தண்ணி மேல படகு போனா உல்லாசம், படகு மேல தண்ணி போனா கைலாசம்……. (Post No.10,945)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,945

Date uploaded in London – –   6 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 58

Kattukutty

நம்ம ஆளுங்களுக்கு தத்துவம் சொல்லி கொஞ்ச நாளாச்சு

ஆகையால் இதோ…………

..

தண்ணி மேல படகு போனா உல்லாசம்,

படகு மேல தண்ணி போனா கைலாசம்…….

டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம் வரும்,

10 பீர் சாப்பிட்டா??? தூக்க ஆள் வரும்.

பாயசம் 10 கழிச்சா பாய்சன் ஆகிவிடும்

பாய்சன் 10 நாள கழிச்சா பாயசமாகுமா?

என்னதான். M B B S படிச்சி டாக்டர் ஆனாலும்,

கம்ப்யூட்டர்ல இருக்கற வைரஸுக்கு மாத்திரை

கொடுக்க முடியுமா???

பரிட்சைல பெயிலானா திரும்ப படிச்சு பாஸ்

பண்ணலாம். பாஸ் ஆயிட்டா திரும்ப படிச்சு

பெயிலாக முடியாது.

அப்பா, காக்கா கத்தினா விருந்தாளிங்க வருவாங்கன்னு

சொன்னீங்க…..எப்ப திரும்பி போவாங்க???

உங்கம்மா கத்தினா திரும்பி போயிருவாங்க!!!

xxxx

மனைவிக்கும் ஹெல்மெட்டுக்கும் பெரிய வித்தியாசம்

இல்லீங்க…..

எப்போதும் தல மேல தூக்கி வைச்சிட்டீங்கன்னா, கண்டிப்பா

பொழச்சுகுவீங்க!!!

xxx

வயசாக வயசாக சூடு, சொரணை, திமிர் எல்லாம் காணாமல்

போவதைத்தான் “மெச்சூரிட்டீன்னு” சொல்றாங்களோ???

xxx

வாழ்க்கைலே இரண்டு விஷயத்தை எப்பவும் மறக்கக்கூடாது.

விரும்பி எது வந்தாலும் “take care”.

விலகி எது போனாலும் “don’t care”

***

What is the difference between a good secretary

and a personal Secretary???

One says “good morning boss”!!!

The other says “it is morning boss”!!!

xxxx

A frustrated husband in front of his lap top :

“Dear google, pl don’t behave like my wife……

Pl allow me to complete my sentence,

before that you start guessing and suggesting!!!

–subham—

tags-

படகு , கைலாசம்

ஞானமொழிகள் – 58,, ,

பல் கட்ட உதவும் ப(ல்)லேடியம் (Post No.10,944)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,944

Date uploaded in London – –    6 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மூலக வரிசையில் பலேடியம் (PALLADIUM) என்னும் உலோகம் முக்கியமான ஒன்றாகும். இது தங்கத்தை விட விலை உயர்ந்தது. இதையும் தங்கத்தையும் கலந்து பல் கட்டப் பயன்படுத்துகிறார்கள். வெள்ளி போன்ற பள பளப்பு உடையதால் நகைத்தொழிலும் பயன்படுகிறது. தங்கம், பிளாட்டினம் நாணயங்களை வாங்கி, எதிர்காலத்தில் விலை உயரும் என்று எண்ணி, முதலீடு செய்வோர் பலேடியம் நாணயங்களை வாங்கி விலா லாக்கருக்குள் (Lockers) வைக்கின்றனர். இந்தக் கட்டுரை எழுதும் நாளில் (மே , 2022) ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1900 டாலர் என்றால் பலேடியத்தின் விலை 2500 டாலர் ஆகும்.

தங் கத்தின் விலையை விடக் கூடுதல் விலை கொண்ட பலேடியம் பற்றிய சுவையான செய்திகளைக் காண்போம். ஒருகாலத்தில் இதை உதவாக்கரை தங்கம் (Useless Gold) என்று பெயரிட்டனர். பெரும்பாலும் தங்கம் வெட்டி எடுக்கும்போது அதனுடன் சேர்ந்து வெள்ளி நிற உலோகம் கொண்ட இந்த உலோகமும் கிடைத்தது. அப்போது இது ஒரு தனி மூலகம்/தனிமம் (Element) என்பது உலகிற்குத் தெரியாது . சரஸ்வதி போல, கிரேக்க நாட்டில் அறிவுத் தெய்வமாக வழிபட்ட தெய்வம் அதீனா(Athena) ; அவளுக்கு அடைமொழி பல்லாஸ் அதீனா(Pallas Athena) . அதாவது பல்லேடியும் என்னும் ஊரில் குடிகொண்ட தெய்வம். அங்கிருந்து கிரேக்க வீரன் ஆடிசியஸ் (Odysseus) என்பவன்  பலேடியம் சிலைகளைத் திருடுவதை இன்றும் பழங்கால கிரேக்க பானைகளில் காணலாம். ஒருகாலத்தில் நாம் துர்க்கையை போருக்கு முன் வழிபடுவது போல கிரேக்கர்களும் ரோமானியர்க்ளும் போரில் இந்திச் சிலையை எடுத்துச் சென்றனர். கோட்டைகளை முற்றுகை இட்டால் பல்லேடியும் தேவதைகளை கோட்டையைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்வர். அதன் அர்த்தம் – பாதுகாப்பு (Security and Protection) ;  துர்கம் என்றாலும் கோட்டை; அதாவது நமக்கு பாதுகாப்பு தருபவள் துர்க்கை.

அந்தக் காலத்த்தில் போருக்கு உதவிய பலேடியம் இப்பொழுது பொருளாதாரத்தில் உதவுகிறது; அதாவது முதலீடு (Investment) செய்தால் பாதுகாப்பு தருகிறது. தங்க நாணயங்களை வெளியிடுவது போல கனடா போன்ற  பல நாடுகள் அவ்வப்போது ஒரு அவுன்ஸ் பலேடிய நாணயங்களையும் வெளியிடுகின்றன.

xxx

உடலுக்கு உதவுமா?

நமது மனித உடலில் பலேடியம் மிகச் சிறிய அளவே திசுக்களில்(Tissues)  காணப்டுகிறது. ஆகையால் இதற்கு ஒரு உபயோகமும் இல்லை. ஆயினும் இது எளிதில் கரையாதது , அரிக்க முடியாதது; ஆகையால் பல் கட்ட தங்கத்துக்கும் வெள்ளிக்கும் மாற்றாக அல்லது அவற்றுடன் சேர்ந்து இந்த உலோகத்தைப் பயன்படுத்துகின்றனர்.

xxx

முக்கிய உபயோகம்

காரிலிருந்தும் சாலையில் செல்லும் வாகனங்களில் இருந்தும் வரும் விஷப்புகையை தூய்மைப்படுத்த உதவும் (Catalytic Convertors) கருவிகளில் இது அதிகமாகப் பயன்படுகிறது. நகைகள் செய்யவும் இதை உபயோகிக்கின்றனர். பல மின்சார சாதனங்களிலும்  இதன் பூச்சு இருக்கும் .

நகைத் தொழிலில் இதற்கு வெள்ளைத் தங்கம் (White Gold) என்று பெயர் பாலியஸ்டர் , கண்ணாடி, பாட்டில் தொழில்களிலும் இதைப் பயன்படுத்துகிறார்கள்

xxx

கிடைக்கும் இடங்கள்

தென் ஆப்பிரிக்கா , அமெரிக்கா , கனடா ரஷியா , ஜிம்பாப்வே , பிரேசில் முதலிய நாடுகளில் இந்த உலோகம் கிடைக்கிறது

இதன் வரலாறு மிகவும் சுவையானது . ஒரு கிறிஸ்தவ மதப் பிரசாரகருக்கு (Clergyman)  14 குழந்தைகள். அவர்களில் ஒருவர் பெயர் வில்லியம் ஹைட் உல்லாஸ்ட்டன் Wiiliam Hyde Wollaston 1766- 1828) . அவர் படித்தது மருத்துவப் படிப்பு ; கொஞ்ச காலம் டாக்டராகப் பணியாற்றிவிட்டு ரசாயனப் பொருட்களின் ஆராய்ச்சியில் இறங்கினார். அவருடன் ஸ்மித்சன் டென்னன்ட் (Smithson Tennant) என்பவரும் சேர்ந்து கொண்டார்.

பலேடியம் , ரோடியம் , ஆஸ்மியம், இரிடியம் ஆகியன ஒரே (same group) அணியைச் சேர்ந்த மூலகங்கள். ஆயினும் பலேடியம் ஒரு மூலகம் என்பதை உலகிற்கு முறையாக எடுத்த்துரைத்தவர் உல்லாஸ்ட்டன் தான் . முதலில் இதை புதிய வெள்ளி (New Silver) என்ற பெயரில் லண்டன் சோஹோ (Soho, London) மார்க்கெட்டில் விற்றனர்.அப்போது தங்கத்தை விட அது ஆறுமடங்கு விலை அதிகமானது. அதை விலைக்கு வாங்கிய ரசாயன நிபுணர் ரிச்சர்ட் செனிவிக்ஸ் (Richard Chenevix) அது புதிய உலோகம் அல்ல; பிளாட்டினம்,- பாதரசத்தின்  கலப்பு உலோகமே என்று விஞ்ஞானிகள் கூட்டத்தில் அறிவித்தார். உடனே நிக்கல்சன் ஜர்னல் என்ற பத்திரிக்கையில் உல்லாஸ்ட்டன் சவால் விட்டார். வேறு எவரேனும் வேறு ஒரு உலோகத்தில் இருந்து பலேடியத்தை  எடுத்துக்காட்டினால் நான் 20 பவுன் தருகிறேன் என்று விளம்பரம் செய்தார்! தற்காலத்தில் 20 பவுனின் மதிப்பு 2000 பவுனுக்கு மேல்.

அவர் விட்ட சவாலை யாரும் ஏற்க வில்லை. பின்னர் தானே விஞ்ஞானிகள் கூட்டத்தில் அதை முறையாக அறிவித்தார். தான் இதை ரகசியமாக வைத்திருந்ததாகவும் தனது கண்டுபிடிப்பின் முழுப் பலனும் தனக்கே கிடைக்க இப்படிச் செய்ததாகவும் உரையாற்றினார்

xxx

ரசாயன குணங்கள்

தனிமத்தின் குறியீடு – பி டி (Pd)

அணு எண் – 46

உருகு நிலை – 1552 டிகிரி C சி

கொதி நிலை 3140 டிகிரி C சி

பலேடியம் வெள்ளை நிற உலோகம். இதைத் தங்கம், வெள்ளி போல மெல்லிய தகடுகளாகச் செய்யமுடியும் ; மூலக அட்டவணையில் 10 என்னும் அணியைச் சேர்ந்தது. அதில் விலை உயர்ந்த பிளாட்டினமும் உளது. இதற்கு ஆறு ஐசடோப்புகள் (Isotopes) உண்டு; அவற்றில் எதற்கும் கதிரியக்கம் இல்லை.

xxx

சர்ப்ரைஸ் அறிவிப்பு

பலேடியத்தின் ஒரு அதிசய குணம் அது தன் அளவைப்போல 900 மடங்கு ஹைட்ரஜனை (Hydrogen)  எடுத்துக்கொள்ளும் .உலோகத்தில் ஊடுருவிப் பரவவும் செய்யும். இதனால் காற்றிலிருந்து ஹைட்ரஜன் வாயுவைப் பிரித்தெடுக்க இதை பயன்படுத்தினர்.1989-ல் இருவர்( MARTIN FLEISCHMANN & STANLEY PONS ) ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தைக் கூட்டி பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டனர் பலேடியம், லித்தியம் கூட்டுப்பொருளை/ உப்பைப் பயன்படுத்தி மின்சாரம் உண்டாக்க முடியும் என்று காட்டினார்கள். அப்போது நடக்கும் ரசாயன நிகழ்வு ‘சாதாரண வெப்ப  நிலையில்  அணுக்கள் இணைப்பு’ (COLD FUSION) போன்றது என்றனர். இதன் விளைவாக வெப்பமும் ஹீலியமும் கிடைக்கும் என்றனர்; வெப்பம் உருவாக அணு இணைப்பு காரணம் (Fusion) இல்லை; மேலும் இது செலவுமிக்க சோதனை என்று மற்றவர் கூற அந்த பரபரப்பு அடங்கிப்போனது.

(இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்தால் பிரமாண்டமான ஹைட்ரஜன் குண்டு வெடித்து ஹீலியம் உருவாகும்; இதற்கு பிரம்மாண்ட வெப்பம் தேவை; இப்படி ஒவ்வொரு நொடியிலும்  சூரியனுக்குள் கோடிக்கணக்கான ஹைட்ரஜன் குண்டுகள் வெடிப்பதால்தான் சூரியன் நமக்கு ஒளியையும், வெப்பத்தையும் தருகிறது )

–சுபம் —

TAGS—  பலேடியம் ,PALLADIUM, பல் கட்ட , உதவும், 

நா இன்னிக்கி பாங்கிலே cheque டெபாசிட் பண்ணுனா எப்ப சார் கிளியர் ஆகும்? (Post 10,924)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,924 (missed number)

Date uploaded in London – –   6 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் –   55

Kattukutty

உலகத்திலேயே அதிக பொய் கொண்ட இரண்டு லெட்டர்கள்

  1. LOVE LETTER.
  2. LEAVE LETTER.

XXX

உன் கவலைகளையெல்லாம் ஆண்டவனிடமே சொல்லி அழு….

ஏனெனில. அவர் மட்டும்தான் அதை யாரிடமும் சொல்லி

சந்தோஷப்பட மாட்டார்.

XXX

சிரிக்கும்போது வாழ்க்கையை வாழ்கிறோம்.

ஆனால் அழும்போது வாழ்க்கையை புரிந்து கொள்கிறோம்

XXX

தக்காளி சோறு பிரியாணி மாதிரி இருந்தா அது அம்மா சமையல்,

பிரியாணியே தக்காளி சோறு மாதிரி இருந்தா அது தங்கச்சி சமையல்,

சாப்பிட்டவுடனே வாந்தி வர மாதிரி இருந்தா அது பொண்டாட்டி சமையல்!!!

XXX

என்ன ,…..மாப்ளே உங்க கண்ணெதிர ஒருத்தன் கோயில்

உண்டியல் உடைச்சு பணத்த எடுத்தான்னு சொல்றீங்க…..

அத பாத்துட்டு சும்மா இருந்திருக்கீங்களே….???

அந்த கோயில்ல தான் உங்க பொண்ண எனக்கு கல்யாணம்

பண்ணி வைச்சீங்க…. அப்போ சாமி தடுக்காம

பாத்துக்கிட்டுதானே இருந்துச்சு………!!!

XXX

Customer : நா இன்னிக்கி பாங்கிலே cheque டெபாசிட் பண்ணுனா

எப்ப சார் கிளியர் ஆகும்????

Bank manager: 3 நாள் ஆகும்.

Customer: என்னோட ‘செக்’, எதிரில இருக்கற பேங்கோடதுதானே???

ரெண்டு பேங்கும் எதிர் எதிரெதான இருக்கு, பின்ன எதுக்கு இவ்வளவு

நாளாகும்???

Bank manager: சார், புரொசீஜர்ன்னு ஒண்ணு இருக்கு அத follow

பண்ணனுமில்ல…..கொஞ்சம் யோசிச்சு பாருங்க …. நீங்க வெளிலெ போயுட்டிருக்கீங்க …… வழில சுடுகாடு வருது…. சுடுகாடு முன்னாடி

நீங்க திடீர்ன்னு செத்து போயிடிறீங்க ……. அப்படியே உங்கள

எரிச்சடுவாங்களா இல்லே….. வீட்டுக்கு எடுத்துக்கிட்டு வந்து சாங்கியம்

எல்லாம் செஞ்சி அப்புறம் சுடுகாட்டுக்கு எடுத்துட்டு போவாங்களா????

Customer: ???

tags ஞான மொழிகள் –   55

எங்க பொண்ணு கல்யாணத்துக்கு கன்டிஷன்ஸ் / நிபந்தனைகள் (Post No.10,943)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,943

Date uploaded in London – –   6 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

பொண்ணு கல்யாணத்துக்கு கன்டிஷன்ஸ் / நிபந்தனைகள்

ஞான மொழிகள் – 60

KATTU KUTTY

படித்ததில் பிடித்தது.

*”பெண் வீட்டாரின் இன்றைய எதிர்பார்ப்புகள்:

“பெண்ணின் குற்றமா? இல்லை பெண்ணை பெற்றவர்களின் குற்றமா? 

“ஒருவர்:சார்! நான்

T. Nagar லேந்து பேசறேன் ! உங்ககிட்ட, உங்க பொண்ணு கல்யாண விஷயமா அவசரமா பேசணும்!

மற்றோருவர் :”நீங்க என் பொண்ணு கல்யாண விஷயமா அவசரமா பேசுறதுக்கு முன்னால, நாங்க எங்க பொண்ணுக்கு எப்படிப்பட்ட, வரனா பார்க்கறோம்ன்னு சொல்றோம்! அப்புறம் நீங்க பேசுங்க!

ஒருவர் :சார்! கொஞ்சம் பொறுங்க! நான் என்ன சொல்ல வர்றேன்னா……

மற்றோருவர் :”நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்.. நான் சொல்றதை முதல்லே கேளுங்க! பிறகு நீங்க சொல்லுங்க!

ஒருவர்: “சரி! முதல்லே நீங்க என்ன சொல்லனுமோ சொல்லுங்க! அப்புறம் நான் சொல்லறேன் !

மற்றவர் :நாங்க எங்க பொண்ணுக்கு 6,5,4,3,2,1 இருக்கிற பையனாக பார்க்கறோம்!

ஒருவர் :” 6,5,4,3,2,1, அப்படின்ன என்ன?

மற்றோருவர் :” 6,5,4,3,2,1ங்கறது என்னன்ன ,

“6 ன்னா பையன் 6டிஜிட்ல சம்பளம் வாங்கனும் அதாவது குறைஞ்ச பட்சம் மாசம் 1லட்சம் சம்பளம் சம்பாதிக்கணும்! “

” 5ன்னா பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் போது 5 லட்சத்துக்கு வைர நெக்லஸ் போடணும்! “

” 4ன்னா, 4சக்கரம் உள்ள கார், பையன் பேருலே வச்சு இருக்கணும்!

” 3ன்னா,மூணு ரூம் உள்ள சொந்த பிளாட் பையன் பேருலே இருக்கணும்! “

2 ன்னா, பையனோட அப்பா, அம்மா கல்யாணத்திற்கு பிறகு, 2 பேரும் பையனோட சேர்ந்து இருக்கக்கூடாது!

1 ன்னா, கல்யாணத்துக்கு பிறகு, என் பொண்ணு 1குழந்தை தான் பெத்துப்பா! அதுவும் அவ விருப்பப்படும்போது தான்!

எங்களுக்கு பையனை பிடிச்சுடுத்துன்னா, நீங்க பையனோட salary சர்டிபிகேட் “கொடுக்கனும்!

” அப்புறம், வைர நெக்லஸ் போடறதுக்கு, தகுதி இருக்கான்னு தெரிஞ்சுக்கறதுக்கு, பையனோட பேங்க் ஸ்டேட்மெண்ட் வேணும்!

“பையன் பேர்ல இருக்கிற காரோட RC certificate, பிளாட்டோட property document வேணும்! “

ஒருவர் : “மேலே சொன்ன விஷயங்களெல்லாம் உங்க பொண்ணு தன்னுடைய கல்யாணத்திற்கு போட்ட கண்டிஷன்களா?

மற்றோருவர் :” என் பொண்ணு சின்ன பொண்ணு சார்! அவளுக்கு இதெல்லாம் தெரியாது! ரொம்ப வெகுளியா பழகுவா சார்! இதெல்லாம் நாங்க போடற கண்டிஷன்கள்!

“ஒரே பொண்ணு ரொம்பவே செல்லம் கொடுத்து வளர்த்து இருக்கோம்!” புகுந்த வீட்லே போய் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக நாங்க போடற கன்டிஷன்கள் இது!

மேலும், அவளுக்கு வாசல் தெளித்து கோலம் போடத் தெரியாது! சமையல் பண்ணத் தெரியாது! லீவு நாளுன்னா 10 மணிக்குத்தான் எழந்துப்பா! புடவை கட்டிக்கத்தெரியாது! அதனாலே விசேஷங்களுக்கு சுடிதார்தான் போட்டுப்பா!

அப்புறம் இன்னொரு விஷயம்! என் பொண்ணு சுயமரியாதைக்காரி, யார் காலிலேயும் விழுந்து கும்பிடமாட்டா! இதுக்கெல்லாம் நீங்க

ok ன்னு சொன்னா மேற்கொண்டு, என் பொண்ணு கல்யாண விஷயமா, என் மனைவி உங்ககிட்ட பேசுவா!

ஒருவர் :சார்! எனக்கு நீங்க பேசினதே தலைய சுத்தறது.! இதுலே உங்க மனைவி வேறயா? நான் என் பையனுக்கு வரன் தேடலே சார்!

மற்றவர் :அப்புறம் எதுக்கு என் பொண்ணு கல்யாண விஷயமா பேசணும்ன்னு சொன்னீங்க!?

ஒருவர் :”என்ன எங்க சார் பேசவிட்டீங்க நீங்க! நான் T Nagar லே இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் “இன்ஸ்பெக்டர் பேசறேன்!”

உங்க பொண்ணு, இன்னிக்கு உங்க தெரு மெக்கானிக் ஷாப் பக்கத்திலே இருக்கிற ஒரு பையனை காதலிச்சு, ஒரு தெருமுனையிலே இருக்கிற கோயிலிலே கல்யாணம் பண்ணிட்டு ஸ்டேஷனுக்கு வந்துருக்கா!

நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க

மாட்டீங்க! மேலும் நீங்க உங்க ஊரு ஜெனத்தை கொண்டு கல்யாணம் பண்ணின இவங்களை பிரிச்சுடுவீங்களாம்! அதனாலே, அவங்க குடும்பம் நடத்தறதுக்கு, போலீஸ் protection வேணும்ன்னு கேட்டு வந்துருக்கா சார்!

மற்றவர் : “என்னது….. என்றவாறே மயக்கமாய் கீழே சாய்கிறார்.

***

Tags-  பெண் , எதிர்பார்ப்புகள், பொண்ணு கல்யாணத்துக்கு கன்டிஷன்ஸ் , நிபந்தனைகள்

மனிதர்களை மரம் போல நினை! (Post No.10,942)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,942

Date uploaded in London – –     6 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மனிதர்களை மரம் போல நினை!

ச.நாகராஜன்

மரங்கள் அடர்ந்த காட்டிற்குள் நுழையும் போது விதவிதமான மரங்களை அங்கு காண்கிறோம்.

எல்லா மரங்களையும் நாம் பார்த்து மகிழ்கிறோம்; விரும்புகிறோம்.

ஒரு மரம் உயரமாக இருக்கிறது; இன்னொன்று குட்டையாக இருக்கிறது.

ஒரு மரம் வளைந்து இருக்கிறது; ஒரு மரம் நிமிர்ந்து செல்கிறது.

ஒரு மரம் பசுமையாக இருக்கிறது; இன்னொரு மரம் வாடி இருக்கிறது.

ஒரு மரம் கனிகளுடன் இருக்கிறது; இன்னொன்று பட்டுப் போய் இருக்கிறது.

அனைத்து மரங்களையும் அதன் வடிவத்தின் படியும், அது எப்படி இருக்கிறதோ அதே நிலையின் படியும் ஏற்றுக் கொள்கிறோம்; மகிழ்கிறோம்.

ஆனால் மனிதர்களுடன் பழகும் போது மட்டும் நாம் வேறு படுகிறோம்.

ஒருவரை இன்னொருவருடன் ஒப்பிட்டுப் பார்க்கிறோம். நீ இப்படி இருக்கிறாய்; நீ அப்படி இருக்கிறாய் என்று தொடர்ந்து விமர்சனம் செய்கிறோம்.

இந்தப் பழக்கத்தை விட்டு விட்டு மரங்களைப் பார்க்கும் போது அடையும்  மகிழ்ச்சியைக் கொள்வது போல, ஒவ்வொருவரையும் அவரவர் நிலையில் அப்படியே ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சி அடைதல் வேண்டும்.

விமர்சனத்தை விட்டு விட வேண்டும்.

அனைவருடனும் அன்பு பாராட்டி நடந்தால் உலகமே சொர்க்கமாகி விடும், அப்படி நடப்பவருக்கு!

*

புத்த பிட்சு ஒருவர் அந்தி நேரத்தில் இருள் படரத் தொடங்கிய நேரத்தில் நடந்து கொண்டிருந்தார்.

ஏதோ ஒன்றின் மேல் கால் வைத்த போது சடக் என்று சத்தம் கேட்டது.

இருட்டில் கீழே பார்த்தார். அது ஒரு சூல் கொண்ட தவளை.

அதன் மேல் கால் வைத்ததால் அது நசுங்கி விட்டது.

பிட்சு மனம் நொந்தார். ஒரு உயிருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்பது அல்லவா புத்தமதம் கூறும் எட்டு கொள்கைகளுள் ஒன்று.

இப்படிச் செய்து விட்டோமே என்று அவர் நொந்து படுக்கப் போனார்.

அவர் கனவில் ஆயிரக்கணக்கான தவளைகள் தோன்றி அவரை வதைத்தன.

காலையில் எழுந்து தான் வந்த வழியில் சென்று பார்த்தார் – தான் கொன்ற தவளையை ஒரு பார்வை பார்க்க!

என்ன ஆச்சரியம் அது தவளையே இல்லை. அது ஒரு சிறு மரக் கொட்டை.

அது பிதுங்கி இருந்தது. அது தான் சடக் என்ற சப்தத்தைப் போட்டிருக்கிறது.

There is no objective world – புற உலகம் என்று ஒன்று இல்லை என்ற புத்தரின் போதனையை அவர் இப்போது புரிந்து கொண்டார்.

 மனதில் ஏற்படும் அக உலகத்தால் தான் அனைத்தும் ஏற்படுகிறது என்பதை புரிந்து கொண்ட அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

*

புத்தரைப் பார்க்க வந்த பெரியவர் ஒருவர் அவரிடம், “ஐயனே! வார்த்தைகளே வேண்டாம். வார்த்தைகள் பயனற்றவை. வார்த்தைகள் இல்லாமல் உங்கள் உபதேசத்தை அருளுங்களேன்” என்றார்.

புத்தர் அவரைக் கருணையுடன் பார்த்தார்.

ஒன்றுமே பேசவில்லை.

பெரியவர் புத்தரின் கருணைப் பார்வையையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பின்னர் சற்று நேரம் கழித்து, “ஐயனே! உங்கள் அன்பு மழையில் நனைந்து விட்டேன். எனக்கு எல்லாம் புரிந்து விட்டது. அன்பு ஒன்று தான் எல்லாம். பேச்சுக்கே இடமில்லை. நான் வருகிறேன்” என்று கிளம்பினார்.

அவர் சென்ற பிறகு புத்தர் கூறினார்: “ஒரு நல்ல குதிரை சவுக்கின் நிழலைப் பார்த்தால் கூடப் பறக்கும்”

**

tags- மரம், புத்தர் , தவளை , பிட்சு

OLDEST ROBOT IN THE WORLD WAS A HINDU ROBOT ! (Post No.10,941)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,941

Date uploaded in London – –    5 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

xxx

There is a very interesting story about a robot in the Hindu scriptures. First let me give the story as we find it in Thaneswar Sarmah’s book (New Trends in the Interpretation of the Vedas)

Sarmah has compiled the story from three books : Brhad devata, Mahabharata and Harivamsa.

Brahma has six Manasaputras (created by his mental power) and one of them was Marichi. His son was Kasyapa. He married 13 of Daksha’s daughters and though Aditi, Diti, Danu, Kadru and others he became the father of Devas, Daityas, Danavas, Nagas, Yakshas, Gandharvas, Apsaras, Kinnaras etc. This explodes the myths of Max Muller gangs and Marxist Gangs who said that they belong to different races and Vedic Aryans clashed with the aborigines (Daityas and Danavas).

Even the Rig Veda called Indra, Agni, Mitra, Varuna and others as Asuras in its early parts. In Brhad Aranyaka Upanishad we see Devas, Asuras and Menfolk going together to god to get some advice and the God said D,D,D. (D D D Story is already given in this blog) It shows they lived together and they all respected god.

XXX

Here is the story of VISVAVATH AND SARANYU

KASYAPA produced 12 Adityas through Aditi, the eldest daughter of Daksha Prajapati. Tvasta and Visvavath were two of thm.

Tvasta was a great carpenter and sculptor. He fashioned all types of chariots, missiles and weapons for warriors. He had Visvakarman, Trisiras (Visvarupa), Vrtra as sons and Saranyu daughter.

In course of time Visvavat married Saranyu. They gave birth to twins Yama- Yami. After sometime, Saranyu got bored for two reasons. Her husband was going out in the morning to give light to the world as Sun/Aditya and return only in the evening. He was too hot for Saranyu. Just to break this monotony, Saranyu, being the daughter of great carpenter(Architect, Engineer), built her own image and gave it life. She tutored the image what to do in the house (a robot with life). She took the form of a mare (female horse) and wandered happily.

Visvavat couldn’t find that his wife was away, because the image (robot) did all the work perfectly. He even had a child through the image and he was known as Manu, the first king of human race.

(The word man came from Manu; the words technology, technical, Architect, technic etc came from Daksha, Taksha)

When Tvasta found out the image was not his wife Saranyu, he also took the form of a horse and went in search of Saranyu. They met and had one more set of twins known as Asvins  (Asvin= people from horse). Dasra and Nasatya are the twins (Asvins)

Xxx

My Comments

The story shows cousin marriage; moreover, it shows some knowledge in making images and infusing life into it. They looked like real life images like we see in Madame Tussauds Museum. So I consider them as robots. Not even Japanese’ advanced technology in Robotics produced a robot which  can give birth to baby robots.

Interpreting the image of Saranyu as a robot with life is my own interpretation. Even if one doesn’t believe the story, one would have to admit the seed of Robotics is there. Earlier I showed that Lord Shiva was the first man to use Bluetooth to listen to music. When two devotees Asvatharan and Kampatharan requested Lord Shiva to listen to their music Siva made them as ear studs and wore it. Siva was listening to their 24 hour music. But he did not patent it like Sony Walkman!!

Please see the links:

H for Hindu | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › h-f…

26 Nov 2018 — HEAVENLY MUSICIAN’ USED BY LORD SHIVA LIKE ‘WALKMAN‘ (SONY) IN HIS EARS TO LISTEN TO MUSIC · LORD SHIVA · AN ANCIENT KING; ALSO THE NAME OF AN …


Hindu God with “an IPod” | Tamil and Vedas

https://tamilandvedas.com › hindu-g…

13 Feb 2013 — When Sony invented Walkman, ear phones became a household thing. Even then it was big and uncomfortable to keep it in the pocket.


Da……………Da……………Da Story | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2014/02/19 › dadada-story

19 Feb 2014 — Da meant Datta (Give, Donate) for humans. Human beings were miserly. They have to share the wealth. Even before Karl Marx and Engels spread the …

Missing: DDD ‎| Must include: DDD


biology | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › biology

28 Dec 2021 — This story of 3 DDD sounds from the Thunder show that Hindus used Nature to Teach and to Learn. This story shows Opposition Party/ Asura …

–subham—

Tags : Visvavat, Saraanyu, Robot, Robotics, Tvasta, Daksha, Tech, Taksha

—subham—

உலகின் முதல் ரோபாட்– இந்துக்கள் கண்டுபிடிப்பு ! (Post No.10,940)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,940

Date uploaded in London – –    5 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

உலகில் முதல் முதலில் காதில் Ear Phone இயர் போன் மாட்டிக்கொண்டு இசை கேட்பதைக் கண்டுபிடித்தது இந்துக்கள் என்பதை முன்னர் கண்டோம் . அஸ்வதரன், கம்பத்தரன் என்ற இரண்டு பேர் எங்கள் இசையை எப்போதும் கேட்கவேண்டும் என்று சிவபெருமானிடம் வேண்ட அவரும் அவ்விருவரை காதில் அணியும் தோ டுகளாகச் செய்து 24 மணி நேர இசை கேட்பதையும் இதனால் ‘தோடுடைய செவியன்’ என்று திருஞான சம்பந்தர் பாடியதையும் அறிவீர்கள் (எனது 213ம் ஆண்டு கட்டுரை இணைப்பைக்  கீழே காண்க)

யமா- யமி என்னும் இரட்டைக் குழந்தைகளை ஈன்றெடுத்தவர்கள் விஸ்வவத் – சரண்யூ (Visvavat- Saranyu)  தம்பதியர் ஆவர். இவர்களில் சரண்யூ என்ற பெண்மணி இயந்திர மனிதன்= ரோபாட் ROBOT ஆகிய கதை பிருஹத் தேவதா, மஹாபாரதம், ஹரிவம்சம் ஆகிய நூல்களில் உள்ளது . இந்த சுவை யான கதையைக் காண்போம்

பிரம்மா தனது மனத்தின் மூலமாக ஆறு பேரை உருவாக்கினார் . அவர்களை மானஸ புத்திரர்கள் என்பர். அவர்களின் பெயர்கள் :– மரீசி, அத்ரி, ஆங்கிரஸ் புலஸ்திய, புலஹ, க்ரது .

இவர்களில் மிகவும் முக்கியமானவர் மரீசி. அவருடைய புதல்வர் காஸ்யபர்; அவர்தான் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமானவர் . அவர் திராவிடங்களுக்கும் மார்க்சீயர்களுக்கும், மாக்ஸ்முல்லர்களுக்கும், கால்டு வெல்களுக்கும் வெடிகுண்டு வைப்பவர். அந்தக் கழிசடைகளைத் தூள் தூள் ஆக்குகிறார். இந்துக்கள் வெளிநாட்டில் இருந்து வந்தனர் என்று இந்தக் குமபல்கள் ஆயிரக்கணக்கில் புஸ்தககங்களையும் கட்டுரைகளையும் எழுதிக்குவித்துள்ளன. ஆரியர்கள் என்போர் குடியேறிகள் Migrants என்றும் அதற்கு முன்னர் மத்தியதரைக்கடல் பகுதியிலிருந்து குடியேறியவர்கள் திராவி டர்கள் என்றும் அவர்கள் கூறினர் ; அரக்கர்கள், ராக்ஷஸர்கள் உண்மையில் பூர்வ குடி Aborigines மக்கள் என்றும் கதை கட்டினர் .இததகைய கயவர்கள் மீது அணுகுண்டு வீசுகிறார் காஸ்யப முனிவர்.

அதாவது அரக்கர்களும் தேவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளளைகள் அல்லது ஒரே தந்தைக்கு இரு பெண்கள் மூலம் பிறந்தவர்கள் என்று இந்துக்கள் கூறுகின்றனர். உலகம் தோன்றிய நாள் முதல் இவர்கள் இருவரும் இருக்கின்றனர். ரிக் வேதத்தில் இந்திரன், அக்கினி, மித்ரன் வருணன் ஆகியோர் அசுரர் என்றே முதலில் அழைக்கப்பட்டனர். அசுரர்களும், தேவர்களும், மனிதர்களும் சென்று இறைவனிடம் ஒரு சொல் தாரீர் என்று Advice அறிவுரை கேட்க அவர் த , த ,த என்று சொன்ன கதை 2800 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங் காட்டு உபநிஷதத்தில் உள்ளது (முன்னரே த த ,த  கதையை எழுதியுள்ளேன்); இப்போது காசியபர் கதைக்குத் திரும்புவோம் .

பெருங்காட்டு உபநிடதம் = பிருஹத் ஆரண்யக உபநிஷதம்

தக்ஷப் பிரஜாபதிக்கு 50 பெண்கள். அவர்களில் 13 பேரை காஸ்யபர் கல்யாணம் செய்துகொண்டார்.அவர்களுடைய பெயர்கள் :

அதிதி

திதி

தனு

காலா, அநாயு, ஸிம்ஹிகா, முனி, க்ரோதா , ப்ராதா அரிஷ்டா விநதா , கபிலா, கத்ரு . அவர்களில் மிக முக்கியமானவர்கள் முதல் மூவர்.

இந்த 3 பேரிடமிருந்துதான் தேவர்கள் தைத்யர்கள், தானவர்கள் வந்தனர். ஏனையோரிடமிருந்து நாகர்கள், கந்தர்வர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள் முதலானோர் வந்தனர் என்கிறது இந்துமத நூல்கள். பறங்கித் தலையர்களும் மார்க்ஸீயங்களும் புஸ்தகம் எழுதியபின்னர் நமது தமிழ் சம்ஸ்க்ருத நூல்களில் உள்ள உண்மை எவருக்கும் தெரியாமலேயே போய்விட்டது .

அரசியலில் எப்படி ஓரிரு கட்சிகள் உடைந்தும் பல கடசிகள் ஆகி பின்னர் இணைந்து புதிய கட்சிகள் உருவாகின்றனவோ, நாடுகள் சிதறி மீண்டும் ஒன்றுபட்டு புதிய நாடுகள் உருவாகின்றனவோ அதுபோல இந்த தேவர், அரக்கர்/அசுரர் /தானவர்  போன்ற குழுக்களிலும் வரலாறு உண்டு. அதை தற்போது பின்ணிக்குத் தள்ளுவோம்..

பிரஜாபதி என்றால் மக்களை, மக்கள் குழுக்களை உருவாக்கியவர் என்று பொருள். பிரம்மா முதல் அவர் சந்ததி வரை பலரையும் இப்படி அழைப்பர்.

தக்ஷப் பிரஜாபதியின் மூத்த மகளை — அதிதியை — மணந்தவர் காஸ்யப பிரஜாபதி. அதிதி என்ற பெண்மானியைத்தான் கடவுளரின் தாய் என்று ரிக்வேதம் போற்றுகிறது . அதிதிக்குப் பிறந்தவர்கள் ஆதித்யர்கள் ; அவர்கள் 12 பேர் .

தாத, மித்ர , அர்யமா சக்ர , வருண, பக, விஸ்வவத்  , பூசா , சவிதா , த்வஷ்டா , விஷ்ணு

இவர்களில் விஸ்வவத் மற்றும் த்வஷ்டா கதையைத்தான் நாம் படிக்கப்போகிறோம் .

அதிதியின் 11ஆவது மகன் த்வஷ்டா. பெரிய என்ஜினீயர். விமானம் முதல் ரதம் /கார் வரை வடிவமைத்தவர். பெரிய தச்சன். கட்டிடம், ரதம் மட்டுமின்றி ஏவுகணைகள், ஆயுதங்களையும் உருவாக்கியவர் இந்த ஸம்ஸ்க்ருதச் சொல்லில் இருந்துதான் தச்சர், டெக்ட், ஆர்க்கிடெக்ட், டெக் னாலஜி , டெக்னீஷியன், டெக்னிக் முதலிய நூற்றுக் கணக்கான ஆங்கிலச் சொற்கள் வந்தன. த்வஷ்டாவின் மகன் விஸ்வகர்மன் அதன் பொருள் – எல்லாம் செய்யவல்லவர் . இன்றும் நாம் விஸ்வ கர்ம சமுதாயத்தைப் பார்க்கிறோம்.விஷ்வ கர்மனோடு த்ரிசிரஸ் (மூன்று தலையன், விஸ்வ ரூபன்  ), விருத்திரன் என்ற இரண்டு மகன்களும் உண்டு. சரண்யூ என்ற புதல்வியும் உண்டு.

விஸ்வ வத், த்வஷ்டாவின் மகளான சரண்யூவை திருமணம் செய்துகொண்டதாக பிருஹத் தேவதா , நீதி மஞ்சரி, ஹரிவம்சம் (மஹா பாரதத்தின் பிற்சேர்க்கை) சொல்லுகின்றன இவ்விருவருக்குப் பிறந்தவர்கள்தான் யமா -யமி  இரட்டைக்குழந்தைகள் .இரட்டையர் பிறந்த பின்னர் சரண் யூவுக்கு  மிகவும் BORE போர் அடித்தது. கணவன் பன்னிரு ஆதித்யர்களில் ஒருவன் அல்லவா? அந்த சூரிய பகவான் காலையில் புறப்பட்டால் இராவில்தான் வீட்டுக்கு வருவார். மறுநாள் காலையில் உதிக்கப் போய்விடுவார்; அத்தோடு உடம்பு முழுக்க சூரிய வெப்பம். சரண் யூவுக்குத்  தங்க முடியவில்லை  வாழ்க்கை இப்படி DULL ‘டல்’ அடிக்கத் துவங்கியவுடன் அவளுக்கு ஒரு idea ஐடியா கிடைத்தது. தந்தை, த்வஷ்டா  பெரிய என்ஜினீயர் ஆயிற்றே . இந்தப் பெண்மணியும் தன்னைப்போலவே ஒரு உருவம் (Image) சமைக்கிறாள் அந்த Robot ரோபாட்டுக்கு உயிரும் கொடுக்கிறாள்  அது வீட்டு வேலைகளைச் செவ்வனே செய்தது. சரண் ஒரு பெண் குதிரை (Mare)  வடிவம் எடுத்து ஜாலியாக ஊர் சுற்றுகிறாள் .

இதே நேரத்தில் சரண் அமைத்த ரோபாட்டுக்கும் விச்வவத்துக்கும் ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. அதுதான் மனு MANU . மனித குலத்தின் மூதாதையர்; மேன் MAN என்ற ஆங்கிலச் சொல், மானுடன், மனுஷன், மனிதத்ன் என்ற ஸம்ஸ்க்ருதச் சொற்கள் மனு விலிருந்து வந்தவையே.

கொஞ்ச காலத்துக்குப் பின்னர் தங்கள் வீட்டில் இருப்பது சரண் அல்ல, அவள் போன்ற உருவம் கொண்ட ROBOT ரோபாட் என்பது விஸ்வவத்துக்குப் புரிகிறது. அவரும் குதிரை வடிவம் எடுத்துக் கொண்டு சரண் யூவைத் தேடுகிறார். இருவரும் ஒருவரை ஒருவர் சந்த்தித்தன் விளைவாக இரட்டையர் பிறக்கின்றனர். அவர்கள்தான் தஸ்ரா , நாஸத்ய என்ற பெயர் கொண்ட அஸ்வினி (Asvins)  தேவர்கள் ஆவர்

இந்தக் கதை சிற்சில வேறுபாடுகளுடன் வெவ்வேறு புராணங்களில் உளது. மேலும் சரணின் பெயர் சம்க்ஞா என்றும் இருக்கிறது.

இதில் நம்ப முடியாத விஷயங்கள் சில இருந்தாலும் ஒரு உருவத்தை உண்டாக்கி அதற்கு உயிர் கொடுத்து உலவ வைக்க முடியும் (ROBOTICS ரோபோடிக்ஸ்)  என்ற அறிவியல் கருத்து இருக்கிறது. எவ்வளவோ புதிய ரோபாட்டுகளை உருவாக்கும் ஜப்பானும் கூட குழந்தை பிறக்க வைக்கும் மனித ரோபாட்டை உருவாக்க வில்லை. ஆனால் நமது சரண்யூ கதையில் அதையும் காண்கிறோம்; விஞ்ஞான புனைக்கதைகள் SCIENCE FICTION எழுதும் எவரும் தான்தான் அந்த ‘ஐடியா’வைக் கண்டுபிடித்தேன் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அத்தனையும் புராண இதிஹாசங்களில் உள்ளன. மஹாபாரதத்தில் உள்ள CLONING க்ளோனிங், TEST TUBE BABY டெஸ்ட் ட்யூப் பேபி, SEX CHANGE OPERATION செக்ஸ்  மாற்ற ஆபரேஷன் முதலிய 10 அறிவியல் கருத்துக்களை முன்னரே எழுதியுள்ளேன்

சிவன் கேட்ட இசை | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › ச…

14 Feb 2013 — உலக வலம் பேடண்ட் உரிமையும் எம்பி 3 இசைக் கருவி, இயர் போன் (காது ஒலிக் கருவி) …


த……….த……….த……….:- தேசிய கீதம் ஆக்கலாமே!

https://tamilandvedas.com › த-த-த-…

· Translate this page

19 Feb 2014 — …..….. என்ற மூன்று எழுத்துக்களை (சொற்களை) பிரபலமாக்கியோர் மூவர்.


“த, த, த” கதையும் காஞ்சி சங்கராச்சார்யார் பாடலும் …

https://tamilandvedas.com › த-த-த-…

· Translate this page

3 May 2021 — this is a non- commercial blog. Thanks for your great pictures. tamilandvedas.com, swamiindology.blogspot.com. if u want the article in word …

–SUBHAM—

TAGS- சரண்யூ , விஸ்வவத் , ரோபாட் , அறிவியல் , புனைக் கதை,

WHERE CAN WE FIND THE BIGGEST LIES? (Post No.10,939)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,939

Date uploaded in London – –   5 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

What is the difference between the mother and a wife???

A woman brings to the world crying and other ensures you

Continue to do so……..

XXX

TWO DIFFICULT THINGS TO ACHIEVE

1. To plant your ideas on some one else head

2. To  put some one else money into your pocket.

The one who succeeds in-the first one is called

TEACHER.

And the second is called

BUSINESS MAN.

The person who succeeds in both is called “WIFE”.

The one who fails in both is called

“HUSBAND”.

XXX

WHERE DO YOU FIND THE BEST LIES?

1.    LOVE LETTER.

2.    LEAVE LETTER.

XXXX

What are lizards???

Awesome answer by a kid

The poor crocodiles forgot to have horlicks

When they were young!!!

XXX

What is pizza….???

A pizza….is just a paratha went abroad

For higher education!!!

XXX

Husband- i found alladin magic lamp today

Wife – what did you ask???

Hus- I ask to increase your brain ten times.

Wife-oh dear,I love you and thank you very much!!!

Hus- but it said multiplication doesn’t apply with zero……..

XXX

NICE DEFINITION OF TIME

Tme is slow when you wait.!

Time is fast when you are late!

Time is deadly when you are sad!

Time is short when you are happy!

Time is endless when you are in pain!

Time is long when you feel bored!

Every time, time is determined by your FEELINGS

and your PSYCHOLOGICAL conditions and NOT

By the clocks.

SO HAVE A NICE TIME ALWAYS !!!

XXX SUBHAM XXX 

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் (Post No.10,938)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,938

Date uploaded in London – –   5 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 54

Kattukutty

மனைவி – நேத்திக்கு வைரத்தோடு கேட்டதற்கு மாட்டேன்னுட்டு

இன்னிக்க வாங்கிண்டு வந்திருக்கேள்???

கணவன் – பொண்டாட்டி கேட்டதை வாங்கி தராட்டா அடுத்த

ஜன்மத்திலேயும் அவதான் பொண்டாட்டியா வருவாளாம்ன்னு

பெரியவா சொல்லியிருக்காளாம்,அதான் பயந்து போய் வாங்காண்டு

வந்துட்டேன்………

இன்பமோ, துன்பமோ,

வெற்றியோ, தோல்வியோ,

கஷ்டமோ, நஷ்டமோ,

வாழ்வோ, தாழ்வோ,

தன்க்கு நடக்கும்வரை

உலகத்தில் நடக்கும்

எல்லாமே வேடிக்கைதான்………

ஒரு ஆண் திட்டுவதை ஒரு பெண் அமைதியாக, பொறுமையாக

சிரித்துக் கொண்டே கேட்டால் அது CUSTOMUR CARE ல்

மட்டும்தான்!!!

“குருவே…..என் தவறுகளை நான எவ்வாறு உணருவது???

“டெட் ஈஸி மகனே!…….உன் மனைவியின் ஒரே ஒரு தவறை

மட்டும் சுட்டிக்காட்டு……அவளே உன்னுடைய, மற்றும் உன்

பரம்பரை…..சொந்த பந்தம்……நண்பர்கள் எல்லோருடைய

தவறுகளையும் தோண்டி எடுத்து தந்துவிடுவாள்”!!!!

இதய அடைப்பு (heart attack)அறிகுறி ஏற்பட்டால்

பயப்பட வேண்டாம்.

உடனடியாக இரண்டு ‘கல் உப்பு’ எடுத்து நாக்கின்

அடியில், அல்லது உதட்டின் அடியில் வைத்து சிறிதளவு

தண்ணீர் குடித்தால் தாற்காலிகமாக குணமடையும்

சின்ன வயசுலே மி்ஸ்ஸுக்கு பயப்படறதும்,

பெரிய வயசுலே மிஸ்ஸஸுக்கு பயப்படறதும்,

ஆண்களின் சாபம்………

XXXX

ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம்….???

நீ கல்யாணம்பண்ணிக்கணும்ன்னு நினைக்கிறது ஆசை.

அதுக்கப்பறம் சந்தோஷமா இருக்கணும்ன்னு நினைச்சா

அது பேராசை…….

நீ பணக்காரணாகனும்ன்னு நினைக்கறது ஆசை.

ஆனா நோட்டு அடிச்சு பணக்காரணாகனும்ன்னு நினைச்சா

அது பேராசை…….

நீ வெளி நாடு போகணும்ன்னு நினைச்சா அது ஆசை.

ஆனா நீயே பாஸ்போர்ட் தயாரிக்கணும்ன்னு நினைச்சா

அது பேராசை…….

XXX

நம் நட்டில் பாகுபலி மட்டும்தான்,பொண்டாட்டியோட

சேர்ந்து எதிரியோட சண்டை போடறான்.

மத்தவனுக்கெல்லாம், பொண்டாட்டி கூட சண்ட

போடவே நேரம் சரியாயிருக்கு……….

XXX subham xxxx

குழந்தைகள் விரும்பும் நாடு! (Post No.10,937)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,937

Date uploaded in London – –     5 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

3-5-2022 தேதியிட்ட மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை!

குழந்தைகள் விரும்பும் நாடு!

ச.நாகராஜன்

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பிடித்த நாடு எது? சந்தேகமே இல்லை. பெல்ஜியம் தான்.

ஏனெனில் அவர்களின் அழகை ‘எடுத்துக் காட்டும்’ அழகிய கண்ணாடிகளை பெல்ஜியம் தானே தருகிறது. அவர்களின் அழகைக் ‘கூட்டும்’ வைரம் கொண்ட நாடும் அது தான். குழந்தைகளுக்கோ எனில் இனிப்புள்ள, மணமுள்ள உலகின் தரம் வாய்ந்த சாக்லட்டை விதவிதமாக அந்த நாடு தானே தருகிறது! ஆகவே அழகையும் இனிமையையும் போற்றும் அனைவரும் விரும்பும் நாடாக அது அமைவதில் ஆச்சரியமே இல்லை.

விழிப்புணர்வு தேவை

வெளிநாடுகளுக்கு விமானப் பயணம் மேற்கொள்வோர் பயண நேரம் முழுவதும் விழிப்புடன் இருப்பது அவசியம். கொரானா பற்றிய விதிகளை அறிந்து கொள்ளவும் வேண்டும். இது காலத்தின் கட்டாயமாக ஆகி விட்டது.

ஒவ்வொரு விமானப் பயணத்திலும் ஒவ்வொரு புது அனுபவமும் அதையொட்டிய பாடமும் கிடைக்கும்.

அதி நவீன் தொழில்நுட்ப பயிற்சிக்காக தொழில்துறை குழுவினருடன் நான் பெல்ஜியத்தின் தலை நகரான ப்ரஸ்ஸல்ஸ் நோக்கிப் பயணம் மேற்கொண்டேன். ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தில் இறங்கி அங்கிருந்து இன்னொரு விமானம் மூலம் ப்ரஸ்ஸல்ஸ் செல்ல வேண்டும். பயணத்தில் ஏற்பட்ட தாமதத்தால் ஃப்ராங்க்பர்ட் விமான நிலையத்தை அடைந்த போது இன்னும் சில நிமிடங்களில் அடுத்த விமானம் புறப்படும் நேரம் அமைந்து விட்டது. போர்டிங் பாஸ் தரும் கவுண்டர் மூடப்படும் நேரம் அது! ஃப்ராங்க்பர்ட் விமான நிலையமோ மிகப் பெரியது. என்ன செய்வது? எங்கள் போர்டிங் பாஸ் வாங்க எந்த கேட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதைக் கூட அறிந்து கொள்ள நேரமில்லாத நிலை. குழுவினருக்கு ஒரே பதற்றம்.

பிரம்மாண்டமான நீள நெடுக இருந்த விமானநிலையத்தில் முதல் டெஸ்கில் இருந்த ஒரு இளம் பெண்மணியை அணுகினேன்.

ஒரு நிமிடத்தில் எங்கள் பிரச்சினையைச் சொன்னேன். “நல்ல காரியத்தைச் செய்தீர்கள்” என்று என்னை, தன்னை உடனே அணுகியதற்காகப் பாராட்டிய அந்த இளம் பெண், போனை எடுத்து ஏதோ பிரெஞ்சு மொழியில் பேசினார். பின்னர், “கவலைப்பட வேண்டாம். நீங்கள் இல்லாமல் கேட் மூடப்படமாட்டாது, வாருங்கள் என்னுடன்” என்று எங்களை விரைவாக அழைத்துச் சென்றார். உரிய கேட்டிற்கு கொண்டு விட்டார். அங்கிருந்தோர் உடனடியாக எங்களுக்கு விமானத்தில் அமர போர்டிங் பாஸ் தந்தனர்.

ஒரு இக்கட்டான சூழ்நிலையை உடனடியாக சமாளிக்க வேண்டியது ஒவ்வொரு பயணத்திலும் மிக அவசியம்.

ப்ரஸ்ஸல்ஸில் இறங்கியவுடன் எங்களை அழைத்துச் செல்ல,  எங்களை வரவேற்கும் ஒரு போர்டுடன் இளைஞர் ஒருவர் தயாராக இருந்தார். அவர் காட்டிய வேனில் ஏறி உட்கார்ந்தோம். டிரைவர் இருக்கையில் அமர்ந்த அவர் ஒரு பாட்டைப் போட்டு விட்டார். அதற்கேற்ப உல்லாசமாக உடலை ஆட்டிக் கொண்டே வேனை ஓட்டினார்.

நாங்கள் செல்ல வேண்டிய ஊர் ரோஸலேர் என்னும் அழகிய நகரம். 87 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அதை சுமார் 45 நிமிடங்களில் அடைந்தோம். வேன் பறந்தது. இயற்கைக் காட்சிகள் இரு புறமும் பறந்தன.

வேனை ஓட்டிய இளைஞரின் ஆட்டமும் பாட்டமும் ஏன் என பெல்ஜியம் நாட்டில் புகுந்தவுடனேயே தெரிந்து விட்டது. உலகில் அதிக கலை நிகழ்ச்சிகள் நடக்கும் நாடு பெல்ஜியமே.

வீதிகளில் ஆரம்பித்து அரங்கங்கள் வரை ஆங்காங்கே ஏதேனுமொரு நிகழ்ச்சி நடந்து கொண்டே இருக்கும்.

மக்கள் கலைப் பிரியர்கள். ஆகவே தான் அதை திருவிழாக்களின் நாடு என்று சொல்கின்றனர்.

குழந்தை இல்லை என்றால் கூடுதல் வரி!

மிகுந்த குளிர் பிரதேசம் என்பதால் பிரம்மாண்டமான தொழிலகம் எல்லாப் பக்கங்களும் நன்கு மூடப்பட்டு வெப்பமூட்டும் ஹீட்டர் வசதியுடன் அமைந்திருந்தது.

பேசினால் வாயிலிருந்து புகை வரும்; ஹாலிவுட் சினிமாக்களில் பார்த்த காட்சிகளை நேரில் அனுபவிக்க நேரிடும்.

தங்குவதற்கு அருமையான ஹோட்டல்கள் ஏராளம் உண்டு.

டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மூன்று மொழிகள் அதிகார பூர்வ மொழிகளாகும்.

இதன் பரப்பளவு 11780 சதுர மைல். ஜனத்தொகை 110 லட்சம். வெப்பநிலை குறைந்த பட்சம் 3 டிகிரி செல்ஸியஸ் அதிக பட்சம் 18 டிகிரி செல்ஸியஸ்.

மக்கள் ஜனத்தொகை மிகவும் குறைவு என்பதால் குழந்தை பெறுவதை அரசு ஊக்குவிக்கிறது.  குழந்தை இல்லை என்றால் அதிகம் வரி செலுத்த வேண்டும்! இரவு எட்டு மணிக்கெல்லாம் ஊர் மிகுந்த அமைதியுடன் இலங்குகிறது.

800 வகையான பீரை பெல்ஜியம் தயாரிப்பதால் பெல்ஜியம் பீருக்கு ஏக டிமாண்ட்.

ஓய்வெடுக்க விரும்புவோர் விரும்பும் நாடு இது. ஏனெனில் ஸ்பா என்ற நகரிலிருந்தே இன்று நாம் சென்னையிலும் கூடக் காணும் ஸ்பாக்கள் உருவாயின.

சாக்லட் தயாரிப்பு மையங்கள்

ஆங்காங்கே சாக்லட் எப்படி தயாரிப்பது என்பதற்கு பயிற்சி மையங்கள் உள்ளன. (தினசரி சாக்லட் வொர்க்‌ஷாப் உண்டு) குழந்தைகள் தங்கள் மனதிற்குப் பிடித்த வடிவத்தில் சாக்லட்களைத் தயாரிப்பது பார்க்க வேண்டிய காட்சியாகும்.

ஒவ்வொரு சாக்லட்டிற்கும் தனி வடிவமைப்பு, தோற்றம், ருசி, வாசனை உண்டு.

கோகோ பட்டர் மூலம் தயாரிக்கப்படும் சாக்லட்டுகளில் பல வகைகள் உண்டு. இப்போது காலத்திற்கேற்ப ஷுகர் – ஃப்ரீ  (ஷுகர் இல்லாத) சாக்லட்டுகளும் சந்தைக்கு வந்து விட்டன.

ப்ரஸ்ஸில்ஸில் உள்ள சாக்லட் மியூஸியமும் பார்க்க வேண்டிய ஒன்று. இந்த சாக்லட் கம்பெனிகளை நிறுவியவர்களைப்  பற்றிய உத்வேகமூட்டும் உண்மைச் சம்பவங்களும் வரலாறுகளும் மிக்க சுவையானவை.  உலகின் தலை சிறந்த சாக்லட்டுகளைத் தயாரிக்கும் பெல்ஜியம் 400 வருடமாக சாக்லட் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளது. வருடத்திற்கு ஆறு லட்சம் டன் சாக்லட்டை இது உற்பத்தி செய்கிறது. 2000 கம்பெனிகள் மற்றும் கடைகள் சாக்லட் விற்பனைக்கென்றே இங்கு உள்ளன. ப்ரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் மட்டும் வருடத்திற்கு 800 டன் சாக்லட் விற்பனையாகிறது.

பார்க்க வேண்டிய இடங்கள் பெல்ஜியத்தில் ஏராளம் உண்டு.

அட்டோமியம்

எக்ஸ்போ 58 என்ற 1958 ஆண்டு நடத்தப்பட்ட உலக விழாவிற்காக ப்ரஸ்ஸல்ஸ் நகரில் அமைக்கப்பட்ட நினைவுச் சின்னக் கட்டிடம் இது. 335 அடிகள் உயரம் கொண்ட இது. இரும்பு படிகத்தின் அணு அமைப்பை நினைவு படுத்தும் இது அந்த படிக் மூல அமைப்பின் அளவைப் போல  165 பில்லியன் மடங்கு பெரிதானது. (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி). இங்கு ஒன்பது கோளங்கள் உள்ளன. ஒரு கோளத்திலிருந்து இன்னொரு கோளத்திற்குச் செல்ல வழி உண்டு. இங்குள்ள பல்வேறு காட்சிக் கூடங்கள் நம்மை பிரமிக்க வைக்கும். உச்சிக்குச் சென்று ப்ரஸ்ஸல்ஸ் நகரத்தைப் பார்த்தால் பிரமித்து விடுவோம். அட்டோமியம் என்ற பெயர் ஆடம் (அணு- Atom)  மற்றும் (Aluminium) அலுமினியம் ஆகிய இரண்டு சொற்களின் சேர்க்கையாகும்.

ப்ரஸ்ஸல்ஸ் மினி- யூரோப்

அவசியம் பார்க்க வேண்டிய இந்தப் பூங்கா ஐரோப்பாவின் சிறிய அளவிலான அமைப்பாகும். நுழைவுக் கட்டணம் உண்டு. பிக் பென் உள்ளிட்ட ஒவ்வொரு ஊரின் சிறப்பு அம்சங்களைப் பார்க்க முடியாதவர்கள் இங்கு வரலாம். ஐரோப்பாவின் 80 நகரங்களையும் 350 சிறப்புக் கட்டிடங்களையும் இங்கு சிறிய வடிவில் ஒரே இடத்தில் கண்டு மகிழலாம். வருடா வருடம் சுமார் மூன்றரை லட்சம் பேர் இங்கு வருகை தருகின்றனர்.

ஆடோ வோர்ல்ட் மியூஸியம்

உலகில் மோட்டார் தொழில் எப்படி தொடங்கியது என்பதிலிருந்து இன்றைய நவீன் வாகனங்கள் வரை அனைத்தையும் காட்சிப்படுத்துகிறது இந்தக் கண்காட்சியகம். சுமார் 250 வாகனங்களை இங்கு கண்டு மகிழலாம். வாகன சம்பந்தமான சிறப்பு நிகழ்ச்சிகளும் அவ்வப்பொழுது இங்கு நடைபெறுவதால் நாம் செல்லும் நேரத்தில் உள்ள நிகழ்ச்சியையும் கண்டு மகிழலாம்.

ஹாப் ஆன் ஹாப் பஸ் டூர்

ப்ரஸ்ஸல்ஸில் அனைத்து இடங்களையும் வரிசையாகப் பார்க்க வழி வகை செய்வது இந்த பஸ் பயணம். வரிசையாக ஒவ்வொரு இடமாகச் சென்று அதைப் பற்றிய விவரங்களையும் ஏற்கனவே ரிகார்ட் செய்யப்பட்ட பதிவு வழியே தரும் பயணம் இது. பொடானிகல் கார்டன், பெல்ஜியம் காமிக் ஸ்ட்ரிப் செண்டர் என ஏராளமான இடங்களைப் பற்றிய அறிமுகம் நமக்குக் கிடைக்கும்.

கெண்ட் போட் சவாரி

 ப்ரஸ்ஸல்ஸிற்கு மேற்கே 55 கிலோமீட்டரில் அமைந்துள்ள கெண்ட் நகரில் அனைத்து இடங்களையும் படகில் 50 நிமிடங்கள் பயணம் மேற்கொண்டு பார்க்கலாம். இங்குள்ள செயின்ட் பாவோ கதீட்ரல் பழமையானது. பழம் பெரும் கோட்டைகள் உள்ளிட்ட வரலாற்றுச் சின்னங்கள் உள்ள இடம் இது என்பதால் அனைவரும் வருகை புரியும் இடங்களில் இதுவும் ஒன்றாக அமைகிறது. பெல்ஜியமே கோட்டைகள் அதிகம் உள்ள நாடு தான்!

அண்ட்வெர்ப் வைரங்கள்

இன்னும் அதிக பட்ஜெட்டையும் விடுமுறை நாட்களையும் கொண்டோர் அண்ட்வெர்ப், மெச்லீன்,  டீ ஹான் பீச் என சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களுக்குச் சென்று மகிழலாம். அண்ட்வெர்ப் வைர வியாபாரிகள் விரும்பும் நகர். இதுவே உலகின் வைரங்களின் தலை நகர் என்று அழைக்கப்படுகிறது. அவ்வளவு ஜொலிக்கும் தரம் வாய்ந்த வைரங்களைக் கொண்டுள்ளது அண்ட்வெர்ப்.

தமிழ் இலக்கியத்தில் பெல்ஜியம்!

பெல்ஜியத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஒரு முக்கிய தொடர்பு உண்டு. ஆம், மஹாகவி பாரதியார் அறத்திற்காகப் போராடி இந்த நாடு தோல்வியுற்ற போது அதைப் பாராட்டிப் பாடியுள்ளார்.

1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டாம் தேதி அன்று திடீரென்று ஜெர்மானியப் படை இந்த நாட்டின் வழியே தன் படை செல்ல அனுமதி வேண்டும் என்று கோரியது. என்றுமே சமாதானத்தை விரும்பிய பெல்ஜியம் 3ஆம் தேதி தனது உறுதியான மறுப்பைத் தெரிவித்து விட்டது. உடனே 4ஆம் தேதியன்று இந்த நாட்டின் மீது ஜெர்மனி படை எடுத்தது. அன்று தான் முதலாம் உலகப் போர் துவங்கியது.

‘அறத்தினால் வீழ்ந்து விட்டாய்’ என்று மனம் நெகிழ்ந்து பாடி பெல்ஜியத்தைப் பாராட்டிய பாரதியார் ‘திறத்தினால் எளியையாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்’ என்று மனமாரப் பாராட்டிப் பாடினார். தர்ம வழியில் நின்று அந்தப் போரில் அடிபட்டு தற்காலிகத் தோல்வியைத் தழுவினாலும் பின்னர் செழிப்புற உயர்ந்து எழுந்து நின்றது பெல்ஜியம்.

இன்று உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக அது திகழ்கிறது.

பெல்ஜியக் கொடுமை

பெல்ஜியம் நாட்டில் உள்ள ஒரே ஒரு கொடுமை என்னவெனில் அங்கு சாக்லட் கடையில் நுழைந்து விதவிதமாக இருக்கும் வகைகளில் எதைத் தேர்ந்தெடுத்து வாங்குவது என்று தெரியாமல் குழம்பித் தவிப்பது தான் என்று வேடிக்கையாகப் பயணிகள் சொல்வது வழக்கம்.

இங்கு நுழைந்தவுடன் கலோரி எண்ணிக்கையில் சாக்லட்டினால் உடலில் ஏறும் கலோரியைச் சேர்ப்பதை மறந்து விடுங்கள் என்பது சாக்லட் பிரியர்களின் வேண்டுகோள்.

ஒரே வரியில் பெல்ஜியத்தைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால் இனிப்பைத் தந்து ஜொலிக்கும் நாடு என்று கூறலாம்.

***

Tags-  அண்ட்வெர்ப் வைரங்கள், பெல்ஜியம்