உலகின் தூய்மைத் தலை நகரம் சிங்கப்பூர்!

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,909

Date uploaded in London – –     30 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

மாலைமலர் 26-4-2022 இதழில் உலகின் அழகிய நகரம் சிங்கப்பூர் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள கட்டுரை!

உலகின் தூய்மைத் தலை நகரம் சிங்கப்பூர்!

ச.நாகராஜன்

தூய்மைத் தலை நகரம்!

உலகில் உள்ள ஏராளமான நாடுகளில் தூய்மையின் சிகரம் என்று போற்றக் கூடிய நாடு ஏதாவது ஒன்று உண்டா? உண்டு, உணடு.

உலகின் தூய்மைத் தலை நகரம் சிங்கப்பூர் தான்!

பெங் சுயி ஆற்றலை நிரூபிக்க ஏதேனும் ஒரு நாட்டைச் சுட்டிக் காட்ட முடியுமா? முடியும்! சிங்கப்பூரைப் பாருங்கள், அதன் வரலாற்றைப் படியுங்கள், எப்படி பெங் சுயி வழிகளைக் கடைப்பிடித்து உலகின் வளமிக்க நாடாக அது ஆகி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

தென் கிழக்கு ஆசியாவின் வளமிக்க அழகிய நாடாகத் திகழும் சிங்கப்பூர் ஒரு பிரதான தீவையும் சுற்றி சுமார் 63 குட்டித் தீவுகளையும் கொண்ட நாடு. மக்கள் ஜனத்தொகை 59 லட்சம். பரப்பளவு 283 சதுர மைல்.

சிங்கப்பூருக்கு அதன் பெயர் எப்படி வந்தது? மலாய் ஆவணங்களின் படி பலம்பாங் என்ற நகரிலிருந்து வந்த சாங் நில உடாமா என்ற இளவரசன் இந்தத் தீவில் வரும் போது கடற்கரையில் ஒரு உருவத்தைப் பார்த்தான். அது சிங்கம் போல இருந்ததாக அவன் நம்பினான். அதனால் சிங்க புரம் என்று இதை அழைக்க ஆரம்பிக்க பெயர் சிங்க புரம் ஆனது. இதுவே பின்னால் சிங்கப்பூர் ஆகி விட்டது.

பெங் சுயி ஆற்றலை நிரூபிக்கும் நாடு

சிங்கப்பூரின் பிரதமராக முப்பது வருட காலம் இருந்து உலகிலேயே அதிக காலம் பிரதமராக இருந்து சாதனை படைத்தவர் என்ற புகழைப் பெற்றவர் பிரதமர் லீ க்வான் யூ. அவர் பெங் சுயி மீது அபார நம்பிக்கை கொண்டவர். பெங் சுயி என்பது சீன வாஸ்து சாஸ்திரம். (பெங் என்றால் வாயு; சுயி என்றால் நீர்; இதன் அடிப்படையில் அமைந்தது இந்த சாஸ்திரம்)

சிங்கப்பூரில் மாஸ் டிரான்ஸிட் ரெயில் ரோட் சிஸ்டம்ஸ் எனப்படும் ரெயில் பாதை அமைக்கப்படும் போது சிங்கப்பூரின் பொருளாதார வளம் பெரிதும் பாதிக்கப்பட்டது. உடனே பிரதமர் லீ க்வான் யூ பெங் சுயி நிபுணரான ரெவரண்ட் ஹாங் என்பவரை நாடினார். அவர் பெங்சுயி அடையாள சிம்பலான பாகுவா சின்னத்தை சிங்கப்பூரில் வாழும் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும் என்றார். எட்டுப் பக்கம் கொண்ட பாகுவா சின்னத்தை எப்படி அனைவரையும் பயன்படுத்தும்படி சொல்ல முடியும்? பார்த்தார் லீ!

சிங்கப்பூரின் ஒரு டாலர் நாணயத்தில் இதைப் பொறித்தார். நாணயத்தைக் கையில் ஏந்திய மக்களும் அங்கும் இங்கும் சென்று கொண்டே அதைப் பயன்படுத்திக் கொண்டிருக்க, பாகுவாவின் நடமாட்டம் சிங்கப்பூர் முழுவதும் இருக்க ஆரம்பித்தது; சிங்கப்பூர் வளமிக்க நாடாக ஆகி விட்டது.

எட்டுப் பக்கம் கொண்ட பாகுவா மனித வாழ்வின் முக்கிய அம்சங்களான உத்தியோகம், குழந்தை பாக்கியம், அறிவு, உதவும் நண்பர்கள், குடும்பம், செல்வம், புகழ், உறவுகள் ஆகிய அனைத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

இந்த பாகுவாவின் ஆற்றலைத் தான் சிங்கப்பூர் முழுமையாகப் பயன்படுத்தியது. பாகுவாவை அடுத்து சிங்கப்பூர் டாலர் நோட்டில் அதிர்ஷ்ட சின்னமான டிராகனைப் பொறித்து அதை நாடெங்கும் வலம் வரச் செய்தார் லீ. நாடு வளம் கொழித்தது!

பட்ஜெட்டுக்குத் தக பார்க்கலாம்!

சிங்கப்பூரில் மட்டும் பார்க்க வேண்டிய இடங்கள் ஐம்பதுக்கும் மேல் இருக்கும். ஏராளமான மேப்கள், சுற்றுலா விவர அட்டைகள் உள்ளிட்டவை ஆங்காங்கே இலவசமாகக் கிடைக்கும். இவற்றை ஊன்றிப் படித்து நமது நேரத்திற்கும் பட்ஜெட்டிற்கும் தக்கபடி இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டியது தான். தங்குவதற்கு ஏராளமான ஸ்டார் ஹோட்டல்கள் உண்டு.

ஆங்கிலம், சீன மொழியான மாண்டரின், மலாய், தமிழ் ஆகிய நான்கு மொழிகளும் புழக்கத்தில் உள்ளதால் மொழிப் பிரச்சினை இங்கு வருபவர்களுக்கு ஏற்படுவதே இல்லை.

முக்கியமான இடங்களை மட்டும் இப்போது பார்ப்போம்.

சிங்கப்பூர் விலங்கியல் பூங்கா

மிக அருமையான இந்த விலங்கியல் பூங்கா உலகின் அதி சிறந்த மழைக்காடைக் கொண்ட அதிசய பூங்கா. உராங்உடான், வெள்ளைப் புலி, சிறுத்தை என ஏராளமான விலங்குகளை  நேரில் பார்க்கும் போது குழந்தைகளானாலும் சரி பெரியவர்களானாலும் சரி பல்லுயிர் பெருக்கத்தின் மாண்பை உணர முடியும்.

நைட் சஃபாரி, ரிவர் சஃபாரி என அனைத்தையும் அனுபவித்துப் பார்க்கும் போது மனம் மகிழ்ச்சியால் நிரம்பும்.

ஜுராங் பேர்ட் பார்க்

ஆசியாவின் மிகப் பெரிய பறவைகளுக்கான சொர்க்க பூங்கா இது. விலங்கியல் பூங்காவின் அங்கமான இதில் 400 வகையிலான இனத்தைச் சேர்ந்த 5000 பறவைகளை நேரில் பார்த்து மகிழலாம். அது மட்டுமல்ல குழந்தைகள் கூட அழகிய பஞ்சவர்ண கிளியை கையில் ஏந்தி பிடித்துக் கொண்டு போட்டோ எடுத்துக் கொள்ளலாம்.

பறவைகளுக்கோ, விலங்குகளுக்கோ ஆர்வக் கோளாறு காரணமாக நாமாக எதையும் உணவாக அளித்து விடக் கூடாது.

இங்கு நீர்வீழ்ச்சி, டிராம் ரைட் ஆகியவையும் உண்டு. அத்துடன் நம்ப முடியாத அளவு நம்மை பிரமிக்க வைக்கும் பல்வேறு ஷோக்களும் உண்டு. ராக்ஷஸ பருந்தைக் கையில் ஏந்திக் காண்பித்து நமக்கு பிரமிப்பை ஊட்டுவார்கள்.

இதில் எப்படி செல்ல வேண்டும் என்பதற்கான ரூட் மேப்பும் உண்டு. முதலிலேயே வாங்கிக் கொள்ள வேண்டும்.

சிங்கப்பூர் ஃப்ளையர்

சிங்கப்பூரை ஒரே பார்வையில் பார்க்க வேண்டுமா? இந்த ராட்சஸ ராட்டினத்தில் ஏறி உயரத்திற்குச் செல்ல வேண்டியது தான். 165 மீட்டர் உயரத்திற்குச் செல்லும் இது. 150 மீட்டர் குறுக்களவு கொண்ட  இதில் 28 குளிர் சாதனப் பெட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 28 பயணிகள் ஏறி அமர்ந்து கொள்ளலாம். 30 நிமிடத்தில் ஒரு சுற்று சுற்றும் ராட்டினம் இது.

சென்டோசா ஐலேண்ட் (Senrosa Island)

சிங்கப்பூருக்குச் சென்றேன் என்று சொன்னவுடன் சென்டோசா ஐலேண்ட் சென்றீர்களா என்று தான் அனைவரும் கேட்பார்கள்.

இது ஒரு அற்புதமான கேளிக்கைத் தீவு. இங்குள்ள கடற்கரை செயற்கையானது. ஏராளமான கேளிக்கை நிகழ்ச்சிகள் கொண்ட இதற்கான வரைபடம், நிகழ்ச்சிப் பட்டியல் ஆகியவற்றை முதலில் வாங்கிக்கொள்ள வேண்டும்.

சுமார் 347 அடி உயரத்தில் கேபிள் காரில் வானில் செல்லும் அனுபவம் ஒரு வாழ்நாள் அனுபவமாகும். ஆங்காங்கே ஸ்டேஷன்களும் வானில் உண்டு. அவற்றில் இறங்கி இயற்கையை ரசித்து அடுத்த கேபிள் கார் வரும் போது அதில் ஏறிக் கொள்ளலாம்.

இங்குள்ள அக்வேரியம் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒன்று.

அமெரிக்காவிற்கோ அல்லது ஜப்பானுக்கோ செல்ல முடியாதவர்கள் இங்குள்ள யுனிவர்ஸல் ஸ்டுடியோவிற்குச் சென்று மகிழலாம்.

இங்கு சுற்றிப் பார்க்க என்றே தனி பஸ் உண்டு.

விங்ஸ் ஆப் டைம், செந்தோசா மெர்லயன், ட்ரிக் ஐ மியூஸியம், ஃப்ளை சிங்கப்பூர் என்று இப்படி ஏராளமான அனுபவித்து மகிழ வேண்டிய நிகழ்வுகள் அனைத்து வயதினருக்கும் பொதுவானது.

நேஷனல் காலரி

தென்கிழக்கு ஆசியாவின் பாரம்பரிய கலைச் செல்வங்களைக் கொண்டுள்ள இந்தக் காலரியில் இரு பகுதிகள் உள்ளன. கலைப் பிரியர் என்றால் இங்குள்ள 9000 கலைச் செல்வங்களைக் கண்டு மகிழலாம்.

ஜ்வெல் சாங்கி விமான நிலையம்

உலகின் தலை சிறந்த விமான நிலையம் எது என்ற கேள்விக்கு பதில் : இந்த விமான நிலையம் தான். 10 மாடி அடுக்குக் கட்டிடம் உயரம் கொண்ட இதில் 300 கடைகள் உள்ளன. கட்டிடத்தின் உள்ளே நீர்வீழ்ச்சி இருக்க சுற்றிலும் 2000 மரங்கள் உள்ளன. இரு திரையரங்குகள் உள்ளிட்ட இதை நேரம் இருப்பின் பார்ப்பது அவசியமே.

மரீனா பே ஸேண்ட்ஸ் (Marina Bay Sands)

55 அடுக்குமாடி கட்டிடத்தில் தங்க வசதியான அறைகளைக் கொண்ட புகழ் பெற்ற ஹோட்டலைக் கொண்ட இப்பகுயில் நுழைந்து இங்குள்ள ஸ்கைபார்க்கைப் பார்க்க நுழைவுக் கட்டணம் உண்டு.

இங்குள்ள இன்ஃபினிடி ஸ்விம்மிங் பூல் மிகவும் புகழ் பெற்ற நீச்சல் குளம். ஒவ்வொரு விநாடியும் இங்கு ஆயிரக்கணக்கான போட்டோக்கள் எடுக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் போட்டோக்கள் என்ற கணக்கில் எடுக்கப்படும் போட்டோக்களில் உங்கள் கணக்குக்கு முடிந்த அளவில் எடுத்துக் கொண்டு மகிழலாம்.

வளைந்திருக்கும் இந்த கட்டிட அமைப்பு கட்டுமானப் பணியில் எஞ்ஜினியர்களுக்கான ஒரு சவாலாக அமைந்திருந்தது. இந்த சொகுசு ஹோட்டலில் ரூம் கிடைத்தால் அது அதிர்ஷ்டம் தான்!

இந்தப் பகுதியில் உள்ளது பே கார்டன்ஸ் எனும் தோட்டம்.  சுற்றுப்புறச் சூழலைக் காக்கும் பசுமைப் பகுதியான இதன் வடிவமைப்பு பார்க்கப் பார்க்க பிரமிப்பை ஊட்டும்.

ஹெலிக்ஸ் ப்ரிட்ஜ்

மரீனா பே பகுதியில் மரபணு வடிவமைப்பில் வளைந்திருக்கும் இந்த நடைமேடை பாலம் அனைவரின் கவனத்தையும் சிங்கப்பூரில் ஈர்க்கும் ஒன்று. 280 மீட்டர் நீளம் கொண்ட வளைவான பால அமைப்பு நவீன கட்டிட அதிசயங்களுள் ஒன்று.

சைனா டவுன்

சைனாவிற்குப் போக முடியவில்லையே என யாரும் வருத்தப்பட முடியாத அளவில் உள்ள சைனா டவுன் நிச்சயம் பார்க்க வேண்டிய ஒரு இடம். சீன பண்பாட்டு மையம் இங்கு உள்ளது.

புத்தா டூத் ரெலிக் டெம்பிள் மற்றும் புத்த பண்பாட்டு கண்காட்சியகமும் இங்கு உள்ளது. புத்த மதத்தின் பல்வேறு பரிமாணங்களை இங்கு தரிசித்து மகிழலாம். இதே பகுதியில் மாரியம்மன் கோவிலும் உள்ளது.

லிட்டில் இந்தியா

லிட்டில் இந்தியா என்பது பழைய இந்திய பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு இடம். இங்கு அமைந்துள்ள பெட்டிக் கடைகள் போன்ற அமைப்பில் தேவையான பொருள்களை வாங்கிக் கொள்ளலாம். சுமார் நான்கு அடி அகலம் கொண்ட நடைபாதையில் ஒரு குப்பையையும் பார்க்க முடியாது. அதிசயம், ஆனால் உண்மை. அப்படி ஒரு சுத்தம்.

இப்படி சுத்தமாக ஒவ்வொரு சிறு பகுதியும் பெங்சுயி மற்றும் ஹிந்து வாஸ்து சாஸ்திரப் படி இருப்பதால் தான் சிங்கப்பூர் வளம் கொழிக்கும் நாடாக இலங்குகிறது.

சூயிங் கம் சிங்கப்பூரில் (நினைத்த இடத்தில் துப்ப முடியாதபடி) தடை செய்யப்பட்டிருக்கிறது. மருத்துவ பரிந்துரை இருந்தால் மட்டுமே இதை வாயில் போட்டு மெல்ல முடியும்.

முஸ்தபா ஷாப்பிங் செண்டர்

லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள முஸ்தபா செண்டர் என்பது மிகப் பெரிய நீளமான கடை. 24 மணி நேரமும் இயங்கும் இதனுள்ளே சென்றால் எதையாவது வாங்காமல் திரும்ப முடியாது. ஏனெனில் இங்கு சுமார் மூன்று லட்சம் விதவிதமான பொருள்கள் விற்கப்படுகின்றன. என் பங்கிற்கு நான் இங்கு வாங்கிய பேனாக்கள் உள்ளிட்ட இதர பொருள்கள் இன்னும் உழைக்கின்றன!

எடுத்துக்காட்டு நகரம்!

சுத்தமான உள்ளத்துடன் சிங்கப்பூர் மக்கள் ஒரே குரலில் பேசுகின்றனர். வருவோரை உபசரித்து மகிழ்கின்றனர்; மகிழ்விக்கின்றனர்.

சிங்கப்பூரைப் பற்றி ஒரே ஒரு வரியில் சொல்ல முடியுமா என்றால் பதில் இது தான்.

உலகின் அழகிய நகரங்களுக்கு எடுத்துக்காட்டு நகரமாக அமைவது சிங்கார சிங்கப்பூர்!

***

tags-  சிங்கப்பூர்

SIXTEEN PLACES WHERE PARSIS LIVED BEFORE GOING TO IRAN -2 (Post No.10,908)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,908

Date uploaded in London – –    29 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

SIXTEEN PLACES WHERE PARSIS LIVED BEFORE GOING TO IRAN -2

This is part 2 of yesterday’s article.

The following write up proved that Indra was the first god and Azura Mazda of Parsis came later.

Sapta Sindhu was mentioned in Rig Veda and Zend Avesta as holy land. So Parsis first lived in India before going to Iran.

This also proved Hindus going out and not coming from anywhere else.

All except Hindus say they came from somewhere else.

In his book Vedic Religion and Culture, P L Bhargava writes,

Now it is universally admitted that the language of the Rig Veda reflects an older phase of Indo-Iranian language than the language of the Avesta. The religion of the Rig Veda also shows an older stage. This one example is suffice to demonstrate the greater antiquity of the Rig Vedic religion. The Deva is an Indo European word meaning god in all the other languages of the family; it is certain that it must have borne the same meaning in the earlier stage of the language of the Avesta also. On the other hand the word ‘Ahura’ , the Iranian form of Sanskrit ‘Asura’ is an epithet of the highest god in the Avesta but bears a derogatory meaning in most of the literature in India. Here also the evidence of Avesta shows that at an early stage of Indo Aryan language the word Asura must have borne the same meaning in which it is used in the Avesta.

The earlier stage in the history of the words ‘Deva and Asura’  is reflected in the Rig Veda in the greater part of which  both these words are used in a laudatory sense. It is thus proved beyond doubt that the religion of the Rig Veda is much closer to the religion of the Indo Iranian period than the religion of the Avesta. That being so , on the ground of chronology the greatest god of the Rig Veda rather than of the Avesta is likely to have been the greatest god of the Indo Iranian period.

The mention of Indra as a demon in the Avesta , however, clearly proves that it was his greatest popularity at an early period  which compelled Zoroaster  to take the drastic step of converting a god into a demon, for, thus alone people could be prevailed upon to forsake him. The analogous history of Indra in India fully establishes this conclusion.

Before concluding, we must examine one more point. The first chapter of the Vendidad enumerates sixteen holy lands created by the Ahura Mazda which were later rendered unfit for the residence of men i.e. the ancestors of Iranians on account of different things created there in by Angra Mainyu, the evil spirit of the Avesta. This clearly means the ancestors of the Iranians had lived turn by turn in all these lands before they finally settled in Iran and that is why they regarded them as holy. The first of these lands was of course Airyana vaijo which was abandoned by the ancestors of the Iranians because of severe winter and snow ; of the other lands one was H(S)apta Sindhu, the land of seven rivers.

Excessive heat created in this area by Angra Mainyu was, according to the Vendidad, the reason why the ancestors of the Iranians left this country. Now it is known to every student of the Rigveda the land in which the hymns of this work were composed were known as Sapta Sindhu. The Hapta Sindhu can be identified only with the Sapta Sindhu of the Rigveda. This leads to the inevitable conclusion that the period of the composition of earlier hymns of the stage of Rigveda was itself the Indo Iranian period when the ancestors of Indians and Iranians lived together before their final separation; those who do not agree with this must point out another country with seven rivers and excessive heat with which the Hapta Hindu of Vendidad can be identified.

—P L Bhargava

Xxx subham xxx

 Tags- SIXTEEN PLACES ,, PARSIS ,  IRAN , Holy places

அகஸ்தியர் – லோபாமுத்ரா SEXY செக்சி உரையாடல் – 2 (Post No.10,907)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,907

Date uploaded in London – –    29 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

அகஸ்தியர் – லோபாமுத்ரா SEXY செக்சி உரையாடல் – 2

இது இரண்டாம் பகுதி ; நேற்று, முதல் பகுதியில்,  ரிக் வேதத்தின் முதல் மண்டலத்திலுள்ள ஆறு மந்திரங்களைக் கண்டோம். அதில் அகஸ்தியர் பேச்சில் பட்டவர்த்தனமாக SEX செக்ஸ் பற்றிப் பேசியதால் கிரிப்பித் R T GRIFFITH அதை மொழி பெயர்க்க மறுத்தார். லத்தீன் மொழியில் அவர் கொடுத்த அகஸ்தியர் பேச்சின் ஆங்கில வடிவத்தை நான் அளித்தேன். அரைவேக்காடுகளைக் கண்டு வேதம் பயப்படுவதால் அது மர்ம மொழியில் பேசுவது பற்றியும் வேதத்தை விளங்கிக் கொள்ள,  புராண  இதிஹாசங்களைப் பயில வேண்டும் என்று சொல்லும் சம்ஸ்க்ருத ஸ்லோகத்தையும் நேற்று சொன்னேன்.

XXXX

ரிக்வேதம் 1-179

முதல் மந்திரத்தில் லோபா முத்திரை சொன்னாள் —

“சுவாமி! நாதா! எத்தனை காலம் உருண்டோடிப் போய்விட்டது; அல்லும் பகலும் உமக்கு சேவை செய்துவிட்டேன்.இப்போது களைத்தும் இளைத்தும் போய்விட்டேனே . என் மேனி அழகெல்லாம் பாழாய்ப் போய்விட்டதே ; சமுதாயத்தில் தர்மம் என்று ஒன்று உளதே ; பிள்ளை பெறுவதற்காக,  ஒரு பெண், கணவனைக் கட்டிக்கொள்ளலாம் அல்லவா?

XXX

இரண்டாம் மந்திரம்

எல்லா முனிவர்களும் சத்தியத்தையே நாடுகின்றனர்; உண்மையையே விளம்புகின்றனர்; தவம் செய்து, வாழ் க்கையின் இறுதி லட்சியத்தை (மோக்ஷம்) நெருங்குகின்றனர்; ஆகையால் காலத்தை வீணடிக்காமல் கணவனும் மனைவியும் இணைய வேண்டும் அல்லவா ?

XXX

அகஸ்தியர் பதில்- மூன்றாம் மந்திரம்

அன்பே ! ஆருயிரே ! நாங்கள் ஏதோ வெட்டிப் பொழுது போக்க தவம் செய்கிறோம் என்று எண்ணாதே; இதனால் இறைவன் நம்மை எப்போதும் காக்கிறார்; அதுமட்டுமல்ல தவம் மூலம் நமக்கு செல்வம் கிடைக்கிறது;  நூறு போர்கள் வந்தாலும் ஜெயிப்போம்; ஒன்றாகச் செயல்படுவோம்.

XXX

நாலாவது மந்திரம் – அகஸ்தியர் பேசுகிறார்:-

லோபாமுத்ரா! தவம் மட்டுமே செய்துவந்த என் மனதில் இப்போது காமம் நுழைந்துவிட்டது. எங்கிருந்து வந்ததோ எனக்கே தெரியவில்லை ; துடியாய்த் துடித்துக் கொண்டிருந்த லோபாமுத்ரா வீரியம் மிக்க அகஸ்தியர் மீது பாய்ந்தாள் ; கட்டி அணைத்து முத்தம் இட்டு ஆழ்ந்த மூச்சு விட்டாள்.

(இப்படித் திடீரென்று கணவனும் மனைவியும் கட்டிப்புரண்டதை ஒரு சிஷ்யன் பார்த்துவிட்டான்; அவன் அவர்கள் சம்பாஷணையைக் கேட்டுவிட்டதால் எட்டிப் பார்த்தான் ;  உடனே கடவுளிடம் மன்னிப்பும் கேட்டான் )

XXX

ஐந்தாவது மந்திரம் – சீடன் சொன்னது

ஒருவழியாக நான் உண்மையைச் சொல்கிறேன் ; சோமதேவனே ; செய்ததை ஒப்புக்கொள்கிறேன் சோம தேவனே கருணை காட்டு; மனிதனுக்கு எவ்வளவோ ஆசைகள் இருக்கத்தானே செய்யும்?

XXX

ஆறாவது மந்திரம்

(என் குரு ) குழந்தையைப் பெறுவதற்காக பூமியை ஆழமாகத் தோண்டுவது போல வேலை செய்து கொண்டு இருக்கிறார் ; அவர் பலத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறார் போலும்; அவர் கடவுளுக்கும் மனிதனுக்கும்  உணவு அளிக்கும் சக்தி  உடையவர் ; இறைவனின் ஆசி அவருக்குக்

கிடைத்துவிட்டது

இவைதான் ரிக்வேத துதியில் உள்ள ஆறு மந்திரங்கள்; நேற்று நான் எழுதியது GRIFFITH AND WILSON கிரிப்பித், வில்சன் ஆகியோரின் மொழி பெயர்ப்பு. இன்று மேலே தந்திருப்பது அஸ்ஸாம் சம்ஸ்க்ருத அறிஞர் தானேஸ்வர் சர்மாவின் மொழிபெயர்ப்பு.

XXX

இதோ சுவையான மஹாபாரதக் கதை:–

இது 18 பர்வங்களைக் கொண்ட மஹாபாரதத்தில் மூன்றாவது பர்வமான ஆரண்ய/ வன  பர்வத்தில் உள்ளது.

தவம் செய்து, ,பழுத்த பழமாக,ப் போன அகஸ்தியர் ஒருநாள் ஜாலியாக WALKING வாக்கிங் போனார். ஒரு பெரிய பள்ளத்திலிருந்து ஒரே கூச்சல்; எட்டிப் பார்த்தார்; அவருடைய தாத்தா, கொள்ளுத்  தாத்தா,பாட்டன், பூட்டன் எல்லோரும் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தனர்.

அடக்கடவுளே ! உங்களுக்கு  எல்லாம் என்ன ஆயிற்று? என்றார்.

அவர்கள் சொன்னார்கள்; நாங்கள் எல்லோரும் ‘புத்’ (PUTH) என்னும் நரகத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறோம். இதிலிருந்து மீள உமக்கு ஒரு புதல்வன் பிறக்கவேண்டும். அல்லது எங்களுக்கு விடுதலை இல்லை என்றார்கள்.

அகஸ்தியர் உடனே விரைந்தார்; கல்யாணம் கட்ட ஆசை; ஆனால் உலக மஹா அழகி வேண்டும் என்று எதிர்பார்த்தார். இதை உணர்ந்த தேவர்கள், அவருடைய தவத்தை மெச்சி, உலக மஹா அழகி களின் சிறந்த உறுப்புகளை எல்லாம் எடுத்து பூலோகத்துக்கு அனுப்பினார்கள். அவள் விதர்ப்ப நாட்டு மன்னனின் மகளாக லோபா முத்ரா என்னும் பெண் பிள்ளையாகப் பிறந்தார். நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்ந்தாள் ; வளர்ந்தாள் ; அகஸ்தியர் தான்  எதிர்பார்த்த MISS WORLD மிஸ் வோர்ல்ட் விதர்பாவில் இருப்பதை அறிந்து விரைந்தார்.

“மன்னர் மன்னவா ! உமது மகளை எனக்குக் கல்யாணம் செய்து வை என்றார்; இது என்னடா, சோதனை ; உலக மஹா குள்ள முனிவன் வந்து என் மகள் பேரழகி, ராஜ குமாரியைக் கைப்பிடிக்க ஆசைப்படுகிறாரே ; என்ன செய்வது என்று கையைப் பிசைந்து கொண்டு நின்றார். அந்தக் காலத்தில் சாமியார்கள் தாம் செய்த தவ வலிமையால்  சேமித்து வைத்த விந்துவை (SPERM) வீணடிக்காமல் யாராவது ஒருவருக்குக் கொடுத்து பிள்ளையை உண்டாக்குவார்கள் ; இந்த செயற்கை முறை TEST TUBE BABY டெஸ்ட் ட்யூப் பேபி பற்றிச் சொன்னால், பாமர மக்களுக்குப் புரியாது என்பதற்காக “இலையில் விந்து விழுந்தது; அது கர்ப்பமாயிற்று —என்றெல்லாம்” மறைமுக மொழியில் கதைப்பார்கள்; உண்மை என்ன வென்றால் அவர்கள் SEX செக்ஸ் இன்பத்துக்காக ஒரு பெண்ணை அணுகவில்லை ; அதி சக்தி வாய்ந்த விந்து SPERM வீணாக்கக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்வார்கள்; இதை காளிதாசனும் உறுதி செய்கிறான் ரகு வம்ச அரசர்களின் சிறப்புகள் என்ன என்ன என்று வரிசையாகப் பட்டியல் இடுகையில் செக்ஸுக்காக இல்லாமல் வம்ச விருத்திக்காக, குலக்கொடி தழைப்பதற்காக, பிள்ளை பெறுவோர் ராமனின் முன்னோர் (ரகுவம்சம்) என்று பாடுகிறார். பிள்ளை பெற்றால்தான் விடுதலை என்பதை மனுவும் விளக்குகிறார். “புத்” என்னும் நரகத்தில் விழாமல் “த்ர” = காப்பாற்றுவதால் ஆண்பிள்ளைக்கு “புத்ர” என்று பெயர் வந்தது  என்கிறார் மநு . இது புறநானூற்றிலும் உளது.

கோப்பெருஞ் சோழன் வட திசை நோக்கி அமர்ந்து   சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து செத்தார்; அப்போது பொத்தியார் என்ற புலவர் வந்து நானும் உண்ணா விரதப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்றார் .

“சீ, சீ; வீட்டுக்குப் போ; இப்பதான் கல்யாணம் கட்டின; பிள்ளை பெறாமல் சாகக் கூடாது ; “புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா|” என்று பொத்தியாரைத் திருப்பி அனுப்புகிறான் சோழ மன்னன் (காண்க புறம் 222)

புத்ர= புதல்வ என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லை சோழன் பயன்படுத்தியது அகஸ்தியர் கதையை உறுதி செய்கிறது

xxx

அகஸ்த்யர் கதைக்குத் திரும்பி வருவோம்

உலக மஹா அழகியை உலக மஹா குட்டையன் SHORTEST MAN விரும்பிய செய்தி விதர்ப்ப நாட்டு ராணியின் காதில் விழுந்தது; அவளும் திகைத்தாள்; முனிவரின் சாபம் வந்தால் குலம் வேரறுந்து போகும். முனிவரிடம் அழகியை ஒப்படைத்தாலோ நல்ல பிள்ளை கிடைக்கும் ; அம்மாவும் அப்பாவும் தவியாய்த் தவிப்பதை பார்த்தாள் பொன்னழகி, பெண்ணரசி லோபா.

((எனக்கு அமெரிக்க மாப்பிள்ளை வேண்டும் அவன் அமிதாப் பச்சன் போல இருக்கவும் வேண்டும்; அம்பானி , அதானி போல பணமும் இருக்கனும்; என்னை சமைக்கவும் சொல்லக்கூடாது; சரவண பவன் சாப்பாடு  தினமும் வேண்டும்; வார இறுதியில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலை விடுதிகளில் பிரண்ட்ஸ் FRIENDSகளுடன் ஜாலியாக இருந்துட்டு வருவேன்; முகம் சுழிக்கக் கூடாது; ஏதோ ஒரு நாள் வேணா. படுக்கை அறைக்குள். வரலாம்; மத்த நாள் எல்லாம் எனக்குத் ‘தலை வலி’ன்னு சொல்லுவேன்; புரிஞ்ச்சுக்கிட்டு படுக்கை அறைக்குள் வராமல் நீங்க தனியா ப்படுங்க; மேலும் உங்க அம்மா அப்பாவ கூட்டி வச்சு EXTRA LUGGAGE எக்ஸ்டரா லக்கேஜ் ஏற்றக்கூடாது – என்றெல்லாம் கண்டிஷன் போடாம))

, லோபா முத்ரா சொன்னாள் :- அம்மா ஒரு கவலையும் படாதே ; நான் அகஸ்தியரைக் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றாள்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நின்று போன மூச்சு திரும்பி வந்தது ; கல்யாண மேளம் கொட்டியது டும்……. டும் ……

இதெல்லாம் ரிக் வேதத்தில் இல்லை மஹாபாரத வன பர்வத்தில் வருகிறது

இன்னொரு விஷயமும் மஹாபாரத வன பர்வத்தில் வருகிறது

மிஸ் லோபா சொல்கிறாள்

“அன்பரே! விரைந்து படுக்கை அறைக்குள் வாரும் ; மாதவிலக்கு முடிந்து சில நாட்கள் ஆகிவிட்டன. சீக்கிரம், சீக்கிரம் ; பிள்ளை பெற அருமையான சந்தர்ப்பம்.

பிள்ளை பெற , லோபா அழைத்தவுடன் எனக்கும் கூட ஒரு மாதிரி பீலிங் FEELING வந்துவிட்டது என்று நுழைந்து இருவரும் கட்டி அணைத்து முத்தமிட்டதை ரிக் வேதத்தில் கண்டோம். ஆனால் மஹாபாரதம் வேறு ஒரு கதையை நுழைக்கிறது.

அது என்ன கதை? எல்லா பெண்களையும் போல, மிஸ் லோபாவும் ஒரு கண்டிஷன் CONDITION போடறாள் :–

மண மகனே! மண மகனே ! வா வா

உன்  வலது காலை எடுத்து வைத்து  வா வா

வைர நெக்லஸ், வைரத் தோட்டுடன் உள்ளே வா வா

பெரிய ஆசையுடன் காத்திருந்த அகஸ்தியருக்கு பெரிய ‘ஷாக்.’ SHOCK!!

WHAT வாட், வாட் வாட் வாட் WHAT DID YOU SAY டிட் யூ சே? என்று பதறினார்.

லோபா சொன்னாள் :- ஐயா நான் விதர்ப்ப நாட்டு ராஜ குமாரி. தங்கக் கட்டிலில் படுத்து உறங்கிய என்னை மணம் முடித்தீர். என் அம்மா, அப்பாவுக்கும் விதர்ப்ப நாட்டுக்கும் தீங்கு வரக்கூடாது என்று நான் உம்மை மணக்க முடிவு செய்தேன்

சும்மா  இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்  ஆண்டி என்பது போல எனக்கு ஒரு CONDITION கண்டிஷன் போட்டீர் ; எனது காஞ்சீபுரம் பட்டுப்புடவை , தங்கக் காசுமாலை, வைர அட்டிகை, மரகத மூக்குத்தி, மாணிக்க ஒட்டியாணம், முத்துச் சலங்கை எல்லாவற்றையும் அம்மாகிட்ட கொடுத்துட்டு முனிவர் மனைவி போல தழை உடையும் மான் தோலும் அணிய வேண்டும் என்று கண்டிஷன் போட்டீர்கள்.

நானும் செவிமடுத்தேன்; செயலாற்றினேன் ; இப்போது என் கண்டிஷன் இதோ!!  நான் ராஜ குமாரியாக இருந்த காலத்தில் அணிந்த நகைகளுடன் வருக. என்னை அலங்கரித்து அனுபவிக்க!!! என்று போட்டாளே ஒரு போடு.

இது மஹாபாரத வன பர்வத்தில் உள்ளது. அகஸ்தியர் சத்ய சீலன்; தனக்கொரு நீதி மனைவிக்கு வேறு ஒரு நீதி என்று கருதாததால் ‘சரி, அம்மா; அப்படியே செய்கிறேன்’ என்று புறப்பட்டார்.

ரிக் வேத ஆறு மந்திரத்தில் ஒரு மந்திரம் ‘’தவ சக்தியால் செல்வம் கிடைக்கும்’ என்று கூறியது; அதைக் கூறிய அகஸ்தியருக்கு செல்வத்தைச் சேர்க்க முடியும் என்று நம்பிக்கை இருந்தது.

லோபா டார்லிங், ஸீ யூ  ஸூன் LOBA DARLING ! C U SOON என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

இதற்குப் பின்னர் மஹாபாரதம் இன்னும் சுவையான விஷயங்களைச் சொல்கிறது . அது என்ன கதை?

தொடரும் ……………………………….

TAGS–  மஹாபாரதம், லோபா முத்ரா, அகஸ்தியர், SEXY,  செக்சி உரையாடல் 2 , RV  HYMN 1-179

பெரியவா புளுகினா, பேப்பர்ல போடுவா! சின்னவா புளுகினா….. (Post.10,906)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,906

Date uploaded in London – –   29 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

கடி ஜோக்ஸ்:ஞான மொழிகள் – 44

Compiled by Kattukutty

கடி ஜோக்ஸ்

1 ஒருத்தன் ஆப்பத்தை சாப்பிடும்போது காதை மூடிக்கொண்டு

சாப்பிட வேண்டும். ஏன்????

2.ஒருத்தன ஓட்டலுக்கு போய் தோசை இட்லி order பண்ணினான்.

ஆன்னா எதுவுமே சூடா இல்லை. …..ஏன்???

3.ஒருத்தன் கேக்கை order பண்ண பேக்கரிக்கு போனானா, அங்கே

அவன் கிட்ட பாஸ் போர்ட் கேட்டாங்களாம்….ஏன்???

4.ஒரு school ல்லே நாளைக்கு exam ம்ன்னு சொன்னாங்களாம்.

ஆனா எல்லோரும் uniform க்கு பதில் கலர் டிரஸ் போட்டுட்டு

வந்தாங்களாம்…..ஏன்???

5.ஒருத்தன் கடைலேர்ந்து காய்கறி வாங்கிட்டு வந்து கீழ் எடுத்து வச்சி

கிச்சு, கிச்சு மூட்டினானாம்……..ஏன்???

6.ஒரு கொத்தனார் இட்லியால வீடு கட்டினானாம்……ஏன்???

7.ஒருத்தன் நகை கடைக்கு போய் மோதிரத்தை வாங்கி கால்லே

போட்டுக்கிட்டானாம்……ஏன்.???

8.ஒருத்தன் பக்கெட்ல தண்ணி புடிச்சானாம், ஆனா பக்கெட்

நிறையவே இல்லையாம் …… ஏன்???

9.103 க்கும் 105 க்கும் நடுவுல என்ன இருக்கு……???

(விடை. 104 இல்லை. )

10.ஆசிரியர் உன் பேரு என்னன்னு கேட்டாரு, அதுக்கு பையன் பசுவுக்கு உடம்பு

சரியில்லைன்னு சொன்னானாம்…..ஏன்???

‘திங்க்’ பண்ணி பாத்தீங்களா??? 

xxxxx

இதோ விடைகள்

1.ஏன்னா அது இடியாப்பம்!!!

2.அந்த ஓட்டல் பெயர் ஆரிய பவன்

3.ஏன்னா அது ப்ளேன் கேக்காம்

4.ஏன்னா அது model exam மாம்!!!

5.ஏன்னா காய்கறி அழாம இருக்கணுமாம்

6.ஏன்னா இட்லி கல்லு மாதிரி இருந்துச்சாம்……

7.ஏன்னா அது கால் பவுன் மோதிரமாம்….

8.ஏன்னா அவன் பக்கெட்ட கவுத்து வச்சு புடிச்சானாம்

  • ‘0’ தான் இருக்கும்!!!

10.ஏன்னா அவன் பெயர் ‘கெள’ சிக் ஆம்!!!

xxxxxx

பிரியாணியும் வாழ்க்கை மாதிரிதாங்க ……..

‘பீஸ்’ புல்லா இருந்தாதான் நல்லா இருக்கும்

படித்தால்தான் வேலை, கை நிறைய சம்பளம்,

என்று சொல்லித் தரும் சமூகம், விதைத்தால் தான்

சோறு என்று சொல்லித் தர மறந்து விட்டது……!

Xxx

ஏங்க ‘புக்’ பண்ணிடவா?

என்னத்தே?

அதாங்க ஆன்லைன்ல, ஒருசதுர அடிக்கு 5 ரூபாய்

வீதம் புக் பண்ணினா, விடியக்காலை 5 மணிக்கெல்லாம்

வாசல் தெளிச்சு, மார்கழி மாத கோலம் போட்டுட்டு போய்டுவாங்களாம்

xxxxxx

ஞான மொழிகள் – 43

Kathukutty

பெரியவா புளுகினா

பேப்பர்ல போடுவா……

சின்னவா புளுகினா

சிறையிலே தள்ளுவா……

xxx

சிந்திப்பதானால் அமைதியாக சிந்திக்கவும்,

செயல்படுவதானால் உறுதியாக செயல்படவும்,

விட்டுக் கொடுப்பதனால், பெருந்தன்மையோடு

விட்டுக் கொடுக்கவும்.

Xxxx

காகம் தலையில் எச்சம் இட்டதற்காக

எரிச்சல் அடையாதீர்கள்.

எருமைக்கு பறக்கும் சக்தியை

கொடுக்காத கடவுளுக்கு நன்றி

சொல்லுங்கள்!!!

இப்படித்தான் வாழ்க்கையை பாஸிடிவா

எடுத்துக்கணும்.

xxxx

ஒருத்தன் தன்னை அடிக்க வந்தானே

என்று வருத்தப்படுவதை விட்டு

அடிக்காமல்விட்டானே என்று

சந்தோஷப்படவேண்டும்.

இதுதான்டா வாழ்க்கை !!!

xxxx

வாழ்க்கையில் யாரிடமும் விவாதம் செய்யாதீர்கள்……

அதில் நீங்கள் தோற்றால் ஒரு நண்பனை இழப்பீர்கள்.

ஜெயித்தால் ஒரு எதிரியை பெறுவீர்கள்.

Xxx

ஏன்டா உன்ன பிரின்ஸ்பால் திட்றாரு??

அவரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல போடச்சொன்னாரு

நான் பிரின்ஸ்பால் நாயைக் காணோம்ன்னு

நியூஸ் கொடுத்துட்டேன்???

Xxxx

புருஷன் மனைவியிடம்

அம்மா அப்பாதான் எங்களுக்கு முதல்ல சாமி,

அப்புறம் தான் நீயெல்லாம்…….

மனைவி

அப்டீன்னா அந்த சாமியையே விட்டுட்டு

உங்கள நம்பி வரோமே நாங்க யாரு???

xxxx

CLASS TEST

question – ‘star mark’ (*) the SMALLEST numbers.

1 *39, 42, 67. Wrong

2 *17, 71,17. Wrong. Mark – 0/3

3 *90, 60, 86. Wrong

அப்பா பையனிடம் – மகனே revaluation க்கு அனுப்பு.

கொய்யால, யார் தப்புன்னு பாத்துடுவோம்

Xxxxxx  subham  xxxxx

tags–  ஞான மொழிகள் – 43, ஞான மொழிகள் – 44

CONTROL YOUR ANGER, BECAUSE ……… DR ABDUL KALAM (Post No.10,905)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,905

Date uploaded in London – –   29 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

A satisfied life better than a successful life,

Because our success is measured by others

But our satisfaction is measured by our

Own soul, mind and heart!!!

xxx

Relations are sweeter than honey, and greater than

Money, smoother than silk, whiter than milk,

Higher than any tower, and stronger than

Any power, so maintain it !!!

xxxx

The sea is same for all,

Some find pearls,

Some find fishes, some find

their feet get wet.

LIFE is common for all

But we can get what we try for!!!

xxx

The most difficult task to make everyone happy,

The simplest task is to be happy with every one!!!

xxx

A meaningful silence is better

than meaningless words !!!

xxx

Life is like a chemistry

Precipitate your sorrows,

Filter your worries,

Evaporate your glooms and

Get crystals of your joy!!!

xxx

Never wait for perfect moment;

Just take moment, and make it perfect!!!

xxx

The past is in your head,

The future is in your hand!

Xxx

I was in the gathering of Gita lectures.

One of the audiences said I have been following

Gita for the past 35 years!!!

Audience applauded!!!

Finally, he said Gita is my wife!!!

xxxx

CONTROL YOUR ‘’ANGER”

Because it is just one letter away from

“D”ANGER.

DR ABDUL KALAM

xxx

Knowledge decides what to say,

Skill decides how to say,

Attitude decides how much to say,

And

WISDOM decides whether say or not!!!

Xxxx

Why do couples fight?

when i got home last night my wife demanded that

i take her to some place expensive.

I took her to petrol station and the fight started!!!!

xxx

It is important to go to HEAVEN after we leave.

But it is important to create HEAVEN in someone’s heart

Before we leave!!!

xxxx

Every test in our life makes us bitter or better,

Every problem comes to break us or make us.

The choice is ours whether we become

VICTIM or VICTOR.

xxx

Make a mind which never minds,

Make a heart which never hurts,

Make a touch which never pains,

And

Make relations which never ends!!!

xxx

Your cell phone has already replaced

Your watch camera, calendar,and

Alarm clock……..

Dont let it replace your family!

xxx

BANDARA TIMES

ONLY 20 PEOPLE CAN ATTEND A FUNERAL BECAUSE

THE SPIRIT HAS LEFT THE BODY.

BUT 2000 PEOPLE CAN STAND AT THE LIQUOR SHOP

FOR THE SPIRIT TO ENTER INTO THE BODY!!!

xxx

Money is a small coin,

Health is a big coin,

Love is a lucky coin,

Relationship is a sweet coin,

And

Friendship is a gold coin!

***

Tags – Anger, Abdul Kalam,  Wife name, Gita, Friendship,Mind

யோக வாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய ரகசியங்கள்! (Post No.10,904)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 10,904

Date uploaded in London – –     29 APRIL   2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

யோக வாசிஷ்டம் கூறும் மனம் பற்றிய ரகசியங்கள்!

ச.நாகராஜன்

உலகின் எந்த நூலும் தராத  மனம் பற்றிய அதிசயமான ரகசியங்களை  யோக வாசிஷ்டம் தருகிறது

எப்படி ஒரு நடிகன் வெவ்வேறு பாத்திரங்களாக ஆகிறானோ அதே போல மனமும் வெவ்வேறு வேலைகளைச் செய்கிறது; வெவ்வேறு பெயர்களைப் பெறுகிறது.

விதவிதமான கடமைகளை ஒரு மனிதன் செய்யும் போது எப்படி வெவ்வேறு பெயர்களை எடுத்துச் செய்கிறானோ அதே போல மனமும் அதன் வெவ்வேறு செயல்பாடுகளால் வெவ்வேறு பெயர்களைக் கொள்கிறது.

ஒரு மனிதன் எப்படி குளித்தல், கொடுத்தல், வாங்குதல் போன்ற பல்வேறு வேலைகளைச் செய்கிறானோ அதே போல மனமும் வெவ்வேறு விதமான குணாதிசயங்களைக் கொண்டு செயல்படுகிறது.

வெவ்வேறு வேலைகளினால் வெவ்வேறு பெயர்களுடன் காரியகர்த்தாவாக வேலைகளைச் செய்ய வேண்டியதாகி இருக்கிறது. அப்படி அந்த வேலைகளைச் செய்யும் போது மனமானது ஜீவன் (தனிப்பட்ட பிரக்ஞை), ஆசை, செயல் என்ற பல பெயர்களால் விவரிக்கப்படுகிறது.

மனதிற்கான வெவ்வேறு பெயர்களை யோகவாசிஷ்டம் இப்படித் தருகிறது.

  1. மனம் : முழு பிரக்ஞையுடன் இருப்பது.
  2. புத்தி: ஒரு கருத்தை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் முடிவைப் பெறுவதால் இது புத்தி எனப்படுகிறது.
  3. அஹங்காரம் : “நான்” என்ற ஒரு எண்ணம் உள்ளே இருப்பதால் இது அஹங்காரம் எனப்படுகிறது.
  4. சித்தம் : (எண்ணம்) ஆராய்வதை விட்டு விட்டு ஒரு குழந்தை போல இருக்கும் போது இது சித்தம் எனப்படுகிறது.
  5. கர்ம : (செயல்) : ஒரு இயக்கமும் அந்த இயக்கத்தின் விளைவும் காரணமாக ஆகி செயல்படுவதால் இது கர்ம எனப்படுகிறது.
  6. கல்பனா : காகதாலீய நியாயம் என்று ஒன்று உண்டு.காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தாற் போல என்று சொல்லுவோம்.  தானாகவே ஒன்றைக் கற்பனை செய்து கொள்வதால் இது கல்பனா என்ற பெயரைப் பெறுகிறது.
  7. ஸ்மிருதி (நினைவாற்றல்) ஒரு செயலை முன்னமே செய்தது போல காணும் போது அது ஸ்மிருதி எனப்படுகிறது.
  8. வாஸனா : (ஆசை அல்லது மனப்பதிவு) ஒரு ஆசை அல்லது மனப்பதிவு நுட்பமான ஒன்றாக அது மறைந்த போதிலும் மனப்பதிவாக இருக்கிறது. வார்த்தைகள் அவற்றின் அர்த்தம் அதன் சக்தி ஆகியவை எப்படி நுட்பமாக ஆகாயத்தில் கலந்து இருக்கிறதோ, மற்ற செயல்பாடுகள் இல்லாமல் போகிறதோ, அப்போது அது ஆசை எனப்படுகிறது.
  9. அவித்யா : (அறியாமை) ஆத்மனின் இயல்பான இயற்கை சுத்தமானது. இதை அறியாமல் இருக்கும் இன்னொரு நிலை தான் அவித்யா
  10.  மலம் : (அசுத்தம்) ஆத்மனை அழிக்கும் ஒன்றாக அமைவதே மலம். தனது இயல்பான சுயத் தன்மையை மறக்கடிப்பதே மலம்.
  11. மாயா (மாயை) என்றுமுள்ள சத்தை அசத்தாயும், அழியா ஆத்மனை அழியும் ஜீவனாகவும் காண்பிப்பதால் இது மாயா எனப்படுகிறது.
  12. ப்ரக்ருதி (இயற்கை) : பார்ப்பதை எல்லாம் ப்ரக்ருதத்வமாகக் காண்பிப்பதால் இது இயற்கை எனப்படும் ப்ரக்ருதி எனப்படுகிறது.
  13. ப்ரஹ்மோத்யாதி (ப்ரஹ்மா இத்யாதி) நுட்பமான எண்ண வடிவில் இருக்கும் உடலானதாக அமைவதால்  ப்ரஹ்மா எனப்படுகிறது.
  14. ஜீவ: (ஜீவன்) ஜீவனாக இலங்குவதால் இது (தனிப்பட்ட ஆத்மா) ஜீவன் எனப்படுகிறது.
  15. ஆதிவாஹிகதேஹ: ( நுட்பமான எண்ண வடிவிலான சரீரம்) இந்த மனோமயமான எண்ணம் ஒரு ஆரம்பத்தையும் முடிவையும் கொண்டது. உருவமில்லாதது. ஒரு குறையுமில்லாதது. ஆகவே இது ஆதிவாஹிகதேஹம் எனப்படுகிறது.
  16.  இந்திரியம் : (புலன்கள்) இது ஆன்மாவை ஆளும் இந்திரனை மகிழ்ச்சி கொள்ளச் செய்வதால் இது இந்திரியம் எனப்படுகிறது.
  17. புர்யஷ்டகம் ( எட்டு வித நகரம்) ஐந்து நுட்பமான பூதங்கள் (பஞ்ச பூதங்கள்) ஓசை, தொடுதல், வடிவம் , சுவை, வாசனை ஆகியவற்றை மனம், புத்தி, அஹங்காரம் ஆகியவற்றுடன் சேர்ந்து எண்ணங்களின் சேர்க்கையாக இருப்பதால் இது புர்யாஷ்டகம் எனப்படுகிறது.
  18. தேஹபதார்த்தி : இது உடல் என நினைப்பதால் உடலாகிறது. குடம் என நினைப்பதால் அந்தப் பொருளாக ஆகிறது. ஆகவே இது தேஹபதார்த்தி எனப்படுகிறது.
  19. தர்சனானந்தரை சஹ மத பேத: (மற்ற கொள்கைகளுடன்  வேறுபடுதல்)

ஓ! ராமா! அஹங்காரம், மனம், புத்தி என இப்படி என்னால் உரைக்கப்பட்டது அனைத்தும் அவற்றின் இயற்கை குறித்து என்னால் உருவாக்கப்பட்ட வடிவங்களே.  தர்க்கவாதிகளால் இது வேறு வகையாகவும் சொல்லப்படுகிறது. சாங்கிய கொள்கையாளரால் வேறு விதமாகவும் சொல்லப்படுகிறது. சார்வாகர்களால் (நாத்திகவாதிகளால்) இன்னும் வேறு விதமாகச் சொல்லப்படுகிறது.

என்று இப்படி மனம் பற்றிய ரகசியங்களை வசிஷ்ட மஹாமுனிவர் ராமருக்கு எடுத்துக் கூறுகிறார்.

இந்தப் பகுதியை நன்கு ஊன்றிப் படித்து மனதின் பல்வேறு இயல்புகளை அறிந்து கொள்ளலாம்.

***

TAGS– யோக வாசிஷ்டம்,  மனம், ரகசியங்கள்!

SIXTEEN PLACES WHERE PARSIS LIVED BEFORE GOING TO IRAN (Post No.10,903)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,903

Date uploaded in London – –    28 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

Next to Rig Veda, Gathas of Zoroaster is the oldest book in the world. The language of the Gathas comes closer to Sanskrit than any other language. The very word Gatha is Sanskrit for song. It is in Prakrit and Tamil. Gatha travelled from Kanyakumari to Iran. Gatha Sapta Sati, the most famous Prakrit anthology and 30 Kathais of most famous Tamil epic Silappadikaram are known to all scholars.

Zrnd Avesta, Veda of Parsis list 16 places as their home. The sixteen places include the Aryana (Haryana? and Sapta Sindhu (later known as Punjab)

First let us look at the 16 places and then go to the comments:-

Even a cursory glance at the list shows big confusion and chaos; worlds like unknown , uncertain, ‘probabl’y are found in the explanations; and then five or six interpretations for each location; last but not the least it covers a vast area of India, Turkmenistan, Azerbaijan , Iran etc. We know that one cant jump from Punjab to Iran without crossing the lands in between. So it covers Iraq and other countries as well. The reason for these vast area is they spread the religion to all these places. Historically we find evidence as well. But the most important words are Aryan land (first in the list) and Sapta Sindhu (last but one in the list). For some scholars the first one is in Iran. All those scholars who support this believed in Aryans coming from Central Asia into India. Now it is found wrong because of the latest findings on River Sarasvati. The river Sarasvati is also found in other places with S=H. it shows clearly they named Hindu original place names wherever they went. We see it in Canada, USA, Australia, New Zealand, Pacific islands and South Africa. Wherever the white people went and plundered the native population, they named those places with some place names in Europe. So they assumed Indians also did that. I don’t need to give the long list. If you look at the place names in the above mentioned countries you can easily identify them.

The last one in the list of 16, is Rasa. The river Rasa which is found in Rig Veda is not identified. The Zoroastrian tradition talks about Hara mountain. The words in Su’mer’ and Pa’mir’, Kh’me’r (in Cambodia) are nothing but Meru, wherever Hindus went they named the rivers ‘Ganga’ and the mountain ‘Meru’. You can even see Meru in East Africa. You can see Ganga in the thick forests of Congo (Ganga) in central Africa or Me kong (Ma Ganga) of South East Asia. So it is a tradition to name the places of your origin. We find the word ‘Ganga’ in Sri Lankan rivers too.

So the unidentified Rasa river , the identified Sapta Sindhu Rivers, the mountain Hara (Kailash or Su Meru), all these point out to Greater India which included Afghanistan where from Mahabharata princess Gandhari and Ramayana Princess Kaikeyi came and married Hindu epic heroes.

In short, all the 16 places mentioned in the list are in Greater India. The people who believed in Aryan invasion , reversed (Ulta) everything.

 Another evidence comes from Manu Smrti. The oldest parts of Manu smriti belonged to the period when Sarasvati was flowing. One of the punishments mentioned in Manu smriti is to walk against the current of River Sarasvati. And that Manu Smriti also used the words Aryan land which is around Haryana/Aryana of today.

In short, the Parsis or Zoroastrians moved from this area to Iran and named places after their homeland India.

Here is what Manu says about Arya Bhumi

Aaryaavartaa – Manu 2-22/3; 10-34

“From the eastern sea to the western sea , the area  between the two mountains  is what wise men call the Land of the Aryans”.  So according to Manu, it was the vast land between the Vindhyas and Himalayas. During Vedic period there was no civilization in South India.

P L Bhargava gives linguistic evidence as well. We will look at it in the second part:-

Vendidad references[ (from Wikipedia)

The main Avestan text of geographical interest is the first chapter of the Vidēvdād. This consists of a list of sixteen

The list is as follows:

  1. Airyanem Vaēǰah = the homeland of Zoroaster and Zoroastrianism, near the provinces of SogdianaMargianaBactria, etc., listed immediately after it.[2] The historical location of Airyanem Vaejah is still uncertain
  2. Gava = Sogdiana;
  3. Mōuru = Margiana;
  4. Bāxδī = Bactria;
  5. Nisāya = a district between Margiana and Bactria. Most historians believe this location is Nisa modern day south of Turkmenistan.[11] some believe Neyshabur. perhaps Maimana;[12]
  6. Harōiva = AriaHerat;
  7. Vaēkərəta = Gandhāra;[13]
  8. Urvā = the exact location of Urva is unknown, some claim Ghazni;[14] Darmesteter believed it to be Urgench in modern day UzbekistanEdward Granville Browne believed it to be Tus in Khorasan Province of Iran (Vandid, darmesteter Page 68);
  9. Xnənta = la region defined as vəhrkānō.šayana- ”the dwelling place of the Vəhrkāna,” where Marquart placed the Barkánioi of Ctesias,[15] an ethnicon analogous with that of Old Persian Varkāna, the inhabitants of Hyrcania, the present Gorgān or, less probably, Hyrcania;[16]
  10. Haraxᵛaitī = Arachosia;
  11. Haētumant = the region of Helmand River roughly corresponding to the Achaemenian Drangiana (Zranka);[17]
  12. Raγa = or Raga, location is modern day in Rey in Tehran province, to be distinguished, given its position in the list[18] from Median Ragā and probably also from Raγa zaraθuštri- of Yashts 19.18;[19]
  13. Čaxra =locations is still uncertain, but DarmesteterDehkhoda, and Hassan Pirnia believe the location is Shahrud[20] Čarx between Ghaznī and Kabul, in the valley of Lōgar,[21] not Māzandarān, as Christensen thought;
  14. Varəna = most of historian believes location is Gilan.[22] also Bunēr,[23] the Varṇu of the Mahāmāyūrī, the ʿAornos of Alexander the Great, the homeland of FerΘraētaona/Frēdōn/Afrīḏūn;[24]
  15. Hapta Həndu = Sanskrit Sapta Sindhu, the area of Punjab;
  16. Raŋhā = Rasā in Vedic geography, at times mentioned together with Kubhā (Kabul) and Krumu (Kurram),[25] a river situated in a mountainous area, probably connected with the Indus River, not with the Jaxartes or with the Volga.[26]

One of the old, thorny problems in studies on Avestan geography is represented by Airyana Vaēǰah (Pahlavi: Ērānwēz), “the area of the Aryans” and first of the sixteen districts in Vd.

Airyana Vaēǰah onto the traditional one of a center of the world where the Peak of Harā rises. The fact that Airyana Vaēǰah is situated in a mountainous region explains its severe climate (Vd. 1.2.3 This is not surprising if we consider the analogy between the Iranian concept of the peak of Harā with the Indian one of Mount Meru or Sumeru. Peak of Harā (ttaira haraysä) in the Avestan tradition.

Look at the order of 16 places. Westerners say Aryana was in Iran. The last but  one is Sapta Sindhu in Punjab. But the chronology of Vedas and Gathas is in reverse order; that is the Rig Veda of Punjab is very old compared to Gatha language (Avestan); So they moved from Vedic land and lived in isolation in Iran for long and the Avestan language of Gathas was born.

I personally see the same in India. Vedic Hindus moved towards south and Tamil evolved. My research shows that any ancient word can be traced to Tamil or Sanskrit. Some words have missing links. Most of the key words can be traced. I already showed how V changes to P in ancient Tamil and Avestan. Tamil tradition says that Shiva sent Agastya to south to write a grammar for Tamil. Only when there is something in common, a person from Himalayas can write grammar for Tamil. Great poets like Kamban and Bharati mentioned Tamil -Agastya link. Kalidasa was the oldest poet to mention Pandya and Agastya link in Raghu Vamsa. So it is a 2100 year old belief.

P L Bhargava also explains it.

To be continued………………………………….

அகஸ்தியர் – லோபாமுத்ரா Sexy செக்சி உரையாடல் -1 (Post No.10, 902)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 10,902

Date uploaded in London – –    28 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

ரிக் வேதத்தில் எட்டே இடங்களில் மட்டும் ‘அகஸ்த்ய’ என்ற பெயர் வருகிறது. அவர் இயற்றிய அல்லது அவரால் காணப்பட்ட துதிகள் ரிக் வேதத்தின் முதல் மண் டலத்தில் உள்ளன. அங்கு அவருடைய துதிகள் என்ற கணக்கில் 27 துதிகள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டுள்ளன. ( 1-165 முதல் 191 வரை).

அகஸ்தியரின் மனைவி பெயர் லோபாமுத்ரா; பேரழகி; பெரிய பணக்காரி; விதர்ப்ப நாட்டு ராஜகுமாரி. அகஸ்தியரோ உலக மஹா குள்ளன்; உலகிலேயே குட்டையான ஆள் என்ற பெயரில் ‘கின்னஸ் சாதனை’ புஸ்தகத்தில் பெயர் ஏற்றிவிடலாம் அவ்வளவு குள்ளம். அவர் ஆணழகனும் இல்லை.  இந்த சூழ்நிலையில் அவருடைய துதிகளில் ஒன்று மிகவும் பிரபலம் அடைந்து விட்டது அது ரிக்வேதத்தின் 1-179 ஆகும். அதில் ஆறு மந்திரங்கள் தான் உள்ளன. அதில் என்ன பெரிய செக்ஸ் இருக்கப்போகிறது என்று நினைக்காதீர்கள். அது பற்றி மஹாபாரதம் பெரிதாக பிரஸ்தாபிக்கிறது.

வேதங்களின் தாத்பர்யத்தை- உட்கருத்தை விளக்க வந்தவைதான் புராணங்கள் மற்றும் இதிஹாஸங்கள். ஏனெனில் வேதத்தின் பிற்பகுதியான பிராஹ்மண நூல்களிலும் மறைமுக மொழியில்தான் விளக்குவார்கள். புராண , இதிஹசங்கள்தான் நமக்குத் புரியும்படி பேசும்..

இதுபற்றி எல்லோரும் அறிந்த ஒரு ஸம்ஸ்க்ருத ஸ்லோகம் உண்டு :-

இதிஹாச புராணாப்யாம் வீதம் ஸமுபவ்ர்ம்ஹயேத்

விபேப் யல்பஸ்ருதாத்  வேதோ மாமயம் ப்ரஹரிஸ் யதி

இதன் பொருள்-

வேதத்தைக் கற்போர் இதிஹாச புராணம் மூலம் அதை விளங்கிக் கொள்ளவேண்டும்; ஏனென்றால் கொஞ்சம் படித்தவர்களால் தனக்கு ஆபத்து வரும் என்று வேதம் அஞ்சுகிறது

(எவ்வளவு உண்மை பாருங்கள் ! வெளிநாடுகளைச் சேர்ந்த 60 அரைவேக்காடுகள் வேதங்களை மொழிபெயர்த்தோ  விமர்சித்தோ கட்டுரைகள் எழுதியுள்ளனர். அத்தனையும் ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்த கதைதான் !)

இதனால் SEXY DIALOGUE ‘செக்சி’ உரையாடலின் முழு விவரத்தை அறிய மஹாபாரதத்துக்குச் செல்ல வேண்டும்.

அகஸ்தியர் துதிகளில் போற்றப்படும் கடவுளர்: இந்திரன், மருத்துகள் , அஸ்வினி தேவர்கள், வானமும் பூமியும் (த்யவ்ஸ்/DYAUS – பிருத்வி), விச்வே தேவர்கள், அன்னம் / உணவு; ஆப :- தண்ணீர் , அக்கினி , ஆப்ரி, பிருஹஸ்பதி

அகஸ்தியரின் மற்ற பெயர்கள் – மான, மாந்தார்ய , மான்ய என்பனவாகும் ; ரிக் வேத 7-33 ல் அகஸ்தியர் பிறப்பு பற்றிய விஷயம் உள்ளது அதன்படி அவர் மித்ர – வருணன் ஆகியோரின் விந்துவிலிருந்து உருவானவர். வசிஷ்டரும் , அகஸ்தியரும் ஊர்வசி என்னும் அப்ஸரஸ் மூலம்  பிறந்தனர் என்றும் அறிகிறோம் .

பிற்கால இலக்கியங்களில் அகஸ்தியரின் சாதனைகள் பற்றி நிறைய உள்ளன வாதாபி என்ற அரக்கனைக்  கொன்றது, நஹுஷனை மட்டந்தட்டியது ,விந்திய மலையின் மேல், ரோடு ROAD ROUTE போட்டு  அந்த ப் பாதை மூலம் தென்னாட்டுக்கு வந்தது, கடல் நீரைக் குடித்தது (அதாவது கடல் வழிப்பாதை மூலம் தென் கிழக்காசியாவில் இந்து நாகரீகத்தை நிலை நாட்டியது)  , காவிரி நதியைத் திசை மாற்றி ஓடுவதற்கு அணை கட்டியது , தமிழ் மொழிக்கு இலக்கணம் வரைந்தது என்று பெரிய பட்டியல்!!

தமிழுக்கு அவர் இலக்கணம் இயற்றியதை பாரதி, கம்பன், பரஞ்சோதி முனிவர், சிவஞான முனிவர் முதலியோர் பாடியுள்ளனர். இவர்கள் எல்லோருக்கும் முன்னதாக கவி காளிதாசன், பாண்டிய மன்னனையும் அகத்தியனையும் இணைத்து ரகு வம்ச காவியத்தில் பாடியதுதான் 2100 ஆண்டுகளுக்கு முந்தைய முதல் குறிப்பு!!!

முதலில் உரையாடலைக் காண்போம் ; பின்னர் மஹாபாரதத்தைக் காண்போம்; பின்னர் அறிஞர் கருத்துக்களைக் காண்போம் :-

அகஸ்தியர் துதிகள் பற்றி சாயனர், வேங்கட மாதவா ஆகியோர் உரை எழுதியுள்ளனர் .

xxx

இதோ 1-179- 1/2 துதி

லோபா முத்ரா

நான் பல்லாண்டுக் காலமாக அல்லும் பகலும் அனவரதமும் உமக்கு பணிவிடை செய்தேன் ; களைத்தும் போனேன் ; முதுமை என்னுடைய மேனி அழகைப் பாதிக்கிறது இப்பொழுது என்ன செய்ய வேண்டும்? கணவர்கள், அவர்களுடைய மனைவியுடன் இன்புற்று இருப்பார்களாகுக

(இந்து மதத்தில் பெண்கள் பகிரங்கமாக ‘செக்ஸ்’ sex பற்றிப் பேச மாட்டார்கள்; ஆனால் குறிப்பால் உணர்த்துவார்கள் ; அதே போல லோபாமுத்ராவும் எல்லோரும் கணவனுடன் கூடிக் குலவட்டும் என்று பொதுப்படையாகப் பேசுகிறார்)

ரிஷிகளும்  தேவர்களும் சத்தியத்தைக் கடைப்பிடித்தார்கள். அவர்கள் காலத்தால் அழியாத சட்ட திட்டங்களை வகுத்தார்கள் ; அவர்கள் சொன்னார்கள்; செய்யவில்லை .கணவர்கள், அவர்களுடைய மனைவியுடன் இன்புற்று இருப்பார்களாகுக

அகஸ்தியர் பதில்

(அகத்தியர் பதிலை கிரிப்பித்  R T GRIFFITH  மொழி பெயர்க்க மறுத்துவிட்டார். ரொம்ப ‘செக்சி’ என்று கருதினார் போலும். அதை ஜம்புநாத அய்யர்  மேம்போக்காக மொழிபெயர்த்துள்ளார். திருக்குறளின் காமத்துப் பாலையும்  மொழிபெயர்க்க பறங்கித் தலை பாதிரிமார்கள் அஞ்சினர்; திருக்குறளை முழுக்க மொழிபெயர்த்தால்  தமிழன் பெயர் ‘ரிப்பேர்’ ஆகி விடும்; மானம் ‘விமான’த்தில் ஏறிவிடும்; தமிழன் கதி ‘சகதி’ ஆகிவிடும் என்று கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவந்தோர் அஞ்சினர். ரெவரென்ட் ஜி.யூ போப் மட்டும்  அதைத் தைரியமாகப் படித்துவிட்டு இதில் என்ன தவறு இருக்கிறது?  என்றார். இரண்டு மந்திரங்களை லத்தீன் மொழியில் கொடுத்துள்ளனர்.)

XXX

அகஸ்தியர் (RV 1-179-3)

நான் தவத்தை இயற்றுவதில் காலத்தைச் செலவிட்டேன். நாம் நம்முடைய விருப்பங்களை இப்போது அனுபவிப்போம். இருவரும்  சேர்ந்து செயல்பட்டால் வெற்றி பெறலாம்.

(குழந்தை பெறுவதற்கு இணையலாம் என்பதை பகிரங்கமாகக் கூறுகிறார். இதன் விளக்கம் விரசம் இல்லாமல் மஹாபாரதத்தில் சொல்லப்பட்டுள்ளது அதையும் காண்போம்.)

RV 1-179-4

அகத்தியர் தொடர்ந்து பேசுகையில் ஜெபத்திலும் இந்திரியக் கட்டுப்பாட்டி லும் இருந்தபோதும் காம எண்ணம் வந்தது ஆகையால் லோபாமுத்ரா கணவனுடன் சேருவாளாகுக.

RV 1-179- 5/6

கடைசி இரண்டு மந்திரங்கள் இருவரின்  உரையாடலைக்கேட்டு யாரோ (சீடன்??) எழுதியது போல அமைந்துள்ளது

அந்த சீடன் சொல்கிறான்:

மனிதர்கள் எல்லோரும் காமத்தின் வசப்பட்டவர்கள். இதோ என் அருகிலுள்ள சோம லத்தை செடியிடம் சொல்கிறேன். நான் செய்த பாவங்களை எல்லாம் அகற்றி விடுங்கள்

கடைசி மந்திரத்தில் அகஸ்தியர் தீவிரமாக குழந்தை பெறும் பணியில் இறங்கினார் . என்று வருகிறது

இது பற்றி மகாபாரதம் மேல் விவரம் தருகிறது. அதையும் வெளி நாட்டார் கருத்தையும் பார்ப்போம்.

இந்த துதி வரிசைக் கிரமப்படி இல்லாமல் கடைசியில், ரதி என்ற தலைப்பில், பிற்சேர்க்கைப் பகுதியில் வைக்கப்பட்டது. லத்தீன் மொழியில் உள்ள இரண்டு மந்திரங்களை ஆங்கிலத்தில் பின்னர் கொடுத்துள்ளேன் . தமிழ் சினிமா பாடல்கள் போல இரண்டு அர்த்தத்தில் இவை எழுதப்பட்டுள்ளன. லோபாமுத்ரையும் அகஸ்தியரும் குழந்தை பெறும் முயற்சியில் இறங்கினார்கள் என்பதே பொருள்.

The labour which the gods favour is not unprofitable: we conquer all our rivals and rivals.

We must overcome in this battle of a hundred trades, in which we move our two sides together, on both sides.

4 Cupid took me by that bull [the man] who despises me, whether he was born on either side, or on the other, on any side.

Lopamudra denies the bull [her husband] to him: that fool swallows the wise man gasping for breath.

செல்க்ஸ் பற்றிய கவிதை என்பதால் வெள்ளைக்காரப்பயல்கள் ஆயிரக்கணக்கில் இது பற்றி கட்டுரைகள் எழுதியுள்ளனர்  ஆனால் மஹாபாரதத்தில் முழுக்  கதை உள்ளது; இதை ஸ்லோகம் வாரியாக தானேஸ்வர்  சர்மா என்பவர் கொடுத்துள்ளார். இதோ அந்த ஸ்லோகங்க ளின் மொழிபெயர்ப்பு :–

தொடரும்…………………………………………….

tags – அகஸ்தியர் , லோபாமுத்ரா, Sexy , செக்சி,  உரையாடல் , ரிக்வேத,  1-179,

Life is like a Mirror. Smile at it and it smiles back to you (Post No.10, 901)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,901

Date uploaded in London – –   28 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

xxx

Making 100 friends is not a miracle. The miracle is make a

Single friend who will stand on your side even when 100s

are against you.

xxx

Life is like a mirror. Smile at it and it smiles back to you.

Xxx

If you can’t fly, RUN

If you can’t run, WALK,

If you can’t walk, CRAWL,

If you can’t-crawl,

But keep moving towards GOAL.

ALL THE BEST!!!

xxx

Getting comfortable with the uncomfortable,

Is the only way to grow.

Xxx

We dont always need advise. Sometimes

What we need is hand to hold and an ear to listen,

And a heart to understand.

Xxx

A nice person will always be in memory.

A better person will always be in dream,

But a sincere person will always be in heart!!!

xxx

Distance never kills a relation.

Closeness never builds a relation.

It is caring of one’s feelings that builds

Faith and maintain relation.

xxx

Some women take-up law and become lawyers

Other women lay down the law and become wifes !!!.

xxx

Patience and silence are two powerful energies.

Patience makes you mentally strong,

Silence makes you emotionally strong.

xxx

Good friends are like stars.

You don’t always see them.

But you know that they

are always there!!!

xxx

When people see my messages,

They think that I am addicted to

Messaging and I am free……..

But it is incorrect.

Actually I am addicted to holding

relationships !!!

***

இது எப்படி இருக்கு…..??? !!! (Post No.10,900)

Compiled  BY KATTU  KUTTY , CHENNAI

Post No. 10,900

Date uploaded in London – –   28 APRIL  2022         

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge;

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

IF U DONT SEE THE PICTURES HERE, GO TO MY OTHER BLOG, swamiindology.blogspot.com

இது எப்படி இருக்கு…..???!!!

Compiled by Kattukutty

படித்தது…..ரசித்தது ..
சில பிஸினஸ் ரகசியங்கள்!


1

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.

கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான். முட்டைகள் அனைத்தும் உடைந்துவிட்டன.

கூட்டம் கூடி விட்டது.
வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.:

பாத்து போக கூடாதா? ” ” என்னடா… கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?”

அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார்.

அடடா…ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன் தானே பதில் சொல்லணும்?

எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார்.

அதோடு ” தம்பி
இங்கே இருப்பவர்கள் நல்ல மனிதர்கள்.

உபதேசம் மட்டுமில்ல ஆளுக்கு கொஞ்சம் பணமும் தருவார்கள். வாங்கிக் கொள்’ என்றார்.

மக்களும் இவரது செய்கை, பேச்சை பார்த்துப் பணம் தந்தார்கள்.

முட்டை உடைந்ததை விட அதிக பணம் சேர்ந்து விட்டது. பையனுக்கு மகிழ்ச்சி. அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

அப்போது ஒருவர் அந்த பையனிடம் ” தம்பி, அந்த பெரியவர் இல்லேன்னா உன் முதலாளி கிட்டே என்ன பாடு படுவயோ? ” என்றார்.

பையன் சிரித்துக்கொண்டே சொன்னான். ” அந்த பெரியவர் தான் சார் என் முதலாளி”

xxx

.

2

பிசினஸ் தந்திரம்

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவி, பழங்களை விற்க முயன்றார்.

எவரும் பழம் வாங்க முன் வரவில்லை.

சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்!’ என்று கூவினான்.

அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ‘ஐந்து பழங்கள் பத்து ரூபாய்!’ என்று விற்க முயன்றார்.

பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார்.

அடுத்து, ‘ஆறு பழங்கள் பத்து ரூபாய்’ என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், ஏகத்துக்கு விற்பனை செய்தான்!

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.

முதியவரை அருகில் அழைத்தவர், ”அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே! அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால் தானே உங்களுக்கு விற்பனை ஆகும். அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்கு பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா!” என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, ”போய்யா… அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான்.

‘ஆறு பழம் பத்து ரூபாய்’னு விற்றால்… சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது.

அதனால் நான், ‘ஐந்து பத்து ரூபாய்’னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, ‘ஆறு பழம் பத்து ரூபாய்’னு அவன் வந்து சொன்னதும்… ‘அடடே லாபமா இருக்கே’னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க.

அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்!” என்றார் முதியவர்.

xxx

3

பிஸினெஸ் ரகசியம்

சித், ஹாரி என்ற சகோதரர்கள் துணிக்கடை வைத்திருந்தனர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் தனக்கு காது சரியாயகேட்காது என்று கூறி உரக்கப் பேசச் சொல்லுவார் சித்.

அது கப்ஸா, அவருக்கு பாம்புச் செவி. நன்றாகவே கேட்கும்!

கடைக்கு வரும் வாடிக்கையாளர் தேடிப்பிடித்து ஒரு ட்ரெஸ் எடுத்து அதன் விலையை சித்திடம் கேட்பார். சித் கடைக்கு பின்னால் துணி தைத்துக்கொண்டிருக்கும் ஹாரியிடம் ‘இந்த ட்ரெஸ் என்னப்பா விலை’ என்று கத்துவார்.

ஹாரி அங்கிருந்து ‘நாற்பத்தி இரண்டு டாலர்’ என்பார். சித் உடனே ‘எவ்வளோ’ என்று மீண்டும் கேட்பார். ‘நாற்பத்திரண்டு டாலர் டா செவிட்டு முண்டமே’ என்று ஹாரி பதிலுக்கு கத்துவார். சித் கஸ்டமரிடம் திரும்பி ‘இருபத்திரண்டு டாலர்’ என்பார். கஸ்டமரும் செவிட்டு காதிற்கு மனதிற்குள் நன்றி கூறி டக்கென்று பணத்தை கொடுத்துவிட்டு துணியோடு எஸ்கேப் ஆவார்!

நாற்பத்தி இரண்டு என்று கேட்ட மனதிற்கு இருப்பத்திரண்டு என்பது மிக சின்னதாய் தெரிகிறது. உடனேயே வாங்கவும் தோன்றுகிறது. இக்கதையில் ஒரு ட்விஸ்ட் உண்டு.

அந்த துணியின் உண்மையான மதிப்பு பதினைந்து டாலர்தான்!

xxx
4

ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு
மகானிடம் சென்று கேட்டான்:

“நான் திராட்சை சாப்பிடலாமா?”

மகான் சொன்னார்: “ஓ… தாராளமா”

“அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?”

“ஓ.. பயன்படுத்தலாமே?”

“புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்
வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?”

“அதிலென்ன சந்தேகம்?”

“அப்படீன்னா இதுவெல்லாம்
சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது
மட்டும் தப்பு என்று
சொல்கிறார்களே?”

மகான் யோசித்தார். குறும்புக்கார
ஆசாமியிடம் கேட்டார்:

“இங்க பாருப்பா… உன் தலை மேலே
கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா
உனக்குக் காயம் ஏற்படுமா?”

“அதெப்படி ஏற்படும்?”

“தண்ணீர் ஊற்றினால்?”

“தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம்
ஏற்படும்?”

“மண்ணையும் தண்ணீரையும் கலந்து
சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்
போட்டால்?”

“காயம் ஏற்படும்”

“நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்”
என்றார் மகான்..


                                                                                 ***

tags– பிஸினெஸ் ரகசியம், இது எப்படி இருக்கு