுகோர ரூபத்தை யுடையோனை
அதிவடி மாரன் என்றும்,
ஆயுதம் எடுக்கவுந் தெரியாத பேடிதனை
ஆண்மைமிகு விசயன் என்றும்,
முழுவதும் பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை
மொழிஅரிச் சந்த்ர னென்றும்,
மூதுலகில் இவ்வணம் சொல்லியே கவிராசர்
முறையின்றி ஏற்ப தென்னோ?
அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே!
அமலனே! அருமை மதவேள்!
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
(இ-ள்.) அழல்என உதித்துவரு விடம்உண்ட கண்டனே
-நெருப்பைப்போலத் தோன்றி வந்த நஞ்சுண்ட கழுத்தையுடையவனே!,
அமலனே – குற்றம் அற்றவனே!, அருமை …….. தேவனே!, எழுதப்படிக்க
வகைதெரியாதமூடனை இணைஇலாச் சேடன் என்றும் – எழுதவும் படிக்கவும் வழியறியாத
பேதையை ஒப்பற்ற ஆதிசேடன் என்றும், ஈவது இல்லாத கனலோபியைச்
சபையதனில் இணைஇலாக் கர்ணன் என்றும் – கொடுத்தறியாத பெரிய
அழுக்கனை அவையிலே ஒப்பற்ற கொடையிற் சிறந்த கர்ணன் என்றும், அழகு அற்ற வெகு கோரரூபத்தை உடையோனை அதிவடிவ மாரன் என்றும் – அழகு இல்லாத மிகுந்த அருவருப்பான உருவமுடையவனைப் பேரழகுடைய காமன் என்றும், ஆயுதம் எடுக்கவும் தெரியாத பேடிதனை
ஆண்மைமிகு விசயன் என்றும் – படையேந்தவும் பழகாத
ஆண்மையற்றவனை வீரத்திற் சிற்ந்த விசயன் என்றும், முழுவதும்
பொய்சொல்லி அலைகின்ற வஞ்சகனை மொழி அரிச்சந்திரன் என்றும் –
முற்றிலும் பொய்புகன்று திரியும் வஞ்சகனைச் சொல்லில் அரிச்சந்திரன்
என்றும், இவ்வணம் மூதுலகில் கவிராசர் சொல்லியே முறையின்றி ஏற்பது
என்னோ – இவ்வாறு பழைமையான இந்த உலகத்திற் பாவலர்கள் புகன்று
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
அருள்வாயே! – 11
(95 முதல் 104 முடிய)
ச.நாகராஜன்
அருணகிரிநாதர் ‘அருள்’ என்ற சொல்லைத் திருப்புகழில் ஆண்ட இடங்கள் ஏராளம்.
அவர் அருள்வாயே என்று கூறும் இடங்களின் நீண்ட தொகுப்பு இது:
படித்து மகிழ்வோம்; பாடிப் பரவுவோம்!
95) கயிலை மலை
புமியதனிற் ப்ரபுவான
புகலியில்வித் தகர்போல
அமிர்த கவித் தொடைபாட
அடிமைதனக் கருள்வாயே
பாடல் எண் 521 – ‘புமி அதனில் ‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : இந்த பூமண்டலத்தில் தனிப்பெரும் தலைவரும், சீர்காழிப் பதியில் அவதரித்தவருமான திருஞான சம்பந்த மூர்த்தியைப் போல. இறப்பை நீக்கி மரணமிலா வாழ்வைத் தரவல்ல தேவாரப் பாடல்களைப் போன்று பாடுதற்கு இந்த அடிமைக்கும் திருவருள் தந்தருள்வாயாக!
96) திருவேங்கடம்
தமிழினி லுருகிய வடியவ ரிடமுறு
சனனம ரணமதை யொழிவுற சிவமுற
தருபிணி துளவர மெமதுயிர் சுகமுற வருள்வாயே
பாடல் எண் 525 – ‘சரவணபவ நிதி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : (சரவணபவ நிதி அறுமுக குருபர என) பலமுறை தமிழினில் ஓதிப் புகழ்ந்து உள்ளம் உருகுகின்ற உன் அடியார்களுக்கு உற்ற, பிறப்பு, இறப்பு என்பவை நீங்கவும், சிவப்பேறு அடையவும், வினைகள் தருகின்ற நோய்கள் துள்ளி ஓடவும், வரத்தினை நீ எங்கள் உயிர் இன்பம் அடையுமாறு தந்தருள்வாயாக!
97) திருவேங்கடம்
துணைப்பத
மலரல திலைநிலை யெனமொழி தழிய மெய்
வழிபட லொழிவனை யருள்வாயே
பாடல் எண் 526 – ‘நெச்சுப் பிச்சி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : உற்ற துணையான பாத மலர் அல்லாமல் நிலையான பொருள் வேறு இல்லை என்னும் சாஸ்திரம் தழுவிய உண்மையான வழிபாடு செய்யாத எனக்கு அருள் புரிவாயாக!
98) திருவேங்கடம்
மலமாங்கடு மோகவி காரமு
மிவை நீங்கிட வேயிரு தாளினை யருள்வாயே
பாடல் எண் 529 – ‘வரி சேர்ந்திடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மும்மலங்களினால் உண்டாகும் காம விகாரங்கள் அனைத்தும் அகன்றிடவும், உன் திருவடிகளைத் தந்த்ருள்வாயாக!
99) வள்ளிமலை
ஒளிதிக ழருவுரு வெனுமறை யிறுதியி
லுள்ளத்தை நோக்க அருள்வாயே
பாடல் எண் 536 – ‘ககனமும் அநிலமும்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : ஒளிமயமானதும், அருவமானது என்றும், உருவமானது என்றும் கூறுகின்ற வேதங்களின் முடிவில் நிற்பதாய் உள்ள அந்தப் பொருளாகிய உன்னை யான் காண நீ அருள் புரிவாயாக!
100) வள்ளிமலை
வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
வினவென்று அன்புதந் தருள்வாயே
பாடல் எண் 539 – ‘சிரம் அங்கம் அம் கை‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : தீவினை யாவும் தொலைந்து நல்ல வினைகளே சேர, உனது திருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்து அருள் புரிவாயாக!
101) மயிலம்
உறுதண்ட பாசமொ டாரா வாரா
எனையண்டி யேநம னார்தூ தானோர்
உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ளருள்வாயே
பாடல் எண் 546 – ‘கொலை கொண்ட‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : கையில் உள்ள தண்டம், பாசக் கயிறு ஆகியவற்றுடன் ஆரவாரம் செய்து வந்து என்னை நெருங்கி, யமனுடைய தூதர்கள் என் உயிரைக் கொண்டு போய்விடும் அந்த நாளில் நீ உன்னுடைய மேன்மையான திருவடியைத் தந்து அருள்வாயாக!
102) திருசிராப்பள்ளி
பார்வதி
பங்கர் போற்றிய பத்மத் தாள்தொழ அருள்வாயே
பாடல் எண் 547 – ‘அங்கை நீட்டி‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பார்வதி பாகராகிய சிவ பெருமான் போற்றித் துதித்த உனது தாமரைத் திருவடியைத் தொழும்படி அருள்வாயாக!
103) திருசிராப்பள்ளி
அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்
டலைதலொ ழித்தென் றருள்வாயே
பாடல் எண் 552 – ‘பகலவன் ஒக்கும்‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : மூடன், கொஞ்சமும் பொறுமை இல்லாதவன். பொருள் தேடிப் பெற்றும், உண்டும் அவ்வாறு நான் அலைதலை ஒழித்து எப்போது அருள்வாய்? அருள்வாயாக!
104) இரத்னகிரி
பல
சித்துவிளை யாடுவினை சீசியிது நாறவுடல்
தத்திமுடி வாகிவிடு வேனொமுடி யாத பத மருள்வாயே
பாடல் எண் 566 – ‘சுற்ற கபடோடு‘ எனத் தொடங்கும் பாடல்
பொருள் : பல (காம) மாய வித்தைகளை விளையாடும் தொழில், சீசீ இது என்று பலரும் வெறுப்புடன் கூறத்தக்கதாய்த் தோன்ற (என்னுடைய) உடல் நைந்து போய் இறுதியில் நான் இறந்து படுவேனோ? அதற்குள் உனது அழிவில்லாத திருவடியைத் தந்தருள்வாயாக!
குறிப்பு & நன்றி : https://www.kaumaram.comதளத்தில் உள்ளபடி பாடல் எண் தரப்பட்டுள்ளது. முழுத் திருப்புகழ்ப் பாடலையும் அதன் விளக்கத்தையும் இதில் காணலாம்