OLDEST MESSENGER POEM IN THE WORLD (Post No.10,936)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,936

Date uploaded in London – –    4 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Messenger poem is a genre unique to Sanskrit and Tamil. Kalidasa the most famous Indian poet, made it popular through his poem ‘Meghaduta’ (Cloud Messenger) . Kalidasa triggered a literary revolution by writing a whole poem where a cloud is the messenger carrying the message of a Yaksha to his lady love. His poem inspired Indian writers to write 85 books in Tamil and over sixty books in Sanskrit . Tamils took some time to write a whole book in this genre but we have apostrophes in Tamil Sangam corpus.

Sangam age Tamil poets used this technic 2000 years ago. Mostly the women used to address parrots, cuckoos, bees, insects, swans, goose, heron or inanimate objects like cloud, rain, flowers etc.

Kalidasa probably copied his predecessors, particularly Valmiki , author of Ramayana. Hanuman, who is projected as a monkey went to Sri Lanka with a message from Rama to Sita. He took Rama’s ring as a proof. This technique of using some jewellery as a memento or symbol is found in the dramas of Kalidasa. This shows his indebtedness to Valmiki.

In the Mahabharata, under Nalopaakhyaana (story of Nala and Damayanthi), we see Nala sending goose as a messenger to the beauty queen Damayanthi. She returned a reply to his message through that bird. This is a very popular story and Tamil has its own version. But scholars are debating which one of the two epics was put to writing first. So we may say that one of them inspired many writers.

Many of the writers on this topic of ‘Messenger poems’  (Duta Kavyas) miss another messenger found in the Rig Veda, the oldest book in the world. Dog Sarama was sent as a messenger in the Rig Veda. Greeks borrowed this story and changed the name to Hermes, because letter ‘S’ is not in Persian and Greek. That is why we got Hindu from River Sindhu/Indus and dog Hermes from Sarama or Sarameya.

I have already written about the story of Sarama (please see the links below)

Many authors have already listed the important Duta Kavyas in Tamil and Sanskrit. Later Bengali, Malayali, Kannada and Telugu writers also used this genre.

Here are some interesting details about Messenger poems:

Candraduta (moon) was composed by Jambukavi in 8th or 9th century.

Pavanaduta (wind) was done by Dhoyi of Kerala

Kokila sandesam (Cuckoo) was written by Uddandakavi in 15th century.

Another poem with the same name Megadhuta was written by  Meru tunga in 15th century.

Kachiappa Munivar did Kachi Ananda ruttiresar in 18th century.

Azakar Killai (parrot)vitu Tutu was written by Palapattai Chokkanatha Kavirayar.

Devotees and philosophers used this type of poetry to spread spiritual message as well. Umapati Sivacharya’s Nenju Vitu Tutu, Hamsa Sandesa by an anonymous author, several poems by Saivite saints Manikka Vasagar, Sundarar and Andal also spread spiritual matter through Duta poems. Even freedom fighters used it in Gandhi Vitu Tutu. But the strangest thing about it, is two pomes titled Pana Vitu Tutu and Pukaiyilai vitu tutu, money and tobacco respectively. Film songs also use this genre where we see the actresses are seeking the help of birds to get some positive message from the lovers.

Sarama | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › sarama

25 Jun 2015 — Sarama, Indra’s messenger, tracks the cows and asks for them in Indra’s name, but is mocked by the Panis”. Clearly there is a basic difference …


Vedic Sarama and Greek Hermes!! | Tamil and Vedas

https://tamilandvedas.com › 2015/06/24 › vedic-sarama…

24 Jun 2015 — Who is Sarama? In the Rig Veda (10-108) the dog of Indra is called Sarama. It has got two children and they are called Sarameyas.


TAMIL DOG IS THE FIRST DOG IN THE WORLD TO GET A …

http://swamiindology.blogspot.com › 2020/05 › tamil-d…

14 May 2020 — Rig Veda dog SARAMA and Mahabharata Dog that walked with the Pandavas to death may be more famous; but we don’t have statues for them.

–subham—

 tags – messenger poems, Duta kavyas, Sarama, Dog messenger, Kalidasa, Nala, Tamil, 

நாய் விடு தூது – உலகின் முதல் தூதுக் கவிதை (Post No.10,935)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,935

Date uploaded in London – –    4 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

நாய் விடு தூது – உலகின் முதல் தூதுக் கவிதை

தமிழ் மொழியில் நிறைய தூதுக் கவிதைகள் (Messenger Poems)  உள்ளன.சங்க காலத்தில் பெண்கள் கிளி, குயில், அன்னம், நாரை, வண்டு , மேகம் முதலியவற்றுடன் (Apostrophe) பேசுவார்கள் ; அவைகள் மூலமாக காதல் செய்தி அனுப்புவார்கள். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உத்தியை சம்ஸ்க்ருதம், தமிழ் மொழிகளில் மட்டுமே காணலாம்.

தமிழர்களுக்கும் முன்னதாக இந்தத்துறையில் காளிதாசன் எழுதிய நூல் மேக தூதம் என்ற பெயரில் உலகப் புகழ் பெற்றது; இலக்கிய உலகத்தில் அந்த நூல் பெரும் புரட்சியை உருவாக்கியது. அவரைத் தொடர்ந்து பலரும் இப்படி முழு நீள தூதுக் கவிதை நூல்களை எழுதத் துவங்கினர். தமிழில் இப்படி தனி ஒரு நூல் வருவதற்கு நீண்ட காலம் பிடித்தது. ஆனால் சிறிய கவிதைகள் சங்க காலத்தில் தோன்றின. காளிதாசன் உலகப் புகழ் பெற்ற இந்து மன்னன் விக்ரமாதித்தன் வாழ்ந்த காலத்தில் அவனுடைய ஆஸ்தான புலவராக இருந்தார். அதாவது 2100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார். அவரது நூல்களின் தாக்கத்தை கபிலர் எழுதிய குறிஞ்சிப் பாட்டில் காணலாம்.

காளிதாசரின் ‘ஒரிஜினல் ஐடியா’ Original Idea வா  இந்த தூதுக் கவிதை; இல்லை. காளிதாசரின் நூல்களுக்கு பழங்காலத்தில்  75 பேருக்கும் மேலானோர் உரை எழுதினார்கள். அவர்களில் மிகவும் பிரசித்தமானவர் மல்லிநாதர். வால்மீகி முனிவரின் ராமாயணம்தான் காளி தாசருக்கு ஊற்றுணர்ச்சி தந்தது என்கிறார். ராமாயணத்தில் நாம் குரங்கு/ அனுமன் விடு தூதுக் கவிதையைக் காண்கிறோம். ராமன் அனுப்பிய செய்தியுடன் சீதையைச் சந்தித்து மோதிரத்தையம் கொடுத்து, மீண்டும் ‘குட் நியூஸ்’ Good News  கொண்டுவந்து ராமனிடம் சபாஷ் வாங்குகிறார் அனுமன். இந்த அனுமன் தூது – குரங்கு விடு தூதுதான் காளிதாஸருக்கு ஐடியா Idea கொடுத்தது என்பதற்கு மற்றும் ஒரு சான்று வால்மீகி ராமாயண கணையாழி போல காளிதாசரின் ஒவ்வொரு நாடகத்திலும் ஒரு மோதிரம் அல்லது நகை முக்கிய இடம் பெறும் . ஆக அவர் வால்மீகி தாசர் என்பது வெள்ளிடை மலை.

அப்படியானால் ராமாயணத்தில் வரும் அனுமன் தூது விடு தூதுதான் உலகின் முதல் தூதுக் கவிதையா? இல்லை .

ரிக் வேதத்தில் வரும் ‘நாய் விடு தூது’தான் உலகின் முதல் தூதுக் கவிதை. தூது என்பது ஸம்ஸ்க்ருதச் சொல். இதுபற்றி திருவள்ளுவரும் ஒரு அதிகாரம் எழுதியுள்ளார். உலகில் தூது, தூதர், அவர்களுக்கான நெறிமுறை முதலியவற்றை வகுத்தவர்கள் இந்துக்கள்தான் என்பது ரிக்வேதம் முதல் தாரா, தாரா வந்தாரா, சங்கதி ஏதும் சொன்னாரா என்ற தமிழ் சினிமாப்பாட்டு வரை உள்ள பாடல்கள் உறுதி செய்கின்றன.

முதலில் எழுத்து வடிவில் வந்தது மஹாபாரதமா அல்லது ராமாயணமா என்பதில் இருவேறு  கருத்துக்கள் உள்ளன. எதுவாயினும் மஹாபாரதத்தில் உள்ள அன்னம் விடு தூது மிகவும் அறியப்பட்ட தூது ஆகும். நளன் , அந்தப் பறவை மூலம் தமயந்திக்குத் தூது விடுவதும் உடனே தமயந்தி பதில் அனுப்புவதும் மஹாபாரத நளோபாக்கியானத்தில் வருகிறது

xxx

ரிக்வேதம் உலகின் பழமையான நூல்; உலகின் முதல் கவிதைத் தொகுப்பு நூல். அதில் சரமா என்ற நாய் தூது போகும் செய்தி வருகிறது. கிரேக்க நாட்டில் அது ஹர்மஸ்  (Hermes) என்ற பெயரில் வருகிறது; கிரேக்க , பாரசீக மொழிகளில் ‘ச’ என்னும் எழுத்து இல்லாததால் ‘சிந்து’ என்பதை ‘ஹிந்து’ என்றனர்; ‘சரமா’ என்பதை ‘ஹரமா , ஹெர்மஸ்’ என்றனர்.

சரமா தூது, அதற்கு லஞ்சம் கொடுக்க நடந்த முயற்சிகள் பற்றி முன்னரே எழுதியுள்ளேன் (இணைப்புகளைக் காண்க)

xxx

தமிழிலும் ஸம்ஸ்க்ருத்திலும் தூது இலக்கியம் எந்த அளவுக்கு வளர்ந்தன என்பதை எனக்கும் முன்னரே பலர் பட்டியலிட்டுள்ளனர். அவற்றின் சுருக்கத்தை மட்டும் காண்போம்:-

சங்க காலத்தில் பெண்கள், தன்  காதலன் வருகைக்காக காத்திருக்கும் போது , உயிருள்ள பிராணிகள் பறவைகளுடன் பேசுவார்கள்; உயிரற்ற ஜடப்பொருள்களுடனும் பேசுவார்கள். நாய், குரங்கு முதலியவற்றைத் தொடர்ந்து காளிதாசன் மே கத்துடன் பேசியதைக் கண்டோம் ; தமிழர்களும் இந்த உத்தியைக் கடைப்பிடித்தனர்.

மேக தூதம் போலவே எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில் ஜம்பு கவி  என்பவர்  ‘சந்திர தூத’ இயற்றினார். 12-ம் நூற்றாண்டில் தோயி (Dhoyi) என்ற கவிஞர் பவன தூத (காற்று விடு தூது ) இயற்றினார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் , வங்காளி , கன்னடம் முதலிய மொழிகளிலும் தூத காவியங்கள் மலர காளிதாசன் வழிவகுத்தார். தூத அல்லது சந்தேச என்ற சொல் காவியங்களில் பயன்படுகிறது . 15-ம் நூற்றாண்டில் உத்தண்ட கவி என்பவர் கோகிலா ஸந்தேசம் (குயில் விடு தூது) இயற்றினார் . இது காஞ்சி நகரிலிருந்து கேரளத்தில் உள்ளவருக்கு விடப்பட்ட காதல் செய்தி.

xxx

காளிதாசனில் உள்ள விஞ்ஞான  அணுகுமுறையை மற்ற தூத காவியங்களில் காண முடியாது.

காளிதாசன் உலகின் முதல்Tourist Guide டூரிஸ்ட் கைடு ; போகும் வழியில் உள்ள நகரங்களையும் காடு மலைகளையும் வருணித்து படிப்போருக்கு பூகோள, வரலாற்றுச் செய்திகளை  அளிக்கிறான் .

மேலும் அவன்தான் முதல் பயணக்கட்டுரை (Travelogue Writer) எழுதியவன் என்றும் சொல்லலாம். மஹாபாரதம், ராமாயணத்தில் இது போன்ற வருணனைகள் இருந்தாலும் புராணக்கதைகளும் நம்ப முடியாத விஷயங்களும் இருக்கும்.

காளிதாசன் வானிலை இயல் மன்னன் (Meteorologist) . முதல் முதலில் (Mapped South West Monsoon) தென் மேற்குப் பருவக்காற்று விந்திய மலை முதல் இமய மலை வரையே எந்தப் பாதையில் செல்கிறது என்பதையும் காட்டுகிறான். பறவைகள் குடியேற்றம் (Bird Migration) பற்றியும் காளிதாசன் செல்கிறான் . பிற் காலத்தில் புறநானூற்றுப் புலவர் முதல் சத்திமுற்றத்துப் புலவர் வரை “நாராய், நாராய், செங்கால் நாராய்” (Northward Return Journey of Migratory Birds) என்று பாட வழிவகுத்தார் இவ்வகையில் காளிதாசனின் மேக விடு தூது சிறப்புடைத்து. மேகம் மூலம் ஒரு யக்ஷன் தனது காதலிக்கு அனுப்பிய செய்தியைக் கொண்டது ஆகும்.

xxx

சமய விஷயங்களைப் பரப்பவும் தூத காவியம் பயன்பட்டது. நேமிநாதரை துறவறத்தை விட்டு வீட்டுக்குத் திரும்புமாறு அழைக்கும் சமண மத காவியம் மேக தூதம் என்ற பெயரிலேயே அமைந்துள்ளது. மேரு துங்க என்பவர் எழுதியது இது . கச்சியப்ப முனிவர் எழுதிய கச்சி ஆனந்தருத்திரேசர் , பலபட்டடை சொக்கநாத கவிராயர் எழுதிய அழகர் கிள்ளைவிடு தூது முதலியன தற்காலத்தியவை; அதாவது சில நூற்றாண்டு பழமை உடைத்து

சொக்க நாத கவிராயரின் பண (Money)  விடு தூது, புலவர் பெயர் தெரியாத ஹம்ச சந்தேசம், உமாபதி சிவாச்சாரியார் இயற்றிய நெஞ்சுவிடுதூது முதலியன தத்துவ விஷயங்களைப் பேசின. அரசியலிலும் தூது புகுந்து ‘காந்தி விடு தூது’ நூலைத் தோற்றுவித்தது .

சினிமாப் பாடல்களிலும் பறவைகளிடம் காதலியர் பேசி தூது விடும் காட்சியைக் காண்கிறோம். தமிழ் மொழியில் எண்பதுக்கும் மேலான பிற்கால நூல்களும் சம்ஸ்க்ருதத்தில் 60-க்கும் மேலான முற்கால நூல்களும் உள

ரிக் வேத காலத்தில் நாய் விடு தூதாகத் துவங்கிய கவிதை தமிழில் புகையிலை (Tobacco)  விடு தூதுவரை பரவியது . இந்தப் புரட்சிக்கு வித்திட்ட காளிதாசனை எவரும் மறக்க முடியாது .

சரமா | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › சர…

பாணீக்கள் என்போர் லஞ்சம் கொடுக்க முன்வந்தபோது இந்திரனின் தூதராகச் சென்ற நாய் சரமா …


சரமேயஸ் | Tamil and Vedas

https://tamilandvedas.com › tag › சர…

25 Jun 2015 — 6.பாணிக்கள், இந்திரனின் பசுக்களைத் திருடிச் சென்று குகைகளில் வைத்தனர். சரமா …

–subham-#

TAGS-  தூத காவியங்கள், மேகதூதம், காளிதாசன், சரமா , ரிக்வேதம், நாய், சங்க இலக்கியம் , தூது, Messenger Poems

PAST is experience, PRESENT is experiment, FUTURE is expectation! (Post No.10,934)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,934

Date uploaded in London – –   4 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

To be old and wise, you first be young and stupid

Wokers play football,

Managers play tennis,

Bosses play snooker

and

C E O ‘S play golf.

Moral of the story:

As you go up in the ladder

Your balls become smaller!!!’

XXX

Power and money are fruit of life.

But family and friends are roots of life.

We can manage without fruits, but

can never stand without roots.

XXX

75%of indian women’s name ends with ‘A’

15% of indian women’s name ends with ‘I’

If you don’t believe it pl chek with your mother sister

Wife’s and daughters names !!!

XXX

PAST

is experience

PRESENT

Is experiment

FUTURE

Is expectation

Use your experience in your experiments

to achieve your expectations !!!

XXX

A married man’s honest confession

“I always read my wife’s horoscope

First to see what kind of day I am going to have”

XXX

A WOMAS APOLOGY

 I am sorry, but it was your fault!!!

Arguing with woman is getting arrested.

Everything you say and will be used against you !!!

XXX

Son

Dad i want to get married.

Father

Apologize first……….

What is the difference between a priest,

a lawyer and a politician ???

A priest would not tell a lie.

A lawyer could not tell the truth,

And

A politician doesn’t know the difference!!!

R.K laxman

Teacher

Can you tell me two great “kings”who have brought happiness

And peace into people s lives????

Student

Smo “KING” and drin “KING”

Words are free to use, but may prove to be very costly

If misused……no one can touch words…….

But words can touch any ones heart!!!

XXX

LIFE IS A QUESTION WHICH NOBODY CAN ANSWER

&

DEATH IS AN ANSWER AND NOBODY CAN QUESTION IT

SO

ENJOY THE QUESTION TILL YOU GET THE ANSWER !!!

***

 tags- Past, Present, Future

JOKES நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ? (Post No.10,933)

Compiled BY KATTU KUTTY , CHENNAI

Post No. 10,933

Date uploaded in London – – 4 MAY 2022

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 57

Kattukutty

உலகத்துலேயே நல்லவன் திருடன் தான்..

எப்படின்னு கேக்கறிங்களா…?

ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு எல்லாரும் நோயாளியா இருக்கனும்ன்னு…

ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு எல்லாருக்கும் நிறைய பிரச்சனை இருக்கனும்ன்னு…

ஒரு போலீசோட எதிர்பார்ப்பு எல்லாரும் கிரிமினலா இருக்கணும்ன்னு…

ஒரு மெக்கானிக்கோட எதிர்பார்ப்பு எல்லாரோட காரும் ப்ரேக் டவுன் ஆகணும்ன்னு…

ஒரு டென்டிஸ்ட்டோட எதிர்பார்ப்பு எல்லார் பல்லும் சொத்தையாகணும்ன்னு…

ஒரு வெட்டியானோட எதிர்பார்ப்பு எல்லாரும் எப்ப சாவான்னு…

ஆனா திருடன் மட்டும் தான்

எல்லாரும் நல்லா வசதியா வாழணும்..

அம்புட்டு பயலும் நைட்டு நிம்மதியா தூங்கணும்ன்னு எதிர்பார்ப்பான்…

இப்படி அடுத்தவங்க நல்லாருக்கணும்ன்னு நினைக்கற ஒரு

ஒப்பற்ற ஜீவன பொசுக்கு பொசுக்குன்னு புடிச்சு உள்ளார போட்டறோமே

இது நியாயமா?

ஜோக்.. ஜோக்..

xxx

1) “நாய்க்கு கோபம் வந்தால் என்ன செய்யும் ?

“நாய்கிட்டதான் கேக்கணும் “

“அதாண்டா கேட்கிறேன் பதில் சொல்லு!!”

xxx

2) “நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி,

என் லைப்ஃ லே பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு.

“அப்புறம்”

அப்புறம் என்ன……..

காலிலே மாட்டிட்டு வந்திட்டேன் !!

xxxx

3) “சார், என்ன இது ?”

“கொஸ்டீன் பேப்பர்”

“சார், இது என்ன?”

“ஆன்சர் பேப்பர்”

“என்ன ஒரு அக்கிரமம் சார்,

கொஸ்டீசன் பேப்பர்லே கொஸ்டீன் இருக்கு,

ஆன்சர் பேப்பர்லே ஒண்ணுமே காணுமே !!

xxx

4) “எண்டா உன் மனைவி கரண்டி, தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?”

“நான்தான் சொன்னேனே, அவளுக்கு ‘வீசிங்’ ப்ராப்ளம் இருக்குன்னு.!!”

xxx

5)””என்னப்பா…எக்ஸாம்க்கு ப்ளம்பரை கூட்டிக்கிட்டு வந்திருக்க?”

“கொஸ்டீன் பேப்பர் “லீக்” ஆகுதுன்னு சொன்னங்க, அதான் !!”

xxx

6) “வாங்க … வாங்க, இந்தத் துணி கிழியவே கிழியாது …. வாங்கிப் பாருங்க”

“அப்போ எனக்கு இரண்டு மீட்டர் துணி வேணுமே …. எப்படி கிழிப்பே ?”

xxx

7) “நம்ம டீச்சருக்கு என்ன ஆச்சு?”

“ஏன் கேக்கறே”

“திருக்குறளை போர்டுலே எழுதிட்டு, அவங்களே இதை எழுதினது யார்’னு

கேக்கறாங்க !!”

xxx

சிரிcha போChe…..

No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,

Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சி கிட்டே இருக்கான்..!!!

xxxx

No: 2

உன் பேரு என்ன..?

” சௌமியா “

உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,

பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

xxx

No : 3 ( இண்டெர்வியூ.. )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா ” கோவா “

xxx

No : 4

( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா வாங்க கடைக்குச் போறான். )

கடைக்காரர் : சார் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா..

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல எங்க அம்மாவா என்னை பீட்ஸா வாங்க அனுப்புவாங்க…!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா…

xxx

No : 5

நடிகர் simbu : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு

மக்களுக்கு பொது சேவை பண்ணலாம்னு இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே அது மக்களுக்கு பண்ற பொதுசேவை

தானே

xxx

No : 6

டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு ரொம்ப முக்கியம்., இந்தாங்க தூக்க

மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை… உங்களுக்கு..

xxx

No : 7 ( கல்யாண மண்டபம்.. )

“வாங்க., வாங்க..!!

நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?

பொண்ணு வீட்டுக்காரரா..? “

” ம்ம்.. நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரர்..!!”

xxx

No: 8

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி

Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம் தெரியுதா..?

அவர் : தெரியுது…

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!


மனம் வெளுக்க வழி! (Post No.10,932)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,932

Date uploaded in London – –     4 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மனம் வெளுக்க வழி!

ச.நாகராஜன்

மனம் வெளுக்க வழி இல்லையே, எங்கள் முத்துமாரியம்மா என்று பாடினார் மஹாகவி பாரதியார்.

இதே கருத்தைத் தாயுமானவரும் முன்னமேயே வலியுறுத்தி இருக்கிறார்.

மனத்தை நிலை நிறுத்தி நல்லனவற்றில் ஈடுபடச் செய்ய ஒரு வழி உண்டா?

உண்டு என்று சொல்கிறது இராமாயண இதிஹாஸம்.

துளஸிதாஸரின் ராமசரித மானஸத்தை விரிவாக விளக்கி உபந்யாசம் செய்த பெரியோருள் முராரி பாபு என்பவரும் ஒருவர்.

அவர் கல்கத்தாவில் 2000ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி நிகழ்த்திய உரையில் இதைப் பற்றி அழகுற விளக்குகிறார்.

ராமர் யமுனை நதிக் கரையை அடைந்தவுடன் அவரைப் பார்க்க ஏராளமானோர் வந்தனர். அவர்களுள் தாபஸுக்களும் இருந்தனர்.

அதாவது தபஸ்விகள்.

தாபஸு என்றால் என்ன?

தா என்றால் தாளம், லயம், சந்தம் இவை ஒருங்கிணைந்தவர் என்று பொருள். அதாவது வாழ்க்கை முழுவதும் நேர்த்தியாக அமைந்த லய சுத்தமான கட்டுப்பாடு இருப்பதாகும்.

ப என்றால் பவித்ரதா அதாவது தூய்மையும் தெய்வீகமும் இணைந்த தன்மை

சு என்றால் சுந்தரதா. அதாவது தெய்வீக அழகு.

ஒரு குழந்தையின் முகத்தைப் பார்த்தாலேயே நாம் உத்வேகம் பெறுகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். ஆக இந்த கள்ளம் கபடமில்லாத குழந்தையின் அழகு எப்படி வந்தது என்று வியந்து அந்தக் குழந்தையின் தாய், தந்தையைப் பார்க்கிறோம்.

சுந்தரம் அதாவது அழகின் தாய், தந்தை யார்?

சத்யம் சிவம் ஆகியவையே தாய் தந்தை. சத்யம் சுந்தரதின் தாய். சிவம் தந்தை.

ஆகவே தபஸ் என்பது தூய்மை, கள்ளங்கபடமற்ற தன்மை, அழகு, சத்யம், ஒளி பொருந்திய உள்ளார்ந்த வலிமை ஆகிய அனைத்தும் கொண்டதே ஆகும். தாபஸுக்கள் இவை அனைத்தும் கொண்டவர்கள்.

பொறாமை, பேராசை, கீழானவற்றில் ஈர்ப்பு உள்ளிட்ட பல அழுக்குகள் மனதைச் சுற்றி இருக்கும் போது அதை வெளுப்பது தான் எப்படி?

அதற்குத் தான் ஒரு வழியை துளஸிதாஸர் காட்டுகிறார்.

வினு சத்ஸங்க நஹி ஹரி கதா

  தேஹி வினு மோஹ ந சாரா |

மோஹ கயே வினு ராமபத்

  தோழி ந த்ருட அனுராக ||

சத்ஸங்கம் இல்லாமல் ஒருவரும் பாகவத கதையைக் கேட்க முடியாது. பாகவத கதை சொல்லும் மஹாத்மா இல்லாமல் ஒருவரும் ராமரின் சரணாரவிந்தத்தை அடைய முடியாது.

இதை அழகுற முராரி பாபு விளக்கி நல்ல ஒரு எடுத்துக்காட்டையும் கூறினார்.

மனதை ஒரு விமானத்துடன் அவர் ஒப்பிட்டார்.

ஒரு விமானம் பறக்க மூன்று நிலைகள் உண்டு.

சுத்தோகரண், ஊஞ்சிகரண், ரூபாந்தர்.

சுத்தோகரண் என்பது விமானத்தை நன்கு சுத்தமாக்கி அதன் ஒவ்வொரு பாகத்தையும் சரிபார்த்து சரியான ஒழுங்கில் வைத்திருப்பதாகும்.

அடுத்து ஊஞ்சிகரண் என்பது விமானம் பறக்கும் நிலை.

அதற்கு தூய்மைப்படுத்தப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் தேவை.

அடுத்து ரூபாந்தர் என்ற நிலை. முதல் இரண்டும் சரியாக இருப்பின் விமானம் ஆகாயத்தில் தனது இலக்கை நோக்கி வேகமாக ஒரு வித தடையுமின்றிச் செல்கிறது.

இங்கு பக்தனும் தனது மனம், உடல், ஆன்மாவைச் சுத்தப்படுத்தி ஒழுங்கு படுத்தி ஸத்ஸங்கம் தரும் ஸத்கதாவை எரிபொருளாகக் கொண்டு பறக்க ஆரம்பித்தால் அவன் கிருபையினால் நிரப்பப்பட்டு அவனது லக்ஷியத்தை நோக்கி அடையுமாறு செய்யப்படுவான்.

ஸத்ஸங்கம் என்ன செய்யும்?

பர்த்ருஹரி நீதி சதகத்தில் அழகுற இப்படி விளக்குகிறார்:

 ஸத்ஸங்கம் எதைத் தான் செய்யாது?

ஜாட்யம் தியோ ஹரதி ஸிஞ்சதி வாசி ஸத்யம்

மாநோந்நதிம் திஸதி பாபமபாகரோதி |

சேத: ப்ரஸாதயதி திக்ஷூ தநோதி கீர்திம்

ஸத்ஸங்கதி: கதய கிம் ந கரோதி பும்ஸாம் ||

இதன் பொருள்:

பும்ஸாம் – மனிதர்களுக்கு

ஸத்ஸங்கதி: – நல்லோர்களின் சேர்க்கையானது

கிம் ந கரோதி – எதைத் தான் செய்யாது

கதய – சொல்

திய: – புத்தியின்

ஜாட்யம் – மந்தத்தை

ஹரதி – போக்குகிறது

வாசி – வாக்கில்

ஸத்யம் – ஸத்யத்தை

ஸிஞ்சதி – ஊற்றுகிறது

மானோந்நதிம் – உயர்ந்த கௌரவத்தை

திசதி – கொடுக்கிறது

பாபம் – பாபத்தை

அபாகரோதி – போக்கடிக்கிறது

சேத: – மனதை

ப்ரஸாதயதி – தெளிவாக்குகிறது

திக்ஷூ – நான்கு திக்கிலும்

கீர்த்திம் – கீர்த்தியை

தநோதி – பரவச் செய்கிறது.

நல்லோரின் சேர்க்கை புத்தியினுடைய மூடத்தனத்தை நீக்கி விடுகிறது. பேச்சில் சத்தியத்தைத் தருகிறது. சம்மானத்தில் உண்டாகும் அதிக பெருமையை (அதிக கௌரவத்தை) கொடுக்கிறது. பாபத்தைப் போக்கடிக்கிறது. மனதைத் தெளிவாக்குகிறது. நான்கு திசைகளிலும் புகழைப் பரவச் செய்கிறது. மனிதர்களுக்கு ஸத் ஸங்கம் எந்த நன்மையைத் தான் செய்யவில்லை (ஓ, தோழனே நீ சொல்!)

ஸத்ஸங்கம் அடைந்தவுடன் மனம் சொல்கிறது :

நஷ்ட மோஹ: கத சந்தேஹ:

மோகம் ஒழிந்தது; சந்தேகம் அகன்றது.

ஆதி சங்கரர மோக்ஷம் என்பதற்கான விளக்கத்தை அழகுறச் சொல்கிறார்:

மோ என்றா மோஹம் க்ஷ என்றால் க்ஷயம் அதாவது நாசமடைவது.

மோஹம் அகல்வதே மோக்ஷம் ஆகும்.

இதைத் தருவது ஸத்ஸங்கமே!

துளஸிதாசர் வழியே இதை அறியும் போது ஆனந்தம் ஏற்படுகிறதல்லவா?

***

tags-  துளஸிதாசர், மனம் , வழி!

TAMILS FOLLOWED VEDIC AND KALIDASA’S IMAGERY (Post No.10,931)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,931

Date uploaded in London – –    3 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Sangam Tamil poets composed about 2500 poems two thousand years ago. At least ten percent of the poems used Kalidasa’s imagery. It confirmed that Kalidasa lived and worked in the court of greatest Hindu emperor Vikramaditya before Sangam period. Several kings from Kashmir to Kanyakumari had borrowed his name Vikrama or Aditya and prefixed or suffixed to their names. Since Kalidasa lived before Sangam age, his ideas were borrowed by the Tamil poets. But Kalidasa also had his predecessors like Vyasa, Valmiki and Vedic Poets. Best of the commentators on Kalidasa was Mallinatha; he said that Kalidasa followed Valmiki in several things.

Let us look at one famous imagery which is found only in Hindu literature.

For Hindus

Tree is Man and Creeper or Climber is Woman

Moon is Man and Stars are Women

Sea is Man and Rivers are Women

This has been followed from Vedic days until today. Several feature film songs in Hindi and Tamil use this imagery.

These similes illustrate that slender and beautiful  things are women and strong and large are men. Women always run after men who are heroes in real life or film life. Heroines are in umpteen numbers but heroes are not that many; they survive longer in film industry.

xxx

Rig Veda and Atharva Veda portray men as trees and women as creepers. Later Mahabharata, Kalidasa , Asvagosha and Sangam Tamil poets used this imagery. Until today we see it in film lyrics.

Here is what the Rig Vedic poet say in the famous Yama- Yami dialogue poem in the Rig Veda (10-10)

10-10-13

Alas ! you are indeed a weak man Yama. You have neither a heart nor any spirit.

As round the tree the creeper clings, another woman will cling about you and it is like a girdle of the horse”.

In the next mantra Yama also says the same to his twin sister Yami. He refused to accept her incestuous proposal.

In the Atharva Veda, we read in 6-8-1

“Like as the creeper throws , her arms on every side around the tree

So you hold me in your embrace and you may be in love with me , my darling, never to depart.”

Xxx

We see in in the Vanaparva of Mahabharata 3-12-12

‘The forest terrified by the demon Kirmira, ‘the long grown creepers embraced the trees with arms od red blossoms’.

Bu Kalidasa is the best in using this imagery all through his works. Just to quote one or two places, I go to his most famous play Sakuntalam.

Anasuya and Priyamvada, two of Sakuntala’s friends tease her when she was looking at the creeper around the tree They commented that she is expecting someone will be there for her to cling  like the creeper . We see such imagery in Malavikagnimitra and Vikrama Urvasiya dramas too. In  Vikramorvaseeya , Urvasi herself becomes a creeper. Asvaghosa, a poor Buddhist longing for Buddhist propaganda via Sanskrit, imitated Kalidasa. He or Buddha never figured in Sangam Tamil literature. Not even other Sanskrit commentators bothered about Asvaghosa’s works.

xxx

Tamil Poets Remarks

In 2000 year old Sangam Tamil literature we see this Tree/Creeper and Man/Woman comparison in at east three poems in Akananuru and Ainkurunuru.

Patali tree and Athiral climber/creeper are used by the poets Othal Anthaiyar and Palai Padiya Perumkadungo.

In the Vedic days, the poets used the word ‘Libuja’ and later ‘Latha’ for creeper. Pushpalatha, Hemalatha, Srilattha , Swarnalatha, Premalatha and umpteen Lathas are used as girls’names throughout India even today.

In Ainkurunuru verse 400 it is clearly said that woman is a creeper and man s a tree. In other verses Akananuru 99, 237, 261 the Pathiri tree and its climber Athiral are used in the context of Lover and his beloved.

Modern Tamil film songs continue this tradition and the lyrics always project ladylove as a creeper.

We can say that this tradition has been there from the Vedic days from Himalayas to Kanyakumari.

For Tamil lovers , here are the passages; in later literature we see crystal clear imagey.

 (அகம் 99)     அதிரல் பரந்த அம் தண் பாதிரி

xxx

புன்காற் பாதிரி அரி நிறத் திரள்வீ

நுண் கொடி அதிரலொடு  நுணங்கு அறல் வரிப்ப

-அகநானூறு 237

xxx

கானப் பாதிரிக் கருந்தக்கட்டு ஒள்வீ

வேனில் அதிரலொடு விரைஇ

—அகநானூறு 261

xxx

மள்ளர் அனன மரவம்  தழீஇ

மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்

–ஐங்குறுநூறு 400

–subham—

 Tree, Man, Climber, Creeper, Woman, Kalidasa, Tamil, Sanskrit, Literature

தமிழ் சினிமா பாடலில் ரிக் வேதம், காளிதாசன் தாக்கம் (Post No.10,930)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,930

Date uploaded in London – –    3 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

புன்காற் பாதிரி அரி நிறத் திரள்வீ

நுண் கொடி அதிரலொடு  நுணங்கு அறல் வரிப்ப

-அகநானூறு 237

கானப் பாதிரிக் கருந்தக்கட்டு ஒள்வீ

வேனில் அதிரலொடு விரை இ

அகநானூறு 261

மள்ளர் அனன மரவம்  தழீஇ 

மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்

–ஐங்குறுநூறு 400

xxx

உலகிலேயே மிகவும் பழமையான  நூல் ரிக் வேதம்; அதில் வரும் மந்திரத்தில் உள்ள வேத கால கடவுளர் அதே வரிசையில் கி.மு.1380 தேதியிட்ட துருக்கி நாட்டு கியூனிபார்ம் லிபி கல்வெட்டில் உள்ளது. இப்படித் தொல்பொருட் துறைச் சான்றும் இருப்பதால் உலகம் முழுதும் சம்ஸ்க்ருதம் பரவியது தெரிய வந்தது. அது மட்டுமல்ல; ரிக் வேதப் புலவர்கள் 400 பேரும் என்ன உவமைகளைப் பயன்படுத்தினரோ அவை அப்படியே சங்கத் தமிழ் நூல்களிலும் உள்ளது. 450 சங்கப்புலவர் எழுதிய 2500 பாடல்களில் 200 காளி தாசன் உவமைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால் காளிதாசன் காலம் மன்னன் விக்ரமாதித்தனின் காலம் என்பதும் உறுதியாகிவிட்டது. அதாவது கிமு. முதல் நூற்றாண்டு . காளிதாசனும் சங்கத் தமிழ்ப் புலவர்களும் நமது தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஒரே உவமையைக் கையாளுவது இமயம் முதல் குமரி வரை ரிக் வேதப் பாடல்களின் தாக்கத்தைக் காட்டுகிறது

xxx

1973 — TAMIL FILM ஸ்கூல் மாஸ்டர் — மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ஜானகியம்மா


பூங்கொடியே.. பூங்கொடியே..


பூங்கொடியே.. பூங்கொடியே..
பூவிருந்தால் தருவாயோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ

பூந்தோட்டம் நல்ல பூந்தோட்டம்
ஒரு புடவையில் ஒளிந்தது மெதுவாக..
பார்க்கவோ பறிக்கவோ
சேர்க்கவோ அணியவோ
பெண்ணின் மனது என்னம் உள்ளது
கண்ணன் சொன்னால்
போதாதோ போதாதோ போததோ
பொன்னைக்கொண்டு மாலைக்கட்டி
மாலையிட வருவாயோ
மாலையிட வருவாயோ

XXXX

வசந்த ஊஞ்சலிலே

அசைந்த பூங்கொடியே

உதிர்ந்த மாயமென்ன

உன் இதய சோகமென்ன

உன் இதய சோகமென்ன

நூலுமில்லை வாலுமில்லை

வானில் பட்டம் விடுவேனோ

நாதியில்லை தேவியில்லை

நானும் வாழ்வை ரசிப்பேனா

நானும் வாழ்வை ரசிப்பேனா

XXXX

TAMIL FILM – AMARA DEEPAM

தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு

திரிந்தலைந்து பாடுவதேன் ரீங்காரம் கொண்டு

பூங்கொடியே நீ சொல்லுவாய் ஓஓ..ஓஓ..

பூங்கொடியே நீ சொல்லுவாய்

XXX

கடைசியாக உள்ள அமர தீபம் படத்தில் காதலன், காதலி இருவரும் பூங்கொடியைப் பார்த்துப் பாடுகின்றனர் ; ஆனால் மாமரம் என்ற வரி வருகிறது. நிறைய தமிழ் திரைப்படப்பாடல்களில் பெண்ணை பூங்கொடி (புஷ்ப லதா) என்று வருணிப்பதைக் காண்கிறோம் . காளிதாசன்  தனது காவியங்களில் நிறைய இடங்களில் ஆண் மகனை மாமரம் என்றும் பெண்மணியை அதைக் கட்டித்தழுவும் பூங்கொடி என்றும் வருணிக்கிறார் அதற்குப் பின்னர் சங்க காலத் தமிழ்ப் புலவர்கள் இதே மரம், கொடி = காதலன், காதலி உவமையை, உருவகத்தைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த 2000 ஆண்டு பழமையான சங்க இலக்கியத்துக்கு ஊற்றாக விளங்குவது ரிக் வேத, அதர்வண வேத மந்திரங்களாகும்.

ஒவ்வொன்றாகக் காண்போம் :-

ரிக் வேதத்தில் உள்ள யமா – யமி  Sexy செக்சி உரையாடல் (10-10) மிகவும் பிரபலமானது.

பத்தாவது மண்டல பத்தாவது துதியில் 13, 14 ஆவது மந்திரங்களில் மரம்- கொடி உவமை வருகிறது. “உன்னை வேறு ஒரு பெண் மரத்தைக் கொடி தழுவுவது போலத் தழுவட்டும் என்று யமி திட்டுகிறாள். உடனே யமனும் அடுத்த மந்திரத்தில் அதே சொற்களைப் பயன்படுத்தி சகோதரியைத் திட்டுகிறான் ; சகோதர- சகோதரி உறவு கூடாது, சகோத்திர கல்யாணம் கூடாது என்பதற்காக அக்காலத்தில் யாக யக்ஞங்கள் முடிந்தவுடன் இதை நாட்டிய நாடகமாக நடித்துக் காட்டினார்கள்  .

வேதத்தில் கொடி என்பதற்கு ‘லிபுஜா’ என்றும் மரத்திற்கு ‘வ்ருக்ஷம்’ என்றும் புலவர்கள் பயன்படுத்தினர். பிற்காலத்தில் ‘லிபுஜா’  என்பதற்கு லதா என்ற சொல் பயன்பட்டது

அதர்வண வேதத்திலும் மரம்- கொடி (லதா) 6-8-1

ஒரு கொடி எவ்வாறு மரத்தின் எல்லா பக்கங்களிலும் படர்ந்து அணைக்குமோ அவ்வாறு நீ என்னைக் கட்டித்தழுவு; என் மீது எப்போதும் காதல் இருக்கட்டும்; என்னை எப்போதும் நீங்காதவளாக இருப்பாயாக.

இது நல்ல உவமை- மரத்தைச் சுற்றிப் படரும் கொடி எவ்வளவு காற்று, மழை அடித்தாலும் மரத்தோடு நிற்கும். மரம் விழுந்தால் அத்தோடு கொடியும் விழும். வேத கால புலவர்கள் எவ்வளவு உன்னிப்பாக இயற்கையைக் கண்டு ரசித்தனர் என்பது தெரிகிறது.

இது காளிதாசனுக்கும் மிகவும் பிடித்த காட்சி . மாமரத்தைக் கட்டி அணைக்கும் பூங்கொடியை அவன் பல பாடல்களில் பாடுகிறான்.

பெண்ணை பூங் கொடியாக வருணிப்பது விக்ரம ஊர்வசீய நாடகத்தில் வருகிறது. அங்கு உண்மையில் ஊர்வசியே கொடியாக மாறி விடுவதாக கதை போகிறது.

உலகப் புகழ்பெற்ற சாகுந்தல நாடகத்தில் ப்ரியம் வதா என்ற தோழி, மற்றோரு தோழியான அனசூயாவிடம் சகுந்தலையைக் கிண்டல் செய் கிறாள் “அவளுக்குப் பிடித்த மல்லிகைக் கொடியையே சகுந்தலை பார்ப்பது ஏன் என்றால் அந்த மரத்தைச் சுற்றி படர்ந்த கொடி போல தனக்கும் ஒரு ஆண் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்” .

(இதை அவளைக் காதலித்து மணக்கப் போகும் துஷ்யந்தன் மறைந்து இருந்து பார்க்கும் வகையில் அற்புதமாக அமைத்துள்ளான் காளிதாசன்).

XXX

புத்த மதத்தினருக்கு காதல் கீதல் எல்லாம் ரொம்ப தூரம்; ஸம்ஸ்க்ருதமும் ரொம்ப தூரம். ஆனால் பிராமணராக இருந்து புத்த மதத்திற்கு மாறிய அஸ்வகோஷர் புத்த சரிதம், ஸெளந்தரானந்தம் முதலிய ஸம்ஸ்க்ருத காவியங்களில் இந்த ‘மரம்- கொடி உத்தி’யைப் பயன்படுத்தினார் இதற்கெல்லாம் முன்னதாக மஹாபாரத வன பருவத்திலும் 3-12-12 இது உளது . கிர்மீர என்ற அரக்கனால் அச்சுறுத்தப்பட்ட காட்டில் மரங்களை நீண்ட கொடிகள் சிவப்பு  நிற மலர்களுடன் கட்டித் தழுவின என்று வியாசர் பாடுகிறார்.

மாமரத்தை அதிமுக்தா, மாதவி கொடிகள் சுற்றி வளைத்து படரும் காட்சிகளை காளிதாசன் மேலும் பல இடங்களில் பயன்படுத்துகிறான் .

ரிக் வேதம், அதர்வண வேதம் ஆகியவற்ரறில் வரும் இக்காட்சியைத் தமிழ்ப்புலவர்கள் படித்திருக்கலாம் ; கண்ணாலும் நேரில் கண்டு இருக்கலாம். இமயம் முதல் குமரி வரை, இந்துக்கள் சிந்தனை ஒன்றே! .  2000 ஆண்டுகளுக்கு முன்னர் வேறு  எங்கும் இதைக் காண முடியாது .

xxx

இதோ சங்கத் தமிழ் பாடல்கள் :-

அதிரல் கொடி

பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடிய இன்னும் ஒரு அகப்பாடலில் (அகம் 99)     அதிரல் பரந்த அம் தண் பாதிரி என்று கூறுவதால் அதிரல் கொடி , பாதிரி மரத்தில் படரும் செய்தி கிடைக்கிறது

சங்க இலக்கியப்  பாடல்களில் அதிரல் கொடி வரும் இடமெல்லாம், பாதிரி மரமும் வருவதால் பெரும்பாலும் அந்த மரத்தில் படரும் கொடியை தமிழர்கள் கண்டனர் என்பதை அறியலாம்

xxx

புன்காற் பாதிரி அரி நிறத் திரள்வீ

நுண் கொடி அதிரலொடு  நுணங்கு அறல் வரிப்ப

-அகநானூறு 237

பொருள்

பாடியவர் – தாயங் கண்ணனார் ; திணை – பாலை

அதிரல் = காட்டு மல்லிகை; அதி முக்தா ?

புல்லிய காம்பினை உடைய பாதிரியின்  நல்ல நிறமுடைய மலர்கள், மெல்லிய கொடியாகிய அதிரலோடு சேர்ந்து நுண்மையான மணலிடத்தே கோலம் செய்து கிடக்கும்.

xxx

கானப் பாதிரிக் கருந்தக்கட்டு ஒள்வீ

வேனில் அதிரலொடு விரைஇ

—அகநானூறு 261

பொருள்

புலவர் – பாலை பாடிய பெருங் கடுங்கோ

இந்த வேனிற்காலத்தில் காட்டிலுள்ள பாதிரியின் ஒளியுடைய மலர்களை காட்டு மல்லிகை மலருடன் கலந்து அழகான கூந்தலில் செருகி, தேன் சிந்தும் வெண்கடம்ப மலர்களையும் சூடி (காதலனு ம் காதலியும் நடந்து சென்றனர் )

xxx

மள்ளர் அனன மரவம்  தழீஇ

மகளிர் அன்ன ஆடுகொடி நுடங்கும்

–ஐங்குறுநூறு 400

பொருள் :-

ஐங்குறு நூறு — புலவர் ஓதல் ஆந்தையார் – பாலைத் திணை

மரவம்  தலைவனுக்கும் ஆடுகொடி தலைவிக்கும் உவமை.

பெருமாட்டி ! வீரர் போன்ற மரவ மரங்களை  மகளிர் போலும் அசையும் கொடிகள் தழுவுகின்ற வேனில் பருவத்தில் வதுவை செய்துகொண்ட  மகள் இன்று வருவாள் என்று தூதர்கள் கூறுகின்றனர் என்று

செவிலி கூறினாள் . இதில் ‘உண்ணும் பொருள்களை உடைய வேனில்’, ‘மகள் ஆராய்ந்து அணிந்து கொண்ட கழல்’ , ‘சினமும் வேலும் உடைய காளை /ஆண்மகன்’ என்ற தாய்மொழிகளும் உள

மரவம் = வெண்கடம்ப மரம் ; வந்தன்று = வந்தது ; தூதே = தூதர் மூலம் வந்த தகவல்

–subham—

TAGS-  கொடி , மரம் , காளிதாசன் , ரிக்வேதம், சங்கத் தமிழ், சினிமா , பாடல்கள் , மாமரம்

KING DIED AND QUEEN FAINTED BECAUSE OF NEWSPAPER HEADLINES (Post.10,929)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,929

Date uploaded in London – –   3 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 50

COMPILED Kattukutty

Strange World! (விசித்திர உலகம்!)

One of the greatest messages ever received…

Disciple: “Master, what is the difference between Death and Moksha ” ?

Buddha: “When Breath stops, and Desire remains,
that is Death….
and
when Desires stop and Breath remains….
that is Moksha” !! 

*

 “Good decisions come from experience, and experience comes from bad decisions.”

*

A King enrolled his donkey in a race & won.
Local papers read:


‘KING’s ASS WON’


The king was so upset with this kind of publicity that he gave the donkey to the queen.
The local paper then read:


“QUEEN HAS THE BEST ASS IN TOWN”


The king fainted….


Queen sold the donkey to a farmer for Rs 1000. Next day papers read:

“QUEEN SELLING HER ASS FOR Rs 1000”


The queen fainted…


The next day king ordered the queen to buy back the donkey and leave it in jungle.


The Next Headlines:


“QUEEN ANNOUNCES HER ASS IS FREE & WILD”


The king died… !!

That’s how the Media works in India Today !!

*

*The contest was to describe peace, tranquility and happiness in minimum words.

*I just wrote “sleeping wife”.

*The judge gave me award with an emotional hug.

*

xxx

Read this

Last month a family from Tamil Nadu was on holidays in Australia.
Apart from his wife and two children, his old age mother also accompanied them.

They were traveling on one of the free ways.

This Tamil Family was in their car and was followed by a Local Aussie Lady, driving at a safe distance.

Suddenly the Aussie Lady saw a head of an old lady coming out of the window and vomiting blood.

She took a quick action and informed the 000 for help.

In no time, there appeared an Air Ambulance Helicopter.

The well trained staff quickly shifted that old lady on the stretcher. Oxygen supply started. Doctors started examining her. Sometime later, the old lady was declared safe and fit to travel again.


Kudos to Quick Help and Well Done The Aussie Lady.

But , for these services, our man had to pay AUD 3500.

With these unplanned heavy financial charges, our man was in shock and he blasted his Old Aged mother :

Mum! I told you not to spit chewed Betel Nut from running car!

*” ஏம்மா…வெத்தலையப்போட்டு எச்சில கார்ல இருந்து துப்பாதேன்னு சொன்னா கேட்கமாட்டியா?”*

                                                                       **
–suham—

 Tags – King, Queen, ASS, Newspaper


அதே கணவன்தான் வேண்டும்! படித்ததில் சிரித்தது! (Post No.10,928)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,928

Date uploaded in London – –   3 MAY  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ஞான மொழிகள் – 52

Compiled by Kattukutty

படித்ததில் சிரித்தது!

ஒருநாள் சித்திரகுப்தன் வருத்தமாக பிரம்மனிடம்
சொன்னார் ,

“பெண்கள் தொடர்ந்து ஆண்டு தோறும் வரலட்சுமி
பூஜை செய்து வந்தால், இப்பொழுது இருக்கும்
கணவனே , ஏழு ஜென்மத்துக்கும்
கணவனாக அவர்களுக்கு கிடைப்பான். ஆனால்
அதில் ஒரு சிக்கல் இருக்கிறது”.


என்ன சிக்கல் ..?? பிரம்மா வினவினார் .

“பெண்கள் அதே கணவன்தான் வேண்டும் என்கிறார்கள்.
ஆனால், ஆண்கள் வேறு பெண்தான் வேண்டும் என்கிறார்கள். அதுதான் சிக்கல். இருவரையும்
திருப்தி செய்ய, என்ன செய்ய வேண்டும் ..??”

இடையில் குறுக்கிட்ட நாரதர் சொன்னார் ,

பூமியில் எல்லாம் தெரிந்த ஞானி ஒருவர் இருக்கிறார். அவர் பெயர் சாணக்கியர், அவரைப் பாருங்கள், இதற்கு தீர்வு கிடைக்கும் என்றார் .
சித்திரகுப்தர், சாணக்கியரை சென்று பார்த்தார் .

சாணக்கியரும் எவ்வளவோ யோசனை செய்து பார்த்தார் , ஒன்றும் சரிவரவில்லை .

கடைசியாக , அந்த கணவன்களிடமே கேட்டு
விடுவோம் என்று முடிவு செய்து ,
அவர்களிடம் பேசினார்கள்.


கணவன்மார்களில் ஒருவர், ஒரு யோசனை
சொன்னார் . அதைக்கேட்டு சாணக்கியர்
அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறிவிட்டு
இதை விட சிறந்த தீர்வு வேறு எதுவும்
இருக்க முடியாது என்று கூறிவிட்டு
இதை அந்த பெண்களிடமே கேட்டு விடுங்கள் என்று சொன்னார்.

இந்த தீர்வை, சித்திரகுப்தன் அந்த பெண்களிடம்
கூறினார் . அதற்கு அந்த பெண்கள்
சித்திரகுப்தனை கையெடுத்து கும்பிட்டு விட்டு எங்களுக்கு அடுத்த ஜென்மமே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் .

அப்படி என்னதான் தீர்வு *”அது”*..??

சித்திரகுப்தன் அந்த பெண்களிடம், பிரம்மா நீங்கள் கேட்ட அதே கணவன்தான் வேண்டும் என்ற
கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் , ஆனால்
ஒரு நிபந்தனை, ஏழு ஜென்மத்திற்கும்
*அதே மாமியார்* தான் இருப்பார், அதற்கு உங்களுக்கு சம்மதமா என்றார் ….

” வாழ்க வளமுடன் “


* https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

*ஒரு டாக்டரின் புலம்பல்*

கண்ட எண்ணைலயும் பொரிச்ச வடையையும், சமோசவையும் சாப்பிடறானுவ..!

சாக்கடைக்கு பக்கத்தில உள்ள குழாயிலிருந்து எடுத்த தண்ணில முக்கிக் கொடுக்கற பானிபூரியை சாப்பிடறானுவ..!

பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமே வளர்க்கப்பட்ட காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடறானுவ..!

டாய்லட் நல்லா கிளீன் பண்ணும்னு நிரூபிக்கப்பட்ட கோக்கையும், பெப்ஸியையும் குடிக்கறானுவ..!

தண்ணியடிக்கறானுவ..!,
சிகரட் குடிக்கறானுவ..!,

குட்கா.., பான்னு புகையிலையைப் போட்டு மெல்றானுவ..!

ரோட்டில புகைக்கு நடுவே ரெண்டு மணிநேரம் காத்தை சுவாசிச்சு வீட்டுக்கு வரானுவ..!

இவ்வளவும் பண்ணிட்டு, உடம்பு சரியிலலைன்னு இங்க வந்து நான் ஒரு மருந்து எடுத்துக்கொடுத்தா,
*” இந்த மருந்தாலே ஏதாவது SIDE EFFECT இருக்கா”*-ன்னு கேக்கறாயங்க. . .

முடியல…..

xxxxx

*tags –   டாக்டரின் புலம்பல், அதே கணவன்

ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்தியாருக்கும் நடந்த பாடல் போட்டி! (Post 10,927)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,927

Date uploaded in London – –     3 MAY   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

தொண்டைமண்டல சதகம் பாடல் 21

ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்தியாருக்கும் நடந்த பாடல் போட்டி!

ச.நாகராஜன்

குலோத்துங்க சோழன் அவையில் இரு பெரும் புலவர்களான ஒட்டக்கூத்தரும் புகழேந்தியாரும் அரசவையை அலங்கரித்தனர்.

ஒட்டக்கூத்தர், புகழேந்தியார் ஆகிய இருவருக்கும் அடிக்கடி பாடல் போட்டி நடைபெறுவதுண்டு.

அதனால் மன்னரும் மற்றையோரும் தாம் பெற்ற தமிழ்ப் பாடல்களால் பெரிதும் மகிழ்ச்சி அடைவது வழக்கம்.

ஒரு முறை நெய்த்தானம் என்னும் ஊருக்குச் சென்ற குலோத்துங்கன் தம்முடன் இரு பெரும் புலவரையும் அழைத்துச் சென்றான்.

அங்கு ஈசனை தரிசனம் செய்யும் போது ஒட்டக்கூத்தரை கவி பாடுமாறு வேண்டினான் குலோத்துங்கன்.

அவர் அற்புதமான ஒரு பாடலைப் பாடினார். அடுத்து புகழேந்தியாரை வேண்ட அவரோ ஒட்டக்கூத்தரை விஞ்சுமாறு ஒரு பாடலைப் புனைந்து பாடினார்.

இது ஊரெங்கும் பரவ அனைவரும் மகிழ்ந்தனர்.

இந்த அரும் சம்பவத்தைத் தொண்டை மண்டல சதகம் தனது 21 பாடலில் கூறிப் போற்றுகிறது.

நூலார்கலை வல்ல செம்பியன்கேட்ப நொடித்து  மிக்க

கோலாகலனொட்டக் கூத்தனையன்றுதற் கோலியென்று

மேலார்கவிசொல்லி நெய்த்தானத்தேசென்று வென்றுகொண்ட

மாலார்களந்தைப் புகழேந்தியுந் தொண்டை மண்டலமே

பாடலின் பொருள் :

இலக்கண நூல்களும் ஏனைய சாத்திரங்களும் கற்று வல்ல குலோத்துங்க சோழ மஹாராஜன் ஒட்டக்கூத்தப் புலவர் சகிதமாய், தன்னை அழைக்க நெய்த்தானம் என்னும் தலத்திற்குச் சென்று நெய்த்தானீசரைத் தரிசிக்கும் போது ஒட்டக்கூத்தரைக் கவி பாடச் செய்து தன்னையும்  பாடச் சொல்ல “தற்கோலி” என்னும் சிறந்த பாடலைப் பாடி, மிகுந்த மேன்மை உடைய ஒட்டக்கூத்தரை வென்றவராகிய புகழேந்திப் புலவர் வாழ்ந்த மேகம் தவழும் சோலை சூழ்ந்த களத்தூரும் தொண்டை மண்டலத்தில் உள்ள ஊராகும்.

இதில் கூறப்படும் பாடல்களைப் பார்ப்போம்.

ஒட்டக்கூத்தர் பாடிய பாடல் இது:

விக்கா வுக்கா வித்தா விப் போய் விட்டா நட்டார் சுட்டூர் புக்கார்

இக்கா யத்தா சைப்பா டுற்றே யிற்றே டிப் போய் வைப்பீர் நிற்பீர்

அக்கா டப்பேய் தொக்கா டச்சூ ழப்பா டத்தீ வெப்பா டப்பூண்

நெக்கா டக்கா னத்தோ டொப்பேர் நெய்த்தா னத்தானைச் சேவித்தே

கடினமான இந்தப் பாடலின் பொருள் வருமாறு:

விக்கா – விக்கல் கண்டு

உக்கு – அஞ்சி நடுநடுங்கி

ஆவி தாவி போய் விட்டால் – உடலிலிருந்து ஆவி அப்புறப்பட்டு உடலை விட்டுப் போய் விட்டால்

நட்டார் – (முன்னர் பிரியாமல் இருந்த) தாய் தந்தை முதலிய சுற்றத்தார்

சுட்டு ஊர் புக்கார் –  உடலைச் சுட்டு விட்டு தம் ஊருக்குத் திரும்பி வாழ்வர்

இக் காயத்து ஆசைப்பாடு உற்று – இந்தத் தன்மையை உடைய உடலின் மீது ஆசைப்பட்டு

இல் தேடிப் போய் வைப்பீர் நிற்பீர் – அதனை போஷிக்க நித்தம் பொருளைத் தேடி அறம் செய்யாமல் அதனை வீட்டில் புதைத்து வைக்கின்றவர்களே

அக்கு ஆட – அக்குமாலை அசைந்தாடவும்

பேய் தொக்கு ஆட – பேய்கள் கூடி ஆடவும்

சூழ் அப்பு ஆட – ஜடா மகுடத்தில் இருக்கும் கங்கை ஆடவும்

பூண் நெக்கு ஆட – காதில் அணிந்த சர்ப்பக் குழைகள் நெகிழ்ந்து ஆடவும்

கானத்து ஆட போம் – மயானத்திலே அடுகின்ற

அ பேர் நெய்த்தானத்தானை – அந்தப் பெரிய நெய்த்தானம் என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ள பரமசிவனை

சேவித்தே– வணங்கி நிற்பீர்

இதைக் கேட்டு அனைவரும் திகைத்தனர். உடனே புகழேந்தியார் தன் பங்கிற்கு இந்தப் பாடலைப் பாடினார்:

தற்கோ லிப்பூ சற்பா சத்தே தப்பா மற்சா கைக்கே நிற்பீர்

முற்கோ லிக்கோ லிப்பூ சித்தே முட்டா மற்சே வித்தே நிற்பீர்

வட்டா நெட்டோ டைப்பா ரைச்சேல் மைப்பூ கத்தே றித்தா விப்போய்

நெற்றா ளுற்றா லைப்பா கிற்சேர் நெய்த்தா னத்தா னைத்தி யானித்தே

ஒட்டக்கூத்தர் எந்தப் பொருளை மையமாகக் கொண்டு நெய்த்தானத்தானைப் பாடிப் பரவினாரோ அதே பொருளை மையமாகக் கொண்டு அதை விட கடினமான நடையில் பாடி நெய்த்தானத்தைப் பாடி பரவிய புகழேந்தியாரின் திறத்தையும் மேன்மையையும் கண்ட சோழன் வியந்து பாராட்டினான்.

பாடலின் பொருள் வருமாறு:

தன் கோலி – இருவினைகள் தன்னை வளைத்துக் கொள்ள

பூசல் பாசத்தே – * பாசத்திரயமாகிய போராட்டத்தில் அகப்பட்டு

தப்பாமல் சாகைக்கே நிற்பீர் – தப்பாமல் சாகும் படி நிற்பவர்களே

முன் கோலி கோலி -முந்தி விரைந்து

முட்டாமல் பூசித்து – மந்திர தந்திர வழுவு வராமல் பூஜை செய்து

சேவித்து – வணங்கி

வற்றா நெடு ஓடை – வற்றாத நெடிய நீரோடைகளில் உள்ள

பாரைச் சேல் – பாரை மீன்கள்

மைபூகத்து – மேக மண்டலத்தை அளாவி இருக்கின்ற கமுக மரத்தில்

தாவி ஏறிப் போய் – தாவி ஏறிச் சென்று

(பாக்குகளை உதிர்த்து அங்கிருந்து திரும்பி)

நெல் தாள் உற்று – நெல்லின் அடியில் விழுந்து  (இந்த நெற்கதிர்களைச் சிதறி)

ஆலை பாகில் சேர் – ஆலையாடிக் காய்ச்சப்படும் கரும்பின் பாகில் பாய்கின்ற வளப்பம் மிகுந்த

நெய்த்தானத்தானைத் தியானித்தே – நெய்த்தானத்தில் எழுந்தருளி இருக்கும் பரம்சிவனைத் தியானித்து நிற்பீர்களாக!

* பாசத் திரயம் என்பது மண், பெண், பொன் என்ற மூன்றில் ஆசை

அருமையான இந்தப் பாடல்களின் சரிதத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறது தொண்டைமண்டல சதகம்!

***

TAGS– ஒட்டக்கூத்தர், புகழேந்தி, குலோத்துங்க சோழன், பாடல் போட்டி